Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

`ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம்


Recommended Posts

`ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம்

 
 

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன், 130 நாள்களைக் கடந்துவிட்டது. விசாரணை, குறுக்குவிசாரணை எனத் தீவிரமாக இயங்கினாலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னும் விலகவில்லை. `இறுதி நாள்களில் என்ன நடந்தது என்ற முடிவுக்கு கமிஷன் வந்துவிட்டது. சசிகலாவுக்கு எதிரான விஷயங்கள் இதில் ஏராளம் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் ஆணைய வட்டாரத்தில். 

 

முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் உண்மையைக் கண்டறிவதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த நவம்பர் 22-ம் தேதியிலிருந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. `ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாணப் பத்திரமாகவோ அல்லது புகார் மனுவாகவோ ஆணையத்தில் தாக்கல் செய்யலாம்' என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, தி.மு.க பிரமுகர் டாக்டர்.சரவணன், ஜெ.தீபா, மாதவன், தீபக் உள்பட 70 பேர் நேரடியாகவும் தபால் மூலமாகவும் பிரமாணப் பத்திரத்தை அளித்தனர். சசிகலா உறவினர்களான மருத்துவர் சிவக்குமார், விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா, கார்டன் உதவியாளர்கள் ராஜம்மாள், கார்த்திகேயன், கார் ஓட்டுநர் அய்யப்பன் ஆகியோருக்கு ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அப்போலோ நிர்வாகமும் அளித்தது. அதேநேரம், ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் சில பகுதிகள் வெளியாகின. இதனால் அதிர்ந்து போன விசாரணை ஆணையம், `சசிகலா வாக்குமூலம் தொடர்பாக வெளியான தகவல்கள் 70 சதவிகிதம் உண்மையில்லை. வெளியான தகவல்கள் எதுவும் சசிகலா தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில் இல்லை. செப்டம்பர் 27-ம் தேதி காவிரி பற்றி ஜெயலலிதா, ஆலோசனை நடத்திய விவரமும் சசிகலா வாக்குமூலத்தில் இல்லை' எனத் தெரிவித்தது. 

ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி

இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நம்மிடம் விவரித்த ஆணையத்தின் முக்கிய அதிகாரி ஒருவர், `` 130 நாள்களாக நடந்து வந்த விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளன. ஒரு மாநில முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை. பல விஷயங்களை மூடி மறைக்கும் வேலைகள் நடந்துள்ளன. டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதய முடக்கம் வருவதற்கான காரணங்களையும் மருத்துவரீதியாக ஆணையம் ஆராய்ந்து வருகிறது. அன்று காலை 6.30 மணியளவில் ஜெயலலிதாவுக்கு காபி கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு, வாய்வழியாக எந்த உணவுகளும் அவருக்கு வழங்கப்படவில்லை.

சசிகலாஅவருடைய ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்ததுதான் மரணத்துக்குக் காரணம் என்கிறார்கள். அதுகுறித்துத் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டங்களில், அவருக்கு அளவுக்கு அதிகமான ஸ்டீராய்டுகள் (ஊக்க மருந்து) கொடுக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றி சரியான விளக்கத்தை மருத்துவர் சிவக்குமார் தெரிவிக்கவில்லை. முதல்வரின் உடல்நிலையைக் கண்காணிக்க ஐந்து அரசு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரையும் மருத்துவமனைக்குள் அப்போலோ நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அப்போலோவின் 27 சிசிடிவி கேமராக்களும் ஏன் அணைத்து வைக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என விவரித்தவர், 

`` ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும் கிளினிக்கல் அட்டாப்சி செய்யப்படவில்லை. அவரது மரணத்துக்கான காரணங்களை மறைக்கும் வேலைகள் நடந்துவந்துள்ளன. அவர் இறந்த பிறகு, எம்பாமிங் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ரத்தச் சம்பந்தமுள்ள உறவினர்களின் கையொப்பம் அவசியம். இந்தக் கையொப்பத்தை யார் போட்டார்கள் எனப் பார்த்தால் அதிர்ச்சியே மிஞ்சியது. கார்டனில் சசிகலாவுக்கு உதவியாளராக இருந்த கார்த்திகேயன்தான் இந்தக் கையொப்பத்தைப் போட்டிருக்கிறார். இந்தச் சட்டவிரோதக் காரியத்துக்கு அப்போலோ மருத்துவமனையும் துணைபோயுள்ளது.

கார்த்திகேயனின் பின்புலத்தையும் தீவிரமாக விசாரித்தோம். இவர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர். ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றனும் சசிகலாவின் உதவியாளராக கார்த்திகேயனும் இருந்துள்ளனர். இடையில் சசிகலாவோடு மனஸ்தாபம் ஏற்பட்டு, கார்டன் பணியிலிருந்து விலகிவிட்டார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு அவரை சசிகலா அழைத்து வந்திருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அவர் ஆசிரியராகவும் வேலை பார்த்திருக்கிறார். எம்பாமிங் நடவடிக்கையில் ஏராளமான சந்தேகங்கள் முளைத்துள்ளன. அவரது மரணத்துக்கான காரணத்தை யாரும் கண்டறிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே எம்பாமிங் பணிகள் நடந்துள்ளன. மருத்துவச் சிகிச்சையின் அனைத்து மர்மங்களும் விலகத் தொடங்கியிருக்கின்றன. விரைவில் அனைத்து உண்மைகளையும் அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறார் ஆறுமுகசாமி" என்றார் விரிவாக. 

https://www.vikatan.com/news/tamilnadu/121150-did-karthikeyan-sign-in-jayas-embalming-sasikala-again-in-trouble.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தது.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த குழுவில் இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன் ஆகியோரும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனடிப்படையில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவொன்று இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.(15)   http://www.samakalam.com/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-41/  
  • கடலில் நீராடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு December 4, 2021 திருகோணமலை – ஈச்சிலம்பற்று காவல்துறைப் பிரிவிலு ள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிாிழந்த இரு சிறுவா்களினதும் உடல்கள் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடிய போது குறித்த இரண்டு சிறுவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். உயிர் தப்பிய ஏனைய சிறுவர்கள் இருவரும் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில் தேடுதல் மேற்கொண்ட போது இரு சிறுவர்களதும் உயிரிழந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தரம் 09 இல் கல்வி கற்கும் யோகேந்திர ராசா லக்சன் வயது (14), தரம் 06 இல் கல்வி கற்கும் டினேஸ்காந்த் நிம்ரோசன் வயது (12) ஆகிய மாணவர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.   https://globaltamilnews.net/2021/169823  
  • பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டமை – நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது December 4, 2021 பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை செய்ததாக தொிவித்து கொடூரமான முறையில் எாித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் முக்கிய குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனா். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக இருந்த இலங்கையரான 40 வயதான பிரியந்த குமார தியவடன என்பவா் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பின்னா் உயிருடன் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தாா். சிசிடிவி காணொளிகளை வைத்து பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனா். வெளிநாட்டைச் சேர்ந்த மேலாளருக்கு எதிராக வெள்ளிக்கிழமை காலை முதலே செய்திகள் பகிரப்பட்டு வந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சியால்கோட்டில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர் யாசிர் ராசா பிபிசி உருது மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது   https://globaltamilnews.net/2021/169820
  • புலிகளை எழுப்பவா, வவுணதீவு தாக்குதல் நடத்தப்பட்டது? December 4, 2021 வவுணதீவில் காவற்துறையினர் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்பியத் பின்னிணியில் இருந்தவர்கள் யார்? ஆலோசனை வழங்கியவர்களை் யார் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (JVP) கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அச்சம்பவத்தை பொறுப்பேற்க அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்ற தகவல்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தி உள்ளார். மகிந்த ராஜபக்ஸபிரதமராக இருந்த 52 நாட்கள் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வவுணதீவு கொலை சம்பவத்தை விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் பக்கம் கொண்டு செல்ல ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் சஹரான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்திலேயே அவர்களை கைது செய்திருந்தால் ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருக்கலாம் என்றும் ஆனால் அந்த சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கத்திற்கு திருப்ப வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய ஆவணங்கள் இருந்த கணனிகளை பயன்படுத்திய நபர்கள் யார் என்ற தகவல்களையும் வெளியிட வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.   https://globaltamilnews.net/2021/169802  
  • அடேங்கப்பா, இந்த திரி இன்னும் ஓடுதா? சட்டப்படி, ஆண், பெண், வயது, மத, இன, வேறுபாடு பார்க்க முடியாது. வேர்க் பர்மிட் உள்ளது, இல்லை மட்டுமே. அதை செக் பண்ணி தான் வேலை. அகதியா, குடியேறியா என்பதை நான் சொன்னால் அன்றி, கண்டுபிடிக்க முடியாதே.... பலர், படிக்க வந்து... அப்படியே இங்கே செற்றில் ஆகிட்டோம் என்று வேலையிடங்களில் சொல்லிக் கொள்வார்கள். மேலும் சிலர் ரலண்ட் விசாவில வந்து செற்றில் ஆகிட்டோம் என்பர். இப்ப வந்துள்ள சட்டப்படி, நீஙகள் கூட, இங்கே, நேரடியாக வேலைக்கு விண்ணப்பம் செய்து, தேர்வானால், ஒபர் லெட்டர் உடன், ஆகக் கூடியது இரண்டு வருடம் விசா பெற்று வந்து வேலை செய்யலாம். முடிவில் போய், இடைவெளி விட்டு (ஒரு வருடம் என்று நினைக்கிறேன் ) மீண்டும் வரலாம். அதாவது ஜந்து வருடம் தொடர்ந்து இருந்தால் குடியுரிமை என்னும் இன்னும் ஒரு சட்டத்தை, திருப்தி படுத்தாதவாறு செய்கிறார்கள். ஆனால்... இவ்வூர் அம்மணி ஒருவரை..... அது வேறு...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.