• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts

புதிய ஊர்கள் நாடுகள் பார்ப்பதில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விருப்பம் தான். ஆனாலும் பணம் பணம் என்று அதைச் சேர்ப்பதில் உள்ள ஆர்வம் செலவழிப்பதில் இருப்பதில்லை பலருக்கு. யேர்மனியில் வசித்தபோது நானும் கணவருமே முழுநேர வேலை செய்தோம். முழுநேரம் என்றால் எட்டே எட்டு மணிநேரம் தான். அதற்குமேல் பெரும்பாலானவர்கள் வேலை செய்வதில்லை.  ஆண்டில் ஆறு வாரங்கள் விடுமுறை  உண்டு. சம்பளத்துடன் ஒரு நாளுக்கு 32 டொச் மார்க்குகள் மேலதிகமாக விடுமுறைக்காகத் தரப்படும். அப்ப சொந்த வீடும் ஒருத்தரிட்டையும் இல்லை. அதனால் மற்றவரைப் பார்த்துப் புகைந்து நாமும் சொந்த வீடு வாங்கவேணும் எண்ட துன்பமும் இல்லை. வாடகை லண்டன் போல் உச்சத்துக்கு போவதும் இல்லை. ஒருவரின் உழைப்பிலேயே மிக மகிழ்வாக வாழக்கூடிய நிலை.

நத்தார் என்றால் இரு வாரங்களுக்கு எமது வேலையிடத்தில் விடுமுறை விடப்படும். அத்தோடு சேர்த்து நாம் ஆறு வாரங்களோ அல்லது ஒரு மாதமோ விடுமுறை எடுத்துக்கொண்டு நாடு பார்க்கக் கிளம்பிவிடுவோம். அப்போதெல்லாம் தாயகத்துக்குப் போவதை நினைத்தே பார்க்க முடியாதுதானே. அதால ஐரோப்பா, கனடா, இந்தியா,சிங்கபூர் எண்டு 1991 - 2003 வரை பல நாடுகளுக்குப் போய் வந்தாச்சு. 2003 லண்டன் வந்தபிறகு எங்களை லண்டனில் நிலைநிறுத்திக்கொள்ள மூன்று ஆண்டுகள் ஓடிப்போனது. அதன்பின் பிள்ளைகளின் படிப்பு, நாட்டு நிலை, கடை நடத்தியது என்று பெரிய விடுமுறை எமக்குக் கிடைத்ததே இல்லை. ஆனாலும் பெற்றோர் இருந்ததனால் அடிக்கடி ஜெர்மனிக்கும் வரும் வழியில் பிரான்ஸ், கொலன்ட் எண்டு ஒரு வாரமோ இரு வாரங்களோ மட்டும் விடுமுறையாகிப் போனது.

நாம் பிள்ளைகளுடன் கூடியிருந்து கதைக்கும்போது ஜெர்மனியில் இருந்ததும் விடுமுறைகளை மகிழ்வாகக் கழித்ததும் ஒரு கணாக் காலம் என்பார்கள். கடை வைத்திருந்து காசு பார்த்த மனம் கடை கொடுத்தபின்னரும் நல்லதொரு கடை தேடி அலைந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் புதிய வியாபாரம் தேடி களைத்துப்போய் எல்லோரும் கூடியிருந்து கதைத்தபோது மூத்தமகள் சொன்னாள் "அம்மா எதற்காக நீங்கள் இனியும் கடை வாங்க அலைகிறீர்கள். நாங்கள் இருவரும் படித்து முடித்து வேலை செய்கிறோம். இனி நீங்கள் கடை எடுத்தாலும் நாம் வந்து உதவி செய்ய முடியாது. அத்தோடு நீங்கள் இருவரும் நின்றால்த்தான் கடை ஒழுங்காக ஓடும். ஏதும் வருத்தம் வந்தால் என்ன செய்வீர்கள். அதனால் அப்பாவும் நீங்களும் எங்காவது மூன்று நான்கு நாள் வேலை செய்யுங்கள். அது போதும் உங்களுக்கு. நின்மதியான வேலை. எவ்விதப் பொறுப்புக்களும் இன்றி மகிழ்வாக ஊர் சுற்றலாம்" என்றாள்.

கணவரும் "எனக்கும் கடை எடுப்பதில் முழு விருப்பமும் இல்லை அம்மாவின் கரைச்சலால் தான் நான் ஓம் எண்டனான்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். எனக்கு வந்த ரோசத்தில் "எனக்காக ஒருத்தரும் கடை தேட வேண்டாம். நீங்கள் உங்கள் அலுவலைப் பாருங்கள்" என்று சொல்லி எழுந்து போய்விட்டேன். கடை எடுக்கிறது தானே என்ற எண்ணத்தில் சும்மா இருந்த மனிசன் எடுப்பதில்லை என்று முடிவு எடுத்த அடுத்த வாரமே ஒரு வேலையைத்தேடி எடுத்திட்டார். எனக்கு எங்கு வேலைக்குப் போவது என்ற யோசனை. கிட்டத்தட்ட  இருபது ஆண்டுகள் வேலை செய்தாச்சு இனியும் வேலைக்குப் போகவேணுமோ என்று ஒரு கேள்வி மனதில். அதுதான் பொழுது போறதுக்கு முகநூல் இருக்கே.

காலமை ஆறு மணிக்கு எழும்பி மனிசனுக்கு தனிப்பாலில ஒரு கோப்பி போட்டு நானும் குடிச்சிட்டு கடைக்குட்டிக்கு பள்ளிக்குச் சாப்பாடு கட்டி வேலைக்குப் போற மற்ற இருவருக்கும் பால் தேநீர் ஊற்றிக் கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்ப எட்டு மணியாவிடும். அதுக்குப் பிறகு காலை உணவை உண்டுவிட்டு பூங்கன்றுகளுடன் கிண்டிக் கிளறி பொழுதைப் போக்க பண்ணிரண்டாவிடும். அதுக்குப்பிறகு மதிய உணவைச் சமைத்து உண்டுவிட்டு யாருடனாவது போனில் அலட்டிவிட்டு தூக்கம் வந்தால் ஒருமணிநேரம் தூங்கி முடிய "உனக்குச் சாப்பிட்டிட்டு நித்திரை கொள்ளுறது தான் தொழிலோ"?? என்றபடி மனிசன் வந்து நிர்ப்பார். இன்னும் கொஞ்சநேரம் படுக்கலாம் என்ற நினைப்பை மனிசனின் குத்தல் கதை எழும்பி இருக்க வைக்கும். பிறகும் என்ன. மனிசனுக்குப் பால் தேநீர் ஊற்றிக் கொடுத்துவிட்டு நானும் ஒன்றைக் குடிக்கத் தொடங்க அதையும் நின்மதியாக் குடிக்க விடாமல் "எங்கையாவது வேலை தேடினனியோ"?? என்ற கேள்வி வந்து விழும். அந்த நேரங்களில தான் அட வந்தனாங்கள் முதலே லண்டன் வந்திருந்தால் இரண்டு வீட்டையாவது வாங்கி விட்டிருக்கலாம் என்ற ஆதங்கமும் கூடவே எழும்.

தப்பித்தவறி வாய் தடுமாறி மனுஷனுக்கு உதைச் சொன்னால் "தேவையில்லாமல் உடுப்புகளை வாங்கி எறியாமல் விட்டிஎண்டாலே  கன காசைச் சேர்த்திருக்கலாமே" எண்டோ "உந்தப் பூக்கண்டுகளை வாங்கி வாங்கி என்னத்தைக் கண்டனி?? ஒண்டுரண்டு பூக்கன்றுகள் காணாதே?? வீட்டுக்குள்ளதான் கண்ட இடமெல்லாம் பூக்கண்டை வைச்சு மனிசருக்கு எரிச்சலைக் கிளப்பிறாய் எண்டால் தோட்டம் முழுதும் பூக்கண்டை நட்டு காடாய்க் கிடக்கு. இரண்டு மரக்கறியை வச்சாலாவது  சாப்பிடவாவது உதவும்" என்று ஆலாபனை நடக்கும். முந்திஎண்டால் ஒண்டுக்கு ரெண்டு கதை நானும் சொல்லிக்கொண்டிருப்பன். இப்ப வேலை இல்லை எண்டதாலை கொஞ்சம் அடக்கிவாசிக்கிற எண்ணத்தில கேட்டும் கேட்காதமாதிரி இருக்க வெளிக்கிட்டன்.

ஆனால் அதுவும் செப்டெம்பர் வரை தான். அதுக்குப் பிறகு குளிரில தோட்டத்துக்குள்ளையும் போக ஏலாமல் வேலையும் இல்லாமல் மனிசனுக்கு பக்கத்திலேயே இருக்கவேண்டியதாப் போக ஒருநாளும் இல்லாதவாறு என்னுடன் மாமியார் இல்லாத குறையை என் மனிசன் நான்கு மாதங்கள் தீர்த்து வைத்தார். அதைத் தாங்க முடியாமல் ஒருவாறு தபாற்கந்தோர் ஒன்றில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை தேடி எடுத்தாச்சு. அதன் பின் மனிசனின் குத்தல் குடைச்சல் இல்லாமல் நின்மதி வந்தது.

என்னடா கொலிடே என்று தலைப்பைப் போட்டிட்டு தன்ர சோகக் கதையைச் சொல்லுறாவே என்று நீங்கள் மனதுக்குள்ள நினைக்கிறது எனக்குக் கேட்குது.

அடுத்தது அந்தக் கதைதான்........

 

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கையில் இரண்டு விடயங்கள் எனக்குப் பிடிக்காதது...!

முதலாவது கடந்து வந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து...இப்படி வாழ்ந்திருந்தால்...இப்போது எப்படியிருந்திருப்பேன் என்று நினைத்து ஏங்குவது!

வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல...திட்டமிட்டு வாழ்வது அல்ல!

எதிர்பாராத மாறிலிகளுக்கு இடம் கொடுத்து..அவற்றை எதிர் கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை என நான் கருதுகின்றேன்!

அதன் அளவீடு...எத்தனை வீடுகள் என்னிடம் இருக்கின்றன என்பதோ அல்லது ...என்னைக் கண்டு எத்தனை பேர்...கதிரையில் இருந்து எழும்பி நிற்கிறார்கள் என்பதோ அல்ல என்றே கருதுகின்றேன்!

அப்படிப் பார்த்தால்...கலைஞர் கருணாநிதியை விடவும்...வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் எவரும் இல்லை!

யாரது மனத்தையும்.....வீணாகப் புண் படுத்தாமல்....எவருக்கும் தீமை விளைவிக்காமல் வாழ்ந்து விடுவேனேயாகின்...அந்த வாழ்வையே எனது வெற்றியாகக் கருதுவேன்!

சீர்காழியின் பாடல் ஒன்று....வாழ்க்கையை அருமையாகச் சொல்லிச் செல்கிறது!

தொடருங்கள்...சுமே!

Share this post


Link to post
Share on other sites
25 minutes ago, புங்கையூரன் said:

வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல...திட்டமிட்டு வாழ்வது அல்ல!

tw_thumbsup: tw_thumbsup: tw_thumbsup:

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னடா கொலிடே என்று தலைப்பைப் போட்டிட்டு தன்ர சோகக் கதையைச் சொல்லுறாவே என்று நீங்கள் மனதுக்குள்ள நினைக்கிறது எனக்குக் கேட்குது.

அடுத்தது அந்தக் கதைதான்........

இப்பதானே முகவுரை முடிஞ்சிருக்கு.....இனித்தான் இருக்கு விளையாட்டு..:grin:

Share this post


Link to post
Share on other sites

இஞ்ச வந்து 15 வருசமாச்சு.... எத்தனை வீடு வாங்கியாச்சு

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் அக்கா ......

என்னைப்பொறுத்தவரை, இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் சுற்றுலா போவது என்பது, மனதுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி தரும் விடையமாகும். நான் டுபாயில் வேலை செய்யும்போது, விடுமுறையில் ஸ்ரீலங்கா செல்வது தவிர்த்து, ஒருவருடத்துக்கு ஆகக்குறைந்தது 1 முறையாவது ஏதாவது ஒரு நாட்டுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். பெரும்பாலும் எனது தெரிவு சுவிஸ் மற்றும் ஜெர்மனி (சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் எனது மாமாக்கள் இருப்பதால் விசா எடுப்பதும் சுலபம் செலவும் குறைவு ). 2016கு பிறகு கொழும்பில் வேலை செய்வதால், ஐரோப்பிய நாடுகளுக்கு விசா எடுப்பது கடினம். இந்த சமருக்கு ஜோர்ஜியா போற பிளான் சரிவதோ தெரியாது. அப்படி இதில் கேரளா போற பிளான். பாப்பம் எது சரிவருத்தண்டு.

Share this post


Link to post
Share on other sites

இதுவா சோகம் இதுதான் யதார்த்தம்....அட்டாகாசமாய் தொடங்கி விட்டீர்கள் தொடருங்கோ....,ஆனாலும் அத்தானை மாமியார் ரேஞ்சுக்கு கொண்டு வந்தது நல்லாய் இருக்கு.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, புங்கையூரன் said:

வாழ்க்கையில் இரண்டு விடயங்கள் எனக்குப் பிடிக்காதது...!

முதலாவது கடந்து வந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து...இப்படி வாழ்ந்திருந்தால்...இப்போது எப்படியிருந்திருப்பேன் என்று நினைத்து ஏங்குவது!

வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல...திட்டமிட்டு வாழ்வது அல்ல!

எதிர்பாராத மாறிலிகளுக்கு இடம் கொடுத்து..அவற்றை எதிர் கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை என நான் கருதுகின்றேன்!

அதன் அளவீடு...எத்தனை வீடுகள் என்னிடம் இருக்கின்றன என்பதோ அல்லது ...என்னைக் கண்டு எத்தனை பேர்...கதிரையில் இருந்து எழும்பி நிற்கிறார்கள் என்பதோ அல்ல என்றே கருதுகின்றேன்!

 

தொடருங்கள்...சுமே!

வாழ்க்கை பலவிதம். பலர் ஒழுங்காகத் திட்டமிட்டு வாழ்வார்கள். பலர் வருவதை எதிர்கொண்டு வாழ்வார்கள். இன்னும் பலர் திட்டமிட்டும் வருவதை எதிர்கொண்டும் வாழ்வார்கள். நான் மூன்றாவது வகை. எல்லாம் எல்லோருக்கும் பொருந்தி வருவதில்லை. அவர்கள் விதிக்கேற்ப  வாழ்வு ஏற்றமும் இறக்கமுமாக அமைந்துவிடுகிறது. எதையுமே திட்டமிடாமல் வாழ்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நம்பவும் முடியாதது. எல்லோர் மனமும் நிட்சயமாய்த் திட்டமிட்டபடியோ அல்லது ஆசைப்பட்டபடியோ தான்  இருக்கும். அப்படி அல்லாதவிடத்து அவர்கள் ஞானிகள் அல்லது வேறு என்ன என்று எனக்குத் தெரியவில்லைப் புங்கை. ஆசையும் திட்டமிடலும் இல்லாவிடில் உலகம் எப்படி இத்தனை முன்னேற்றம் கண்டிருக்க முடியும்????

9 hours ago, குமாரசாமி said:

tw_thumbsup: tw_thumbsup: tw_thumbsup:

இப்பதானே முகவுரை முடிஞ்சிருக்கு.....இனித்தான் இருக்கு விளையாட்டு..:grin:

:100_pray::100_pray:

8 hours ago, MEERA said:

இஞ்ச வந்து 15 வருசமாச்சு.... எத்தனை வீடு வாங்கியாச்சு

இருக்க மட்டும் ஒரேயொரு வீடுtw_blush:.

3 hours ago, Shanthan_S said:

தொடருங்கள் அக்கா ......

என்னைப்பொறுத்தவரை, இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் சுற்றுலா போவது என்பது, மனதுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி தரும் விடையமாகும்.

அதுமட்டுமல்ல பல விடயங்களைப் பற்றிய அறிதல், அவர்கள் பண்பாடு உணவு என எத்தனையோ இருக்கே.

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, suvy said:

இதுவா சோகம் இதுதான் யதார்த்தம்....அட்டாகாசமாய் தொடங்கி விட்டீர்கள் தொடருங்கோ....,ஆனாலும் அத்தானை மாமியார் ரேஞ்சுக்கு கொண்டு வந்தது நல்லாய் இருக்கு.....!  tw_blush:

emoji_laugh.gif

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, புங்கையூரன் said:

வாழ்க்கையில் இரண்டு விடயங்கள் எனக்குப் பிடிக்காதது...!

முதலாவது கடந்து வந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து...இப்படி வாழ்ந்திருந்தால்...இப்போது எப்படியிருந்திருப்பேன் என்று நினைத்து ஏங்குவது!

வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல...திட்டமிட்டு வாழ்வது அல்ல!

எதிர்பாராத மாறிலிகளுக்கு இடம் கொடுத்து..அவற்றை எதிர் கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை என நான் கருதுகின்றேன்!

அதன் அளவீடு...எத்தனை வீடுகள் என்னிடம் இருக்கின்றன என்பதோ அல்லது ...என்னைக் கண்டு எத்தனை பேர்...கதிரையில் இருந்து எழும்பி நிற்கிறார்கள் என்பதோ அல்ல என்றே கருதுகின்றேன்!

அப்படிப் பார்த்தால்...கலைஞர் கருணாநிதியை விடவும்...வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் எவரும் இல்லை!

யாரது மனத்தையும்.....வீணாகப் புண் படுத்தாமல்....எவருக்கும் தீமை விளைவிக்காமல் வாழ்ந்து விடுவேனேயாகின்...அந்த வாழ்வையே எனது வெற்றியாகக் கருதுவேன்!

சீர்காழியின் பாடல் ஒன்று....வாழ்க்கையை அருமையாகச் சொல்லிச் செல்கிறது!

தொடருங்கள்...சுமே!

அதுவும் சைவராக பிறந்திருந்தால் அந்த ஆறடி நிலமும் சொந்தமில்லை...

கொலிடெ போயிற்று வந்துதான் மிகுதியை எழுதிவியளோ?tw_blush:

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, putthan said:

அதுவும் சைவராக பிறந்திருந்தால் அந்த ஆறடி நிலமும் சொந்தமில்லை...

கொலிடெ போயிற்று வந்துதான் மிகுதியை எழுதிவியளோ?tw_blush:

போட்டு வந்தாச்சு இனி எழுத வேண்டியதுதான் :11_blush:

Share this post


Link to post
Share on other sites

நான் தமிழ்ப் பள்ளிக்கூடம் நடத்துவதால் வேலை இடத்தில் லீவு தந்தாலும் நினைத்த நேரத்தில் விடுமுறையில் செல்ல முடியாது. பள்ளி விடுமுறை என்றால் மட்டுமே செல்ல முடியும். கடந்த ஆண்டு ஆவணியில் திட்டமிட்டுக்கொண்டு இருக்க என்னுடன் வேலை செய்த அக்கா தான் முதலே கனடா போவதற்கு டிக்கட் புக் செய்திட்டன். அதனால நீங்கள் நான் போய் வந்தபிறகுதான் போகலாம் என்றார். வேறு வழியில்லை. பதின்நான்கு ஆண்டுகளுக்குப் பின் நாட்டுக்குப் போகிறேன். கடைசி ஒரு மாதமாவது நிற்க வேண்டாமோ??? செப்டெம்பர் போகலாம் என்றால் முதல் வாரமுடிவில் தமிழ்ப் பள்ளி ஆரம்பம். புதிய மாணவர்கள் வருவார்கள். அதனால் நான் கட்டாயம் நிற்கவே வேண்டும். சரி இரு வாரங்கள் ஆனபின் மற்றைய ஒரு ஆசிரியரை பள்ளியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு போகலாம் என்று ஒரு நப்பாசை. ஒன்பது பத்து மணித்தியாலங்கள் ஒரேயடியாக விமானத்தில் இருந்து போவதிலும் விருப்பம் இல்லை. வேறு இடங்களில் தங்கிப் போகும் விமானங்கள் மலிவு விலையில் இருக்க துபாயில் மாறுவோம் என்றார் கணவர். அங்கு ஏற்கனவே ஒருதடவை இரண்டு நாட்கள் நின்ற அனுபவம் இருந்தபடியால் அங்கு வேண்டாம் என்று ஒவ்வொரு இடமாகத் தட்டிக் கழிச்சுக்கொண்டே  வந்து கடைசியில் மலேசியா போய்ப் போவதாக முடிவு செய்து எனக்கும் கணவருக்கும் மகளுக்குமாகப் பயணச்சீட்டையும் எடுத்தாச்சு.

போறதுக்கு இன்னும் ஒருமாதம் இருக்கையில் இனிப் பொருட்களை வாங்கிச் சேர்க்கவேண்டும். மூவருக்கும் தொண்ணூறு கிலோ கொண்டு போகலாம் அதைவிட கையில் 7 கிலோ வரை அனுமதிப்பார்கள் என்றதில் முதலில் என்ன என்ன வாங்கிக்கொண்டு போவது என்று லிஸ்ட் போட்டேன். எழுத எழுத லிஸ்ட் நீண்டுகொண்டே சென்றது. கணவரிடம் காட்ட அந்தாள் அரைவாசியை வெட்டிப்போட்டு எல்லாத்தையும் இழுத்துப் பறிச்சுக்கொண்டு போக உனக்கு விசரே என்று ஏசினர்.  சரி பார்ப்போம் என்றுவிட்டு இங்கிருந்து சேலை வாங்கிகொண்டு போகலாம் என்றேன். அங்கே இல்லாத சீலையை இங்கிருந்து வாங்கிக்கொண்டு போகப் போறியா என்றார். அங்கிருக்கும் சின்னம்மாவை போனில் கேட்டால் சேலைகள் அங்கு விலை போல் இருந்தது.   

சூட்கேஸ் சும்மாதானே போகப் போகுது. இங்கேயே வாங்குவம் என்று கூறிவிட்டு எத்தனை பேர் வீட்டுக்குப் போகவேண்டும்  என்று லிஸ்ட் போட்டால் அறுபத்தைந்து உறவினர் வீடுகளுக்குக் கட்டாயமாகச் செல்லவேண்டும் என்று தெரிந்தது. அதைவிட முகநூல் உறவுகள், நண்பர்கள் என்று மேலும் பத்துக் கூடியது. உனக்கென்ன விசரே. எல்லார் வீட்டையும் சீலை கொண்டுபோய் குடுக்கப் போறியோ ?? ஒரு பெட்டி பிஸ்கற் குடுத்தால் காணும் என்று மனிசன் ஏச, பதின்னாலு வருசத்துக்குப் பிறகு போறன். விசுக்கோத்தோட போக ஏலாது. நீங்கள் காசு தர வேண்டாம். நான் உண்டியலுக்குள்ள காசு போட்டு வச்சிருக்கிறன் எண்டதும் மனிசன் ஒண்டும் கதைக்கேல்ல.

அல்பேர்டன் என்னும் இடத்துக்குப் போனால் என் நல்ல காலம் எல்லாக் கடைகளிலும் மலிவு விற்பனை. அண்டைக்கு நான் கண்ணில பட்ட அழகான சேலைகளை எல்லாம் அள்ளிக் குவிக்க, நீ சேலைக் கடை வைத்திருக்கிறாயா? என்றாள் கடைக்காரப் பெண். இல்லை நான் இலங்கைக்கு விடுமுறைக்குப் போகிறேன். உறவினர் நண்பர்களுக்குக் குடுக்கத்தான் வாங்குகிறேன் என்றேன். அங்கு சேலைகள் விற்பதில்லையா என்றாள். அங்கு வரும் சேலைகள் தென்னிந்தியாவில் இருந்து வருவது. இங்குபோல் இந்தியாவின் எல்லாப்பகுதிச் சேலைகளும் அங்கு வருவதில்லை என்று அவள் வாயை அடைத்துவிட்டு சேலைகளை வைத்துக் கொடுப்பதற்கும் அவர்களிடமே உங்கள் கடைக்கும் விளம்பரம் தானே என்று பைகளைக் கேட்டேன்.  இலவசமாகத் தர முடியாது. ஒரு பைக்கு 5 பென்ஸ் என்றார் பொறுப்பானவர். வேறு வழியின்றி 40 பவுண்ட்ஸ் கொடுத்துப் பிளாஸ்டிக் பைகளையும் வாங்கினேன்.

விட்டில் கொண்டுவந்து நானும் மகளும் பைகளை இறக்க இவ்வளவையும் என்னண்டு கொண்டு போறது என்று மனிசன் தலையில கையை வச்சுக்கொண்டு இருந்திட்டார். நீங்கள் ஒரு சூட்கேசை மட்டும் இழுங்கோ. நாங்கள் எங்களதைக் கொண்டுவாறம் என்றதற்கு இப்பவே கலை நொண்டி நொண்டி நடக்கிறாய். இதில சூக்கேசையும் காவிறியோ?? கடைசியில எல்லாம் எண்ட தலையில தான் விடியப்போகுது என்று புறுபுறுத்தபடி அந்தாள் போகுது.

சரி எதோ நொண்டிறது எண்டுறாவே என்ன எண்டு நீங்கள் நினைப்பது தெரியுது. சரி அதையும் சொல்லிப்போட்டு அங்காலை போவம்.

உடம்பைக் குறை என்று மனிசன் கத்தினதில கடந்த ஆடி மாதம் தொடக்கம் சைக்கிள் ஓட ஆரம்பிச்சன். என் வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பாக்கில தான் இரண்டு ரவுண்ட் ஓட முப்பது நிமிடமாகும். அவ்வளவு பெரியா பார்க்கா எண்டு கேட்கக்கூடாது.  என்னால மெதுவாத்தான் ஓட ஏலும். மனிசன் அன்றுதொடக்கம் தொடர்ந்து சைக்கிள்தான் கிட்ட இடங்களுக்கெல்லாம் பயன்படுத்துவது. எனக்கு வாகனங்களுக்கு இடையில சைக்கிள் ஓடப் பயம். அதுக்கு ஒரு காரணம் இருக்கு.  என் சைக்கிள் புத்தம் புதிது இல்லை என்றாலும் நல்ல வடிவானது. ஆனால் முதல்நாள் ஏறி இருந்தால் சீற் கொங்கிறீற் கல்லுக்கு மேல இருந்ததுபோல ஒரே நோ. நான் உதில இருந்து ஓட ஏலாது என்று அடம்பிடிக்க மனிசன் என்னைக் கூட்டிக்கொண்டு போய் சைக்கிள் கடையில புதிசா ஒரு சீற் வாங்கித் தந்தார்.

அடுத்தநாள் காலை ஒரு ரவுண்ட் முடிச்சு இரண்டாவது தொடங்க கொஞ்சம் உற்சாகம் வர பெடலை ஊண்டி மிதிச்சுக் கொண்டு நூறு மீற்றர் ஓடேல்லை. ஒருபக்கப் பெடலைக் காணவில்லை. எப்பிடி சைக்கிளை நிப்பாடுவது என்றுகூட அந்தநேரம் மறந்துபோச்சு. ஒருவாறு பிரேக்கைப் பிடிச்சு சைக்கிளை விழுத்தி இறங்கியாச்சு. பாக்கில இருந்த போலந்துக்காரன் ஓடிவந்து சயிக்கிளையும் என்னையும் தூக்கிவிட்டு ஓகேயா எண்டான். ஒமெண்டுவிட்டு மனிசனிலை வந்த கோபத்தை அடக்கியபடி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீட்டை வந்தால் அதுக்கிடையில களைச்சுப்போய் வீட்டை வந்திட்டியோ எண்டுது மனிசன். ஒழுங்கான சைக்கிள் வாங்கித் தரேல்லை எண்டு திட்டிவிட்டு இருக்க,  களன்று விழுந்த  பெடலைத் தேடி எடுக்க மனிசன் போனார். அதன் பிறகு எந்த நேரமும் என்ன களருதோ எண்ட நினைப்போடையே சைக்கிள் ஓடுறது. அதால பெரிய வீதிகளில் இறங்குவதேயில்லை.

ஒரு ஞாயிறு சும்மா நிக்கிறாய் வா ரூற்றிங் பக்கம் சைக்கிளில போட்டு வருவம் என்றார். எனக்கும் ஒரு நப்பாசை. ஓம் என்று சொல்லி வெளிக்கிட்டாச்சு. போகும்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. சில பொருட்களையும் வாங்கிக்கொண்டு திரும்ப வாறம். வீதி பள்ளம். சைக்கிளை மிதிக்காதை பிரேக்கை மட்டும் சாடையாப் பிடிச்சுக்கொண்டு போ நான் பின்னாலை வாறனெண்டு சொல்ல, இரண்டு குறுக்கு வீதிகளையும் கடந்து மூன்றாவதுக்கு வந்தால் குறுக்காலை ஒரு வான். பதட்டத்தில பின்பக்க பிரேக்கை  இறுக்கி அழுத்தினால் பின்பக்க பிரேக் பிடிபடவே இல்லை. இன்னும் ஒரு செக்கன் எண்டால் நான் வானுடன் மோதவேண்டி இருக்கும். வேறு வழியே இல்லை சடாரென சீற்றில் இருந்து எழுந்து இரு கால்களையும் நிலத்தில் ஊன்றிச் சயிக்கிளை நிப்பாட்டிப் போட்டன். காலில கிறீக் எண்டு ஒரு சத்தம் கேட்டுது. மனிசனும் பதட்டத்தோட வந்து ஏன் பிரேக் பிடிக்காமல் இறங்கினனி என்றபடி பார்த்தால் பிரேக் களண்டுபோய்க் கிடக்கு. வேணுமெண்டு தான் என்னை கூட்டிக்கொண்டு வந்தது போல என்று சொல்லி மனிசனைத் திட்டிவிட்டு பத்துநிமிடம் சைக்கிளைத் தள்ளியபடி வீட்டை வந்தாச்சு. கொஞ்சம் கொஞ்சமா முழங்கால் வீங்கி நோவெடுக்க, மனிசனை கிடைக்கும் நேரம் எல்லாம் திட்டியபடி வைத்தியரிடம் சென்றால் ஒரு வாரத்திலேயே ஸ்கான் செய்து பார்க்க எந்தவித முறிவும் இல்லை. காலை ஊன்றிய வேகத்தில்  சவ்வு நன்றாக ஈஞ்சு போச்சு. ஒரு மாதத்திலும் மாறலாம். ஒன்றரை இரண்டு ஆண்டுகளிலும் மாறலாம். பிசியோ தெரபி மட்டுமே வழி என்றார்கள். 

இண்டைக்கு இவ்வளவும் தான். மீண்டும் சேலைக்கதைக்கு நாளை வாறன்.

Share this post


Link to post
Share on other sites

அத்தார் பொறுமையின் சிகரம். :cool:

Share this post


Link to post
Share on other sites

 ஒளிவு மறைவில்லாமல் அத்தானிடம்     வாங்கிய பேச்சையும்   சுவையாக சொல்ல சுமே யால் தான் முடியும் தொடருங்கோ tw_blush:

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

அத்தார் பொறுமையின் சிகரம். :cool:

உதுதான் காலம்.

4 minutes ago, நிலாமதி said:

 ஒளிவு மறைவில்லாமல் அத்தானிடம்     வாங்கிய பேச்சையும்   சுவையாக சொல்ல சுமே யால் தான் முடியும் தொடருங்கோ tw_blush:

:11_blush::11_blush:

Share this post


Link to post
Share on other sites

 தொடருங்கள் சுமே. இரண்டாம் பகுதி இன்னும் வாசிக்கவில்லை. உங்கள் கொலிடே அனுபவம் சுவையாக இருந்திருக்கும். உங்கள் வெளிப்படையான எழுத்துநடை ரசிக்கக்கூடியதாய் உள்ளது.

 

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, Kavallur Kanmani said:

 தொடருங்கள் சுமே. இரண்டாம் பகுதி இன்னும் வாசிக்கவில்லை. உங்கள் கொலிடே அனுபவம் சுவையாக இருந்திருக்கும். உங்கள் வெளிப்படையான எழுத்துநடை ரசிக்கக்கூடியதாய் உள்ளது.

 

நன்றி அக்கா

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, நிலாமதி said:

 ஒளிவு மறைவில்லாமல் அத்தானிடம்     வாங்கிய பேச்சையும்   சுவையாக சொல்ல சுமே யால் தான் முடியும் தொடருங்கோ tw_blush:

யார் கண்டது கணவருக்கு குடுத்த பேச்சை, இங்க வாங்கினதுபோல எழுதியிருக்கலாம். 

Share this post


Link to post
Share on other sites

எங்க மிச்ச கொசிப்பை காணவில்லை:cool:

Share this post


Link to post
Share on other sites

எழுதுங்கோ

வாசிக்கிறம்

 

எனது  பயணங்கள் பிரான்சுக்குள்ள மட்டும் தான்

பார்க்க

படிக்க

அனுபவிக்க  நம்மை  சுற்றியே  ஆயிரம் விடயங்கள் இருப்பதை  நாம் கண்டு கொள்வதில்லை

இங்கிருந்து ஆயிரமாயிரம்  கிலோமீற்றர்கள் பறந்து

TAJMAHAL  இலிற்கு  முன்னால்  நின்று  ஒரு  படம்  எடுத்து  விட்டு   

மீண்டும்  ஓடி  பறந்து வருவதில் நாட்டமில்லை

தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, கந்தப்பு said:

யார் கண்டது கணவருக்கு குடுத்த பேச்சை, இங்க வாங்கினதுபோல எழுதியிருக்கலாம். 

நான் சொன்னா ஆர் நம்பப் போறியள்????tw_anguished:

4 hours ago, ரதி said:

எங்க மிச்ச கொசிப்பை காணவில்லை:cool:

வராமல் எங்க போறது வரும்.

Share this post


Link to post
Share on other sites

சேலைகளை வாங்கிவந்து கடை பரப்பி எந்தச் சேலை யாருக்குக் குடுக்கலாம் என்று முடிவுசெய்து உள்ளே ஒரு சிறிய வெள்ளைத் தாளில் பெயரை எழுதி வெனிசன்சில் வாங்கிவந்த பிளாஸ்டிக் பையுள் போட்டு ஒருபக்கம் வைத்தாயிற்று. இரண்டு மூன்று விதமான சொக்ளற்றுக்களும் வாங்க வெளிக்கிட, இங்க வா சீலை குடுக்கிற எல்லாருக்கும் சொக்ளற் குடுக்கத் தேவையில்லை. முக்கியமான ஆட்களுக்கு மட்டும் குடுத்தால் காணும் எண்டுறார் மனிசன். மனிசனுக்குத் தெரியாமல் கொஞ்சம் வாங்கி கண்ணில படாமல் வச்சாச்சு.  கொஞ்ச சேட்ஸ், பிச்கற், கைப்பைகள் என வாங்கி வைத்துவிட்டு மூன்று நாட்களாக அடுக்கி சூட்கேசுகளைத் தூக்கினால் தூக்கவே முடியாத பாரம். தராசில் கொளுவினால் 33, 32, 34 கிலோ என்று காட்டுது ஒவ்வொரு சூட்கேசும். சீலைகள் கொஞ்சத்தை வெளிய எடு என்ற மனிசனை முறைத்துவிட்டு மனிசனுக்குத் தெரியாமல் அடியில் வைத்த விசுக்கோத்துப் பெட்டிகளை எடுத்து வெளியே வைத்துப் பூட்டினாலும் மேல் மாடியில் இருந்து பொதிகளை இரண்டுபேர் தான் தூக்கி வந்து கீழே வைத்தது.

இனி எங்கள் உடைகளையும் பொருட்களையும் கையில் கொண்டுபோகும் பயணப் பொதியுள் தான் வைத்து மூடவேண்டும். முக்கியமாப் போடும் மூன்று செட் உடைகளை மட்டும் கொண்டுவா. வேண்டுமென்றால் அங்கே வாங்கிக் கொள்ளலாம் என்றவரின் கதையைக் கேட்காமல் ஐந்து செட் உடைகள் மற்றும் தேவையானவற்றை எடுத்து வைக்க ஒவ்வொன்றும் எட்டுக் கிலோவுக்கு அதிகமாய் நிறை காட்டியது. மனிசன் தன் உடைகளில் இரண்டைக் குறைத்து என் பொருட்களில் சிலதைத் தன் பொருட்களுடன் வைத்து மூடினாலும் மகளின் பொதியின் நிறை இன்னும் குறைந்தபாடில்லை. அவளின் சில பொருட்களைத் தனியாக ஒரு பிளாஸ்டிக் பையுள் எடுத்து வைக்கும்படியும் அவர்கள் செக் பண்ணி விட்ட பிறகு மீண்டும் வைப்போம் எனவும் அருமையான யோசனை கூறினார் மனிசன்.

அந்த நாளும் வர மற்ற இரு பிள்ளைகளும் எம்மை வழியனுப்ப கீத்துறோ விமான நிலையத்துக்கு வந்ததும் நல்ல வாசியானது. மேலதிகமாகக் கொண்டு வந்த பொதியை வழியனுப்ப வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு நல்ல பிள்ளைகளாக போடிங் பாஸ் எடுத்துவிட்டு மறுபடியும் வந்து மேலதிக பொருட்களை வைத்துப் பூட்டிவிட்டு விமானத்துக்காகக் காத்திருந்தோம்.

பயணச் சீட்டு எடுக்கும்போதே மலேசியன் எயாலைன்சில் மலிவாக கிடைத்ததுதான். ஆனாலும் மலிவைப் பார்த்து அதில் போகத் துணிவில்லை. எனவே எமிரேட்சில் ஏறி இருந்தாச்சு. ஆறு மணித்தியாலத்தில் துபாயில் மாறவேண்டும். மாறுவதற்கான நேரம் ஒன்றரை மணிநேரம். ஆனால் விமானம் அரை மணி நேரம் பிந்திவிட்டது. முன்பு ஒரு தடவை சிங்கபூர் போனபோது இதே விமான நிலையத்தில் தான் மாறி ஏறினோம். ஒரு பயணப்பொதி தொலைந்து பட்ட அலைச்சல் கண்முன் வர, மூன்று பயணப் பொதிகளும் சரியான நேரத்துக்கு மாற்றி ஏற்றிவிடுவார்களோ ?? அல்லது வராமல் விட்டுவிடுமோ என்று எண்ணியபடியே நடக்க நடக்க நீண்டுகொண்டே போகிறது விமானநிலையம். ஒருவாறு ஓட்டமும் நடையுமாகச் சென்றால் விமானத்தில் ஏறுவதற்குத் தயாராய் நிற்கிறார்கள் மற்றவர்கள்.

முன்பு எமிரேட்சில் பயணிப்பது மகிழ்வானது. ஏனெனில் நல்ல உணவு அடிக்கடி தருவார்கள். புத்தம்புதுப் பேரீச்சம்பழம் அத்தனை சுவையாக இருக்கும். இப்போது அனைத்து விமானக்களும் சொல்லி வைத்ததுபோல் ஒரே உணவையே தர விமானத்தில் உண்ணவே மனமின்றிப் போனது. முதல் விமானத்தில் ஒரு தமிழ்ப்படம். இந்த விமானத்தில் ஒரு மலையாளப் படம் என்று பார்த்து தூங்கி எழுந்தாலும் விமானம் தரை இறங்க இன்னும் இரண்டு மணி நேரம் செல்லும் என்பதைப் பார்த்து வேறு வழியின்றி எழுந்து இரண்டு மூன்று தடவை உள்ளே நடந்து மீண்டும் இருந்து .......நீண்ட பயணம் செய்வதுபோல் வெறுப்பான விடயம் எதுவுமில்லை என மனம் எண்ணினாலும் மலேசியா எப்படி இருக்கும் என்னும் ஆர்வத்தில் நேரம் கடத்தப்பட்டுப் போக ஒருவாறு விமானம் தரையிறங்குகிறது.

அங்கே காவல் இருந்து மலேசியப் பணம் மாற்றிவிட்டு எம் பயணப் பொதிகளை இரு கைகளிலும் இழுத்துக்கொண்டு ஒரு தொங்கலில் இருந்து மறுதொங்கலுக்கு வந்து சட்டல் ரெயில் எடுத்து வெளியே வந்தால் ஒரே வெக்கை.ரெயினில் போவது சுகம். தொடருந்து நிலையம் ஒரு பத்து நிமிடம் நடந்தால் வரும் என்று எல்லாம் விபரங்கள் கொண்டு வந்தாலும் இரண்டு கைகளிலும் ஒன்று பெரிது மற்றது சிறிதுமான பொதிகளை இழுப்பது கடினமாக இருந்ததால் டாக்ஸி பிடிப்போம் என்றாள் மகள். ரெயினில் போவதற்கு ஒருவருக்கு முப்பது மலேசியன் ரிங்கிற் தான். டாக்ஸி 120  ரிங்கிற் என்று போட்டிருந்தது பதிவுசெய்யும் இடத்தில். எமது பொதிகளைப் பார்த்துவிட்டு நீங்கள் பெரிய வான் தான் புக் செய்ய வேண்டும். இத்தனை பொதிகளைக் காரில் ஏற்ற முடியாது என்றாள் அங்கே நின்ற பெண். வானுக்கு 225 ரிங்கிற் செலுத்தவேண்டும் என்றாள். வேறு வழியின்றி புக் செய்துவிட்டு அவள் தந்த துண்டுச் சீட்டைக் கொண்டு வந்து வெளியே நின்றவனிடம் காட்டினால் ஓகே வாங்கோ என்று கூறியபடி ஒரு சிறிய ரக்சியின் கதவைத் திறந்து பிடித்தபடி நிக்கிறான். எனக்கு பார்த்த உடன கோபம் வந்துவிட்டது. இதில் ஏற முடியாது என்றேன் ராங்கியுடன்.

அம்மா நீங்கள் அவனுடன் கத்தவேண்டாம். நான் கதைக்கிறேன் என்றுவிட்டு நாங்கள் புக் செய்தது பெரிய வாகனம். இது அல்ல என்று மகள் கூறியவுடன் எதோ தெரியாததுபோல் எம்மை பெரிய வானில் கொண்டுபோய் ஏற்றிப் பொதிகளையும் தூக்கி வைக்கிறார் சாரதி. நாம் எமது தங்குவிடுதியை கோலாலம்பூர் சென்றல் என்னும் இடத்தில் எடுத்திருந்தோம். வரும் வழி எங்கும் பேரீச்சம் பழ மரங்கள் போன்ற மரங்கள் மட்டுமே கண்ணில் தெரிய, பாலைவனத்தில் சென்றுகொண்டிருப்பது போன்ற உணர்வுதான் மனதில் எழுந்தது. எம் இனத்தவர் ஒருவரும் கண்ணில் படவில்லை. பார்க்கும் முகங்கள் எல்லாம் மலாய் இனத்தவர்களாக இருக்க, இங்கிருக்கும் தமிழர்கள் வீதிகளில் நடப்பதில்லையோ என்னும் ஐயமும் எழுந்தது. ஒரு மணி நேரப் பயணத்தின் பின்னர் விடுதியை நெருங்க தமிழர்களுடன் வேறு பல்லின மக்களின் முகங்கள் கடைகளைக் காண மனதில் ஒரு நின்மதி பிறந்தது.

 

 

 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, விசுகு said:

எழுதுங்கோ

வாசிக்கிறம்

 

எனது  பயணங்கள் பிரான்சுக்குள்ள மட்டும் தான்

பார்க்க

படிக்க

அனுபவிக்க  நம்மை  சுற்றியே  ஆயிரம் விடயங்கள் இருப்பதை  நாம் கண்டு கொள்வதில்லை

இங்கிருந்து ஆயிரமாயிரம்  கிலோமீற்றர்கள் பறந்து

TAJMAHAL  இலிற்கு  முன்னால்  நின்று  ஒரு  படம்  எடுத்து  விட்டு   

மீண்டும்  ஓடி  பறந்து வருவதில் நாட்டமில்லை

தொடருங்கள்

என்ன விசுகர்! நீங்கள் கனடா போய் அர்ஜுனோடை பிரச்சனைப்பட்டதெல்லாம் மறந்து போனியளே? :grin:

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, குமாரசாமி said:

என்ன விசுகர்! நீங்கள் கனடா போய் அர்ஜுனோடை பிரச்சனைப்பட்டதெல்லாம் மறந்து போனியளே? :grin:

கனடா  போவது

அல்லது  யேர்மனி வருவது

சுற்றுலாவுக்கு அல்ல அண்ணை

அது  உறவுகளின்  கொண்டாட்டத்துக்கு...

போன  இடத்தில

நம்ம  யாழ் உறவுகளையும்  சந்திப்பதுண்டு

அது  எந்த  நாடாகிலும்.

 

அர்யூன் அண்ணை  வரவே  இல்லையே

எப்படி  பிரச்சினை  வந்ததுதுதுது??

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, விசுகு said:

கனடா  போவது

அல்லது  யேர்மனி வருவது

சுற்றுலாவுக்கு அல்ல அண்ணை

அது  உறவுகளின்  கொண்டாட்டத்துக்கு...

போன  இடத்தில

நம்ம  யாழ் உறவுகளையும்  சந்திப்பதுண்டு

அது  எந்த  நாடாகிலும்.

விசுகர்.... ஒரு வருடத்தில் அரைவாசி நாட்கள் ஜேர்மனிக்கு,   சுற்றுலா வருவதால்...
அவருக்கு,  "ஜேர்மன்  சிற்றிசன்"   வழங்க, அந்த நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. :grin: :D:

Share this post


Link to post
Share on other sites
On 11/04/2018 at 1:04 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெடலை ஊண்டி மிதிச்சுக் கொண்டு நூறு மீற்றர் ஓடேல்லை. ஒருபக்கப் பெடலைக் காணவில்லை

அவலை நினைத்து உரலை இடித்தது போல் நீங்கள் அவரை நினைத்து பெடலை மிதிச்சிருப்பீங்கள்?

Share this post


Link to post
Share on other sites