• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • மகாகவி பாரதியாரின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு... கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி என்றார் பாரதி... சுதந்திர தாகம், மானுட உயர்வு, கண்ணம்மாவிடம் காதல்... என உயிர்த்துடிப்புள்ள கவிதைகளை அள்ளித் தெளித்தவர் அந்த முண்டாசுக்கவி. தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக விஸ்வரூபமெடுத்த பாரதி, வாழ்க நீ எம்மான் என்று காந்தியைப் போற்றிய தமது பேனாவால், வெள்ளையர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து கவிதைகள் படைத்தார்.பாஞ்சாலி சபதத்தையும் தேசிய விடுதலை கீதமாக பாடியது பாரதியின் தனிச்சிறப்பு. பாரதி ஒரு ஆன்மீகக் கவியாக பலருக்குத் தெரியலாம். கண்ணன் பாடல்கள் அதற்கு ஒரு காரணம். கண்ணனை குழந்தையாக, தாயாக, சேவகனாக, நண்பனாக, வழிகாட்டியாக நினைத்து பாடல்கள் புனைந்தவர் பாரதியார். பாரதி ஒரு தீர்க்கதரிசி... அதனால்தான் சுதந்திரத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்தி முழங்கினார்.. தமிழ் இலக்கியத்திற்கு புதுக்கவிதை, ஹைகூ, சிறுகதை என நவீன வடிவம் கொடுத்தவரும் பாரதிதான்....சங்க கால புலவர்கள் பிடியில் இருந்த புரியாத தமிழை, மக்களுக்கான எளிய தமிழாக மாற்றிய சுடர் மிகும் அறிஞராக பாரதி திகழ்ந்தார்.. பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, மீனவர் பிரச்சினை, இலங்கை மலையகத் தமிழர் துன்பங்கள், இதழியல், கேலிச்சித்திரம் என தமது காலத்திற்கு முன்னே சென்று சிந்தித்த பாரதி இன்றும் தமிழக மக்களுக்கு ஒரு அழியா சொத்துதான். இளம் வயதிலேயே காலமான போதும் காலா வா உன்னைக் காலால் மிதிக்கிறேன் என்ற பாரதியின் கவிதை வரிகள் மரணத்தை வென்று இன்றும் உயிர்த்திருக்கிறது. https://www.polimernews.com/dnews/92299/மகாகவி-பாரதிக்கு-இன்று-138வதுபிறந்தநாள்..!
  • சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்படவில்லை -  அரசாங்கம், அரச சார்பு ஊடகங்கள் ஊடகங்கள் மூலம் முகத்தை அம்பலப்படுத்தியுள்ளதுடன், அவரது வீட்டை சுற்றி வளைத்து முற்றுகையிட்டும் அருவருப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த போதிலும், பாதிக்கப்பட்டவரும் அவரது சுவிஸ் தூதரகமும் சதித்திட்டம் தீட்டுவதாக செய்தி வெளியிட்டு அரசாங்கத்தின் தேவையை சில முக்கிய ஊடகங்கள் பூர்த்தி செய்கின்றன. அவர் கொழும்பில் ஒரு குழுவினரால் கடத்தப்பட்டு, சிஐடியின் அதிகாரியான நிஷாந்தா சில்வா தனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கு எப்படிச் சென்றார் என்று கேள்வி எழுப்பினார். ராஜபக்ஷ ஆட்சியின் கடத்தல்கள், காணாமல் போனவர்கள், படுகொலைகள் மற்றும் பிற பழிவாங்கல்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய நிலைமைக்கு பயந்து அந்த அதிகாரி தப்பி ஓடிவிட்டார் என்பது தெளிவாகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றாலும், சுவிஸ் தூதரக அதிகாரி  கடத்தப்பட்ட சம்பவமானது; சிஐடி அதிகாரியின் அச்சங்கள் நியாயமானது என்பதை வெளிப்படுத்துகிறது. தூதரக ஊழியரை வெள்ளை வானில் கடத்தியமைக்கு வெளியுறவு அமைச்சகம் பொறுப்பேற்க வேண்டும் என்று சுவிஸ் வெளியுறவுத்துறை செயலர் பாஸ்கல் பிரிஸ்வில்லி கூறுகிறார் https://poovaraasu.blogspot.com/2019/12/blog-post_74.html?fbclid=IwAR3X0DIeLm-QlqQyK4a0aXrH4hU-QKh84ZcfNsht7VPH_HthOgyeFnEyn3g    
  • இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.   http://valampurii.lk/valampurii/content.php?id=20105&ctype=news    
  • AL Thavam -   சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன.   எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில் வரையப்படவில்லை.   அனைத்துமே அறிவுறுத்தல்களின் பிரகாரம் வரையப்படுகிறது.   இங்கு தரப்படுகின்ற ஓவியத்தின் விகாரமான சிந்தனையை பாருங்கள்.   இன்னும் தீராத வெறி எஞ்சி இருப்பதை இது உணர்த்துகிறது.   தலைமுறை தலைமுறையாக இந்த தீய சிந்தனை விதைக்கப்படுகிறது.   முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படுகிறார்கள்.   இதற்கு நாம் எப்படி பதிலளிக்கப்போகிறோம்?   நம்மிடம் அதற்கான தயார்படுத்தல்கள் இருக்கின்றனவா?   நமது சமூக நிறுவனங்கள் அதற்கு தயாரா?   நம்மிடையே ஒற்றுமை இருக்கிறதா?   ஒன்றுக்குமே பதில் இல்லை.   ஊமை சமூகம்.   இது முஸ்லிம்களைத்தான் குறிக்கிறது என்பதற்கு ஆதாரமும் கேட்கலாம் நம்மில் சிலர்.   இதுதான் இன்றைய நிலை.   http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_326.html