Jump to content

கணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது! - காரணங்கள் தீர்வுகள்


Recommended Posts

கணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது! - காரணங்கள் தீர்வுகள்

 
 

அவள் ஸ்பெஷல் ஸ்டோரிஉறவுகள்... உணர்வுகள்...வி.எஸ்.சரவணன்

 

மெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ... உலகில் எந்த மூலையில் இருப்பவருடனும் அரை நிமிடத்தில் பேசிவிடலாம் என்று சொல்கிற தகவல் தொழில்நுட்ப புரட்சிக்காலத் தில் நாம் வாழ்கிறோம். ஆனால், நமக்கு மிக முக்கியமான ஒருவர் நம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுகொண்டிருக்கிறார். அவர், வாழ்க்கைத்துணை. ஆம்... கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை, இருவரின் வேலை நேரம் முன் பின் அமைந்துவிடுவது, சோஷியல் மீடியாவில் நேரம் விரயம் செய்வது எனப் பல காரணங்களால் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளும் நேரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்பது இன்று பெரும்பாலான வீடுகளில் கண்கூடு.  

p68a_1523871530.jpg

விகடன் சர்வே... அதிர்ச்சியளித்த முடிவுகள்!

காதல் திருமணமோ, பெற்றோர் செய்துவைத்த திருமணமோ, திருமணமான புதிதோ... நாற்பது, அறுபது வயதுகளில் இருப்பவர்களோ... எந்தச் சூழலிலும் கணவன் மனைவிக்கு இடையே உரையாடுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். அன்றைய தினத்தை எப்படித் திட்டமிடப்போகிறோம் என்பது தொடங்கி... குழந்தை வளர்ப்பு, அவர்களின் எதிர்காலம், சேமிப்பு, ஓய்வு காலம் என முடிவில்லா வார்த்தைகளிலான உறவு அது. ஒருவேளை இருவரில் ஒருவர் ஊருக்குச் செல்ல நேரிட்டால்கூட, மொபைல், வாட்ஸ்அப், வீடியோ கால் என தூரம் பிரிக்காத உணர்வை ஏற்படுத்தித்தர டெக்னாலஜி இருக்கிறது. ஆனால், ஒரே வீட்டில் இருந்துகொண்டு இருவரும் பேசிக்கொள்வதில் கஞ்சத்தனம் காட்டுகின்றனர் என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது.

கணவன் மனைவி பேசிக்கொள்ளும் நேரம், தன்மை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து அறிய, விகடன் இணையதளத்தில் (vikatan.com) ஒரு சர்வே நடத்தியிருந்தோம். அதில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். அந்த சர்வே முடிவுகள் நமக்குச் சொல்பவற்றில் முக்கியமானது, கணவன் மனைவி இருவருக்கிடையேயும் பேசிக்கொள்ளும் நேரம் குறைந்திருப்பதை 70.5% பேர் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சிக்கல் நம் சமூகத்தில் மிகப்பெரிய அளவில் இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. அதற்குக் காரணமாக, 53.7% பேர் கணவன் மனைவி இருவரும் வேலை செய்யும் நேரத்தைக் குறிப்பிட்டிருப்பது ஒருபுறம் என்றால், ‘எங்களுக்குள் பேசிக்கொள்வதற்கு விஷயமே இல்லை’ என 19.7% பேர் சொல்லியிருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது. எனில், இந்நிலை நீண்ட நாள்கள் நீடித்தால் குடும்ப உறவு ஆரோக்கியமற்றுப் போகவே வாய்ப்பு அதிகம்.  

p68c_1523871575.jpg

தாங்கள் சோஷியல் மீடியாவிலும் மொபைலிலும் மூழ்கிவிடுபவர்கள் என்று 26.7% பேர் தெரிவித்திருக்கிறார்கள். இதுவும் நாளடைவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளன. மொத்தத்தில், சர்வே முடிவுகள் நமக்குச் சொல்லும் விஷயங்கள் இரண்டு... 

கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் வேலை மற்றும் குடும்பத்துக்கான நேரத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் தெளிவான வரையறைகளை வகுத்துக் கொள்ளவில்லை. அடுத்து, தொழில்நுட்ப யுகத்தில் தவிர்க்கமுடியாமல் நம் கைகளைக் கவ்விக்கொண்டிருக்கும் மொபைல் மற்றும் சோஷியல் மீடியாவைக் கையாள்வதிலும், நேரம் ஒதுக்குவதிலும் கறார் தன்மையும் இல்லை.

இப்படிப் பேசுங்கள்!

மனோதத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணன், “நாம் பேசுகிற மொழியே ஆண்களுக்கானது, பெண்களுக்கானது எனப் பிரிந்திருக்கிறது. அரசியல், விளையாட்டு என வீட்டுக்கு வெளியேயுள்ள உலகம் பற்றி ஆணும் உறவுகள், சமையல் என வீட்டுக்கு உள்ளேயுள்ள உலகம் பற்றிப் பெண்ணும் பேசுவதற்கு விருப்பப்படுகின்றனர். பெண்கள், ஆண்களின் வெளியுலகம் பற்றிய கதைகளுக்குக் காதுகொடுக்கவும், ஆண்கள், பெண்கள் உலகின் நுண்ணிய உணர்வுகளை ஒதுக்காமல் இருக்கவும் பழகிக்கொள்வதே, அவர்களைத் தம்பதி ஆக்கும். இல்லையென்றால், இருவரும் தனித்தனியே பிரிந்து நிற்கும் ஆண் பெண்ணாகவே இருப்பார்கள்'' என்கிறார்.

கணவன் மனைவிக்குள் பிரச்னை தீர உதவுகிறதா சோஷியல் மீடியா?

“மொபைல் எனது பிறப்புரிமை என்று சொல்கிற காலம் அல்லவா இது’ என்று தொடங்குகிறார் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்,

“திருமணமான புதிதில் கணவன் மனைவி நிறைய நேரம் பேசுகிறார்கள். அப்போது ஒருவர் குறையை மற்றவர் பெரிதுபடுத்துவதில்லை. இந்த நிலை சில மாதங்களே நீடிக்கின்றன. பின்னர், சிறிய குறையும் பெரிதாகப் பார்க்கப்படும். அப்போதுதான் மொபைல் மற்றும் சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிடத் தொடங்குகிறார்கள். இது, பிரச்னையை எதிர்நோக்குவதிலிருந்து தள்ளிப்போட வைத்து, தற்காலிகமாகத் தப்பிச்செல்ல வைக்கிறது. இதனால், அந்தச் சிக்கல் முடிந்துவிடாமல் இடைவெளி அதிகரிக்கிறது. கூடவே, தம் பிரச்னையை சோஷியல் மீடியாவில் பூடகமாக வெளிப்படுத்துவதால், சில நேரங்களில் நல்ல விளைவுகளும் பல நேரங்களில் எதிர்விளைவுகளும் ஏற்படுகின்றன. கூடவே, மொபைலில் யாருடன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறார் / சாட் செய்கிறார் எனும் புதிய சந்தேகங்களைக் கிளப்பிவிடவும் செய்கிறது. வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு அலுவலகம் சென்றுவிடும்போது, வாட்ஸ்அப்பில் ‘ஸாரி’ கேட்டு, சமாதானமாவதும் உண்டு. ஆனாலும், அது நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசுவதற்கு ஈடாகாது. ஏனெனில், மன்னிப்பு கேட்கும் குரலில் இருக்கும் தொனி, முகத்தில் தெரியும் உண்மைத்தன்மை வாட்ஸ்அப்பின் வழியே வரும் ‘ஸாரி’யில் வெளிப்படுவதில்லை” என்கிறார்.

ஈர்ப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

“இந்தச் சிக்கலின் தீவிரத்தை ஆழமாகப் பார்க்க வேண்டியது அவசியம்” எனத் தொடங்குகிறார் மனநல ஆலோசகர் குறிஞ்சி.   

p68d_1523871648.jpg

“மண வாழ்க்கையில் ஒருவர்மீது மற்ற வருக்கு இருக்கும் ஈர்ப்பு குறைந்துபோவதே, அவர்களுக்கு இடையேயான உரையாடலும் குறைந்து போவதற்குக் காரணம். அந்த ஈர்ப்பு குறையாமல் பார்த்துக்கொள்வதில் இருவருக்கும் பொறுப்புள்ளது. அதற்கான அடித்தளம், அன்பால் அமைக்கப்பட வேண்டும். அடுத்ததாக, தம்பதிகளில் ஒருவருக்கு ஆர்வம் இல்லாத துறையில் மற்றவர் ஆர்வம் காட்டலாம். ஆனால், அதைப் பிடிவாதமாகச் செய்யக் கூடாது. அதேபோல, ஒருவர் கூறுவதை மற்றவர் அலட்சியமாகக் கேட்பது அல்லது கேட்காமல் விடுவதே சிக்கல் தொடங்கும் இடம். இது காலப்போக்கில், ‘உன்கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது’ என்கிற மனநிலையை வளர்த்து, உரையாடலைக் கொன்றுவிடும்.

செக் நோட்ஸ்!

என்னிடம் கவுன்சலிங்குக்காக வருபவர்களில் பத்தில் எட்டுப் பேர், ‘எனக்காகக் கணவர்/மனைவி நேரம் செலவழிப்பதில்லை; அன்பாகப் பேசுவதில்லை; நான் சொல்வதைப் புரிந்து கொள்வதில்லை’ என்றே சொல்கிறார்கள். அவர்கள் மனம்விட்டுப் பேசியிருந்தாலே என்னிடம் வரவேண்டிய தேவையிருந்திருக்காது. தம்பதிகள் பின்வரும் விஷயங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும்...

*பேசும் தொனி மிகவும் முக்கியம். வேலைச்சுமையால் தாமதமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பி, களைப்புடன் வீடுவந்தடையும் நொடியில், ‘எங்க போயிட்டு வர்றீங்க/வர்ற?’ என்ற கேள்வி, இணையை இன்னும் நொந்துபோகவோ, கோபத்தில் வெடிக்கவைக்கவோதான் செய்யும். ‘வேலை நிறையவா இன்னிக்கு’னு என்பதாக, இணையின் சூழல் உணர்ந்து பேச வேண்டும்.

*அதையும் மீறிச் சிறு சண்டை வந்துவிட்டாலும் ‘ஸாரி’ சொல்வதற்கு ஈகோ பார்க்கக் கூடாது. அதுவே தீர்வுக்கான முதல் மருந்து.

*பொய் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பொய்யை நீண்ட காலம் காப்பாற்ற முடியாது. அந்த விஷயம் பொய் எனத் தெரிந்ததும் அடுத்து சொல்லும் உண்மைகளெல்லாம்கூட பொய்களாகவே பார்க்கப்படும். அது இருவருக்குமான உரையாடலைத் தடுப்பதில் பிரதான இடம் வகிக்கும்.

*கணவன் மனைவி இருவரும் தங்களுக்கான தனிமைப் பொழுதுகளை உருவாக்கிக்கொள்ள முனைய வேண்டும். இணை ஏதோ ஒரு விஷயம் பேசவரும்போது ‘குழந்தைகளைப் பார்த்துக்கணும்’, ‘நான் டெட்லைன் டென்ஷன்ல இருக்கேன்’ என, அதைத் தவிர்க்கும்படியான காரணங்களைச் சொல்லக் கூடாது. குறிப்பாக, தனிமையில் கணவருடன் பேசுவதற்கான விஷயங்களை எப்போதும் வைத்திருப்பார் மனைவி. அதைக் கணவர் புரிந்துகொள்ள வேண்டும்.

*இதேபோலத்தான் கணவரும். தன்னுடன் பேசி, சிரித்து, ஆலோசிக்கும் பொழுதுகளில் மனைவி தொடர்ந்து ஆர்வமின்றி இருந்துவந்தால், அவருக்கும் அது பழகிவிடும்.

*கணவன் மனைவிக்கு இடையே வார்த்தைகள் குறைவதால் உருவாகும் இடைவெளி, சில நேரங்களில் அவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கலாம். இது விவாகரத்து வரைகூட செல்லக்கூடும்.

*இடைவெளியைக் குறைக்கும் முதல் முயற்சியாக, கணவன் மனைவி இருவரும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்கும்படியாக வேலைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இருவரும் ஆளுக்கொரு அறையில் பிரிந்துகிடக்காமல், ஒரே அறையில் இருந்தபடி, ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே அவரவர் வேலைகளைச் செய்யலாம்” என்கிறார் குறிஞ்சி.

கணவன் மனைவி பேசிக்கொள்ளும் நேரம் குறைவது என்பது குழந்தைகளின் கல்வி, எதிர்காலம், குடும்ப சேமிப்பு, ஆரோக்கியம் என அவர்கள் வாழ்வின் அடுத்த கட்டங்களைப் பற்றித் திட்டமிடுவதில் குளறுபடியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடும். எனவே, பேசுவதைப் பற்றி பேச வேண்டிய நேரமிது.


ஏதோ தவறவிடுகிறோம் என்பது புரிகிறது!

செ
ன்னையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் ஹேமா.  

p68e_1523871690.jpg

``இன்றைய வாழ்க்கை முறையில் நேர நெருக்கடியைத் தவிர்க்க முடிவதில்லை. என்னுடைய வேலை நேரம் காலை எட்டு மணியிலிருந்து மூன்று மணிவரை. எனவே, நான் ஆறரை மணிக்கே புறப்பட வேண்டியுள் ளது. என் கணவருக்கான வேலை நேரம் காலை 10 மணியிலிருந்து இரவு எப்போது முடியும் எனச் சொல்ல முடியாது. இதனால் நாங்கள் சந்தித்துக்கொள்கிற நேரமே அரிதாக மாறிவிட்டது. என்னைப் பேருந்து நிலையத்தில் அவர் டிராப் பண்ண வரும் நேரத்தில்தான் பேசிக்கொள்வோம். ஞாயிற்றுக்கிழமை என்பது ஸ்பெஷல் சமையல், வீட்டை ஒழுங்குபடுத்துவது, மகளை வெளியே அழைத்துக்கொண்டுபோவது, மிச்சமிருக்கும் அலுவலக வேலைகளை முடிப்பது எனச் சட்டென்று ஓடிவிடும். நாங்கள் இருவரும் ஒரு மணி நேரம் எந்தத் தொந்தரவும் இல்லாத சூழலில் கடைசியாக எப்போது பேசிக்கொண்டோம் என்று நினைத்துப்பார்த்தால், ஞாபகத்தில் அப்படி எதுவும் இல்லை. குடும்ப நலனுக்காகத்தான் ஓடுகிறோம் என்றாலும் இருவருக்குமான பிணைப்பில் ஏதோ தவறவிடுகிறோம் என்பது புரிகிறது. நான் வேலைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் பேசுவதற்கான நேரம் கிடைத்திருக்குமோ என்றும் அடிக்கடி தோன்றும்” என்கிறார் ஹேமா.


p68f_1523871720.jpg

டேட்டா ஆஃப்... சந்தோஷம் ஆன்!

பெ
ங்களூரில் ஐ.டி துறையில் பணிபுரியும் ஷீலா, சற்று மாற்றி யோசிக்கிறார். இவர் கணவரும் ஐ.டி துறையில்தான் பணிபுரிகிறார். இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடங்களாகின்றன. “திருமணமானபோது எங்களுக்குக் கிடைத்த  ஓய்வு நேரம் இப்போது கிடைக்கவில்லை. காரணம், இருவருக்குமே வேலை நேரமும், டார்கெட்களும் அதிகரித்துவிட்டன. ஆனாலும், நாங்கள் எங்களுக்கே எங்களுக்கான நேரத்தைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம். விடுமுறை தினங்களில் நான் கிச்சனிலும் அவர் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் எனப் பிரிந்து கிடக்காமல், கிடைக்கும் நேரத்தை இருவரும் சேர்ந்து செலவழிக்கும் குவாலிட்டி டைமாக மாற்றிக்கொள்கிறோம். ஆளுக்கொரு மொபைலில் ஆன்லைனில் தஞ்சமடையாமல், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறோம். எந்தளவுக்கு நாம் டேட்டாவை ஆஃப் செய்கிறோமோ, அந்தளவுக்கு வீட்டில் சந்தோஷம் ஆன் மோடில் இருக்கும்’’ என்கிறார். 


p68g_1523871776.jpg

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.