Jump to content

காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதை


Recommended Posts

காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதை

 
காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"அவர் அடிக்கடி பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு வருவார். சில தடவை என்னிடம் வருவார் மற்றும் சில தடவை மற்ற பெண்களிடம் செல்வார்…"

"ஆனால், படிப்படியாக என்னிடம் வருவதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டார். அவருக்கும் எனக்குமிடையிலான சிறப்பான உறவு எப்போது, எப்படி உருவானது என்பது எனக்கு தெரியவில்லை."

மீரட் நகரத்திலுள்ள சிவப்பு விளக்குப் பகுதியான கபாரி பஜாரிலுள்ள பாலியல் தொழிலாளியான அனிதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆண் ஒருவரிடமிருந்து புதிய வாழ்க்கை கிடைத்தது.

பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையில், அன்புக்கு இடமில்லை என்றாலும், அனிதா வாழ்க்கையில் அது படிப்படியாக உருவானது.

இருப்பினும், அனிதா பல அவமான உணர்ச்சியற்ற உறவுகளை கடந்து சென்றிருந்தார். அவரால் யாரையும் நம்ப முடியாமல் இருந்தது. ஆயினும்கூட நம்பிக்கையின் வெளிச்சம் அப்படியே இருந்தது.

அனிதாவுக்கு கிடைத்த இந்த அன்பு அவருக்குப் பாலியல் தொழிலிலிருந்து விடுதலை கொடுத்தது. சமுதாயத்தில் ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ அவருக்கு வழி ஏற்படுத்தியது.

காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பண நெருக்கடி ஏற்படுத்திய மற்றம்

மேற்கு வங்கத்தின் 24 பர்கானா என்ற மாவட்டத்தை சேர்ந்த அனிதா தனது வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை கடந்துள்ளார்.

"என்னுடைய குடும்பத்தில் பெற்றோரும், தங்கையும் மற்றும் சகோதரரும் இருந்தனர். எங்களது வீட்டில் பண நெருக்கடி என்பது எப்போதுமே இருந்தது. அச்சூழ்நிலையில், வருமானத்திற்கான மற்றொரு வழி தேவைப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.

"எனவே, நான் சம்பாதித்தால் அது குடும்பத்திற்கு உதவும் என்று எண்ணினேன். அப்போது, நகரத்தில் வேலையொன்றை வாங்கித்தருவதாக எனது கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறினார்.

"நல்ல வருமானத்துடன் கூடிய வேலையைத் தருவதாக அவர் என் பெற்றோரிடம் கூறினார். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் அவருடன் வந்தேன்."

"ஆனால், சில தினங்கள் சுற்றித் திரிந்த பின்பு, என்னை பாலியல் தொழில் செய்பவர்களிடம் விற்றுவிட்டார்."

அப்போது, உலகமே மாறிவிட்டதை போன்று அனிதா உணர்ந்தார். அடுத்த சில நாட்களுக்கு தனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு அனிதா தள்ளப்பட்டார்.

காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தன்னை வெளியே செல்ல அனுமதிக்குமாறு அனிதா கூறியதை யாரும் காதுகொடுத்து கேட்கவில்லை.

அனிதா ஒரு வேலையை தேடியே வந்தார், அதற்குப் பதிலாக ஒரு பாலியல் தொழிலாளியாக ஆக்கப்பட்டது அவருக்கு மரணத்தை தழுவியது போல இருந்தது. ஆரம்பத்தில், அனிதா அதை மிகவும் எதிர்த்தார். அதற்காக அவர் தாக்கப்பட்டதுடன் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்.

"அங்கிருந்து வெளியேறுவதற்கு எனக்கு வழியே இல்லை. முதலில் எனக்கு அந்த இடம் புதிதாகவும், சிறைச்சாலை போலவும் இருந்தது. நான் வலுக்கட்டாயமாக…."

"....அதன் மூலம், என்னை நானே வாடிக்கையாளருக்காக தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக. அப்போது எனக்கு மரணிப்பது அல்லது சரி என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. அதனால், உடைந்துபோன நான் என்னை நானே இந்த தொழிலில் ஈடுபடுத்திக்கொண்டேன்."

இந்த நரகத்திலிருந்து வெளியேற விரும்பினேன்

மனிஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பார்த்த பிறகு அனிதா வாழ்க்கையில் ஒருவித மற்றம் ஏற்பட்டது.

தனக்கும் மனீஷுக்கும் இடையிலான உறவு எப்போது விரிவடைந்தது என்று அவர்களுக்கு தெரியவில்லை என அனிதா கூறுகிறார்.

காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதைபடத்தின் காப்புரிமைATUL SHARMA

"மனீஷ் என்னை அடிக்கடி பார்ப்பதற்காக வரத்தொடங்கினார். அப்போது அவர் என்னிடம் பேசியது எனக்கு பிடித்தது."

ஒருநாள் மனீஷ் தன்னுடைய விருப்பத்தை அனிதாவிடம் வெளிப்படுத்தினார். எனவே, மனீஷின் ஆதரவின் மூலம் அனிதா பாலியல் தொழிலிலிருந்து வெளியேற விரும்பினார்.

ஆனால், அனிதாவால் மனீஷை எளிதாக நம்ப முடியவில்லை. அனிதா முந்தைய ஏமாற்றங்களின் காரணமாக மிகவும் கவனமாக இருந்தார். அதன் காரணமாக, அனிதா தான் பாலியல் தொழிலிலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத்தை மனிஷிடம் நேரடியாக தெரிவித்தார். மனீஷ் அடிக்கடி வருவதை மற்ற பாலியல் தொழிலாளர்களும் அறிந்திருந்தனர்."

முத்திரைத் தாளில் விருப்பத்தை தெரிவித்த அனிதா

"சில வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பெண்களை விரும்பினர் என்பதால் இது அவர்களுக்கு அசாதரணமான ஒன்றாகத் தெரியவில்லை. எனவே, மனீஷ் அரசு சாரா அமைப்பொன்றின் உதவியை நாடினார்.

மீரட்டிலேயே செயல்படும் அந்த அமைப்பு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை மீட்கும் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணியையும் செய்து வருகிறது.

காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதைபடத்தின் காப்புரிமைATUL SHARMA

"எங்களிடம் வந்த மனிஷ், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணை தான் விரும்புவதாகவும் அவரை தன்னுடன் அழைத்துச்செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்" என்று அந்த அமைப்பை சேந்தவரான அதுல் ஷர்மா கூறுகிறார்.

"நான் பாலியல் தொழிலில் இருந்து அனிதாவை மீட்ட பிறகு என்ன நடக்கும் என்று கேட்டேன். அதற்கு தான் அனிதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மனீஷ் கூறினார். "

முதல் தடவையே மனிஷை நம்புவது கடினமாக இருந்ததாக அதுல் கூறுகிறார். மனிஷ் தனது நோக்கத்தில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை சரிபார்ப்பதற்காக அவரை சில நாட்களுக்கு பிறகு வருமாறு அவர் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு பிறகு வந்த மனிஷ், அதே வார்த்தைகளை மீண்டும் கூறியதால் அவர் மீது அதுலுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அனிதாபடத்தின் காப்புரிமைATUL SHARMA Image captionஅனிதா

பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட அனிதா

"அனிதாவை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வருவது என்பது கடினம் என்பதால், அவரின் விருப்பத்தை அறிந்து வருமாறு அதுல் மனிஷிடம் தெரிவித்தார்.

அந்த இடத்திலிருந்து வெளியேறுவதில் பெரும் ஆவலுடன் இருந்த அனிதா, ஒரு முத்திரைத் தாளை கொண்டுவருமாறு மனிஷிடம் கூறி அதில் கைநாட்டு இட்டார்.

"எனக்கு எழுதத் தெரியாது. நான் வெளியிலுள்ள யாரிடமும் பேசியதில்லை. நான் அங்கிருந்து செல்ல வேண்டுமென்று உரக்கமாக தெரிவிக்க விரும்பினேன்" என்று அனிதா கூறுகிறார்.

அதன் பிறகு, அதுல் போலீசாரோடு அனிதா அடைக்கப்பட்டிருக்கும் இருக்கும் இடத்திற்கு சென்றார்.

தரகர் மீதான பயம்

தான் தேடிவந்த பெண்ணை காணததால், அவர் அனிதா என்று உரக்கமாக சத்தமிட்டார் அதுல். உடனடியாக பெண்ணொருவர் வெளியே வந்தார்.

காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதைபடத்தின் காப்புரிமைISTOCK

"இது அந்த பெண்தான் என்று புரிந்துகொண்டேன். அவரது கையை பற்றிய நான், என்னோடு சேர்ந்து நடக்குமாறு கூறினேன். தரகரின் மீதான பயத்தின் காரணமாக அவர் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு சிறிது பயந்தார்."

"அப்போது அங்கிருந்த தரகர் எங்களை தடுத்து நிறுத்தியவுடன், அனிதா இங்கிருந்து வெளியேற விரும்புவதாக நான் கூறினேன்."

அதன்பிறகு அங்கிருந்து வேகமான வெளியேறி கார் மூலம் அவர்கள் வெளியேறினர். பின்பு இதுகுறித்து மனீஷின் பெற்றோரிடம் பேசினார் அதுல். உடனடியாக அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அனைத்து விடயங்களையும் மற்றும் அவர்களின் மகனின் பிடிவாதத்தையும் விவரித்த பிறகு ஒப்புக்கொண்டனர்.

ஆனால், அனிதாவின் கடந்தகால வாழ்க்கையை மறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தனர்.

மறுவாழ்வுக்கான பயிற்சி

"திருமணத்தின் மீதான நம்பிக்கை நான் இழந்தேன். ஆனால், மனிஷ் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகே எனக்கு அதில் நம்பிக்கை வந்தது."

"அவருடைய பெற்றோர் என்னை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலும், நான் மோசமாக உணர்ந்திருக்கமாட்டேன். ஆனால், அவர்கள் என்னை படிப்படியாக முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள்.

காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"எனக்கு தற்போது மரியாதையுடன் கூடிய வாழ்க்கையை வாழும் மகள் இருக்கிறாள்.

மீரட்டிலுள்ள கபாரி பஜார் ஒரு சிவப்பு விளக்கு பகுதியாகும். இங்குள்ள பெண்கள் தங்களது வாடிக்கையாளர்களை விசில் அடித்து கூப்பிடுவதென்பது சாதாரணமான நிகழ்வாகும்.

இதுபோன்ற இடங்களில் சிக்கியுள்ள பெண்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வேறு வேலையும் கொடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், மீட்கப்பட்ட பெண்களுக்கு சாதாரண வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் பயிற்சிகளையும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

மேற்கண்ட பயிற்சிகளை அளிப்பதற்காக, மீட்கப்படும் பெண்கள், இந்த அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு, அங்குள்ள பெண்களிடமிருந்து நடைமுறை வாழ்க்கையை கற்கும் வாய்ப்பை சில நாட்களுக்கு ஏற்படுத்தி தருகிறார்கள்.

பாலியல் தொழிலில் நீண்டகாலமாக ஈடுபட்டதால் அந்தப் பெண்களின் அனைத்து பழக்க வழக்கங்களும் மாறிவிட்டதாக அதுல் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/india-43844443

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.