யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நியானி

அறிவித்தல்: 'கருத்துக்கள உறுப்பினர்கள்‘ குழுமம்

Recommended Posts

வணக்கம்,

யாழ் இணையம் ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முகமாக சில மாற்றங்களைச் செய்யவுள்ளது. முதற்கட்டமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கருத்துக்களத்தில் கருத்துகள் வைக்காது வெறுமனே பார்வையாளர்களாக இருப்பவர்களை  'கருத்துக்கள உறுப்பினர்கள்' எனும் புதிய குழுமத்திற்குள் நகர்த்த முடிவு செய்துள்ளோம். அத்துடன் விருப்புக் குறிகள் இடும் வசதியை தவறாகப் பயன்படுத்தும் பாவனைப் பெயர்களையும் இனம் கண்டு அவர்களையும் இக் குழுமத்திற்குள் நகர்த்தவுள்ளோம்.

இக் குழுமத்திற்குள் நகர்த்தப்பட்டவர்களுக்கு 'கருத்துக்கள உறவுகள்' இற்கு இருக்கும்  வசதிகளில் விருப்புக் குறிகளை இடும் வசதியும், திண்ணை அனுமதியும் நீக்கப்படுகின்றன.

எனினும் இக் குழுமத்திற்குள் நகர்த்தப்பட்டவர்கள் ஆரோக்கியமான கருத்தாடல்களில் ஈடுபடும் பட்சத்தில், நிர்வாகத்தால் ஆராயப்பட்ட பின்னர் அவர்கள் மீளவும் 'கருத்துக்கள உறவுகள்' குழுமத்திற்குள் நகர்த்தப்படுவர்.

இவ் புதிய மாற்றத்தினால் கருத்துக்களத்தில் ஆரோக்கியமான கருத்தாடல்களில் ஈடுபடுபவர்களுக்கு மேலும் சில வசதிகள் கொடுக்க முடியும். அதே வேளையில் வெறுமனே விருப்புக் குறிகள் இடுவதற்காக பயன்படுத்தப்படும் பாவனைப் பெயர்களையும் கட்டுப்படுத்தி தமக்கு தாமே விருப்புப் குறிகள் இடுவதையும், குழுவாக இயங்கி விருப்புக் குறிகள் இடுவதையும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என நம்புகின்றோம்.

நன்றி

  • Like 7
  • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

யாழ் களத்தினை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முகமாகவும் நாம் சில மாற்றங்களை அண்மையில் எடுத்து இருந்தோம். இந்த மாற்றங்களை மேலும் மெருகூட்டவும், யாழ் களம் கொடுத்து இருக்கும் வசதிகளை  தவறாக பயன்படுத்துகின்றவர்களை கட்டுப்படுத்தவும் மேலும் சில நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். இதன் படி குழுவாக இயங்கி விருப்புக் குறிகளை இடுபவர்களையும், யாழ் இணையத் தளத்தை (system) ஏமாற்றும் நோக்கோடு ‘கருத்து’ பதிபவர்களையும் 'வரையறுக்கப்பட்ட உறுப்பினர்கள்' எனும் பிரிவிற்குள் நகர்த்தி உள்ளோம். மேலும் சில காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளோம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

 நன்றி

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு