Jump to content

அப்பவே அப்படி கதை!


Recommended Posts

சாரதா... அப்பவே அப்படி கதை!


 

 

saradha-tamil-cinema

 

பீம்சிங், பி.ஆர்.பந்துலு காலத்தில், தனக்கென தனியிடம் பிடித்த இயக்குநர்களில் முக்கியமானவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். மனித உணர்வுகளுக்கும் குடும்பக் கட்டமைப்புகளுக்கும் முக்கியத்துவம் எடுத்து படமாக்குவதில், மனிதர் அந்தக் கால கே.பாக்யராஜ்.

ஒரு சின்ன விஷயம்தான், கதையின் முடிச்சாக இருக்கும். அந்த முடிச்சை வைத்துக் கொண்டு, தொய்வில்லாத திரைக்கதையையும் மிக மிக இயல்பான வசனங்களையும் தந்து, நடிகர்களை நம் மனதுக்கு நெருக்கமானவர்களாக்கிவிடுவார் கே.எஸ்.ஜி.

இவரின் பல படங்களைப் பல முறை பார்த்திருக்கிறேன். தேவையற்ற நகைச்சுவை, அச்சுப்பிச்சு காமெடி, சிகரெட் குடிக்கப் போவதற்காகவே பாடல்கள் என்றெல்லாம் செய்யவே மாட்டார். ’கே.எஸ்.ஜி.க்கு எஸ்.வி.ரங்காராவ் ஒருத்தர் போதும்யா. படத்தை எடுத்து ஹிட்டாக்கிருவார் கோபாலகிருஷ்ணன்’ என்பார்கள் அந்தக் காலத்தில்!

இவரின் முத்திரைப் படங்கள் பல உண்டு. என்றாலும் சாரதா படத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

ஆசிரியர் சம்பந்தமாக எஸ்.எஸ்.ஆர். சாரதாவாக விஜயகுமாரி. இவரின் அப்பா எஸ்.வி.ரங்காராவ். மகளின் காதலை தந்தை எதிர்க்க, அந்த எதிர்ப்பையெல்லாம் மீறி திருமணம் செய்துகொள்வார் விஜயகுமாரி. ஆனால் திருமணத்தன்று எஸ்.எஸ்.ஆருக்கு ஓர் விபத்து. அதில் உயிர் பிழைத்தாலும் தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது. ஈடுபட்டால், உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்கிறார் மருத்துவர். இது அவரைத் தவிர, வீட்டாருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால், இதை அறியாத கணவன், மனைவியை நெருங்க முற்படுவதும் அவளோ விலகி விலகிச் செல்வதுமாக இருக்க... ஒரு கட்டத்தில் விஷயம் எஸ்.எஸ்.ஆருக்குத் தெரியவர அதிர்ந்து போகிறார்.

இந்த நிலையில், அவருக்கு புதிய நண்பராக அசோகன் கிடைக்க... தான் நினைத்தபடி அக்கா மகளை மணக்க முடியாத ஏக்கத்தை அவர் பகிர்ந்துகொள்கிறார். தன்னுடைய நிலையை இவர் சொல்கிறார். அடுத்ததாக, நண்பரின் அக்கா மகள்தான் நம்முடைய மனைவி என்பதை உணர்ந்த எஸ்.எஸ்.ஆர். ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது விவாகரத்து செய்துவிட்டு, மனைவியை நண்பருக்கு அதாவது மனைவியை அவருடைய தாய்மாமாவிற்குத் திருமணம் செய்து வைப்பது என்று முடிவெடுக்க... கலங்கிக் கதறுகிறாள் மனைவி.

ஆனால், எஸ்.எஸ்.ஆரின் அம்மாவோ... ‘’நானே சொல்லலாம்னு இருந்தேன். நீயே முடிவு பண்ணிட்டேப்பா. உன்னைப் பெத்ததுக்கு பெருமைப்படுறேன்’ என்று சொல்ல... இன்னும் உடைந்து போவாள் நாயகி சாரதா.

ஒருவழியாக, விவாகரத்து நடந்து, திருமண ஏற்பாடுகள் நடக்க, ‘என்ன இது முட்டாள்தனம்’ என்று மகளைத் திட்டுவதற்காக ஓடோடி வருவார் அப்பா ரங்காராவ். அங்கே, அக்கா மகளை கட்டிக் கொள்ள ஆசைப்பட்ட அசோகன், நண்பரின் மனைவியாக இருக்கும் அவளை ஏற்க மனமில்லாமல் தவிப்பார். அதேநிலையில் சாரதாவும்.

க்ளைமாக்ஸில்... மணக்கோலத்தில் விஷமருந்திய நிலையில், கணவர் எஸ்.எஸ்.ஆரிடம் காலில் விழுந்து நமஸ்கரிப்பாள். அப்படியே சரிந்து இறப்பாள். படத்தை நிறைவு செய்து வணக்கம் கார்டு போடுவார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

ஒவ்வொரு காட்சியும் நடிப்பும் வசனமும் பார்ப்பவர்களைக் கலங்கடிக்கும். கதறடிக்கும். கண்ணீர் விடச் செய்யும். கவியரசு கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.எஸ். தயாரித்த படம் இது. 1962ம் வருடம் ரிலீஸாகி நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படம்.

எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி, எஸ்.வி.ரங்காராவ், எம்.வி.ராஜம்மா, எம்.ஆர். ராதா, அசோகன் என ஒருவருக்கொருவர், நடிப்பில் மிளிர்ந்து ஒளிர்ந்திருப்பார்கள்.

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், மெல்ல மெல்ல அருகில் வந்து, தட்டுத் தடுமாறி, மணமகளே மணமகளே வா வா... என்று ஒவ்வொரு பாட்டும் செம ஹிட்டு. கே.வி. மகாதேவன் இசையில் எல்லாப் பாடல்களுமே மனதில் பச்சக்கென்று இன்றைக்கும் பதிந்திருக்கும்.

தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாத கணவன், கணவனே மனைவிக்கு மறுமணம், அதற்கு மாமியாரே தெரிவிக்கிற சம்மதம் என்று கதையிலும் கருத்திலுமாக... கிட்டத்தட்ட 55 வருடங்களுக்கு முன்பே, மிகப்பெரிய மாற்றங்களை நமக்குள் உணர்த்தியிருப்பார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

http://www.kamadenu.in/news/cinema/1753-saradha-tamil-cinema.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

அவள் ஒரு தொடர்கதை... அப்பவே அப்படி கதை!


 

 

aval-oru-thodarkadhai-appave-appadi-kadhai

  

இன்றைக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்துவிட்டார்கள். அன்றைக்கே அவர்களை நாயகியாக்கியிருப்பார் இயக்குநர் கே.பாலசந்தர். 74ம் ஆண்டு வெளிவந்த படம், அவள் ஒரு தொடர்கதை. கிட்டத்தட்ட 44 வருடங்களாகிவிட்டாலும் கூட, இன்றைக்கும் சேனல்களில் இந்தப் படத்தை ஒளிபரப்பினால், அதே ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பார்க்கிற ரசிகர் கூட்டம் இருப்பதுதான், பாலசந்தரின் தனித்த அடையாளம். தனித்திறமை.

விதவைத் தங்கை, படிக்கும் தங்கை, பார்வையற்ற தம்பி, ஓடிப்போன அப்பா, குடிகார அண்ணன், அண்ணி, அவர்களின் குழந்தைகள்... இவர்களே உலகமென வாழ்ந்து வரும் கவிதா எனும் பெண்ணின் கதைதான் அவள் ஒரு தொடர்கதை.

காதலித்தாலும் வரம்புமீறாமல், காதலனைக் காத்திருக்க வைக்கும் குடும்பப் பொறுப்பு, அன்பும் கருணையும் எங்கே, எப்போது, யாருக்கு என்பதிலான தெளிவு என அறிமுகப் படம் போல் இல்லாமல், அசத்தியெடுத்திருப்பார் சுஜாதா.

சுஜாதாவின் தோழி படாபட் ஜெயலட்சுமி. கிட்டத்தட்ட கவிதாவுக்கு முரணானவள். காதலையும் காதலர்களையும் மாற்றிக் கொண்டிருப்பவள். அவளின் இளம்வயது விதவைத் தாய். எம்.எஸ்.பெருமாளின் கதையைப் படமாக்கிய விதங்களுக்குள் இருக்கிற கே.பி.யின் டச். முத்திரை. ஸ்டைல்.

‘என்னடா இவ. கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ கர்வமா இருக்கா?’

‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக்கூடாது’.

***************************

‘அபார்ஷன் பண்ணிட்டேன். ஆனா இனி முடிவு பண்ணிட்டேன். இனிமே அபார்ஷன் கூடாதுன்னு. ஏன்னா, அபார்ஷன் பாவம்ங்கறதால இல்ல. உடம்பு தாங்கலப்பா’

*****************************************

விதவைத் தங்கைக்கு வாழ்க்கை கொடுக்க வருபவன், தன் காதலன். ஆனால் அதை பல்கடித்துத் தாங்கிக் கொண்டு, தான் வாங்கிவைத்த கலர்புடவையை, தங்கைக்குக் கொடுத்து, வெள்ளைப்புடவையில் இருந்து மாற வைப்பாள் கவிதா. ‘அவளுக்கு பொட்டு வைச்சி விடும்மா’ என்பார் அம்மாவிடம். ‘என்னடி இது’ என்று பதறுவாள் அம்மா. ‘ஊர்ல என்ன சொல்லுவாங்க’ என்று கேட்பாள்’. ‘ஊர்ல எதுவும் சொல்லலேன்னா, உம்பொண்ணை எதுவேணா செய்ய அனுப்பிச்சிருவியா?’ என்பாள் கவிதா. விக்கித்து நிற்பாள் அம்மா. தியேட்டரே கைத்தட்டி ஆர்ப்பரிக்கும்.

படாபட் ஜெயலட்சுமி யாரை காதலிக்கிறாரோ அந்த நபரே அவரின் அம்மாவிடம் பழகுவார். அதைப் பார்த்துவிடுவார் படாபட். அடுத்து அம்மா தன் தரப்பு விளக்கங்களையெல்லாம் சொல்வாள். சொல்லிமுடித்ததும் அம்மாவின் அருகில் வந்து, ‘அம்மாவுக்கும் பொண்ணுக்கும் நடுவுல ஆயிரம் சண்டை வரலாம். ஆனா சக்களத்தி சண்டை வரக்கூடாது’ என்பார் படாபட்.

இப்படி படம் முழுக்க வசனம், வசனம், வசனம் என காட்சிகளின் கனங்களையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நமக்கு மிக எளிதாகக் கடத்திக் கொண்டு வருவார் கே.பாலசந்தர்.

குடிகார அண்ணன், உதவாக்கரை. நள்ளிரவில் தூளியில் உள்ள குழந்தை அழும். சத்தம் கேட்டு சுஜாதா வெளியே வந்து, அண்ணியை அழைப்பார். ‘இதோ வரேன்’, ‘இதோ வரேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்துவிட்டு, பிறகு அறைக்கதவு திறப்பார். அண்ணியின் பின்னே அண்ணன். சுஜாதா புரிந்துகொள்வார். சுருக்கென தேள் போல் அண்ணியை வார்த்தைகளால் கொட்டுவார். அந்த அண்ணி, ‘என்னுடைய உணர்ச்சிக்காகவோ, ஆசைக்காகவோ எதுவுமே நடந்ததில்லை. அப்படியான ஆசைகளும் எப்பவோ செத்துப்போச்சு. உங்க அண்ணன் குடிகாரர்தான். உதவாக்கரைதான். ஆனா வேற எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துக்கூட பாக்கமாட்டார். அந்தத் தப்பையும் அவர் செஞ்சிடக்கூடாதுன்னுதான்...’ என்று சொல்லும்போது, அண்ணியின் கேரக்டர், அப்படியே பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் மனதில்!

அந்த பஸ், கண்டக்டர், மாடி விகடகவி கோபால், அலுவலக அதிகாரி, காதலன், பெண் பித்து பிடித்த அலுவலக ஊழியர் என அவரவர் உலகங்களையும் அவரவர் இயல்புகளையும் பொளேர்பொளேரென அறைந்து அறைந்து நமக்கு வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்திருப்பார் கே.பி.

ஒரு கையை மடக்கி, இன்னொரு கையை விரித்து... மடக்கி விரித்து என  அந்த ஸ்டைல், வார்த்தைக்கு வார்த்தை படாபட், ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள், ஒவ்வொரு தருணத்திலும் அத்தியாயம் 1, அத்தியாயம் 2 என்று டைட்டில், விதவைத் தங்கைக்காக காதலனை இழந்த கவிதா, கல்யாணத்தின் போது நிகழும் விபத்தால், தனக்கான மாப்பிள்ளையை தன் இன்னொரு தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிற திருமணக் காட்சி அபாரம். படம் முழுக்க வசனங்கள்தான். ஆனால் கால்மணி நேரத்துக்கும் மேலாக வசனமே இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிற திருமணக் காட்சிகள், தங்கைக்கு திருமணம் நடந்ததும், பழையபடி வீடு, கவிதாவின் படம், மாலையிடப்பட்ட அண்ணனின் படம், தையல் மிஷினில் விதவை அண்ணி, அடுப்படியில் உணவு தயாரிக்கும் அம்மா, வேலைக்குக் கிளம்புகிற கவிதா, மீண்டும் அதே ரூட் பஸ், அதே ஆபீஸ்... டைட்டிலில் மீண்டும் முதல் அத்தியாயம்... என்று முடிக்கும்போது, ’கே.பாலசந்தர் படம்னா சும்மாவா. அதனாலதான் அவரு இயக்குநர் சிகரம்’ என்று கொண்டாடிக்கொண்டிருப்பார்கள் ரசிகர்கள். இன்றளவும் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

http://www.kamadenu.in/news/cinema/2017-aval-oru-thodarkadhai-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

அந்த ஏழு நாட்கள் - அப்பவே அப்படி கதை!


 

 

andha-7-naatkal-appave-appadi-kadhai

 

ஒரு திரைப்படத்தை வெறும் இரண்டரை மணி நேரப் படமாக மட்டுமே ஒதுக்கிவைத்துவிட முடியாது. சினிமா என்பது நம்மை சிரிக்கவைத்து, கண்ணீர் சிந்தவைத்து, கதறவைத்து, பரிதாபப்பட வைத்து, கோபமுறை வைத்து, வேதனைப்பட வைத்து என ஏதேனும் செய்யவேண்டும். இவை அத்தனையையும் செய்த அந்த ஏழு நாட்கள்... ஏழேழு ஜென்மத்துக்கும் நினைவில் நிற்கும் காவியம்.

சுவரில்லாத சித்திரங்களில் தொடங்கிய டைரக்‌ஷன் பணி. மெளனகீதங்களில் பட்டிட்தொட்டியெங்கும் பாக்யராஜ் படமாம்ல... என்று கூட்டம்கூட்டமாய் திரையுலகிற்கு ஓடி வந்தது. அப்படியொரு பிரமாண்ட வெற்றிக்கு அடுத்து வந்தவை தோல்விப்படங்களில்லை. மெளனகீதங்கள் அளவுக்கான ஆகச்சிறந்த வெற்றியும் கெளரவமும் தந்தது அந்த ஏழு நாட்கள்தான்.

திரைக்கதை எனும் உத்திதான், சினிமாவுக்கான ஆணிவேர். அந்த திரைக்கதையில் ஜித்து வேலைகள் செய்யும் மாயக்காரர் பாக்யராஜ். இந்தப் படமும் அவரின் திரைக்கதைக்கும் கதை சொல்லும் திறனுக்குமான ஆகச் சிறந்த ஒருசோறு பதம்.

படத்தின் டைட்டில் ஆரம்பமாகும். அதேவேளையில், திருமணக்கோலத்தில் நாயகி அம்பிகா அமர்ந்திருக்க, கல்யாண வேலைகள் நடந்துகொண்டிருக்கும். ‘பரவாயில்லியே... படம் ஆரம்பிக்கும்போதே ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகற மாதிரி எடுக்கறதுக்கே தில்லு வேணும்பா’ என்று விழிகள் விரியப் பார்த்திருக்க, இறந்துவிட்ட தன் முதல் மனைவியின் குழந்தையுடன் டாக்டர் ராஜேஷ் மணமேடைக்கு வருவார். ஆடியன்ஸ் முகத்தில் அட.. தெரியும். அமருவார். டைட்டில் ஓடிக்கொண்டே இருக்கும். தாலிகட்டுவார். டைட்டில் முடியும்.

வயதான, நோய்வாய்ப்பட்டு, படுத்தபடுக்கையாகிக் கிடக்கிற அம்மாவிடம் மனைவியை அறிமுகப்படுத்தி வைப்பார் டாக்டர். அன்றிரவு... முதலிரவு. பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கிச் சரிவார் அம்பிகா. மாத்திரை, ஊசி. ‘சரியான தூக்கமில்லை. சாப்பிட்டது ஒத்துக்கலை போல’ என்று டாக்டர், தன் அப்பாவிடம் சொல்வார். ஆனால் அவருக்குத் தெரியும்... முதலிரவு வேளையில், மனைவி தூக்கமாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என்று!

பிறகு, காரணம் கேட்க, பிளாஷ்பேக் விரியும். பாலக்காட்டு மாதவன் தன் சிஷ்யனுடன் வருவார். ஒரு ஆச்சரியம், அதிர்ச்சி, திகைப்பு, கவலை என்று ஆரம்பித்த கதை, அப்படியே வேறொரு தளத்துக்குள் நுழைந்து, நம்மை அப்படியே கட்டிப்போடுகிற செப்படிவித்தை பாக்யராஜ் ஸ்டைல்.

பணத்தை எடுக்க பாத்ரூம் செல்லுவதும் அம்பிகாவின் ஹேர்பின்னையே சாவியாகப் பயன்படுத்திக் கொள்வதும் பிறந்தமேனியில் குளிப்பதைப் பார்த்த கோபத்தில், குத்தாட்டம் போடுகிற காஜாஷெரீப்பை வெளுத்தெடுப்பதும் என படம் முழுக்க வருகிற காமெடி ரகளைகள், புது தினுசு. புதுக் கிச்சுக்கிச்சு.

கேரள வரவான அம்பிகா தமிழ்ப் பெண்ணாகவும் நம்மூர் பாக்யராஜ், பாலக்காட்டு மாதவனாகவும் வழக்கம்போல் அவரின் கல்லாபெட்டி சிங்கார நகைச்சுவைகளும் என படம் மகிழவும் நெகிழவும் மாறிமாறி நம்மை ஆட்படுத்திக்கொண்டே இருக்கும்.

‘மனசுக்குப் பிடிச்சவரோட சேரவிடாம பிரிச்சிட்டாங்க. கட்டாயக்கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க’ என்பதெல்லாம் ராஜேஷ் தெரிந்துகொண்டதும்... ‘எங்க அம்மா இன்னும் ஒருவாரத்துல இறந்துருவாங்க. அவங்க நிம்மதிக்காகத்தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.  எங்க அம்மாவுக்காக ஒருவாரம் இங்கே இரு. அதுக்குள்ளே உன் காதலன் எங்கே இருக்காருன்னு கண்டுபிடிச்சு, நானே உன்னை சேர்த்துவைக்கிறேன்’ என்று ராஜேஷ் சொல்ல, அந்த டாக்டர் கேரக்டர் உயர்ந்த, சிறந்த மருந்தென உள்ளே புகுந்து என்னவோ செய்யும்.

காதலி இன்னொருவனை திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால் தற்கொலைக்கு இறங்குகிறாள். காப்பாற்றி விவரம் கேட்ட கணவன், அவளை காதலுடனேயே சேர்த்துவைப்பதாக உறுதி கொடுக்கிறான். அதன்படி காதலனை சந்தித்து, மிகப்பக்குவமாகப் பேசி, சேர்த்துவைப்பதற்கான முயற்சிகள் எடுக்கிறான். இப்படியொரு கதை, அதை எள்ளளவும் முகம் சுளிக்கச் செய்யாமலும் நகம் கடிக்க வைக்காமலும் ‘நல்லா சொல்றாங்கய்யா சமூகத்துக்கு நீதி’ என தலையிலடித்துக் கொள்ளாமலும் செய்திருப்பதில்தான் பாக்யராஜின் வெற்றி சீக்ரெட்!

‘இந்த உலகத்துல பசிக்காம இருக்கறதுக்கு என்னென்ன டெக்னிக் இருக்கோ அது அத்தனையும் எங்க ஆசானுக்குத் தெரியும். என்று துணியில் தண்ணீரை நனைத்து வயிற்றில் கட்டிக் கொள்வார் என்று காஜாஷெரீப் சொல்ல, அம்பிகா, அங்கே ஆர்மோனியத்தில் டியூன் போட்டுக்கொண்டிருக்கும் பாக்யராஜைப் பார்ப்பார். ‘ஈரேழு லோகத்துக்கும் ராஜா நான்தன்னே...’ என்று பாடிக்கொண்டிருப்பார் பாலக்காட்டு மாதவன். அப்ப உனக்குடா என்று அம்பிகா கேட்க, இந்த விஷயத்துல எங்க ஆசான். கரெக்ட்டா இருப்பாருங்க. எனக்கு இட்லி வாங்கித்தின்ன காசு கொடுத்துட்டாரு’ என்பார் காஜாஷெரீப்.

நவராத்திரி கொலு. கொலு பொம்மையின் மூலமாக காதலைச் சொல்லும் அம்பிகா, அந்தக் காதலை பொம்மை மூலமாகவே மறுக்கும் பாக்யராஜ், கடைகளில் திருடிய சாமான்களை பிளாட்பாரத்தில் போட்டு விற்கும் காஜாஷெரீப். அந்தப் பொருட்களையெல்லாம் அள்ளிக்கொண்டு போகும் போலீஸ். பொருட்கள் விரித்த போஸ்டர், சினிமா போஸ்டர். அதில், திருடாதே பட போஸ்டர். காட்சிக்குத் தகுந்தது போலவும் பட டைட்டில். தன் ஆதர்ஷ எம்ஜிஆரையும் காட்டுகிற புத்திசாலித்தனம்.

இன்னொன்றையும் யோசிக்க பிரமிப்பாகத்தான் இருக்கிறது. படம் இசை சம்பந்தப்பட்ட காதல், சமூகக் கருத்துக் கொண்ட படம். இசைதான் அடித்தளம். ஆனால் படத்தில் வதவதவெனப் பாடல்கள் இருக்காது. எம்.எஸ்.வி. யின் இசையும் பாடலும் படத்தின் கனத்தை இன்னும் உணர்த்தின.

ஒருவழியாக, ராஜேஷ், பாக்யராஜைப் பார்ப்பார். ‘நான் ஒரு சினிமா எடுக்கறேன். நீங்கதான் மியூஸிக் போடுறீங்க’ என்று அவரை அழைத்துக்கொண்டு, ஓரிடத்தில் தங்கவைப்பார். படத்தின் கதை சொல்கிறேன் என்று பாலக்காட்டு மாதவன், வசந்தி, டாக்டர் ஆகியோரின் வாழ்க்கையை கதை போல சொல்லுவார் ராஜேஷ்.

ஒரு காட்சி. போன் வரும். வேலைக்காரர் பேசுவார். ‘அம்மா, இறந்துபோயிட்டாங்கய்யா’ என்பார். அம்மா இறந்த துக்கம், வலி, அனைத்தையும் அடக்கிக்கொண்டு இறுக்கமாய் வருவார். அந்த சமயத்தில் பாத்ரூம் போய்விட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டே, ‘ஆ ஹீரோவோட அம்மை கேரக்டர், மரிச்சுப் போயியா... பிழைச்சுப் போயியா சாரே...’ என்பார். ‘கண்ணீரைக் கட்டுக்குள் வைத்தபடி, ‘அவங்க செத்துட்டாங்க’ என்பார் ராஜேஷ். உடனே பாக்யராஜ், ‘சூப்பர் சாரே. இந்த சிச்சுவேஷனுக்கு இப்படி இருந்தாத்தான் சாரே சரியாயிட்டு இருக்கும்னு நெனைச்சேன்’ என்பார்.  இந்தக் காட்சிக்கு அழவும் வைத்து சிரிக்கவும் செய்திருப்பார் பாக்யராஜ்.

ஆக, படம் பார்ப்பவர்கள் அனைவரும் பாக்யராஜூம் அம்பிகாவும் சேரணுமே சேரணுமே...’ என்று தவித்தபடி படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தமிழ் சினிமா உலகின் புகழ்பெற்ற அந்த க்ளைமாக்ஸ்... யாராலும் அவ்வளவு சுலபமாக கடப்பதோ மறப்பதோ முடியாது.

மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை என்றும் அதைப் பற்றி யார் மூலமோ தெரிந்து கொண்ட பாக்யராஜ், பின்னாளில் இதையே ஒரு கருவாக, கதையாக, திரைக்கதையாக, சினிமாவாக உருவாக்கினார் என்று சொல்வார்கள்.

கல்யாணப்பரிசு வசந்தி கேரக்டர் போலவே அந்த ஏழு நாட்கள் வசந்தியையும் மறக்கவே முடியாது. அம்பிகாவின் மிகச்சிறந்த நடிப்பாற்றலை, வெகு அழகாக வெளிப்படுத்தியிருப்பார் இயக்குநர். டாக்டராக வரும் ராஜேஷின் பண்பட்ட நடிப்பையும் அவரின் அக்மார்க் அன்பான குரலையும் சொல்லியே ஆகவேண்டும்.

‘என்னுடைய காதலி உங்களுக்கு மனைவியாகலாம். ஆனால் உங்களுடைய மனைவி ஒருபோதும் எனக்குக் காதலியாக முடியாது’ என்று சொல்லிவிட்டு, ‘இது கொஞ்சம் ஓல்டு க்ளைமாக்ஸ்தான். ஆனா ஓல்டு இஸ் கோல்டு’ என்று ஆர்மோனியப் பெட்டியுடன் நடந்து போக... கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் கே.பாக்யராஜ் என்று டைட்டில் கார்டு விழும். மொத்த தியேட்டரும் கைத்தட்டி வரவேற்றது... அந்த முடிவையும் பாக்யராஜையும்!

அந்தக் காலத்தில், பாக்யராஜை பெண்களுக்கு ஏன் இந்தளவுக்குப் பிடிக்கிறது என்றொரு கேள்வி இருந்தது. பாக்யராஜை பெண்களுக்கு இந்தளவு ஏன் பிடித்தது என்பதற்கான விடைகளில்... அந்த ஏழு நாட்களும் ஒன்று!

http://www.kamadenu.in/news/cinema/2097-andha-7-naatkal-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

அந்த ஏழு நாட்கள் - அப்பவே அப்படி கதை!


 

 

andha-7-naatkal-appave-appadi-kadhai

 

ஒரு திரைப்படத்தை வெறும் இரண்டரை மணி நேரப் படமாக மட்டுமே ஒதுக்கிவைத்துவிட முடியாது. சினிமா என்பது நம்மை சிரிக்கவைத்து, கண்ணீர் சிந்தவைத்து, கதறவைத்து, பரிதாபப்பட வைத்து, கோபமுறை வைத்து, வேதனைப்பட வைத்து என ஏதேனும் செய்யவேண்டும். இவை அத்தனையையும் செய்த அந்த ஏழு நாட்கள்... ஏழேழு ஜென்மத்துக்கும் நினைவில் நிற்கும் காவியம்.

சுவரில்லாத சித்திரங்களில் தொடங்கிய டைரக்‌ஷன் பணி. மெளனகீதங்களில் பட்டிட்தொட்டியெங்கும் பாக்யராஜ் படமாம்ல... என்று கூட்டம்கூட்டமாய் திரையுலகிற்கு ஓடி வந்தது. அப்படியொரு பிரமாண்ட வெற்றிக்கு அடுத்து வந்தவை தோல்விப்படங்களில்லை. மெளனகீதங்கள் அளவுக்கான ஆகச்சிறந்த வெற்றியும் கெளரவமும் தந்தது அந்த ஏழு நாட்கள்தான்.

திரைக்கதை எனும் உத்திதான், சினிமாவுக்கான ஆணிவேர். அந்த திரைக்கதையில் ஜித்து வேலைகள் செய்யும் மாயக்காரர் பாக்யராஜ். இந்தப் படமும் அவரின் திரைக்கதைக்கும் கதை சொல்லும் திறனுக்குமான ஆகச் சிறந்த ஒருசோறு பதம்.

படத்தின் டைட்டில் ஆரம்பமாகும். அதேவேளையில், திருமணக்கோலத்தில் நாயகி அம்பிகா அமர்ந்திருக்க, கல்யாண வேலைகள் நடந்துகொண்டிருக்கும். ‘பரவாயில்லியே... படம் ஆரம்பிக்கும்போதே ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகற மாதிரி எடுக்கறதுக்கே தில்லு வேணும்பா’ என்று விழிகள் விரியப் பார்த்திருக்க, இறந்துவிட்ட தன் முதல் மனைவியின் குழந்தையுடன் டாக்டர் ராஜேஷ் மணமேடைக்கு வருவார். ஆடியன்ஸ் முகத்தில் அட.. தெரியும். அமருவார். டைட்டில் ஓடிக்கொண்டே இருக்கும். தாலிகட்டுவார். டைட்டில் முடியும்.

வயதான, நோய்வாய்ப்பட்டு, படுத்தபடுக்கையாகிக் கிடக்கிற அம்மாவிடம் மனைவியை அறிமுகப்படுத்தி வைப்பார் டாக்டர். அன்றிரவு... முதலிரவு. பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கிச் சரிவார் அம்பிகா. மாத்திரை, ஊசி. ‘சரியான தூக்கமில்லை. சாப்பிட்டது ஒத்துக்கலை போல’ என்று டாக்டர், தன் அப்பாவிடம் சொல்வார். ஆனால் அவருக்குத் தெரியும்... முதலிரவு வேளையில், மனைவி தூக்கமாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என்று!

பிறகு, காரணம் கேட்க, பிளாஷ்பேக் விரியும். பாலக்காட்டு மாதவன் தன் சிஷ்யனுடன் வருவார். ஒரு ஆச்சரியம், அதிர்ச்சி, திகைப்பு, கவலை என்று ஆரம்பித்த கதை, அப்படியே வேறொரு தளத்துக்குள் நுழைந்து, நம்மை அப்படியே கட்டிப்போடுகிற செப்படிவித்தை பாக்யராஜ் ஸ்டைல்.

பணத்தை எடுக்க பாத்ரூம் செல்லுவதும் அம்பிகாவின் ஹேர்பின்னையே சாவியாகப் பயன்படுத்திக் கொள்வதும் பிறந்தமேனியில் குளிப்பதைப் பார்த்த கோபத்தில், குத்தாட்டம் போடுகிற காஜாஷெரீப்பை வெளுத்தெடுப்பதும் என படம் முழுக்க வருகிற காமெடி ரகளைகள், புது தினுசு. புதுக் கிச்சுக்கிச்சு.

கேரள வரவான அம்பிகா தமிழ்ப் பெண்ணாகவும் நம்மூர் பாக்யராஜ், பாலக்காட்டு மாதவனாகவும் வழக்கம்போல் அவரின் கல்லாபெட்டி சிங்கார நகைச்சுவைகளும் என படம் மகிழவும் நெகிழவும் மாறிமாறி நம்மை ஆட்படுத்திக்கொண்டே இருக்கும்.

‘மனசுக்குப் பிடிச்சவரோட சேரவிடாம பிரிச்சிட்டாங்க. கட்டாயக்கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க’ என்பதெல்லாம் ராஜேஷ் தெரிந்துகொண்டதும்... ‘எங்க அம்மா இன்னும் ஒருவாரத்துல இறந்துருவாங்க. அவங்க நிம்மதிக்காகத்தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.  எங்க அம்மாவுக்காக ஒருவாரம் இங்கே இரு. அதுக்குள்ளே உன் காதலன் எங்கே இருக்காருன்னு கண்டுபிடிச்சு, நானே உன்னை சேர்த்துவைக்கிறேன்’ என்று ராஜேஷ் சொல்ல, அந்த டாக்டர் கேரக்டர் உயர்ந்த, சிறந்த மருந்தென உள்ளே புகுந்து என்னவோ செய்யும்.

காதலி இன்னொருவனை திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால் தற்கொலைக்கு இறங்குகிறாள். காப்பாற்றி விவரம் கேட்ட கணவன், அவளை காதலுடனேயே சேர்த்துவைப்பதாக உறுதி கொடுக்கிறான். அதன்படி காதலனை சந்தித்து, மிகப்பக்குவமாகப் பேசி, சேர்த்துவைப்பதற்கான முயற்சிகள் எடுக்கிறான். இப்படியொரு கதை, அதை எள்ளளவும் முகம் சுளிக்கச் செய்யாமலும் நகம் கடிக்க வைக்காமலும் ‘நல்லா சொல்றாங்கய்யா சமூகத்துக்கு நீதி’ என தலையிலடித்துக் கொள்ளாமலும் செய்திருப்பதில்தான் பாக்யராஜின் வெற்றி சீக்ரெட்!

‘இந்த உலகத்துல பசிக்காம இருக்கறதுக்கு என்னென்ன டெக்னிக் இருக்கோ அது அத்தனையும் எங்க ஆசானுக்குத் தெரியும். என்று துணியில் தண்ணீரை நனைத்து வயிற்றில் கட்டிக் கொள்வார் என்று காஜாஷெரீப் சொல்ல, அம்பிகா, அங்கே ஆர்மோனியத்தில் டியூன் போட்டுக்கொண்டிருக்கும் பாக்யராஜைப் பார்ப்பார். ‘ஈரேழு லோகத்துக்கும் ராஜா நான்தன்னே...’ என்று பாடிக்கொண்டிருப்பார் பாலக்காட்டு மாதவன். அப்ப உனக்குடா என்று அம்பிகா கேட்க, இந்த விஷயத்துல எங்க ஆசான். கரெக்ட்டா இருப்பாருங்க. எனக்கு இட்லி வாங்கித்தின்ன காசு கொடுத்துட்டாரு’ என்பார் காஜாஷெரீப்.

நவராத்திரி கொலு. கொலு பொம்மையின் மூலமாக காதலைச் சொல்லும் அம்பிகா, அந்தக் காதலை பொம்மை மூலமாகவே மறுக்கும் பாக்யராஜ், கடைகளில் திருடிய சாமான்களை பிளாட்பாரத்தில் போட்டு விற்கும் காஜாஷெரீப். அந்தப் பொருட்களையெல்லாம் அள்ளிக்கொண்டு போகும் போலீஸ். பொருட்கள் விரித்த போஸ்டர், சினிமா போஸ்டர். அதில், திருடாதே பட போஸ்டர். காட்சிக்குத் தகுந்தது போலவும் பட டைட்டில். தன் ஆதர்ஷ எம்ஜிஆரையும் காட்டுகிற புத்திசாலித்தனம்.

இன்னொன்றையும் யோசிக்க பிரமிப்பாகத்தான் இருக்கிறது. படம் இசை சம்பந்தப்பட்ட காதல், சமூகக் கருத்துக் கொண்ட படம். இசைதான் அடித்தளம். ஆனால் படத்தில் வதவதவெனப் பாடல்கள் இருக்காது. எம்.எஸ்.வி. யின் இசையும் பாடலும் படத்தின் கனத்தை இன்னும் உணர்த்தின.

ஒருவழியாக, ராஜேஷ், பாக்யராஜைப் பார்ப்பார். ‘நான் ஒரு சினிமா எடுக்கறேன். நீங்கதான் மியூஸிக் போடுறீங்க’ என்று அவரை அழைத்துக்கொண்டு, ஓரிடத்தில் தங்கவைப்பார். படத்தின் கதை சொல்கிறேன் என்று பாலக்காட்டு மாதவன், வசந்தி, டாக்டர் ஆகியோரின் வாழ்க்கையை கதை போல சொல்லுவார் ராஜேஷ்.

ஒரு காட்சி. போன் வரும். வேலைக்காரர் பேசுவார். ‘அம்மா, இறந்துபோயிட்டாங்கய்யா’ என்பார். அம்மா இறந்த துக்கம், வலி, அனைத்தையும் அடக்கிக்கொண்டு இறுக்கமாய் வருவார். அந்த சமயத்தில் பாத்ரூம் போய்விட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டே, ‘ஆ ஹீரோவோட அம்மை கேரக்டர், மரிச்சுப் போயியா... பிழைச்சுப் போயியா சாரே...’ என்பார். ‘கண்ணீரைக் கட்டுக்குள் வைத்தபடி, ‘அவங்க செத்துட்டாங்க’ என்பார் ராஜேஷ். உடனே பாக்யராஜ், ‘சூப்பர் சாரே. இந்த சிச்சுவேஷனுக்கு இப்படி இருந்தாத்தான் சாரே சரியாயிட்டு இருக்கும்னு நெனைச்சேன்’ என்பார்.  இந்தக் காட்சிக்கு அழவும் வைத்து சிரிக்கவும் செய்திருப்பார் பாக்யராஜ்.

ஆக, படம் பார்ப்பவர்கள் அனைவரும் பாக்யராஜூம் அம்பிகாவும் சேரணுமே சேரணுமே...’ என்று தவித்தபடி படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தமிழ் சினிமா உலகின் புகழ்பெற்ற அந்த க்ளைமாக்ஸ்... யாராலும் அவ்வளவு சுலபமாக கடப்பதோ மறப்பதோ முடியாது.

மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை என்றும் அதைப் பற்றி யார் மூலமோ தெரிந்து கொண்ட பாக்யராஜ், பின்னாளில் இதையே ஒரு கருவாக, கதையாக, திரைக்கதையாக, சினிமாவாக உருவாக்கினார் என்று சொல்வார்கள்.

கல்யாணப்பரிசு வசந்தி கேரக்டர் போலவே அந்த ஏழு நாட்கள் வசந்தியையும் மறக்கவே முடியாது. அம்பிகாவின் மிகச்சிறந்த நடிப்பாற்றலை, வெகு அழகாக வெளிப்படுத்தியிருப்பார் இயக்குநர். டாக்டராக வரும் ராஜேஷின் பண்பட்ட நடிப்பையும் அவரின் அக்மார்க் அன்பான குரலையும் சொல்லியே ஆகவேண்டும்.

‘என்னுடைய காதலி உங்களுக்கு மனைவியாகலாம். ஆனால் உங்களுடைய மனைவி ஒருபோதும் எனக்குக் காதலியாக முடியாது’ என்று சொல்லிவிட்டு, ‘இது கொஞ்சம் ஓல்டு க்ளைமாக்ஸ்தான். ஆனா ஓல்டு இஸ் கோல்டு’ என்று ஆர்மோனியப் பெட்டியுடன் நடந்து போக... கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் கே.பாக்யராஜ் என்று டைட்டில் கார்டு விழும். மொத்த தியேட்டரும் கைத்தட்டி வரவேற்றது... அந்த முடிவையும் பாக்யராஜையும்!

அந்தக் காலத்தில், பாக்யராஜை பெண்களுக்கு ஏன் இந்தளவுக்குப் பிடிக்கிறது என்றொரு கேள்வி இருந்தது. பாக்யராஜை பெண்களுக்கு இந்தளவு ஏன் பிடித்தது என்பதற்கான விடைகளில்... அந்த ஏழு நாட்களும் ஒன்று!

http://www.kamadenu.in/news/cinema/2097-andha-7-naatkal-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

 

இப்ப்டத்தில்  எண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இங்கே சூடேற ‍மறக்க முடியதா பாடல்.

Link to comment
Share on other sites

3 hours ago, colomban said:

 

இப்ப்டத்தில்  எண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இங்கே சூடேற ‍மறக்க முடியதா பாடல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வாற அநேகம் படங்களில் கதையைத் தேடி முடிக்கமுதல் படம் முடிந்துவிடும். ஏதோ ஒருசில படங்கள் நல்ல கதைகளுடன் வெளி வருகின்றன.பாடல்களும் அப்படித்தான். அன்றைய பாடல்கள் மனதில் நிலைத்து நிற்பதுபோல் இன்றைய பாடல்கள் இல்லை. 

Link to comment
Share on other sites

இளமை ஊஞ்சலாடுகிறது - அப்பவே அப்படி கதை!


 

 

ilamai-unjaladukirathu-appave-appadi-kadhai

 

’நல்லாருக்கு போங்க... இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைப்போ...’ என்று வயதானவர்களைக் கேலியும் கிண்டலுமாய்க் கேட்பார்கள். ஆனால்  மனம், காதல், உடல், உணர்ச்சி, நட்பு, சபலம், சந்தேகம், நம்பிக்கை என வைத்துக்கொண்டு இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் விளையாடியிருப்பார் இயக்குநர் ஸ்ரீதர்.

நடிப்பில் முன்னேறிக் கொண்டே வந்தார் கமல். எனவே அவரின் நடிப்புப் பசிக்கு தீனி போட்டார் ஸ்ரீதர். ஸ்டைலில் அதகளம் பண்ணிக்கொண்டே இருந்தார் ரஜினி. ஆகவே அவருக்காகவே களம் அமைத்துக் கொடுத்தார் இயக்குநர். எந்தக் கேரக்டராக இருந்தாலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் ஸ்ரீப்ரியா. அதேபோல்தான் ஜெயசித்ராவும். இந்த இருவருக்குமே மிக அழகிய கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொடுத்தார் ஸ்ரீதர்.

படத்தில் வில்லன் கிடையாது. ஆகவே பழிவாங்கல், ரத்தக்களறிக்கெல்லாம் வேலையே இல்லை. சம்பவங்களும் சூழ்நிலைகளும்தான் வில்லன். காமெடிக்கு தனி டிராக்கெல்லாம் போடவில்லை. படத்தினூடே, காட்சிகள் வாயிலாகவே ஆங்காங்கே சிரிக்கவும் ரசிக்கவும் ரசித்துச் சிரிக்கவும் வைக்கிற காமெடிகளை மட்டுமே மிகையில்லாமல் பயன்படுத்தியிருப்பார்.

கல்யாணப் பரிசு, காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம் என்று அந்தக் காலத்தில் படமெடுத்தவர். உரிமைக்குரல், மீனவநண்பன் என்று எம்ஜிஆரின் கடைசிகால திரைப்படங்களை ஹிட்டாக்கியவர் என்று மட்டும் அறிந்துவைத்திருந்த இளம் ரசிகர்களுக்கு, ஸ்ரீதரும் ஸ்ரீதரின் கதை சொல்லும் பாணியும் தெரியவந்ததற்கு, இந்த இளமை ஊஞ்சாலாடுகிறதுதான் பாலமிட்டது.

பணக்கார ரஜினி. அவர்கள் வீட்டில்  யாருமற்ற கமல், பிள்ளை போலவே வளர்கிறார். இருவரும் சகோதரர்கள் போல, நண்பர்கள் போல அன்பு பாராட்டிக் கொள்கின்றனர். கமலும் ஸ்ரீப்ரியாவும் காதலிக்க, ஸ்ரீப்ரியாவுக்கு நெருக்கமான, ரஜினி, கமல் ஆபீசில் வேலை பார்க்கும் ஜெயசித்ராவுக்கு, இளம் விதவைக்கு இந்தக் காதலும் லீலையும்  நன்றாகவே தெரியும்.

ரஜினி , ஒருகட்டத்தில் ஜெயசித்ராவை மடக்க நினைப்பார். பிறகு மன்னிப்பும் கேட்பார். கமல் ஸ்ரீப்ரியா காதல் தெரியாத ரஜினி, ஸ்ரீப்ரியாவை வளைக்கப்பார்ப்பார். ஆனால் பிடிகொடுக்கமாட்டார். இங்கே ரஜினியும் கெட்டவரில்லை. கமலும் நம்பிக்கை துரோகியில்லை. ஆனால் காலம் அப்படி கண்ணாமூச்சி விளையாடும்.

ஜெயசித்ராவின் கிராமத்திற்கு ஸ்ரீப்ரியா சென்றிருக்க, ஒரு திருமணத்திற்காக பக்கத்துக் கிராமம் போயிருப்பார்கள். ஜெயசித்ரா மட்டும் வீட்டில் தனியே இருப்பார். இதுதெரியாமல் கமல் அங்கே தன் காதலி ஸ்ரீப்ரியாவைப் பார்க்க வருவார். வேறு வழியின்றி  அன்றிரவு தங்கநேரிடுகிறது.

அந்த இரவு... அந்தத் தனிமை... இளம் விதவைக்குள் உணர்ச்சியைக் கிளறிவிட, கமல்ஹாசனை உறவுக்கு அழைப்பார் ஜெயசித்ரா. ஒரு வசனம் கிடையாது. ஆபாசமில்லை. ஆனால் தன் கண்களாலேயே கமலுக்கு அழைப்பு விடுக்க, அந்த சபலக்குழியில் இருவருமே விழுவார்கள்.  ஆனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளான கமல், ஜெயசித்ராவுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு, கிளம்பிவிடுவார். அந்தக் கடிதம், ஸ்ரீப்ரியா கையில் கிடைக்கும்.

கமலை விட்டு தள்ளிப்போக நினைக்கிற அதேவேளையில், ரஜினி அவருக்கு கொஞ்சம்கொஞ்சமாக  நெருக்கமாவார். அதேவேளையில், கமலுக்கு ஜெயசித்ரா எழுதும் கடிதம் ரஜினியின் கையில் கிடைக்க... கமல் மீது  கெட்டவன் முத்திரை குத்தப்படும். ஒருகட்டத்தில், ரஜினியின் வீட்டைவிட்டு வெளியேறி, ஜெயசித்ராவைத் தேடிச் செல்வார் கமல். இங்கே, திருமணம் உறுதி செய்யப்பட்டு, தள்ளிப் போடப்பட்டு, ரஜினியின் உடல்நிலைக்காக மலைவாசஸ்தலம் செல்ல நேரிடும். துணைக்கு ஸ்ரீப்ரியா செல்வார்.

இறந்த கோலத்தில் ஜெயசித்ரா இருக்க, அவருக்கு மாலையிட்டு, தாலி கட்டுவார் கமல். பிறகு, ரஜினியும் ஸ்ரீப்ரியாவும் வந்திருக்கிற  எஸ்டேட்டிலேயே கமல் மேனேஜராக வேலை பார்ப்பார். ஒருபக்கம், சூழலைப் புரிந்து உணர்ந்து கமலை மன்னிக்க ஸ்ரீப்ரியா தயாராக இருக்க, ரஜினிக்கு எல்லா விஷயமும் தெரியவர... நிறைவாக கமலையும் ஸ்ரீப்ரியாவையும் இணைத்துவைத்துவிட்டு, ‘சிக்லெட்’ கொடுத்து ரஜினி கிளம்புவதுடன் படம் நிறைவுபெறும்.

ஹோட்டலில் பர்ஸை தொலைத்துவிட்டு கமல் செய்யும் கற்பனைக் காட்சி, இப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜெயராம் பாடிய பாடல். இடம் பெற்ற படம் இளமை ஊஞ்சலாடுகிறது எனும் ரேடியோ அறிவிப்பு, ஸ்ரீப்ரியா வீட்டுக்கு போன் செய்து ‘இச் இச் இச்...’ என்கிற சங்கேத முத்த பாஷை, கமலுக்கும் ஜெயசித்ராவுக்குமான  கிண்ணத்தில் தேன் வடித்து பாடல், காரின் ஸ்டெப்னியை கமல் மாட்டும் போது, டேப்ரிகார்டரில் ‘ஒரேநாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ பாடலை ஸ்ரீப்ரியா ஒலிபரப்பச் செய்வார். உடனே கமல் அதை ஆஃப் செய்வார். மீண்டும் ஸ்ரீப்ரியா ஆன் செய்வார். மீண்டும் ஆஃப் செய்யும் கமல்... அங்கே அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கிற ரஜினி. தியேட்டரே ஆர்ப்பரிக்கும் அற்புதக் காட்சி அது. நிவாஸ் ஒளிப்பதிவு மிகச் சிறப்பு. 

‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா’ பாடலையும் ‘தண்ணி கருத்திருச்சு’ பாடலையும் அப்போது பாடாத மேடைக் கச்சேரிகளே இல்லை. அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கித் தந்திருப்பார் இளையராஜா.

சினிமாவுக்காக, கதைக்காக, டிராமிட்டாக, செண்டிமெண்டாக எவரையும் குற்றவாளியாக்காமல், சந்தர்ப்பங்கள், சபலங்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் மீது குற்றம் சுமத்தி, எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்பும் கொடுத்திருப்பதில், ஸ்ரீதரின் தனி முத்திரை பளிச்சிட்டிருக்கும்.

1978ல் வெளியான இந்தப் படம், ஸ்ரீதருக்கும் கமலுக்கும் ரஜினிக்கும் கமல் ரஜினிக்கும் மறக்க முடியாத வெற்றியாக அமைந்தது. அப்படியே ரசிகர்களுக்கும் கிடைத்தது அற்புதப் படம்!

http://www.kamadenu.in/news/cinema/2194-ilamai-unjaladukirathu-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

ஒருதலை ராகம் - அப்பவே அப்படி கதை!


 

 

oru-thalai-raagam-appavee-appadi-kadhai

  

 

இந்த வார வெள்ளிக்கிழமையோ அடுத்த வார வெள்ளிக்கிழமையோ... அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளிலோ... ரிலீசாகிற காதல் படங்களுக்கு முக்கியப்புள்ளியாகவும் பிள்ளையார் சுழியாகவும் அமைந்த 'ஒருதலை ராகம்’ படத்தை யாரால்தான் மறக்கமுடியும்?

1980ம் வருடம் மே மாதம் 2ம் தேதி ரிலீசான போது, முதல் காட்சிக்குக் கூட்டமே இல்லை. இரண்டாவது ஷோவில் ஓரளவுக் கூட்டம். மாலை ஆறு மணிக்காட்சிக்கு பரவாயில்லை ரகம். இன்னும் மூணு நாளோ நாலு நாளோ ஓடினாலே பெரியவிஷயம்யா... என்று புலம்பலும் பொருமலுமாகப் பேசிக்கொண்டார்கள், தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.

ஆனால், ஐந்தாம் நாள், ஆறாம் நாள், இரண்டாவது வாரத்தில் போட்ட டாப்கியர், சில்வர் ஜூப்ளி எனப்படும் 175 நாட்களைக் கடந்து ஓடியது. வசூல் சாதனை புரிந்தது என்பதெல்லாம் வரலாறு.

அவுட்டோர் ஷூட்டிங் 16 வயதினிலே படத்திற்குப் பிறகுதான் மெல்ல மெல்ல அதிகமானது. ஆனாலும் மைசூர் கிராமம், ஆந்திர கிராமம் என படமெடுத்து, தமிழக கிராமமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மயிலாடுதுறையைக் களமாக்கி, இந்த நிமிடம் வரை அப்படியான படம் எதுவும் வரவில்லை... ஒருதலை ராகம் தவிர!

மயிலாடுதுறை ரயில் நிலையம், புகழ்மிக்க ஏவிசி கல்லூரி, மாயவரம் தெருக்கள் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கே, இந்த இடங்கள் புதுசு.

கதை, திரைக்கதை தொடங்கி பாடல்கள், இசை வரைக்கும் எல்லாமே டி.ராஜேந்தர்தான். அவரின் முதல் எண்ட்ரி கார்டு, இந்தப் படம்தான். தயாரிப்பு, இயக்கம் இ.எம்.இப்ராஹிம் என்று டைட்டிலில் வந்தாலும், டி.ராஜேந்தரின் அடுத்தடுத்த படங்களைப் பார்க்கும்போது, இதுவும் அவர் படம்தான் என்று இன்றுவரை நடக்கிறது பட்டிமன்றம்.

ஒருதலை ராகம், கிட்டத்தட்ட மிகப்பெரிய புரட்சி செய்தது என்றுதான் சொல்லவேண்டும். நடிகர்கள், டெக்னீஷியன்கள் என எல்லோரும் புதிது. முக்கியமாக, கல்லூரிக் களம். இவ்வளவு விஸ்தாரமாக கல்லூரியை, கல்லூரி வாழ்க்கையை  காட்டியதே இல்லை.

சங்கர், ரூபா, உஷா, சந்திரசேகர், தியாகு, ரவீந்தர் என விரல்விட்டு எண்ணும் அளவிலான கதாபாத்திரங்கள். வில்லன் என்று பார்த்தால், தயக்கமும் கூச்சமும் என்றுதான் சொல்லவேண்டும். சொல்லமுடியாத காதல், சொல்லத் தவிக்கிற காதல், சொல்லமுடியாத காதல் வலி... இதுதான் படத்தில் திரும்பத்திரும்ப வரும். ஆனால் ஒவ்வொரு காட்சியும் நம் மனதை கனமாக்கிக் கொண்டே இருக்கும். இதயம், காதல்கோட்டை, சொல்லாமலே என்று வந்திருக்கிற கதைகளுக்கெல்லாம் தாத்தா என்றுதான் ஒருதலை ராகத்தைச் சொல்லவேண்டும்.

இன்னொரு சிறப்பு... இந்தப் படத்தின் பாடல்களைப் பாடாத, முணுமுணுக்காதவர்கள் என்று அப்போது எவரையும் சொல்லமுடியாது. மீனா, ரீனா பாடல், வாசமில்லா மலரிது, கூடையிலே கருவாடு, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோயிலிலே, நானொரு ராசியில்லா ராஜா என்று பாடல்களுக்காக ஓடிய படங்களில், ஒருதலை ராகத்துக்கு தனியிடம் உண்டு.

ரொம்ப துக்கமான படத்தை திரும்பப் பார்க்கமாட்டார்கள் ரசிகர்கள் என்று சொல்லுவார்கள். துலாபாரம் படத்தின் தோல்விக்கு, படத்தின் அதீத சோகமே காரணம் என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் துயரமான முடிவு கொண்ட ஒருதலை ராகம் படத்தை, அப்போதைய இளைஞர்கள், பத்துஇருபது முறைக்கும் மேலே பார்த்தார்கள்.

பணக்கார சங்கர், ஏழை ரூபா. ஆனால் இதெல்லாம் பிரச்சினை இல்லை. ‘மூடி’டைப் ரூபாவுக்கு, தாழ்வுமனப்பான்மை ரூபாவுக்கு எப்போது எது பிடிக்கும் பிடிக்காது என்பதெல்லாம் அவருக்கே தெரியாது. காதலை நோக்கியும் சங்கரை நோக்கியும் ரெண்டடி வருவார். தடாலென்று பத்தடி பின்னே செல்வார்.

எப்போதும் எல்லோரையும் கலாய்த்துக் கதறடிக்கும் ரவீந்தரை நாலு அறை அறையலாம் என்று ஆடியன்ஸூக்கு தோன்றும். எப்போதும் குடித்துக்கொண்டிருந்தாலும் சந்திரசேகர் சொல்லும் குருவிக்கதைக்கு, மொத்த தியேட்டரும் கைத்தட்டி, கண்ணீர் விட்டு, கண்ணீரைத் துடைக்க மனமின்றி பிரமையற்றிருக்கும்.

மெளன மொழியில் தொடங்கிய தமிழ் சினிமாவில், மெளனமாகவே காதலைச் சொல்லியும் சொல்லாமலும் இருந்த ஒருதலைராகத்திற்கு சரித்திரத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் இருக்கிறது.

ஒருதலை ராகத்தால் நமக்கு டி.ராஜேந்தர் கிடைத்தார். டி.ஆருக்கு சினிமாவுடன் சேர்ந்து, அவரின் மனைவியான உஷாவும் கிடைத்தார்.

கதை, சொல்லப்படுகிற திரைக்கதை, வசனம், நாலு நாலு நிமிஷப் பாடல்கள், முகபாவனைகள் என்று எந்த விதத்திலும் சோடை போகாமல், நம்மை உலுக்கியெடுக்கிற ஒருதலைராகத்தில்... அந்த ரயிலே கூட நம்மை என்னவோ செய்யும்!

அதை இப்போது பார்த்தாலும் உணரமுடியும்.

http://www.kamadenu.in/news/cinema/2240-oru-thalai-raagam-appavee-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

காதலிக்க நேரமில்லை - அப்பவே அப்படி கதை!


 

 

kaadhalikka-neramillai-appave-appadi-kadhai

 

‘போன மாசம் ஒரு படம் பாத்தோமே... அது என்ன படம்?’ என்று படத்தின் பெயரையோ, நடிகரின் பெயரையோ, டைரக்டரின் பெயரையோ மறந்து கேட்போம். அப்படியெனில் கதையை? அதைவிட்டுத் தள்ளுங்கள்.

ஆனால் மொத்தக் கதையும் நமக்கு அத்துபடி.‘இந்தப் படம் பாத்துட்டீங்களா?’ என்று ஏதேனும் படம் குறித்துக் கேட்பதில் தவறில்லை. ஆனால் , ‘இந்தப் படத்தைப் பாத்திருக்கீங்களா?’ என்று கேட்டால் சுள்ளென்று கோபமாகிவிடுவார்கள். அந்தக் கேள்வியை அப்படிக் கேட்காமல், ‘எத்தனை தடவை பாத்தீங்க’ என்று கேளுங்கள். குதூகலமாகி, குஷியாக பதில் சொல்லுவார்கள். அந்தப் படம்... காதலிக்க நேரமில்லை.

1964ம் ஆண்டில் வந்த படம். கிட்டத்தட்ட, 54 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இன்றைக்கும் புத்தம் புதிய காப்பியாக, நம் மனசுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது காதலிக்க நேரமில்லை.

1957ம் வருடம் கல்யாணப் பரிசு படத்தை முதன் முதலாக இயக்கிய ஸ்ரீதர், 60ம் வருடத்தில் மீண்ட சொர்க்கத்தையும் விடிவெள்ளியையும் இயக்கினார். 61ம் வருடம் தேன் நிலவு படத்தைத் தந்தார்.  62ம் வருடத்தில், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் போலீஸ்காரன் மகளையும் வழங்கினார். 63ம் ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை படத்தைக் கொடுத்தார்.  64ம் வருடத்தில், கல்யாணப்பரிசு, விடிவெள்ளி, மீண்ட சொர்க்கம், தேன்நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் எப்படியான வெற்றிகளை அவருக்குத் தந்ததோ... அதையெல்லாம் விட பன்மடங்கு வெற்றியை, வசூலை, பெயரை, புகழை, ரசிகர்களை அவருக்குக்கொடுத்த படத்தைத் தந்தார். அதுதான் காதலிக்க நேரமில்லை.

நகைச்சுவைக்காகவே எடுக்கப்பட்ட  முதல்படம் இதுதான் என்பார்கள். நகைச்சுவையும் காதலும் சேர்த்துச் செய்த கலவையாக வந்த படமும் இதுவே என்பார்கள். ஒரு நகைச்சுவை ப்ளஸ் காதல் படம் ஈஸ்ட்மென் கலரில் வெளியான முதல் படமும் இதுதான் என்பார்கள். இந்த நிமிடம் வரை, தமிழ் சினிமாவின்  முதன்மையான நகைச்சுவைப் படம் என்று கொண்டாடிக்கொண்டிருப்பதும் இந்தப் படத்தைத்தான்.

எல்லோருக்கும் தெரிந்த முத்துராமன் இருக்கிறார். எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். எல்லோர் இதயங்களிலும் நெருங்கியிருக்கும் நாகேஷ் ... சொல்லவா வேண்டும். ஆனால் படத்தின் டைட்டிலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா? டி.எஸ்.பாலையா. நடிப்பில் மகா அசுரனான பாலையாவை, ஸ்ரீதர் அளவுக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவுதான் என்றுதான் சொல்லவேண்டும்.

கலர் படம். அப்படியொரு கலர் படம். டைட்டில் முடிந்ததும் வருகிற என்ன பார்வை... உந்தன் பார்வை... பாடலில், கேமிராவின் பார்வையே நம்மை பிரமிக்க வைக்கும். அந்தக் கால மெரீனாவும் டிரைவர் சீட்டுக்கு எதிரில் முத்துராமனின் முகமும்  தெரியும்படியான காட்சி அமைத்தல் கனகச்சிதம். அப்படித்தான், உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா பாட்டிலும் கூட, காரின் சக்கரத்தில், காஞ்சனாவும் ராஜஸ்ரீயும் தெரிவார்கள். ஸ்ரீதரின் வலதுகரமாகவும் இந்தியாவின் மிக முக்கிய ஒளிப்பதிவு மேதையுமான ஏ.வின்செண்ட்டின் கண் ஜாலம், கை காலம் அவையெல்லாம்!

பாலையா, காஞ்சனா, ராஜஸ்ரீ, நாகேஷ், ரவிச்சந்திரன், அவரின் தந்தை, முத்துராமன், அவரின் தந்தை (வி.எஸ்.ராகவன்), அவரின் தாயார், பாலையாவின் மேனேஜர், மேனேஜரின் மகள் சச்சு, ஆழியாறு, பொள்ளாச்சி, ஊட்டி... அவ்வளவுதான் கதாபாத்திரங்கள். அவர்களைக் கொண்டுதான் அதைக்கொண்டுதான் மொத்த ஆட்டமும் போட்டிருப்பார் ஸ்ரீதர்.

விஸ்வநாதன் வேலை வேண்டும் பாட்டு, அந்தக் கால ஸ்டைலின் ஆரம்பம். தங்கப்பன் மாஸ்டர்தான் டான்ஸ். அப்போது அவருக்கு உதவியாளர் சுந்தரம் மாஸ்டர். பிறகு பல வருடங்கள் கழித்து, தங்கப்பன் மாஸ்டருக்கு  அஸிஸ்டெண்டாக சேர்ந்தவர் கமல் என்பது கொசுறுத் தகவல்.

பாடல் மொத்தமும் கண்ணதாசன். ஒரு பாட்டு தேன், இன்னொரு பாட்டு அல்வா, அடுத்த பாட்டு மைசூர்பா, இன்னொரு பாட்டு பாஸந்தி. எல்லாப் பாட்டுகளும் ஹிட்டு. விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் மெல்லிசை மன்னர்களானது இந்தப் படத்தில் இருந்துதான் என்று சொல்லுவார்கள். டைட்டிலிலும் அப்படித்தான் வரும். பிறகு படத்தின் சில்வர் ஜூப்ளிக்குப் பிறகு விழா எடுத்த போது, அவர்களுக்கு மெல்லிசை மன்னர்கள் பட்டத்தை வழங்கியதாகச் சொல்வார்கள்.

காஞ்சனாவுக்கு அறிமுகப்படம். அவரைக் காதலிக்கும் முத்துராமன், அவருடைய நண்பன் ரவிச்சந்திரன், பாலையாவின் மற்றொரு மகளான ராஜஸ்ரீயைக் காதலிக்க, நண்பனின் காதலுக்காக அப்பா வேஷம், பணக்கார வேஷம் போடுகிறார் முத்துராமன். பணக்காரர், எஸ்டேட் முதலாளி பாலையாவைத் தவிர, வேறு யாரும் இந்தக் கேரக்டரைச் செய்திருக்கவே முடியாது. காதலிக்க நேரமில்லை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்ததற்கு, பாலையாவின் நடிப்பும் பலம் சேர்த்தது.

* இங்கிலீஷ் படம் மட்டும்தான் பாப்போம்.

*பணத்திமிர். இந்தப் பணக்கார வர்க்கத் திமிரை ஒடுக்கறதுக்காகவே ஒரு படம் எடுக்கிறேன்.

* பெட்ரோலுக்கு காசு வாங்கிட்டு, கம்பெனி கார்ல வரக்கூடாது.

* கம்பெனி டிரஸ்ஸை எடுத்துட்டு வீட்டுக்குப் போகக் கூடாது.

*யார் கேட்டாலும் படிச்சது அஞ்சாவதுன்னு சொல்லக்கூடாது. கான்வெண்ட்டுன்னு சொல்லணும், அப்பதான் கம்பெனிக்கு மரியாதை.

* பணம் இருக்கட்டும் சார். கலைக்காக சேவை செய்ய ஆசைப்படுறேன்.

* அதை இப்ப சொல்லாதே. உன்னை வைச்சு படம் எடுத்து ஓட்டாண்டியாகி, அடுத்த படம் எடுக்க உங்கிட்ட வருவான் பாரு. அப்ப சொல்லு.

* அசோகர்... உங்க  மகருங்களா.

அடேங்கப்பா... இன்னும் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

முத்துராமன் போனில் பேசிச் சிரிப்பார். போனை வைப்பார். பக்கத்தில் உள்ள பாலையாவும் சிரிப்பார். சம்பந்தி எதுக்குச் சிரிச்சீங்க என்பார். அவரு ஹாஸ்யமா ஏதோ சொன்னார் என்பார் முத்துராமன். ஹாஸ்யமாவா... என்று இன்னும் பலமாகச் சிரிப்பார் பாலையா. பலேய்யா!

இயக்குநர் தாதா மிராஸி தெரியும்தானே. புதிய பறவையெல்லாம் இயக்கினாரே. அவர் கதை சொல்லும் ஸ்டைலை வைத்துதான், பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் சீன் எடுக்கப்பட்டது என்பார்கள். அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்கலாம். ரசிக்கலாம். வியக்கலாம்.

இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது முடியாது என்று சொல்லிவிட்டாராம் சச்சு. கதாநாயகியாக நடிப்பதுதான் லட்சியம். நகைச்சுவை நடிகையாக வேண்டாமே என்றாராம். ஆனால் ஸ்ரீதர், கதை குறித்தும் கேரக்டர் குறித்தும் விவரமாகச் சொல்லவே ஒத்துக்கொண்டார். ‘நான் நடிக்க ஒத்துக்கிட்டதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இதுதான் நான் நடிச்ச முதல் கலர்படம்’ என்று சொல்லிப் பூரிக்கிறார் சச்சு.

ஸ்ரீதரும் கோபுவும் இணைந்து கதை வசனம் பண்ணியிருப்பார்கள். காமெடி படத்துல லாஜிக்கெல்லாம் பாக்கக்கூடாது என்று இன்றைக்கு சப்பைக்கட்டு கட்டுகிறோம். ஆனால், ஓர் காமெடிக்கதைதான் என்றபோதிலும் லாஜிக்கை எந்த இடத்திலும் மீறியிருக்க மாட்டார் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் வந்த பிறகுதான் டைரக்டர்கள் பக்கம் ரசிகர்களின் கவனம் போயிற்று. ஸ்ரீதர் வந்த பிறகுதான், முக்கோணக் காதல் கதை என்பது உருவாயிற்று. ஸ்ரீதர் வந்த பிறகுதான், பேச்சு வழக்கு ஸ்டைலில், தமிழ் சினிமாவின் வசனங்கள் வரத்தொடங்கின.  அதில் முழு முதல் கலர் காமெடி, காதல் காதலிக்க நேரமில்லைக்கு வெகு நிச்சயமாக தனித்த இடம் உண்டு.

பல முறை பார்த்திருக்கிறேன். பதினெட்டு வருடங்களுக்கு முன்பு புத்தம் புதிய காப்பி என்று வெளியிட்ட போது, முதல் நாள் இரவுக்காட்சி, அடுத்த நாள் இரவுக்காட்சி, மூன்றாம் நாள் இரவுக்காட்சி என்று பார்த்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. டிவியில் ஒளிபரப்பும் போதெல்லாம் வேறு எந்தவேலையோ போன் பேசுவதோ இல்லாமல், ரசித்துச் சிரித்து, பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

கதை, கதையை விரிவாக்குகிற திரைக்கதை, அந்தத் திரைக்கதைக்கு வலு சேர்க்கிற வசனங்கள், பாடல்கள், பாலையாவும் நாகேஷூம் உடல்மொழியாலும் வசன உச்சரிப்புகளாலும் தனிக்கவனம் ஈர்த்த அசகாயத்தனம், முத்துராமனின் யதார்த்த நடிப்பு, காஞ்சனா, ராஜஸ்ரீயின் அழகு ப்ளஸ் நடிப்பு, அந்த சச்சுவின் அப்பாவின் அப்பாவித்தனம் (நாளைக்கே கல்யாணமா? எனக்குப் பட்டுச்சட்டை வாங்கணும், வேட்டி வாங்கணும்), ரவிச்சந்திரனின் இளமைத்துள்ளல், சச்சுவின் அழகு, கேமிரா, இசை, இயக்கம் என்று இன்னும் எத்தனை நூற்றாண்டுளானாலும் காதலிக்க நேரமில்லையை... நெஞ்சம் மறக்கவே மறக்காது!

ஆமாம்... காதலிக்க நேரமில்லை படத்தை நீங்கள் எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள், ஞாபகம் இருக்கிறதா?

http://www.kamadenu.in/news/cinema/2283-kaadhalikka-neramillai-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

தில்லானா மோகனாம்பாள் - அப்பவே அப்படி கதை


 

 

thillaana-moganambal-appave-appadi-kadhai

 

நாவலைப் படமாக்குவது ஒன்றும் புதிதல்ல. எத்தனையோ நாவலை எத்தனையோபேர், சினிமாவாக்கியிருக்கிறார்கள். அப்படி சினிமாவாக்கும் போது, கடுகளவேனும் அந்த நாவலுக்கோ எழுத்தாளருக்கோ கவுரவம் சேரும்படி, மரியாதை கூடும்படி படமாக்கியிருந்தால், அதுவே அந்தப் படைப்பின் வெற்றி. சினிமா எனும் செல்லுலாய்ட் மொழியைப் புரிந்ததன் அடையாளம். அப்படி நாவலை படமாக்கி, எழுத்தாளருக்கு மட்டுமின்றி, எல்லோருக்குமே பெருமையையும் மகிழ்வையும் தந்ததில், தில்லானா மோகனாம்பாளுக்கு தனியிடம் உண்டு. 1968ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ரிலீசானது. 

எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு, ஆனந்தவிகடனில் தொடராக எழுதிய கதை இது. நாகஸ்வரக் கலைஞனுக்கும் பரதத்தையே மூச்சாகக் கொண்ட பெண்ணுக்கும் இடையே நடக்கிற மோதலும் காதலுமே கதை என்று ஒருவரியில் சொல்லிவிடமுடியாது. அப்படிச் சொல்வதும் அழகல்ல.

தி.ஜானகிராமனின் மோகமுள் படித்துவிட்டு, கும்பகோணம் தெருக்களில், யமுனாவின் வீடு இதுதானா, புழுதி பறக்கும் சாலை என்று எழுதியது இந்தத் தெருவைத்தானா, பாபு இங்குதான் சோகத்துடன் நடந்துவந்தானா... என்று போய்ப்பார்த்தவர்கள் பலர் உண்டு. அதற்கும் முன்னதாகவே, தில்லானா மோகனாம்பாளைப் படித்துவிட்டு, கல்யாண வீடுகளிலும் கச்சேரிகளிலும் பரத நிகழ்ச்சிகளிலும் சண்முகசுந்தரத்தையும் மோகனாம்பாளையும் தேடினார்கள் என்று சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட ஜீவ கதாபாத்திரங்களுக்கு இன்னும் இன்னும் ஜீவனைக் கொடுத்திருப்பார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.

அந்தக்காலத்தில், சிவாஜியின் நடிப்பை எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையிலேயே, ‘ஆனா கொஞ்சம் ஓவர் ஆக்டிங்ப்பா’ என்றவர்களும் உண்டு. ஆனால், சிக்கல் சண்முகசுந்தரத்துக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று மிதமாகவும் இதமாகவுமான நடிப்பைக் கொடுத்திருப்பதுதான் சிவாஜி எனும் ஒப்பற்ற கலைஞனின் சாதுர்ய சாமர்த்திய அசாத்தியம். ’இவரே நாகஸ்வரம் வாசிக்கிறாரோ...’ என்ற சந்தேகம் சாதாரண ரசிகனுக்குள் எழுந்தது. ‘இனிமே நாகஸ்வரம் வாசிக்கும்போது, தொடையை இப்படித்தான் ஆட்டணும், புருவத்தை இப்படி இப்படியெல்லாம் உசத்தணும், தோள்பட்டைகளை அந்தந்தமாதிரி குறுக்கி நிமிர்த்திக்கணும், முதுகை நிமிர்த்திக்கணும்’ என்றெல்லாம் நாகஸ்வரக் கலைஞர்களுக்கே ஒரு பாடிலாங்வேஜை உருவாக்கித் தந்திருப்பார் சிவாஜி. சிக்கல் சண்முகசுந்தரமாகவே மாறுவதில் அவருக்கு எந்தக்காலத்திலும் சிக்கல் இருந்ததே இல்லையே!

மோகனாம்பாள் பத்மினிக்கும் அவரின் கால்களுக்கும் கண்களுக்கும் பரதத்தைச் சொல்லியா தரவேண்டும். பரதக்கலையை உண்டுபண்ணும்போதே, அதற்காக யாரையெல்லாம் படைக்கவேண்டும் என்று இறைவன் தீர்மானித்த பட்டியல்களில், பத்மினியின் பெயரும் உண்டு.

ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் கொண்ட, தன் விருப்பப்படி மட்டுமே நடக்கவேண்டும் என்று கிடுக்கிப்பிடி போடுகிற அம்மா சிகே.சரஸ்வதி, அவர் உடன் இருக்க, மோதலின் மூலமாகவே சிக்கலாருக்கு காதலைச் சொல்வதுதான், படத்தின் மைய இழை. அந்த இழையில் இருந்து ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக இன்னும் இன்னும் இழைபிரித்துச் சேர்த்திருப்பதுதான் திரைக்கதை.

சிவாஜியின் தம்பியாக ஏவிஎம்.ராஜனும் தன் இயல்பான நடிப்பைத் தந்திருப்பார். மேளக்காரராக பாலையா, வெளுத்துவாங்கியிருப்பார். ’அங்கே எனக்கொரு சோடாக்கடைக்காரனைத் தெரியும்’ என்று சொல்ல, உடனே இவர், ‘எனக்கு பீடாக்கடைக்காரனைத்தெரியும்’ என்பார். ‘என்னன்னு தெரியல தம்பி. கடைல ஜிஞ்சர் பீர் கேட்டேன். அவன் ஏதோ கொடுத்தான். பித்த உடம்பா... கப்புன்னு தூக்கிருச்சு’ என்று பாலையா வரும்போது விசில் பறக்கும். அங்கே நட்டுவனாராக தங்கவேலுவும் டி.ஆர்.ராமச்சந்திரனும் பின்னியிருப்பார்கள். சாரங்கபாணி, சகஸ்ரநாமம், நாகையா, பாலாஜி, நம்பியார் என அவரவருக்கான கதாபாத்திரங்களுக்கு அழகு சேர்த்திருப்பார்கள்.

முக்கியமாக ஜில்ஜில் ரமாமணி. ஆச்சி மனோரமாவின் லைஃப்டைம் கேரக்டர். சிவாஜி போல, பத்மினி போல, மனோரமாவைத் தவிர அந்தக் கேரக்டரை யாராலும் நிறைவு செய்துவிடமுடியாது. ’மண்டு மண்டு...’ என்று சிவாஜி சொல்லும் போது, ‘ஏன்ன்ன்ன்’ என்று ஒரு இழுவையுடன் வெள்ளந்தியாய்க் கேட்கும் போது கைத்தட்டலால் மனம் அள்ளியிருப்பதை பறைசாற்றியிருப்பார் மனோரமா.

ஒருபக்கம் அம்மாவின் உத்தரவையும் இன்னொரு பக்கம் தன் சொந்த ஆசையையும் வைத்துக்கொண்டு தவித்து மருகுவார் பத்மினி. பார்க்கிறவர்கள் கலங்கிப் போவார்கள்.

கலைத்துறையில் இருக்கிறவர்களுக்கான பாலியல் அத்துமீறல்களையும் அதற்காக அவர்கள் செய்யும் மோசமான நடவடிக்கைகளையும் நாகலிங்கம், சிங்கபுரம் மைனர், மதன்பூர் மகாராஜா என்று ஒவ்வொருவர் மூலமாகவும் காட்டிக் கொண்டே வந்த கதையே ஓர் அழகிய திரைக்கதையைத் தந்திருக்கும். அந்தச் சம்பவங்களும் அது தொடர்பான நிகழ்வுகளுமே சிவாஜிக்குள் முளைக்கிற சந்தேகத்துக்கான ஆரம்பப் புள்ளியாகவும் அமைந்திருப்பது, தில்லானா மோகனாம்பாளை தானே வந்து ஒட்டிக்கொண்ட வெற்றிசூட்சுமம்.

’நேத்துவரை நீ பாத்த சிங்கபுரம் மைனர் செத்துட்டான்னே நினைச்சுக்க. என் மனைவியோட பொறுமைதான் நான் திருந்தினதுக்குக் காரணம்’ என்று பாலாஜி சொல்லுவார். ‘அந்த உத்தமியைக் கூட்டிட்டு வந்திருக்கலாமேய்யா’ என்பார் பத்மினி. ‘நீயும் சண்முகசுந்தரம் கலந்துக்கற போட்டில, முன்வரிசைல என் மனைவியோட வந்து உக்கார்றேன்’ என்பார் பாலாஜி. அதேபோல் நடக்கிற போது, கையெடுத்து பத்மினி கும்பிடுவது போல் ஒரு க்ளோஸப், பாலாஜியின் மனைவி சிரித்தபடி கும்பிடுவது போல் இன்னொரு க்ளோஸப் என்று அழகாகப் படம்பிடித்திருப்பார்கள்.

திருவாரூர்க் கோயிலில் போட்டி முடியும்போது, சிவாஜிக்குக் விஷம் தோய்ந்த கத்திக்குத்து. அடுத்த காட்சியில், படுத்தபடுக்கையாகிக் கிடப்பார் சிவாஜி. படம் முழுக்க பளிச்சென்ற புடவையிலும் அலங்காரத்திலும் இருக்கிற பத்மினி, அப்போது சாயம் போனது போல் வெளுத்த நிறத்திலான புடவை அணிந்திருப்பார். மனித உணர்வுகளையே அங்கே பளிச்சென்று காட்டியிருப்பார் இயக்குநர் ஏபி.நாகராஜன்.

சென்னை ஆஸ்பத்திரியில் சிவாஜி சிகிச்சையில் இருப்பார். அங்கே நர்ஸ் மேரியின் செயல்பாடுகள் சிவாஜிக்கு, ‘இவள் காதலிக்கிறாரோ’ என்கிற கலக்கத்தையும் நடுக்கத்தையும் கொடுத்திருக்கும். ’நீங்க முடியாம இருந்தபோது செஞ்ச பணிவிடைகள் தப்பாத் தெரியல. இப்ப நான் செய்றது எல்லாமே உங்களுக்கு வெறுப்பா இருக்குதே...’ என்று கேட்பார் நர்ஸ். ’எங்க அப்பா சர்ச்சுல பியானோ வாசிக்கிறாரு. அவர்கிட்ட உங்க பேரைச் சொல்லி விவரம் சொன்னேன். உடனே அவரு எழுந்து உக்கார்ந்துட்டாரு. ‘அவர் மிகப்பெரிய மகான். இசைமேதை. வாழ்க்கைல உங்க அப்பாவுக்கு எதுனா செய்யணும்னு நெனைச்சா, அதை அந்த மகானுக்குச் செய்யும்மா’ன்னு சொன்னாரு. நீங்க என்னடான்னா நான் உங்களைக் காதலிக்கிறேன்னு நெனைச்சிட்டீங்க. ஏய்யா... உங்களுக்கு நாகஸ்வரத்தைத் தவிர வேற எதுவுமே தெரியாதா’ என்று கேட்பார். ‘ஆமாம்மா, நாகஸ்வரத்தைத் தவிர எனக்கு வேற எதுவுமே தெரியாது’ என்பார் சிவாஜி. கிட்டத்தட்ட அதுதான் அவர் கேரக்டர். அதுதான் இசைக்கலைஞனின் குணமும் கூட! நர்ஸாக நடித்திருக்கும் எம்.எல்.பானுமதிக்கு அந்த ஒருகாட்சிதான். ஆனால் இன்றைக்கும் நம் மனதில் நிற்கிறார் அவர்.

சிவாஜி, பத்மினியின் வாழ்நாள் நடிப்புக்கு, ‘நலம்தானா’ பாட்டு ஒன்றே போதும். இந்தப் பாடலையொட்டி ஒரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. நலம்தானா, உடலும் உள்ளமும் நலம்தானா என்று எழுதியிருப்பார் கண்ணதாசன். அறிஞர் அண்ணா உடல்நலமில்லாமல் இருந்த சமயம் அது. பாடலைக் கேட்டுவிட்டு, கண்ணதாசனுக்கு போன் செய்து, ’அதெப்படிய்யா எழுதினே. உடலும் உள்ளமும் நலம்தானானு நல்லா வார்த்தையைப் போட்டிருக்கே’ என்று புகழ்ந்தாராம். அந்தப் பாடலும் பாடலில் பத்மினியின் கண்கள் வழியேயான நல விசாரிப்புகளும் அதற்கு நாகஸ்வரம் வாசித்தபடியே கண்ணடித்தும் சிரித்துக்கொண்டும் புருவம் உயர்த்தியபடியும் சிவாஜியின் பதில்கள், என பசுமையான காட்சிகள்.

அந்த வைத்தி? வைத்தியைச் சொல்லாவிட்டால் நீங்கள் அடிப்பீர்கள். ஆனால் படம் வந்த போது, வைத்தி நேரில் மாட்டியிருந்தால், அடிபின்னியிருப்பார்கள் ரசிகர்கள். காமெடியில் சக்கைப்போடு போடும் நாகேஷ், நெகடீவான, வில்லத்தனமான, குள்ளநரித்தனமான வைத்தி கேரக்டரை எப்படி ஒத்துக்கொண்டார், எப்படி தூள் கிளப்பினார், அதேபோல வைத்தியைத் திட்டியவர்கள் கடைசியாக, ‘நாகேஷ் பிரமாதம் பண்ணிட்டாருடா’ என்று சொன்னார்கள். அந்த ரசாயன மாற்றம்தான் நாகேஷ்.

கலர்படம். அதையொட்டி நிகழ்ந்திருக்கும் உழைப்பு அபாரம். ஆர்ட் டைரக்‌ஷன் ஒர்க் அமர்க்களப்படும். சிறந்தபடமாக ஜனாதிபதி வெள்ளிப்பதக்கம், தமிழக அரசின் சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை பத்மினி, மனோரமாவுக்கு விருதுகள், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக மக்களின் மனங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்தது எனும் வகையில் காவியம் படைத்திருக்கிறார் ஏபி.நாகராஜன்.

காலமும் சூழலும் எண்ணமும் செயலும்தான் அவ்வப்போது ஒரு மனிதனை நல்லவனாக்கிவிடுகிறது. கெட்டவனாக்கிவிடுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, படத்தில் வருகிற வில்லன்கள் ஒரு சந்தர்ப்பத்தில் திருந்துவது, அதுவும் உணர்ந்து திருந்துவது... உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்குமான சண்டை. அதை அழகுறச் செய்திருப்பார்கள் அவர்களும்!

தில்லானா மோகனாம்பாளும் சிக்கல் சண்முகசுந்தரமும் ஜில்ஜில் ரமாமணியும் வைத்தியும் சினிமா உள்ளவரை வாழ்வார்கள். வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள்! அந்தப் படமும் அப்படித்தான்!

http://www.kamadenu.in/news/cinema/2378-thillaana-moganambal-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

அன்னக்கிளி... அப்பவே அப்படி கதை!


 

 

annakkili-appavee-appadi-kadhai

 

தமிழ் சினிமாவை, அ.மு., - அ.பி. என்று, அதாவது அன்னக்கிளிக்கு முன்பு, அன்னக்கிளிக்கு பின்பு என்று பிரித்துப் பார்க்கவேண்டும். அன்னக்கிளிக்கு முன்பு வரை, நம்மூர் டீக்கடைகளில் கூட ஹிந்திப்பாடல்களே முழங்கிக் கொண்டிருந்தன. அந்த ஹிந்திப் பாடல்களை ரயிலேற்றி, மும்பைக்கே அனுப்பி விட்டு, நம்மூரின் இசையை நாம் கேட்கச் செய்த வகையில், அன்னக்கிளி, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படமாகத் திகழ்கிறது, இன்றைக்கும்! அதற்குக் காரணம்... சரித்திரம் படைத்த இசையின் சொந்தக்காரர் இளையராஜா!  

அன்னக்கிளி... மிக மிக எளிமையான சாதாரணமான, எல்லோருக்கும் புரிந்த, தெரிந்த கிராமத்துக் கதைதான். அன்னக்கிளியாக சுஜாதா, மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். வாத்தியார் தியாகுவாக சிவகுமார், படாபட் ஜெயலட்சுமி, சுஜாதாவின் முறைமாமனாக ஸ்ரீகாந்த், செந்தாமரை, தேங்காய் சீனிவாசன் என அவரவரும் அவரவருக்கான முத்திரைகளை வெகு அழகாகப் பதித்திருப்பார்கள்.

 

வாத்தியார் சிவகுமாருக்கு, பல விஷயங்களில் வாத்தியாராக இருந்து கற்றுத் தரும் சுஜாதா... இந்த இருவருக்குள்ளும் இருக்கிற காதலை இருவருமே சொல்லிக்கொள்ளவில்லை. அதற்குள் நாட்டாமையின் மகளுக்கு திருமணமாகிவிடுகிறது. ‘சொல்லித்தொலைச்சா என்னவாம்’ என்று ஏங்கச் செய்து, தவிக்கவிட்டு, கதறடித்திருப்பதில்தான் திரைக்கதையின் வெற்றியே அடங்கியிருக்கிறது. தேவராஜ் - மோகன் எனும் இரட்டையரின் இயக்கம், மிகச் சிறப்பு. அதிலும் கண்ணகி படமும் மதுரை எரிப்பும் டூரிங் தியேட்டர் எரிவதும் என அழகான பொருத்தம் பின்னி க்ளைமாக்ஸைப் பண்ணியிருப்பார்கள்.

கிராமத்தில், யார் வீட்டில் என்ன விசேஷமென்றாலும் ‘கூப்பிடு அன்னக்கிளியை’ என்பார்கள். அவரும் தன் வீட்டு விசேஷம் போல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். அன்னக்கிளியின் ஒரே சந்தோஷம், பாட்டுதான்.

அங்கே கூவுகிற குயில்களையும் குருவிகளையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, அவர் பாடுகிற பாடல்கள்தான், அன்னக்கிளி கதாபாத்திரத்தை, நமக்குள் சிம்மாசனமிட்டு உட்கார வைத்தது.

அவள் ஒரு தொடர்கதைக்குப் பிறகு அதேபோல் கனமானதொரு கதைக்களம், சுஜாதாவுக்கு. அங்கே நகர வாழ்க்கையில் கவிதாவாக வாழ்ந்தவர், இங்கே அன்னக்கிளியில் கிராமத்தில் புகுந்து புறப்பட்டிருப்பார்.

1976ம் வருடம் மே மாதம் ரிலீசான அன்னக்கிளி, அந்தக் கோடையின் மிகப்பெரிய விருந்தாயிற்று. அடிக்கிற வெயிலுக்கு படத்தின் இசையே நிழலாக அமைந்து, ரசிகர்களுக்கு இளைப்பாறலைக் கொடுத்தது.

’இசை - இளையராஜா (அறிமுகம்),’ என்று டைட்டில் கார்டில் போடும்போது, பெரிய பரபரப்பெல்லாம் வரவேற்பெல்லாம் இல்லைதான். ஆனால் படத்தின் 75 நாள், நூறாவது நாள் என தாண்டுகிற போதெல்லாம், இளையராஜா பெயர் டைட்டிலில் வரும்போது, கூட்டம் விசிலடித்து வரவேற்றது. கைத்தட்டி ஆர்ப்பரித்தது.

பஞ்சு அருணாசலத்தின் எஸ்.பி.டி பிலிம்ஸ் தயாரிப்பில் வந்தது அன்னக்கிளி. புதிய இசையை சினிமாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர் முதலில் விஜயபாஸ்கரை தன் படங்களில் பயன்படுத்தி வந்தார். மயங்கிறாள் ஒரு மாது படமெல்லாம் பாடல்கள் ஹிட்டாகி, எப்போதும் முணுமுணுக்கும் பாடல்களின் வரிசையில் இடம்பிடித்தன. ஆனாலும் ஒரு தேடல் பஞ்சு அருணாசலத்துக்குள் இருந்தது. அதன் விளைவுதான்... அன்னக்கிளியும் இளையராஜாவும்!

ஆனால் ஆர்.செல்வராஜின் கதை ஓகே செய்யப்பட்டு, இளையராஜாவுக்கு பெயரும் அட்வான்ஸூம் கொடுத்த பிறகு, விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து தயாரிப்பாளருக்கு, ‘என்னங்க இது, நல்ல காம்பினேஷன். ஏன் மாத்துனீங்க’ என்கிற கேள்விகள். பஞ்சு அருணாசலத்தின் சகோதரர்கள், ‘தேவையா இது. விஜயபாஸ்கரே பண்ணட்டும்’ என்று தயாரிப்பாளர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள்; மாறுபாடுகள். ஆனால் பஞ்சு சார் உறுதியாக இருந்தார். ‘இளையராஜாதான்’ என்று அடித்துச் சொன்னார். அப்படித்தான் அன்னக்கிளி மூலமாக, தமிழ் கூறும் நல்லுலகிற்கு இளையராஜா கிடைத்தார்.

எல்லாப் பாடல்களும் கம்போஸ் செய்து, ஓகே செய்யப்பட்டு, ரிக்கார்டிங் நாளும் வந்தது. ‘ரெடி...’ என்று எண்களைச் சொல்லி முடிக்கவும், பதிவுக்கான பட்டனை அழுத்தவும் மின்சாரம் கட்டாவதும் சரியாக நிகழ்ந்தது. எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

அதன் பிறகு, கரண்ட் வந்ததும் மீண்டும் ரிக்கார்டிங் தொடங்கி நடைபெற்றது. பதிவானதைப் போட்டுப் பார்க்கலாம் என்று ரீவைண்ட் செய்து பார்த்தால், டேப் சுற்றிக்கொண்டே இருந்தது. ஆனால் இசையோ பாட்டோ வரவில்லை. அதாவது எதுவுமே பதிவாகவில்லை. ஆனால் பஞ்சு சார் ஆறுதல் சொல்லி, அந்தத் தடைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், இயங்கச் செய்தார். பாடல்களை எடுத்துக் கொண்டு ஷூட்டிங் சென்று, ஒரே அழுத்தில் படத்தை எடுத்தார்கள்.

கதையை உள்வாங்கி, சிவகுமாரின் நடிப்பும் அவரின் முகபாவமும் இயலாமையும் நம்மைக் கலங்கடிக்கும். ‘மச்சானைப் பாத்தீங்களா’ பாட்டுக்கு தியேட்டரே எழுந்து நின்று ஆட்டம் போட்டது. இடைவேளைக்குப் பிறகு, சுஜாதாவின் நடிப்புடன் தியாகமும் சேர்ந்துகொள்ள, அந்த அன்னக்கிளிதான் மனதில் நிறைந்திருப்பாள்.

அந்த டூரிங் டாக்கீஸ் க்ளைமாக்ஸ், ரசிகர்களை பதைபதைக்க வைத்தது. தேங்காய் சீனிவாசனை வில்லனாகவும் ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். ஆர்.செல்வராஜின் கதைக்கு, தெளிவான திரைக்கதை அமைத்து, எளிமையான வசனங்களையும் இனிமையான பாடல்களையும் தந்திருப்பார் பஞ்சு அருணாசலம்.

தமிழின் கிராமத்துக் கதைக்கு, பட்டிதொட்டியில் இசைக்கப்படுகிற வாத்தியங்களையும் குயில்களையும் குருவிகளையும் ஓர் கருவியாக்கி, இசையை, படம் முழுவதும் விரவிவிட்டிருக்கும் இளையராஜாதான்... அன்னக்கிளியின் நாயகனானார்.

‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’, ‘மச்சானைப் பாத்தீங்களா’, ‘சொந்தமில்லை பந்தமில்லை’, ’அடி ராக்காயி மூக்காயி...’ என ஒவ்வொரு பாடலும், அன்னக்கிளிக்கு வலு சேர்த்தன. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அன்னக்கிளி, மிகப்பெரிய வசூலைப் படைத்தது.

இளையராஜாவுக்கு, பஞ்சு அருணாசலம் கிடைத்தார். பஞ்சுவின் மூலம் அன்னக்கிளி வாயிலாக, நமக்கு இளையராஜா கிடைத்தார். ஆகவே, ராஜா இருக்கும் வரை, இசை இருக்கும் வரை... நமக்குள் அன்னக்கிளியும் உட்கார்ந்திருக்கும்.

http://www.kamadenu.in/news/cinema/2451-annakkili-appavee-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

முள்ளும் மலரும்- அப்பவே அப்படி கதை!


 

 

mullum-malarum-appave-appadi-kadhai

 

 

நாவலைப் படமாக்குகிற ரசாயன வித்தை, முள்ளின் மேல் நடப்பது போன்றது. அதை பூவில் நடப்பது போல், மாற்றி, ‘ப்பூ...’ என ஊதித்தள்ளியவர் இயக்குநர் மகேந்திரன். 1978ம் வருடம் வெளிவந்தது இவரின் முதல் படமான முள்ளும் மலரும்.

‘நீ நடிச்சதுலயே உனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச படம் எது?’ என்று குருநாதர் கே.பாலசந்தர் கேட்க, ஒருநிமிடம் கூட யோசிக்காமல், தயங்காமல், சபை நாகரீகமென்பதையெல்லாம் பார்க்காமல், தனக்கே உரிய வேகத்துடன் ஸ்டைலாகச் சொன்னார் ரஜினி... ‘முள்ளும் மலரும்’ என்று!

 

முள்ளும் மலரும். அதாவது முள், மலர் என இரண்டு குணங்கள் கொண்டது என்றும் சொல்லலாம். முள்ளும் மலரும். அதாவது முள்ளானது ஒருகட்டதில் மலர்ந்துவிடுகிறது என்றும் அர்த்தம்.

உமாசந்திரன் எவ்வளவு கதைகள் எழுதியிருக்கிறார் என்று நிறையபேருக்குத் தெரியாது. ஆனால், முள்ளும் மலரும் கதையை நாவலாக எழுதி, அது சினிமாவாகவும் எடுக்கப்பட்டதில், அவரின் பெயரும் எழுத்து உள்ளவரையும் இருக்கும்; சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது உறுதி.

 அவள் அப்படித்தான், ஆயிரம் ஜென்மங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, இறைவன் கொடுத்த வரம், என் கேள்விக்கு என்ன பதில், சங்கர் சலீம் சைமன், சதுரங்கம், தப்புத்தாளங்கள், தாய்மீது சத்தியம், ப்ரியா, பைரவி, மாங்குடி மைனர், வணக்கத்துக்குரிய காதலியே, ஜஸ்டிஸ் கோபிநாத்... போதாக்குறைக்கு இன்ஸ்பெக்டர் ரஜினி, ரவுடி ரஜினி என்று மொழிமாற்றுப் படங்கள் என வரிசையாய் அந்த வருடம் ரஜினிக்கு ஏகப்பட்ட படங்கள் வந்தாலும், மகேந்திரனின் முள்ளும் மலரும்... ரஜினியின் கிரீடத்தில், அழகிய இறகென சிறகாய் உட்கார்ந்துகொண்டது.

1525846869.jpg

மகேந்திரன் யதார்த்த மனிதர்களின் நாயகன். அதனால்தான் அத்தனை யதார்த்தமான காளி கதாபாத்திரத்தின் இயல்பு கெடாமல் ரஜினியைத் தேர்வு செய்து, மிகச்சிறப்பாகவும் நடிக்கவும் வைத்திருப்பார்.

மைசூர் பக்கம் உள்ள அந்த லொகேஷனையும் நம்மூர்க் கோப ஈகோ பாச அன்புகளையும் மிக்ஸியில் போட்ட திரைக்கதையாய்த் தந்திருப்பதில் இருக்கிறது, மகேந்திரனுக்கும் அந்த நாவலுக்குமான பிணைப்பு. காளி நல்லவன்தான். ஆனால் அவனின் செயல்களைத் தள்ளிநின்றுப் பார்ப்பவர்களுக்கு, கெட்டவனாகத்தான் தெரிவான். சாதாரணமாகச் செய்யும் நல்ல கெட்ட விஷயங்கள் எல்லாமே அதிகாரி சரத்பாபுவுக்கு, அவ்வளவு நல்லதாகப்படவில்லை. முட்டிக்கொண்டே இருக்கிறார்கள் இருவரும்.

அங்கே, காளியும் அவனின் தங்கை வள்ளி ஷோபாவும் அப்படியொரு ஒட்டுதலுடன் இருக்கிறார்கள். ஷோபாவின் பார்வையும் அந்த வெள்ளந்திக்குரலும் சிலசமயங்களில் பேசுகிற பெரியமனுஷித்தனமும் தடக்கென்று மன சோபாவில் கம்பீரமாக ஷோபாவை உட்காரவைத்துவிடுகின்றன.

படாபட் ஜெயலட்சுமி நடித்த படங்களை எப்போது பார்த்தாலும், ‘பாவி மக, இப்படி அநியாயமா சாவைத் தேர்ந்தெடுத்துப் போய்ச்சேர்ந்துட்டாளே’ என்று துக்கம் தொண்டையை அடைக்கும். அப்படியொரு நிறைவான நடிகை அவர். இங்கே, காளி, வள்ளி கதாபாத்திர ராஜாங்கத்திற்கு மத்தியிலும் தன் முத்திரையை ஆங்காங்கே, பூ தூவுவது மாதிரி தூவிச் சென்றிருப்பார். ’நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’ பாட்டுக்கு அவரின் ரியாக்‌ஷன் ஒவ்வொன்றும் கல்யாண சமையல் சாதம்.

மளிகைக் கடை வெண்ணிற ஆடை மூர்த்தியின் கள்ள உறவு, சாமிக்கண்ணுவின் அப்பாவித்தனம், சரத்பாபுவின் நேர்மை, அந்த மலையும் மேடுபள்ளங்களும் செடிகொடிகளும் என மிகக்குறைந்த கதாபாத்திரங்கள்தான். இவை அத்தனைக்கும் கனம் சேர்ப்பதாகவும் இலகுவாக்குவதாகவும் மென்மை கூட்டுவதாகவும் மனங்களை நம் கண்ணுக்கு எதிரே காது வழியே காட்டுவதற்காகவும் என மிகப்பெரிய பங்கைச் செலுத்தியிருக்கிறார் இளையராஜா. பாலுமகேந்திராவின் கண்களும் கேமிராவும் உள்ளதை உள்ளபடியே காட்டி, இன்னும் அழகூட்டியிருக்கும்.

’கெட்டபய சார் காளி... ரெண்டு காலு ரெண்டு கையி இல்லாட்டியும் கூட பொழச்சுக்குவான்’ என்பது படம் ரீலிசான சமயத்தில் பஞ்ச் வசனமாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் படம் வெளியாகி, 40 வருடங்களான நிலையில், இன்றைக்கு இந்த வசனத்தைச் சொல்லாதவர்களே இல்லை.

ரஜினி - ஷோபாவின் உருக்கமான, மனதுக்கு நெருக்கமான தருணங்களிலெல்லாம், பின்னணியில் ஓர் இசையை, கழைக்கூத்தாடிகளின் இசையை, நிரவி, ஓடவிட்டு, நம்மை என்னவோ செய்துவிடுவார் இளையராஜா. ‘அடிப்பெண்ணே...’ பாட்டில் நம்மையும் துள்ளவைப்பார். ஓடவைப்பார். ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ பாட்டில், அந்தக் கூட்டத்தில் நம்மையும் நிற்கவைத்து, ‘போடா பாத்துக்கலாம்’ என்று உறுதியைத் தந்திருப்பார். ‘செந்தாழம்பூவில்...’ பாட்டில், சரத்பாபு, ஷோபா மற்றும் தோழிகளுடன் அந்த ஜீப்பில், நாமும் தொற்றிக்கொண்டு பயணிக்கச் செய்திருப்பார். செம பசியுடன் வயிறாரச் சாப்பிட்டுவிட்டு, கையலம்பி, வெற்றிலைப் பாக்குப் போட்டுக்கொண்டு, ஏப்பம் விட்டபடி தொப்பையைத் தடவுபவர்களுக்குக்கூட, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’ பாடல் மூலமாக, மீண்டும் பசியை ஏற்படுத்திவிடுவார். அதுதான் இளையராஜா.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். மகேந்திரனுக்கு முதல் சோறு பதம் இது. அடுத்த சோறு பதம்... உதிரிப்பூக்கள்.

ஒரே ஊர், ஒரே தெரு, ஒரே டீக்கடை, நான்கைந்து பேர், பாலுமகேந்திரா, இளையராஜா, ரஜினி, ஷோபா... மகேந்திரன் எனும் படைப்பாளிக்கு இவையே போதுமானது! என்னை மீறி என் தங்கச்சி, என்னை விட்டுட்டு வரமாட்டா. வரலை. இதுபோதும் எனக்கு. ’இப்பக் கூட உங்களை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. நானே சொல்றேன். என் தங்கச்சியை கட்டிக்கிட்டு, சந்தோஷமாப் போங்க. உங்களை இப்பக் கூட பிடிக்கலை எனக்கு’ என கையை இழந்து, தன்மானத்தையும் பாசத்தையும் இழக்காத காளி நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் சொல்ல... தியேட்டரே கைத்தட்டும். மனசே அன்பில் அடைத்துக்கொள்ளும். அந்த அன்பின் இழைதான்... முள்ளும் மலரும் இன்னும் நமக்குள் படர்ந்திருக்கிற கொடி!

உமாசந்திரனின் முள்ளும்மலரும் நாவலை... மகேந்திரனின் முள்ளும்மலரும் சினிமாவாக்கியதுதான், அந்த மகாபடைப்பாளியின் மெகா சாதனை!

http://www.kamadenu.in/news/cinema/2494-mullum-malarum-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

பாசமலர் - அப்பவே அப்படி கதை!


 

 

pasamalar-appave-appadi-kadhai

 

எதற்குமே ஓர் ஆரம்பம் வேண்டும் என்பார்கள். தமிழ் சினிமாவில் அப்படி நிறைய ஆரம்பங்கள் உள்ளன. இன்றுவரை சந்திரலேகா படத்தின் பிரமாண்டத்தைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்றுவரை எங்கவீட்டுப்பிள்ளை டபுள் ஆக்‌ஷனைத்தான் சிலாகித்துக்கொண்டிருக்கிறோம். இப்படியாக, எத்தனையோ ஆரம்பங்கள். அப்படி இடம்பிடித்த முக்கியமான படங்களில் ஒன்று... பாசமலர்!

நம்மூரில், நம் தெருவில், யாரேனும் அண்ணன் தங்கையையும் அவர்களின் பாசத்தையும் சொல்லவேண்டுமெனில், ’பெரிய பாசமலர் சிவாஜி, சாவித்திரின்னு நினைப்பு’ என்றுதான் சொல்லுவோம். ஏதேனும் ஒரு தருணத்தில், அண்ணாவுக்காக தங்கையோ, தங்கைக்காக அண்ணனோ விட்டுக்கொடுக்கிற தருணங்களில், ‘அடடா... பாசமலர் படம் காட்றாய்ங்கப்பா’ என்றுதான் அவர்களைக் கேலியும் கிண்டலுமாய்ச் சொல்லுவோம்.

 

1961ம் ஆண்டு வெளியான படம் பாசமலர். 1954ம் ஆண்டில் அம்மையப்பன் படத்தை இயக்கி, திரையுலகுக்குள் நுழைந்த ஏ.பீம்சிங், அடுத்த படமான ராஜாராணியிலேயே சிவாஜியுடன் கைகோர்க்க ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு சிவாஜியுடன் பதிபக்தி பண்ணினார். இதன் பின்னர், பெற்ற மனம் படத்தில் இணைந்தார்கள். அதே 1960ம் வருடத்தில், படிக்காத மேதையில் சேர்ந்தார்கள். இதன் பிறகுதான், 1961ம் ஆண்டு, பாசமலரில் பாசமும் பிரியமும் கொண்டு இணைந்து சகாப்தம் படைத்தார்கள்.

ஏ.பீம்சிங்... அப்போதைய ஸ்ரீதர். அதன் பிறகு வந்த பாலசந்தர். அவர்களையடுத்து வந்த பாக்யராஜ். கொஞ்சம் விசு என்றும் இன்னும் கொஞ்சம் ஆர்.சுந்தர்ராஜன் என்றும் சொல்லலாம். அதாவது, இவர்களின் படங்களில் என்னெல்லாம் இருக்கிறதோ... அவை அனைத்தையும் தன் படங்களில் ஒருங்கே கொண்டு தந்திருப்பார். ‘’சிவாஜி எனும் மகாகலைஞனை ரசிகர்கள் ரசிக்கும்படியா நான் பண்ணிருக்கேன்னு சொல்றாங்க. அது அப்படித்தான் நடக்கும். ஏன்னா, நான் சிவாஜியோட பயங்கரமான ரசிகன். அவரை அணுஅணுவா ரசிச்சு ரசிச்சு, ஃப்ரேம் வைப்பேன். அப்படியான முகம் அவருக்கு’’ என்று சிவாஜியை அங்குலம் அங்குலமாக ரசித்த இயக்குநர் ஏ.பீம்சிங். அதை பாசமலரின் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவித்து காட்சிப்படுத்தியிருப்பார்.

அதுமட்டுமா? இந்த பாசமலருக்கு முன்பே பதிபக்தியும் படிக்காதமேதையும் வந்துவிட்டாலும் கூட, பாசமலருக்குப் பிறகுதான் பாவமன்னிப்பு, பாலும்பழமும் என ‘பா’ வரிசை இயக்குநர் என்றே பெயரெடுத்தார். ஆக, அந்தவகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது பாசமலர்.

 ’பாசமலர்’ படம் பாத்திருக்கீங்களா என்று நெருங்கியவர்களிடம் கேட்டால், நம் மேல் அவர்கள் கொண்ட பாசமே பங்கமாகிப் போகும். அந்தப் படத்தை பலமுறை பார்த்தவர்களே அதிகம். மன்னன், மந்திரி, நாடு, தேசப்பற்று, சுதந்திரம், போர், சண்டை என்று வந்துகொண்டிருந்த படங்களுக்கு இடையே, பராசக்திக்குப் பிறகுதான் உறவுகளின் அடர்த்தியையும் அதன் உன்னதங்களையும் மையப்படுத்திய படங்கள் அதிகமாக வரத்தொடங்கின. அந்த வகையில் அண்ணன் தங்கை உறவை உயிர்ப்புடன் சொன்னதில்தான் இன்றைக்கும் மலர்ந்து, மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது பாசமலர்.

கே.பி.கொட்டரக்காரா எனும் கேரளத்து எழுத்தாளரின் கதைதான் பாசமலர். அந்தக் கதையின் திரைக்கதைக்கு, தன் எழுத்துக்களால் இன்னும் மணம் கூட்டியிருப்பார் ஆரூர்தாஸ். எம்ஜிஆருக்கு எழுதிக்கொண்டிருந்த ஆரூர்தாஸை, சிவாஜிப்பக்கமும் கொஞ்சம் மடைமாற்றி விட்டவர், ஜெமினி கணேசன். பாசமலரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆரூர்தாஸை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டார் சிவாஜி.

ஓர் ஏழைத் தொழிலாளி. அவனுக்கு ஓர் தங்கை. அண்ணனுக்கு தங்கையே உலகம். தங்கைக்கு அண்ணன்தான் எல்லாமே! ஒருகட்டத்தில், நாமே ஏன் சொந்தமாக வியாபாரம் செய்யக்கூடாது என்று யோசிக்க, தங்கை சேர்த்துவைத்த சும்மாட்டுக்காசையும் தர,

‘எங்களுக்கும் காலம் வரும்

காலம் வந்தால் வாழ்வு வரும்

வாழ்வு வந்தால் அனைவரையும்

]வாழவைப்போமே’ என்று ஆனந்த ஆட்டம் போடுகின்றனர்.

அண்ணன் ராஜசேகரன். தங்கை ராதா. சிவாஜியும் சாவித்திரியும் சகோதர பாசத்தைக் கண்ணிலும் பார்வையிலும் பேச்சிலும் ஸ்பரிசத்திலும் உணர்விலும் அவ்வளவு அற்புதமாகக் காட்டியிருப்பார்கள். சிவாஜிகணேசனின் நண்பராக ஜெமினிகணேசன். இரண்டு கணேசன்களும் ராஜபாட்டையே நிகழ்த்தியிருப்பார்கள். ஏழை சிவாஜி, பணக்கார சிவாஜி, பணமெல்லாம் போய் நொந்து போன சிவாஜி... அத்தனையிலும் அவரின் உடல்மொழி விளையாடியிருக்கும். பேச்சும் தோரணையும் அப்பாவித்தனமும் கம்பீரமும் காட்டி நிற்கும். ஆனால் இவை அத்தனையிலும் அடர்த்தியான அந்த சகோதரப் பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதில்தான் இத்தனை ஆண்டுகள் கடந்தும் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கிறது பாசமலர்.

அண்ணனின் நண்பன் என்று தெரியாமலேயே ஜெமினிகணேசனைக் காதலிப்பதும் பின்னர் தெரிந்து வருந்துவதும் ஒருகட்டத்தில் அண்ணன் கலங்கியிருப்பது கண்டு, அந்தக் காதலையே விட்டுவிடுவதும் ஆனால் அந்த அன்பைப் புரிந்துகொண்டு, தன் நண்பனுக்கே தங்கையைத் திருமணம் செய்து வைக்க சம்மதம் சொன்னதைக் கண்டு ஆனந்தத்தில் திளைக்கும் போதும் ‘ஆனந்தா... என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். இதுல எப்பவும் ஆனந்தக்கண்ணீரைத்தான் நான் பாக்கணும்’ என்று கரம்பிடித்துக் கொடுக்கும் போதும்... நடிகர்திலகத்தை விடுங்கள். அவரைத்தான் நமக்குத் தெரியுமே. அங்கே... சிவாஜி எனும் மலையையே அசைத்துப் பார்க்கிற நடிப்பையும் மேனரிஸங்களையும் திரை முழுவதும் படரவிட்டிருப்பார் சாவித்திரி. அதனால்தான் அவர் நடிகையர் திலகம்!

பொறுப்புடன் இருக்கிற சாவித்திரி, பொறுப்பே இல்லாமல் மேல்படிப்புக்குக் கிளம்புகிற சிவாஜியின் மனைவி எம்.என்.ராஜம் ... இருவரைக் கொண்டும் இல்லறம் பேணுதலை உணர்த்தியிருப்பார் பீம்சிங்.

‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்று அவளின் எதிர்காலம் குறித்த ஆசையைச் சொல்லும் அண்ணனின் வழியே, பாசத்தைப் பாடலாக்கியிருப்பார் கண்ணதாசன். ‘யார் யார் அவள் யாரோ...’ என்று ஜெமினியும் சாவித்திரியும் பாடுகிற டூயட்டில், அத்தனை கண்ணியம். பாடலில் அவ்வளவு இலக்கியம். இந்தப் படம் வந்த பிறகு, ’வாராயோ தோழி வாராயோ...’ பாடலை ஒலிக்கச் செய்யாத கல்யாண வீடுகளே இல்லை.

படத்தின் க்ளைமாக்ஸில் பார்வையை இழந்த நிலையில், ‘கை வீசம்மா கைவீசு..’ என்று சிவாஜி பேசுகிற வசனத்தைக் கேட்டு, அழுதுகொண்டே கைத்தட்டினார்கள் ரசிகர்கள். அண்ணனின் அன்பே மெய்... அந்த அன்புக்கு இணை இங்கு எதுவுமில்லை, எவருமில்லை என்பதை சாவித்திரி, ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தன் நடிப்பால் ஸ்கோர் செய்துகொண்டே இருப்பார். ஜெமினி கணேசன் மட்டும் என்ன... வழக்கமாக, தன் இயல்புடனே நடித்து, அந்தக் கேரக்டருக்கு உரிய நியாயங்களைச் செய்திருப்பார். தங்கவேலுவின் காமெடிகளும் ரசிக்கவைக்கும்.

ஒரு பாட்டு ஆரம்பித்தது முதல் முடிகிற அந்த நாலரை முதல் ஐந்து நிமிடங்கள் வரை, அழுதுகொண்டே கேட்க முடியுமா. பார்க்கமுடியுமா. ‘மலர்ந்தும் மலராத பாதிமலர் போல...’ பாடல் ஆரம்பிக்கும்போதே அழுதுவிடுவார்கள் பெண்கள். பாட்டு முடியும் போதுதான் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொள்ளும் ஆண்களும் அழுதிருக்கிறார்கள் என்பது தெரியும்.

’யானைப் படைகொண்டு சேனை பல வென்று’ என்று டி.எம்.எஸ். பாடும் போது சிவாஜியே பாடுவது போலவும் ‘தங்கக்கடியாரம் வைர மணியாரம் தந்துவிலை பேசுவார்’ என்று சொல்லிவிட்டு, ‘மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்’ என்று பி.சுசீலா பாடும்போது, அது சாவித்திரியின் குரலாகவும் நமக்குக் கேட்டது. அப்படி நினைக்கவைத்ததுதான் அவர்களின் அசாத்திய நடிப்பு. அதிலும் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே...’ என்று இடையே பாடும்போது கிறங்கிக் கதறிவிடுவோம். பாட்டின் நிறைவாக, ‘ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...’ என்று டிஎம்எஸ் பாட... ‘அன்பே ஆரிராரோ ஆரிராரோ...’ என்று சுசீலா பாட... முட்டிக்கொண்டு, முகம் திருப்பிக் கொண்டிருக்கிற அண்ணன் தங்கைகள் கூட அதைக் கேட்டு, பாசத்தில் நெகிழ்ந்து கரைந்து போவார்கள்.

அந்தப் பாடலை படமாக்கியிருக்கும் விதம் அத்தனை நேர்த்தி. ஹாலில் படுத்தபடி பாடுகிற சிவாஜியை டாப் ஆங்கிளிலும் க்ளோசப்பிலுமா ரசித்துச் ரசித்து கேமிரா, தனக்குள் கடத்திப் பதிவு செய்து, நமக்குப் பந்திவைத்திருக்கும். அதுமட்டுமா? வீட்டுச் சுவரில், கன்னத்தில் கைவைத்தபடி உள்ள சிவாஜியின் புகைப்படம் கூட பேசும். அவ்வளவு ஸ்டைலான போஸ் அது!

விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசை, கண்ணதாசனின் பாடல்கள், சிவாஜி சாவித்திரி, ஜெமினியின் நடிப்பு ஆரூர்தாஸின் அருமையான அழகான, எளிமையான வசனங்கள். பீம்சிங்கின் மிகச்சிறந்த இயக்கம் என கதம்பமாலையாய் மணக்கிறது பாசமலர்.

அநேகமாக, சிவாஜி தன் அன்னையின் பெயரைக் கொண்டு, ராஜாமணி பிக்சர்ஸ் எனும் கம்பெனியைத் தொடங்கி, எடுத்த முதல் படம் இது என்பதாக நினைவு.

பாசமலருக்குப் பிறகு, சிவாஜியும் சாவித்திரியும் ஜோடியாக நடிக்கவில்லை. இந்தப் படம் வந்த பிறகு, வீடுகளில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு சாவித்திரி போல் அன்புத்தங்கையாக இருக்கவேண்டும் என்று நினைத்து, ‘ராதா’ என்று பெயர்வைப்பது வழக்கமாக இருந்ததாம்.

பாசமலர் என்றதும் சிவாஜியையெல்லாம் தாண்டி, அந்த வெள்ளந்தியான கண்களும் முகமும் சேர்ந்து சிரிக்கிற சாவித்திரியின் முகம்தான் நினைவுக்கு வரும். அந்த முகம்... முகம் வழியே பரவிய பாசமலர்... இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மறக்கவே மறக்காது நமக்கு!

http://www.kamadenu.in/news/cinema/2534-pasamalar-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

16 வயதினிலே! - அப்பவே அப்படி கதை


 

 

16-vayadhinile-appave-appadi-kadhai

 

’தமிழ் சினிமாவை அப்படியே திருப்பிப் போட்ட படம்யா இது’ என்று சில படங்களைச் சொல்லுவார்கள். ‘யாருய்யா டைரக்டரு. முத படத்துலயே பின்னிப்பெடலெடுத்துட்டார்யா...’ என்று சில டைரக்டர்களின் முதல் படத்துக்கே கிடைக்கும்... கிரீடமும் மரியாதையும்! ‘எத்தனை தடவை வேணும்னாலும் பாக்கலாம்பா. அலுக்கவே அலுக்காது; சலிக்கவே சலிக்காது’ என்று ஒரு சிலபடங்களைச் சொல்லிப் பூரித்துக்கொண்டே இருப்போம். ‘இந்தப் படம் வந்ததுலேருந்துதான் தமிழ் சினிமால இப்படிலாம் மாற்றங்கள் வந்துச்சு’ என்று வியந்தும் அதிர்ந்துமாகப் பேசிக்கொண்டே இருப்போம். ‘இந்த டைரக்டர்கிட்ட வந்தவங்க யாரும் சோடை போகலை. குருவை மிஞ்சின சிஷ்யன்னு பேரு எடுத்திருக்காங்கப்பா’ என்று மரியாதையுடனும் பெருமிதத்துடனும் சில டைரக்டர்களை மட்டுமே இப்படியாகப் புகழுவார்கள். இவை அனைத்துக்குமான ஒரே படம்... 16 வயதினிலே. 1977ம் வருடம் ரிலீசானது 16 வயதினிலே.

கல்யாண வீடுகளில், இரவெல்லாம் அந்த வேலை இந்த வேலை என்றிருக்குமே. அந்த வேலையை சுணங்காமல், சொதப்பாமல், அரைத்தூக்கத்தில் இல்லாமல் செய்யவைத்ததில், 16 வயதினிலே ஒலிச்சித்திரத்துக்கு பெரும் பங்கு உண்டு.

 

படம் முழுவதும் அவுட்டோரிலேயே எடுத்திருந்தது கண்டு, சினிமா உலகிலேயே வியந்து பார்த்தார்கள். பின்னாளில், இயக்குநர் இமயம் என்று அடைமொழி சொல்லிப் பாராட்டினார்கள். ‘ஆமாம்’ என்பதை உறுதி செய்தது, பாரதிராஜாவின் முதல் படமான இந்தப் படம்.

ரயில்வே ஸ்டேஷனில் நாயகி சோகத்துடன் காத்திருப்பாள். அங்கிருந்து ரயில் கிளம்பும் போது, பிளாஷ்பேக்கும் கிளம்பும்.

’ஆத்தா... நான் பாஸாயிட்டேன்’ என்று முதல் பட வாய்ப்பு கிடைத்ததையும் தான் நினைத்தது போலவே இயக்குநராகிவிட்டேன் என்பதையும் எப்படியும் ஜெயிச்சிருவேன், படம் ஜெயிச்சிரும் என்பதையும் முன்பே சொல்லும் விதமாக ஓபனிங் வைத்து, சினிமா செண்டிமெண்ட்டையும் டச் செய்திருப்பார் பாரதிராஜா.

வாய்ப்பு கிடைக்காமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல், துக்கத்தால் தூக்கமில்லாமல் ஜெயித்தே ஆகவேண்டும் என்கிற வெறியுடன் வந்த பாரதிராஜாவுக்கு, வெற்றியைச் சுவைத்தே ஆகவேண்டும் என்கிற உறுதி, அரங்கேற்றம் தொடங்கி சின்னதும் பெரிதுமாக நடித்துக்கொண்டிருந்த கமலுக்கு, காதல் மட்டுமின்றி நடிப்பிலும் மிளிரும் தாகம் இருந்தது. ஆகவே, மொத்த உழைப்பையும் கொடுக்கவேண்டிய வெறி, கமலுக்கு.

மூன்று முடிச்சில் நாயகியாக அறிமுகமானாலும் அடுத்த இலக்கு நோக்கி ஓட, இந்த மயிலு நிச்சயம் உதவுவாள் என்று பூரண நம்பிக்கையுடனும் உறுதியுடனும் நடிக்கவேண்டிய கட்டாயம் ஸ்ரீதேவிக்கு. ஹீரோவோ வில்லனோ... ஆனால் நடிக்கணும். நடிச்சு ஜெயிக்கணும். ஜெயிச்சே தீரணும்... போலாம் ரைட்... என்று அடுத்தடுத்து போய்க்கொண்டே இருக்க, இந்தப் பரட்டை பெரிய துணையாக இருப்பான் என்று தன் முழுத்திறனையும் வெளிக்கொண்டு வரவேண்டிய முக்கியமான நிலை ரஜினிக்கு.

தன் நண்பன் தன்னைப்போலவே சினிமாவில் ஜெயிக்க ஆசைப்பட்டான். நாம் வந்தது போலவே அவனும் இப்போது வந்துவிட்டான். அவனை ஜெயிக்கவைக்கணும். அதுக்கு நம்மாலான விஷயங்களை சிறப்பாவும் செம்மையாவும் செய்யணும். தவிர, வாழ்ந்த கிராமம் சம்பந்தப்பட்ட கதை. நண்பன் படம் என்பதால், எல்லா பகீரத முயற்சிகளையும் செஞ்சிடணும் என்கிற வேட்கை இளையராஜாவுக்கு. ‘ஏதோ இவருகிட்ட இருக்கு... பெரிய ஆளா வரப்போறாரு. பின்னாடி இவர்கிட்டே இருந்தோம்னு சொன்னாலே அது பெரிய விசிட்டிங்கார்டு. அதனால இந்தப் படம் ஜெயிக்க கடுமையா உழைக்கணும். நிச்சயம் நாமளும் ஜெயிப்போம் என்கிற எண்ணம், உதவி இயக்குநர்களுக்கு. கதை புதுசு. படம் புதுசு. இடம் புதுசு. முடிஞ்ச அளவு, முதலுக்கு மோசம் இருக்காது என்கிற நம்பிக்கை தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு.

இப்படியாக எல்லோரின் சிந்தனையும் ஜெயிப்பு எனும் ஒற்றைப்புள்ளியில் குவிந்துவிட... அங்கே 16 வயதினிலே எனும் காவியம் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.

மயிலு, சப்பாணி, பரட்டை, குருவம்மா, டாக்டர் இவர்களெல்லாம் இப்போதும் கிராமங்களிலும் நகரங்களிலும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களையெல்லாம் கிராமத்தில் இருந்து ரயிலேற்றிக் கூட்டிவந்து, கோடம்பாக்கத்தில் இறக்கி, எல்லாத் தியேட்டர்களிலும் ஏற்றிவைத்த சாதனைச் சிங்கம் பாரதிராஜாவுக்கே உண்டான திறன் அது.

 அழகே உருவான கனவுகள் கொண்ட மயிலு, ஊருக்கே எடுபிடி வேலை செய்கிற, உறவுக்கு யாருமே இல்லாத தன்னை அழகுபடுத்திக் கொள்ளாத சப்பாணி, மேல் ரெண்டு பட்டன்களைப் போடாமல், கழுத்தில் தங்கச்சங்கிலி டாலடிக்க, ஊர்வம்பு பேசிக்கொண்டும் ஊராரைச் சீண்டிக்கொண்டுமாய் மரத்தடியே கதியெனக் கிடக்கிற பரட்டையன், நகரத்தில் இருந்து நகர்ந்து கிராமத்துக்கு வந்து, பொழுதைப் போக்க என்ன செய்யலாம் என நினைத்து, ஒரு பெண்ணின் வாழ்க்கையையே போக்கிவிட்டுப் போன டாக்டர்... அவ்வளவுதான். அவர்களைக் கொண்டுதான் சரித்திரம் படைத்திருப்பார் பாரதிராஜா.

டைட்டிலில் ‘சோளம் வெதைக்கையிலே...’ பாட்டு. இளையராஜா பாடிய முதல் பாட்டு இதுதான். டீச்சராகும் ஆசை மயிலுக்கு. தனக்கேற்றவன் சீமையில் இருப்பதாக நினைப்பு. அப்படிச் சீமையிலிருந்து வந்த டாக்டர்தான் மணாளன் என நினைக்க, காதலனாக ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் மருத்துவரோ, அவளை அடையவேண்டும் பிறகு கழற்றிவிடவேண்டும் எனும் மோசமான வியாதியைக் கொண்டிருக்கிறான். மனசு முழுக்க மயிலைத் தூக்கிக்கொண்டு நடக்கமாட்டாமல் நடக்கிறான் சப்பாணி. ‘சந்தர்ப்பம் கிடைத்தால் யாரும் யோக்கியம் இல்ல’ என்பதாக நினைத்து சபலமும் கொண்டு திரிகிறான் பரட்டை. இந்த இடத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, அழகாகவும் தெளிவாகவும் திரைக்கதை அமைத்து, வலுவான வசனங்களாலும் இயல்பான நடிப்பாலும் என்னவோ செய்து, நம்மைக் கட்டிப்போட்டிருப்பார் பாரதிராஜா.

சப்பாணியை வெறுத்துக்கொண்டே இருப்பவள், ஒருகட்டத்தில், சப்பாணி என்று அவனை எல்லோரும் கூப்பிடுவதையே வெறுக்கிறாள். ‘அடிய்யா... அடி...’ என்று ஜெயம் படத்தில் சதா சொல்வாரே. ஆனால் ஸ்ரீதேவி இவருக்கெல்லாம் அக்கா. ‘இனிமே சப்பாணின்னு யாராவது கூப்பிட்டா, சப்புன்னு அறைஞ்சிரு’ என்பார். அப்படியே செய்வார் கோபாலகிருஷ்ணன். அதுவும் ஏமாற்றிய டாக்டரையும் பார்வையாலேயே பலாத்காரம் பண்ணுகிற பரட்டையனையும் அடித்ததைச் சொல்ல... அங்கே ஒரு பாடல். ‘செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா...’ பாடலும் சூழலும் பார்ப்போருக்கும் இதம் தரும்.

கமல்ஹாசன் முதல்வராகவெல்லாம் முடியாது என்று இன்றைக்கு சொல்லிக்கொண்டிருக்கும் அவரின் அண்ணன் சாருஹாசன் தான், அன்றைக்கு கமலுக்கு கால்ஷீட் முதல் கணக்கு வழக்கு வரை பார்த்துக்கொண்டிருந்தார். பாரதிராஜா கதை சொன்னதும் கொந்தளித்துவிட்டார் சாருஹாசன். ‘என் தம்பிக்கு இந்த கிராமம், அழுக்கு, சப்பாணியெல்லாம் நல்லாருக்காது. அவனோட அழகுக்கு அவன் கேரியரே எங்கேயோ போகப்போவுது’ என்று மறுத்து அனுப்பினார். ஆனால் கமல்தான், அண்ணனை கன்வின்ஸ் பண்ணி, பாரதிராஜாவை அழைத்து ஒத்துக்கொண்டார். கோவணத்துடன் இருக்கும் கமலைப் படம்பிடிக்கும்போது அழுதேவிட்டாராம் சாருஹாசன். ஆனால், ஒரு கால் சரியில்லாமல், ஒரு கையும் சரியில்லாமல், அப்படி நடந்த சப்பாணிதான்... இன்றைய உலக நாயகனுக்கான முதல் படி, முதல் அடி, முதல் நடை என்று சொல்லவேண்டும்.

திருவிழாவில், தாவணியுடன் மயிலைப் பார்த்துவிட்டு, ‘இவ ஆத்தாவுக்கு தாவணி போட்டாக் கூட நல்லாத்தாண்டா இருக்கும்... இதெப்படி இருக்கு’ என்பார் ரஜினி. இந்த ‘இதெப்படி இருக்கு’தான், திரையுலகில் ரஜினி பேசிய முதல் பஞ்ச் டயலாக் என்று நினைக்கிறேன். ‘சீப்பு கொடுத்துவிட்டாளே... டீ குடிக்க சில்லறை குடுத்துவிட்டாளா?’, ‘உங்க கோகுலாபுரத்துல வத்திப்பெட்டி இல்லீங்களா..”, ‘நானே பத்தவைக்கிறேன்’, ‘பத்த வைச்சிட்டியே பரட்டை’, ‘ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு. நாய் வளர்க்கலை. இந்தச் சப்பாணியைத்தானே மயிலு வளர்த்துச்சு’, ‘இது ரத்தம் இல்ல மயிலு... ஆத்தா எனக்குப் போட்ட சோறு,’ ’உயிரைவிடுங்கறேன். விட்டுறுவியா’, ‘அதுமட்டும் மாட்டேன். நான் போயிட்டா உன்னைப் பாத்துக்கறதுக்கு யாரும் இல்லியே. அதனால நீ இருக்கறவரைக்கும் நானும் இருப்பேன். அப்புறம் நானும் செத்துப்போயிருவேன் மயிலு...’, ‘செத்துப்போன்னு வேணா சொல்லு, செத்துப் போறேன். ஆனா விட்டுட்டுப் போன்னு சொல்லாதே மயிலு.. எங்கே மயிலு போவேன்...’, ‘சந்தைக்கு போ, தாலி வாங்கிட்டு வா. என்னையே நினைச்சுக்கிட்டிருக்கிற உனக்கு, நான் என்னையே கொடுக்கப்போறேன்’... என்று படம் முழுவதும் இப்படியான வசனங்களால் கதாபாத்திரங்களையும் கதைத் தன்மையையும் அவர்களின் மெல்லிய உணர்வுகளையும் நமக்குள் கடத்தியிருக்கிற 16 வயதினிலே... எல்லோரும் கொண்டாடுவதற்கான துளித்துளியான காரணங்கள் இவையெல்லாம்! பி.கலைமணியின் வசனங்கள்.

கிராமத்தையும் அங்கே உள்ள புல்பூண்டையும் கூட, கவிதையெனக் காட்டியிருப்பார் ஒளிப்பதிவாளர் நிவாஸ். காந்திமதி, குருவம்மாவாக அதகளம் பண்ணியிருப்பார். பரட்டை ரஜினியின் சேட்டைகள் ரசிக்கவும் சிலசமயம் கோபப்படவும் வைக்கும். மெர்சலாக்கியிருப்பார். அவருடனேயே வரும் கவுண்டமணியும் டாக்டராக வரும் சத்யஜித்தும் பிரமாதம் பண்ணியிருப்பார்கள்.

மஞ்சக்குளிச்சு அள்ளி முடிஞ்சு... பாடலில் யாரோ ஒருவராகவும் மயிலு ஜுரத்தில் இருக்கும்போது, கஷாயம் கொடுக்கிற வயதான மருத்துவராகவும் வந்த பாக்யராஜ், படத்தின் உதவி இயக்குநர். பின்னாளில் பாக்யராஜைத் தெரியும்போதுதான், இந்த இடங்களில், இப்படி இவர் வந்ததை அறிந்து வியந்தோம். கன்னிப்பருவத்திலே இயக்குநர் பி.வி.பாலகுரு அஸோஸியேட் இயக்குநர்.

கமலின் நடிப்பாற்றலை முதன்முதலாக, வேறொரு பரிமாணத்தில் காட்டிய சப்பாணியை, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா உலகமும் மறக்காது. மனிதர், சப்பாணியாகவே வாழ்ந்திருப்பார். ‘பொண்ணு மகாலக்ஷ்மி மாதிரி இருப்பா’ என்ற வார்த்தைக்கு இணையாக, ‘பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருப்பா’ என்று எல்லோரும் சொல்லத் தொடங்கியது, இந்தப் படத்தில் இருந்துதான்! தாவணியில் கொள்ளை அழகுடன் ஒயில் காட்டியிருப்பார் மயில் ஸ்ரீதேவி. நடிப்பிலும்தான். தாவணியில் இருந்து கொசுவம் வைத்த புடவைக்கு மாறுகிற போது, அவரின் நடிப்பும் வளர்ந்திருக்கும். இந்த வேறுபாட்டை தன் முகபாவனைகளால் வெகு அழகாகக் காட்டியிருப்பார்.

’சோளம் வெதைக்கையிலே... நம்மைக் கைப்பிடித்து கிராமத்துக்குக் கூட்டிச் செல்லும். செந்தூரப்பூவே... பாட்டு, மயிலின் ஊஞ்சலை நம்மையும் ஆட்டச்செய்யும். மஞ்சக்குளிச்சு அள்ளிமுடிச்சு... பாட்டு, நம் சட்டையில் மஞ்சத்தண்ணி பட்டுவிட்டதாகவே நினைக்கவைக்கும். செவ்வந்தி பூமுடிச்ச சின்னாக்கா... பாட்டு, நம்மை தாளம் போட வைக்கும். குறிப்பாக, அந்த ‘தன்னானே தானன்னே தன்னேனா... சொல்லவைக்கும். ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலைக் கேட்டு, மயிலு மட்டுமா சிரித்தாள். நாமும்தான் வெடித்துச் சிரித்தோம். இளையராஜா தன் நண்பன் மலேசியா வாசுதேவனுக்கு வழங்கிய பரிசுகளின் ஆரம்பம் இந்தப் பாட்டு.

இளையராஜா புதுமாதிரி இசை கொடுப்பவர். பாடல்கள் எல்லாமே சூப்பரா இருக்கும் என்பதைத் தாண்டி, பிஜிஎம் என்று சொல்லப்படும் பின்னணி இசையை, இளையராஜா அளவுக்கு யாரும் செய்யமுடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதற்கு பிள்ளையார் சுழி போட்டது 16 வயதினிலே.

எல்லோரும் பார்த்திருப்போம். எத்தனையோ முறை பார்த்திருப்போம். இளையராஜாவுக்காக, அவரின் இசைக்காக, இன்னொரு முறை பாருங்கள். ஒவ்வொரு காட்சியையும் இசையின் மூலமாகவும் நமக்குள் கடத்தியிருக்கும், அவரின் ஜால இசையைக் கேட்டு கிறுகிறுத்துப் போவீர்கள்.

ரயில், சூரியோதயம், வயல்வெளி, விளைந்த கதிர்கள், அழுக்குத் தெரு, அழகு நாயகி, தண்டவாளங்கள், ஒரு சின்னப்பையன் இலையை மடித்து பீப்பியாக்கி ஊதிக்கொண்டிருக்க, இசை இளையராஜா என்று போடுகிற அந்த கவிதைத்தனம், மயிலைத் தொட்டு, உசுப்பிவிடுகிற டாக்டர்... அந்தக் காட்சியில், ஓர் இளநீரை எடுத்து சீவி, இறுதியில் விலகி ஓடுகிற ஸ்ரீதேவியையும் கையில் இருந்து நழுவு உருள்கிற இளநீரையும் காட்டியிருக்கிற டச்... எல்லாமே பாரதிராஜா எனும் மகாகலைஞனின் மெகா டச். பல விருதுகளை அள்ளிக் கொண்டது 16 வயதினிலே.

படம் வந்து 41 வருடங்களாகி விட்டன. ‘நூறாயுசு’ என்போமே. பல நூறாயுசுகள் கொண்டது 16 வயதினிலே.

http://www.kamadenu.in/news/cinema/2574-16-vayadhinile-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

அன்பே வா - அப்பவே அப்படி கதை


 

 

anbe-vaa-appave-appadi-kadhai

 

இப்படியொரு துள்ளத்துடிக்கிற காதல் கதை என்பது, தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. எம்.ஜி.ஆருக்குப் புதிது. எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்குப் புதிது. எம்.ஜி.ஆர் எனும் வசூல் சக்கரவர்த்தியாகக் கொண்டிருந்த தமிழ் சினிமா உலகுக்குப் புதிது.

சினிமா உலகில், எம்.ஜி.ஆர். ஃபார்முலாவை நம்பி, இன்றைக்கும் கதை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த விகிதங்களைக் காக்டெயிலாக்கி, எம்ஜிஆராகிவிட எத்தனையோபேர் ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... எம்.ஜி.ஆரே கூட, தன்னுடைய ஃபார்முலாவில் இருந்து எள்முனையளவு கூட விலகி வந்ததே இல்லை. அதை நம்பி அவர் இருந்தார். அவரை நம்பி, தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் இருந்தார்கள்.

 

ஆனால் அவரை முழுமாதிரியாகவும் முன்மாதிரியாகவும் வேறுமாதிரிக் காட்டியெடுக்கிற துணிச்சல், ஏவிஎம்முக்கு மட்டுமே இருந்தது. திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்களை வைத்துப் படமெடுத்த பிரமாண்ட நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனத்தில் நடித்தாலே, அவர்கள் கொடி உயர ஆரம்பித்துவிடும். சிவாஜியை வைத்தும் ஜெமினியை வைத்தும் ஜெய்சங்கரை வைத்தும் எஸ்.எஸ்.ஆரை வைத்தும் ரவிச்சந்திரனை வைத்தும் என படங்கள் எடுத்த ஏவிஎம்... முதன்முறையாக எம்ஜிஆரைக் கொண்டு எடுத்த படம்தான் அன்பே வா.

ஆமாம்... புகழ்பெற்ற ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜிஆர் நடித்த முதல்படம் அன்பே வா. ஒரே படமும் இதுதான். 1966ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தைத்திருநாளில், பொங்கல் நன்னாளில் ரிலீசாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது.

ஈஸ்ட்மென் கலர். சிம்லா லொகேஷன். அபிநய சரஸ்வதி சரோஜாதேவி. நாகேஷ், மனோரமா, டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன் என்று அருமை அருமையான நடிகர்கள். பழைய டிரெண்டில் இருந்து சற்றே விலகி, புதுமையான இசைச்சேர்க்கையில் ஜாலம் காட்டினார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

வெளிப்புறப் படப்பிடிப்பு. அதுவும் சிம்லாவில் இந்த அளவுக்கு எவரும் படமாக்காத நிலை. கண்ணுக்கு குளுமையான காட்சிகள். கதையை விட்டு மீறாத காட்சிகள் என ஓர் படத்துக்கு என்ன நியாயம் சேர்க்கமுடியுமோ அவை அனைத்தையும் சேர்த்துக்கொண்டு, வித்தை காட்டியிருப்பார் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர். ஏவிஎம்மின் அந்தக்கால எஸ்.பி.முத்துராமன். அதாவது ஏவிஎம்மின் செல்லப்பிள்ளை.

ஜே.பி. எனும் மிகப்பெரிய தொழிலதிபர். செல்வச் சீமான். உழைத்துக்கொண்டே இருக்கும் அவரின் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவையாக இருக்க, எவரிடமும் சொல்லாமல், சிம்லாவில் தன் பங்களாவுக்கு ஓய்வெடுக்க வருகிறார். அங்கே வேலைக்காரராக இருக்கும் நாகேஷ், எம்ஜிஆரை அதுவரை பார்த்ததே இல்லை. ‘இங்கெல்லாம் தங்கணும்னா கூட காசாகும். வாடகை அதிகமாகும்’ என்று சொல்ல, கடும் கோபமாகும் எம்ஜிஆர், அடக்கிக் கொண்டு, பணத்தைக் கொடுத்து, அங்கே தன் பங்களாவிலேயே வாடகைக்கு இருக்கிறார். அங்கே சரோஜாதேவியின் குடும்பமும்  வாடகைக்கு வர... அங்கிருந்து தொடங்குகிறது கதையும், மோதலும், காதலும்!

எம்ஜிஆர் படத்தில் ஏழெட்டு வில்லனெல்லாம் இருப்பார்கள். இங்கே ஈகோதான் வில்லன். ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதுதான் வில்லத்தனம். அவரை இவரும் இவரை அவரும் என காதலித்தாலும் சொல்லாமல் சொல்லாமல் விழுங்கி, முட்டிக்கொள்கிற, மோதிக்கொள்கிற குணம்தான் வில்லன். அதை ரசிக்க ரசிக்க எடுத்திருப்பதுதான் திரைக்கதையின் விளையாட்டு.

ஒவ்வொரு நடிகருக்கும் பாடி லாங்வேஜ் என்று உண்டு. நமக்கே கூட இருக்கிறது. அதுவரை எம்ஜிஆருக்கென இருந்துவந்த பாடிலாங்வேஜ்களையெல்லாம் பயன்படுத்தாமல், புதுமாதிரியான உடல் பாஷையை செய்ததில்தான், அன்பே வா படம் எம்ஜிஆர் படங்களில் மறக்க முடியாத படமாக இன்றைக்கும் இருக்கிறது.

’புதிய வானம் புதிய பூமி’ என்கிற பாடல், இப்போது கேட்டாலும் அந்த கருப்புசிகப்பு கோடு போட்ட கோட்டும், சூட்கேஸூம் தொப்பியும் நினைவுக்கு வந்துவிடும். தவிர படம் முழுக்கவே அவரின் காஸ்ட்யூம்கள், தனியே நம்மை ஈர்த்து நம்முடன் பேசிக்கொண்டிருக்கும். அழகன் எம்ஜிஆர், அன்பே வா.. வில் இன்னும் அழகனாகியிருப்பார். சரோஜாதேவியும்தான். ‘லவ் பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ்’ பாடலும் அதற்கு சரோஜாதேவியின் அபிநயங்களும் பின்னே இருந்துகொண்டு எம்ஜிஆரின் சேஷ்டைகளும் எப்போதும் ரசிக்கலாம்; ருசிக்கலாம்; கொறிக்கலாம்.

1526291028.jpg

 எம்ஜிஆரும் சரோஜாதேவியும் இருந்தாலும் படத்தை தடதடவென நகர்த்திக்கொண்டு போவது நாகேஷூம் மனோரமாவும்தான். அதிலும் நாகேஷ் காமெடி, தனி ரகம். அவரின் டாப்டென் காமெடிகளில் அன்பே வாவும் ஒன்று.

குடியிருந்தகோயில் படத்தில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு...’ பாட்டுக்கு ஆடவே முடியாது என்று எம்ஜிஆர் சொன்னதாகச் சொல்லுவார்கள். ‘அதுவும் எல்.விஜயலட்சுமி பிரமாதமான டான்ஸர். அவங்க கூட நான் ஆடினா நல்லாவே இருக்காது’ என்று மறுத்துவிட்டாராம். ‘முடியும், பண்ணுங்க. சின்னச் சின்ன ஸ்டெப்ஸ்தான். பாத்துக்கலாம்’ என்று இயக்குநர் கே.சங்கர் சொல்லி, நடிக்க வைத்ததாகச் சொல்லுவார்கள். அவரும் அந்தப் பாட்டுக்கு மெர்சல் பண்ணியிருப்பார். ‘ஏய் நாடோடி... போகவேண்டும் ஒடோடி...’ என்ற பாடல் தொடங்கி முடியும்வரைக்கும், எம்ஜிஆருக்கு, எம்ஜிஆரின் ஆட்டத்துக்கு கைத்தட்டலும் விசிலும் கிடைத்துக்கொண்டே இருந்தது. பின்னிப் பெடலெடுத்திருப்பார் எம்ஜிஆர்.

மொத்தப் பாடல்களும் வாலி எழுதியிருப்பார். ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’, உள்ளம் என்றொரு கோயிலிலே...’ என்று ஒவ்வொன்றும் ரகம் பிரித்து அசத்தலாகத் தந்திருப்பார். முக்கியமாக... ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாட்டுதான். எம்ஜிஆர், சரோஜாதேவி, அவர்களின் காஸ்ட்யூம், அந்த சாரட் வண்டி, முக்கியமாய் அந்தக் குதிரை என எல்லாமே அழகு. பேரழகு.

ஏவிஎம் படம் என்றாலே அசோகன் இருப்பார். அதைவிட நிச்சயமாகச் சொல்லவேண்டியது... அசத்தலாகக் காத்திருக்கும் அவருக்கே அவருக்கான கேரக்டர். இதிலும் அப்படித்தான். சேகர் என்றொரு கேரக்டரில் இதிலும் ரொம்ப டீசண்டாக, யதார்த்தமாக நடித்திருப்பார். ஒருகட்டத்தில், உறவுக்கார சரோஜாதேவியின் காதலையும் நண்பர் எம்ஜிஆரின் காதலையும் அறிந்து புரிந்து உணர்ந்து, விட்டுக்கொடுக்கும் இடம் அற்புதமான காட்சி. படத்தில் இயல்பாய் வந்து போகும் ஒரு சண்டைக்காட்சியும் உண்டு.

‘பணத்துக்காகத்தான் காதலா, சாதாரண ஆள் என்றால் காதல் இல்லையா என்பது போன்ற சின்னச்சின்ன சந்தேகங்களும் அதனால் ஏற்படும் சண்டைகளும் படத்துக்கு இன்னும் இன்னும் சுவாரஸ்யம் சேர்க்கின்றன. எதிர்பார்ப்பு ஏற்படுத்துகின்றன. 

மாருதிராவின் ஒளிப்பதிவு எம்எஸ்வியின் அற்புதமான இசை, ஆரூர்தாஸின் பளிச் பொளேர் ஜிலீர் வசனங்கள், எம்ஜிஆர், சரோஜாதேவியின் காம்பினேஷன் நடிப்பு, நாகேஷ் சரவெடி காமெடி என்பவற்றால்... அந்த சிம்லாவே இன்னும் ஜில்லாகியிருக்கும்.

அன்பே வா... மறக்கவே முடியாத எம்ஜிஆர் படம். எம்ஜிஆரின் மறக்கவே முடியாத காதல் படம்.

http://www.kamadenu.in/news/cinema/2636-anbe-vaa-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

நாயகன் - அப்பவே அப்படி கதை


 

 

nayagan-appave-appadi-kadhai

 

சினிமாவுக்கான எல்லா விஷயங்களிலும் ஊடுருவித்தொட்டு, கலைத்துப் போட்டு விளையாடிய, அதையடுத்து புது ரூட்டுகளையும் புதுப்புது ரூட்டுகளையும் வழங்கிய பெருமைக்கு உரிய படம்... நாயகன். 1987ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் அணுகுண்டென வெடித்து அகிலத்தையே திரும்பிப் பார்க்கவைத்த முக்கிய சினிமா.

தொழில்நுட்பத்தில் உலகத்தரத்தை எட்டிய தமிழ்ப்படம் எனும் பெருமை, இன்றைக்கும் நாயகனுக்கு உண்டு. இதற்குப் பிறகு வந்த பல படங்கள், தொழில்நுட்ப ரீதியில் இதன் சாயலைக் கொண்டே இருந்தன. நடிப்பில் முத்திரை பதித்த கமல்ஹாசனுக்கு, இந்தப் படம் மிக மிக ஸ்பெஷல். இதற்குப் பிறகுதான் தன் பரீட்சார்த்த முயற்சியில் இன்னும் வேகம் காட்டத் தொடங்கி, அடுத்தடுத்த கியர் போட்டு போய்க்கொண்டே இருந்தார்.

 

இன்றைக்கும் அம்மா கேரக்டருக்கென்றே பிறந்தது போல், நடிப்பில் வெளுத்துக்கட்டிக்கொண்டிருக்கும் சரண்யாவின் முதல் படம் இதுதான். சொன்னது பழையது என்றாலும் சொல்லிய விதத்தில் பலப்பல புதுமைகள் செய்து, இன்றைக்கு வரை... அந்தப் புதுமைகளின் இயக்குநர் பட்டியலில், முதலிடத்திலேயே நிற்கிறார் மணிரத்னம்.

தென் மாவட்ட தூத்துக்குடி. தொழிற்சங்கத்தலைவர் சுட்டுக்கொல்லப்பட, அவரின் எட்டுவயது மகன் வேலு, ரயிலேறித் தப்பித்து, மும்பைக்கு வருகிறான். அங்கே இஸ்லாமியப் பெரியவர் அரவணைத்து வளர்க்க, அந்த தாராவியிலேயே வளர்கிறான், வாழ்கிறான். ’கடத்தலுக்குத் துணை போறீங்களே வாப்பா. இது சரியா தப்பா?’ என்று கேட்பான். ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்லை’ என்று சொல்லும்போதுதான் டைட்டில் முடியும். பிறகு, ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்று பேரன், தாத்தாவிடம் கேட்கும் போது, படம் முடிவுபெறும். நாலுபேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்லை என்பதற்கும் நல்லவரா கெட்டவரா என்பதற்குமான இடையே உள்ள வாழ்க்கைதான்... நாயகன். வரதராஜ முதலியாரின் வாழ்க்கையே கதையானது என்பார்கள். 

மும்பை, தமிழர்கள் வாழ்க்கை, தாராவி, விபச்சார விடுதி ஏரியா என்று மொத்த மும்பையின் அழகையும் அழுக்கையும் அப்படியே இங்கே செட் போட்டுக் காட்டியிருப்பார் தோட்டா தரணி. படத்தின் நிறத்தையும் ஆங்காங்கே வைக்கும் லைட்டிங்கையும் பார்த்து, சினிமா உலகமே பி.சி.ஸ்ரீராமைக் கொண்டாடத் தொடங்கியது.

விபச்சார விடுதிக்குச் செல்லும் வேலுவிடம், அந்த விடுதிப் பெண், ‘கொஞ்சம் சீக்கிரமா விட்டுடுறீங்களா. நாளைக்கி கணக்குப் பரீட்சை’ என்று சொல்லும்போது வருகிற பரிவும் அன்புமாகட்டும், பிறகு ஒருநாள் பார்க்கும் போது, ‘என்ன பரீட்சை நல்லா எழுதுனியா? என்னைப் பார்த்து ஓடுறே. பிடிக்கலேன்னா சொல்லு போயிடுறேன்’ என்று வேலு சொல்ல, ‘பயமா இருக்கு... அழுதுருவேனோன்னு பயமா இருக்கு. பாத்தீங்களா... அழுதுருவேன்னு சொன்னேன்ல...’ என்று அழுது அரற்றுபவளை அப்படியே நெஞ்சில் அணைத்துக் கொண்டு, ‘அழு...’ என்று சொல்லும் அரவணைப்பாகட்டும்... அது தமிழ் சினிமாவுக்கு புதிய காதல். புதிய உறவு.

1526538682.jpg

வேலு எனும் இளைஞராகவும் வேலுநாயக்கர் எனும் தகப்பனாகவும் நாயக்கர் என்கிற மிகப்பெரிய மனிதராகவும் அடுத்தடுத்த வயது, காலகட்டம் என்று அத்தனை நேர்த்தி காட்டி நடித்து, வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன். ‘இல்ல டீ சாப்பிட்டோமே’ என்று டீக்கடையில் சொல்ல, ‘காசுலாம் வேணாம், வந்துட்டுபோங்க, அதுபோதும்’ என்று சொல்ல, ‘இனிமே இப்படித்தான்’ என்று ஜனகராஜ் சொல்ல, தியேட்டரில் விசில் பறக்கும். அடித்துத் துவைத்து, நார்நாராகக் கிழித்து, தெருவில் கமலைத் தூக்கிப்போட, நடக்க முடியாமல், உதடு கிழிந்து பேசமுடியாமல், ‘நான் அடிச்சா நீ செத்துருவே’ என்பார் கமல். கைத்தட்டலில் காது கிழியும்.

அதிகார வர்க்கமும் முதலாளி வர்க்கமும் கைகோர்த்து, ஏழைகளைச் சுரண்டுவதை பொளேர் ரகத்தில் சொல்லியிருப்பார் மணிரத்னம். மும்பை தாதாவாக இருக்கும் கமலிடம், தன் பிரச்சினைகளைச் சொல்லும் போதெல்லாம், ‘நான் பாத்துக்கறேன். நான் பாத்துக்கறேன்’ என்று சொல்லும் ஸ்டைலும் அந்த காபந்து நம்பிக்கையும் படத்திற்கான மரியாதையை உயர்த்திப் பிடித்தன.

படத்தின் காட்சி அமைப்புகள், நடிகர்களின் இயல்பான நடிப்புகள், அந்த இடத்தின் சூழலை விளக்கும் பிராப்பர்டீஸ்கள், கேமிரா கோணங்கள், லைட்டிங்குகள்... மிக முக்கியமாக வசனங்கள் என அந்தப் படத்தை எப்போது ஒளிபரப்பினாலும் பார்க்கிற மிகப்பெரிய ரசிகர்கூட்டம் இன்றைக்கும் உண்டு. வசனங்களை கமலின் நண்பரும் எழுத்தாளருமான பாலகுமாரன் எழுதியிருப்பார். படம் முழுவதும் உள்ள எல்லா வசனங்களிலும் ஒரு நாவல் டச் கொடுத்திருப்பார். அதுதான் பாலகுமாரன் ஸ்டைல் என்று சினிமாவில் பெயரெடுத்தது. பிறகு வந்த பல படங்களிலும் பலரின் படங்களிலும் அந்த ஸ்டைலைத் தொட்டுக்கொண்டே வந்தார்கள்.

‘என்ன ஐயரே... இந்த ஆம்புலன்ஸ் எவ்ளோ இருக்கும்’, ‘வாங்கறோம்... அஞ்சு வாங்கறோம்’ ‘ஐயரே... இவரு புள்ள நல்லாருக்கணும்னா, நம்ம புள்ளையும் நல்லாருக்கணும்னு சொல்லுங்க’, ‘நான்...’, ‘தெரியும்... 22 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும்.’ ‘எனக்கொரு பொண்ணு இருக்கா’, ‘தெரியும்’, ‘அவளுக்குக் கல்யாணம்’, ‘தெரியும்’, ‘ஆனா நடக்காது போல இருக்கு’ ‘ஆண்டவா’, ‘துணியெடுக்கப் போனா. தனியா போனா. கந்தல் துணியா திரும்பி வந்தா’, ‘நீங்கதான்...’ ‘நான் பாத்துக்கறேன்’ என்று போலீஸ் அதிகாரியும் வேலுநாயக்கரும் பேசிக்கொள்கிற வசனங்கள், அப்படியே காட்சியுடன் நம்மை உறையவைக்கும்.

‘அவங்களை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன்’ ‘இதெல்லாம் வேணும்னா செய்றோம். வேற வழியில்லடா கண்ணு. ‘கத்தியைத் தூக்கினாத்தான் உயிரோட இருக்கமுடியும், திருப்பி அடிச்சாத்தான் வீட்டுக்கே திரும்ப முடியும்’ என்று அப்பா மகளுக்கு விளக்குகிற காட்சியும் வசனமும் நம்மை கனத்துப்போகச் செய்துவிடும்.

‘யாரு... போன்ல யாரு... யார்கூட பேசிட்டிருந்தே. வேலுநாயக்கர்னு சொல்லு. அவருக்கு என்னவாம்... அடுத்த போலீஸ் ரெய்டு எங்கேன்னு தெரிஞ்சுக்கணுமாமா. எங்கே ஓடிஒளியறதுன்னு கேக்கறாரா?’ என்று மூக்கு விடைக்க நாசர் பேசும் வசனமும் பிரபலம்.

அதையடுத்து, நாசர் கமலைக் கைது செய்யவருவார். வயதான கமல், மனைவிக்கு திதி கொடுத்துவிட்டு வருவார். அருகில் வந்ததும் அவரின் யுனிஃபார்மைப் பார்ப்பார். சட்டென்று நிமிர்ந்து கைகூப்புவார். அவர் விறைத்தபடி நிற்பார். சட்டென்று ஒருநிமிடம் மெளனம். தலையசைப்பார். போலாம் கைது பண்ணிக்கோ என்று சொல்லாமல் சொல்வார். அப்போது தண்ணீரில் வேஷ்டி நனையாமலும் வேஷ்டி தடுக்காமலும் இருக்க லேசாக வேஷ்டியைத்தூக்கிப் பிடித்தபடி, கால் அகட்டி நடந்துவருவதில்... கமலின் பாடிலாங்வேஜ் மிரட்டியெடுத்தது. மகா அசுரன்யா என்று இவரின் நடிப்பைக் கண்டு பிரமித்தனர் ரசிகர்கள்.

கமல் முதற்கொண்டு பலருக்கும் பல விஷயங்களுக்காக விருதுகள் வீடுதேடி வந்து காலிங்பெல் அடித்தன. தமிழக விருதுகளும் தேசிய விருதுகளும் பிலிம்பேர் முதலான கெளரவங்களும் வந்துகொண்டே இருந்தன. வலிக்கும் அளவுக்கான பூங்கொத்துகளும் கைகுலுக்கல்களும் ஷீல்டுகளும் கிடைத்துக்கொண்டே இருந்தன. 

ஒவ்வொரு காட்சியையும் சொல்லுகிற விதத்தில் ரகளை பண்ணியிருப்பார் மணிரத்னம். நாயகன் படம் அவருக்கே கூட அவரின் மேக்கிங் ஸ்டைலைப் புரட்டிப்போட்ட படம்தான். இன்றைக்குப் பார்த்தாலும் அந்த விஷூவல் பிரமாண்டமும் ஒவ்வொருகாலகட்டத்தையும் கண்முன்னே காட்டிய வித்தையும் மிரளவைக்கும். அசரடிக்கும்.

நான் சிரித்தால் தீபாவளி, நீயொரு காதல் சங்கீதம், அந்திமழை மேகம், தென்பாண்டிச் சீமையிலே... என்று பாடல்கள் அத்தனையும் பாஸந்தி. நீயொரு காதல் சங்கீதம்... இன்றைய இரவுகளுக்கான தலைகோதல். தென்பாண்டிச் சீமையிலேயும் முதலில் வருகிற ஹம்மிங்கும் மயிலிறகு வருடல். அந்திமழைமேகம்... நீர்துளிகளின் குதூகலக் கோலாகலம். நான் சிரித்தால் தீபாவளி... ஸ்பெஷல் விருந்து. எல்லாவற்றுக்கும் மேலாக, படம் முழுக்கவே ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசையால், மெருகேற்றிக்கொண்டே இருப்பார், உருவேற்றிக் கொண்டிருப்பார், உயிர்கொடுத்துக் கொண்டே இருப்பார் இளையராஜா. இசைஞானியின் 400வது படம். அதிலும் குறிப்பாக, படம் முழுக்க வருகிற அந்த தென்பாண்டிச்சீமையிலேக்கான டியூன் நம்மைக் காயப்படுத்திவிடும். மருந்துபோட்டுவிடும். இரண்டுமே செய்யும் ஜாலம் இளையாராஜாவின் பாஷை.

கமல், சரண்யா, நிழல்கள் ரவி, தாரா, ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லிகணேஷ், விஜயன், சுதர்சன், டினு ஆனந்த் என அனைவருமே அவரவர் வேலையை செம்மையாய் செய்திருப்பார்கள். ஜனகராஜ் - க்கு லைஃப் டைம் படங்களில் நாயகனும் ஒன்று. அப்பாவைப் போலவே செய்யும் சிறுவனைப் பார்த்து ரசிப்பதும், பின்னாளில் அப்பாவைப் போலவே டீல் செய்யும் போது பதறுவது டச். ஜனகராஜ் கைது அறிந்து கொந்தளிக்கும் கமலும் மகனின் மரணத்தைக் கண்டு அலறும் அலறலும் மகளை அடித்துவிட்டு கெஞ்சுவதும் ‘உங்களாலதான் அம்மா செத்தாங்களாமே... நிஜமாப்பா’ என்று கேட்பதும் ‘அம்மாவைக் கொன்னீங்க. அண்ணனையும் கொன்னுட்டீங்க. இங்கே இருந்தா என்னையும் கொன்னுருவீங்க’ என்று புலம்பிக் கிளம்புவதும் நெகிழ்ந்து கதறவைத்துவிடும் உயிர்ப்பான காட்சிகள், நடிப்புகள், வசனங்கள். யதார்த்த வாழ்க்கையின் கண்ணாடிப் பிரதிபலிப்புகள்!

இந்தப் படத்தின் மெளத்டாக் ரகளையைக் கிளப்ப, ஹவுஸ்புல் ஓட்டம். பக்கத்து ஊர்களுக்குப் போய் படம் பார்த்தவர்களெல்லாம் உண்டு. மும்பை, தாராவி, தாதா, மனித வாழ்க்கை என்று எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. இப்போதும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் கூட எடுப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட 31 வருடங்களாகிவிட்டாலும் இன்றைக்கும் இந்தப் படத்துக்கு இணையாக, இன்னொரு படம் இன்னும் வரவில்லை. அதையெல்லாம் அறிந்து உணர்ந்துதான் நாயகன் என்று பெயர்வைத்தார்களோ என்னவோ!

’நீங்க நல்லவரா கெட்டவரா’ வசனம்... சொல்லாதவர்களே இல்லை. வேலு நாயக்கர் என்றாலே கமலின் கெட்டப்புகள் கண்முன்னே வந்து நிற்கும். இளையராஜாவின் கரகரகுரல் காது தொடும். மணிரத்னத்தின் சைலண்ட்... நம்மை அசைத்துப் பார்க்கும்.

ஒரு சினிமா எப்படி எடுக்கணும். சிலரின் கேள்வி இது. நாயகன் மாதிரி இருக்கணும், எடுக்கணும். பலரின் பதில் இது.

இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும் நாயகன் படம்தான் ஆல்டைம் நாயகன்.

http://www.kamadenu.in/news/cinema/2693-nayagan-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

பாட்ஷா - அப்பவே அப்படி கதை


 

 

bacha-appave-appadi-kadhai

 

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத திரைப்படப் பட்டியல் உங்களிடம் இருக்கிறதா. என்னிடமும் இருக்கிறது. அதோ... அவரிடமும் இவரிடமும் அவர்களிடமும் இவர்களிடமும் இருக்கிறது. இப்படி எல்லாரிடமும் இருக்கிற பட்டியலில் இடம்பெற்றிருக்கும் படங்களில்... பாட்சாவுக்கு அட்டகாசமான இடமுண்டு. அவ்வளவு ஏன்.. ரஜினியின் கேரியரிலேயே ஸ்டைலான இடம் பிடித்திருக்கிறது பாட்ஷா.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த படமா என்றால் அப்படியெல்லாம் இல்லைதான். புதுமாதிரியான கதையா என்றால் அதுவும் இல்லை. ஆனால் ஒரு சாதாரணக் கதையை மிக எளிமையாகவும் இனிமையாகவும் சொன்ன ட்ரீட்மெண்ட்டுதான் படத்தை எகிடுதகிடாக வெற்றிபெறச் செய்தது.

 

1995ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் நாளில் ரிலீஸானது பாட்சா.

அப்போதெல்லாம், நூறுநாள் நூத்திஐம்பது நாளெல்லாம் ஓடும். தியேட்டர் வாசலில், ஹவுஸ்புல் போர்டு தொங்கவிட்ட காலம். 40 நாள் ஓடினாலே மினிமம் கியாரண்டி. பாட்சா சாதாரணமாக நூறுநாள் ஓடியது. படத்தின் தயாரிப்பாளர் சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பன் விழா எடுத்தார். விழாவில், ஜெயலலிதாவை தாக்கிப்பேசியதும். படத்தைத் தூக்கிட்டு வேற படம் போடலாம் என்று நினைத்த தியேட்டர்காரர்கள், அப்படியே பாட்சாவைத் தொடர்ந்தார்கள். மீண்டும் ஹவுஸ்புல் போர்டு.

ஆட்டோ டிரைவர் மாணிக்கம். அமைதியும் எளிமையுமாய் இருப்பவர். கிழக்கால சண்டை நடந்தால், மேற்கால ஓடிவிடுவார். சண்டை என்றாலே பயம். பிடிக்காது. தெறிக்கா ஓடுவார். ரஜினிக்கு தங்கைகள், தம்பி. ஆனா அப்பாவின் இரண்டாம் தாரத்துப் பிள்ளைகள். நக்மா, தேவனை அப்பா என்று அழைப்பார். ஆனால் அவளின் அப்பா அவரில்லை.  ஆட்டோ டிரைவர் ரஜினி. ஆனால் அவர் ரேஞ்சே வேறு. இவை அனைத்தையும் குழப்பாமல், சொதப்பாமல், தெளிவாகச் சொன்னதிலும் காட்சிப்படுத்திய விதத்திலும் கம்பீரம் களைகட்டி நிற்கிறது.

ஒரு சாதாரண மசாலாப் படம், ஆக்‌ஷன் படம், ரஜினி படம் என்றெல்லாம் சொல்லமுடியாத அளவிற்கு, வசனங்களால் படத்தைத் தூக்கிப்பிடித்து, படத்துக்கு வேறொரு நிறம் கொடுத்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். கமலுக்கு நாயகன், ரஜினிக்கு பாட்ஷா என தன் எழுத்தாலும் சிந்தனையாலும் மகுடம் சூட்டியிருப்பார் எழுத்துச்சித்தர் பாலகுமாரன். 

* ’தம்பி. கடன் கொடுக்கறதும் தப்பு. வாங்கறதும் தப்பு’

* ‘தன் தங்கச்சிக்காக கால்ல விழுறதுக்குத் தயாரா இருக்கிற அண்ணன். தான் நினைச்சபடியான வாழ்க்கை கிடைக்கலேன்னாலும் பரவாயில்ல. அண்ணன் யார் கால்லயும் விழக்கூடாதுன்னு துடிக்கிற தங்கச்சி. பொண்ணு வாழ்க்கை கிடக்கட்டும். பையன் மானம் போயிடக்கூடாதுன்னு கொந்தளிக்கிற அம்மா... காசுபணம் முக்கியமில்ல. கெளரவமும் பாசமும்தான் முக்கியம்னு இருக்கிற இந்தக் குடும்பத்துல பொண்ணு எடுக்கறது பெருமையா நினைக்கிறேன்.’

* இங்கிலீஷ்காரன் தன்னைப் பெருமையா நினைக்கலேன்னா செத்துப்போயிருவான். சீனாக்காரன் சூதாடலேன்னா செத்துப்போயிருவான். ஜப்பான்காரன் வேலை செய்யலேன்னா செத்துப்போயிருவான். இந்தியாக்காரன் பேசலேன்னா செத்துப்போயிருவான்.

அட... நல்லாப் பேசுறீங்களே...

இந்தியனாச்சே...

* ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான். ஆனா கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு வாரிவாரிக் கொடுப்பான். ஆனா கைவிட்ருவான்.

* உன்னைப் போல இது சேத்துக்கிட்ட கூட்டமில்ல. தானாச் சேர்ந்த கூட்டம். தனி சாம்ராஜ்ஜியம். அன்பு சாம்ராஜ்ஜியம்.

* அண்ணே... வீட்லேருந்து காலேஜ்க்குப் போகலாம். ஹாஸ்டல்ல தங்கியும் காலேஜ்க்குப் போகலாம். கெஸ்ட் ஹவுஸ் போய்த்தான் காலேஜ்னா, அந்தப் படிப்பு வேணாம்ணே.

* ஐயா எம்பேரு மாணிக்கம்... எனக்கு இன்னொரு பேர் இருக்கு.

* என்னண்ணே சொன்னீங்க... உண்மையச் சொன்னேன்.

* நா ஒரு தடவ சொன்னா, நூறு தடவை சொன்னாமாதிரி.

இன்னும் இன்னும் ஏராளமாய், படம் முழுக்க, வசனங்களால் கைத்தட்டச் செய்திருப்பார் பாலகுமாரன். அதிலும்... அந்த ஆட்டோ வாசகமான உன் வாழ்க்கை உன்கையிலும்... அதற்கான விளக்கமும் சூப்பர். இன்றைக்கும் ஆட்டோக்களிலும் கார்களிலும் லாரிகளிலும் இடம் பெற்ற சினிமா வசனம்... உன் வாழ்க்கை உன் கையில் தான்!

ரஜினியின் முக்கியமான படங்களில் ஒன்று. ரஜினி, சரண்ராஜ், நக்மா, ரகுவரன், விஜயகுமார், கிட்டி, சத்யப்பிரியா, ஜனகராஜ், தேவன், ஆனந்தராஜ், என்று பலரும் அவரவர் கேரக்டர்களைச் செம்மையாக்கியிருப்பார்கள். மாணிக்கம், மாணிக் பாட்சாவாக ஆவதும், பாட்சாவாக மிரட்டுவதும் புதிய பாணியாக கட்டமைக்கப்பட்ட திரைக்கதை. பிளாஷ்பேக், பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ்பேக் என்று வந்தாலும், புரியும்படியாய் கையாண்டிருப்பார் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா.

ஆட்டோக்காரன் பாடல், இன்றைக்கும் வருடம் தவறாமல், ஆட்டோ ஸ்டேண்டுகளில் ஆயுதபூஜையின் போது பாடிக்கொண்டிருக்கிறது. ஆட்டோ நண்பர்களுக்கு தேசியகீதமாகவே ஆகிவிட்டது. தங்கமகன் இங்கு சிங்கநடைபோட்டு... பாடல், ரஜினி படத்து மெலடிகளில் தனி ரகம். ஸ்டைலு ஸ்டைலுதான் பாடலில் ரகளை பண்ணியிருப்பார் ரஜினி. எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில் இப்ப இருக்கே தெரிஞ்சுக்கோ பாடலின் செட்டும், காட்சி அமைப்பும் ரஜினியும் தாண்டி, பாடல் வரிகள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. இப்படி எல்லாப் பாடல்களிலும் வைரமுத்துவின் வரிகள் ராஜாங்கம் பண்ணின. அதேபோல், தேவாவின் இசையும் பின்னணி இசையும் அமர்க்களம். குறிப்பாக, பாட்சா பாரு பாரு எனும் பாடலும் பா... ஷா.. பாஷா... என்கிற ஹம்மிங்கும் அந்தக் காட்சியையே கனப்படுத்தி, மிரட்டியெடுத்துவிடும்.

மும்பை. அங்கே தாதாவுடன் நடக்கிற சண்டை. அதையடுத்து வாழ்க்கையே திசை மாறுகிறது. சென்னையில் தலைமறைவு வாழ்க்கை. அமைதியான சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கை. இதில் மீண்டும் வில்லன் வர, அவனை அழித்து சுபம் கார்டு போடுகிற, ஒரு ஏடிஎம் கார்டின் பின்னே எழுதக்கூடிய கதைதான். ஆனாலும் பாட்ஷாவின் பாய்ச்சல் சூரத்தனமானது. 

ஹீரோவின் வீரியம் தெரியவேண்டும் எனில் வில்லன் அசகாயசூரனாக இருக்கவேண்டும் என்பது சினிமா இலக்கணம். ஆண்டனியாக ரகுவரன், ஒவ்வொரு சீனிலும் புகுந்து விளையாடியிருப்பார்.

ஒரே ரஜினி, ஒரே ரகுவரன், ஒரே வைரமுத்து, ஒரே சுரேஷ்கிருஷ்ணா, ஒரே பாலகுமாரன்.

அதனால்தான் காலங்கள் கடந்தும் கம்பீரமாக நிற்கிறார் பாட்ஷா!

http://www.kamadenu.in/news/cinema/2734-bacha-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

எதிர்நீச்சல் - அப்பவே அப்படி கதை


 

 

ethir-neechal-appave-appadi-kadhai

 

ஒண்டுக்குடித்தனம் என்றால் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. அபார்ட்மெண்ட்ஸ் என்றால்தான் தெரியும். அதாவது தனிவீடு என்றில்லாமல், நான்கைந்து வீடுகளோ, நாற்பது வீடுகளோ இன்றைக்கு இருப்பது போல, அன்றைக்கு ஆறேழு வீடுகள் இருந்தால், அவை ஒண்டுக்குடித்தனம் என்று சொல்லப்பட்டன. அப்படியொரு ஒண்டுக்குடித்தனத்தை அச்சு அசலாக செட் போட்டு, ஏழெட்டு கதாபாத்திரங்களைக் கொண்டு, எதிர்நீச்சலும் உள்நீச்சலும் போட்டு, முங்கி எழுந்து ஜெயித்திருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

அப்படியான வீட்டின் மாடிப் பகுதிக்குக் கொஞ்சமே கொஞ்சம் கீழே இடம் இருக்கும்தானே. ஒரு இடுக்கு போல் இருக்கும் அந்த இடத்தில் யாருமற்றவன், இங்கே எல்லோருக்குமானவனாக வசிக்கிறான். வாழ்கிறான். அவன் பெயர் மாது. மாடிப்படி மாது.

 

எந்த உறவுமுறையுமே இல்லாமல் வாழும் மாதுவிடம் இருந்து எல்லா வேலைகளையும் வாங்கிக் கொண்டு, முறைவைத்து சாப்பாடு போடுகிறார்கள் அங்கே வாழ்பவர்கள்.

மேஜர் சுந்தர்ராஜன் குடும்பம், எம்.ஆர்.ஆர்.வாசு குடும்பம், செளகார் ஜானகி குடும்பம், ஜெயந்தி குடும்பம் என்று அந்தக் குடும்பங்களுக்குள் நடக்கிற ஏச்சும்பேச்சும், பூசலும் பாசமும், பொய்யும்புரட்டுமே எதிர்நீச்சல்.

அந்த மாடிப்படியின் இடுக்கில் இருந்துகொண்டு, படித்து உயரவேண்டும் என்று நினைக்கிற மாதுதான் நாயகன். ஒருபக்கம் எடுபிடி வேலை. இன்னொரு பக்கம் படிப்பு. எல்லா சமயமும் உண்மை என்று மாது கதாபாத்திரத்தை, தன் உடல்மொழியாலும் வெள்ளந்திச் சிரிப்பாலும் மெளன ஏக்க பாஷைகளாலும் தூக்கிப்பிடித்து, உச்சத்தில் ஏற்றிவைத்திருப்பார் நாகேஷ். ‘இவரைத் தவிர வேற யாருமே இந்தக் கேரக்டரைச் செய்யமுடியாதுப்பா’ என்று சொல்வோமே. இந்த மாதுவும் அப்படித்தான். நாகேஷூம் அப்படித்தான் அசத்தியிருப்பார்.

நாகேஷ் அளவற்ற நம்பிக்கையும் அதீத பாசமும் கொண்டிருக்கும் மேஜர் சுந்தர்ராஜனும் நடிப்பில் கம்பீரம் காட்டியிருப்பார். அசடாக ஸ்ரீகாந்தும் சினிமாப் பைத்தியமாக அவரின் மனைவி செளகார் ஜானகியும் அச்சு அசல், கிட்டு மாமா, பட்டு மாமியாக வெளுத்துவாங்கியிருப்பார்கள். கேரளத்து சேட்டனாக முத்துராமன், முறுக்கும் மிடுக்கும் கொண்டு தன் அதட்டுகிற குரலுக்குள்ளேயே பாசமும் நேசமும் காட்டுவது, அவரின் தனி ஸ்டைல் நடிப்பு.

பைத்தியமாகி குணமாகி வந்திருக்கும் ஜெயந்திதான் நாயகி. எஸ்.என். லட்சுமிதான் அம்மா. மாதுவைக் கொஞ்சுவதுபோல் கொஞ்சுவார். கெஞ்சுவது போல் கெஞ்சுவார். மிரட்டுவது போல் மிரட்டுவார். சொல்லிக் காட்டுவதுபோல் இடித்துரைப்பார். ஆக மொத்தம் எப்படியாவது அவர் வேலையை நாகேஷிடம் வாங்கிவிடுவார். வயதானவர்களுக்கே உண்டான அந்த குணாதிசயங்களை, அற்புதமாகக் கொண்டு வந்திருப்பார் தன் நடிப்பின் மூலமாக!

அங்கே சின்னதும்பெருசுமாகப் பொருட்கள் களவாடப்படும். நாகேஷ்தான் திருடியிருப்பார் என்று எல்லோரும் குற்றப்பத்திரிகை வாசிப்பார்கள். மேஜர் சுந்தர்ராஜன் வந்து என்ன கலாட்டா என்று கேட்பார். மாடத்தில் வைத்த பணம் காணோம், சட்டை காணோம், வெள்ளி டம்ளர் காணோம் என்றெல்லாம் சொல்லும்போது சட்டென்று நாகேஷ், ‘நாயரோட வாட்ச்சைக் காணோம்’ என்று எடுத்துக்கொடுப்பார். அப்போதே மேஜருக்கு, நாகேஷ் குற்றவாளியில்லை என்பது தெரிந்து நெகிழ்ந்துபோவார். அந்தக் காட்சியும் எல்லாரின் நடிப்பும் முக்கியமாக வசனமும் அமர்க்களப்படுத்திவிடும்.

இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் பூக்கிற அந்தக் காதல், தனி எபிசோடு. அவர்கள் சந்திப்பதற்கு, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலை சிக்னலாக வைத்துக்கொள்வது, இன்னொரு நேர்த்தி. அழகியல் டச்.

மேஜருக்கும் நாகேஷூக்கும், நாகேஷூக்கும் முத்துராமனுக்கும், ஜெயந்திக்கும் நாகேஷூக்கும், நாகேஷூக்கும் செளகார் ஜானகிக்கும் என லிங்க் வைத்து, காமெடி பண்ணி, கதை நகர்த்தி, நெகிழ்த்தி மகிழ்ச்சிப் படுத்தியிருப்பதுதான் கே.பியின் உத்திகளில் ஒன்று. எதற்கெடுத்தாலும் சினிமா விஷயங்களை உதாரணமாகச் சொல்லும் அந்த செளகார்... நம் ஒவ்வொருவர் கூட்டத்திலும் உள்ள ஒருவர்தான். சீரியஸ் அழுமூஞ்சி நாயகி செளகாரை காமெடி பண்ணவைத்திருப்பதும் காமெடி அதகள மனோரமாவை, தப்பித்தவறியும் ஒரு சீனில் கூட காமெடி பண்ணாமல் வைத்திருப்பதும், கே.பாலசந்தருக்கு, கே.பாலசந்தர் மேல் உள்ள நம்பிக்கையின் உச்சபட்சம்.

‘படவா ராஸ்கல்’ என்று அடிக்கொரு தரம் நாகேஷை அழைக்கும் மேஜர் கதாபாத்திரம் அவ்வளவு பாந்தம். இன்னொரு முறை திருட்டுச் சம்பவம். எஸ்.என்.பார்வதியின் தம்பி தேங்காய் சீனிவாசன், நாகேஷிடம் கையும்களவுமாக மாட்டிக்கொள்வார். விஷயம் தெரிந்து ஓடிவரும் லட்சுமியும், ‘காட்டிக்கொடுத்துடாதேடா’ என்று கெஞ்சுவார். ஆனால் விளக்குகள் போடப்படும். எல்லோரும் வந்துவிடுவார்கள். சட்டென்று ‘என்னடா மாது இப்படித் திருடுறியே. என் தம்பிகிட்ட வசமா மாட்டிக்கிட்டியே... என் கையால சோறு போட்டேனேடா...’ என்று நாகேஷை மாட்டிவிடுவார்.

‘இப்பவாவது உண்மையைச் சொல்லு’ என்று மேஜர் சொல்ல, பரிதாபமாக, ‘ஆமாம் சார்.... நான்தான் திருடினேன்’ என்பார் நாகேஷ்.  ஒவ்வொரு பொருளாகச் சொல்லி, திருடினது நீதானா என்று கேட்டுக்கொண்டே வந்து முடிப்பார் மேஜர். உடனே நாகேஷ், ‘ஆங்... நாயர் வாட்ச்சை விட்டுட்டீங்களே...’ என்று சொல்லிவிட்டு, கண்ணால் ஒரு ஜாடை செய்வார். அற்புதமான காட்சி. அதையடுத்து தேங்காய் சீனிவாசன் தான் திருடியிருக்கிறார் எனும் குட்டு வெளிப்பட்டதும், அவரின் மாமா வெளுத்தெடுப்பார். சரிந்து விழுந்து கிடப்பார் தேங்காய் சீனிவாசன். ‘போலீஸ்ல பிடிச்சுக் கொடுங்க’ என்று சொல்லும்போது, ‘வேணாம் சார். தப்பு செஞ்சு மாட்டிக்கிட்டு, கீழே விழுந்து கிடக்குறாரு. எந்திருக்கும் போது நல்லவனா திருந்தி நிப்பார் சார்’ என்பார் நாகேஷ். இது எதிர்நீச்சல் எனும் சமுத்திரத்தின் ஓர் அலை மட்டுமே. இன்னும் இன்னும் மனதில் அலையடிக்கும் காட்சிகளும் வசனங்களும் ஏராளம்.

இத்தனையிலும் துணை நிற்கும் மேஜர், ‘படிக்கிற வயசுல காதல் தேவையா’ என்று பேசமறுக்கிறார். ‘படவா ராஸ்கல்’ என்று அழைக்க மறுக்கிறார். ‘இவங்க உன்னை மன்னிச்சு இங்கே இடம் தரலாம். ஆனா என் மனசுல உனக்கு இடமில்லடா’ என்பார் மேஜர். ‘பரீட்சைக்குப் போறேன். நீங்க ஆசீர்வாதம் பண்ணினா, நல்லா எழுதுவேன்’ என்று கெஞ்சுவார் நாகேஷ். அவரே மேஜராகவும் நடித்து, நாகேஷாகவும் இருந்து ஆசி வாங்குகிற சீன், அழவைத்துவிடும்.

இன்னொரு காட்சி. நாகேஷ் கால் உடைந்து அவஸ்தைப்படுவார். ‘சார்... இன்னிக்கிதான் சார் கடைசி பரீட்சை. என்ன செய்வேன் சார் நான்’ என்பார். எழுந்து நிற்கச் சொல்லுவார் மேஜர். அப்படி நிற்கும்போது, அப்படியே அலேக்காகத் தூக்கிக்கொள்வார். மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று, தேர்வு ஹாலில் அமரவைத்து, வீட்டுக்குக் தூக்கி வந்து, ‘நான் மாது வந்திருக்கேன்’ என்று நாகேஷூக்குப் பதிலாக மேஜர் சுந்தர்ராஜன் தட்டேந்தி வாசலில் நிற்பார். நமக்கு, நெஞ்சை அடைத்துக்கொண்டு, கண்ணில் இருந்து புறப்படும் கண்ணீர். ’சில விஷயங்களை நீங்க சொன்னாத்தான் நல்லாருக்கும். நான் சொல்றதை நீங்க சொல்லக்கூடாது, நீங்க சொல்றதை நான் சொல்லக்கூடாது’ என்று சொல்லிவிட்டு, பரவாயில்ல, சொல்லுடா என்று மேஜர் சொல்ல, ‘படவா ராஸ்கல்’ என்பார் நாகேஷ். அழுதுகொண்டிருந்த ஆடியன்ஸ் அப்படியே கைத்தட்டி சிரிப்பார்கள். ரசிப்பார்கள்.

‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’, ‘தாமரைக் கன்னங்கள்’, ’அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’, ‘சேதி கேட்டோ சேதி கேட்டோ’... என்று பாடல்கள் மொத்தமும் ஹிட்டு. கே.பாலசந்தரால் அறிமுகமான பாலசந்தர் ஸ்பெஷலான வி.குமாரின் இசையில் எல்லாப் பாடல்களும் இன்றைக்கும் மனசுக்குள் சப்பளங்கால் போட்டு உட்கார்ந்திருக்கின்றன.

ஒரு காட்சியின் ஆரம்பமும் முடிவும் சிறப்பாக, நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பது சினிமா விதி. இலக்கணம். இந்தப் படத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய முத்திரைகளின் மூலம், பாலசந்தர் தெரிந்துகொண்டே இருப்பார். மாது என்கிற நாகேஷூம் உயர்ந்துகொண்டே இருப்பார். 1968ம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம், இன்றைக்கும் ரசிகர்களின் மனக்கடலில் நீச்சலடித்துக்கொண்டே இருக்கிறது.

அப்புறம் ஒரு விஷயம்... முகத்தையே காட்டாமல், இருமலையே ஒரு கேரக்டராக்கியிருப்பது, பாலசந்தரால் மட்டுமே முடிகிற அசாத்தியம். அந்த இருமல் தாத்தாவின் முகத்தை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா?

http://www.kamadenu.in/news/cinema/2862-ethir-neechal-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

முந்தானை முடிச்சு - அப்பவே அப்படி கதை


 

 

mundhanai-mudichu-appave-appadi-kadhai

 

 

அப்படியொரு வெற்றி, எல்லோரையும் அதிசயிக்க வைத்தது. படம் பார்க்கப் போய்விட்டு, ஹவுஸ்புல் போர்டு மட்டுமே பார்த்துவிட்டுத் திரும்பிவந்தவர்களை வைத்து, ஒரு ஷோவே நடத்தலாம். ஒவ்வொரு காட்சிக்கும் இதுதான் நிலைமை. அதுவும் ஆறேழு தடவையாகவும் இருபது முப்பது தடவையாகவும் அறுபது எண்பது முறையாகவும் படத்தைப் பார்த்தவர்களே அதிகம். ரிப்பீடட் ஆடியன்ஸின் மாபெரும் ஆதரவுடன்... வெள்ளிவிழா கொண்டாடிய மிக முக்கியமான படம் முந்தனை முடிச்சு.

1979ம் ஆண்டு முதல்படமான சுவரில்லாத சித்திரங்களை ரிலீஸ் செய்தார். 80ம் ஆண்டு ஒரு கை ஓசை வெளியானது. 81ம் ஆண்டு ஆரம்பத்தில் மெளனகீதங்களும் அடுத்து இன்று போய் நாளை வாவும் அதன் பிறகு தீபாவளி ரிலீசாக அந்த ஏழு நாட்களும் வெளியானது. மெளனகீதங்களும் அந்த ஏழு நாட்களும் திரையுலகில் இயக்குநர் அந்தஸ்தை பாக்யராஜுக்கு உயர்த்தி, பீடமிட்டுக் கொடுத்தது. ரசிகர்களிடையே இன்னும் நெருக்கத்தையும் பிரியத்தையும் மனதில் இடத்தையும் கொடுத்தது. ’பாக்யராஜ் படம் ரிலீசானா முத நாள், முத ஷோ பாத்துடணும்’ என்று முக்கால்வாசிக்கும் அதிகமான ரசிகர்கள் சங்கல்பம் செய்துகொண்டார்கள்.

 

அதன் பிறகு 82ம் ஆண்டு தூறல் நின்னு போச்சு படமும் டார்லிங் டார்லிங் டார்லிங் படமும் வெளியானது. இன்னும் இன்னுமாக பாக்யராஜின் திறமை பளிச்சிட்டது. திரைக்கதையும் வசனங்களும் பெரிதாகப் பேசப்பட்டன. ஏபிசி சென்டர்கள் என எல்லா ஏரியாக்களிலும் பட்டொளி வீசி ரவுண்டு வந்தார் பாக்யராஜ்.

‘’எங்களுக்கு ஒரு படம் பண்ணிக்கொடுங்களேன்’ என்று பாரம்பரியமான, புகழ்மிக்க, பிரமாண்டமான ஏவிஎம் நிறுவனம் அழைத்தது. பாக்யராஜுக்கு மட்டுமின்றி திரையுலகுக்கே அது ஆச்சரியம்தான். ஏவிஎம் படமென்றால், அது எஸ்.பி.முத்துராமன் டைரக்‌ஷன்தான் என்று இருந்த காலம் அது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குநர் தொடர்ந்து பண்ணுவார். அப்போது எஸ்.பி.முத்துராமன். ஆனால் அந்த வழக்கங்களை உடைத்து, பாக்யராஜை இயக்கச் சொல்லிக் கேட்டது ஏவிஎம். இதுவே பாக்யராஜின் அதி முக்கிய சாதனைகளில் ஒன்று.

பாக்யராஜ், இளையராஜா, அசோக்குமார் கூட்டணியில் உருவானது முந்தானை முடிச்சு. 83ம் ஆண்டு வந்த படம் இது. கிட்டத்தட்ட, 35 வருடங்களாகி விட்டன.

இங்கே இரண்டு கொசுறு தகவல்கள்... படத்தின் கதைக்காக திருப்பதியில் ரூம் போட்டு டிஸ்கஷன் செய்யப்பட்டது. அந்த டிஸ்கஷனில் எழுத்தாளர் பாலகுமாரனும் கலந்துகொண்டு, பணியாற்றினார். தனது முன்கதைச்சுருக்கம் எனும் பயாகிரபி நூலில், இதைக் குறிப்பிட்டிருக்கிறார் பாலகுமாரன்.

அடுத்து... இந்தக் கதைக்கு சின்னவீடு என்று டைட்டில் சொன்னார் பாக்யராஜ். ‘கதை நல்லாருக்கு. டைட்டிலும் நல்லாருக்கு. வேற ஏதாவது சொல்லுங்களேன்’ என்றது ஏவிஎம். ‘அடுத்தாப்ல ஒரு சொந்தப்படம் எடுக்கறேன். அந்தப் படத்துக்கு ஒரு டைட்டில் வைச்சிருக்கேன். அதைத்தரேன்’னு பாக்யராஜ் சொல்ல... அதுதான் முந்தானை முடிச்சு. பிரமாதம் என்று ஏற்கப்பட்டது.

அங்கேயும் கூடுதல் தகவல்... முந்தானை முடிச்சு என்பது எட்டெழுத்து. 8 ராசியில்லாத எண் என்று இப்போதும் பார்க்கப்படுகிறது. கோடிகோடியாய் புழங்குகிற சினிமாவிலும் எட்டு என்பதை எட்டவே வைத்திருந்தார்கள். ஆனால் முந்தானை முடிச்சு என்பது எட்டெழுத்து. இந்தக் குழப்பத்துடன் ஏவிஎம் இருக்க, அதன் விளம்பர நிர்வாகி எஸ்.பி.அர்ஜுனன் ’டைட்டில் நல்லாருக்கு சார். ஆனா இதுல எட்டு பாக்கவேணாம். ‘மு’வை பெருசாப் போட்ருவோம். ‘ந்தானை டிச்சு’ன்னு போடுவோம். ரெண்டு ‘மு’வுக்குப் பதில், ஒரே ‘மு’ போடுவோம். ஏழு எழுத்துன்னு ஆயிரும்’ என்று யோசனை சொல்ல... டபுள் விசில் கொடுக்கப்பட்டது. அங்கே டேக் ஆஃப் ஆனது முந்தானை முடிச்சு.

வயதான தம்பதி, அதாவது குடுகுடு தாத்தாவும் கிடுகிடு பாட்டியுமாய் அன்பையும் உணவையும் ஊட்டிக் கொள்ளும் அந்த முதல் காட்சியும் ‘விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்’ என்கிற இளையராஜாவின் குரலும் சேர்ந்து, ரசிகர்களைக் கைத்தட்டவைத்தது.

வேஷ்டி சட்டையில், கிராமத்தில், டவுன் பஸ்சில், கையில் குழந்தையுடனும் பெட்டிபடுக்கையுடனும் வந்திறங்கும் பாக்யராஜைப் பார்த்ததும் மொத்த ஆடியன்ஸுக்கும் குழப்பம், தவிப்பு. கேள்விகள். அங்கே சின்னப்பசங்களுடன் சின்னபசங்களாக ஊரையே லந்து பண்ணிக்கொண்டு, கலாட்டா செய்துகொண்டு, ஓடியாடி விளையாடிக்கொண்டிருக்கும் ஊர்வசி, தன் சகாக்களுடன் பாக்யராஜைப் பார்க்கும்போதே, சுவாரஸ்யம் தொடங்கிவிடும்.

பையில் இருந்து ஒவ்வொரு பொருளாய் எடுத்து அபேஸ் செய்ய, குழந்தையின் பால்புட்டியை எடுத்து, தவக்களை வாயில் வைத்துக்கொள்ளவும் ‘இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கிற வாத்தியாரு’ என்று சொல்லவும் ‘கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் கே.பாக்யராஜ்’ என்று டைட்டில் போடவும் ரசிகர்கள் அலப்பறையுடன் வரவேற்கவும்... ‘மனுஷன் ஆடியன்ஸோட ‘பல்ஸ்’ஸை எப்படித்தான் புடிக்கிறாரோ...’ என்று தியேட்டருக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள்.

காட்சிக்குக் காட்சி காமேடி பண்ணுவதிலும் சென்டிமெண்ட் தூவுவதிலும் மனிதர் ஜித்தன். பள்ளிக்கூடத்தில், இறை வணக்கம் பாடும்போது வார்த்தையை மறந்து திணறுவார் பாக்யராஜ். மீதமுள்ள வரிகளை கிராமத்துப் பெருசு பாடிவிட்டு, ‘ஹூம்... இவன்லாம் வாத்தியாரா வந்து, இவன்கிட்டப் பசங்க படிச்சு... என்னாகப்போவுதோ’ என்று அலுத்துக்கொள்வார்.

ஆற்றில் குளிக்கப் போகும் வாத்தியார் பாக்யராஜ், ஒருவரைப் பார்த்து வணக்கம் என்று ஜாடையாச் சொல்வார். ‘ஏய்யா..  என்னய்யா வாத்தியரு. கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொல்லவேணாமா. பட்டணத்துல படிச்சிருந்தா, இதெல்லாம் கூடவா தெரியாமப் போகும்’ என்று தலையில் அடித்துக்கொண்டே செல்வார். இன்னும் பத்தடி சென்றதும், வேறொருவரிடம் வேஷ்டியை இறக்கிவிட்டு, இருகைகளையும் கூப்பி, ‘வ...ண...க்...க...ம்...’ என்று பவ்யமாய், நீட்டிமுழக்கிச் சொல்லுவார். ‘என்ன ஆளுய்யா நீ. பட்டணத்துல படிச்சவங்கிறே. வணக்கம்னு வாய்வார்த்தையா சொன்னாப் போதாதா? கோயில்ல கோவிந்தா போடுற மாதிரி கும்பிடுறே. என்னத்த படிச்சியோ போ’’ என்று சொல்லிவிட்டுச் செல்பவரை, விக்கித்துப் பார்ப்பார் பாக்யராஜ். தியேட்டரில் கைத்தட்டி சிரித்து விசிலடித்து முடிக்க நேரமாகும்.

கொஞ்சம்கொஞ்சமாக வாத்தியார் மீது மரியாதையும் நேசமும் ஊர்வசிக்கு வர... அது அடுத்தகட்டமாகவும் காதலாகவும் கல்யாண சிந்தனையாகவும் வளர, ஊர்வசியிடம் இருந்து விலகியே செல்வார் பாக்யராஜ். எப்படியாவது பாக்யராஜை அடையவேண்டும் எனும் உறுதியில், ‘வாத்தியார் கெடுத்துட்டாரு. நான் இப்ப கர்ப்பம்’ என்று சொல்ல, பஞ்சாயத்தில் ஊரே பத்திக்கொள்ள... ‘இதோ... அவ பொய் சொல்றா. என் குழந்தையைப் போடுறேன். குழந்தையைத் தாண்டச் சொல்லுங்க. அப்படி தாண்டிட்டா, கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று பாக்யராஜ் சொல்ல, குழந்தையைத் தாண்டுவார் ஊர்வசி. இடைவேளை என்று போட்டு, நம் பிபியை எகிறவைத்திருப்பார் பாக்யராஜ்.

’ஏமாத்தி, குழந்தையைத் தாண்டி பொய்சத்தியம் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கிட்டேல்ல. இனி உனக்கும் எனக்கும் தாம்பத்தியமே கிடையாதுடி’ என்று சொல்லி, ஊர்வசியை வெறுத்துப் பிரித்து. எப்போதும் போல இருப்பார் பாக்யராஜ்.

பள்ளிக்கூட பசங்களின் ரவுசு, மாட்டுக்காரரின் ‘அடுத்த மணி எப்பங்க அடிப்பீங்க’ என்கிற கேள்வி, கவர்ச்சியாக இருந்தாலும் கண்ணியத்துடன் இருக்கும் தீபா டீச்சர், வைத்தியர் பயில்வான் ரங்கநாதன், ஊர்நாட்டாமையும் ஊர்வசியின் அப்பாவுமான கே.கே.செளந்தர், சத்துணவு சாப்பாடு திருடும் நளினிகாந்த், சின்னக் கதாபாத்திரத்தில் முகம் காட்டும் கோவை சரளா, முக்கியமாய் அந்த முருங்கைக்காய் சமாச்சாரம்... என்று அனைவரையும் அனைத்தையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தியிருப்பார் பாக்யராஜ்.

ஊர்வசிக்கு இதுதான் முதல் படம். அப்படியா என்று இப்போதைய இளம்தலைமுறை மட்டுமல்ல... அவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு, அப்போதும் அப்படியா என்றுதான் கேட்டார்கள் எல்லோருமே! பாக்யராஜ் படங்களில் எப்போதுமே நாயகியின் கேரக்டர் மிக ஸ்கோப் உள்ள வகையில்தான் இருக்கும். இதிலும் அப்படித்தான்! பரிமளமாகவே வாழ்ந்திருப்பார் ஊர்வசி.

வீட்டுப்பாடம் செய்யாததற்கு மாணவனை அடித்துவிடுவார் ஆசிரியர் பாக்யராஜ். சித்தி கொடுமையால்தான் அவன் எழுதவில்லை; கையில் சூடு போட்டார் என்பதெல்லாம் தெரிந்ததும் மனம் கனத்துப் போவார். ஆரம்பக் காட்சிகளில் இதுவும் ஒன்றுதான். ஆனால் இடைவேளைக்குப் பிறகு இதையெல்லாம் வைத்து முடிச்சு மேல் முடிச்சு போட்டு, தன் கதைக்களத்துக்குள் சடுகுடு விளையாடியிருப்பார் பாக்யராஜ்.

இரண்டாவது மனைவியாகிவிட்ட ஊர்வசியின் மீது, மெல்ல இரக்கம் வரும். கனிவும் வரும். ‘புடவைய மாத்திட்டு வா. சினிமாவுக்குப் போகலாம்’ என்பார். அந்த வீடே தலைகீழாகிவிடும். கணவரின் ஆடைக்கு மேட்ச்சாக தானும் அணிந்துகொண்டு, நகைநட்டுகளையெல்லாம் போட்டுக்கொண்டு, வீட்டைப் பூட்டும் போது, உள்ளிருந்து ஏதோ உடைந்த சப்தம். திறந்து பார்த்தால், முதல் மனைவியின் புகைப்படக்கண்ணாடி விழுந்து உடைந்திருக்கும். ‘ஒருநிமிஷம்... சரிபண்ணிடுறேன்’ என்று சுத்தம் செய்வார். அது கூட பாக்யராஜூக்கு பெரிதாகத் தெரியாது. எடுத்துக்கொள்ளவும் மாட்டார். ஊர்க்காரர்களிடம் அலப்பறையைக் கொடுத்தபடி ஊர்வசி வர, எதிரே சிற்றன்னையின் கொடுமையால் தலையில் அடிபட்ட அந்த மாணவன்... ‘அதுசரிப்பா... மூக்கு வெளுக்காத கழுதை கிடைச்சாலும் கிடைக்கும். மூத்தகுடி புள்ளைய ஆதரிக்கிற இளையகுடி கிடைக்கவே மாட்டா’ என்று யாரோ சொல்ல... சட்டென்று மூடு அவுட்டாகி, ‘ஏய்... தலை வலிக்குது. இன்னொருநாள் சினிமாவுக்குப் போயிக்கலாம்’ என்று வீட்டுக்குத் திரும்புவார். ஒரே சமயத்தில் சந்தோஷம்; அடுத்ததாகவே துக்கம்.

அடுத்தும் பாக்யராஜின் ராஜவிளையாடல் திரைக்கதை. ஊர்வசி வாந்தியெடுப்பார். தடதடவென வீட்டில் இருந்து ஓடிப்போய்விட்டு திரும்புவார் பாக்யராஜ். ‘எங்கே, வைத்தியர் வீட்டுக்காப் போயிருந்தே’ என்பார் ஊர்வசி. ‘இல்ல, ‘உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்’ என்பார் பாக்யராஜ். ‘ஏய்யா... உனக்கும் எனக்கும் நடுவுல ஒண்ணும் ஆகல. ஆனா அவங்ககிட்ட போய் வாந்தி எடுத்திருக்கேன்னு சொன்னா, என்ன நினைப்பாங்க’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் சீர்செனத்திகளுடன் கூட்டமாய் வந்துவிடுவார்கள். ‘பஞ்சாயத்து வரைக்கும் அசிங்கப்படுத்தினாலும் எம் மகளைப் பழிவாங்காம அவளுக்குக் குழந்தை பாக்கியம் கொடுத்தீங்களே...’ என்று கேகே. செளந்தர் நெகிழ்வார். ‘அதுசரிப்பா... இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’னு பாடம் நடத்துறவராச்சே அவரு’ என்பார். வைத்தியர் வந்து ஒண்ணும் இல்ல என்றதும் வருகிற சோகம்... ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கான லீட் காட்சி. ஆனால் வெறும் லீட் காட்சி மட்டுமே அல்ல அது. படத்தையே லீட் செய்யும் காட்சியும் கூட!

இந்த சின்னஞ்சிறு கிளியே பாடலை, ஒருநாளைக்கு பத்துதடவையாவது சிலோன் ரேடியோவில் போடுவார்கள். இதைக் கேட்க, தமிழகத்தில் பத்தாயிரம் பேராவது காத்திருப்பார்கள் என்பதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

மனைவியை இழந்து குழந்தையுடன் இருக்கும் மருமகனை, தன் இரண்டாவது மகளுடன் வந்து அடிக்கடி பார்க்கிற மாமியார் கதாபாத்திரமும் மனசை என்னவோ செய்யும். படத்தில் முதல் மனைவியாக பூர்ணிமா ஜெயராம். நிஜத்தில் பிரவீணாவை அடுத்து இன்றளவும் பூர்ணிமா பாக்யராஜ் ஆதர்ஷ தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர். 

கிளாமர், கவர்ச்சி, டபுள் மீனிங், ‘அ’ போடச் சொல்லித் தருதல், அந்தப் புடவைக் கட்டு, கொஞ்சல் பார்வை என்று வருகிற தீபா கேரக்டரை, ஒருகட்டத்தில், மிக மிக உன்னதமாக்கியிருப்பதுதான் பாக்யராஜ் டச். சொல்லப்போனால், தீபாவின் கேள்விகள்தான் பாக்யராஜை மனம் மாறச் செய்யும். ஊர்வசியை ஏற்க முடிவு செய்யும். டைட்டிலில் கூட, ‘மீண்டும் தீபா’ என்று கெளரவப்படுத்தியிருப்பார்.

அசோக்குமாரின் கேமிராவுக்குள் அந்தக் கிராமத்தின் மொத்த அழகையும் கடத்தி வந்திருக்கிற மாய்ஜாலம் தெரியும். அவ்வளவு அழகு கிராமம். எம்ஜிஆரின் படங்கள், எம்ஜிஆரின் சத்துணவுத்திட்டம் என்று ஆங்காங்கே தூவியிருப்பார். அதுவும் கதைக்குத் தகுந்தது போல் கோர்க்கப்பட்டிருக்கும்.

படத்துக்கு தன்னால் ஆன அத்தனை வலுவையும் கொண்டு சேர்த்திருப்பார் இளையராஜா. வெளக்கு வைச்ச நேரத்துல, நான் புடிக்கும் மாப்பிள்ளைதான், சின்னஞ்சிறு கிளியே, அந்திவரும் நேரம், கண்ணத் தொறக்கணும் சாமி, வா வா வாத்தியாரே வா என்று ஒவ்வொரு பாட்டும் அதகளம். அமர்க்களம். அபாரம். கல்யாண, காதுகுத்து வீடுகள் என விசேஷங்களிலெல்லாம் ‘ஏம்ப்பூ... முந்தானை முடிச்சு பாட்டுங்களைப் போடுங்கப்பா’ என்று பெருசுகளே ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்கள். பின்னணி இசையிலும் ராஜ அலங்காரம் பண்ணியிருப்பார் இளையராஜா. அதிலும் பாக்யராஜ் ஊர்வசிக்கு என ஒரு டியூன் பிடித்திருப்பார். அதைக் கேட்கும்போதே, நமக்குள் ஒரு மகிழ்வும் நெகிழ்வும் நிச்சயம்!

இரண்டாவது மனைவியான ஊர்வசியை ஏற்றுக்கொள்ளலாம் என வீட்டுக்கு வந்தால், அங்கே ஊர்வசி இல்லை. காலுக்கடியில் இருக்கும் நோட்டீஸை ராக்கெட் செய்துவிடுவார். தண்டோராச் சத்தம். கருத்தடை முகாம் அறிவிப்பு. சட்டென்று ஏதோ உணர்வு, பயந்து, அடுத்த ஊருக்குச் செல்வார். மனைவி குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடுவாளோ என்று பதைபதைத்துவிடுவார். அங்கேயும் பாக்யராஜ் முடிச்சு... ஒரு சண்டைக்காட்சி. ஆஸ்பத்திரி. மயக்கத்தில் ஊர்வசி. டாக்டரின் பதில். சுபமான முடிவு.

வலிக்க வலிக்க கைத்தட்டிக்கொண்டே சொன்னார்கள் ரசிகர்கள்... ‘அதான் பாக்யராஜ் படம்’... ‘படம்னா பாக்யராஜ் படம்தான்’!

இந்தப் படம் 50 நாளைக் கடந்து அதே ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் போது, முந்தானை முடிச்சு திரைக்கதை வசனப் புத்தகம், வழவழ காகிதத்தில், பத்து ரூபாய்க்கு ஸ்டாலில் விற்றதும் வாங்கியதும் ஞாபக முடிச்சுகளாக இன்றைக்கும் இருக்கிறது.

இப்போது போலவே அப்போதும் ‘இது என் படம்’, ‘இது என் கதை’ என்றெல்லாம் அறிவிக்கப்பட்டு, வழக்கும் போடப்பட்டது. அதையெல்லாம் கடந்து, ’இது பாக்யராஜ் படம்’ என்று இன்றைக்கும் மக்கள் மனங்களில் நிலைத்துநிற்கிறது. ஏனென்றால் இது முந்தானை முடிச்சு அல்ல! இயக்குநர் கே.பாக்யராஜ்க்கும் ரசிகர்களுக்குமான முடிச்சு! அவிழ்க்கவே முடியாத முடிச்சு! 

http://www.kamadenu.in/news/cinema/2951-mundhanai-mudichu-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

புதிய பாதை - அப்பவே அப்படி கதை


 

 

puthiyapadhai-appave-appadi-kadhai

 

திக்குஎது திசை எது என்று தெரியாமல்... என்பார்கள். அப்படி தத்தளித்து, தன் திறமைகளுடனும் நம்பிக்கைகளுடனும் கடந்துகொண்டிருந்த பார்த்திபனுக்குக் கிடைத்த புதிய பாதைதான்... முதல் பாதை. சிந்திப்பதும் சொல்வதும் செயல்படுவதும் பேசுவதும் என வித்தியாசம் காட்டி அசத்தும் ஆர்.பார்த்திபனின் முதல் படம் இது. 1989ம் ஆண்டு ரிலீசானது. 29 வருடங்களாகிவிட்டன! 

அந்த வருடம் வந்த கமலின் அபூர்வ சகோதரர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பிரபுவின் உத்தமபுருஷன் ஹிட்டடித்தது. கமலும் பிரபுவும் நடித்த வெற்றிவிழா, வெற்றி அடைந்தது. கரகாட்டக்காரன் வந்து பட்டிதொட்டிசிட்டியெங்கும் மிகப்பெரிய ஆட்டம் போட்டது. ரஜினிக்கு ராஜாதிராஜாவும் ராஜாசின்ன ரோஜாவும் சிவாவும் வந்து வெற்றியைத் தழுவியது. கார்த்திக் நடித்த வருஷம் 16, சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப் பிள்ளை, ராமராஜனின் பல படங்கள், விஜயகாந்தின் பாட்டுக்கு ஒரு தலைவன் என ஏகப்பட்ட படங்கள் வந்து வெற்றியும் அடைந்தன. ஆனாலும் தன் நிலையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி, பீடுநடை போட்டார், புதியபாதையில்... பார்த்திபன்!

 

எரிகிற வீட்டில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்பார்கள். அப்படியொரு கொள்ளியை தேர்வு செய்து, அதில் பீடி பற்ற வைப்பதில் இருந்தே நாயகன், எதற்கும் கலங்காதவன், எதுபற்றியும் வருந்தாதவன் என்று காட்டிவிடுவார்.

கதை என்று பார்த்தால், கெடுத்தவனே மங்கையின் பாக்கியம் என்று தன்னைக் கெடுத்தவனைத் தேடிப் போராடி, அவனைக் கைப்பிடிக்கும் தேய்ந்துபோன கதைதான். ஆனால் சொன்ன ஸ்டைல், பாத்திரப் படைப்பு, காட்சிப் படுத்துதல் என்பதில்தான் ஜித்துவேலையை மொத்தமும் காட்டி, நம்மைக் கவர்ந்திருப்பார் பார்த்திபன்.

ஒரு காட்சியை ஆரம்பிப்பது, பிறகு அந்தக் காட்சி, அதையடுத்து அந்தக் காட்சியை முடிப்பது என கிட்டத்தட்ட இரண்டு நிமிடத்துக்குள் நான்கைந்து முறை நம்மைக் கைத்தட்டச் செய்திருப்பார் பார்த்திபன். சொல்லப்போனால், அடுத்தடுத்த படங்களில்தான் தெரிந்தது... இதுதான் பார்த்திபன் ஸ்டைல் என்று!

பார்த்திபன், சீதா, மனோரமா, சத்தியப்ரியா, நாசர், வி.கே.ராமசாமி, இடிச்சபுளி செல்வராஜ்... அப்புறம் பார்த்திபனுடன் நடிக்கும் அந்தச் சிறுவன். அவ்வளவுதான் கேரக்டர்கள். அவ்வளவு பேரையும் அள்ளிக்கொண்டுபோய்விடும் திரைக்கதை!

சத்தியப்ரியாவின் விபச்சார விடுதியை போலீசில் மாட்டிவிடுவார் சீதா. இதில் ஆத்திரமான அவர், அவளுக்குக் கல்யாணம் நடக்கக்கூடாது; சாந்திமுகூர்த்தம்தான் நடக்கணும் என்று பார்த்திபனிடம் காசு கொடுத்து அனுப்புவார். விடிந்தால் கல்யாணம். ஆனால் கற்பழிக்கப்படுவார். அலட்டிக்காமல் போய்க்கொண்டே இருப்பார் பார்த்திபன்.

விஷயம் தெரிந்துவிடும். டாக்டரான மாப்பிள்ளை, பரவாயில்லை, ஏற்றுக்கொள்கிறேன்’ என்பார். அதுதான் புது உத்தி. புதிய கேரக்டரைஸேஷன். வேண்டாம் என்று மறுத்துவிடுவார் சீதா. இதுவும் புதுசுதான்.

ஒரு தெருவின் இடிந்த கட்டடத்துக்கு நடுவே குடியிருப்பார் பார்த்திபன். இவரின் எதிர்வீட்டில் உள்ள மனோரமாவின் வீட்டில் அடைக்கலமாவார் சீதா. அங்கிருந்துகொண்டு, பார்த்திபனை வழிக்குக் கொண்டுவருவதும் வழிக்குத் துணையாக வருவதும் வழியாகவே அமைவதும் என அடுத்தடுத்ததெல்லாம் புலிப்பாய்ச்சல் ரகம்தான்.

பரவாயில்லை ஏற்றுக்கொள்கிறேன் என்று சீதாவை மாப்பிள்ளை சொல்லுவார். ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் கதையில், யாரோ ஒருவனால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் அம்மா, ‘உனக்கும் ஒண்ணும் இல்ல, தீட்டுக் கழிச்சாச்சு’ என்று குடம்குடமாய் தலையில் தண்ணீர் ஊற்றுவாள். கெடுத்தவனையே தேடிப்போய் அவனுடன் இருக்கிற கதை. ஏற்கெனவே சிறை படத்தில் ரவுடி ராஜேஷை, பிராமணப் பெண்மணி லட்சுமி கெடுத்தாய் அல்லவா, வாழ்க்கை கொடு என்று போய் நிற்பார். ஆனால் இதையெல்லாம் தாண்டி, திரைக்கதை உத்தியாலும் பளிச்பளீர் வசனங்களாலும் இன்னும் இன்னும் நகாசு பண்ணியிருப்பார் இயக்குநர்.

அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஜப்பானியர் போல் குனிந்து, சல்யூட் வைக்கும் சீன், பாம்புப்புற்றுக்கு வைத்த முட்டையைச் சாப்பிடுகிற சீன், தபால்காரரை வலியக் கூப்பிட்டு, ‘ஒண்ணு லெட்டர் போடு, இல்லேன்னா மணியார்டர் பண்ணு’ என்று கலாய்க்கிற சீன், ‘நாந்தாண்டா உன் அப்பா’ என்று சொல்லச் சொல்லி ஏற்றிவிட, பார்த்திபனிடம் சொல்லி, அடி வாங்குகிற காட்சி, குழந்தையைக் குப்பைத்தொட்டியில் வீசும் பெண்ணை, அடித்து உதைத்து, ‘நீங்க பாட்டுக்கு குழந்தையைப் பெத்துட்டு, வீசிட்டுப் போயிருவீங்க. அவன் தறுதலையா, அனாதையா, அம்மா பசிக்குது ஐயா பசிக்குதுன்னு ரோட்ல இருக்கணுமா. அதான் நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்னு கூவுறானே. காதுல விழலை’ என்று வெடித்துக் கதறிக் கலங்கும் காட்சி என பார்த்திப அலப்பறைகள், சிரிக்கவும் கலங்கவும் வைப்பவை.

ஒருவழியாய், சீதாவை ஏற்றுக்கொள்வார் பார்த்திபன். ஆனாலும் மனமே இல்லை அவருக்கு. மனைவிக்கு பிரியாணி வாங்கிவருவார். அந்தப் பொட்டலத்தை நீட்டுவார். சீதாவும் கைநீட்டுவார். அவர் கொடுக்க கொடுக்க, அப்படியே சீதா கையை இறக்கிக்கொண்டே வருவார். அவரும் கையை இறக்கிக்கொண்டே வருவார். யாருக்கும் பணியாதவன், அங்கே பணிகிறான், இறங்கி, இரங்கி வருகிறான் என்பதை அழகியலாய் உணர்த்தியிருப்பார்.

‘என்னய்யா, காந்தி படம்லாம் வைச்சிருக்கே?’ என்று சீதா கேட்பார். ‘இவரு யாரு என்னன்னு தெரியாது. இவர் படத்தை வைச்சு, மாலையெல்லாம் போட்டு, கொடியேத்தி, மிட்டாய் கொடுத்தாங்க. எல்லாம் முடிஞ்சு பாத்தா, இவர் மட்டும் தனியா நின்னாரு. யாருன்னு கேட்டேன். காந்தித்தாத்தான்னாங்க. சரி நமக்குத்தான் அப்பாவும் இல்ல, அம்மாவும் இல்ல. தாத்தாவாவது இருக்கட்டுமேனு வைச்சிக்கிட்டேன்’ என்பார். போகிறபோக்கிலான காட்சிதான். ஆனால் அரசியல், சமூகக் கோபத்தையும் பொளேர் செய்திருப்பார் பார்த்திபன்.

கூரையே இல்லாத வீடு. சீதா குளிப்பதைப் பார்த்து ரசிப்பார்கள். கடுப்பாகி, உணர்ந்து. மறைப்பு ரெடி பண்ணுவார். பொறுப்பே இல்லாமல், எவர் குறித்தும் கவலையேபடாதவர், கொஞ்சம் கொஞ்சமாக மாறுவார்.

உணவு இரண்டுபேருக்கும் இருக்காது. தெரிந்துகொண்ட பார்த்திபன், என்ன சமைச்சிருக்கே என்று சத்தம் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட, ‘புருஷன் சாப்பிடல. நாமளும் சாப்பிடவேணாம்’ என்று நாய்க்கு சீதா உணவளிக்கும் காட்சி... குபுக்கென்று கண்ணீர் வரவைத்துவிடும்.

‘இதுல பணம் இருக்கு. உன் வீட்ல இருக்கிற பொண்ணைக் கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போ’ என்று நாசர் சொல்ல, அந்தப் பணத்துடன் ஒருரூபாய் சேர்த்து, உம்பொண்டாட்டியை நான் சொல்ற இடத்துக்குக் கூட்டிட்டுவா என்று மடக்கிப் போட, அவ என் பொண்டாட்டின்னு சொல்றேன்ல... என்று கடுப்பாகிக் கிளம்புவார். கைத்தட்டலில் தியேட்டர் அதிரும்.

இன்னொரு முறை, நீ என்னை வாடிபோடின்னு கூப்பிடேன்னு சீதா சொல்லுவார். ‘வாடின்னு வேணாக் கூப்பிடுறேன். போடின்னு சொல்லமாட்டேன். நீ போயிட்டா நான் அவ்ளோதான்’ என்று அவரும் அழுது, சீதாவையும் அழச் செய்து, நம்மையும் அழவைத்துவிடுவார். கனமான, அந்த ரவுடி கேரக்டரின் பாசத்தையும் உணர்த்துகிற காட்சி அது.

சட்டைப் பட்டனை அறுத்துவிட்டுக்கொண்டு, சட்டையைக் கழற்றமாட்டேன். அப்படியே தைச்சுக்கொடு என்று ரொமான்ஸ் செய்யும் காட்சி, கவிதை. உனக்கு ஒண்ணுமே தெரியலய்யா. கழுத்துக்குப் பக்கத்துல இருக்கிற பட்டனை அறுத்துட்டு, அங்கே தைக்கச் சொல்லியிருந்தா, இன்னும் நெருக்கமா வந்து தைப்பேன்னு ஐடியா கொடுப்பார். அள்ளிக்கொண்டு போய்விடும் அந்த ஜோடி.

அந்தத் தெருப்பெண்கள் ஐந்தாறு பேர், சீதா வீட்டுக்கு வந்து, வீட்டில் விசேஷம். அவசியம் வரணும் என்று சொல்லிக் கிளம்ப, திரும்பி...’அண்ணாத்தே... மறக்காம வந்துடணும்’ என்று அந்தப் பெண்கள் சொல்லிச் செல்வார்கள். சட்டென்று இறுக்கமாகி, நெகிழ்ந்துவிடுவார் பார்த்திபன். ஒருகாலத்தில் அந்தப் பெண்களை இவர் கிண்டலடித்ததையும் அவர்கள் திட்டியதையும் நினைத்துப் பார்ப்பார். அன்னிக்கி மனுஷனாக் கூட என்னை மதிக்கலை. நீ வந்ததும்தான் என்னை மனுஷனாவும் அண்ணனாவும் மதிக்கிறாங்க’ என்று சொல்லிக்கொண்டே, மனைவியின் காலில் விழும் கணவன், தமிழ் சமூகத்துக்கும் சினிமாவுக்கும் புதுசுதான். அழுதுகொண்டே கைத்தட்டினார்கள் ரசிகர்கள். பின்னியிருப்பார் பார்த்திபன்.

இப்படி படம் நெடுக... பூ தூவுவது போல் காட்சிகளைத் தூவியிருப்பார். பன்னீர் தெளிப்பது போல் வசனங்களைத் தந்திருப்பார். நடிப்பில் சீதா மிரட்டியிருப்பார். மிரட்டலான ரவுடி பார்த்திபன், மனசுக்கு நெருக்கமான நண்பனாகிவிடுவார்.

யாரைப் பத்தியும் இவனுக்குக் கவலையில்ல, அப்பன் யாரு அம்மா யாரு நானும் பாக்கல, பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டுப் பாடலாம் என்று பாட்டுகள் அனைத்தும் எல்லோருக்கும் பிடிக்கும். சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். விவேக்சித்ரா சுந்தரம் படத்தைத் தயாரித்திருந்தார். மனோரமாவும் விகே.ராமசாமியும் தங்களின் முத்திரையை சரியாகவேப் பதித்திருப்பார்கள். நாசரின் வில்லத்தனம் அமர்க்களம். 

வாழ்க்கையையே மாற்றிய, திருத்திய, மனைவி போய்விட, தன் மொத்தக் கோபத்தையும் ஆவேசத்தையும் கொண்டு அவர்களை அழிக்காமல், உன்னக் கொன்னு நான் ஜெயிலுக்குப் போய், என்னைப் போலவே என் குழந்தையும் அனாதையா வளரக்கூடாதுன்னு நெத்தியடி மெசேஸோடு படத்தை புதிய பாதையில் அழைத்துக்கொண்டு செல்வார். கூடவே, நம்மையும் நம் சிந்தனைகளையும்!

நம்மை வலிக்க வலிக்க கரவொலி செய்யச் செய்த பார்த்திபனுக்கு நல்ல தண்டனை கிடைத்தது. ஆமாம்... பூங்கொத்துகளும் கைகுலுக்கல்களும் விருதுகளும் கேடயங்களும் ... பார்த்திபனின் கைகள் வலிக்க வலிக்க, கிடைத்துக் கொண்டே இருந்தன!

http://www.kamadenu.in/news/cinema/3045-puthiyapadhai-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

பராசக்தி - அப்பவே அப்படி கதை


 

 

parasakthi-appave-appadi-kadhai

 

நாத்திகத்தைப் பேசிய காலம் அது. எங்கெல்லாம் பேச முடியுமோ, எப்போதெல்லாம் பேச முடியுமோ... அப்போதெல்லாம் நாத்திகத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, ஆத்திகத்தின் உள்ளடிவேலைகளை வெளியே பறையடித்துத் தெரிவித்து வந்த காலகட்டம். அப்படியான அறைகூவலுக்கு அட்டகாசமாய் ஓர் மேடை கிடைத்தது. அல்லது அந்த மேடை மிக அருமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அது... சினிமா மேடை. அந்தப் படம்... பராசக்தி!

அதற்கு முன்பு வரை படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவை சுதந்திரத்தையும் தேசீயத்தையும் உணர்த்துகிற படங்களாக இருந்தன. ஆனால், இங்கே... இந்த பராசக்தியில், திராவிடம் ஓங்கி ஒலிக்க்கப்பட்டது. ‘வாழ்க வாழ்கவே... எங்கள் திராவிட நாடு வாழ்க வாழ்கவே’ என்று டைட்டில் முடிந்ததும் வருகிற முதல் பாடலே நிமிர்ந்து உட்காரச் செய்திருக்கும், ரசிகர்களை! பிறகு, நிமிர்ந்து நின்றார்கள் தமிழர்கள்!

 

கோயிலையும் கோயிலில் நடக்கிற ஊழல்களையும் அர்ச்சகரின் அத்துமீறல்களையும் ஆன்மிகம் பேசுகிறவரின் எல்லைமீறல்களையும் பொளேர் பொளேர் என முகத்தில் அறைந்து சொல்லும் இந்தப் படத்திற்கு, பராசக்தி என்று பெயர் வைத்து, ஆன்மிகக் கூட்டத்தை உள்ளே இழுத்ததுதான் முதல் வெற்றி.

ஆனால் இப்படியொரு வெற்றி வரும் என்று தயாரிப்புத் தரப்பில் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் இந்தப் படம் என்னவோ செய்யப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்தார்கள். அதற்குக் காரணம்... குத்தீட்டி வசனங்கள். அந்த குத்தீட்டியின் முனையில் இன்னும் கூர் செய்யப்பட்ட விதமாக ஏற்ற இறக்கத்துடன் கர்ஜித்து ஓலமிட்டு உலுக்கியெடுத்த குரல். இரண்டும் கைசேர்ந்து, இரண்டறக் கலந்து, மும்மடங்கு வசூல் சாதனை செய்து, நாலாதிசையெங்கும் படம் குறித்த பேச்சு எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இதுவும் அப்போதைய ஆகப்பெரும் சாதனைதான்!

சீனப்போர் நடந்த காலம். பர்மாவின் ரங்கூனில் அண்ணன்கள் இருக்க, அப்பாவும் தங்கையும் மதுரையில் இருக்க, அவளின் திருமணத்திற்குக் கூட குடும்பமாகக் கிளம்பி வரமுடியாத நிலைமை. எங்கோ நடக்கிற ஓர் விஷயம், எங்கெங்கோ பட்டு, அதன் எதிரொலியாக யாருக்கெல்லாமோ, என்னவெல்லாமோ நடக்கிற சமூக அவலத்தை அப்படியே தோலுரித்துக் காட்டில் முதுகுத்தோலில் சூட்டை இழுத்த பராசக்தி... சக்தி மிக்க சினிமாக்களில் தலையாயது என்றுதான் சொல்லவேண்டும்.

’கடல் தண்ணீர் ஏன் உப்புக்கரிக்கிறது தெரியுமா? இங்கிருந்து அயல்நாடு சென்றவர்கள், எப்போது தாய்நாடு திரும்புவோம் என்று அழுது அழுது அந்தக் கண்ணீரால் கடல் நீர் உப்புக்கரிக்கிறது’ என்றொரு வசனம்.

சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் என அண்ணன் தம்பிகள். ‘கப்பல்ல எத்தனை டிக்கெட் கேட்டீங்க... நாலு சார்... அவ்ளோ கிடைக்காதே. ப்ளீஸ் சார். 300 சீட்தானே இருக்கு. ப்ளீஸ் சார். குடும்பத்துக்கு ஒரு டிக்கெட்தான் தரமுடியும். ப்ளீஸ் சார். ‘பெரிய பாரீஸ்டர். ஆனா வார்த்தைக்கு வார்த்தை எத்தனை ப்ளீஸ்’ இதெல்லாம் அங்கங்கே, வித்தக வசனங்களால் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற காட்சிகள். அதாவது சினிமா பாஷையில் சொன்னால், இதெல்லாம் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் பின்னாடி!

தங்கைக்கு சிறப்பாக நடக்கிறது கல்யாணம். நல்ல கணவன். அன்பான அப்பா. ஆனால் அண்ணன்கள் ரங்கூனில். திரைக்கதையை கனகச்சிதமாக நகர்த்திக்கொண்டே போவதெல்லாம் அசாத்தியத் திறமை. ஒருபக்கம் ரங்கூனில் இருந்து அகதியாய் வரும் அண்ணன்களும் அண்ணியும். இன்னொரு பக்கம் குணசேகரன் சொந்த தேசத்தில் பெண்ணொருத்தியின் வலையில் சிக்கி, பணத்தையெல்லாம் இழந்து பைத்திய முகமூடி போட்டுக்கொள்ள, குழந்தையைப் பெற்றெடுத்த கையுடன் விபத்தில் கணவனையும் அந்த அதிர்ச்சியில் தந்தையையும் கல்யாணக் கடனால் வீட்டையும் இழந்து தங்கை இட்லிக் கடை வைக்க... மும்முனையில் இருந்தும் வாழ்வதற்கான யுத்தங்களையும் கற்புடனும் உண்மையுடனும் நேர்மையுடன் வாழ இயலாச் சோக அவலங்களையும் சொல்லிக்கொண்டே போகிற துணிச்சல், அந்தக் காலத்தில் புதுசுதான்!

தெருமுனைல எனக்கொரு இடம் இருக்கே. அதுல ஒரு இட்லிக்கடை வைச்சுக்கோ. தமிழ்நாட்டில், தாலி அறுத்தவர்களுக்கு இட்லிக்கடைதானே தாசில் உத்தியோகம். தெருவில் தூங்கும் குணசேகரனை போலீஸ்காரர் தட்டி எழுப்புவார். ஏய் யாருடா நீ. என்ன முழிக்கிறே என்பார். தூங்கறவனை எழுப்பினா அவன் முழிக்காம என்ன செய்வான். நீ பிக்பாக்கெட்தானே. நான் எம்ட்டி பாக்கெட் என்று சுளீர் வசனங்களா, குபீர் வசனங்களா என்று புரியாமலேயே கைத்தட்டிச் சிரித்தார்கள் ரசிகப்பெருமக்கள்.

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஆகச்சிறந்த கொடை... பொக்கிஷம்... டிரெண்ட் செட்டிங் சினிமா... பராசக்தி. இந்தப் படத்தின் மூலமாக தமிழினத்தலைவர் என்று போற்றும் அளவுக்கு கலைஞர் கிடைத்தார். அவரின் புத்திக்கூர்மையால் விளைந்த கூர்மையான வசனங்கள் படத்தின் வெற்றிக்கு வித்திட்டன. அடுத்தது... குணசேகரன். அந்த ஒல்லி உடம்பும் உருட்டுவிழியுமாக, சிவாஜிகணேசன் பின்னியிருப்பார். இதுதான் அவருக்கு முதல் படம்.

இதற்குள்ளும் இருக்கிறது சுவாரஸ்யம். பெருமாள் முதலியார் எனும் தயாரிப்பாளர். நேஷனல் பிக்சர்ஸ் என்பது நிறுவனப் பெயர். நாடகத்தில் பார்த்த சிவாஜிகணேசனை ஒப்பந்தம் செய்து ஷூட்டிங் நடந்துகொண்டிருக்க, ஒருநாள், படத்துக்கு பைனான்ஸ் தயாரிப்பாளரான ஏவி.எம். மெய்யப்பச் செட்டியார் வர, வெடவெடவென இருக்கிற சிவாஜியைப் பார்த்ததும் வெலவெலத்துப் போனார். ’யாரு அந்தப் பையன். அந்தப் பையனுக்கு பணம் கொடுத்து செட்டில் பண்ணி அனுப்பிச்சிருங்க. ரொம்ப ஒல்லியா இருக்கான். டி.ஆர்.மகாலிங்கத்தைப் போடுங்க’ என்று சொல்ல, அதிர்ந்து போனார் சிவாஜி. கலைஞரும்தான். பிறகு பெருமாள் முதலியார் அண்ணாவிடம் சொல்லி, கருத்து கேட்க, ‘இந்தப் பையனைப் போடுங்க. மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுப்பான்’ என்று உறுதி சொல்ல, மாறாத உறுதியுடன் சிவாஜியையே நடிக்க வைத்தார் பெருமாள் முதலியார்.

இங்கேயும் இன்னொரு கொசுறுத் தகவல். தன் வாழ்க்கைக்கு வித்திட்ட பெருமாள் முதலியாருக்கு நன்றி சொல்லும் விதமாக, ஒவ்வொரு பொங்கலுக்கும் பெருமாள் முதலியார் வீட்டுக்குச் சென்று, அவர் குடும்பத்தாருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி, குடும்பத்துடன் நமஸ்கரித்து, நன்றி சொல்லிவந்தார் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.

ஓ... ரசிக்கும் சீமானே, ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசுகாரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே, முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே, காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே, கா கா கா..., புதுப்பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே... என்று பாடல்களெல்லாம் ஹிட்டடித்தன. சுதர்சனத்தின் இசை, சோகத்தையும் யுத்தச் சத்த பயங்கரங்களையும் பின்னணியில் கொண்டுவந்த விதம் பாராட்டப்பட்டது.

1952ம் ஆண்டு வெளியான படம் பராசக்தி. ஒரு தீபாவளித் திருநாளில் ரீலிசானதாகப் படித்த நினைவு. படத்தில் நடித்த பலருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைந்தது. திறமைகளை வெளிச்சமிட்டுக் காட்டியதன் எதிரொலி... எதிரொளி இது!

சிவாஜிகணேசன், சகஸ்ரநாமம், எஸ்.எஸ்.ஆர்., ஸ்ரீரஞ்சனி, பண்டரிபாய், வி.கே.ராமசாமி என மிகச்சில கேரக்டர்களைக் கொண்டு, கதையாலும் (மூலக்கதை: எம்.எஸ்.பாலசுந்தரம்), திரைக்கதை வசனத்தாலும் ஆகச்சிறந்த நடிப்பாலும் மக்களின் மனங்களில் இன்றைக்கும் நிற்கிறாள் பராசக்தி. நெருப்புப்பொறியென தெறித்து விழுந்த வசனங்கள்... எங்கே திரையில் இருந்து அமர்ந்திருக்கும் இடத்துக்கு வந்து விழுமோ என நினைக்கும் அளவுக்கு, சூடு கிளப்பின கலைஞரின் வசனக்கங்குகள்.  

கால்களை இழந்த எஸ்.எஸ்.ஆர். பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து சோஷலிஸம் பேசும் காட்சிகள் அபாரம். பெண்ணைத் துரத்தித் துரத்தி வருகிற காமுகக் கூட்டத்தின் ஆணாதிக்க உலகை, அப்போதே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் விதமும் அற்புதம்.

கோயிலின் சந்நிதிக்குள் நடந்த அத்துமீறலும் எல்லைமீறலும் இப்போது நடந்ததை, வைரலாகப் பார்த்தோம். ஆனால் அன்றைக்கே கோயிலுக்குள் பூசாரி செய்யும் லீலைகள், பொளேர் ரகம்.

‘என்ன... அன்னையா பேசுவது?’ முட்டாள்... அம்பாள் எந்தக்காலத்திலடா பேசினாள்?

கோயில் கூடாது என்று சொல்லவில்லை. அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதே என் வருத்தம்.

நீதிபதியாக கவியரசு கண்ணதாசன் அமர்ந்திருக்க, ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்று அவருக்கு முன்னே சிவாஜிகணேசன், பேசிய ஏற்ற இறக்க மாடுலேஷன் வசனங்களைக் கேட்டுத்தான் ரீப்பீடட் ஆடியன்ஸாக வந்து, பிரமாண்ட வெற்றியை வழங்கினார்கள் ரசிகர்கள். அதுமட்டுமா? நடிக்கத் தெரியுமா என்று கேட்டால் சிவாஜியைப் போலவும் வசனம் பேசு பாக்கலாம் என்றால், பராசக்தியில் கலைஞரின் வசனத்தையும் அதை சிவாஜி பேசுவதையும் பேசிக்காட்டி, நடித்துக் காட்டி, நடிப்பு சான்ஸ் வாங்கிய நடிகர்கள் பலர் உண்டு.

52ம் ஆண்டு வந்த படம். கிட்டத்தட்ட 66 வருடங்கள் கழித்தும் பராசக்தி, மக்கள் மனங்களில் அப்படியே நிற்கிறது... காரணம்... கலைஞரின் சக்தி மிக்க எழுத்து! இந்த எழுத்து செய்த மாயம் பராசக்தி. அந்த பராசக்தி எழுத்துகள் செய்த மாயம்... சினிமாவிலும் அரசியலிலும் ஒரேசமயத்தில் அடுத்தடுத்து முன்னேறினார் கலைஞர் மு.கருணாநிதி. ஆக, திராவிட ஆட்சி தமிழகத்தில் மலருவதற்கான விதை... பராசக்தி!

http://www.kamadenu.in/news/cinema/3136-parasakthi-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

குணா - அப்பவே அப்படி கதை


 

 

gunaa-appave-appadi-kadhai

 

 
 

வசூல் குவிப்பதைக் கொண்டும் மனதில் நிற்பதைக் கொண்டும் என வெற்றிப் படங்கள் குறித்து பல கணக்குகள் உண்டு இங்கே. ஒன்றுமே இல்லாத படங்கள், ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதும் இங்கு நடந்திருக்கிறது. ‘படம் நல்லாத்தானே இருக்கு. ஏன் ஓடல’ என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் தலையைப் பிய்த்துக் கொண்டது மட்டுமின்றி, ரசிகர்களே குழம்பிப் போனதும் நடந்திருக்கிறது. இப்படியான எல்லாக் கேள்விகளும் கொண்டு, இன்றைக்கும் மக்களின் மனதில் நிற்கிறான்... குணா!

படம் ஓடுதோ ஓடலியோ... அது அவரவர் கவலை. பார்த்த நமக்கு படம் திருப்தியா. இதுவே பலரின் சிந்தனை. இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும். கமல் படத்துக்கு எப்போதுமே ஒரு ராசி உண்டு என்பார்கள். அவரின் சில படங்கள், ரிலீசாகும் போது, கொண்டாடப்படாமல், பிறகு சில வருடங்கள் கழித்து, ‘ஆஹா ஓஹோ’ என்று கொண்டாடித் தீர்ப்பார்கள். டிவியில் எப்போது போட்டாலும் டைட்டில் தொடங்கி சுபம் கார்டு போடுகிற வரை பார்த்துவிடுவார்கள். ‘இந்த மைக்கேல் மதன காமராஜன் போட்டு ரொம்ப காலமாச்சு. அதைப் போட்டா தேவலை. போடவே மாட்டேங்கிறான்’ என்று சொல்லி பேச்சைத் தொடங்கி, படம் குறித்து அரைமணி நேரம் பேசுவார்கள். குணாவுக்கும் இதுவே நிகழ்ந்தது. இப்படித்தான் பேசிப்பேசி இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆந்திரத்தின் அந்த மலையையொட்டிய இடுக்கு இடுக்கான குறுக்குச் சந்துகளில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து, ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கும் கமலின் முதுகுக்குப் பின்னிருக்கும் கேமிராப் பார்வையில் இருந்து கதையும் படமும் தொடங்கும்.

மிக மோசமான தகப்பன், அதைவிட மோசமான தொழில் செய்யும் அம்மா, அந்தக் கட்டமைப்பில் இருந்து, கட்டவிழ்க்கப்பட்ட ஒழுக்க மீறல்களுக்குள்ளிருந்து வளருகிற பையனின் மனசும் அவனின் குழப்பங்களும் இதெல்லாம் தப்பு என்கிற நினைப்பும் அந்தத் தப்புக்கு கடவுளைச் சரணடைவதே கதி என்கிற வேண்டுதலும் எனக் கலவையாக இருக்கிறான் கதாநாயகன் குணா.

பாவச்சகதியில் சிக்கிக்கொண்டிருக்கிற நம்மை ஒரு தேவதை மீட்க வருவாள், அவள் உமையவள் என்றும் அப்படி உமையவளாய் அவளிருக்க, நாம்தான் சிவன் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிற அதீத சிந்தனைகளுடன் இருக்கிற குணா, மனநலம் பாதிக்கப்பட்டவனாகவே பார்க்கப்படுகிறான். ‘இங்கெல்லாம் ஒரே அசிங்கம்’ என்கிறான். ‘அபிராமி வருவா. வந்ததும் போயிருவேன்’ என்கிறான். ‘இது என் மூஞ்சி இல்ல’ என்று புலம்புகிறான். ‘என் அப்பன் மூஞ்சி, என் மூஞ்சில என் அப்பன், மூஞ்சியை ஒட்டிட்டான்’ என்று பொருமிக் கதறுகிறான்.

அந்தக் கதறலும் அவனுடைய சிந்தனைகளும் நம்மையும் தாக்குகின்றன. திருட்டுக்கு இவனை சித்தப்பா பயன்படுத்திக் கொள்கிறார். வேறு சில பிரச்சினைகள் என்றால், அம்மாவே இவனைக் கொண்டு பயன்படுத்தி தப்பிக்கிறாள்.

அப்படியொரு சமயத்தில், நாயகியைப் பார்க்கிறான். ‘ஒருநாள் வருவாடா. பப்பப்பப்பப்பர பப்பப்பப்பப்பரப்பானு முழங்க வருவா’ என்று சித்தப்பா சொல்ல, திரும்பிப் பார்த்தால் அப்படியான வாத்தியங்கள் முழங்க, கம்பீரமாகவும் ஒய்யாரமாகவும் அழகாகவும் ஒயிலாகவும் தெய்வாம்சத்துடனும் வருபவளை... தன்னை ரட்சிக்க வந்த தேவதையாக, தெய்வமாக, உமையவளாக, அபிராமியாகவே பார்க்கிறான்.

கோயிலில் பணம், நகை கொள்ளை, தப்பித்தல் எனும் களேபரங்களுக்கு மத்தியில், நாயகியைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறான் குணா. பிறகு, வீட்டிலும் சிக்கல், பிரச்சினை என்றதும் அவளை அழைத்துக்கொண்டு, தமிழகத்தின் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்துவிடுகிறான் என அப்நார்மல் கதை பிடித்து, அதை நார்மல் உணர்வுகள் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் கமல்.

பெண்களை வைத்து ‘தொழில்’ நடத்தும் வரலக்ஷ்மி, அந்தக் கூட்டத்தில் உள்ள ரோஸி ரேகா, சித்தப்பா ஜனகராஜ், ஒப்புக்கு டாக்டர் காகா ராதாகிருஷ்ணன், மனநல டாக்டர் கிரீஷ் கர்னாட், தமிழுக்கு புதுவில்லனாக சரத் சக்சேனா, அவருக்கு முதலாளியாய்... நாயகி ரோஷிணியாய்... ரோஷிணி.

மெல்ல மெல்ல... சிலபல காட்சிகளுக்குப் பிறகு கமலின் குணசேகரன் என்கிற குணாவின் கேரக்டருக்குள் நாம் ஒண்டிக்கொள்வோம். உற்று கவனித்து லயிக்கத் தொடங்கிவிடுவோம். பேச்சு, சிரிப்பு, கோபம், அழுகை, ஆத்திரம், ஆவேசம் என எல்லா உணர்வுகளையும் புதுமாதிரிக் காட்டி, அசுரத்தனம் பண்ணியிருப்பார் கமல்.

அந்த ரோஷிணியின் கண்களும் அவருக்குக் குரல் கொடுத்த நடிகை சரிதாவும் மறக்கவே முடியாதவர்கள். அந்தக் கேரக்டரின் குரலாகவே சரிதாவின் குரல் முகம் காட்டாமல் நடித்திருக்கும்.

‘இந்த மாத்திரையை முழுங்கு’ ‘இதைச் சாப்பிட்டா அபிராமி வருவாளா’, ‘சாப்பிடு தூக்கம் வரும்’, தூக்கம் வந்தா கனவு வரும், கனவு வந்தா அதுல அபிராமி வருவாளா’, தூங்கு..., ‘காத்தே வரல...’ இது சத்தம்தான் வரும். வராது... வந்துதே... அன்னிக்கி... எப்படித் தெரியுமா...’வரும்வரும்வரும்வரும்வரும்...’ என்று கையை மின்விசிறி றெக்கைகள் போல் சுழற்றிக் கொண்டே பேசும் கமலை, அரவணைத்து அணைத்து ஆசுவாசப்படுத்துவார் ரேகா. கவிதை மாதிரியிருக்கும் காட்சி இது. அப்படியான காட்சிகளில் இதுவும் ஒன்று!

’எரகட்டா டாக்டர் சொல்லிட்டாரு. எனக்கு பைத்தியமில்லைன்னு’ என்று கொஞ்சம் லூசுத்தனமாய் சொல்லுவதுதான் கமல் டச். வணக்கம் சொல்லும் போது, கமலின் கை தெரியாது. ஜிப்பா மறைத்துவிடும். ‘சித்தப்பா ஜிப்பா. பெருசா இருக்கு’ என்பார். நாடகம் சொதப்பலானதும் திட்டுவார் அம்மா வரலக்ஷ்மி. ‘நீ என்னை ஆஸ்பத்திரிலேருந்து கூட்டிட்டு வந்து அவமானப்படுத்துறே. ஒரு பேப்பரும் பேனாவும் கொடு, 500 கையெழுத்துப் போடுறேன்’ என்பார். தியேட்டரே சிரித்து ரசித்துக் கைத்தட்டும்.

படத்தின் பெரும் பலம் கமல். பக்கபலம் எழுத்தாளர் பாலகுமாரன். படத்தின் வசனங்கள் அனைத்தையும் இன்றைக்கும் சிலாகித்துச் சொல்லுகிற ரசிகர்கள் எக்கச்சக்கம்!

கடத்தி வரும் வழியில், தண்ணீர் பிடிக்க வண்டியை நிறுத்துவார் கமல். ‘காவிரி பாயும் கன்னித்தமிழ்நாடு, கலைகளுக்கெல்லாம் தாய்வீடு’ என்று பாடிக்கொண்டே போவார். அதற்குள் காரை எடுத்துக்கொண்டு கிளம்புவார் ரோஷிணி. ‘வழிவிடு, இல்லேன்னா ஏத்திடுவேன்’ என்பார். அதெப்படி என்பார் கமல். விருட்டென்று கார் வந்து மோத, அது மோதி கர்ணகொடூரமாக கமல் விழ, என்னாச்சு எனும் பதட்டத்துடன் ரோஷிணி நெருங்கி வர, பிரமாண்டமாய்ச் சிரித்தபடி, ‘இதே வேற எவனாவது செஞ்சிருந்தா அவன் செத்துருப்பான். வேற யார்கிட்டயாவது செஞ்சிருந்தா அவனும் செத்திருப்பான். நான் நானா இருந்ததால சாகல; நீ நீயா இருந்ததால சாகல. விதி... எழுதிவைக்கப்பட்ட விதி. நமக்கு சாவு கிடையாது’ என்பார்.

இப்ப போட்டீங்களே என்ன ஊசி. பெண்டதால் என்பார் டாக்டர். அந்த மலை ஃபுல்லா பெண்டதால் வாசனைதான் என்பார். ‘டாக்டர் நாக்கு தடிச்சிருக்கா பாருங்க’ என்று கேட்பது, குழந்தைமையை உணர்த்தும் காட்சி. பின்னர், அம்மாவிடம் ‘லுலுலுலுலுவாவா’ ‘லுலுலுலுலுலுவா வா...’ என்று அழுதுகொண்டே சொல்லும் போது, அப்ளாஸ் பறக்கும்.

கொடைக்கானல் மலை. அங்கே இடிந்த தேவாலயம். அதில் தங்குவார்கள். அங்கிருக்கும் குருவி பறவைகள் சத்தமிட்டு அலறும். ‘பயப்படாதே. நாங்கதான். அதுவும் பயப்படுது, உன்ன மாதிரி’ என்பார். அவள் வந்த சந்தோஷத்தில் ஷேவிங் செய்து கொள்வார். ’குணா... ஜாக்கிரதை’ என்பார் ரோஷிணி. அவளையும் அவளின் பின்னே உள்ள ஒளியையும் பார்த்துப் பூரித்தவர், ‘அபிராமி அபிராமி...’ எனப் புலம்புவார். அதையடுத்து, பின்னணியில் கல்யாணம்... கல்யாணம் எனும் சந்திரபாபுவின் பாட்டு ஒலிபரப்பாகும். ‘தொப்பி வாங்கிக்கட்டுமா, கண்ணாடி வாங்கிக்கட்டுமா’ என்று ஒப்புதல் வாங்கி, அதையெல்லாம் வாங்கி அணிந்துகொண்டு வருவார். அந்த அப்பாவித்தனத்துக்குள் கொஞ்சம் மிடுக்கும் காட்டி நடக்கிற நடை, அமர்க்களம்.

படம் முழுக்க ஒரு நாவல் தன்மை இழையோடி வந்துகொண்டே இருக்கும். அதேபோல், தன் எழுத்துகளால், எந்த இடங்களிலெல்லாம் முத்திரை பதிக்க முடியுமோ அங்கெல்லாம் எழுத்துகள் தூவி, நிரவிக்கொண்டே வந்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன்.

‘இந்த கட்டிப்போடுற பிஸ்னஸ்லாம் வேணாம். வேணும்னா ஓட்டிப்போமாட்டேன்னு சத்தியம் பண்ணித் தரேன்னு சொன்னேன். சத்தியம் பெருசா, சங்கிலி பெருசா?’

சர்ச்சில் இருந்து மலைகுகைக்கு ரோஷிணியைத் தூக்கிச் செல்லுவார் கமல். ‘குயிலே... குயிலே... அங்கே ஒரு குருவியை சுட்டுக்கொன்னுட்டாங்க குயிலு’ என்று ஏதோவொரு பறவையிடம் சொல்லுவார். அது சத்தமிடும். உடனே இவர் ‘ஆமாம்’ என்பார்.

‘நானே உன்னை அடிச்சேன். ஆனா நீதான் என்னைக் காப்பாத்தினே. என்ன வேணும் எங்கிட்ட? நானா, இந்த உடம்பா? என் உடம்புவேணுமா. எடுத்துக்கோ’ என்று கமலின் கையை இழுத்து நெஞ்சில் வைத்துக்கொள்வார். ‘அப்படிலாம் பேசக்கூடாது தப்பு’ என்பார் கமல். தியேட்டர் நெகிழ்ந்து கைத்தட்டும்.

‘என்னதான் வேணும்’ என்று கேட்க, ‘கல்யாணம்’ என்பார். ‘தாலி கூட ரெடியா இருக்கு’ என்று தன் கழுத்தில் கட்டிக்கொண்டிருக்கும் தாலியைக் காட்டுவார். ‘சரி கட்டு’ என்பார் ரோஷிணி. ‘பெளர்ணமிக்குத்தான் கட்டணும்’ என்பார். ‘இன்னிக்கிதான் பெளர்ணமி’ என்பார். ‘ம்ஹூம். நாளைக்கிதான். நாளைக்கிதான் பெளர்ணமி’ என்று வானம் பார்த்துச் சொல்லுவார். ‘நிலா ஆகாசத்துலயா இருக்கு. மனசுல இருக்கு. மனசுதான் நிலா. நிறைஞ்சிருக்கு மனசு. கட்டு’ என்பார். அங்கே, காட்சியும் வசனமும் நடிப்பும் இசையும் எனச் சேர்ந்து, காதலின் உன்னதத்தை, உயிர்ப்பை வெகு அழகாக உணர்த்திவிடும்.

இப்படி படம் நெடுக பல கவிதைகள்... காட்சிகள். ’மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல!’ என்கிற அலறல், நம் அடிமனசு வரை சென்று எதிரொலித்து அசைத்துப் போடும். ‘இங்க எல்லாரும் பைத்தியம் குணா. பணப் பைத்தியம், பொம்பளப் பைத்தியம். ஆனா நீ மட்டும்தான் அப்படி இல்ல’ என்று ரோஷிணி சொல்ல, ‘இதத்தான் டாக்டரும் சொல்லுவாரு. குணா, உனக்குப் பைத்தியம் இல்ல, இந்த கணேச ஐயருக்குத்தான் பைத்தியம். அவருக்கு லெட்டர் எழுதணும். நீ சொன்னதை எழுதணும். அதுக்கு முன்னாடி உனக்கு எழுதணும்’ என்று சொல்லிவிட்டு அதன் பிறகு வருகிற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல், காதலின் மேன்மை சொல்லும். அழகை விவரிக்கும். அன்பைப் பரிமாறும்.

ரேகா மலையேறி வந்து, போலீசின் துப்பாக்கியைக் கேட்பார். தரமாட்டார். ரோஷிணி கொடுக்கச் சொல்வார். ‘குடுத்துடலாங்கிறியா. அப்ப இந்தா... எங்களுக்கு துப்பாக்கி வேணாம்.. பாத்து... தானா வெடிக்கும்’னு சொல்லுவார் கமல். ‘ஓ... தாலி கட்டிக்கிற மாதிரி கட்டி, குணாவை நம்ப வைச்சிட்டீங்களா. கீழே இறங்கினதும் தாலியைக் கழட்டிடலாம்’ என்று ரேகா சொல்ல, ‘ஏன் கழட்டணும். நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நான் மிஸஸ் குணா’ என்று ரோஷிணி சொல்ல, ஆடியன்ஸ் அழுகையும் சிரிப்புமாகக் கைத்தட்டுவார்கள். ராட்சதத் தனமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, ‘மிஸஸ் குணா...’ என்று கமல் கத்துகிற காட்சி, கனமாக்கிவிடுகிற அற்புதக் காட்சி.

காரில் ரோஷிணி. ஒரு அடி நகர்ந்தால், அதலபாதாளம். கமல் இறங்கிச் செல்லும்போது, ‘ஏய்.. ஏய்...’ என்று அழைப்பார். திரும்பிப்பார்க்காமல் செல்வார். ‘ஏய்... உன்னத்தான்...’ உம் பேரென்ன’ என்பார். குணாவுக்கு சந்தோஷம் பிடிபடாது. நம் பேரை கேக்கறாளே என்று! வெட்கமும் பெருமிதமுமாக, ‘கு...ணா’ எங்கே சொல்லு என்பார். ‘குணா’ என்று சொல்வார். கேட்ட கிறக்கத்திலேயே செல்வார். இடைவேளை என்று டைட்டில் வரும். இப்படி காட்சிகள் ஒவ்வொன்றிலும் கதையின் அடர்த்தி, வசனத்தின் அழகு, நடிப்பின் மேன்மை என்று பட்டையைக் கிளப்பும். சந்தானபாரதி இயக்கியிருப்பார்.

அப்பன் என்றும் அம்மை என்றும் டைட்டில் பாடலே கதையைச் சொல்லிவிடும். உன்னை நானறிவேன். என்னையன்றி யாரறிவார் பாடல், நாயகனின் குணத்தைச் சொல்லிவிடும். பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க... பாடல், அழகிய காதலை இன்னும் அழகாய்ச் சொல்லிவிடும். கண்மணி அன்போடு பாடல், மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல என்பதை உணர்த்திவிடும். படம் முழுவதும் இசையால் ராஜாங்கம் செய்திருப்பார். அந்தக் காட்சியை இசையின் மூலமாகவே கனப்படுத்தி நமக்குள் கடத்தியிருப்பார். 1992ம் ஆண்டு வெளிவந்தது குணா. 26 வருடங்களாகிவிட்டன. மலையின் அழகு சி.ஹெச்.வேணுவால் அவரின் கேமிராவால் அழகுறக் கடத்தப்பட்டிருக்கும். அந்த குகை, கொடைக்கானலில் இருக்கிறது. குணா குகை என்றே சொல்லப்படுகிறது. குணாவின் வெற்றிகளில் இதுவும் ஒன்று!

அம்மிக்கல்லை எடுத்து நெஞ்சில் அடித்துக்கொள்ளும் காட்சி, ஆஸ்பத்திரியில் சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே பேசிக்கொண்டு, சுவரில் முட்டி சுருண்டு விழும் காட்சி, ’அபிராமி உள்ளே இருக்கு. எழுத்து... வெளில இருக்கு’ என்கிற பொளேர் ரகம் அழகு. கோயிலில் இருந்து வருகிற கார் சேஸிங் காட்சி, ’அப்புறம் ஏன் லட்டு கொடுத்தே? லட்டு கொடுக்கும் போது முத்தம் கொடுத்தேன்ல. பொம்மை ஏன் உன்னை கையக் காட்டுச்சு. அப்பலாம் கண்ணைக் கண்ணைக் காட்டிட்டு பேசிட்டு, இப்ப புடிக்கலேன்னா என்ன அர்த்தம்?’ என்று ரோஷிணி கையில் உள்ள கத்திக்குப் பக்கத்தில் தன் தொண்டையைக் கொண்டு சென்று பேசும் காட்சி, ‘அபிராமி... அபிராமி... என்னை எல்லாரும் அடிக்கிறாங்க அபிராமி’ என்று கதறுவதும், ‘போய்யா... பேசிக்கிட்டிருக்கும் போதே சுடுறே...’ என்று கேட்பதுமாக கமலின் ஆகச்சிறந்த நடிப்புகளின் வேறொரு பரிமாணம்... குணா!

‘இல்ல இல்ல இல்ல... இது பொய்’ என்று சொல்லிவிட்டு, இறந்துவிட்ட ரோஷிணியை அணைத்துக்கொண்டு, ‘புண்ணியம் செய் தனமே ‘ என்று அபிராமி அந்தாதி பாடியபடி, ‘வா...’ என்று அவளைத் தூக்கிக்கொண்டு, குணா மலையில் இருந்து குதிக்கும் போது, உறைந்து உடைந்து நொறுங்கிப் போனார்கள் ரசிகர்கள்.

பாலகுமாரனின் வசனங்கள், இன்றைக்கும் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. படம் பார்த்துவிட்டு, வெளியே வரும்போது, ஏதேனும் வசனங்களைச் சொல்லிப் பேசுவார்கள். அந்த வசனம் என்று ஒருவர் சொல்ல, இந்த வசனம்தான் டாப்பு என்று இன்னொருவர் சொல்லுவார். ஆனால், படம் பார்த்துவிட்டு வந்த அனைவருமே, இப்போது அந்தப் படத்தைப் பார்க்கிற அனைவருமே.. .ஒரேயொரு பேரைத்தான் சொன்னார்கள்; சொல்கிறார்கள்; சொல்லுவார்கள். அந்தப் பெயரே வசனமாகிவிட்டதுதான் எழுத்தாளர் பாலகுமாரனின் வெற்றி. கமல்ஹாசன் மகாகலைஞனின் வெற்றி!

அந்தப் பெயர்... அந்த வசனம்.. ‘அபிராமி... அபிராமி... அபிராமி’!

இந்த அபிராமிதான்... குணாவை காலங்கள் கடந்தும் நம்மால் மறக்காமல் இருக்கமுடிகிறது. இன்னும் இன்னுமாக நேசிக்கவைக்கிறது. 

அபிராமி... அபிராமி!

http://www.kamadenu.in/news/cinema/3203-gunaa-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பில்லா - அப்பவே அப்படி கதை!


 

 

billa-appave-appadi-kadhai

 

 

திரையுலக வாழ்க்கையில், ஒரு சில படங்கள் மிகமிக முக்கியத்துவம் பெற்றுவிடுவது உண்டு. நடிகர்களுக்கோ இயக்குநர்களுக்கோ இசையமைப்பாளர்களுக்கோ அவர்களை அடுத்தகட்டத்துக்கு, அடுத்த உயரத்துக்கு கொண்டுசென்று நிறுத்தும். அங்கே அரியாசனம் போடும். அமரச்சொல்லும். கிரீடம் சூட்டும். மாலை அணிவித்து மரியாதை செய்யும். நடந்து வருவதற்கு ரெட்கார்ப்பெட் விரிக்கும். அடுத்த பயணம் இன்னும் எளிதாகவும் இனிதாகவும் அமைய, வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ரஜினி எனும் ரஜினிகாந்த் எனும் சூப்பர்ஸ்டாருக்கு, அப்படியொரு படங்களில் ஸ்பெஷல்... பில்லா! சொல்லப்போனால், ரஜினியின் முதல் கேங்க்ஸ்டர் படம் இதுதான்!

அபூர்வராகங்கள் தொடங்கி, அவர்கள், மூன்று முடிச்சு என்றெல்லாம் பண்ணிக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு கலர் படம்... ஒரு டான் படம்... கே.பாலாஜி படம்... ஹிந்தியில் அமிதாப் பண்ணிய தமிழ் வெர்ஷன்... என்று பல பெருமைகளைக் கொண்ட படமாக ரஜினியின் ஸ்டைலையெல்லாம் திரட்டிக் காட்டிய படம் பில்லா! 25 வாரங்கள் கடந்து ஓடிய மெகா ஹிட் படம்.

 

80ம் ஆண்டு வெளியானது. கே.பாலாஜி என்றாலே ரீமேக் படங்களைப் பண்ணுவதில் அசகாயசூரர் என்கிற பேருண்டு. சிவாஜியை வைத்தே படங்கள் பண்ணிக்கொண்டிருந்தவருக்கு, கமலும் ரஜினியும் ரொம்பவே கைகொடுத்தார்கள்.

'டான்’ என்ற பெயரில் மிகப்பெரிய ஹிட்டடித்த படம். அமிதாப் கலக்கியிருப்பார். அதை தமிழில் பில்லா என எடுத்தார்கள். ரஜினி, தன் ஸ்டைலிலும் நடிப்பிலும் பட்டையைக் கிளப்பியிருப்பார்.

இன்னொரு விஷயம்... 79களில், ரஜினிக்கு பெரிய மார்க்கெட் இல்லை. சிலபல காரணங்களால், ரஜினியை அணுகவே எல்லோரும் பயந்தார்கள். அப்படி எல்லோரும் தயங்கியவேளையில், கே.பாலாஜிதான் ரஜினியை அழைத்துப் பேசினார். ‘டான்’ கதையைச் சொன்னார். ‘படம் பண்ணுங்க ரஜினி. எனக்கு ‘டான்’ படம் மேலயும் நம்பிக்கை இருக்கு. ரஜினி மேலயும் நம்பிக்கை இருக்கு’ என்றார். எப்படிப் பார்த்தாலும் ரஜினியின் சினிமா வாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் பில்லாவுக்கு தனியிடம் உண்டு. இந்தப் படம் வந்து வெற்றி அடைந்த பிறகுதான், ஏவிஎம் முதலான நிறுவனங்கள் ரஜினியை அணுகின; கதை சொல்லின. தர்மயுத்தம், முரட்டுக்காளை என்றெல்லாம் படங்கள் வரத்தொடங்கின என்பதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

மிகப்பெரிய கடத்தல் தலைவன் பில்லா.போலீசுக்கு தண்ணிகாட்டுகிற ஒவ்வொரு காட்சியும், அத்தனை அழகு. அவ்வளவு நுணுக்கம். ஒருகட்டத்தில், போலீசார் சுட்டுவிட, அடுத்து அந்தக் கூட்டத்தை, எப்படிப் பிடிப்பது, என்ன செய்வது என்பது தெரியாமல் தவிக்கும்போது, போலீஸ் அதிகாரி கே.பாலாஜியின் கண்களில், ராஜா என்கிற ராஜப்பா தென்படுவார். பார்ப்பதற்கு அச்சு அசலாக பில்லா போலவே இருப்பதால், அவரை அழைத்து வந்து, பில்லாவாக்கி, அந்தக் கூட்டத்துக்குள் அனுப்புகிறார்.

அந்தக் கூட்டத்தின் வேலையையும் கூட்டத்தையும் எப்படி மடக்கிப் பிடிக்கிறது போலீஸ், நடுவே பில்லாவாக நடிக்கும் ராஜப்பா மாட்டிக்கொள்ள, எப்படித் தப்பிக்கிறார் என்பதை திடுக் திருப்பங்களும் நகைச்சுவையும் கொஞ்சமே கொஞ்சம் கிளாமரும் கலந்து கொடுத்திருப்பார்கள்.

இண்டர்போல் போலீஸ் ஆபீசர் கோகுல்நாத்தாக மேஜர் சுந்தர்ராஜன், போலீஸ் அதிகாரிகளாக கே.பாலாஜி, ஏவிஎம்.ராஜன், பில்லாவுடன் பிரவீணா, ஆர்.எஸ்.மனோகர், நடுவே கொஞ்சகாலம் இந்தக் கூட்டத்தில் விலகி வந்திருக்கும் தேங்காய் சீனிவாசன், கூட்டத்தில் உள்ள ரஞ்சித், அவனுடைய சகோதரி ஸ்ரீப்ரியா, ராஜப்பா, அவரின் நெருங்கிய தோழியும் சகோதரியுமாக மனோரமா என்று மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம். ஆனால், கதையின் நேர்த்தியும் திரைக்கதையின் தெளிவும் நட்சத்திரப் பங்களிப்புகளும் மிக அழகாகக் கையாளப்பட்டிருக்கும்.

முதல் காட்சியே மிரட்டும். ரஜினி ஒற்றை ஆளாக காரில் வந்து இறங்குவார். மூன்று பேர் நிற்பார்கள். ‘என்ன பில்லா தங்கம் கொண்டாந்துருக்கதானே.’ ’பணம் கொடுத்து வாங்க முடியாது. வீரம் காட்டித்தான் வாங்கணும்’ என்று துப்பாக்கி எடுப்பார்கள். பெட்டியக் கொடு என்பார்கள். தூக்கிப் போடுவார். டம்மென்று வெடிக்கும். டைட்டில் அங்கிருந்து ஆரம்பிக்கும். டைட்டிலிலும் ரஜினியின் விதம்விதமான ஸ்டைல்கள். இவை எல்லாம் சேர்ந்துதான் அவரை மாஸ் ஹீரோவாக்கின!

கூட்டத்தில் உள்ள ஒருவனைச் சுட்டுவிடுவார் பில்லா. எல்லோரும் வந்து கேட்பார்கள். ‘ஒரு சின்சியர் வேலைக்காரன்’ என்பார் மனோகர். ‘இந்த பில்லா தேவையில்லாம புல்லட்டை வேஸ்ட் பண்ணமாட்டான்’ என்பார் ரஜினி. ‘அவனை எனக்குப் பிடிக்கல. முக்கியமா அவனோட ஷூ... சுத்தமாப் பிடிக்கலை’ என்பார். எல்லோருக்கும் குழப்பம். அவனோட வலது ஷூவைக் கழற்றி ஓபன் செய்யச் சொல்வார். அதற்குள் ஒரு பேப்பர். போலீசின் கையாள். இப்படி படம் நெடுகிலும் அதிரிபுதிரியான சரவெடிகள், கொளுத்திக்கொண்டே இருப்பார்கள். வெடித்துக்கொண்டே இருக்கும்.

பில்லாவின் கூட்டத்தில் ஸ்ரீப்ரியா சேருவார். வழக்கம் போல், பாலாஜி படத்தின் நாயகி பெயரான ராதாதான் இவரின் பெயர். அப்படிச் சேர்ந்ததே தன் அண்ணனைக் கொன்ற பில்லாவைப் பழிவாங்குவதற்குத்தான். ஆனால் என்ன, அதற்குள் பில்லா போலீசில் சிக்கி இறந்துவிடுவார். அந்த இடத்துக்குத்தான் ராஜப்பா, வருவார். இவரைக் கொல்ல திட்டமிடுவார் என விறுவிறு சுறுசுறு பரபர என ரஜினியைப் போலவே ரஜினிக்கு ஈடுகொடுத்து தடதடக்கும் திரைக்கதை, மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

எம்.எஸ்.வி.யின் பாடல்கள் மொத்தமும் அமர்க்களம். அப்போது விவிதபாரதியிலும் சிலோன் ரேடியோவிலும் இந்தப் பாடலை ஒலிபரப்பாத நாளே கிடையாது. விரும்பிக் கேட்ட நேயர்களின் அடுத்த பாடல்... என்றதும் ‘மை நேம் இஸ் பில்லா’ என்று ஒலிபரப்பி நிறுத்துவார்கள். பிறகு, பில்லா படத்தில் இருந்து எஸ்.பி.பி. பாடும் பாடல் என்பார்கள். தொடர்ந்து பாட்டு ஒலிபரப்பாகும்.

‘நாட்டுக்குள்ளே எனக்கொரு பேருண்டு,’ ‘இரவும் பகலும் முழுதும்’, ‘நினைத்தாலே இனிக்கும் சுகமே...’ என்கிற எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல், ‘மை நேம் இஸ் பில்லா’ , ‘வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி’ என்று எல்லாப் பாட்டுமே சூப்பர் ஹிட்டு. ஒருபக்கம் எஸ்.பி.,பியும் இன்னொரு புறம் மலேசியா வாசுதேவனும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியம்தான். அந்த கோட்டும்சூட்டும் ரஜினிக்கு தனி அழகு கூட்டித்தரும். வாயில் புகைந்துகொண்டிருக்கும் பைப் கூட ஸ்டைல் காட்டும். ராஜப்பாவாக ஒரு பாடி லாங்வேஜ் காட்டி நெளிந்து வளைந்து அசத்தியிருப்பார். பில்லா மிடுக்குக் காட்டி, மிரட்டியிருப்பார்.

இது பில்லா இல்லை என்று தெரிந்த ஒரே நபர், போலீஸ் அதிகாரி பாலாஜி. அவர் இறந்துவிடவே, போலீஸ் துரத்தும். பில்லா இல்லை ராஜப்பா என்பார். நம்ப மறுக்கும். இன்னொரு பக்கம் பில்லாவின் கூட்டமும் துரத்தும். நல்லவேளையாய், ஸ்ரீப்ரியாவுக்கு உண்மைகள் தெரியவர, காதலும் பிறக்கும். இப்படி எக்ஸ்பிரஸ் வேக திருப்பங்களும் காட்சிகளும் பிரமாண்டங்களும் எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினியின் ஸ்டைல் கலந்த நடிப்பும் என ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்து நிற்கிறான் பில்லா!

பொதுவாகவே கே.பாலாஜியின் படங்கள், ஜனவரி 26ம் தேதி, ஏப்ரல் 14ம் தேதி என ரிலீசாகும். இந்த பில்லா, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீசானதாக நினைவு.

ஸ்ரீப்ரியாவின் நடிப்பு அபாரம். அண்ணனைக் கொன்ற பில்லாவைப் பழிவாங்க நினைப்பதும் அதற்காக அசோகனிடம் கராத்தே முதலான பயிற்சிகளைக் கற்றுக்கொள்வதும் கிளாமரில் மயக்கப் பார்ப்பதும் டிங்டிங் என்று கண்சிமிட்டும் நர்ஸ் வேடமணிந்தும் என எல்லாக் காட்சிகளிலும் நடிப்பில் பின்னியிருப்பார். அந்த வெத்தலயைப் போட்டேனே பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டிருப்பார்.

அப்போது இன்னொன்றும் சொல்லுவார்கள். பில்லா படத்தில் ஸ்ரீப்ரியாவின் கேரக்டரில் ரஜினிக்கு ஜோடியாக யாரை அழைத்தார் பாலாஜி என்பது தெரியுமா? ஆனால் அந்த நடிகை மறுத்துவிட்டார். இதுகுறித்து அவரே சொல்லியிருக்கிறார். ‘எனக்கு பணம் முக்கியம் என்று நினைத்திருந்தாலோ, அப்போது பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட ரஜினியுடன் நடிக்கலாமே என்று ஆசைப்பட்டிருந்தாலோ நான் நடித்திருக்கலாமே. ஆனால் எனக்கு நடிக்க விருப்பமில்லை. மறுத்தேன்’ என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்டவர்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

90களுக்குப் பிறகு, பாட்ஷா மாதிரி இருக்கணும் என்றார்கள். 80களின் இறுதியில் வந்த பில்லா மாதிரி இருக்கணும். சரியான கலவை, இதான் வெற்றி ஃபார்முலா என்று எல்லோருமே சிலாகித்துக் கொண்டாடினார்கள். இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான்... பில்லா; அவன்தான் பில்லா!   

https://www.kamadenu.in/news/cinema/3239-billa-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.