யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

அப்பவே அப்படி கதை!

Recommended Posts

சம்சாரம் அது மின்சாரம் - அப்பவே அப்படி கதை


 

 

samsaram-adhu-minsaram-appave-appadi-kadhai

சம்சாரம் அது மின்சாரம்

 

தோல்வி எப்போதுமே தோல்வியைத் தொக்கிக்கொண்டு இருக்காது. அது வெற்றியை ருசித்தே தீரும் என்றொரு தத்துவம் உண்டு. இதுகுறித்து பிறகு பார்க்கலாம். எண்பதுகளின் சினிமா பொற்காலம் என்பார்கள். பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், டி.ராஜேந்தர், கமல், ரஜினி, இளையராஜா, வைரமுத்து, மோகன், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என்றொரு கூட்டமே அப்போது உண்டு. அந்த வெற்றிக் கூட்டத்தில் ஒருவர்... விசு.

இரண்டெழுத்துக்காரர்தான். ஆனாலும் பலப்பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரர். நாடகத்தில் இருந்து வந்தவர்தான். அதேசமயம் நாடகபாணி படமாக இருந்தாலும் கதாபாத்திரத்தின் மூலம் யதார்த்தம் பேசியவர். கே.பி. எனும் பட்டறையில் இருந்து வந்த விசு, பழைமையையும் மறக்காமல், புதுமையையும் புறந்தள்ளாமல் இரண்டையும் களமாக்கி பேலன்ஸ் செய்து, பேலன்ஸுடன் நின்று ஜெயித்துக் காட்டியவர்.

 

82ம் வருடம் மணல் கயிறு படம்தான் முதல் இயக்கம். அதையடுத்து டெளரி கல்யாணம், புயல் கடந்த பூமி, ராஜதந்திரம், வாய்ச்சொல்லில் வீரனடி, நாணயம் இல்லாத நாணயம், அவள் சுமங்கலிதான் என்று வருடந்தோறும் படங்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார். 86ம் ஆண்டு எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படியான திரைப்படத்தை வழங்கினார். எல்லோரும் என்றால் எல்லா மொழிக்காரர்களும்! அதுதான்... சம்சாரம் அது மின்சாரம். 86ம் ஆண்டு வந்த படம். 32 வருடங்களாகி விட்டன. ஆனாலும் இன்னமும் ஃப்ரெஷ்ஷான ட்ரீட்மெண்ட்டாகவே கொண்டாடப்படுவதுதான் படத்தின் ஆகச்சிறந்த வெற்றி.

ஏவிஎம். சரவணன் விசுவை அழைத்து, படம் பண்ணலாம் என்று சொல்ல, பல கதைகள் சொன்னார். எதுவும் பிடிக்கவில்லை. வேற, வேற, வேற என்று சொல்லிக்கொண்டே வந்தார். அடுத்து இன்னொரு கதையைச் சொன்னார். ‘அட... நல்லா இருக்கே’ என்றார் ஏவிஎம்.சரவணன். ‘சார்... இது டிராமாவாப் போட்டு செம ஹிட்டு’ என்றார். ‘அப்புறமென்ன’ என்றார். ‘ஆனா பத்து வருஷத்துக்கு முன்னாடி படமா வந்துச்சு. உறவுக்கு கை கொடுப்போம்னு! படம் பெயிலியர்’ என்று விவரித்தார். ‘அப்புறமென்ன. ஓடலதானே. நாம ஓடவைப்போம்’ என்றார் உறுதியுடன்.

அதுமட்டுமா. கதையில் உள்ள வேலைக்காரப் பெண்மணி கேரக்டரை இன்னும் விரிவுபடுத்தச் சொன்னார். அப்படியே செய்யப்பட்டது. படமாக்கப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்டது. மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு படம், மேக்ஸிமம் என்பதையெல்லாம் தாண்டிய வசூலைக் குவித்துத் தீர்த்த படம், சம்சாரம் அது மின்சாரமாகத்தான் இருக்கும்.

’இவ என் பொண்ணு. பேரு சரோஜினி. கவிக்குயில் சரோஜினி நாயுடு பேரை வைச்சிருக்கேன். இது சிதம்பரம். வ.உ.சி, நினைவா வைச்சிருக்கேன். ரெண்டாவது பையன் சிவா. சுப்ரமணிய சிவாவை ஞாபகப்படுத்துற விதமா வைச்சிருக்கேன். இதான் என் மூணாவது பையன் பாரதி. இவனுக்கு அந்த மகாகவியோட ஏண்டா வைச்சோம்னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கேன்’ என்று சொல்வதில் இருந்து தொடங்கும் கதையில், கதையும் குடும்பமும் சூழலும் பாசமும் எல்லா இடங்களுக்குள்ளேயும் காமெடியும் என 440 வோல்ட்டேஜில் சரசரவென பாய்ந்துகொண்டிருக்கும் திரைக்கதை, விசுவின் டச்!

பாடல்களுக்குப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், இசைக்கு அதிகம் முக்கியத்துவம் தராமல், கேமிரா கோணங்களுக்கு அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாமல், வசனங்களுக்கும் நடிப்புக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படமெடுப்பதில் விசு எப்போதுமே சூரர். அது இங்கேயும் சம்சாரம் அது மின்சாரத்திலும் நிரூபணமாகியிருக்கும்.

ரகுவரன், சந்திரசேகர், காஜாஷெரீப் மகன்கள். கமலாகாமேஷ் மனைவி. ரகுவரனின் மனைவி லட்சுமி. சந்திரசேகரின் மனைவி மாதுரி. மகள் இளவரசி. கிறிஸ்துவ திலீப்பைக் காதலிப்பார். திலீப்பின் அப்பா கிஷ்மு. வீட்டு வேலைக்காரப் பெண்மணியாக கண்ணம்மா... மன்னிக்கணும் மனோரமா! ஒரு வீடு செட். அவ்வளவுதான். மிகமிகக் குறைந்த பட்ஜெட்டில், ஆனால் மிக மிக உன்னதமான படமாக அமைந்தது ச.அ.மி!

தொட்டதற்கெல்லாம் கணக்குப் பார்க்கும் ரகுவரன். வேற்று மதத்தைச் சேர்ந்தவரைக் கல்யாணம் பண்ணுவதென்றால், பத்துப்பைசா கூட செலவு செய்யமாட்டேன் என்று நழுவுகிறார் ரகுவரன். ‘அப்பா, ஒருவேளை இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சீங்கன்னா, கொஞ்சம் முன்கூட்டியே சொல்லுங்கப்பா. ஆபீஸ்ல பிஎப் லோன் அப்ளை பண்ணனும்’ என்பார் சந்திரசேகர். ‘ஸோ.. தங்கச்சியைக் கரையேத்தறதுக்கு ரெடிங்கறே’ என்பார் விசு, ஊஞ்சலாடிக்கொண்டே! ‘இல்லப்பா, அப்பாவோட பாரத்தைக் கொஞ்சம் சுமந்துக்கலாமேன்னுதான்...’ என்று சந்திரசேகர் சொல்ல, அப்படியே ஷாக்காகி நிற்பார் விசு.

மனைவி லட்சுமி பிரசவத்துக்குச் செல்ல, அங்கிருந்து தொடங்கும் பிரிவும் அப்பாவுக்குக் கொடுத்த கடனும் என எகிறியடிக்க, ‘கோதாவரி, வீட்டுக்கு நடுவே கோட்டைக் கிழிடி’ என்கிற லெவலுக்குப் போகும். ஒரே வீடு இரண்டுவீடாகும். மூத்தமகன் தனியே இருக்க, இளைய மகன் சந்திரசேகரருக்கு தம்பி எப்படியாவது பாஸாகிவிடவேண்டும் என்று மனைவியை படிப்புச் சொல்லித்தரச் சொல்ல, அது மனைவிக்கு இடைஞ்சல். அதனால் முட்டிக்கொண்டும் முகம் திருப்பிக்கொண்டும் மாதுரி இருக்க, ஒருகட்டத்தில் பிறந்தவீட்டுக்குச் சென்றுவிடுவார்.

அங்கே, காதலனைக் கரம் பிடித்த இளவரசி, மாடர்ன் லைஃப்க்கு ஆசைப்பட, ’தலை நிறைய பூவைச்சுக்கிட்டு, நெத்தி நிறைய பொட்டு வைச்சுக்கிட்டு, தழையத்தழையப் புடவை கட்டிக்கிட்டு வந்ததைத்தான் நான் விரும்பினேன்’ என்று திலீப் சொல்ல, முற்றுகிற சண்டையில் பிறந்த வீட்டுக்கு வந்துவிடுவார் இளவரசி. ‘எனக்கு அவனைப் பிடிக்கலப்பா’ என்பார் அவர். ‘யாரைம்மா, உங்க வீட்டு வேலைக்காரனையா’ என்பார் விசு. தியேட்டரே கைத்தட்டும் பொளேர் காட்சி அது.

குழந்தை பெற்றுக்கொண்டு லட்சுமி வர, அடுத்தடுத்து நடப்பதுதான் படத்தின் ஹைலைட் பாடங்கள். வழக்கம்போல் விசு படத்து நாயகியின் பெயர் உமா. இதில் லட்சுமிதான் உமா. வீட்டு விஷயங்களையெல்லாம் தெரிந்துகொண்டு, தள்ளி இருந்துகொண்டே, மாமியாரையும் வேலைக்கார கண்ணம்மா மனோரமாவையும் இளவரசியின் மாமனார் கிஷ்முவையும் சதுரங்கக் காய்களாகப் பயன்படுத்தி, லட்சுமி செய்யும் நாடகம்தான்... அடுத்தடுத்த தவுசண்ட் வாலா பட்டாசு.

‘அப்பச் சேந்து இருந்தோம். செலவு ஷேராயிரும். இப்ப எல்லாமே தனிதானே. இதெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா, வீட்டுக்கு நடுவுல கோடு கிழிக்கவே விட்ருக்கமாட்டீங்கல்ல’ என்று நறுக்சுருக்கென குத்தும் லட்சுமியின் வசன உச்சரிப்பும் அவரின் நக்கல் பார்வையும் பார்வையினூடே ரகுவரனைக் கவனிக்கிற கூர்மையும் அப்ளாஸ் அள்ளும்.

‘அது’நடக்கலையே என்று ஏங்கும் மனைவியை ‘கூல்’ செய்ய மதுரைக்கு அழைத்துச் செல்ல, போன இடத்தில் அம்மை போட்டுவிட, அப்போது மனைவியை அன்னையைப் போல் பார்த்துக்கொள்ள, காமத்தை விட அன்பே உயர்ந்தது எனும் முடிவுக்கு மனைவி வர... அந்தக் காட்சிகள் எல்லாமே புதுக்கவிதை. அங்கே ரகுவரனும் இங்கே சந்திரசேகரும் பட்டையைக் கிளப்பியிருப்பார்கள்.

வழக்கம் போல கமலாகாமேஷ், அமைதிப்பூங்கா. ஆனால், அந்த வீட்டின் இடிதாங்கி. உணர்ந்து நடித்திருப்பார். நடிப்பில் உன்னதம் காட்டியிருப்பார்.

பத்தாவதை முக்கிமுக்கி பாஸாகத் திணறும் காஜாஷெரீப், அப்போது வருகிற பெண் நட்பை, காதலென நினைத்து கனவு காண்பதாக இருக்கட்டும், முழுமூச்சில் படிப்பில் கவனம் செலுத்தி பாஸ் மார்க் வாங்குவதாக இருக்கட்டும், அண்ணியிடம் நேரடியாகச் சொல்லமுடியாமல், ‘அம்மா, நான் பாஸான விஷயத்தை என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டு வரேன்’ என்று தகவல் சொல்லிச் செல்லும் இடமாகட்டும். பயபுள்ள... இன்னும் ஜெயிச்சிருக்கலாம். என்னாச்சு? தெரியலை.

இடைவேளைக்குப் பிறகு, ஒருகால்மணி நேரம் மனோரமாவிடம் பந்தைக் கொடுத்து விளாசச் சொல்லிவிடுவார் விசு. ‘கண்ணம்மா...’ என்று கமலாகாமேஷ் சொல்ல, ‘கம்முன்னு கிட’ எனும் டயலாக், இன்றைக்கும் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. ‘கம்முன்னா கம்மு. கம்முநாடி கோ’ என்று மனோரமாவும் கிஷ்முவும் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொற்காசுச் சிதறல் போல், தியேட்டர் சுவர்களில் கைத்தட்டல்கள் தெறித்துத்தெறித்து, சிரித்துச்சிரித்து எதிரொலிக்கும்.

 கணவருக்கு இன்னொரு கல்யாணம் என்று பதைபதைத்து சர்ச்சுக்கு ஓட, வாசலில் ‘உனக்காகத்தாம்மா அப்பலேருந்து டிபன் கூட சாப்பிடாம காத்துக்கிட்டிருக்கேன்’ என்பார் கிஷ்மு. அப்ப கல்யாணம்... கப்சா. பத்திரிகை... உடான்ஸ்... டைவர்ஸ்... அது ரீலும்மா என்று வசனம், அத்தனை ஷார்ப். காரில் மகனும் மருமகளும் கட்டிப்பிடித்திருக்க, டிரைவர் சீட்டில் இருந்தபடி, ‘மை சன். நான் ஃபாதர். இது சர்ச். வீட்ல போய் வைச்சுக்கலாமா’ என்பார் கிஷ்மு. டைமிங், ரைமிங், விசுத்தன வசனம் அது!

பையன் ரகுவரனுக்கு கொடுக்கவேண்டிய கடனைக் கொடுத்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்வதும், ரகுவரன் மன்னிப்பு கேட்பதும், அப்போது லட்சுமி பேசும் வசனங்களும் இன்றைக்கு தனிக்குடித்தனங்களாகிப் போன குடும்பங்களுக்கு முள்ளும் அதுவே, மலரும் அதுதான்!

உடைஞ்ச பானை ஒட்டாது. விரிசல் விழுந்துருச்சு. இனியும் சேராது. தள்ளி நின்னு நலம் விசாரிச்சுப்போம். நீ செளக்கியமா, நான் செளக்கியம்னு தள்ளியிருந்து அன்பு பாராட்டுகிற சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்த வாத்தியாராகவே சம்சாரம் அது மின்சாரத்தைக் கொண்டாடினார்கள்; கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்மக்கள்.

படம் பார்க்கும் ரசிகர்களை ‘எப்படா சேரும் இந்தக்குடும்பம்’ என்றும் ’இந்தக் குடும்பம் சேரணுமே...’ என்றும் ஆடியன்ஸ் நகம் கடித்து தவித்து மருகிக் கொண்டிருக்க, அங்கே ஒரு ட்விஸ்ட் திரைக்கதையை வைத்து, தள்ளி நிற்பதே இயல்பு என்கிற நிஜத்தை அறைந்து சொல்லியிருப்பார் இயக்குநர் விசு.

வைரமுத்துவின் வரிகள் வைரமும் முத்துமாக ஜொலித்துப் பதிந்துவிடும் மனதில்! ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்துவைத்தாள் பாட்டு, ஒருவிதம். ஊரைத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா’ என்று விசு போதையில் தள்ளாடி, ஆடிப் பாடுகிற பாடல் வேறொரு விதம். முத்தாய்ப்பாக, காட்சிகளை கனப்படுத்துகிற அந்த சம்சாரம் அது மின்சாரம்... எனும் பாடல், வார்த்தைக்கு வார்த்தை கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு போகும். சங்கர்கணேஷ் இசையமைத்திருப்பார்கள்.

படம் வந்து ஓடியது. டிக்கெட் கிடைக்காமல் கூட்டம் கூட்டமாய் திரும்பிப் போகிற அளவுக்கு ஓடியது. 50 நாளைக் கடந்து 100 நாள் கொண்டாட்டங்களையெல்லாம் தாண்டி, சில்வர் ஜூப்ளி என்கிற 175 நாட்களையெல்லாம் கடந்து சக்கைப்போடுபோட்டது.

தெலுங்கு முதலான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஷாக்கடித்தது, ரசிகர் மனங்களில்! சிங்கிள் பேஸ் தகவல் ஒன்று... தெலுங்கில் மனோரமா நடித்த கேரக்டரில், செளகார் ஜானகி, ஆந்திரத்தின் லோக்கல் பாஷை பேசி பொளந்து தள்ளியிருப்பார். ‘இந்தக் கேரக்டரை எனக்கே கொடுத்திருக்கலாமே’ என்று மனம் நொந்து கேட்டார் மனோரமா. காரணம் சொல்லப்பட்டது. சரிதான் என்றாலும் மனம் ஏற்கவில்லை. ‘நல்ல கேரக்டர் தரோம், கவலைப்படாதீங்க ஆச்சி’ என்றது ஏவிஎம். சில வருடம் கழித்து அப்படியொரு லைஃப்டைம் கேரக்டர் கிடைத்தது ஆச்சி மனோரமாவுக்கு. அது... பாட்டி சொல்லைத் தட்டாதே!

இன்னொரு சிங்கிள் பேஸ் தகவல்... சம்சாரம் அது மின்சாரத்துக்கு எங்கிருந்தெல்லாமோ எத்தனையெத்தனையோ விருதுகள். முக்கியமாக, ஜனாதிபதியின் தங்கத்தாமரை விருது.

இதைவிட த்ரீபேஸாக ஒரு தகவல்... கூட்டுக்குடும்பத்தையும் குடும்ப உன்னதத்தையும் சம்சாரம் அது மின்சாரத்தையும் ஜென்மத்துக்கும் மறக்கமாட்டார்கள் தமிழ் ரசிகப் பெருமக்கள்!

https://www.kamadenu.in/news/cinema/3335-samsaram-adhu-minsaram-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

தெய்வ மகன் - அப்பவே அப்படி கதை!


 

 

deivamagan-appave-appadi-kadhai

தெய்வமகன் - சிவாஜி, ஜெயலலிதா

 

 

ஒரு படத்தில், ஒரு கேரக்டரை, சிறப்பாக நடித்துக் கொடுத்தாலே மிகப்பெரிய பாராட்டும் புகழும் கிடைக்கும். அப்படியிருக்க, ஒரே படத்தில், மூன்று கேரக்டர்கள் என்றால், அந்த மூன்றுமே முத்துக்களாக நடிப்பில் ஜொலித்தன என்றால், ஒன்றையொன்றுமாக, தனக்குத் தானாகவே போட்டி போட்டது என்றால் எப்படியிருக்கும்? அதுதான் தெய்வமகன்.

இரட்டை வேடம் என்பதை உத்தமபுத்திரன் காலத்திலேயே சிவாஜி பண்ணிவிட்டார். முதன்முதலாக மூன்று வேடம் ஏற்று, தன் முழு அர்ப்பணிப்பையும் திறமையையும் வெளிக்காட்டிய படமாக அமைந்தது தெய்வ மகன். அதாவது கொஞ்சம் பூசின உடம்பு சிவாஜியாக பலே பாண்டியா (1952) வந்திருந்தாலும் அந்த ஒல்லிகில்லி உடம்புடன் மூன்று வேடத்திலும் அசத்தல் பண்ணியிருப்பார் நடிகர்திலகம். 

 

எப்போதும் பார்க்கலாம் என்பதான படங்களில், தெய்வமகனுக்கும் தனியிடம் உண்டு. சிவாஜியின் சாந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, 1969ம் ஆண்டு வெளியான படம் இது. அடுத்த வருடம் (2019) வந்தால், தெய்வமகனுக்கு வயது 50.

மிகப்பெரிய கட்டிடம். சுழல் நாற்காலியின் முதுகு. யெஸ்... கம்மிங் என்று ஸ்டெனோவை அழைப்பார். ஸ்டெனோ முகம் காட்டப்பட்டும். நாற்காலியில் அமர்ந்திருப்பவரின் குரல் மட்டுமே கேட்கும். ‘சார், மணி ஏழு சார்’. ‘எல்லாரும் போயிட்டாங்களா?’, ‘கார் ரெடியா இருக்கா?’ என்று கேட்டுவிட்டுக் கிளம்புவார். வீட்டுக்குச் சென்றால், பிரசவ வேதனை வந்ததால், அவரின் மனைவி ஆஸ்பத்திரிக்கு சென்ற தகவலை வேலையாள் சொல்ல, அவர் ஆஸ்பத்திரிக்கு பறப்பார். அதுவரை நாயகனின் முகம் காட்டப்படாது.

ஆஸ்பத்திரியில், அழகழகாய் குழந்தைகளின் படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் அழகு. அப்படிப் பார்க்கிற போது, டைட்டில் தொடங்கும். டைட்டிலின் சைடிலும் அழகழகான குழந்தைகளின் முகங்கள். டைட்டில் முடிந்ததும் காட்சி விரியும். ‘பையன் பொறந்திருக்கான்’ என்று டாக்டரும் நண்பருமான மேஜர் சுந்தர்ராஜன் சொல்ல, அந்த உருவம் உற்சாகத்துடன் குழந்தையைப் பார்க்கச் சென்று, சோகம் அப்பியிருக்கும் முகத்தை, நடையே காட்டிக்கொடுத்துவிடும்.

அப்போதுதான் நாயகனின் முகம் காட்டப்படும். ‘என்னை போலவே விகாரமான முகம் கொண்ட எம்புள்ளையைக் கொன்னுடு’ என்பார் சிவாஜி. மேஜருடன் கடும் வாக்குவாதம் நடக்கும். கடைசியில், நீ சொன்னது மாதிரியே இந்தக் குழந்தை, இருக்காது. இதோட உனக்கும் எனக்குமான நட்பு அவ்வளவுதான்’ என்று கோபமாகிவிடுவார் மேஜர். ’குழந்தை இறந்தே பொறந்தது’ என்று மனைவி பண்டரிபாயிடம் சொல்லிவிடுவார் சிவாஜி.

ஆனால் குழந்தையைக் கொல்லாமல், நாகையாவின் ஆஸ்ரமத்தில் வளர்ப்பார் மேஜர். அடுத்து அழகான, விகாரமில்லாத ஆண் குழந்தை பிறக்கும். இங்கே... வீடே குதூகலமாகிவிடும். ஆக, தந்தையும் மகன்களுமாக மூன்று சிவாஜிகள்.

பணக்காரத் தந்தை. அந்த மிடுக்கு, அலட்டல், கர்வம், அலட்சியம் என சகல கெட்டகுணங்களையும் உள்ளடக்கிய நல்லவனாக கலக்கியெடுத்திருப்பார் அப்பா சிவாஜி.

அங்கே, ஆஸ்ரமத்தில் முரட்டுத்தனமும் அதேசமயம் சாத்வீக குணம் தரும் இசையையும் ஒருசேர கொண்டிருப்பார் மூத்த பையன் சிவாஜி. அப்பாவும் இவரும் ஒரேசாயல்; ஒரே விகாரம். அங்கே, இரண்டாவது மகன் அழகன். குறும்பன். செல்லம். சேட்டைக்காரன். ஜெயலலிதாவைக் கண்டதும் துறுதுறு, சுறுசுறு... காதல் வந்துவிடும். காதல் மலர்க் கூட்டம் ஒன்று என பாடலும் வந்துவிடும்.

குடும்பம், பிள்ளை மீது பிரியம், அளவற்ற செல்வம், கூடாநட்பாய் எம்.என்.நம்பியார். அப்பாவிடம் பணம் வாங்கி ஹோட்டல் பிஸ்னஸ். தொட்டதெல்லாம் நஷ்டம்... காதலையும் ஜெயலலிதாவையும் தவிர!

அங்கே... ஆஸ்ரம பாபா இறந்துவிட, முன்னதாக டாக்டர் மேஜர் குறித்து அவர் சொல்லிவைக்க, அவரைத் தேடி ஆஸ்ரமத்தில் உள்ள சிவாஜி (பெயர் கண்ணன்) மேஜரைத் தேடிச் செல்ல, அங்கேயே, அவர் வீட்டின் மாடியிலேயே இருப்பார் சிவாஜி. அன்புக்காக ஏங்குபவருக்கு ஜெயலலிதாவின் அண்மையும் அன்பும் ஆறுதல் தர, அதைக் காதலாக நினைத்து உருகுவார். காதலாக இருக்கக் கூடாதா என்று ஏங்குவார்.

அதேசமயம் தொழிலில் நஷ்டம், நண்பன் நம்பியாரின் நம்பிக்கைத் துரோகம், இல்லீகல் பிஸ்னஸ் என்றெல்லாம் மாட்டிக்கொள்ள, ஒருகட்டத்தில் பையனைப் பிடித்து வைத்துக்கொண்டு, பணம் கொடு என்று அப்பாவிடம் மிரட்ட, பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருக்கும் வேளையில், மூத்த பையன் வந்துவிடுவார். ‘நான் போறேம்பா. தம்பியை மீட்டுக் கொண்டுவரேன்’ என்பார். அப்பா கேட்கமாட்டார். ‘நான் இல்லாதவன். இல்லாதவனாவே போயிடுறேன். நான் போறேன்’ என்று மூத்த மகன் சொல்லியும் கேட்காததால், அப்பாவை அடித்து மயங்கச் செய்துவிட்டு, கட்டிப்போட்டுவிட்டு, தம்பியை மீட்கக் கிளம்புகிறான் மூத்த மகன்.

அங்கே தம்பியை மீட்கிறான்... தன்னையே இழக்கிறான்... தெய்வ மகனாகிறான். இதைத் துள்ளத்துடிக்கச் செய்கிற உணர்ச்சிபூர்வமான காட்சிகளாலும் உணர்வுபூர்வமான வசனங்களாலும் இரண்டையும் பிரதிபலிக்கிற நடிப்பாலும் வெளிக்கொண்டு வந்த அழகு... பேரழகின் பிரமாண்டம்!

பணக்காரத் தந்தை சிவாஜி ... அவருக்கு ஒரு பாடி லாங்வேஜ். ஆஸ்ரமத்தில் வளரும் கண்ணன் சிவாஜி... அவருக்கு ஒரு பாடி லாங்வேஜ். குறும்பும் கலகலப்புமாக வளைய வரும் விஜய் சிவாஜி.... அவருக்கும் ஒரு பாடி லாங்வேஜ். ஆளுக்கொரு தட்டு கொடுப்பது போல, பாடி லாங்வேஜ் கொடுத்து, ஃபுல் மீல்ஸ் போட்டிருப்பார் சிவாஜி, தன் ரசிகர்களுக்காக!

சிவாஜி, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், நம்பியார், ஜெயலலலிதா, நாகையா. கிட்டத்தட்ட தெய்வமகனின் முக்கியக் கதாபாத்திரங்கள் அவ்வளவே. வேண்டுமென்றால் இன்னும் இரண்டு சிவாஜிகளையும் சேர்த்துக்கொண்டாலும் கூட, அத்துடன் கேரக்டர்கள் பட்டியல் ஓவர். ஆனால், படம் முழுக்க, சிவாஜியின் ராஜ்ஜியம்... சாம்ராஜ்ஜியம்!

‘பெத்த புள்ளைய கொன்னுட்டோமே’ எனும் குற்ற உணர்வு அவ்வப்போது எட்டிப்பார்ப்பதையும் பண்டரிபாயுடன் வயதான காலத்திலும் ரொமான்ஸ் செய்வதிலும் தனி முத்திரை பதித்திருப்பார் சிவாஜி. ஜெயலலிதா காதல், நம்பியாருடன் ஹோட்டல் என்று ஜாலியும் கேலியுமாக ரவுசு பண்ணுகிற சிவாஜியும் புது ஸ்டைல். ஆடிக்கொண்டே, நகம் கடித்துக்கொண்டே பேசுகிற இங்கிலீஷ் கலந்த வசனங்கள் அமர்க்களம்.

அதேபோல், மூத்த மகன் சிவாஜி மேஜருடன், ஜெயலலிதாவுடன், அப்பாவுடன் எனப் பேசுகிற காட்சிகள் அனைத்துமே வசனங்கள் அப்ளாஸ் அள்ளும். அந்த ப்ளாங்க் செக் காட்சி அற்புதம். அப்போது நாற்காலியில் ஒரு சிவாஜி, அவருக்கு அருகில் இன்னொரு சிவாஜி, பின்னே பீரோவையொட்டி இடுக்கில் ஒரு சிவாஜி என்று மூன்று சிவாஜியும் ஒன்றாக ஃப்ரேமில் தெரிவார்கள். அதிலும் குறிப்பாக, அங்கே அந்த பீரோவில் கண்ணாடி இருக்கும். அந்தக் கண்ணாடியில் நிற்கிற, கிளம்புகிற மூன்றாவது சிவாஜி தெரிவார். அதேபோல், அதையடுத்து பீரோ சைடில் இருந்து தந்தைக்குப் பக்கத்தில் வந்து பேசிவிட்டு மூத்த பையனான சிவாஜி கிளம்பும்போதும், கண்ணாடியில் உருவம் தெரியும் காட்சி... அப்பவே அப்படியான அற்புதம்; அபாரம்!

கோயிலில் அம்மாவை ஒளிந்திருந்து பார்க்கிற சிவாஜியும் அந்த உணர்வுகளும் செண்டிமெண்ட்டுக்கு மட்டும் பயன்படுத்தாமல், கதையை நகர்த்தவும் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்.

தான் ஆசைப்படும் ஜெயலலிதாவை, தன் தம்பி காதலிக்கிறான் எனத் தெரிந்ததும் அப்படியே துடைத்தெறிந்துவிட்டு, எந்தக் கலக்கமும் இல்லாமல் இருப்பதே அவரின் கேரக்டரைஸேஷன். ‘இது பிளாங் செக். என் பையனுக்காக. அவனுடைய எதிர்காலத்துக்காக’ என்று அப்பா சிவாஜி மேஜரிடம் கொடுக்க, அதை மகன் சிவாஜியிடம் கொடுக்க, அந்த செக் பேப்பரை ஒரு தட்டு தட்டுவார் ஸ்டைலாக! ‘பாத்தீங்களா டாக்டர்... என் தலையெழுத்தையே அலங்கோலமாக்கிய எங்க அப்பாவோட கையெழுத்து எவ்ளோ அழகா இருக்கு பாருங்க டாக்டர்’ என்பார். இப்படி படம் நெடுகிலும் வசனங்களால், கதையையும் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கனப்படுத்தியிருப்பார் ஆரூர்தாஸ்.

காதல் மலர்க்கூட்டம் ஒன்று, காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், தெய்வமே தெய்வமே..., கூட்டத்திலே யார்தான் கொடுத்துவைத்தவரோ...’ என்று கண்ணதாசனின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அட்டகாசமாக இசையமைத்திருப்பார். அத்தனையும் தேன் பாடல்கள்.

படத்தின் கதையின் சொந்த ஊர் வங்காளம். டாக்டர்  நிகர்குப்தாவின் ‘உல்கா’ எனும் நாடகம். ஆனால் அப்படியொரு தெளிவான, விறுவிறு திரைக்கதையை அமைத்திருப்பார் ஏ.சி.திருலோகசந்தர்.

இங்கே ஒரு விஷயம்.

1965ம் ஆண்டு ‘தாயின் கருணை’ என்றொரு படம் வந்தது, ஒருசிலருக்காவது நினைவிருக்குமா? தெரியவில்லை. முத்தையா தந்தை. எம்.வி.ராஜம்மா அம்மா. கல்யாண்குமார் பையன். முத்துராமன் இன்னொரு பையன். லீலாவதி, நாகேஷ், எம்.ஆர்.ராதா என்று நடித்திருப்பார்கள்.

முத்தையாவுக்குப் பிறக்கும் மூத்த குழந்தை, முகத்தில் விகாரத்துடன் பிறக்கும். கொல்லச் சொல்லுவார். டாக்டர் கொல்லமாட்டார். அந்தக் குழந்தை கல்யாண்குமார். அவரின் தம்பி முத்துராமன். திக்கித்திணறி, படாதபாடுபட்டு, நம்மையும் படுத்தியெடுத்தி, கதை உருண்டு, சிதைந்து, சிதறுதேங்காயாகி, சின்னாபின்னமாகி கடைசியில் ஒரு ஆபரேஷன் மூலம் முகம் பொலிவாகிவிடும். ஒருவழியாய் சுபம் போட்டு படத்தை முடித்து, நம்மை பெருமூச்சுடன் வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள்.

யாரோ ஜி.வி.ஐயர் என்பவர் தயாரித்து, இயக்கியிருப்பார். புகழ்பெற்ற மா.ரா. வசனம் எழுதியிருப்பார். கதையை படுசொதப்பு சொதப்புகிறோம் என்று அவர்களுக்கே தெரிந்துவிட்டதால்தானோ என்னவோ, கதை யார் என்பதையும் திரைக்கதை யார் என்பதையும் டைட்டிலில் போடவே இல்லை. அதுசரி... இருந்தால்தானே போடுவதற்கு? ஆனால்... கிட்டத்தட்ட தெய்வமகன் மூலக்கதையில் இருந்து உல்டாபுல்டா பண்ணி, குதிரையின் முன்பக்கம் சேணம் கட்டுவதற்குப் பதிலாக பின்பக்கம் சேணம் கட்டிய கதையாக்கியிருந்தார்கள்.

ஆகவே நான்கு வருடங்கள் கழித்து, 69ம் ஆண்டில், அந்த வங்காளக் கதையை, அழகிய திரைக்கதையாக்கி, ஏ.சி.திருலோகசந்தரின் இயக்கத்தில், ஆரூர்தாஸின் வசனத்தில், கண்ணதாசனின் பாடல்களில், எம்.எஸ்.வி.யின் இசையில், டி.எம்.எஸ், சுசீலாவின் குரல்களில், ஒளிப்பதிவாளர் தம்புவின் வித்தையில், பி.கந்தசாமியின் எடிட்டிங்கில்... எல்லாவற்றுக்கும் மேலாக, நடிகர்திலகம் சிவாஜியின் முதல் மூன்று வேடங்களில் பின்னிப் பெடலெடுத்து, பட்டையைக் கிளப்பி, தெறிக்கவிட்டு, எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்திருப்பார்கள்.

காட்சிக்குக் காட்சி சிவாஜி, தன் நடிப்பால், பார்வையால், நடையால், சிரிப்பால், அழுகையால், ஆவேசத்தால் கைத்தட்டல் வாங்கிக்கொண்டே இருப்பார். மேஜர் சுந்தர்ராஜன் மிகச்சிறந்த, பண்பட்ட நடிகர் என்பதை இதிலும் நிரூபிக்கிற காட்சிகள் உண்டு. அவரும் பிரமாதப்படுத்தியிருப்பார். அவருக்கான உயரத்தை அவர் அடையவில்லையோ என்று நினைக்கிறேன்.

படம் வெளிவந்து, நூறு நாட்களைக் கடந்து ஓடியது. வசூலை வாரி வழங்கியது. கூடவே விருதுகளையும் வென்றெடுத்தது. ஆஸ்கர் போட்டிக்குச் செல்வதற்கான தகுதிக்குரிய படங்களின் பட்டியலில், தெய்வமகனும் இடம்பெற்றது என்பார்கள்.

அதேபோல், 75ம் வருடம், இதே கதையை செண்ட்ரல் ரயில் நிலையத்தில், முதல் வகுப்பு டிக்கெட் போட்டு, மும்பையில் இறக்கி, கொஞ்சம் டிங்கரிங், வாட்டர் சர்வீஸ், பெயிண்டிங் ஒர்க்கெல்லாம் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஹிந்தியில் பண்ணினார்கள். முக விகாரத்துக்குப் பதில் பார்வையற்றவர் என்று மாற்றியிருந்தார்கள். கடைசியில், படத்தை யாரும் பார்க்கமுடியாமல் செய்துவிட்டார்கள்.

அப்படியொரு படத்தைக் கொடுக்க, தெய்வமகன் மாதிரியான மனதில் நிற்கும் சினிமாவை வழங்க, தெய்வ நடிகனான சிவாஜிகணேசனால்தான் முடியும்! அதனால்தான் இன்றைக்கும் கம்பீரமாக, ஸ்டைலாக, நிமிர்ந்து நிற்கிறான் தெய்வமகன்!

https://www.kamadenu.in/news/cinema/3393-deivamagan-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

எங்க வீட்டு பிள்ளை - அப்பவே அப்படி கதை!


 

 

enga-veetu-pillai-appave-appadi-kadhai

'எங்க வீட்டு பிள்ளை’ எம்ஜிஆர்

 

 

இங்கிருந்து ஆந்திராவுக்கும் ஆந்திரத்தில் இருந்து இங்கேயுமாக வந்தவர்களும் இருக்கிறார்கள். வந்து ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் வந்த படமும் உண்டு. வந்து வெற்றிப் படமாக அமைந்ததும் இருக்கிறது. அந்த வகையில்... எங்க வீட்டுப்பிள்ளை, தனி ரகம். காரணம், படம் பார்த்த பலரும் எங்க வீட்டுப்பிள்ளை என்றே எம்ஜிஆரைக் கொண்டாடினார்கள்.

1965ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, பொங்கலன்று ரிலீசான இந்தப் படம், எம்ஜிஆர் ரசிகர்களுக்குத் தீபாவளிக் கொண்டாட்டமாகவே அமைந்தது. ‘ராமுடுபீமுடு’ என்று தெலுங்கில் வந்த படத்தை, தமிழில் எடுக்க முடிவு செய்த விஜயா புரொடக்‌ஷன்ஸ், எந்த டிஸ்கஷனும் இல்லாமல் இவர்தான் ஹீரோ என்று எம்ஜிஆரை டிக் அடித்தது. படத்தைப் பற்றி அறிந்துவைத்திருந்த எம்ஜிஆர், டபுள் ஓகே சொல்ல, பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது படம்.

 

அப்புறம் ஒரு விஷயம்... அந்த தெலுங்குப் படமான ‘ராமுடுபீமுடு’ செம ஹிட்டு. படம் பார்த்துவிட்டு, வணக்கம் போட்டதும் வெளியே வந்த கையுடன், அப்படியே க்யூவில் நின்று, டிக்கெட் வாங்கிப் பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்கம். அப்படியொரு வெற்றியைத் தந்த இந்தப் படத்தின் நாயகன் என்டிஆர் என்று சொல்லாமலேயே தெரிந்திருக்குமே உங்களுக்கு?

ராமுடுபீமுடுவை ரசித்துக் கொண்டாடியவர்கள்தான், பின்னாளில் என்டிஆரை கிருஷ்ண பரமாத்மாவாகவே பார்த்துச் சிலிர்த்தார்கள். அதேபோல், இங்கே, எங்கவீட்டுபிள்ளை எம்ஜிஆரை, அவர்கள் வீட்டுப் பிள்ளையாகவே சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்று ஆராதித்தார்கள்.

இப்போது கூட, தமிழ் சினிமாவில் ஏதேனும் டபுள் ஆக்ட் படங்களில், ‘என்னய்யா எங்கவீட்டுபிள்ளை மாதிரில்ல இருக்கு’ என்று ஜாலியாய் அவர்களே படத்தில் கமெண்ட் டயலாக் வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

படம் வருவதற்கு முன்பே எம்ஜிஆர் ரசிகர்கள் பேசிப்பேசி மகிழ்ந்து திளைத்தார்கள். நாடோடி மன்னன் படத்துக்குப் பிறகு, ஏழு வருடங்கள் கழித்து, அடுத்த இரட்டைவேடப் படமாக எங்கவீட்டுப்பிள்ளை அமைந்ததுதான் காரணம்.

விஜயா கம்பைன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நாகிரெட்டி - சக்ரபாணி தயாரித்த ஈஸ்ட்மென் கலர் படம் இது. மிகப் பிரமாண்டமான முறையில் எடுத்திருந்தார்கள். வீடுகள் செட்டெல்லாம் அவ்வளவு கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது.

‘டபுள் ஆக்ட்டு. ஆள் மாறாட்டக் கதைதானே...’ என்று ஒற்றைவரியில் சொன்னீர்களென்றால், உம்மாச்சி வந்து உங்கள் கண்களைக் குத்தும். அப்படியெல்லாம் சர்வசாதாரணமாக டீல் செய்து சொல்லிவிடமுடியாதபடி நரஸராஜூவின் மூலக்கதையும் இருக்கும். அதை அதி அற்புதமாக, தெளிவாகத் திரைக்கதையும் ஆக்கியிருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால், எம்ஜிஆருக்கே இது புதுமாதிரியான படம்தான். காரணம்... அப்பாவி எம்ஜிஆர், தமிழ் சினிமாவுக்கும் புதுசு. ரசிகர்களுக்கும் விருந்து. அந்த அப்பாவி முகம் கொண்ட எம்ஜிஆரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு பாந்தமாக இருக்கும், அந்தக் கேரக்டர்.

அத்தனை சொத்துக்களுக்கும் அதிபதி அப்பாவி எம்ஜிஆர். ஆனால், மாமா நம்பியாரின் பிடியில் சொத்தும் இருக்கும். அவரும் இருப்பார். மிரட்டலான பேச்சு, உருட்டலான பார்வை, விளாசித்தள்ளும் சாட்டையைக் கொண்டு, எம்ஜிஆரை பம்பரமாக்கியிருப்பார் நம்பியார்.

அங்கே இன்னொரு எம்ஜிஆர். நாகேஷுடன் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துகொண்டு, நடிக்க முயற்சி செய்துகொண்டு, ஜாலியாகப் பொழுதைக் கழிப்பார். அப்பாவி பெயர் ராமு. இவரின் பெயர் இளங்கோ.

ராமு எம்ஜிஆருக்கு ஒருகட்டத்தில் செத்துவிடலாம் என்று நினைத்து முயற்சி செய்ய, அக்காவின் மகளான சிறுமி தடுத்துவிடுவாள். அடியும் உதையும் வாங்கிக்கொண்டு இங்கே இருக்கமுடியாது என்று வீட்டை விட்டே, ஊரை விட்டே கிளம்பிவிடுவார் ராமு.

இதற்கிடையே செல்வந்தரான எஸ்.வி.ரங்காராவின் மகள் சரோஜாதேவியை அப்பாவி ராமுவிற்கு மணமுடித்து, வரதட்சணைப் பணமும் பெற்றுவிடத் திட்டம் போட்டிருப்பார் நம்பியார்.

ஒருவழியாக, ராமு எம்ஜிஆர், இளங்கோ எம்ஜிஆரின் கிராமத்துக்குச் சென்று அவரின் வீட்டுக்குச் செல்ல, இங்கே இளங்கோ எம்ஜிஆர், சரோஜாதேவியின் கண்ணில் பட்டு, வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கே நம்பியார் வந்து, அவரை அழைத்துச் சென்றுவிட... அப்புறமென்ன? அப்புறம் என்ன... என்பதுதான் படத்தின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்கள்.

கிராமத்தில் இளங்கோ எம்ஜிஆரின் முறைப்பெண் ரத்னா. ராமு எம்ஜிஆருக்குப் பார்த்த சரோஜாதேவி. இப்படி ஆள்மாறாட்டக் கதையில், காதலும் இடம் மாறும். அந்தக் காதலால் குழப்பமும் பிரிவும் சோகமும் வரும். ஆனால் படம் முழுக்க எல்லாமே இருந்தாலும் சோகத்தை சட்சட்டென்று நல்ல மூடுக்குக் கொண்டு வந்துவிடுகிற திரைக்கதையைக் கையாண்டார்கள்.

வீட்டில் அடைபட்டிருந்த வீரன் எம்ஜிஆர், ஹோட்டலுக்குச் சென்று இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று ஃபுல்கட்டு கட்டிவிட்டு, பில் தராமல் வெளியேறிவிடுவார். அதேநேரம், அதே டேபிளுக்கு அப்பாவி எம்ஜிஆர் வந்து உட்காருவார். சர்வர், வேறென்ன வேணும் என எரிச்சலாகக் கேட்பார். ரெண்டு இட்லி என்றதும் மறுபடியும் முதல்லேருந்தா என்பார் சர்வர். இந்த மறுபடியும் முதல்லேருந்தா... என்பது ஞாபகம் இருக்குதானே!

சரோஜாதேவி ஒரு பக்கம் வர, இன்னொரு பக்கத்தில் ரெண்டு எம்ஜிஆரும் இருப்பார்கள். சரோஜாதேவியின் ஹேண்ட்பேக்கை ஒருவன் தூக்கிக்கொண்டு ஓட, திருடன் திருடன் என்று கத்துவார். உடனே வீர எம்ஜிஆர், திருடனை நோக்கி ஓடுவார். இது வழக்கமான சீன். ஆனால் திருடன் என்றதும் அப்பாவி எம்ஜிஆர் தன் பர்ஸை பத்திரப்படுத்திக்கொண்டு, அங்கிருந்து ஓடுவார். சின்னக்காட்சிதான். ஆனாலும் அத்தனை நகாசு காட்டியிருப்பார்கள்.

இப்படி படம் நெடுக, அங்கங்கே காட்சிகளாலும் வசனங்களாலும் நம்மை ரொம்பவே ஈர்த்திருப்பார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்கள் ஒவ்வொன்றுமே ஷார்ப். அதிலும் நாகேஷ் உளறுவாயனாக அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. ‘என்னண்ணே... அவங்களைக் கடிச்சிட்டே... ச்சீ... அடிச்சிட்டே’, ‘தப்பு பண்ணிட்டோம். நீங்கதான் துரத்தணும்... சாரி திருத்தணும்’, ‘அண்ணே, அவங்க காலை ஒடி சீச்சீ காலைப் புடி’, ‘டைரக்டர் சார், எனக்கொரு டான்ஸ் கொடுங்க சார். மன்னிக்கணும் சான்ஸ் கொடுங்க சார்’ என்று படம் முழுவதும் நாகேஷ் இப்படியேதான் பேசுவார்.

சரோஜாதேவியை இன்னும் அழகாகவும் எம்ஜிஆரை இன்னும் இன்னும் அழகாகவும் மொத்தப் படத்தை அழகுக்கு அழகாகவும் வின்செண்ட் - சுந்தரத்தின் ஒளிப்பதிவு மெருகேற்றிக்கொண்டே இருக்கும்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெட்டுகள் அள்ளிக்கொண்டு போகும். பாடலின் உள்ளூடாக வரிகிற இசைகளும் அமர்க்களப்படுத்தும். பின்னணி இசையும் பிரமாதம்.

கண்களும் காவடிச் சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாட்டு ஸ்டேஜ் டான்ஸ். அதற்கேற்றாற்போல டியூன் போட்டிருப்பார். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல், நம்மையும் ஆடவைக்கும்.

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

குடியிருக்க நான் வரலாமா பாட்டு, செம லவ் ஸாங்.

அதேபோல,

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்

அவன் மாம்பழம் வேண்டும் என்றான் பாடல், கிராமத்துச் சங்கதிகளைச் சேர்த்துக் கட்டிய அந்தக் காலத்து குத்துப்பாட்டு. எம்ஜிஆரும் ரத்னாவும் பிரமாதம் பண்ணியிருப்பார்கள்.

 ‘பெண் போனாள்... இந்தப் பெண் போனாள்

இவள் பின்னாலே என் கண் போகும்’ என்ற டூயட் பாடலுக்கு டிரிபிள் பேங்கோஸில் பின்னிப்பெடலெடுத்திருப்பார்.

‘மலருக்குத் தென்றல் பகையானால் என்றொரு சோகப்பாடல். இங்கே சரோஜாதேவியும் அங்கே ரத்னாவுமாகப் பாடுவார்கள். பொதுவாக, பரபரவென போய்க்கொண்டிருக்கும் படத்துக்கு இப்படி சோகப்பாட்டு முட்டுக்கட்டை போடும் என்பார்கள். ஆனால் அப்படி எந்தச் சேதாரமும் நிகழாதபடி, பாடலையும் அமைத்திருப்பார்கள். கில்லாடித்தனமான எடிட்டிங்.

படத்திலும் எம்ஜிஆரின் திரையுலக மற்றும் அரசியலிலும் முக்கியப்பங்கு வகித்த ‘நான் ஆணையிட்டால்’ பாட்டுதான் படத்துக்கே ஹைலைட். பாட்டு ஆரம்பிக்கும் முன்பிருந்தே ஆரம்பித்துவிடுகிற கைத்தட்டல், பாட்டு முடிந்தும் கூட ஓயாதிருப்பதுதான் எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் அந்தச் சவுக்குக்கும் கிடைத்த மெகா வெற்றி. முக்கியமாக, கவிஞர் வாலிக்குமான வெற்றி இது.

ரங்கராவ், நம்பியார், தங்கவேலு, பண்டரிபாய் என பலரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

இந்த எம்ஜிஆரும் அந்த எம்ஜிஆரும் அண்ணன் தம்பி என்கிற முடிச்சு அவிழ்வதும் நம்பியாரை வெளுத்தெடுப்பதும் பண்டரிபாய் அக்கா என அறிந்து உருகுவதும் என கடைசி இருபது நிமிடங்கள் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போய், சுபம் கார்டுடன் முடியும்.

ஆனால் எம்ஜிஆரின் அடுத்தடுத்த இன்னிங்ஸ் அங்கிருந்துதான் ஆரம்பமானது. அங்கிருந்தும் ஆரம்பமானது.

மனசில் வலியோ வேதனையோ, துக்கமோ வருத்தமோ... ஏதேனும் ஓர் சூழ்நிலையில் கொஞ்சம் டல்லாக இருக்கும் போது, எங்க வீட்டு பிள்ளையைப் பாருங்கள். டல்லான மனசு எம்ஜிஆர் மாதிரியே சுறுசுறுவென ஆகிவிடும். ஏதோவொரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதுதான் எம்ஜிஆர் ஃபார்முலா.

65ம் வருடம் வெளியான படம். 53 வருடங்களாகிவிட்ட படம். ஆனால், இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற எம்ஜிஆரைப் போலவே, எங்கவீட்டுபிள்ளையும் நீடூழி வாழ்வான்!

https://www.kamadenu.in/news/cinema/3504-enga-veetu-pillai-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

சம்சாரம் அது மின்சாரம் - அப்பவே அப்படி கதை


 

 

samsaram-adhu-minsaram-appave-appadi-kadhai

சம்சாரம் அது மின்சாரம்

 

தோல்வி எப்போதுமே தோல்வியைத் தொக்கிக்கொண்டு இருக்காது. அது வெற்றியை ருசித்தே தீரும் என்றொரு தத்துவம் உண்டு. இதுகுறித்து பிறகு பார்க்கலாம். எண்பதுகளின் சினிமா பொற்காலம் என்பார்கள். பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், டி.ராஜேந்தர், கமல், ரஜினி, இளையராஜா, வைரமுத்து, மோகன், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என்றொரு கூட்டமே அப்போது உண்டு. அந்த வெற்றிக் கூட்டத்தில் ஒருவர்... விசு.

இரண்டெழுத்துக்காரர்தான். ஆனாலும் பலப்பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரர். நாடகத்தில் இருந்து வந்தவர்தான். அதேசமயம் நாடகபாணி படமாக இருந்தாலும் கதாபாத்திரத்தின் மூலம் யதார்த்தம் பேசியவர். கே.பி. எனும் பட்டறையில் இருந்து வந்த விசு, பழைமையையும் மறக்காமல், புதுமையையும் புறந்தள்ளாமல் இரண்டையும் களமாக்கி பேலன்ஸ் செய்து, பேலன்ஸுடன் நின்று ஜெயித்துக் காட்டியவர்.

 

82ம் வருடம் மணல் கயிறு படம்தான் முதல் இயக்கம். அதையடுத்து டெளரி கல்யாணம், புயல் கடந்த பூமி, ராஜதந்திரம், வாய்ச்சொல்லில் வீரனடி, நாணயம் இல்லாத நாணயம், அவள் சுமங்கலிதான் என்று வருடந்தோறும் படங்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார். 86ம் ஆண்டு எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படியான திரைப்படத்தை வழங்கினார். எல்லோரும் என்றால் எல்லா மொழிக்காரர்களும்! அதுதான்... சம்சாரம் அது மின்சாரம். 86ம் ஆண்டு வந்த படம். 32 வருடங்களாகி விட்டன. ஆனாலும் இன்னமும் ஃப்ரெஷ்ஷான ட்ரீட்மெண்ட்டாகவே கொண்டாடப்படுவதுதான் படத்தின் ஆகச்சிறந்த வெற்றி.

ஏவிஎம். சரவணன் விசுவை அழைத்து, படம் பண்ணலாம் என்று சொல்ல, பல கதைகள் சொன்னார். எதுவும் பிடிக்கவில்லை. வேற, வேற, வேற என்று சொல்லிக்கொண்டே வந்தார். அடுத்து இன்னொரு கதையைச் சொன்னார். ‘அட... நல்லா இருக்கே’ என்றார் ஏவிஎம்.சரவணன். ‘சார்... இது டிராமாவாப் போட்டு செம ஹிட்டு’ என்றார். ‘அப்புறமென்ன’ என்றார். ‘ஆனா பத்து வருஷத்துக்கு முன்னாடி படமா வந்துச்சு. உறவுக்கு கை கொடுப்போம்னு! படம் பெயிலியர்’ என்று விவரித்தார். ‘அப்புறமென்ன. ஓடலதானே. நாம ஓடவைப்போம்’ என்றார் உறுதியுடன்.

அதுமட்டுமா. கதையில் உள்ள வேலைக்காரப் பெண்மணி கேரக்டரை இன்னும் விரிவுபடுத்தச் சொன்னார். அப்படியே செய்யப்பட்டது. படமாக்கப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்டது. மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு படம், மேக்ஸிமம் என்பதையெல்லாம் தாண்டிய வசூலைக் குவித்துத் தீர்த்த படம், சம்சாரம் அது மின்சாரமாகத்தான் இருக்கும்.

’இவ என் பொண்ணு. பேரு சரோஜினி. கவிக்குயில் சரோஜினி நாயுடு பேரை வைச்சிருக்கேன். இது சிதம்பரம். வ.உ.சி, நினைவா வைச்சிருக்கேன். ரெண்டாவது பையன் சிவா. சுப்ரமணிய சிவாவை ஞாபகப்படுத்துற விதமா வைச்சிருக்கேன். இதான் என் மூணாவது பையன் பாரதி. இவனுக்கு அந்த மகாகவியோட ஏண்டா வைச்சோம்னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கேன்’ என்று சொல்வதில் இருந்து தொடங்கும் கதையில், கதையும் குடும்பமும் சூழலும் பாசமும் எல்லா இடங்களுக்குள்ளேயும் காமெடியும் என 440 வோல்ட்டேஜில் சரசரவென பாய்ந்துகொண்டிருக்கும் திரைக்கதை, விசுவின் டச்!

பாடல்களுக்குப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், இசைக்கு அதிகம் முக்கியத்துவம் தராமல், கேமிரா கோணங்களுக்கு அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாமல், வசனங்களுக்கும் நடிப்புக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படமெடுப்பதில் விசு எப்போதுமே சூரர். அது இங்கேயும் சம்சாரம் அது மின்சாரத்திலும் நிரூபணமாகியிருக்கும்.

ரகுவரன், சந்திரசேகர், காஜாஷெரீப் மகன்கள். கமலாகாமேஷ் மனைவி. ரகுவரனின் மனைவி லட்சுமி. சந்திரசேகரின் மனைவி மாதுரி. மகள் இளவரசி. கிறிஸ்துவ திலீப்பைக் காதலிப்பார். திலீப்பின் அப்பா கிஷ்மு. வீட்டு வேலைக்காரப் பெண்மணியாக கண்ணம்மா... மன்னிக்கணும் மனோரமா! ஒரு வீடு செட். அவ்வளவுதான். மிகமிகக் குறைந்த பட்ஜெட்டில், ஆனால் மிக மிக உன்னதமான படமாக அமைந்தது ச.அ.மி!

தொட்டதற்கெல்லாம் கணக்குப் பார்க்கும் ரகுவரன். வேற்று மதத்தைச் சேர்ந்தவரைக் கல்யாணம் பண்ணுவதென்றால், பத்துப்பைசா கூட செலவு செய்யமாட்டேன் என்று நழுவுகிறார் ரகுவரன். ‘அப்பா, ஒருவேளை இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சீங்கன்னா, கொஞ்சம் முன்கூட்டியே சொல்லுங்கப்பா. ஆபீஸ்ல பிஎப் லோன் அப்ளை பண்ணனும்’ என்பார் சந்திரசேகர். ‘ஸோ.. தங்கச்சியைக் கரையேத்தறதுக்கு ரெடிங்கறே’ என்பார் விசு, ஊஞ்சலாடிக்கொண்டே! ‘இல்லப்பா, அப்பாவோட பாரத்தைக் கொஞ்சம் சுமந்துக்கலாமேன்னுதான்...’ என்று சந்திரசேகர் சொல்ல, அப்படியே ஷாக்காகி நிற்பார் விசு.

மனைவி லட்சுமி பிரசவத்துக்குச் செல்ல, அங்கிருந்து தொடங்கும் பிரிவும் அப்பாவுக்குக் கொடுத்த கடனும் என எகிறியடிக்க, ‘கோதாவரி, வீட்டுக்கு நடுவே கோட்டைக் கிழிடி’ என்கிற லெவலுக்குப் போகும். ஒரே வீடு இரண்டுவீடாகும். மூத்தமகன் தனியே இருக்க, இளைய மகன் சந்திரசேகரருக்கு தம்பி எப்படியாவது பாஸாகிவிடவேண்டும் என்று மனைவியை படிப்புச் சொல்லித்தரச் சொல்ல, அது மனைவிக்கு இடைஞ்சல். அதனால் முட்டிக்கொண்டும் முகம் திருப்பிக்கொண்டும் மாதுரி இருக்க, ஒருகட்டத்தில் பிறந்தவீட்டுக்குச் சென்றுவிடுவார்.

அங்கே, காதலனைக் கரம் பிடித்த இளவரசி, மாடர்ன் லைஃப்க்கு ஆசைப்பட, ’தலை நிறைய பூவைச்சுக்கிட்டு, நெத்தி நிறைய பொட்டு வைச்சுக்கிட்டு, தழையத்தழையப் புடவை கட்டிக்கிட்டு வந்ததைத்தான் நான் விரும்பினேன்’ என்று திலீப் சொல்ல, முற்றுகிற சண்டையில் பிறந்த வீட்டுக்கு வந்துவிடுவார் இளவரசி. ‘எனக்கு அவனைப் பிடிக்கலப்பா’ என்பார் அவர். ‘யாரைம்மா, உங்க வீட்டு வேலைக்காரனையா’ என்பார் விசு. தியேட்டரே கைத்தட்டும் பொளேர் காட்சி அது.

குழந்தை பெற்றுக்கொண்டு லட்சுமி வர, அடுத்தடுத்து நடப்பதுதான் படத்தின் ஹைலைட் பாடங்கள். வழக்கம்போல் விசு படத்து நாயகியின் பெயர் உமா. இதில் லட்சுமிதான் உமா. வீட்டு விஷயங்களையெல்லாம் தெரிந்துகொண்டு, தள்ளி இருந்துகொண்டே, மாமியாரையும் வேலைக்கார கண்ணம்மா மனோரமாவையும் இளவரசியின் மாமனார் கிஷ்முவையும் சதுரங்கக் காய்களாகப் பயன்படுத்தி, லட்சுமி செய்யும் நாடகம்தான்... அடுத்தடுத்த தவுசண்ட் வாலா பட்டாசு.

‘அப்பச் சேந்து இருந்தோம். செலவு ஷேராயிரும். இப்ப எல்லாமே தனிதானே. இதெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா, வீட்டுக்கு நடுவுல கோடு கிழிக்கவே விட்ருக்கமாட்டீங்கல்ல’ என்று நறுக்சுருக்கென குத்தும் லட்சுமியின் வசன உச்சரிப்பும் அவரின் நக்கல் பார்வையும் பார்வையினூடே ரகுவரனைக் கவனிக்கிற கூர்மையும் அப்ளாஸ் அள்ளும்.

‘அது’நடக்கலையே என்று ஏங்கும் மனைவியை ‘கூல்’ செய்ய மதுரைக்கு அழைத்துச் செல்ல, போன இடத்தில் அம்மை போட்டுவிட, அப்போது மனைவியை அன்னையைப் போல் பார்த்துக்கொள்ள, காமத்தை விட அன்பே உயர்ந்தது எனும் முடிவுக்கு மனைவி வர... அந்தக் காட்சிகள் எல்லாமே புதுக்கவிதை. அங்கே ரகுவரனும் இங்கே சந்திரசேகரும் பட்டையைக் கிளப்பியிருப்பார்கள்.

வழக்கம் போல கமலாகாமேஷ், அமைதிப்பூங்கா. ஆனால், அந்த வீட்டின் இடிதாங்கி. உணர்ந்து நடித்திருப்பார். நடிப்பில் உன்னதம் காட்டியிருப்பார்.

பத்தாவதை முக்கிமுக்கி பாஸாகத் திணறும் காஜாஷெரீப், அப்போது வருகிற பெண் நட்பை, காதலென நினைத்து கனவு காண்பதாக இருக்கட்டும், முழுமூச்சில் படிப்பில் கவனம் செலுத்தி பாஸ் மார்க் வாங்குவதாக இருக்கட்டும், அண்ணியிடம் நேரடியாகச் சொல்லமுடியாமல், ‘அம்மா, நான் பாஸான விஷயத்தை என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டு வரேன்’ என்று தகவல் சொல்லிச் செல்லும் இடமாகட்டும். பயபுள்ள... இன்னும் ஜெயிச்சிருக்கலாம். என்னாச்சு? தெரியலை.

இடைவேளைக்குப் பிறகு, ஒருகால்மணி நேரம் மனோரமாவிடம் பந்தைக் கொடுத்து விளாசச் சொல்லிவிடுவார் விசு. ‘கண்ணம்மா...’ என்று கமலாகாமேஷ் சொல்ல, ‘கம்முன்னு கிட’ எனும் டயலாக், இன்றைக்கும் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. ‘கம்முன்னா கம்மு. கம்முநாடி கோ’ என்று மனோரமாவும் கிஷ்முவும் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொற்காசுச் சிதறல் போல், தியேட்டர் சுவர்களில் கைத்தட்டல்கள் தெறித்துத்தெறித்து, சிரித்துச்சிரித்து எதிரொலிக்கும்.

 கணவருக்கு இன்னொரு கல்யாணம் என்று பதைபதைத்து சர்ச்சுக்கு ஓட, வாசலில் ‘உனக்காகத்தாம்மா அப்பலேருந்து டிபன் கூட சாப்பிடாம காத்துக்கிட்டிருக்கேன்’ என்பார் கிஷ்மு. அப்ப கல்யாணம்... கப்சா. பத்திரிகை... உடான்ஸ்... டைவர்ஸ்... அது ரீலும்மா என்று வசனம், அத்தனை ஷார்ப். காரில் மகனும் மருமகளும் கட்டிப்பிடித்திருக்க, டிரைவர் சீட்டில் இருந்தபடி, ‘மை சன். நான் ஃபாதர். இது சர்ச். வீட்ல போய் வைச்சுக்கலாமா’ என்பார் கிஷ்மு. டைமிங், ரைமிங், விசுத்தன வசனம் அது!

பையன் ரகுவரனுக்கு கொடுக்கவேண்டிய கடனைக் கொடுத்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்வதும், ரகுவரன் மன்னிப்பு கேட்பதும், அப்போது லட்சுமி பேசும் வசனங்களும் இன்றைக்கு தனிக்குடித்தனங்களாகிப் போன குடும்பங்களுக்கு முள்ளும் அதுவே, மலரும் அதுதான்!

உடைஞ்ச பானை ஒட்டாது. விரிசல் விழுந்துருச்சு. இனியும் சேராது. தள்ளி நின்னு நலம் விசாரிச்சுப்போம். நீ செளக்கியமா, நான் செளக்கியம்னு தள்ளியிருந்து அன்பு பாராட்டுகிற சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்த வாத்தியாராகவே சம்சாரம் அது மின்சாரத்தைக் கொண்டாடினார்கள்; கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்மக்கள்.

படம் பார்க்கும் ரசிகர்களை ‘எப்படா சேரும் இந்தக்குடும்பம்’ என்றும் ’இந்தக் குடும்பம் சேரணுமே...’ என்றும் ஆடியன்ஸ் நகம் கடித்து தவித்து மருகிக் கொண்டிருக்க, அங்கே ஒரு ட்விஸ்ட் திரைக்கதையை வைத்து, தள்ளி நிற்பதே இயல்பு என்கிற நிஜத்தை அறைந்து சொல்லியிருப்பார் இயக்குநர் விசு.

வைரமுத்துவின் வரிகள் வைரமும் முத்துமாக ஜொலித்துப் பதிந்துவிடும் மனதில்! ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்துவைத்தாள் பாட்டு, ஒருவிதம். ஊரைத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா’ என்று விசு போதையில் தள்ளாடி, ஆடிப் பாடுகிற பாடல் வேறொரு விதம். முத்தாய்ப்பாக, காட்சிகளை கனப்படுத்துகிற அந்த சம்சாரம் அது மின்சாரம்... எனும் பாடல், வார்த்தைக்கு வார்த்தை கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு போகும். சங்கர்கணேஷ் இசையமைத்திருப்பார்கள்.

படம் வந்து ஓடியது. டிக்கெட் கிடைக்காமல் கூட்டம் கூட்டமாய் திரும்பிப் போகிற அளவுக்கு ஓடியது. 50 நாளைக் கடந்து 100 நாள் கொண்டாட்டங்களையெல்லாம் தாண்டி, சில்வர் ஜூப்ளி என்கிற 175 நாட்களையெல்லாம் கடந்து சக்கைப்போடுபோட்டது.

தெலுங்கு முதலான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஷாக்கடித்தது, ரசிகர் மனங்களில்! சிங்கிள் பேஸ் தகவல் ஒன்று... தெலுங்கில் மனோரமா நடித்த கேரக்டரில், செளகார் ஜானகி, ஆந்திரத்தின் லோக்கல் பாஷை பேசி பொளந்து தள்ளியிருப்பார். ‘இந்தக் கேரக்டரை எனக்கே கொடுத்திருக்கலாமே’ என்று மனம் நொந்து கேட்டார் மனோரமா. காரணம் சொல்லப்பட்டது. சரிதான் என்றாலும் மனம் ஏற்கவில்லை. ‘நல்ல கேரக்டர் தரோம், கவலைப்படாதீங்க ஆச்சி’ என்றது ஏவிஎம். சில வருடம் கழித்து அப்படியொரு லைஃப்டைம் கேரக்டர் கிடைத்தது ஆச்சி மனோரமாவுக்கு. அது... பாட்டி சொல்லைத் தட்டாதே!

இன்னொரு சிங்கிள் பேஸ் தகவல்... சம்சாரம் அது மின்சாரத்துக்கு எங்கிருந்தெல்லாமோ எத்தனையெத்தனையோ விருதுகள். முக்கியமாக, ஜனாதிபதியின் தங்கத்தாமரை விருது.

இதைவிட த்ரீபேஸாக ஒரு தகவல்... கூட்டுக்குடும்பத்தையும் குடும்ப உன்னதத்தையும் சம்சாரம் அது மின்சாரத்தையும் ஜென்மத்துக்கும் மறக்கமாட்டார்கள் தமிழ் ரசிகப் பெருமக்கள்!

https://www.kamadenu.in/news/cinema/3335-samsaram-adhu-minsaram-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

டிக்... டிக்... டிக்... - அப்பவே அப்படி கதை!


 

 

tik-tik-tik-appave-appdi-kadhai

டிக்...டிக்...டிக்...

 

என்னதான் கிராமமாக இருந்தாலும் நகரத்தின் மீது ஓர் ஆசை வெளிப்படுவதும் நகரத்தில் இருப்பவர்களுக்கு கிராமம் மீதான ஆச்சர்யங்களும் அதிசயங்களும் பிரமிப்பாக இருப்பதும் சகஜம்தானே. இயக்குநர் இமயம் என்று போற்றிக் கொண்டாடப்படும் பாரதிராஜாவும் கிராமத்தை அப்படியே இயல்பாகக் காட்டி, படங்கள் எடுத்து வந்தாலும் அவருக்குள் இன்னொரு முகம் இருந்தது. அது சிட்டி சப்ஜெக்ட். அதிலும் இன்னொரு விஷயத்தில் ஆர்வத்துடன் இருந்தார். க்ரைம் ப்ளஸ் சிட்டி சப்ஜெக்ட். அதுதான் டிக்... டிக்... டிக்..!

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் எடுத்த பிறகு கமலை வைத்து சிகப்பு ரோஜாக்கள் எனும் க்ரைம் த்ரில்லர் சிட்டி சப்ஜெக்ட் எடுத்தார். அதையடுத்து நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை என்றெல்லாம் ஒரு ரவுண்டு போய்விட்டு, மீண்டும் க்ரைம், சிட்டி, த்ரில்லர் என்று களமிறங்கினார். அதே கமலின் கூட்டணியுடன்!

 

மூன்று அழகிகள். ஒருவர் பாடகி, இன்னொரு பாப் டான்ஸர். அடுத்தவர் மாடலிங் பெண். தமிழகத்தில் உள்ள ஓபராய் எனும் பெருமுதலாளி, இப்படியான அழகிகளைத் தேர்வு செய்து, விழா எடுத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார். அங்கே, அவர்களுக்கு ஏதொவொரு விபத்தும் அந்த விபத்தால் ஆபரேஷனும் அந்த ஆபரேஷனின் போது உடலுக்குள் வைரங்களும் வைத்து தைத்து... என நூதனக் கடத்தல் நடந்துகொண்டிருக்கிற ஹைடெக் கடத்தல் கதைதான் டிக்...டிக்..டிக்..!

விளம்பரக் கம்பெனியின் புகைப்படக்கலைஞர் திலீப்பாக கமல். இங்கே ஒருவிஷயம்... திலீப் எனும் பெயர் பாரதிராஜாவுக்கு ரொம்பப் பிடிக்குமோ என்னவோ. சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் கமலின் பெயர் திலீப். மூன்று அழகிகள். மாதவி, ராதா, ஸ்வப்னா. இவர்களில் ராதாவின் பெயர் ராதாவே. மாதவியின் பெயர் சாரதா. இங்கேயும் ஒரு விஷயம்... பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் பட ஸ்ரீதேவிக்கும் ஒருகைதியின் டைரி ரேவதிக்கும் சாரதா என்றே பெயர் வைத்திருந்தார் பாரதிராஜா.

சரி... நேரம் கடத்தாமல் டிக்... டிக்... டிக்...கிற்கு வருவோம்.

மூன்று பேரின் உடம்பிலும் ஆபரேஷன் செய்யப்பட்ட தழும்புகள். ஒருகட்டத்தில் ஏதோ விபரீதம் கமலுக்குத் தெரியவர... அதே நேரத்தில், ஸ்வப்னாவை கொல்லப்படுகிறார். அந்தக் கொலைக்கு கமல் காரணம் என்று போலீஸ் தேடுகிறது. அவர் தப்பித்தாரா, நிரபராதி என்று நிரூபித்தாரா, ஓபராய் என்கிற வைரக்கடத்தல் பணமுதலையை என்ன செய்தார்... என்று திக்திக் நிமிஷங்களுடன் திரைக்கதை பரபரக்கிறது டிக்டிக்டிக் படத்தில்!

81ம் ஆண்டு வந்த படம். படம் வந்து 37 வருடங்களாகிவிட்டன. எண்பதுகளில் கமல் தனியழகு. பேரழகனாய் மயக்கினார். அந்த அடர்த்தியான மீசை, ஸ்டெப் கட்டிங் ஹேர்ஸ்டைல், சுள்ளாப்பும்சுறுசுறுப்பும் கொண்ட உடல்மொழி என்று தலையணைக்குக் கீழே பெண்கள் கமல் போட்டோவையும் ஆண்கள், சலூன் கடைக்குச் செல்லும் போது கமல் போட்டோவையும் வைத்துப் பார்த்துப்பார்த்து முடிவெட்டிக் கொண்ட காலம் அது.

அழகிகள் கதை. வைரக் கடத்தல் கதை. எனவே அழகிகள், வைரம் போல் தகதகத்தார்கள், கவர்ச்சியிலும் அழகிலும்! ஷ்யாம் சுந்தர் என்கிறவரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருப்பார் பாரதிராஜா. ’எனக்கு எல்லா தருமங்களும் தெரியும்; எல்லா நியாயங்களும் தெரியும்’ என்பார். அப்போது இது பேமஸ் டயலாக். அவருக்கு கையாளாக, ஆல் இன் ஆல் ஆளாக தியாகராஜன். நம்ம மம்பட்டியான் தியாகராஜன். நடுநடுவே யார்யாருக்கோ பாரதிராஜா குரல் கொடுத்திருப்பார்.  

நடுவே... மாதவிக்கும் கமலுக்குமான காதல் அழகிய கவிதைப் புத்தகம். அடிக்கடி முட்டிக்கொள்வதும் கோபப்படுவதும் பிறகு ஈஷிக்கொள்வதுமாக, கமலும் சரி, அந்தக் கண்களை வைத்துக்கொண்டு மாதவியும் சரி... காதல் ரசம் ததும்பச் செய்துவிடுவார்கள்.

ரெண்டுபேருக்கும் சண்டை. பேசவே மாட்டார் மாதவி. கமல், தாடியே வளர்த்துவிடுவார். ஒருநாள் ஆபீசுக்கு போன் வரும். ‘நான் ஆறுமணி ப்ளைட்டுக்கு சிலோன் போறேன். நாலரைக்கெல்லாம் வந்துருவேன். நீங்க அங்கே வரவேணாம். என்னைப் பாக்கவேணாம். எனக்கு பொக்கே கொடுக்கவேணாம். எனக்கு டாட்டா காட்டவேணாம். ஆறு மணிக்கு ப்ளைட்டு. நாலரைக்கெல்லாம் வந்துருவேன். வரவேணாம்’ என்று சொன்னதைக் கேட்டு, இன்னும் நொந்துபோவார் கமல். பிறகு கமலின் பாஸ் தேங்காய் சீனிவாசன் விளக்க, ஷேவெல்லாம் செய்துவிட்டு, ஜம்மென்று வருவார். ஆனால் லொடக்குக் கார். போவதற்குள், விமானம் சிலோனே போயிருக்கும் போல! இங்கே, காதலையும் அதற்குள் காமெடியையும் வைத்து ஸ்கிரிப்ட் ரெடி செய்யப்பட்டிருக்கும்.

அதேபோல், மூன்று அழகிகளில் ஒருவரான ராதாவின் வீட்டுக்கு வந்திருக்கும் கமல், அப்பா பற்றி கேட்பார். விட்டுட்டுப் போயிட்டார் என்பார். அம்மாவைக் கேட்பார். ஆஸ்துமாவால் படுத்தபடுக்கை என்பார். அண்ணன் தம்பி... என்பார். யாருமே இல்ல என்பார். கிளம்பும்போது, இனிமே யாராவது அண்ணன் இல்லியான்னு கேட்டா, இல்லேன்னு சொல்லிடாதே. அண்ணன் நானிருக்கேன் என்று சொல்ல, நெகிழ்ந்து போவார் ராதா. ஆக, கொஞ்சூண்டு செண்டிமெண்ட்டும் தூவியிருப்பார் பாரதிராஜா.

லேசான கழிவிரக்கம். தேங்காய் சீனிவாசன் வேறு தூபம் போட்டு போன் நம்பர் கொடுக்க, போதையில் ஸ்வப்னா வீட்டுக்குச் செல்ல, அங்கே நடக்கும் கூத்துக்கள், காமெடியாகவும் பயமாகவும் இருக்கும்படி அமைக்கப்பட்ட கதை. அந்த இடம் கொஞ்சம் நீளம்தான். ஆனாலும் முக்கியமான கட்டம் அது. அப்போதுதான், அங்கு நடப்பதுதான் கமலைச் சிக்கலில் தள்ளிவிடும்.

அடுத்தடுத்து டேக் ஆஃப் ஆகிற கதை, விறுவிறுப்பும் த்ரில்லிங்குமாக இருக்கும். பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன், அழகழகாய் படமாக்கியிருப்பார். ஸ்வப்னா இறந்ததும் கமல் அழுகையுடனும் பயத்துடனும் பண்ணுகிற ஒவ்வொரு செயல்களும் ஏக்ளாஸ். வசனங்கள் ஜாலியாகவும் கேலியாகவும் ரகளையாகவும் ரசனையாகவும் எழுதப்பட்டிருக்கும். கலைமணி வசனம்.

மனோபாலா, மணிவண்ணன், கே.ரங்கராஜ் என இன்றைக்கு வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர்கள் பலரும் இதில் உதவி இயக்குநர்கள். அப்புறம்... இரண்டுவிஷயம் கொசுறாக..! படத்தில் கமலுக்கான உடைகளை வடிவமைத்தவர் வாணி கமலஹாசன். அடுத்தது... படத்தின் தொடக்கத்தில் ஓர் அழகி கொல்லப்படுவார். அவர்... சரிகா.

கமல்தான் நாயகன் என்றாலும் இன்னொரு நாயகனும் இருக்கிறார். இசைஞானி இளையராஜா. கடிகாரமுள்ளின் சத்தத்தைக் கொண்டு டைட்டில் போடுகிற விதமும் ஓர் அலறலுடன் கூடிய டிரம்ஸ் இசையும் மிரட்டும். படம் மொத்தமும் ஒவ்வொரு காட்சியிலும் விதம்விதமான இசையால், நம்மைக் களவாடியிருப்பார் இளையராஜா.

பாடல்களும் அப்படித்தான். அதுவொரு நிலாக்காலம், பூமலர்ந்திட நடமிடும் பொன்மயிலே’, நேற்று இந்த நேரம் எனப் பாடல்கள் எல்லாமே இனிமை புஸ்வாணங்கள். வெடிக்கிற வன்மம் இல்லாமல், மெல்லிசாய் ஒளியைப் பரவவிடுகிற, சிதறவிடுகிற இசையை வழங்கியிருப்பார். இங்கேயும்... ஒரு கொசுறு சூப்பர் தகவல். டைட்டிலில் பாடியவர்கள் பட்டியலில், அறிமுகம் என்று ஒருவரின் பெயர் இடம்பெறும். அவர்... லதா ரஜினிகாந்த். நேற்று இந்த நேரம் என்று மிக அற்புதமாகப் பாடியிருப்பார்.

ஆனால் இத்தனை இருந்தும் அப்போது, வெளிவந்த சமயத்தில், பெரிதாகப் போகவில்லை. ஆனால் அடுத்தடுத்த காலக்கட்டங்களில், டிக்டிக்டிக்கின் மேக்கிங்கை எல்லோரும் கொண்டாடவே செய்தார்கள்.

டிக்டிக்டிக்... கமல், பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் அற்புதமான படம். நமக்கு... அட்டகாச த்ரில்லர் ப்ளஸ் க்ரைம் ப்ளஸ் காதல் படம்!

இளையராஜா பிஜிஎம் ஜாலங்களுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!

https://www.kamadenu.in/news/cinema/3535-tik-tik-tik-appave-appdi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

வியட்நாம் வீடு - அப்பவே அப்படி கதை!


 

 

vyantnam-veedu-appave-appadi-kadhai

வியட்நாம் வீடு - பிரஸ்டீஜ் பத்மநாபன், சாவித்திரி பத்மநாபன்

 

ஒரு வீடு எப்படி இருக்கணும், எப்படி இருக்கக் கூடாது, ஒரு வீட்டின் தலைவன் எப்படி இருக்கணும், எப்படி வாழணும், வாழ்வதற்கு பொன்னோ பொருளோ தேவையா? கெளரவம் எனப்படும் பிரஸ்டீஜ் அவசியமா? என்பதையெல்லாம் சொல்லும் வீடுதான் வியட்நாம் வீடு.

குடும்பம் பற்றியும் அதன் குதூகல சோகங்கள் குறித்தும் எத்தனையோ படங்கள் வந்திருக்கலாம். இன்னும் என்னென்னவோ சொல்லி, நம்மை நெகிழப் பண்ணியிருக்கலாம். ஆனால் அத்தனையும் தாண்டி தனித்துவத்துடன் கம்பீரமாகவும் கெளரவமாகவும் நிற்கிறது வியட்நாம் வீடு.

 

எத்தனையோ படங்களில், என்னென்ன விதமான கேரக்டர்களோ செய்து மிரட்டியெடுத்திருக்கலாம் சிவாஜி. ஆனால், அனைத்தையும் கடந்து, பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி. அந்த வகையில், சிவாஜி ஸ்பெஷல் படம் மட்டுமல்ல... சிவாஜிக்கே ஸ்பெஷல் படம் இது!

சொந்த வீடு என்பதுதான் எல்லோரின் ஆசையும் லட்சியமும். அப்பா இழந்து, அம்மாவையும் பறிகொடுத்து, அத்தையால் வளர்க்கப்பட்டு, அப்படி வளர்ப்பதற்காகவே அத்தை தன் வீட்டையே விற்று உயர்த்துகிறாள். பல வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், அதே வீட்டை வாங்கி, கிரகப்பிரவேசம் செய்யும் காட்சியில் இருந்து படம் விரிகிறது. கிரகப்பிரவேசமும் வீட்டுக்கு சண்டையும் யுத்தமும் சத்தமுமாக இருக்கிற வியட்நாம் பேரையே சேர்த்து வியட்நாம் வீடு என்று வைப்பதில் இருந்து, டைட்டில் ஆரம்பித்து முடியும் போதிருந்து, ஏதோ படம் பார்க்கிறோமோ அல்லது ஓர் பிராமணரின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டோமா என்று தோன்றும் அளவுக்கு, ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், அப்படியொரு நேர்த்தியும் நெகிழ்வுமாக வளர்கிறது.

பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர், சிவாஜி. அவரின் மனைவி பத்மினி. பெயர் சாவித்திரி. அவர்களுக்கு ஸ்ரீகாந்தும் நாகேஷும் மகன்கள். முதல் பையனுக்கு கல்யாணமாகிவிடுகிறது. ரெண்டாவது பையன் படித்துக் கொண்டே இருக்கிறான். மூன்றாவதாக மகள். அன்பு மகள். சிவாஜியின் அத்தையும் உடன் இருக்கிறார்.

நேர்மை, டிஸிப்ளின், ஹானஸ்ட், பர்பெக்‌ஷன், பிரஸ்டீஜ் என்று எல்லாமாகவும் இருக்கிற சிவாஜி, மன்னிக்கணும்... பிரஸ்டீஜ் பத்மநாபன்... அப்படியொரு உழைப்பாளி. மிகப்பெரிய வெள்ளைக்காரக் கம்பெனியில் உத்தியோகம். வேலை விஷயத்தில் கறார் காட்டுபவர். வீட்டிலும் பசங்களிடம் சரியாக இருக்கச் சொல்லி, பர்பெக்‌ஷன் எதிர்பார்ப்பவர்.

பல் தேய்க்காமல் காபி குடிப்பார் நாகேஷ். படுக்கையில் இருக்கும் மனைவிக்கு காபி எடுத்துப் போய்க்கொடுப்பார் ஸ்ரீகாந்த். எட்டுமணிக்குத்தான் எழுந்திருப்பாள் மகள். ஆபீஸ் ஆடிட்டிங் பரபரப்பில் இருப்பார் பத்மநாபன். மகளின் தோழிகள் அரைகுறை ஆடைகளில் வருவார்கள். அவர்களுக்கு அட்வைஸ் சொல்லி அனுப்பிவிட்டு ஃபைல் பார்க்கும்போது, அம்மா லாண்டரி என்பார் ஒருவர். கணவரின் ஃபைலை வெடுக்கெனப் பிடுங்கி, பின்னால் எழுதியிருக்கும் லாண்டரி லிஸ்ட்டைப் பார்த்து காசு கொடுப்பார் மனைவி. அது வாங்கிட்டு வாங்க, இது வாங்கிட்டு வாங்க என்று மனைவி சொல்ல தலையாட்டிக் கொண்டே வருவார் ஸ்ரீகாந்த். அதைப் பார்த்து நக்கலாக தலையாட்டிக் கொண்டே இருப்பார் சிவாஜி. இத்தனைக் களேபரங்களுடன் வியட்நாம் வீட்டின் ஒவ்வொரு நாளும் விடிகிறது; முடிகிறது.

அடுத்து... ஈட்டிக்காரனிடம் பணம் வாங்கி டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருக்கும் நாகேஷ். சட்டைப்பையில் இருந்து பணம் களவாடுவதும் அப்பாவின் கையெழுத்தையே போட்டு செக்கில் பணம் எடுக்கும் திருட்டுத்தன நாகேஷ். படிக்கச் செல்லும் வழியில் காதலிக்கும் மகள். அலுவலகத்தில் தன் மனைவியின் போனைக் கூட பேசாமல், ‘என்னடீ இது, மேனர்ஸ் இல்லாம, ஆபீஸ் டயத்துல போன் பேசிண்டு’ என்று எரிந்துவிழுகிற சிவாஜி. வீட்டு விஷயங்களை அடுத்த வீட்டுக்குச் சொல்லும் மருமகள் ரமாபிரபா என்று குடும்பத்தின் ஒவ்வொரு ஜீவன்களும் ஒவ்வொரு திசை நோக்கி ஓடுவதை அழகாகச் சொல்லிக்கொண்டு போகிற திரைக்கதை, படத்தின் நாடகத்தன்மையையெல்லாம் மறக்கடித்துவிடும். நாடகமாக வந்து பிறகு படமாக்கப்பட்டதுதானே இது!

அமைதியாவும் கொஞ்சம் ஆர்ப்பாட்ட ஆர்ப்பரிப்பாகவும் போய்க்கொண்டிருக்கிற குடும்பத்தில் ஒரு சிக்கல். பத்மநாபன் ஓய்வு பெறுகிறார். என்னதான் பென்ஷன் வந்தாலும், வேலைக்குப் போகாத நபர் மீது வைக்கிற ஏளனப்பார்வையை அப்படியே தோலுரித்துக் காட்டியிருப்பார்கள். ஹாலில் உள்ள சோபா மேலே போய்விடும். மருமகள் மதிப்பதில்லை. மகனும் மதிப்பதில்லை. ஒருகட்டத்தில் இது வேலைக்காரனுக்கும் தொற்றிக்கொள்ளும். அந்த வலிகள் மொத்தமும் பார்க்கிற ரசிகர்களின் மனங்களில் கடத்தப்பட்டிருக்கும். கனமாக்கி ரணமாக்கி இம்சித்துவிடும். வியட்நாம் வீடு பார்த்திருக்கிறீர்கள்தானே. ஒவ்வொரு காட்சியிலும் நம்மை குடும்ப உறுப்பினராகவே ஆக்கியிருப்பார் இயக்குநர் மாதவன்.

தனிக்குடித்தனம், ஆசை, ஆடம்பர வாழ்க்கை என்றெல்லாம் ஆசைப்படும் ரமாப்பிரபா, கணவனை லஞ்சம் வாங்கத் தூண்டுகிறாள். வாங்குகிறான். உடல்நலமில்லாமல் இருக்கும் சிவாஜி, ரேடியோவில் கிரிக்கெட் கமெண்ட் கேட்கும் ஸ்ரீகாந்த், ஆத்திரம் தாங்காமல் ரேடியோவை உடைக்கும் தங்கை, ’போடி போ. உனக்கும் நாளைக்கி கல்யாணமாகி, புருஷனைப் பறிகொடுத்து, மூளியா இங்கே வந்து நிக்கணும், பாத்துக்கோ’ என்று சொல்ல, சிவாஜி ஆவேசமாகி, அடிவெளுத்துவிடுவார். ஆனால் காட்சி அத்துடன் முடியவில்லை. அப்படியே அம்மாவின் படத்துக்கு அருகில் போய் நின்றுகொண்டு, ‘அம்மா, சின்ன வயசிலேயே புருஷனைப் பறிகொடுத்துட்டு, சமையல் வேலை பாத்து என்னைக் காப்பாத்துனியே. இப்போ என் குழந்தையை அந்த மாதிரி நிலையைச் சொல்றாம்மா எம் புள்ள’ என்று கலங்குவாரே...’ கொன்னுடுவார் மனுஷன்.

சுந்தரம் கதை வசனம். இதன் மூலம்தான் வியட்நாம் வீடு சுந்தரம் என்றானார். அப்படியொரு கதை, அப்படியொரு யதார்த்த வசனம். காட்சிப்படுத்தலில் அப்படியொரு எளிமை. கதை முழுக்க இனிமை. காட்சியை ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார் வியட்நாம் வீடு சுந்தரம். அதை ரசித்து ரசித்து, ரசிக்க ரசிக்கப் படம் பண்ணியிருப்பார் பி.மாதவன். வசனங்கள் ஒவ்வொன்றும் ஷார்ப்.

‘என்னடீ... சமையக்கட்டு கான்பரன்ஸ் போடுறேளா?’

‘’உம்புள்ளைக்கு பத்துரூபாயோட மதிப்பு தெரியாதுடி. ஏன்னா அவன் சாவித்திரி பெத்தபுள்ள. நான் சமையக்காரி பெத்தபுள்ள’.

‘நீங்க என் பையனை காலேஜ்லேருந்து சஸ்பெண்ட் பண்ணிருக்கப்படாது. டிஸ்மிஸ் பண்ணிருக்கணும்’

‘சிரிக்கச் சிரிக்கப் பேசலாம்டா. அடுத்தவா சிரிக்கறாப்ல நடந்துக்கப்படாது’.

‘ஏண்ணா. கண்ணாடி குத்திட்டு வந்திருக்கேளா. வலிக்கறதா. இல்லடி... குளு...குளுன்னு இருக்கு’

‘படிப்பை விட்டுட்டு தொழிலாளியாகறோமேன்னு பாக்கறியா. தொழிலாளிகள்தாண்டா நம்ம நாட்டின் முதுகெலும்பு’.

‘வாய்ப்பு கிடைக்கறப்போ வாழ்க்கையை சீர்படுத்திக்கோ. ஆடம்பரமா இருக்கறதுக்கு நினைக்காதே’.

‘இப்படி படம் நெடுக வசனங்கள். வாழ்க்கையைச் சொல்லும் வேதங்கள்.

ஆபரேஷன். ஆஸ்பத்திரி. வீட்டில் இருந்து கிளம்பி வாசலுக்கு வருவார். ‘வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ’ என்று பாடி முடிக்க, ‘சாவித்ரி... ஆஸ்பத்திரி வரைக்கும் வாடீ’ என்பார் சிவாஜி. தியேட்டரே கைத்தட்டிக்கொண்டே அழும் கலவைக் காட்சி அது! 

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம். 1970ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி ரிலீசானது. படம் வந்து 48 வருடங்களாகிவிட்டன. தலைமுறைகளே மாறிவிட்ட நிலையில், வாழ்வியலே புத்தாடை உடுத்திக்கொண்டு நவீனக்குடை பிடித்துப் போகிற உலகில், எப்போதும் பார்க்கலாம் வியட்நாம் வீடு.

இசை, மாமா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கே.வி.மகாதேவன். மைலேடி என்றொரு பாடல் இளசுகளுக்கானது. ரவுசுத்தனமானது. நாகேஷுக்கான பாடல். அந்த பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா’ வையும் காட்சியையும் சிவாஜியின் சேஷ்டைகளையும் பத்மினியின் வெட்கம் கலந்த, வெட்கம் மறந்த நளினங்களையும் மறக்கவே முடியாது. திருமண நாள் விழாவுக்காக ஒரு பாட்டு. ஆஹா... அந்தக் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம், ஏதோ நாமே வாழ்ந்துவிட்ட நிறைவும் நெகிழ்வும் நிம்மதியும் மனதை நிறைத்துக்கொள்ளும். விம்மச் செய்துவிடும். அழவைத்துவிடும். ஆனந்த அழுகை!

கண்ணதாசனின் பாடல் வரிகளைச் சொல்லாவிட்டால், மொழி தெரியாது போல என்று சொல்லிவிடுவார்கள். ஆஹா ஆஹா... பாலக்காடு பாட்டின் வரிகள் துள்ளவைத்துவிடும். உலகத்திலே என்ற பாடலில், ஜானகிக்கும் ராமனுக்கும் சரிதம் கண்டது இந்நாடு. அந்த சரித்திரத்தில் உங்களுக்கும் கிடைக்குமொரு பொன்னேடு’ என்று அந்தத் தம்பதியின் தாம்பத்ய வாழ்வின் உன்னதத்தைச் சொல்லியிருப்பார்.

‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ பாடல்... சொல்லவா வேண்டும். ’என் தேவையை யாரறிவார்?’ என்று சிவாஜி பாடுவார். பத்மினிக்கு திக்கென்றாகிவிடும். ‘அடப்பாவி மனுஷா. நீயே உலகம்னு உன்னையே நினைச்சிக்கிட்டிருக்கேனே’ என்று அதிர்ந்து பார்ப்பார். ‘உன்னைப் போல் தெய்வமொன்றே அறியும்’ என்று மனைவியை தெய்வத்துக்கு நிகராகச் சொல்ல கண்ணதாசனால் மட்டுமே முடியும். அப்படிச் சொன்னதும் பெருமிதமும் அப்பாடா என்கிற நிம்மதியுமாக ஒரு பார்வையும் சிரிப்பும் கலந்து காட்டுவாரே ரியாக்‌ஷன். பத்மினிம்மா... சான்ஸே இல்லை.

சிவாஜிகணேசன். நடிகர் திலகம். நடிப்பின் இமயம். செவாலியே. இவை எல்லாவற்றையும் விட, இந்தத் தருணத்தில் பிரஸ்டீஜ் பத்மநாபன் என்று சொன்னாலே போதுமானது. ஸ்லாங் எனப்படும் பாஷையை மாற்றிக் கொள்ளலாம். லேசாக பாடி லாங்வேஜில் கவனம் செலுத்தலாம். ஆனால் பிராமண மனிதராக, அச்சுஅசல் போல் அப்படியே பிறந்திருப்பார் இதற்காகவே! மழுங்கச் சிரைத்த மீசை இல்லாத முகம், பட்டையாகக் கண்ணாடி, விபூதிப்பட்டை, பரபரதுறுதுறு பேச்சுகள், காதோரத்தில் துளிர்விட்டிருக்கும் முடிக்கற்றை, கையையும் முகத்தையும் உதட்டையும் வைத்துக்கொண்டு அவர் பண்ணுகிற சேஷ்டைகள், கோபங்கள், துக்கங்கள்... எல்லாமே ஓர் பிராமணரை, பிராமணத் தகப்பனை அப்படியே நினைவுபடுத்திவிடும். இந்தப் படம் பார்த்துவிட்டு, பிரஸ்டீஜ் பத்மநாபனில், என் அப்பா தெரிகிறார், மாமா தெரிகிறார், தாத்தா தெரிகிறார் என்று சொல்லிப் பூரித்த பிராமணக் குடும்பங்கள் உண்டு. சிவாஜியின் படங்களில், மறக்கமுடியாத சரித்திரம் இந்தப் படம். சொல்லப்போனால், இந்தப் படம் மட்டுமே தனியொரு சரித்திர பாகம்.

பாலக்காட்டு பக்கத்தில் பாடலின் நிறைவில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக கைத்தட்டுவார் சிவாஜி. அதுவொரு ஸ்டைல். திருமண நாள் விழாவில் ஊஞ்சலில் அமர்ந்தபடி, பத்மினி பாடுவதைக் கேட்டு, நெக்குருகிக் கரைந்து அவளில் காணாமலே போய், நிம்மதியாக வயதானவரைப் போலவே கைத்தட்டி தலையசைப்பாரே... அதற்காகவே, சிலையை அங்கேயே வைத்திருக்கவேண்டும்.

அதுமட்டுமா? ரிடையர்ட் ஆகிவிட்டேன் என்றதும் காட்டுகிற ரியாக்‌ஷன். இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் பையனைக் கைது செய்யும்போது, ஜட்ஜ் சம்பந்தியிடம் ‘சம்பந்தி, இங்கே நம்மாத்துல பிரஸ்டீஜ்தான் போயிடுத்துன்னு நெனைச்சேன். ஜஸ்டிஜும் போயிடுத்து’ என்பார். ‘இந்தாடி பாலிஸி... என் பசங்க மெச்சூர்டு ஆயிட்டாங்களோ இல்லியோ, இது மெச்சூர்டாகும்’ என்று மனைவியிடம் கொடுக்கிற பாலிஸி பத்திரங்கள். அத்தை, முன்னாடி ஒரு ஆயிரம் ரூபா கொடுத்தேனோள்யோ. இந்தா... இந்த ஆயிரத்தையும் வைச்சுக்கோ. நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு’, ‘தாத்தா தாத்தா, அந்த மண் சட்டியை உடைக்காம பத்திரமா வைச்சுக்கோ தாத்தா. என் அப்பா உனக்கு இப்போ கொடுத்த இந்த சட்டிலதான் அவருக்கு நாளைக்கிக் கொடுக்கணும்னானாம்’ ’தராசு முள்ளுகிட்டே தட்டுகள்கிட்ட பாரபட்சம் இருக்கமுடியாதோண்ணோ’ என்று எத்தனை வசனங்கள். அத்தனை இடங்களிலும் வலிக்க வலிக்க கைத்தட்டினார்கள். மனம் வலிக்க வலிக்க, பார்த்துக்கொண்டே அழுதுகொண்டே கைத்தட்டினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு வரி, ஒரு வார்த்தை, ஒரேயொரு பெயர்... மனைவி பெயர் சாவித்திரி. அதை சாவித்ரி... சாத்ரி... சாவித்ரீ... என்றெல்லாம் சொல்கிற அழகு இருக்கே... அதாண்டா சிவாஜி என்று கொண்டாடியது தமிழகம். இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஓவர் ஆக்டிங்பா என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் வியட்நாம் வீடு பாருங்கள்... கடைசி வரை ஒருகாட்சியில் கூட, சிவாஜியே தெரியமாட்டார். பிரஸ்டீஜ் பத்மநாபன்தான் தெரிவார். 

பத்மினி மட்டும் என்னவாம். சாவித்திரியாகவே, திருமதி பத்மநாபனாகவே வாழ்ந்திருப்பார். மடிசார் கட்டு, புடவைத் தலைப்பை இழுத்துவிட்டுக்கொள்ளும் லாகவம், கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற பாவனை, கைகளை ஆட்டி ஆட்டி பேசுகிற உடல்வாகு, நீண்ட நெடிய கூந்தல், வெடுக் சுருக் துறுக் நறுக் பளிச்செனப் பேசுகிற படபட பட்டாசு ப்ளஸ் சாந்த சொரூப சேஷ்டைகள், டிப்பிக்கல் மாமி தோற்றார். சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார் பத்மினி. 

வீடுன்னு இருந்தா வாசல்னு இருக்கத்தானே செய்யும் என்பார்கள். ஒவ்வொரு வீடும் அவசியம் பார்க்கவேண்டிய படம்... பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய படம்... வியட்நாம் வீடு. வாழ்வியலைச் சொல்லும் படம். வாழ்க்கையைச் சொல்லும் பாடம்!

பிரஸ்டீஜ் பத்மநாபனும் சாவித்திரியும் தம்பதியாக நீடுழி வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்.

https://www.kamadenu.in/news/cinema/3595-vyantnam-veedu-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

நினைத்தாலே இனிக்கும் & அப்பவே அப்படி கதை 


 

 

ninaithale-inikkum-appave-appadi-kadhai
 
 
 
 
 

   நினைவுகள் எப்போதும் சுகமானவை. அது சோக நினைவுகளாக இருந்தாலும் சந்தோஷ குதூகலமாகவும் இருந்தாலும் நினைவுகளை அசைபோடுவது, நாமே மயிலிறகு எடுத்து நம் மனதை வருடிக்கொள்வது மாதிரியானது. பாலசந்தர் அப்படியொரு மயிலிறகைத் தந்திருப்பார். அது மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல், நம் மனசை வருடிக் கொடுக்கும். முணுமுணுக்க வைக்கும். அது... நினைத்தாலே இனிக்கும்! 
1979ம் ஆண்டு வெளிவந்த படம் இது. படம் வெளியாகி 38 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் எவர்கிரீனாக, பசுமரத்தாணி போல் பதிந்துவிட்ட நினைத்தாலே இனிக்கும் படத்தை நினைத்தாலே இனிக்கும். 
எழுத்தாளர் சுஜாதாவின் கதையை சினிமாவாக்கியிருப்பார் கே.பாலசந்தர். இசைக்குழுவின் கதை. இசைக்குழுவினரைப் பற்றிய கதை. அந்த இசைக்குழுவுக்கு சம்பந்தமே இல்லாமல் உள்ளே ஒரு பெண்ணை நுழையச் செய்வார்கள். அந்தப் பெண், இசைக்குழுவின் தலைவன் மனதில் நுழைந்துகொள்வாள். 
 புதிரான உலகில், அவளும் விதிவிலக்கல்ல. எப்போதும் புதிராகவே இருப்பாள். அவள் நல்லவளா கெட்டவளா, நம்பிக்கைக்கு உரியவளா நம்பிக்கைத் துரோகம் செய்பவளா, அப்பாவியானவளா ஏமாற்றுக்காரியா என்று காட்சிக்குக் காட்சி மாறிக்கொண்டே இருக்கிற நம்முடைய கேள்விகளுக்குள்ளேயே படம் விரிந்துகொண்டே இருக்கும்.
 நடுநடுவே அந்தப் பெண்ணை ஒரு நோய், மனித உருவில் துரத்திக்கொண்டே இருக்கும். அது நோயாகவும் இருக்கலாம். மனிதனாகவும் இருக்கலாம். எமனாகவும் இருக்கலாம். அந்த உருவம் நம்மை திகைக்கவைக்கும். திகிலூட்டும். பதறவைக்கும். பதைபதைக்கச் செய்யும்.
இவை அனைத்துக்கும் நடுவே அழகாய் இருக்கும் கமலஹாசன். அழகு மிளிர வலம் வரும் ஜெயப்பிரதா. அழகு கொட்டிக்கிடக்கும் சிங்கப்பூர் என அழகழகாய் சேர்த்துச் சேர்த்து படம் பண்ணியிருப்பார் பாலசந்தர். 
  படத்தில் சந்துரு எனும் கதாபாத்திரத்தில் கமல். கிடாரில் சோககீதம் பின்னணியில் இசைக்க, உதட்டை வரைந்துகொண்டிருப்பார் கமல். கல்யாணம் பற்றி பேச்செடுப்பார் அவரின் அம்மா. ‘என்னடா ஒரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா?‘ என்பார். ‘அம்மா நான் ஏற்கெனவே கல்யாணமானவன். விடோயர்‘ என்பார். 
  காரிலும் அந்த உதடு ஓவியம். கூடவே கிடாரின் ஓவியம். கார் சாலையில் பயணிக்கும். கமல் ஓட்டிக்கொண்டிருப்பார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலை மியூஸிக் அகாடமியைக் கடக்கும். சட்டென்று அங்கிருந்துதான் பிளாஷ்பேக் ஆரம்பமாகும். 
  இசைக்கச்சேரி. முதலில் அறிமுகம் என்று சொல்லிவிட்டு, கமல் தன் குழுவினரை அரங்கத்தில் உள்ளவர்களுக்கு அதாவது மியூஸிக் அகாடமி அரங்கத்தில் உள்ள ரசிகர்களுக்கு சொல்வது போல, திரை ரசிகர்களுக்குச் சொல்லுவார். அது கே.பி.டச். 
 படம் முழுவதும் இதுமாதிரியான கே.பி.டச்கள் நிறைய நிறைய. கமலின் நண்பனாக, இசைக்குழுவில் கிடாரிஸ்டாக ரஜினி.தீபக் எனும் கதாபாத்திரம். அந்த குறுந்தாடியும் குறும்பும் ரஜினி ஸ்டைலை வெளிக்கொண்டு வந்துகொண்டே இருக்கும். சின்னச்சின்ன திருட்டுகளைச் செய்யும் எல்லாமே ரசிக்கவைக்கும். அதிலும் ரஜினி ஸ்டைல் வெளிப்படும். 
 அநேகமாக, கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப்படம் இது. சிங்கப்பூரையும் காட்டவேண்டும். சிங்கப்பூருக்குள் கதையையும் நுழைக்கவேண்டும். கமலுக்கும் தீனி போடவேண்டும். ரஜினியையும் போகஸ் செய்யவேண்டும். அத்தனையையும் செய்திருப்பார் கே.பாலசந்தர். 
 கமலின் அறைக்குள் ஜெயப்பிரதா வந்து ஆட்டோகிராப் கேட்பது, விமான நிலையத்தில் வேறொரு ஸ்டைலில் அவளைப் பார்ப்பது, என்னடா இப்படி திருடுறான் என்று முணுமுணுப்பது. ப்ளைட்ல எஞ்சினைத் திருடாம இருந்தா சரி என்று சொல்வது. ரஜினியின் அரைகுறை இங்கிலீஷ், ‘உங்களுக்குத் தமிழ் தெரியாதா?‘ தெரியுமே. ஏன் உங்களுக்கு இங்கிலீஷ் புரியாதா?, புரியும். இதுமாதிரி அரைகுறை இங்கிலீஷ் பேசினா பிடிக்காது.  சோனா என்கிற ஜெயப்பிரதாவுக்கு ஜோஸியம் பார்ப்பது, உனக்கொரு அப்பா அம்மா என்று சொல்லுவது. பிடிஓ என்று போட்டிருக்கே என்று கையைத் திருப்புவது என்று சுஜாதாவின் சேஷ்டைகளும் கேபியின் முத்திரைகளும் படத்தைக் கவிதையாக்கிக் கொண்டே இருக்கும். படம் முடியும்போது அழகாக பைண்ட் செய்யப்பட்ட கவிதைப் புத்தகமாக நம் கைகளில் உட்கார்ந்திருக்கும். மனதிலும்தான்! 
   ரஜினியின் சிகரெட்டை தூக்கிப் பிடித்து வாயில் பிடிக்கிற ஸ்டைலைக் கொண்டே காட்சி வைத்திருப்பது தனி சாமர்த்தியம். நம்ம புதுப்புது அர்த்தங்கள் கீதாவை சின்ன கேரக்டரில் அறிமுகப்படுத்தியிருப்பார். எஸ்.வி.சேகரையும்தான். 
  இதில் ஒரு விஷயம்... 79ல் வந்த படம். இளையராஜா வந்த பிறகு வந்தபடம். இன்னொரு விஷயம்... ஒரு படத்துக்குக் கீழே சப்டைட்டில் போடுகிற வழக்கம் இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டபடம் நினைத்தாலே இனிக்கும் என்றுதான் நினைக்கிறேன். நினைத்தாலே இனிக்கும் என்று போட்டுவிட்டு, கீழே இது ஒரு தேனிசை மழை என்றும் போட்டிருப்பார் பாலசந்தர். உண்மையிலேயெ தேனிசை மழைதான். 
  படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன். வெளுத்துவாங்கியிருப்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். சொல்லப்போனால், எம்.எஸ்.வி.யின் இசைபிரமாண்டமாகவே ரசிகர்கள் மிரண்டுபோனார்கள். கொண்டாடினார்கள். பாடிப்பாடி களித்தார்கள். படம் முழுவதும் பாட்டுகள்தான். சென்னை மேடையில் எங்கேயும் எப்போதும், விமானத்தில் சோனா, சிங்கப்பூரில் தடுக்கி விழுந்தால் பாடல்கள் என்று பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கியிருப்பார் பாலசந்தர். 
 முக்கியமாக, ‘நநநநநநந நநநநநாநா... நநநநநநநநநநா நினைத்தாலே இனிக்கும்‘ என்று ஒற்றை வரியை வைத்துக்கொண்டு ஒரு பாடலே உருவாக்கியிருப்பார் எம்.எஸ்.வி. பாரதி கண்ணம்மா, யாதும் ஊரை யாதும் கேளீர், சம்போ சிவசம்போ, நம்ம ஊரு சிங்காரி, இனிமை நிறைந்த உலகம் இருக்கு, நடுவிலே ஒரு இங்கிலீஷ் பாடல் வேறு. ரகளை பண்ணியிருப்பார். படத்தின் பின்னணி இசையிலும் ஸ்டைலீஷான இசையைக் கொடுத்திருப்பார். எங்கேயும் எப்போதும் பாடலில், மகுடி இசையைப் போட்டு நம்மையும் தலையாட்ட வைத்திருப்பார். போதாக்குறைக்கு ரஜினி சண்டையிடும் போது அதற்கு ஒரு பாட்டையும் போட்டிருப்பார். சம்போ பாட்டு, எம்.எஸ்.வி. வழங்கிய போனஸ். கண்ணதாசனின் பாடல்கள் கூடுதல் சுவை. அதீத தித்திப்பு. 
 ‘அன்பரே... அதென்ன அப்படியொரு பூகம்பத்தை என் மனதில் ஏற்படுத்திவிட்டீர்கள்‘ என்று ரஜினிக்கு வந்திருக்கும் கேசட், அதகளம் பண்ணிவிடும். 
 கமல் ஜெயப்ரதாவிடம் கேட்க, அதற்கு இல்லை என்று தலையாட்டிவிட்டு அப்படியே மெல்ல மெல்ல ஆமாம் ஆமாம் என்பது போலத் தலையாட்டுவார். கடைசியில் ஜெயப்பிரதா கேள்வி கேட்கும்போது, விழும் கண்ணீரை அடக்கிக்கொண்டு, இல்லை இல்லை என்பது போல தலையாட்டுவார். அப்படியே மெல்ல மெல்ல ஆமாம் என்பது போல் மாற்றித் தலையசைக்கும் போது, அந்த பாலசந்தர் டச்சில் கரைந்துவிடுவோம் நாம்! 
  கமலும் ரஜினியும் ஜெயப்பிரதாவும் கே.பாலசந்தரும் எம்.எஸ்.வி.யும் எப்போதும் நினைக்கும்படி செய்திருப்பார்கள். நினைத்தாலே இனிக்கும் படத்தை எப்போதும் நினைக்கலாம். நினைத்தாலே இனிக்கும். பாடல் மொத்தமும் தேன். தேனிசை மழையில் எப்போதும் நனையலாம். நினைத்தாலும் இனிக்கும்; கேட்டாலும் இனிக்கும்! 

https://www.kamadenu.in/news/cinema/3615-ninaithale-inikkum-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

மெளன கீதங்கள் - அப்பவே அப்படி கதை


 

 

mouna-geethangal-appave-appadi-kadhai

மெளனகீதங்கள் - பாக்யராஜ், சரிதா

 

 

கதை சொல்வது லேசுப்பட்ட காரியம் அல்ல. கதை சொல்வதில் ஒரு சுவாரஸ்யமும் அழகும் இருக்கவேண்டும். அப்படி நேர்த்தியாக கதை சொல்லத்தெரியாவிட்டால், கம்ப ராமாயணம் கூட போரடித்துவிடும். அப்படியொரு நறுவிசு சொல்லும் விதத்தில் இருந்துவிட்டால், பாட்டி வடை சுட்ட கதையைக் கூட வாயைப் பிளந்துகொண்டு கேட்போம். தமிழ் சினிமாவுக்கு அப்படியொரு அட்டகாச கதைசொல்லியாக இருப்பவர் கே.பாக்யராஜ். கதை சொல்வதில் மன்னன். திரைக்கதை அமைப்பதில் மன்னாதிமன்னன்!

அசகாய வித்தைக்காரரான பாக்யராஜின் மூன்றாவது படம் மெளனகீதங்கள். மூன்று படங்களில் எப்படியான வெற்றிகளும் புகழும் கிடைக்கவேண்டுமோ அவை அனைத்தும் இந்த ஒரே படத்தில் கிடைத்தது அவருக்கு!

 

79ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் பண்ணினார். சுமாராகத்தான் ஓடியது. 80ம் ஆண்டு ஒரு கை ஓசை இயக்கினார். அதுவும் சுமாராகத்தான் போனது. 81ம் ஆண்டு ஜனவரி குடியரசு தின வெளியீடாக, 23ம் தேதியே ரிலீஸ் செய்தார் மெளனகீதங்கள் படத்தை! அவ்வளவுதான். ‘யாருப்பா இந்த பாக்யராஜ்’ என்று ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் தலையில் வைத்துக் கொண்டாடத் தொடங்கினார்கள் ரசிகப்பெருமக்கள்.

புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜ்தான் நாயகன். ஆனால் அதில் அவருக்குக் குரல் கொடுத்திருப்பது கங்கைஅமரன். சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் இரண்டாவது ஹீரோ. ஒரு கை ஓசையில் நாயகன். ஆனால் வாய்பேச முடியாதவர். மெளனகீதங்கள்தான் முழு ஹீரோவாக, அவரே அவர் குரலில் அவருக்கே உண்டான டச்...களுடன் படம் பண்ணினார்.

பாக்யராஜின் மைனஸ் பாயிண்ட் என்று இரண்டைச் சொல்வார்கள். ஒன்று மூக்குக்கண்ணாடி. இன்னொன்று... அவரின் கீச்சுக்கீச்சுக் குரல். தமிழ் சினிமா வரலாற்றில், மூக்குக்கண்ணாடி ஹீரோவாகவும் ஒளிர்ந்தார். கீச்சுக்கீச்சுக் குரல் நாயகனாகவும் பேசப்பட்டார். இது ரெண்டுமே மிகப்பெரிய சாதனை. தன் பலஹீனங்களையே பலமாக்கிக் கொள்கிற சூட்சுமமும் சாமர்த்தியமும் கொண்ட பாக்யராஜின் வெற்றி, அசாதாரணமானது. அத்தனையிலும் இருக்கிறது அவரின் திறமை!

இன்னொரு விஷயம்... வாரப் பத்திரிகை ஒன்றில், தொடர்கதை போல இந்தப் படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு, கதை முழுவதுமே சொல்லப்பட்டது. அப்படியிருந்தும் மெளனகீதங்களை ஆர்ப்பரித்துக் கொண்டாடியது தமிழ் சினிமா.

81ம் ஆண்டு வந்த படம் இது. 37 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இன்றைக்கும் மெளனகீதங்கள், மக்கள் மனதில் பசுமரத்தாணி.

படத்தின் டைட்டிலில் இருந்தே தொடங்கிவிடும் பாக்யராஜின் ரவுசு. கோவையில் இருந்து கம்பீரமாக காரில் சென்னைக்கு வருவார் பகவதி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கே.கோபிநாதன். படத்தின் டைரக்டரான பாக்யராஜ் ஹீரோயின் தொடங்கி படத்தின் அத்தனை டெக்னீஷியன்களையும் அறிமுகப்படுத்தி வைப்பார். டைட்டில் ஆரம்பமாகும். காரில், பிறகு டாக்ஸியில், அடுத்து ஆட்டோவில், அதற்குப் பிறகு நடந்து வருவார் தயாரிப்பாளர். ஆனால் இப்படியான காட்சிக்கு நேர்மாறாக, போட்ட தியேட்டர்கள் அனைத்திலும் படம் பார்க்க உள்ளே சென்றவர்களைவிட, ஹவுஸ்புல் போர்டு பார்த்துவிட்டு வெளியேறியவர்கள்தான் அதிகம்.

மூன்றாவது மாடியில் இருக்கும் பெண்ணின் கூந்தல், தரைக்கு வருவதும் அந்த கூந்தலை வெட்டுவதும், அப்போது எடிட்டிங் என்று டைட்டில் போடுவதும் ரசனை ப்ளஸ் ரகளை. இளையராஜா இசைக்கான மெட்டுகளைப் போட்டுக்கொண்டிருப்பார். பின்னணியில் மாமன் ஒரு நா மல்லிகைப்பூ கொடுத்தான் என்ற டியூன். அந்த மெட்டுக்கள் பேப்பரில் இருந்து சிலவற்றை கங்கைஅமரன் லபக்கிவிடுவார். இசை கங்கை அமரன் என்று டைட்டில் வரும்.

’மெளனகீதங்கள் படம் பாக்கபோறியா. டிக்கெட் கிடைக்காது சீக்கிரமே போயிரு. முக்கியமா, டைட்டிலைப் பாக்க மறந்துடாதே. செம காமெடி போ’ என்று சொன்னவர்கள் ஏராளம்.

கோயம்புத்தூர். பையனுடன் பஸ் ஏறும் சரிதா. ஆடியன்ஸ் அப்படியே ஷாக்காகிப் போவார்கள். என்னடா இது சரிதாதான் ஹீரோயின். அதுவும் பையனோட எண்ட்ரி. அப்படீன்னா ஹீரோ? என்று யோசிக்கும்போதே பெட்டிபடுக்கை சகிதமாக, அதே பஸ்சில் ஏறுவார் பாக்யராஜ். அட ஹீரோயின் மகனோட வர்றாங்க.  ஹீரோ என்னடான்னா, தனியா வர்றாரு. சீட்டின் நுனிக்கு வந்துவிடுவார்கள் ஆடியன்ஸ்.

அதன் பிறகு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்குப் பயணமாகும் பஸ். கூடவே கதையும் பின்னோக்கிப் பயணிக்கும். ஒற்றைவரியில் பின்னோக்கிப் பயணிக்கும் என்று சாதாரணமாகச் சொல்லிவிடமுடியாது. அங்கே, ஆங்காங்கே ஜிம்மிக்ஸ் வித்தை திரைக்கதையை செருகிக் கொண்டே வருவார் இயக்குநர் பாக்யராஜ்.

இருவரும் பார்த்துக்கொண்டதும் அங்கே ஒருபெண்ணுடன் இருக்கிற பாக்யராஜ், அடுத்து சரிதாவுடன் டூயட் பாடுகிற பாக்யராஜ், குடித்தனம் நடத்துகிற காட்சி என பரபரவென, தடதடவென வந்து போகும். ‘ஓ... இவர்கள் பிரிந்ததற்கு அந்தப் பெண் காரணம்’ என்பதை நமக்குச் சொல்லிவிட்டு கதைக்குள் செல்வார் பாக்யராஜ்.

இண்டர்வியூ. பாக்யராஜ், சரிதா இருவருமே வேலைக்காக வந்திருக்க, அங்கே ஒரு பொய் சொல்லுவார் சரிதா. அதையடுத்து வருகிற காட்சிகளெல்லாம் காமெடி அலப்பறைதான். சரிதா சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி, கடனை உடனை வாங்கி கேட்டதெல்லாம் வாங்கித் தருவார். ஒருகட்டத்தில், சரிதாவுக்கு வேலை கிடைத்த அதே இடத்தில், மேலதிகாரியாக வரும் போதுதான் உண்மை தெரியவரும்.

‘உங்க பாட்டிக்கு பகவத்கீதை. உன் தங்கச்சிக்கு ஸ்கிப்பிங் ரோப்பு. உன் தம்பிக்கு கிரிக்கெட் பேட்டு. எங்க அப்பன் என்ன நோட்டு அடிக்கிறான்னு நெனைச்சியா?’ எனும் வசனம் செம பேமஸ்.

அதன் பின்னே மலருகிற காதல், கல்யாணத்தில் முடிவதும், அங்கிருந்து தொடங்கும் தாம்பத்ய வாழ்வில், அடிக்கடி தேவையே இல்லாமல் முட்டிக்கொள்வதும் அன்றாடம், எல்லார் வீடுகளிலும் நடக்கிற சின்னச்சின்ன ஊடல்கள். அதை திரையில் அப்படியே காட்டிருக்கான்யா இந்த ஆளு என்று பாக்யராஜை ஆராதித்தார்கள். வரவேற்று உச்சிக்குக் கொண்டு சென்றார்கள்.

சரிதாவின் விதவைத் தோழிக்கு வரவேண்டிய எல்.ஐ.சி. பணச்சலுகைக்காக தன் கணவன் பாக்யராஜை உதவிக்கு அனுப்ப, ஒருகட்டத்தில் இருவருமே சந்தர்ப்பவசத்தால், வசமிழக்கிறார்கள். ஆனால் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் புழுங்கித் தவிக்கும் பாக்யராஜ், ஒருகட்டத்தில் விஷயத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்க, அங்கே வெடிக்கிறது குடும்ப பூகம்பம். பாசம் வைத்தவர்கள், பாளம்பாளமாகப் பிரிகிறார்கள். அப்படிப் பிரிந்தவர்கள், அப்போதுதான் பஸ்சில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

இப்போது பிரிவு வளர்ந்தது போலவே, தம்பதிக்குப் பிறந்த பையனும் வளர்ந்திருக்கிறான்.

ஒரே அலுவலகம். வீடும் எதிரெதிராக. ஆனாலும் கணவனை மன்னிக்கத் தயாராக இல்லை. இதனிடையே பையனுடன் ரகசிய சந்திப்பு. அடிக்கடி ஒட்டிக்கொண்டு உறவாடுதல். இதனால் மேலும் முட்டிக்கொள்கிறார்கள்.

இதேநிலை நீடிக்க, மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை அழகு ததும்ப, பாசம் பொங்க, உறவின் உன்னதம் உணர்த்தி, தன் திரைக்கதை ஜாலத்தால் அசத்தியிருப்பார் பாக்யராஜ்.

ரகுநாதன், சுகுணா எனும் அவர்களின் கேரக்டர்களின் பெயர்களே மக்கள் மனங்களில் பதிந்துவிட்ட ஒன்று.

பஸ்சில் வழியில் நிற்க, அங்கே பெண் சம்பந்தமாக ஒரு களேபரம். மாட்டிக்கொண்டு முழிப்பார் பாக்யராஜ். அங்கிருந்து ஒரு பிளாஷ்பேக். மீனவநண்பன் படத்தை பாக்யராஜும் சரிதாவும் தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்க, பாத்ரூம் சென்றுவிட்டு, இருட்டில் வேறு பெண்ணுக்கு அருகில் அமர்ந்துவிட, அங்கே நடக்கும் அதகளத்தை நினைத்துப் பார்ப்பார்.

இன்னொரு காட்சி. இருவருக்கும் சின்ன சண்டை. மாடியில் தனியே படுத்துக்கொள்வார் பாக்யராஜ். அங்கே எதிர்வீட்டு மாடியில் ஒரு குழந்தை நின்றிருக்க, அதற்கு பறக்கும் முத்தம் தருவார். புருஷன் யாருக்கு பறக்கும் முத்தம் தருகிறார் என்று வெளியே வந்து பார்க்க, அங்கே குழந்தை இருந்த இடத்தில், பெண்மணி இருப்பார். அவ்வளவுதான். மீண்டும் களேபரம். அழுகை. சத்தியம். ‘ஒரு சின்னத்தப்பு பண்ணினீங்கன்னாக் கூட தாங்கமாட்டேன் என்று சொல்லும்போது சரிதா பிரமாதப்படுத்தியிருப்பார்.

வேலை விஷயமாக வெளியூர். அங்கே ஹோட்டலில் சின்ன சபலம். சரி என்று ஸிலிப்பாகும் தருணத்தில், டிரங்க்கால். மனைவி போன். அட்டெண்ட் பண்ண திரும்ப வருவார். போலீஸ் ரெய்டு. நீங்க தப்பிச்சதே பெரிய விஷயம். எல்லாம் மாங்கல்ய பலம் என்பார் ஒருவர். படம் பார்க்கிற ஆண்கள் ஜெர்க்காகி, சுதாரித்துக்கொள்கிற தருணம் அது!

மனைவிக்கு அந்த மூன்று நாள் என்பதெல்லாம், அப்போது கணவன் கோபப்படும்போதெல்லாம் திரைக்கு கொஞ்சம் புதுசுதான். ஆனால் மூன்றுநாளின் வேதனையை பொளேரென்று வசனங்களாலும் சரிதாவின் நடிப்பாலும் உணர்த்திவிடுவார். அதனால்தான் பாக்யாரஜை ஆண்களைவிட பெண்கள் இன்னும் இன்னும் என கொண்டாடினார்கள். ’ஜாக்கெட் ஹூக்கை கொஞ்சம் மாட்டிவிடுங்க’ என்று சரிதா கெஞ்சுவார். ஆபீஸ் போற நேரத்துல... என்று எரிந்துவிழுவார். ‘ஒரு ஹூக்கை மாட்டுறதுக்கு எவ்ளோ நேரமாகும். கழட்டுறதுன்னா மட்டும் வேகமாக் கழட்டுறே’ என்று திட்டுவார். கொஞ்சம் சரசம், கொஞ்சம் கேலி, கொஞ்சம் ஆணின் மனம் என எல்லாவற்றையும் சொல்லிவிடுவார், அந்தக் காட்சியில்!

ஆபீஸில் உடன் வேலை பார்க்கும் கிருஷ்ணமூர்த்தி, பஸ் ஸ்டாப்பில் சரிதாவிடம் ஒருமாதிரியாகப் பேசுவார். அவரை செருப்பால் அடித்துவிடுவார் சரிதா. பிறகு சரிதாவை ஒரு ஹோட்டலுக்கு வரவைத்து, ரூமில் நெருங்கக்கூட மாட்டார். ‘உன்னைத் தொடக்கூடமாட்டேன்’ என்று முடியை, சட்டையைக் கலைத்துக்கொள்வார். வெளியே சென்றால்... அலுவலக ஊழியர்கள். புதுவிதமாக, நாயகியைப் பழிவாங்கும் வில்லன் கதாபாத்திர குணமும் பகீர் கிளப்பும்.

அந்தக் குட்டிப் பய மாஸ்டர் சுரேஷ். பட்டையக் கிளப்பியிருப்பான். பாக்யராஜ் போலவே பேசுவதும் இமிடேட் செய்வதும் செம ரகளை. ‘விஷம் குடிச்சு செத்துடலாம்டா’ என்பார் சரிதா. ‘நீ வேணா விஷம் குடிச்சிக்கோ. நான் எங்கப்பாவோட கொஞ்சகாலம் இருந்துட்டு, அப்புறமா செத்துப்போறேன்’ என்பான். தியேட்டரே கைத்தட்டும்.

உடன் வேலை பார்க்கும் பெண்மணி. தன் தங்கையையே கணவனுக்கு கட்டிவைத்து ஒன்றாகவே வாழ்வார்கள். ‘வாழாவெட்டியா இருக்கறதைவிட, இது பெட்டர்’ என்பார்.

அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் மனைவி இறந்துவிடுவார். ‘லச்சுமி. பத்துவருஷம் என்னை குழந்தை மாதிரி பாத்துக்கிட்டியே. என்னை விடுங்க., நானும் இந்தத் தீயில விழுந்து செத்துடுறேன்’ என்று கதறுவார். அவரே அடுத்த மாதம் இன்னொரு கல்யாணம் என்று வந்து நிற்பார்.

பொண்டாட்டி செத்த உடனே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற இவரு எங்கே. விவாகரத்தே நடந்தாலும் நீதான் வேணும்னு உன்னையே சுத்தி வர்ற உன் புருஷன் எங்கே என்பார்.

படத்தின் கால் மணி நேரம், டயலாக்கே இருக்காது. வசனங்களால் கைத்தட்டுகள் அள்ளுகிற பாக்யராஜ், வசனமே இல்லாமல் இயக்கியிருப்பார்.

ஒரு குடும்ப வாழ்க்கையை, இல்லற மேன்மையை, அன்பின் அடர்த்தியை அழகிய டிராமாவாக்கி அசத்தியிருப்பார் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ்.

கங்கை அமரன் இசை. மூக்குத்திப் பூமேலே, மாசமோ மார்கழி மாசம், டாடிடாடி என்றெல்லாம் பாட்டுகள் எப்பவுமே, கேட்கலாம் ரகம்!

வெள்ளிவிழா படம். மிகப் பிரமாண்டமான வெற்றிப்படம். பெண்களின் பல்ஸை சரியாகப் பிடித்து, அதை உணர்ந்து கதைப்படுத்தியிருப்பதும் காட்சிப்படுத்தியிருப்பதும்தான் பாக்யராஜ் எனும் கலைஞனின் மகா வெற்றி! ஒவ்வொரு கணவனும் மனைவியும் பார்க்கவேண்டும். பார்த்தால், உண்மையாக வாழத்தொடங்கிவிடுவார்கள். இப்போதும் உண்மைதான் என்றால், இன்னும் உண்மையாய் அன்பாய் இருக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இன்னும் மனதுள் இசைத்துக்கொண்டே இருக்கின்றன... மெளன கீதங்கள்!

https://www.kamadenu.in/news/cinema/3691-mouna-geethangal-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

சலங்கை ஒலி - அப்பவே அப்படி கதை!


 

 

salangai-oli-appave-appadi-kadhai

சலங்கை ஒலி - கமல்ஹாசன், ஜெயப்ரதா

 

 

 இங்கே... உலகின் ஆகச் சிறந்த ஆச்சரியமும் சோகமும் என்ன தெரியுமா? காதலில் யாரெல்லாம் தோற்றுப்போனார்களோ அவர்களையெல்ல்லாம் பட்டியலிட்டு, பட்டயமாய் வைத்து சொல்லிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் கலையில் தோற்றவர்களைக் கண்டுகொள்ளாமலேயே புறந்தள்ளியிருக்கிறது. தோற்றுவிட்ட கலைஞனின் வாழ்வை, வலிக்க வலிக்கச் சொல்லிப் பதிவு செய்து, நம்மைப் பதறடித்த, சிதறடித்த சலங்கையின் ஒலி... அவ்வளவு சீக்கிரத்தில் மனக்காதுகளில் இருந்து தள்ளிப்போய்விடாது!

ஹிட் கொடுத்த நடிகர்களையே சினிமா சுற்றிவரும். வெற்றி அடைந்த கலைஞனுக்கே பரிசுகள் வழங்குவார்கள். சாதனை படைத்தவனையேக் கொண்டாடித் தீர்ப்பார்கள். ஆனால் இயக்குநர் கே.விஸ்வநாத், அந்த சலங்கை ஒலி பாலுவை எங்கே பார்த்தார், பார்த்தாரா, கற்பனையா, அந்தக் கற்பனைக்குப் பின்னே இருக்கிற நிஜம்... என்பதையெல்லாம் திரையில் கொட்டிவிட, கமல் எனும் மகா கலைஞனைத் தேர்ந்தெடுத்து, அவர் வழியே ஒலியை, சலங்கை ஒலியை, ஒலிக்கச் செய்து, ஒளிரச் செய்து, முழு பெளர்ணமியென தகதகக்க வைத்திருந்தார்.

 

1983ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சலங்கை ஒலி தமிழில் ரிலீசானது. ஆமாம் முதலில் சாகர சங்கமம் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி, பிறகு தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. இன்னும் பலர், ‘அட... டப்பிங் படமா? பொய்யெல்லாம் சொல்லாதீங்க’ என்று உண்மையை நம்ப மறுக்கிறவர்களும் உண்டு. காரணமும் இருக்கிறது. அத்தனை நேர்த்தியாக டப்பிங் செய்யப்பட்டிருக்கும், மிக முக்கியமான படம் சலங்கை ஒலி.

பரதம் மீது ஆர்வமும் வெறியும் கொண்டு கற்றுக்கொள்ளும் ஏழை சமையற்கார அம்மாவின் மகன் பாலு. கடைசிவரை, அவனின் திறமைக்கு மேடை கிடைக்காமலே போகிறது. குடிக்கத் தொடங்குகிறான். அம்மி கொத்துவதற்கு சிற்பி எதற்கு கணக்காக, பரதநாட்டியங்களின் சகல கலைகளிலும் தேர்ந்த பாலு, அதனை விமர்சனம் செய்யும் பத்திரிகைப் பணியில் இருக்கிறான். அதுவும் எல்லாமாகவும் இருக்கிற நண்பனின் உதவியுடன்!

கலை வளரவளர, அந்தக் கலையின் மூலமாகவே காதலும் வளருகிறது. அவனை மட்டுமின்றி அவன் கலையையும் சேர்த்து விரும்புகிற அந்தப் பெண்... அவனின் எதிர்கால வளர்ச்சிக்காக, அவனின் திறமைக்கான மகுடத்திற்காக அல்லாடுகிறாள். ஒருகட்டத்தில், கலையும் கைகொடுக்கவில்லை; காதலும் கைசேரவில்லை. இன்னும் குடிக்கிறான் பாலு. மறக்கவேண்டும் என்பதற்காக, மறக்காமல் குடிக்கிறான்.

காலங்கள் நர்த்தனமாடுகின்றன.

அதுவொரு பரத நிகழ்ச்சி. அங்கே தப்பாக அபிநயம் பிடிக்கும் பெண்ணைப் பற்றி பாலு எழுத, அந்தப் பெண்ணும் அவளின் காதலனும் பத்திரிகை ஆபீசுக்கே வந்து கொந்தளிக்கிறார்கள். அப்போதுதான் அவனின் நடனத்திறமையே ஆடியன்ஸான நமக்குத் தெரிகிறது.

அந்தப் பெண் யாருமல்ல... பாலு காதலித்தவளின் மகள். இந்த விவரமெல்லாம் தெரிந்ததும் அந்த ஊருக்கு வருகிறாள். முன்னாள் காதலனின் நண்பனைப் பார்க்கிறாள். குடித்துக்குடித்து அவன் அழிந்துகொண்டே வருவதை விவரிக்க, பதறிப் போகிறாள். நண்பனின் மனைவிக்குச் சிகிச்சை, அந்த ஆடத்தெரியாத பெண்ணுக்கு நடனப்பயிற்சி என்றெல்லாம் சொல்லி, அவனை... பாலுவை... ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அங்குதான், தன் முன்னாள் காதலியைப் பார்க்கிறான். அப்படி அவன் பார்க்கிற வேளையில், விதவையாக இருந்தபோதிலும் அவனுக்காக, அவனின் இருதயக்கூடு வெடித்துவிடாமல் இருக்கவேண்டுமே என்பதற்காக, நெற்றியில் குங்குமத்தை வைத்துக்கொண்டு அவனெதிரே வருகிறாள். அவ்வளவுதான்... அவள் மீது வைத்திருந்த மொத்தக் காதலையும் மதிப்பையும் அவளின் பெண்ணின் மீது அன்பாகவும் கனிவாகவும் கரிசனமாகவும் நேசமாகவும் கொட்டித்தீர்க்கிறான். தன்னிடம் உள்ள மொத்த வித்தையையும் அவளுக்குச் சொல்லிக்கொடுக்க நினைக்கும் வேளையில், தன்னுடைய முன்னாள் காதலியானவள், கணவனைப் பறிகொடுத்து விதவையாக நிற்கிறாள் எனப் புரிந்து உடைகிறான். இதயம் பலஹீனமாகிறது.

உடல்நிலை மோசமாகிவிட, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. அதேசமயம், படுத்தபடுக்கையாக இருந்துகொண்டே, அவளுக்கு நடனப்பயிற்சி கொடுக்கிறான். அவளின் அரங்கேற்றம் நிகழ்கிறது.

அங்கே... அந்தப் பெண் ஆடுகிறாள். ஆனால் பாலு எனும் கலைஞனும் அவனையும் அவனின் கலையையும் முழுமையாக நேசித்து பூஜித்த அந்தப் பெண்ணின் அம்மாவும் அங்கே, பாலுவையேப் பார்க்கிறார்கள். பாலு ஆடுகிறான் என்பதாகவே தோன்றுகிறது அவர்களுக்கு!

நடன குருவை, பாலுவை அறிமுகம் செய்துவைக்க, மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்து கரவொலி எழுப்புகிறது. அது அவனுக்கு, தோற்றுப்போன பரதக் கலைஞனுக்கு புதியதொரு அனுபவம். இது கிடைக்கத்தான் பால்யத்தில் இருந்து ஆசை கொண்டான் பாலு. ஆகவே, இன்னும் இன்னும் இன்னும் இன்னும் என்று கைத்தட்டச் சொல்கிறான். கைத்தட்டக் கேட்கிறான். காதாரக் கேட்கிறான். இவையெல்லாம் மரணத்தருணத்தில் கிடைக்க... நிம்மதியாகக் கண்மூடி இறக்கிறான். படமும் முடிகிறது.

கனத்த இதயத்துடன், பாக்கெட்டில் இருந்து ஆண்கள் கைக்குட்டையையும் பெண்கள் சேலைத்தலைப்பையும் கொண்டு, கண்களைத் துடைத்தபடி, இறுகிய முகத்துடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள்.

இப்போது சலங்கை ஒலி பார்த்தாலும், பாலு எனும் கலைஞன் எதிரே வந்து நிற்பான். கனத்த இதயத்துடன், நீர் நனையும் கண்களுடனும் இறுகிய முகத்துடனும் நாம் இருப்போம்.

மிக உன்னதமான படைப்பு சலங்கை ஒலி. படம் வெளியாகி, 35 வருடங்களாகி விட்டன. இன்றைக்கும் நம் மனங்களில், புத்தம்புதுகாப்பியாக ஒளிர்கிறான் பாலு.

சங்கராபரணம் தந்த கே.விஸ்வநாத்தின் இன்னுமொரு பிரமாண்டப் படைப்பு. கமல் எனும் கலைஞனின் மகுடத்தில், இன்னுமொரு மயிற்பீலி. இளையராஜா எனும் இசையரசனின் ராஜாபாட்டைகளில் தனியிடம் பிடித்த படம். கவிப்பேரரசு எனும் ரசனைக் கவிஞனின் ஒவ்வொரு வரிகளிலும் பரதமும் காதலும் நட்பும் தோல்வியும் தெறித்து விழச் செய்யும் விதமான படைப்பு. ஜெயப்ரதா எனும் பேரழகும் பெரு நடிப்பும் கொண்ட உன்னத நடிகையின் முக்கியப் படங்களில் உயிர்ப்பானதொரு படம்... சலங்கை ஒலி!

சைக்கிள் ரிக்‌ஷாக்காரருக்கு உதவியாக இறங்கிக்கொண்டு, தள்ளிக்கொண்டே வரும் போது, டைட்டில் முடியும். கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் கே.விஸ்வநாத் என்று கார்டு போடுவார்கள்.

அங்கிருந்து தொடங்கும் கமல், கே.விஸ்வநாத் கூட்டணியின் அதகள ஆட்டம்.

சரத்பாபு, கமலின் நண்பன். சரத்பாபுவின் மனைவியோ கமலுக்கு அம்மா மாதிரி. பரதத்தில் சகலமும் கற்றுத் தேர்ந்து பெரிய ஆளாக வரவேண்டும் எனும் ஆசை கமலுக்கு. ஆனால் நேரமும் காலமும் காசும்பணமும் வாய்க்கவேண்டுமே! அவரின் அம்மா சமையல் வேலை. ரயில்வே ஸ்டேஷனில், அம்மாவைப் பார்க்க கமலும் சரத்பாபுவும் வருவார்கள். ரயில் கிளம்பும்போது அம்மா செலவுக்குக் காசு தருவார். ரயில் கிளம்பிவிடும். ‘வயசான அம்மாகிட்ட காசு வாங்குறியே. வெக்கமா இல்ல. நாம சம்பாதிச்சு அவங்களுக்குக் கொடுக்கணும்டா’ என்பார் சரத்பாபு. உடனே ஓஓஓஓஒடிப்போய், அம்மாவிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘அடுத்த மாசம் பணம் அனுப்பறேம்மா. உடம்பை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ’ என்று சொல்லிவிட்டு நிற்பார். தான் சொன்னதைக் கேட்ட நண்பனை நெகிழ்வுடன் அணைத்துக்கொண்டு நடப்பார் சரத்பாபு. ‘அம்மாகிட்ட பணம் அனுப்பறேன்னு சொல்லிட்டேன். எதாவது வேலை வாங்கிக் கொடுடா’ என்பார் கமல். அங்கே நாம் மெர்சலாகிவிடுவோம்.

போட்டோ ஸ்டூடியோக்கார பையனின் அலும்பு செம. கமலை விதம்விதமாக போட்டோ எடுக்கிறேன் என்று, முதுகு, ஒற்றைக் கால், கன்னம் சொரியும் போது என்றெல்லாம் எடுத்து அசிங்கப்படுத்த, அதே காட்சிகளை கமலுக்குத் தெரியாமல் ஜெயப்பிரதா எடுத்திருப்பார். அந்தக் காட்சி, காமெடிக்கு காமெடி. ரசனைக்கு ரசனை.

கல்யாண மண்டபத்தின் சமையற்கட்டில் அம்மா முதன்முதலாகப் பார்க்கிற வகையில் ஆடுகிற ஆட்டம், நம்மைக் கலங்கடித்துவிடும். கமலுக்கும் ஜெயப்ரதாவுக்குமான பழக்கம், நட்பாகி, அங்கே சொல்லாத காதலாய் ஒளிந்துகொண்டிருக்க, சலங்கையின் ஒலியுடன் காதலும் ஜதி சொல்லிக்கொண்டே இருக்கும்.

சினிமாக்காரரிடம் அழைத்துச் செல்ல, அங்கே கீதாவுடன் கெட்ட ஆட்டம் போடும்போது, கமலின் ரியாக்‌ஷன்... அப்ளாஸ் அள்ளும். அதன் பிறகு அந்த ஆவேசத்தை நடனமாடித் தீர்த்துக்கொள்வார். அந்த இடம் கமல் தன் நடிப்பாலும் நடனத்தாலும் மிரட்டிவிடுவார்.

கதக் கற்றுக்கொள்ள குருவிடம் சொல்லச் சொல்லி ஒரு பெண்ணிடம், பணமில்லை, காசில்லை, வேலையில்லை, வேலை செய்து, பணிவிடை செய்து கழித்துக்கொள்கிறேன். கற்றுக்கொடுங்கள் என்பதை அபிநயத்திலேயே சொல்வார் கமல். அவரின் நடனமும் நடிப்பும் அங்கே கொடிகட்டிப் பறக்கும்.

ஜெயப்ரதாவின் மகளாக பின்னணிப் பாடகி எஸ்.பி.ஷைலஜா. தப்பாக எழுதிவிட்டார் என்று கமல் மீது கோபப்பட, அங்கே, கமல் ‘பஞ்சபூதங்களும்’ என்பதற்கு ஒவ்வொருவிதமாக ஆடிக்காட்டுவார். அப்படி கால்தூக்கி ஆடும்போது, காபிடவராக்கள் பறந்துசென்று, ஷைலஜாவின் காலடியில் விழுந்து ஒரு ஆட்டம் ஆடி ஓயுமே... அது நம்மூர் கே.பாலசந்தர் டச் போல, கே.விஸ்வநாத் டச்.

டெல்லியில் மிகப்பெரிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய விழா. அந்த அழைப்பிதழைப் பார்த்தே மிரண்டுபோவார் கமல். ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவார். அவர்களைப் பற்றி விவரிப்பார். பிரமிப்பார். சிலாகிப்பார். கொண்டாடுவார். அப்படியே ஒருபக்கம் திருப்ப... அங்கே, கமலின் புகைப்படம். அவரைப் பற்றிய குறிப்புகள். ‘இவரும் பெரிய ஆளுதான் பாலுசார். ஒருநாள் பெரிய ஆளா வருவாரு’ என்று ஜெயப்ரதா சொல்ல, அழுது, உருகி, நெகிழ்ந்து, நெக்குருகி நன்றி சொல்லத் தவித்து மருகுவாரே... கலைஞன் கமல் கோட்டையை எழுப்பி, கொடி நாட்டி, கம்பீரமாய் உயர்ந்து நிற்பார். அவ்வளவு நேர்த்தியான, யதார்த்த நடிப்பு! 

டெல்லி விழா. முன்னதாக கமலின் ஆட்ட ரிகர்சலும் ஆட்டம் முடிந்து ஆட்டோகிராப் கேட்டு சுற்றிக்கொள்ளும் கூட்டமும் என கற்பனைக் காட்சி. சிரிக்கவும் வைக்கும்; வலிக்கவும் செய்யும்.

அம்மாவின் மரணம். அம்மாவுக்கு முன் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் காட்சியில் கமலின் முக எக்ஸ்பிரஷன்கள், காலத்துக்கும் மறக்காது.

ஒருவழியாக, சரத்பாபுவை அவர் காதலியுடன் சேர்த்துவைத்து, முதலிரவுக்கு அனுப்பிவிட்டு, கமலும் ஜெயப்ரதாவும் இருக்க, பாட்டு ஒலிக்கும். மெளனமான நேரம். காதலும் ஏக்கமுமாக கமல் பார்க்க, ஜெயப்ரதா வேறு எங்கோ பார்த்துவிட்டு பார்ப்பார். உடனே கமல், வேறு எங்கோ பார்ப்பார். அதேபோல், கமலையே பார்த்துக்கொண்டிருப்பார் ஜெயப்ரதா.கமல் பார்க்கும்போது சட்டென்று வேறு எங்கோ பார்ப்பார். அந்தப் பாட்டு மொத்தத்திலும் கவிதை ராஜாங்கம் பண்ணும். ராஜாவும் ராஜாங்கம் பண்ணியிருப்பார். கூடவே, ஜெயப்ரதாவின் புடவைகள் அழகு காட்டும், படம் மொத்தத்தையும் நிவாஸின் கேமிரா அள்ளியள்ளி, நமக்கு ஒற்றிக்கொள்வது போல், வழங்கியிருக்கும்!

ஓம் நமசிவாய, வான் போலே வண்ணம் கொண்டு, நாத விநோதங்கள், மெளனமான நேரம், தகிட ததுமி தகிட ததுமி, வேதம் அணுவிலும் ஒரு நாதம் என்று எல்லாப் பாடல்களுமே மனதை வருடும். வாட்டும். அள்ளும். அசைத்துப்போடும். அதேபோல், படத்தின் பின்னணி முழுக்கவே இளையராஜா, முழுக்கவனம் செலுத்தி, பிஜிஎம்மில் எப்பவும் நான் ராஜா என்று நிரூபித்திருப்பார்.

அதேபோல், கதாபாத்திரத்தின் தன்மையையும் கதையையும் உணர்ந்ததுடன் லிப் மூவ்மெண்ட்ஸ்க்கு தகுந்தது போலவும் வசனம் எழுதியிருப்பார் பஞ்சு அருணாசலம்.

ஜெயப்ரதாவுக்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருப்பதையும் பிரிந்திருப்பதையும் சொல்லும் இடம் கவிதை. ரணப்படுத்திவிடும். பிறகு மனம் திருந்தி திரும்பி வரும்போது கமலே சேர்த்துவைப்பார். ஒருபக்கம், கலையும் இல்லை; இன்னொரு பக்கம் காதலும் இல்லை. நொறுங்கிப் போகிற காட்சிகளில் பாலுவாகவே வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன்.

கடைசிக் காட்சியில் ஷைலஜாவின் ஆட்டத்துக்கு கைத்தட்டல் கிடைக்கும். முன்னதாக, குருவாக கமல் அறிமுகப்படுத்தப்படுவார். கற்றுத்தரும்போது, கமலின் கையை காலால் மிதித்துவிடுவார். அது நினைவுக்கு வந்து பதறும் காட்சியில் நம்மை வசமாக்கிக் கொள்வார் இயக்குநர் கே.விஸ்வநாத். பூர்ணோதயாவின் ஏடித.நாகேஸ்வர ராவ் தயாரித்திருப்பார்.

சலங்கை ஒலி, கே.விஸ்வாத்துக்காக பார்க்கலாம். இளையராஜாவுக்காக பார்க்கலாம். வைரமுத்துவின் வரிகளுக்காகப் பார்க்கலாம். ஜெயப்ரதாவுக்காகப் பார்க்கலாம். கமலுக்காக பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

படத்தின் முடிவில், பாலு என்கிற கமல், இறந்துவிடுவார். சக்கரநாற்காலியில் இறந்துவிட்ட கமலை, மேடையில் இருந்து, அரங்கில் இருந்து, வெளியே தள்ளிக்கொண்டு சரத்பாபு நடக்க, கொட்டியெடுக்கும் மழை. அப்போது ஓடிவந்து கமலுக்கு, பாலு எனும் கலைஞனுக்கு குடை பிடிப்பார் ஜெயப்ரதா. பின்னணியில் நடன சங்கதிகள், தாளக்கட்டுகள், ஜதிகள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

END என்று ஸ்கிரீனில் வரும். அடுத்து END எழுத்துக்கு மேலே, NO என்று வரும். பிறகு, NO END எழுத்துக்களுக்குக் கீழே FOR ANY ART  என்று டைட்டில் வரும். அதாவது

NO

END

FOR ANY

ART 

என்கிற டைட்டிலுடன் முடியும்.

இது ரீமேக் சீசன். அந்தப் படம் இந்தப் படம் என்று ரீமேக்குகிறார்கள். அப்படி யார் முயன்றாலும் ரீமேக் பண்ணவே முடியாத படம்... சலங்கை ஒலி! இந்தக் கூட்டணியின் சலங்கை ஒலிக்கு நிகரே இல்லை. இருக்கப்போவதும் இல்லை!

https://www.kamadenu.in/news/cinema/3769-salangai-oli-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

சட்டம் ஒரு இருட்டறை - அப்பவே அப்படி கதை!


 

 

sattam-oru-iruttarai-appave-appadi-kadhai
 
 

மன்னர் காலப் படங்கள் எடுப்பதில் சிலர் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். புராணப் படங்களை இவரைப் போல  எடுக்கமுடியாது எனும் அளவுக்கு படங்கள் எடுப்பார்கள். பாசத்தை உணர்த்தும் படங்கள், கிராமிய மணம் கமழும் படங்கள், பழிக்குப் பழி படங்கள், காதல் படங்கள், காதலில் கல்லூரிப் படங்கள், க்ரைம் படங்கள், காமெடிப் படங்கள், அரசியல் படங்கள், சமூக அவலங்களைச் சொல்லும் படங்கள் என்று மிகப்பெரிய பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலின்படி தனித்தனியே ராஜாங்கம் பண்ணிய இயக்குநர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில், சட்டத்தை வைத்துக்கொண்டு படம் பண்ணிய இயக்குநர் எனும் பெருமைக்கு உரியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதிலொரு ஸ்பெஷல்... அந்த சட்டநுணுக்கங்கள் கொண்ட படத்தில், பாசம் இருக்கும். காமெடி இருக்கும். க்ரைம் கலந்திருப்பார். காதலும் இருக்கும். அரசியல் முகமூடியும் கிழிக்கப்படும். சமூகப் பிரச்சினைகளும் அலசப்படும். அத்தனையையும் ஒவ்வொரு படத்துக்குள்ளும் புகுத்தி, நுழைத்து, கலந்து, ஒரு ஃப்ரூட்மிக்ஸர் ஜூஸ் போட்டுக் கொடுப்பதில், வல்லவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

 

இவர் எடுத்த பல படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கின்றன. தமிழில் இருந்து பல மொழிகளுக்கு ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. இவருக்கென ஒரு ஸ்டைல், இவருக்கென ஒரு பாணி, இவர் படத்துக்கென சில இயல்புகள் என வைத்துக்கொண்டு ஜித்து வேலை காட்டிய மிகச்சிறந்த கதாசிரியர், அற்புதமான ரைட்டர், தெளிவுத் திரைக்கதைக்கானவர், அட்டகாசமாய் இயக்கக்கூடியவர் எனப் பல பெருமைகள் கொண்டவர்.

அப்பேர்ப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரனின் சட்டம் ஒரு இருட்டறை தான் அப்பவே அப்படி கதை இப்போது!

1981ம் ஆண்டு வெளியான படம் சட்டம் ஒரு இருட்டறை. எடுத்துக்கொண்ட கதை அரதப் பழசுதான் என்றாலும் அது சொல்லப்பட்ட விதத்தில்தான் எல்லாக் கோர்ட்டுகளிலும் மன்னிக்கணும் எல்லா செண்டர்களிலும் வெற்றி பெற்றது சட்டம் ஒரு இருட்டறை. படம் வெளியாகி 37 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் இந்தப் படம் ஃப்ரெஷ்ஷாக, அப்படியே இருக்கிறது. எதுஎதையோ ரீமேக்குகிறவர்கள், இந்தப் படத்தை எப்போது வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம். எவர் நடித்துவேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம். அத்தனை முறையும் வெற்றித் தீர்ப்பை எழுதுவார்கள் ரசிகர்கள். அதுதான் இந்தப் படத்தின் ஜிம்மிக்ஸ் ஸ்கிரிப்ட்!

பெரிய தொழிலதிபரை மூன்று கெட்டவர்கள் இணைந்து கொன்றுவிட, அதைப் பார்த்துவிட்ட ஒருவர், சாட்சி சொல்கிறார். அதனால் மூவருக்கும் 12 வருடத் தண்டனைக் கிடைக்கிறது. ஜெயிலில் தண்டனை அனுபவிக்கும் மூன்று பேரும் ஜெயிலில் இருந்து வந்து, சாட்சி சொன்னவரைக் கொல்கிறார்கள். அவரின் மூத்தமகளைக் கற்பழித்துக் கொல்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்ணுக்கு முன்னே பார்த்துக்கொண்டு, அம்மாவுடனும் அக்காவுடனும் இருந்தபடி கதறித்துடிக்கிறான் சிறுவன். இந்தச் சிறுவன்தான் ஹீரோ என்பதை, பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் என்று தெளிவுறச் சொல்லிவைத்திருக்கிறது சட்டம்! சினிமாச் சட்டம்!

ஆனால், பொத்தாம்பொதுவாக, சட்டப்படி சொல்லமுடியாமல், சட்டப் பாயிண்டுகளையெல்லாம் துணைக்கு வைத்துக்கொண்டு வாதப்பிரதிவாதங்கள் செய்வது போல, இந்தக் கதையை வைத்துக்கொண்டு, அழகாய் ரூட் போட்டு, திரைக்கதையுமாக்கி படமெடுத்ததுதான் எஸ்.ஏ.சி-யின் அசகாயசூரத்தனம்!

போலீஸ் ஸ்டேஷனுக்கு குழந்தைகளுடன் சென்று, கொன்ற விவரங்களைச் சொல்லுவார்கள். ஆனாலும் பயனில்லை. ‘உள்ளே ஜெயில்ல இருக்கற மூணு பேரும் எப்படிப்பா கொன்னுருக்கமுடியும்’ என்று சொல்லுவார்கள். நொந்து போன அந்தக் குடும்பம், தலை குனிந்து வீடு திரும்பும்.

அந்தச் சிறுவன் இளைஞனாவான். கொலை செய்யும் எண்ணமும் வளர்ந்து விஸ்வரூபமெடுத்திருக்கும். அந்த இளைஞனின் அக்கா, போலீஸாக இருப்பாள். ‘எந்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு அவர்கள் தப்பித்தார்களோ, அதேச் சட்டத்தைக் கொண்டு அவர்களைக் கொல்லுவேன்’ என்று சபதமிடுகிறான் நாயகன். சட்டத்தை மீறி எதையும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அதைத் தடுப்பவளும் நானே; உன்னைச் சிறைப் பிடிப்பவளும் நானே... என்று சூளுரைக்கிறாள் நாயகனின் சகோதரி!

ஒருபக்கம் வில்லன்களின் கூட்டத்தைப் பந்தாடவேண்டும். இன்னொரு பக்கம் போட்ட சபதம் நிறைவேற்ற வேண்டும். நடுவே அக்காவே கட்டையைக் கொடுக்கிறாள். ஆனால் அத்தனையும் சமாளிப்பான் ஹீரோ. அதுவும் எப்படி? மூன்று கொலைகள். மூன்றே மூன்று கொலைகள். அந்த மூன்று கொலைகளையும் சட்ட மீறலாக, சாட்சிகள் ஏதுமின்றி, சொல்லப்போனால் சட்டத்தையே சாட்சிகளாக்கிக்கொண்டு துவம்சம் பண்ணும் ஹீரோவின் கதைதான் சட்டம் ஒரு இருட்டறை!

இப்படியொரு பரபர சுறுசுறு விறுவிறு கதை, தீயாய்ப் பற்றிக்கொண்டது. பார்த்தார்கள். கூட்டம்கூட்டமாக வந்து பார்த்தார்கள். பார்த்தவர்களே பார்த்தார்கள். பார்த்தவர்கள், பார்க்காத உறவுகளையும் நட்பையும் அழைத்துக்கொண்டு வந்து பார்த்தார்கள்.

படத்தின் நாயகன் விஜயகாந்த். ஏற்கெனவே அப்படி இப்படியெனப் படங்கள் வந்தன. இயக்குநர் சந்திரசேகரன்,ஏற்கெனவே ஒரு படத்தை எடுத்து அதுசரியாகப் போகவில்லை. விஜயகாந்துக்கும் அப்படித்தான். வந்த படங்கள் எதுவும் ஓடவில்லை. பேர் சொல்லவில்லை. நல்ல படம் என்று கூட சம்பாதித்துக் கொடுக்கவில்லை. ஆக, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் விஜயகாந்துக்கும் வெற்றிக்கனியை வழங்கியதில், முதல் படம் முழுமையான படம் என்கிற பெருமையைப் பெறுகிறது சட்டம் ஒரு இருட்டறை.

நூறுநாள் விழாவெல்லாம் கொண்டாடினார்கள். அதையடுத்து இருவருக்குமே ஏகப்பட்ட படங்கள் வரிசையாக ஒப்பந்தமாகின. அந்த வகையில் விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இப்போது விஜய்யின் ரசிகர்களாக இருக்கிறவர்களுக்கும் மறக்கமுடியாத படம் இது.

படத்தின் கதை ஷோபா. எஸ்.ஏ.சந்திரசேகரனின் மனைவி. படத்தில், விஜயகாந்தின் பெயர் விஜய். அதுமட்டுமா? விஜயகாந்துக்கு குரல் கொடுத்திருப்பவர் எஸ்.ஏ.சி.யின் மைத்துனர் பாடகர் எஸ்.என்.சுரேந்தர்.

‘பகலில் ஒரு தாகம் இரவில் அது தீரும்’ என்று ஒரு கிளப் டான்ஸ் பாட்டு. நம்மை ஆடவைக்கும் இசை. பூர்ணிமாதான் நாயகி. கிளப் டான்ஸர். விஜயகாந்தின் காதலி. சங்கிலிமுருகன், செளத்ரி முதலான மூன்றுபேர் வில்லன்கள். அவர்கள் மூவரையும் தனித்தனியே, எந்தச் சாட்சியமும் இல்லாமல் கொல்லும்விதம், கைத்தட்ட வைக்கும். அந்த யுக்திக்குக் கிடைத்த பாராட்டு அவையெல்லாம்!

விஜயகாந்தின் அக்காவாக, போலீஸ் கேரக்டரில் வசுமதி. அக்காவுக்கும் தம்பிக்கும் நடக்கிற சட்ட சண்டைகள் கலாட்டா ரகம். அதுவும் தம்பியிடம் அன்பாய்ப் பேச்சுக் கொடுத்தபடியே அந்தக் கொலையைப் பற்றிய விஷயங்களை டேப்ரிக்கார்டரில் தெரியாமல் பதிவு செய்வதும், சொல்லி முடித்தபிறகு டேப்ரிக்கார்டரைப் போட்டால், பேசியது எதுவும் பதிவாகாமல் ’ஏமாறச் சொன்னது நானா?’ பாடல் ஒலிபரப்பாவதும் தெறித்துக்கைத்தட்டி ரசித்து மகிழ்ந்தார்கள் ரசிகர்கள்.

அன்றைக்கு விஜயகாந்தை விட பல படிகள் முன்னேறி உயரத்தில் இருந்த ரஜினியின் ஹிந்தி வெற்றிக்கு, இந்தப் படமும் ஒரு காரணம். ஆமாம்... இங்கே விஜயகாந்த் நடித்த கேரக்டரில் அங்கே ரஜினி பண்ணியிருந்தார்.

‘சட்டம் ஒரு இருட்டறை’ பாட்டு, அப்போது எங்கு பார்த்தாலும் ஒலித்தன. படத்திலும் (சங்கர்) கணேஷ் நடித்திருப்பார். அந்தப் பாட்டுக்கு உள்ளே வருகிற காட்சிகள் பொளேர், சுளீர் ரகங்கள். சமூக அவலங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் சட்டத்தின் பாரபட்சங்களையும் சாமான்யர்களின் பார்வையில் இருந்தே படமாக்கிக் கொளுத்திப்போட்டிருப்பார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

சட்டம் ஒரு இருட்டறை... விஜயகாந்தையும் எஸ்.ஏ.சந்திரசேகரனையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய மிக முக்கியமான, முதன்மையான படம். எப்போதும் பார்க்கலாம். இப்போதும் வியக்கலாம்!

https://www.kamadenu.in/news/cinema/3796-sattam-oru-iruttarai-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

முகவரி - அப்பவே அப்படி கதை!


 

 

mugavari-appave-appadi-kadhai

அஜித் - பாலகுமாரன்

 

ஹீரோன்னா ஜெயிக்கணும். ஜெயிக்கிறவன்தான் ஹீரோ. நினைச்சதை அடையணும்; பெரியாளாகணும். அவனை ஊரே கொண்டாடணும். தமிழ் சினிமாவின் ஹீரோ இலக்கணங்களையெல்லாம் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, யதார்த்தம் பேசியதன் விலாசம்... முகவரி!

இத்தனைக்கும் அஜித் அப்போது ஆக்‌ஷன் ஹீரோவாகவும் பேரெடுத்திருந்தார். மாஸ் ஹீரோ, இயலாமைகளால் துவண்டு போவதையெல்லாம் ரசிகர்கள் ஏற்பார்களா, மாட்டார்களா என்பது குறித்தெல்லாம் கவலையேபடாமல் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதே அப்போது சாதனையாகப் பேசப்பட்டது. இன்றைக்கும் இந்த யதார்த்தம்தான் அஜித் படம் என்பதையெல்லாம் கடந்து, எல்லாதரப்பினரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

  2000ம் வருடம், பிப்ரவரி 25ம் தேதி வெளியானது முகவரி. கிட்டத்தட்ட 18 வருடங்களாகி விட்டன. இது அஜித்தின் முகவரி மட்டும் அல்ல. இயக்குநர் வி.இசட்.துரையின் முகவரியும் கூட! அவருக்கான முகவரியும் முதல் வரியும் இந்தப் படம்தான். இதையடுத்து பல படங்கள் பண்ணிவிட்டாலும் இன்றைக்கும் முகவரி துரை என்றே எல்லோரும் சொல்வதுதான், இவரின் முதல் படத்தின் சத்தான முத்திரை!

அழகிய குடும்பம். அப்பா, அண்ணன், அண்ணி, தங்கை என அன்பால் கட்டமைக்கப்பட்ட குடும்பத்தில் ஸ்ரீதரும் ஒருவன். அப்பா ரிடையர்டு. அண்ணன் வேலைக்குச் செல்கிறார். அண்ணி பொறுப்பாக குடும்பம் பேணுகிறார். இந்த நிலையில், சிறுவயதில் இருந்தே இசை மீது கொண்ட நாட்டத்துடனும் லட்சியத்துடனும் வளர்கிறான் ஸ்ரீதர். சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் அவர் கனவு. ஆசை. விருப்பம். லட்சியம். வாழ்க்கை எல்லாமே!

இதற்காக, ஒவ்வொருமுறை முயற்சி மேற்கொள்வதும் அது ஏதோவொரு விதத்தில் தட்டிக்கொண்டே செல்வதுமாக இருக்க, கொஞ்சம் துவண்டுபோகிறான். அப்படித் துவண்டுகிற போதெல்லாம், சுற்றியுள்ள மணிவண்ணனும் விவேக்கும் என நட்புவட்டம் ஆறுதல் கூறுகிறது. அண்ணனே நண்பனாகி உத்வேகப்படுத்துகிறார்.

இந்த நிலையில், சினிமாவில் வாய்ப்பு கிடைத்தபாடில்லை. ஆனால் இன்னொரு ஆறுதலுக்கும் தேறுதலுக்கும் ஜோதிகா எனும் தோழி கிடைக்கிறார். ஸ்ரீதர் தெரிகிறார். அவரின் இசை தெரியவில்லை. அவரின் இசை தெரிகிறது. ஆனால் அது ஸ்ரீதருடையது எனத் தெரியவில்லை. ஒருகட்டத்தில் இசையும் அஜித்தும் தெரிகிற வேளையில் பூக்கிறது நட்பு.

இதனிடையே, ஜோதிகாவின் தங்கையை எங்கோ பார்க்க, அந்தப் பையனுக்குப் பிடித்துவிடுகிறது. பெற்றோருடன் வந்து சம்மதம் கேட்க, அதிர்ந்துதான் போகிறது ஜோதிகா வீடு. மூத்தவள் இருக்க சின்னவளுக்கு மணம் முடிப்பது குறித்து யோசனை வர... அங்கே, ஜோதிகா தன் பெற்றோரிடம் காதலைச் சொல்கிறார்.

காதலனை வரச் சொல்கிறார். ஸ்ரீதரும் வருகிறார். அங்கே, வேலை குறித்துக் கேட்கிறார். மியூஸிக் டைரக்டராக எப்போது ஆவாய் என உறுதியாகச் சொல்லமுடியுமா என்று கேட்கிறார். கொஞ்சம் பணம் தருகிறேன். அதை வைத்து ஏதேனும் தொழில் செய்துகொள்ளேன் என்கிறார்.

இப்படியான பேச்சின் முடிவாக, காதலைத் துறந்துவிட்டுச் செல்கிறார் ஸ்ரீதர். பார்த்தால் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அண்ணனுக்கும் ஹார்ட் அட்டாக். மருத்துவமனை. சிகிச்சை. குடும்பத்தில் ஆளாளுக்கு வேலைக்குச் செல்ல நினைக்கிறார்கள். அப்போது ஸ்ரீதர் எடுக்கிற முடிவுதான் தொலைந்து போன தேடல் இளைஞனின் தொலையப்படாத முகவரி! அதுதான் அந்த இளைஞனின் அடையாளம்!

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்க, துரை இயக்கத்தில் வெளியானது முகவரி. அஜித், ஜோதிகா, ரகுவரன், சித்தாரா, கே.விஸ்வநாத், மணிவண்ணன், விவேக், ஜெய்கணேஷ், பாத்திமாபாபு, வி.எம்.சி.ஹனீபா என பலரும் நடித்திருப்பார்கள். எல்லோரும் எல்லோருக்கும் கொடுத்த அவரவர்க்கான வேலையை செம்மையாகச் செய்திருப்பார்கள்.

வாய்ப்பு கேட்டு சினிமாக் கம்பெனிக்கு செல்ல, அங்கே சரக்கு வாங்கிவரச் சொல்லி அனுப்ப, அப்படி வாங்கிக்கொண்டு வரும் அஜித்தை ஜோதிகா தவறாக நினைப்பதும் பின் தெரிந்து உணர்ந்து புரிவதும் அழகு. முன்னதாக ரயில்வே ரிசர்வேஷன் கெளண்ட்டரில் சந்திப்பது கவிதை.

‘இன்ஸெண்டீவ் வந்திருக்கு. அப்பா, உங்களுக்கு மூக்குக்கண்ணாடி’ என்பார் ரகுவரன். ‘உனக்கு ஒரு ஷூ வாங்கிக்கோடா என்பார் அப்பா.  ‘அண்ணிக்கு நல்லிசில்க்ஸ் புடவை’ என்பார் தங்கை. ‘தங்கைக்குத்தான் வாங்கணும்’ என்பார் சித்தாரா. இப்படி ஆளாளுக்கு எல்லோரும் அடுத்தவரின் தேவை பற்றி சொல்ல, ஸ்ரீதர் என்ன ஒண்ணுமே சொல்லலியே. என்ன பண்ணலாம்’ என்பார் ரகுவரன்., ‘ஒரு வாக்மேன் வேணும்ணே. அது எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்’ என்று தனக்கானதைக் கேட்பார் அஜித். சீட்டுக் குலுக்கிப் பார்ப்பது என முடிவாகும். எல்லோரும் பெயர் எழுதுவார்கள். மடித்துக் குலுக்கி எடுப்பார்கள். ஸ்ரீதர் என்று பெயர் வரும். ‘ஹை வானவில்’ என்று மாடியில் இருக்கும் அவர்கள் வானவில் பார்க்கப் போவார்கள். அங்கே ஸ்ரீதர் என்கிற அஜித், ஒவ்வொரு பேப்பராகப் பிரித்துப் பார்ப்பா. எல்லாமே ஸ்ரீதர். எல்லாருமே ஸ்ரீதர் என்றே எழுதியிருப்பார்கள். ஒவ்வொரு கலர் பேனாவிலும் எழுதியிருப்பார்கள். ‘என்ன ஸ்ரீதர் வானவில் பாக்கலியா?’ என்று கேட்பார் ரகுவரன். அந்தப் பேப்பரையெல்லாம் காட்டி, ‘வானவில் பாத்துட்டேண்ணே...’ என்று கலங்கியபடி சொல்வார் அஜித். தியேட்டரே நெகிழ்ந்து கைத்தட்டும்!

’ஒரு ரூபா காயின் கொடுங்களேன்’ என்பார் ஜோதிகா. அஜித் கொடுப்பார். வெயிட்டையும் அதிர்ஷ்டத்தையும் சொல்லும் மிஷினில் ஏறிப்பார்ப்பார். ‘நீங்களும் போட்டுப் பாருங்களேன்’ என்பார். ‘ஏங்க நான் அதிர்ஷ்டசாலியான்னு மிஷின் பாத்துதான் தெரிஞ்சுக்கணுமா. உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலிதாங்க என்பார் அஜித். பெரிய ஆளா வருவேன்னு நினைக்கிற அப்பா, உனக்கும் சேத்து சம்பாதிக்கிறேன்னு சொல்ற அண்ணன், எனக்காக விரதம் இருக்கிற அண்ணி, கடவுளே நேர்ல வந்து உனக்கு என்ன வரம் வேணும்னு கேட்டா, எங்க அண்ணன் மியூஸிக் டைரக்டராகணும்னு சொல்ற தங்கச்சி... நான் அதிர்ஷ்டசாலிதானே!’ என்று நெக்குருகிச் சொல்லும் அஜித்தை, எல்லோரும் ரசித்துக் கைத்தட்டினார்கள்.

இப்படி பல இடங்களில் தன் எழுத்துக்களை வசனங்களாக்கி, கதாபாத்திரங்களுக்கு ஜீவன் கொடுத்து, கதைக்கு பலம் சேர்த்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன்.

துவண்டு நிற்கும் தம்பிக்கு அண்ணன் டென் ஃபீட் கோல்டு, பத்து அடி ஆழத்தில் தங்கம் கதை. ஜெய்கணேஷிடம்... ‘ஒரு குழந்தைக்கிட்ட அப்பா பிடிக்குமா மாமா பிடிக்குமான்னு கேட்டா, அப்பா பிடிக்கும்னு சொல்லும். அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமான்னு கேட்டா, அம்மாதான் பிடிக்கும்னு சொல்லி அம்மாகிட்ட போய் ஒட்டிக்கும். மியூஸிக்கா லவ்வான்னு கேட்டா, நான் மியூஸிக்னுதான் சொல்லுவேன் என்பார் அஜித்.

சரி... இன்னும் அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ... அப்பவும் மியூஸிக் டைரக்டராகலைன்னு வையுங்க. என்ன செய்வீங்க என்று கேட்பார் ஜெய்கணேஷ். அப்பவும் மியூஸிக் சான்ஸ் கேட்டு முயற்சி பண்ணிட்டுதான் இருப்பேன் என்பார். தியேட்டர் கண்ணைத் துடைத்துக்கொண்டே, கைத்தட்டி ஆர்ப்பரிக்கும்.

இசையமைப்பாளர் வி.எம்.சி.ஹனிபா கோபப்படும் படி இசை குறித்துச் சொல்கிற விளக்கக் காட்சியும் அப்போது அஜித் பாடுகிற பாடலும் கனமானவை. வாய்ப்பு கிடைத்தும் செண்டிமெண்ட் சினிமா உலகின் காரணம் சொல்லி, ரிக்கார்டிங் கேன்சல் என்றானதும் விரக்தியில் கடற்கரையில் இருக்க, அங்கே எட்டாத உயரத்தில் இருக்கிற மணியை சின்னப்பையன், பொடிப்பையன் முயற்சி செய்து முயற்சி செய்து, மணியடித்துவிட்டு ஸ்டைலாக நடந்து செல்வதில் காட்டுகிற தன்னம்பிக்கை என்று துரையின் இயக்கம் படு ஷார்ப். அவருக்கு பி.சி.ஸ்ரீராமின் கேமரா மிக நன்றாகவே ஒத்துழைத்து, காட்சிகளையெல்லாம் கவிதையாக்கியிருக்கும்!

ஆண்டே நூற்றாண்டே பாட்டு படமாக்கிய விதம், நவீனமாகவும் பட்டையக் கிளப்பும் விதமாகவும் அமைந்திருக்கும். கீச்சுக்கிளியே, ஓ நெஞ்சே நெஞ்சே வா, ஏ நிலவே ஏ நிலவே... என்று பாடல்கள் மொத்தமும் பிரமாதம். வைரமுத்துவின் வரிகள் அபாரம். தேவாவின் இசை அற்புதம். மொத்தப் படத்தையும் அஜித் தன் நடிப்பாலும் பாலகுமாரன் தன் வசனத்தாலும் தூக்கிப் பிடித்து, கொடி நாட்டியிருப்பார்கள்.

படத்தின் கிளைமாக்ஸில், ‘என்னப்பா ஸ்ரீதர், லவ்வா, மியூஸிக்கான்னு சொல்லும் போது மியூஸிக்தான்னு சொல்லி காதலையே தூக்கியெறிஞ்சே! இப்ப மியூஸிக்கையே விடுறேன்னு சொல்லி வேலைக்குப் போறியேப்பா’ என்று கலங்கித் தவித்தபடி மணிவண்ணன் கேட்பார்.

’அங்கே விட்ல அண்ணனுக்கு முடியல. ஆளாளுக்கு வேலைக்குப் போறேன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. ஆனா இப்பவும் என்னை வேலைக்குப் போகச் சொல்லி யாரும் சொல்லல. லவ்வா, மியூஸிக்கான்னு வந்தப்ப, மியூஸிக்னு முடிவு எடுத்தேன். மியூஸிக்கா, குடும்பமானு வரும்போது மியூஸிக் வேணாம்னு சொல்லமுடியல. ஆனா குடும்பம் முக்கியம்னு முடிவு எடுத்துட்டேன். அதான் வேலைக்குப் போறேண்ணே...’ என்று சொல்லிவிட்டு அந்த சாலையில் நடந்து செல்வார். அவரின் முதுகுக்குப் பின்னே இருந்தபடி காமிரா நகரும். கனத்த இதயத்துடனும் நல்ல படம் பார்த்த நிறைவுடனும் வெளியே வந்தார்கள் ரசிகப்பெருமக்கள்.

ஆனால், சினிமாவுக்காக, சினிமாடிக்காக, மீண்டும் முயற்சி செய்ய, அவர் இசையமைப்பாளராகிவிடுகிறார் என்கிற கிளிப்பிங்க்ஸுடன் முடித்திருப்பார் இயக்குநர்.

இன்றைக்கு தேடல், லட்சியம் என்று இருக்கும் இளைஞர்களின் கதை இது. முட்டிமோதி, அவமானப்பட்டு, குடும்பம், சூழல் என பல காரணங்களால், தேடலை நிறுத்திவிட்டு, ஒரு யுடர்ன் அடித்து, குடும்பத்துக்குள் செட்டிலாகிவிடுகிற, தங்களைச் சுருக்கிக் கொள்கிற ஒரு சாமான்ய இளைஞனின் சரித்திரம் இது!

ஆகவே, அந்தத் தேடல் இளைஞர்கள் இருக்கும் வரைக்கும்... நெஞ்சில் தொலைந்து போகாமல், முகவரியும் இருக்கும்!

https://www.kamadenu.in/news/cinema/3839-mugavari-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

மெளனராகம் - அப்பவே அப்படி கதை!


 

 

mounaraagam-appave-appadi-kadhai

மெளனராகம் மோகன் - ரேவதி

 

விட்டுக்கொடுத்தல் எனும் வார்த்தையும் அந்த வார்த்தைக்குள்ளே பொதிந்திருக்கிற அதன் கனமும் அன்பால் நிறைந்திருப்பவை. குறிப்பாக, கணவன் மனைவிக்குள் இந்த அன்பும் விட்டுக்கொடுத்தலும் இருக்கவேண்டும். அவர்களிடம் இருந்து சகலருக்கும் அது பரவி, இன்னும் இன்னும் அன்பு வேர்விடும். நீர்விட்டு வளரும். தழைக்கும். ‘

கல்யாணமாகி முதன்முதல்ல உன்னை வெளியே கூட்டிட்டு வந்திருக்கேன். உனக்கு ஏதாவது வாங்கிக்கொடுக்கணும்’ என்று கணவன் சொல்ல, ‘எதுவேணாலும் வாங்கிக் கொடுப்பீங்களா என்று மனைவி கேட்க, ‘என்னால முடிஞ்சுச்சுன்னா வாங்கித்தரேன்’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவள் அழுதுகொண்டே, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே சொல்கிறாள்... ‘எனக்கு விவாகரத்து வேணும். வாங்கித் தர்றீங்களா?!

 

1986ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியான மெளன ராகம் எனும் திரைப்படம் மனதுக்குள் செய்த சலசலப்புகள், கொஞ்சநஞ்சமல்ல. படம் வெளியாகி 32 வருடங்களாகிவிட்ட நிலையிலும், படத்தின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

மோகன் எனும் நடிகரை எல்லோருக்கும் பிடிக்கும். ரேவதி எனும் நடிகையை யாருக்குத்தான் பிடிக்காது? ராஜாவின் இசையில் மயங்காதவர்களும் இருக்கிறார்களா என்ன? அப்படியான சந்தோஷத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தார்கள் ரசிகர்கள். படம் போட்டு, இருவருக்கும் கல்யாணமாகி, டில்லிக்குப் போன ரெண்டாவது நாளே, மோகனிடம் ரேவதி, ‘எனக்கு விவாகரத்து வாங்கிக்கொடுங்க’ என்று கேட்டால், மோகனுக்கு மட்டும் அல்ல, பார்க்கிற நமக்கே பகீரென்றுதானே இருக்கும்.

இதுதான் ராகத்தின் மெளனம். மெளனமாய் சத்தமின்றி இருவரும் ரகசியமாய் பாடுகிற ராகம். கதையின் மையம் இதுவே!

அழகான நடுத்தரக் குடும்பத்தின் காலைப்பொழுதில் இருந்து தொடங்குகிறது கதை. அப்பா, அம்மா, தங்கை, அண்ணன், அண்ணி என கலகலப்பான குடும்பச் சூழல், அதிகாலையின் ஃபில்டர் காபியின் நறுமணம்.

அந்த வீடே சந்தோஷத்தால் நிறைந்திருக்கிறது. பெண்ணைக் கல்லூரியில் விட அப்பா ஸ்கூட்டரில் செல்கிறார். அவளுக்கு இந்த அமைதியும் இப்படியெல்லாம் தாங்குவதும் என்னவோ செய்ய, கேட்கிறாள். ‘சாயந்திரம் உன்னை பொண்ணுபாக்க வர்றாங்கம்மா’ என்கிறார்.

அதிர்கிறாள். தோழிகளிடம் புலம்புகிறாள். மழையும் துணைக்கு வர, ஆடுகிறாள். பாடுகிறாள். நனைகிறாள். தொப்பலாக நனைந்துகொண்டு லேட்டாக வீடு செல்ல, அங்கே காத்துக்கொண்டிருக்கிறார், பெண் பார்க்க வந்த மோகன். தனியே பேச விரும்புகிறார். ஆனால் அவள் பேசுகிறாள்...’’என்னை அடக்கமான பொண்ணுன்னு சொல்லுவாங்க. அப்படிலாம் இல்ல. பிடிவாதம், கோபம், திமிரு, ஈகோ எல்லாமே இருக்கு. அக்கறை கிடையாது. பொறுமை இல்லை. பொறுப்பு இல்லை. இந்தக் கல்யாணம் புடிக்கலை எனக்கு’ என்பாள். அதற்கு அவர், ‘உன்னைப் பிடிச்சிருக்கு’ என்று சொல்லி சம்மதம்  சொல்லுவார்.

‘எல்லாரும் மாப்பிள்ளையைப் புடிச்சிருக்குன்னு சொல்றோம். கல்யாணம் புடிச்சிருக்கும்னு சொல்றோம். அவகிட்டயும் கேளுங்க’ என்று சொல்ல, பிடிக்கலை என்கிறாள். ஏன் என்று கேட்டால், ‘பிடிக்கல... அதனால பிடிக்கல’ என்கிறாள். ‘சின்னக்குழந்தை மாதிரி நடந்துக்கறே என்பார் அப்பா. சின்னக்குழந்தை மாதிரி நடத்துறீங்க. என் விருப்பம் கேக்காம பண்றீங்க என்கிறாள். அந்த சண்டை களேபரங்களுக்குப் பிறகு, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர... வீடே தவித்துக் கதறுகிறது. மனம் மாறுகிறாள். அப்பாவுக்காகச் சம்மதிக்கிறாள்.

டெல்லி. கல்யாணமாகி குடித்தனம். ஆனால் விவாகரத்துக் கேட்கிறாள் கணவனிடம்.

காரணம் கேட்க... அங்கே விரிகிறது பிளாஷ்பேக். முரட்டுத்தனம், துறுதுறுப்பு, தட்டிக்கேட்கும் குணம் கொண்ட கார்த்திக். அங்கே, இருவருக்கும் காதலாக மலர்கிறது. கல்லூரிக்கே வந்து, திவ்யா அப்பாவுக்கு ஆக்ஸிடெண்ட் என்று ரேவதியை அழைத்துச் செல்கிறார். எங்கே என்று கேட்க, வாணிமஹால் பக்கம் என்கிறார். எங்க அப்பா கோயம்புத்தூர் போய் மூணு நாளாச்சு. நாளைக்குத்தான் வர்றாரு என்பார். அப்ப, தாத்தாவா இருக்குமோ என்று சொல்ல, எங்க தாத்தா நான் பொறக்கறதுக்கு முன்னாடியே செத்துட்டாரு என்பார். இப்படியான கலாட்டாக்களும் கவிதைகளுமாக ரகளை பண்ணியிருப்பார் கார்த்திக். ஆனால் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள்ளும் தருணத்தில், போலீஸால் துப்பாகியால் சுடப்பட்டு இறந்துவிடுவார் கார்த்திக்.

இந்தக் காதலும் காதல் இப்படியான சோகத்துடன் முடிந்ததும் அப்படியே மென்று விழுங்கி சகஜமாக வாழ்கிறாள். ஹோட்டலில், கார்த்திக்கும் ரேவதியும் இருக்க, அங்கே வரும் ரேவதி அப்பாவை, மிஸ்டர் சந்திரமெளலி மிஸ்டர் சந்திரமெளலி என்று கலாய்ப்பாரே... அது இன்னும் நூற்றாண்டுக்கும் தாங்கும்!

கணவன் மோகனிடம் எல்லா விவரங்களும் சொல்ல, அந்த ஜெண்டில் மோகன் விவாகரத்துக்கு அப்ளை செய்கிறார். ஒருவருடம் சேர்ந்து இருந்த பிறகுதான் பிரிவதற்கு இடம் என்கிறது சட்டம். ஆகவே சேர்ந்து இருக்கிறார்கள். அப்படியான தருணங்கள், ரேவதியை எப்படியெல்லாம் மனம் மாற்றுகிறது. சேர்ந்தார்களா, பிரிந்தார்களா என்பதை, வலிக்க வலிக்க... ஆனால் மெளனமாக, பதட்டமோ பரபரப்போ இல்லாமல், கண்ணீர்க்கவிதையாய் சொல்லியிருப்பார் இயக்குநர் மணிரத்னம்.

அந்த ஏழு நாட்கள் படத்தின் கொஞ்சம் மாற்றிச் செய்தது என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் மணிரத்னம் தனக்கே உண்டான ஸ்டைலில், மிக அழகாக உணர்வுகளைப் பதிந்திருப்பார். மோகன், ரேவதி, கார்த்திக், ரா.சங்கரன், வி.கே.ராமசாமி, அந்த டில்லிவாலா ‘போடா டேய்’ என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவ்வளவு நேர்த்தியாக படைக்கப்பட்டிருக்கும்.

படத்துக்கு மூன்று தூண்கள்... மூன்று பலம். படம் முழுக்க தன் கேமராவால், காட்சிகளையும் கதைகளின் உணர்வுப்போக்குகளையும் ஒளிப்படுத்தியிருப்பார் பி.சி.ஸ்ரீராம். பாடல் வரிகளில் அத்தனை ஜீவனையும் இறைத்திருப்பார் கவிஞர் வாலி. நிலாவே வா, பனி விழும் இரவு, மன்றம் வந்த தென்றலுக்கு என எல்லாப் பாடல்களும் அவ்வளவு அழகு. மூன்றாவது  ஆனால் முதன்மையான பலம்... இளையராஜா. படம் நெடுக, காட்சிகளின் வீரியங்களை தன் வாத்தியங்களால் கடத்திக் கடத்தி, மனசுக்குள் நிறைக்கச் செய்திருப்பார் இளையராஜா.

83ம் ஆண்டு பல்லவி அனுபல்லவி, 85ம் ஆண்டு உணரூ, அதே வருடத்தில் பகல்நிலவு, இதயக்கோயில். அதையடுத்து 86ம் வருடத்தில் இதோ... மெளனராகம். 87ம் ஆண்டின் நாயகனுக்கு முந்தைய இந்தப் படத்திலேயே நிறையவே மாறி, நிறையவே டியூனாகியிருப்பார் மணிரத்னம். அவர்தான் வசனமும். வார்த்தைகளில் ஷார்ப், கதையில் தெளிவு, திரைக்கதையில் நேர்த்தி என படம் நெடுகிலும் மணிரத்ன டச் பளிச்சிட்டுக்கொண்டே இருக்கும்.

‘முதலிரவு வேணாம். பிடிக்கல. யாரோ ஒருத்தர் கூட...’ என்பார் ரேவதி. ‘அவர் யாரோ இல்ல. உன் புருஷன்’ என்பார் அம்மா. ‘ரெண்டுநாளைக்கு முன்னாடி நீ என்னை இப்படி விடுவியா’ என்று கேட்பார் ரேவதி.

விவாகரத்து கேட்ட மனைவியின் கையைப் பிடிப்பார் மோகன். விடச் சொல்லுவார். பயமா, பிடிக்கலையா என்பார். பிடிக்கல என்பார். ஏன் என்று மோகன் கேட்பார். உடம்புல கம்பளிப்பூச்சி ஊறுற மாதிரி இருக்கு என பொளேரென முகத்தில் அடித்தது போல் சொல்லுவார். இப்படி படம் நெடுகவே வசனகர்த்தா மணிரத்னமும் தெரிகிற படத்தை, அவரின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்தார்.

மணி மெளன ரத்ன ராகம்!

https://www.kamadenu.in/news/cinema/3856-mounaraagam-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தில்லுமுல்லு - அப்பவே அப்படி கதை!


 

 

thillumullu-appave-appdi-kadhai

தில்லுமுல்லு - ரஜினிகாந்த்

 

 

ஆள்மாறாட்டக் கதை சினிமாவுக்கு ஒன்றும் புதுசில்லை. அதை மாறிமாறி யார் வேண்டுமானாலும் சொல்லலாம்; செய்யலாம். அப்படிச் சொல்வதிலும் செய்வதிலும் நேர்த்தி இருக்கவேண்டும்; தில்லுமுல்லுக்கெல்லாம் இங்கே இடமே இல்லை. அப்படி தில்லுமுல்லு ஏதுமில்லாமல், சொல்லப்பட்டதுதான் தில்லுமுல்லு!

வேலைவெட்டி இல்லாமல் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் ரஜினிக்கு, அவரின் குடும்பநண்பரும் டாக்டருமான பூரணம் விஸ்வநாதன், ஒரு வேலைக்குச் சொல்கிறார். அந்த வேலைக்கு எப்படியெல்லாம் போகவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

 

அங்கே வேலைக்குச் செல்கிறார். இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணுகிறார். வேலை கிடைக்கிறது. அதன்பிறகுதான், தில்லாலங்கடிகளும் உட்டாலக்கடிகளும் ஆரம்பமாகின்றன.

சென்னையில் ஃபுட்பால் மேட்ச். ரஜினியும் அவரின் நண்பர்களும் பார்க்க முடிவு செய்கிறார்கள். குண்டுகல்யாணம் ஒவ்வொருவர் ஆபீசுக்கும் போன் செய்து, ஒவ்வொருவிதமான பொய்யைச் சொல்கிறார். ரஜினி ஆபீசுக்கு போன் செய்து, ‘அவங்க அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க’ என்கிறார். உடனே லீவு கொடுக்கப்படுகிறது. கால்பந்து மைதானத்தில் பலத்த களேபர குதூகலங்களுடன் தனக்கே உண்டான ஸ்டைலில் சிகரெட்டையெல்லாம் தூக்கிப் போட்டு பிடித்தபடி உற்சாகமாக இருக்கும் ரஜினியை, அவரின் முதலாளி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பார்த்துவிடுகிறார்.

மறுநாள், வேலைக்கு வந்ததும் கேட்கிறார். மாட்டிக்கொண்டதில் இருந்து தப்பிக்க, அது என் தம்பி என்கிறார். ரெட்டைக்குழந்தைகள் என்கிறார். ஏற்கெனவே இல்லாத அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்திருக்க, இப்போது இல்லாத தம்பியும் கூட சேர்ந்துகொள்ள... அடுக்கடுக்கான பொய்கள்... அடுத்தடுத்து மாய்மாலங்கள்... எக்கச்சக்க தில்லுமுல்லுகள்... என காட்சிக்குக் காட்சி, சிரிப்புப் பட்டாசுகள்; மகிழ்ச்சி மத்தாப்புகள். இனிக்க இனிக்க, திகட்டத் திகட்ட... ஹாஸ்ய ரசகுல்லாக்கள்!

இல்லாத தம்பியாகவும் அவரே நடித்து ஏமாற்ற, அந்த இல்லாத தம்பியை முதலாளியின் மகள் காதலிக்க, காதல் வேறு, தம்பியும் இல்லை, அம்மாவும் உடான்ஸ் என்பதெல்லாம் தெரிந்த முதலாளி, துப்பாக்கியும் கையுமாக மவுண்ட்ரோட்டில் துரத்துகிறார்.

நகைச்சுவை குண்டுகள் முழங்கிக் கொண்டே இருக்க, ஒவ்வொரு தில்லுமுல்லும் எகிறியடித்து வயிறு வரை ஊடுருவிப் பதம் பார்க்கின்றன!

ரஜினி, அவரின் தங்கை சரிதாவின் தங்கையான விஜி, ரஜினியின் முதலாளி தேங்காய் சீனிவாசன், அவரின் மகளான மாதவி, இல்லாத அம்மாவாக நடிக்க செளகார் ஜானகி, ரஜினியின் மீசைக்குள் இருக்கிற குட்டு வெளிப்பட்டதால் மிரட்டி மிரட்டி, ப்ளாக்மெயில் செய்து ரஜினி ஸ்டைல் செய்கிற அந்தப் பொடியன்... என மிகக்குறைவான கேரக்டர்களைக் கொண்டு, தில்லுமுல்லு பண்ணியிருக்கிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

1981ம் ஆண்டு, உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வெளியானது தில்லுமுல்லு. படம் வெளியாகி 37 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் காமெடி, நகைச்சுவை, நடிப்பு, பாடல் என எல்லாமே புதுசாப் பூத்த ரோசாவாட்டம் மணக்கின்றன. கலகலக்கின்றன!

’கோல்மால்’ என்றால் தில்லுமுல்லு. ஆமாம். கோல்மால் எனும் இந்திப் படத்தின் தழுவலாக தில்லுமுல்லு எடுக்கப்பட்டது. சந்திரனாகவும் இந்திரனாகவும் நடித்திருப்பார் ரஜினி. ம்..ஹூம்... அப்படிச் சொன்னால் தேங்காய் சீனிவாசன் என்கிற ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கோபித்துக் கொள்வார். அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரனாகவும் அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரனாகவும் அதகளம் பண்ணியிருப்பார். இந்தப் படத்தின் சரித்திரப் பதிவு... ரஜினி எனும் ஸ்டைல் மன்னனுக்கு, ரஜினி எனும் ஆக்‌ஷன் ஹீரோவுக்கு காமெடியும் வரும்; பொளந்து கட்டுவார் என நிரூபித்த முதல்படம் தில்லுமுல்லுதான்!

சரோஜினி எனும் கேரக்டரில் மாதவி. வழக்கம்போல மாதவி... பொன்மயிலாள்தான். அப்படியொரு அழகு. டாக்டரான பூரணம் விஸ்வநாதன் வரும்போதெல்லாம் தருகிறார் சிரிப்பு மருந்து. விஜி... அதான் சரிதாவின் தங்கை, ரஜினியின் தங்கையாக நடித்திருப்பார். அவரின் பெயர் உமா. அட... விசுவின் படத்தில் உமா எனும் பெயர் வருமே என்கிற ஞாபகம் வந்திருக்குமே. ஆமாம்... படத்துக்கு வசனம் விசுதான்! பாலசந்தரின் உதவி இயக்குநரான விசு, இதில் திரைக்கதை வசனம் எழுதியிருப்பார்.

அழுமூஞ்சி நடிகை என்றே பெயரெடுத்த செளகார்ஜானகியை, எதிர்நீச்சலில் பயன்படுத்திக்கொண்டது போல, பாமாவிஜயத்தில் செய்யவைத்தது போல, இதிலும் காமெடிக் களத்தில், செளகார் ஜானகியை விளையாட விட்டிருக்கிறார் பாலசந்தர். மீனாட்சி துரைசாமி எனும் கதாபாத்திரத்தில் ஸ்கோர் பண்ணிக்கொண்டே இருப்பார்.

வேலைக்கு இண்டர்வியூ காட்சி அமர்க்களம். முதலாளி தேங்காய் சீனிவாசன் கேட்கும் கேள்விக்கு ரஜினி சொல்லும் பதில்கள் செம ரகம். அதற்கு முன்னதாக, ஒருவர் பூனை போட்ட சட்டைபோட்டுக்கொண்டு வருவார். சட்டைல என்ன பொம்மை என்பார் தேங்காய். பூனை சார் என்பார் ஸ்டைலாக. அதுல என்ன பெருமை என்பார். சுப்ரமணிய பாரதி என்றொருவர் வந்த போதும் அப்படியான காமெடிதான்.

முருகன் துணை, பெரிய மீசை, தேசப்பற்று, கதர்த்துணி என்று சொல்வதும் செய்வதும் சூப்பர் காமெடி.  ’அடுத்தது யாரு... லக்கி. என்னய்யா இது. லட்சுமிநாராயணன். அதான் லக்கி. உங்கபேரு பக்கிரிசாமி. பக்கிபக்கின்னு கூப்பிடட்டுமா?...

தேங்காய் சீனிவாசன் எத்தனையோ படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் இந்தப் படம் ஸ்பெஷல் அவருக்கு. மனிதர் பின்னியிருப்பார். அப்புறம் நாகேஷ், நாகேஷாகவே வருவார். கமல் கமலாகவே இருப்பார். பிரதாப் பிரதாப்பாகவே வருவார். லட்சுமி, லட்சுமியாகவே வருவார். இவர்களின் பங்கு, தில்லுமுல்லுக்கு இன்னும் வலு சேர்க்கும். விலா நோகச் செய்யும்.

ரஜினி வீட்டுக்கு தேங்காய் சீனிவாசன் வரும் காட்சி அமர்க்களம். செளகார்ஜானகியின் முகபாவங்களும் வசன உச்சரிப்புகளும் விழுந்து விழுந்து சிரிப்போம். எழுந்து எழுந்து சிரிப்போம். விழுந்து எழுந்து சிரிப்போம்.

மீசையுடன் அப்பாவிடம் வேலை, மாதவியிடம் மீசை இல்லாமல் பாட்டு கிளாஸ், மீசை இல்லாத ரஜினியைக் காதலிக்கும் மாதவி, மீசை உள்ள ரஜினியை நேசிக்கும் தேங்காய் சீனிவாசன், அந்தப் பொடிப்பயலிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் ரஜினி என அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான். இப்படியேதான். ‘என்ன நேரு மாதிரி உனக்கு பொசுக்குபொசுக்குன்னு கோபம் வருது’ , ‘புட்பால்னா... இந்த பந்தை காலால உதைப்பாங்களே அதுவா சார்’, ‘அப்படின்னு நாகேஷ் சொல்லிருக்காரு... யாரு நாகேஷ்... மிகப்பெரிய ஞானி சார்., மகாத்மா காந்தி உங்க வீட்டுக்கு வந்ததும் என்ன பண்ணினார், சட்டையைக் கழற்றி கோட்ஸ்டாண்ட்ல மாட்டினார். நான் முடிவு பண்ணிட்டேன். இவனுக்கு வேலை உண்டு. பாஸ் மார்க் வாங்கிட்டான். எவ்ளோ மார்க். ஏழாயிரத்து நானூத்தி முப்பத்தி அஞ்சு.... நூத்துக்கு!... அய்யோசாமி... சிரிச்சுச் சிரிச்சே செத்தாண்டா சேகருதான் போங்க!

தில்லுமுல்லு தில்லுன்னு ஒரு பாட்டு, தங்கங்களே தம்பிகளேன்னு ஒரு பாட்டு, ராகங்கள் பதினாறுன்னு ஒரு பாட்டுன்னு எம்.எஸ்.வி.யும் கவியரசரும் கைகோர்த்து பாட்டாலேயும் இசையாலேயும் விளையாடியிருப்பாங்க!

‘அம்மா சார். எனக்கு ஒரேயொரு அம்மாதான் சார். ஏற்கெனவே அவங்களுக்கு நெஞ்சு வலி வேற சார்’ என்று சொல்லும் போது ரஜினியின் எக்ஸ்பிரஷன் தூள் கிளப்பும். 

’உங்களைச் சிரிக்க வைக்கிறதுதான் எங்க நோக்கம். அவ்ளோதான்’ என்று படத்தின் தொடக்கத்தில், ரஜினி சொல்ல, ‘ஹ்யூமரஸ்லி யுவர்ஸ் கே.பாலசந்தர்’ என்று டைட்டில் கார்டு போட்டிருப்பார் கே.பாலசந்தர்.

’படிச்சுப் படிச்சு சொன்னேன் சார்... பாத்ரூம்ல பாத்துப்போன்னு சொன்னேன் சார். வழுக்கி விழுந்துட்டாங்க சார். இந்த வயசுல போய் வழுக்கி விழுந்துட்டாங்க சார்’

மண்ணடி... கோடவுன்... மண்ணடி.... மண்ணடி... அம்மா விழுந்துட்டாங்க போன்... மண்ணடி பின்னாடி... என்பன போன்ற வசனங்கள்தான் மிகப்பெரிய பலம். அதில் ஒவ்வொருவரின் நடிப்பும் அசுரபலம்!

அதிலும், முருகன் படத்துக்கு எதிரே க்ளைமாக்ஸில் தேங்காய் சீனிவாசன் பேசும்போது, ‘மன்னிக்கணும், நான் பிள்ளையார்’ என்று முருகன் வேஷத்தில் இருந்து மாறி, உருவம் காட்டி தில்லுமுல்லு பண்ணியிருப்பாரே.. இப்படி காட்சிக்குக் காட்சி, சீனுக்கு சீன், தியேட்டரே கைத்தட்டும், கைத்தட்டிக்கொண்டே இருக்கும். விசிலடிக்கும். விசில் பறந்துகொண்டே இருக்கும்.

இன்னொன்னு... மைசூர்பா என்று எழுதினால் மட்டும் போதுமா? ஒரு ரெண்டு மைசூர்பாவை இறக்கினால்தானே சுவை; சுகம்; சுவாரஸ்யம். அப்படித்தான்.. தில்லுமுல்லு பாருங்கள். சிரித்துச் சிரித்தே திக்குமுக்காடிப் போவீர்கள்.

தில்லுமுல்லு - தமிழ் சினிமாவின் சூப்பர் காமெடிப் படங்களின் பட்டியலில் முக்கியமான படம்; முக்கியமான இடத்தைப் பிடித்த படம்!

https://www.kamadenu.in/news/cinema/3923-thillumullu-appave-appdi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

சிந்துபைரவி - அப்பவே அப்படி கதை!


 

 

sindhubairavi-appave-appadi-kadhai

 

 

மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் உறவும் நட்பும் வைத்துக்கொள்கிற கதை என்று சொல்லமுடியுமா? அது வேறொரு நிறமாகிவிடும். ஒரு இசைக்கலைஞனின் கதை என்று சொல்லலாமா? இது வாழ்வியலைச் சொல்லும் கதையாயிற்றே! அபரிமிதமான அன்பு கொண்ட ரசிகையின் சரிதம் என்று சொன்னால் என்ன? சொல்லலாம்... ஆனால், கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் சொல்கிற மிகப்பெரிய பொறுப்புகொண்ட படமாயிற்றே...! குடும்பக் கட்டமைப்பின் உன்னதத்தை உயிர்ப்புடன் சொன்ன செல்லுலாய்டாயிற்றே... என்று ஒவ்வொரு வாத்தியக் கருவிகளும் எழுந்து வந்து, கோபித்துக்கொள்ளும். அப்படியொரு ஜீவபடைப்புதான் சிந்துபைரவி!

1985ம் ஆண்டு வெளியான சிந்துபைரவிக்கு இப்போது வயது 33. இதையடுத்து, இந்த 33 வருடங்களில், இப்படியொரு படம் வரவில்லை என்பதே சிந்துபைரவி சிகரம் தொட்டதற்கான கடுகளவு உதாரணம்.

 

ஜே.கே.பி. எனும் கர்நாடக இசைக்கலைஞர். அவர் பாடினால், மொத்த அரங்கமும் வாய் பொத்தி, காது கூர்மையாக்கிக் கேட்கும். கண்மூடிக்கிறங்கும். தலையாட்டி ரசிக்கும். ஜேகேபி கச்சேரி என்றால் ஹால்... ஹவுஸ்ஃபுல். ஆல் டைம் ஹால் ஹவுஸ்ஃபுல்.

சமூகத்தில் மிகப்பெரிய கெளரவம். ரசிகர்களிடம் அபரிமித அன்பு. உடனுள்ள கலைஞர்கள் காட்டுகிற மரியாதை. இவ்வளவு இருந்தும் ஜே.கே.பிக்கு ஒருகுறை... அவர் மனைவி பைரவிக்கு இசை கேட்கும் ஞானம் கூட இல்லாதது. அந்த பைரவிக்கு ஒரேயொரு குறை... குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று பெயரெடுக்காமல், ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள காலநேரம் வரவில்லையே என்று!

ஒருநாள்... கச்சேரியை ரசிக்க வருகிறாள் சிந்து என்பவள். இடையே பேசுகிறாள். கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு, வடமொழியிலும் தெலுங்கிலுமாகப் பாடினால் போதுமா. தமிழில் பாடினால் எல்லோரும் ரசிப்பார்களே என்கிறாள். கர்நாடக சங்கீதத்தில் தமிழைச் சேர்ப்பதா? என்று கோபமாகிறார் ஜே.கே.பி. அங்கே, அவளுக்கு மைக் தரப்படுகிறது. பாடுகிறாள். தமிழில் பாடியவள் முடிக்கும்போது அப்படியே வடமொழிக்குள் சஞ்சாரிக்கிறாள். ஒருபக்கம் கோபம், இன்னொரு பக்கம் வலி. மொத்தமாக அவமானம்.

அடுத்தடுத்த தருணங்களில் பேசக்கிடைக்கிற வாய்ப்பில், பரஸ்பரம் புரிந்துகொள்கிறார்கள். இன்னும் புரிந்துகொள்ள பேசுகிறார்கள். அப்படிப் பேசிக்கொள்வதற்காகவே சந்தித்துக்கொள்கிறார்கள். சந்தித்துப் பேசுவதற்காகவே பொய் சொல்கிறார்கள். பொய் சொல்லும்போதே குற்ற உணர்வும் இது வேறு எங்கோ இட்டுச் செல்கிறதே எனும் ஜாக்கிரதை கலந்த பய உணர்வு பொங்குகிறது. ஆனால் ஜாக்கிரதை உணர்வையும் பய உணர்வையும் காதலும் காமமும் சேர்ந்து கூட்டணி போட்டு ஜெயிக்கிறது.

கர்நாடக சங்கீதத்தில் தமிழை இணைத்தது போல் தன் வாழ்க்கைக்குள்ளும் சிந்துவை இணைத்துக்கொள்கிறார் ஜே.கே.பி. ஆனால் அப்படியெல்லாம் விடத்தயாராக இல்லை பைரவியும் பைரவியின் மீது பிரியம் கொண்ட இசைகோஷ்டியைச் சேர்ந்தவர்களும்!

சிந்துவைச் சந்தித்து, உருட்டி, மிரட்டி ஊரைவிட்டே அனுப்புகிறார்கள். அவள் எங்கே? தெரியவில்லை. அவளில்லாமல் இசையில்லை எனும் முடிவுக்கு வந்துவிடுகிறார் ஜே.கே.பி. பாடுவதில்லை. கச்சேரி பண்ணுவதில்லை. மேடை ஏறுவதே இல்லை. எவருடனும் பேசுவதுமில்லை. இசைத்தேனில் மூழ்கி முத்தெடுத்தவர், மதுபோதைக் கோப்பையில் தன்னையே இழக்கிறார். மதிப்பு, மரியாதை, கெளரவம், பெயர், அந்தஸ்து என சகலத்தையும் இழந்து திரிகிறார்.

அவரை பைரவியால் அப்படிப் பார்க்கமுடியவில்லை. விளம்பரம் செய்து சிந்துவை வரவழைக்கிறார்கள். வருகிறேன் என வாக்குறுதி கொடுக்கிறார். மீண்டும் ஜே.கே.பி. என்ற விளம்பரத்துடன் மேடையும் கச்சேரியும் பெருங்கூட்டமுமாக இருக்க... அங்கே பழைய உற்சாகத்துடன் கம்பீரமாக ஜே.கே.பி. பாட... சிந்து வருகிறாள். கச்சேரி களைகட்டுகிறது. குடும்பத்துக்குள்ளேயே அவளைச் சேர்க்க பைரவி தயாராக இருக்கிறாள். ஆனால் சிந்து தயாராக இல்லை. அவள் பரிசொன்று தருகிறாள். ஜே.கே.பி. - பைரவி தம்பதிக்கு, ஜே.கே.பி.யின் வாரிசையே பரிசாகத் தருகிறாள். விடைபெறுகிறாள்.

அந்தக் கச்சேரியில் இருந்தும் சிந்து - பைரவி - ஜே.கே.பி.யின் உணர்வுக்குவியல்களில் இருந்தும் அந்தக் குடும்பத்தினரிடம் இருந்தும் நாமும் விடைபெறுகிறோம்.

கலைஞர்களுக்கு அது பாட்டோ பரதமோ, எழுத்தோ ஓவியமோ... இப்படியொரு ரசிகரோ ரசிகையோ கிடைப்பார்கள். அப்படிக் கிடைத்து, அவர்களே வாழ்க்கைத்துணை எனும் இடத்துக்கு வர நேர்ந்தால், வரும் சூழல் உருவானால், என்னாகும் என்பதை ஆர்மோனியப் பெட்டியின் ஸ்ருதி விலகாத திரைக்கதையுடன் ஸ்வர சஞ்சாரம் செய்திருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு சாதாரண கதைதான். ஆனால் உள்ளார்ந்து பார்க்கும்போதுதான், சிக்கல்களும் சிடுக்குகளும் கஷ்டங்களும் நஷ்டங்களும் புரியவரும்.

சிவகுமார் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் ஜே.கே.பி. என்கிற கதாபாத்திரம், சிவகுமாரின் வாழ்நாள் கேரக்டர். ஓர் இசைக்கலைஞனாகவே அவதானித்திருப்பார்.

சிந்துவாக சுஹாசினி. படபட துறுதுறு பட்டாசுதான் பொதுவாகவே கே.பி.யின் பெண் கதாபாத்திரங்கள். இதில் சிந்துவாக, அப்படிப் பண்ணியிருப்பார் சுஹாசினி. அதிலும் அந்த கள்ளமில்லாச் சிரிப்பு... சுஹாசினிக்கு பலம். அது சிந்துவுக்கும் பலம் கொடுத்தது!

பைரவியாக சுலக்‌ஷணா. அப்பாவி. அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அப்படித் தெரிந்தால் அது சமையலும் கணவனின் உடல்நலமுமாகத்தான் இருக்கும். மிக அழகாக, நேர்த்தியாக, கண்களாலும் உடல்மொழியாலும் பிரமாதப்படுத்தியிருப்பார்.

இசைக்குழுவில் உள்ள டெல்லிகணேஷும் அவரின் கோபமும் போதையும் செம ரகம். ஜனகராஜின் அவரின் உண்மை சொல்லத் துடிக்கும் தலையும் தூள் விதம். அந்த பென்ஷன் தாத்தா சின்ன சீன். பெரிய டச். மேக்கப் மேன் சுந்தரமூர்த்தி, ஜேகேபியின் டிரைவர். ‘டேய். பசிக்குதுடா காசு கொடுடா’ என்று கேட்பார் ஜேகேபி. ஆனால் அது தண்ணி வாங்குவதற்கு! பணத்தை எடுத்தவர், ‘அண்ணா, வாங்கண்ணா, பக்கத்துலதான் ஹோட்டல் இருக்கு. வந்து சாப்பிடுங்கண்ணா’ என்றதும் ‘டேய் போடாபோடா’ என்று அலட்சியமாய்ச் சொல்லிவிட்டுச் செல்ல, துவண்டு நிற்பார் அந்த துணை கேரக்டர்.

ஜேகேபியின் குடும்ப நண்பரின் குடும்பம் டி.எஸ்.ராகவேந்தரும் மணிமாலாவும். இந்த மணிமாலா வேறு யாருமல்ல. இவருக்கும் யாரோ ஒருவருக்கும் பிறந்தவர்தான் சுஹாசினி. இது தெரிவதற்கு முன்னதாக, ஜேகேபியுடனான உறவைத் துண்டித்துக்கொள்ள, அசிங்கம் அசிங்கமாகப் பேசுவார்; ஏசுவார். ஆனால் தன் மகள் என்று தெரிந்ததும் பாசத்தில் பொங்கி, அன்பில் குழைந்து, வாஞ்சையில் மயங்கி.. ஆஹா... மணிமாலாவையெல்லாம் தமிழ்சினிமா இன்னும் நன்றாகவே பயன்படுத்தியிருக்கலாம்.

டி.எஸ்.ராகவேந்தர் வீட்டு டிரைவர் கிருஷ்ணா, சுஹாசினி வீட்டின் கீழே பிரஸ் வைத்துக்கொண்டு, லவ்வையும் சுஹாசினியிடம் பிரஸ் பண்ணிச் சொல்லும் பிரதாப் போத்தன் என சின்னச் சின்ன ரோல்கள்... ஆனால் எல்லா கதாபாத்திரங்களும் நெஞ்சமெல்லாம் நிறைந்துவிடுவார்கள்!

’பத்மஸ்ரீ விருதுன்னா?, எல்லாருக்கு முன்னாடியும் பேரெழுதி, பேப்பர் கொடுப்பாங்க. ஜனாதிபதி கொடுப்பாரு’ , அவ்ளோதானா. ஒரு கப்புகிப்பு, மெடல்கிடல்னு தங்கம் எதுவும் கிடையாதா?’ என்று கேட்க, ‘பேருதான் பெரிய இசைக்கலைஞர் ஜேகேபியோட பொண்டாட்டி. ஆனா சங்கீதம்னா..’ என்று சொல்லிமுடிக்க, ‘கிலோ என்ன விலை’ என்று கத்தரிக்காய்க்காரனிடம் கேட்பார் சுலக்‌ஷணா.

சிவகுமாரும் சுஹாசினியும் ஒருவாரம் பேசிக்கொள்ளமாட்டார்கள். சண்டை. அந்த ஒருவாரத்தை படபடவென ஓடுகிற காலண்டர் பேப்பராகக் காட்டினால் இது நாலாயிரத்துச் சொச்சமான படமாகிவிடுமே! அந்த ஒருவாரத்தை... ஒவ்வொரு நாளும் வருகிற குமுதம், விகடன், கல்கி, இதயம் என்பதைக் கொண்டு காட்டியிருப்பார். பாலசந்தர் டச்.

சண்டை ஓய்ந்துவிட்டதாக மனம் சொல்லும். சுஹாசினி பிரஸ் வழியே கிளம்பிச் செல்வார். அங்கே, மிஷினின் அருகில் அதேசமயம் சிவகுமாரின் போஸ்டர் முகத்தில் கால் வைத்திருப்பார். ‘அண்ணே ஒரு நிமிஷம்’ என்று போஸ்டரை எடுத்து அழகாக மடித்துவைப்பார். பாலசந்தர் டச்.

சுலக்‌ஷணாவுக்கு கையில் சிராய்ப்பு. என்ன என்று கேட்பார் சிவகுமார். அவர் காரணம் சொல்லுவார். கட் பண்ணினால், காமிரா அப்படியே சுருண்டு உருண்டு சுருண்டுருண்டு போகும். அங்கப்பிரதட்சணம் என்பதை அழகாய்க் காட்டிவிடுவார். இதுவும் பாலசந்தர் டச்.

‘மன்னி நான் குடிக்கலை மன்னி. சும்மா குடிச்சிட்டுப் பேசினா, ஒண்ணும் தெரியாது. அதான் மன்னி குடிச்ச மாதிரி நடிச்சேன்’ என்பார் டெல்லிகணேஷ். இதில் நடிப்பிலும் மிருதங்கத்திலும் வெளுத்துவாங்கியிருப்பார் அவர்.

நானொரு சிந்து பாடலில், கன்றும் பசுவுமாக இருக்கிற சிலை. சிவகுமாரும் சுஹாசினியும் நடந்து வரும் போது, மெல்ல மெல்ல விரல்கள் உரச, கைகள் உரச, தோள்கள் உரச... அப்போது இசையும் உரசிக்கொண்டு உயிரையே உலுக்கிப்போடும்.

சிந்து ஊருக்குப் போய்விட்டாள் என்பதை, சின்னப்பசங்க ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்தபடி ரயில்விளையாட்டு விளையாடுவதைக் காட்டுவார். பாலசந்தர் டச்.

மிக்ஸி அரைத்துக்கொண்டிருக்கும் சுலக்‌ஷணாவை வந்து திட்டுவார் சிவகுமார். டெல்லி போறீங்களே... பருப்புப் பொடி பண்றேன் என்பார். இதைத்தவிர எதுவுமே தெரியாதா என்று எரிந்து விழுவார். லதாமங்கேஷ்கரோட மீரா பஜன் கேட்டுக்கிட்டிருக்கேன், ஞானசூன்யம் என்று திட்டுவார். உடனே சுலக்‌ஷணா, ‘லதாமங்கேஷ்கரா உங்களுக்கு பருப்புப் பொடி பண்ணித்தரப்போறா’ என்பார். தியேட்டரின் கைத்தட்டல் அந்த லதாமங்கேஷ்கருக்கே கேட்டிருக்கும்.

இப்படி படத்தை சிலாகித்து சிலாகித்துச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். சிவகுமாரும் சுஹாசினியும் கூடிவிட்டார்கள் என்பதையும் அவரின் காமம் கட்டற்றுப் போனது என்பதையும் அழகியலோடு காட்டியிருப்பார்.

படத்தின் கதாநாயகன் சிவகுமார்தான். ஆனால் முதல் கதாநாயகன் இளையராஜா. அவரின் இசைதான் சிந்துபைரவியின் நாதம், கீதம், வேதம், சாரம் எல்லாமே! முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மிகுந்த சாந்நித்தியத்துடன் படைத்து வார்த்து பரிமாறியிருப்பார் இசைஞானி!

மஹாகணபதிம், மரிமரிநின்னே, நானொரு சிந்து, பாடறியேன், பூமாலை வாங்கி வந்தால், கலைவாணியே என்று பாடல்கள் மொத்தமும் திருவையாறு ஸ்பெஷல். அதேபோல வைரமுத்துவின் வரிகள், நம்மை என்னவோ செய்யும். அந்த வரிகளின் மென்மை கூட, நம் மனசைக் கீறிவிட்டுச் செல்லும்.

எழுத்தாளர் பாலகுமாரனும் இயக்குநர் வஸந்தும் உதவி இயக்குநர்கள். சுரேஷ் கிருஷ்ணா இணை இயக்குநர். கதை வசன உதவி, அனந்து எனும் தூண். வழக்கம்போல் ரகுநாத ரெட்டியின் காமிரா ஜாலம் காட்டும். உங்க படத்துக்கு சம்பளமே வேணாம் என்று கடலும் அலையும் கரையும் மிகச் சிறப்பாக நடித்துவிட்டுப் போகும்.

ஒரு நல்ல ஓவியத்தை, அழகான ஆங்கிளுடன் கொண்ட படத்தைச் சட்டமிட்டு பத்திரப்படுத்தி, மாட்டிவைத்துக்கொள்வோம்தானே! மனசில் பத்திரமாய் உட்கார்ந்திருக்கிறார்கள் சிந்துவும்பைரவியும் சிந்துபைரவியும்!

மேடையிட்டு அமர்ந்திருக்கிறார்கள் ஜேகேபியும் கேபியும்!

இப்படியொரு நடிப்புடன், தெளிந்த திரைக்கதையுடன், ஜீவனுள்ள இசையுடன்... இன்னொரு சிந்துபைரவி பிறக்க வாய்ப்பே இல்லை. ஜென்மத்துக்கும் நம் மனதுள் இருக்கிற சிந்துபைரவிக்கு இறப்பே இல்லை. அது தலைமுறையைக் கடந்து ஜீவித்துக்கொண்டே இருக்கும் காவியம்!

https://www.kamadenu.in/news/cinema/3959-sindhubairavi-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

ஞானஒளி - அப்பவே அப்படி கதை


 

 

gnananoli-appave-appadi-kadhai

ஞானஒளி - லாரன்ஸ், ஆண்டனி, மேரி (மேஜர், சிவாஜி, சாரதா)

 

 

குற்றவாளிக்கும் போலீசுக்கும் நடுவே நடக்கிற கண்ணாமூச்சி விளையாட்டு எப்போதுமே சுவாரஸ்யம்தான். அதனால்தானோ என்னவோ... சின்ன வயசில், திருடன் போலீஸ் விளையாட்டில் ஈடுபடுகிறோமோ என்னவோ? அல்லது அப்படி விளையாடியதால்தான், சினிமாவில் இந்த விளையாட்டுகளை வெகுவாக ரசிக்கிறோம் போல! அப்படியொரு ஆட்டத்தை, எள்ளளவும் போரடிக்காமல் நமக்குக் காட்டப்பட்டதுதான் ஞானஒளி!

குற்றவாளி - போலீஸ் என்பதே ஆட்டத்தின் விறுவிறுப்புதான். அப்படியிருக்க, அந்த அக்யுஸ்ட்டும் காவல்துறை அதிகாரியும் நண்பர்களாகவும் இருந்தால், கேட்கவா வேண்டும். அப்படித்தான் கதை பண்ணியிருப்பார்கள். அதுதான் ஞானஒளி!

 

1972ம் ஆண்டு வெளியான படம் ஞானஒளி. சிவாஜிகணேசன் நடிப்புச் சக்கரவர்த்தியின் மிக முக்கியமான படங்களில் ஒன்று, சிவாஜியை ரசித்து ரசித்து இயக்குகிற பி,மாதவன் இயக்கத்தில் உருவான படங்களில் இதற்கும் முக்கியத்துவம் உண்டு. வியட்நாம் வீடு, கெளரவம் வரிசையில் வியட்நாம் வீடு சுந்தரம் கதை, வசனம் எழுதி, காட்சிக்குக் காட்சி தனியே கவனம் ஈர்க்கும் வசனங்களால், தனித்துவமான நடிப்பால் கைத்தட்டல்களை அள்ளிக்கொண்ட படம் இது!

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோயில். அங்கே பாதிரியார் ஆலயத்தையும் ஊரையும் நல்லவிதமாக நடத்திக்கொண்டிருக்க, மாதா கோயிலில் மணியடிப்பவர் ஆண்டனி. மணியடிக்கும் பணியிலும் மாதாக்கோயிலிலும் பாதிரியாரின் மனத்திலும் இடம் பிடித்திருக்கும் நல்லவன். என்ன ஒன்று... கொஞ்சம் முரடன். வாய் பேசத் திறப்பதற்குள், கையால் பேசிவிட்டு அப்புறமாக வாயால் பேசுபவன்.

ஆசை ஆசையாய் காதலிக்கிறான். அன்பு ததும்ப வாழ்கிறான். ஆனால் மனைவி இறந்துபோக நேரிடுகிறது. பிறகு, தன் மகள் மேரியே உலகம் என வாழ்கிறான். வெளியூருக்கு அனுப்பி, பெரிய படிப்பெல்லாம் படிக்கவைக்கிறான்.

இதனிடையே, அந்த ஊருக்கு புதிதாக வேலைக்கு வரும் லாரன்ஸ் எனும் போலீஸ் அதிகாரி, பாதிரியாரைச் சந்தித்து ஆசி பெறுகிறான். அப்போது சிறுவயதில் இங்கே வளர்ந்ததைச் சொல்கிறான். ஆண்டனியும் லாரன்ஸும் சிறுவயதுப் பழக்கம். பால்ய சிநேகிதர்கள். இருவரும் பெரியவர்களாக அறிமுகமாகிறார்கள். பழைய நட்பு துளிர்க்கிறது.

இதனிடையே படிக்கச் சென்ற மேரி திரும்பி வருகிறாள். படிப்புடன் காதல் படிப்பையும் வாசித்து, நேசித்து வந்திருக்கிறாள்.

ஒருநாள்... போலீஸ் நண்பனை தன் வீட்டுக்குள் அழைத்துவருகிறான் ஆண்டனி. நல்ல மழை. இருள் கவிந்திருக்க, அரிக்கேன் விளக்கை எடுக்கிறான் அந்த ஒளியில், கொல்லையில் மகளும் வேறொருவனுமாக இருப்பதைக் கண்டு துடிக்கிறான். வெட்டிப் போட அரிவாளை எடுக்கிறான். போலீஸ் நண்பன் தடுக்கிறான். இருவரிடம் பேசுகிற போலீஸ் நண்பன், அங்கேயே அப்போதே மோதிரம் மாற்றிக்கொள்ளச் செய்கிறான். பிறகு கல்யாணம் நடத்திக்கொள்ளலாம் என்கிறான்.

அதன் பிறகு, அந்தப் பையனைச் சந்திக்கச் செல்கிறான் ஆண்டனி. அங்கே அவனின் நிஜமுகமும் மனசும் தெரிய... ஒரே அடி... ஒரே அடிதான் அடிக்கிறான். இறந்துபோகிறான். அதுதெரியாமல் சர்ச்சுக்கு தூக்கிவருகிறான். இறந்துகிடப்பது தெரிகிறது. போலீஸ் நண்பன் கைது செய்கிறான்.

தண்டனையும் கிடைக்கிறது. பாதிரியாருக்கு ஆண்டனியைப் பார்க்க ஆசை. லாரன்ஸிடம் கேட்க, ஆண்டனியை அழைத்து வருகிறான் அவன். அங்கே, அப்போது பாதிரியார் இறக்க, அவன் தப்பித்துச் செல்கிறான்.

காலங்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் ஓடுகின்றன. அந்த ஊருக்கு மிகப்பெரிய தொழிலதிபராக அருள் என்பவர் வருகிறார். பாதிரியார் விட்டுச் சென்ற பணிகளையும் அவரின் விருப்பங்களையும் அருள் நிறைவேற்றித் தருகிறார். அவரைப் பார்க்கும் போலீஸ் லாரன்ஸுக்கு சந்தேகம். இந்த அருள்தான்... அந்த ஆண்டனி என்று. தப்பிச் சென்ற ஆண்டனி என்று நினைக்கிறார். ஆனால் ஆதாரம் ஏதுமில்லை. அவரை வலையில் விழவைக்கவும் ஆண்டனி என நிரூபிக்கவும் படும்பாடுகளும் சூழல்களும் சூழ்ச்சிகளும்தான் ஞானஒளி!

ஆண்டனியாக, மாதாகோயிலில் மணி அடிப்பவராக சிவாஜி. அமர்க்களம் பண்ணியிருப்பார். பாதிரியார்தான் கடவுளே அவருக்கு! அவரின் மகள் சாரதா. லாரன்ஸ் எனும் நண்பனாக, போலீசாக மேஜர் சுந்தர்ராஜன். பாதிரியாராக கோகுல்நாத். அதிலும் நெஞ்சில் கைவைத்துத் தடவித் தட்டுகிற மேனரிஸம்... ஞானஒளியின் சிவாஜி ஸ்பெஷல்! 

ஆண்டனி என்கிற அருளும் லாரன்ஸும் மோதிக்கொள்ளும் காட்சிகள்,  தியேட்டரில் விசிலை வரவழைக்கும். கைத்தட்டி கைத்தட்டி டயர்டானார்கள் ரசிகர்கள். ஆனாலும் நடிப்பின் தாக்கத்தால், அயர்ச்சியெல்லாம் காணாமலே போய்விடும்!

’என்னடா வாங்கபோங்கன்னு கூப்பிடுறே. வாடாபோடான்னே கூப்பிடு’ என்பார் மேஜர். ‘சரிடாடாடா... வரேண்டாடடாடா’ என்று சிவாஜி சொல்லும் ஸ்டைல் ஏக்ளாஸ்.

பார்க்க ஆசைப்படும் பாதிரியாருக்காக, கைதி சிவாஜியை மேஜர் அழைத்துவருவார். ஹாலின் வாசலிலேயே நின்றிருப்பார் சிவாஜி. ‘ஏய்... முரட்டுப்பயலே... வாடா’ என்று பாதிரியார் அழைக்க, கைகளை குறுக்கிக்கொண்டு, கால்கள் துவள, தலை கவிழ்ந்திருக்க... குற்ற உணர்ச்சியுடனும் குழந்தையைப் போலவும் நடந்துவந்து, பாதிரியாரின் காலடியில் தொப்பென்று விழுவாரே... சிவாஜியைத் தவிர சிவாஜிதான் பண்ணமுடியும் அதை!

தப்பிக்கும் சிவாஜியைப் பார்த்து, மேஜர் துப்பாக்கி காட்டுவார். ‘ஓடுனா ஷூட் பண்ணிருவேன். ஷூட்டிங் ஆர்டர் வாங்கிட்டுதான் வந்திருக்கேன்’ என்பார். சுடமுடியாது என்பார் சிரித்துக்கொண்டே. ‘இந்த வெளி உலகம் கத்துக்கொடுத்ததை விட, ஜெயில் உலகம் நிறையவே கத்துக்கொடுத்திருக்கு. அந்தக் குண்டுகளை நான் எடுத்து...ட்டேன்...’ என்று சொல்லும்போது ஏக வரவேற்பு, சிவாஜி ஸ்டைலுக்கு!

டிராயரும் சின்ன சட்டையும் ஒரு கண்ணை மறைத்த துணியும் நெஞ்சில் ஆடும் சிலுவை டாலருமாக வலம் வந்த போது சிவாஜியின் உடல்மொழி ஒருமாதிரியாக இருக்கும். பிறகு தொழிலதிபராக, லேசான முறுக்கு மீசையும் கருப்புக் கூலிங்கிளாஸும், கோட்டும்சூட்டுமாக மிடுக்குடன் வரும்போது, அவரின் மேனரிஸம் என்ன, பார்வை என்ன, நடை என்ன, பேச்சு என்ன... புதுப்புது ஸ்டைல்களையெல்லாம் காட்டியிருப்பார். சிவாஜி இந்தக் காட்சிக்கு என்ன செய்வார், எப்படிப் பேசுவார் என்று திரை மேல் விழி வைத்து, மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.

படத்தில் அடுத்த ஸ்கோர் வாங்குபவர், மேஜர் சுந்தர்ராஜன். அதாவது லாரன்ஸ். மனிதர், மிகப்பிரமாதமான நடிப்பை வழங்கியிருப்பார். சிவாஜிக்கு இணையான கதாபாத்திரம். அதைப் புரிந்து உணர்ந்து, பொளந்துகட்டியிருப்பார்,. மேஜரின் வாழ்நாள் கேரக்டர்... லாரன்ஸ். சிவாஜியைத் தவிர வேறு யாருமே பண்ணமுடியாது என்றெல்லாம் ஒவ்வொரு கேரக்டரின் போதும் சொல்வோம்தானே. அப்படித்தான்... மேஜர் சுந்தர்ராஜனைப் போலவும் எவரும் நடிக்கமுடியாது என்று சொல்லும்படியாய் நடித்து அசத்தியிருப்பார்.

‘மத்தவங்க எடுத்தா திருட்டு. அதையே போலீஸ் செஞ்சா, ஞாபகமறதி’ என்று சிவாஜி சொல்ல, உங்க கோட்டுக்குள்ளே இருக்கிற வெள்ளி டம்ளர் என்று சொல்ல, அசடு வழிந்து சமாளிப்பார் மேஜர். இப்படித்தான் ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜியும் மேஜரும் ஸ்கோர் செய்துகொண்டே இருப்பார்கள். சாரதாவும் சளைக்காமல் நடித்திருப்பார்.

சிவாஜி ஒரு ப்ளாங்க் செக் கையெழுத்திட்டுத் தருவார். அதில் அருள் என்பதற்குப் பதிலாக, ஆண்டனி என கையெழுத்திட்டிருப்பார். ‘எல்லாக் குழப்பத்துக்கும் காரணம் இந்த போலீஸ்தான். வந்ததுலேருந்து ஆண்டனி, ஆண்டனின்னு சொல்லிக்கிட்டே இருந்தார். குழப்பமாயிருச்சு’ என்று வி.கே.ராமசாமி சொல்ல,,, அந்த ப்ளாங்க் செக்கை சட்டென்று வாங்கி, கிழித்துவிட்டு, அந்தப் பேப்பரை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, பிறகு நமட்டுச் சிரிப்புடன் ஸ்டைலாகப் பார்த்துக்கொண்டே கையெழுத்துப் போடுவாரே சிவாஜி... பிய்த்து உதறிவிடுவார் நடிப்பில்!

சாரதாவின் மகளும் மேஜரின் மகனும் காதலிக்க... அதையே துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி, காய்கள் நகர்த்தி, திருமணநாளின் போது, ‘இந்த மேரி ஒரு நடத்தை கெட்டவ. உன் கணவர் யாரு. உங்களுக்குக் கல்யாணம் எப்போ, எங்கே நடந்துச்சு. அதுக்கு யாரு சாட்சி என்றெல்லாம் கேட்பார். சாரதா துடித்துப் போவார். அப்போது கொதித்தெழும் சிவாஜி, மேஜரிடம் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்க, அதில் சிவாஜி மாட்டிக்கொள்ள... லாரன்ஸ் சொல்லு. என் பொண்ணு மேரி உத்தமிதான்னு சொல்லு. எனக்காக சொல்லு. கெஞ்சிக் கேக்கறேன் சொல்லு. லாரன்ஸு... நான் உன் நண்பன் இல்லியா?’ என்று சொல்லிக் கலங்குவாரே... அழுதுகொண்டே கைத்தட்டி சிலிர்த்தார்கள் ரசிகர்கள்.

அம்மாகண்ணு சும்மா சொல்லு, தேவனே என்னைப் பாருங்கள் என்று பாடல்கள் செம ரகம். எம்.எஸ்.வி., கண்ணதாசன் கூட்டணி வழக்கம்போல் அசத்தியிருக்கும்.

72ம் ஆண்டு வந்த படம். 46 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இன்றைக்கும் இப்போதும் எப்போதும் நம் மனங்களில், மங்காமல் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் ஞான ஒளி! அதுதான் இந்த ஒளியின் ஸ்பெஷல். சிவாஜியின் தனித்துவம்!

https://www.kamadenu.in/news/cinema/4065-gnananoli-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

ஊமைவிழிகள் - அப்பவே அப்படி கதை!


 

 

umaivizhigal-appave-appadi-kadhai

ஊமைவிழிகள் விஜயகாந்த், சரிதா

 

 

தமிழ் சினிமாவில் பயமுறுத்துவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. கொஞ்சம் இருட்டு, ஒரு பூனை, தடதட சத்தம், காற்றிலாடும் திரைச்சீலை ஆகியவற்றைக் கொண்டே, நம்மை பீதியில் ஆழ்த்துகிற வித்தையை, அந்தக்காலம் தொட்டு இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளது உள்ளதுபடி, துள்ளத்துடிக்க, ஒரு க்ரைம் திரில்லரை உருவாக்கிய படம் என்பதாலேயே ஊமைவிழிகள் படத்தை இன்றைக்கு வரை, உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!

திரையுலகில், ஊமைவிழிகளுக்கு முன்பு பின்பு என்று கோடு போட்டு பிரித்துப் பார்க்கவேண்டியது அவசியம். திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு, அங்கே படித்துவிட்டு, கோடம்பாக்கத்தில் வருபவர்களுக்கு, சினிமாவில் மரியாதையே தராத ஒருகாலகட்டம் இருந்தது. ‘படிச்சிட்டு வந்துட்டா, படம் பண்ணிட முடியுமா?’ என்று பேசினார்கள். ஆனால், தமிழ்மக்களுடன் சேர்ந்து சினிமாக்காரர்களையும் மூக்கில் விரலைவைத்துக்கொண்டே ஆச்சரியப்பட்டுச் செய்த படம் எனும் வகையில், ஊமைவிழிகளுக்கு தனியிடமும் சரித்திர முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

1986ம் ஆண்டு வெளிவந்தது ஊமைவிழிகள். 32 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் சொன்ன விதத்திலும் காட்சிப்படுத்தலிலும் டெக்னிக்கலாகவும் மேக்கிங்கிலும் என்று ஊமைவிழிகள்... அதுக்கும் மேலே ரகம்!

இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல். விஜயகாந்துக்கு தைத்துக் கொடுக்கப்பட்ட போலீஸ் உடை. அதாவது போலீஸ் கதாபாத்திரம். ஊமைவிழிகளில் போலீஸ் கேரக்டர் செய்த பிறகு, மளமளவென விதம்விதமாக, ரகம்ரகமாக, விஜயகாந்திற்கு போலீஸ் கதாபாத்திரங்கள் வந்தன. ஜாலியாகச் சொல்லவேண்டுமென்றால், ஊமைவிழிகள் போலீஸ் டிரஸ்... அப்படியொரு ஃபிட்டிங், டச்சிங், நச்சிங்காக இருந்தது விஜயகாந்திற்கு!

சோழா பிக்னிக் வில்லேஜ். கடற்கரையையொட்டிய இந்த ரிசார்ட்டில், பெண்கள் அதிலும் இளம்பெண்கள், ஆடுகிறார்கள்; பாடுகிறார்கள்; பரவசமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்கள். அதையடுத்து, கூட்டத்தில் உள்ள அழகிய இளம்பெண், கொல்லப்படுகிறாள். எப்படி? ஏன்? எதனால்? என அங்கிருந்து பயணிக்கிறது கதை.

ஒரு குதூகலமான துள்ளலான பாட்டு. அந்தப் பாடலின் நடுவே வருகிற பாட்டி, அந்தப் பாட்டியின் உக்கிரமான பார்வை. அந்தப் பாட்டி சேதி சொல்ல, குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வருகிற வில்லன். அடுத்து நடக்கிற பெண் மாயம். கொலை.

கிட்டத்தட்ட, படம் ஆரம்பித்த இருபது நிமிடங்கள், நம்மை திரையுடன் ஒன்றியிருக்கச் செய்துவிடும். பிறகான ஒவ்வொரு நிமிடங்களுக்கும் நம் கண்களுக்கும் மட்டுமே தொடர்பாகிவிடுகிறது. கதைகள் விரிய விரிய, விழிகளும் அதனுடே விரிந்து, கதைக்குள் பயணித்து, பிரமித்து, பதட்டமாகி, கோபமாகி, இயலாமையில் நொந்து, வீறுகொண்டு எழுந்து... என எல்லாமே செய்யவைத்துவிடும் நம்மை!

இதையெல்லாம் துப்புத் துலக்கி, செய்தியாக்க பத்திரிகை நிருபர் வருகிறார். தகவல்களே கிடைக்கவில்லை. அல்லாடுகிறார். அதையெல்லாம் கடந்து, சோழா ரிசார்ட்ஸின் மர்மங்கள் மெல்ல மெல்லத் தெரியவரும்போது, பி.ஆர்.கே. யார், அந்த பி.ஆர்.கே. ஏன் இப்படியெல்லாம் செய்கிறார், பி.ஆர்.கே.வுக்கும் அரசியல்வாதிக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் தெரியவருகிறது. ஆனால் அரசியல் பலம், ஜே.ஆர்.கே.வை எவரும் நெருங்கவிடாமல் தடுக்கிறது.

பத்திரிகையாளர்கள் அடித்து உதைக்கப்படுகிறார்கள். பத்திரிகை அலுவலகம் சூறையாடப்படுகிறது.

இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில், அந்தப் பகுதிக்கு புதிதாக வருகிற டி.எஸ்.பி. தீனதயாளன். பத்திரிகை ஆசிரியர் அவரைச் சந்தித்து முழுவிவரங்களும் சொல்ல, அதன் விசாரணைக்குள் இறங்க, சோழா ரிசார்ட்ஸ் மர்மங்களும் மாயங்களும் கொலைகளும் முடிவுக்கு வந்ததா என்பதை, திரில்லிங் குறையாமல் சொல்லியிருப்பதுதான் ஊமைவிழிகள்.

பத்திரிகை நிருபராக சந்திரசேகர். வழக்கம் போல் நீதிக்கும் நியாயத்துக்கும் குரல் கொடுக்கிற கேரக்டர்தான். ஆனாலும் பிரமாதப்படுத்தியிருப்பார். அவரின் நண்பராக வரும் அருண்பாண்டியன். அவரையும் பத்திரிகைப் பணிக்குள் நுழைத்துவிடுகிறார் சந்திரசேகர். அருண்பாண்டியனுக்கு ஜோடி கோகிலா. பத்திரிகை ஆசிரியராக ஜெய்சங்கர். அவரின் மனைவி ஸ்ரீவித்யா.

சிரமப்பட்டு, சம்பளம் கூட கொடுக்காமல் பத்திரிகை நடத்தும் துயரத்தை மிக அழகாகச் செய்திருப்பார் ஜெய்சங்கர். சந்திரசேகரின் காதலியாக இளவரசி. இவர் அரசியல்வாதி மலேசியா வாசுதேவனிடம் வேலை பார்ப்பார். அங்கிருந்துகொண்டே தகவல்களை பாஸ் பண்ணுவார். ஒருகட்டத்தில் மாட்டிக்கொண்டு பரிதாபமாக உயிரிழப்பார்.

கார்த்திக்- சசிகலா ஜோடி. அந்த பிக்னிக் ரிசார்ட்ஸ்க்கு வருகிற ஜோடி, ஆடிப்பாடுகிறது. பிறகு அவ்வளவுதான். கார்த்திக்கை அடைத்து வைக்கிறார் பி.ஆர்.கே. இந்தக் கதாபாத்திரத்தில் ரவிச்சந்திரன்.

காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமான ரவிச்சந்திரன், இந்தப் படத்தில் காதலில் தோல்வியுற்று, அதனால் அவள் மீது வெறுப்புற்று, மொத்தமாக பெண்களின் மீதே ஆத்திரமாகி, குறிப்பாக, மயக்கிப் போடுகிற அந்தப் பெண்களின் விழிகள் மீது ரெளத்திரம் கொண்டு, எல்லாப் பெண்களையும் பலிகடாவாக்குகிறார். முதன்முதலாக வில்லன் கேரக்டர். குதிரையும் சாரட் வண்டியும் இவரின் காஸ்ட்யூமும் மிரட்டும் கண்களும் எனக் கொண்டு அசத்தியிருப்பார் ரவிச்சந்திரன்.

டி.எஸ்.பி. தீனதயாளனாக விஜயகாந்த். அவரின் மனைவி சரிதா. சோழா பிக்னிக் வில்லேஜ் மர்மங்களின் விசாரணையில் இறங்கி, அவர் அடுத்தடுத்து நகருவதும் தகவல்களைக் கண்டு வருந்துவதும் என அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இத்தனை நட்சத்திரப் பட்டாளங்கள் இருந்தாலும் படத்தில் பளிச்சென மிளிர்பவர்கள்... ஒளிர்பவர்கள்... விஜயகாந்தும் ரவிச்சந்திரனும்தான்!

மனோஜ்கியான் இசை, தமிழ் சினிமாவுக்கு புது தினுசாக இருந்தது. ராத்திரி நேரத்து பூஜையில் என்று படம் தொடங்கும் போதே வருகிற பாடலும், டிஸ்கோ சாந்தியின் ஆட்டமும் படத்தை இலகுவாக்கி, பின் மர்மத்துக்குள் கொண்டு செல்லும் போது, அப்படியே உறையச் செய்துவிடும் நம்மை!

‘கண்மணி நில்லு காரணம் சொல்லு’ பாடல் சோக மெலடி. ‘மாமரத்துப் பூ எடுத்து மஞ்சம் என்று போடவா’ என்று கார்த்திக்கும் சசிகலாவும் ஆடிப்பாடிக் கொண்டிருக்கும் போதே, நம் அடிமனசுக்குள் கிலியொன்று ஏறி உட்கார்ந்து உலுக்கிக் கொண்டிருக்கும்... ‘சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணுங்கடா. மாட்டுனீங்கன்னா அவ்ளோதான்’ என்று உள்ளே கத்திக்கொண்டே இருப்போம். ஆனால்... கேட்டால்தானே!

ஆபீஸ் அடித்து நொறுக்கி, மனிதர்களையும் விட்டுவைக்காமல், எல்லோரும் ரத்தகாயங்களுடன் இருந்துகொண்டு, இருளில் இருந்து மெழுகுவத்தி ஏற்றி, ‘தோல்வி நிலையென நினைத்தால்...’ என்று பாடும்போது நமக்கே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். உத்வேகம் பற்றிக்கொள்ளும். நம்பிக்கைச் சுடர்விடும். ஜெயிப்போம் எனும் குரல் உள்ளிருந்து ஓங்காரமிடும். இன்றைக்கு வரைக்கும், டானிக் பாடல்களில் தனியிடம் பிடித்த பாடல் இது!

முழுக்க முழுக்க, திரைப்படக்கல்லூரி மாணவர்கள் உழைப்பில் வந்த படம் ஊமைவிழிகள். உழைப்பின் பலனை, அதன் பிறகு வந்த மாணவர்கள் பலரும் அறுவடை செய்தார்கள். ‘விஜயகாந்துதான்யா பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறாரு’ என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்து படம் கொடுக்க விஜயகாந்திற்கு, ஊமைவிழிகள் காட்டிய செய்கை மொழிதான், கிரீன் சிக்னல்!

இந்தப் படம் வந்த பிறகு எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பெயர்... ஆபாவாணன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்க:ள், தயாரிப்பு என்று அனைத்திலும் தனிமுத்திரை பதித்திருப்பார் ஆபாவாணன். ரமேஷ்குமாரின் ஒளிப்பதிவு மிரட்டியிருக்கும். ஜெயச்சந்திரனின் எடிட்டிங் பணிகள் பக்கா! எல்லாவற்றுக்கும் மேலாக, இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜின் அசாத்திய மேக்கிங் ஸ்டைல்... அப்பவே புதுசு ரகம்!

அதிலும் நீண்ட நெடிய சாலையில், இருட்டில், விளக்குகள் எரிய, அணிவகுத்துக் கார்கள் வரும்போது, அந்தக் காட்சிக்கு தியேட்டரைக் கைத்தட்டியது; ரசித்தது. அந்தக் குதிரையும் குதிரை வண்டியும் வண்டிக்காரனும் (சி.எல்.ஆனந்தன்)  ஆர்ட் டைரக்‌ஷன் பணிகளும் மிரட்டியெடுத்து பதைபதைக்கச் செய்திருக்கும். 

மிகப்பிரமாண்டமாய் படம் எடுத்து, அதைவிட பிரமாண்டமான வெற்றியைத் தந்த ஊமைவிழிகள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தமிழின் நூறு படங்களில் ஒன்று.

‘என்னப்பா எழுதுறாங்க. எல்லாம் எழுதினாங்க. அந்த சோழா ரிசார்டிஸில் மணியடித்து, பார்வையாலேயே மிரட்டுற பாட்டியை விட்டுட்டாங்க’ என்று நினைக்கலாம்.

அந்த ஊமைவிழிகள் பாட்டி... தனி எபிஸோடு.

மற்றபடி, தமிழ் சினிமாவில், சில படங்களில், சில நடிகர்களின் கேரக்டர்களும் அந்தப் பெயர்களும் மறக்கவே மறக்காது நமக்கு. இந்த டி.எஸ்.பி.தீனதயாளன் கேரக்டரும் பெயரும் கூட, நம்மில் பதிந்துவிட்ட ஒன்றுதான்!

இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கிற ஊமைவிழிகளை, என்றைக்கும் பேசிக்கொண்டே இருப்பார்கள்; இருப்போம்!

https://www.kamadenu.in/news/cinema/4140-umaivizhigal-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

தங்கப்பதக்கம் - அப்பவே அப்படி கதை!


 

 

thangapadhakkam-appave-appadi-kadhai

தங்கப்பதக்கம் - சிவாஜி என்கிற டி.எஸ்.பி.செளத்ரி

 

 

எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் இன்னும் 43 லட்சத்து 34 ஆயிரத்து 25 படங்கள், போலீஸ் கதையைக் களமாகக் கொண்டு வர இருக்கின்றன. எத்தனை படங்கள் வந்தாலும், எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும், எஸ்.பி.செளத்ரிக்கு நிகராக எவரும் இருக்கவே முடியாது என்பதே உண்மை. அந்த செளத்ரியும் அவரின் நெஞ்சில் குத்திக்கொண்டு கம்பீரத்துடனும் பெருமையுடனும் காட்சி தரும் தங்கப்பதக்கமும், யாரால்தான் மறந்துவிடமுடியும், சொல்லுங்கள்!

உண்மையான போலீஸ்காரருக்கு பொய்யும்புரட்டுமாக ஒரு மகன். ஒரேயொரு மகன். வீட்டில் ஆரம்பிக்கிற திருட்டு, சூதாடுகிற புத்தி என்று அப்பனுக்குத் தப்பிப் பிறக்கிறான். சிக்கிக்கொள்கிறான். கூடுதல் பணம் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு, ஊரைவிட்டு ஓடுகிறான். வடக்கே மாட்டிக்கொண்டு, சிறுவர் ஜெயிலில் அடைபடுகிறான். அந்த ஜெயில் வாழ்க்கையில் திருந்துவதற்குப் பதிலாக, இன்னும் பல சூதுவாதுகளையும் கெட்டதுகளையும் கற்றுக்கொண்டு வருகிறான்.

 

காசுபணத்தின் மீது ஆசை. அப்பாவின் மீது வெறுப்பு. எது செய்தாலும் அப்பாவுக்கு வலிக்கவேண்டும் என்பதுதான் அவனுடைய டார்கெட். அப்படியொரு கோபவிளைவில், குற்றவாளியின் மகளை மணந்துகொண்டு வந்து நிற்கிறான். ஆனால், சொக்கத்தங்கம் அவள்.

மகனின் தவறும் குறுக்குபுத்தியும் தெரியவர, அவனை ஆதாரத்துடன் பிடிக்க நாடகம் போடுகிறார் போலீஸ் அப்பா. அதில் வசமாய்ச் சிக்கிக்கொள்கிறான். இன்னும் கோபம் அதிகமாகிறது அப்பா மீது!

வீட்டைவிட்டே மனைவியுடன் செல்கிறான். அம்மாக்காரி துக்கித்துப் போகிறாள். கணவன் பக்கமும் நிற்கமுடியவில்லை; மகன் செய்வதும் தவறு என வெதும்புகிறாள். நொந்துபோகிறாள்; நோய்வாய்ப்படுகிறாள். படுத்தபடுக்கையாகிறாள். இறந்தும்போகிறாள்.

அங்கேயும் மகனாலேயே அவமானப்படுத்தப்படுகிறார். ஆனாலும் சட்டத்தை மீறுகிற மகனை, சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க போராடுகிறார். இறுதியில் தான் தூக்கிவளர்த்துக் கொஞ்சிய மகனையே சுட்டுக்கொல்கிறார்.

மிகப்பெரிய தேசவிரோத செயலை தன் முயற்சியால், கட்டிக்காத்த அந்தப் போலீஸ் அதிகாரிக்கு, தங்கப்பதக்கம் கிடைக்கிறது.

இந்தக் காக்கிச்சட்டைக்கான கடமையை செவ்வனே செய்துவிட்டோம் என்கிற நினைவு மட்டும் கண்ணில் நிழலாட நிற்கிறார். படம் முடிந்தும் கூட, நம் மனங்களில் எல்லாம் இன்றைக்கும் நின்றுகொண்டிருக்கிறார், டிஎஸ்பி செளத்ரி.

பாசம் காட்டுகிற கே.ஆர்.விஜயா, நம் அம்மாவை ஞாபகப்படுத்துவார். கண்டிப்புக் காட்டுகிற போதெல்லாம், கண்டிப்புடன் அன்பை வெளிப்படுத்துகிற போதெல்லாம் சிவாஜிகணேசன், அப்பாக்களை நினைவுபடுத்துவார். ஏட்டிக்குப்போட்டியாக இருக்கும் மகன் ஸ்ரீகாந்த், நம் பால்யங்களைத் தொட்டு, நம் தவறுகளை நமக்கே சுட்டிக்காட்டி, சூடுபோடுவார்.

குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு, இங்கும் அங்குமாக அறையில் செல்வார் சிவாஜி. ‘பயலை எவ்ளோ நேரம்தான் தோள்ல சுமந்துட்டிருப்பீங்க?’ என்பார் கே.ஆர்.விஜயா. ‘நீ பத்துமாசம் சுமந்துருக்கியே. நான் பத்துசெகண்டாவது சுமக்கிறேனே...’ என்பார். முன்னதாக அவர்களுக்குள் நடக்கிற கேலியையும் சண்டையையும் ரகளையாகப் பண்ணியிருப்பார்கள் இருவருமே!

‘எலிமெண்ட்ரி ஸ்கூல்லேருந்து என்னை அடிச்சிக்கிட்டிருக்கியேடா’ என்று சொல்கிற பால்ய நண்பன் வி.கே.ராமசாமியும் அவ்வப்போது வருவார். அப்படி வரும்போதெல்லாம் அந்தக் கேரக்டருக்குக் கனம் சேர்த்து, பெருமையும் சேர்த்துவிடுவார். கொலைகார மேஜர் சுந்தர்ராஜனைப் பிடிக்கும் போதும் ஆர்.எஸ்.மனோகரை அடித்து உதைத்து கைது செய்யும்போதும் சிவாஜி தன் நடிப்பாலும் வசன நக்கல்களாலும் கலக்கியிருப்பார்.

பார்க்கிற எல்லோரின் வெறுப்புகளையும் சம்பாதிக்கிற கதாபாத்திரம் ஜகன் ஸ்ரீகாந்துக்கு. பேச்சில் அலட்சியம், வார்த்தைகளில் விஷம், செயல்களில் தேச விரோதம்

எலெக்‌ஷன்ல நிக்கிற. எந்த அருகதையும் உனக்கில்லையே. ஏண்டா நிக்கிறே? - எதுவும் இல்ல. அதனாலதான் நிக்கிறேன் என்று படத்தில் வருகிற போதேல்லாம் அரசியல் சரவெடிகளை, திரிகிள்ளிப் போட்டு வெடிக்கச் செய்துகொண்டே இருப்பார் சோ. இதில் இரண்டு சோ வேறு. நக்கல்நையாண்டிக்கு கேட்கவா வேண்டும்? போலீஸ் சோ, அரசியல்வாதி சோ. அதிலும் அரசியல் சோ, வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணா என்று சொல்லிக் கலாய்த்தெடுத்துவிடுவார்.

பையனுக்கு முதலிரவு அலங்காரம் செய்யப்பட்ட ரூமில் சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும். ‘சரி அந்தப் பாலை எடு’ என்பார். வெட்கிப் போவார். ரேடியோவில், ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு. ஆனால் இதுதான் முதலிரவு’ பாட்டு.

மறுநாள். டைனிங் ஹால். ‘என்ன இது சாப்பாட்டுல உப்பும் இல்ல; புளிப்பும் இல்ல’ என்று சத்தமிடுவார். ‘வயசாயிருச்சுன்னா, இதெல்லாம் குறைக்கணும் மாமா’ என்பார் மருமகள் பிரமிளா. சாதத்தை உருட்டி உருட்டிச் சாப்பிடுவார் ஸ்ரீகாந்த். இது குடும்பத்துக்கு ஆகாது என்பார் பிரமிளா. எப்படி என்பார் சிவாஜி. என் மருமக இல்லியா அதான் என்பார் கே.ஆர்.விஜயா. நம்ம மருமகன்னு சொல்லேன் என்பார் சிவாஜி. அடுத்த சீன்... வாசலில் மேஜர் நிற்பார். சாப்பிட்ட துகள் பல்லிடுக்கில் ஒட்டிக்கொண்டதை நாக்கால் எடுத்துக்கொண்டிருக்கிற பாவனையில் ஸ்டைலாக வருவார் சிவாஜி!

அம்மா இறந்துட்டாடா என்று ஸ்ரீகாந்த் வீட்டில் நிற்கும்போது படுகிற அவமானம்... அந்தத் தகப்பனுக்கானது மட்டுமின்றி, நாம் படுகிற வலியாகவே உணர்ந்து கதறினார்கள் ரசிகர்கள்.

‘பெரியமனுஷனா இருக்கறதுக்கு ரெண்டு தகுதிகள் இருக்கு. ஒண்ணு... நன்றியை மறக்கறது. இன்னொன்னு... நல்லவங்களை மறக்கறது. என்பார் சோ. தியேட்டரில் விசில் பறக்கும்.

மனுநீதி சோழனின் கதைதான் அடித்தளம். ஆனால் அந்தக் கதைக்குள் சமூக, விரோத, அரசியல், சட்ட சிக்கல்களையும் நுணுக்கங்களையும் அவலங்களையும் ஆபத்துகளையும் அத்தனைத் துல்லியமாகச் சொல்லியிருப்பார் கதை, வசனகர்த்தா மகேந்திரன்.

ஸ்ரீகாந்த் வேலை செய்யும் சிட்பண்டில் பணம் திருடுபோயிருக்கும். விசாரிக்க வருவார் சிவாஜி. அப்போது இருவருக்குமான கான்வர்சேஷன் அசத்தல். இறுதியாக, மிஸ்டர் ஜெகன். விசாரணை முடியும் வரை வெளிநாடு போகக்கூடாது என்பார் சிவாஜி. ‘எங்க அம்மாவும் அப்பாவும் எம்மேல ரொம்பப் பாசமா இருக்கறவங்க சார். பக்கத்து ஊருக்குக் கூட என்னை தனியா அனுப்பமாட்டாங்க’ என்பார் நக்கலாக. உடனே சிவாஜி, ‘வேலூருக்குப் போறதா இருந்தா, தனியாத்தான் போகணும் சார்’ என்பார் படு நக்கலாக!

இப்படி காட்சியும் காட்சிக்கான வசனங்களும்  வசனங்களைச் சொல்லும்போதான முகபாவங்களும் ஒன்றோடொன்று போட்டிப் போடும்.

மகன் - அப்பா., கணவன் - மனைவி, மாமா - மருமகள், அதிகாரி - செளத்ரி என்று யாருடன் நின்று நடிக்கும்போதும் அதற்கேற்ற பாடிலாங்வேஜில் மிரட்டியெடுத்துவிடுவார் டிஎஸ்பி சிவாஜிகணேசன்.

தத்திச் செல்லும் பாடல், நல்லதொரு குடும்பம், சுமைதாங்கி சாய்ந்தால்..., சோதனை மேல் சோதனை என்று பாட்டுக்கள் எல்லாமே பட்டையைக் கிளப்பியிருக்கும். கண்ணதாசன், எம்.எஸ்.வி. ஜோடியின், இசை ஆட்டம்... சக்கைப்போடுபோட்டிருக்கும்.

இன்னும் நிறைய காட்சிகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் சிவாஜியைப் பார்த்துப்பார்த்து, பிரமித்துச் சொல்லி, பூரித்து புளகாங்கிதப்பட்டிருப்பார்கள் ரசிகர்கள்.

நாடகமாக வந்து, பிறகு பி.மாதவனால் இயக்கப்பட்டு, பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற தங்கப்பதக்கத்தையும் டிஎஸ்பி செளத்ரியையும் மறக்கவே முடியாது நம்மால்!

சொல்லப்போனால்... மக்கள் மனங்களில், டிஎஸ்பி செளத்ரிக்கு ரிடையர்டே கிடையாது.

https://www.kamadenu.in/news/cinema/4201-thangapadhakkam-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

ஜானி - அப்பவே அப்படி கதை!


 

 

johny-appave-appadi-kadhai

ஜானி - ரஜினி, ஸ்ரீதேவி

 

ஆள் மாறாட்டக் கதையை, மாறிமாறிப் பார்த்திருக்கிறோம். காதலின் கனத்தையும் கணத்தையும் கவிதையெனச் சொன்ன படங்களை நாம் ஒருபோதும் விடுவதே இல்லை. திருட்டு, தப்பித்தல் என்கிற போலீஸ் - திருடன் விளையாட்டும் நமக்கு மிகப்பிடித்தமான கதைகள்தான்! இந்த மூன்றையும் ஒருபுள்ளியில் இணைத்து, இழைத்து இழைத்துச் சொன்னவிதத்தில்தான், தனித்துத் தெரிகிறான் ஜானி!

படம் ஓடுச்சா, ஓடலியா... கலெக்‌ஷன் கொடுத்துச்சா, கொடுக்கலியா... என்பதையெல்லாம் தாண்டி, சில படங்கள் மனதில் தங்கி, ஏதோவொன்று செய்துகொண்டிருக்கும்தானே! அப்படி என்னவோ செய்யும் படங்களில், ஜானியும் ஒன்று.

 

1980ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரதினத்தன்று ரிலீசான படம் ஜானி. படம் வெளியாகி 38 வருடங்களாகிவிட்டன. ஆனால் ஒளிப்பதிவிலும் இசையிலும் முதிர்ந்த நடிப்பிலும் போன வாரம் ரிலிசான படம் பார்த்த உணர்வு நமக்கு!

புதிதுபுதிதாக என்னவித ஒலியெல்லாம் எங்கெல்லாம் கேட்கிறதோ... அதை உடனுக்குடன் பதிவு செய்துகொள்ளும்  நாயகனுக்கு இசை மீது அப்படியொரு பிரியம். லயிப்பு. ரசிப்பு. அந்தக் காட்சிக்கு அடுத்ததாக, ரேடியோ அறிவிப்பு. இந்த நம்பர் கொண்ட கார் காணவில்லை என்றும் அதன் வண்ணமும் அறிவிக்கப்படும். அடுத்த சீன்... அந்தக் காரை ஓட்டிக்கொண்டு வருவார் ரஜினி. நீலவண்ண காரை அப்படியே சிகப்பு நிறமாக்கிவிட்டு, ஸ்டைலாக சிகரெட் பிடிக்கத் தொடங்குவார் நாயகன் ரஜினி. ஜானி ரஜினி. அப்போதுதான் டைட்டிலும் தொடங்கும்.

ரஜினியின் பாய்ச்சல் ஆரம்பித்த காலகட்டம் அப்போது. டைட்டிலில் ரஜினிகாந்த் & ரஜினிகாந்த் என்று போடும்போது டபுள் விசில் பறக்கும். அப்போது மட்டும்தானா. படம் நெடுக, அந்த அமைதியான பார்வையும் மென்மையான சிரிப்பும் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும் கண்டு, ரசித்துக் கைத்தட்டினார்கள் ரசிகர்கள். காரணம்... அந்த ரஜினி, ரசிகர்களுக்குப் புதுசு! முக்கியமாக, பின்னங்கழுத்து வரை பரவியிருக்கும் முடியும் நெற்றியின் முன்னே வந்துவிழுகிற முடியும்... அதை அடிக்கடி கோதிவிட்டுக்கொள்கிற அக்மார்க் ஸ்டைலும்... பார்த்துக்கொண்டே இருக்கலாம் ரஜினியை!

இந்தப் பக்கம் ஜானி. அந்தப் பக்கம் வித்யாசாகர். திருட்டுகளில் ஈடுபடுகிறார் ஜானி. தான் உண்டு தன் சலூன் ஷாப் உண்டு என்று வாழ்கிறார் வித்யாசாகர்.

அப்பா பட்ட கடனை அடைக்க, திருட்டு. யாருமே இல்லாத நிலையில் கருமித்தனமான வாழ்க்கை. ஜானி ரஜினிக்கு, இசை மீது ஆர்வம். இசைபட வாழும் ஸ்ரீதேவியின் குரலிலும் இசையிலும் வசமாகிறார்.

ஜானி செய்த தப்புக்கு வித்யாசாகர் மாட்டிக்கொள்கிறார். ‘உங்கிட்ட மன்னிப்பு கேக்கறதுக்குத்தான் வந்தேன். கொஞ்சநாள் பொறுத்துக்கோ. எனக்கொரு கடமை இருக்கு. முடிச்சிட்டு, நான்தான் எல்லாதப்பும் பண்ணினதுன்னு ஒத்துக்கறேன்’ என்கிறார் ஜானி ரஜினி.

அப்பாவின் கடனையெல்லாம் அடைக்கிறார் ஜானி. அப்பாவிடம் தன் விருப்பத்தை, பாடகி அர்ச்சனாவை கல்யாணம் செய்துகொள்ளும் ஆசையைச் சொல்லும் தருணத்தில், அப்பா இறக்கிறார்.

அங்கே, கிழிசல் உடையுடன் வேலை கேட்கும் தீபா மீது இரக்கப்பட்ட வித்யாசாகர் ரஜினி, அவளை ஒருகட்டத்தில் விரும்புகிறார். அவளும்தான். ஆனால் என்ன... எப்போதும் ஒன்றைவிட இன்னொன்று பெட்டர் என்றே நினைக்கிறாள். அப்படித்தான், இன்னொருவனை பெட்டர் என்று சொல்லி ரஜினியை ஏமாற்றுகிறாள். ‘நீ பார்பர்தானே. நாளை நம் பசங்க சொல்லி வெட்கப்படுவாங்க’ என்கிறாள். அவளுக்கு இயல்பை, வாழ்வைச் சொல்லிப் புரியவைக்க முயலுகிறார். டைம் கொடுக்கிறார்.

ஆனால், அந்தப் பணக்கார பெட்டருடன் ஊரைவிட்டுக் கிளம்புகிறாள். வழியில் மறித்து இருவரையுமே சுட்டுக்கொல்கிறார் வித்யாசாகர் ரஜினி. இப்போது திருட்டுக்குற்றங்களுக்காக ஜானியும் கொலைக்குற்றத்துக்காக வித்யாசாகரும் தலைமறைவு வாழ்க்கை வாழும் நிலை.

இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஜானி ரஜினி அடிபட்டு வனத்தில் வசிப்பவர்களிடம் அடைக்கலமாகிறார். இந்த ரஜினி, ஸ்ரீதேவியைப் பார்க்கச் செல்கிறார். அங்கே, உண்மையான காதலைப் புரிந்துகொள்ளாத, சுயநலமிக்க பெண்ணைச் சந்தித்த ரஜினி, இங்கே ஜானி ரஜினியின் மேல் உயிரையே வைத்து, அன்புக்கு ஏங்கும் ஸ்ரீதேவியைக் கண்டு நெகிழ்கிறார். மனம் மாறுகிறார்.

பாடகி அர்ச்சனாவும் ஜானியும் சேர்ந்தார்களா. வித்யாசாகர் என்ன ஆனார்? என்பதையெல்லாம் கவிதை மாதிரி கதை பண்ணியிருப்பார் மகேந்திரன். ஒவ்வொரு காட்சியுமே அப்படியான ரசனையுடன் அமைத்திருப்பார்.

ரஜினியின் நண்பன் சுருளிராஜன், பண்ணுகிற சேட்டைகள் அமர்க்களம். கே.பாலாஜியும், வி.கோபாலகிருஷ்ணனும் போலீஸ் அதிகாரிகளாக கச்சிதம் காட்டியிருப்பார்கள். ஏழைப் பெண்ணாக தீபா, அந்த வாழ்க்கைக்கே உண்டான ஏக்கங்களையும் ஒன்றை விட ஒன்று பெட்டர் என்று போய்க்கொண்டே இருப்பதையும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். கொஞ்சமே கொஞ்ச நேரம் வந்தாலும் வனத்தில் வசிக்கும் கூட்டத்தில் உள்ள சுபாஷிணி, வனதேவதையாக ஜொலித்திருப்பார்.

டபுள் ஆக்ட் என்றாலே அண்ணன் தம்பி என்றிருப்பதை உடைத்திருப்பார் மகேந்திரன். தொங்கு மீசை, மூக்குக்கண்ணாடி என்று வித்தியாசம் காட்டியிருப்பார். படம் மொத்தத்தையும் அழகு கூட்டித் தந்துகொண்டிருக்கும் கேமிரா, அசோக்குமாருடையது. இவரின் உதவியாளராக சுஹாசினி என்று டைட்டிலில் போடுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.

நாயகன் ரஜினி... இந்தப் படத்தில் அப்படியொரு இயல்பும் அழகுமாக இருப்பார். அவரின் காஸ்ட்யூம்களும் அத்தனைப் பொருத்தம் காட்டும். ரஜினிக்குள் இருக்கிற அந்த நடிப்பை, மகேந்திரன் சரியாக வெளிக்கொண்டு வந்திருப்பார். படத்தில், மிக ஆழமான வசனங்கள், அந்தந்த கதை மாந்தர்களின் உணர்வுகளாக, வார்த்தைகளில் வெளிப்படும். இது மகேந்திரன் ஸ்டைல். முள்ளும்மலரும் மட்டும் அல்ல... ஜானி கூட ரஜினிக்கும் அவரின் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல்தான்!

படத்தில், அதிக ஸ்கோர் செய்வது ஸ்ரீதேவி. படத்தில் எப்போதெல்லாம் வருகிறாரோ, அப்போது அந்த ஸ்கிரீனில் யார் இருந்தாலும், அனைவரையும் அடித்து கோல் போடுகிற நடிப்பு, ஸ்ரீதேவிக்கு உண்டானது. ஜானி ரஜினியிடம் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கும் இடத்திலும் வித்யாசாகர் ரஜினியிடம் தயங்கி, நிதானமாக, அமைதியாக, ‘என் பாட்டை ரசிப்பீங்க. ஆனா இப்ப என்னாச்சு’ என்று கேட்கிற விதத்திலும் மிகச் சிறந்த பண்பட்ட நடிப்பை வழங்கியிருப்பார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி எப்போதுமே அழகுதான். அசோக்குமாரின் கைங்கர்யத்தில், இன்னும் பேரழகியாக ஒளிர்ந்து அசத்துவார்.

‘ஒரு பொண்ணு செஞ்ச துரோகம் பாத்து, எல்லாப் பொண்ணுங்களுமே இப்படித்தான்னு நெனச்சேன்’ என்று மனம் திரும்புகிற காட்சியில் என்னவோ செய்து, நம்மை பிரக்ஞையற்று இருக்கச் செய்யும் வித்தை, மகேந்திரனுக்கே உரியது!

மகேந்திரன், ரஜினி, ஸ்ரீதேவியைக் கடந்து, ஜானியின் நாயகன் இளையராஜாதான். ஜானி ரஜினிக்கு ஒரு பின்னணி இசை, வித்யாசாகர் ரஜினிக்கு ஒரு பின்னணி இசை, தீபாவுக்கு ஒரு வகை, ஸ்ரீதேவி வருகிறபோதெல்லாம் ஒவ்வொரு விதமான இசை, சுபாஷிணியைக் காட்டும்போதே ஒலிக்கவிடுகிற ஆசையக் காத்துல தூதுவிட்டு ஆரம்ப இசை... மற்றபடி படம் நெடுக கிடாரும் சிதாரும் பியானோவின் இசை வழிய அன்பை உணர்த்திக்கொண்டே இருக்கும். உணர்த்திக் கொண்டே இருப்பார் இளையராஜா.

என் வானிலே ஒரே வெண்ணிலா, ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும், காற்றில் எந்தன் கீதம், ஆசையக் காத்துல தூது விட்டு... என்று மெலடி இசையால் நம்மை காதலுக்கும் உண்மைக்காகவும் பேரன்புக்காகவும் ஏங்கச் செய்துவிடுவார் இளையராஜா. ரஜினிக்கும் தீபாவுக்குமான பாடல், அப்படியொரு துள்ளத்துடிக்கிற இசையில், தடதடவெனப் பரவி, மனதை ஊடுருவும்.

மகேந்திரனின் ஜானி, ரஜினியின் ஜானியாகி, ஸ்ரீதேவியின் ஜானியாகி, இளையராஜாவின் ஜானியாகி, மீண்டும் மகேந்திரனின் ஜானியாக இன்றைக்கும் நம் மனதில் கம்பீரமாக உட்கார்ந்துகொண்டிருக்கிறான்.

உணர்வுகளை அப்படியே பதிவு செய்யும்படங்கள், இப்போது வருவதே இல்லை. காதலையும், இசையையும் கைக்கோர்த்துச் சொல்லும் ஜானியை, அழகாக ரீமேக் செய்யலாம். ஆனால் என்ன... மகேந்திரனின் ஜானி என்பதில் இருந்து நம் மனசு விலகிவிடுமா என்ன?

https://www.kamadenu.in/news/cinema/4310-johny-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

அரங்கேற்றம் - அப்பவே அப்படி கதை!


 

 

arangetram-appave-appadi-kadhai

’அரங்கேற்ற’ நாயகி - பிரமிளா

 

 

மிக மோசமாக, பார்க்கவே ரசிக்கும்படியாகவோ, சிரிக்கும்படியாகவோ இல்லாத கதையைக் கூட சினிமாவாக்கிவிடலாம். ஆனால், பொளேரென்று அறைகிற மாதிரி, சட்டையைப் பிடித்து உலுக்குகிற மாதிரி, ஓங்கி சம்மட்டியால் அடிக்கிற மாதிரி, மனதைப் போட்டு உலுக்குவது போல படம் எடுப்பது, ஆகப்பெரிய ரிஸ்க். ஆனால், அதை உணர்ச்சிபூர்வமாக அல்லாமல், உணர்வுபூர்வமாகக் காட்டி நம்மையெல்லாம் உலுக்கியிருப்பார் பாலசந்தர். அந்தப் படம்... அரங்கேற்றம்.

1973ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியான அரங்கேற்றம்தான், எண்பதுகளிலும் தொந்நூறுகளிலும் பல புரட்சிகளையும் புதுமைகளையும் படமாகக் கொண்டுவந்ததற்கு அரங்கேற்றம் போட்டது.

 

கிராமம். அக்ரஹாரம். இரண்டுமே அப்படியொரு ஒழுக்கத்துடனும் ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் திகழும் இடங்களாக படித்திருக்கிறோம். வாழ்ந்திருக்கிறோம். வாழ்வதைப் பார்த்திருக்கிறோம். அப்படியொரு கிராமத்து அக்ரஹாரத்தில், ஆச்சாரமான குடும்பம். ஆனால் அளவற்ற குடும்பம். வரிசையாய் ஒவ்வொரு வயது வித்தியாசம் இருப்பது போல மகள்கள், மகன்கள்.

அந்த வீட்டின் தலைவர் சாஸ்திரிகள். நியம நிஷ்டைகளை தவறாமல் கடைப்பிடிப்பவர். எட்டணா காசு கிடைத்தால், அவர் குபேரன். ஆனால், ஒழுங்காக தர்ப்பணம் செய்யாதவரிடம் கோபித்துக்கொண்டு, அந்த எட்டணாவையும் சம்பாதிக்காமல் விடுகிற கண்டிப்புக்காரர்.

அங்கே, அந்த வீட்டில், பசி எப்போதும் நிரந்தரம். ஆனால் பசிக்கு உணவு எப்போதாவதுதான்! படிக்கிற பையனுக்கு நோட்டு வாங்கக்கூட நோட்டு கிடையாது. போதாக்குறைக்கு, குடும்பத்தலைவனின் சகோதரி, தன் வயதுக்கு வந்த மகளுடன் வந்துவிடுகிறாள். ‘எம் புருஷன் எங்களைவிட்டுட்டு, ஓடிப்போயிட்டான்’ என்கிறாள்.

வறுமை சூழ் வீடு அது. ஆனால் கெளரவத்துக்குக் குறைவில்லை. ஆனால் வறுமைதான் வீட்டின் எதிரி என்று புரிகிறது மூத்தவள் லலிதாவுக்கு. அப்பாவிடம் சண்டைபோட்டு சம்மதம் வாங்கி, வேலைக்குச் செல்கிறாள். வீட்டில் சந்தோஷம் கொஞ்சமாக எட்டிப்பார்க்கிறது.

அடுத்து மூத்த தம்பியின் டாக்டர் படிப்பு. சிபாரிசுக்காக சென்னை செல்கிறாள். சின்னாபின்னமாக்கப்படுகிறாள். சகலத்தையும் முழுங்கிக்கொண்டு, ஊர் திரும்புகிறாள். வேலையில் பதவி உயர்வு, இடமாற்றம். ஹைதராபாத் செல்கிறாள். அங்கே மேலதிகாரி, சூறையாடுகிறான்.  பிறகு  அதுவே தொழிலாகிப் போகிறது அவளுக்கு!

தம்பி டாக்டருக்குப் படிக்கிறான், தங்கை பாடகியவாதற்குப் இசைப்பயிற்சி எடுக்கிறாள். அடுத்தடுத்த தம்பி, தங்கைகள் படிக்கிறார்கள். குடும்பத்தில் குடியிருந்த வறுமை விரட்டியடிக்கப்படுகிறது.

அடுத்தடுத்த நிகழ்வுகளில், சமூகமும் அவளின் குடும்பமும் அவளை எப்படிப் பார்க்கிறது, லலிதா என்னானாள் என்பதை அரங்கேற்றி நம்மை அறைந்திருக்கும் படம்தான் அரங்கேற்றம்!

டைட்டில் போடும் போதே பிரமிளாவின் பெயர்தான் முதலில் போடுகிறார்கள். அரங்கேற்ற நாயகி லலிதாதான் பிரமிளா. அவரின் அம்மா எம்.என்.ராஜம். அப்பா ராமுசாஸ்திரிகளாக எஸ்,வி.சுப்பையா. டாக்டருக்குப் படிக்கும் தம்பியாக கமல். ஜெயசுதா, ஜெயசித்ரா. ஊரில் இருக்கிற செந்தாமரை, அவரின் மகன் சிவக்குமார். எல்லோரும் அவரவர் வேலைகளை செம்மையாகச் செய்திருப்பார்கள். அதிலும் பிரமிளா... பிரமாண்ட நாயகி அவர். அப்படியொரு நாயகியாக்கியிருப்பார் கே.பாலசந்தர்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்று ஒரு சிரிப்பு சிரிப்பார் பிரமிளா. செம ஹிட்டு. அந்தச் சிரிப்புதான் இந்த சமூகத்தையும் அவலங்களையும் பார்த்து சிரிக்கிற கேவலமானச் சிரிப்பு அது.

கிழிசல் புடவையுடன் இருப்பார் பிரமிளா. சிவகுமார் அவருக்குப் புடவை தருவார். அதை அப்பா எஸ்.வி.சுப்பையா பார்த்துவிடுவார். எல்லோரும் சாப்பிட உட்கார்ந்திருக்கும் போது, வீட்ல ஒருதப்பு நடந்திருக்கு. அது மன்னிக்கவே முடியாது என்பார். அம்மா ராபிச்சைம்மா என்று குரல்கேட்கும். இதைப் பண்ணினதுக்கு பிச்சை எடுக்கலாம் என்பார். கடைசியில் அந்தப் புடவையும் பிரமிளாவின் உணவும் பிச்சைக்காரிக்குப் போகும்!

அத்தைக்காரி சினிமாவுக்குப் போக காசு கேட்பாள். போவாள். வீட்டில் உணவில்லை. சின்னப்பயலுக்குப் பசி. யாருக்கும் தெரியாமல் வெளியே போய், ராப்பிச்சைக்காரியிடம் உணவு வாங்கிச் சாப்பிடுவான். தெரிந்ததும், நொந்து கோபமாகிற அம்மா, அவனை அடித்து வெளுப்பாள். பசியைப் பொறுத்துக்கமுடியலியா என்பாள். உனக்கு கோபத்தைப் பொறுத்துக்கமுடியல. அத்தைக்கு சினிமா ஆசை. அதைப் பொறுத்துக்கமுடியல என்பார் பிரமிளா.

அன்றிரவு. விஷம் கலப்பாள் அம்மா. அதைத் தடுத்துக் காப்பாள் பிரமிளா. இனிமே நான்தான் உனக்கு அம்மா. ஏன்... ராமு சாஸ்திரிகளுக்கும் சேர்த்துதான் அம்மா என்பார் பிரமிளா.

சென்னையில், ’பரவாயில்லயே. காசுபணம் எதுவும் இல்லாம, காரியத்தை சாதிச்சிட்டியே’ என்பார் ஒரு பெண். உடனே பிரமிளா, ’காசுபணம் இல்லாமலும் காரியத்தைச் சாதிக்க வழி இருக்கு’ என்பார்.

தங்கைக்குத் திருமணம். ஊரில் இருந்து வந்திருப்பார். அம்மா கண்ணில் படவே மாட்டார். பார்த்தால் அம்மாக்காரி மாசமாக இருப்பாள். வெட்கம். அப்போது பின்னணியில், ‘அம்மா... ராப்பிச்சைம்மா’ என்று குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். செருப்பால் அடித்த மாதிரியான காட்சி.

அம்மா ராப்பிச்சைக்கு உணவு போடுகிற சாக்கில் நழுவி வாசலுக்குப்போவாள். அங்கே வந்த பிரமிளா... ‘உங்கிட்ட ஒண்ணே ஒண்ணு கேக்கறேன். இத்தனை வருஷமா இங்கே இருக்கியே.. இதை நீ பாக்கவே இல்லியாம்மா’ என்பார். கேமிரா அங்கே காட்டும். அளவற்ற குடும்பம், இரண்டுக்கு மேல் எப்போதுமே வேண்டாம் விளம்பரம்.

நீலுவிடம் பேசிக்கொண்டிருப்பார் பிரமிளா. அப்போது குழந்தை ஒன்று, முந்தானையை எடுத்து விளையாடும். அது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார். பிறகு, ‘ஆம்பளன்னாலே மரத்துப்போச்சு’ என்பாள். திக்கென்றாகிவிடும் அம்மாவுக்கு. ‘போடி அசடு... மறந்துபோச்சுன்னு சொல்லிருக்காடி’ என்பார் சுப்பையா. கலங்கவைத்துவிடும் காட்சிகளும் கனக்கச் செய்துவிடும் காட்சிகளுமாக கதறடித்திருப்பார் பாலசந்தர்.

தங்கையைத் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளையைப் பார்த்ததும் பிரமிளாவுக்கு ஷாக். அந்த மாப்பிள்ளைப்பையன் சசிக்குமாருக்கும்தான். பிளாஷ்பேக். எல்லாம் முடிந்த பிறகு,நாளைக்கு ஊருக்குப் போறேன் என்பான் அவன். ‘ஆத்துக்குப் போய் தோப்பனார் என்ன சொல்லப்போறாரோ’ என்பார் பிரமிளா. ஷாக்காகி, விறுவிறுவென அருகில் வந்து, ‘நீ பிராமணப் பெண்ணா’ என்று கேட்டுவிட்டு, பளேரென அறைவான். போகிறவனை நிறுத்தி, அவனருகில் வந்து, அவன் தோளில் இருக்கிற பூணூலைக் காட்டி, ‘நீ பிராமணனா’ என்று கேட்டுவிட்டு, பொளேரென அறைவார் பிரமிளா. தியேட்டரே கைத்தட்டி, கனத்துப் போன இதயத்துடன், பாலசந்தரை மானசீகமாக கைகுலுக்கும்.

73ம் வருடம் வெளிவந்த படம் அரங்கேற்றம் என்றால், 45 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இப்படிப் பொட்டிலடித்தாற்போல் சொல்ல கே.பாலசந்தரால் மட்டுமே சொல்ல இயலும்.

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது என்றொரு பாடல். மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் என்றொரு பாடல். மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா என்றொரு பாடல். ஒவ்வொரு பாட்டிலும் கண்ணதாசன் தன் பங்குக்கு கதையின் கனத்தை, கவிதையாக்கித் தந்திருப்பார். வி.குமாரின் இசையும் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும்.

சிவகுமார் இறந்துவிட்டதாக தர்ப்பணம் நடக்கும். உயிருடன் பார்த்தேன் என்று பிரமிளா சொல்லுவார். சந்தோஷமா இருக்கியாம்மா என்பார் செந்தாமரை. எல்லாரையும் சந்தோஷமா வைச்சிருக்கேன் என்பார்.

தன் மகள் என்ன செய்து குடும்பத்தை உயர்த்தியிருக்கிறாள் என்று தெரிந்ததும் சுப்பையா, அவளுக்குத் தர்ப்பணம் செய்வார். பிறகு தம்பி கமல், அக்கா பிரமிளாவை வீட்டை விட்டுத் துரத்துவார். அவ வேணாம், அவ படிச்ச எம்.பி.பி.எஸ் மாப்பிள்ளை மட்டும் வேணுமா என்பார் எம்.என்.ராஜம். சுப்பையாவும் துரத்தச் சொல்லுவார். அவ இல்லேன்னு தர்ப்பணம் பண்ணிட்டு, இப்ப அவளை வெளியே போகச் சொல்ல எந்த உரிமையும் இல்ல என்பார் ராஜம். அம்மா, அவர் இன்னிக்கிதான் தர்ப்பணம் பண்ணிருக்கார். நான் எப்பவோ செத்துட்டேம்மா என்பார்.

வீட்டை விட்டு துரத்த, சிவகுமார் வீட்டில் தஞ்சம். உனக்கும் என் பையனுக்கும் கல்யாணம். உன் சம்மதம் சொல்லப்போறியா இல்லியா என்பார் செந்தாமரை. எது எதுக்கோ சம்மதிச்சவ நான். இப்ப என் கல்யாணத்துக்கு சம்மதிக்கணுமா என்பார்.

நிறைவாகக் கல்யாணமும் ஆகிவிடும். அங்கே, கடற்கரையில், டால்டா டப்போவுடன் அத்தான் என்று எழுதிய டப்பாவுடன் பைத்தியமெனத் திரிந்தாளே... தங்கம் என்றொருத்தி! முன்னதாக அவள் கடலலையில் இறந்துவிட்டதைத் தெரிந்துவைத்திருப்பாள்.

இப்போது, லலிதா எனும் பெண், குடும்பத்துக்காக தன் கற்பையும் மானத்தையும் கெளரவத்தையும் தொலைத்து நிற்கும் பெண், டால்டா டப்பாவுடன், டபடபடபடபட என்று தட்டிக்கொண்டே தங்கத்தைத் தேடுவாள். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்...!

வழியெங்கும் மனநிலை பாதிக்கப்பட்ட, சிதைவுற்ற, நன்றி மறந்த காயத்தால் துடிக்கப்பட்ட, துரோகத்தால் உலகமே இடிந்துவிட்டது என மனம் கலங்கி வெடித்தவர்கள், சாலைகளில் நடமாடிக்கொண்டிருப்பார்கள், இந்த உலக நினைப்பே இல்லாமல்! அவர்களில் லலிதாக்களும் இருக்கலாம். லலிதா என்பது பெண் அல்ல... மனிதம்!

எப்போது பார்த்தாலும் அன்றிரவின் தூக்கத்தைக் கலைத்துவிடும் மகாவலிமை கொண்ட அரங்கேற்றம்... பாலசந்தர் கத்தியின்றி ரத்தமின்றி செல்லுலாய்டில் நிகழ்த்திய யுத்தங்களில் ஒன்று!

https://www.kamadenu.in/news/cinema/4376-arangetram-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

பூவே பூச்சூடவா - அப்பவே அப்படி கதை!


 

 

poove-poochudavaa-appave-appadi-kadhai

பாட்டி பத்மினி - பேத்தி நதியா

 

 

உறவுகள் எப்போதுமே உன்னதமானவைதான். பந்தம் எப்போதுமே நெகிழ்ச்சியூட்டக்கூடியதுதான். அன்புக்கு மிஞ்சியது உலகில் வேறெதுவுமில்லை என்பது சத்தியவார்த்தை. அப்பா - மகன், அப்பா - மகள், அம்மா - மகன், அம்மா - மகள், அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி என்றெல்லாம் எத்தனையோ உறவுகளை, சினிமா சொல்லி, நம்மைச் சிலிர்க்கவைத்திருக்கிறது. ஒரு பாட்டிக்கும் பேத்திக்குமான உறவுநெகிழ்வை, பந்த மகிழ்வை, பாச ஈர்ப்பை, அன்புப் பிணைப்பை சொல்லிய படம் என்றால்... நாளை பாட்டியாகப் போகும் பேத்திகள் கூட சொல்லிவிடுவார்கள்... பூவே பூச்சூடவா என்று!

பெண்களை முதன்மையாகக் கொண்டு படமெடுத்தால், அது பெருமளவு வியாபார ரீதியாக ஓடாது என்கிற சந்தேகம் உண்டு. ஊறுகாய் மாதிரி தொட்டுக்கொள்ளவே நாயகிகள் பாத்திரத்தைப் பயன்படுத்திக்கொண்ட சினிமா உலகம் இது. அப்பேர்ப்பட்ட திரையுலகில், பாட்டி - பேத்தி உறவையும் அந்த நாயகிகளையும் முதன்மைப்படுத்த... தில் வேண்டும். உறுதியான, உயிரோட்டமான கதை வேண்டும். அப்படியொரு கதையைப் பார்சல் கட்டிக்கொண்டு, கேரளாவில் இருந்து தமிழகம் வந்து, இங்கே நமக்கு பந்தி பரிமாறினார் பாசில்.

 

1985ம் ஆண்டு வெளியான படம் பூவே பூச்சுடவா. 33 வருடங்களுக்கு வைத்த விருந்தின் ருசி, இன்றைக்கும் இருக்கிறது நம் மனதில்!

அழகிய கிராமத்தில் தனியொருத்தியாய் இருக்கிறாள் அந்தப் பாட்டி பூங்காவனத்தம்மாள். வாண்டுகள், பாட்டி வீட்டின் அழைப்புமணியை அடித்துவிட்டு ஓடுகிறார்கள். வீட்டைப் பூட்டிவிட்டு தெருவில் இறங்கி கோயில் நோக்கி நடக்கிறாள். இவளைப் பார்த்துவிட்டு ஊர்க்காரர்கள், வேண்டுமென்றே தும்முகிறார்கள். அப்படித் தும்மித்தும்மியே, ஒருகட்டத்தில் பாட்டியம்மாளைப் பார்த்ததுமே மூக்கு தும்மத்தொடங்குகிறது. தும்மி வெறுப்பேற்றுபவர்களைக் கண்டு பம்மிப் பதுங்காமல், எல்லோரிடம் சீற்றத்தையும் முனகலையும் தந்துசெல்கிறாள் பாட்டியம்மாள்.

அப்போது அந்த ஊருக்கு பஸ்சில் இருந்து இறங்கி, பாட்டியம்மாள் வீட்டு காலிங்பெல் அழுத்துகிறாள் அந்த இளம்பெண். அதிர்ந்து பார்க்கிறாள் பாட்டி. ‘என்னைத் தெரியலியா. நான்தான் உன் பேத்தி. பேரு சுந்தரி. உன் மகளோட பொண்ணு’ என்று சகஜமாகவும் செளஜன்யமாகவும் உள்ளே நுழைகிறாள். ஆனால் பேத்தியின் வருகையை பாட்டி ரசிக்கவில்லை. கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்துத் துரத்தி அனுப்புகிறாள்.

18 வருட வீம்பு. 18 வருடமாக வரவில்லையே எனும் ஆங்காரம். மாப்பிள்ளை மீது இருக்கும் கோபத்தை, பேத்தியின் மீது காட்டுகிற ஆவேசம். ‘இத்தனை நாள் வராதவ வந்திருக்கே. அப்பாடா... வந்துட்டாடான்னு சந்தோஷப்படுறதுக்குள்ளே நீ என்னை விட்டுப் போயிட்டீன்னா...’ என்கிற சந்தேகக் குழப்பம். குழப்பக் கலக்கம். ‘உன்னை விட்டுப் போகமாட்டேன் பாட்டிம்மா. சாகறவரைக்கும் உன் கூடத்தான் இருப்பேன். இது சத்தியம்’ என்று பேத்தி சொன்னதும் அங்கே பூக்கின்றன சந்தோஷப் பூக்கள். குதூகல மலர்கள்.

அவ்வளவுதான். பாட்டி குழந்தையாகிப்போகிறாள். பேத்தி அவளின் அன்னையாகவே ஆகிப்போகிறாள். தெருவில் போகிறவருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டுக்கூப்பிட்டு பேத்தியை அறிமுகம் செய்கிறாள். சர்ச் ஃபாதரிடம் அறிமுகப்படுத்தி, இது யாருன்னு தெரியுதா என்று பாட்டி கேட்க, ‘இது சுந்தரம் பொண்ணுதானே’ என்று கேட்டதும் சுள்ளென்று கோபமாகிறாள் பாட்டி. ‘ஏன் அலமேலு பொண்ணுன்னு சொல்லவேண்டியதுதானே’ என்று விருட்டென்று செல்வார்.  

பாட்டிக்கு டார்ச்சர் கொடுத்த வாண்டுகளை நட்பாக்கிக் கொண்டு அடிக்கிற லூட்டி, பாட்டிக்குப் பிடித்த மஞ்சள் வண்ணத்தில் திரைச்சீலை மாட்டி, சுடிதாரும் போட்டுக்கொள்கிற நேசம், பக்கத்துவீட்டுப் பையனின் அதிக சவுண்ட் அதகளத்தை, ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாடலை, குழாய் கிராமபோன் ரிக்கார்டரில் போட்டுக் கொளுத்தி, வெளுத்து பம்மவைக்கிற சூரத்தனம் என்று பேத்தியின் துறுதுறுப்பிலும் சுறுசுறுப்பிலும் கவலையெல்லாம் மறக்கிறாள் பாட்டி.

குயிலைப் போல சுதந்திரமாக, சிட்டுக்குருவியைப் போல் விட்டுவிடுதலையாகி, பாட்டியும் பேத்தியுமாக சந்தோஷமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எதிர்வீட்டுப் பையனுக்கு ஒரு ஆத்திரம். எல்லாவற்றிலும் இந்தப் பெண்ணிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறோம் என்று தீபாவளிக்காகவும் பிறந்தநாளுக்காகவும் பட்டாசு தர, கையில் வைத்து விளையாடுகிற பட்டாசு ஐட்டம் வெடிக்க... பதறிப்போகிறாள் பாட்டி.

பிறகொரு சமயத்தில், எதிர்வீட்டுப் பையனான எஸ்.வி.சேகரைப் பார்க்க நண்பன் ரவீந்தர் வர... அவர் சுந்தரியைப் பார்க்க, அப்போது சுந்தரியைப் பற்றிய விஷயங்களை நண்பனிடம் சொல்ல... நண்பன் மட்டுமின்றி நாமும் துடித்துதான் போகிறோம். மனம் கனத்துதான் போகிறோம்.

சுந்தரிக்கு ஒரு விபத்து. அந்த விபத்தில் மூளையில் சிக்கல். ஆபரேஷன் செய்யவேண்டும். செய்தால் பிழைப்பாள் என்பது உறுதியில்லை. ஆனால் ஆபரேஷன் ஓர் முயற்சி. ஆனால் ஆபரேஷன் செய்து கொள்ளாமல், அழுதுகொண்டே இருக்கும் அப்பாவையும் நண்பர்களையும் விட்டுவிட்டு, இங்கே பாட்டி வீட்டுக்கு வந்துவிடுகிறாள்.

இந்தநிலையில், அப்பாவுக்கு மகள் இருக்குமிடம் தெரியவர, அவளைப் பார்க்கவும் அழைத்துச் செல்லவும் வருகிறார். வந்தவரை, எப்போதும் அவர் மீது வன்மம் கொண்ட பாட்டி, திட்டி துரத்திவிடுகிறார். தேவாலய ஃபாதரிடம் சென்று விஷயம் சொல்ல, அதிர்ந்து போன ஃபாதர், பள்ளித்தலைமை ஆசிரியரையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு, பாட்டியம்மாள் பூங்காவனத்தம்மாளிடம் சொல்ல முற்படும் தருணத்தில்... பேத்திக்கு உண்டான பயங்கரத்தை அறிந்துகொண்ட பாட்டி, அவளே தேவாலயம் வருகிறாள். அழைத்துப் போகச் சொல்லுகிறார்.

பேத்திக்கு உணவில் தூக்கமாத்திரை கலந்து ஊட்டிவிடுகிறார். மயங்கித் தூங்கும் பேத்தியை தூக்கிக்கொண்டு, அப்பா செல்கிறார்.

அங்கே... மீண்டும் தன் பேத்தி, தன்னைத்தேடி வருவாள் எனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் ஏக்கத்துடனும் ஆசையுடனும் அழைப்புமணியை, காலிங்பெல்லை மீண்டும் பொருத்துகிறாள். படம் நிறைவுறுகிறது.

ஒரு சிறுகதையின் அழகியலுடன் அன்பை ஆழமாகச் சொன்னதில்தான் பூவே பூச்சுடவா, வெற்றிப்பூவை சூடிக்கொண்டது. பாட்டியாக நாட்டியப்பேரொளி பத்மினி. பேத்தி சுந்தரியாக தமிழுக்கு அறிமுகமான நதியாவை, எல்லோரும் இங்கே தங்கள் வீட்டுப் பெண்ணாகவே வரித்துக்கொண்டார்கள். எதிர்வீட்டுப் பையனாக எஸ்.வி.சேகர். அப்பா ஜெய்சங்கர். ஃபாதர் கே.கே.செளந்தர். தலைமை ஆசிரியர் வி.கே.ராமசாமி. ஒருகையின் விரல்களுக்குள் எண்ணிவிடுகிற கதாபாத்திரங்கள். ஆனால் பாட்டி - பேத்தி என்று இரண்டு விரல் காட்டிச் சொல்லுகிற அளவில் கேரக்டர்களை வைத்துக்கொண்டு, செஞ்சுரி அடித்து விக்டரி பெற்றிருப்பார் இயக்குநர் பாசில். மூன்றாவதாக, அந்த காலிங்பெல்... ஒரு கதாபாத்திரமாகவே மனசுக்குள் மணியடிக்கும்!

இந்த மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால், எதிரில் இருப்பவரின் டிரஸ்ஸே தெரியாது என்று சேகரைக் கலாய்த்து பயமுறுத்துவதும், அதனால் அவர் பம்மிப்பதுங்குவதும் ஏக கலாட்டா. அந்த மஞ்சள் செடியை எப்போதோ கேட்க, அதைக் கொடுக்கும் தருணம் நெகிழ வைக்கும். வி.கே.ராமசாமியைப் பார்த்து கண்ணடிப்பது கலக்கல். வி.கே.ஆருக்கு எல்லாம் தெரிந்து இறுக்கமாக அவர் நிற்க, அவரைப் பார்த்து நதியா கண்ணடிக்க, நம் கண் கலங்கிப்போகும்.

பூங்காவனத்தம்மாளாகவே உலா வந்திருப்பார் பத்மினி. அந்தப் புடவைக்கட்டும் தலைப்பைப் போர்த்திக்கொள்கிற பாங்கும், மூக்குக்கண்ணாடி வழியே பார்க்கிற கேள்விப்பார்வையும் வார்த்தைகளில் எள்ளும்கொள்ளும் வெடிக்கிற தோரணையும் நம்ம பாட்டி இப்படியா... இப்படியொரு பாட்டி நமக்கு இருக்கக்கூடாதா என்று எல்லோரையும் ஏங்கவைத்துவிடுவார்.

பேத்தி மட்டும் என்னவாம். பாந்தமான முகம். பாசத்துக்கு ஏங்கும் கண்கள். அந்தக்கண்களின் ஓரத்தில் தொற்றிக்கொண்டிருக்கும் துடுக்குத்தனம், கள்ளமில்லாச்சிரிப்பு, மொத்த சோகத்தையும் காணடித்துவிடுகிற மனசு... என நதியா, நடிப்பில் பின்னியெடுத்து, உலகின் பாட்டிகளுக்கெல்லாம் தன் பேத்தி வளர்ந்தால் இப்படித்தான் இருப்பாளோ என நினைக்கச் செய்துவிடுவார். அபாரமான நடிப்பு.

மஞ்சள் நிற விஷயம், விளக்கேற்றும் தருணத்தில், பார்க்கவே பார்த்திடாத அம்மாவின் போட்டோவைத் தரும் வேளையில், அங்கே பாட்டியும்பேத்தியுமாக மகிழ்ந்து நெகிழ்ந்து உருகிப் போகிற போது... தொடங்குமே அந்தப் பாடல். நாம் கேட்டுக்கரைந்து போய்விடுவோம்!

ஆனந்தக்குட்டன், கோகுலகிருஷ்ணா என பாசிலின் டீம், வழக்கம்போல், படத்தை கவிதையாக்க கைகொடுத்திருப்பார்கள்.

படத்தில் நாயகனே இல்லை. ஆனாலும் அந்தக் குறைகளையெல்லாம் போக்கி, உணர்வின் ஈரத்தை, மனதின் பாரத்தை, வாழ்வின் உன்னதத்தை, எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும், சம்பவங்கள் நிகழும் எனக் காத்திருந்து காத்திருந்து, தன் இசையால் கதையை வலுவாக்கியிருப்பார் இளையராஜா. இப்படியெல்லாம் ஒரு அழகியல் படம் கையில் கிடைத்தால், கரைந்து உருகி, மெய்ம்மறந்து இசையமைப்பவர் அல்லவா ராஜா. இங்கும் இப்படித்தான். இளையராஜா அப்படித்தான்! வைரமுத்துவும் முத்துமுத்தான பாடல் வரிகளால், கண்ணில் நீர் கோர்க்கச் செய்திருப்பார். 

சித்ராவின் அறிமுகப்படம். சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா... பாடலால்தான் சின்னக்குயில் சித்ரா என்றானார். ஜேசுதாஸின் குரலில் குழைந்து வருகிற பூவே பூச்சூடவா... எந்தன் நெஞ்சில் தாலாட்டவா எனும் பாடல், எப்போது கேட்டாலும் மனசு லேசாகும். லேசான மனசும் கனமாகும்! எல்லாப் பாடல்களும் அப்படித்தான். கேட்கும் போதெல்லாம் உள்ளே பூப்பூக்கச் செய்வார் இளையராஜா!

மூணு வாண்டுப் பசங்களும் எஸ்.வி.சேகரும் அவரின் அம்மா சுகுமாரியும் கூட மனதில் நின்றுவிடுகிறார்கள். எத்தனையோ படங்களில் தன் நடிப்பாலும் நடனத்தாலும் பிரமாதப்படுத்திய பத்மினிக்கு, இதுவொரு லைஃப்டைம் படம். அப்படியான படங்களில் ஒன்று! இயக்குநர் பாசில், எனும் மகா அன்பன், செதுக்கிச் செதுக்கிக் கொடுத்த பாசச்சிற்பம் இது.

அழைப்புமணி எனப்படும் காலிங்பெல்லை பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டோம் நாம். ஆனால், பூவே பூச்சூடவா பார்த்தவர்கள், அழைப்புமணிக்குப் பின்னே, ஏதோவொரு பாச வருகை வராதா, அன்பு உறவு அழுத்தாதா என்று ஏங்கிக்கொண்டிருக்குமோ... என்று நமக்குள் யோசனை ஓடும். ‘கடவுளே... அவங்க ஆசைப்பட்ட அந்த உறவு அவங்க வீட்டுக்கு வரணுமே...’ என்கிற பிரார்த்தனையும் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த ஏக்கமும் பேரன்பும்தான்... பூவேபூச்சூடவாவை வெள்ளிவிழாப் படமாக ஆக்கியது. பூங்காவனத்தம்மாளையும் சுந்தரியையும் யாரால்தான் மறக்கமுடியும், சொல்லுங்கள்!

https://www.kamadenu.in/news/cinema/4398-poove-poochudavaa-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

கலாட்டா கல்யாணம் - அப்பவே அப்படி கதை!


 

 

galatta-kalyanam-appave-appadi-kadhai

கலாட்டா கல்யாணம்

 

 

கல்யாணம் என்றால் கலகலப்பும் இருக்கும். கலாட்டாவும் நிகழத்தான் செய்யும். ‘உங்க பெண்ணைக் கொடுங்க’ என்று கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்த இளைஞனுக்கு சுமத்துகிற மிகப்பெரிய வேலைதான் கல்யாண கலாட்டா. அதுதான் கலாட்டா கல்யாணம்.

1965ம் ஆண்டு. யுத்த நிதி திரட்டும் பணி. தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. அவசரம் அவசரமாக, ஒரு காமெடி டிராமா பண்ணிக்கொடுத்தார் சித்ராலயா கோபு. சிவாஜிகணேசன் நடித்துக்கொடுத்தார். நாடகம் ஹிட்டானது. யுத்தத்துக்கும் நல்ல நிதி கிடைத்தது. பிறகு ஆற அமர சிவாஜி யோசித்துவிட்டு, ‘கோபு, இந்தக் கதை நல்லாருக்கே. கொஞ்சம் நல்லாவே டெவலப் பண்ணு. படம் பண்ணிடுவோம்’ என்று உற்சாகப்படுத்த, அதன்படியே கதை, திரைக்கதையாக்கப்பட்டது. சினிமாவாகவும் எடுக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுதான் கலாட்டா கல்யாணத்தின், பெண்பார்க்கும் படலம் போலான விஷயம்!

 

1965ம் ஆண்டு நாடகமாகப் போட்டார்கள். 1968ம் ஆண்டு, ஏப்ரல் 12ம் தேதி படமாக வெளியிட்டார்கள். ஆமாம்... ஏப்ரல் 12ம் தேதி 1968ம் வருடம் ரிலீசானது, கலாட்டா கல்யாணம். கிட்டத்தட்ட படம் அரை செஞ்சுரி போட்டாச்சு. இன்னும் பத்து வருடங்களில், கலாட்டா கல்யாணத்துக்கு அறுபதாம் கல்யாணம்.

ராம்குமார் பிலிம்ஸ் எனும் பெயரில், சிவாஜிகணேசன் தயாரித்த படம் இது. சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். நான்கு பெண்களைப் பெற்ற தந்தை. இந்த நான்கு பெண்களை ஒரு பெண்ணைக் காதலிக்கிற ஹீரோ, நேராக தந்தையிடம் வந்து பெண் கேட்கிறார். காதலைச் சொல்கிறார். விருப்பத்தைத் தெரிவிக்கிறார்.

அந்தத் தந்தையோ, ’நாலு பொண்ணுங்களுக்கும் ஒரே சமயத்துல கல்யாணம் பண்றதுன்னு வேண்டிக்கிட்டேன். அவங்களுக்கெல்லாம் மாப்பிள்ளை பாரு. உன் லவ்வுக்கு ஓகே சொல்றேன்’ என்று கண்டீஷனும் தலையில் குண்டுமாகத் தூக்கிப் போடுகிறார்.

ஆனால் நாலும் நாலு திசை. மூத்த பெண் கிழக்கு என்றால், கடைசிப் பெண் மேற்கு. ‘என்னடா இது வம்பாப் போச்சு’ என்று கல்யாண மாப்பிள்ளை பிடிக்கும் களத்திற்குள் ஹீரோ இறங்குகிறார். அதன் பிறகு நடக்கிற ரகளைகளும் ரவுசுகளும் தில்லாலங்கடிகளும் உட்டாலக்கடிகளும்தான் கதை. கலாட்டா கதை. கலாட்டா கல்யாணத்தின் கதை.

1965ம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடைதான் ஜெயலலிதாவுக்கு முதல்படம். ஆயிரத்தில் ஒருவன் படம்தான், எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல்படம். கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, சந்திரோதயம் என்று தொடர்ந்து எம்ஜிஆருடனும் குமரிப்பெண் என்று ரவிச்சந்திரனுடம் யார் நீ முதலான படங்களில் ஜெய்சங்கருடனும் நடித்தார்.

பிறகு 68ம் ஆண்டு, சிவாஜிகணேசனுடன் நடித்த கலாட்டா கல்யாணம்தான் இருவரும் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தபடம். ஸ்ரீதரிடம் பணியாற்றிய சி.வி.ராஜேந்திரன் முதன்முதலாக இயக்கிய படம். ஸ்ரீதர் - கோபு கதை எழுதியிருக்க, திரைக்கதையும் வசனமும் கோபு எழுதியிருக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கியிருந்தார்.

மூத்த பெண்ணாக மனோரமா. இரண்டாவது பெண் ஜெயலலிதா. மூன்றாவது பெண் ஜோதிலட்சுமி. நான்காவது சச்சு. இதில் மூத்த பெண்ணுக்கு ஆண்கள் என்றாலே வெறுப்பு. கல்யாணமே வேண்டாம் என்கிறார். மூன்றாவது பெண் ஜோதிலட்சுமியோ, ஏற்கெனவே ஏவி.எம்.ராஜனை காதலித்து, அவரால் கைவிடப்பட்டு, அவரைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். கடைசி பெண் சச்சு, சினிமா பைத்தியம். சினிமாவில் நடிக்கிற ஆசையில் சுற்றித் திரிகிறார். இந்த அத்தனை கவலைகளும் சிவாஜியின் தலையில். ஆனால் கவலைகள் களேபரங்களாக, களேபரங்கள் அனைத்தும் கலாட்டாக்களாக, ரசனையும் ரகளையுமாகப் போய்க்கொண்டிருக்கும் திரைக்கதைதான் படத்தின் ஆகப்பெரிய பலம்.

நான்கு மகள்களுக்கு அப்பாவாக தங்கவேலு. அவரின் மச்சினனாக சோ. சிவாஜியின் நண்பனாக நாகேஷ். இது போதாதா கலாட்டாவுக்கு! சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மாமாவை வாரிவிட்டுக்கொண்டே இருப்பார் சோ. சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிவாஜியுடன் மல்லுக்கு நின்று, அல்லுசில்லு பெயர்ந்து அசடு வழிந்துகொண்டே இருப்பார் நாகேஷ்.

ஏவி.எம்.ராஜன் வேறொரு பெண்ணுடன் கூத்தடிக்க, அதில் இருந்து அவரைக் கழற்றிவிட ஒரு நாடகம் போடுவார்கள் சிவாஜியும் நாகேஷும். அதில் சிவாஜியே மாட்டிக்கொள்ள, அதன் பிறகு உண்மை புரிந்து கொஞ்சி காதல் புரிவார் ஜெயலலிதா.

ஆண்களையே பிடிக்காத மனோரமாவை மனம் மாற்ற, நாகேஷைக் கொண்டு மடை மாற்ற முயற்சிப்பார் சிவாஜி. நாகேஷின் தற்கொலை நாடகம் ஓரளவு ஒர்க் அவுட்டாகும். அதேசமயத்தில், ஏன் ஆண்களைப் பிடிக்காது என்பதற்கு கல்லூரிக்காலத்தில் நடந்த விஷயத்தைச் சொல்லி மனோரமா குமுறுவார். அந்த ஜம்புவை மன்னிப்பு கேட்க வைக்கிறேன் என்று சொல்லி, ஜம்பு வீட்டுக்குச் சென்று அவரிடம் அடி உதையும் வாங்கி, தெறிக்க ஓடிவருவார்கள் சிவாஜியும் நாகேஷும்!

அடுத்த கட்டமாக, ஜம்பு வீட்டில் இருக்கும் குழந்தையை, நாகேஷ் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார். அதன் பிறகு, கலாட்டா களேபரமாகிப் போகும். போதாக்குறைக்கு, ‘குழந்தை பிறந்தது முதல் எங்களுக்கு நேரம் சரியில்லை. நாங்களே கொன்றுவிடலாம் என்றிருந்தோம். நீங்களே குழந்தையை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று பாழடைந்த கோயில் மண்டபத்தில் சீட்டு வைக்க, சிவாஜி அண்ட் கோ நொந்து நூலாகி, நூலும் அந்து அவலாகிப் போவதெல்லாம் தனி காமெடி.

ஒருவழியாக, மனோரமா கொஞ்சம்கொஞ்சமாக மனம் மாறுவார். ஏவி.எம்.ராஜனை மடக்கி, திசை திருப்ப அவரும் ஒருவழியாக ஜோதிலட்சுமி பக்கம் வந்துவிடுவார். நடிகையாகும் ஆசை கொண்ட சச்சுவுக்கு என்ன செய்வது என்று விழி பிதுங்கியிருக்கும் வேளையில், ஜவுளிக்கடை ஓணர் வி.கோபாலகிருஷ்ணன் கண்ணில் பட, அவ்வளவுதான். மடக்கிப் பிடித்து கண்டீஷன்களையெல்லாம் சொல்லுவார்கள் சிவாஜியும் நாகேஷும். அவரும் சம்மதிக்க, எல்லோரையும் பிடித்துவிட்ட, எல்லோருக்கும் மாப்பிள்ளை கிடைத்துவிட்ட சூழ்நிலை ஒருபக்கம்...

நாலு பெண்கள் இருந்தும் தாய்மாமன் சோவை யாருமே கட்டிக்கொள்ள விரும்பாத நிலை. யதார்த்தமாய் சோ, ஒரு பெண்ணை சந்திக்க, அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளக் கேட்பார் சோ. அவரும் சம்மதம் சொல்லுவார். அந்தப் பெண், குழந்தையை எடுத்துவந்த வீட்டில் வேலை செய்வார்.

சிவாஜி வீட்டில் உள்ள குழந்தை இதுதான் என்கிற விவரம் சோவுக்குத் தெரியவர, அங்கே குழந்தைப் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வரும்.

ஒருவழியாக, கல்யாணத்துக்கு எல்லாம் தயாராகிக் கொண்டிருக்க, வி.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து போன் வரும். மாட்டிக்கிட்டிருக்கேன் சார் என்று இடத்தைச் சொல்லுவார். அங்கே போனால், சிவாஜியின் அப்பாவை, ‘கொன்னுட்டுத் தப்ப பாக்கறியா. ஒழுங்கா பணம் கொடு’ என்று ஒரு கூட்டம் மிரட்டும். அங்கே புகுந்து, சிவாஜி, நாகேஷ், ஏவி.எம்.ராஜன், எல்லோருமாகச் சேர்ந்து சண்டை போட்டு, அப்பாவையும் காப்பாற்றி, கல்யாணமும் செய்துகொள்ள... கலாட்டாவாய் ஆரம்பித்து கலகலப்பாக நடந்தேறும் கல்யாணத்துடன் சுபம் கார்டு போடப்படும்.

படம் தொடங்கியது முதல் முடிவு வரை, சிரிப்பு சிரிப்பு சிரிப்புதான். கலகலவென ஓடிக்கொண்டிருக்கும் படத்தை, பி.என்.சுந்தரம் பளிச்சென்று ஒளிப்பதிவு செய்திருப்பார்.

‘இந்தா பாரு விசு. அந்தப் பொண்ணு முதமுதல்ல நம்ம கூட ஜோடி சேருது. பாட்டெல்லாம் அதுக்குத் தகுந்தாப்ல பின்னிடணும். வாலி... உனக்கும்தான் சொல்றேன். நல்லா எழுது’ என்று சிவாஜி ஜாலியாய்ச் சொல்ல... உடனே படத்தின் தொடக்கப் பாடலாக, ‘வந்த இடம்... நீ நல்ல இடம்...’ என்று வாலி எழுத, எம்.எஸ்.வி.யின் மெட்டுகள் ஒவ்வொன்றும் கலகல லகலக மொட்டுகள். மெல்ல வரும் காற்று என்றொரு டூயட் பாடல், பட்டையைக் கிளப்பும்.

அப்பப்பா நான் அப்பனல்லடா... என்றொரு பாடல். எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் என்றொரு குரூப் பாடல். எல்லாப் பாட்டுகளுமே ஹிட். படம் அதைவிட சூப்பர் ஹிட். சிவாஜி அவ்வளவு இளமையாக, துள்ளலுடன் ஸ்டைலாக இருப்பார். ஜெயலலிதாவும் அப்படித்தான்.

காதல், கல்யாணம் செய்துகொள்ள தரகர் போல் மாப்பிள்ளை பிடிக்கும் வேலை, ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகை, காதல், டிராமா, காமெடி என ரகளை கட்டி, புகுந்துபுறப்பட்ட கலாட்டா கல்யாணம், ஆல் டைம் காமெடி கலாட்டா!

https://www.kamadenu.in/news/cinema/4492-galatta-kalyanam-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

அதே கண்கள் - அப்பவே அப்படி கதை!


 

 

adhekangal-appave-appadi-kadhai

 

கொலை செய்யக் காரணங்கள் தேவையா என்ன. அப்படியே கொலைசெய்தவன் சொல்லும் காரணம் சரியாகவும் மனதை வேதனைப்படுத்துவதாகவும் இருந்துவிட்டால், கொலையையெல்லாம் ஏற்றுக்கொள்ளவா போகிறோம். ஆனால் ஒரு சினிமாவுக்கு, கொலை செய்ய அழுத்தமான காரணம் அவசியம். அதைவிட, தொடர்ச்சியாகச் செய்கிற ஒவ்வொரு கொலையிலும் ஒரு மிரட்டல், ஒரு திடுக், ஒரு பதட்டம், ஒரு பயம் இருக்கவேண்டும். சினிமாவாச்சே! அப்படியான எல்லா திக்திக்குகளையும் நமக்குக் கொடுத்த படம்தான் அதேகண்கள்!

இப்போது வந்த அதேகண்கள் இல்லை. இது, அப்போதே வந்த அப்பவே அப்படி கதை. 1967ம் ஆண்டு, மே மாதம் 26ம் தேதி ரிலீசானது. அதாவது, படம் வெளியாகி, 51 வருடங்களாகிவிட்டன. பிரமாண்டமான ஏவி.எம். நிறுவனம், வெகு பிரமாண்டமாகத் தயாரித்தபடம். ஏவி.எம்மின் ஆஸ்தான இயக்குநராக பின்னர் எஸ்.பி.முத்துராமன் வந்தார். அதற்கு முன்னதாக ஆஸ்தான இடத்தைக் கெட்டியாகப் பிடித்திருந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கியிருந்தார்.

 

பிரமாண்டமானதொரு மாளிகை. அந்த மாளிகையில் பெண்ணொருத்தி ஓர் அறையில் இருந்து வேறொரு அறைக்குச் செல்கிறாள். அங்கே, ஒருவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறார். அதிர்ந்து கத்துகிறார். அப்படியே திரும்புகிறார். அப்போது ஷூ லேஸ் மாதிரியான கயிறைக்கொண்டு, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரிக்கிறது. இன்னும் அலறித்துடிக்கிறார். எல்லோரும் ஓடிவருகிறார்கள். மயங்கிவிழுந்து கிடக்கிறார் அந்தப் பெண்.

அந்த வீட்டில் உள்ள அசோகன், எஸ்.வி.ராமதாஸ், குடும்ப டாக்டர் பாலாஜி, வேலைக்காரர் ஏ.கருணாநிதி, அவுட் ஹவுஸில் உள்ள சித்த வைத்தியக் கிழவர் என எல்லோரும் ஓடிவந்து பார்க்கிறார்கள். அங்கே ஒரு சுருட்டு எரிந்துகொண்டிருக்கிறது. போலீஸ் அதிகாரி மேஜர் சுந்தர்ராஜன் எல்லோரிடமும் விசாரிக்கிறார். வெளியூரில் படிக்கும் இறந்த அண்ணனின் மகள் காஞ்சனா வருகிறார்.

அசோகன், ராமதாஸ் என சகோதரர்கள் கொண்ட குடும்பம் அது. அங்குதான் நடந்திருக்கிறது இந்தக் கொலையும் கொலை முயற்சியும்.

அடுத்தடுத்து, கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகள் இன்னும் இன்னும் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. கொலையாளி யார் என்பதை மட்டும் எவராலும் அனுமானிக்கமுடியவில்லை.

இதனிடையே, காஞ்சனாவும் நாயகன் ரவிச்சந்திரனும் சந்தித்துக்கொள்கின்றனர். காதலிக்கின்றனர். ஒருகட்டத்தில், குடும்பத்தில் நடக்கிற கொலைகளைச் சொல்கிறார் காஞ்சனா. காதலியைக் காப்பாற்றுவதற்காகவும் கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்காகவுமான வேலையில் ஈடுபடுகிறார் ரவிச்சந்திரன்.

ஒருகட்டத்தில், கொலையாளியை நேருக்கு நேர் சந்திக்கிறார். ஆனால் கொலையாளி, முகம் முழுவதையும் மூடிக்கொண்டிருக்க, நாயகன் ரவிச்சந்திரனுக்கு, சாட்சியாக காட்சி தருகின்றன, கண்கள். அந்தக் கொலையாளியின் கண்கள். அதேகண்கள். அந்தக் கண்களை இன்னொரு முறை பார்க்க நேரிடும்போது, குடும்பத்தினர் அதிர்ந்துபோகிறார்கள். குடும்பம் மட்டுமா? பார்த்துக்கொண்டிருந்த   ரசிகர்களே ஆடித்தான் போனார்கள்.

அந்தக் கொலையாளி யார்? கொல்வதற்கு என்ன காரணம்? என்பதை த்ரில்லரும் பிரமாண்டமும், காதலும் காமெடியும், ஆக்‌ஷனும் அமர்க்களப்பாடல்களும் கொண்டு அழகுறச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திருலோகசந்தர்.

படத்தின் முதல் ப்ளஸ், கதையும் திரைக்கதையும். அத்தனைத் தெளிவாக கதை சொல்லப்பட்டிருக்கும். அடுத்து, பிரமாண்டம். ஈஸ்ட்மென்கலரில் எடுக்கப்பட்ட படம் என்பதாலேயே, அதைச் செவ்வனே பயன்படுத்திய விதம் சிறப்பு. இன்னொரு பலம்... ஒளிப்பதிவும் இசையும்! இரண்டும் இரண்டுகண்கள் அதேகண்களுக்கு!

அடுத்ததாகச் சொல்லப்படுவது இசையும் பாடலும். மிரட்டியெடுக்கும் பின்னணி இசை. அதேசமயம், தலையாட்டி, காலாட்ட வைக்கும் மயக்கும் இசை. எல்லாவற்றையும் கடந்து கூர்மைப்பார்வை பார்த்தபடி துடிப்புடன் இருக்கிற நாயகனும் பயந்து பம்மி, மரணபயம் காட்டுகிற நாயகியும், மற்றுமான எல்லா கேரக்டர்களும் கண்ணுக்கு ஒளி கொடுத்திருப்பார்கள்; உயிர் கொடுத்திருப்பார்கள்.

சமூகசேவையில் ஆர்வம் கொண்ட பணக்கார கல்லூரி மாணவிகள் அந்தக் காலத்தில் பிரபலம். அதிகம். குடிசைப் பகுதிக்குள் வந்து குழந்தைகளையும் தெருவையும் சுத்தப்படுத்தும் தூய்மை இந்தியா திட்டத்தை அப்போதே அழகாய் படத்துக்குள் கொண்டுவந்திருப்பார் இயக்குநர். அந்தப் பணக்கார நாயகிதான் காஞ்சனா. தொடர் கொலை நிகழும் குடும்பத்தின் உறுப்பினர். இவருக்கு வரும் மிரட்டலும் அந்த சுவரின் உச்சியில் இருக்கிற வட்ட ஜன்னலும் இன்னும் அதகளப்படுத்தும்.

ரவிச்சந்திரன் நாயகன். நாகேஷ் அவரின் நண்பன். வாடகைக்கு வீடு கேட்கும் போது, தம்பதிக்குத்தான் என்றதால், நாகேஷ் பெண்வேஷம் போட நேரிடுகிறது. அந்த வீட்டின் வயதான உரிமையாளர், பெண்நாகேஷை காதலிப்பதும் ஜொள்ளுவிடுவதும் குட்டிப்போட்ட பூனை கணக்காக சுற்றிச்சுற்றி வருவதும் ஒரு டிராக். அதிலேயே ஆண் நாகேஷ், அந்த வீட்டுப் பெண்ணான மாதவியை விரும்புவது, இன்னொரு சுவாரஸ்யம்.

பங்களா வீட்டு சமையற்காரர் ஏ.கருணாநிதியின் இரவு நேர சத்தம் நாராசமாக இருக்கும். என்னவோ செய்யும். அதைக் கண்டுபிடிக்க வரும் டைப்பிஸ்ட் கோபு, மிரள்வது எக்ஸ்ட்ரா கிச்சுகிச்சு. ராமதாஸைப் பின் தொடரும் நாகேஷ், ‘சுட்டுக்கொன்னுரு’ என்று சொன்னதை வைத்துக்கொண்டு, போலீசை அழைத்துவருவார் நாகேஷ்.. அங்கே ஜெயிக்காத, உடல்நோயுற்ற குதிரையைச் சுட்டிருப்பார் ராமதாஸ்.

ராமதாஸ்தான் எல்லாக் கொலைகளையும் செய்கிறாரோ, அசோகன்தான் அத்தனைக் கொலைக்கும் காரணமோ... குடும்ப மருத்துவர் ஏன் இப்படி திருதிருவென முழிக்கிறார். ஒருவேளை அவர்தானோ என்றெல்லாம் யோசிக்கச் செய்திருப்பதுதான் திரைக்கதையின் ஆகச்சிறந்த பலம். இயக்குநரின் மிகப்பெரிய புத்திசாலித்தனம்.

படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் ஒர்க் ரொம்பவே பாந்தமாகவும் அமர்க்களமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் ஒளிப்பதிவாளர் மாருதிராவின் கேமிரா, இருளின் ஒளியையும் கவ்விக்கொண்டு நம்மை கதிகலங்கச் செய்யும். மாடர்ன் தியேட்டர்ஸுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் ஆஸ்தான இசையமைப்பாளர் வேதா, ஏவி.எம். கோட்டைக்குள் நுழைந்து, மிகப்பெரிய இசைப்பேரிகையே நடத்தியிருப்பார். இரவு நேரங்கள், வில்லன் வரும் தருணம், அந்த திரைச்சீலை ஆடுகிற சத்தம், ஷூ கால்களால் நடக்கும் போது உண்டாகிற ஒலி என காட்சிக்குக் காட்சி கிலி ஏற்படுத்திவிடுவார் வேதா.

 போதாக்குறைக்கு பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசு. காட்சிகள் கண்ணுக்கு விருந்து. இசையெல்லாம் மயக்க மருந்து. பாடல்கள் மொத்தமும் வாலி எழுதியிருக்கிறார். பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி என்ற பாடலை அப்போது பாடாத சிறுவர்சிறுமிகளே இல்லை. ’ஓ ஓ எத்தனை அழகு இருபது வயதினிலே...’ பாட்டும் படமாக்கப்பட்ட விதமும் ஆட்டமும் கொள்ளையடிக்கும் நம் மனங்களை! வா அருகில் வா என்கிற அசோகனுக்கான பாடல், திகிலும் ஒருவித சஸ்பென்ஸும் கலந்து என்னவோ செய்யும். ’கண்ணுக்குத் தெரியாதா... பெண்ணுக்குப் புரியாதா’ என்று பாடல் பட்டையைக் கிளப்பும். ‘பொம்பள ஒருத்தி இருந்தாளாம், பூதத்தைப் பாத்து பயந்தாளாம்’ என்ற பாடல், இன்னுமொரு குல்கந்துப் பாடல். ’என்னென்னவோ நான் நினைத்தேன் சொல்ல வார்த்தை இல்லையே...’ என்றொரு பீச் பாடல், குளிரப்பண்ணிவிடும்.

ரவிச்சந்திரனின் துடிப்பான நடிப்பும் காஞ்சனாவின் பயம் கலந்த அழகும் படத்துக்கு பெரும் பலம். அதேகண்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

படத்துக்கு வசனம் யார் தெரியுமா? சட்டம் என் கையில், சங்கர்லால் என பல படங்களை இயக்கிய டி..என்.பாலுதான் படத்துக்கு வசனகர்த்தா.

எல்லாம் சொல்லியாச்சு. படத்தின் வில்லன் யார்? ஏன் கொலை செய்கிறான்? எப்படிக் கண்டுபிடிக்கப்படுகிறான்? இன்னும் சொல்லவே இல்லையே... என்பவர்களுக்கு!

படத்தின் தொடக்கத்திலேயே படத்தின் க்ளைமாக்ஸை, தயவுசெய்து சொல்லிவிடாதீர்கள். பிறகு படம் பார்க்கும் திரில்லிங் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இல்லாமல் போய்விடும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். வில்லனின் பெயர் வசந்தகுமார். அதற்கு முன்பும் சரி, பின்னரும் சரி... வேறு படங்களில் நடித்ததாகத் தெரியவில்லை. அவர்தான் வில்லன்.

அவர் யார்? என்ன செய்தார்? எப்படி பிடிபட்டார் என்பதையெல்லாம், நீங்களே பார்த்துத் தெரிந்து அனுபவியுங்களேன். அதேகண்களை உங்கள் கண்களால் அனுபவியுங்கள்!

https://www.kamadenu.in/news/cinema/4575-adhekangal-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

கிழக்கே போகும் ரயில் - அப்பவே அப்படி கதை!


 

 

kizhakke-pokum-rail-appave-appadi-kadhai

கிழக்கே போகும் ரயில் - சுதாகர், ராதிகா

 

 

கிராமங்களில் அமைதியும் அழகும் உண்டு. அதேசமயம் ஆவேசமும் ஜாதிப் பாகுபாடுகளும் அதீதம் உண்டு. ஒழுக்கம் எங்கே இருக்கிறதோ அங்கே ஒழுக்கமீறலும் இருக்கும் என்பார்களே. அதுபோலத்தான் இதுவும். இன்னொன்றும் உண்டு கிராமங்களில். சடங்குகளும் சாங்கியங்களும் பலம் என்றும் கிராமத்துக்கே அவை பக்கபலம் என்றும் உறுதிபட நம்புகிற மனிதர்களின் வசிப்பிடம் அவை! அவர்களையும் அமைதி அழகையும் ஒழுக்கத்தையும் சடங்கு சாங்கியங்களையும் முக்கியமாக காதலையும் ரயிலையும் வைத்துக்கொண்டு விடியல் நோக்கிப் பயணித்ததே கிழக்கே போகும் ரயில்!

1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்தது கிழக்கே போகும் ரயில். அதாவது இன்றைய தினம், ரயிலுக்கு  மிகச்சரியாக 40 வயது.

 

பாரதிராஜாவுக்கு முதல் படம் 16 வயதினிலே. இது வெளியான அடுத்த வருடமே வந்ததுதான் கிழக்கே போகும் ரயில். முன்னதில் மயிலுடன் வந்தவர், இந்த முறை ரயிலுடன் பயணப்பட்டார். அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்தார்.

கிழக்கே போகும் ரயிலில் இருந்து இறங்குகிறார் பாஞ்சாலி. அம்மாவின் மரணத்துக்குப் பிறகு அக்கா கருத்தம்மாவே கதியென்று இந்தக் கிராமத்துக்கு வருகிறாள். அங்கே பாட்டுக்கார பரஞ்சோதியைப் பார்க்கிறாள். முன்னதாக, பாஞ்சாலியை அவளின் அக்கா புருஷன் பார்க்கிறான். அவள் மீது ஆசை கொள்கிறான்.

பாட்டே கதியென்று கிடக்கும் பரஞ்சோதி. நாவிதர் குடும்பத்தைச் சேர்ந்தவன். வேலையில் நாட்டமில்லை. அப்படியே வேலை செய்தாலும் கவிதையிலும் கற்பனையிலுமாக மூழ்கிவிடுகிறான். ஊர்ப்பெரியவரின் மகனுக்கு முடிவெட்டுகிறேன் பேர்வழி என்று குதறியெடுத்துவிடுகிறான். சோளக்காட்டுக் காவலுக்குப் போனவன், பாட்டுப்பாடி, சோளத்தையெல்லாம் திருடக் கொடுக்கிறான்.

இப்படியான சூழலில், பாஞ்சாலி அவன் மனசுக்குள் புகுந்து என்னவோ செய்கிறாள். அவளுக்குள்ளும்தான் அப்படி ஓர் இது! இருவரும் காதலிக்கிறார்கள். கிராமத்தில், காதலர்களுக்கு ஆற்றங்கரைதானே மெரினா பீச். வாய்க்காலும் வரப்பும்தானே பார்க். இவர்கள் ஆற்றுக்குள்ளேயே விளையாடுகிற தருணத்தில் நிகழ்கிற விபரீதம், ஊர்ப்பஞ்சாயத்தில் கொண்டுவிடுகிறது.

தாழ்ந்த ஜாதிக்காரன் என்பதால் கட்டம்கட்டப்படுகிறான். ஊர் வழக்கப்படி மொட்டையடித்து, கரும்புள்ளிசெம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஊர்வலமாக அழைத்துவரப்படுகிறான், கவிதைக்காரன் பரஞ்சோதி.

‘என்னாலதானே பரஞ்சோதி இப்படிலாம். ரெண்டுபேரும் செத்துப்போயிடலாம்’ என்கிறாள் பாஞ்சாலி. ‘வாழணும். வாழ்ந்து காட்டணும். எந்த ஊரு அவமானப்படுத்துச்சோ, அந்த ஊரு நம்மளை வியந்துபாக்கணும்’ என்று கவிதைப்பேப்பர்களை பையிலும் நம்பிக்கையை மனதிலுமாக திணித்துக்கொண்டு சென்னைக்குச் செல்கிறான். ‘நான் சீக்கிரமே வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன். கிழக்கே போற ரயிலோட கடைசிப் பொட்டியில உனக்காக சேதி அனுப்புவேன். நீயும் அதுல எழுதி அனுப்பு. நான் பாத்துக்கறேன்’ என்று சொல்லிச் செல்கிறான்.

அங்கே, சென்னையில் கால் தேய,உடம்பு ஒடிய, மனசு நொறுங்க... அலைகிறான் பரஞ்சோதி. பதிப்பகம் பதிப்பகமாக ஏறி இறங்கும் அவனுக்கு, அவனுக்கே அவனுக்கு என வாசல் திறக்கிறது.

இங்கே, பரஞ்சோதியின் நினைப்பில் இருக்கும் பாஞ்சாலியை மீட்டெடுக்க முடியவில்லை. போதாக்குறைக்கு தன் கணவனே தன் தங்கையைப் பெண்டாளப் பார்க்கிறானே எனப் பதைபதைத்துப் போகிறாள் கருத்தம்மா.

பெண்பார்க்கும் படலம். மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. ஆனால் கையலம்ப கொல்லைப்பக்கம் வரும் மாப்பிள்ளையிடம் தன் மனதையும் காதலையும் பரஞ்சோதியையும் சொல்கிறாள். சொல்லி அழுகிறாள் பாஞ்சாலி. நெகிழ்ந்து கரைந்த அந்த நல்லவன், கிளம்பிச் செல்ல... பூதம் இன்னும் பூதாகரமாக வெடிக்கிறது. ‘என் மச்சினியையே கண்ணாலம் பண்ணிக்கிறேன்’ என்று பஞ்சாயத்தில் சொல்கிறான். முடியாது என மறுக்கிறாள் மனைவி கருத்தம்மா. ‘பத்து வருசமாகியும் குழந்தை இல்ல’ என்று குற்றம் சுமத்துகிறான். ‘நானும் விசம் குடிச்சிட்டு என் தங்கச்சிக்கும் விசம் குடுத்துருவேன். செத்துப்போயிருவோம்’ என்கிறாள் கருத்தம்மா. ‘அப்படினா, தாலிய அறுத்துக்கொடு’ என்கிறான். தாலி செண்டிமெண்ட், ஒர்க் அவுட்டாகிறது. அப்படியான நெருக்கடிக்கு உள்ளாகிறது நிலையில், கிழக்கே போகும் ரயிலில் சேதி எழுதி அனுப்புகிறாள்.

ஆனால் மழை. பெரு மழை. காட்டுமழை. காட்டுகாட்டு என்று காட்டுகிற மழை. எழுதிய சேதி அழிந்தது. ஆனால் மிக பயங்கர சேதி ஒன்றுக்கு அங்கே பிள்ளையார் சுழி போடப்படுகிறது.

இப்படிப்பட்ட பெருமழையாலும் காற்றாலும் புயலாலும் ஊரே வெள்ளக்காடாகி விட, ஏரி உடைந்து ஊரே மூழ்கும் பயங்கரம். அப்போது சடங்கும் சாங்கியமும் மழையில் ஒதுங்கி, ஊரை உலுக்குகிறது. கன்னிப்பெண்ணொருத்தி, ஒட்டுத்துணியில்லாமல், கையில் தீப்பந்தம் ஏந்தி ஊரை வலம் வந்தால், அம்மன் கோபம் தணியும். மழை சட்டென்று நின்றுவிடும். இந்தச் செயலால், ஊரே காப்பாற்றப்படும்’ என்கிறார்கள் ஊர்ப்பெருசுகள். பஞ்சாயத்தின் ஒவ்வொருதருண முட்டாள்த்தனத்தையும் எதிர்த்த பட்டாளத்தான், இப்போதும் எதிர்க்க, எப்போதும் பணிகிற பஞ்சாயத்து, இந்த முறை பட்டாளத்தானை எதிர்க்கிறது. ஊரை விட்டு விலக்கி வைக்கவும் முடிவு செய்கிறது. ‘இந்த முட்டாள்த்தனமான ஊரை விட்டே நான் போறேன்’ என்று கிளம்புகிறான் பட்டாளத்தான்.

ஊரில் உள்ள கன்னிப்பெண்களின் பெயர்கள் தனித்தனியே எழுதப்பட்டு, ஒரு குடத்தில் வைக்கப்பட, குழந்தையைக் கொண்டு சீட்டு எடுக்கப்பட, அந்தக் கன்னிப்பெண் பாஞ்சாலி என்று சீட்டு சொல்லுகிறது.

ஊர் தயாராகிறது. பாஞ்சாலி தயாராகவேண்டிய நிர்ப்பந்தம். அந்தநாளும் வருகிறது. ஊரே வெறிச்சோடி இருக்கிற இரவில், ஆடையேதுமின்றி, பாஞ்சாலி தெருவில் இறங்கி நடக்கிறாள்.

அப்போது, ஏதும் தெரியாத பரஞ்சோதி, பாஞ்சாலியை அழைத்துப் போக ஊருக்குள் வருகிறான். பாஞ்சாலியைப் பார்க்கிறான். அவளை அங்கிருந்து, அழைத்துக்கொண்டு ஓடுகிறான். ஊரே துரத்துகிறது. அவர்களைக் காப்பாற்றத் தடுக்கிற பட்டாளத்தானையும் வெட்டிச் சாய்க்கிறார்கள்.

பாஞ்சாலியும் பரஞ்சோதியும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவருகிறார்கள். கிழக்கே போகும் ரயில் வருகிறது. அந்த ரயிலில் ஏறிக்கொண்டு விடியலை நோக்கி பயணிக்கிறார்கள்.

‘அப்பாடா... பாஞ்சாலியும் பரஞ்சோதியும் சேந்துட்டாங்கப்பா’ எனும் நிம்மதிப்பெருமூச்சுடன் இருக்கையில் இருந்து எழுந்திருந்தார்கள் ரசிகர்கள்.

 40 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்தான். ஆனால் கிராமத்தில் இருக்கிற ஜாதி வன்மத்தையும் ஆதிக்க சாதியின் மனோபாவங்களையும் சொன்னதெல்லாம் பொளேர் ரகம்தான். அவை இன்றைக்கும் இருப்பதுதான் வேதனை.

பாஞ்சாலியாக ராதிகாவும் பரஞ்சோதியாக சுதாகரும் அறிமுகமானார்கள் இந்தப் படத்தின் மூலம்! 16 வயதினிலே படத்தைத் தயாரித்த அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்திருந்தது.

படத்தின் கதை வசனத்தை ஆர்.செல்வராஜ் எழுதியிருந்தார். நேர்த்தியான, இயல்பான, போலித்தனமில்லாத கிராமத்தையும் காதலையும் வெற்றியையும் காட்சியாலும் வசனத்தாலும் காட்டியிருந்தார்கள். படத்துக்கு உதவி வசனகர்த்தா கே.பாக்யராஜ்.

இந்தப் படத்தில், டைட்டிலில் நடிகர்கள் பட்டியலில் பாக்யராஜ் பெயர் வரும். பிறகு பாடலாசிரியகள் பட்டியலில் கண்ணதாசன், முத்துலிங்கம் பெயர்களுக்குக் கீழே பாக்யராஜ் பெயரும் வரும். ஒரு பாடலும் எழுதியிருப்பார்.

அதுமட்டுமா? உதவி வசனகர்த்தாவாக ஓரிடத்திலும் உதவி இயக்குநராக இன்னொரு இடத்திலும் என நான்கு இடங்களில் பாக்யராஜ் பெயரை வரச் செய்து, சிஷ்யனின் திறமையை ஊக்கப்படுத்தியிருப்பார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

’கிளிகிளிகிளிகிளி. இங்கொரு கிளி. அங்கொரு கிளி. இங்கே இருக்கறது பச்சைக்கிளி. அங்கே இருக்கறது பாஞ்சாலிக்கிளி’ என்று கவுண்டமணி அப்போதே பஞ்ச் காமெடி செய்திருப்பார். விடுகதை சொல்லி போட்டி வைப்பதும் இரண்டு கைகளையும் தரையில் மடக்கிவைத்து, அதில் நாயகியை ஏற்றி உயரத்தூக்குவதும் சிம்பிளாக நடக்கும் உஷாவின் திருமணமும் பொட்டிக்கடை மயிலு புருசன் சப்பாணி அஞ்சு ரூபா என்று மொய் எழுதுவதும் யார் சொன்னாலும் வாஸ்தவமான பேச்சுங்கோ என்று சொல்லும் பாக்யராஜ்கள் எல்லா ஊரிலும் இருப்பார்கள் என்பதைச் சொல்லும் கேரக்டரும் அந்த ஐயர் ஜனகராஜும் நாவிதர் சீனிவாசனும் பட்டாளத்தான் விஜயனும் கருத்தம்மா காந்திமதியும் என படம் நெடுக, வாழ்ந்து, நம்மை அவர்கள் வீட்டில் வரவேற்றது மாதிரி சிறப்பாகப் பண்ணியிருப்பார்கள்.

இதிலும் நிவாஸ் கேமிரா. அள்ளி அள்ளி அழகைத் தந்திருப்பார் நமக்கு. அதுவும் தண்டவாளத்துக்குக் கீழே கேமிரா இருக்கும் ரயில் தடதடவெனச் செல்லும். கூடவே டைட்டிலும் ஓடும். ஆரம்பமே அமர்க்களம் பண்ணியிருப்பார் நிவாஸ்.

மாஞ்சோலைக் கிளிதானோ பாட்டு பாடாத விழாக்களே இல்லை அப்போது. அதிலும் நடுவே வேகமாக வரும் ‘மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ...’ என்ற வரிகளை பாட்டுப்புஸ்தகம் வாங்கி, மனப்பாடம் பண்ணிய இளசுகள் உண்டு.

கோயில்மணி ஓசைதன்னை கேட்டதாரோ பாடலும் நடுவே வருகிற புல்லாங்குழலும் நம்மைக் காதலுக்குள் தள்ளிவிடும். மலேசியா வாசுதேவனின் குரலும் மயக்கிப் போடும்.

ஏதோ பாட்டு ஏதோ ராகம் என்றொரு சோகப்பாட்டு. இளையராஜா பாடியிருப்பார். சென்னையின் விஸ்தீரணத்துக்குள் ஓடியோடித் தவித்து, வாழ்க்கை தேடும் மனிதனின் கவலையை வடிக்கிற பாட்டு இது. கண்ணீர் வரவைக்கிற பாட்டாகவும் அமைந்திருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ’வேலை கிடைத்துவிட்டது; வசந்தம் பிறந்துவிட்டது’ என்று கிழக்கே போகும் ரயிலின் கடைசிப் பெட்டியில் தகவல் பார்த்ததும் குஷியாகிவிடுவார் ராதிகா. மிகப்பெரிய இசை ஆலாபானை பயணத்துக்குப் பிறகு சட்டென்று நின்று நிதானித்து வேறொரு களமாக, ராகமாக, ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ பாடல், நம்மை ரயிலுக்குள் உட்கார்த்திவைத்து ஒரு ரவுண்டு கூட்டிப் போகும். வாழ்வில் ஜெயித்த சந்தோஷத்தையும் காதலின் குதூகலத்தையும் நமக்குள் கடத்திவிடும், பாட்டு இது. படம் முழுக்க ராதிகாவின் ஸ்பெஷல் சிரிப்பு, இந்தப் பாட்டில் வட்டியும்முதலுமாகக் கொட்டி வாங்கியிருப்பார் பாரதிராஜா. இப்போது பார்த்தாலும் அந்தப் பாட்டைக் கேட்டாலும் நாசி தொட்டுச் செல்லும் பூவாசப் பாடல் இது.

16 வயதினிலேயில் செந்தூரப்பூவே தந்தவர், ரயிலின் மூலமாக பூவரசம்பூ தந்திருப்பார். 40 ஆண்டுகளுக்கு முன்பு, பாஞ்சாலியையும் பரஞ்சோதியையும் ஊரே கூடி எதிர்த்ததையெல்லாம் கடந்து, கிழக்கே போகும் ரயிலில் ஏற்றி அனுப்பியிருப்பார் பாரதிராஜா, ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக வந்து பச்சைக்கொடி காட்டி, அவர்களை வாழவிட்டிருப்பார். இல்லையெனில் யார்கண்டது... இப்போது போலவே நிகழ்ந்திருக்கலாம் ஆணவக்கொலை!

படம் முடிந்து வந்த போதும், பாஞ்சாலி, பாஞ்சாலி, பரஞ்சோதி பரஞ்சோதி என்று கிளியின் அழைப்பு கேட்டுக்கொண்டே இருக்கும். அதனால்தான் கிழக்கே போகும் ரயிலில், திரும்பத் திரும்ப ஏறினார்கள். வெள்ளிவிழாப் படமாக்கினார்கள். மிகப்பெரிய வசூல் செய்தது இந்தப் படம்.

பொதுவாக ஒரு இயக்குநரின் இரண்டாவது படம் பெரிதாக ஓடாது என்பார்கள். ஆனால் இரண்டாவது படத்தையும் ஜிகுபுகுஜிகுபுகுவென ரயிலைப் போலவே ஓடவைத்தார் பாரதிராஜா. அதனால்தான் அவர் இயக்குநர் இமயம்!

https://www.kamadenu.in/news/cinema/4684-kizhakke-pokum-rail-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

பசி - அப்பவே அப்படி கதை! 


 

 

pasi-appave-appadi-kadhai

 

உணவில்லாதவர்கள் கூட உலகில் உண்டு. ஆனால் பசியில்லாதவர்கள் என்று எவருமே இல்லை. எல்லோருக்கும் ஏதேனும் ஒரு தருணத்தில், ஏதாவது ஒரு பசி இருந்துகொண்டேதான் இருக்கிறது. பசி என்பது தேடலின் இன்னொரு பெயர். வயிற்றுப் பசி, இலக்கியப்பசி, உடல் பசி, புகழ்ப்பசி, ஞானப்பசி, செல்வப் பசி என்று பசியில் பலவகைகள் இருக்கின்றன. ஆனாலும் வயிற்றுப் பசிக்குத்தான் முதல் உரிமை. முன்னுரிமை. ஒரேயொருவனுக்கு உணவில்லையென்றாலும் கூட ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி கோபப்பட்டதும், வயிற்றுப்பாட்டுக்குத்தான். வயிறை வலியுறுத்தித்தான். ஆனால் ஒரு சோகம்... அந்த பாரதிக்கும் அவன் குடும்பத்துக்கும் ஒருவேளை உணவு கூட சரியாகக் கிடைக்கவில்லை என்பதுதான் உலகின், வாழ்க்கையின் முரண். அப்படி பசியுடன் குப்பத்தில் வாழும் குப்பம்மாக்களின் கதையைச் சொன்னதுதான் பசி!  
1979ம் வருடம், டிசம்பர் மாதத்தில், 21ம் தேதி வெளியான பசி படம்... எழுப்பிய அதிர்வுகள் ஏராளம். அந்த அதிர்வுக்கு இணையானதொரு படம், இன்னும் எடுக்கப்படவில்லை என்பது, திரைக்கலையின் சாபக்கேடு. பசி படத்தின் ஃபுல்மீல்ஸ். கிட்டத்தட்ட, 39 வருடங்களாகிவிட்டன பசி படம் வந்து. கலைத்தாகத்துடன், கலைப்பசியுடன் எடுத்த மிக முக்கியமான படங்களில் பசியும் ஒன்று! 
நகர்ப்புற சென்னையின் ஒரு ஓரத்தில், ஓரங்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருக்கும் குப்பம் ஒன்றில் வசிக்கும் குடும்பம் அது. நல்லா சாப்பிடணும், நல்லாக் குடிக்கணும், மனைவியுடன் படுத்துக்கணும் என்பது தவிர, வேறு எது குறித்தும் சிந்திக்காத முனியப்பனாக டெல்லிகணேஷ். அவரின் ஆரம்பகட்ட படங்களில்,இது முக்கியமானதொரு படம். சொல்லப்போனால், இவர் மிகச்சிறந்த நடிகர் என ஊருக்கும் உலகுக்கும் பறைசாற்றிய படம் பசி. இவரின் மனைவி தாம்பரம் லலிதா. கணவனுக்குப் பணிந்து, பிள்ளைகளை அரவணைத்து, வயசுப்பெண் குப்பம்மாளை காபந்து பண்ணி... என தனக்கென வாழாத குப்பத்துத் தங்கம். வரிசையாய் 
பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டு, எடுபிடி வேலைக்கும் பிளாக்கில் டிக்கெட் விற்கவுமான வாழும் சிறுவன் ஒருவன். அந்த வீட்டின் ராஜகுமாரன். இன்னொருவன், பள்ளிக்கு டிமிக்கி கொடுத்து ஊர் சுற்றுகிறான். இன்னொரு மகள், படிக்கப் போகும் வயது. இன்னொருத்திக்கு நடக்கமுடியாது. ஊனம். அப்பா சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுகிறார். ஆனால் அதைக்கொண்டெல்லாம் வாழ்க்கையை ஓட்டமுடியவில்லை. வயசுக்கு வந்த மகள், குப்பை சேகரிக்க தெருத்தெருவாய் சுற்றக் கிளம்புகிறாள். 
வழியில் டீக்கடையில் லாரி டிரைவரைச் சந்திக்கிறாள்.சின்னதாக ஒரு ஸ்நேகிதம் ஏற்படுகிறது. பசியோடு குடித்தனம் நடத்துகிற வீட்டில் ஒருத்திதான் அவள். ஆனாலும் ஓசியில் டீக்குடிக்க கூசுகிறாள். குடித்துவிட்டு வந்து ரவுசு பண்ணுகிற  அப்பனை, போலீஸ் பிடித்துச் செல்ல, ஜாமீனுக்கு ஆள் தேட, எவரும் வரவில்லை. ஊரும் வரலை. உறவும் வரலை. அந்த லாரிடிரைவர்தான் ஜாமீனில் எடுத்து உதவுகிறார். அவர் மீது ஒரு மரியாதை, அன்பு, நன்றியுணர்வு ஏற்படுகிறது குப்பம்மாளுக்கு! 
பிரவீணா, சைக்கிள் ரிக்‌ஷா டெல்லிகணேஷின் ரெகுலர் கஸ்டமர். காமப்பசியுடன் திரியும் பலர்,  பிரவீணாவுக்கு கஸ்டமர். அம்மாவின் வற்புறுத்தலால், பிடிவாதத்தால் பிடிக்காத வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். உள்ளே ஒரு சலிப்பு, வேதனை, குற்ற உணர்வு என புழுங்கிக்கொண்டே இருக்கிறாள்.
உடம்பு முடியாமல், வீட்டில் முடங்கிக் கிடக்கும் டெல்லிகணேஷூக்கு வாய்க்கு ருசியாய் சாப்பிட ஆசை. உலகமே இடிந்தாலும் உணவு முக்கியம், அந்த அரைவயிற்றுக் கஞ்சிக்கு இல்லாதவனுக்கு கோழி பிரியாணி சாப்பிட ஆசை. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற, கையிலிருக்கும் காசைக் கொண்டு, கால்பிளேட் பிரியாணி கேட்கிறாள். ஆனால் அரை பிளேட் பிரியாணிதான் தரமுடியும் என்கிறார்கள். கைபிசைந்து, வெளிறித் திரும்புகிறாள். லாரிடிரைவர் ஹோட்டலுக்குள் அழைத்துச் செல்கிறான். பிரியாணி வாங்கித் தருகிறான். ஒட்டுமொத்த குடும்பத்த்துக்கும் பிரியாணி பார்சல் வாங்கித் தருகிறான். காமப்பசியுடன் கனன்று திரிந்தவன், அவளையே ஒரு பிரியாணிப்பொட்டலத்தைப் போல எடுத்துப் பிரித்துச் சாப்பிடுகிறான். 
லாரியில் வந்து இறங்கியதும் பிரியாணிப் பொட்டலங்களும் அம்மாவுக்கு சந்தேகம் கிளப்ப, கேட்கிறாள். துக்கித்துப் போகிறாள். புலம்புகிறாள். ஆனால் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்கிறான் அப்பன். நடுத்தரவர்க்க பிரவீணாக்களைத் தெரிந்த ரிக்‌ஷாக்கார அப்பனுக்கு, இது சாதாரணமாகத்தானே இருக்கும். விடிகிறது. காசும்பணமும் அரிசியும் சோறும் இல்லாத வீட்டில் இருப்பது மானம் ஒன்றுதான். அதுவும் இப்போது பங்கப்பட்டுப் போக, ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள் அம்மாக்காரி. 
இதனிடையே லாரிடிரைவருக்கு ஏற்கெனவே கல்யாணமான விஷயம் தெரிய, உடைந்து நொறுங்குகிறாள் குப்பம்மா. அந்த டிரைவரை அடித்து உதைத்து இவளுக்கு முன்னே நிறுத்தி, இவனா என்று கேட்கிறார்கள். இல்லையென்று காப்பாற்றி அனுப்புகிறாள். உடைந்து கூனுகிறான் அவன். யார் அவன் யார் அவன் என்று கேட்கும்போதெல்லாம் சால்ஜாப்பு சொல்லி ஏமாற்றுகிறாள். கர்ப்பம் என்று தெரிகிறது. கலைக்க மறுக்கிறாள். நிறைமாதம்.அவனைப் பார்க்க விரும்புகிறாள். தகவல் போகிறது. அப்போது டிரைவரின் மனைவிக்குத் தெரிந்துவிடுகிறது. 
இதனிடையே, பிரவீணா குப்பம்மாளுக்கு உதவ ஒருவரிடம் பணம் கேட்கிறாள். பெறுகிறாள். போலீஸ் பிடிக்கிறது. இங்கே, வலி அதிகமாக மருத்துவமனை நோக்கி வருகிறாள். வழியில் மயங்குகிறாள். டிரைவரின் மனைவி, கணவனை மன்னித்தாளோ இல்லையோ... அவளை அரவணைக்க முடிவு செய்கிறாள். போய் கூட்டிட்டு வாங்க என்கிறாள். 
அங்கே மயங்கியவள், இறந்தேபோகிறாள். குழந்தை பிறந்து அழுதுகொண்டிருக்கிறது. டிரைவர் விக்கித்து நிற்கிறான். அவனின் மனைவி புரிந்து கொண்டு, குழந்தையை எடுத்துக்கொள்கிறாள். வயிற்று, காம, பணப் பசிகள் ஒருவழியாக கொஞ்சமே கொஞ்சமாக ஓய்வெடுக்கிறது. கனத்த இதயத்துடனும் கைக்குட்டை நனைத்த கண்ணீருடனும் ரசிகர்கள் இறுக்கத்துடன் வெளியே வருகிறார்கள்.
ஒரு சமுகப் பாகுபாட்டை, கீழ்த்தட்டு மக்களின் எளிய தேவையை, எல்லோரும் எதையேனும் எவரிடமேனும் பெற்றுக்கொண்டே இருக்கிற சுயநலத்தைப் பொளேரென அறைந்து சொல்லிய பசி படம், தமிழ் சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் ஆகச்சிறந்த பாடம். 
இயக்குநர் துரையின் படைப்பு இது. இப்படியொரு அழுக்கு உலகத்தின் அவலத்தையும் குப்பை சேகரிப்பவளை நாயகியாக்கியும் படம் எடுத்த துணிச்சலும் பாடலே இல்லாமல் எடுத்த தைரியமும் இப்போது கேட்டாலும் மிரண்டுதான் போவோம். இதையடுத்து இவர் பசி துரை என்றே அழைக்கப்பட்டார்.
அந்த சைக்கிள் கடை நாராயணனையும் பொன்னான கைகள் புண்ணாகலாமா பாடலையும் மறக்கவே முடியாது. பிறகு இவர் பசி நாராயணன் என்றே அழைக்கப்பட்டார். குப்பத்தின் குப்பை பொறுக்கும் சத்யாவுக்கு, கமல்தான் உயிர். 16 வயதினிலே படத்தில், கோவணத்துடன் கமல் நின்றபோது, கண்ணை மூடிக்கொண்ட பிரியக்காரி. கல்யாணராமன் கமலைப் பார்த்து வியந்த பாசக்காரி. கமலை நேரில் சந்தித்து, ஆட்டோகிராப் வாங்குகிறாள். கல்யாணத்தோட பல்லைக் காணோம் என்கிறாள். பிறகு இந்த சத்யா, பசி சத்யா என்றே அழைக்கப்பட்டார். படத்தின் டைட்டிலில், நன்றி ஹாசன் பிரதர்ஸ் என்று போடுகிறார்கள். எதற்கு? இதற்குத்தானா? இதற்கு மட்டும்தானா? தெரியவில்லை. 
ரிக்‌ஷாக்கார டெல்லிகணேஷ் நடிப்பு அற்புதம். தாம்பரம் லலிதாவும் எஸ்.என்.பார்வதியும் அச்சு அசலாக குப்பத்துக்காரர்களாவே நிஜம் காட்டியிருப்பார்கள். லாரிடிரைவர் விஜயனும் அவரின் உதவியாளரான செந்திலும் மனைவி ஜெயபாரதியும் மனதில் நின்றுவிடுவார்கள். ‘உன் பொண்ணு கற்பைப் பறிகொடுத்துட்டானு அவங்க அம்மா ரயில்ல விழுந்து செத்துப்போயிட்டாங்க. ஆனா என் அம்மாதான் இந்தத் தொழிலுக்கே என்னை தள்ளிவிட்டுட்டிருக்காங்க’ என்று சொல்லும் பிரவீணா, ’தப்புப் பண்ணும்போதெல்லாம் பிடிக்கலை. தர்மம் பண்ணலாம்னு காசு வாங்க வந்தேன். பிடிச்சிட்டீங்க’ என்று சொல்லும் பிரவீணா, கைத்தட்டல் பெறும் காட்சிகள் நிறைய! 
குற்ற உணர்ச்சியுடன் டீக்கடையில் விஜயன் நிற்கும்போது, ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்...’ பாடல் ரேடியோவில் ஒலிக்கும். ஷோபா பேசும் போது பின்னணியில் ஆயிரம் பொய் சினிமா போஸ்டர். ஷோபாவிடம் விஜயன் மன்னிப்புக் கேட்கும் போது, பின்னே சுவரில் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி போஸ்டர், இன்னொரு சந்தர்ப்பத்தில் திசை மாறிய பறவைகள் போஸ்டர்,  ’அப்பா, உன்னை யாரோ அடிச்சிட்டாங்களாமேப்பா’ என்று கேட்கும் விஜயனின் மகள், மனைவியை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் போனவனைக் கண்டிக்கும் விஜயனின் மனைவி ஜெயபாரதி, ரோட்டுக்கடையில் டிபன் கடை போட்டிருக்கும் தெரிந்தவளிடம் காசு கடன் கேட்கப் போய், கேட்டால் நட்பு போயிருமோ என்று திரும்பிவரும் கீழ்த்தட்டு மக்களின் வைராக்கிய, அன்பு நிலை, ‘நான் பொறந்தவுடனேயே குப்பை பொறுக்கத்தான் போவேன்னு தெரியுமோ என்னவோ... குப்பம்மான்னு பேரு வைச்சிருக்காங்க’ என்று சொல்லும் நாயகி என எல்லா பாத்திர படைப்பிலும் திரைக்கதை வார்ப்பிலும் இயக்கத்தால் ஆளுமை செய்திருப்பார் துரை. அந்த பிச்சைக்கார கேரக்டரில் வந்து வட்டிக்கு விடும் சுருளிராஜனும் சமூகத்தை சாடியிருப்பார். பகடி செய்திருப்பார். சங்கர்கணேஷின் இசை, மெல்லிய சோகம் இழையோட என்னவோ செய்யும். டைட்டில் போடும் அழகே பசியின் சுவை கூட்டும். ருசியுடன் பரிமாறப்பட்டிருக்கும். 
நாயகி குப்பம்மா... ஷோபா. இவரை என்ன சொல்வது? என்ன சொல்லி இவரின் நடிப்பாளுமையைச் சொல்லமுடியும்? கேரளத்தில் இருந்து வந்த ஷோபா, சென்னைக் குப்பத்திலேயே வளர்ந்து வாழ்ந்தவர் போல், அந்த பாஷை பேசி, அவரின் நடை பாவனைகளிலும் அப்படியே இருந்து வாழ்ந்துகாட்டியிருப்பார். அதனால்தான் இந்தப் படத்தால் கிடைத்தது தேசிய விருது. அதனால்தான் இன்றைக்கும் நம்முள் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஷோபா! 
கோதைக்கோ மானப்பசி. குழந்தைக்கோ வயிற்றுப்பசி. காமுகனுக்கோ காமப்பசி. காலத்துக்கோ மரணப்பசி எனும் டைட்டிலுடன் பசி படம் முடியும். 
ஆனால் இந்தப் பூவுலகில், பசி யாருக்குத்தான் இல்லை? 

https://www.kamadenu.in/news/cinema/4976-pasi-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

வைதேகி காத்திருந்தாள் - அப்பவே அப்படி கதை!


 

 

vaidheki-kaathirundhal-appave-appadi-kadhai

வைதேகி காத்திருந்தாள்

 

காதலை மையப்படுத்தி வந்த படங்கள் ஏராளம். காதலர்களைச் சேர்த்து வைப்பதற்குப் போராடும் படங்களும் நிறைய உண்டு. அப்படி, காதலை மையப்படுத்தியும் காதலர்களைச் சேர்த்துவைக்கப் போராடவுமான படமாக அமைந்ததுதான் வைதேகி காத்திருந்தாள்.

1984ம் ஆண்டு, ஜூன் மாதம் 10ம் தேதி ரிலீசான படம், வைதேகி காத்திருந்தாள். ஜூன் மாதம் பள்ளி திறக்கும் காலம். எனவே படத்தை முன்பே ரிலீஸ் செய்யவேண்டும் என்று பரபரத்து பரபரப்பாவதெல்லாம் இந்தக் காலம். கிட்டத்தட்ட, படம் வெளியாகி, 34 வருடங்களாகிவிட்டன. நடிகர் விஜயகாந்த், திரையுலகுக்கு வந்து இது 40வது வருடம். ஆக, சினிமாவுக்கு வந்த ஆறாவது வருடத்தில் இப்படியொரு படம் கிடைத்தது விஜயகாந்திற்கு.

 

சரி... காத்திருக்கும் வைதேகியை முதலில் பார்ப்போம்.

அந்தக் கிராமத்தில், தண்ணீரை தோளில் சுமந்து ஊர்மக்களுக்குத் தரும் வெள்ளைச்சாமி. அவனுக்குக் கோயிலும் குளத்தாங்கரையுமே இருப்பிடம். அந்த ஊரில்தான் வசிக்கிறாள் வைதேகி. பரதம் தெரிந்தவள். நட்டுவனாரின் மகள். பாவம்... கல்யாணம் நடந்த அரைமணி நேரத்தில் கணவனைப் பறிகொடுத்தவள். அந்தத் துக்கத்தாலேயே அவளின் அப்பா, மதுவில் மறக்க நினைக்கிறார்.

தாகத்துக்கு தண்ணி தரும் வெள்ளைச்சாமிக்கு ஒரு பழக்கம். இரவாகிவிட்டால் பாடுவான். அது அந்த ஊரையே தாலாட்டும். மகிழப்பண்ணும். மனதை வருடும். மயக்கும்.

இந்த கிராமத்துக்கு வருகிறான் ஒருவன். வறுமை, சொந்தமில்லை, வேலையும் இல்லை. அவனுக்கு ரேஷன்கடையில் வேலை கிடைக்க, வைதேகி வீட்டு ஒரு போர்ஷனில் தங்குகிறான்.

அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் பஞ்சமில்லாத இந்த ஊரில் வெள்ளிக்கிழமை ராமசாமி என்பவன், ரவுடித்தனமும் ரவுசுத்தனமும் பண்ணுகிறான். கடைக்காரர்களிடம் மாமூல் வாங்குவதுதான், அவனது மாமூல் வாழ்க்கை. அவனுடைய தங்கை செங்கமலத்துக்கும் அந்த ரேஷன்கடை இளைஞனுக்கும் காதல் மலர்கிறது.

இதனிடையே, அந்த வெள்ளைச்சாமி, எவருடனும் வாய் திறந்து பேசாத வெள்ளைச்சாமி, சேவையும் பாடுதலும் மட்டுமே இருக்கிற வெள்ளைச்சாமி, கோயில் சுவரில் வைதேகி வைதேகி வைதேகி என எழுதிவைக்க, விஷயம் ஊரெங்கும் பரவுகிறது. இதில் ஆவேசமான வைதேகி, வெள்ளைச்சாமியிடம் வந்து, ‘ஏன் எம்பேரை எழுதினே’ என்று கேட்கிறாள். திட்டுகிறாள். அழுகிறாள். கெட்டபேர் வந்துவிட்டதே என்று கைபிசைந்து தவிக்கிறாள்.

1535188871.jpg

யார் கேட்டும் பேசாத வெள்ளைச்சாமி, வைதேகிக்காகப் பேசுகிறான். ‘நான் எழுதினது உண்மைதான். ஆனா வைதேகின்னு உங்களை நினைச்சு எழுதலை’ என்கிறான். வெள்ளைச்சாமியின் ப்ளாஷ்பேக் விரிகிறது.

வெள்ளைச்சாமியின் மாமன் மகள். அவள் பெயரும் வைதேகி. மாமனே கதியெனச் சுற்றிச் சுற்றி வருகிறாள். ஆனால் விருப்பம் இருந்தாலும், பிரியம் உண்டுதான் என்றாலும், அவளை நோகடித்துக்கொண்டே இருக்கிறான். சீண்டிக்கொண்டே ரசிக்கிறான். ஒருகட்டத்தில், தன் அம்மாவின் அண்ணன் மாப்பிள்ளை கேட்டு வர, மன்னிக்கணும். நான் வைதேகியைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என்கிறான். ஆனாலும் வைதேகியிடம் கடைசியாய் ஒரு விளையாடல். அந்த விளையாட்டுதான் வினையாகிப் போகிறது. விஷம் குடித்து, செத்துப்போகிறாள். துடித்துப் போகிறான். துவண்டுபோகிறான். சொத்துசுகம், வீடு வாசல் என சகலத்தையும் விட்டுவிட்டு, எங்கோ புறப்படுகிறான். இந்த ஊருக்கு வருகிறான். ‘ஒரு டம்ளர் தண்ணி இல்லாததால என் வைதேகி இறந்துபோனா. அதனாலதான் இந்த ஊருக்கே தண்ணி கொண்டாந்து கொடுத்துட்டிருக்கேன்’ என்று சொல்ல, பிளாஷ்பேக் முடிகிறது.

அதைக் கேட்டு இந்த வைதேகி, நட்டுவனாரின் மகள் வைதேகி, விதவை வைதேகி அழுகிறாள். ‘ஒரு சொட்டுத் தண்ணி இல்லாததால, உன் வைதேகியை நீ காப்பத்தமுடியல. ஆத்துல தண்ணி அதிகம் இருந்ததால, என் வாழ்க்கை இப்படி ஆயிருச்சு’ என்று ப்ளாஷ்பேக் சொல்கிறாள்.

இந்த வைதேகி, தன் வீட்டில் குடியிருக்கும் ரேஷன் கடை இளைஞனின் செயல்களால், தன்னை விரும்புகிறானோ என ஆவல்கொள்கிறாள். ஒருகட்டத்தில் அப்படியான ஆசையை வளர்த்துக்கொள்கிறாள். ஆனால் அவன், வைதேகியை அழைத்து ‘நானும் செங்கமலமும் காதலிக்கிறோம்’ என்று சொல்ல, இடிந்து போகிறாள். உடைந்த போன அப்பா இறந்தேபோகிறார். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை ராமசாமிக்கு விஷயம் தெரிய, தங்கையைப் பூட்டிவைக்கிறான். அவள் எப்படியோ செத்துப்போவேன் என தகவல் தருகிறாள். அவர்களைச் சேர்த்துவைக்க வெள்ளைச்சாமியை நாடுகிறாள். வெள்ளைச்சாமியின் துணையுடன் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்களா, அவளின் அண்ணனையும் ஆட்களையும் வெள்ளைச்சாமி என்ன செய்தான், வைதேகியின் நிலை என்ன என்பதை தெள்ளிய திரைக்கதையில் வடித்துத் தந்ததுதான் வைதேகி காத்திருந்தாள்.

வெள்ளைச்சாமியாக விஜயகாந்த். வைதேகியாக ரேவதி. இன்னொரு வைதேகியாக பரிமளம். வெள்ளிக்கிழமை ராமசாமியாக ராதாரவி. நட்டுவனாரும் வைதேகியும் அப்பாவுமாக டி.எஸ்.ராகவேந்தர். தைத்துப் போடப்பட்ட அழுக்கு உடையும் பரட்டைத் தலையும் தாடியுமாக விஜயகாந்த். அநேகமாக, மிக கனமான, கேரக்டர் ரோல் செய்தது இதுவே முதல்படமாக இருக்கும் அவருக்கு!

விதவைப் பெண் ரேவதி. அப்படியொரு சோகப்பொருத்தம் அவர் முகத்துக்கு உண்டு. அதைக் கொண்டு கேரக்டரை மனதில் நிறுத்தியிருப்பார். ராதாரவியின் மேனரிஸமும் நடிப்பும் அசத்தல். ஆனாலும் ஒரு ரவுடி, தங்கையைப் பூட்டிவைக்கிறார். ஆனால் அந்தப் பயலை பெரிதாக ஒண்ணுமே செய்யலியே என்று அப்போது யோசிக்கத் தோன்றவில்லை. இப்போது கேட்கத்தோன்றுகிறது.

படத்தில் ஆங்காங்கே ஆல் இன் ஆல் அழகுராஜா வருகிறார். அவர்தான் கவுண்டமணி என்பது, சொல்லாமலேயே தெரிந்திருக்கும். எப்படி? இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அத்தனை ஃபேமஸாயிற்றே!

1535188931.jpg

கவுண்டமணியும் செந்திலும் அடிக்கும் லூட்டி, மறக்கவே முடியாது. தனியே இருக்கும்போது யோசித்தாலே போதும்... களுக்கென்று சிரித்துவிடுவோம். ‘கோழி குருடா இருந்தா என்னடா. குழம்பு ருசியா இருக்காங்கறதுதான் முக்கியம்’ என்ற வசனம் ஏக பாப்புலர். ‘பொய் சொல்லாதீங்கண்ணே. இது எப்படி எரியும்ணே?’ என்று உடைத்துவிட, இருண்டுபோயிருக்கும் கவுண்டமணியிடம், ‘ஏங்க... இங்கே ஆல் இன் ஆல் அழகுராஜாங்கறது யாரு? பொண்ணுக்கு சாயந்திரம் சீரு வைக்கணும். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு வாடகைக்கு வேணும்’ என்று கேட்க... ‘ஏங்க... பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா. இந்த தீப்பந்தம்கீப்பந்தம்...’ என்று செய்வதும் சொல்வதும் கவுண்டரின் நக்கல்நையாண்டி. அந்த பெட்ரோமாக்ஸ் விளக்கேதான் வேணுமா? இன்றைக்கும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

விஜயகாந்த் நடிப்பு பிரமாதம். சோகமும் சரி, சண்டையும் சரி... இரண்டிலுமே மனிதர் பாய்ச்சல் காட்டியிருப்பார். கோகிலாவின் பெயர்தான் என்று நினைத்து, கோகிலாவின் பாட்டி பெயரான புஷ்பாவை, புஷ்பாபுஷ்பா என்று கூப்பிடுவதும் ‘எம் புருசன் என்னை புஷ்ஷு புஷ்ஷுன்னு செல்லமாகக் கூப்பிடுவாரு’ என்று மீனாட்சிப்பாட்டி சொல்லுவதும் செம ஹிட்டு.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கம். அவர் படமென்றால் லைட்டான கதை, வெயிட்டான திரைக்கதை, சிரிக்கவைக்கும் காட்சிகள், செண்டிமெண்ட் சீன்கள், இயற்கை எழில் ஏரியாக்கள், இசைக்கு முக்கியத்துவம் என கலந்துகட்டி இருக்கும். இதுவும் அப்படித்தான்!

அப்போது திரைக்கு முன்னே வராவிட்டாலும் இப்போது பார்க்கும் போது, அவரின் குரல் மட்டும் பல இடங்களில் நடித்திருக்கிறது.

‘ஆறு பாட்டு தரேன். ஒரு கதை ரெடிபண்ணிக்கோ’ என்று இளையராஜா, ஆர்.சுந்தர்ராஜனை அழைத்துச் சொன்னதாகவும் அதுவே இந்த வைதேகி காத்திருந்தாள் படம் என்றும் சொல்லுவார்கள். ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ, மேகம் கருக்கையிலே, அழகு மலராட, காத்திருந்து காத்திருந்து... என ஒவ்வொரு பாட்டு திரையில் வரும்போதும் கைத்தட்டினார்கள் ரசிகர்கள். அதுதான் இளையராஜா. அதுதான் அவரின் இசை. அதுதான் அவரின் கணக்கு. இன்றைக்கும் இரவுகளில் பாடல் கேட்போரின் பட்டியலுக்குள், இந்தப் பாடல்களில் ஏதேனும் இரண்டுபாடல்களாவது பதிவேற்றிவைத்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ரசிகர்கள். ஜெயச்சந்திரனின் குரல் மயக்கிப்போடும்.

டி.எஸ்.ராகவேந்தரின் முதல் படம் இது. கவுண்டமணி, செந்தில், கோவைசரளாவின் கூட்டணிப்படங்களிலும் இது முதலாவதாக இருக்கலாம்.

தூயவன் தயாரித்திருப்ப, பஞ்சு அருணாசலமும் படத்தயாரிப்பில் ஏதோ உதவியிருக்கிறார் போல! வழக்கம்போலவே, ஆர்.சுந்தர்ராஜனின் இந்தப் படத்துக்கும் ராஜராஜன் ஒளிப்பதிவு. அத்தனை குளுமை.

இது 1984ன் ஸ்பெஷல் படம். படம் தவிர்த்த இன்னொரு ஸ்பெஷல். அது விஜயகாந்துக்கான ஸ்பெஷல். ஆமாம்... 1984ம் ஆண்டில், விஜயகாந்த் மொத்தம் 18 படங்களில் நடித்தார்.

ஜனவரி1, குடும்பம், இது எங்க பூமி, சத்தியம் நீயே, வைதேகி காத்திருந்தாள், வீட்டுக்கு ஒரு கண்ணகி, சபாஷ், மாமன்மச்சான், வெள்ளைப்புறா ஒன்று, நல்லநாள், குழந்தை யேசு, நூறாவது நாள், வெற்றி, மெட்ராஸ் வாத்தியார், தீர்ப்பு என் கையில், மதுரைசூரன் என்பது முதலான 18 படங்கள் நடித்தார் விஜயகாந்த். இந்த சாதனையை இதுவரை எந்த நடிகரும் நிகழ்த்தியதில்லை. இதில் பல படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் திருப்தியைக் கொடுத்தன.

பாடல்களால், பட டைட்டில் தெரிந்திருக்கும் இந்தத் தலைமுறையினருக்கு. படத்தையும் பார்த்துவிட்டால், வைதேகியையும் பிடித்துவிடும், ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு பாடலைப் போலவே!

https://www.kamadenu.in/news/cinema/5171-vaidheki-kaathirundhal-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • தாக்குதல் பற்றி இந்திய புலனாய்வு விடுத்த எச்சரிக்கையை சிறி லங்கா பாதுகாப்பு துறையும் நல்ல கற்பனை என்று தான் நினைத்து இருக்க வேண்டும்.அல்லாவிட்டால் எச்சரிக்கை ஆவது செய்து இருப்பார்கள். 
    • வெள்ளவத்தை சவோய் முன்னாள் 10வது குண்டு  அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசீலித்த போலீசார், அதனை சோதித்தபோது, சீட்டுக்கு அடியில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பத்திரமாக மீட்டு சென்று வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். அது முடியாததால் வெடிகுண்டை வெடிக்க வைத்தனர். முன்னெச்சரிக்கையோடு, பாதுகாப்பாக இதை செய்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது, மூன்றாவது நாளில் கண்டுபிடிக்கப் பட்ட  10வது வெடிகுண்டு ஆகும். இது மக்களிடேயே பெரும் பயத்தினை அதிகரித்துள்ளது. இலங்கையில் மக்கள் கூடும், இன்னும் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  
    • உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஏப்ரல் 24 புதன்கிழமை, மு.ப. 02:28 Comments - 0 சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளை மக்கள் முடிப்பதற்கு முன்னரேயே, நாடு, பேரிழப்பைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது.    தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என்று உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள், கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை இலக்கு வைத்து, தீவிரவாதிகள் நடத்தியிருக்கின்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், நாட்டு மக்களைப் பெரும் சோகத்துக்குள்ளும், சந்தேகப் பீதிக்குள்ளும் தள்ளியிருக்கின்றது.   தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 320ஐத் தாண்டிவிட்டது; காயமடைந்த 500க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அத்தோடு, தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களில் இருந்த பலரும் காணாமற்போயிருக்கிறார்கள். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.   பேரிழப்புகளுக்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியிருக்கின்ற அரசாங்கம், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் தவிர்த்திருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் கூறுகின்றது.    பேரிழப்பொன்று நிகழ்வதற்கு முன்னரேயே, அதனைத் தவிர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும், அதைத் தவறவிட்டுவிட்டு, அரசாங்கம் தற்போது கோரும் ‘மன்னிப்பு’ உண்மையிலேயே அதற்கான தார்மீகத்தைக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகின்றது.    அரசாங்கத்துக்கும் அரச தலைவருக்கும் இடையிலான முரண்பாடு என்பது, தேசிய பாதுகாப்பை ஒரு கிள்ளுக்கீரை விடயமாகக் கையாள வைத்துவிட்டதோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகின்றது.   ஒக்டோபர் 26 சதிப்புரட்சிக் காலத்துக்குப் பின்னர், தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு பிரதமரோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரோ அழைக்கப்படவில்லை என்கிற விடயம் தற்போதுதான் வெளிவந்திருக்கின்றது.    ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான தன்முனைப்பு (ஈகோ) பிரச்சினையில், நாட்டின் பாதுகாப்பு விலையாக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாதம், நான்காம் திகதியே சர்வதேசப் புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக, அறிவுறுத்தி இருக்கின்றன. அது தொடர்பில் இலங்கைப் புலனாய்வுத் தரப்பும், அறிக்கையொன்றைத் தேசியப் பாதுகாப்புத் தரப்புகளிடம் கையளித்திருக்கின்றது.    ஆனால், அந்த அறிக்கை குறித்தோ, அதிலுள்ள விடயங்கள் குறித்தோ, நாட்டின் பிரதமருக்கே தெரிந்திருக்கவில்லை என்பது, எவ்வளவு மோசமான அரசியல்- தலைமைத்துவ கலாசாரம், நாட்டில் நீடிக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இவ்வாறான அறமற்ற அரசியலே, மக்களைத் தொடர்ந்தும் பலிக்களங்களில் நிறுத்துகின்றது.   இன்னொரு பக்கம், தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு, பொலிஸ்மா அதிபரே அழைக்கப்படுவதில்லை என்ற விடயம் மேலெழுகின்றது. தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் அரசாங்கத்தின் இரண்டாவது தலைவர