• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • எம்.சி.சி ஒப்பந்தத்தை இன்று கைசாத்திட்டாலும்  தான் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவிக்கும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அந்த ஒப்பந்தத்தால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவில் கடன் சலுகை கோரியதால் வேறு  எந்த நாடும் இலங்கைக்கு சிறிய வட்டிக்கு கடன் தர முன்வராத நிலைமை காணப்படுவதாகவும்,  இதுவரை இலங்கையிலுள்ள எந்தவொரு நிதி அமைச்சரும் வெ ளிநாடுகளிடம் அவ்வாறதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.  அதேபோல் மறுதிசையில்,   அரச ஊழியர்கள் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயால் நல்லாட்சி அரசாங்கம் அதிகரித்ததென தெரிவித்த அவர்,  கடந்த ஜனாதிபதி தேர்தலில் வரிசையாகச் சென்று புதிய அரசாங்கத்துக்கு வாக்களித்த ஆசிரியர்களை அடித்து விரட்டும் நிலைக்கும் அரசாங்கம் ஆளாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.  அதேபோல் நல்லாட்சி அரசாங்கம் ,எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் அவசியமாக நிதியை ஒதுக்கீடு செய்தே இடைக்கால கணக்கு அறிக்கையை சமர்பித்திருந்தாகவும் தெரிவித்த அவர், புதிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் வகையிலான வரிச்சலுகைகளை அறிவித்து அரசாங்கத்திடம் நிதி இல்லை என்கிறது என்றும் சாடினார்.  எவ்வாறாயினும் பொய்களை மாத்திரமே கூறி ஆட்சியை கைபற்றிய அரசாங்கத்துக்கு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலைமையில் வரும் அடக்குமுறையே பிரயோகிக்கபடுமென தெரிவித்த அவர், முதல் தடவையாக ராஜபக்‌ஷர்கள் பிறந்த பூமியிலேயே உள்நாட்டு கிரிக்கெட்  ரசிகர்களும் அடித்து விரப்பட்டபடுகிறார்கள் என்றார்.  அத்தோடு, இன்று வீதிப்போக்குவரத்தை சீர்படுத்தும் நோக்கில் அதனை முப்டையினரை களமிறக்கியுள்ளதாக தெரிவித்த அவர், எம்.சி.சி ஒப்பந்தம் மூலம் நாட்டின் போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே கைசாத்திடப்பட இருந்தாகவும் தெரிவித்தார்.  எவ்வாறாயினும், எம்.சி.சி ஒப்பந்தத்தை கைசாத்திட்டால் இன்றும் தான் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவித்த அவர், அதனால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார்.  http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/எம-ச-சயல-மததர-அளவககட-பதபப-வரத/150-246200
    • 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.  ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 2002ம் ஆண்டுமுதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு படைக்கு உதவும் வகையில் 14 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது வீரர்களை வாபஸ் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். இதையடுத்து, தலிபான்கள்- அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா - தலிபான்கள் இடையே கத்தார் நாட்டின் தோஹாவில் இன்று மாலை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த உடன்படிக்கை மூலம், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா கலந்து கொள்கிறார். முன்னதாக காபூல் சென்ற அவர், ஆப்கனில் அமைதி மற்றும் ஸ்திரமான நிலை ஏற்படுவதற்கு இந்தியாவின் பரிபூரண ஆதரவை தெரிவித்தார். ஆப்கன் வெளியுறவு அமைச்சரை சந்தித்த அவர், அமெரிக்கா-தலிபான் இடையிலான அமைதி உடன்படிக்கை குறித்த இந்தியாவின் கண்ணோட்டம், ஆப்கானிஸ்தான் வளர்ச்சி பெற இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கம் ஏற்படுவதில் முக்கிய பங்காற்றி வரும் இந்தியா, அந்த நாட்டில் பல்வேறு மறுசீரமைப்புத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆப்கனின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தையே இந்தியா தான் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/102023/அமெரிக்கா--தாலிபான்-இடையேஇன்று-அமைதி-ஒப்பந்தம்கையெழுத்து...-முடிவுக்குவரும்-18-ஆண்டு-போர்
    • நமது காலண்டரில் ஒவ்வொரு ஆண்டின் 12 மாதங்களில் 30,31 நாட்கள் உள்ளன. ஆனால் இரண்டாம் மாதமாக வரும் பிப்ரவரியில் 28 நாட்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் மாதமாக 29 நாட்களும் வருகிறது. அதற்கான வரலாற்றை பார்ப்போம். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள், 12 மாதங்கள், 52 வாரங்கள் (ஒன்றரை நாள்களும் ) லீப் வருடத்திற்கு 366 நாட்கள் 12 மாதங்கள் 52 வாரங்கள் ( இரண்டு நாட்களும் ) உள்ளன. பழங்கால கிரிகோரிய நாட்காட்டி படி லீப் ஆண்டு என்பது நான்கில் பெருக்கங்களாக வருவபை. 2016,2020, 2024 போன்றவை லீப் ஆண்டாக இருந்து வருகின்றன. இதற்கு கிரிகோரிய ஆண்டின் நெட்டாண்டு என பெயரிட்டுள்ளனர். ஆனால் நான்கின் பெருக்கங்களாக “00”என முடியும் ஆண்டு லீப் ஆண்டாக இருப்பதில்லை. உதாரணத்திற்க்கு  “00” என முடியும் 2000 ஆம் ஆண்டு 29 நாட்கள் கொண்ட லீப் வருடமாக இருந்துள்ளது. ஆனால் 1900 மற்றும் 2100 ஆம் ஆண்டுகள் லீப் ஆண்டாக இருப்பதில்லை. நாம் நம் வாழ்நாளில் அனைத்து லீப் ஆண்டுகளை கடந்திருப்போம் ஆனால் எதிர்காலத்தினர் அவர்கள் வாழ்நாளில் ஒரு லீப் ஆண்டை தவிர்ப்பார்கள். பூமி சூரியனை சுற்றும் கால அவகாசம் 365 நாட்கள் 6 மணி நேரமாகும். இதை வைத்து தான் நமது நாள்காட்டி படி நாம் வாழ்ந்து வருகிறோம். சூரியனின் சுற்றுபாதையை அடைய பூமி எடுத்து கொள்ளும் கால அவகாசத்தை விட நமது நாள்காட்டியின் ஆக மொத்த நாட்களில் 6 மணி நேரங்கள் குறைவாக உள்ளது. இதனை சரிசெய்ய கிமு. 42 ஆம் நூற்றாண்டின் ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசர் கிரிகோரிய நாட்காட்டி விதிபடி மூன்று வருடங்களிலிருந்து கால் நாட்களை எடுத்து நான்காம் வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்களாக சேர்த்து லீப் ஆண்டாக கொண்டு வந்தார். உலகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற இந்த கிரிகோரிய நாள்காட்டி மற்ற நாடுகளுக்கு முரணாகவே அமைந்துள்ளது. கிரிகோரிய நாள்காட்டியில் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு அடுத்த நாள் அக்டோபர் 15 ஆம் தேதி இருந்துள்ளது. மேலும் ஸ்வீடன் நாட்டின் காலண்டரில் பிப்ரவரி 30 ம் தேதி இருந்துள்ளது. பின்னர் அது முதலே கைவிடபட்டு அழிந்துள்ளது. கிரிகோரிய நாள்காட்டி முன் பயன்படுத்திய உமேனியா நாள்காட்டி படி வருடத்திற்கு 10 மாதங்கள் மட்டுமே இருந்து வந்துள்ளன. அதன் பின் ஜூலியஸ் சீசரால் அறிமுகபடுத்தபட்ட கிரிகோரிய காலண்டரில் ஆவர் பெயரிலேயே ஜூலை என்று ஏழாவது மாதமாகவும், அவருக்கு பின் வந்த அரசர் அகஸ்டஸ் சீசர் பெயரில் எட்டாவது மாதமாக ஆகஸ்ட் சேர்க்கபட்டு தொடர்ந்து இந்த இரண்டு மாதத்திற்கும் மட்டுமே 31 நாட்களை வைத்துள்ளனர். பூமி சூரியனை சுற்றி வர எடுத்து கொள்ளும் நேரம் 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடம் , 46 வினாடியாகும். ஆனால் நம் சூரிய நாள்காட்டி படி 365 நாட்கள் உள்ள நிலையில் மீதமுள்ள 5 மணி நேரம் 48 நிமிடம் , 46 வினாடியே தவிர்க்க இயலாது மூன்று ஆண்டுகளிலிருந்து இந்த மணி நேரங்களை சேர்த்து நான்காவது ஆண்டான லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளாக சேர்க்கபட்டுள்ளது. இது போன்று நான்கு ஆண்டிற்கு ஒரு முறை ஒரு நாள் சேர்க்கபடுவதால் 100 வருடங்களில் 18 மணி நேரம் 43 வினாடி சேர்க்கபடுகிறது. ஆதலால் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு லீப் வருடம் கணக்கில் இருப்பதில்லை. இது மாதிரியான பல எதிர் சீர்த்திருத்தங்கள் கொண்ட இந்த கிரிக்கோ நாட்காட்டியை அறிஞர்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/102069/லீப்-நாள்-பிப்ரவரி-29--ன்கிரிகோரியன்-நாட்காட்டிபின்னணி
    • அமெரிக்காவில் நியூயார்க் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்டு தோறும் 2 ஆயிரத்து 300 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இத்தகைய ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தடை உத்தரவால், வாடிக்கையாளர்கள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை தாங்களே கொண்டு வர வணிக வளாகங்கள் ஊக்குவித்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஓரிகான் மாநிலங்கள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/102070/நியூயார்க்-முழுவதும்-நாளைமுதல்-பிளாஸ்டிக்-பைகள்பயன்படுத்த-தடை