Sign in to follow this  
நவீனன்

சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம்

Recommended Posts

சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம்

 

(நமது நிருபர்)

சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திரு கோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல் லூரியின் அபாயா பிரச்சினைக்கு நியாய மான தீர்வைக்காண உதவுமாறுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்தக் கடிதத்தில் அமைச்சர்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர்கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின்’ அபாயா’ விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமூகமாகத்தீர்த்துவைக் கமூத்தஅரசியல்வாதியான நீங்கள் உதவவேண்டும். இந்தசம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் -முஸ்லிம் உறவைசீர்குலைக்க முற்படும்சக்திகள் குறித்துநாம் விழிப்பாயிருக்கவேண்டியதேவைஎழுந்துள்ளது.

சிங்கள, தமிழ், முஸ்லிம்ஆகியமூவின மும்பரஸ்பரபுரிந்துணர்வுடனும், நிம்மதியாகவும்வாழும் திருமலைமாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, இனங்களுக்கிடையிலான உறவைசீர்குலைக்கும் துரதிஷ்ட நிலைக்கே வழிவகுக்கும்.

யுத்தம் முடிந்துசமாதானம்ஏற்பட்டபின்னர்தமிழ் -முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும்தற்போதையகாலகட்டத்தில், இவ்வாறான சிறியசம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டுஇருஇனங்களுக்கிடை யிலானசச்சரவாக, அதுமாறுவதற்குநாங்கள்அனுமதிக்கமுடியாது.

திருமலைமாவட்டமுஸ்லிம்களுடன்நீண்டகாலமாகநல்லுறவுடனும்,அந்நியோன்னியமாகவும்வாழும்உங்களைப்போன்றமூத்ததலைவர்களுக்குமுஸ்லிம்களின்சமய, கலாச்சார,பண்பாட்டுவிழுமியங்கள்நன்குதெரியும். அதுமட்டுமன்றிநான்உட்படநான்சார்ந்தசமூகமும்உங்களைஒருநீதியான, நேர்மையானஅரசியல்தலைவராகவேகருதிவருகின்றோம். அநியாயங்களுக்குநீங்கள்ஒருபோதுமே துணைபோனவர்அல்ல. அதேபோன்றுஇனியும்அவ்வாறுநீங்கள்அநீதியானசெயற்பாடுகளுக்குஇடமளிக்கமாட்டீர்கள்என்றநம்பிக்கையிலேயேஇந்தக்கடிதத்தைஎழுதுகின்றேன்.இந்தப்பிரச்சினையில் அவசரமாகநீங்கள் தலையிட்டு,சமரசத்தீர்வொன்றைக்காணவேண்டுமெனநாம்விரும்புகின்றோம்.

முஸ்லிம்களின்கலாச்சாரஉடையானதுஇன்று,நேற்றுதிடீரென்றுவந்த ஒன்றல்ல என்பதை,முஸ்லிம்களுடன் நெருங்கிப்பழகும்நீங்கள் நன்கறிவீர்கள். தமிழர்களும் முஸ்லிம்களும்ஒரேமொழிபேசும்சிறுபான்மைச்சமூகமாகும். கடந்தகாலங்களில்இரண்டுசமூகங்களுக்கிடையிலானசிற்சிலபிரச்சினைகளைபூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில்குளிர்காய பல்வேறுதீய சக்திகள் செயற்பட்டன. அதேபோன்றுமீண்டும்தமிழ் -முஸ்லிம்உறவைசீர்குலைத்து ஆதாயம்தேடசிலதீயசக்திகள் மீண்டும் முற்பட்டு வருகின்றன.

எனவேஇனியும்இரண்டுசமூகங்களும் ஒருவரோடுஒருவர்புரிந்துவாழவும், ஒருவரைஒருவர்மதித்துவாழவும்சிறந்தஅடித்தளம்கட்டியெழுப்பப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

அந்தவகையில்,தற்போதுமீளஉருவாகிவரும்ஒற்றுமையையும், இனசௌஜன்யத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்குஇவ்வாறானசிறியசம்பவங்கள்கால்கோளாகஅமைந்துவிடக்கூடாது.

எனவே,திருமலைமாவட்டத்தின்மூத்தஅரசியல்வாதியாகவும், தமிழர்களின்தலைவராகவும்அனைத்துசமூகங்களினாலும்பெரிதும்மதிக்கப்படுபவரானநீங்கள், திருமலைமாவட்டதமிழ், முஸ்லிம்அரசியல்வாதிகள், சமூகத்தலைவர்கள், இந்தவிடயத்தில்சம்பந்தப்பட்டோர் மற்றும் கல்விசார் ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து, சமரசப்பேச்சுவார்த்தையின்மூலம்இந்தப்பிரச்சினைக்குசுமூகமான, நியாயமானதீர்வைஏற்படுத்துமாறுநான்அன்பாய்வேண்டுகின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-28#page-1

Share this post


Link to post
Share on other sites

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிறார்களா.....?

சிறீலங்காவில் எந்த ஒரு பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு பிரச்சனை என்றால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலைவர்கள் உடனே தலையிடுவார்கள்.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள்...... ? பேப்பர் படிக்கத்தான் லாயக்கு.

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, MEERA said:

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிறார்களா.....?

சிறீலங்காவில் எந்த ஒரு பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு பிரச்சனை என்றால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலைவர்கள் உடனே தலையிடுவார்கள்.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள்...... ? பேப்பர் படிக்கத்தான் லாயக்கு.

ஏன் என்றால் அப்படி தலையிடா விட்டால் அடுத்த முறை தேர்தலில் வாக்கு கேக்க முடியாது, ஆனால் எங்கட அரசியல்வாதிகளுக்கு  எப்பவுமே இருக்கிறது தேசியமும் அரசியல் தீர்வும்

Share this post


Link to post
Share on other sites
 •  
 • ஹபாயா தொடர்பில் கவனமாகப் பேசவும்- சம்பந்தன்!!
 
 

ஹபாயா தொடர்பில் கவனமாகப் பேசவும்- சம்பந்தன்!!

 

“திரு­கோ­ண­மலை சிறி சண்­முகா இந்து மக­ளிர் கல்­லூ­ரிக்­கென உல­கம் ஏற்­றுக்­கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மர­பு­க­ளுக்கு ஏற்ப கரு­மங்­கள் நடக்க வேண்­டும். அவற்றை மீறா­மல் பேச்சு நடத்­தப்­பட்டு உரிய முடி­வு­கள்  எடுக்­கப்­பட வேண்­டும்.”

இவ்­வாறு எதிர்க்­கட்­சித்  தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும் திரு­கோ­ண­ மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

குறித்த கல்­லூ­ரி­யில் முஸ்­லிம் ஆசி­ரி­யை­மார் ‘ஹபாயா’ அணி­வது தொடர்­பில் எழுந்­துள்ள சர்ச்­சை­கள் குறித்து கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்ட அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

“திரு­கோ­ண­மலை சிறி சண்­முகா இந்து மக­ளிர் பாட­சாலை சுமார் 150 வருட பாரம்­ப­ரிய வர­லா­றைக் கொண்­டது. அந்த நாள்­க­ளில் திரு­கோ­ண­ம­லை­யில் உள்ள இந்து மக­ளி­ருக்கு ஒரு பாட­சாலை தேவை­யென சைவ இந்­துப்  பெரி­யார்­க­ளும் நலன் விரும்­பி­க­ளும் இணைந்து ஆரம்­பிக்­கப்­பட்ட தனி­யார் பாட­சாலை இது.

எனவே, அதற்­கென உள்ள சம்­பி­ர­தா­யங்­கள் மதிக்­கப்­ப­ட­வேண்­டும் எனப் பெற்­றோ­ரும் பாட­சாலை சமூ­க­மும் விரும்­பு­கின்­றது. அந்­தப் பாட­சா­லைக்­கென உல­கத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு பாரம்­ப­ரி­யம் மர­பு­க­ளுக்கு ஏற்ப செயற்­பட வேண்­டும். இந்த விட­யங்­கள் பேசப்­பட்டு நிதா­ன­மான முடி­வு­கள் எடுக்­கப்­பட வேண்­டும். எத்­த­னையோ சகாப்­தங்­க­ளாக இருக்­கும் நடை­மு­றையை திடீ­ரென மாற்­றி­விட முடி­யாது. எனவே, பேசி சில விட­யங்­க­ளுக்­குத் தீர்வை நாம் காண வேண்­டும்” – என்­றார்.

http://newuthayan.com/story/88907.html

Share this post


Link to post
Share on other sites
’முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே பிரச்சினைக்குத் தீர்வு’
 
 

"திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 குறித்த கல்லூயிரில் ஏற்பட்டுள்ள ஆசிரிய ஆடை  தொடர்பான சர்ச்சை குறித்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சம்பந்தனுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அந்தக் கடிதத்தில்,  "2400 மாணவிகள் கல்வி பயிலும் இக்கல்லூரியில் 120க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளும் 110 கத்தோலிக்க, கிறிஸ்தவ மாணவிகளும் பயில்கின்றனர்.

இது ஒரு தேசிய பாடசாலையாக உள்ளமையால் இங்கு எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் கல்வி கற்கவும் கல்விபோதிக்கவும் எத்தகைய தடையும் இல்லை.  ஆயினும், கல்லூரியில் பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசாரமரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டு என்பது இந்தக் கல்லூரி சமூகத்தின் விருப்பமாகும். 

முஸ்லிம் ஆசிரியைகள் ஏற்கனவே இந்தக் கல்லூரிக்குச் சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்துவந்து சேவையாற்றியது போல மேலும் தொடர்வதை இக்கல்லூரி சமூகம் எவ்விதத்திலும் ஆட்சேபிக்கமாட்டாது. ஆசிரியைகள் கல்லூரிக்கு வருகின்றபோது மட்டும் ஆசிரியைகளுக்கான உடைபற்றிய தேசியக்  கொள்கைகளின் அடிப்படையிலும் இக்கல்லூரி ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்குவிதிகள் அடிப்படையிலும் செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமையும் எனநான் நினைக்கின்றேன். 

இவ்விடயத்தில் எதிர் எதிரான இன, மத ரீதியான ஆர்ப்பாட்டங்களைச் சமயசார்பு அமைப்புக்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல என்பதே எனது நிலைப்பாடு." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/முஸ்லிம்-ஆசிரியைகளும்-சேலை-அணிவதே-பிரச்சினைக்குத்-தீர்வு/175-215121

Share this post


Link to post
Share on other sites

மேலே உள்ள விஷயம்தான் உண்மை. தற்போது அந்த ஆசிரியர்களுக்கு வேறு பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம்  வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கல்வி அமைச்சால் தீர்வு வரும்வரை, ஆனால் தீர்வு முன்னர்  சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்துவந்து சேவையாற்றியது போல இருந்தால் எதுவித பிரச்சனைகளும் இல்லை மாறாக இருக்குமாயின் போராட்டம் நாடாத்தி தீர்வை பெற வேண்டியதுதான்! அது எமது உரிமை!! அது சின்ன விஷயம் என்று கண்டுகொள்ளாவிட்டால் பெரும் விருச்சமா பின்னர் வந்து நிற்கும் அதனால்தான் முளையிலேயே கிள்ளுவதற்க்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம்!!!

Edited by புலிக்குரல்

Share this post


Link to post
Share on other sites

முந்தி இருந்த இரண்டு முஸ்லிலிம் ஆசிரியர்கள் ஒழுங்காய் சேலை கட்டித் தான் பாடசாலைக்கு வந்ததாகவும் மூன்றாவதாக வந்த ஆசிரியரால் தான் பிரச்சனை தொடங்கப்பட்ட்தாக  தெரிகிறது....ஒரு திடடததோட தான் யாரோ பிளான் பண்ணி அனுப்பி இருக்கிறார்கள்.... விடக் கூடாது?
 

Share this post


Link to post
Share on other sites

அப்ப, முஸ்லீம் பள்ளிக்கூடம் ஒன்றில், துன்னூறு, சந்தனம் வைச்சுக்கொண்டு தமிழ் வாத்தியார் போலாமோ...

இந்துக் கல்லூரில வேலை வேண்டும். இந்த உரிமையும் வேணும் எண்டால்?

உங்க லண்டனில.... பாடசாலைகளில் போர்க் சொசேஜ் பாடசாலை உணவு மெனுவில் இருக்கக் கூடாது என்று போராட்டம். ஓசில சாப்பாடும் வேணும். அடுத்தவரின் உணவும் இருக்கப் படாது...

https://www.telegraph.co.uk/news/shopping-and-consumer-news/11409835/Schools-stop-serving-pork-for-religious-reasons.html

https://www.theguardian.com/education/2017/sep/28/bradford-school-ban-sausage-rolls-pork-pies-backlash

கடைசில, ஹரோ கவுன்சில் மேயர் சுரேஷ் என்ற தமிழர், விடுத்த அறிக்கை எல்லா கவுன்சில் (33) களும் பயன்படுத்தின.

இந்த நாடு எமக்கு தங்க வசதி தந்திருக்கின்றது என்பதை நினைவில் கொண்டு, அவர்களது சிறார்களின் உணவு பழக்கத்தினை, அங்கு படிக்க செல்லும் ஓர், இரு முஸ்லீம் மாணவருக்காக மாத்தக் கோருவது நியாயமானது அல்ல என்று அவர் சொன்னார். 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ரதி said:

முந்தி இருந்த இரண்டு முஸ்லிலிம் ஆசிரியர்கள் ஒழுங்காய் சேலை கட்டித் தான் பாடசாலைக்கு வந்ததாகவும் மூன்றாவதாக வந்த ஆசிரியரால் தான் பிரச்சனை தொடங்கப்பட்ட்தாக  தெரிகிறது....ஒரு திடடததோட தான் யாரோ பிளான் பண்ணி அனுப்பி இருக்கிறார்கள்.... விடக் கூடாது?
 

ஓம் ஓம் விடகூடாது .................................

Share this post


Link to post
Share on other sites

அமைச்சர் ரிஷாத்­துக்கு எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் பதில் கடிதம்

dddd-b4a9a6f0f9de90cfc1560ecaf5bf67c34b11cd70.jpg

 

 (நமது நி­ருபர்)

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முக இந்­து­ ம­களிர் கல்­லூ­ரியில் கல்வி கற்­பிக்கும் ஆசி­ரி­யைகள் கல்­லூ­ரிக்­கு­ வ­ரு­கின்­ற­போ­து­ மட்டும் ஆசி­ரி­யை­க­ளுக்­கான உடை பற்­றி­ய ­தே­சியக் கொள்­கை­களின் அடிப்­ப­டை­யிலும் இக்­கல்­லூரி ஆசி­ரி­யை­க­ளுக்­கான உடை ஒழுங்­கு­வி­திகள் அடிப்­ப­டை­யிலும் செயற்­ப­டு­வதே தற்­போது ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்­கான தீர்­வா­க­அ­மையும் எனநான் நினைக்­கின்றேன் என்று எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.   

இந்தச் சிறு­பி­ரச்­சி­னையைப் பெரி­து­ப­டுத்­தி­மேலும் வள­ர­வி­டக்­கூ­டா­து­என்­ப­தே­எ­ன­து­நி­லைப்­பாடு. ஆகவே, இந்தப் பிரச்­சி­னை­யை­சம்­பந்­தப்­பட்­ட­அ­மைச்சும்,கல்வித் திணைக்­க­ளமும் குறித்­த­கல்­லூரிச் சமூ­கமும் அக்­கல்­லூ­ரியின் பெற்­றோரும் பழை­ய­மா­ண­வி­களும் சேர்ந்­து­கட்­டுப்­பா­டா­ன­ஒ­ழுங்­கு­மு­றையில் பேசி,கல்­லூ­ரியில் பின்­பற்­றப்­பட்­டு­வந்­த­உ­டை­ம­ர­பு­க­ளுக்­கு­ம­திப்­ப­ளித்து,எந்தச் சமூ­க­மா­யினும் புதி­ய­உ­டை­க­லா­சா­ரத்­தை­அ­றி­முகம் செய்­யாமல், இது­வ­ரை­கா­லமும் இருந்­து­வந்­த­து­போ­ல­தொ­டர்­வ­தே­பொ­ருத்­த­மா­க­அ­மையும் என்றும் அந்தக் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வாறு அனுப்­பப்­பட்­டுள்ள கடி­தத்தில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இந்த விடயம் தொடர்­பா­க­தாங்கள் எனக்­கு­ஒ­ரு­க­டி­தத்­தை­அ­னுப்­பி­யுள்­ள­தா­ன­செய்தி சில­தமிழ் பத்­தி­ரி­கை­களில் அதன் முழு­மை­யா­ன­உள்­ள­டக்­கத்­துடன் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்­ட­க­டிதம் இது­வ­ரை­எ­ன­து­பார்­வைக்குக் கிடைக்­க­வில்­லை­யா­யினும்,பத்­தி­ரி­கை­களில் வெளி­வந்­த­செய்­தி­களில் முழு விப­ரமும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மையால் அது­தொ­டர்­பா­ன­எ­ன­து­நி­லைப்­பாட்­டினைத் தங்­க­ளுக்குத் தெரி­விப்­ப­து­பொ­ருத்­த­மெ­ன­நி­னைக்­கின்றேன்.

என­து­த­லை­மைத்­துவம் பற்­றியும் மக்கள் மத்­தி­யிலும் தங்­க­ளுக்கும் என்­மீ­து­உள்­ள­ம­திப்புப் பற்­றியும் தாங்கள் சிறப்­பாகக் குறிப்­பிட்­ட­மைக்­கா­க­எ­ன­து­நன்­றியைத் தெரி­வித்­துக்­கொண்­டு­கு­றிப்­பிட்­ட­வி­டயம் தொடர்­பா­க­எ­ன­து­நி­லைப்­பாட்­டை­அ­றியத் தரு­கின்றேன்.

தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்­களைச் சேர்ந்த தமிழ்­பேசும் மக்கள் தொடர்­பா­க­எ­ம­து­த­லைவர் தந்­தை­செல்­வ­நா­யகம் பின்­பற்­றி­யதும்,அவரைத் தொடர்ந்­து­த­லைவர் அ.அமிர்­த­லிங்கம் பின்­பற்­றி­ய­து­மான,“நாம் தமிழ்­பேசும் மக்­கள்”­என்­ற­கொள்­கை­யை­நானும் தொடர்ந்­து­பின்­பற்­றி­வ­ரு­கின்றேன் என்­ப­தை­மக்­களும் நீங்­களும் நன்­கு­அ­றி­வீர்கள்.

வடக்குக் கிழக்குப் பிராந்­தி­யங்­களில் தமிழ்­பேசும் மக்­க­ளு­டைய நிலங்கள் அவர்­க­ளு­டை­ய­க­லா­சார,பாரம்­ப­ரி­யங்கள் பாது­காத்துப் பேணப்­ப­ட­வேண்டும் என்­ற­அ­டிப்­ப­டையில் பண்­டா­ர­நா­யக்­கா–­செல்­வ­நா­யகம் ஆகி­யோரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­ஒப்­பந்­தத்­திலும் பின்பு டட்­லி­சே­ன­நா­யக்­கா–­செல்­வ­நா­யகம் ஆகி­யோ­ருக்­கி­டையில் செய்­யப்­பட்­ட­ஒப்­பந்­தத்­தி­லும்­கு­றிப்­பி­டப்­பட்­ட­அ­தே­கொள்­கை­யின்­ப­டி­யே­எ­ன­து­அ­ர­சியற் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தையும் இங்கு குறிப்­பி­ட­வி­ரும்­பு­கின்றேன். அந்­த­வ­கையில் தமிழ் - முஸ்லிம் ஒற்­று­மை­யை­ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­க­கு­றிப்­பா­க­எ­ன­து­தொ­கு­தி­யா­ன­தி­ரு­கோ­ண­ம­லை­யிலும் பொது­வாக இந்­நாட்­டிலும் நானும் நான் சார்ந்­த­அ­ர­சியல் கட்­சி­களும் எம்மால் முடிந்­த­ள­வு­பங்­க­ளிப்பைச் செய்­து­வ­ரு­கின்றோம்.

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முக இந்­து­ம­களிர் கல்­லூரி 95 ஆண்­டு­க­ளுக்­கு­முன்னர் இந்­து­ம­களிர் கல்­வி­கற்­ப­தற்­காக இந்­து­ச­மயப் பெண்­ம­ணி­யா­ன­தங்­கம்­மா­சண்­மு­கம்­பிள்­ளை­என்­ற­கொ­டை­யா­ளி­யினால் தன­து­சொந்தப் பணத்­திலும்,சொந்­த­நி­லத்­திலும் இந்து மக­ளிரின் கல்­வி­மேம்­பாட்­டுக்­கா­க­ஆ­ரம்­பிக்­கப்­பட்­டு­ந­டை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டு­வந்த ஒரு பாட­சா­லை­யாகும். 1960களுக்குப் பின்னர் இந்தப் பாட­சா­லையை அர­சாங்கம் பொறுப்­பேற்­ப­தற்­கு­முன்னர் இங்கு இந்­து­ம­களிர் மாத்­திரம் உயர்­கல்­வி­கற்­று­வந்­த­தோடு, இந்­து­க­லா­சா­ர­பா­ரம்­ப­ரி­யங்­களும் பின்­பற்­றப்­பட்­டு­வந்­த­வ­ர­லா­று­உண்டு. தனியார் பாட­சா­லை­களைப் பொறுப்­பேற்கும் அர­சாங்­கத்தின் திட்­டத்தின் கீழ் கிறிஸ்­த­வ­பா­தி­ரி­மார்கள் நடாத்­தி­ய­பி­ர­ப­ல­பா­ட­சா­லை­களும் அதே­போன்று இந்­து­மற்றும் ஏனைய சமூ­க­நி­று­வ­னங்­களால் பரா­ம­ரிக்­கப்­பட்­டு­வந்­த­பா­ட­சா­லை­களும் பொறுப்­பேற்­கப்­பட்­ட­போதும்,அவற்றின் பெயர்,கலா­சாரம்,கல்­வி­மு­றை­என்­ப­ன­மாற்­றங்­க­ளுக்­கு­உட்­ப­டாமல் தொடர்ந்­து­பே­ணப்­படும் என்­ற­அ­டிப்­ப­டை­யி­லே­யே­அ­வை­பொ­றுப்­பேற்­கப்­பட்­டன.

இந்­த­நி­லை­மை­யே­தொ­டர்ந்தும் அவ்­வா­றா­ன­அ­நே­க­பா­ட­சா­லை­களில் பேணப்­பட்­டு­வ­ரு­வதைத் தாங்­களும் அறி­வீர்கள். இதன் அடிப்­ப­டை­யி­லேயே திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முக இந்­து­ம­களிர் கல்­லூ­ரி­யிலும் அதன் ஆரம்­ப­கா­ல­ம­ர­புகள் பேணப்­பட்­டு­வ­ரு­வ­தோடு, இன்­று­தே­சியப் பாட­சா­லை­யா­க­அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டு­சி­றந்­த­உயர் பெறு­பே­று­களைப் பெறும் பாட­சா­லை­யாகச் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. அவ்­வா­று­செ­யற்­ப­டு­வ­தற்­கு­பெற்­றோர்கள்,நலன்­வி­ரும்­பிகள்,பழை­ய­மா­ண­விகள் மற்றும் சமய,சமூ­க­நி­று­வ­னங்கள் உத­வி­யா­கவும் அனு­ச­ர­ணை­யா­கவும் இருந்­து­வ­ரு­கின்­றன.

அண்­மையில் இந்தக் கல்­லூ­ரியில் நடந்­த­சம்­ப­வங்கள் தொடர்­பா­க­எ­ன­து­க­வ­னத்­துக்குத் தெரி­விக்­கப்­பட்­ட­தன்­படி,கடந்­த­நான்­கு­ஆண்­டு­க­ளாக முஸ்லிம் ஆசி­ரி­யைகள் மூன்­றுபேர் இக் கல்­லூ­ரியில் சேவைக்­காக இணைக்­கப்­பட்டுத் தம­து­க­ட­மை­களைச் செய்­து­வந்­த­போ­து­அ­வர்கள் இக்­கல்­லூ­ரியின் உடை­நி­ய­தி­க­ளுக்­கு­அ­மை­வா­க­சே­லை­அ­ணிந்­தே­கல்­லூ­ரிக்­கு­வந்­து­கொண்­டி­ருந்­தனர். அவர்கள் முழு­மை­யாக இக் கல்­லூ­ரியின் மரபு,கல்­லூரி ஒழுக்­க­வி­தி­மு­றைகள் மற்றும் கல்­வி­வி­ழு­மி­யங்­க­ளுக்­கு­அ­மை­வா­க­க­டந்­த­நான்­கு­ஆண்­டு­க­ளா­க­எவ்­வி­த­வே­று­பாடும் இன்றிச் செயற்­பட்­டுள்­ளனர்.

அவர்கள் தொடர்­பாக இந்தக் கல்­லூரி சமூகம் எத்­த­கை­ய­எ­திர்ப்­பையும் வெளிக்­காட்­ட­வில்லை. ஆயினும், இந்­த­ஆண்டு ஜன­வ­ரி­மாதம் முதல்­ஒரு முஸ்­லிம்­ஆ­சி­ரியை இட­மாற்­றம்­பெற்­று­வந்­த­போது முஸ்லிம் பெண்கள் அணியும் ‘அபா­யா’­உ­டையில் கல்­லூ­ரிக்­கு­வந்­துள்ளார். அவ்­வே­ளையில் கல்­லூரி அதிபர் அந்­த­ஆ­சி­ரி­யைக்­கு­அந்தக் கல்­லூரி ஆசி­ரி­யை­களின் உடை­தொ­டர்­பா­ன­ம­ர­பு­க­ளையும்,அப்­பா­ட­சா­லை­ஒ­ழுக்­க­வி­தி­க­ளையும் எடுத்­துக்­கூறி ஏனைய ஆசி­ரி­யை­களைப் போன்­று­சே­லை­அ­ணிந்­து­வ­ரு­மா­று­ஆ­லோ­ச­னை­வ­ழங்­கி­யுள்ளார்.

குறித்­த­ஆ­சி­ரி­யையும் தன­து­உ­டையில் மாற்றம் செய்­து­சே­லை­அ­ணிந்­து­வ­ரு­வ­தற்­கு­சி­றி­து­கா­ல­அ­வ­காசம் கோரி­யி­ருந்­ததால் அதற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வாறு இருந்­த­வே­ளையில், இந்­த­மாதம் 22ந் திகதி,ஏற்­கெ­ன­வே­சே­லை­அ­ணிந்­து­கல்­லூ­ரிக்­கு­வந்­து­கொண்­டி­ருந்த மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யை­களும் கண­வர்­மா­ருடன் கல்­லூ­ரிக்­கு­வந்­து­தாமும் இனிமேல் ‘அபா­யா’­அ­ணிந்­து­வ­ரப்­போ­வ­தா­கவும்,அது­த­ம­து­உ­ரி­மை­என்­ற­ரீ­தி­யிலும் அச்­சு­றுத்தும் பாணியில் அதி­ப­ருக்குத் தெரி­வித்­து­விட்­டு­அ­டுத்­தநாள் ‘அபா­யா’­உ­டை­அ­ணிந்­து­வந்­துள்­ளனர்.

இதனைக் கண்­ணுற்ற மாண­வி­களும் பெற்­றோர்­களும் பழை­ய­மா­ண­வி­களும் மற்றும் பாட­சா­லையின் நலன்­வி­ரும்­பி­களும் முஸ்லிம் ஆசி­ரி­யை­களின் இந்தத் திடீ­ரெ­ன­ஏற்­பட்­ட­உ­டை­மாற்றம் தொடர்­பா­க­த­ம­து­ஆட்­சே­ப­னையைத் தெரி­வித்­து­எ­திர்ப்­பு­ஆர்ப்­பாட்டம் ஒன்­றை­மேற்­கொண்­டனர். இதனால் ஏற்­பட்­ட­அ­மை­தி­யின்­மையைத் தொடர்ந்­து­மே­ல­திகக் கல்விப் பணிப்­பாளர் தலை­மையில் அதிபர் மற்றும் சம்­பந்­தப்­பட்­ட­த­ரப்­பினர் பேசி­ஒ­ரு­தற்­கா­லி­க­ஏற்­பா­டு­செய்­யப்­பட்­டு­நி­லை­மை­கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தா­க­அ­றி­கின்றேன்.

2400 மாண­விகள் கல்­வி­ப­யிலும் இக்­கல்­லூ­ரியில் கிட்­டத்­தட்ட 120 க்குமேற்­பட்ட முஸ்லிம் மாண­வி­களும் 110 கத்­தோ­லிக்க,கிறிஸ்­த­வ­மா­ண­வி­களும் இப்­போ­து­கல்­வி­ப­யில்­கின்­றனர்.

இது­ஒ­ரு­தே­சி­ய­பா­ட­சா­லை­யா­க­உள்­ள­மையால் இங்­கு­எந்த இனத்­தை­அல்­ல­து­ம­தத்தைச் சேர்ந்­த­வர்­களும் கல்­வி­கற்­கவும் கல்­வி­போ­திக்­கவும் எத்­த­கை­ய­த­டையும் இல்லை. ஆயினும்,கல்­லூ­ரியில் பேணப்­பட்­டு­வந்­த­ஒ­ழுக்கக் கட்­டுப்­பா­டுகள்,கலா­சா­ர­ம­ர­புகள்,மாண­விகள்,ஆசி­ரி­யைகள் அணி­கின்­ற­உ­டை­தொ­டர்­பா­ன­ஒ­ழுங்­கு­மு­றைகள் அவ்­வா­றே­பே­ணப்­ப­ட­வேண்­டு­என்­பது இந்தக் கல்­லூரி சமூ­கத்தின் விருப்­ப­மாகும்.

முஸ்லிம் ஆசி­ரி­யைகள் ஏற்­கெ­னவே இந்தக் கல்­லூ­ரிக்குச் சேலை­அ­ணிந்து,தங்­க­ள­து­பா­ரம்­ப­ரி­ய­மா­ன­முக்­காடு (பர்தா) அணிந்­து­வந்­து­சே­வை­யாற்­றி­ய­து­போ­ல­மேலும் தொடர்­வதை இக்­கல்­லூரி சமூகம் எவ்­வி­தத்­திலும் ஆட்­சே­பிக்­க­மாட்­டாது. அது­போல இக்­கல்­லூ­ரியில் கல்­வி­கற்­பிக்கும் ஆசி­ரி­யைகள் கல்­லூ­ரிக்­கு­வெ­ளி­யேதாம் விரும்­பி­ய­வா­று­உ­டை­அ­ணிந்­து­கொள்­வதும் அவர்­க­ள­து­வி­ருப்­ப­மாகும். ஆயினும்,அவர்கள் கல்­லூ­ரிக்­கு­வ­ரு­கின்­ற­போ­து­மட்டும் ஆசி­ரி­யை­க­ளுக்­கா­ன­உ­டை­பற்­றி­ய­தே­சியக் கொள்­கை­களின் அடிப்­ப­டை­யிலும் இக்­கல்­லூரி ஆசி­ரி­யை­க­ளுக்­கா­ன­உ­டை­ஒ­ழுங்­கு­வி­திகள் அடிப்­ப­டை­யிலும் செயற்­ப­டு­வதே இந்தப் பிரச்­சி­னைக்­கா­ன­தீர்­வா­க­அ­மையும் எனநான் நினைக்­கின்றேன். இவ்­வி­ட­யத்தில் எதிர் எதி­ரான இன,மத­ரீ­தி­யா­ன­ஆர்ப்­பாட்­டங்­களைச் சம­ய­சார்­பு­அ­மைப்­புக்கள் செய்­வ­து­வி­ரும்­பத்­தக்­க­தல்­ல­என்­ப­தே­எ­ன­து­நி­லைப்­பாடு.

இனங்­க­ளுக்­கு­ரி­ய­க­லா­சா­ர­உ­டை­களில் அண்மைக் காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுவருவதுதவிர்க்கமுடியாதது. இலங்கையில் முஸ்லிம் பெண்கள் ‘அபாயா’அணிவதும் அவ்வாறானஅண்மைக்காலஒருமாற்றமாகும். இத்தகையமாற்றங்கள் எல்லாச் சமூகங்களுக்கும் எல்லா இனங்களுக்கும் பொதுவானதும் அவர்களுக்குரியஉரிமையுமாகும். இவ்வாறுஆடைக் கலாசாரத்தில்அதிகமாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னமும் ஆசிரியபயிற்சிக் கல்லூரிகள் மற்றும் ஏனைய மதப் பாடசாலைகளில் போதிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளும் சேலைஅணிவதேதற்போதும் நடைமுறையில் உள்ளது. அதுபோலவிசேடசந்தர்ப்பங்களில் அல்லது இடங்களில்,உதாரணமாகபாடசாலைகள்,புனிதத்தலங்கள்,மதவழிபாட்டிடங்கள் மற்றும் சிலஅலுவலகங்களில் உடைதொடர்பானகட்டுப்பாடுகள் பேணப்படுவதுஅந்தந்தநிறுவனங்களுக்குரியதனித்துவமாகும். அதில் மாற்றங்களைச் செய்யமுனைந்தால் சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாதுபோகும். நீங்கள் குறிப்பிட்டதுபோலகடந்தகாலங்களில் எமதுஇரு சமூகங்களுக்கு இடையிலானசிற்சிலபிரச்சினைகளைப் பூதாகரமாக்கிபிளவுகளைஏற்படுத்திஅவற்றில் குளிர்காயபல்வேறுதீயசக்திகள் செயற்பட்டுவந்துள்ளன

என்பதைநானும் ஏற்றுக் கொள்ளுகின்றேன். அத்தகையதீயசெயற்பாடுகளுக்குநீங்களோ,நானோமுக்கியத்துவம் அளிக்கக் கூடாதென்பதேஎனதுவிரும்பம்.

எனவே, இந்தச் சிறுபிரச்சினையைப் பெரிதுபடுத்திமேலும் வளரவிடக்கூடாதுஎன்பதேஎனதுநிலைப்பாடு. ஆகவே, இந்தப் பிரச்சினையைசம்பந்தப்பட்டஅமைச்சும்,கல்வித் திணைக்களமும் குறித்தகல்லூரிச் சமூகமும் அக்கல்லூரியின் பெற்றோரும் பழையமாணவிகளும் சேர்ந்துகட்டுப்பாடானஒழுங்குமுறையில் பேசி,கல்லூரியில் பின்பற்றப்பட்டுவந்தஉடைமரபுகளுக்குமதிப்பளித்து,எந்தச் சமூகமாயினும் புதியஉடைகலாசாரத்தைஅறிமுகம் செய்யாமல், இதுவரைகாலமும் இருந்துவந்ததுபோலதொடர்வதேபொருத்தமாகஅமையும் என்பதுஎனதுஅபிப்பிராயமாகும். அதற்காகதங்களின் ஒத்துழைப்பையும் தங்களதுசமூகத்தினதுஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-30#page-1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • புதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்? ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது குழப்பான நிலை ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் ஐக்கிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், சஜித்திற்கு பதிலாக தாம் அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக ஐக்கிய தேசியின் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியுள்ள சஜித் பிரேமதாஸவை புதிய பிரதமராக நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இன்று மாலை அல்லது நாளை மாலை சஜித் பிரேமதாஸ பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறிப்பாக ஹரீன் பெணான்டோ, அஜித் பீ பெரேரா, சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறானதொரு சூழலில் இலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் குழப்ப நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது கொண்ட அதிருப்தி காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ரணிலை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   http://athavannews.com/புதிய-பிரதமராக-இன்று-பதவ/  
  • சாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் ! தேசிய போட்டி விளையாட்டு நிகழ்வுகளில் பங்குகொண்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். தேசிய ரீதியான மல்யுத்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் தொடர்ச்சியான சாதனைகளை பதிவுசெய்துவருகின்றனர். இதன்கீழ் கடந்த 17,18ஆம் திகதிகளில் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற பாடசாலை மட்ட மற்றும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் கிழக்கு மாகாண ரீதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு வீரர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் மாணவன் சிவநாதன் அனோஜன் 20வயது 74 கிலோவுக்கான பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ளார். அதேபோன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடை சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக வீரர் எஸ். அபிநாத் 92கிலோவுக்கான பிரிவில் பங்குகொண்டு 03ஆம் இடத்தினைப்பெற்றுள்ளார். இவர்களுக்கான பயிற்சிகளை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ப.திருச்செல்வம் வழங்கியிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமைசேர்த்த இந்த மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று வீரர்களை வரவேற்ற மாநகர முதல்வர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான சாதணைகளை மல்யுத்த வீரர்கள் தேசிய ரீதியில் மேற்கொண்டுவரும் நிலையில் வீரர்கள் பயிற்சிகளை செய்வதற்கு தனியான இடம் இல்லாத நிலை தொடர்பில் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார். இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினரும் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக முகாமையாளருமான தி.சிறிஸ்கந்தராஜா,மாநகரசபை உறுப்பினர்களான து.மதன்,ரகுநாதன்,வி.பூபாலராஜா, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபர் சண்டேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.   http://www.battinaatham.net/description.php?art=21280
  • புகழ்பெற்ற லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்பாணத்தை சேர்ந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் Aug 21, 20190     பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரித்தானியாவின் பிரபல்யம் மிக்க பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கான துணை வேந்தராக பதவி வகிக்கும் பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி இந்த பொறுப்பை ஏற்கிறார். பேராசிரியர் கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகி அங்கு தனது BA (Hons ) பட்டப்படிப்பையும் பின்னர் PHD பட்டத்தையும் பெற்றுள்ளார். பேராசிரியர் நிஷான் கனகராஜா 2006-2009 ஆம் ஆண்டுவரை பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்துக்கான ஆராய்ச்சி பணிப்பாளராகவும், 2010- 2011 வரை கணனி விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும், 2011- 2014 வரை பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கான துணை வேந்தராக நியமனம் பெற்றார். Signal Processing என்ற ஆய்வில் பேராசிரியர் நிஷான் கனகராஜா நிபுணத்துவம் பெற்றுள்ளார். இது தொடர்பில் இவர் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் பல பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 1966 இல் சுண்டிக்குளியில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தந்தை கனகராஜா யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் தாய் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் இருந்தவர்கள். உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி லெஸ்டர் பல்கலைக்கழகம் 167 ஆம் இடத்தில் உள்ளது. பிரித்தானியாவில் 25 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென் ஜோன்ஸ் கல்லூரியில் 1985 ஆம் ஆண்டின் உயர்தரப் பிரிவில் கற்ற பேராசிரியர் றமா திருநாமச்சந்திரன் பிரித்தானியாவின் Canterbury Christ Church University இல் துணைவேந்தராக உள்ளார் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.   http://www.samakalam.com/செய்திகள்/புகழ்பெற்ற-லெஸ்ரர்-பல்கல/
  • ஆம், Three இன் mobile home  broadband, மிகவும் உபயோகமானது. வாகனத்தில் boot இற்குள்ளோ அல்லது ஆசனகளுக்கு கேலேயோ வைத்து, மின் இணைப்பு கொடுத்தால், வாகனத்தில் broadband.     
  • 10 வரு­டங்­களில் ஸ்ரீலங்­க­னுக்கு 24000 கோடி ரூபா நஷ்டம்  சுட்­டிக்­காட்­டு­கி­றது கோப்­குழு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறு­வ­னத்­துக்கு 2009 தொடக்கம் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை­யி­லான காலப்­ப­கு­திக்­கான மொத்த நஷ்டம் 24000 கோடி ரூபா என்றும் இதற்கு மேல­தி­க­மாக அரசு வங்­கிகள்,இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் உள்­ளிட்ட அரச நிறு­வ­னங்­க­ளுக்கு 14600 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறு­வனம்  கட­னாக செலுத்த வேண்டி உள்­ள­தெ­னவும் அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.  அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)வின் தலைவர் சுனில் ஹந்­துன்­நெத்­தி­யினால் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை கம்­பெ­னியின் விமா­னங்­களை மீள் தொகு­திப்­ப­டுத்­து­தலும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட A 350-900 ரக 8 விமா­னங்­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கையை முடி­வு­றுத்தல் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யி­லேயே இவ்­வி­பரம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.  தாபனம் சார் முகா­மைத்­துவ பல­வீ­னங்­க­ளினால் மட்­டு­மன்றி அர­சியல் பலம் பொருந்­தி­ய­வர்­க­ளினால் புரி­யப்­பட்ட அர­சியல் தலை­யீ­டு­க­ளி­னா­லேயே ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்­பெனி பாரிய நஷ்­டத்தை சந்­தித்­துள்­ளது. ஆகவே  இத்­த­கைய நஷ்­டத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை சட்­டத்தின் முன் வர­வ­ழைத்து அவர்­க­ளுக்­கான  தண்­ட­னையை  வழங்க  உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)  இந்த விசா­ரணை அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.  அத்­துடன் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யின்றி முறை­யான செல­வுப்­ப­குப்­பாய்வு மேற்­கொள்­ளப்­ப­டாமல் 14 நவீன விமா­னங்கள் 8 வருட காலப்­ப­கு­திக்குள் விமா­னத்­தொ­கு­தியில் சேர்ப்­ப­தற்கு நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவம் மேற்­கொண்ட தீர்­மா­ன­மா­னது தமது அதி­கா­ரத்­தி­ணைக்­க­டந்து மேற்­கொண்­ட­தொரு தீர்மானமெனவும் குறித்த தீர்மானம் வெற்றியளிக்காமை தொடர்பில் உரிய அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) இந்த விசாரணை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.    https://www.virakesari.lk/article/63145