Jump to content

மதுரையில் தேர்த்திருவிழா..!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மதுரையில் சித்திரை திருவிழா

மதுரையில் சித்திரை திருவிழாவின் ஒரு அம்சமாக, மீனாட்சி அம்மன் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக தேர்த்திருவிழா நடைபெற்றது.. அதன் காணொளி..!

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வரும் திங்கட் கிழமை(30-04-2018) அழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் விழா நடைபெற உள்ளது..

 

alagar_ethirsevai_2018.jpg

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை Getty ImagesCopyright: Getty Images தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமுன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.இதனையடுத்து, சஷி வீரவன்ச தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணிகள் மூலம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை (30) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச, சில காலங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, அவரும் அவருடைய சகாக்களும், அரசாங்கத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/topics/cz74k7p3qw7t?ns_mchannel=social&ns_source=twitter&ns_campaign=bbc_live&ns_linkname=6290c7a84259031cb5a254a5%26இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை%262022-05-27T14%3A16%3A12.027Z&ns_fee=0&pinned_post_locator=urn:asset:b16f4de9-5392-4cff-b7c7-f0bce521bdd9&pinned_post_asset_id=6290c7a84259031cb5a254a5&pinned_post_type=share
  • ஐபிஎல் 2022: பெங்களூருவின் கனவு தகர்ந்தது... பட்லர் சதத்தால் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அஷ்ஃபாக் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,BCCI/IPL   படக்குறிப்பு, ஐபிஎல் 2022இல் பட்லரின் நான்காவது சதம் இது. ஐபிஎல்லில் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற ஆர்.சி.பியின் நீண்ட நாள் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஜாஸ் பட்லரின் அபாரமான ஆட்டத்தால் பெங்களூருவை வீழ்த்தி 2008க்கு பிறகு 2வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது குவாலிஃபயர் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் பெரும்பாலும் தோல்வியை தழுவி வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், இந்த முறை டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். பொறுப்பான ஆட்டம் - சாதித்த படிதர் விராட் கோலி 7 ரன்களில் ப்ரஷித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டுக்கு டூ பிளெசிஸ் உடன் ஜோடி சேர்ந்த ரஜத் படிதர் கடந்த ஆட்டத்தை போன்றே இந்த முறையும் நேர்த்தியாக ஆடினார். சிறப்பான ஷாட்களால் பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்ட படிதர், 40 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுமுனையில் டு பிளெசிஸ் 25, மேக்ஸ்வெல் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். படிதர் 42 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரிகள் விளாசி 58 ரன்களில் விடைபெற்றார். ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைத்திருக்கிறார் ரஜத் படிதர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் வெறும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார். அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து நடையை கட்ட பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தானின் பந்துவீச்சு தாக்குதல் பெங்களூருவின் ரன் குவிப்பை துல்லியமான பந்துவீச்சின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது ராஜஸ்தானின் பந்துவீச்சுப் படை. குறிப்பாக ராஜஸ்தான் பவுலர் பிரசித் கிருஷ்ணா விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹசரங்கா என முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அதே சமயம் மெக்காயும் தனது பங்குக்கு 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஏலம் போகாத வீரரின் அதிரடி ஆட்டம்: எலிமினேட்டரில் லக்னோவை வென்றது ஆர்.சி.பி தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" 158 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, முதல் ஓவரிலேயே 2 சிக்சர் 1 பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்து அதிரடியை தொடங்கியது. பவர் பிளே முடிவில் 67 ரன்கள் சேர்த்து போட்டியை தன் வசப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஜெய்ஸ்வால் 21, சஞ்சு சாம்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தாலும் களத்தில் தனது வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்தார் அதிரடி பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர். பட்லர் சதத்தால் தகர்கப்பட்ட ஆர்.சி.பியின் கனவு சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட பட்லர், 59 பந்துகளில் சதத்தையும் பதிவு செய்தார். நடப்பு தொடரில் இது அவருக்கு 4வது சதம். ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார் பட்லர். சதம் அடித்த கையோடு ஹர்ஷல் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை பட்லர் சிக்சருக்கு விளாச, ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 60 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கேப்டன் தோல்விக்கு பின்னர் பேசிய பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸ், "முதல் செஷன் டெஸ்ட் கிரிக்கெட்டை போன்று இருந்தது. உண்மையில் அதிகமான பவுன்ஸ் இருந்தது. 180 ரன்கள் எடுக்க நினைத்தோம் என்றார். ஆர்.சி.பிக்கு இது ஒரு சிறப்பான சீஸன். மிகவும் வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடாவிட்டாலும் ஆர்.சி.பி அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். எங்கு சென்று விளையாடினாலும் ஆர்.சி.பி.. ஆர்.சி.பி என்கிற முழக்கத்தை கேட்க முடிந்தது. மும்பை விளையாடியபோது கூட ஆர்.சி.பிக்கு ஆதரவாக ரசிகர்கள் முழக்கமிட்டது உணர்வுப்பூர்வமாக இருந்தது. எங்கள் ரசிகர்களுக்கு மிக்க நன்றி" எனக்கூறி விடைபெற்றார்.   பட மூலாதாரம்,@JOSBUTTLER   படக்குறிப்பு, ஜோஸ் பட்லர் பின்னர் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், டாஸ் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. உண்மையில் அது முக்கிய பங்கு வகித்தது. 2வது இன்னிங்சில் ஆடுகளம் மாறியிருந்தது. ஜாஸ் பட்லர் போன்றதொரு சிறந்த பேட்ஸ்மேன் கிடைப்பதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என மகிழ்ச்சியுடன் கூறினார். 14 ஆண்டுகளுக்கு பின்னர் இறுதிப்போட்டியில்... ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இது 2வது முறை.. 2008ல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து மறைந்த ஷேன் வார்ன் தலைமையில் கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதற்கு பின்னர் 2013, 15,18ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்று வரை வந்த ராஜஸ்தானுக்கு வெற்றி கைகூடவில்லை. இப்போது மீண்டும் சஞ்சு சாம்சன் தலைமையில் இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ள ராஜஸ்தான், பலம் வாய்ந்த குஜராத் டைடன்ஸை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. குவாலிஃபயரின் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான், குஜராத்திடம் தோல்வியை தழுவியது கவனிக்கத்தக்கது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து பலம் வாய்ந்த அணிகளாக வலம் வரும் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் இறுதி யுத்தம் ஞாயிற்றுக்கிழமை (மே 29) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிறது. கோப்பையை வெல்ல இரு அணிகளும் சம பலத்துடன் போராடும் என்பதால் ஆடுகளத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம். https://www.bbc.com/tamil/sport-61615366
  • 👉  https://www.facebook.com/100080995713213/videos/568659104929927 👈 நீண்ட நாளைக்குப் பின் கேட்ட... "டிங்கிரி சிவகுரு" பாணியிலான  நகைச்சுவை ஒலிப்பதிவு. 😂 அதில் ஒருவர்... மட்டக்களப்பு தமிழிலும், மற்றவர் யாழ்ப்பாண தமிழிலும் உரையாடுவது... ஒலிப்பதிவிற்கு அழகு சேர்க்கின்றது.  🤣
  • ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் குழுவை வழிநடத்துகிறாரா பிரசாந்தன்? May 27, 2022   மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டக்களப்பு பொலீஸ் தலைமயகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தது. குறித்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்ட பொலீஸ் அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் குறித்தும் அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த குறித்த குழுவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தான் வழிநடத்துகிறார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் தங்களது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் நேற்று முன்தினம் 25 திகதி குறித்த நபர்களுடன் நடாத்திய ஆலோசனை கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவர்களுக்கும் தங்களது கட்சிக்கும் தொடர்பில்லை என ஊடகவியலாளர்களிடம் பொய் உரைத்து விட்டு தற்போது அவர்களை அழைத்து கூட்டம் நடத்தும் பிரசாந்தன் தான் குறித்த குழுவை வழிநடத்துகிறார் என்பது ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது. இவர்கள் ஆளும் கட்சியின் பங்காளிகள் என்பதால் தான் இது வரைக்கும் இவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லையா? காவல்துறையினரை  நடவடிக்கை எடுக்க விடாமல் பிரசாந்தன் அழுத்தம் கொடுத்து வருகிறாரா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக மக்களைச் சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட 59 சமூக ஊடகக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் admins களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலீஸ்மா அதிபர் கூறியுள்ளார். ஆனால், பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையான் குழுவினர் முகநூலின் ஊடாக மேற்கொண்ட அவதூறு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உடனடி விசாரணை நடத்த பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கூறியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.   https://www.ilakku.org/is-prasanthan-leading-a-group-threatening-journalists/
  • நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு விசா வழங்கியது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்த உத்தரவிடப்பட்டு, பேர்த் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளது. Photograph: Stephanie Coombes இதனால், அவர்கள் முன்னர் தாம் வசித்து வந்த, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர்கள் பேர்த் நகருக்குள் மாத்திரம் வசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் இக்குடும்பத்துக்கு அவுஸ்திரேலிய விசா வழங்கப்பட்டுள்ளது. நடேஷ் முருகப்பன் குடும்பத்தினர் புகலிட அந்தஸ்து கோரும் வேளையில் அவர்கள் சட்டபூர்வமாக அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கு ஏற்ப தற்காலிக இணைப்பு விசாவை தான் வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசின் பொருளாளரும் பதில் உள்துறை அமைச்சருமான ஜிம் சால்மர்ஸ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அக்குடும்பத்தினருடன் நான் கலந்துரையாடினேன். அவர்கள் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு வாழ்த்தினேன் என ஜிம் சால்மர்ஸ் கூறினார். நடேஷ் எனும்  நடேசலிங்கம் முருகப்பன் 2012 ஆம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலிய சென்றவர். பிரியா 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்றவர். இவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் சந்தித்து  திருமணம் கொண்டவர்கள். அவுஸ்திரேலியாவின் குயின்லாந்த்தில் மாநிலத்திலுள்ள பிலோயலா நகரில் நான்கு ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு கோபிகா எனும் மகளும் 2017 ஆம் ஆண்டு தருணிகா எனும் மகளும் பிறந்தனர். 2018 மார்ச்சில் பிரியாவின் இணைப்பு விசா (பிரிட்ஜிங் விசா) காலாவதியாகிய நிலையில், நடேசலிங்கம், பிரியா ஆகியோரை அவுஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்தது. இத்தம்பதியினருடன் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு பிள்ளைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இக்குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கு எதிராக பிலோயலா நகர மக்கள் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கு எதிராக அகதிகள் தீர்ப்பாயம் மற்றும் கீழ் நீதிமன்றத்தில் எடுத்து முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இத்தீர்ப்புகளையடுத்து நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், மேன்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டதால் நாடு கடத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வந்தன. 2018 மார்ச் முதல் இக்குடும்பத்தினர் மெல்பேர்ன் நகரிலுள்ள குடியேற்றவாசிகளுக்கான தடுப்பு முகாமில் ஒன்றரை வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இக்குடும்பத்தினரின் நாடு கடத்தலுக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றமும் நிராகரித்தது. அதையடுத்து இக்குடும்பத்தினரை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை அவுஸ்திரேலிய அரசு தீவிரப்படுத்தியது. 2019 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி திகதி இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விசேட விமானமொன்றில் அவர்கள் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்டது. எனினும் இத்தம்பதியின் இரண்டாவது குழந்தை தருணிகா (Tharunicaa) சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவின்  அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து விமானம் அவுஸ்திரேலியாவின் வட பிராந்திய நரான டார்வினில் தரையிறங்கிய போது இக்குடும்பத்தினர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எனினும் அவர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர். தருணிகா சார்பான விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பெர்த் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தையுடன் தாயார் பிரியா மாத்திரம் பெர்த் செல்ல  அனுமதிக்கப்பட்டிருந்தார். தருணிக்காவின் தந்தை நடேசலிங்கமும் மூத்த சகோதரி கோபிகாவும் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தமது குடும்பத்தினரை ஒன்றிணைக்க உதவுமாறு பிரியா வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்பின் இக்குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பேர்த்தில் நகரில் தற்காலிகமாக வசிப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹோக் கடந்த வருடம்  ஜூன் மாதம்  அறிவித்தார். அண்மையில் நடந்த பொதுத் தேர்தலின்போது, தாம் வெற்றி பெற்றால், நடேஷ் – பிரியா குடும்பத்துக்கு அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கு அனுமதிப்பதாகவும் பிலோயெலா நகருக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப் போவதாகவும் தொழிற்கட்சி கூறியிருந்தது இருந்தது. இந்நிலையில் நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.     https://www.virakesari.lk/article/128316
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.