Archived

This topic is now archived and is closed to further replies.

ராசவன்னியன்

யாழுக்கு என்னாச்சுது..?

Recommended Posts

 

Picture1.png

 

ஏதோ மற்றங்கள் தெரிகிறதே..? ??

ஏகப்பட்ட முகக் குறிகள்.. பிரத்யேக படத்தின் பகுதியில் வண்ணக்கோலங்கள்..!

காலத்திற்கேற்ற மெருகூட்டல் மிக நன்று..

Share this post


Link to post
Share on other sites

எனக்கு பிரத்தியேக படத்தில் வண்ணக்க்கோலங்கள் ஒன்றும் தெரியவில்லையே. 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, கலைஞன் said:

எனக்கு பிரத்தியேக படத்தில் வண்ணக்க்கோலங்கள் ஒன்றும் தெரியவில்லையே. 

ஏதும் படமே இணைக்காத யாழ் உறவுகளின் விவரணையை பாருங்கள் புரியும்..

முன்பு வெறுமையாக இருந்தது.. தற்பொழுது வண்ணத்தின் கோலங்கள் உள்ளது.

இது யாழ்கள மென்பொருளின் அப்டேட்டாக(Updates) இருக்கலாம்..! :)

Share this post


Link to post
Share on other sites

பிரசர்  ஏறினால்.... போட, ஒரு குளிசையும் ? இருக்கு வன்னியன். ?
குத்து மதிப்பாக.... 1500 சிமைலிகள்✔️  இருக்கும் போல் உள்ளது.?

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • கடவுள் அவர்கள் பக்கம் | அச்சம் தரும் எதிர்காலம்       மியான்மாரின் பாதையில் இலங்கை அரசியல் அலசல்: சிவதாசன் ஜூன் 2ம் திகதி ஜனாதிபதி ராஜபக்சவினால் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட, கிழக்கு மாகாணத்துக்கான தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவப் பணிக்குழுவில் தமிழர்களோ, முஸ்லிம்களோ சேர்க்கப்படாதது அங்குள்ள சிறுபான்மை மக்களிடையே அச்சத்தைத் தோற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழ், முஸ்லிம் மக்களாக இருக்கும்போது ஜனாதிபதியின் இந் நடவடிக்கையின் பின்னால் பூரண இலங்கையையும் சிங்கள, பெளத்த நாடாக மாற்றும் கபட நோக்கம் இருக்கிறதா என அம்மக்கள் ஐயப்படுகிறார்கள். இந்த பணிக்குழுவில் சிங்கள புத்த பிக்குகள் அங்கம் வகிக்கும் அதே வேளை இந்து, இஸ்லாம் மதங்களிலிருந்து எவரும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அத்தோடு, இப் பணிக்குழுவின் நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனெரல் கமால் குணரத்னாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள்: வட-கிழக்கு மாகாண தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல்ல மேதானந்த தேரர், தாமன்கடுவ பீடாதிபதி பாணமுறே திலகவன்ஷ தேரர், பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் ஸெனாரத் பண்டார திசநாயக்கா, காணி ஆணையாளர் ஜெனெரல் சந்திர ஹேரத், நிலவளைவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சீ.பெரேரா, பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவா (களனிப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் கபில குணவர்த்தனா (பேராதெனிய பலகலைக்கழகம்), மேற்கு மாகாண பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் தேசபந்து தென்னக்கூன், கிழக்கு மாகாண காஅணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசநாயக்கா, டெரான ஊடக வலைய அதிபர் டிலித் ஜயவீர ஆகியவராவர். “இலங்கைபின் தொல்பொருளியல் பாரம்பரியத்தைக் காப்பது அரசின் கடமையாகும் என்பாதல் இப்பணிக்குழுவை நியமிக்கிறேன்” என இது தொடர்பாக கோதாபய ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். இப் பணிக்குழு கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் கண்டு அவற்றை உரிய திட்டத்தின் மூலம் பாதுகாத்து, தேவையானால் அவற்றை மேலும் விஸ்தரித்து கலாச்சார, பாரம்பரிய அடையாளங்களாக உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப் பணிக்குவின் தலைவராக கமால் குணரத்தனவும், ஜனாதிபதியின் செயலாரான ஜீவாந்தி சேனநாயக்கா செயலாளராகவும் இருப்பார்கள். இத்திட்டத்தின் எண்ணக்கருவுக்குப் பின்னால் மகாநாயக்கர்களை உள்ளடக்கிய புத்த ஆலோசனைக் கவுன்சில் இருக்கிறது. சிங்கள புத்த தேசிய இனத்தின் ஏக பிரதிநிதிகளாகக் காட்டி பாராளுமன்றத்தைக் கைப்பற்றும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்ச்சிநிரலின் பிரகாரமே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புச் செயலாளரான கமால் குணரத்னவைத் தலைவராகக் கொண்ட இப் பணிக்குழு தன் கடமைகளையும் இராணுவ அடக்குமுறைகளைப் பிரயோகித்து மேற்கொள்ளத் தயாரவிருக்கிறது என்பதே இதர சிறுபான்மை மக்களுக்கு இதனால் விடப்பட்டிருக்கும் செய்தியாகும்.   கிழக்கு மாகாணத்தில் தற்போது சுமார் 10 க்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம் தொல்பொருளியலாளர்கள் பணிபுரிந்துவரும் வேளையில் இவர்களில் ஒருவராவது இப் பணிக்குழுவில் இடம்பெறாதது சிங்கள பெளத்த மேலாண்மையை விஸதரிக்கும் நோக்கத்துடனேயே இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை, களனிப் பல்கலைக் கழக தொல்லியல் பேராசிரியர் ஜகத் வீரசிங்க போன்ற பல சிங்களப் புத்திஜீவிகளே ஒப்புக்கொள்கிறார்கள். மியான்மார் (பர்மா) மாதிரி பர்மாவுக்கும் இலங்கைக்கும் அரசியல், மத ரீதியான பல பொதுமைகள் உண்டு. இரண்டு நாடுகளிலும் பின்பற்றப்படும் தேரவாத பெளத்தம் அதன் சித்தாந்தத்தை நிலைநிறுத்த அரசியலைக் கருவியாகப் பாவித்து வருவது வரலாறு. இரண்டு நாடுகளிலும் காலனித்துவ காலத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த புத்த சங்கங்கள் மிகவும் ஆக்ரோஷமான மீளெழுச்சியை மேற்கொண்டன. பர்மாவில் 90% மானோரும், இலங்கையில் 70% மானோரும் பெளத்தர்கள். இரண்டு நாடுகளிலும் இரண்டு காரணிகள் பெளத்தத்தை முன்னிலைப்படுத்தத் துணைபுரிந்தன. முதலாவது, புத்த சங்கங்களிலிருந்து வந்த கடும் உள் அழுத்தம், இரண்டாவது, மதச் சிறுபான்மையினரிடமிருந்து வந்த வெளி அழுத்தம். இந்த இரண்டு நாடுகளின் பெளத்த சங்கங்களும் ஜனநாயகம் என்ற கருவியைத் தமது மேலாண்மையை நிலை நிறுத்த வெற்றிகரமாகப் பாவித்தன. யூ நூ, கோதாபய ராஜபக்ச யூ நூ | மியான்மாரின் பாதையில் இலங்கை சுதந்திர பர்மாவின் முதல் பிரதமர் யூ நூ வின் வருகையோடு பர்மாவில் புத்த சமயம் மீள்கட்டியெழுப்பப்பட்டது. காலனித்துவத்திலிருந்து விடுபட்ட கையோடு பெளத்த சங்கங்கள் மக்களின் உணர்வுகளைக் கிளறிவிட்டுத் தீவிர தேசியவாதியான யூ நூவைத் தமது தேவைகளுக்காகப் பாவித்தனர். காலனித்துவத்திலிருந்து விடுபட்ட போது இணக்க அரசியலை மேற்கொண்ட சிறுபான்மையினரால் இலங்கையின் பெளத்த சங்கங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் இருக்கவில்லை. பின்னர் தமிழ்த் தேசீயப் போராட்டம், இஸ்லாமிய பயங்கரவாதம் ஆகியன பெளத்த சங்கங்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருந்தாலும், அவர்களுக்கு யூ நூ போன்ற தேசியாவதி கிடைத்திருக்கவில்லை. மீட்பர் கோதாபய ராஜபக்சவின் வருகைக்காக அவர்கள் காத்திருக்க வேண்டி வந்தது. எப்படிக் காலனித்துவ காலத்தில் பின்தள்ளப்பட்டிருந்த பெளத்தத்தை யூ நூ மீளெளச் செய்தாரோ அதேபோல கோதாபயவும் சாதிப்பார் என இலங்கையின் பெளத்த தேசியவாதிகள் நம்புகின்றனர். பெளத்த சங்கங்களின் உள்ளழுத்தமும், சிறுபான்மையினரின் வெளி அழுத்தமும், யூ நூ போன்றொரு தேசியவாதியும் ஒருங்கு சேரக் கிடைத்திருக்கின்ற அருமையானதொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு சிறுபான்மையினரின் உரிமைப் போராட்டம் எப்போதும் தடையாக இருக்கிறது என்பது யூ நூவின் சித்தாந்தம். அதனால் நாட்டில் சிறுபான்மையினரை அவர் ஒடுக்கி வந்தார். அவருக்குப் பின்னர் வந்த இராணுவ அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களைப் பலவந்தமாக இடம் மாற்றி ஒரே நாடு, ஒரே தேசிய இனம் என்ற போர்வைக்குள் கொண்டுவர முயற்சித்து ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனாலும் புத்த சங்கங்களுக்கு, இராணுவ ஆட்சியினர் யூ நூ காலத்தில் போல ஆதரவு வழங்கவில்லை. ஓங் சான் சூ சி யின் ஜனநாயக நாடகத்துடன் பெளத்த சங்கங்கள் மீண்டும் ‘ஆட்சியைப்’ பிடித்தன. றொஹிங்யா சிறுபான்மையினர் தொடர்ந்தும் புற அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றமை அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.   முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசியம் அடக்கப்பட்டதன் பின்னர் தீவிரமற்றுப் போயிருந்த பெளத்த தேசிய பெரு நெருப்பை உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு மீண்டும் ஊதிப்பெருக்க வைத்தது. கோதாபய என்ற தேசியவாதி முடிசூடப்பட்டார். அடுத்த இலக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான பாராளுமன்றம். இஸ்லாமிய தீவிரவாதமும், தமிழ்த் தேசியவாதமும் அவர்களது எதிர்பார்புக்கு ஏற்றவாறு இல்லை. கோதாபயவும் இராணுவ, மகாசங்க தீவிரவாதிகளும் இந்த இரண்டையும் மீண்டும் ஊதிப்பெருக்க வைக்கப் பெரும் பிரயத்தனம் எடுக்கிறார்கள். சுமந்திரன் மீதான கிளேமோர்த் தாக்குதல் முயற்சி, ஹெயேஸ் ஹிஸ்புல்லாவின் கைது போன்ற பல இந்த வெளி அழுத்தத்தை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகள். இது தொடர்ந்துகொண்டே இருக்கப்போகிறது. பெளத்த சங்கங்களின் உள்ளழுத்தங்களுக்குத் தீனி போடுவது போன்றது தான் தற்போதைய கிழக்கு மாகாண தொல்லியல் பாரம்பரியக் காப்பு முயற்சிகள். அதைக் கிழக்கு மாகாணத்துக்கு மட்டும், அதுவும் புத்தசாசன / கலாச்சார அமைச்சுகளின் கீழல்லாது பாதுகாப்பு அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படுவது மீண்டும் ‘வெள்ளைவானை’ ச் சிறுபான்மையினரின் முன் ஓடிக்காட்டுவது போன்றது. இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இருண்டதாகவும் ஆபத்துள்ளதாகவும் இருக்கிறது. ஜனநாயக வழியிலோ அல்லது ஆயுதப்போராட்ட வழியிலோ தீர்வொன்று கிடைக்கும் என நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போலானது. சிங்கள பெளத்த தேசியவாதிகள் அதிர்ஷ்டசாலிகள். எல்லாளனின் பெருந்தன்மை, இந்திரா காந்தியின் கொலை, இரட்டைக் கோபுரத் தாக்குதல், ராஜிவ் காந்தி கொலை, ஆழிப்பேரலை, கருணாவின் பிரிவு, மாவிலாறு தண்ணீர் மறுப்பு, உயித்த ஞாயிறு குண்டுவெடிப்பு, சிறிசேனவின் பல்டி, கோதாபயவின் வருகை என்று இக்கட்டான தருணங்களில் அவர்களைக் ‘கடவுள்’ காப்பாற்றியிருக்கிறது. இவையெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நமது அரசியல்வாதிகள் இன்னும் தம்முள் பிடித்த குடுமிகளை விடாது இன விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல்கள் அண்மிக்கும்போது கொழும்பில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலோ அல்லது ஆயுதங்களுடன் ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ கைதுசெய்யப்பட்டாலோ, கடவுள் இன்னுமொரு தடவை அவர்களுக்கு உதவுகிறார் என்று நினைத்துக் கொள்ளவும். தந்தை செல்வா உயிருடன் இருந்தால் இன்னுமொரு தடவை அச் சொல்லைப் பாவிக்கமாட்டார் என நம்புகிறேன். https://marumoli.com/கடவுள்-அவர்கள்-பக்கம்-அச/?fbclid=IwAR3aQIygM83fjNPBqReQ_VDVZOWRuR-hsqWprRkItsUrSGzbzmwM21FkAWc
    • தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30,000த்தை கடந்தது ARUN SANKAR / Getty தமிழகத்தில் இன்று (ஜூன் 6) புதிதாக 1,458 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனாவால் இன்று 19 நபர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 251-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று இறந்த 19 நபர்களில் பெரும்பாலானவர்கள், நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று பாதிப்புக்கு உள்ளான 1,458 நபர்களில் 35 நபர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், சௌதி அரேபியா, ஐக்கிய ராஜ்ஜியம், கர்நாடகா, டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபர், கேரளா, குஜராத், பிஹார், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,993ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 1,146நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் 74 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 5, 76,643மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 16,002 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 633நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395 ஆக உயர்ந்துள்ளது.  இத்தாலியை முந்திய இந்தியா இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையாகக் கடந்த 24 மணி நேரத்தில் 9887 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 294 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236,657 ஆக உயர்ந்துள்ளது. 6642 பேர் இறந்துள்ளனர் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. Getty Images மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று உள்ளது. இந்த மாநிலங்களில் 4300க்கும் மேற்பட்ட தொற்றுகள் உள்ளன.  சண்டிகர், கோவா, மணிப்பூர், புதுச்சேரி, லடாக், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைந்த எண்ணிக்கையிலான தொற்று உள்ளது. இந்த பகுதிகளில் 1 முதல் 350 தொற்றுகள் உள்ளன. அதே போல ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், அசாம், கேரளா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தொற்று மிதமான எண்ணிக்கையில் உள்ளது. இந்த மாநிலங்களில் 352 முதல் 4300 வரை தொற்று எண்ணிக்கை உள்ளது. இந்திய அரசால் இதுவரை 45 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக நிலவரம் என்ன? ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 6-ம் இடத்தில் உள்ளது. Getty Images கிட்டதட்ட 19 லட்ச தொற்றுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகள் உள்ளன. இறப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை அமெரிக்காவில் 1 லட்சம் பேரும், பிரிட்டனில் 40 ஆயிரம் பேரும், பிரேசிலில் 34 ஆயிரம் பேரும், இத்தாலியில் 33 ஆயிரம் பேரும் இறந்துள்ளனர். அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை குறையாமல், ஒரே நிலையில் தொடர்வது மக்களை கவலையடைய வைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 922 பேர் இறந்துள்ளனர். 2 மில்லியன் தடுப்பூசி இந்தநிலையில் கோவிட் 19 வைரசைத் தடுக்க 2 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது என்றும், இதை அதிகளவிலான மக்களுக்கு செலுத்தி சோதிப்பதற்கு முன்பு விஞ்ஞானிகளின் அங்கீகாரத்தைப் பெறுவது முக்கியம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனாலும், இது எந்த மருந்து அல்லது எந்த நிறுவனம் தயாரித்துள்ள மருந்து என்பதை டிரம்ப் விளக்கவில்லை.  இது எப்போது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படும் என்பதற்கான காலவரையறையையும் அவர் கூறவில்லை. பொது இடங்களில் மாஸ்க் அணியுங்கள் கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க, பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. Getty Images சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளன. கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதை மாஸ்க் குறைக்கும் என்றும், மாஸ்க் அணிவதால் முழு பாதுகாப்புடன் இருப்பதாக மக்கள் உணர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் சிகையலங்கார, அழகு நிலையங்களை திறக்க அனுமதி மலேசியாவில் இன்று கோவிட்-19 நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மரண எண்ணிக்கை 117ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 பேருக்கு வைரஸ் தொற்றியதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,304ஆக அதிகரித்துள்ளது. இன்று 25 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து நோய் கண்டவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் அதிலிருந்து முழுமையாக மீண்டிருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் தற்போது அமலில் உள்ள நிபந்தனைகளுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் 9ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த ஆணை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் மொகிதின் யாசின் நாளை அறிவிக்க உள்ளார். Sopa IMAGES இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள சிகையலங்கார கடைகள், அழகு நிலையங்கள் 10ஆம் தேதி முதல் இயங்கலாம் என மலேசிய அரசு அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சேவை வழங்குவது வரவேற்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் பொது, காலை மற்றும் இரவு சந்தைகளும் இயங்கலாம் என தெரிவித்துள்ள அரசு, இதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றவில்லை எனில் கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது. சிங்கப்பூர் நிலவரம் கொரோனா வைரசுக்கு எதிராக உலகளவில் நடைபெற்று வரும் போரில் சிங்கப்பூரும் தனக்குரிய பங்களிப்பை அளித்து வருவதாக பிரதமர் லீ தெரிவித்துள்ளார். நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகளுக்கு சிங்கப்பூர் அரசு நிதி வழங்குவதாக அவர் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்துக்கு சிங்கப்பூர் சார்பில் பல்வேறு அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள், சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக சிங்கப்பூர் இதுவரை 18 மில்லியன் டாலர்கள் நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதும், பின்னர் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகமும் மிக முக்கியமானவை என்று தெரிவித்துள்ள பிரதமர் லீ, இதற்காக உலகளாவிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தியுள்ளார். சிங்கப்பூரில் இன்று புதிதாக மேலும் 344 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,527ஆக அதிகரித்துள்ளது.   https://www.bbc.com/tamil/india-52948124  
    • பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்: நிலைப்பாட்டை மாற்றிய உலக சுகாதார நிறுவனம் ARUN SANKAR / Getty கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் முன்பு கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது. தொற்றைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக மாஸ்க் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. ’’நோய்த்தொற்று பரவும் ஆபத்து உள்ள இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் துணி மாஸ்கை அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது’’ என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா வைரஸுக்கான தொழில்நுட்ப நிபுணர் டாக்டர் மரியா வென் கேர்கோவி. REUTERS மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவ மாஸ்க்கை அணிய வேண்டும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வைரஸ் பரவத்தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டதட்ட 4 லட்சம் பேர் இறந்துள்ளனர். ’’மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’’ என்கிறார் மரியா. அதே சமயம், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதை மாஸ்க் குறைக்கும் என்றும், மாஸ்க் அணிவதால் முழு பாதுகாப்புடன் இருப்பதாக மக்கள் உணர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘’மாஸ்க் மட்டுமே கோவிட் 19 வைரஸிடம் இருந்து உங்களை பாதுகாக்காது’’ என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ். கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்  கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்? கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?  முறையாக கை கழுவுதல் எப்படி? கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்  கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி? கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?    ’’மாஸ்க் அணிய மக்களை ஊக்குவிப்பது, அவர்களிடையே ஒரு போலியான பாதுகாப்பை உண்டாக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் நினைத்தனர். ஆனால், மாஸ்க் அணிவதால் தொற்று பரவுதல் குறையும் என்ற ஆராய்ச்சி முடிவை இப்போது அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது’’ என்கிறார் பிபிசி அறிவியல் பிரிவு செய்தியாளர் டேவிட் ஷுக்மென் தங்களுக்கு கொரோனா இருப்பதற்கான அறிகுறி தெரிவதற்கு முன்பே பலருக்கு அந்த தொற்றைப் பரப்பிவிடும் ஆபத்து அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ’’பொதுப்போக்குவரத்து, கடைகள், அகதிகள் முகாம்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சிரமம் என்பதால், தொற்று பரவால் தடுக்க துணியால் தயாரிக்கப்பட்ட மாஸ்கை அணிய உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது’’ என்கிறார் ஷுக்மென். 60 வயதைக் கடந்தவர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ மாஸ்க் அணிய வேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது என்கிறார் ஷுக்மென்.   https://www.bbc.com/tamil/global-52948564  
    • Black Lives Matter ஊர்வலங்களுக்கு சிட்னி, அவுஸ்திரேலியாவில் தடை         கொறோணாவைரஸ் தொற்று காரணம் சிட்னி, அவுஸ்திரேலியா: இந்த வார இறுதியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த Black Lives Matter ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு, கொறோணாவைரஸ் தொற்றைக் காரணம் காட்டி, சிட்னி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் திணைக்களம் இத் தடையைக் கோரியிருந்தது. ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலையையும், பல அவுஸ்திரேலிய சுதேசிகள் பொலிசாரின் கரங்களில் மரணமடைவதையும் கண்டிப்பதுடன், அமெரிக்காவில் நடைபெறும் ஆர்ப்பாட்டக்களுக்கு ஆதரவாகவும், பல்லாயிரக் கணக்கான மக்கள் இவார இறுதியில் கூடுவதற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள். இருப்பினும், இத் தடையையும் மீறித் தாம் தமது ஆர்ப்பாட்டங்களை நடத்தியே தீருவோம் என அவர்கள் சூளுரைத்துள்ளார்கள். அவுஸ்திரேலியாவில், ஏப்ரல் முதல், 7,200 கொறோணாவைரஸ் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தாலும், அரசு அதை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. கடந்த ஒரு வாரமாக நியூசவுத்வேல்ஸில் ஒரு தொற்றுக்களும் அறிவிக்கப்படவில்லை. “நோயை ஒழிப்பதற்கு ஒவ்வொருவரும் தம்மாலியன்ற அளவுக்கு தியாகங்களைச் செய்து ஒத்துழைத்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமைகளை விட உடல் நலம் மிக முக்கியமானது” என நீதிபதி டெஸ்மண்ட் ஃபாகன், இத் தீர்ப்பின்போது தெரிவித்தார். “இது எங்களது பூமி. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் எமது ஆர்ப்பாட்டத்தைஹ் செய்தேயாகுவோம்” எனக் கூறுகிறார் லட்டோநா டங்கே. அவரது மகன் 2015 ஆம் ஆண்டு பொலிஸ் தடுப்புக்காவலில் மரணமாகியிருந்தார். “எமது சுகாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு, உணர்வுகளை வெளிப்படுத்த நாம் வேறு வழிகளைப் பார்ப்போம். தயவு செய்து ஊர்வலத்துக்குப் போகாதீர்கள்” என அவுஸ்திரேலிய பிரதமர் மக்களைக் கேட்டுள்ளார். சிட்னி, பிரிஸ்பேன், பேர்த், கான்பரா நகர்களில் ஏற்கெனவே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. மெல்போர்ண் பொலிசார் ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளரிடம் அவற்றைக் கைவிடும்படி கேட்டுள்ளார்கள். அதே வேளை பிரிஸ்பேந், அடிலேட் பொலிசார் ஊர்வலத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். 1991 முதல், 432 அவுஸ்திரேலிய சுதேசிகள் பொலிஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்துள்ளனர். https://marumoli.com/black-lives-matter-ஊர்வலங்களுக்கு-சிட்னி/?fbclid=IwAR1_WrcYpG-yLUgiPVbg16_-fkwJcb9DVdQdtJ5fw1OdOxPNdlBZRBAQqoA