யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

'சுன்னத்து' செய்துகொள்ளும் தமிழர்கள்

Recommended Posts

'சுன்னத்து' செய்துகொள்ளும் தமிழர்கள்

  •  
 
 

ஆண் உறுப்பில் முன் பாகத்தில் உள்ள தோல் பகுதியை வெட்டிக்கொள்ளும் முக்கியமான ஒரு மதக்கடமையை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளுகின்றார்கள்.

யூதர்களும்; செய்கின்றார்கள்.

இது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், இந்தச் செயலை தமிழர்களில் ஒரு பிரிவினரும் செய்துவருகின்றார்கள் என்பதுதான் இங்கு ஆச்சரியமான ஒரு விடயம்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இஸ்லாமியர்கள் அவ்வாறு வெட்டிக்கொள்வதை அவர்களது மரபில் 'கத்னா', 'சுன்னத்' என்று அழைப்பார்கள்.

யூதர்கள் அவ்வாறு செய்துகொள்வது 'விருத்தசேதனம்;'( BRIT MILAH’) என்று அழைக்கப்படுகின்றது.

இந்த விருத்தசேதனத்தை தமிழர்களின் ஒரு பிரிவினர் 'கவரடைப்பு' என்ற பெயரில் மேற்கொண்டு வருவது, பலருக்கு ஒரு புதிய செய்தியாக இருக்கலாம்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

தமிழர்கள் மேற்கொண்டு வருகின்ற இந்த விருத்த சேதனம் அல்லது 'கவரடைப்பு' பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், 'கத்னா', 'சுன்னத்', 'விருத்தசேதனம்' பற்றிய வரலாற்று மற்றும் மருத்துவ ரீதியிலான உண்மைகளைப் பார்த்துவிடுவது நல்லது என்று நினைக்கின்றேன்.

யூதர்கள், கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமயத்தவருக்கும் பொதுவான 'முப்பாட்டனார்' என்று அழைக்கப்படுகின்ற ஆபிரகாம் (இப்ராஹீம் அலை) அவர்களது முன்னுதாரணத்தைப் பின்பற்றியே இன்றுவரை விருத்தசேதனம் செய்துகொள்வது யூதர்களுக்கும், ஆதிகாலக் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வழக்கில் இருந்து வருகின்றது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

வேதாகமத்தில்..

வேதாகமத்தின் பழைய ஏற்பாடு, விருத்தசேதனம் செய்துகொள்வதை கடவுளுடனான யூதர்களின் ஒரு உடன்படிக்கையாகவே சொல்கிறது. (ஆதியாகமம் 17:10-14)

17:10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும்> நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால்> உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.

17:11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக் கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

17:12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்;. வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.

17:13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப் பட்டவனும்> விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.

17:14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்.

- இவ்வாறு கடவுள் யூதர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டதாக கிறிஸ்தவர்களின் பைபிளிலும், யூதர்களின் தோராவிலும் கூறப்பட்டிருக்கின்றது.

யூதர்கள் இன்றைக்கும் அதனை பின்பற்றியே விருத்தசேதனத்தை ‘BRIT MILAH’ – Covenant of Circumcision என்று அழைக்கிறார்கள்.!

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இயேசுவுக்கு செய்யப்பட்ட விருத்தசேதனம்

இயேசுக் கிறிஸ்துவின் விருத்தசேதனம் என்பது லூக்கா நற்செய்தியின்படி இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி இயேசு பிறந்த எட்டாம் நாள் தூய்மைச் சடங்கை நிறைவேற்றி அவருக்கு விருத்தசேதனம் செய்து அவரை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவரின் பெற்றோர் எருசலேமுக்கு அவரை கொண்டு சென்றார்கள். அந்த நாளிலேயே அவருக்கு இயேசு என்னும் பெயரும் இடப்பட்டது என்று பைபிளில் கூறப்பட்டிருக்கின்றது.

இயேசு கிறிஸ்துவிற்கு முன்னால் யூதர்கள் மத்தியிலும் இன்றைய கிறிஸ்துவ மதத்தின் ஸ்தாபகர் பவுலுக்கு முன்னால் இயேசுவின் காலத்திலும் விருத்தசேதனம் என்பது இறைவனோடு கொண்ட உடன்படிக்கையாகவும் தூய்மைக்கான அடையாளமாகவும் இருந்து வந்தது. பவுல் அடிகள், தான் ஸ்தாபித்த கிறிஸ்துவ மதத்தை யூத சனங்களை தாண்டி மற்றவர்களிடமும் பரப்ப எண்ணம் கொண்டார். அதற்கு விருத்தசேதனம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கருதி, விருத்தசேதன நியமத்தை தளர்த்திக் கொண்டார் என்பதை பவுலும் மற்றவர்களும் எழுதின நிருபங்களில் காண முடிகிறது.

இஸ்லாத்தில் சுன்னத்..

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பே மக்கத்து குறைஷியரும் மதீனா பகுதிகளில் குடியேறி வாழ்ந்துவந்த யூதர்களும் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையோராக இருந்துள்ளனர் என்பதை வரலாற்று நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் 80 வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் 'கதூம்' (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்..!' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிற்காலத்தில் முஹம்மது நபி (ஸல்)அவர்கள் இஸ்லாத்தை போதித்த பொழுது பாட்டனார் இப்ராஹீம் (அலை) அவர்களது வழிமுறையான விருத்தசேதனத்தையும் வலியுறுத்தினார்கள்.

அந்தப் போதனைகள் மற்றும் மரபுகளின்படி இற்றை வரைக்கும் முஸ்லிம்கள் முழுக்க முழுக்க விருத்தசேதன முறையைக் கடுமையாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

விருத்தசேதனக் கலாச்சாரம்;;..

'மதக்கடமை என்ற முறையில் மட்டுமல்லாமல் கலாச்சார முறையிலும் சில இடங்களில் விருத்தசேதனம் கடைபிடிக்கப்படுகிறது.

குறிப்பாக நைஜீரியாவில் உள்ள சில குழுக்கள், அர்கம்லேண்ட், ஆஸ்திரேலியாவின் மத்திய மற்றும் மேற்கு பாலைவனங்களில் உள்ள பழங்குடிகள் ஆகியோரிடமும் விருத்தசேதன பழக்கம் உள்ளது.

மேலும் பசிபிக் தீவுக் கூட்டங்களான பிஜி, வனுவாட்டு, பெந்தேகொசுடு தீவுகள் மற்றும் பாலினேசியன் தீவுகளான சமோவா, தொங்கா, குவாம், வடக்கு மரியானா தீவுகள், நியுவே> திகோபியா ஆகியவற்றில் உள்ள மக்களாலும் விருத்தசேதனம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆணிலிருந்து பெண் தன்மையை நீக்கும் சடங்காக விருத்தசேதனம், மேற்கு ஆப்பிரிக்க தோகன் போன்ற மக்களால் கருதப்படுகிறது.

மருத்துவ பார்வையில் விருத்தசேதனம்..

மதக்கடமைகள், பாரம்பரியப் பழக்கவழக்கங்கள்; உடன்படிக்கை போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு விடயமாக இந்த விருத்தசேதனம் பார்க்கப்பட்டாலும் கூட> மருத்துவ மற்றும் வாழ்வில் ரீதியாக இந்த விருத்தசேதனம் மிகவும் பலனுள்ள ஒரு நடவடிக்கை என்றே ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது.

மருத்துவ அறிவியல் என்றால் என்னவென்றே அறிந்திராத இன்றைக்கு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய யூதர்கள் மற்றும் 1300 வருடங்களுக்கு முந்திய முஸ்லீம்கள் விருத்தசேதனம், கத்னா, எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை கையாண்டு வருகின்றார்கள்.

இன்று மருத்துவ அறிவியல் அபரிமிதமான வளர்ச்சி கண்டபோது, உலகிலே குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான AmericanAcademy Of Pediatrics என்னும் குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க அகாடமி, விருத்தசேதனம் செய்துகொள்வதால் அதிக மருத்துவ பயன்கள் உள்ளன என்று 2012 இல்தான் ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளது.

விருத்தசேதனம் செய்த ஆணுறுப்பை மிக இலகுவாக சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்துக் கொள்ளமுடியும். அழுக்குகள், நுண்கிருமிகள் ஆண்குறியின் நுனியில் சேர்வதைத் தடுத்துக் கொள்ளமுடியும். அதற்காக தனியொரு அக்கறை எடுத்துக் கொள்ள தேவையில்லை. சர்வ சாதாரணமாகவே சுத்தமுடனும், சுகாதாரத்துடனும் விருத்தசேதனம் செய்த ஆணுறுப்பைப் பராமரித்துக் கொள்ளமுடியும் என்று AmericanAcademy Of Pediatrics தெரிவிக்கின்றது.

சிறுநீர்ப் பாதை நோய் தொற்று குறையும் வாய்ப்பு:

சிறுநீர்ப் பாதையில் நோய்தொற்று வரும் வாய்ப்பு, விருத்தசேதனம் செய்யாத ஆண்களுடன்ஒப்பிடும் போது விருத்தசேதனம் செய்த ஆண்களுக்கு மிகமிகக் குறைவு.

சிறுவர்களுக்கு Phimosis எனும் ஆணுறுப்பின் முன்தோல் இறுக்கம் ஏற்பட்டு, அதனால் கழிக்கும்சிறுநீர் சிறிது தங்கிவிடும். இந்த நிலை விருத்தசேதனம் செய்த ஆண்களுக்கு குறிப்பாகசிறுவர்களுக்கு வருவதே இல்லை. இந்த Phimosis நோய் காரணமாக சிறுநீர் பாதையில் தொற்றுவரும் ஆபத்து அதிகம். சில சமயம் சாதாரண சிறுநீர்ப் பாதை நோய் தோற்று, கிட்னி பாதிப்பைஏற்படுத்தலாம் இந்த நிலை விருத்தசேதனம் செய்த ஆண்களுக்கு வருவது கிடையாது.

அதேபோன்று விருத்தசேதனம் செய்த ஆண்களுக்கு எய்ட்ஸ் உட்பட பால்வினை நோய்கள்வரும் வாய்ப்பு மிக குறைவு. இதை ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வும், CDC MathModel என்னும் அமெரிக்க ஆய்வும் உறுதிப்படுத்துகின்றது.

அதேபோன்று, விருத்தசேதனம் செய்யப்படாத ஆண்குறியின் முன்தோலை பின்னால் இழுக்கமுடியாமல் போகும் நிலை வருவதால், ஆண்குறியின் முன்தோல் அழற்சி, ஆண்குறியில்அழற்சி வரலாம். தோலின் கீழ் மாவு போன்ற அழுக்கு சேர்ந்து கட்டி போன்று உருவாகலாம்

விருத்தசேதனம் செய்த ஆண்களுக்கு ஆண்குறி கேன்சர் என்பது அறவே வராது.

விருத்தசேதனம் செய்த ஆண்களின் மனைவியருக்கு CervicalCancer எனும் கருப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதற்கு காரணம், விருத்தசேதனம் செய்தஆண்களுக்கு HPV என்னும் HumanPappiloma Virus தொற்று வரும் வாய்ப்பே இல்லை.

இந்த HPV என்னும் வைரஸ் கிருமி தான் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோயைஏற்படுத்துகிறது. மேலும் விருத்தசேதனம் செய்த ஆண்குறியில், Smegma எனும் மாவு போன்றஅழுக்கு சேராததால், ஆண்குறியில் வரும் நோய்த்தாக்கம் குறைவு.

இதை மற்றொரு ஆப்பிரிக்க ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

ProstateCancer எனும் ஆண் இனபெருக்க உள்ளுறுப்பில் வரும் புற்று நோய், விருத்தசேதனம்செய்த ஆண்களுக்கு வரும் வாய்ப்பு மிக குறைவு என்று இன்றைய ஆய்வுகள்உறுதிப்படுத்துகின்றன.

விருத்தசேதனம் குறித்து மேலும் சில மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வு முடிவுகள். புதியஆய்வு ஒன்று கீழ்க்கண்டவாறு உறுதிப்படுத்துகிறது:

விருத்தசேதனம் செய்வதால் ஆணுறுப்பில் உள்ள பாக்டீரியா Ecosystem எனப்படும் உயிர்பொருட்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்படும் முறை அதிகளவில் மாறுகிறது. நோயைஉருவாக்கும் பாக்டீரியா எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது. அதிலும் குறிப்பாக ஆக்ஸிஜன்இல்லாமல் வாழும் பாக்டீரியாவான Anaerobic வெகுவாகக் குறைகிறது. அதனால் ஆணுறுப்பில்வரும் நோய்த் தொற்று குறைகிறது.

இதே தகவலை மற்றொரு ஆய்வும் உறுதி செய்கிறது.

அமெரிக்க ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மரபணு ஆய்வாளர் Lance Price, 'ஒரு பாறையைப்புரட்டிப் போடுவதால் Ecosystem மாற்றுவதைப் போல விருத்தசேதனத்தால் ஆண்குறி பாக்டீரியாநுஉழளலளவநஅ மாற்றம் அடைகிறது..!' என்கிறார்.( From anecological perspective,it's like rolling back a rock and seeing the ecosystemchange.!")

இதேபோல உகாண்டா நாட்டில் Lance Price மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள்விருத்தசேதனம் செய்த ஆண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில், ' விருத்தசேதனத்தால்நீக்கப்பட்ட தோலின் கீழ் பகுதியிலுள்ள நுண்ணுயிரிகளில் டீழைனiஎநசளவைல மிககுறைவாக உள்ளது மிக நல்ல விஷயம். விருத்தசேதத்தால் நீக்கப்படும் நுண்ணியிரிகள் தான்ஆண்குறியில் அழற்சியை ஏற்படுத்துவதற்கு மூலக்காரணம்.!' என்று கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே குழந்தை மருத்துவதிற்கான மிகப் பெரிய அமைப்பான AAP கடந்த 13 ஆண்டுகாலமாக விருத்தசேதனத்தால் ஏற்படும் நன்மைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தநிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு தான் பலவித ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தி ஒப்புக்கொண்டுள்ளது.

உலகிலேயே ஆப்பிரிக்காவில் தான் விருத்தசேதனம் குறித்து அதிக ஆய்வுகள் நடத்தப் பட்டன. 2005 இல் தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விருத்தசேதனம் செய்யப்பட்டஆண், HIVPositive என்னும் எய்ட்ஸ் நோய் தொற்றுள்ள பெண்களோடு உடலுறவு கொண்டபோது> அவர்களுக்கு அந்தப் பெண்களில் இருந்து வரும் HIV யினால் ஏற்படும் AIDS நோய் தொற்று, 63 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டது.

விருத்தசேதனம் செய்துகொள்ளும் தமிழர்கள்...

இப்படிப்பட்ட மருத்துவரீதிpலான ஒரு முறைமை என்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தவிருத்தசேதன முறையை தமிழர்களில் ஒரு பிரிவினரும் பல நூறு வருடங்களாகச்மேற்கொண்டு வருகின்றார்கள் என்கின்ற செய்திதான் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்திநிற்கின்றது.

இந்தியா, தமிழ் நாட்டின் மதுரை வட்டாரத்திலுள்ள 'பிறமலைக்கள்ளர்' சமூகத்தில்விருத்தசேதனம் 'கவரடைப்பு' அல்லது 'கவரடப்பு' என்ற பெயரில் பல நூற்றாண்டுகளாககடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

தற்காலத்தில் இது 'மார்க்கல்யாணம்' என அழைக்கப்படுகின்றது. தமிழ்ச் சமுதாயத்தில்பலசமூகங்களில் நீண்டகாலமாக இருந்துவந்ததகக் கூறப்படுகின்ற இந்தப் பழக்கம், பிறமலைக்கள்ளர்களிடம் மட்டும்தான் தற்பொழுது எஞ்சியுள்ளது..!'

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள பாலாறுபட்டியில் உள்ள 'பிறமலைக்கள்ளர் சமூகத்தின்வழக்கப்படி 1௦ வயது சிறுவர்கள் ஒரு வாரம் ஊருக்கு வெளியே தங்கி, அந்த வழியாகச்செல்பவர்களிடம் வழிப்பறி செய்றது போன்று பணம் பெற்று, அந்தப் பணத்தில் கோவிலுக்குஎண்ணை வாங்கி ஊற்றிவிட்டு, மிகுதிப் பணத்தில் காவி வேட்டி எடுத்து கட்டுவார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படும்.

யூத மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தில் காணப்படுகின்ற இந்த விருத்தசேதன வழக்கம்பிறமலைக் கள்ளர் சமூகத்தினரிடம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு, "எப்படி வந்தது என்றுதெரியவில்லை... பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறோம்.." என்று கூறுகின்றார்கள்.

'மார்கல்யாணம்' பண்ணும்போது சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்புவோம். அவர்கள் சீர்செய்வார்கள் என்றும் கூறுகின்றார்கள்.

இது குறித்து சமூக அறிஞர் தொ.பரமசிவன் கருத்துத் தெரிவிக்கும் பொழுது:

'உலகத்தில் பல பழங்குடிகளிடம் இந்தப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக யூதர்களிடம்இருந்தது. தமிழ் சமுதாயத்தில் பல சமூகங்களில் இருந்துவந்த இந்தப்பழக்கம், தற்பொழுதுபிறமலைக் கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது. அவர்கள் முந்தைய காலத்தில்மார்கல்யாணத்தை கவரடைப்பு' என்ற பெயரில் அழைப்பார்கள். அந்த வழக்குச் சொல் தற்போதுமறைந்து வருகின்றது என்று தெரிவித்தார்.

இன்று மருத்துவம் வியந்து நோக்கும் இந்த விருத்தசேதன முறை பிறமலைக் கள்ளர்சமூகத்தினர் மத்தியில் எவ்வாறு நுழைந்தது? எப்பொழுது நுழைந்தது? தமிழ் இனத்தில் வேறுஎந்தெந்த சமூகங்கள் மத்தியில் இந்த நடைமுறை முன்னர் இருந்திருக்கின்றது? பிறமலைக்கள்ளர் சமூகத்தை விட தமிழ் இனத்தின் வேறு சமூகத்தினர் மத்தியில் இந்த விருத்தசேதனபழக்கங்கள் இருக்கின்றனவா?- இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடிய ஆய்வுகள் தமிழரின்தொன்மையை நோக்கிய ஒரு பயணமாக அமையும் என்றே நினைக்கின்றேன்

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

http://www.ibctamil.com/medical/80/100065

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு