Jump to content

சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு

Recommended Posts

சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு

8caa3f4c-456c-4f29-8f9b-b9afea0da000.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. சிறீசபாரட்னம் படுகொலை செய்யப்பட்ட இடமாக கருதப்படும் யாழ் கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கையில் நேற்றைய தினம் மாலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

சிறீரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்நிகழ்வில் அக் கட்சியின் செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட அக் கட்சியின் பிரதானிகள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

26b556c5-fa7c-4560-8e9f-36dac085993b.jpg27ce6ae2-b279-40ce-a617-f60f0f40623f.jpg747ffb70-37e3-4cec-be65-34e9659bde0e.jpg876bbb2c-ffc1-4322-8113-383bdc8a81e3.jpgad201c0f-9f7b-4d5c-8cb9-dccff2bf30cc.jpg

http://globaltamilnews.net/2018/77869/

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • சபா­ரத்­தி­னத்­தின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு!!
 
சபா­ரத்­தி­னத்­தின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு!!

தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் தலை­வர் சிறீ சபா­ரத்­தி­னத்­தின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் கோண்­டா­விலில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

ரெலோ இயக்­கத் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தலை­மை­யில் நடைபெற்ற நிகழ்­வில் கட்சி முக்­கி­யஸ்­தர்­கள், கட்சி அங்­கத்­த­வர்­கள், ஆத­ர­வா­ளர்­கள், நலன் விரும்­பி­கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

media-share-0-02-06-30149448113783f6e2d8media-share-0-02-06-62b3679c9726c7430bc3

http://newuthayan.com/story/90526.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள் !!!!

தாயக விடுதலைக்காக இன்றுவரை உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் எனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ சபாரத்தினம் தலைவராக இருக்கையில்தான் தாஸ், காளி, பீற்றர் போன்ற வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த ரெலோ உறுப்பினர்கள் பொபியினால் யாழில் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள். சகோதரப் படுகொலைகளை எல்லா இயக்கங்களும் பாரபட்சமின்றி செய்தன என்பது உண்மைதான். ஆனால் உட்கொலைகளில் 80களில் முன்நின்றவை புளட்டும் ரெலோவும்தான்.

இவர்களை நினைவுகூர்வதன் மூலம் சகோதரப்படுகொலைகளின் முன்னோடிகளைத்தான் நினைவுகூர்கின்றோம்.

Link to comment
Share on other sites

மன்னாரில் சிறி சபாரத்தினம் – போராளிகள் – பொது மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

IMG_0843.jpg?resize=800%2C534

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகள் , பொது மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மன்னார் மாவட்ட தலைமை அலுவலகத்தின் ஏற்பாட்டில்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் குறித்த அஞ்சலி பொதுக்கூட்டம் இடம் பெற்றது. குறித்த அஞ்சலி பொதுக்கூட்டத்திற்கு, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளர் நாயகம் சிறிகாந்தா, வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கள், குகதாஸ்,விந்தன் கனகரத்தினம், புவனேஸ்வரன், டிலங்கை தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிகளின் முக்கியஸ்தர்கள் , உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பல நூற்றுக்கனக்கானவர்கள் கலந்து கொண்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.குறிப்பாக வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீ வு , மற்றும் யாழ் மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து நினைவு உரைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

DSC_0016.jpg?resize=800%2C534DSC_0018.jpg?resize=800%2C534DSC_0019.jpg?resize=800%2C534DSC_0025.jpg?resize=800%2C534DSC_0041.jpg?resize=800%2C534DSC_0043.jpg?resize=800%2C534DSC_0044.jpg?resize=800%2C534DSC_0045.jpg?resize=800%2C534DSC_0048.jpg?resize=800%2C534DSC_0093.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/77996/

Link to comment
Share on other sites

பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களாலும் படுகொலை செய்யப் பட்ட அனைத்துப் போராளிகளுக்கும் அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

சகோதரப் படுகொலைகளை எல்லா இயக்கங்களும் பாரபட்சமின்றி செய்தன என்பது உண்மைதான். ஆனால் உட்கொலைகளில் 80களில் முன்நின்றவை புளட்டும் ரெலோவும்தான்.

இவர்களை நினைவுகூர்வதன் மூலம் சகோதரப்படுகொலைகளின் முன்னோடிகளைத்தான் நினைவுகூர்கின்றோம்.

விடுதலை புலிகளை நினைவுகூரும் போது சகோதர படுகொலைகள் செய்தவர்களை நினைவு கூருவதாக  நீங்கள் எழுதிய நினைவு இல்லை. ஏன் இந்த பாகுபாடு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சகோதர படுகொலை செய்தவர்கள் அதனால்தான் அவர்களை அழிக்க வேண்டி வந்தது என கூறுபவர்கள்...... இன்றைய வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு பதில் சொல்ல முடியுமா?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

சிறீ சபாரத்தினம் தலைவராக இருக்கையில்தான் தாஸ், காளி, பீற்றர் போன்ற வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த ரெலோ உறுப்பினர்கள் பொபியினால் யாழில் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள். சகோதரப் படுகொலைகளை எல்லா இயக்கங்களும் பாரபட்சமின்றி செய்தன என்பது உண்மைதான். ஆனால் உட்கொலைகளில் 80களில் முன்நின்றவை புளட்டும் ரெலோவும்தான்.

இவர்களை நினைவுகூர்வதன் மூலம் சகோதரப்படுகொலைகளின் முன்னோடிகளைத்தான் நினைவுகூர்கின்றோம்.

தமிழீழ போராட்ட விடுதலை வரலாற்றில், சிங்கள பாதுகாப்பு படைகளுக்கெதிரான பாரிய தாக்குதல்களான சாவகச்சேரி பொலிஸ் நிலையம்,முறுகண்டி ராணுவ தொடரூந்து தாக்குதல்,கொக்காவில் ,கிளிநொச்சி ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் முயற்சி என...

 அனைத்து இயக்கங்களுக்கும் முன்னோடியாக பாரிய தாக்குதல்களை முதலில் நடத்தி காட்டிய  தமது இயக்கத்தின் மிக பலம் வாய்ந்த இராணுவ பிரிவான தாஸ் குறூப்பை தாமே ஆயுதங்கள் பொருளாதார வசதிகள் எதுவும் வழங்காமல் தனிமைபடுத்தி, பின்னர் அழித்தொழிக்காமல் இருந்திருந்தால்..

நிச்சயமாக புலிகளால் ரெலோவை அழித்திருக்கமுடியாது...

தனது இயக்கத்தை தானே பலவீனப்படுத்தி எதிர் இயக்கங்கங்களை மறைமுகமாக பலப்படுத்தி இறுதியில் அவராகவே மரணத்தை விருந்து வைத்து அழைத்துவிட்டார்  ஸ்ரீ சபாரத்தினம் என்றுதான் நினைக்கிறேன்..

எல்லா இயக்கங்களும் தவறு செய்தன, ரெலோவும் தவறு செய்தது , ரெலோவின் தலைமைபீடம் செய்த தவறுகளுக்கு...எல்லா பாவமும் செய்த பொபி தப்பியோடிவிட...

...எந்த பாவமும் செய்யாத..தப்பியோட இடம்வலம் தெரியாத திருகோணமலை,மன்னார்,மட்டக்களப்பு போராளிகள் கிட்டரால் டயர் போட்டும்கூட கொளுத்தப்பட்டார்கள்...

ஆக சிங்களவர்களுக்கே ரயர் போட்டு தமிழர்களை கொளுத்தும் கலையை கற்பித்தவர்கள் நாங்களே என்று பெருமைப்படவேண்டிய தருணமிது...

யாரையும் குற்றம் சொல்லும் பதிவு அல்ல, எந்த பலமும் இல்லாமல் எமது இனம் நிற்கும் இந்த காலகட்டத்தில்,

எல்லா பலமும் எங்களிடம் ஓருகாலம் இருந்தது என்று ஒவ்வொருவரும், நினைத்து பார்க்கவேண்டிய ஓர் மனக்கவலை அவ்வளவுதான்.

அஞ்சலிகள்... தமிழர் தரப்பில் சிங்கள அரசியல் இராணுவ இயந்திரத்தை மிரட்டி வைத்த  தமிழர் ராணுவ தலைமைகளுள் ஒருவரான சபாரத்தினத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

டெலொ அழிக்கபட்ட சமயதில் உண்மையில் புலிகளை விடவும் மற்ற அமைப்புகளை விடவும் டெலொதான் பலமாக இருந்ததனால்தான் புலிகளை அழித்துவிடும்படி டெலொ அமைப்புக்கு இந்திய றோ அமைப்பினால் கடிதம் அனுப்பட்டிருந்த்து , அக்கடிதம் ஊடகங்களில் கூட அப்போது புலிகளால் வெளியிடப்பட்டிருந்தது
அக்காலத்தில் ஒருந நாட்டின் சர்ச்சைக்குரிய அதிபராக இருந்த்தவர் விடுதலைப்புலிக்களிற்க்கென பிரத்தியேகமாக வழங்கப்பட்ட ஆயுதத்தை குரங்கு அப்பம் பிரித்த கதை மாதிரி பிரித்து புலிகளை சமனிலையைக்குலைக்காமல் இந்திய அரசு கையாண்டது ,புலிகள் அமைப்பு மாத்திரமல்ல பொதுவாக அனைத்து இயக்கங்களையும் ஒரு வலுச்சமனிலைக்குள்ளேயே வைத்திருக்க இந்திய அரசு விரும்பியது , 
புலிகள் கை முந்தாமலிருந்த்தால் புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களையும் டெலோ அழித்து , இந்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு தமிழர்களுக்கு எதோ ஒரு இந்த்திய தீர்வை வாங்கித்தந்திருப்பார்கள் என்றேநினைக்கிறேன்.

புளொட் , மாயமான் புகழ்  ஈ பி அர் எல் எப் , புலிகள் உட்பட மற்ற பிரதான அமைப்புகள் இந்தியாவின நம்பவில்லை

Link to comment
Share on other sites

4 hours ago, valavan said:

தமிழீழ போராட்ட விடுதலை வரலாற்றில், சிங்கள பாதுகாப்பு படைகளுக்கெதிரான பாரிய தாக்குதல்களான

,முறுகண்டி ராணுவ தொடரூந்து தாக்குதல்,கொக்காவில் ,கிளிநொச்சி ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் முயற்சி என...

 அனைத்து இயக்கங்களுக்கும் முன்னோடியாக பாரிய தாக்குதல்களை முதலில் நடத்தி காட்டிய  தமது இயக்கத்தின் மிக பலம் வாய்ந்த இராணுவ பிரிவான தாஸ் குறூப்பை தாமே ஆயுதங்கள் பொருளாதார வசதிகள் எதுவும் வழங்காமல் தனிமைபடுத்தி, பின்னர் அழித்தொழிக்காமல் இருந்திருந்தால்..

நிச்சயமாக புலிகளால் ரெலோவை அழித்திருக்கமுடியாது...

புலிகளின் போராளிகளின் தந்தையை நடுரோட்டில் வைத்து சுட்டு கொன்றவர்கள் எப்படி ஒரு விடுதலை இயக்கமாக இருக்க முடியும்?  ரெலோவால் வி.புலிகளை அழித்திருக்க முடியாது என்ற கூற்று இந்திய அரசின் இராணுவ பயிற்சியும் இராணுவ  தளபாட உதவிகளை பெற்ற டெலோவால் எப்படி வி.புலிகளை அழிக்க முடியாமல் போனது என்பதில் இருந்தே உங்களின் கூற்று பிசிபிசுத்து போகின்றது

தனது இயக்கத்தை தானே பலவீனப்படுத்தி எதிர் இயக்கங்கங்களை மறைமுகமாக பலப்படுத்தி இறுதியில் அவராகவே மரணத்தை விருந்து வைத்து அழைத்துவிட்டார்  ஸ்ரீ சபாரத்தினம் என்றுதான் நினைக்கிறேன்..

புலிகளின் சமாதான தூதுவராக சென்ற புலிப்போராளியை கொன்ற பெருமை சிறிசபாவை சாரும்.(அப்போராளியின் பெயர் நினைவுக்கு வரவில்லை)

எல்லா இயக்கங்களும் தவறு செய்தன, ரெலோவும் தவறு செய்தது , ரெலோவின் தலைமைபீடம் செய்த தவறுகளுக்கு...எல்லா பாவமும் செய்த பொபி தப்பியோடிவிட...

...எந்த பாவமும் செய்யாத..தப்பியோட இடம்வலம் தெரியாத திருகோணமலை,மன்னார்,மட்டக்களப்பு போராளிகள் கிட்டரால் டயர் போட்டும்கூட கொளுத்தப்பட்டார்கள்...

முதலாம் முறை சாவகச்சேரி தாக்குதலில் (வி.புலிகளால் தாக்கபட்ட போது சீலனும் சகபோராளியும் கொல்லபட்டது யாவரும் அறிந்ததே. அடுத்த ரெலோ தாக்குதலில் இரண்டு போராளிகள் தமது இன்னுயிரை ஆகுதி ஆக்கினார்கள். அவர்களில் ஒருவர் கரவெட்டியை சேர்ந்த உறவினர் என்பது குறிப்பிடதக்கது. ஆகவே டெலோவினருக்கு தனிப்பட (அல்லது எந்த இயக்கத்தினருக்கும்) சார்பானவன் அல்ல. 

ஆக சிங்களவர்களுக்கே ரயர் போட்டு தமிழர்களை கொளுத்தும் கலையை கற்பித்தவர்கள் நாங்களே என்று பெருமைப்படவேண்டிய தருணமிது...

ஹி ஹி 1956ல் தமிழர்களை ரயர் போட்டு கொழுத்திய பண்டாரநாயக்காவின் வரலாறுகளை கொஞ்சம் புரட்டி பார்க்க வேண்டும். "தமிழர்களின் தோலில் செருப்பு தைத்து போடுவேன்" என்ற இனவாதிகளும் இக்காலகட்டத்தில் வாழ்ந்தார்கள் என்பது உங்களுக்கு  தெரிய நியாயமில்லை.

யாரையும் குற்றம் சொல்லும் பதிவு அல்ல, எந்த பலமும் இல்லாமல் எமது இனம் நிற்கும் இந்த காலகட்டத்தில்,

எல்லா பலமும் எங்களிடம் ஓருகாலம் இருந்தது என்று ஒவ்வொருவரும், நினைத்து பார்க்கவேண்டிய ஓர் மனக்கவலை அவ்வளவுதான்.

அஞ்சலிகள்... தமிழர் தரப்பில் சிங்கள அரசியல் இராணுவ இயந்திரத்தை மிரட்டி வைத்த  தமிழர் ராணுவ தலைமைகளுள் ஒருவரான சபாரத்தினத்துக்கு.

100%

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

விடுதலை புலிகளை நினைவுகூரும் போது சகோதர படுகொலைகள் செய்தவர்களை நினைவு கூருவதாக  நீங்கள் எழுதிய நினைவு இல்லை. ஏன் இந்த பாகுபாடு?

பாகுபாடு தேவையானது. இறுதிவரை புலிகளை அழித்தவர்களூக்கு உடந்தையானவர்கள் யார் என்பதை யாவரும் அறிவர். உங்களை வி.புலிகள் கேள்வி கேட்டார்கள் என்பதற்காக மற்றையவர்கள் உங்களின் கருத்துடன் உடன்பட வேண்டும் என்பது bull shit..

பாகுபாடு தேவையானது. இறுதிவரை புலிகளை அழித்தவர்களூக்கு உடந்தையானவர்கள் யார் என்பதை யாவரும் அறிவர். உங்களை வி.புலிகள் கேள்வி கேட்டார்கள் என்பதற்காக மற்றையவர்கள் உங்களின் கருத்துடன் உடன்பட வேண்டும் என்பது மூடத்தனமானது.

bull shit..

கடைசி சொட்டு இரத்தத்தை வன்னி மண்ணில் சிந்தி தமது இன்னுயிரை ஆகுதி ஆக்கியவர்கள் வி.புலிகள் என்பது உண்மையான வி.போராளிகளுக்கான அடையாளத்தை தந்துள்ளார்கள்.
அதே நேரம்  டக்ளஸ் தேவானந்தா, தொடக்கம் மிகுதியானவர்கள்  பற்றி உங்களின் கருத்து என்ன  எனபதை அறிய மிக்க ஆவல்.

Link to comment
Share on other sites

சகோதர படுகொலைகள் பற்றி பேசுவதை விட அதன் பின்னணிகளை புரிந்துகொள்வதே ஏதாவது பிரயோசனத்தை கொண்டுவரும். சகோதரப் படுகொலைகளுக்கான அடிப்படை என்பது இவ்வளவு அழிவுக்குப் பின்னரும் மாறவில்லை.  மேலே மேற்கோள் காட்டப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரம் என்பது ஆயுதப்போராட்டத்துக்கு முந்திய வடிவம. பின்னர் வாள் ஆயுதமாக மாறியது. இப்போது ஆயுதம் வாளாக மாறியுள்ளது. அவ்வளவுதான். மேலும் பிரித்தாளும் தந்திரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்திய தேசத்தின் சதிகளும் எமக்குள் இருந்த சமூக பிரிவினைகளும் அதனூடாக கட்டியமைக்கப்பட்ட தனிமனித ஆழுமைகளும் என சகோதரப் படுகொலைகளுக்கான பின்னணிகள் பலகோணங்களில் சிந்திக்கவேண்டிய விசயம். 

தமிழீழம் என்ற இலக்குநோக்கிய போராட்டப் பயணம் பல பத்து இயக்கங்களாக பிரிந்து சிதைந்து பின்னர் புலிகளில் இஸ்லாமியர் பிரிவினை மாத்தையா போன்ற வழமையான இந்தியச் சதிப் பின்னணிகள் மேலும் பிரதேசவாரியான கருணா என்ற பிரிவினையாகி போராட்டத்தின் இறுதிவரை பிரிவினையும் உள்ளகச் சிதைவும் தொடர்கதை. ஆனால் தமிழீழம் என்ற இலக்கு நோக்கிய பயணம் புலிகளால் நிறுத்தப்படவில்லை. சகோதர படுகொலைகளுக்கான அடிப்படை இச் சமூகத்தில் தாராளமாக உள்ளது. ஏனெனில் நாம் சகோதரத்துவத்துவ உணர்வுள்ள சமூகம் கிடையாது. சாதீய சமூகத்தில் சகோதரத்துவம் என்ற கதைக்கே இடமில்லை. சும்மா சகோதரத்துவம் என்று கதைக்கலாம் அவ்வளவுதான்.

இவைகுறித்து ஏராளமாக இக் களத்தில் கருத்தாடியாகிவிட்டது.  மீளவும் குறிப்பிடுவது ஒன்றுதான் சகோதரப்படுகொலைகள் என்பதன் பின்னணிகள் குறித்து சிந்திப்பது ஆராய்வது ஒன்றே பலனுள்ளது. 

Link to comment
Share on other sites

35 minutes ago, nunavilan said:

உங்களை வி.புலிகள் கேள்வி கேட்டார்கள் என்பதற்காக மற்றையவர்கள் உங்களின் கருத்துடன் உடன்பட வேண்டும் என்பது bull shit..

விடுதலை புலிகள் என்னை கேள்வி கேட்டது இல்லை. நான் அவர்களை விஜிதரன், ரஜினி திரணகம, ஆனந்தராஜா (சென் ஜோன்ஸ்  கல்லூரி அதிபர்) பற்றி கேள்வி கேட்ட காலத்தில் அவர்கள் (முரளி, ரவி) மிகவும் மதிப்புடனும் கவலையுடனும் "நீங்களே இப்படி கேட்கலாமா?" என்று பதில் சொன்ன காலம் இன்றும் நினைவில் இருக்கிறது. நடக்காததை நடந்ததாக எழுதுவது, அதுவும் இன்னொருவரை பற்றி எழுதுவது தவறானது நண்பரே. 

அதே நேரம்  டக்ளஸ் தேவானந்தா, தொடக்கம் மிகுதியானவர்கள்  பற்றி உங்களின் கருத்து என்ன  எனபதை அறிய மிக்க ஆவல்.

 டக்ளஸ் தேவானந்தா முன்னாள்  ஆயுதக்குழு ஒன்றின் தலைவர். இந்த ஆயுதக்குழுவின் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மோசமான குற்றங்கள் பற்றி அனைத்துலக மன்னிப்பு சபை, மனிதஉரிமை விழிப்பு குழு மற்றும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமை அமைப்பு ஆகியவை நிறையவே பதிவு செய்து உள்ளன. அவை உண்மை என்றே நான் நம்புகிறேன். அதே நேரம் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சர் அந்தஸ்தை பயன்படுத்தி பலருக்கு உதவியும் செய்து இருக்கிறார்.

பெருமளவில் சகோதர படுகொலை செய்த ஆயுதம் தாங்கிய போராளிகள் அமைப்பு எது என்று நீங்கள் சொல்வீர்களா? அந்த படுகொலைகளை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? நான் ஆதரிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரப்படுகொலை ஆணிவேருக்கு, நேற்றைய கூட்டத்தில் எதை சொல்லி அஞ்சலி செய்திருப்பார்கள். வரும் தேர்தல்களில் யாரின் தியாகத்தை சொல்லி வாக்கு கேட்பார்கள்.இந்த பச்சோந்திகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தினருக்கு சமாதி கட்டி வருடா வருடம் நினைவஞ்சலி எமது மண்ணில் நடை பெறுகின்றது அதை எம்மவர்கள் புறக்கணிக்கவில்லை....

விடுதலைப்புளிகளின் தலைமை மன்னிப்பு வழங்கி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைய விட்ட பிறகு நாம் ஏன் குத்தி முறிவான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Jude said:

விடுதலை புலிகளை நினைவுகூரும் போது சகோதர படுகொலைகள் செய்தவர்களை நினைவு கூருவதாக  நீங்கள் எழுதிய நினைவு இல்லை. ஏன் இந்த பாகுபாடு?

குட்டிமணி, தங்கத்துரை போன்ற ரெலோ தலைவர்கள் வெலிகடையில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ரெலோவின் தலைவராக இருந்தார் என்பதுதான் சிறீ சபாரத்தினத்தின் வரலாற்றுப் பாத்திரம். அக்காலத்தில் தமிழீழப் போராட்டத்தை முன்னர்த்த ஏதும் செய்திருக்கவில்லை. பொபி போன்றவர்களை கட்டுப்படுத்தமுடியாத தலைவராகத்தான் இருந்தார்.

விடுதலைப் புலிகள் தமிழீழம் நோக்கிய பாதையில் பயணித்த தூரமும், அப்பயணத்தில் செய்த தியாகங்களும்தான் அவர்களின் தவறுகளையும் தாண்டி, குறிப்பாக கருணா பிரிவைக் கையாண்டது,  புலிகளின் மீதான அபிமானத்தையும் மதிப்பையும் இன்றுவரை தக்கவைத்திருக்கின்றது. அதற்காக புலிகளால் செய்யப்பட்ட தவறுகளை பூசி மெழுகவேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

நுனாவிலான் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் போராளியின் பெயர் கப்டன் லிங்கம் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர், ரெலோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீது தாக்குதல்நடத்தியிருந்த்தது அன்னிலையில் விடுதலைப்புலிகளுக்கும் ரெலோவிற்குமிடையில் என்னேரமும் போர் வெடிக்கலாம் எனும்நிலையில் அதனை தவிர்ப்பதற்கு கப்டன் லிங்கம் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்திருந்தார் (விடுதலைப்புலிகளின் தலமையிடம் அனுமதி பெறாமலே தன்னிச்சையாகவே அந்த பேச்சுவார்த்தைநடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒரு கருத்துநிலவுகிறது )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

முதலாம் முறை சாவகச்சேரி தாக்குதலில் (வி.புலிகளால் தாக்கபட்ட போது சீலனும் சகபோராளியும் கொல்லபட்டது யாவரும் அறிந்ததே.

சீலன் காலில் காயமடைந்தார் என்பதே உண்மை. புலிகளின் சாவக்கேச்சேரி போலீஸ் நிலைய தாக்குதலில் எவரும் வீரமரணம் அடையவில்லை.

சீலன் காலில் காயமடைந்தார் என்பதே உண்மை. புலிகளின் சாவக்கேச்சேரி போலீஸ் நிலைய தாக்குதலில் எவரும் வீரமரணம் அடையவில்லை.

சீலன் தனது வீரமரணத்தை தானே தனது வீரமரணத்தை தனது பதினம வயதில் இருந்து நண்பனாகவும் சக போராளியாகவும் இருந்தவரிடம் கட்டளையிட்டு பெற்றுக் கொண்டார்.

இதுவே புலிகளின் இராணுவ ஒழுக்கம், அதுவும் அன்றய நிலையில் (1983), என்பதின் மிக  குறைந்த எடுத்துக்காட்டு.

சீலனின் அந்த நண்பன் எனது தகப்பன் வழியில் மிகவும் நெருங்கிய உறவு. எனது தந்தையர் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து  SLAS  Officer ஆக பல பிற்ப்பட்ட பிரதேசங்களில் (மாற்றங்களை இரத்து செய்யாமல்) சேவை செய்து  நேர்மையான நிர்வாகத்தின் வழியாக உயர்ந்தவர். அந்த முறையில் அவர் தனது பிறந்த குடும்பத்திதிற்கு மிக உதவிகள் செய்தார். சீலனின் நண்பன் எனது தந்தையின் பெறா மகனாகவே இருந்தார்.
 
அன்றய (1982 - 1984) சிங்கள ராணுவதின் வட மாகாண கட்டளை அதிகாரியாக இருந்த குலோத்துங்க,  சீலனின் நண்பன் புலிகள் இயக்கத்தில் இருப்பதாய் மோப்பம் பிடித்து, அவரின் உறவினர் ஓர்  SLAS  Officer என்பதையும் அறிந்து, நாம் வாழ்ந்த இடத்திற்கு அடிக்கடி ஓர் படையணியுடன் வருவார். ஒவ்வொரு முறை  குலோத்துங்க வரும் போதும், எனது தந்தையரை நோக்கி "You are a highly ranked SLAS Officer, you must tell us truth" என்று கட்டளையிடும் குரலில் கூறுவார். எனது தந்தையாரும், "I am, will be and ever shall be loyal and faithful servant of government of Sri Lanka" என்று ஆணித்ததாரமாக பதிலளிப்பார்.                  

சீலன் அப்படி வீரமரணமடைந்து ஓர் 4-6  நேரத்தில், காலை 9.00 - 12.00 மணியளவில், குலோத்துங்க மிகவும் வெற்ற க்களிப்பான குரலில் எனது தந்தையாரின் பெயரை உரத்து கூவி அழைத்தவாறு எமது வீட்டிட்குள் வந்தார்.      

வழமையாக குலோதுங்க வரும் போது அவசரம் காட்டாமல், கிரகித்து கதைத்து, சிலவேளைகளில் சிற்றுண்டி மற்றும் தேனீர் அல்லது கூல் ட்ரிங்க்ஸ் எடுத்துவிட்டே புறப்படுவார்.

அன்று மிகவும் குதூகலத்தான பரபரப்புடன் ஓர் புகை படத்தை காட்டினார். அந்த புகை படத்தில் (எனது இப்போதைய நினைவில் கூட தங்கியிருக்கிறது) ஒருவர் இடது கண்ணிற்கு  கீழ் மிகவும் பெரிய ஓட்டையுடனும் நெற்றியில் சிறிய ஓட்டையுடனும், தலை முடி குழம்பியும் இருந்தது.

குலோதுங்க எனது தந்தையாரை பார்த்து  உமது உறவினர் (அவருயைடய பெயரை  சொல்லி) இவரா என்பதை அடையாளம் காண முடியுமா என்று கேட்டார்.

எனது தந்தையாரும், அந்த படத்தை பல கோணங்களில் கூர்மையாக பார்த்தும், சில நொடிகள் ஆழ்ந்து சிந்தித்தும், அந்த படத்தில் இருப்பவர் தனது உறவினராகவே பார்ப்பதற்கு தெரிகிறது என்று கூறினார்.

அப்படி எந்தது தந்தை கூறியது எனது தந்தைக்கும் அந்த உறவினரின்  (சீலனின் நண்பன்) அவரது குடுத்பத்திற்றகும் பெரிய கருது வேறுபாடு ஏற்றப்பட்டது எனப்து பிறிதொரு விடயம்.

எந்தது தந்தையாரை துரோகி என்று கூட அழைத்தார்கள்.

அதற்குப் பின்பு பல வருடங்கள் எனது தந்தையார் அதைபற்றிக் கதைக்கவில்லை.

அது பிற்கலத்தில் கடலில் சீலனின் நண்பன் மோதலில் மயக்கமுற்று சிங்கள கடடற்படை இடம் சிக்கிய சிக்கிய பொது அவர் சிங்கள அரசின் காணில் மண்ணைத்  தூவி கைதிகள் பரிமாற்றம் ஊடக வெளியே வருவதற்கு மிகவும் உதவியக  அமைந்தது.

பின்பு எனது தந்தையார் ஓர் இடத்தில சொன்னார், அன்று பார்க்கும் போது அந்த படத்தில் இருப்பவர் தனது பேரா மகன் தானா என்பதில் மிகவும் சந்தகேமிருந்தது. அவர் இறந்து இருக்கலாம் அல்லது உயிர் உடன் இருக்கலாம்.  ஆனால் அன்றய நிலையில், எனது பெறா மகன் official ஆக இறப்பதே எல்லாவற்றுக்கும் நல்லது. ஏனெனில் சிங்கள அரசு மற்றும் படைகளை பொறுத்தவரை, சீலனின் நண்பன் இறந்துவிட்டார். இனி அவரை நோக்கி சிங்கள அரசு கவனம் செலுத்தாது என்று.

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

... அதற்காக புலிகளால் செய்யப்பட்ட தவறுகளை பூசி மெழுகவேண்டியதில்லை.

இனி எதையும் பூசி மெழுகி ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்தப் படுகொலைகளில் ஈடுபட்ட பலர் பகிரங்கமாக தமது செயலுக்காக மன்னிப்பு கேட்கும் காலமிது. சகோதர படுகொலைகளை ஆதரித்தவர்கள் ஜெனீவாவில் தாம் மதிக்காத மனித உரிமை நீதி கேட்டு இறைஞ்சுவது சகஜமாகி விட்டது. 

எல்லா இயக்கங்களுமே தற்போதுள்ள வாள்வெட்டு குழுக்களின் பண்புகளுடன் தான் வளர்ந்தன அதே போல எல்லா பெரிய இயக்கங்களும் இந்தியாவால்  அதீதமாக வளர்க்கப் பட்டு பயன்படுத்தப் பட்டு பின்னர் அழிக்கப் பட்டன. இன்று நமக்கு முன்னாலுள்ள சவால்கள் புலிகளைப் பற்றியதல்ல என்பதைக் கருத்தில் கொண்டு எல்லா போராளிகளின் தியாகத்தையும் மதிக்கப் பழகுவோம்.

Link to comment
Share on other sites

27 minutes ago, Kadancha said:

சீலன் தனது வீரமரணத்தை தானே தனது வீரமரணத்தை தனது பதினம வயதில் இருந்து நண்பனாகவும் சக போராளியாகவும் இருந்தவரிடம் கட்டளையிட்டு பெற்றுக் கொண்டார்.

இதுவே புலிகளின் இராணுவ ஒழுக்கம், அதுவும் அன்றய நிலையில் (1983), என்பதின் மிக  குறைந்த எடுத்துக்காட்டு.

நீங்கள் குறிப்பிடும் நபர் அருணா என்று நம்புகிறேன். இவர் தான் புலிகள் செய்த 'கந்தன் கருணை' படுகொலையின் கதாநாயகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Alternative said:

நீங்கள் குறிப்பிடும் நபர் அருணா என்று நம்புகிறேன். இவர் தான் புலிகள் செய்த 'கந்தன் கருணை' படுகொலையின் கதாநாயகன்.

இது சரி. பெயர் குறிப்பிட விரும்பவில்லை. புலிகளின் ராணுவ ஒழுக்கமும், அது புலிகளின், தம்மை விட படைப்பாலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த படைகளை எவ்வாறு எதிகொள்ள உதவியது என்பதை சொல்லவே இதை ஓர் சிறு உதரணமாக குறிப்பிட்டேன்.

காத்தான் கருணை கொலைக்கும் அருணாவிடற்கு தண்டனை வழங்கப்பட்டது. புலிகளின் ராணுவ ஒழுக்கம் என்பது அமைப்பு விதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது.

இதே அருணா, மீசாலையில் இருந்த மறைவிடத்தை காட்டிக்கொடுத்த போலீஸ் பாலச்சந்திரனை கண்டம் துண்டமாக வெடிக் கொலை செய்ததையும் புலிகள் அமைப்பு ஏற்றுக்கொண்டது.    .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.