நவீனன்

சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு

Recommended Posts

6 minutes ago, ரதி said:

மற்ற இயக்கங்களை விட கட்டுக் கோப்பான இயக்கமாக  புலிகள் இருந்தார்கள்...அவர்களது தியாகங்களை நான் மதிக்கிறேன்.. அதற்காக அவர்கள் செய்தது எல்லாம் சரி என்றாகி விடாது .எங்களுக்கு ஒரு  நாடு வேண்டும் என்பதற்காக .அநியாயமாய் உயிர் நீத்தவர்களை மறக்கக் கூடாது....ஆனால்

புலிகள்  30 வருடம் போராடி,அவ்வளவு உயிர்கள் மாண்டும்  கண்ட பலன் என்ன?...மற்ற இயக்கங்கள் போல சிக்கிரமாய் அழிந்திருந்தால் அரைவாசி உயிராவது மிகச்சமாயிருக்கும்.

 30வருஷங்களாய் போராடி கண்ட பயன் ஒன்றுமில்ல, அதனால பல இயக்கங்கள்போல் சீக்கிரமாய் அழிந்தால் நல்லா இருக்கும் என்று, 20 வருஷங்களுக்கு மேல இயக்கத்தில் இருந்த   கருணா அம்மானால்......

எப்போதோ கண்டு பிடிக்க முடியாமல் போனதிற்கு ஏதாவது காரணமிருக்குமா?

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, சண்டமாருதன் said:

மேலே புத்தன் கூறியது போல் அக்காலகட்டத்தில் இப்படியான கதைகள் மிகப் பிரபலமாகக் கட்டிவிடப்பட்டது. இதற்காக ஒரு வானொலி சேவையே நடந்தது. மக்களை குழப்புவது.. இயக்கங்கள் மீதான நம்பிக்கையை சிதைப்பது என இந்திய உளவுத்துறை ஆதரவுடன் இந்த பிரச்சாரம் நடந்தது. அதனால் நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை. 

செல்லகிளி இறந்த காலத்தில் எந்த வானொலி இயங்கியது... விக்டர் இறந்த நேரத்தில் தமிழீழத்தில்  புலிகளை தவிர்த்து வேற ஏதாவது இயக்கம் இயங்கியதா?  தகவல் அறிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்...

Share this post

Link to post
Share on other sites
51 minutes ago, valavan said:

செல்லகிளி இறந்த காலத்தில் எந்த வானொலி இயங்கியது... விக்டர் இறந்த நேரத்தில் தமிழீழத்தில்  புலிகளை தவிர்த்து வேற ஏதாவது இயக்கம் இயங்கியதா?  தகவல் அறிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்...

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, கிருபன் said:

அப்போ விக்டர் இறந்தபோது  ஈபி ஆர் எல் எவ்  இருந்தது என்று சொல்கிறீர்கள் அப்படித்தானே?

Share this post

Link to post
Share on other sites

தலைவர்மார் பிழைவிட்டால் ஒன்று ஒதுங்கி போக வேண்டும். அல்லது சரியான இடத்தில் சேரவேண்டும். அதை விட்டுப்போட்டு 

இந்தியாவிடம் நல்ல பெயர் எடுக்க போட்டி போட்டு வடக்கு கிழக்கில் புலி என்று அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்தி கொலை செய்தவங்களும். 

இந்தியன் ஆமிக்கு தலை ஆட்டியாக திரிந்தவங்களும் . தமிழ் பெண்களை பிடித்து இந்தியன் ஆமிக்கு கூட்டி கொடுத்தவனும். அசோக கோட்டலில் அப்பாவி தமிழ் இளைஞர்களை புலி என்று குதவழியாக கோலா போத்தில் செருகி உள்ளே உடைச்சவனும். கண் நோய் என்று படுத்து இருந்த சக இயக்க போராளிகளை கடத்தி சுட்டவர்களும் . 

வெள்ளை வான் ஓடியவர்களும். பகிரங்க வதை முகாம் நடத்தியவர்களும். சென்றி பொயின்ரில் நின்று புலி என்று சாதாரண தமிழர்களை சும்மா காட்டிகொடுத்தவனும் தியாகியா 1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png? 

உங்கட படத்தை வேறு எங்கேயாவது ஓட்டுங்கோ. 

வவுனியாவில் காலில் சங்கிலியோடு ஒரு தமிழ் இளைஞனை பாதிரியார் காலில் விழுந்து காப்பாற்றுங்கோ என்று கதற.விட்டவனும் (BBC தமிழ் செய்தி அறிக்கையில் பரபரப்பா. பேசப்பட்டது )

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, கிருபன் said:

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

VOT(voice of tamileelam)என்ற வானோலி இருந்த ஞாபகம் கப்பலில் இருந்து ஒலிபரப்புகிறார்கள் என மக்கள் பேசிய‌ ஞாபகம்....சரியாக தெரியவில்லை....ம‌ற்றும்படி பிரச்சாரங்களை "பொட்டொ கொப்பி" எடுத்து விநியோகித்து ந‌ன்றாகவே  சகல இயக்கங்களும் செய்தனர்

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, valavan said:

அப்போ விக்டர் இறந்தபோது  ஈபி ஆர் எல் எவ்  இருந்தது என்று சொல்கிறீர்கள் அப்படித்தானே?

ஆம். விக்டர் வீரமரணம் அடைந்தது 1986 ஒக்டோபர் 12ந் தேதி.

கூகிளில் தேடியபோது கிடைத்த தகவல்:

மார்கழி 13, ஈபிஆர்எல்எவ் மீது தனது திட்டமிட்ட தாக்குதலை பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் மேற்கொண்ட நாள்.

1986 ஏப்ரல் 29  ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து நரவேட்டையாடிய புலிகள் மே 6ம் திகதி ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் சுட்டுக்கொன்றனர்.

1986 அக்டோபர் புளட் இயக்க அங்கத்தவர்களை அச்சுறுத்தி அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டளையிட்டனர். அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்து  புளொட் இயக்கத்தின் செயற்பாடுகளையும் முடக்கியிருந்தனர்.

1986 மார்கழி 13 அன்று ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் தொடுத்து ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகள் தடை ஏற்படுத்திய பின்னர் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய, தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஆதரவை பெற்றிருந்த, 5 இயக்கங்களில் ஈரோஸ் மட்டுமே எஞ்சியிருந்தது.

ஈரோஸ் எஞ்சியிருந்த போதும் அது புலிகளிடமிருந்து தப்பிப்பதற்காக கையாண்ட ஒரே தந்திரம் புலிகளை புலிகளை விமர்சிப்பதை தவிர்த்துக்கொண்டதுதான். இதனால், புலிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் போய் அதன் ஒரு பகுதி புலிகளுடனேயே சங்கமமாகவேண்டி ஏற்பட்டது.

ஈரோஸ் இயக்கம் புலிகளால் தடைசெய்யப்படாதிருந்த போதும் 1986 மார்கழி 13 இல் ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் தாக்குதல் தொடுத்ததன் பின்னர் புலிகளின் அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற, புலிகளின் தவறான போக்குகளை சுட்டிக்காட்டுகின்ற செயற்பாடு முடிவுக்கு வந்துவிட்டது.

ரெலொ இயக்கம்  மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போது ஈபிஆர்எல்எவ் அதனை கண்டித்து பிரச்சாரங்களை மேற்கொண்டது. விஜிதரன் கடத்தப்பட்ட போது அதற்கெதிராக நடாத்தப்பட்ட மக்கள் போராட்டங்களுக்கும் ஈபிஆர்எல்எவ் பக்கபலமாக இருந்தது.

....

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, valavan said:

செல்லகிளி இறந்த காலத்தில் எந்த வானொலி இயங்கியது... விக்டர் இறந்த நேரத்தில் தமிழீழத்தில்  புலிகளை தவிர்த்து வேற ஏதாவது இயக்கம் இயங்கியதா?  தகவல் அறிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்...

இந்திய இராணுவ வருகையோடுதான் வானொலிகள் முளைத்தது. கப்பலில் இருந்து ஒலிபரப்பினார்களா இல்லை வவுனியாவில் இருந்து ஒலிபரப்பினார்களா என்பது தெரியாது ஆனால் வன்னி எங்கும் கேட்க கூடியதாக இருந்தது. புலிகள் மீதான அவதூறு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. அதில் தான் அனேகமான கட்டுக்கதைகள் பரப்பப் பட்டது. 

10 hours ago, கிருபன் said:

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

மேலே கிருபன் கூறியது போல் 86 ஒக்டோபரில் விக்டர் வீரச்சாவு அடைந்தார். டிசம்பர் மாதம் திருவெண்பா பூசை நடக்கும் காலத்தில் தான் ஈபிஆர் எல் எவ் தடைசெய்யப்பட்டது. விக்டர் வீரச்சாவு அடைந்த போது மாங்குளம் இராணுவ முகாமில் இருந்து ராணுவம் வெளியேறதவாறு ஈபிஆர்எல்எவ்  இயக்கத்தினர் காவலில் இருந்தனர்.  மாங்குளம் இராணுவ முகாம் மீது அவ்வப்போது செல்தாக்குதலும் செய்தனர். ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் வீரசிங்கம் என்ற போராளியே இவற்றுக்கு பொறுப்பாக இருந்தார். அக்காலப்பகுதியில் மாங்குளம் ராணுவத்தினர் காடுவளியாக வந்து மாங்குளம் துணுக்காய் வீதியில் வைத்து வீரசிங்கத்தை பதுங்கியிருந்து சுட்டுக்கொன்று மூன்று முறிப்பு சந்தியில் அவர் உடலை கட்டி தொங்கவிட்டனர். 

Share this post

Link to post
Share on other sites

சிறீ சபாரத்தினம்  கொலை  செய்யப்பட்டது 

புலிகள்  ரெலோ  சம்பந்தப்பட்டதாக  பார்க்கப்பட்டிருந்தால்

எப்பொழுதோ அது  மன்னித்து மறந்து விடப்பட்டிருக்கும்

இதை  தூக்கி  திரிபவர்களும்

கொழுத்தி விடுபவர்களும்

விடுதலையின் எதிரிகளும் துரோகிகளுமே

அதை  ஒரு போதும் அவர்கள்  விடப்போவதில்லை

எனவே   அந்த  தாக்குதலில் ரெலோவின்  கை  முன்னேறி  புலிகள்  அழிந்திருந்தாலும்

அவர்கள் இதையே  தான்  செய்து கொண்டிருப்பர்

மேலே எழுதப்பட்ட  பலரது  முகங்களும் நாம்  அறிந்தவையே

தொடருங்கள்☹️☹️☹️

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, சண்டமாருதன் said:

இந்திய இராணுவ வருகையோடுதான் வானொலிகள் முளைத்தது. கப்பலில் இருந்து ஒலிபரப்பினார்களா இல்லை வவுனியாவில் இருந்து ஒலிபரப்பினார்களா என்பது தெரியாது ஆனால் வன்னி எங்கும் கேட்க கூடியதாக இருந்தது. புலிள் மீதான அவதூறு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. அ

இந்திய ஆமிக்கு முன்னரே புலிகள் கோப்பாயிலிருந்து வானொலி ஒலிபரப்பினார்கள்.

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, சண்டமாருதன் said:

இந்திய இராணுவ வருகையோடுதான் வானொலிகள் முளைத்தது. கப்பலில் இருந்து ஒலிபரப்பினார்களா இல்லை வவுனியாவில் இருந்து ஒலிபரப்பினார்களா என்பது தெரியாது ஆனால் வன்னி எங்கும் கேட்க கூடியதாக இருந்தது. புலிகள் மீதான அவதூறு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. அதில் தான் அனேகமான கட்டுக்கதைகள் பரப்பப் பட்டது. 

நான் கேள்விப்பட்டவரையில் புளொட்டினால்தான் முதன்முதலில் 85ம் ஆண்டளவில் வானொலி ஆரம்பிக்கப்பட்டது,மண்டைதீவு வானொலி நிலையத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்ட வானொலி உபகரனங்களை வைத்து ஆரம்பித்தார்கள் என்று அறிந்தேன் .. நான் அறிந்தது 100% சரியா இருக்குமோ தெரியாது.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, valavan said:

நான் கேள்விப்பட்டவரையில் புளொட்டினால்தான் முதன்முதலில் 85ம் ஆண்டளவில் வானொலி ஆரம்பிக்கப்பட்டது,மண்டைதீவு வானொலி நிலையத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்ட வானொலி உபகரனங்களை வைத்து ஆரம்பித்தார்கள் என்று அறிந்தேன் .. நான் அறிந்தது 100% சரியா இருக்குமோ தெரியாது.

போராளிகள் இந்தியாவுக்கு தொடர்புகொள்ள வைத்திருந்த 
தொலைத்தொடர்பு சாதனமே 18 மையில் சுற்றளவுக்கு ஒரு குறித்த 
சோர்ட் வெவ் வழியாக ஒலிபரப்பு செய்ய போதுமானதாக இருந்தது.

84 தொடக்கத்திலேயே புலிகள் சிங்கள ஒலிபரப்பை அடிக்கடி 
இடை அறுக்க தொடக்கி இருந்தார்கள்.

கோண்டாவிலில் இருந்த புலவர் வீடியோவில் இருந்த ஒருவர் 
வானொலி சார்ந்து சில புலமை கொண்டிருந்தார் அவரே புளொட்டின் 
ஒலிபரப்பை மாலை 6 தொடக்கம் 9 வரை செய்து வந்தார் ..மண்டைதீவு  
உபகரணங்கள் பெரிதாக உதவவில்லை.

புலிகளின் நிதர்சனம் பின்பு சில ஒலிபரப்புகளை செய்தார்கள் 
அது புளட்டிடம் இருந்து பறித்து எடுத்து செய்தார்களோ தெரியவில்லை.
புலிகளின் குரல் உத்தியோக பூர்வமாக 1990இல் தான் ஒலிபரப்பு செய்ய தொடங்கினார்கள்.

கலண்டர் அடிக்கிறது படம் போடுறது கூட்ட்டம் வைக்கிறது 
என்று பிரச்சார வேலைகளில் புலிகளை விட 
டெலோவும் புளட்டும்தான் முன்னிலை வகித்தார்கள்.

புலிகள் இராணுவ முகம் போலீஸ் நிலைய தகர்ப்பு என்று 
ஈழ விடுதலைக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். 

  • Like 5

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Maruthankerny said:

என்று பிரச்சார வேலைகளில் புலிகளை விட 
டெலோவும் புளட்டும்தான் முன்னிலை வகித்தார்கள்.

புலிகள் இராணுவ முகம் போலீஸ் நிலைய தகர்ப்பு என்று 
ஈழ விடுதலைக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். 

ஆயிரத்தில் ஒர் வார்த்தை

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Maruthankerny said:

கலண்டர் அடிக்கிறது படம் போடுறது கூட்ட்டம் வைக்கிறது 
என்று பிரச்சார வேலைகளில் புலிகளை விட 
டெலோவும் புளட்டும்தான் முன்னிலை வகித்தார்கள்.

புலிகள் இராணுவ முகம் போலீஸ் நிலைய தகர்ப்பு என்று 
ஈழ விடுதலைக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். 

அனைத்து இயக்கங்களும் இருந்த காலத்தில் புலிகளால் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது, எந்த ராணுவ முகாம்களும் தாக்கியழிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன், கொக்கிளாய் மட்டுமே ,முயற்சி செய்தார்கள் ஆனால் வெற்றியளிக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் மிக பெரும் எண்ணிக்கையில் போராளிகளை இழந்ததும் அந்த தாக்குதல் என்றுதான் நினைக்கிறேன்...ஆனால் ஆரம்பத்திலிருந்து அஸ்தமனம்வரை புலிகளிடம் மட்டுமே 100% போர் குணம் இருந்தது என்பதை மறுக்க யாருமே இல்லை.

Share this post

Link to post
Share on other sites
On 5/11/2018 at 11:16 AM, ரதி said:

சுகன்,நீங்கள் நியாயமாக கருத்து எழுதுவீர்கள் என்று நினைத்தேன்....நான் எல்லாப் படுகொலைக்கும் ,சகோதர யுத்தத்திற்கும் புலிகளும்,தலைவரும் மட்டும் தான் காரணம் என்று எங்குமே எழுதியதில்லை.

//இயக்கங்கள் மோதிக்கொண்டது சகோதரக் கொலைகளும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி பிரபாகரன் தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியராக முடியாது.//

இவ்வாறு நான் எழுதியதற்கு உங்கள் புரிதல் வேறாக இருக்கின்றது. அதையிட்டே இப்பதிலை எழுதவேண்டியுள்ளது. 

பிரபாகரன் என்ற ஒருவரை குற்றவாளியாக்கி தனது அனைத்து சமூக முரண்பாடுகளினதும் அதனூடான வககிரங்களில் இருந்தும் ஏனையவர்கள் நல்லவர்களாக முற்படுகின்றனர். தம்மை யோக்கியராக முன்நிறுத்த முற்படுகின்றனர். இங்கு ஏனையவர்கள் என்பது மற்ற இயக்கங்களை குறிப்பதல்ல. ஒட்டுமொத்தமாக எம் அனைவரையும் குறிப்பதாகும். 

முனனர் நடந்த ஒரு சகோதரச் சண்டையின் பின்புலத்திலேயே இக் கருத்தாடலை நாம் செய்கின்றோம். இதன் நோக்கம் சாதகமாக இருப்பபதே தேவையானது.  அச் சண்டையின் தனமையை நாம் தக்கவைக்க முற்படுவோமானால் அச் சணடை என்னுமொரு காலத்தில் வேறு ஒரு வடிவத்தில் தொடரும். 

இவனை அவன் மண்டையில் போட்டான் அவனை இவன் மண்டையில் போட்டான் என்று சகோதரச் சண்டையில் ஈடுபட்ட எவரையும் நான் எதிரியாக வெறுப்புடன் அணுகியதில்லை. அதனால் தான் எனது முந்தய கருத்துக்கள் மாற்று இயக்கம் எனப்படுவோர் சார்பாக ஒட்டுக்குளு எனப்படுவோர் சார்பாக கருணா போன்றவர்கள் சார்பாக பல சர்ச்சைகளை கொண்டிருக்கின்றது. ஏனெனில் இச் சண்டைகளுக்கன காரணம் என்ன எமக்குள் ஒருவரை ஒருவர் போட்டுக்கொள்ளும் மனநிலை உளவியல் பின்னணி எங்கிருந்து வருகின்றது என்பதே எனது தேடல். அதில் ஏதாவது பிரயோசனம் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  கீழ் கண்ட திரியில் காணலாம்.

On 5/11/2018 at 11:16 AM, ரதி said:

சிறி சபாரத்தினத்தினத்தை புலிகள்  கொலை செய்ததை ஓரளவு மன்னிக்கலாம்....அவரை புலிகள் சுடாட்டில் அவர் புலியை அழித்திருக்க கூடும் ...அந்த நேரத்தில் லங்கா புவத் உட்பட பல பலரும் வதந்தீகளை பரப்பிக் கொண்டு இருந்தனர் . இப்பவும்  பரப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்....ஆனால் குட்டிமணி விடயத்தில்  தலைவரில் தான் முழுப் பிழையும்... இது பற்றி நான் மேலும் எழுத விருப்பமில்லை...மேலே பகலவன் சிறி சபா, நளினியை வைத்திருந்தவர் என எழுதி இருக்கிறார் அதற்கு ஆதாரம் இருக்கா?....புலிகளை பற்றியோ அல்லது தலைவரைப் பற்றியோ ஏதாவது கதைத்தால் .அது வதந்தி ஆனால் மற்றவர்களை பற்றிக் கதைத்தால் அது உண்மை

கருணா மடடக்களப்பான்.பிரதேசவாதம் கதைக்கிறார். துரோகி எண்டால் பதுமனும் அப்படியா?
ஏன் சூசை அண்ணா குடும்பத்தோட தப்பி ஓட வெளிக்கிடடவர்?
எப்படி அதிக வெறுப்பு கூடாதோ அதே மாதிரி அதீத நம்பிக்கையும் கூடாது

மற்ற இயக்கங்களை விட கட்டுக் கோப்பான இயக்கமாக  புலிகள் இருந்தார்கள்...அவர்களது தியாகங்களை நான் மதிக்கிறேன்.. அதற்காக அவர்கள் செய்தது எல்லாம் சரி என்றாகி விடாது .எங்களுக்கு ஒரு  நாடு வேண்டும் என்பதற்காக .அநியாயமாய் உயிர் நீத்தவர்களை மறக்கக் கூடாது....ஆனால் புலிகள்  30 வருடம் போராடி,அவ்வளவு உயிர்கள் மாண்டும்  கண்ட பலன் என்ன?...மற்ற இயக்கங்கள் போல சிக்கிரமாய் அழிந்திருந்தால் அரைவாசி உயிராவது மிகச்சமாயிருக்கும்.

உங்களோடு உரையாடியதில் மகிழ்சசி....நன்றி ,வணக்கம்

எங்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பதன் அடிப்படையே சிங்களவர்களிடம் இருந்து உயிரை பாதுகாப்பது என்றது தான். நாம் புலம்பெயர்ந்து உயிரைப் பாதுகாத்துள்ளோம்.. தாயகத்தில் மிஞ்சியவர்கள் சிங்களவரின் அதிகாரத்தின் கீழ் வாழ்வது என்ற நிலையில் தமதுயிரை பாதுகாத்துள்ளனர்.  

முப்பது வருடமாக போராடி கண்ட பலன் என்ன (மேலே பதில்) என்று வேறு ஒரு இனத்தவர் எம்மைப் பார்த்துக் கேட்க அதற்கு நாம் என்ன பதில் வைத்திருக்கின்றோம் என்பதும் எமக்குள் இக்கேள்வியை கேட்டு என்ன பதிலை தேடியுள்ளோம் என்பதும் தான் முக்கியம்  ஆனல் பதிலை கூறவேண்டிய நாம் இக்கேள்வியுடனே இலகுவாக நின்று கொள்கின்றோம். இல்லையேல் இருக்கவே இருக்கின்றது ஒரு பதில் அதுவானது பிரபாகரன் என்ற பெயரை சுட்டிக்காட்டுவது. 

On 5/11/2018 at 11:16 AM, ரதி said:

சுகன்,நீங்கள் நியாயமாக கருத்து எழுதுவீர்கள் என்று நினைத்தேன்

-------------------------

உங்கள் பதில்களுக்கும் நன்றி... 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, சண்டமாருதன் said:

//இயக்கங்கள் மோதிக்கொண்டது சகோதரக் கொலைகளும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி பிரபாகரன் தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியராக முடியாது.//

இவ்வாறு நான் எழுதியதற்கு உங்கள் புரிதல் வேறாக இருக்கின்றது. அதையிட்டே இப்பதிலை எழுதவேண்டியுள்ளது. 

பிரபாகரன் என்ற ஒருவரை குற்றவாளியாக்கி தனது அனைத்து சமூக முரண்பாடுகளினதும் அதனூடான வககிரங்களில் இருந்தும் ஏனையவர்கள் நல்லவர்களாக முற்படுகின்றனர். தம்மை யோக்கியராக முன்நிறுத்த முற்படுகின்றனர். இங்கு ஏனையவர்கள் என்பது மற்ற இயக்கங்களை குறிப்பதல்ல. ஒட்டுமொத்தமாக எம் அனைவரையும் குறிப்பதாகும். 

முனனர் நடந்த ஒரு சகோதரச் சண்டையின் பின்புலத்திலேயே இக் கருத்தாடலை நாம் செய்கின்றோம். இதன் நோக்கம் சாதகமாக இருப்பபதே தேவையானது.  அச் சண்டையின் தனமையை நாம் தக்கவைக்க முற்படுவோமானால் அச் சணடை என்னுமொரு காலத்தில் வேறு ஒரு வடிவத்தில் தொடரும். 

இவனை அவன் மண்டையில் போட்டான் அவனை இவன் மண்டையில் போட்டான் என்று சகோதரச் சண்டையில் ஈடுபட்ட எவரையும் நான் எதிரியாக வெறுப்புடன் அணுகியதில்லை. அதனால் தான் எனது முந்தய கருத்துக்கள் மாற்று இயக்கம் எனப்படுவோர் சார்பாக ஒட்டுக்குளு எனப்படுவோர் சார்பாக கருணா போன்றவர்கள் சார்பாக பல சர்ச்சைகளை கொண்டிருக்கின்றது. ஏனெனில் இச் சண்டைகளுக்கன காரணம் என்ன எமக்குள் ஒருவரை ஒருவர் போட்டுக்கொள்ளும் மனநிலை உளவியல் பின்னணி எங்கிருந்து வருகின்றது என்பதே எனது தேடல். அதில் ஏதாவது பிரயோசனம் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  கீழ் கண்ட திரியில் காணலாம்.

எங்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பதன் அடிப்படையே சிங்களவர்களிடம் இருந்து உயிரை பாதுகாப்பது என்றது தான். நாம் புலம்பெயர்ந்து உயிரைப் பாதுகாத்துள்ளோம்.. தாயகத்தில் மிஞ்சியவர்கள் சிங்களவரின் அதிகாரத்தின் கீழ் வாழ்வது என்ற நிலையில் தமதுயிரை பாதுகாத்துள்ளனர்.  

முப்பது வருடமாக போராடி கண்ட பலன் என்ன (மேலே பதில்) என்று வேறு ஒரு இனத்தவர் எம்மைப் பார்த்துக் கேட்க அதற்கு நாம் என்ன பதில் வைத்திருக்கின்றோம் என்பதும் எமக்குள் இக்கேள்வியை கேட்டு என்ன பதிலை தேடியுள்ளோம் என்பதும் தான் முக்கியம்  ஆனல் பதிலை கூறவேண்டிய நாம் இக்கேள்வியுடனே இலகுவாக நின்று கொள்கின்றோம். இல்லையேல் இருக்கவே இருக்கின்றது ஒரு பதில் அதுவானது பிரபாகரன் என்ற பெயரை சுட்டிக்காட்டுவது. 

-------------------------

உங்கள் பதில்களுக்கும் நன்றி... 

சுகன், நான் இது திரியில் தொடர்ந்து எழுதுவதில்லை என்று தான் இருந்தேன்.ஆனால் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவைப்பாடு  உள்ளது.

முதலில் எனது தவறுதலான புரிதலால் உங்கள் மனதை நோகப் பண்ணியிருப்பின் அதற்காக மன்னிப்பு கேட்க்கிறேன்.

மற்ற இயக்கங்கங்களை எல்லாம் தோக்கடித்து தன்னால் மட்டும் தான் தமிழீழம் எடுத்து தர முடியும் என்று சொல்லி கடைசி வரை போராடி மக்களை நிற்கதியாய் விட்டுட்டுப் போனவர் தானே! அவரை நோகாமல் வேறு யாரை நோவது 

வேண்டுமானால் சகோதர சண்டையை வேடிக்கை பார்த்தவர்கள் தங்கள் மட்டும் தப்பினால் காணும் என்று நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள்,புலிகளை உசுப்பேத்தினவர்கள், புலிகளை நம்பினால் காணும் அவர்கள் தமிழீழம் எடுத்து தருவார்கள் என நம்பின மக்கள் .....அப்படி எல்லோரும் பொறுப்பு கூற வேண்டும் என சொல்ல வருகிறீர்களோ என்னவோ?....எது எப்படி என்டாலும் முழுப் பொறுப்பும்,பிழையும் தலைவர் தானே!....ஒரு கதைக்கு அவர் இந்த யுத்தத்தில் வென்றிருந்தால் தலைவர் வென்றிடடார். தமிழீழம் எடுத்து தந்திடடார் என்று தானே சொல்லுவோம்.

வெற்றியை பொறுப்பு ஏற்கும் ஒருவர் தோல்வியையும் பொறுப்பு ஏற்கத் தான் வேண்டும் 

Share this post

Link to post
Share on other sites

வெற்றிக்கு பல தகப்பன்கள் தோல்விக்கு ஒருவனே .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.