-
Tell a friend
-
Topics
-
Posts
-
இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா (நமது நிருபர்) இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறவில்லை. பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லை. எனவே இலங்கை குறித்து கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. இது இவ்வாறிருக்க இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. எனவே இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக கனடா அறிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய பிரதான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்காவின் இராஜாங்க செயலர் அன்டனி பிலிங்கன் மற்றும் கனடாவின் வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னு ஆகியோர் இவற்றை வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நேற்று பிற்பகல் வரை 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வுகள் நடைபெற்றன. இதில் பல்வேறு உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்புரிமையற்ற நாடுகளும் உரையாற்றின. அந்த வகையில் நேற்றைய தினம் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் உரையாற்றின. இலங்கை தொடர்பான விவாதம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில் அதற்கு முன்னதான பிரதான அமர்விலேயே அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் இவ்வாறு உரையாற்றின. அமெரிக்கா ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராஜாங்க செயலர் அன்டனி பிலிங்கன் தனது பிரதான உரையில் இலங்கை தொடர்பாக குறிப்பிடுகையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறாமல் இருப்பதால் இலங்கை குறித்து கொண்டுவரப்படும் பிரேரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க வேண்டும். முக்கியமாக கடந்தகால அட்டூழியங்கள் குறித்த பொறுப்புக்கூறல்கள் போதுமானதாக இல்லை என்றார். கனடா இதேவேளை கனடாவின் வெளியுறவு அமைச்சர் மார்க் பிரதான அமர்வில் உரையாற்றுகையில், இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை காப்பாளர்கள் சிவில் சமூக அமைப்புகள் போன்றன அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றமை தொடர்பில் கரிசனை செலுத்தி இருக்கின்றோம். அதுமட்டுமன்றி நினைவுகூரல் தொடர்பான அடக்குமுறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இருக்கின்றோம். மேலும் சிறுபான்மை மத மக்களின் சடலங்களை எரிப்பது தொடர்பான தீர்மானம் குறித்தும் சட்டத்தின் ஆட்சி படுத்தல் மோசமடைகிறது செல்கின்றமை தொடர்பாகவும் நாங்கள் அவதானம் செலுத்தி வருகின்றோம். இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை இந்த மனித உரிமைப் பேரவை இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டி இருக்கிறது. அந்த வகையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா | Virakesari.lk
-
பச்லெட்டின் அறிக்கையினை இலங்கை முற்றாக நிராகரிக்கிறது - தினேஷ் குணவர்தன ரொபட் அன்டனி இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விடுத்த அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது. இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை. இதனூடாக ஐ.நா. மனித உரிமை சாசனம் மீறப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் வெளியிட்டதை அடுத்து பதிலளித்து உரையாற்றும் சந்தர்ப்பத்தில் இலங்கையிலிருந்து இணையவழியில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார். அவர் அந்த உரையில் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது, கடந்த ஆண்டு இந்த சபையின் 43வது அமர்வில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தீர்மானம் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து வெளிவருகின்றது. உயர் ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது. இது ஐ.நா. சாசனத்தின் 2 (7) வது பிரிவை முழுமையாக மீறும் செயலாகும். இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது. இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவையாகும். உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. ஐ.நா. மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தொடர்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு வரும் இலங்கை போன்ற ஒரு நாடு தொடர்பாக, சொத்து முடக்கம், பயணத் தடைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய குறிப்புக்கள் சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனிக்க வேண்டிய ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவல்கள், தவறான கருத்துக்கள் மற்றும் தன்னிச்சையான மதிப்பீடுகள் குறித்து இலங்கை எழுத்துபூர்வ கருத்துக்களை வழங்கியுள்ளது. உயர் ஸ்தானிகர் அலுவலகம் தனது அறிக்கையை முன்னெப்போதும் இல்லாத பிரச்சாரத்துடன் இணைந்து வெளியிட்டமை மற்றும் குறித்த அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களை ஒரு துணை நிரலாக வெளியிட மறுத்தமை ஆகியன வருத்தமளிக்கின்றது. இதுபோன்ற செயன்முறைகள் ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும். அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக நாங்கள் வருந்துகின்றோம். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் அரசியலமைப்பிற்கு இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக இந்த ச சபையுடன் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார். பச்லெட்டின் அறிக்கையினை இலங்கை முற்றாக நிராகரிக்கிறது - தினேஷ் குணவர்தன | Virakesari.lk
-
By பிழம்பு · பதியப்பட்டது
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 24.02.21 தொடக்கம் இரண்டாவது நாளாக இன்று(25) வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூளியர்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை தொழில் சங்க ஒன்றியம் பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பிற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்கள். சுகாதார அரச ஊழியர்களுக்குரிய பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இன்று மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களை வரவேற்பதில் இருந்து மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்வது வரை முழு பணிகளையும் படையினரே மேற்கொண்டு வருகின்றார்கள். படையினரின் இந்த நடவடிக்கையால், படையினரை கொண்டு மக்கள் சேவையினை அரசு மேற்கொள்ளுமாக இருந்தால் அரச உத்தியோகத்தர்கள் எதற்கு என்ற கேள்வி முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது. மேலும், சிவில் நடவடிக்கைகளில் படையினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளமையை எடுத்துக்காட்டும் செயற்பாடாக அமைந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ மயப்படுத்தலின் உச்ச நிலையை காட்டுவதாகவும் முல்லைத்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு: வைத்தியசாலை கடமையில் இராணுவத்தினர்...! | Virakesari.lk -
By அக்னியஷ்த்ரா · Posted
தன்னின பெண் தின்னிகள்-தலைவனை தன் தலைவன் என்பர், சிற்றிடை வெளியில்-தன் கரம் அவன் திணித்த கொடியையும் ஆட்டுவர், தன்னினவழிப்பின் -நாயகர்களுடன் சேர்ந்து வாழல் பாக்கியம் என்பர். தீர்வு-பொய்யுரைத்து வாசஸ்தலம் பெற்றுக்காட்டுவர், தெய்வத்தையும் வஞ்சித்து பொய்யுரைப்பர், வருடந்தோறும் திருநாள்களில் வஞ்சக தீர்வு தருவர், பாதீட்டிலும் பங்கீட்டு -2 கோடிகளிலும் மக்களை தெருக்கோடி தள்ளுவர்,மாவீரர்களை புலித் தீவிரவாதிகளென்பர் திரும்புமிடமெல்லாம் தமிழர் செய்த இனத்தூய்மை என்பர், கள்ள வாக்கு களவாணித்தனத்தை கௌரவப்படுத்துவர்- முஸ்லிம் மக்களிடம் தமிழரை விற்றுக் காட்டுவர், மகிழுந்து, சட்டத்தரணி பதவிக்காக காலை நக்குவர். ஏக்கிய ராஜ்யத்தில் தமிழிலக்கியத்தை தோற்க வைப்பர், இந்திய தீனிக்காக தமிழரை காய வைப்பர் ஐயோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட வால்களை நினைத்து -
By பிழம்பு · பதியப்பட்டது
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மத்திப்பீட்டு அறிக்கை மிகவும் கவலையளிக்கிறது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை மற்றும் அவரது உரையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த பின்னர் மனித உரிமைகள் தொடர்பான 7 தீர்மானங்களை இந்த பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது. அதே போன்று இலங்கையுடன் அதன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் அயலான் என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விடயத்தில் முன்னின்று செயற்படுகின்றது. எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது. அதாவது இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு மற்றும் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடுள்ளது. இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம் . எனவே, தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது. நல்லிணக்க செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய அபிலாஷைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையை கேட்டுக்கொள்கிறோம். மோதலின் பின்னரான 12 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து உயர் ஸ்தானிகரின் மதிப்பீடு கவலைகயளிக்கிறது. இது குறித்து இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டையும் மதிப்பீடு செய்வதிலேயே இந்த பிரச்சினைக்கு நீடித்த மற்றும் பயனுள்ள தீர்வைக் காண முடியும். இதற்கான உறுதிப்பாட்டின் மூலம் நாம் வழிநடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு பங்களிப்பு செய்யும் : ஜெனிவாவில் இந்தியா | Virakesari.lk
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.