கருத்துக்கள உறவுகள் suvy Posted October 3, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 3, 2018 நான்கூட யதியையும் , வேள்பாரியையும் கேட்கலாம் என்றிருந்தேன், இங்கு மகுடமே அந்தரத்தில் தொங்குது.....! ? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted October 3, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 3, 2018 யாழ் களத்தின் பிரியர்களின் மீதான அன்பிலால்தானே நவீனன் மினக்கெட்டு இணைக்கின்றவர். அவர் யாழுக்கு வராத இந்த சில நாட்களில் சில திரிகள் அந்தரத்தில் தொங்குவதால் வேறு யாரும் தொடர்ந்து இணைத்து உதவி செய்தால் பெரிதும் சந்தோஷம் அடைவார் என்று நினைக்கின்றேன். யாழ் களத்தின் பிரியர்கள்தானே முக்கியம். இணைப்பவர்கள் இல்லைத்தானே! Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted October 3, 2018 Share Posted October 3, 2018 ரத்த மகுடம் குங்குமத்தில் இருந்து ஒட்டப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒரு கேள்வி: இத் தொடர் குங்குமம் இதழுக்கு மாதா மாதம் சந்தா கட்டி வாசிப்பவர்களுக்கான தொடரா? ஓம் எனில், அதனை யாழில் தொடராது விடுவதே சரியானதாக இருக்கும். 'வேள்பாரி' விகடனில் சந்தா கட்டியவர்கள் வாசிப்பதற்கானது. ஒரு கட்டணம் கட்டி வாசிக்கப்படும் கட்டுரைகள் / தொடர்கள் யாழில் இலவசமாக பகிரப்படுவது சரியானதும் நேர்மையானதுமான ஆக இருக்காது.(விதிவிலக்காக, ஈழ பிரச்சனைகள் பற்றி வரும் கட்டுரைகள் புலம்பெயர் எழுத்தாளர்களின் செவ்விகள் என்பன காலத்திற்கேற்ற அவசியமான பதிவுகள் எனில் பிரசுரிக்கலாம்) யதி தொடரும் சந்தா கட்டியவர்களுக்கான தொடர் எனில் அதனை தொடராது விடுவது நல்லம். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் Posted October 3, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 3, 2018 On 10/2/2018 at 8:27 AM, கிருபன் said: இப்படியான சரித்திரத் தொடர்கதைகளை நான் இப்போது வாசிப்பதில்லை. நவீனன் வேறு இணைக்காமல் வாசகர்களை அந்தரத்தில் விட்டுவிட்டு அம்போ என்று போய்விட்டார். ? குங்குமம் வெட்டி ஒட்டுவதில் பிரச்சினை தராவிட்டால் உங்களுக்காகவாவது வெட்டி ஒட்ட முயற்சிக்கின்றேன். என்ன படிக்காததை இணைப்பதில்லை என்ற பொலிஸியை கைவிடவேண்டும். ? முன்பு தொடக்கமே சரித்திர நாவல்கள் என்றால் படித்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது. உங்கள் பொலிசியைக் கைவிடுவதால் ஒரு கப்பலும் கவிழாது தானே. மிக்க நன்றி கிருபன்.? 18 hours ago, அபராஜிதன் said: நான் தொடர்ந்து படிக்கும் ஒரு பகுதி, கிருபன் முடிந்தால் தொடர்ந்தும் இணையுங்கள்..அது சரி நவீன்ன் க்கு என்ன ஆச்சு ? நவீனன் உப்பிடித்தான் தொடர்களைத் தொடங்கிவிட்டு இடையில் மறந்திடுவார். அதனாலேயே அவரின் தொடர்களை வாசிக்கப் பயம். சரித்திர நாவல் என்றதால் வேறு வழியின்றி வந்திட்டன்.? 4 hours ago, நிழலி said: ரத்த மகுடம் குங்குமத்தில் இருந்து ஒட்டப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒரு கேள்வி: இத் தொடர் குங்குமம் இதழுக்கு மாதா மாதம் சந்தா கட்டி வாசிப்பவர்களுக்கான தொடரா? ஓம் எனில், அதனை யாழில் தொடராது விடுவதே சரியானதாக இருக்கும். 'வேள்பாரி' விகடனில் சந்தா கட்டியவர்கள் வாசிப்பதற்கானது. ஒரு கட்டணம் கட்டி வாசிக்கப்படும் கட்டுரைகள் / தொடர்கள் யாழில் இலவசமாக பகிரப்படுவது சரியானதும் நேர்மையானதுமான ஆக இருக்காது.(விதிவிலக்காக, ஈழ பிரச்சனைகள் பற்றி வரும் கட்டுரைகள் புலம்பெயர் எழுத்தாளர்களின் செவ்விகள் என்பன காலத்திற்கேற்ற அவசியமான பதிவுகள் எனில் பிரசுரிக்கலாம்) யதி தொடரும் சந்தா கட்டியவர்களுக்கான தொடர் எனில் அதனை தொடராது விடுவது நல்லம். அப்படி என்றால் அவர்கள் சந்தா கட்டுபவர்கள் மட்டும் வாசிக்கும்படி செய்திருக்க வேண்டும். போக ஒரு தொடரை ஆரம்பித்து இத்தனை கடந்தபின் நீங்கள் இப்படிக்கூறுவது நல்லதில்லை. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted October 3, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 3, 2018 ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் 20 ‘‘என்ன சொல்கிறீர்கள்..?’’பதற்றத்துடன் கேட்ட சிவகாமி அவன் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தாள். இம்முறை அவளை கரிகாலன் தடுக்கவில்லை. மாறாக, ‘‘அங்குதான் ஹிரண்ய வர்மர் நமக்காகச் சேகரித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன..!’’ என்பதை மீண்டும் அழுத்திச் சொன்னான்.‘‘ஆனால், சுரங்கத்தில் சற்று முன் ஆயுதக் குவியலை நாம் பார்த்தோமே...’’‘‘ஆம் கண்டோம்!’’ புன்னகைத்த கரிகாலன், அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான். சிவகாமியை அணைத்தபடி தன் கைகளை அவள் பின்பக்கம் கொண்டு சென்றவன், தளர்ந்திருந்த கச்சையை இறுக்கி முடிச்சிட்டான்.‘‘அவை..?’’‘‘மாதிரிகள் சிவகாமி! சாளுக்கியர்களை ஏய்ப்பதற்காக ஹிரண்ய வர்மர் செய்த காரியம்!’’‘‘அவ்வளவு புத்திசாலியா அவர்..?’’ முகத்தை உயர்த்தி கண்களைச் சிமிட்டியபடி அவனை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள்!‘‘ம்... எடை போட முடியாத அளவுக்கு!’’ புன்னகைத்தான் கரிகாலன்.‘‘அதைத்தான் பார்த்தேனே...’’ சொல்லும்போதே அவள் முகம் வாடியது.சிவகாமியின் வதனத்தை தன் இரு கரங்களில் ஏந்தினான். அவள் கருவிழிகளை விட்டு தன் கண்களை விலக்காமல் கேட்டான். ‘‘எதைப் பார்த்தாய்..?’’‘‘என்னைப் பற்றி உங்களிடம் பேசியதை...’’‘‘எப்போது பார்த்தாய்..?’’‘‘சுரங்கத்தைத் திறக்க பாறையின் மீது ஏறியபோது...’’‘‘உன்னைப் பற்றித்தான் சொன்னார் என்று எப்படிச் சொல்கிறாய்..? ஆயுதங்கள் மாறி வைத்திருப்பதையும் தெரியப்படுத்தி இருக்கலாமே..?’’‘‘அதற்கு வாய்ப்பில்லை!’’ ‘‘புரியவில்லை சிவகாமி...’’‘‘இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது..?’’ பெருமூச்சு விட்ட சிவகாமியின் முகம் சுருங்கியது. ‘‘நான் மோசக்காரி... பல்லவ நாட்டை ஏமாற்ற வந்திருப்பவள்... என்னை நம்ப வேண்டாம்... என்றுதான் உங்களிடம் எச்சரித்தார்...’’‘‘அப்படி ஹிரண்யவர்மர் எதையும் தெரிவிக்கவில்லை...’’ ‘‘பொய்!’’ அவள் கண்களில் சிவப்பு ஏறியது. ‘‘எனக்குத் தெரியும்...’’ தன் கரங்களால் அவன் மார்பைக் குத்தினாள்.‘‘இது தெரியப்படுத்தியது..!’’‘‘என் உடலா..?’’‘‘ஆம். உங்கள் தேகம்தான். அதற்கு முன்பு வரை என் சருமத்துடன் சர்வசாதாரணமாக ஈஷிய உங்கள் உடல், அவர் பேசியபிறகு விலகியது; விலக்கியது; பட்டதும் சுருங்கியது...’’‘‘அப்படியானால் இப்போது மட்டும் ஏன் இப்படி உன்னுடன் இழைகிறது...’’‘‘நீங்கள் ஆணல்லவா...’’ சொல்லும்போதே சிவகாமியின் குரல் தழுதழுத்தது. கண்களிலும் நீர் கோர்த்தது.‘‘அதாவது பெண்ணுடலைக் கண்டதும் மோகத்தில் பூக்கிறது என்கிறாய்... அப்படித்தானே..?’’பதில் பேசாமல் பார்வையைத் திருப்பினாள். கன்னங்களில் ஒரு கோடாக கண்ணீர் வழிந்தது. ‘‘பைத்தியக்காரி...’’ நெகிழ்ச்சியுடன் அவளை அள்ளி அணைத்தான். காற்றுப் புக வழியில்லாமல் அவள் ஸ்தனங்களை தன் மார்புடன் இறுக்கினான். அழுத்தம் தாங்காமல் அவள் ஸ்தனங்கள் தட்டையாகி கச்சையை மீறி அவன் உடலுடன் ஒன்றின.குனிந்து அவள் கழுத்தில் முத்தமிட்டான். ‘‘உன்னை அவர் எச்சரித்தது என்னவோ உண்மைதான் சிவகாமி. அச்சொற்கள் சில கணங்களுக்கு என்னுள் எதிரொலித்ததும் நிஜம்தான். ஆனால், அதிலிருந்து மீண்டுவிட்டேன்...’’ கரிகாலன் பேசப் பேச அவன் நாசியிலிருந்து வெளியேறிய காற்று அவள் கச்சைக்குள் சற்று நேரத்துக்கு முன் அழுத்தப்பட்ட ஸ்தனங்களுக்கு ஒத்தடம் கொடுத்தது!‘‘எதனால் மீண்டீர்கள்..?’’ கோபம் மறைந்து குழைவுடன் கேட்டாள். ‘‘வாய்மையை அறிந்ததால்...’’‘‘அடேங்கப்பா... அந்த நேர்மையை உணரச் செய்தவர் யாரோ..?’’‘‘உன் உடல்!’’சிவகாமியின் புருவங்கள் உயர்ந்தன. ‘‘என் தேகமா..?’’‘‘ம்... இந்தப் பூவுடலேதான்... கள்ளம் இருக்கும் உடலின் வெளிப்பாடு தன் அன்புக்கு உரியவர்களிடம் இப்படி உரையாடாது!’’‘‘அனுபவம் மிகுதியோ..?’’ சிவகாமியின் நாசி விடைத்தது.‘‘கோபம் கொள்ளாதே... வெறும் ஏட்டறிவுதான். அவை அனுபவமானது இப்போதுதான்! நம்பு...’’ சொன்ன கரிகாலன் அவள் அதரங்களில் தன் உதட்டை ஒற்றி எடுத்தான். ‘‘உனக்குள் எரிமலை ஒன்று புகைந்துகொண்டிருக்கிறது. அது அணைய வேண்டுமானால் உன் சபதம் நிறைவேற வேண்டும். அது என்ன சபதம் என்பதை நிச்சயம் காலம் வரும்போது நீயே சொல்வாய் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவரை நானாக உன்னிடம் எதுவும் கேட்க மாட்டேன்...’’ ‘‘இந்த ஞானோதயம் எப்போது பிறந்தது..? சுரங்கத்திலா..?’’‘‘அதற்கு முன்பே. ஆனால், அதை வெளிச்சமிட்டுக் காட்டியது சுரங்கத்தில் உன் நடவடிக்கைகள்தான்...’’‘‘ஒருவேளை உங்களை மயக்க நான் நாடகமாடியிருக்கலாமே..?’’‘‘வாய்ப்பில்லை...’’ அவள் கருவிழிகளைத் தன் நாக்கால் தொட்டு எடுத்தான். ‘‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!’’‘‘ம்க்கும்...’’ உதட்டைச் சுழித்த சிவகாமிக்கு பெரும் பாரம் இறங்கியது போலிருந்தது. எதையும் விளக்கிச் சொல்லாமல் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டான் என்பதே பெரும் நிம்மதி அளித்தது.அவன் மார்பில் ஒன்றியபடியே அங்கிருந்த ரோமத்தை தன் விரல்களால் சுருட்டினாள். ‘‘சரி சொல்லுங்கள்...’’‘‘எதை..?’’ அவள் தலைக் கேசத்துக்குள் தன் முகத்தைப் பதித்தான். ‘‘மூங்கில் காடுகளில் நமக்கான ஆயுதங்களை ஹிரண்யவர்மர் சேகரித்து வைத்திருக்கிறார் என்பதை எப்படி அறிந்தீர்கள்..?’’‘‘குறிப்பால் உணர்த்தினார்...’’‘‘என்ன குறிப்புகள் அவை..?’’ கேட்டவளுக்கு விடையளிக்காமல் அவள் உதட்டில் கை வைத்தான்.சிவகாமிக்குப் புரிந்தது. அவன் மார்பை விட்டு விலகி, தன் செவிகளைத் திறந்தாள்.‘‘இந்தப் பக்கமாகத்தான் வந்தார்கள்...’’‘‘இங்குதான் இருக்கவேண்டும்...’’ ‘‘புரவிகளை விரட்டிவிட்டு நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள்...’’கலவையான ஒலிகள் எழுந்தன. கரிகாலன் கிளைகளை விலக்கினான். சாளுக்கிய வீரர்கள் அவர்கள் அமர்ந்திருந்த மரத்தின் பக்கமாக வந்துகொண்டிருந்தார்கள். இருவரும் கிளைகளுக்கு இடையில் ஒடுங்கி அமர்ந்தார்கள்.‘‘இந்த வனத்தைவிட்டு அவர்கள் வெளியேறக்கூடாது. சல்லடையிட்டுச் சலியுங்கள். காட்டைச் சுற்றிலும் நம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். இருவரும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்று பார்ப்போம்!’’சொன்னவன் வீரர்களுக்குத் தலைவனாக இருக்க வேண்டும். அவன் கட்டளைக்கு அடிபணிந்து வீரர்கள் நாலா பக்கமும் அகன்றார்கள்.பேச்சு சப்தம் குறைந்ததும் சிவகாமி நாசுக்காக இலைகளைப் பிரித்துப் பார்த்தாள். மரத்தின் கீழும் சுற்றிலும் சாளுக்கிய வீரர்கள் யாருமில்லை. ‘‘எப்படி இங்கிருந்து வெளியேறுவது..?’’ குரலைத் தாழ்த்தினாள்.கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் கிளைகளின் நுனியைஆராய்ந்தான். ‘‘உங்களைத்தான்...’’ அவனை லேசாக சிவகாமி உலுக்கினாள். ‘‘அத்தனை வீரர்களையும் நம்மால் சமாளிக்க முடியும். கீழே குதித்து போர் புரிவோமா..?’’ ‘‘வேண்டாம் சிவகாமி. நம் ஆற்றலை வீணாக்க வேண்டாம்! சாளுக்கிய வீரர்களுடன் போர் புரிவதை விட அவர்களை இந்த வனத்துக்குள்ளேயே அடைத்து வைப்பது நல்லது. நம்மைப் பின்தொடராமல் இருப்பார்கள்!’’ ‘‘அது சரிதான். ஆனால், நாம் எப்படி வெளியேறுவது..?’’‘‘கபிலர் வழிகாட்டுதலில்!’’‘‘எந்த கபிலர்..?’’‘‘தமிழ் இனத்தின் பெருமைக்குரிய ஆசான்! இயற்கையின் நண்பர்! சங்க காலத்தின் ஒளிவிளக்கு! ’’முணுமுணுத்தவனை கண்கள் விரிய பார்த்தாள். அவள் தோளைச் சுற்றி தன்கரங்களைப் பதித்தவன் முகத்துடன் முகத்தை இழைத்து கிளை ஒன்றைச் சுட்டிக் காட்டினான். ‘‘நுனி வளைந்திருக்கிறது...’’‘‘ஆம்...’’‘‘இந்தக் கிளை மட்டுமல்ல... எல்லாக் கிளைகளுமே!’’சுற்றிலும் பார்த்தாள். அவர்கள் அமர்ந்திருந்த மரம் மட்டுமல்ல... கண்களுக்குத் தட்டுப்பட்ட எல்லா மரங்களின் கிளை நுனிகளும் வளைந்திருந்தன. ‘‘ஆம்...’’‘‘இப்படி இருந்தால்..?’’ ‘‘குரங்குகள் இங்கு அதிகம் என்று அர்த்தம்! கபிலர் தன் பாடல்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்!’’சொன்ன சிவகாமியின் கன்னத்தில் முத்தமிட்டான். ‘‘உறைக்கு ஏற்ற வாள் நீ! அவற்றைத்தான் நமக்கு சாதகமாகப் பயன்படுத்தப் போகிறோம்!’’ எப்படி என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. என்ன செய்யப் போகிறான் என்று எதிர்பார்த்தாளோ அதையே செய்தான். உதட்டைக் குவித்து குரங்கு போல் கத்தினான்!அடுத்த கணம் எண்ணற்ற குரங்குகளின் கத்தல்கள் அந்த வனம் முழுக்க எதிரொலித்தன. அதைத் தொடர்ந்து மரங்கள் சடசடத்தன. அசைந்தன.மரங்களின் அசைவை வைத்து சாளுக்கிய வீரர்கள் வாட்களை உருவியபடி அங்கும் இங்கும் பாய்ந்தார்கள். கரிகாலன் மீண்டும் தன் உதட்டைக் குவித்து குரங்கு போல் கத்தினான்! முன்பு போல் அல்ல... சற்றே வித்தியாசமாக! அதைக் கேட்டு சிவகாமியின் கண்கள் விரிந்தன. ஏனெனில் இம்முறை அவன் கத்தியது அபயம் கேட்டு! அதாவது தான், ஆபத்தில் இருக்கிறோம்... காப்பாற்றும்படி ஒரு குரங்கு மற்ற குரங்குகளுக்கு செய்தி சொல்லுமே... அப்படி!இதனையடுத்து அவர்கள் அமர்ந்திருந்த மரங்களை நோக்கி குரங்குகள் வரத் தொடங்கின! வேறு குரங்கு அங்கு இல்லாததைக் கண்டு திகைத்தன!மீண்டும் சற்று முன்னர் கத்தியது போலவே கரிகாலன் குரல் கொடுத்தான். அதனைக் கண்ட குரங்குகள் திகைத்தன. ஆக்ரோஷத்துடன் வாயைத் திறந்து பற்களைக் கடித்தன. அமைதியாக அவற்றின் செய்கைகளை ஆடாமல் அசையாமல் கரிகாலனும் சிவகாமியும் பார்த்தார்கள். அவற்றுள் தலைவன் போல் காணப்பட்ட குரங்கு மெல்ல அவர்களை நெருங்கியது. மற்ற குரங்குகள் ஆளுக்கொரு திசையில் அமர்ந்து எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மீது பாய்ந்து குதறக் காத்திருந்தன. நெருங்கிய தலைவன் குரங்கை கரிகாலன் அணைத்துக் கொண்டான். அவனது உடல் மொழி அத்தலைவன் குரங்குக்குப் புரிந்தது. தன்னை ஒப்புக் கொடுத்தது.மனிதர்களைப் போல்தான் விலங்குகளும். எப்படி சக மனிதனை நேசிப்பவர்களைப் பார்த்ததுமே மொழி தெரியாத மனிதனும் புரிந்துகொள்கிறானோ அப்படித்தான் விலங்குகளும்! எந்த விலங்கின் சாஸ்திரியாக ஒரு மனிதன் இருந்தாலும் அவனை ஒட்டுமொத்த விலங்குகளின் நண்பனாகத்தான் மற்ற மிருகங்கள் கருதும்.இந்த உண்மைதான் அப்போது அரங்கேறியது.தங்களைப் போல் கத்தியவனும் அவனுடன் இருப்பவளும் அசுவ சாஸ்திரிகள் என்பதை அத்தலைவன் குரங்கு புரிந்துகொண்டது! குறிப்பாக அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் மீதிருந்து வீசிய குதிரையின் வாசம், சற்று நேரத்துக்கு முன்னர் ஏதோ ஒரு புரவிக்கு அவர்கள் சிகிச்சை அளித்ததை அத்தலைவனுக்கு உணர்த்தியது! வாஞ்சையுடன் ஏறிட்ட தலைவன் குரங்கின் தலையை வருடியபடி தன் விரல்களால் கரிகாலன் கீழே சுட்டிக் காட்டினான். அந்தத் திக்கில் அக்குரங்கும் தன் பார்வையைச் செலுத்தியது. சாளுக்கிய வீரர்கள் அப்படியும் இப்படியுமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்! குரங்குகளுக்குப் புரியும் மொழியில், தாங்கள் வெளியேற வேண்டும் என்றான். தலையசைத்த தலைவன் குரங்கு சட்டென அருகிலிருந்த கிளைக்குத் தாவி மற்ற குரங்குகளைப் பார்த்துக் கத்தியது! புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அங்கிருந்த குரங்குகள் மரம் விட்டு மரம் தாவ ஆரம்பித்தன.கரிகாலனையும் சிவகாமியையும் பார்த்துவிட்டு தலைவன் குரங்கும் அவற்றுடன் சேர்ந்து கிளைகளில் பாய்ந்தது.‘‘நம்மை வீரர்கள் நெருங்காதபடி இனி குரங்குகள் பார்த்துக் கொள்ளும் சிவகாமி! சாளுக்கியர்களின் பார்வையில் மரம் விட்டு மரம் தாவுவது குரங்குகள்தான். புரிந்ததா..?’’ தலையசைத்த சிவகாமி மேலிருந்த கிளையைப் பிடித்தபடி மெல்ல எழுந்தாள். தன் உள்ளங்கால்களால் நின்றிருந்த கிளையை அழுத்தினாள்.‘‘கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு... என திசைகளை மாற்றிக்கொண்டே செல்லவேண்டும்! வனத்தின் முடிவில் தென் மேற்கு மூலையில் நாம் சந்திக்கலாம்! நீ தலைவன் குரங்கை பின்தொடர்ந்து செல் சிவகாமி! எந்தக் கிளை தாங்கும் என்பதை அது உனக்குத் தெரியப்படுத்தும்; வழிகாட்டும்! தேவைப்படும்போது தாவுவதற்கு கொடிகளைப் பயன்படுத்து! சருமத்தில் கீறல் விழாமல் பார்த்துக் கொள்!’’திசைக்கு ஒருவராகப் பிரிந்து கிளைகளைப் பிடித்தபடி கிளைகளில் நடந்தும்; தலைகீழாகத் தொங்கியபடி கிளைகளைக் கடந்தும்; கொடிகளால் மரம் விட்டு மரம் தாவியும் அந்தக் காட்டைச் சுற்றினார்கள். http://www.kungumam.co.in/Articleinner.aspx?id=14255&id1=6&issue=20180928 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் Posted October 3, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 3, 2018 மிக்க நன்றி கிருபன் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted October 4, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 4, 2018 11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said: மிக்க நன்றி கிருபன் நன்றி இலவசமாக ஒட்டவிட்ட குங்குமம் இணையத்திற்குத்தான் போய்ச்சேரவேண்டும். மிச்சத்தை இணைக்க நவீனன் வந்தால் நல்லது. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் Posted October 4, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 4, 2018 11 hours ago, கிருபன் said: நன்றி இலவசமாக ஒட்டவிட்ட குங்குமம் இணையத்திற்குத்தான் போய்ச்சேரவேண்டும். மிச்சத்தை இணைக்க நவீனன் வந்தால் நல்லது. குங்குமம் லிங்க் போட்டிருக்குத்தானே.இனி அங்கு சென்றே கதையை வாசிக்கிறேன். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted October 7, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 7, 2018 ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் 21 ஓவியம்: ஸ்யாம் சிம்ம விஷ்ணுவின் காலத்திலேயே காஞ்சிக்குப் போடப்பட்டிருந்த பெருஞ்சாலையில் கரிகாலன் தனது வண்டியை மற்ற பொதி வண்டிகளோடு இணைத்துச் செலுத்தியதில் இருந்து பல்லவபுரம் வரும் வரை யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.சாளுக்கியப் புரவி வீரர் பலர் அடிக்கடி அந்தப் பெருஞ்சாலையில் விரைந்துகொண்டிருந்ததையும், புரவி கட்டிய ரதங்கள் பலவும் எதிர்த்திசையில் உருண்டுகொண்டிருந்ததையும் கவனித்தான்.என்னதான் மாறுவேடத்தில் இருந்தாலும் தன்னையும் சிவகாமியையும் பொதி வண்டி வணிகர்கள் ஊன்றிக் கவனித்தால் கண்டுபிடித்துவிடுவது எளிதென்பதையும், அப்படிக் கண்டுபிடித்து அவர்கள் தனக்கு அதிக மரியாதை காட்ட ஆரம்பித்தால் தன் வேடம் கலைந்துவிடும் என்பதையும், அப்புறம் அவ்வப்போது சாலையில் உலாவும் சாளுக்கிய வீரர்கள் தன்னைச் சிறை செய்வது சர்வ சுலபம் என்பதையும் புரிந்துகொண்டான்.தவிர புலவர் தண்டியின் அந்தரங்க ஒற்றரான காபாலிகன் வேறு மாறுவேடம் அணியாமல் சுய உடையில் இருப்பதிலும் ஆபத்து இருப்பது அவனுக்குத் தெரிந்தே இருந்தது.என்றாலும் காபாலிகனை சுய உடையில் இருக்க வைப்பதில் அனுகூலமும் ஓரளவு பாதுகாப்பும் இருந்ததால் கரிகாலன் அந்த நிலையை மாற்ற இஷ்டப்படவில்லை. ஏனெனில் புலவர் தண்டியின் ஒற்றர்தான் இந்தக் காபாலிகன் என்பது சாளுக்கியர்களில் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு வெறும் காபாலிகன்தான். அவரவர் மத அடையாளங்களுடன் அவரவர் பவனி வரும் உரிமை எல்லா மன்னர் காலத்திலும் இருந்தது. சாளுக்கியர்கள் அதில் கைவைக்கவில்லை என்பதை இதற்குள் கரிகாலன் உணர்ந்திருந்தான். காஞ்சிக்குச் செல்லும் பெரும் சாலையில் இடையிடையே அதிகக் காவல் இருந்து கொண்டிருந்ததைக் கவனித்த கரிகாலன், வண்டிக்குள் இருப்பவர்களை எச்சரித்தான். ‘‘இரவின் முதல் ஜாமத்தில் நாம் காஞ்சியின் கிழக்கு வாயிலை அடைவோம். அதற்கு சற்று முன்பாகவே எச்சரிக்கையுடன் இருங்கள். நமது வண்டியை சாளுக்கிய வீரர்கள் நிறுத்தினால் யார் யார் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது தெரியுமல்லவா..?’’ ‘‘தெரியும். நான் வாயே திறக்க மாட்டேன். மெளனமாக இருப்பேன்!’’ என்றாள் சிவகாமி. தலையசைத்த கரிகாலனின் மனதில் சில நாழிகைகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் நிழலாடின.குரங்குகளை முன்வைத்து வனத்தில் சாளுக்கிய வீரர்களை அலைக்கழித்த கரிகாலனும் சிவகாமியும் திட்டமிட்டபடி காட்டின் தென்மேற்கு மூலையில் சந்தித்தார்கள். வீரர்கள் யாரும் தங்களைப் பின்தொடரவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு வனத்தை விட்டு வெளியே வந்தவர்களை காபாலிகன் வரவேற்றான்! யாரை எதிர்பார்த்தாலும் புலவர் தண்டியின் அந்தரங்க ஒற்றரான காபாலிகனை அவர்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை!திகைத்துப் போய் நின்றவர்களை வணங்கிய காபாலிகன், தன் மடியில் இருந்த ஓலையை எடுத்துக் கொடுத்தான்.பிரித்துப் படித்துப் பார்த்த கரிகாலனின் முகமும் சிவகாமியின் வதனமும் திகைப்பில் ஆழ்ந்தன.‘‘காபாலிகரே... இது...’’ என பேச ஆரம்பித்த கரிகாலனை இடைமறித்தான் காபாலிகன்.‘‘மன்னிக்கவேண்டும் கரிகாலரே... எதுவும் சொல்ல உத்தரவில்லை. உடனே உங்கள் இருவரையும் காஞ்சிக்கு வருமாறு புலவர் தண்டி அழைத்திருக்கிறார். ஓலையில் இருக்கும் விவரங்கள் தொடர்பான தெளிவை அவர் விளக்குவார்...’’‘‘ஆனால்...’’‘‘இங்கு நாமிருக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து கரிகாலரே... எப்பொழுது வேண்டுமானாலும் சாளுக்கிய வீரர்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள்...’’‘‘புரிகிறது காபாலிகரே... ஆனால், தற்சமயம் எங்களிடம் புரவி இல்லையே...’’ ‘‘அவசியமில்லை கரிகாலரே... வணிகர் வேடத்தில் நாம் பொதி வண்டியில் செல்லப் போகிறோம். வண்டி, அருகிலிருக்கும் கிராமத்தில் மறைவாக இருக்கிறது...’’இதன் பிறகு துரிதமாக அவர்கள் கிராமத்தை அடைந்து வண்டி யில் ஏறியதும், வண்டிக்குள் இருந்த வணிகர்களின் உடைகளை அணிந்து தங்கள் தோற்றத்தை கரிகாலனும் சிவகாமியும் மாற்றிக் கொண்டதும், காஞ்சிக்குச் செல்லும் பெருவழிச் சாலையை அடைந்து வணிகப் பொதி வண்டிகளுடன் இரண்டறக் கலந்ததும், இதனையடுத்து காஞ்சியை அவர்கள் நெருங்கியதும் கரிகாலனின் மனதுக்குள் நிழலாடின.திரும்பத் திரும்ப ஓலையில் இருந்த விஷயம்தான் அவன் மனதை ஆக்கிரமித்தன.சட்டென்று அவன் இடுப்பை சிவகாமி கிள்ளினாள். சுயநினைவுக்கு வந்த கரிகாலன், திரும்பிப் பார்க்காமல் ‘‘என்ன...’’ என்றான். ‘‘சோதனைச் சாவடி...’’ முணுமுணுத்தாள்.கரிகாலன் பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.ஒவ்வொரு வண்டியாக சோதனை செய்து காஞ்சிக்குள் விட்ட சாளுக்கிய வீரர்கள், கரிகாலன் ஓட்டி வந்த பொதிவண்டியை நெருங்கினார்கள். எவ்வித எதிர்ப்பையும் காண்பிக்காமல் அவர்கள் சோதனை செய்ய முழுஒத்துழைப்பையும் கரிகாலன் கொடுத்தான்.ஒன்றுக்கு இருமுறை அவர்கள் வண்டியை பரிசோதித்த வீரர்கள், ‘‘ம்... செல்லலாம்...’’ எனக் கட்டளையிட்டார்கள்.இதனைத் தொடர்ந்து பயணப்பட்ட பொதி வண்டி, காஞ்சியை நெருங்கியது. தென்பட்ட காட்சியில் தன் மனதை கரிகாலன் பறிகொடுத்தான்.முதலாம் ஜாமம் முடிந்து வெண்மதி காஞ்சி மாநகருக்கு நிலவாடை போர்த்தியிருந்ததால் மனத்தைக் கவர்ந்துவிட்ட அம்மாநகரின் எழிலிலும் பெருமையிலும் நிகரிலா வரலாற்றிலும் புராணத்திலும் இலக்கியத்திலும் இதயத்தைப் பறிகொடுத்து விட்ட கரிகாலன், சில கணங்கள் அப்படியே மெய்மறந்து நின்றான். புலவர் தண்டியின் அந்தரங்க ஒற்றரான காபாலிகனின் எச்சரிக்கையைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை.தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் திருவெஃகாவுக்கு அப்புறம் இருந்த காஞ்சி மாநகர் பல்லவர் காலத்தில் நாற்புறங்களிலும் பெரிதும் படர்ந்துவிட்டதையும், பெரு மதில்களாலும் அகழிகளாலும் பலப்பட்டுவிட்டதையும், தெய்வாலயங்களாலும் சமண மடங்களாலும் சிறப்புற்றிருப்பதையும் எண்ணிப் பார்த்தான்.இத்தனையும் பல்லவர்கள் சாதனை என்பதால் பெருமிதப்பட்டுக் கொண்டான். அந்நகருக்கு இணை உலகத்தில் வேறு எங்கும் கிடையாது என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டான்.உண்மையில் அவன் எண்ணத்தை வடமொழியும் தென்மொழியும் தீந்தமிழும் ஒப்புக்கொள்ளவே செய்தன. ‘நகரேஷு காஞ்சி’ என காளிதாசனாலும்; ‘கல்வியில் கரையிலாத காஞ்சி நகர்’ என அப்பர் சுவாமிகளாலும் சிறப்பிக்கப்பட்டதும்; ‘கச்சிப்பேடு’ என்னும் நெடுங்கொடிகள் தழுவப்பட்ட குறுகிய கால்களை உடைய காஞ்சி மரங்கள் நிறைந்ததால் காஞ்சிபுரம் என்றும் ஆதிகாலத்திலிருந்தே பிரசித்தி உள்ளதும்; ஸ்கந்த புராணத்திலும் மோகினி தந்திரத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டதும்; புராணப்படி பாரதத்தின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக இருப்பதும்; கி.மு.5ம் நூற்றாண்டில் புத்த பகவானே வந்து சமய உண்மைகளை உரைத்ததால் பெரும் பேறு பெற்றதும்; பிரளயஜித், சிவபுரம், விஷ்ணுபுரம், திருமூர்த்திவாசம், பிரமபுரம், தண்டகபுரம், கன்னி காப்பு... எனப் பல பெயர்களால் புராணங்களால் அழைக்கப்பெற்றதுமான காஞ்சியின் பெருமைகளை எல்லாம் எண்ணிப் பார்த்த கரிகாலன், ‘இல்லை... இல்லை... இம்மாநகருக்கு இணை ஏதுமில்லை...’ என தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டான். அவனது வண்டி சென்ற பாதைக்குப் பக்கத்தில் மிக உயரமாக எழுந்திருந்த காஞ்சியின் பெருமதில்களையும், அதன் மேற்பகுதியில் எரிந்துகொண்டிருந்த பெரும் பந்தங்களையும், சஞ்சரித்துக் கொண்டிருந்த சாளுக்கிய வீரர்களையும் பார்த்து ‘எந்த எதிரியும் நுழைய முடியாத இந்த நகரத்துக்குள் சாளுக்கியரை அனுமதித்து விட்டாரே பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர்...’ என்று நினைத்து பெருமூச்சு விட்டான்.அப்பொழுதும் பல்லவ மன்னரை நொந்துகொள்ளவில்லை. போரின் வெறியில் காஞ்சியின் சிற்பச் செல்வங்களும் மற்றைய சிறப்புகளும் பெருஞ்சோலைகளும் அழிக்கப்படாமல் இருப்பதற்காக அவர் செய்த தியாகத்தை எண்ணி மகிழவே செய்தான்.முதல் ஜாமம் முடிந்து இரண்டாம் ஜாமம் தொடங்கிவிட்ட அந்த வேளையிலும் காஞ்சி மாநகர் விழித்துக் கொண்டுதான் இருந்தது.எங்கும் சாளுக்கிய வீரர்களின் நடமாட்டம் இருந்து கொண்டிருந்தாலும் ஆங்காங்கிருந்த வீடுகளில் வீணை போன்ற நரம்புத் தந்திகளுள்ள வாத்தியங்களின் இசை ஒலிகளும் பரத்தையர் இல்லங்களில் நாட்டியம் பழகும் அழகு மங்கையரின் காற்சலங்கை ஓசைகளும் காதில் விழுந்து கொண்டிருந்தன. அவ்வப்பொழுது அவனது வண்டிக்கு எதிரிலும் பக்கங்களிலும் சாளுக்கிய வீரர்களின் ரதங்கள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் வணிகர் வண்டிகளின் சஞ்சாரமும் கூடவே இருந்து கொண்டிருந்தது.இரவு ஏறிவிட்டதை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமில்லை என்றாலும் நீண்ட நேரம் இரவில் அலுவல் புரியும் பணியாட்கள் பலர் வேலை முடிந்து இல்லங்களுக்கு விரைந்து கொண்டிருந்தனர்.இதையெல்லாம் கண்ட கரிகாலன், சாளுக்கிய மன்னர் அத்தனை ஆக்கிரமிப்பிலும் மக்களின் சாதாரண வாழ்க்கையைக் கெடுக்காமல் வைத்திருப்பதை எண்ணி அவரைப் பாராட்டவும் செய்தான்.‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தனும் நல்ல ரசிகராக இருக்க வேண்டும். இல்லையேல் படை ஆக்கிரமிப்பில் எந்த நகரமும் அச்சத்திலும் அதனால் ஏற்படும் பயங்கர அமைதியிலும் அல்லவா சிக்கிக் கிடக்கும்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இத்தனையிலும் ஆங்காங்கு அணிவகுத்துப் புரவிகளில் நின்று கொண்டிருந்த இராக் காவலரின் எச்சரிக்கையைப் பார்த்த கரிகாலன், எந்த கணத்திலும் தனது வண்டி நிறுத்தப்படலாம் என்பதையும் உணர்ந்தே இருந்தான்.இருப்பினும் காபாலிகன் ஆட்சேபித்த அபாயப் பாதை வழியே வண்டியைச் செலுத்தினான்.அதை மீண்டும் எதிர்த்துப் பேச முற்பட்ட காபாலிகன், ‘‘திருவெஃகாவுக்குப் போக வேண்டுமானால் கிழக்குக் கோட்டை வாயிலிலிருந்து நேர் கிழக்கேயுள்ள பெருஞ்சாலையில் செல்ல வேண்டும்!’’ என்று கூறினான்.‘‘ஆம், காபாலிகரே!’’ ஒப்புக் கொண்டான் கரிகாலன்.‘‘அப்படியானால் ஏன் மதிலோரமாகத் தெற்கே செல்கிறீர்கள்..?’’‘‘தெற்குச் சாலைக் கோடியில் கொல்லர் விடுதிகள் இருக்கின்றன அல்லவா..?’’‘‘ஆம்!’’‘‘அங்குள்ள ஆயுதப் பட்டறைகளைத் தாண்டினால் ஆயுதக் கொட்டடி இருக்கிறது!’’‘‘ஆம்...’’‘‘அங்கு உங்களை எல்லாம் இறக்கி விடுகிறேன்...’’ ‘‘இறக்கி விட்டால்..?’’‘‘நீங்கள் ஆயுதக் கொட்டடிக்கு அருகிலிருக்கும் அரண்மனைச் சத்திரத்தில் தங்கலாம்!’’இதைக் கேட்ட காபாலிகன் அதிர்ந்தான். ‘‘அரண்மனையின் தென்பகுதிச் சத்திரம் இப்பொழுது சாளுக்கிய வீரர்கள் கண்காணிப்பில் இருக்கிறது!’’அந்த வியப்பைக் கவனித்தாலும் அதை லட்சியம் செய்யாத கரிகாலன், ‘‘அங்கு சிவகாமியை யாருக்கும் தெரியாது. என்றாலும் இப்பொழுது அவள் மாறுவேடத்தில் இருப்பதால் சாளுக்கிய வீரர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. நீங்கள் அங்கு தைரியமாகத் தங்கலாம். சத்திரக் காவலன் உங்களைக் கவனித்துக் கொள்வான். உங்களை எப்படிக் காப்பது என்பது அவனுக்குத் தெரியும்!’’ என்றான்.காபாலிகன் தீவிர யோசனையில் இறங்கினான். ‘‘கரிகாலரே... இது பெரிய விஷப் பரீட்சை. சாளுக்கியரால் சதா கண்காணிக்கப்படும் பொதுச் சத்திரத்திற்கு சிவகாமியை அழைத்துச் செல்வது பெரும் அபாயம்...’’ ‘‘அபாயத்தை சிவகாமி சமாளித்துக் கொள்வாள்...’’‘‘அப்படியானால் நீங்கள்..?’’ அதுவரை அமைதியாக இருந்த சிவகாமி வாயைத் திறந்தாள்.‘‘புலவரைச் சந்தித்துவிட்டு வருகிறேன்!’’‘‘அதெப்படி இவ்வளவு காவலையும் மீறி உங்களால் அவரைச் சந்திக்க முடியும்..?’’‘‘நான் காஞ்சியின் மைந்தன் சிவகாமி... இங்குள்ள ஒவ்வொரு இடமும் எனக்குத் தெரியும்...’’‘‘மறுக்கவில்லை கரிகாலரே... ஆனால், மேலை ராஜவீதியை நீங்கள் தாண்டுவது கஷ்டமல்லவா..? உங்களை அடையாளம் கண்டு மக்கள் வாழ்த்தொலிகளை எழுப்பத் தொடங்கினால் விபரீதமாகி விடுமே...’’ காபாலிகனின் குரலில் பதற்றம் வெளிப்பட்டது.‘‘அஞ்சாதீர் காபாலிகரே! ஒருவரும் காணாமல் என்னால் ராஜவீதிக்குள் நுழைய முடியும்!’’ கண்களில் திட்டம் விரிய கரிகாலன் சொற்களை உதிர்த்தான்.அதேநேரம், ‘‘பத்து பேர் அரண்மனையின் தென்பகுதி சத்திரத்துக்குச் சென்று சிவகாமியைக் கைது செய்யுங்கள்! இன்னும் பத்து பேர் ராஜவீதிக்குச் சென்று கரிகாலனைச் சுற்றி வளையுங்கள்!’’ என உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தார் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர்! http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14324&id1=6&issue=20181005 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted October 13, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 13, 2018 ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் 22 ஓவியம்: ஸ்யாம் கரிகாலனின் பிடிவாதத்தை மற்றவர்களை விட நன்கு அறிந்திருந்த காபாலிகன் அதற்கு மேல் ஏதும் பேசவில்லை. தன்னை பொதுச் சத்திரத்தில் விட்டுப் போக வேண்டாமென்றும், உடன் அழைத்துச் செல்லும்படியும் சொல்ல சிவகாமி நினைத்தாள். ஏனோ நாணம் தடுத்தது. சொற்களை மென்று விழுங்கிவிட்டாள். மவுனம் சாதித்தாள்.கரிகாலன் யாருடனும் பேச்சுக் கொடுக்காமல் தன்னிஷ்டப்படி வண்டியைச் செலுத்தினான்.இரும்புக் கொல்லர் பட்டறைகள் இருக்கும் குறுகிய வீதி ஒன்றில் வண்டியைத் திருப்பி இரண்டொரு பட்டறைகளைத் தாண்டி ஆயுதக் கொட்டடிக்கு அருகில் இருக்கும் ஒரு பட்டறை முன்பாக வண்டியை நிறுத்தினான். ‘‘சாளுக்கியர்களை ஏமாற்ற பொதி வண்டியில் நீங்கள் சவுக்கை கொண்டு வந்தது நல்லதாகப் போயிற்று!’’ காபாலிகனிடம் முணுமுணுத்துவிட்டு பட்டறைக்கு வெளியில் நின்றிருந்தவர்களை அழைத்தான். ‘‘போர்க் கோடாரிகளுக்குச் சவுக்குப் பிடிகள் அரசர் உத்தரவுப்படி வந்திருக்கின்றன. இறக்கிப் போடுங்கள். ஆயுதக் கொட்டடிக்கு அப்பாலுள்ள சத்திரத்துக்கு இந்தப் பெண்ணை அழைத்துச் செல்லுங்கள். மன்னர் உத்தரவு!’’ வணிகனுக்குரிய தோரணையுடன் மடமடவென்று கட்டளையிட்ட கரிகாலன், திரும்பி காபாலிகனை நோக்கினான்.‘‘அதுதான் நீங்கள் கேட்டுக்கொண்டபடி வண்டியில் ஏற்றி அழைத்து வந்துவிட்டேனே! எதற்காக இங்கே நிற்கிறீர்கள்? நகரத்துக்குள் சென்று உங்கள் ஆட்களுடன் இணைந்து கொள்ளுங்கள்! சாளுக்கிய மன்னர் மத அடையாளங்களுக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் பல்லவ மன்னர் போலவே விதிக்கவில்லை. எனவே யாரும் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்!’’சவுக்குக் கட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கேட்கும் விதமாக சற்றே இரைந்த கரிகாலன், ஜாடையால் காபாலி கனைச் செல்லும்படி கட்டளையிட்டான். தன்னை எதற்காக கரிகாலன் அனுப்புகிறான்... தானில்லாமல் எப்படி புலவர் தண்டியைச் சந்திக்கப் போகிறான்..? காபாலிகனுக்கு ஒன்றும் புரியவில்லை. திருதிருவென விழித்தான். ‘‘எதற்கு விழிக்கிறாய்..? ஓ... பொற்காசுகள் வேண்டுமா..?’’ என்றபடி அவனை நெருங்கி தன் இடுப்பு முடிச்சிலிருந்து சில காசுகளை அள்ளி கரிகாலன் கொடுத்தான்.அதில் இரண்டு காசுகள் தவறி கீழே விழுந்தன. ‘‘ஒழுங்காக பிடித்துக் கொள்ள மாட்டீரா..?’’ கரிகாலன் எரிந்து விழுந்தான்.கணத்துக்கும் குறைவான நேரம் தன் பார்வையால் அவனை அளந்த காபாலிகன் குனிந்து, விழுந்திருந்த பொற்காசுகளை எடுத்தான். கரிகாலனிடம் கொடுத்தான்.அதைப் பெற்றுக் கொள்ளும் பாவனையில் காபாலிகனின் செவியில் கரிகாலன் கிசுகிசுத்தான். ‘‘காபாலிகர்கள் வசிக்கும் இடத்துக்குச் செல்லுங்கள். பிறகு உங்களை அங்கே சந்திக்கிறேன்!’’தலையசைத்த காபாலிகன், நிமிர்ந்தான். ‘‘உன் பொற்காசுகள் யாருக்கு வேண்டும்!’’ என்றபடி கரிகாலன் கொடுத்த காசுகளை அவன் முகத்திலேயே விட்டெறிந்தான். ‘‘என்ன சொன்னாய்... பல்லவ மன்னன் போலவே சாளுக்கிய மன்னனும் மத அடையாளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லையா..? ஆம், விதிக்கவில்லை. பல்லவ மன்னன் போலவே பார்ப்பனர்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக சாளுக்கியனும் இருக்கிறான்! பார்ப்பனர்கள் கையில் அதிகாரத்தைக் கொடுக்கிறான். இதற்கான பலனை இந்த நாடு ஒருநாள் அனுபவிக்கத்தான் போகிறது!’’ கர்ஜித்தபடி தன் போக்கில் நடந்து சென்றான். வண்டியிலிருந்து சவுக்கை இறக்கிக் கொண்டிருந்தவர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். ‘‘என்ன திமிர்...’’, ‘‘பிடித்து நாலு அடி அடிக்க வேண்டும்...’’, ‘‘வேண்டாம், மன்னர் கோபித்துக் கொள்வார்...’’, ‘‘இந்த காபாலிகர்களே இப்படித்தான்...’’ தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.இதைக் கேட்டு கரிகாலன் மனதுக்குள் புன்னகைத்தான். யாருக்கும் எந்த சந்தேகமும் எழாதபடி காபாலிகன் திறமையாக நடிக்கிறான்! நல்ல ஒற்றன்!‘‘பெண்ணே இங்கு வா...’’ சிவகாமியை அழைத்த கரிகாலன், அவளுக்கு மட்டும் புரியும்படி; உணரும்படி தன் பார்வையால் அவளை அணைத்தான்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக சிவகாமியின் கன்னங்கள் சிவந்தன.‘‘இந்த இரும்புக் கொல்லர்களைத் துணை கொண்டு சென்று சத்திரத்தில் தங்கு...’’ சத்தமாகச் சொன்ன கரிகாலன், ‘‘விரைவில் உன்னை அங்கு சந்திக்கிறேன்...’’ என முணுமுணுத்துவிட்டு, ‘‘சவுக்கை இறக்கிவிட்டீர்களா? நல்லது...’’ என்றபடி வண்டியில் ஏறி அமர்ந்து மீண்டும் காளைகளை முடுக்கினான். மீண்டும் வண்டி வந்தது அந்தக் குறுகிய வீதியிலிருந்து தெற்குப் பெருவீதிக்கு! வண்டியைச் செலுத்திய கரிகாலன், மேலை ராஜவீதியில் இருந்த சிவகாஞ்சியை நோக்கி காளைகளைப் பறக்கவிட்டான்.ஆனால், மேலை ராஜவீதியை அடைவதற்கு முன்பாக இருந்த பக்கப் பாதை ஒன்றில் வண்டியை நிறுத்தி இறங்கினான்.சுற்றிலும் பார்த்தான். வீரர்கள் நடமாட்டம் தொலைவில் தெரிந்தது. திருப்தியுடன் காளைகளைத் தடவிக் கொடுத்து அவற்றின் நெற்றியில் முத்தமிட்டு செவியில் எதையோ ஓதினான்.மணிகள் ஓசையெழுப்ப கழுத்தை அசைத்த அந்தக் காளைகள், அதன் பிறகு சற்றும் தாமதிக்கவில்லை. வண்டியில் யாரும் இல்லாமலேயே பறந்தன!புன்னகையுடன் அதைப் பார்த்த கரிகாலன், பல்லவ நாட்டுக்கு விசுவாசமான வணிகர்களின் வீடு முன்னால் இந்த வண்டி நின்றுவிடும். காளைகளிடம் அப்படி நின்று ஒதுங்கும்படித்தான் சொல்லியிருக்கிறோம். எங்கே சாளுக்கியர்களுக்கு சந்தேகம் வந்து வண்டியை சோதனையிடுவார்களோ என இனி யோசிக்க வேண்டியதில்லை! திருப்தியுடன், தன் முகம் தெரியாதிருப்பதற்காகத் தலை முண்டாசை அரை முகம் வரை மறையும்படியாக இறக்கிவிட்டு ராஜ வீதிக்குள் நுழைந்தான். இரண்டாம் ஜாமம் முற்றிக் கொண்டிருந்ததால் மக்கள் நடமாட்டம் ராஜ வீதியில் அதிகமில்லை. வீரர்கள் நடமாட்டம் மட்டுமே, அதுவும் நெருக்கமாகவோ கும்பலாகவோ இல்லாமல், ஆங்காங்கே தென்பட்டனர்.என்றாலும் வீதியின் நடுவில் கரிகாலன் நடக்கவில்லை. எச்சரிக்கையுடன் பெரு மாளிகைகளை ஒட்டி விழுந்திருந்த நிழல்களில் ஒதுங்கி ஒதுங்கி யார் கண்ணிலும் அதிகமாகப் படாமல் ஓரளவு மறைந்து மறைந்து நடந்தான். அடர் வனத்தின் வெளியே தன்னிடம் காபாலிகன் கொடுத்த ஓலையில் இருந்த வாசகங்கள் திரும்பத் திரும்ப அவன் மனதில் நிழலாடின. பலவித வினாக்களைத் தொடுத்தன. பல்லவர்களின் எதிர்காலம் குறித்த அச்சமும் அவன் உள்ளத்தில் உதித்தன.விடைகள் ஏதும் கிடைக்காமல், பதில் சொல்லக் கூடியவரான புலவர் தண்டியை எப்படிச் சந்திப்பது என்று யோசித்தபடியே நடந்த கரிகாலனை சட்டென்று ஒரு கரம் இழுத்தது. உள்ளுக்குள் சுதாரித்தபடி என்ன ஏது என்று கவனிக்கத் தொடங்கினான். கரிய வானிலே கறுப்புக் கம்பளியில் வாரி இறைக்கப்பட்ட பல்லாயிரம் வைரங்களைப் போல ஜாஜ்வல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த நட்சத்திரக் கூட்டங்கள் நகைத்து அறிவுறுத்திய உண்மையால் ஒரு கணம் அறிவைக் கோபத்துக்கு அடகு வைத்த கரிகாலன், கத்தியின் முனையொன்று தன் கழுத்தில் லேசாகத் தடவத் தொடங்கியதும் கோபத்தைச் சரேலென்று உதறிவிட்டு கண நேரத்தில் உணர்ச்சிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.கத்தி கழுத்தில் முதலில் லேசாகத் தடவியபோதோ, ‘சிறிதும் அசையாதே...’ என்று எச்சரிக்கைக்கு அறிகுறியாக அதன் நுனி கழுத்தின் இடதுபுறத்தில் சற்று அழுத்தியபோதோ எத்தகைய பதற்றத்துக்கும் இடம் கொடுக்காத கரிகாலன், தன் கண்களை இடதுபுறமாகச் சாய்த்து, கத்தி அழுத்தி நின்ற இடத்தையும், அதைப் பிடித்து நின்ற கையையும் கவனித்து, கத்திக்கு உடையவன் யாரென்பதைத் தீர்மானித்துக் கொண்டான். காரிருளில் பளபளவென ஒளி வீசிய அந்த உடைவாளின் அமைப்பையும், அதைப் பிடித்து நின்ற கைவிரல்களுக்கிடையே தெரிந்த பிடியின் வேலைப்பாட்டையும் கடைக்கண்ணால் கவனித்து, கத்தி யைப் பிடித்து நிற்பவன் ஒரு சாளுக்கிய வீரன் என்பதை அறிந்து கொண்டான். பகிரங்கமாக, ‘யார் நீ... இந்த நேரத்தில் ராஜ வீதியில் உனக்கு என்ன வேலை..? யாரைச் சந்திக்க இப்படி நிழல்களில் நடந்து கொண்டிருக்கிறாய்..?’ என்றெல்லாம் விசாரிக்காமல் கழுத்தில் கத்தி வைத்து ‘சிறிதும் அசையாதே...’ என செவியில் முணுமுணுக்க என்ன காரணம்? எனில், இந்த நேரத்தில் இங்கு, தான் வருவோம் என்று ஊகித்து காத்திருக்கிறார்களா..? ஆம் எனில், தான் வருவது எப்படித் தெரியும்..? ஒருவேளை காபாலிகனாவது அல்லது சிவகாமியாவது எதிரிகளிடம் சிக்கிவிட்டார்களா..? அப்படியே சிக்கினாலும் அவர்கள் வாயே திறக்கமாட்டார்களே..? ஒருவேளை வேறு யாரையாவது எதிர்பார்த்து தவறுதலாக தன் கழுத்தில் கத்தி வைத்து விட்டார்களோ..? அப்படித்தான் இருக்க வேண்டும்... ‘‘யார் நீ..? எதற்காக என் கழுத்தில் கத்தியை வைக்கிறாய்..? இந்த விஷயம் மட்டும் சாளுக்கிய மன்னருக்குத் தெரிந்தால் உன் கதி என்ன ஆகும் தெரியுமா..?’’ செயற்கையாக படபடப்பை வரவழைத்துக் கொண்டு கரிகாலன் பயப்படுவதுபோல் நடித்தான்.‘‘என்ன ஆகும்..?’’ கத்தி வைத்திருந்த சாளுக்கிய வீரன் கேட்டான்.‘‘சிறைக்குச் செல்வாய் வீரனே... ஒருவேளை மரண தண்டனையும் உனக்கு விதிக்கப்படலாம்!’’‘‘அப்படியா..? ஏன்..?’’‘‘ஏனா... இதென்ன இப்படிக் கேட்கிறாய்..? ‘பல்லவ குடிகளுக்கும் வணிகர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை... அவர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளைத் தொடரலாம்...’ என்று சாளுக்கிய மன்னர் அறிவித்திருக்கிறார் அல்லவா..?’’‘‘ஆமாம் அதற்கென்ன..?’’ நிதானமாகக் கேட்டான் அந்த சாளுக்கிய வீரன்.‘‘அதற்கென்னவா... நான் வணிகன் வீரனே! என் கழுத்தில் கத்தியை வைப்பது குற்றம்!’’‘‘ஒரு குற்றமும் இல்லை...’’‘‘இல்லையா..?’’‘‘இல்லை! ஏனெனில் வணிகனின் கழுத்தில் நான் கத்தியை வைக்கவில்லை! மறைந்து வாழும் பல்லவ இளவரசன் ராஜசிம்மனின் அருமை நண்பனான கரிகாலனின் கழுத்தில்தான் கத்தி வைத்திருக்கிறேன்!’’ என்றபடி அந்த சாளுக்கிய வீரன் சிரித்தான். அதுதான் அவன் செய்த தவறு. பேச்சுக் கொடுத்தபடி சாளுக்கிய வீரனின் மனப்போக்கை அறிய முற்பட்ட கரிகாலன், எப்போது சாளுக்கிய மன்னரின் அறிவிப்பைக் குறித்து, தான் கோடிட்டுக் காட்டிய பிறகும் கத்தியை எடுக்கவில்லையோ... அப்பொழுதே தான் யார் என்பதை உணர்ந்துவிட்டார்கள் என்பதை ஊகித்துவிட்டான்.எனவே, சாளுக்கிய வீரன் சிரிக்கத் தொடங்கியதும், கழுத்தில் ஊன்றப்பட்ட கத்தியின் வலு குறையத் தொடங்கியதும், சட்டென்று விலகினான். தன் முஷ்டியை இறுக்கி அந்த சாளுக்கிய வீரனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்!‘‘அம்மா...’’ என்று அலறியபடி அந்த வீரன் கீழே விழவும் ஐந்தாறு வீரர்கள் மறைவிலிருந்து வெளிப்பட்டு கரிகாலனைச் சூழ்ந்து நிற்கவும் சரியாக இருந்தது.அதன்பிறகு கரிகாலன் அங்கில்லை. மாறாக புரவி ஒன்றுதான் அந்த இடத்தில் இருந்தது! ஆம். குதிரையாக மாறி தன் கால்களாலும் தலையின் பிடரியாலும் சுற்றி இருந்த வீரர்களைப் பந்தாடினான். காற்றைக் கிழித்தான். வீரர்களின் உடலைச் சிதைத்தான். அவர்கள் கரங்களில் இருந்த வாட்களைப் பறக்கவிட்டான்.இமைக்கும் பொழுதுக்குள் வீரர்களை எல்லாம் செயலிழக்கச் செய்த கரிகாலன், வீரர்கள் கூடுவதற்குள் விலகிவிட வேண்டுமென்று முடிவெடுத்து அருகில் இருந்த மாளிகைக்குள் நுழைய முற்பட்டான். கதவின் மீது அவன் கை வைத்ததுமே அது திறந்துகொண்டது. கரிகாலன் ஓரடி எடுத்து வைத்ததும் கதவு பட்டென்று சாத்தப்பட்டது. தலையிலும் பலமான அடியொன்று இடிபோல விழுந்தது.கரிகாலன் ஒருமுறை தள்ளாடினான். அடுத்த கணம் அவன் கால்கள் சுரணையற்றுப் போயின; கண்கள் சுழன்றன. பிரக்ஞை பறந்தோடிவிட்டது. http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14352&id1=6&issue=20181012 1 Link to comment Share on other sites More sharing options...
அபராஜிதன் Posted October 15, 2018 Share Posted October 15, 2018 வரலாற்று கதைகளில் முன்னோடிகளான சாண்டில்யன் கல்கி ஆகியோரை வணங்கி கதையை தொடங்குகிறேன் என முகநூலில் எழுதி இருந்தார், ஆனால் அப்படியே அவர்களையே நகல் எடுத்து எழுதுகிறார்.. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் Posted October 17, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 17, 2018 சாண்டில்யனின் நாவல் வாசிப்பது போல் தான் உள்ளது. Link to comment Share on other sites More sharing options...
அபராஜிதன் Posted October 20, 2018 Share Posted October 20, 2018 சிவகாமியின் சபதம் மற்றும் ராஜதிலகம் இரண்டையும் கலந்து கொஞ்சம் தனது கைசரக்கையும் சேர்த்து எழுதுகிறார். சிவகாமியின் சபதத்தில் 23ம் புலிகேசியின் படையெடுப்புக்கு பழி வாங்க நரசிம்மவர்மன் சாளுக்கிய தேசத்தின் மீது படையெடுப்பான் ராஜ திலகத்தில் நரசிம்மவர்மனின் படையெடுப்பிற்கு பழி வாங்க 23ம் புலிகேசியின் பேரன் விக்கிரமாதித்யன்? பரமேஸ்வரவர்ம பல்லவனின் இறுதி காலத்தில் படையெடுப்பான் அந்த படையெடுப்பினை ராஜ சிம்மன் எதிர் கொண்டு முறியடித்த கதை சொல்லப்படும் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted October 21, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 21, 2018 ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 23 உதயதாரகை பலமாக முழங்கியதால் சுரணை வந்து விழித்துக்கொண்ட கரிகாலன் கண்களுக்கு தொலைவில் இருந்த பாலாற்றின் கலப் பிரவாகம் மிக ரம்மியமாகக் காட்சியளித்தது. அதன் நீர் மட்டத்தைக் காலைக் கதிரவனின் இளம் கதிர்கள் தழுவிச் சென்றதால் பிரவாகத்தில் வட்டமிட்டு நின்ற நீர்ச்சுழல்களில் ஒளி ஊடுருவி பளபளத்ததுடன் கரையோரச் சிற்றலைகளும் பல கண்ணாடிகள் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன. பிரவாகம் பலமாக இருந்ததால் செக்கச் செவேல் என்றிருந்த அந்தத் தங்க நிற நீரில் குளித்து, இடுப்பளவு நீரில் நின்ற அந்தணர்கள் இருகரங்களிலும் நீரை உயர ஏந்தி மந்திரங்களை ஓதி அர்க்கியம் விட்டுக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் நீரோட்டத்தை முடித்துக்கொண்டு வெண்கலச் செம்புகளை நன்றாகத் துலக்கி பாலாற்று நதியின் புனித நீரை மொண்டுகொண்டு வேதமோதிக்கொண்டே இல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். பொழுது விடிந்து விட்டதால் தங்கள் தொழிலை நடத்த விரைந்த மீனவர்கள் தங்கள் படகுகளை ஆற்றுக்குக் குறுக்கே செலுத்திக் கொண்டே வலைகளை விசிறி மீன்களைத் தேடலாயினர். உழவர்களும் தோள்களில் கலப்பையுடன் சாரி சாரியாக ஆற்றின் கரையோரமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களைவிட வேலையில் அதிக ஊக்கத்தைக் காட்டுவன போல் ஜோடிக் காளைகள் பல கழுத்துகளில் இருந்த வெண்கல மணிகள் இன்னொலிகள் எழுப்ப, உழவர்களுக்கு முன்னால் ஒன்றோடு ஒன்று இடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தன. இடையே நின்று ஒன்றையொன்று முட்டத் தொடங்கிய ஓரிரு காளைகளை உழவர்கள் அடிக்கடி விலக்கி ஓட்டினர். பாலாற்று நதியில் குளித்துவிட்டு கரை மீது நடந்து சென்ற காரிகையரின் இன்ப மேனிகளிலும் அவர்கள் கழுத்திலிருந்த ஆபரணங்களிலும் கதிரவனின் கதிர்கள் பாய்ந்து பிரமை தட்டும் மெருகை அளித்து அவர்களை ஏதோ தேவகன்னிகள் போலத் துலங்கச் செய்தன. ஆதவன் எழுந்து விட்டதால் உயிர்களும் எழுந்து விட்டன. அவன் கிரணங்கள் தாக்கத் தாக்க உயிர்களின் நடமாட்டமும் வேகம் பெற்றது. பஞ்ச பூதங்களிலும் உயிர் கலந்திருப்பதாகத்தான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால், நித்தம் உயிர்களைத் தட்டி எழுப்பும் பணியை மாத்திரம் தீப்பிழம்பான கதிரவனே ஏற்று உலகை ஆட்டும் மர்மம் என்ன? ஆதவன் மறைந்ததும் உயிர்கள் படுப்பானேன்? காற்றுக்கும் நீருக்கும் ஆகாசத்துக்கும் இல்லாத இந்த மாபெரும் சக்தியை அவன் மட்டும் அடைவானேன்? பாலாற்று நதியின் இன்பத் தோற்றமும் உயிர்களின் அசைவும் கரிகாலன் மனத்திலே இந்த மாதிரி பலப்பல எண்ணங்களை எழுப்பவே, முந்தைய இரவு, தான் தலையில் அடிபட்டு விழுந்ததைப்பற்றியோ, சத்திரத்தில் இருக்கும் சிவகாமியின் நிலை என்ன ஆயிற்று என்றோ சிந்திக்காமல் பாலாற்று நதிதீரத்தையே நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு மெல்ல அருகேயிருந்த இடங்களில் அவன் கண்களை ஓட்டவே, அவன் நினைப்பு உயிர் தத்துவங்களை எண்ணுவதிலிருந்து சற்று விலகி அரசியல் விவகாரங்களிலும் வட்டமிடலாயிற்று. தான் இருந்த இடத்துக்கு வெகு அருகே தெரிந்த இடைச் சுவரையும் அதை அடுத்து நின்ற நீண்ட தாழ்வாரத்தையும் நோக்கிய கரிகாலன், தான் இருக்குமிடம் பல்லவ மன்னரின் மாளிகை என்பதை உணர்ந்தான். அத்துடன் பூமி மட்டம் மிகவும் கீழே இருந்ததாலும் வெகு தூரம் வரை தனது கண்ணோட்டம் செல்வது சாத்தியமாயிருந்ததாலும், அரண்மனையின் மேல் உப்பரிகை அறையொன்றில் தான் இருப்பதையும் உணர்ந்தான். இல்லாவிட்டால் எதிரேயிருந்த அந்தப் பெரிய சாளரத்தின் மூலம், தான் கண்ட அத்தனை காட்சி களையும் காண்பது சாத்தியமல்ல என்று புரிந்துகொண்டவன், தான் படுத்திருந்த இடத்தில் சற்றே புரண்டான். படுக்கை மெத்தென்றிருந்தது. சாளரத்தின் மரச் சட்டத்தின் மட்டத்தை ஒட்டி படுக்கை கிடந்ததால், உயர்ந்த ஒரு மஞ்சத்தின் மீது, தான் படுத்திருப்பது கரிகாலனுக்குத் தெரிந்தது. முந்தைய இரவில் தன்னை மண்டையில் அடித்தவன் யாராக இருந்தாலும் தனக்குப் படுக்கும் வசதியை மட்டும் நன்றாகச் செய்திருந்ததை அறிந்த கரிகாலன், ‘மண்டையில் அடிப்பானேன்? பின்னர் மலர்ப் படுக்கையில் கிடத்துவானேன்?’ என்று எண்ணித் தனக்குள்ளேயே லேசாக நகைத்துக் கொண்டான். பிறகு மெல்லத் தலையில் அடிபட்ட இடத்தைத் தடவிப் பார்த்து, காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதையும், அடித்தவன் மயக்கம் வரும் தினுசில் இடம் பார்த்து அடித்திருக்கிறானே தவிர, தன்னைக் கொல்லும் நோக்கம் அவனுக்கு இல்லை என்பதையும் ஊகித்துக் கொண்டான். அடிபட்ட இடத்தில் லேசாக எழும்பியிருந்தது. அவ்வளவுதான். அவனுடைய சுருண்ட, இருண்ட மயிர்களும் அதை மறைத்து நின்றதால், எழும்பி இருந்த இடமும் வெளியில் தெரியவில்லை. மெல்ல சமாளித்துக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்த கரிகாலன், அந்த அறையை சுற்றும்முற்றும் நோக்கினான். அறைச் சுவர்களில் இருந்த சித்திரவேலைப்பாடுகளும், ஆங்காங்கு போடப்பட்டிருந்த மஞ்சங்களும் அந்த அறை மன்னருக்காகவோ அல்லது அவரைச் சேர்ந்த உறவினர்களுக்காகவோ ஏற்பட்டிருக்க வேண்டு மென்பதை நிரூபித்தன. மஞ்சங்களின் கைகளின் முகப்புகளில் இருந்த சிங்கத் தலைகளையும், மஞ்சங்களின் பிற்பகுதியில் உடல் சாயும் இடங்களுக்கு மேலே செதுக்கப்பட்டிருந்த சாளுக்கிய நாட்டு ராஜ முத்திரைகளையும் கவனித்த கரிகாலன், இது மன்னர் தங்கும் அறையாகத்தான் இருக்குமென்று தீர்மானித்தான். தன்னை மண்டையில் அடித்தவன் மன்னர் அறையில் தன்னைக் கிடத்த வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்துப் பார்த்தான். விடையேதும் கிடைக்கவில்லை. பல்லவ சாம்ராஜ்யத்தை கத்தியின்றி ரத்தமின்றி கைப்பற்றிய கையோடு மன்னர் மாளிகையை சாளுக்கிய வாசம் வீசும்படி செய்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. அறையின் ஒரு மூலையில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையில் நெய்யப்பட்டிருந்த சித்திரமொன்றும், திரைச்சீலை ஆடியதால் அசைந்து அசைந்து அவன் குழப்பத்தைக் கண்டு நகையாடியது. ஏனெனில் அந்தச் சித்திரத்தில் இருந்த பெண் சிவகாமியைப் போலவே இருந்தாள்! அவளைக் குறித்து கதம்ப இளவரசன், நாக நாட்டு அதிபதியும் பல்லவ மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரருமான ஹிரண்ய வர்மர், சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் ஆகியோர் சொன்ன விஷயங்கள் எல்லாம் அவனுக்குள் உயிர்பெற்று எழுந்தன. அவள் உருவம் எப்படி இங்கு சித்திரமாகி இருக்கிறது..? அவளுக்கும் சாளுக்கியர்களுக்கும் என்ன தொடர்பு..? அவள் எப்படி பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரின் பெண்ணானாள்? அவள் செய்திருக்கும் சபதம்தான் என்ன..? கரிகாலன் மெல்ல பஞ்சணையிலிருந்து கீழே இறங்கி அறையில் தீவிர யோசனையுடன் நீண்ட நேரம் உலாவினான். இத்தனைக்கும் வணிகர் வேடமிட்டிருந்த தன்னை அப்படியே வேடம் கலைக்காமல் விட்டிருக்கிறார்கள். ஏன்..? ஒருவேளை, தான் யாரென்று அறியவில்லையா... அல்லது அறிந்தும் அமைதியாக இருக்கிறார்களா..? ஏதேதோ யோசித்துப் பார்த்து விடையேதும் கிடைக்காததால் உலாவுவதை நிறுத்திக்கொண்டு தன் கச்சையை சோதித்துப் பார்த்தான். புலவர் தண்டி எழுதி காபாலிகனிடம் கொடுத்தனுப்பியிருந்த ஓலை அப்படியே இருந்தது! மிதமிஞ்சிய வியப்பால் கரிகாலன் பிரமித்தான். அதை அதிர்ச்சி என்றும் சொல்லலாம். ஏனெனில், தன்னை சிறிதும் சோதனை செய்யவே இல்லையென்பதையும் உணர்ந்தவன், தன்னைக் கொணர்ந்தவன் நோக்கந்தான் என்ன? என்று சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் அறைக் கதவு திறந்து காவலாளி ஒருவன் உள்ளே நுழைந்து கரிகாலனை பயபக்தியுடன் வணங்கி நின்றான். ‘‘யாரப்பா நீ..?’’ கரிகாலன் விசாரித்தான்.‘‘தங்கள் அடிமை...’’ என்றான் காவலாளி.‘‘காவலில் வைக்கப்படுகிறவர்களுக்கு அடிமைகள் இருப்பதுண்டா..?’’‘‘உண்டு! யார் காவலில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அது! பதவிக்குத் தகுந்த மரியாதை!’’‘‘அப்படியென்ன மரியாதை எனக்கு..?’’ ‘‘தெரியாது எசமான். உங்களை மரியாதையுடன் நடத்துமாறு உத்தரவு...’’‘‘உத்தரவிட்டது யார்..?’’காவலாளி அமைதியாக நின்றான்.‘‘சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபரா..?’’காவலாளி எதுவும் சொல்லவில்லை. மாறாக, ‘‘நீங்கள் பல் துலக்கி குளித்து முடித்ததும் அழைத்து வர உத்தரவிட்டிருக்கிறார்கள்...’’ என்றான். ‘‘அதுதான் உத்தரவிட்டது யார் என்று கேட்கிறேன்...’’ சற்று கோபத்துடன் கேட்டான் கரிகாலன்.‘‘எனக்குத் தெரியாது எசமான். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக அரண்மனைத் தலைமைக் காவலாளி சொன்னார். நீங்கள் குளிப்பதற்கு எல்லாம் தயார் செய்துவிட்டேன்... வேறு ஆடை தயாராக இருக்கிறது. வாருங்கள்...’’இதற்கு மேல் பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்ட கரிகாலன், அவனைத் தொடர்ந்து சென்றான். ஒரு மன்னர் குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அவனுக்கு செய்யப்பட்டிருந்தன! ஆழந்த யோசனையுடன் நீராடினான். பெரு வணிகருக்குரிய ஆடைகள் அவன் உடல் வாகுக்கு ஏற்ற வகையில் காத்திருந்தன! ஓலையை எடுத்து புதிய உடையில் பத்திரப்படுத்திவிட்டு வெளியே வந்தான். காலை உணவு தகுந்த மரியாதையுடன் அளிக்கப்பட்டது. காவலாளியிடம் பேச்சுக் கொடுக்காமல் உணவை அவன் அருந்தி முடிக்கவும், பாதம் வரை தொங்கும் நீண்ட கத்தியுடன் வீரன் ஒருவன் நுழையவும் சரியாக இருந்தது.‘‘தாங்கள் புறப்படச் சித்தமா..?’’ மரியாதையுடன் அந்த வீரன் கேட்டான். ‘‘எங்கு..?’’ கரிகாலன் அவனை இடைமறித்தான்.‘‘என்னைத் தொடர்ந்து வாருங்கள்...’’ வணங்கியபடி வீரன் பதிலளித்தான். மேற்கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் அவனைப் பின்தொடர்ந்தான். அரண்மனையின் உப்பரிகைத் தாழ்வாரங்களின் வழியாகவும் வளைந்து வளைந்து கீழே இறங்கிய படிகளின் வழியாகவும் கரிகாலனை அழைத்துச் சென்ற வீரன், அரண்மனைக்கு முன்புறமிருந்த பசும்புற்றரையைக் கடந்து எதிரேயிருந்த பிரம்மாண்டமான மற்றொரு மாளிகையை நோக்கி நடந்தான். அந்த மாளிகையின் மூன்று வாயில்களிலும் காவல் பலமாக இருந்தது. ராஜ உடைகளை அணிந்த பலர் வாகனங்களில் வந்திறங்கி மாளிகைக்குள் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந்தார்கள். சாதாரண குடிமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வாசலில் குவிந்து கிடந்தார்கள். அனைவரையும் கடந்து எவ்வித தடங்கலும் இன்றி கரிகாலனை அழைத்துச் சென்ற அந்த வீரன், மாளிகையின் முன் மண்டபத்தில் பேட்டிக்குக் காத்திருந்த பல பிரபுக்களை லட்சியம் செய்யாமல் தன்னை உள்ளே அழைத்துச் சென்றதைக் கவனித்த கரிகாலன், பலத்த சிந்தனைவசப்பட்டான். மாளிகையில் முதல் உப்பரிகையில் காத்திருந்த பட்டாடை அணிந்த ஒரு மனிதரிடம் கரிகாலனை ஒப்படைத்துவிட்டு அந்த வீரன் வந்த வழியே திரும்பிச் சென்றான். பட்டாடை அணிந்த மனிதரைக் கண்டதுமே அவர் அரண்மனை ஸ்தானிகர் என்பது கரிகாலனுக்குப் புரிந்தது. அவர் மரியாதையுடன் பெருவணிகன் தோற்றத்தில் இருந்த கரிகாலனை அழைத்துக் கொண்டு உட்புறம் சென்றார். அறை மிக நீளமாக இருந்தது. கரிகாலனுக்கு பழக்கப்பட்ட அறை. பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரை அடிக்கடி அவன் சந்தித்துப் பேசிய அறை! எனவே, சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரைத்தான் சந்திக்கப் போகிறோம் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. எனவே, என்ன பேசவேண்டும்... அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... என்பதை எல்லாம் யோசித்து முடிவு செய்திருந்தான். ஆனால், சாளுக்கிய மன்னர் முன்னால் அவன் நின்றதும் யோசித்ததெல்லாம் மறந்துபோயிற்று. அப்படி மறக்கும்படியான கேள்வியைத்தான் அவனிடம் அவர்கேட்டார்!‘‘சிவகாமியின் இடுப்பில் இருந்த சின்ன மச்சத்தை அந்த வனத்தில் கண்டாயா கரிகாலா?’’ (தொடரும்) - கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14387&id1=6&issue=20181019 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kavallur Kanmani Posted October 22, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2018 இன்றுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். சாண்டில்யனின் யவனராணி கடல்புறா போன்ற தொடர்களை வாசிப்பதுபோல உணர்கின்றேன். நேரமின்மைகாரணாக முழுவதும் படிக்க முடியாமலுள்ளது. தொடருங்கள். பகிர்வுக்கு நன்றிகள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted October 27, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 27, 2018 ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 24 வடநாட்டு சக்கரவர்த்தியான ஹர்ஷவர்த்தனை தென்னாட்டில் அடியெடுத்து வைக்க முடியாமல் போரில் முறியடித்த மேலை சாளுக்கிய மாமன்னன் இரண்டாம் புலிகேசியின் மகனும், பல்லவர்களின் பரம வைரியும், பரம ரசிகன் என்று வடமொழிப் பாவலரால் பெரிதும் போற்றப் பெற்றவரும், இரண்டு வாட்களைக் கரங்களில் ஏந்தி போர் புரியும் வல்லமை படைத்தவரும், முதலாம் விக்கிரமாதித்தனாக சாளுக்கியர்களுடைய மணிமுடியைத் தரித்தவரும், பல்லவ காஞ்சியைக் கைப்பற்றியிருப்பவருமான விக்கிரமாதித்த சத்யாச்சரயனைக் கண் கொட்டாமல் சில தருணங்கள் பார்த்துக் கொண்டே நின்றான் கரிகாலன். அவரை வணங்கிவிட்டு அரண்மனை ஸ்தானிகர் வெளியேறியதைக் கூட அவன் கவனிக்கவில்லை. ஆறடிக்கும் மேலாக நல்ல உயரத்துடன் இருந்த விக்கிரமாதித்தன், அப்புறமோ இப்புறமோ சாயாமல் சிம்மாசனத்தின் நடுவே அமர்ந்திருந்தார். நீண்ட அவர் கால்கள் கூட அசதி காட்டி வளைந்து கிடக்காமல் உறுதியுடன் அடியில் கிடந்த பட்டுத் தலையணையின் மேல் பதிந்து கிடந்தன. எந்த இடத்திலும் அதிகப் பருமனோ இளைப்போ இல்லாமல் ஒரே சீராக இருந்த அவருடைய தங்கநிற மேனியில், சதை அழுத்தமாகப் பிடித்து திடகாத்திரமான உருவத் தோற்றத்தை அவருக்கு அளித்திருந்தது. திண்மையான அவர் கைகள் முழுவதும் அங்கியால் மூடப்படாததால் முழங்கைக்குக் கீழேயிருந்த பகுதியில், வெட்டுக் காயங்கள் பல தெரிந்து, அவர் பல போர்களைக் கண்ட மாபெரும் வீரர் என்பதைப் பறைசாற்றின. சற்று நீளமான முகம்தான். இருந்தாலும் பரம்பரையாக வந்த ராஜ களை அதில் ஜொலித்துக் கொண்டிருந்தது. நடுத்தர வயதை அவர் லேசாகத் தாண்டிவிட்டதையும், ராஜரீகத்தில் அவருக்கிருந்த தொல்லைகளால் ஏற்பட்ட கவலையையும் அறிவுறுத்த அவர் தலையில் ஓடியிருந்த ஓரிரு நரைமுடிகளும் மற்ற கேசங்களின் கருமையில் கலந்து நின்றமையால் அவரது முகம் உள்ள வயதை விட ஒன்றிரண்டு ஆண்டுகளைக் குறைத்தே காட்டியது. கம்பீரமான அந்த முகத்தில் காணப்பட்ட பெரும் மீசை கூட அவர் அழகைக் குறைக்க சக்தியற்றிருந்தது. அவருடைய விசாலமான நெற்றியும், கூர்மையான நீண்ட நாசியும் சாளுக்கியர்களை ஆளப் பிறந்தவர் அவரே என்பதை நிரூபித்தன. பருந்தின் கண்களைவிடக் கூர்மையாகப் பார்க்கும் சக்தி வாய்ந்த அவர் கண்களில் ஏதோ ஒரு புதிய ஒளி இருந்து கொண்டே இருந்தது. அவரிடம் பேசும்போது எச்சரிக்கையுடனேயே பேசவேண்டுமென்பதைக் கரிகாலன் தீர்மானித்துக் கொண்டான். தன்னைக் கண்டு கரிகாலன் அதிர்ச்சியடையவில்லை என்பதை சாளுக்கிய மன்னர் மனதுக்குள் குறித்துக் கொண்டார். போலவே இயல்பாக தன்னை அவன் ஆராய முற்பட்டதைக் கண்டு அவர் இதழ்களில் புன்னகை பூத்தது. அதை வெளிக்காட்டாமல் மீண்டுமொரு முறை தன் கேள்வியை வீசினார். ‘‘கரிகாலா! சிவகாமியின் இடுப்பில் இருந்த சின்ன மச்சத்தை அந்த வனத்தில் கண்டாயா..?’’சாளுக்கிய மன்னரை ஏறெடுத்துப் பார்த்து அவரை ஓரளவு எடை போட்டுக் கொண்டதால் அதிகப் பொய் அவரிடம் பலிக்காது என்பதைக் கவனித்த கரிகாலன், பொய்யையும் உண்மையையும் கலந்து பேச முற்பட்டான். அதன் ஆரம்பமாக அதிர்ச்சியடைவது போல் பாவித்து, ‘‘கரிகாலனா..? யாரைச் சொல்கிறீர்கள் மன்னா... பல்லவ இளவரசர் ராஜசிம்மரின் சிநேகிதரையா..?’’ என்று கேட்டான்.‘‘ஆம்!’’ ஒரே வார்த்தையில் வந்தது விக்கிரமாதித்தரின் பதில்.‘‘அந்த கரிகாலன், பல்லவ இளவலுடன்தானே இருப்பான்..? எனக்கென்ன தெரியும் மன்னா... நானோ பெரு வணிகன்...’’‘‘அது சாளுக்கிய வீரர்களை ஏமாற்றி காஞ்சி மாநகரத்துக்குள் நீ நுழைய புனைந்த வேடமல்லவா..?’’‘‘இல்லை மன்னா! உண்மையிலேயே நான் பெரு வணிகன்!’’‘‘அப்படியா..? பெயர் என்ன..?’’‘‘மாசாத்துவான்!’’ இதைக் கேட்டு கண்களால் நகைத்தார் சாளுக்கிய மன்னர். ‘‘அப்படியானால் சிவகாமி யார்..? மாதவியா... கண்ணகியா..?’’‘‘சிவகாமியார் மன்னா..?’’ ‘‘அதைத் தெரிந்துகொள் என்றுதானே சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபரும், கதம்ப இளவரசரும், நாக நாட்டு மன்னரான ஹிரண்ய வல்லபரும் உன்னிடம் கேட்டுக் கொண்டார்கள்! அவர்கள் பேச்சைக் கேட்காமல் நீயோ அவளது அவயவங்களை நோட்டமிடுகிறாய். அப்படியாவது அவளது இடுப்பில் இருந்த சின்ன மச்சத்தைக் கண்டாயா என்று கேட்டால் பேச்சை மாற்றுகிறாய்...’’ என்றபடியே கரிகாலனின் கண்களை ஊடுருவினார். இந்த நேரத்தில் அவர் பார்வையை, தான் தவிர்த்தால் அது தவறாகிவிடும் என அவன் உள்ளுணர்வு சொன்னதால் திடத்தை வரவழைத்தபடி அந்தப் பார்வையை கரிகாலன் எதிர்கொண்டான். விக்கிரமாதித்தரின் முகமும் மலர்ச்சியைக் கைவிடவில்லை. புன்னகையுடனேயே தன் உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘பல்லவ இளவல் இருக்குமிடம் உனக்குத்தான் தெரியும். அவரிடம் செல்ல வேண்டிய நீ எதற்காக காஞ்சி மாநகருக்குள் பெரு வணிகன் வேடமிட்டு நுழைந்திருக்கிறாய்..?’’ சாளுக்கிய மன்னரின் பேச்சில் இருந்த அழுத்தம் கரிகாலனுக்கு பல உண்மைகளை உணர்த்தியது. அதில் முக்கியமானது, தன்னை இன்னார் என அவர் கண்டுகொண்டார் என்பது. இரண்டாவது, தனது நடமாட்டத்தை எல்லாம் கண்காணித்து அறிந்திருக்கிறார் என்பது. மூன்றாவது, வனத்துக்கு வெளியே தங்களை புலவர் தண்டியின் அந்தரங்க ஒற்றனான காபாலிகன் சந்தித்து ஓலை கொடுத்ததை இன்னமும் அவர் அறியவில்லை என்பது. ஆக, காபாலிகன் மேல் இப்போதைக்கு சாளுக்கியர்கள் கண் வைக்க மாட்டார்கள்... தேவைப்பட்டால் அவனை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், சத்திரத்தில் இருக்கும் சிவகாமியின் நிலை..? சாளுக்கிய மன்னரிடம் பேச்சுக் கொடுத்துதான் அறியவேண்டும். அதற்கு அவர் போக்கிலேயே உரையாடலைத் தொடரவேண்டும். முடிவுக்கு வந்த கரிகாலன், அவருக்குத் தெரிந்த உண்மையை வெளிப்படுத்தினான். ‘‘இன்னார் என்று என்னை இனம் கண்ட பிறகும் எதற்காக மன்னா சிறையில் அடைக்காமல் விருந்தோம்பல் செய்தீர்கள்..?’’‘‘இப்போது தமிழகத்தின் பகுதியை நான் ஆள்கிறேன் அல்லவா..? அதனால் தமிழர்களின் வழக்கத்தைப் பின்பற்றுகிறேன்... குறிப்பாக உங்கள் பழமொழியை...’’‘‘எது மன்னா..?’’‘‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே!’’‘‘அப்படியானால் என்னைத் தாக்க வீரர்களை எதற்காக அனுப்ப வேண்டும்..?’’ ‘‘மாளிகைக்கு வெளியில் நடந்ததைக் குறிப்பிடுகிறாயா..? அது சாளுக்கியர்களுக்கு விசுவாசமான போர் அமைச்சரின் ஏற்பாடு...’’‘‘அமைச்சரின் ஏற்பாட்டுக்கு மாறான ஒன்றை மன்னர் செய்யலாமா..?’’‘‘அவசியப்பட்டால் செய்யலாம்! அதனால்தான் அவர்கள் கையில் உன்னை சிக்கவிடாமல் என் மெய்க்காவலர்களைக் கொண்டு உன்னை மயக்கமடைய வைத்து இங்கு அழைத்து வந்தேன்!’’ சொன்ன விக்கிரமாதித்தர் இறங்கி வந்து கரிகாலனின் செவியில் கிசுகிசுத்தார். ‘‘கவலைப்படாதே! ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் சத்திரத்தில் இருக்கும் சிவகாமி சிக்கவில்லை. அவளையும் காப்பாற்றிவிட்டேன்! இப்போது என் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறாள்!’’ முதல் முறையாக கரிகாலனின் மனோதிடம் ஆட்டம் கண்டது. எப்பேர்ப்பட்ட ராஜதந்திரியின் முன், தான் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதும், இப்பேர்ப்பட்ட மனிதரிடம் இருந்து எப்படி பல்லவ நாட்டை மீட்கப் போகிறோம் என்ற வினாவும் ஒருசேர எழுந்தது. பெருமூச்சாகவும் அது வெளிப்பட்டது.‘‘சொல் கரிகாலா... பல்லவ இளவலைச் சந்திக்கச் சென்ற நீ, எதற்காக காஞ்சிக்கு வந்திருக்கிறாய்..?’’ கேட்ட சாளுக்கிய மன்னரின் பார்வை கணத்துக்கும் குறைவான நேரத்தில் கரிகாலனின் கச்சைக்குச் சென்று திரும்பியது. கரிகாலனின் உள்ளம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. தன் கச்சைக்குள் ஓலை இருப்பதை அவர் அறிந்திருக்கிறார்... ஆனாலும் அதைப் பிரித்துப் படிக்காமல் விட்டிருக்கிறார்... அதாவது, தானே அதை எடுத்து அவரிடம் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்... மறுக்க முடியாது. ஆனால், சமயோசிதமாக ஓலையை அவரிடம் கொடுப்பதன் வழியாக மீள முடியும். மெல்ல தன் கரங்களை கச்சைக்குக் கொண்டு சென்ற கரிகாலன், அதிலிருந்த ஓலையை எடுத்து அவரிடம் கொடுத்தான். இமைகளைச் சிமிட்டியபடி விக்கிரமாதித்தர் அதை வாங்கிப் படித்துவிட்டு அவனிடம் திருப்பிக் கொடுத்தார். ‘‘கடிகைக்கு வரும்படி உனக்கு உத்தரவு... இட்டது யார்..?’’கரிகாலன் அமைதியாக நின்றான்.‘‘பாதகமில்லை... சொல்ல வேண்டுமென்று அவசியமும் இல்லை... ஆனால், சாளுக்கிய வீரர்களின் அரணையும் மீறி வனத்துக்குள் புகுந்து பல்லவ ஒற்றன் ஒருவன் இந்த ஓலையை உன்னிடம் கொடுத்திருக்கிறான் என்றால் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்பது பொருள். அந்த பலவீனத்தை நான் சரி செய்கிறேன்...’’ சொன்ன சாளுக்கிய மன்னர், கரிகாலனின் தோளைத் தட்டினார். ‘‘கட்டளைக்கு அடிபணிந்து இந்தப் பெரு வணிகன் வேடத்துடனேயே கடிகைக்குச் செல். உன்னை யாரும் தடுத்து நிறுத்த மாட்டார்கள்...’’‘‘மன்னா...’’‘‘கவலைப்படாதே. கடிகை என்பது நம் பாரதத்தின் சொத்து. பல்லவ மன்னர் பின்பற்றிய அதே முறையை இம்மி பிசகாமல் நானும் கடைப்பிடிக்கிறேன். கடிகைக்குள் எந்த கண்காணிப்பும் இல்லை! அங்கு யாரைச் சந்திக்க வேண்டுமோ அவரைச் சந்தித்துவிட்டு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக காஞ்சியை விட்டு வெளியேறு...’’‘‘மன்னா...’’‘‘செல்வதற்கு முன் இந்த அரண்மனைக்கு வா! சிவகாமி உனக்காகக் காத்திருப்பாள்... அழைத்துச் செல். பல்லவ இளவலிடம் சொல்ல அவளிடமும் செய்தி இருக்கிறதே!’’ ‘‘மன்னா...’’‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரோ அல்லது வேறு சாளுக்கிய வீரர்களோ வீரனோ இனி உன்னைப் பின்தொடர மாட்டார்கள்! ஒருவேளை யாராவது அப்படி வழிமறித்தால் இந்தா இதைக் காட்டு!’’ என்றபடி தன் முத்திரை மோதிரத்தை கரிகாலனிடம் கொடுத்தார் சாளுக்கிய மன்னர். அப்படியே திக்பிரமை பிடித்து நின்றான் கரிகாலன். ‘‘மன்னா...’’ அழைக்கும்போதே அவன் நா தழுதழுத்தது. ‘‘எனக்குள் பழி உணர்ச்சி பொங்கி வழிகிறது கரிகாலா... வாதாபியை நீங்கள் எரித்தது போல் காஞ்சியை எரிக்க கை துடிக்கிறது. ஆனால், பல்லவ மன்னன் பரமேஸ்வரன் போலவே நானும் கலா ரசிகன்தான். கலைச்செல்வங்களை அழிப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. அதனால்தான் காஞ்சிக்குள் போர் புரிய வேண்டாமென்று நினைத்து ராஜ்ஜியத்தையே எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டுச் சென்ற பல்லவனை மதிக்கிறேன். ஆனால், மன்னிக்கத் தயாராக இல்லை! படைகளைத் திரட்டிக் கொண்டு பல்லவ மன்னன் தன் மகனுடன் வரவேண்டும்! அப்படைகளை சாளுக்கியர்களான நாங்கள் நிர்மூலமாக்க வேண்டும்! அதுதான் எங்களுக்குப் பெருமை. போர்க்களத்தில் சந்திப்போம்! சென்றுவா. பரமேஸ்வரனையும் ராஜசிம்மனையும் சந்திக்கும்போது சிவகாமியை நம்பவேண்டாமென்று சொல்...’’சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் நிதானமாக அரண்மனைக்குள் சென்றார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர். அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கரிகாலன்! சாளுக்கியர்களின் முத்திரை மோதிரம் அவனைப் பார்த்துச் சிரித்தது! (தொடரும்) - கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14412&id1=6&issue=20181026 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் Posted October 30, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted October 30, 2018 நன்றி கிருபன் Link to comment Share on other sites More sharing options...
அபராஜிதன் Posted November 1, 2018 Share Posted November 1, 2018 சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் கதைகளில் ஒன்றியதைப்போன்று இவரின் கதையிலோ அல்லது இப்போது வரும் ஏனைய வரலாற்று கதைகளிலோ ஒன்ற முடியவில்லை ஒருவேளை வயதாகிவிட்டதோ ? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted November 3, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted November 3, 2018 ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 25 பல்லவர்களின் பல்கலைக் கழகமான காஞ்சியின் கடிகா என்ற கடிகை பஞ்ச உஷத் காலத்தில் விழித்துவிட்டதன் விளைவாக வேத கோஷங்கள் வானைப் பிளந்து கொண்டிருந்தன. சுமார் கால் காத அகலமும் நீளமும் கொண்ட கடிகையின் பெரும் பிரதேசத்தில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்காகத் தனித் தனியாக நிர்மாணிக்கப்பட்ட பெரும் ஸ்தூபிகள் கொண்ட மண்டபங்கள் கூடிய வரையில் தூர தூரமாகவே அமைக்கப்பட்டிருந்தாலும் அந்த நான்கு வேத அத்யயன சீடர்களின் குழாம் எழுப்பிய வேத கோஷங்களில் ஏதோ ஓர் ஒற்றுமை ஏற்பட்டு விண்ணை ஊடுருவிச் சென்ற ஒரு ஒலி பிரணவமாகவே சப்தித்து, ‘ஓங்காரப் பிரணவோ வேதா’ - ஓங்காரத்திலிருந்து வேதங்கள் பிறந்தன என்ற தத்துவத்துக்குச் சான்று கூறியது. வேதாத்யயனங்களுக்கு மட்டுமின்றி, பல்லவர்களின் தமிழ்ப் பற்றின் விளைவாக அதுவரை தோன்றிய தமிழ் மறைகளுக்கான மண்டபங்களில் இருந்தும் தீஞ்சுவைத் தமிழ் மதுர ஓசை கிளம்பி இன்னிசைக்கும் தீந்தமிழுக்கும் மாறுபாடு அதிகமில்லை என்பதை நிரூபித்ததால், கடிகை முழுதும் வேத நாதமும் தமிழ் இன்பமும் பரவி சொர்க்கபோகத்துக்கு மேலான பேரின்பத்தைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்த கடிகையின் நடுவிலிருந்த சர்வ தீர்த்தம் என்ற அலைமோதும் பெருங்குளம் ஒன்று அங்கு பயிலும் மாணவர் ஸ்நான பானாதிகளுக்கும் நித்தியக்கடன்களுக்கும் பயன்பட்டு வந்தாலும், சூரிய கிரணங்களில் அதன் அலைகள் மின்னியது, வேத ஒலிகளுக்கு ஒளியும் உண்டு என்பதை நிரூபித்து ஆண்டவன் ஒளிமயம் ஒலிமயம் அனைத்தும்தான் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. கடிகையின் நாற்பெரு வாயில்களில் கிழக்குப் புற வாயிலில் மட்டுமே வித்யார்த்திகளும், மன்னனும், மகாகவிகளும் நுழைய அனுமதியிருந்ததால் அதைக் காவல் புரிந்து நின்ற புரவி வீரர்கள் கையில் வேல்களையும் வாட்களையும் தாங்கி நின்றனர். பெரு வணிகன் வேடத்துடனேயே பல்லக்கில் அமர்ந்தபடி கரிகாலன் கடிகையின் இன்னொரு வாயில் வழியே நுழைந்தான். பல்லக்கை ஏற்பாடு செய்து கொடுத்ததும் சாளுக்கிய மன்னர்தான். சந்தேகத்தின் சாயை பூரணமாக அவனுள் படர்ந்திருந்தது. பல்லவ இளவரசர் ராஜசிம்மரின் நெருக்கமான தோழனாக, தான் இருப்பதை அறிந்திருந்தும் தன்னை அவர் சிறை செய்யவில்லை. போலவே தன்னை கடிகைக்கு வரச் சொல்லி எழுதப்பட்ட ஓலையை முழுமையாகப் படித்த பின்னும் தன்னை அங்கு செல்ல பணித்திருக்கிறார். அதுவும் வீரர்கள் யாருக்கும் எந்த ஐயமும் ஏற்படா வண்ணம் காஞ்சியின் பெரு வணிகர்கள் பயன்படுத்தும் சிவிகையைக் கொடுத்து. முத்திரை குத்தப்படவில்லை என்றாலும் ஓலையில் வாசகங்களை எழுதியவர் புலவர் தண்டிதான் என்பது தனக்குத் தெரிந்தது போலவே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தனும் அறிவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அப்படியிருந்தும் தன்னை கடிகைக்கு அனுப்பியிருக்கிறார். ஏன்..? ஒருவேளை கடிகைக்கு தன்னை வரச் சொன்னவர் புலவர் தண்டியாக இல்லாமல் வேறு யாராவதாகவும் இருக்கலாம்... நடைபெறவிருக்கும் சாளுக்கியர்களுக்கு எதிரான போர் குறித்து பேசப்படலாம்... திட்டங்கள் தீட்டப்படலாம்... என்பதை அறிந்தும் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றியிருக்கும் சாளுக்கிய மன்னர் அமைதியாக இருக்கிறார். சொல்லப் போனால் கடிகைக்குள் நடைபெறவிருக்கும் ரகசிய சந்திப்பு - அந்தரங்க உரையாடலுக்கு அவரே வழிவகையும் செய்கிறார். ஏன்..? குறிப்பாக தன் படைகளை ஊடுருவி திசை திருப்பும் அளவுக்கு வல்லமை படைத்த தனது முத்திரை மோதிரத்தை எதற்காக பல்லவ இளவலின் நண்பனும் தனது எதிரியுமான தன்னிடம் பாதுகாப்புக்காக கொடுக்க வேண்டும்..? மன்னர் விக்கிரமாதித்தரின் எண்ண ஓட்டம்தான் என்ன..? சிந்தனையுடன் கடிகைக்குள் நுழைந்த கரிகாலனுக்கு ஒன்று மட்டும் பளிச்சென்று புரிந்தது. சாளுக்கிய மன்னர் தன் மீதும் தன் படைகள் மீதும் அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். பல்லவர்கள் என்ன திட்டம் தீட்டினாலும் தன்னை வெற்றி கொள்ள முடியாது என்பதை தன்னை சிறை செய்யாமல் கடிகைக்கு அனுப்பியதன் வழியாக உணர்த்துகிறார். நிச்சயம் இது இறுமாப்பல்ல. தன் பலம் உணர்ந்த மாவீரனின் அடையாளம்; செய்கை. இப்படிப்பட்ட மன்னன் தலைமையிலான வீரர்களை வீழ்த்த வேண்டுமென்றால் போர் முறையை மாற்ற வேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியாக வேண்டும். முன்பாக நாக மன்னர் ஹிரண்ய வர்மர் ரகசியமாக சேகரித்து வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து பல்லவப் படைகளிடம் விநியோகிக்க வேண்டும். பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் திட்டம் என்ன என்பதை அறிய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், மறைந்திருக்கும் பல்லவ இளவரசரான ராஜசிம்மனை அழைத்து வர வேண்டும். இறுதியாக... கரிகாலன் பெருமூச்சுவிட்டான். இதற்குமேல் சிந்திக்கவும் அவனுக்கு அச்சமாக இருந்தது. சிவகாமி... சிவகாமி... முணுமுணுத்தான். அவளது பூர்வீகம் என்ன..? என்ன சபதம் செய்திருக்கிறாள்..? எதிரிகள் அனைவரும் அவளைப்பற்றி அறிந்திருக்கிறார்கள். அப்படியிருக்க பல்லவ மன்னரும் பல்லவ இளவரசரும் மட்டும் என்ன காரணத்துக்காக அவளை முழுமையாக நம்புகிறார்கள்... தங்கள் மகளாக, சகோதரியாக பாவிக்கிறார்கள்..? சிறந்த ராஜதந்திரியும் பல்லவர்களுக்காக தன் உடல் பொருள் ஆன்மா என சகலத்தையும் அர்ப்பணித்திருக்கும் புலவர் தண்டியும் அல்லவா அவளை நம்புகிறார்..? எனில் யார் கூற்று சரி..? சிவகாமியை நம்பலாமா வேண்டாமா..? பலத்த யோசனையுடன் பயணித்த கரிகாலனின் சிந்தனை சிவிகை நின்றதும் அறுபட்டது. இதற்கு மேல் மன்னர் மற்றும் தலைமை ஆசான்களைத் தவிர வேறு யாருடைய வாகனமும் கடிகைக்குள் செல்லாது. செல்லவும் கூடாது. பல்லவர்களின் முறையை சாளுக்கியர்களும் கடைப்பிடிக்கிறார்கள்! இதன்மூலமாக தன்னால், தனது படையால் பல்லவ மக்களுக்கும் கடிகையில் படிக்கும் பல தேச மாணவர்களுக்கும் எந்த இடையூறும் ஆபத்தும் இல்லை என்பதை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் குறிப்பால் உணர்த்துகிறார். மெல்ல மெல்ல மக்களிடம் நன்மதிப்பைப் பெறுகிறார். இதை அப்படியே வளரவிடுவது பல்லவர்களுக்கே ஆபத்தாக முடியும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக செய்ய வேண்டியதை செய்து முடிக்க வேண்டும். முடிவுடன் கண்களில் கூர்மை பெருக்கெடுத்து ஓட பல்லக்கில் இருந்து கரிகாலன் இறங்கினான். இதற்காகவே காத்திருந்தது போல் அவனுக்கு தலைவணங்கி விடைபெற்றுக் கொண்டு வந்த வழியே பல்லக்கை சுமந்தவர்கள் திரும்பிச் சென்றார்கள். நிதானமாக கடிகையைச் சுற்றிலும் தன் பார்வையை கரிகாலன் செலுத்தினான். நேரம் போதிய அளவு ஏறிவிட்டதன் விளைவாக ஆங்காங்கு வேத பாடங்களை முடித்துக்கொண்டு வேறு வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பல நாட்டு இளவரசர்களும் அமைச்சர்களின் புதல்வர்களும் அங்கிருந்தார்கள். அவர்களில் சிலருக்கு கரிகாலனைத் தெரியும். நின்று சிரித்துப் பேசும் அளவுக்கு பரிச்சயம் உண்டு. ஆனால், அன்று மாறுவேடத்தில் அவன் இருந்ததால் ஒருவரும் அவனை நெருங்கி வரவில்லை; உரையாடவும் முற்படவில்லை. கடிகைக்கு வழக்கமாக பொருள் கொண்டு வரும் செல்வந்தர் போலவே அவனையும் கருதினார்கள். இவை சாதகமா பாதகமா என்று போகப் போகத்தான் தெரியும். முடிவுடன் கடிகைக்குள் நடக்கத் தொடங்கினான். பனை ஓலைகள் பொதி வண்டிகளில் இருந்து இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கடிகை மாணவர்களுக்கான எழுதுபொருள்! சீதாளப் பனை என்னும் கூந்தல் பனை; நாட்டுப் பனை; லோந்தர் பனை ஆகியவையே இறக்கப்பட்டன. இதில் சீதாளப் பனைக்கு கூந்தல் பனை, தாளிப் பனை, தாள பத்ர, குடைப்பனை எனப் பலபெயருண்டு. தொடக்க காலம் முதலே இவ்வகை பனை மரத்தின் ஓலைகள்தான் எழுதுவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. தமிழக ஆற்றங்கரைகளிலும், வயல் வெளிகளிலும் அதிகமாக வளரக்கூடிய பனைமரம் இது என்பதால் பாலாற்றங்கரையிலிருந்து கடிகைக்குக் கொண்டுவர சுலபமாக இருக்கிறது. இந்த சீதாளப் பனை மரங்கள் 50 - 60 அடி உயரம் வளரும். இதன் ஓலைகள் நன்கு வளைந்து கொடுக்கும். 3 - 4 அடி நீளமும் 8 - 10 செ.மீ. அகலமும் கொண்டது. நாட்டுப்பனை ஓலையை விட இது மெல்லியது. எனவே, இதில் எழுதப்படும் எழுத்துக்கள் தெளிவாக இருப்பதில்லை. எனவே, ஆரம்பநிலை மாணவர்கள் இந்த ஓலையையே எழுதுவதற்கும் மனப்பாடம் செய்ய படி எடுக்கவும் பயன்படுத்துவார்கள். வளமான பகுதிகளில் மட்டுமல்ல... வறண்ட பகுதிகள், மேட்டுப்பாங்கான பகுதிகள், மணற்பாங்கான பகுதிகள் என சகல இடங்களிலும் நாட்டுப்பனை வளரும். 2 - 3 அடி நீளமும் 4 - 6 செ.மீ., அகலமும் கொண்ட இந்த ஓலைகள் தடிமனாக இருக்கும். நன்கு வளைந்து கொடுக்கும் தன்மை இதற்கு உண்டு. கூந்தல் பனை ஓலைகளைப் போன்று நீள அகலமும், நாட்டுப் பனை ஓலைகளைப் போன்று தடிமனும் கொண்டது லோந்தர் பனை. இந்த ஓலைகளின் மேல் எழுத்தாணி கொண்டோ அல்லது அரக்கு பூசி தூரிகையினால் எழுதவோ செய்வார்கள். இந்த மூன்றில் எந்த வகை பனைமர ஓலை என்றாலும் சரி... எல்லாவற்றிலும் இரு பகுதிகள் உண்டு. மேற்பகுதியும் அடிப்பகுதி யும் மிருதுவாக இருக்கும். இவற்றை இணைக்கும் இடைப்பகுதி மெல்லிய நரம்புகளால் ஆனது. இந்த நரம்புகள் ஒன்றோடென்று பின்னியது போல் காட்சியளிக்கும். இந்த நரம்புப் பின்னல்களுக்கு இடையில் உள்ள பச்சையம், மெல்லிய இழையால் சமமாக இருக்குமாறு மூடப்பட்டுள்ளன. எனவே பனையோலை தயாரிப்பதற்கு என்று ஒரு முறை உண்டு. அதன்படிதான் கடிகைக்கான ஓலைகள் தயாரிக்கப்படுகின்றன. பனைமரங்களின் அடி ஓலை முதிர்ச்சியடைந்து நார்கள் வளையும் தன்மை குறைவாகவும்; குருத்து ஓலைகளின் நார்கள் உறுதித்தன்மை குறைவாகவும் இருக்கும். எனவே, ஆறு மாதங்கள் வளர்ந்த ஓலைகளே எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும். ஓலைகளை நிழலில் காயவைத்த பின் நீண்ட தலையோலைகளின் குறுகிய அடி நுனிகளையும் ஓலைகளின் நரம்புகளையும் நீக்கிவிட்டு ஒரே அளவாக ஓலைகள் வெட்டப்படும். அப்படி வெட்டப்படும் பகுதி நோக்கிச் சென்ற கரிகாலனை பால் வடியும் முகம் கொண்ட ஒரு பாலகன் வரவேற்றான். ‘‘நேற்றிலிருந்து உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்... வாருங்கள்...’’ பதிலே சொல்லாமல் கரிகாலன் சிலையாக நின்றான். ஏனெனில் அந்தப் பாலகனுக்குப் பின்னால் இருந்த சுவரில் புதியதாக வரையப்பட்டிருந்த ஒரு பெண்ணின் உருவம் அவனை இப்படியோ அப்படியோ அசையவிடாமல் கட்டிப் போட்டது. அதே உருவத்தைத்தான் சில நாழிகைகளுக்கு முன், சாளுக்கிய மன்னரைச் சந்திப்பதற்கு முன், திரைச்சீலையில் ஓவியமாகக் கண்டான். ஓவியத்தில் இருந்த அந்தப் பெண்... சிவகாமி!(தொடரும்) - கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14450&id1=6&issue=20181102 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் Posted November 6, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted November 6, 2018 On 11/1/2018 at 11:22 AM, அபராஜிதன் said: சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் கதைகளில் ஒன்றியதைப்போன்று இவரின் கதையிலோ அல்லது இப்போது வரும் ஏனைய வரலாற்று கதைகளிலோ ஒன்ற முடியவில்லை ஒருவேளை வயதாகிவிட்டதோ ? உங்களுக்கு வயதானாலும் பரவாயில்லை உங்கள் மனதுக்கு வயதாகாமல் பார்த்துக்கொண்டால் போதும் ? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted November 10, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted November 10, 2018 ரத்த மகுடம் 26 பிரமாண்டமான சரித்திரத் தொடர் ‘‘நேற்றிலிருந்து உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்... வாருங்கள்...’’ என்று அந்த பாலகன் அழைத்தபிறகும் கரிகாலன் அசையாது சிலையாக நின்றான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. கரிகாலனின் பார்வை அந்த பாலகனுக்குப் பின்னால் இருந்த சுவரில் வரையப்பட்டிருந்த சிவகாமியின் சித்திரத்திலேயே நிலைபெற்றிருந்தது. உற்றுப் பார்த்தபிறகுதான் அந்த ஓவியம் சுவரில் வரையப்படவில்லை என்பதும், சுவரில் அடுக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளின் மேல் அது தீட்டப்பட்டிருக்கிறது என்பதும் புரிந்தது. சுவடிகளை வரிசையாக சுவரை ஒட்டி சுவர் போலவே அடுக்கிவிட்டு பிறகு அவற்றின் மேல் சித்திரத்தை வரைந்திருக்கிறார்கள். ஆக, சுவடிகள் எடுக்கப்பட எடுக்கப்பட ஓவியம் கலையும்!மூன்றடி நடந்தபிறகும் தன்னை கரிகாலன் பின்தொடரவில்லை என்பதை உணர்ந்த அந்த பாலகன் புருவங்கள் சுருங்க நின்று திரும்பினான்.விழியை அகற்றாமல் கரிகாலனின் பார்வை வேறு எங்கோ இருப்பதைக் கண்டு அத்திசையை நோக்கியவனின் முகத்தில் புன்னகை அரும்பியது. ‘‘சுவடிகளைப் பார்க்கிறீர்களா..?’’ என்று கேட்டான்.கரிகாலன் பதிலேதும் சொல்லவில்லை.பாலகன் மீண்டும் அவன் அருகில் வந்தான். ‘‘அவை மனு ஸ்மிருதிகள்...’’கரிகாலனிடம் இப்போதும் அசைவில்லை. பாலகன் அவனைத் தொட்டு நடப்புக்கு அழைத்து வந்தான். ‘‘உங்களைத்தான்...’’‘‘என்ன..?’’ ‘‘அவை மனு ஸ்மிருதிகள் என்றேன்...’’ பாலகனின் பார்வை அடுக்கப்பட்டிருந்த சுவடிகளின் மீதே பதிந்திருந்தது. ‘‘வணிகராக இருப்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் வியப்புடன் பார்க்கிறீர்கள்...’’தனது நிஜ ஸ்வரூபத்தை இன்னமும் பாலகன் அறியவில்லை என்பதும், வணிகனாகவே தன்னை நினைக்கிறான் என்பதும் கரிகாலனுக்குப் புரிந்தது. அப்படியானால் ‘உங்களை எதிர்பார்த்துதான் காத்திருக்கிறோம்’ என்று ஏன் அவன் கூற வேண்டும்..? எனில் ஏதோ ஒரு வணிகனை நேற்று முதல் எதிர்பார்த்து யாரோ காத்திருக்கிறார்கள். அந்த ஏதோ ஒரு வணிகன் யார்... அவனுக்காகக் காத்திருப்பவர் யார்..? விடைகளை அறிய ‘‘ஆம், வியப்பாகத்தான் இருக்கிறது...’’ என்றபடி அந்த பாலகனிடம் பேச்சுக் கொடுத்தான் கரிகாலன்.‘‘முதன் முதலில் பார்க்கும் எல்லோருக்குமே வியப்புதான் ஏற்படும்...’’ பாலகன் புன்னகைத்தான்.‘‘இவை மனு ஸ்மிருதிகள் என்றாய்...’’‘‘ஆம்...’’‘‘ஸ்மிருதிகள் என்பது பன்மை அல்லவா..? அது எப்படி சாத்தியம்..?’’‘‘ஏன் சாத்தியமில்லை வணிகரே..?!’’‘‘மனு ஒருவர்தானே..? அவர் எழுதியது ஒன்று அல்லது இரண்டு சுவடிகள்தானே இருக்கும்..? இங்கோ நூற்றுக்கணக்கில் அடுக்கப்பட்டிருக்கிறதே...’’ பாலகனின் முகத்தைப் பார்த்தபடி இக்கேள்வியை கரிகாலன் எழுப்பினான்.பாலகனின் முகத்தில் எந்த சலனமும் ஏற்படவில்லை. அதே மாறா புன்னகையுடன் கரிகாலனின் நயனங்களை நேருக்கு நேர் சந்தித்தான். ‘‘உங்களைப் போன்றவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள்...’’‘‘அப்படியா..? உண்மை வேறா..?’’‘‘ஆம் வணிகரே! மனு என்னும் வேர்ச் சொல்லில் இருந்துதான் மனுஷ்யன், மனிதன் போன்ற சொற்கள் உருவாகின...’’‘‘ம்...’’‘‘உண்மையில் மனு என்பது ஒரு பதவி!’’ ‘‘பதவியா..?’’ ‘‘ஆம் வணிகரே... அரசர் பதவி போல் மனு என்பதும் ஒரு பதவி. பிரம்மனின் ஒரு பகலான கல்பத்தில் பதினான்கு மனுக்கள் ஆட்சிபுரிவதாக பெரியவர்கள் எழுதிய குறிப்புகளில் காணப்படுகின்றன. ஒரு மனுவின் ஆட்சிக் காலம் மனுவந்தரம் எனப்படும். இப்போது நடைபெறுகின்ற சுவேத வராக கற்பத்தில் சுவயம்பு, சுவாரோசிஷம், உத்தமம், தாமசம், ரைவதம், சாக்சூசம், வைவசுவதம், சாவர்ணி, தக்ச சாவர்ணி, பிரம்ம சாவர்ணி, தர்ம சாவர்ணி, ருத்திர சாவர்ணி, ரௌசிய தேவ சாவர்ணி, இந்திர சாவர்ணி... என பதினான்கு மனுக்கள் இருப்பதாக ஐதீகம்!’’ ‘‘ஓஹோ...’’ வெகு கவனத்துடன் தன் வியப்பை கரிகாலன் வெளிப்படுத்தினான். தனக்கு இவை எல்லாம் முன்பே தெரியும் என்பதை எந்தக் காரணம் கொண்டும் அந்த பாலகன் ஊகித்துவிடக் கூடாது என்பதில் அக்கறை செலுத்தினான். ‘‘அத்தனை மனுக்களும் எழுதிய ஸ்மிருதிகள் இங்கு இருப்பதால்தான் பன்மையில் குறிப்பிடுகிறாயா..?’’‘‘ஆம்...’’ சொல்லும்போதே பாலகனின் முகத்தில் பெருமிதம் தாண்டவமாடியது. எதுவும் தெரியாதவர்கள் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கும்போது அதை விளக்க முற்படுபவர்களின் முகத்தில் பரவசம் தோன்றுமே... அப்படியொரு உணர்ச்சி அந்த பாலகனின் முகம் முழுக்க நிரம்பி வழிந்தது. கண்களில் கனவு விரிய, அடுக்கப்பட்டிருந்த சுவடிகளைப் பார்த்தபடியே விளக்க முற்பட்டான்.‘‘இவை எல்லாம் தட்சசீல கடிகையில் இருந்து பிரதி எடுக்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்தவை! இப்போது பரத கண்டத்திலேயே ஒருசில கடிகைகளில்தான் முழு மனு ஸ்மிருதிகளின் சுவடிகளும் இருக்கின்றன. அதில் காஞ்சி கடிகை முதன்மையானது...’’‘‘அப்படியா..?’’ ‘‘ஆம் வணிகரே... இவை எல்லாம் பொக்கிஷங்கள். அதனால்தான் இவற்றைப் பயில கடல் கடந்தும் பல தேசத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சிக்கு வருகை தருகிறார்கள். மாணவர்களாக இங்கு தங்கி கல்வி பயில்கிறார்கள்!’’‘‘அப்படியானால் நீயும் ஒரு தேசத்தின் இளவரசன்தான் என்று சொல்...’’ வெட்கத்துடன் அந்த பாலகன் தலைகுனிந்தான். ‘‘கடிகையில் கற்பவர்கள் அனைவருமே மாணாக்கர்கள்தான். இளவரசன், சாமான்யன் எனப் பாகுபாடு இங்கில்லை...’’‘‘அதாவது எந்த தேசத்து இளவரசன் என்பதை என்னிடம் சொல்ல மாட்டாய்... நீங்களும் அது குறித்து கேட்காதீர்கள் என்கிறாய்... அப்படித்தானே..?’’பாலகன் புன்னகைத்தான்.‘‘சரி... இதற்காவது பதில் சொல்... மனிதர்கள் எல்லோரும் சமம்தானே..? அப்படியிருக்க அவர்களுக்குள் பாகுபாட்டை வரையறுக்கும் மனு ஸ்மிருதிகள் போன்றவை தேவையா..? நாளை நாட்டை ஆளப் போகும் நீ இதுபோன்ற ஸ்மிருதிகளைப் படித்தால் உன் தேச மக்களுக்குள் பிளவைத்தானே உண்டாக்குவாய்..?’’‘‘அப்படியல்ல வணிகரே... இவை எல்லாம் அந்தந்த காலகட்டத்து சமூக நிலையை வரையறுப்பவை. இவற்றை அப்படியே ஏற்க வேண்டும் என்றில்லை...’’‘‘பிறகு ஏன் கற்கிறாய்..?’’‘‘இருப்பதை அறிந்தால்தானே இல்லாததை நடைமுறைப்படுத்த முடியும்!’’‘‘சபாஷ்... உன்னைப் போன்ற மன்னன் கிடைக்க உன் தேச மக்கள் புண்ணியம் செய்திருக்கிறார்கள்...’’பதில் சொல்லாமல் அந்த பாலகன் தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.அவனைப் பார்த்தபடியே கரிகாலன் தூண்டிலை வீசினான். ‘‘இங்கு அடுக்கப்பட்டிருக்கும் சுவடிகள் அனைத்துமே ஸ்மிருதிகளா..?’’‘‘இல்லை வணிகரே!’’ சட்டென பாலகன் தன் தலையை உயர்த்தினான். ‘‘வலப்பக்கம் இருப்பவைதான் ஸ்மிருதிகள்...’’‘‘அப்படியானால் இடப்பக்கம் இருப்பவை..?’’‘‘தர்ம சூத்திரங்கள்! இதை தர்ம சாஸ்திரங்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. மூலச் சட்டங்கள் பலவும் அவற்றின் உரைகள், விளக்கங்கள், வியாக்கியானங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன. வரி விதித்தல், சொத்துக்கள், குடும்பங்கள், தனி நபர் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றிய சட்ட திட்டங்களும் தர்ம சூத்திரத்தில் உண்டு...’’‘‘கவுடில்யரின் அர்த்த சாஸ்திரமா..?’’ கரிகாலனின் கண்கள் கூர்மையடைந்தன.‘‘அப்படி பொதுப்படுத்த முடியாது வணிகரே!’’‘‘புரியவில்லை...’’‘‘உதாரணமாக சட்டத்துறை ஸ்மிருதிகளை நாரதர், பிரஹஸ்பதி, காட்யாயனா என மூவர் எழுதியிருக்கிறார்கள்!’’‘‘ம்...’’‘‘இதில் யாக்ஞவல்கியர், நாரதர், பிரஹஸ்பதி ஆகியோர் மனுவைத் தழுவி எழுதியிருக்கிறார்கள்!’’‘‘இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவை எல்லாம் இதில் அடங்குமா..?’’‘‘வணிகரே! தர்ம சூத்திரங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள்... ஆகிய அனைத்தும் மத அடிப்படையில், பிராமணீய சம்பிரதாயத்தில் உருவானவை. கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம் இதிலிருந்து வேறுபட்டது...’’‘‘எந்த வகையில்..?’’‘‘அது மதச் சார்பைக் குறைத்து உலகியலுடன் ஒட்டியது. எனவேதான் இதிலிருந்து ஏராளமான இலக்கியங்கள் கிளைவிட்டுள்ளன...’’ ‘‘அப்படியா..?’’ கரிகாலன் தன் வியப்பை வெளிப்படுத்தினான்.‘‘ஆம் வணிகரே! 15 அதிகாரங்களும் 180 இயல்களும் அடங்கிய அர்த்த சாஸ்திர நூல் பொருளியல், சமுதாய இயல், அரசியல்... என எல்லா வகையான துறைகளையும் உள்ளடக்கியது. என்றாலும் பெரும்பாலான பகுதிகள் அரசாங்க நிர்வாகத்தைக் குறித்தே விளக்குகிறது. அது ஆட்சியின் ஏழு பிரிவுகளைக் கூறுகிறது. அரசருக்குரிய பயிற்சிகள், கடமைகள், அவரிடம் காணப்படும் குறைபாடுகள், அமாத்யர் - மந்திரிகள் ஆகிய அலுவலர்களை நியமிக்கும் முறைகள், அவர்களுடைய கடமைகள், சொத்துச் சட்டங்கள், குற்ற இயல் சட்டங்கள், வணிகர் குழு... இவற்றை எல்லாம் அர்த்த சாஸ்திரம் தெரிவிக்கிறது...’’ ‘‘அடடே... இது மட்டும்தானா..?’’‘‘இன்னும் இருக்கிறது! ஓர் அதிகாரம் முழுவதும் குடியரசுகளைப் பற்றிச் சொல்கிறது. மூல அரசுகளுக்கிடையே நிலவும் உறவுகளை விவரிப்பதுடன் இராணுவ அமைப்பைப் பற்றியும் கூறுகிறது. போரில் வெற்றி பெறுவதற்கான உபாயங்களையும், பிடித்துக் கொண்ட பகுதி களில் வாழும் மக்களிடையே செல்வாக்கு பெறக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் சொல்கிறது...’’‘‘இதையெல்லாம் சாளுக்கிய மன்னர் படித்திருப்பார் இல்லையா..?’’‘‘அவர் மட்டுமல்ல... இந்த பரத தேசத்திலிருக்கும் அனைத்து ராஜ்ஜிய மன்னர்களும் கசடற இவற்றைக் கற்றிருப்பார்கள். எதற்காகக் கேட்கிறீர்கள் வணிகரே..!’’ ‘‘தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன் தம்பி... மேலே சொல்...’’‘‘இப்படி சகலத்தைக் குறித்தும் அர்த்த சாஸ்திரம் விளக்கினாலும் அதன் முக்கியப் பகுதி அரசருக்கு உயர் பிறப்பு கற்பிப்பதையும், ஏராளமான சமூக பொருளாதாரக் கடமைகளை அரசருக்கு ஒதுக்கி வைத்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது...’’‘‘ஆக, இவை அனைத்தும்தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சுவடிகளின் இடப்பக்கத்தில் இருக்கிறதா..?’’‘‘ஆம் இல்லை என இரண்டு விதமாகவும் சொல்லலாம்...’’ கண்களைச் சிமிட்டினான் பாலகன்.‘‘என்னப்பா இப்படிச் சொல்லிவிட்டாய்...’’‘‘அலுத்துக் கொள்ளாதீர்கள் வணிகரே... தர்ம சாஸ்திரங்கள் இடப்பகுதியில் அடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த தர்ம சூத்திரங்களில் அர்த்த சாஸ்திரமும் அடங்கும்...’’‘‘அப்படியானால்..?’’‘‘பெயர் உணர்த்துவது போலவே அர்த்த சாஸ்திரம் செல்வத்தைப் பற்றி மட்டுமின்றி தண்ட நீதி என்ற அரசியல் சாஸ்திரம் பற்றியும் விவரிக்கிறது வணிகரே! ஐந்து வகையான கொள்கைகளும் பதின்மூன்று தனிப்பட்ட ஆசிரியர்களையும் கவுடில்யர் இந்த நூலில் மேற்கோள் காட்டுகிறார்...’’‘‘பதின்மூன்று ஆசிரியர்களா தம்பி..?’’‘‘ஆம் வணிகரே! தனக்கு முன் வாழ்ந்த பதின்மூன்று ஆசிரியர்கள் எழுதிய நூல்களை அர்த்த சாஸ்திரத்தில் கவுடில்யர் சுட்டிக் காட்டுகிறார்... இந்த பதின்மூன்று ஆசிரியர்களில் சிலர் மகாபாரதம் சாந்தி பர்வத்திலும் மேற்கோள் காட்டப்படுகிறார்கள். கிடைப்பதற்கரிய அந்த பதின்மூன்று ஆசிரியர்களின் நூல்களும் நம் கடிகையில் இருக்கின்றன... இடப்பக்கத்தில் அவையும் அடுக்கப்பட்டிருக்கின்றன!’’‘‘ஆச்சர்யமாக இருக்கிறது! காஞ்சி கடிகையை ஏன் அனைவரும் புகழ்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது...’’ சொன்ன கரிகாலன் மீன் சிக்கிவிட்டது என்ற நம்பிக்கையுடன் வீசிய தூண்டிலை இழுத்தான். ‘‘தம்பி...’’‘‘சொல்லுங்கள் வணிகரே...’’‘‘எதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சுவடிகளின் மேல் ஒரு பெண்ணின் உருவ ஓவியம் ஒன்றை தீட்டியிருக்கிறார்கள்..?’’ என்றபடி அந்த பாலகனின் கண்களை உற்றுப் பார்த்தான்.கரிகாலன் சற்றும் எதிர்பாராத பதிலை அந்த பாலகன் சொன்னான்... ‘‘ஓவியமா... அதுவும் பெண்ணின் உருவமா... என்ன வணிகரே சொல்கிறீர்கள்! அப்படி எந்த சித்திரமும் இங்கு காணப்படவில்லையே!’’ (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14488&id1=6&issue=20181109 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted November 17, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted November 17, 2018 (edited) ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர்- 27 எழுந்த திகைப்பை அடக்கியபடி அந்தப் பாலகனை உற்றுப் பார்த்தான் கரிகாலன்.‘‘எதற்காக அப்படிப் பார்க்கிறீர்கள் வணிகரே..?’’ பதிலேதும் சொல்லாமல், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சுவடிகளை கரிகாலன் ஏறிட்டான். சிவகாமியின் உருவம் அவனைப் பார்த்துப் புன்னகைத்தது.தனக்குத் தெரியும் இந்தச் சித்திரம் இந்தப் பாலகனுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போகிறது..? ஒருவேளை மறைக்கிறானா..? ஏன்..?‘‘சரி வாருங்கள் வணிகரே...’’ பாலகன் அழைத்தான். ‘‘நீ செல்... சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்...’’‘‘இல்லை... உங்களுக்காக...’’ ‘‘பாதகமில்லை. கூடுதலாக இன்னும் சில தருணங்கள் காத்திருப்பதால் குடிமுழுகிப் போகாது. இறக்கப்பட்ட பனை ஓலைகள் தொடர்பான கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். அவ்வளவுதானே..? வருகிறேன். நேரம் ஒதுக்கி என்னுடன் உரையாடியதற்கு நன்றி. செல்...’’ இமைக்காமல் கரிகாலனைப் பார்த்துவிட்டு பாலகன் அகன்றான். கடைசியாக அவன் உதடுகளில் புன்னகை அரும்பியதை கவனித்த கரிகாலன், தீவிர யோசனையில் ஆழ்ந்தான். கண்ணுக்குத் தெரியாத வலை ஒன்று பல்லவ நாட்டைச் சுற்றிலும் பின்னப்படுகிறது. அதன் கண்ணியாக சிவகாமி விளங்குகிறாள். பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் அவளை முழுமையாக நம்புகிறார். சாளுக்கியர்களோ அவளைக் குறித்த ஐயத்தை எழுப்பியபடியே இருக்கிறார்கள். அப்படியும் சொல்ல முடியாது. பல்லவ மன்னரின் சகோதரரான ஹிரண்ய வர்மர் கூட சிவகாமியை நம்பாதே என்றுதானே அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார்..? யார் சொல்வது உண்மை..? சிவகாமி யார்..? அவள் செய்திருக்கும் சபதம்தான் என்ன..? பல்லவர்களின் அரண்மனையில் இதற்கு முன் இல்லாத திரைச்சீலை இப்போது மட்டும் எங்கிருந்து உதித்தது..? அதில் சிவகாமியின் உருவத்தை சித்திரமாக ஏன் தீட்டி வைத்திருக்கிறார்கள்..? அதுவும் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை, தான் சந்திப்பதற்கு முன் தன் பார்வையில் அது பட வேண்டும் என மெனக்கெட்டது போல் அல்லவா அது தெரிந்தது; தெரிகிறது..? போலவே கடிகையில் அடுக்கப்பட்டிருக்கும் சுவடிகளின் மேல் ஓவியமாக வரையப்பட்டிருக்கும் உருவம். இதுவும் அதே சிவகாமிதான். அரண்மனையில் காணப்பட்ட அதே சித்திரத்தின் இன்னொரு வடிவம்தான். இவை அனைத்தும் என் பார்வையில் விழுகிறது. அப்படி விழ வேண்டும் என்பதற்காகவே நான் செல்லும் இடங்களில் எல்லாம் திட்டமிட்டு வைக்கப்படுகிறது. திட்டமிடுவது யார்..? எதன் பொருட்டு இப்படி காய் நகர்த்துகிறார்கள்..? விரிக்கப்பட்ட வலையில் நான் விழுந்தால் பரவாயில்லை. பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் எதிர்காலமே விழுந்தால்..? முறியடிக்க வேண்டும்... சகலத்தையும் முறியடிக்க வேண்டும்... ஆணிவேரையே கண்டறிந்து களைய வேண்டும்... பல்லவ சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற வேண்டும்...முடிவுடன், அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுவடிகளை ஏறிட்டான். அடுக்குகளைக் களைந்து சுவடிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். தீட்டப்பட்டிருந்த சிவகாமியின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்தது. ‘‘அவள் இடுப்பில் இருந்த மச்சத்தைப் பார்த்தாயா..?’’ சாளுக்கிய மன்னர் எழுப்பிய வினா, மின்னலென உடலைத் தாக்கியது. கண்கள் பிரகாசிக்க அந்தப் பகுதியைப் பார்த்தான். இடப்பக்கம், அதாவது அர்த்த சாஸ்திரம் உள்ளிட்ட தர்ம சாஸ்திரங்கள் அடுக்கப்பட்டிருக்கும் பகுதி என சற்று முன் பாலகன் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. தனக்கு அச்செய்தியைச் சொல்வதற்காகவே நின்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறானோ..? அதன் அருகில் கரிகாலன் செல்லவும், இடப்பக்கத்திலிருந்து, அதுவும் சரியாக சித்திரத்திலிருக்கும் சிவகாமியின் இடுப்புப் பகுதியிலிருந்து கொத்தாக சுவடிகளை எடுத்துக் கொண்டு மாணவர்கள் செல்லவும் சரியாக இருந்தது.‘‘எங்கப்பா எடுத்துச் செல்கிறீர்கள்..?’’ ஒரு மாணவனை நிறுத்திக் கேட்டான்.‘‘சுரங்கத்துக்கு வணிகரே...’’ பதிலை எதிர்பார்க்காமல் அந்த மாணவன் அகன்றான். சுரங்கம் என்பது பாதாள அறை. நிலவறை என்றும் இதை அழைப்பார்கள். சுவடிகளைப் பராமரிப்பதற்காகவே நிர்மாணிக்கப்பட்ட இடம் அது. அதைத்தான் அந்த மாணவன் குறிப்பிட்டான். கடிகை குறித்து அறிந்திருந்த கரிகாலனுக்கு இது தெளிவாகப் புரிந்தது. இவர்கள் பின்னாலேயே சென்று உடனே அந்தக் கட்டுகளை எடுத்து ஆராய வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கினான். கூடாது. அது தன்னைக் கண்காணிக்கும் எதிரிகளை எச்சரிக்கை அடையச் செய்துவிடும். அர்த்த சாஸ்திரம்... கவுடில்யர் குறிப்பிட்டிருக்கும் பதிமூன்று ஆசிரியர்கள்... இதுதான் குறிப்பு. இதனுள்தான் ரகசியம் புதைந்திருக்கிறது. அதுவும் சாளுக்கிய மன்னர் தன்னிடம், ‘சிவகாமியின் இடுப்பில் இருக்கும் மச்சத்தைப் பார்த்தாயா...’ என குறிப்பால் உணர்த்திய ரகசியம். இதை ஏன் எதிரியான தன்னிடம் தெரிவித்தார் என்பது அந்த ரகசியத்தைக் கண்டறிந்தபிறகுதான் தெரியும்! பாலகன் வேறு இன்னும் எளிமைப்படுத்தி இருக்கிறான்... பதிமூன்று ஆசிரியர்களையும், தான் ஆராயத் தேவையில்லை... இவர்களில் சிலர் குறித்து மகாபாரதம் சாந்தி பர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது... ஆக, இந்த சிலரை மட்டும் ஆராய்ந்தால் போதும்! சுரங்கப் பகுதி என்னும் பாதாள அறைக்குச் செல்லும் வழியை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு கடிகையின் மறுபக்கம் வேடிக்கை பார்ப்பதுபோல் சென்றான்.ஒரே அளவாக வெட்டப்பட்ட ஓலைகளை ஒன்றாகக் கட்டி வைக்க சிலர் துளையிட்டுக் கொண்டிருந்தார்கள். நீளம் குறைவான ஓலைகளின் மத்தியில் அல்லது இடது ஓரத்தில் ஒரு துளை. ஓலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இரு துளைகள். மொத்தத்தில் 2:3:2 என்ற கணக்கில் துளையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி கட்டப்பட்ட ஓலைகளை மறுபுறத்தில் வாங்கி பழைய ஓலைச்சுவடிகளில் இருப்பவற்றை பார்த்துப் பார்த்து இந்தப் புதிய கட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள். அதுவும் கீறலெழுத்து முறை, மையெழுத்து முறை என இரு வகைகளில்.பனையோலையின் மீது கூர்மையான எழுத்தாணி கொண்டு கீறி உருவாக்கும் எழுத்து முறை கீறலெழுத்து முறை. தூரிகை அல்லது நாணல் குச்சி கொண்டு மையால் சுவடியின் மேற்புறத்தில் எழுதும் எழுத்து முறை மையெழுத்து. அதற்காக பனையோலைகளை அளவாக வெட்டியதுமே அதில் எழுதிவிட முடியாது. கீறல் எழுத்து எழுத முதலில் பதப்படுத்தப்பெற்ற வெள்ளோலைகளைத் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் ஓலைகளின் மேற்புறம் எழுத்தாணியால் எழுதுவதற்கேற்ப அமையும். பதப்படுத்தாமல் எழுதினால் ஓலைகளில் உள்ள நரம்புகள் சேதமடையும். பதப்படுத்துவதற்கு சில முறைகள் இருக்கின்றன. ஓலைகளை நீராவியில் வேக வைத்தல்; ஓலைகளை அதிகம் காயாத வைக்கோல்போரினுள் வைத்தல்; தண்ணீர் அல்லது பாலில் ஓலைகளை வேக வைத்தல்; ஓலைகளின் மேல் நல்லெண்ணெய் பூசி பதப்படுத்துதல்; ஈர மணலில் ஓலைகளைப் புதைத்து வைத்தல்; மண்ணில் புதைக்கப்பட்ட ஓலைகளை நான்கைந்து நாட்களுக்குப் பின் சுத்தம் செய்து தானியங்கள் பாதுகாக்கும் குதிரினுள் நெல்லுடன் வைத்தல்; மஞ்சள்நீர் அல்லது அரிசிக் கஞ்சியுடன் ஓலைகளை அரை அல்லது ஒரு நாழிகை வேக வைத்தல்... இவற்றில் காஞ்சி கடிகையில் பெரும்பாலும் நீராவியில் வேக வைத்தல் முறையை கடைப்பிடிக்கிறார்கள் என்பது கரிகாலனுக்குத் தெரியும். அன்றும் அதுவேதான் நடந்துகொண்டிருந்தது. தங்கம், பித்தளை, தாமிரம், இரும்பு, தந்தம், எலும்பு ஆகியவற்றாலான மடக்கெழுத்தாணி, குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி ஆகிய எழுத்தாணிகளில் எலும்பாலான மடக்கெழுத்தாணியையே அங்கிருந்த மாணவர்கள் பயன்படுத்தினர். மரம் அல்லது தந்தத்தாலான பிடியுடன் எழுதுவதற்கு சுலபமாக இந்த மடக்கெழுத்தாணியே இருக்கும். இப்படி வெள்ளோலைகளில் எழுதப்பெற்ற எழுத்துக்கள் தெளிவாகத் தெரிய இன்னொருபுறத்தில் சிலர் மையாடல் செய்து கொண்டிருந்தனர். அதாவது வெள்ளெழுத்தின் மீது மை தடவுதல். பூஜை அறையில் வைக்கப்படும் மகாபாரதம், ராமாயணம் மாதிரியான சுவடிகள் எனில் மஞ்சள் அல்லது வசம்பு அரைத்து அந்த மையைத் தடவுவார்கள்.படிப்பதற்கான சுவடிகள் எனில், மணித்தக்காளிச் சாறு, கோவையிலைச் சாறு, ஊமத்தையிலைச் சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒரு சாறுடன் மாவிலைக்கரி, தர்ப்பைப்புல் கரி, விளக்கெண்ணெயில் ஏற்றப்பட்ட விளக்குக் கரி ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு கரியைச் சேர்த்துத் தடவுவார்கள். இப்படிச் செய்தால்தான் எழுதப்பட்ட எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும். பூச்சி, பூஞ்சைக் காளானும் நெருங்காது.ஏற்கனவே, தான் பார்த்ததுதான் என்றாலும் யாருக்கும் எந்த சந்தேகமும் எழக் கூடாது என்பதற்காக இவற்றை எல்லாம் வியப்புடன் பார்ப்பவன் போல் கண்டுவிட்டு மெல்ல சுவடிகள் வைக்குமிடம் நோக்கி கரிகாலன் சென்றான்.பிரபஞ்சத்தில் வெப்பமண்டல நாடுகளில் உள்ள சுவடிகள்தான் வேகமாக அழிவுக்கு உள்ளாகும் என்பது அனுபவரீதியாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. மாறுபட்ட தட்பவெப்ப நிலையில் சுவடிகள் விரிந்து சுருங்குமல்லவா..? எனவே, மரம் அல்லது தந்தத்தாலான ஜாடிகளுக்குள் சுவடிகளை காற்றுப்புகாதபடி பாதுகாப்பார்கள். முக்கியமான சுவடிகள் பித்தளை, தாமிரம், தந்தம் ஆகியவற்றாலானதால் பட்டாடைகள் சேர்த்து அலங்கரிப்பார்கள். தூசு, ஒளி, காற்றிலுள்ள ஈரம் மற்றும் வெப்பநிலை சுவடிகளைத் தாக்காமல் இருக்க பட்டு அல்லது பருத்தித் துணிகளால் கட்டி வைக்கும் வழக்கமும் உண்டு. இதுதவிர முக்கியத்துவம் வாய்ந்த சுவடிகளை மான் தோலினால் சுற்றுவார்கள் அல்லது மற்ற விலங்கின் தோலினாலான பைகளில் அடைத்து வைப்பார்கள். காஞ்சி கடிகையில் இந்த முறைகள் அனைத்தும் பின்பற்றப்படுகின்றன. சகலத்தையும் நிலவறையில் வைப்பார்கள் என்பதால் அதை நோக்கி கரிகாலன் சென்றான்.யாரும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்தபின் நிலவறைக்குள் இறங்கினான்.இறங்கியவனை வரவேற்கும் விதமாக அவன் முகத்தில் குத்து விழுந்தது!சுதாரித்து நிமிர்ந்த கரிகாலனை நான்குபேர் சுற்றி வளைத்தார்கள்! (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14515&id1=6&issue=20181116 Edited November 17, 2018 by கிருபன் 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted November 26, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted November 26, 2018 ரத்த மகுடம் - 28 பிரமாண்டமான சரித்திரத் தொடர் பெரு வணிகன் வேடம் தரித்திருந்தாலும் இடுப்பில் இரு குறுவாள்களை மறக்காமல் கரிகாலன் மறைத்து வைத்திருந்தான். என்றாலும் அந்தச் சூழலில் அதைப் பயன்படுத்த அவன் விரும்பவில்லை. கடிகை என்பது ஆலயத்துக்கு சமம். அங்கு வாட்களை உருவுவதும், ஆயுதங்களால் சண்டையிடுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. பல்லவர் கால வழிமுறையை சாளுக்கியர்களும் பின்பற்றுகிறார்கள் என்பதில் அவனுக்கு துளியும் சந்தேகமில்லை. ஏனெனில் அவனைச் சூழ்ந்து நின்ற நால்வரும் கூட தங்களது கரங்களையும் கால்களையும் புஜங்களையும்தான் பயன்படுத்த முற்படுகிறார்கள் என்பதை ஒரே பார்வையில் உணர்ந்துகொண்டான்.ஆக, சூழ்ந்திருப்பவர்களின் நோக்கம் குறிப்பிட்ட சுவடிக் கட்டை, தான் கைப்பற்றாமல் இருப்பதுதான் என்ற தீர்மானத்துக்கு வந்த கரிகாலன் தன் கண்களை அரைவாசி மூடினான். நிலவறைக்குள் யாருமில்லை என்பதைக் குறித்துக் கொண்டான். தன்னைப் போலவே வேடம் தரித்திருக்கிறார்கள். என்ன... வணிகன் தோற்றத்துக்குப் பதில் கடிகையில் பயிலும் மாணவர்களின் தோற்றம். ‘தேவையெனில் பயன்படுத்திக்கொள்...’ என சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் தன்னிடம் கொடுத்த முத்திரை மோதிரத்தை எடுக்கலாமா என ஒரு கணம் கரிகாலன் யோசித்தான். வேண்டாம். எதன் பொருட்டோ தனக்கு உதவ சாளுக்கிய மன்னர் முற்படுகிறார். அப்படிப்பட்டவர் நிச்சயமாகத் தன்னைப் பின்தொடர கடிகைக்கு ஆட்களை அனுப்பியிருக்க மாட்டார். எனில், சூழ்ந்திருப்பவர்கள் யார்..? அரைவாசி திறந்த கண்களுடன் தன்னைச் சுற்றிலும் ஆராய்ந்தான். சூழ்ந்தவர்களின் உடல்களும் ஊன்றி நின்ற கால்களின் அழுத்தங்களும் அவர்கள் சாளுக்கியர்கள் அல்ல என்பதை மெய்ப்பித்தன. அப்படியானால் இவர்கள் யார்..? எதற்காக குறிப்பிட்ட சுவடிக் கட்டுகளை, தான் எடுக்கவே கூடாது எனப் பார்த்துப் பார்த்து தடுக்கிறார்கள்..? இதன் வழியாக சிவகாமி குறித்த எந்த உண்மையை தன்னிடம் இருந்து மறைக்கிறார்கள்..? இவர்களுக்கும் சிவகாமிக்கும் என்ன தொடர்பு..? சாளுக்கிய மன்னருக்குத் தெரியாமல் எப்படி கடிகைக்குள் நுழைந்தார்கள்..? சூழ்ந்த கேள்விகளை உள்வாங்கியபடியே சில தீர்மானங்களுக்கு கரிகாலன் வந்தான். தாக்குதல் கூடாது. தற்காப்புக் கலையை மட்டுமே பயன்படுத்தி தப்பிக்க வேண்டும். சாளுக்கிய மன்னர் தன்னிடம் வழங்கிய முத்திரை மோதிரத்தை கச்சையிலிருந்து எடுக்கவே கூடாது. முக்கியமாக சிவகாமி குறித்த உண்மையை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட அந்தச் சுவடிகளின் கட்டை எடுத்தே தீரவேண்டும். இப்போதைய தேவை அதுதான். நடக்கவிருக்கும் பல்லவ - சாளுக்கியப் போருக்கும் சிவகாமிக்கும் நிச்சயமாகத் தொடர்பிருக்கிறது. இந்தப் பிணைப்பின் ஆணிவேரை அறியாமல் எந்த வியூகம் வகுத்தும் பயனில்லை.முடிவுக்கு வந்த கரிகாலன், தன் வலது காலை முன்நகர்த்தி அரைவட்டமாகக் கோடு கிழித்தான். இதை எதிர்கொள்ளும் விதமாக அந்த நால்வரும் தம் கால்களை நகர்த்தினார்கள். அதிலிருந்து அவர்களது தாக்குதல் எப்படியிருக்கும் என்பதை ஊகித்த கரிகாலன் அதற்கேற்ப குனிந்து நிமிர்ந்து கால்களின் வீச்சு தன் மீது படாதபடி நிலவறையின் அந்தப் பக்கம் வந்து சேர்ந்தான்.இப்போது நால்வரும் நிலவறையின் வாயில் பக்கம் நின்றார்கள். புன்னகையுடன் தன் பின்பக்கம் சாய்ந்தான். மேல்தளத்தில் அடுக்கப்பட்டிருந்த - சிவகாமியின் உருவம் தீட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய - சுவடிகள் மீது சாய்ந்தான். மேல்தளம் போலவே இங்கும் அச்சுவடிகள் அடுக்கப்பட்டிருந்தன. தன்னிடம் பேச்சுக் கொடுத்து இடப்பக்கம் குறித்த குறிப்பை வெளிப்படுத்திய பாலகனின் வேலையாகத்தான் இதுவும் இருக்க வேண்டும். யார் அந்த பாலகன்..? எதற்காகத் தனக்கு உதவ முற்படுகிறான்..? யோசிக்க நேரமில்லை. கரங்களைக் கோர்த்தபடி நால்வரும் தன்னை நோக்கி வருகிறார்கள். நல்லது.சட்டென்று குனிந்த கரிகாலன் இமைக்கும் பொழுதில் இடப்பக்கம் இருந்த - சிவகாமியின் சித்திரத்தின் இடுப்புப் பகுதியில் இருந்த - ஐந்து சுவடிகளை ஒரே இழுப்பில் இழுத்தான். கையோடு அவை வந்தன. அவற்றை அப்படியே தன் இடுப்பு வஸ்திரத்தில் கட்டிக்கொண்டு கால்களை உயர்த்தினான்.ம்ஹும். எதிரே வந்தவர்களை நோக்கி அல்ல. மாறாக, பக்கத்தில் இருந்த சுவரில் தன் கால்களைப் பதித்து ஒரே தாவாகத் தாவி அந்நால்வரையும் கடந்தான்.அதன்பிறகு திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நிலவறையின் வாசலை நோக்கி ஓடி படிக்கட்டில் ஏறி மேலே வந்தான். பின்னால் எட்டுக் கால்களின் ஓசைகள் கேட்டன. நிலவறைக்கு மேலேயும் ஆட்கள் இல்லை. ஆக, நால்வர் மட்டும்தான் தன்னைத் தாக்க வந்திருப்பவர்கள்...என கரிகாலன் முடிவு செய்வதற்கு முன்பே திசைக்கு இருவராக வேறு சிலர் அவனை நோக்கி ஓடி வந்தார்கள். அனுப்பியவர்கள் யாராக இருந்தாலும் தன்னைக் குறித்து அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் தன் பலம் அறிந்து தன்னை வீழ்த்த பலரை அனுப்பியிருக்கிறார்கள். சுற்றிலும் கரிகாலன் ஆராய்ந்தான். பத்துக்கும் மேற்பட்டவர்கள். சாதாரணமாக ஓடித் தப்பிக்க முடியாது. குரங்காக மாற வேண்டும். மாறுவோம்! பல்லவ இளவல் ராஜசிம்மனின் சீன நண்பர்களிடம், தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தினான். நான்கடி தொலைவில் மூங்கில் கொட்டகை. பார்வையால் அளந்த கரிகாலன் தன் பாதங்களை ஊன்றாமல் கால் கட்டை விரலை மட்டும் ஊன்றி ஒரு தாவு தாவினான். மறுகணம் மூங்கில் கொட்டகையின் மேல் இருந்தான். அங்கிருந்து அடுத்த கூரை. பிறகு மற்றொன்று.இதற்குள் அவனைத் துரத்தி வந்தவர்கள் கூரைகளின் மேல் ஏறத் தொடங்கினார்கள். கடிகையில் பயிலும் மாணவர்களும் என்ன ஏது என்று புரியாமல் சூழ ஆரம்பித்தார்கள். இதற்கேற்ப, நிலவறையில் அவனைத் தாக்க முற்பட்டவர்கள் ‘‘கள்வன்... கள்வன்... சுவடிகளை எடுத்துக்கொண்டு ஓடுகிறான்...’’ என அலறினார்கள்.கரிகாலன் எதையும் பொருட்படுத்தவில்லை. தாவித் தாவி கடிகைக்கு வெளியே வந்தான். இப்போது புரவி வீரர்களும் அவனைச் சூழத் தயாரானார்கள். சிக்கினால் பல கேள்விகள் எழும். பரிசோதித்தால் சாளுக்கிய மன்னரின் முத்திரை மோதிரம் அகப்படும். ஒரு முடிவுடன் தன் வேகத்தை அதிகரித்து குதிரைகளைவிட வேகமாக ஓடினான். கடிகையிலிருந்து காஞ்சி மாநகருக்குச் செல்லும் பாதையோரம் இருக்கும் தோப்புக்குள் நுழைந்து தன்னை மறைத்தபடியும் மரங்கள் மீது ஏறி மறைந்தும் காஞ்சி மாநகரின் பிரதான சாலையை அடைந்தான். நகரின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் அவனுக்குத் தண்ணீர் பட்ட பாடு. எனவே பிரதான சாலையில் இருந்து குறுக்குச் சாலைக்குள் நுழைந்து அங்கிருந்து இன்னொரு சந்துக்குள் ஊடுருவி வணிகர்களின் வீதியை அடைந்தான். குழல்கள் ஊதப்பட்டன. எதிரி ஊடுருவி இருக்கிறான் என்பதற்கான எச்சரிக்கை ஒலி இது. எனில், நகருக்குள் இருக்கும் அனைத்து சாளுக்கிய வீரர்களும் தேடுதல் வேட்டையில் இறங்குவார்கள். அதற்குள் மறைய வேண்டும்... சிந்தித்தபடியே வணிகர் வீதியில் இருந்த மாளிகைகளின் ஓரம் யாருக்கும் எந்த சந்தேகமும் எழாதபடி நடந்தான்.ஒரு கரம் அவனை இழுத்தது. யாரென்று திரும்பிப் பார்த்தான். சிவகாமி!அவன் இடுப்பில் இருந்த சுவடிக் கட்டின் மீது அவள் பார்வை பதிந்தது. உதட்டிலும் புன்னகை பூத்தது! (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14548&id1=6&issue=20181123 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted November 30, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted November 30, 2018 ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 29 மனதின் தீர்மானத்தை உடல் எதிரொலிக்கிறதா அல்லது உடல் வெளிப்படுத்தும் உணர்ச்சியை உள்ளம் பிரதிபலிக்கிறதா..? கல்தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டே மனிதர்களை அலைக்கழிக்கும் இக்கேள்வியின் பிடியில்தான் அன்று கரிகாலனும் சிக்கியிருந்தான். இந்த வினாவுக்கு விடை தேடிப் புறப்பட்டவர்கள் ஒன்று ஞானியாவார்கள் அல்லது பித்துப் பிடித்துத் திரிவார்கள். இவ்விரண்டில் எந்த நிலைக்குச் செல்வது என்று தெரியாமல் கரிகாலன் ஊசலாடிக் கொண்டிருந்தான். காரணம், சிவகாமி. யாரைப் பற்றிய ரகசியத்தை அறிய கடிகையின் நிலவறையிலிருந்து சுவடிக் கட்டைக் கைப்பற்றிக் கொண்டு தன்னைத் துரத்துபவர்களிடம் பிடிபடாமல் ஓடி வருகிறானோ அந்தப் பெண்ணே அவனைக் காப்பாற்ற கையைப் பிடித்து இழுக்கிறாள்! வாழ்க்கையை விட இலக்கியங்களும் காவியங்களும் சுவை மிகுந்ததில்லை என்று சும்மாவா பெரியவர்கள் சொல்கிறார்கள்..? பிரமை தட்டிய கண்களுடன் தன்னை ஏறிட்டவனைப் பார்த்து கண்களால் சிரித்த சிவகாமியின் பார்வை ஒரு கணம் அவன் இடுப்பில் பதிந்தது. அது உண்மையா என்று அவன் தெளிவதற்குள் அவனை இழுத்துக் கொண்டு அந்த மாளிகையை ஒட்டி இருந்த நந்தவனத்துக்குள் நுழைந்தாள். ‘‘சிவகாமி...’’ கரிகாலன் பேச முற்பட்டான்.‘‘உஷ்... கொஞ்சம் பொறுங்கள்...’’ சொன்னவள் நந்தியாவட்டை செடிகளுக்குள் புகுந்தாள். புதர் போன்று அடர்த்தியில்லை. இடைவெளிகள் நன்றாகவே இருந்தன. மறைவிடம் மருந்துக்கும் இல்லை. துரத்தி வருபவர்கள் நந்தவனத்துக்குள் நுழைந்தால் சுலபமாகப் பிடித்து விடுவார்கள். அப்படியிருக்க, இதற்குள் எதற்காகக் குனிந்து குனிந்து, அதுவும் தன் கரங்களைப் பிடித்தபடி செல்கிறாள்..? இந்த மாளிகைக்கு சொந்தக்காரரோ அவரது குடும்பத்தினரோ அல்லது அவர்களது பாதுகாவலர்களோ எட்டிப் பார்த்தால் கூட தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமே... ‘யார் நீங்கள்..? இங்கென்ன செய்கிறீர்கள்..?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? உடை வேறு வணிகருடையதாக இருக்கிறது. இல்லையெனில் பூப்பறிக்க வந்ததாகச் சொல்லலாம்..!‘‘மறைவதற்கு இங்கு இடம் ஏதுமில்லை...’’ அவள் காதருகில் கரிகாலன் கிசுகிசுத்தான். சிவகாமி பதிலேதும் கூறவில்லை. மாறாக, அக்கம்பக்கம் பார்த்தபடியே கரிகாலனின் கரங்களைப் பற்றியபடி நந்தியாவட்டை செடிகளைக் கடந்து அங்கிருந்த மாமரங்களுக்குள் நுழைந்தாள். ஓரளவு அடர்த்தி சூழ ஆரம்பித்தது. நிழல்களில் பதுங்கியபடியே நடுவில் இருந்த மாமரத்தை அடைந்தவள் கரிகாலனின் கரங்களை விடுவித்தாள். கண்ணால் அவனிடம் ஜாடை காட்டிவிட்டு சட்டென அம்மரத்தின் மீது ஏறினாள். தரையிலிருந்து ஆறடி உயரத்தில் இருந்த கிளைகளில் அமர்ந்தவள் கைகளால் அவனையும் ஏறச் சொன்னாள். கட்டுப்பட்டு ஏறியவன் தன் பின்னால் அமர்வதற்கு இடம் கொடுக்கும் விதமாக முன்னோக்கி நகர்ந்தாள். அதை ஏற்று இயல்பாக அமர்ந்தவன் எப்படிப்பட்ட தவற்றை, தான் செய்திருக்கிறோம் என்பதை உணர்வதற்குள் காலம் கடந்துவிட்டது! கிளைகள் அழுத்தியது போக எஞ்சியிருந்த அவளது இடைப்பகுதி அவனது இடுப்பை உரசியது! மின்னலால் தாக்கப்பட்டவன் நிலைகுலைந்து பின்னால் நகர முற்பட்டான்! கிளைகளின் பிடிமானம் அதற்கு இடம் அளிக்கவில்லை! சங்கடத்துடன் அசைந்தவனுக்கு மேலும் இம்சையை ஏற்படுத்தும் விதமாக அவன் மார்பில் தன் முதுகை சிவகாமி சாய்த்தாள்! நிலைகுலைந்து போனான்! உணர்ச்சிகள் ஊசி முனையில் தாண்டவமாடின. அவனை விட சிவகாமி உயரம் குறைந்தவள் என்பதாலும் அவன் மீது ஏறக்குறைய அவள் சாய்ந்துவிட்டதாலும் அவளது முன்னெழுச்சிகள் அவன் பார்வையில் பட்டன. ஊசியாகக் குத்தின. சிவகாமியின் நிலையும் வார்த்தைகளுக்குள் சிக்காமல் அலைகளில் தடுமாறும் படகானது. தன்னை மறந்த நிலையில் பெருமூச்சு விட்டாள். இதனால் கச்சையை மீறி வெளிப்பட்ட பிறைகள் அதிகரிப்பதும் குறைவதுமாக மாயாஜாலம் நிகழ்த்தின. அதிர்ந்த உடல் கரிகாலனைக் கீழே விழவைக்க முற்பட்டது. சமாளித்துக்கொள்ள தன் இரு கரங்களாலும் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்தான். சிவகாமியின் இடுப்பில் இருந்த பூனை ரோமங்கள் சிலிர்த்தன. தன்னை மறந்து தன் இடக்கையை உயர்த்தி அவன் கேசத்தை கொத்தாகப் பிடித்தாள். கணங்கள் யுகங்களாயின. கரிகாலனின் விரல்கள் அவள் இடுப்பைச் சுற்றிலும் கோலமிட்டன. தடுக்கும் விதமாக ‘‘உம்...’’ கொட்டி அசைந்தாள்.‘‘எதற்காக அசைகிறாய் சிவகாமி..? பூச்சி ஏதாவது கடிக்கிறதா..?’’ என்றபடி தன் கரங்களை அவள் பின்னெழுச்சி பக்கமாக நகர்த்தினான். ‘‘சும்மா இருங்கள்...’’ கொஞ்சியபடி அவன் கையைத் தட்டிவிட்டாள்.‘‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை...’’ என்றபடி அவள் கழுத்தில் தன் முகத்தைப் பதித்தான். வெளியேறிய அவன் சுவாசம் அவள் சருமத்தைச் சுட்டது! வெந்து தணிந்தவள் நிலைகொள்ளாமல் அசைந்தாள். அசைவில் அவள் இடுப்புப் பகுதி அவன் இடுப்பின் முடிச்சிலிருந்த ஓலைச் சுவடிகளின் மேல் பட்டது! ‘‘மறைவான இடம் கிடைத்தால் போதுமே... மடத்தைப் பிடித்து விடுவீர்களே..!’’ உருட்டிவிட்ட நவரத்தினங்களாகச் சிரித்தாள். அந்தப் புன்னகை கரிகாலனைச் சுண்டிவிட்டது. மறைத்திருந்த மாயத்திரையும் அகன்றது. காஞ்சியை அறியாதவள் அல்லவா இவள்..? அப்படித்தானே பல்லவர்களின் புரவிப்படைத் தளபதியான வல்லபன் தன்னிடம் மல்லைக் கடற்கரையில் கூறினான்..? இவளானால் இந்த மாநகரத்தையே நன்கு அறிந்தவள் போல் பேசுகிறாளே..? எந்த சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அளவுக்கு மீறி குழைந்தான். ‘‘இது மறைவான இடமா சிவகாமி..?’’‘‘இதுதான் மறைவான இடம்!’’ சிவகாமி கண்களைச் சிமிட்டினாள். ‘‘அப்படியா..?’’‘‘ஆம். காஞ்சியின் பெருவணிகர் மாளிகைக்குள் நுழையும் தைரியம் யாருக்கு இருக்கிறது..?’’‘‘இது பெருவணிகரின் மாளிகையா..?’’‘‘என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்..? காஞ்சியை அறிந்த உங்களுக்குத் தெரியாதா..?’’‘‘என்னைவிட நீ அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாய் சிவகாமி...’’‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை. சத்திரத்தில்தான் இப்படிச் சொல்லி வழிகாட்டி அனுப்பினார்கள்!’’ ‘‘யார்..?’’‘‘பெயரெல்லாம் கூறவில்லை. கடிகையில் படிக்கும் மாணவன் என்று சொன்னால் போதும் என்றார். பார்ப்பதற்கு பாலகன் போல் இருந்தார். உங்கள் நண்பராமே..!’’ கரிகாலன் முழுமையாக சுயநினைவுக்கு வந்தான். ‘‘நடந்ததைச் சொல்...’’‘‘நீங்கள் கட்டளையிட்டபடி சத்திரத்தில் பணிப்பெண் போல் நடமாடினேன்...’’‘‘ம்...’’‘‘ஒரு நாழிகைக்கு முன் அந்த பாலகன் வந்தான்...’’‘‘ம்...’’‘‘நீங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், பலர் உங்களைத் துரத்துவதாகவும் சொன்னான்...’’‘‘ம்...’’‘‘என்ன ‘ம்?’... பதறிவிட்டேன் தெரியுமா..? என் நிலையைப் பார்த்து அந்த பாலகன் சிரித்தான்! அவமானத்தில் அப்படியே கூனிக்குறுகி விட்டேன்!’’‘‘...’’‘‘உங்களை எப்படிக் காப்பாற்றுவது என்று கேட்டேன். அந்த பாலகன்தான் இந்த வணிகர் வீதிக்குச் செல்லும் வழியைச் சொல்லி, இந்தப் பக்கமாகத்தான் நீங்கள் வருவீர்கள் என்றும், உங்களை இந்த மாளிகையின் நந்தவனத்துக்குள் இருக்கும் மாமரங்கள் பக்கமாக அழைத்து வரும்படியும் சொன்னான்...’’‘‘அவன் சொன்னால் அப்படியே கேட்டு விடுவாயா..? சந்தேகப்பட மாட்டாயா..?’’‘‘எதற்காக ஐயம் கொள்ள வேண்டும்..? பால் வடியும் முகம் கொண்ட பாலகன் ஏன் பொய் சொல்ல வேண்டும்..? தவிர...’’‘‘தவிர..?’’‘‘நான் வந்ததால்தானே உங்களைக் காப்பாற்ற முடிந்தது..? அப்படியானால் அவன் சொன்னது உண்மைதானே!’’ கரிகாலன் மவுனம் சாதித்தான்.‘‘ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்..?’’‘‘நினைத்துப் பார்க்கிறேன்... பெருமையாக இருக்கிறது...’’‘‘உங்களை நான் காப்பாற்றியதுதானே..?’’‘‘இல்லை, அவமதித்ததற்கு!’’அதிர்ந்து போய் தன் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். ‘‘என்ன சொல்கிறீர்கள்..? உங்களை நான் அவமதித்தேனா..?’’‘‘ஆம். இல்லையெனில் என்னைக் காப்பாற்ற வந்திருப்பாயா..’’‘‘வந்தது தவறா..?’’‘‘ஆம்! என்னால் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும் என்ற நம்பிக்கை உனக்கு இருந்திருக்க வேண்டும்!’’ ‘‘அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா..?’’‘‘என் மீதுதானே... இருக்கிறது!’’‘‘நான் கேட்க வந்தது வேறு...’’‘‘என்ன..?’’‘‘உங்களை நான் நம்பியிருக்க வேண்டும் என்கிறீர்கள்...’’‘‘ஆம்...’’‘‘அதாவது இத்தனை நாட்களாக நாம் பழகியதை வைத்து...’’‘‘ம்...’’‘‘இதையே நானும் கேட்கலாம் அல்லவா..?’’கரிகாலன் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை உற்றுப் பார்த்தான். ‘‘என்ன சொல்கிறாய்..?’’‘‘என்னை...’’ தன் மார்பில் கை வைத்தாள். ‘‘நீங்கள் நம்பியிருக்க வேண்டுமல்லவா..?’’‘‘ந..ம்..ப..வி..ல்..லை... என்கிறாயா..?’’ ‘‘இல்லாவிட்டால் இதை எதற்கு கைப்பற்றி தலைதெறிக்க ஓடி வந்தீர்கள்..?’’ என்றபடி தன் கைகளைப் பின்னால் கொண்டு வந்து அவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடிக் கட்டுகளைத் தொட்டுக் காட்டினாள்! செய்வதறியாமல் கரிகாலன் திகைத்து நின்றான்.‘‘‘நீயாக சொல்லும்வரை நீ யாரென்று கேட்கவும் மாட்டேன்... ஆராயவும் மாட்டேன்...’ என்றெல்லாம் வனத்தில் கூறிவிட்டு இப்போது மட்டும் எதற்காக என் பூர்வீகத்தை அறிய சுவடிகளை நாடுகிறீர்கள்..? அப்படியானால் என் மீது நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்...?’ ’ சிவகாமியின் குரல் தழுதழுத்தது. ‘‘சிவகாமி...’’‘‘போதும். என்ன இருந்தாலும் நீங்கள் ஆண்தானே..? அதனால்தான் சந்தேகக் குணம் உங்கள் நாடி நரம்புகளில் பாய்கிறது...’’‘‘அப்படியல்ல சிவகாமி...’’‘‘எதற்காக இல்லாத விளக்கத்தை விவரிக்க முற்படுகிறீர்கள்..? அதுதான் பளிங்கு போல் பளிச்சென்று தெரிகிறதே...’’ கண்களைத் துடைத்தபடி அவன் அணைப்பிலிருந்து விடுபட்டு தரையில் குதித்தாள். ‘‘அந்த பாலகன் சொன்னபோது கூட நான் நம்பவில்லை. ஆனால்... ஆனால்... உங்கள் இடுப்பின் முடிச்சுக்குள் சுவடிக் கட்டைப் பார்த்ததும்...’’ பேச முடியாமல் முகம் பொத்தி அழுதாள். பதறிய கரிகாலன் கிளையிலிருந்து கீழே குதித்து அநிச்சையாக அவளை அணைத்தான். ‘‘அப்படியல்ல சிவகாமி...’’‘‘அப்படியோ இப்படியோ எப்படியோ... என்மீது உங்களுக்கு ஐயம் இருக்கிறது. அது மட்டும் நிச்சயம்...’’ அவன் கரங்களை விலக்கினாள். ‘‘வாருங்கள்... காஞ்சிக்கு உங்களை வரச் சொன்ன புலவர் தண்டியைச் சந்திக்கலாம்! அவரைப் பார்த்துவிட்டு உடனே நாம் வெளியேற வேண்டும். பல்லவ இளவலைச் சந்திக்க வேண்டும்...’’ பதிலை எதிர்பார்க்காமல் மாளிகையை நோக்கி நடந்தாள். ‘‘இந்த மாளிகைக்குள்ளா புலவர் இருக்கிறார்..?’’‘‘அப்படித்தான் அந்த பாலகன் சொன்னான்...’’ என்றபடி திரும்பினாள். ‘‘அதுவும் பாதுகாப்பாக இருக்கிறதல்லவா..?’’‘‘எது..?’’‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் உங்களிடம் கொடுத்த முத்திரை மோதிரம்!’’ கரிகாலனின் கண்கள் சுருங்கின. இமைக்கும் பொழுதில் அதை உள்வாங்கிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.‘‘அந்த பாலகன்தான் சொன்னான். அவனுக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தெரியாது...’’ சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்தாள். (தொடரும்)- கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14573&id1=6&issue=20181130 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted December 7, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2018 ரத்த மகுடம்-30 பிரமாண்டமான சரித்திரத் தொடர் சிவகாமி செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த கரிகாலனுக்குள் எண்ணற்ற வினாக்கள் வலையாக விரிந்தன. சிக்காக முடிச்சிட்டன. சாளுக்கிய மன்னர் தன்னிடம் தனிமையில் பேசியது அந்த பாலகனுக்கு எப்படித் தெரியும்..? கடிகையில் தன்னிடம் எதையும் விசாரிக்காதவன் சிவகாமியிடம் எப்படி நடந்தது நடந்தபடி அனைத்தையும் கூறினான்..? வெறும் பால் வடியும் முகத்துடன் இருப்பதாலேயே அவன் சொல்வதை எல்லாம் இவள் நம்புகிறாளா... அல்லது இவளுக்கும் அந்த பாலகனுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா..? அந்த பாலகன் யார்..? உண்மையில் இந்த சிவகாமி யார்..? எந்தளவுக்கு இவளை நம்பலாம் அல்லது சந்தேகிக்கலாம்..? பலத்த சிந்தனையுடன் அவளைப் பின்தொடர்ந்தான். மூடியிருந்த மாளிகையின் கதவை நெருங்கிய சிவகாமி சட்டென்று திரும்பினாள்.அவளைப் பின்தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறி வந்த கரிகாலன் அவளுக்கு அடுத்த படியில் நின்றபடி என்னவென்ற கேள்வியுடன் அவளை ஏறிட்டான்.அவன் கருவிழிகளை உற்றுப் பார்த்தவள் என்ன ஏது என்று அவன் சுதாரிப்பதற்குள் அவன் கேசத்தைக் கொத்தாகப் பிடித்து அவன் உதட்டில் முத்தமிட்டாள்!கண்கள் விரிய அவள் நயனங்களை ஆராய்ந்தான். பரஸ்பர உமிழ்நீர் பரிமாற்றத்தில் கணங்கள் கடந்தன.தன்னிலையை மறந்து அவனும் இயங்கத் தொடங்கியபோது நாணிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல் விலகினாள். ‘‘சிவகாமி...’’ முணுமுணுத்தபடி அவளை மீண்டும் தன்மீது சாய்க்க முற்பட்டான்.‘‘என்னை நம்புங்கள்! என்னை மட்டுமே நம்புங்கள்..!’’ சலனமின்றி அவனிடம் சொல்லிவிட்டு மாளிகையின் கதவைத் தட்டினாள்.ஒருமுறைதான். மறுமுறை தட்ட கையை ஓங்குவதற்குள் பட்டென கதவு திறந்தது. திறந்தது காவலாளி அல்ல! சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர்!‘‘வா கரிகாலா...’’ அழைத்தபடி வெளியில் வந்தவர் சுற்றிலும் பார்த்தார். அவர் கண்களில் திருப்தி வழிந்தது. ‘‘துரத்தி வந்த காவலர்களை, கடிகை மாணவர்களை நன்றாகவே போக்குக் காட்டி அலையவிட்டிருக்கிறாய்... ஒருவரும் இந்த மாளிகைப் பக்கம் வரவில்லையே...’’ புன்னகைத்தபடி மாளிகைக்குள் நுழைந்தார்.அவரைத் தொடர்ந்து சிவகாமியும் வலது காலை எடுத்து வைத்தாள். தனக்குப் பின்னால் எந்த அரவமும் கேட்காததால் முகத்தைத் திருப்பிப் பார்த்தாள்.ஆடாமல் அசையாமல் கரிகாலன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். ‘‘அவனை அழைத்துக்கொண்டு வா...’’ திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு ஸ்ரீராமபுண்ய வல்லபர் மாளிகைக்குள் சென்றார்.சிவகாமி தலையசைத்துவிட்டு அவனை நோக்கி வந்தாள். அவள் நடையில் தெரிந்த துள்ளலை கரிகாலன் கவனித்தான். ‘சிவகாமியை நம்பாதே...’, ‘சிவகாமியை நம்பாதே...’ என அவன் செவிக்குள் கடம்ப இளவரசரில் தொடங்கி பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் ஒன்றுவிட்ட சகோதரரான ஹிரண்ய வர்மர் வரை பலரும் ஓலமிட்டார்கள். இமைக்காமல், வருபவளை எதிர்கொண்டான்.‘‘ஏன் நின்றுவிட்டீர்கள்... வாருங்கள்...’’ கொஞ்சலுடன் அழைத்தாள்.‘‘எங்கு..?’’ நிதானமாக கரிகாலன் கேட்டான்.‘‘இதென்ன கேள்வி..? மாளிகைக்குள்தான்...’’ புன்னகைத்தவளின் பார்வை கணத்துக்கும் குறைவான நேரத்தில் அவன் இடுப்பில் இருந்த சுவடிக் கட்டுகளின் பக்கம் சென்று மீண்டது.கரிகாலன் அதை உள்வாங்கினான். தனக்குப் பின்னால் எழுந்த சலசலப்பையும்தான். திரும்பிப் பார்க்காமலேயே என்ன நடக்கிறது என்பது புரிந்தது. அவை சிவகாமியின் கருவிழிகளுக்குள் பிரதிபலிக்கவும் செய்தது! உருவிய வாட்களுடன் வீரர்கள் ஒவ்வொருவராக படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தார்கள்!‘‘விருந்தினர்களை வரவேற்கும் முறையா இது... வாட்களை கீழே இறக்குங்கள்! நீங்கள் வருவதைப் பார்த்தால் இவரை சிறை செய்ய முற்படுவதுபோல் தெரிகிறது!’’ கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான்.‘‘எதற்காக சிரிக்கிறீர்கள்..?’’‘‘நேரடியாக என்னிடமே சொல்லியிருக்கலாம். அவர்களை முன்வைத்து குறிப்பால் உணர்த்த வேண்டிய அவசியமில்லை..! இதுவரை பதுங்கி இருந்தவர்கள் இனி தைரியமாக மாளிகையைச் சுற்றி காவல் இருக்கட்டும். வா... நாம் உள்ளே செல்லலாம். சாளுக்கிய போர் அமைச்சர் நமக்காக... இல்லை... எனக்காகக் காத்திருக்கிறார்..!’’அலட்சியமாக சொற்களை உதிர்த்துவிட்டு கம்பீரமாக மாளிகைக்குள் நுழைந்தான்.திரும்பிப் பார்க்காமல் தன்னை நோக்கி வந்த வீரர்களின் எண்ணிக்கையை அவன் கணக்கிட்டதும், ஸ்ரீராமபுண்ய வல்லபரைச் சந்திக்க தயக்கமின்றி செல்வதையும் பார்த்தவளுக்குள் இனம் புரியாத உணர்வுகள் பொங்கி வழிந்தன. அவன் திறமையை நன்றாகவே அறிவாள். கண்களுக்கு நேராக அவற்றைப் பார்க்கவும் செய்திருக்கிறாள். பத்து வீரர்களல்ல... சில நூறு பேர் வந்தாலும் அவனால் சமாளிக்க முடியும். அசுவம் போன்றவன். திமிறியும் எழுவான். பாயவும் செய்வான். கூட்டத்தை சிதறடிக்கவும் செய்வான். குழையவும்...சுண்டிவிட்டது போல் உடல் அதிர்ந்தது. நடப்பதை வைத்து தன்னைக் குறித்து கரிகாலன் எவ்வகையான மதிப்பீடுகளைக் கொண்டிருப்பான்..? நினைக்கும்போதே உடலின் ஒவ்வொரு அணுக்களும் நடுங்கின. ‘‘அவரவர் பணியை அவரவர் மேற்கொள்ளுங்கள்...’’ என வீரர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு வேகமாகக் கரிகாலனை நெருங்கி அவன் கைகளைப் பற்றினாள். ‘‘என்ன சிவகாமி..?’’ கேட்டவன் மெல்ல திரும்பினான். தன்னைப் பிடித்திருந்த அவள் விரல்களை விடுவித்து தன் கரங்களில் ஏந்தினான். உயர்த்தி உள்ளங்கையின் பின்பக்கம் முத்தமிட்டான்.சிவகாமியின் உடல் சிலிர்த்தது. அப்பாடா... தன்னை அவன் தவறாக எண்ணவில்லை... பூத்த எண்ணம் படர்வதற்குள் அவளது இடுப்பில் கைவைத்து இழுத்தான். மலர்ந்த மையலுடன் அவனை அண்ணாந்து பார்த்தாள். வழியும் காதலுடன் அதை எதிர்கொண்டான். விரல்களை அலையவிட்டான். கோலமிட்டான். அவள் நாபிக்குள் தன் விரலை நுழைத்து சுழற்றினான். நாடி நரம்புகளில் ஊடுருவிய அதிர்வை சிவகாமி மென்று விழுங்கினாள். ‘‘என்னை...’’ வார்த்தைகள் தடைப்பட்டன. யாழின் நரம்புகள் போல் உதடுகள் துடித்தன.‘‘உன்னை..? ஏன் நிறுத்திவிட்டாய்..? ஓ... இப்படிக் கேட்டால் பேச்சு தடைப்படுமல்லவா..? உனக்குப் பிடித்தபடியே உரையாடுவோம்...’’ சொன்னவன் அவளை அப்படியே தூக்கினான். ஒரு சுற்று சுற்றிவிட்டு தன் முன்பாக அந்தரத்தில் நிறுத்தி, அவளது பின்னெழுச்சியை அழுத்தியபடி தன் மார்பின் மீது அவளைச் சாய்த்தான். ‘‘என்ன இது... விடுங்கள்...’’திமிறியவளின் அதரங்களை தன் உதடுகளால் அழுத்தமாக ஒற்றினான். அவன் கேசங்களைக் கொத்தாகப் பிடித்து தன்னை விடுவித்துக் கொள்ள சிவகாமி முயன்றாள்.அதற்கு இடம்கொடுக்காமல் அதரங்களில் இருந்து தன் உதட்டை விடுவித்தவன் அவளது கச்சையில் தன் முகத்தைப் புதைத்து இப்படியும் அப்படியுமாகத் திருப்பினான். மூன்றாம் பிறை மறைந்து ஐந்தாம் பிறை வெளிப்பட்டது. மூர்க்கத்துடன் அப்பிறைக்குள் தன் நாசியை நுழைத்தான். அடிவயிற்றிலிருந்து சுவாசித்தான்!உடலில் இருந்து எழுந்த பேரலையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள். ‘‘இப்படி உரையாடத்தானே உனக்குப் பிடிக்கும்! இப்படித்தானே இத்தனை நாட்களாக சுற்றுப்புறங்களை மறந்து என்னுடன் பேசியிருக்கிறாய்..? இப்போது மட்டும் என்ன... ம்...’’ கேட்டவன் தன் பற்களால் அவள் கச்சையை இழுக்க முற்பட்டான். சிவகாமி வெலவெலத்துப் போனாள். இதற்கு முன் அவள் காணாத கரிகாலன். பதற்றத்துடன் வளைந்து நெளிந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் தரையில் இறங்கி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கச்சையை ஒழுங்குபடுத்திவிட்டு அவனை ஏறிட்டாள். பொசுங்கினாள். கரிகாலனின் கண்களில் காதலில்லை. காமம் இல்லை. வெறுமை மட்டுமே தீப்பிழம்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது.தன் கேசங்களைக் கோதியபடி புருவத்தை உயர்த்தினான். ‘‘உன்னைப் பூரணமாக நம்ப வேண்டும்! இதைத்தான் சொல்ல முற்பட்டாய். நல்லது. புரிந்துகொண்டேன்...’’ தளர்ந்த தன் இடுப்பின் முடிச்சை இழுத்துக் கட்டினான். சுவடிக் கட்டுகளைப் பத்திரப்படுத்தினான். ‘‘எங்கிருக்கிறார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்..? இது பல்லவ நாட்டின் பெரு வணிகரின் மாளிகை என்பதால் அவரது அந்தரங்க அறை எனக்குத் தெரியும். மேலேதானே..?’’ கேட்டவன் தன் முன்னால் பத்தடிக்கு மேல் தென்பட்ட படிக்கட்டில் ஏறத் தொடங்கினான். கருவிழிகள் கண்ணீரில் மிதக்க, செல்பவனையே இமைக்காமல் பார்த்த சிவகாமி தன் உதட்டைக் கடித்தபடி அவனைப் பின்தொடர்ந்தாள். இருபத்தைந்து படிக்கட்டுகளுக்குப் பின் வலம் இடமாக இருபக்கமும் மேல்நோக்கி பாதைகள் பிரிந்தன. இடப்பக்கமாக படிகளில் ஏறிய கரிகாலன் மாடத்தை அடைந்தான். சிற்ப வெளிப்பாடுடன் கூடிய நீளமான பாதை. அக்கம்பக்கத்து அறைகள் உட்பக்கம் தாழிடப்பட்டிருந்தன. எங்கும் நிற்காமல், எந்தக் கதவையும் தட்டாமல் நேராக நடந்தான். சற்று இடைவெளிவிட்டு வந்த சிவகாமிக்கு, அணு அணுவாக இந்த மாளிகையை அவன் அறிந்திருக்கிறான் என்பது புரிந்தது. அழைத்துச் செல்லாமலேயே சந்திக்கும் இடம் தெரிந்திருக்கிறது. இதில் வியப்பதற்கு ஏதுமில்லை. அவன் பல்லவ மண்ணின் மைந்தன். காஞ்சியின் தவப்புதல்வன். அறியாமல் இருந்தால்தான் அது செய்தி. இவ்வளவு விழிப்புடன் நுணுக்கமாக நடந்துகொள்பவன் தன்னைப் பற்றியும் புரிந்துகொண்டிருக்க வேண்டுமே... ஆனால், சில கணங்களுக்கு முன் கீழ்த்தளத்தில் அவன் நடந்துகொண்ட விதம் அப்படியில்லையே... உடலைக் காட்டி மயக்குபவளாக அல்லவா தன்னைக் கருதியிருக்கிறான்... அப்படிப்பட்டவள் தானில்லையே...வெடிக்கும் நிலையில் இருந்த உணர்வுகளை அரும்பாடுபட்டு புதைத்துவிட்டு அவனிடம் பேசுவதற்காக தன் நடையைத் துரிதப்படுத்தினாள். நெருங்கவும் செய்தாள்.ஆனால், அவள் வாய் திறப்பதற்குள் அந்த மாளிகையின் அந்தரங்க அறைக் கதவைத் தன் ஆள்காட்டி விரலை மடித்து தட்டினான்.‘‘கதவு திறந்துதான் இருக்கிறது...’’உள்ளிருந்து ஒலித்த குரலை கரிகாலன் மட்டுமல்ல... அவனைத் தொடர்ந்து வந்த சிவகாமியும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அக்குரல் ஸ்ரீராமபுண்ய வல்லபருடையது அல்ல! குரலுக்கு உரியவரை கரிகாலன் நன்றாகவே அறிவான்!துடிக்கும் இதயத்துடன் கதவைத் திறந்தான். தென்பட்ட காட்சி கரிகாலனையும் சிவகாமியையும் ஒருசேர அதிர வைத்தது! (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14607&id1=6&issue=20181207 1 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts