-
Tell a friend
-
Topics
-
Posts
-
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு கொடுத்து, இனத்திற்கான கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரித்தானியாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழரான அம்மையார் அம்பிகை அவர்கள், இலங்கையை இனப்படுகொலை குற்றத்திலிருந்து காப்பாற்றும் வகையில், ஆதரவான தீர்மானம் கொண்டுவருவதைப் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கைவிட்டு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்தி விசாரிக்கும் வகையில் தீர்மானம் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தி, சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதை அறிகிறேன். நீதிக்கான அவரது அறப்போராட்டம் வெல்ல வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக இனப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடும் தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தைப் புரியும் வகையில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இனப்படுகொலை செய்த இலங்கையைக் காப்பாற்ற மீண்டும் உள்நாட்டிலேயே நீதி விசாரணையைச் செய்து கொள்ளலாம் என்று பிரிட்டன் தலைமையிலான உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவரவுள்ள செய்தி உலகத் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறத்தின் பக்கம் நின்று நீதியைப் பெற்றுத்தரவேண்டிய நாடுகள், இனப்படுகொலை குற்றவாளிகளையே விசாரிக்கக் கோருவது எவ்வகையில் நியாயமாகும்? ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளில் இலங்கை பேரினவாத அரசிடம் உள்நாட்டு விசாரணை ஒப்படைக்கப்பட்டு அதில் அணுவளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதோடு, தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும், இனவெறி தாக்குதல்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. மீண்டும் ராஜபக்ச அரசாங்கம் அமைந்தவுடன் சிங்கள பேரினவாத செயல்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன. இதை நன்கு உணர்ந்த பிறகே, இலங்கை அரசின் இனவெறிச் செயல்பாடுகளை மிக விரிவாகப் பட்டியலிட்டு இலங்கை மீது பன்னாட்டு நீதி விசாரணை நடத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று ஐநா மனித உரிமை பேரவையே கோரியிருந்தது. ஐநா மனித உரிமை பேரவை முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களும் இலங்கை மீதான உலக நாடுகள் பார்வை இனியாவது மாற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவற்றைப் புறந்தள்ளி மீண்டும் இலங்கைக்கு விசாரணைக் காலத்தை நீட்டித்துக் கொடுத்து, உள்நாட்டிலேயே விசாரணை நடத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கும் வகையில் உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவருவது தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை முற்று முழுதாக நீர்த்துப் போகச்செய்யும் நடவடிக்கையே ஆகும். இதனால் ஐநா மனித உரிமை பேரவை அறிக்கைக்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இனப்படுகொலைக்கு இனியாவது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த தமிழர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும், வேதனையையும் அடைந்துள்ளனர். தமிழினம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் தற்காலச் சூழலில், அம்மையார் அம்பிகை முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக மிக நியாயமானவை என்பதை உலகத்தமிழினம் நன்கு உணரும். அவரது அறப்போராட்டம் வெல்ல வேண்டும் என்பதே நம் அனைவருடைய விருப்பம். தனியொரு பெண்மணியாகத் தீரத்துடன் அம்மையார் முன்னெடுத்துள்ள போராட்டத்தை எண்ணி உள்ளம் பெருமிதம் கொண்டாலும், அதேசமயம் கடந்தகாலக் கசப்பான அனுபவங்கள் கற்றுத்தந்த பாடங்கள் இப்படியொரு கடினமான முடிவை அம்மையார் எடுத்திருக்க வேண்டாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இதைப்போன்றதொரு அறப்போராட்டத்தில்தான் அண்ணன் திலீபனையும், அன்னை பூபதி அவர்களையும் நாம் இழந்தோம். ஆகவே அம்பிகை அம்மையார் தம்முடைய போராட்ட வடிவத்தை மாற்றவேண்டும் என்று அன்போடு கோருகிறேன். இனப்படுகொலைக்கு நீதியைப் பெறவேண்டும் என்ற நோக்கில் தனிமனிதராக அம்மையார் அம்பிகை முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு கொடுத்து, இனத்திற்கான கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். https://www.ibctamil.com/india/80/160552?ref=home-imp-parsely
-
By பெருமாள் · பதியப்பட்டது
கடந்த சில நாட்களாக தற்போது வேலன் “சுவாமி” சின்மயா மிசன் என்றும் இந்து அடிப்படைவாத அமைப்பினால் பயிற்றப்பட்டபின் ஜக்ரட் “சைதன்யா” பிரம்மச்சாரி (அல்லது “சுவாமி” சிடகஸசானந்தா ) அறியப்படும் யாகரன் சிவபாலகனேசன் (யாழ் இந்து கொழும்பு இந்து – மொரட்டுவை பொறியியல் – இடையில் நிறுத்திவிட்டார்) பற்றிய குறிப்பை முகநூலில் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. அதில் தெரிந்தோ தெரியாமலோ யாகரனின் சின்மயா மிசன் பற்றிய பகுதி தவிர்க்கப்ட்டிருந்தது. 2000களில் இந்த மிசனரிகளில் இருந்த கடுப்பில் இந்து கல்லுரியில் இருந்த ஒரு மாணவனும் இப்படி மாறிவிட்டதாக அறிந்த போது எம்முள்ளும் இப்படி தீவிர மதவாதம் ஆழமாக வேரூண்டிவிட்டதே என்ற கவலை இருந்ததது. விவிலிய மிசனரிகளை விட இந்த மிசனரிகள் பற்றி கடுமையான விமர்சனம் என்னிடம் உண்டு. நீரோ மன்னன் போல ஊரே பற்றி எரிய கம்பன் விழா நடத்தி தெருவெங்கும் கொண்டாடும் இந்த குழுவின் அலப்பரை கொழும்பில் இருந்த பலருக்கு தெரிந்திருக்கும். வள்ளுவனையும் கம்பனையும் கோயிலுள் சிலையாக வைத்து பூசை செய்யும் அறப்படித்தவர்களினதும் அப்படி எண்ணிக்கொள்ளுபவர்களின் கூடாரம் அது. இதில் ஒன்றை குறிப்பிடவேண்டும் விவிலிய மிசனறிகள் ஒரு விதத்தில் அப்பாவிகள். தங்களுக்கு யாரவது ஊசி குத்தினால் அமரிக்காவும் இஸ்ரேலும் அணுகுண்டு வீசி அழித்துவிடும் எனும் புத்திசாலிக்கூட்டம். ஆனால் இந்த இந்து மத அடிப்படைவாத மிசனரிகள் கொஞ்சம் தெளிவான கும்பல். அப்படி ஒரு மிசனறியின் உற்பத்தியான சக மாணவன்(junior) யாகரன் இன்று சைவம் தமிழ் தேசியம் பேசி திருநீற்றுடன் முன்நிற்கிறான் என்ற போது ஆச்சரியமாக இருந்தது. நூலறுந்த பட்டம் போல தள்ளாடும் தமிழ் மக்களின் இன்றய நம்பிக்கை நட்சத்திரமான யாகரனின் முகநூலில் உள்சென்று பார்த்தால் இன்னும் சின்மயா மிசனின் பதிவுகள். அதிலொன்றில் ஈழத்து திருந்செந்தூர் “ஆலய” பிரதம குரு ஒரு “சைத்தன்யா” என்றிருந்தது. முற்றிலும் இந்துத்தவத்தின் நால் வேதத்தை மையப்படுத்தி தயானந்த சரசுவதி அவர்களினால் உருவாக்கப்ட்டு இயங்கும் சின்மயா மிசனின் உற்பத்தி ஒன்றிடம் ஈழத்து யாழ்ப்பாணத்து சைவசமய பழங்கள் ஒரு கோயிலையே ஒப்படைந்திருந்ததையிட்டு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை. யாகரன் என்ற பெயரில் இருந்து சைத்தன்யாஆகி பின் ஆனந்தாவாகி நான்காவதாக இன்று பூண்டுள்ள வேலன் வேடம் உண்மையில் சைவ நெறியை மட்டும் பின்பற்றும் தமிழ் தேசியத்திற்கு உண்மையான ஒரு சராசரி மனிதனாக இருந்தால் யாகரனுக்கு சொல்வது எனது நன்றியும் மன்னிப்பும். மற்றும் படி 2009க்கு பின் அண்ணன் எப்ப சாவன் திண்னை எப்போ கிடைக்கும் என்பவர்களின் வரிசையில் இன்னொருவனாக இருக்கலாம் இந்த சகமாணவன் யாகரன். அப்படியாக இருந்தால் இப்பவே வடகிழக்கு மக்கள் இப்போதே தங்கள் பிழைப்பைப் பார்க்கலாம். கானொளி: யாகரன் சின்மயா மிசன் உற்பத்தியாக ஜக்ரன் சைத்தன்யாவாக தாயகத்தில் செய்யவுள்ளதை பற்றி சொல்வது பின்னுட்டத்தில்: அதே யாகரன் தமிழ்நெற்றுக்கு வேலன் ஆக கருத்திடுவது. யாகரனின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்ட ஈழத்து திருச்செந்தூர் பற்றிய படம் (கடவுளுக்கும் மனிதனுக்கும்* நடுவே யாரும் தேவையில்லை/இல்லை என கருதுவதால் பட்டங்களை தவிர்த்துள்ளேன்) *மனிதனும் அவனும் கடவுளே-தத்துவமசி பி.கு: எமது கல்லூரிமாணவன் சைவன் என்று கம்பு சுத்துபவர்கள் ஓரமாய் போய் விளையாடவும். யார் இந்(து)த திருமிகு. வேலன் சுவாமிகள்.-திரு- https://www.thamizharkural.site/யார்-இந்துத-திருமிகு-வேல/ -
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 52 பேருக்கு கொரோனா! யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கொரோனா கொத்தணி உ ருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்றைய தினத்தில் 52 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த சிறைச்சாலையில் தொற்றுக்கு உள்ளான கைதிகளுடன் தொடர்புகளை பேணிய ஏனைய கைதிகள் மற்றும் அதிகாரிகளையும், அவர்களை பார்வையிட வந்த உறவினர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை நேற்றைய தினத்தில் சிறைச்சாலை கைதிகள் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-சிறைச்சாலை-3/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.