சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
Sign in to follow this  
Nathamuni

பாரிய மாற்றம் காணும் வங்கியல் துறை.

Recommended Posts

ஒரு கிராமம் என்னும் போது  வங்கி, போஸ்ட் ஆபிஸ், பாடசலை, நிர்வாக அலுவலகம், ஒரு பலசரக்கு கடை, போலீஸ் நிலையம் இவ்வளவும் உடனடியாக நினைவுக்கு வரும்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் இந்த வகையான பல தூண்கள் சரியத் தொடங்கி விட்டன. 

இவற்றில் முதலில் சரிந்தது தபால் நிலையங்கள். ஊருக்கு ஒரு பெரிய தபாலகம், 5, 10 கவுண்டர்கள் என்ற நிலை போய்.... பெரிய நிறுவனங்களில் ஒரு மூலையில் ஒரு ஆளுடன் தபால் நிலையம் நடக்கும் நிலைக்கு போய் விட்டது. ஈமெயில் காரணமாக, கடிதத் துறை பாதிப்புக்கு உள்ளாக, எதிர்காலத்தில் பார்சல் டெலிவரி தான் கை கொடுக்கும் என்று முடிவு செய்து விட்டார்கள்.

இந்த துறையில் இருந்து முதலில் வெள்ளையர்களும், பின்னர் இந்தியர்களும் ஓட, நம்மவர்கள் விசயம் புரியாமல், போஸ்ட் ஆபீஸ் ஒன்று வருகுது... எடுத்து நடத்துவம் என்று யோசிக்கிறம் என்று ஓடுவது வேற கதை. விவேகமாக நடக்க வேண்டும்.

சரி இனி வங்கி துறையினை பார்ப்போமா.

நான் வங்கிக்கு சென்று ஆண்டுக் கணக்கில் இல்லாவிடில் பல மாதங்கள் ஆகின்றன.

காரணம் போக வேண்டிய தேவையே இல்லை.

உலகிலேயே மிகச் சிறந்த வங்கித்துறை பிரித்தானியாவினுடையது. அவர்கள் தொழில் நுட்பத்தினை சரியாக பயன் படுத்துவதில் முன்னணியில் நிற்க்கின்றார்கள். முதன் முதலில் ATM - cashpoint மெசினை அறிமுகம் செய்தவர்கள் பிரித்தானியர்கள்.

இதன் மூலம் காசுத்தாள் தேவையை கணிசமான அளவுக்கு குறைத்து விட்டார்கள்.

முன்பெல்லாம் எனது பணப்பையில் (பேர்ஸ்), வங்கி மட்டைகளுடன், 10, 20 பவுண்ட் பணமும், கொஞ்சம் சில்லரையும் இருக்கும். 

இப்போது கொஞ்ச நாளாக, அதை எடுத்து செல்லவேண்டிய தேவை இல்லாமல் தெரிவதால்... கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதுவும் இல்லாமல் வேலைக்கு போகும் போது செல்கிறேன்.

அதன் தேவையினை... இப்போது கைபேசி பூர்த்தி செய்கிறது.

ரயில் நிலைய எக்ஸிட், என்ட்ரி பெரியர்கள் கைபேசிகள் மூலமான பணத்தினை எடுக்கின்றன. பஸ்களும் அவ்வாறே. பஸ்கள் பணம் எடுப்பதில்லை என அறிவித்து விட்டன.

வங்கியின் ஆஃபிஸினை இறக்கி வைத்தால் கதை முடிந்தது. பொருட்களுக்கு பணத்தினை செலுத்தலாம். எம்மிடம் பொருள் இருந்து இன்னொருவருக்கு வித்து பணத்தினை, காசுத்தாள் கை மாறாமல்,  பெற முடியும்.

Image result for paying with mobileImage result for paying with mobile

இதில முக்கியமான வசதி என்னெவென்றால்.... மட்டை, அதற்க்கான  PIN இல்லாமலே பணத்தினை பெரும் வசதி. இது குடும்பத்தினை பொறுத்தவரையில் மிக மிக பெரிய வசதி. மேலும் இது வியாபாரத்தினை பெருக்கக்கூடிய வகையிலும் பாவிக்கலாம்.

இது முதலில் NatWest வங்கியால் அறிமுகப் படுத்தப்பட்டாலும்... சில பல பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்த படியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, குறைபாடுகளை திருத்தி மீண்டும் அறிமுகப் படுத்தி உள்ளனர்.

Gone phishing: Fraudsters have been using part of NatWest's mobile app to withdraw cash from customer's accounts.

GET CASH என்னும் சேவையினை அறிமுகப்படுத்தி உள்ளது NatWest வங்கி. இதனை பார்த்து இவர்களது போட்டி வங்கிகள் பொறாமைப் படுகின்றன.

இவர்கள் இந்த தொழில் நுட்பத்தினை அடுத்த வங்கிகளுக்கு உலகளாவிய வகையில் வித்தே செலவழித்த பணத்தினை மீட்டு விடுவர்.
 
கைபேசியில், அவர்களது ஆப்ஸில் வரும் get cash பட்டனை அழுத்தினால்... எவ்வளவு வேண்டும் என்று கேட்க்கிறது.... உங்கள் வங்கி இருப்புக்கு அமைய பணம், இவ்வளவு வேண்டும் என குறியிட்டால், உடனே உங்களுக்கு ஒரு விசேட code தெரியும். அந்த கோட்டினை ATM ல் பாவித்தால்... நீங்கள் மட்டை இன்றி பணம் பெற முடியும்.

இதில மிகப் பெரிய வசதி என்னவெனில்.... எங்காவது பர்சினை துளைத்து, பணம் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் குடும்ப உறவுக்கும், பொருள் வழங்கும் வியாபாரிக்கும் கூட, கோடினை SMS மூலம் அனுப்பி, இந்த முறையில் பணம் கிடைக்க செய்ய முடியும் என்பதே வரப்பிரசாதம்.

கோடினை பாவிப்பவர், நீங்கள் குறித்த தொகைக்கு மேல் எடுக்க முடியாது என்பது சிறப்பு அம்சம்.

இதன் மறு புறத்தே வங்கிகள் மிக வேகமாக கதவுகளை இழுத்து மூடுகினறன. 2020 ஆண்டுடன் பல நூறாண்டுகளாக இருந்த காசோலைக்கு மூடு விழா நடத்த திட்டம் போட்டாலும், பல வயதான குடிமக்களின் கடும் எதிர்ப்பினால் அந்த திட்டத்தினை கிட்ப்பில் போட்டு விட்டனர்.

வேலை செய்த பலர் வீட்டுக்கு அனுப்பி, பெரிய இடத்தில் நடந்த வங்கிகள் சிறியதாக ஒருவர் அல்லது இருவர் உடன் சில மெஷின்கள் உடன் குறுகி விட்டன.

முன்பு.... வங்கி முகாமையாளர் என்றால் சமூகத்தில் பெரும் மதிப்பு... ஒரு லோன் வேண்டும் என்றால் அவர் பண்ணும் அலம்பரை.... ம்.. அது வேற கதை.

இப்போது லோன் விண்ணப்பம் முடிவு, விண்ணப்பித்த அடுத்த 60 வினாடிகளில் தொழில் நுட்பம், மனிதரே இன்றி தீர்மானிக்கிறது. முடிவினையும் தெரிவிக்கின்றது.

மொபைல் மூலமாக பணம் தருகிறேன் என்பார் வாங்குபவர். வியாபாரம் செய்பவருக்கு வேறு வழி இருக்காது. ஆகவே இரு பகுதியும் யார், யார் என வங்கிகள், மூலம் அரசுக்கு தெரிய வரும்.

காசுத்தாள் தேவை இனி போதைப்பொருள் விறகும் கிரிமினல்களுக்கே தேவை போலுள்ளது. அதுவும் பல நாட்களுக்கு நிலைத்து நில்லாது.

கறுப்பை, வெள்ளை ஆக்கும் விசயத்தில்.... வங்கித்துறையினை அரசு மிக கடுமையாக கண்காணிக்கிறது.

உதாரணமாக, நான் வங்கியில் வேலை செய்து, எனது மேல் அதிகாரி, ஒரு குறித்த வாடிக்கையளார் குறித்து போலீஸ் விசாரணை ரகசியமாக நடக்கிறது...அவரது வாடிக்கை தொடர்பில் சட்டப்படி நடந்து கொள் என்று சொன்னால்.... அந்த வாடிக்கை யாளரை வெளியே சந்தித்து.... உன்னை பத்தி எதையோ விசாரிக்கிறார்கள் போல் உள்ளது, கவனமாக இரு என்று சொன்னால் அது தண்டனைக்குரிய  கிரிமினல் வேலை. அது போலவே வேலை செய்யும் சக ஊழியர் ஒரு வாடிக்கையாளருக்கு உதவுகிறார் என்பது குறித்து கண்காணிக்குமாறு சொல்லப்படடால், அதை அந்த சகல ஊழியருக்கு சொல்வதும் தண்டனைக்குரிய  கிரிமினல் வேலை.

வங்கிகள்... அரசு சொல்லாத நிலையிலும்... இந்த கடுமையான சட்டங்களில் இருந்து தமது வியாபாரத்தினையும், ஊழியர்களையும் பாதுகாக்க என, மத்திய கிழக்கு நாடுகளுடன் தொடர்பான  பல முஸ்லீம் தர்மத்தாபனங்களுக்கு தமது கணக்குகளை மூடுவதாக அறிவித்து விட்டன... 

பல்கெரியா என்ற நாடு VAT என்ற வியாபார வரி விடயத்தில் ஒரு சிறப்பான சிஸ்டத்தினை அறிமுகம் செய்தது. ஒரு வியாபாரம் பதிவு செய்தால், அரசு கொடுக்கும் till தான் பாவிக்க முடியும். பிரச்சனை என்னவெனில் அது அரச வரி திணைக்களத்துடன் இணைய மூலமாக தொடர்பினை பேணும். ஆகவே மாத முடிவில்.. அரசு நேராக வங்கியில் இருந்து தனக்கு வர வேண்டிய பணத்தினை எடுத்துக் கொள்ளும். இந்த சிறந்த திட்டம்... ஆப்பிரிக்காவின் கென்யா நாடு அறிமுகம் செய்துள்ளது.... இதனை பிரித்தானிய அரசும் பரிசீலிக்கிறது என செய்தி வருகிறது.

ஆகவே வெகு விரைவில்... பணம் மறைந்து விடும் என்கிற விடயத்துக்கு முன்னாள்... அரசுக்கு தெரியாமல் எந்த வித கொடுக்கல் வாங்கல்களும் நடக்காது போலவே தெரிகிறது.
 
Edited by Nathamuni
  • Like 6

Share this post

Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

தகவலுக்கு நன்றி நாதமுனி.

அதுசரி எங்கட உண்டியலுக்கு பிரச்சனை ஒன்றும் இல்லைத் தானே?

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி நாதமுனி.

அதுசரி எங்கட உண்டியலுக்கு பிரச்சனை ஒன்றும் இல்லைத் தானே?

உண்டியல் காரர்கள்... எமது அடையாள விபரங்கள் வாங்க்கிக் கொண்டு தான் சேவை தர வேண்டும் என்ற சட்ட விதியின் மீறினால் லைசென்ஸ் பறி போகும். மேலும் உண்டியல் காரர்கள் டெபிட் கார்ட், கைபேசி பெமென்ட் எடுக்கிறார்களே.

உண்டியல் அனுமதிக்கப் பட்டிருப்பதன் அடிப்படை நோக்கம் வேறு. பணம் வங்கி மூலம் அனுப்பப்படும் போது, நாட்டினை விட்டு வெளியே போகின்றது...

உண்டியல் மூலம் நாட்டினுள்ளே தங்குகிறது. அங்கே அரசியல் வாதிகளின் ஊழல் பணம் கொடுக்கப் படுகின்றது.

இங்கே, ஒருவர் செலுத்தும் சட்ட ரீதியாக உழைத்த பணம்... இங்கே உள்ள, அந்த நாட்டின் ஊழல், அரசியல் வாதியின் கணக்கில் அல்லது அவரது முகவர் கணக்குக்கு உண்டியல் காரரினால் செலுத்தப் படுகின்றது. 

ஜெயலலிதா வழக்கில் ஒரு பகுதி, லண்டன் பார்கிலேஸ் வங்கி டெபாசிட்.

(பாடு பட்டு தேடி பணத்தை பிற நாட்டு வங்கிகளில் புதைத்து வைக்கும் கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் கூடு விட்டு ஆவிதான் போனபின் யாரோ அனுபவிப்பார், பாவிகாள் அந்தப்பணம்.)

இவ்வாறு அனாமத்தாக பெரும் பணம் பிரித்தானியவங்கிகளில் இருப்பதை அறிந்த முன்னாள் பிரதமர் டேவிட் காமோரான் ஒரு சட்டம் கொண்டு வந்தார். 15 வருடங்களுக்கு மேலாக உரிமை கோராமல் இருக்கும் வைப்புக்கள் அரசுரிமையாகி... அரசால் அமைக்கப் பட்ட ஒரு அமைப்புக்கு போகும். அது மக்கள் நல திட்டங்களுக்கு பயனாகும். இந்த வகையில் இந்திய, இலங்கை போன்ற நாடுகளின் ஊழல் அரசியல் வாதிகளுக்கு நன்றி. அம்மாவுக்கும் தான். 

Edited by Nathamuni
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

வெகு விரைவில்... பணம் மறைந்து விடும் என்கிற விடயத்துக்கு முன்னாள்... அரசுக்கு தெரியாமல் எந்த வித கொடுக்கல் வாங்கல்களும் நடக்காது போலவே தெரிகிறது.

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ஈழப்பிரியன் said:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

7 hours ago, குமாரசாமி said:

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

ஏர்போர்ட்டில இமிகிரேஷனிலே எங்கண்ட ஆக்கள் இப்ப இருக்கினம். எவ்விடம் மயிலிட்டியே.... யாழ் தேவிலயா, பஸ்சிலேயே கொழும்பு வந்தனியல்... எண்ட மாதிரி கேள்வியல்... இலங்கையில் இருந்து வருகிறோம் என்று வரும் பாக்கிஸ்தான், இந்திய ஆட்களை தலை சுத்த வைக்கிறது.

சொல்ல வருவது என்னெண்டால்... வெள்ளையளுக்கு, களவு பிடிக்க, கள்வருக்குள்ள இருந்து ஆள் எடுக்க வேண்டும் என்ற ஐடியா விளக்கீட்டுது. 

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, ஈழப்பிரியன் said:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

எக்க சக்க  காசு இருந்தும் இந்த தங்கச்சிக்கு கொஞ்ச்ம கூட கொடுக்காமல் எல்லாத்தையும் பதுக்கி வைத்து இருக்கிறார். தங்கச்சிக்கு கொஞ்ச்ம கொடுத்தால் குறைந்து போய் விடுமா என்ன?
 
Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, ரதி said:

எக்க சக்க  காசு இருந்தும் இந்த தங்கச்சிக்கு கொஞ்ச்ம கூட கொடுக்காமல் எல்லாத்தையும் பதுக்கி வைத்து இருக்கிறார். தங்கச்சிக்கு கொஞ்ச்ம கொடுத்தால் குறைந்து போய் விடுமா என்ன?
 
உயில் எழுதி வைத்திருப்பாரோ?
மனுசன் சத்தம் போடாமல் செய்யக் கூடியளாள்.

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, ஈழப்பிரியன் said:

உயில் எழுதி வைத்திருப்பாரோ?
மனுசன் சத்தம் போடாமல் செய்யக் கூடியளாள்.

நீங்கள் வேற அவர் எத்தனை தரம் லண்டன் வந்து போறார். ஒரு நாள் கூட தங்கச்சியை  வந்து பார்க்கோனும் என்று தோணேல்ல

Edited by ரதி

Share this post

Link to post
Share on other sites

பாரிய மாற்றம் காணும் வங்கியல் துறை.

ஆமா இதெல்லாம் லண்டனுக்கு புதுசா☺️

சரி சரி இங்கிலாந்து எப்பவும் இப்படித்தான் -நல்லா பீத்திக்குவானுங்க 

உருப்பட்டமாதிரித்தான் 

நானே நோர்வேயில் எப்ப வங்கிக்கு போனான் என்றதே மறந்து போச்சு. எப்படியும் ஒரு 20 வருசமாவது இருக்கும். இறுதியாக நான் வீடு வாங்கும் போதும் 1999 வங்கிக்கு போனதில்லை.

வாழ்க வளர்க

Share this post

Link to post
Share on other sites
51 minutes ago, ஜீவன் சிவா said:

ஐயோ... ஐயோ...

இப்ப வந்த ஐபோன், ஆண்ட்ராய்ட் போனாலே வந்த தொழில் நுட்ப வளர்ச்சி பத்தி பேசுறோம்.

1999 ல் இதெல்லாம் இல்ல...

உங்களை மாதிரி பேங்க் அக்கௌன்ட் நிரம்பி வழிஞ்சு பக்கத்து அக்கவுண்டுக்கும் காசு போற மாதிரி இருந்தால் 1999 இல்ல 1990 லேயே பேங்க் பக்கம் போய் இருக்க மாட்டமே...☺️

சரி கண காலத்துக்கு பிறகு கண்டது மகிழ்ச்சி. 

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

அதெல்லாம் சரி போற போக்கைப் பாத்தால் டிஜிட்டல் இந்தியாவை உங்கடை நாடு முந்திடும் போல.?

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, குமாரசாமி said:

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

தொழில்நுட்ப வளர களவும் வேறுபக்கம் வளரும் என்பதை இலகுவாக மறக்கிரம்.

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, ஈழப்பிரியன் said:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

ஓம் இப்ப அவர்கள் தடையம் இல்லா டிஜிட்டல் பணபரிவர்த்தனை பிட்கொயின் போன்றவற்றில் விளையாட தொடங்கிவிட்டனர் .

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

எக்க சக்க  காசு இருந்தும் இந்த தங்கச்சிக்கு கொஞ்ச்ம கூட கொடுக்காமல் எல்லாத்தையும் பதுக்கி வைத்து இருக்கிறார். தங்கச்சிக்கு கொஞ்ச்ம கொடுத்தால் குறைந்து போய் விடுமா என்ன?
 
4 hours ago, ஈழப்பிரியன் said:

உயில் எழுதி வைத்திருப்பாரோ?
மனுசன் சத்தம் போடாமல் செய்யக் கூடியளாள்.

4 hours ago, ரதி said:

நீங்கள் வேற அவர் எத்தனை தரம் லண்டன் வந்து போறார். ஒரு நாள் கூட தங்கச்சியை  வந்து பார்க்கோனும் என்று தோணேல்ல

என்னடா அங்க சத்தம் ? 

à®à®©à¯à®©à®à®¾ à®à®à¯à® à®à®¤à¯à®¤à®®à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Share this post

Link to post
Share on other sites
44 minutes ago, குமாரசாமி said:

என்னடா அங்க சத்தம் ? 

à®à®©à¯à®©à®à®¾ à®à®à¯à® à®à®¤à¯à®¤à®®à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

சூப்பர் சாமி .

Share this post

Link to post
Share on other sites

போன் பழுதாப் போகாட்டிலும் நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டில் எப்படி அதை பயன்படுத்த முடியும்? 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 5/13/2018 at 6:05 PM, ரதி said:

போன் பழுதாப் போகாட்டிலும் நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டில் எப்படி அதை பயன்படுத்த முடியும்? 

நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டி: யாவாரம் பார்கிறவரின்ற பிரச்சணை அது.

உந்த விண்ணானக் கேள்விக்கு முன்னம்.... அக்கவுண்டில காசு இல்லாட்டி என்ன செய்யுறது எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்..

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டி: யாவாரம் பார்கிறவரின்ற பிரச்சணை அது.

உந்த விண்ணானக் கேள்விக்கு முன்னம்.... அக்கவுண்டில காசு இல்லாட்டி என்ன செய்யுறது எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்..

டிஸ்போ இல்லாத பாங்க் காட்டை  என்ன நாக்கூத்தை வளிக்கவே ஊர் உலகம் முழுக்க கொண்டுதிரியிறான்...:cool:

Share this post

Link to post
Share on other sites

இந்த வங்கியியல் தொழில் நுட்ப துறையில் கடும் போட்டி நிகழ்கின்றது என்று சொல்லி இருந்தேன்.

நேற்று முதல் HSBC வங்கி விளம்பரம் செய்கிறது. தமது apps டவுன்லோட் பண்ணி உங்களது HSBC மற்றும் ஏனைய UK வங்கிகளில் உள்ள கணக்குகளின் இருப்பினை ஒரே இடத்தில அறிந்து கொள்ள முடியுமாம்.

Share this post

Link to post
Share on other sites

இது இங்கிலாந்தில் இப்பதான் வந்ததா தெரியவில்லை.

ஆனால் இஙு அரபு நாடுகளில் உள்ள வங்கிகளில் சில வருடங்களாக பாவிக்கின்றார்கள். குறித்த  apps ஐ டவுன்லோட் செய்துவிட மொபைலிலேயே எல்லா வேலைகளையும் செய்து கொள்ள்லாம். tender bond / performance bond போன்ற contingent liabilities ஆவணங்களியும் இதனூடு விண்ணப்பிக்கலாம். அத்துடன் மேலும் பலவித வசதிகள் உண்டு.

மேலும் இங்கு காலையில் ஒரு காசோலையை deposit செய்தால் பகல் 2 மணியளவில்  உடனடியாக credit செய்து விடுவார்கள். இங்கிலாந்தில் இதுக்கு ஒரு நாள் எடுக்கும் என நினக்கின்றேன். 

நான் என்னுடைய உதவியளர் இதில் மாதாந்த payroll process ஐ முடிந்தவுடன் முதல் அப்ருவல் என்னுடையது, இரண்டவது மனேஜரினுடையது  approved செய்து அழுத்தியவுடன் 30 செக்கன்களில் சம்பளம் உங்கள் கணக்கில் credit ஆகிவிடும்.  

மிகவும் திறன் வாய்ந்த apps

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, Nathamuni said:

நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டி: யாவாரம் பார்கிறவரின்ற பிரச்சணை அது.

உந்த விண்ணானக் கேள்விக்கு முன்னம்.... அக்கவுண்டில காசு இல்லாட்டி என்ன செய்யுறது எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்..

மொபைல் நெட்நொர்க் கட்டாயம் அவசியம். OTP நம்பர் SMS ஆக வரும்.  இங்கு நான் Vodaphone எனும் network ஐ பாவிக்கின்றேன். இங்கிலாந்தில் பெரும்பாலும் அனேகர் T - MOBILE எனும் நெட்வேர்கை பாவிப்பார்கள். 
 
Share this post

Link to post
Share on other sites
1 hour ago, colomban said:

மொபைல் நெட்நொர்க் கட்டாயம் அவசியம். OTP நம்பர் SMS ஆக வரும்.  இங்கு நான் Vodaphone எனும் network ஐ பாவிக்கின்றேன். இங்கிலாந்தில் பெரும்பாலும் அனேகர் T - MOBILE எனும் நெட்வேர்கை பாவிப்பார்கள். 
 
நீஙகள் சொல்வது உங்கள் போன் நெற்வேக். 

ரதியக்கா கேள்வி, நெற்வேக் இல்லாட்டி பேமன்ற் செய்ய ஏலாதே என்று.

கடையில், வியாபார நிலையங்களில், எல்லா மோபைல் நெற்வேக்கும் இழுக்காவிடில், WIFI இலவசமாக கிடைக்க செய்து, யாபாரத்தை கவனிக்க தெரியாவிடில் வியாபாரத்தை மூடிவேண்டியது தானே.

Share this post

Link to post
Share on other sites
57 minutes ago, Nathamuni said:

நீஙகள் சொல்வது உங்கள் போன் நெற்வேக். 

ரதியக்கா கேள்வி, நெற்வேக் இல்லாட்டி பேமன்ற் செய்ய ஏலாதே என்று.

கடையில், வியாபார நிலையங்களில், எல்லா மோபைல் நெற்வேக்கும் இழுக்காவிடில், WIFI இலவசமாக கிடைக்க செய்து, யாபாரத்தை கவனிக்க தெரியாவிடில் வியாபாரத்தை மூடிவேண்டியது தானே.

ஆப் லைன் கார்டு ட்ரான்ஸஸ்க்ஷன் (Off line card transaction) எண்டு ஒண்டு இருப்பதாக அறிந்தனான். ஆனால்  எனக்கு அதுபற்றி சரியான புரிதல் இல்லை. அது பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்