Recommended Posts

On 5/21/2018 at 2:39 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் பெண்கள் ஆடிப்பாடுவதை ஏன் நீங்கள் தப்புப்போல் கூறுகிறீர்கள். விசர்ப் பெண்கள் கூடவே கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு போய்.........

நான் எங்கே அதை தப்பு என்று சொன்னேன் அக்கா? 

எந்த வகையிலும் பொருத்தப்பாடில்லாத மறுதலிப்பு உங்களுடையது.. பெண்கள் தமக்கென்று ஒரு நட்பு வட்டத்துடன் வாழவேண்டும் என்று குமாரசுவாமியண்ணா இணைத்த காணொளியை ஆமோதித்தேன் அது மட்டும்தான் நடந்தது.

 காரணமில்லாமல் பிறர்மேல் குற்றம் சாட்டும்போது, நீங்கள் ஏதோ மன அழுத்ததினால்தான் இந்த திரியை ஆரம்பித்ததாக பிறருக்கு எண்ண தோன்றும்...

Share this post

Link to post
Share on other sites

அக்கா இந்த திரியை ஆரம்பித்து இதில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் திருப்பி பதில் எழுதும் விதம் தொனி இரண்டை குறிக்கிறது...
1. உங்களிடம் அதிக பட்சமாக நேரம் இருக்கிறது - வீணடிக்கிறீர்கள்.
2. ஆங்கிலத்தில் சொல்வார்கள் Attention seekers - "அடென்ஷன் சீகிங்" அது போல நீங்களும் சதா இப்படி ஏதாவது எழுதி;  மற்றவர்களை உங்கள் பக்கம் கவனத்தை இழுத்து வர முயற்சிக்கிறீர்கள்.

யாழ் களத்தில் உள்ள பலர் மத்தியில் உங்கள் தமிழ் ஆர்வத்துக்கும், அன்புக்கும், நட்புக்கும் நிறையவே மதிப்பு உள்ளது.
இப்படியான தூரநோக்கற்ற, உப்புச்சப்பில்லாத சமூக குற்றச்சாட்டுக்களை சற்று கைவிடலாமே. :100_pray:

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் வீட்டில் இருவருமே இரண்டும் செய்வதாக்கும்.

கணவனுக்கு சிலநேரம் சேவகம் செய்ய முடியாமல் போகும்போது எதோ தான் தவறு செய்தது போல் குற்ற உணர்வில் பதருபவ்ர்களைப் பார்த்துள்ளேன்  குமாரசாமி. அதுக்குத்தான் இது.

திருப்திப் படவேண்டிய விடயங்களுக்கு திருப்திப் பட்டதனாலதான் முப்பது ஆண்டுகளாகியும் சேர்ந்து வாழுறம்.

ஒரு சில இடங்களில் நடக்கும் நடவடிக்கைகளை வைத்து உலகமே இப்படித்தான் என கணிப்பிடுவது தவறு.

Share this post

Link to post
Share on other sites

இது வேற இன்று கண்ணில பட்டது சும்மா பார்த்து மகிழுங்கள்:)

Share this post

Link to post
Share on other sites
On 5/29/2018 at 5:32 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உடன சொந்த வீட்டுப் பிரச்சனை எண்டு மடக்கிறது.☺️ ஒவ்வொரு வாரமும் நான் நாற்பது குடும்பங்களைச் சந்திக்கிறேன். என் பள்ளியில் பன்னிரண்டு ஆசிரியர்கள். இதில் அரைவாசிப் பேரின் கதையும் நான் கேட்காமலே காதுக்கு வரும். அதைவிட வேலையிடத்தில் பொதுவெளியில் முகநூல் வட்டத்தில் என்று எத்தனையோ பெண்களுடன் உரையாடுவது.

கந்தப்பு நீங்கள் எழுதிய ஒரு கருத்தாடலில் தான் இதை எழுதவேண்டும் என நான் தீர்மானித்தது.

 நீங்கள் வாழும் நாட்டில் பார்த்தவற்றைவைத்து இங்கு எழுதியிருக்கிறீர்கள். நான் வாழும்  நாட்டில் பார்த்ததினை வைத்து கருத்து எழுதியிருக்கிறேன்.

Share this post

Link to post
Share on other sites
On 5/28/2018 at 4:27 PM, Sasi_varnam said:

அக்கா இந்த திரியை ஆரம்பித்து இதில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் திருப்பி பதில் எழுதும் விதம் தொனி இரண்டை குறிக்கிறது...
1. உங்களிடம் அதிக பட்சமாக நேரம் இருக்கிறது - வீணடிக்கிறீர்கள்.
2. ஆங்கிலத்தில் சொல்வார்கள் Attention seekers - "அடென்ஷன் சீகிங்" அது போல நீங்களும் சதா இப்படி ஏதாவது எழுதி;  மற்றவர்களை உங்கள் பக்கம் கவனத்தை இழுத்து வர முயற்சிக்கிறீர்கள்.

யாழ் களத்தில் உள்ள பலர் மத்தியில் உங்கள் தமிழ் ஆர்வத்துக்கும், அன்புக்கும், நட்புக்கும் நிறையவே மதிப்பு உள்ளது.
இப்படியான தூரநோக்கற்ற, உப்புச்சப்பில்லாத சமூக குற்றச்சாட்டுக்களை சற்று கைவிடலாமே. :100_pray:

பறவைகள் பல விதம் 
ஒவ்வொன்றும் ஒரு விதம்.

இதில் உப்பு சத்து இல்லை என்று ஒரே அடியாக சொல்ல முடியாது.
எதோ கொஞ்ச பெண்கள் போகிறார்கள் என்பதால் ...
எல்ல பெண்களுக்கும் சுதந்திரம் இருக்கிறதா என்றால் இல்லைதான். 

பெண்களின் அன்பு பாச கட்டமைப்பு கூட ஒரு சவாலாக அமைந்துவிடுகிறது 
முயற்சித்தோம் முடியவில்லை என்று மேலே ஒரு பெண் குறிப்பிட்டு இருந்தார். 
சுதந்திரம் இல்லாமை மட்டுமே காரணமாகவும் இல்லை.

இயற்கையான வாழ்க்கை முறைமைகளை 
சந்தை முதலாளித்துவ முதலைகள் இல்லாது ஒழித்து வருகிறார்கள்.
ஒரு குடும்பம் என்ற பின்பு ... ஆணோ .. பெண்ணோ ஒருவரின் மன உளைச்சல் 
இருவரையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
சந்தை வியாபார யுத்திக்குள் சிக்குண்டு நாம் எல்லோரும் அல்லல் படுகிறோம் 
என்பதில் சிறு சந்தேகமும் இல்லை.
பெண்ணின் மூளை அமைப்பு வீடை கட்டி காப்பதாகவும் 
ஆணின் மூளை அமைப்பு வீடை கட்டுவது தேவையானதை வெளியில் 
இருந்து வீட்டுக்கு எடுத்து வருவதும் ஆகவே அமைந்து உள்ளது.

முன்னேற்றம் என்பதில் எல்லோருக்கும் ஈடுபாடு வேண்டும் என்றாலும் 
முன்னேற்றம் என்றால் என்ன? என்று தெரியாது ஓடித்திறிந்து வாழ்வை சிதைப்பவர்கள் 
ஏராளம். ஒரு சமூக சாரளமாக இவ்வாறான தலைப்புகளில் விவாதம் செய்வதில் 
ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.

இதை சுமே அக்காவின் சொந்த வீட்டு பிரச்சினையாக பார்க்க போனால்தான் 
இங்கு உப்பு சப்பு இல்லாமல் போகிறது. 

இவ்வளவு பேர் கருத்துக்கள் பகிர்ந்தும் யாரும் இந்த சமூக சிக்கல் சார்ந்து 
ஒரு தீர்வை அல்லது ஒரு தொலைக்கு பார்வையை முன் வைக்கவில்லை.
80 வீதமான பெண்கள் வெளியில் போகும் சுதந்திரம் இல்லாமல் இருப்பது என்னவோ 
உண்மையானது. சிலருக்கு அதில் இஷடம் இல்லை ... சிலருக்கு அதில் ஈடுபாடு இல்லை 
என்றாலும் நிலைமை இருக்கிறது என்பது என்னவோ உண்மையானது.

வீட்டில் இருக்கும் ஆண்கள் மறுக்கிறார்கள் என்பது மட்டுமே பிரச்சனை இல்லை 
வெளியில் சமூகத்தில் இருக்கும் ஆண்களின் பாலியல் தொந்தரவு கூட இங்கு ஒரு 
பிரச்சனையாக இருக்கிறது.
மது போதைவஸ்து பாவனை இன்னொரு காரணி இதல்லாம் இதுக்குள் பார்க்க கூடிய 
விடயங்கள். 

சாதாரண வேலைக்கு செல்லும் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லையை 
இதைவிட வேறு விதமாக வில்லா முடியாது 
இந்த விடியோவை பாருங்கள் 

Share this post

Link to post
Share on other sites

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மருதங்கேணி. பார்க்கப்போனால் இதில் எழுதிய ஆண்களோ பெண்களோ முழுமையாகத் தம் மனத்தில் உள்ளதை எழுதவில்லை. சிலருக்கு நான் என்ன சொல்ல வந்தேன் என்பதும் புரியவில்லை. ஆரோக்கியமாக் இதை விவாதிக்கவும் முடியவில்லை. பெண்களை இப்படி எதோ ஒரு விதத்தில் வாய் திறக்க விடாது செய்துவிடுகிறார்கள்.

On 5/28/2018 at 10:27 PM, Sasi_varnam said:

அக்கா இந்த திரியை ஆரம்பித்து இதில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் திருப்பி பதில் எழுதும் விதம் தொனி இரண்டை குறிக்கிறது...
1. உங்களிடம் அதிக பட்சமாக நேரம் இருக்கிறது - வீணடிக்கிறீர்கள்.
2. ஆங்கிலத்தில் சொல்வார்கள் Attention seekers - "அடென்ஷன் சீகிங்" அது போல நீங்களும் சதா இப்படி ஏதாவது எழுதி;  மற்றவர்களை உங்கள் பக்கம் கவனத்தை இழுத்து வர முயற்சிக்கிறீர்கள்.

யாழ் களத்தில் உள்ள பலர் மத்தியில் உங்கள் தமிழ் ஆர்வத்துக்கும், அன்புக்கும், நட்புக்கும் நிறையவே மதிப்பு உள்ளது.
இப்படியான தூரநோக்கற்ற, உப்புச்சப்பில்லாத சமூக குற்றச்சாட்டுக்களை சற்று கைவிடலாமே. :100_pray:

சசி நீங்கள் பார்க்கும் கோணம் உங்களைப் பொறுத்தது. அடென்சன் சீக் பண்ணி எழுத நான் புதியவரா என்ன ??????

On 5/28/2018 at 9:05 PM, valavan said:

நான் எங்கே அதை தப்பு என்று சொன்னேன் அக்கா? 

எந்த வகையிலும் பொருத்தப்பாடில்லாத மறுதலிப்பு உங்களுடையது.. பெண்கள் தமக்கென்று ஒரு நட்பு வட்டத்துடன் வாழவேண்டும் என்று குமாரசுவாமியண்ணா இணைத்த காணொளியை ஆமோதித்தேன் அது மட்டும்தான் நடந்தது.

 காரணமில்லாமல் பிறர்மேல் குற்றம் சாட்டும்போது, நீங்கள் ஏதோ மன அழுத்ததினால்தான் இந்த திரியை ஆரம்பித்ததாக பிறருக்கு எண்ண தோன்றும்...

எனக்கு மன அழுத்தம் என்றால் இப்பிடித் திரி திறந்தால் உடனே மாறிவிடுமா ????அதற்க்கு வைத்தியரிடம் தான் செல்ல வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

.. இதில் எழுதிய ஆண்களோ பெண்களோ முழுமையாகத் தம் மனத்தில் உள்ளதை எழுதவில்லை...

"சுதந்திரம், மட்டுப்படுத்தப்பட்டுள்ளது உண்மைதான்.." என சொல்லியாச்சுது..!

இதுக்கு மேலே என்னம்மா எழுத வேணும்..? ?

Share this post

Link to post
Share on other sites
On 5/23/2018 at 9:04 AM, சுவைப்பிரியன் said:

இங்கை எனக்குத் தெரிந்து ஒரு பெண் இருக்கிறா.அவவுக்க கடையில் பொருட்க்கள் வாங்க பாவிக்கிற வண்டிலுக்கு டோக்கன் போடவே தெரியாது.ஒரு பெட்டி உப்பு வாங்க வேண்டுமென்டாலும் ர்ருசன்காரன் தான் போக வேனும்.விட்டால் அந்தப் பெண்னுக்கு வண்னிலுக்கு டோக்கன் போடுற உரிமையை புருசக் காரன்தான் மறுத்தார் என்டு சொல்லுவிங்கள் போல் உள்ளது.?

இதற்கு 100 % காரணம் இலங்கையில் பெற்றோரின் அடிமை வளர்ப்பு.  வயதுக்கு வந்தவுடன் வீட்டுக்குள் பெண் பிள்ளைகளை பூட்டி வளர்க்கும் மண்ணாக்கட்டி கலாச்சாரம். இதை தூண்டுவது தமிழரின் பழமைவாதம். பத்தாம் கேட்டால் பண்பாடாம் கலாச்சாரமாம் மண்ணாங்கட்டியாம்.

Share this post

Link to post
Share on other sites
On 8/9/2018 at 2:23 PM, tulpen said:

இதற்கு 100 % காரணம் இலங்கையில் பெற்றோரின் அடிமை வளர்ப்பு.  வயதுக்கு வந்தவுடன் வீட்டுக்குள் பெண் பிள்ளைகளை பூட்டி வளர்க்கும் மண்ணாக்கட்டி கலாச்சாரம். இதை தூண்டுவது தமிழரின் பழமைவாதம். பத்தாம் கேட்டால் பண்பாடாம் கலாச்சாரமாம் மண்ணாங்கட்டியாம்.

உங்கள் வீட்டில் சுதந்திரம் தானே பெண்களுக்கு ??

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this