யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Recommended Posts

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்கு எதற்கு அரசியல் கட்டமைப்பு???? ஆண்கள் மனதிலும் பெண்கள் மனதிலும் தெளிவு வேண்டும்.

எப்படியான தெளிவு....எந்த விதத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

Share this post

Link to post
Share on other sites

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது.
குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர  எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா.
இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். 
எதுக்கு இந்த வேல ...
நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 உதாரணம் 
தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள்.
யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு.
தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு 
லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு 
உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ...
எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்??

எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். 
மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.

 • Like 2
 • Haha 2

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, Sasi_varnam said:

அக்காவின்... மனநிலை, எனக்கு  எப்பவோ.. தெரியும். ?
இதுக்குத் தான்.... நான் இந்தப் பக்கம், கருத்து எழுவதில்லை. :110_writing_hand:
விளக்கமாக எழுதியமைக்கு....  நன்றி,  சசி வர்ணம். ? 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, நிலாமதி said:

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

உண்மையான கருத்து நிலாக்கா!

பெண்ணடிமைத்தனம் எம்மிடம் இருந்ததில்லை!

பெண்ணை அர்த்த நாரீஸ்வரியாக்கி ...அழகு படுத்தியது....எமது மதம்!

ஏன் உங்கள் மதம் கூட அவளை அன்னை வடிவாக்கி ....உயரத்தில் வைத்தது!

தனது சமூகத்தின் கண்ணியத்தையே..எமது சமூகம் பெண்ணில் தான் வைத்தது!

அதனால் தான்...பெண்ணை...அண்ணனும், தம்பியும், அப்பாவும்...அம்மாவும்...அத்தானும் கூடப் பொத்தி வளர்த்தார்கள்!

அந்தப் பொத்தலில்....கொடுமையோ....வன்மமோ இருக்கவில்லை! அன்பும்..அணைப்பும் தான் இருந்தது!

எத்தனை...அண்ணாக்கள், அப்பாக்கள், தம்பிகள்,..தங்கள் வாழ்க்கைகளைக் கருக்கியும், சுருக்கியும்,,தங்கள் தன்கைகளுக்காக, மகள்களுக்காக, அக்காக்களுக்காக..உழைத்திருக்கிறார்கள்?

தலையில்...மயிர் கொட்டத் தொடங்கிய பிறகு தான்...அண்ணா.... திருமணம் செய்கிறான்!

காலம்...காலமாகத் தங்கையைப் பொத்தி வளர்த்தவன்...அதே கவனத்தால் தான்...வந்த துணையையும் பொத்தி வைக்க முனைகிறான்!

ஏனெனில்....வெளியுலகம்...அப்படி!

ஆனால்...வெளியுலகம் பாதுகாப்பானது என...அவன் கருதுகையில்...தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்துகிறான்!

அது தான்....இப்போது நடக்கின்றது!

ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்!

அண்மையில்...நிழலி ஓரிடத்தில் எழுதிய...ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

அது அன்னையர் தினத்தன்று எழுதியது...!

மனைவிகளை...அன்னையராகக்கிய தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்!

எனவே....அவன்...அவள்..என்ற வேறு பாடின்றி...நாம்.....நமது குடும்பம்...என்ற மனநிலையில் பயணிப்போமே!

 • Like 5

Share this post

Link to post
Share on other sites

எல்லா இடங்களிலும் அண்ணாக்கள்;தம்பிகள் மற்றும் பெரியவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது...எல்லாவற்றையும் விபரிக்கவும் இயலாது..

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 5/16/2018 at 11:57 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எப்பவும் உதே வசனத்தைச் சொல்லி பெண்களைப் பயப்பிடுத்தி வைக்கிறதே இவையின்ர வேலையாப் போச்சு. சேலை கட்டினால்த்தானே சேலை சேதமாகும். டெனிம் போட்டால் ஒண்டும் ஆகாது?

நான் சேலை என்று குறிப்பிட்ட து  சேலையை அல்ல பெண்ணை 

டெனிம் போடலாம் ஆத்திர அவசரத்துக்கு கழட்ட என்ன கஸ்ரம் எல்லா இடமும் இழுத்து பிடிச்சு கவ்விக்கொண்டு இருக்கிற பீலிங் எனக்கு 

Share this post

Link to post
Share on other sites

சுதந்திரம் தாண்டி .......
எமது சொந்த வாழ்வு என்று வரும்போது   யாராகினும் அதை அனுபவித்து விடுங்கள் 
மற்றவரையும் அனுபவிக்க விடுங்கள்.
இந்த முடிவே இல்லாத பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறு புள்ளியான 
பூமியில் எப்படி தோன்றினோம் என்று தெரியவில்லை ... இறந்த பின்பு 
எங்கு போவோம் என்றும்  புரியவில்லை. இடையில் இப்போது இருக்கிறோம் 
இதுதான் நிஜம்.

ஆரம்பம் குழந்தை பருவம் 
தாய் தந்தையரை பின்தொடர்ந்தோம் 

இறுதிக்காலம் நோய் நொடி வழியே பின்தொடர்வோம் 

இடைக்காலம் என்றால் 20-65 வயதுவரை உழைக்கும் காலம் 
முன்னேறுவது ......பின்னேறுவது ... கல்வி .... திருமணம் 
குழந்தை வளர்ப்பு .... குழந்தைகளின் கல்வி ... அவர்களின் திருணம் 
இந்த அவசர அஞ்சல் ஓடத்துக்குள்தான் எமது வாழ்வையும் பார்த்து கொள்ள வேண்டும்.
65 வயதில் உடலில் போதுமான சக்தி இருக்காது ....... கேக் இருக்கும் பழம் இருக்கும் ... கூடவே உடலில் சுகர் இருக்கும்  உண்ண முடியாது. 

சமூக கடடமைப்பை எளிதாக உத்தர முடியாது 
எமக்கு பாதுகாப்பு அரணும் அதுதான் .... ஆனாலும் 
அது கால காலத்து மூட நம்பிக்கைகளையும் தன்னோடு கொண்டிருக்கும்.
எதை எடுப்பது ... எதை விடுவது என்பதில் சொந்த அறிவு வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

ஒரு மனிதனின் வாழ்வானது நான்கு கால்களில் தொடங்கி.இரண்டு காலில் நடந்து.முன்று காலில்(ஊன்று கோல்)நடந்து முடிக்கும் கால அளவு தானாம் யமேக்காவில் மருத்துவ ஆய்வு ஒன்றின் முலம் கண்டு பிடித்துள்ளார்கள்.

Share this post

Link to post
Share on other sites

இவை எல்லாம் எந்த யுகத்தில இருக்கினம். இப்ப பொம்பிளையள்.. அவை அவை இஸ்டத்துக்கு கொலிடே போகினம்.. என்ஜாய் பண்ணினம்.. வருகினம்.. உது இப்ப சர்வ சாதாரணம்.

ஆம்பிளையளும்.. இப்ப இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.. காரணம்.. அவைக்கும் வீட்டில ஒரு நிம்மதி.. ஆறுதல்.. அவைட இஸ்டத்துக்கும் எதையாச்சும்.. அந்த காப்பில செய்யலாம். 

ஆக.. இரு தரப்புக்கும்.. மாறி மாறி நன்மை கிடைப்பதால்.. உது இப்ப சர்வசாதாரணமாகி விட்டது. 

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

Share this post

Link to post
Share on other sites

பெண்களை தனியே வீட்டில் விட்டுவிட்டு வாரக்கணக்காய் வீட்டுக்கு வராம சுற்றி திரியும் பொறுப்பென்றால் என்னவென்று தெரியாத ஆண்களும் உண்டு...

ஆண்களையும் பிள்ளைகளையும் தனியே விட்டுபுட்டு சமையல்கூட செய்யாமல்  அலங்காரம் பண்ணி வெளியே சுற்றும் பொறுப்பற்ற பெண்களும் உண்டு...

இங்கே  சுதந்திரம் கெட்டுபோச்சு என்ற ஆப்பு எங்கே ஆரம்பிக்குது என்றால்...

 கல்யாணமான புதிதில் ஆண்களுக்கு...பெண்களும்...பெண்களுக்கு ஆண்களும்...

அளவு கடந்த ரொமான்ஸ் மூடில்...வெட்டி தனமாய் கொடுத்த வாக்குறுதிகளே விடாமல் அவர்களை தொரத்துகின்றன... 

கடைசிவரை உன்னை கண் கலங்காம பாப்பன்,,, உன்னை கருணாநிதி பொண்டாட்டிபோல ராஜாத்தி மாதிரி வைச்சிருப்பன் என்ற உளறலும்...

நீங்கள் என்ன சொன்னாலும் கேப்பன்... நீங்கள் இல்லையெண்டால் உடனயே செத்துபோவன் என்ற பெண்களின் கோமாளிதனமான  

வார்த்தைகளின்/வாக்குறுதிகளின்  ஆரம்பமே..... 

தப்பு பண்ணிட்டோமா என்பதை தலைமுறை கடந்தபின் மீட்டி பார்க்க தோன்றுகிறது...

இது என் சொந்த வாழ்க்கையில் பட்ட அனுபவமில்லை என்று சுமே அக்கா சொன்னாலும்...

என் பேர குழந்தைகளைகூட நான் என் பொருளாதாரமீட்டும் வசதிகளை தூக்கி தூர போட்டுவிட்டு நல்லா பார்க்குறேன் என்று  காவலூர்.. கண்மணி அக்கா சொன்னாலும்...

எமது அனுமதி பெறாமலே எம்மை சுற்றி வளைத்த ஒரு கலாச்சாரத்தின்  மின்சார வேலிகளுக்கு இடையில் சிக்குப்பட்டு...ஒரு மன அழுத்ததில்  இரு பாலரும் வாழ்கிறோம்...

இதில் பெண் என்ற  ஒரு பாலினத்தின் சுதந்திரம் பற்றிய ஆய்வு எதுக்கு?

எங்கோ ஒரு முனையில் இந்த சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சமுதாய கடப்பாடுகளால் அவதி பட்டிருக்கிறோம்/இனியும் அவதிபடுவோம் என்பதே பொருள்.

இது மட்டுமே எனக்கு உங்க தலைப்பு பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பது...

மற்றும்படி அதிக பிரசங்கிதனம் ஒன்றுமல்ல...

விவாதத்துக்குரிய தலைப்புக்கள் ஆரம்பிப்பவர்களால் மட்டுமே ...

ஒரு தளம் உயிர்ப்புடன் இருக்கும்...

நன்றி இதுபோன்ற தலைப்புக்களை ஆரம்பிப்பவர்களுக்கு...

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, nedukkalapoovan said:

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

யூ டூ  நெடுக்கர் ?

 • Haha 3

Share this post

Link to post
Share on other sites

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? :grin:

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? 

நீங்கள் சிரித்துக்கொண்டே பதிவிட்டாலும், மிக சீரியஸான கருத்து...

ஆனால் அந்த வீடியோவுக்கு தலைப்பு போட்டவர்  வேம்படி மகளிரின் குத்தாட்டம் என்று போட்டிருக்கிறார்... அப்படியெல்லாம் இல்ல, வாழ்வின்  தருணங்களில்  காலத்தால் இழந்ததை கண்ணியமாக நினைவு கூர்கிறார்கள்... அதில் ஒன்றும் அசிங்கம் தெரியவில்லையே!

கூடபோன வெங்காய பொண்ணு ஒன்று... வீடியோ பண்ணி  வீணாபோன தன் புருஷனிடம் கொடுத்திருக்கு, அந்த உத்தம ராசாதான் யூ ரியூப்ல இதை அரங்கேற்றியிருக்கார்னு நினைக்குறேன்...

அதுதான் அப்பவே சொன்னேன் நல்லவர்களும் கெட்டவர்களும் ஆணிலும் பெண்ணிலும் இருப்பார்கள்.....

பகிர்வுக்கு நன்றி குமாரசுவாமி அண்ணா...

Share this post

Link to post
Share on other sites
On 5/17/2018 at 10:53 PM, குமாரசாமி said:

எப்படியான தெளிவு....எந்த விதத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பெண்கள் துணிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். தமது விருப்பங்க்களை கணவனிடம் துணிவுடன் சொல்ல வேண்டும். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும் கணவனும் பிள்ளைகளும் உயிர் வாழ்வார்கள் என்று நம்பவேண்டும். குற்ற உணர்வை அறவே விட வேண்டும். நாம் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற மனநிலையில் இருந்து வெளியே வரவேணும். மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று எல்லாவற்றுக்கும் பயப்பிடாது தனது நியாயமான ஆசைகளை அனுபவிக்க வேண்டும்.

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

On 5/19/2018 at 4:02 PM, Maruthankerny said:

சுதந்திரம் தாண்டி .......
எமது சொந்த வாழ்வு என்று வரும்போது   யாராகினும் அதை அனுபவித்து விடுங்கள் 
மற்றவரையும் அனுபவிக்க விடுங்கள்.
இந்த முடிவே இல்லாத பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறு புள்ளியான 
பூமியில் எப்படி தோன்றினோம் என்று தெரியவில்லை ... இறந்த பின்பு 
எங்கு போவோம் என்றும்  புரியவில்லை. இடையில் இப்போது இருக்கிறோம் 
இதுதான் நிஜம்.

ஆரம்பம் குழந்தை பருவம் 
தாய் தந்தையரை பின்தொடர்ந்தோம் 

இறுதிக்காலம் நோய் நொடி வழியே பின்தொடர்வோம் 

இடைக்காலம் என்றால் 20-65 வயதுவரை உழைக்கும் காலம் 
முன்னேறுவது ......பின்னேறுவது ... கல்வி .... திருமணம் 
குழந்தை வளர்ப்பு .... குழந்தைகளின் கல்வி ... அவர்களின் திருணம் 
இந்த அவசர அஞ்சல் ஓடத்துக்குள்தான் எமது வாழ்வையும் பார்த்து கொள்ள வேண்டும்.
65 வயதில் உடலில் போதுமான சக்தி இருக்காது ....... கேக் இருக்கும் பழம் இருக்கும் ... கூடவே உடலில் சுகர் இருக்கும்  உண்ண முடியாது. 

சமூக கடடமைப்பை எளிதாக உத்தர முடியாது 
எமக்கு பாதுகாப்பு அரணும் அதுதான் .... ஆனாலும் 
அது கால காலத்து மூட நம்பிக்கைகளையும் தன்னோடு கொண்டிருக்கும்.
எதை எடுப்பது ... எதை விடுவது என்பதில் சொந்த அறிவு வேண்டும்.

அதைத்தான் நானும் சொல்கிறேன்

On 5/20/2018 at 12:48 PM, nedukkalapoovan said:

இவை எல்லாம் எந்த யுகத்தில இருக்கினம். இப்ப பொம்பிளையள்.. அவை அவை இஸ்டத்துக்கு கொலிடே போகினம்.. என்ஜாய் பண்ணினம்.. வருகினம்.. உது இப்ப சர்வ சாதாரணம்.

ஆம்பிளையளும்.. இப்ப இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.. காரணம்.. அவைக்கும் வீட்டில ஒரு நிம்மதி.. ஆறுதல்.. அவைட இஸ்டத்துக்கும் எதையாச்சும்.. அந்த காப்பில செய்யலாம். 

ஆக.. இரு தரப்புக்கும்.. மாறி மாறி நன்மை கிடைப்பதால்.. உது இப்ப சர்வசாதாரணமாகி விட்டது. 

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

நீங்கள் கூறுவதுபோன்று இங்கு பிறந்த பிள்ளைகள் போகின்றனர் தான். ஆனால் எனது தலைமுறையினரை எடுத்துக்கொண்டால் 5 வீதத்தினர் கூட சுதந்திரமாக இல்லை.

இப்பதானே கலியாணம் கட்டி இருக்கிறியள். இப்ப சேர்ந்து போவதுதான் நல்லது. ஒரு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சொல்லுங்கோ.எது நல்லது எண்டு ?

19 hours ago, குமாரசாமி said:

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? :grin:

இதில கூடப் பாருங்கோ ஆண்களும் மூக்கை நுளைத்துக்கொண்டு. இதுவும் பெண்களின் ஒருவித அடிமைப்ப் புத்திதான். கணவன் மாரை விட்டுவிட்டு போகவேண்டியதுதானே. அவர்களும் வேம்படியிலா படித்தவர்கள். இப்படி ஒன்றுகூடி ஆடினால் கவலைகளைப் பெண்கள் மறப்பார்கள் என்று எண்ணுவதுதான் ஆண்கள் புத்தி. 

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, valavan said:

நீங்கள் சிரித்துக்கொண்டே பதிவிட்டாலும், மிக சீரியஸான கருத்து...

ஆனால் அந்த வீடியோவுக்கு தலைப்பு போட்டவர்  வேம்படி மகளிரின் குத்தாட்டம் என்று போட்டிருக்கிறார்... அப்படியெல்லாம் இல்ல, வாழ்வின்  தருணங்களில்  காலத்தால் இழந்ததை கண்ணியமாக நினைவு கூர்கிறார்கள்... அதில் ஒன்றும் அசிங்கம் தெரியவில்லையே!

கூடபோன வெங்காய பொண்ணு ஒன்று... வீடியோ பண்ணி  வீணாபோன தன் புருஷனிடம் கொடுத்திருக்கு, அந்த உத்தம ராசாதான் யூ ரியூப்ல இதை அரங்கேற்றியிருக்கார்னு நினைக்குறேன்...

அதுதான் அப்பவே சொன்னேன் நல்லவர்களும் கெட்டவர்களும் ஆணிலும் பெண்ணிலும் இருப்பார்கள்.....

பகிர்வுக்கு நன்றி குமாரசுவாமி அண்ணா...

இதில் பெண்கள் ஆடிப்பாடுவதை ஏன் நீங்கள் தப்புப்போல் கூறுகிறீர்கள். விசர்ப் பெண்கள் கூடவே கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு போய்.........

On 5/18/2018 at 9:54 PM, நிலாமதி said:

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

அதுதான் அக்கா அந்த வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும்

On 5/18/2018 at 11:32 PM, Sasi_varnam said:

சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது.
குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர  எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா.
இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். 
எதுக்கு இந்த வேல ...
நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 உதாரணம் 
தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள்.
யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு.
தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு 
லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு 
உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ...
எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்??

எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். 
மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.

முதல் பந்தியிலேயே எந்தப் பெண்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேனே. வடிவா வாசிக்காமல் வந்து எழுதக் கூடாது. பெண்கள் வீட்டில் இருக்கத்தான் விரும்புவாள் என்று ஆண்கள் தான் ஒரு வரையறை செய்கிறீர்கள். திருமணம் ஆனா நாளில் இருந்து மறைமுகமாகப் பெண்ணுக்கு உங்கள் எண்ணங்களை உணர்த்திவிடுவீர்கள். அதன்பின் பெண் என்ன செய்வாள் பாவம். என் கணவன் எனக்கு உழைத்துக் கொட்டுகிறார். நான் வீட்டில் இருந்து அவர் மனம் கோணாமல் இருக்க வேண்டும் என்று தன மனதுக்குத் தானே கடிவாளமிட்டபடி எந்த ஆசைகளையும் ஏற்ப்படுஹ்த்திக் கொள்ளாது இருக்கிறாள் என்பதே உண்மை.

Share this post

Link to post
Share on other sites
On 5/19/2018 at 12:37 AM, புங்கையூரன் said:

உண்மையான கருத்து நிலாக்கா!

பெண்ணடிமைத்தனம் எம்மிடம் இருந்ததில்லை!

பெண்ணை அர்த்த நாரீஸ்வரியாக்கி ...அழகு படுத்தியது....எமது மதம்!

ஏன் உங்கள் மதம் கூட அவளை அன்னை வடிவாக்கி ....உயரத்தில் வைத்தது!

தனது சமூகத்தின் கண்ணியத்தையே..எமது சமூகம் பெண்ணில் தான் வைத்தது!

அதனால் தான்...பெண்ணை...அண்ணனும், தம்பியும், அப்பாவும்...அம்மாவும்...அத்தானும் கூடப் பொத்தி வளர்த்தார்கள்!

அந்தப் பொத்தலில்....கொடுமையோ....வன்மமோ இருக்கவில்லை! அன்பும்..அணைப்பும் தான் இருந்தது!

த்தனை...அண்ணாக்கள், அப்பாக்கள், தம்பிகள்,..தங்கள் வாழ்க்கைகளைக் கருக்கியும், சுருக்கியும்,,தங்கள் தன்கைகளுக்காக, மகள்களுக்காக, அக்காக்களுக்காக..உழைத்திருக்கிறார்கள்?

தலையில்...மயிர் கொட்டத் தொடங்கிய பிறகு தான்...அண்ணா.... திருமணம் செய்கிறான்!

காலம்...காலமாகத் தங்கையைப் பொத்தி வளர்த்தவன்...அதே கவனத்தால் தான்...வந்த துணையையும் பொத்தி வைக்க முனைகிறான்!

ஏனெனில்....வெளியுலகம்...அப்படி!

ஆனால்...வெளியுலகம் பாதுகாப்பானது என...அவன் கருதுகையில்...தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்துகிறான்!

அது தான்....இப்போது நடக்கின்றது!

ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்!

அண்மையில்...நிழலி ஓரிடத்தில் எழுதிய...ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

அது அன்னையர் தினத்தன்று எழுதியது...!

மனைவிகளை...அன்னையராகக்கிய தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்!

எனவே....அவன்...அவள்..என்ற வேறு பாடின்றி...நாம்.....நமது குடும்பம்...என்ற மனநிலையில் பயணிப்போமே!

தலையில் மயிர் கொட்டிய பின்னும் திருமணம் ஆகாமல் அண்ணன் இருப்பது சீதனம் வாங்கும் ஆண்களாலும் தானே புங்கை. நாம் நமது குடும்பம் என்று பெண்ணை வீட்டுக்குள் அடடைப்பதையேதான்நீங்களும் கூறுகிறீர்கள்.

On 5/19/2018 at 1:20 AM, யாயினி said:

எல்லா இடங்களிலும் அண்ணாக்கள்;தம்பிகள் மற்றும் பெரியவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது...எல்லாவற்றையும் விபரிக்கவும் இயலாது..

பெண்கள் பல நேரங்களில் மனதில் எண்ணுவதைச் சொல்வதே இல்லை.

On 5/19/2018 at 12:01 AM, தமிழ் சிறி said:

அக்காவின்... மனநிலை, எனக்கு  எப்பவோ.. தெரியும். ?
இதுக்குத் தான்.... நான் இந்தப் பக்கம், கருத்து எழுவதில்லை. :110_writing_hand:
விளக்கமாக எழுதியமைக்கு....  நன்றி,  சசி வர்ணம். ? 

நாங்கள் ஒன்றும் வெற்றிலை பாக்கு வைக்கவே இல்லையே.

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

 சொந்த வீட்டுப்பிரச்சனை போல இருக்கிறது. வீட்டில சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் யாழில் கருத்தினை எழுதுகிறார்போல இருக்கிறது.  
 
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தலையில் மயிர் கொட்டிய பின்னும் திருமணம் ஆகாமல் அண்ணன் இருப்பது சீதனம் வாங்கும் ஆண்களாலும் தானே புங்கை. நாம் நமது குடும்பம் என்று பெண்ணை வீட்டுக்குள் அடடைப்பதையேதான்நீங்களும் கூறுகிறீர்கள்.

இப்பத் தான் விசயத்துக்கே வாறீங்கள்!

சீதனத்தை...உயிர்ப்புடன் இன்னும் வைத்துப்பது ஆண் அல்ல!

நன்றாகக் கவனித்துப் பார்த்தால்....பெண் தான் என்று தெரியும்!

அவள் ஒரு ஆண் பிள்ளைக்குச் சகோதரியாக இருக்கும் போதும்.....தாயாக இருக்கும் போதும்...சீதனத்தை ஆதரிக்கிறாள்!

அதே வேளை....பெண்ணுக்குத் திருமணம் என்று வரும்போது...சீதனத்தை எதிர்க்கிறாள்!

சமத்துவம் என நான் இங்கு குறிப்பிட்டது.....பெண்களை வீட்டுக்குள் அடைப்பதை அல்ல....!

ஆணும்...பெண்ணும்...சமம் என்பதையே!

ஒரு மாறுதலுக்கு நீங்கள் புல்லை வெட்டுங்கள்....நாங்கள் சமைக்கிறோமே...!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண்கள் துணிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். தமது விருப்பங்க்களை கணவனிடம் துணிவுடன் சொல்ல வேண்டும். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும் கணவனும் பிள்ளைகளும் உயிர் வாழ்வார்கள் என்று நம்பவேண்டும். குற்ற உணர்வை அறவே விட வேண்டும். நாம் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற மனநிலையில் இருந்து வெளியே வரவேணும். மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று எல்லாவற்றுக்கும் பயப்பிடாது தனது நியாயமான ஆசைகளை அனுபவிக்க வேண்டும்.

நீங்கள் சொல்லுறது மெத்தச்சரி...உண்மை....உண்மை...

வாழைப்பழத்தை குடுக்கலாம்.....சரி தோலை உரிச்சும் குடுக்கலாம்.....இல்லை கடிச்சும் குடுக்கோணுமெண்டால்.....எதுக்கும் ஒரு இது இருக்கெல்லே!!!!! பொம்புளையளுக்கு எல்லாச்சுதந்திரமும் அட்சய பாத்திரம் மாதிரி குறைவில்லாமல் இருக்கெண்டது உங்கடை கூட்டுவளுக்கு போய் சொல்லலாமெல்லே

அது சரி  குற்ற உணர்வை அறவே விடவேணுமெண்டு நீங்கள்கள் சொல்ல வந்தது என்னத்தை??????????

Share this post

Link to post
Share on other sites
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். 

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் ஒரு சில வீடுகளில் இருக்கத்தான் செய்கின்றது.....அதற்காக ஒட்டுமொத்த ஆண்வர்கத்தையும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

ஒரு கணவனால்  ஒரு பாசத்தை இதய பூர்வமான அன்பை வெளிப்படுத்த இதை விட வேறு என்ன வேண்டும்? 
பெண்களாகிய நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு புள்ளியில்.....ஒரு விடயத்திலாவது திருப்திப்பட்டு வாழவே மாட்டீர்களா?

Share this post

Link to post
Share on other sites

இங்கை எனக்குத் தெரிந்து ஒரு பெண் இருக்கிறா.அவவுக்க கடையில் பொருட்க்கள் வாங்க பாவிக்கிற வண்டிலுக்கு டோக்கன் போடவே தெரியாது.ஒரு பெட்டி உப்பு வாங்க வேண்டுமென்டாலும் ர்ருசன்காரன் தான் போக வேனும்.விட்டால் அந்தப் பெண்னுக்கு வண்னிலுக்கு டோக்கன் போடுற உரிமையை புருசக் காரன்தான் மறுத்தார் என்டு சொல்லுவிங்கள் போல் உள்ளது.?

Share this post

Link to post
Share on other sites
On 5/22/2018 at 5:12 AM, கந்தப்பு said:

 சொந்த வீட்டுப்பிரச்சனை போல இருக்கிறது. வீட்டில சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் யாழில் கருத்தினை எழுதுகிறார்போல இருக்கிறது.  
 
உடன சொந்த வீட்டுப் பிரச்சனை எண்டு மடக்கிறது.☺️ ஒவ்வொரு வாரமும் நான் நாற்பது குடும்பங்களைச் சந்திக்கிறேன். என் பள்ளியில் பன்னிரண்டு ஆசிரியர்கள். இதில் அரைவாசிப் பேரின் கதையும் நான் கேட்காமலே காதுக்கு வரும். அதைவிட வேலையிடத்தில் பொதுவெளியில் முகநூல் வட்டத்தில் என்று எத்தனையோ பெண்களுடன் உரையாடுவது.

கந்தப்பு நீங்கள் எழுதிய ஒரு கருத்தாடலில் தான் இதை எழுதவேண்டும் என நான் தீர்மானித்தது.

On 5/22/2018 at 7:42 AM, புங்கையூரன் said:

இப்பத் தான் விசயத்துக்கே வாறீங்கள்!

சீதனத்தை...உயிர்ப்புடன் இன்னும் வைத்துப்பது ஆண் அல்ல!

நன்றாகக் கவனித்துப் பார்த்தால்....பெண் தான் என்று தெரியும்!

அவள் ஒரு ஆண் பிள்ளைக்குச் சகோதரியாக இருக்கும் போதும்.....தாயாக இருக்கும் போதும்...சீதனத்தை ஆதரிக்கிறாள்!

அதே வேளை....பெண்ணுக்குத் திருமணம் என்று வரும்போது...சீதனத்தை எதிர்க்கிறாள்!

சமத்துவம் என நான் இங்கு குறிப்பிட்டது.....பெண்களை வீட்டுக்குள் அடைப்பதை அல்ல....!

ஆணும்...பெண்ணும்...சமம் என்பதையே!

ஒரு மாறுதலுக்கு நீங்கள் புல்லை வெட்டுங்கள்....நாங்கள் சமைக்கிறோமே...!

என் வீட்டில் இருவருமே இரண்டும் செய்வதாக்கும்.

On 5/23/2018 at 12:37 AM, குமாரசாமி said:

நீங்கள் சொல்லுறது மெத்தச்சரி...உண்மை....உண்மை...

வாழைப்பழத்தை குடுக்கலாம்.....சரி தோலை உரிச்சும் குடுக்கலாம்.....இல்லை கடிச்சும் குடுக்கோணுமெண்டால்.....எதுக்கும் ஒரு இது இருக்கெல்லே!!!!! பொம்புளையளுக்கு எல்லாச்சுதந்திரமும் அட்சய பாத்திரம் மாதிரி குறைவில்லாமல் இருக்கெண்டது உங்கடை கூட்டுவளுக்கு போய் சொல்லலாமெல்லே

அது சரி  குற்ற உணர்வை அறவே விடவேணுமெண்டு நீங்கள்கள் சொல்ல வந்தது என்னத்தை??????????

கணவனுக்கு சிலநேரம் சேவகம் செய்ய முடியாமல் போகும்போது எதோ தான் தவறு செய்தது போல் குற்ற உணர்வில் பதருபவ்ர்களைப் பார்த்துள்ளேன்  குமாரசாமி. அதுக்குத்தான் இது.

On 5/23/2018 at 12:56 AM, குமாரசாமி said:

ஒரு கணவனால்  ஒரு பாசத்தை இதய பூர்வமான அன்பை வெளிப்படுத்த இதை விட வேறு என்ன வேண்டும்? 
பெண்களாகிய நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு புள்ளியில்.....ஒரு விடயத்திலாவது திருப்திப்பட்டு வாழவே மாட்டீர்களா?

திருப்திப் படவேண்டிய விடயங்களுக்கு திருப்திப் பட்டதனாலதான் முப்பது ஆண்டுகளாகியும் சேர்ந்து வாழுறம்.

Share this post

Link to post
Share on other sites
On 5/23/2018 at 8:04 AM, சுவைப்பிரியன் said:

இங்கை எனக்குத் தெரிந்து ஒரு பெண் இருக்கிறா.அவவுக்க கடையில் பொருட்க்கள் வாங்க பாவிக்கிற வண்டிலுக்கு டோக்கன் போடவே தெரியாது.ஒரு பெட்டி உப்பு வாங்க வேண்டுமென்டாலும் ர்ருசன்காரன் தான் போக வேனும்.விட்டால் அந்தப் பெண்னுக்கு வண்னிலுக்கு டோக்கன் போடுற உரிமையை புருசக் காரன்தான் மறுத்தார் என்டு சொல்லுவிங்கள் போல் உள்ளது.?

வண்டிலுக்கு டோக்கன் போடத் தெரியவில்லை என்றால் கணவன் காட்டிக் குடுக்காமல் எதுக்குத் தானே போடுறார். அப்பிடிக் கணவன் காட்டிக் குடுத்த பின்னும் போடத் தெரியாமல் இருந்தால் அவருக்கு எதோ நோய் என்றுதான் கொள்ளவேண்டும். வண்டிலுக்கு டோக்கன் போடுவதை இரண்டு வயதுக் குழந்தையே செய்யும்.

உப்பு வாங்க ஏன் அவர் ஓட வேண்டும். நீ தான் போய் வாங்க வேண்டும் என்றால்  வாங்க மாட்டாரா???? உதெல்லாம் அவுசில் நடக்கிற கதையோ ??? அங்கே கிட்டக் கடைகள் இல்லாமல் போக்குவரத்து வசதி இல்லை என்றால், வாகன அனுமதிப் பத்திரம் எடுக்கக் கணவன் அனுமதிக்கவில்லை என்றால் அந்தப் பெண் எதுக்கும் கணவனைத் தான் கடைக்குக் அனுப்புவாள்.

On 5/23/2018 at 12:48 AM, குமாரசாமி said:

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் ஒரு சில வீடுகளில் இருக்கத்தான் செய்கின்றது.....அதற்காக ஒட்டுமொத்த ஆண்வர்கத்தையும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு பத்து வீதமான ஆண்கள் பெண்களை மதித்து உண்மையாய் சுதந்திரமாய் இருக்கவிடுகிறார்களா??? 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

 • Topics

 • Posts

  • படத்தின் காப்புரிமை Getty Images ஒரு பெருங்கடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பார்க்க மிகப் பெரிய ஆய்வு திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆம், அட்லாண்டிக் பெருங்கடல், அதில் வாழும் உயிரினங்கள், அதிலுள்ள பவளப்பாறைகள் அனைத்தும் நலமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஐ-அட்லாண்டிக் திட்டம் எனும் ஒரு சர்வதேச ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல்தான் இந்த கிரகத்தின் இரண்டாவது பெரிய கடல். பருவநிலை மாற்றமும், பெருங்கடல்களும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதி அளிக்கப்பட்ட இந்த திட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்துள்ளன. இதனை ஒருங்கிணைப்பது எடின்பர்க் பல்கலைக்கழகம். இதற்காக கடலுக்குள் ஆய்வு செய்யும் ரோபோக்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இது ஆர்க்டிக் முதல் தென் அமெரிக்கா முதல் உள்ள கடல்பரப்பை ஆய்வு செய்யும். பருவநிலை மாற்றம் கடலுக்கடியில் உள்ள தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று மதிப்பிடும். இந்த் ஆய்வின் முடிவுகள் அட்லாண்டிக் குறித்த திட்டங்களை அரசு முன்னெடுக்க உதவும். மும்முனை தாக்குதல் மும்முனைத் தாக்குதலில் அட்லாண்டிக் பெருங்கடல் மூச்சுத் திணறுவதாக கூறுகிறார் ஐ-அட்லாண்டிக் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மர்ரி ரோபர்ட்ஸ். மேலும் அவர், "அட்லாண்டிக் பெருங்கடல் பிராண வாயுவை இழந்து வருகிறது," என்கிறார். இதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம். புவி வெப்பத்தில் 90 சதவிகிதத்தை பெருங்கடல்களே உறிஞ்சுகின்றன. படத்தின் காப்புரிமை Getty Images இந்த குழுவானது 12 இடங்களில் ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது. வளப்பாறைகளும் அழிந்து வருவதாக கூறுகிறார் பேராசிரியர் லாரண்ஸ். பவளப்பாறைகள் பல கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடம். பவளப்பாறைகள் அழிவென்பது பல உயிரினங்களின் அழிவு. கடல் வெப்பம், உப்புத்தன்மை, மற்றும் பிராண வாயு ஆகியவை இந்த ஆய்வில் முதன்மையாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்கிறார் பேராசிரியர் கன்னின்கம். அதுபோல எவ்வளவு சூரிய ஒளி பெருங்கடலுக்குள் நுழைகிறது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்கிறார் அவர். 'உண்மையான சவால்' இந்த திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் 10 மில்லியன் யூரோக்கள் வழங்குகிறது. படத்தின் காப்புரிமை UNIVERSITY OF EDINBURGH இந்த திட்டத்தில் இணைந்துள்ள பிற அமைப்புகள், நிதி மற்றும் இதற்கான தொழில்நுட்பத்தை வழங்குகின்றன. இதனுடைய மதிப்பு முப்பது மில்லியன் யூரோக்கள். "கடலின் இயல்பு எப்படி மாறுகிறது? எதனால் மாறுகிறது? என்பதை ஆராய்வதே எங்கள் நோக்கம். இதனை புரிந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் என்ன சவாலை நாம் எதிர்கொள்ள போகிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியும். இதனை புரிந்து கொண்டபின், இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாமென அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்” என்கிறார் பேராசிரியர் ராபர்ட். https://www.bbc.com/tamil/science-48683153
  • இன்ஸ்சூரன்சுக்குள் போனால் இரண்டு வாகனமும் ஒரே இன்சூரன்ஸ் என்றால் அதிகம் பிரச்சினை இல்லை.வெவ்வேறு இன்சூரன்ஸ் என்றால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் கதைத்துத்தான் முடிவெடுப்பினம்.....! ஒருமுறை ஒரு பொடியன் ஒரு மொபைலட்டில் (அது ஓட லைசென்ஸ் தேவையில்லை) எனது காருக்கு பின்னால் வேகமாய் வந்து பிழையான பக்கத்தால் முந்தும்போது எனது காரின் சைட் கண்ணாடியை உடைத்து பாலன்ஸ் தவறி வேலிக்குள் விழுந்து அவரது மொபைலட்டின் முன் பாகம் முழுதும் நொறுங்கி போட்டுது. எனது காருக்கு கண்ணாடி மட்டும்தான் சேதம்.மற்றும்படி ஒரு கீறலும் விழவில்லை. நான் ஓடிப்போய் அவரையும் சைக்கிளையும் தூக்கி விட்டன்.பலமுறை மன்னிப்பு சொன்னான். அவன் அழுவாரைப்போல் நின்றான். பார்க்க பாவமாய் இருந்தது.  நான் கேட்டன்  இப்ப என்ன செய்யலாம் என்று.அவன் சொன்னான் தன்னில் பிழை என்று எழுதித் தாறன் எண்டு. நான் அதற்குரிய படிவத்தை எடுத்து படமெல்லாம் கீறி நிரப்பி கையெழுத்து வாங்கி  விட்டு சொன்னன் உனக்கு விருப்பமெண்டால் சொல்லு நான் இதை இன்சூரன்சுக்கு கொடுக்கவில்லை. எனது காரை நான் திருத்தி கொள்ளுறன், நீ உனது வண்டியை திருத்தி கொள்  என்று. அவன் சொன்னான் தன்னுடையது புது வண்டி. முன்னுக்கு முழுதும் சேதமாய் போட்டுது. ஆனால் தன்னுடையது" தூ ரிஸ்க் இன்சூரன்ஸ்" full insurance  (அதாவது அவரின் வண்டிக்கு அவரோ அன்றி மற்றவர்களோ அடித்தாலும் இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது இன்சூரன்ஸ் எப்பொழுதும் மினிமம்தான். நான் யாரையாவது அடித்தால் அவர்களது வாகனத்தை இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது வாகனத்தை நான்தான் திருத்த வேண்டும். வேறு யாரும் எனது வாகனத்தை இடித்தால் இன்சூரன்ஸ் எனது வாகனத்தை திருத்தித் தரும்.) அதனால் நீங்கள் படிவத்தை உங்களது இன்சூரன்ஸில் குடுங்கோ என்கிறார். நானும் சரி என்டு போட்டு அவரையும் சைக்கிளையும் ஏற்றிக்கொண்டு போய் அவரிடத்தில் விட்டு விட்டு எனது இன்சூரன்ஸில் விடயத்தை சொல்லி படிவத்தை குடுத்து விட்டு வந்தேன்.  சில நாளில் எனக்கு கடிதம் வருகுது. பிழை 50/50 என்றும் எனக்கு போனஸ் கூடும் என்றும் வருது. நான் நேரில் போய் கேட்டன்  எண்ணில் ஒரு பிழையும் இல்லை எப்படி 50/50 வரும் என்று. அது தாங்கள் அவர்களின் இன்சூரன்சுடன் கதைத்தது என்று சொன்னார்.நான் சொன்னன் நான் போய் என்ர லோயருடன் வாறன், பிறகு நீ என்னுடைய கார்கள் (மகன், மகளுடையது ) எல்லா இன்சூரன்சும் இங்குதான் இருக்கு நான் எல்லாத்தையும் நிப்பாட்ட போறன் என்று வெளிக்கிட அவர் என்னை இருக்க சொல்லிவிட்டு  மற்றும் கூட வேலை செய்யும்  இருவருடன் கதைத்து விட்டு போனில் மேலிடத்துடன் கதைச்சினம். பிறகு வந்து சொன்னார் நாங்கள் எல்லாம் கதைசிட்டம் உன்னில் பிழை இல்லை என்று. நான் விடேல்ல என்ர  சைட் மிரர் உடைந்திட்டுது என்ன செய்யிறது என்று கேட்க , அவர் ஒரு கராஜ் விலாசம் தந்தார் அங்கு கொண்டுபோய் காட்ட  சொல்லி கடிதமும் தந்தார். நானும் அதை வாங்கி கொண்டுபோய் அந்த கராஜில் குடுத்து சில நாளில் புதிதாக போட்டு தந்தார்கள். போனஸும் ஏறவில்லை......!   எதுவானாலும் கதைக்க வேண்டும்.....!  😄
  • ஹேலியர் சுயூங் பிபிசி செய்தியாளர் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய இரண்டு போராட்டங்களைக் ஓரு வாரத்திற்குள் ஹாங்காங் கண்டுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு மிகவும் வன்முறையான போராட்டம் ஆகும். இந்த போராட்டங்களை முன்னிறுத்தி செயல்படுத்தியது இளைஞர்கள். பெரும்பாலும் தங்கள் பதின்ம வயதை சமீபத்தில் தாண்டியவர்கள். அவர்கள் எவ்வாறு தீவிரமாக மாறினார்கள்? "மக்களை ஓடுங்கள் என்று நாங்கள் எச்சரித்தோம்." "போராட்டங்களுக்குப்பின் என் பெற்றோர் என்னை துரத்திவிட்டனர்" "கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு முதன் முறையாக உள்ளானேன். என் கண்களில் இருந்து கட்டுப்படுத்த முடியாதபடி கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது." "என்னுடைய உண்மையான பெயரை கொடுப்பதற்கு எனக்கு பயமாக இருக்கிறது." இந்த வார்த்தைகள் ஹாங்காங் மக்களின் வாயிலிருந்து வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதுவும் 17 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களிடமிருந்து எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மிகச் சமீப காலம் வரை சாதாரணமான ஹாங்காங் பதின்ம வயது இளைஞர்களுக்கு அரசியலில் ஈடுபடும் முனைப்போ, புதுமையாக சிந்திக்க வேண்டும் என்றோ நினைக்காமல் ஒரே மாதிரியாக அனைவருக்குமே படிக்க வேண்டும் என்றோ அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோதான் எண்ணம் வரும். ஆனால், கடந்த வாரம் ஹாங்காங் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளை முகமூடி அணிந்த இளைஞர்கள் முற்றுகையிட்டு, வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியதையும், காவல்துறையினர் வீசிய கண்ணீர் புகைக் குண்டுகளை மீண்டும் அவர்கள் மீதே திரும்ப வீசியதையும் காண முடிந்தது. இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற, சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடும் 'குடை போராட்டத்தில்' (Umbrella protests) பங்கேற்றவர்களின் வயதைவிட மிகவும் இளையவர்களாக இருந்திருப்பார்கள். இந்த குடை போராட்டம் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்தக்கோரி பல்லாயிரக்கணக்கானோரை தெருக்களில் இறங்கிப் போராடவும் உறங்கவும் வைத்தது. சீனாவின் வருங்காலம் குறித்த அச்சம் நகர மையத்தை கைப்பற்றும் போராட்டம் என்றும் அழைக்கப்படும் 2014 போராட்டங்கள் அரசின் எவ்விதத்திலும் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமலேயே முடிவுக்கு வந்தது. ஆனால் இந்தமுறை நிலைமை வேறாக இருந்தது. படத்தின் காப்புரிமை Reuters சமீபத்திய போராட்டங்கள், சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவிற்கு எதிராக நடைபெற்றன. இந்த சட்டம், குற்றப்பின்னணி உள்ள எந்த ஒரு ஹாங்காங் வாசியையும் விசாரணைக்காக சீனாவிற்கு நாடு கடத்த வகை செய்யும். இந்த போராட்டம் காரணமாக அரசு மன்னிப்பு கேட்டது. சர்ச்சைக்குரிய சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தியது. இது இந்த சட்டத்தை கிடப்பில் போடப்பட்டதற்கு சமம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த முறை மட்டும் ஏன் இப்படி ஆனது? கண்ணீர் வெடிகுண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் எதிர்கொள்ள, ஏன் கைதாகவும் (அவர்களுக்கு வருங்கால வேலை வாய்ப்பு பிரச்சனையும் இருக்கிறது) இளைஞர்களை எப்படி தயார் செய்தது? ஹாங்காங் இளைஞர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக ஒருவகையான அரசியல் விழிப்புணர்வை பெற்று வருகின்றனர். 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் இடையேயான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 2008ல் 58% ஆக இருந்த நிலையில் 2016ல் 70% ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கின் அரசியல் எதிர்காலம் முக்கியமான பிரச்சனை என்று நீங்கள் கருதினால், இது ஒன்றும் வியப்பில்லை. ஹாங்காங் பிரதேசம் தற்போது சிறப்பு உரிமைகளையும் சுதந்திரங்களையும் முன்பு காலனி ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்திடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது இங்கிலாந்திற்கும் சீனாவிற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் காரணமாக அனுபவித்து வருகிறது. ஆனால் 2047ல் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து காலாவதியாகும் என்று இந்த ஒப்பந்தம் தெரிவிக்கிறது. அதன் பின் என்ன ஆகும் என்று யாருக்கும் உண்மையில் தெரியாது. இன்றைய இளைஞர்களுக்கு 2047 மிகவும் அருகில் உள்ளது. அவர்கள் போராட்டம் இந்த நிலையற்ற தன்மை மற்றும் சீன அரசும் தங்களை நெருங்கிவருகிறது என்ற உணர்வால் தூண்டப்பட்டே இருக்கிறது. இந்த அமைப்பு முறை அவர்களை ஒருபோதும் பாதுகாக்காது என்பதால் அவர்கள் தங்கள் போராட்ட உத்திகளை மாற்றி வருகிறார்கள். நவீன முறையிலான அதிருப்தியை வெளிப்படுத்தும் கலையை கற்று வருகிறார்கள். கடந்த வாரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களில் நான் பேட்டி கண்ட ஒவ்வொரு போராட்டக்காரரும் கைதாவதற்கு அஞ்சி தங்கள் பெயரையும் அடையாளத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டனர். "இந்த போராட்டத்தின்போது எல்லா நேரத்திலும் நாங்கள் எங்கள் முகத்தை முகமூடி அணிந்து மறைத்திருந்தோம், அதன் பின் நாங்கள் எங்கள் ஐபோன்கள் மற்றும் கூகுள் மேம்புகளில் எங்களைப்பற்றிய தரவுகளை நாங்கள் அழிக்க முற்பட்டோம்," என்கிறார் டேன். இந்த போராட்டத்தின்போது வேலிகளால் தடைகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உதவிய 18 வயது இளைஞர் இவர். அவர்களில் சிலர் தங்கள் பிரிபெய்டு பயண அட்டையை பயன்படுத்தாமல், ரயில் நிலையத்தில் டிக்கெட்டுகளை வாங்கி பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அதிகாரிகளால் கண்டு பிடிக்க முடியாமல் சிரமப்பட வேண்டும் என்பதற்காக. சமூக வலைத்தளங்களில் தாங்கள் என்ன சொல்கிறோம் என்பதில் பெரும்பாலானோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தனர். பெரும்பாலானோர், டெலிகிராம் போன்ற தரவுகளை சுயமாக அழிக்கக்கூடிய செயல்பாடுகள் கொண்ட பாதுகாப்பான செயலிகள் மூலம் தொடர்புகொள்ளவே விரும்பினர். "2014ஆம் நடந்த போராட்டத்தின்போது பெரும்பாலானோர், தங்களை பாதுகாக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை, நாங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றை பயன்படுத்தி தகவல்களை பரப்பினோம். ஆனால் இந்த ஆண்டு கருத்து சுதந்திரம் ஹாங்காங்கில் மிகவும் மோசமடைந்துள்ளதை நாங்கள் பார்க்கிறோம்," என்கிறார், ஜாக்கி என்ற 20 வயது நிரம்பிய மாணவர் தலைவர். நொறுங்கிய உறவு ஹாங்காங்கின் மிகவும் பெருமைக்குரிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். டெலிகிராம் மூலம் போராட்டம் பற்றிய தகவல் பரிமாறிக்கொள்ளும் குழு ஒன்றின் நிர்வாகி என சந்தேகிக்கப்பட்ட 22 வயது இளைஞர் ஒருவர் பொது அமைதிக்கு தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர் தலைவர்கள் அவர்கள் உயர் பொறுப்புகள் காரணமாக கைது செய்யப்படக்கூடும் என்று ஜாக்கி அஞ்சுகிறார்.   "நான் வீட்டிற்கு சென்றால் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் நான் மாணவர் சங்க அலுவலகத்திலேயே உறங்கிவருகிறேன்," என்கிறார் அவர். இது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளுடன் நொறுங்கிப்போன உறவையே காட்டுகிறது. கடந்த முறை நடைபெற்ற போராட்டத்துடன் ஒப்பிடுகையில் போராட்டக்காரர்களுக்கு காவல் துறையினர் மீதுள்ள நம்பிக்கை குறைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை, போலீசார் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதியில் மாணவர்கள் படுக்கையறைகளை சோதனையிட திட்டமிட்டுள்ளனர் என்ற வதந்தி பரவியது. அதற்கு முன்தினம் இரு மாணவர்கள் அங்கிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த பதற்றத்தின் ஊடே மாணவர்கள் துரிதமாக உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களையும் வழக்கறிஞர்களையும் தொடர்புகொண்டனர். அவர்கள் அந்த கட்டடத்தை சூழ்ந்து கொண்டதால், இறுதியில் போலீசார் விடுதியின் கூடத்திற்குள் நுழையவில்லை 2014 போராட்டங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை தாக்கியதால் ஏராளமான காவல்துறையினர் சிறைபிடிக்கப்பட்டதையடுத்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக காவல்துறையினர் மீதான நம்பிக்கை போய்விட்டதாக டேன் சொல்கிறார். "அதற்கு முன்புவரை காவல்துறையினர் என்றால் சட்டத்தை மதித்து நடப்பவர்கள், குடிமக்களுக்கு உதவுபவர்கள் என்று நான் நம்பினேன். ஆனால் சில காவலர்கள் தங்கள் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நான் உணர்ந்தகொண்டேன்." முந்தைய தலைமுறை போராட்டக்காரர்களுடன் ஒப்பிடுகையில் இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், நல்ல காரியத்திற்காக மக்கள் ஒன்று கூடும் சட்டத்தை மீறி கைதாகத் தயாராக இருக்கிறர்கள் என்பதையே காண முடிகிறது. அவர்கள் போராட வேண்டியது இன்னும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். மிகவும் மோசமான அரசியல் சூழலில் அவர்கள் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். டாமின் வயது 20, இவர் கடந்த புதன்கிழமை போராட்டத்தின் போது தேவையானவற்றை வழங்க உதவினார். நான் வளர்ந்து வரும் காலகட்டம் காரணமாக தான் போராட்ட ஆதரவாளராக மாறிவிட்டதாக அவர் கூறுகிறார். சீன நாட்டுப்பற்று வகுப்புகளை மாணவர்கள் கற்கவேண்டும் என்ற 2012 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட அரசியல் அமளிகள் போன்ற சூழலில் தனது தலைமுறை வளர்ந்துவருவதாக அவர் கூறுகிறார். அரசின் அந்த திட்டம் மாணவர்களை மூளைச் சலவை செய்து சீன அரசின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் நாங்கள் பெற்று வந்த சுதந்திரத்தை நசுக்கும் விதமாக இருப்பதை நான் பார்க்கிறேன். இதன் காரணமாக ஹாங்காங் தனது சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரங்களை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அரசின் கொள்கைகள் மீது புகார் கூறும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமீபத்தில் சீன அரசு அறிமுகப்படுத்திய புதிய சட்டமான, சீன தேசிய கீதத்தை அவமதிப்பவர்களை தண்டிக்கும் சட்டத்தை, ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விடுதலைக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களை தகுதியழக்கச்செய்தல் மற்றும் விடுதலை ஆதரவு போராட்டக்காரர்களை சிறையில் அடைத்ததைக் குறிப்பிடுகிறார்கள். கைப்பற்று போராட்டம் தெளிவான- சிக்கல் நிறைந்த கொடையை இன்றைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. கடந்த வார போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர். 2014 போராட்டத்தில் பங்கேற்க முடியாத அளவு மிகவும் வயது குறைந்தவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் அந்த போராட்டத்தின் போது கற்றுக்கொண்ட பாடத்தினால் உந்தப்பட்டுள்ளனர். பென், வயது 20 சொல்கிறார், தனது பெற்றோர் 2014 போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது பல்கலைக்கழக மாணவனாக தான் போராட்டங்களை நடத்துவதிலும், கைதாகக்கூடும் என்ற அபாயத்தில் உள்ள மாணவர்களுக்க சட்ட உதவிகளை வழங்குவதில் முன்னிலை வகிப்பதாக கூறுகிறார். படத்தின் காப்புரிமை GETTY IMAGES 2014 போராட்டம் தோல்வியில் முடிந்த போராட்டம் என்று கூறும் அவர், போராட்டக்காரர்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்த மாறுபட்ட கருத்துகளை கொண்டிருந்ததாகவும், அனைவருக்கும் ஓட்டுரிமை என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்கிறார். ஆனால் இந்த முறை இந்த போராட்டம் மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுதல் ஜனநாயகம் கோரவில்லை, ஹாங்காங் தற்போது அனுபவித்துவரும் உரிமைகளை தக்கவைக்க போராடுவதாக அவர் கூறினார். ஒற்றுமையுடன் இருப்பதில் அதிக பலன் இருக்கிறது. ஏனெனில் போராட்டக்காரர்கள் தங்களது தற்போதைய சுதந்திரத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காக போராடுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்கிறார் அவர். கைப்பற்று போராட்டம் அதிக அளவு இளைஞர்களை அரசியலில் ஈடுபட தூண்டியது என்றும், தாங்களே தெருவில் இறங்கி போராட வேண்டும் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை போராட்டத்தின் போது முதலுதவி மையம் ஒன்றை நடத்த உதவிய ஜாக்கி, இந்த போராட்டம் தனக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார். முன்பு தனக்கு அரசியிலில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது என்று கூறும் அவர், இந்த போராட்டத்தையடுத்து, அரசியல் எவ்வளவு முக்கியம் என்பதை உணரவைத்ததாக குறிப்பிடுகிறார். இந்த போராட்டம், இன்றைய இளைஞர்களுக்கு காவல்துறையினருடன் மோதலை எதிர்கொள்ள தயார்ப்படுத்த உதவியுள்ளது. ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஏராளமான பைகளில் மருந்துகளையும், சுவாச கருவிகளையும் வாங்கிக் குவித்து இருந்தனர். போலீசார் தாக்குதலின் போது கண்ணீர்புகைக் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மிளகுத்தூள் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தங்கள் கண்களைக் கழுவிக்கொள்வதற்கும் இவை உதவின. இவற்றில் பெரும்பாலானவை பொதுமக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். இதன் பொருள், கடந்த புதன் கிழமை போராட்டத்தின் போது நிலைமை மோசமடைந்த நிலையிலும் கூட்டத்தினரை போராட்டக் களத்தில் இருக்க வைக்க உதவியது. இந்த போராட்டங்கள் குறித்து அவர்கள் பெற்றோர் என்ன நினைக்கிறார்கள்? கருத்தகள் மாறுபடுகின்றன. இன்கிரிட் 21, தனது வேலையை முடித்து விட்டு புதன்கிழமை போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டத்தின் முன்வரிசையில் இருப்பவர்களுக்கு முதல்உதவிப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் கூறுகிறார், அவரதுபெற்றோர் காவல்துறையினருக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் தன்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டனர் என்றும் கூறுகிறார். சில நாட்கள் கழித்து வீட்டுக்கு வர அனுமதித்தனர் என்றும் அவர் கூறுகிறார். அதே நேரம் ஜாக்கி, தன் பெற்றோரிடமோ, தாத்தா பாட்டியிடமோ, இந்த போராட்டத்தில் தனது பங்கு குறித்து சொல்லும் துணிவு தனக்கு இல்லை என்கிறார். ஆனால், செய்தியில் அவரைப்பார்த்த பின்னர் அவர்கள் ஆதரவு அளித்தனர் என்றும், பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். இந்த போராட்டத்தை முழுமையாக இளைஞர்களின் போராட்டம் என்று கூறினால் அது தவறு. படத்தின் காப்புரிமை AFP Image caption தலைவர் கேரி லேம் தலைவர் கேரி லேம் பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடியை சந்தித்தார். வர்த்தக அமைப்புகள், அவருடைய தேவாலயம் மற்றும் அவருடைய பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து நெருக்கடி வந்தது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக செயின்ட் பிரான்சிஸ் கனோசியன் கல்லூரி உள்பட நூற்றுக்கணக்கான குழுக்கள் மனுக்களை வழங்கின. ஹாங்காங்கின் முக்கியமான பள்ளிகளில் ஒன்றும் பெருமைக்குரிய பள்ளியில் இருந்து எதிர்ப்பு குரல் வந்தது. இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். ஆப்ரே தாவ் என்ற 22 வயது பள்ளியின் முன்னாள் மாணவி தான் இந்த மனுவில் கையெழுத்திட்டார். தலைவர் லேம் பள்ளியின் குறிக்கோளை அடிக்கடி தன் உரையில் மேற்கோள் காட்டுவார்,. பிரான்கேசியனாக நீங்கள் இந்த வகையில் ஆட்சி செய்யக்கூடாது என்றார் ஆப்ரே. ஆனால், சட்ட விரோதமான, இளைஞர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக, அவர்கள் முகாமிட்டு போராடியதன் காரணமாக, காவல்துறையுடன் அவர்கள் மோதியதன் காரணமாகவே அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு மசோதாவை நிறுத்தியதற்கு முக்கியமான காரணம். பெரும்பாலானோர், மாணவர்களை கண்டித்து இருப்பார்கள். கடந்த காலங்களில் வன்முறையாக மாறிய போரட்டங்களின் போதும் அவர்கள் இப்படித்தான் கண்டித்துள்ளனர். ஆனால் இந்த முறை காவல்துறை மிகவும் அத்துமீறியதாக அவர்கள் கருதுகின்றனர். படத்தின் காப்புரிமை Getty Images இந்த மோதல்களின் போது காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்களை, பீன்பேக் ஷாட்டுகளை பயன்படுத்தியுள்ளனர். 150க்கும் மேற்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். 79 நாட்கள் நடைபெற்ற குடை போராட்டத்தின் போது பயன்படுத்தியதை விட அதிகம் இதுவாகும். வன்முறையை கட்டுப்படுத்த இவற்றை பயன்படுத்த வேண்டியது அவசியமானது என்று காவல்துறை தனது தரப்பினை நியாயப்படுத்துகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை அதிகாரிகளை செங்கற்கள் மற்றம் இரும்பு பைப்புகளால் தாக்கினார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். பிபிசியிடம் பேசிய சில ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டிகள் கம்புகள் போன்றவற்றை பிறர் வீசியதை தாங்கள் பார்த்ததாக கூறுகிறார்கள். என்ன இருந்தாலும் மாணவர்கள் மீது மிளகுத்தூள் தூவியது மற்றும் அதிக அளவில் கண்ணீர்புகை குண்டுகளை வீசியது இன்னும் பலருக்கு அதிகாரிகள் மீது கோபத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையை ஆதரித்த லேம் மீதும் கோபப்பட்டுள்ளனர். வைரலாக பரவிய ஒரு வீடியோவில் நடுத்தர வயதுடைய ஒரு பெண் காவலர்களைப் பார்த்து, நீங்களும் ஒருநாள் அப்பாவாக போகிறவர்கள் என்று அலறினார். இந்த மோதலையடுத்து, கிறிஸ்தவ தேவாலய குழுக்கள் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து தெருவில் இறங்கி, பல மணி நேரங்களுக்க காவல்துறையினருக்கு எதிராக அல்லேலூயா என்று பாடினார்கள். படத்தின் காப்புரிமை Reuters Image caption பெண்கள் பேரணி பெண்கள் பங்கேற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டனர். எங்கள் குழந்தைகளை சுடாதீர்கள் என்பன உள்ளிட்ட பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர். மக்கள் கொந்தளிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும், முன்னாள் அரசு அதிகாரிகளும் வாய் திறந்தனர். தலைவர் லேம், இந்த சட்டத்தை இந்த கொந்தளிப்பான நேரத்தில் நிறைவேற்ற அவசரப்படக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். சீனாவிற்கு ஆதரவான சில சட்டமன்ற உறுப்பினர்களும், இந்த மசோதாவை தாக்கல் செய்வதை தாமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த சட்ட மசோதா குறித்த மக்கள் உணர்வை தாங்கள் குறைத்து மதிப்பிட்டதாக அவர்கள் கூறினர். ஹாங்காங் சட்டமன்றத்தில் உறுப்பினர்களில் பாதிபேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். சீன ஆதரவு குழுக்கள் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இனி ஹாங்காங் என்ன செய்யும் என்று தெளிவாக தெரியவில்லை. லேம், கடந்த சனிக்கிழமை கூறுகையில் இந்த சட்ட மசோதா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என்றார். இருப்பினும் ஏராளமான மக்கள் ஞாயிற்றுக்கிழமையன்று வீதிகளில் குவிந்தனர். இந்த சட்ட மசோதா நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் முதல் முறையாக போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவித்தனர். காவல்துறையினரின் அடக்குமுறையை கண்டித்து தாங்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாகவும், இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதமாக போராடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஹாங்காங் போராட்டத்தின் போக்கையே சம்பவங்கள் மாற்றிவிட்டன என்பது தெளிவாக காட்டுகிறது. நாடுகடத்துவதற்கு எதிரான இயக்கம் கடந்த 30 ஆண்டு கால போராட்ட பாரம்பரியத்தை உடைத்துள்ளது என்கிறார் டாம். காவல் துறையினர் முன் மணிக்கணக்கில் பாடல்களை பாடுவோம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை என்றும் அவர் கூறினார். தாய்மார்கள் போராட்டத்தில் குதித்தது, செய்தியாளர்கள் வன்முறை உடைகளை அணிந்து அமைதியாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து பலனளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார். தன் வாழ்நாளில் முதல்முறையாக கண்ணீர் வெடிகுண்டினை எதிர்கொண்டதாக இன்கிரிட் கூறுகிறார். இந்த அனுபவம் வேதனைப்படுத்தும் விதமாக இருந்தது என்றும் அவர் கூறுகிறார். படத்தின் காப்புரிமை SOPA IMAGES கண்ணீர் புகை குண்டு என்னை தாக்கியது. என்னால் பார்க்க முடியவில்லை. நான் உடை அணிந்திருந்தேன். ஆனால் உடலில் தண்ணீர் பட்டதும் எரிச்சல் ஏற்பட்டது. கண்ணீர் புகை மருந்து தண்ணீர் பட்டதும் வேதியல் மாற்றத்திற்கு உள்ளானது. கண்ணீர் புகைக் குண்டின் குமிழ் திறக்கும் ஓசையை மீண்டும் கேட்க விரும்பவில்லை " என்று அவர் கூறுகிறார். ஆனாலும் தான் தொடர்ந்து போராடப்போவதாக கூறினார். "நான் என் வீடு என்று அழைக்கும் இந்த நகரம் எப்படி மாறிவிடும் என்ற கவலை உணர்வே என் தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றிய கவலையையும் விட அதிகமாக உள்ளது" *பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. https://www.bbc.com/tamil/global-48676063
  • படத்தின் காப்புரிமை Reuters சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் பைப்லைன் (குழாய்பதிப்பு) திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்று கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இது தற்போது கனடாவின் அதிபராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தேர்தல் சமயத்தில் பெரும் சவாலாக இருக்கும். இந்த திட்டத்துக்கு சூழலியளாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். செவ்வாயன்று இந்த திட்டத்துக்கான மறு ஒப்புதலை வழங்கிய ட்ரூடோ இந்த திட்டத்தின் மூலம் வரும் வருவாய் சூழலியல் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் என தெரிவித்தார். எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் உலகளவில் கனடா ஐந்தாம் இடம் வகிக்கிறது. இந்த கச்சா எண்ணெய் பைப்லைன் திட்டமானது, எட்மாண்டன், அல்பெர்டா ஆகிய பகுதிகளிலிருந்து புர்னாபி, பிரிட்டிஷ் கொலம்பியா என பழங்குடி மக்கள் இருக்கும் பகுதி வரை கச்சா எண்ணெயை கொண்டு செல்லும். தற்போது 1,150 கிமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த பைப் லைன் இரு மடங்கு தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படும். அதன் கொள் அளவு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல்களில் இருந்து 890,000 ஆக உயரும். பசிஃபிக் கடற்கரைகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு மாதத்துக்கு ஐந்து டாங்கர்கள் வந்து போன வீதியில் இனி 34 டாங்கர்கள் வந்து போகும். இந்த திட்டத்துக்கு எதிராக போராடி வந்த கனடாவின் மேற்கு பகுதியில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பழங்குடி மக்கள் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த பைப் லைன் விரிவாக்க திட்டம் கனடாவில் இரு பிரிவினர்களை உருவாக்கியது. ஒரு தரப்பு இந்த திட்டத்தால் எண்ணெய் கசிவு போன்ற ஆபத்துக்கள் ஏற்பட்டு என்றும், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினர். மறுதரப்பு இது கனடாவின் ஆற்றல் துறை ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உள்ளதால் கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகைக்கும் என்று கருதிகிறார்கள். அமெரிக்க சந்தையை கனடா நம்பியிருப்பது இந்த திட்டத்தால் குறையும் என ஜஸ்ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்படாது என்று தெரிவித்து தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் அவரின் கட்சிக்கும் அடுத்த தேர்தலில் இந்த திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/global-48686316