Jump to content

பா.ஜ.க.வின் வெற்றிப்பயணம் தொடர்கிறது: 21-வது மாநிலமாக கர்நாடகாவிலும் தாமரை மலர்ந்தது


Recommended Posts

கர்நாடகா தேர்தல்: தனிப்பெரும்பான்மையை நோக்கி பா.ஜ.க! #KarnatakaVerdict #LiveUpdates

 
 
  • பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் பின் தங்குகிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா!
  • ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 109 தொகுதிகளில் பி.ஜே.பி., 68 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மஜத -43 தொகுதிகளில் முன்னிலை. 

40_10485.png

Update Time: 10.25 AM

 
  • சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார்.
  • 'காவிரி பேசின்' மற்றும் 'ஓல்டு மைசூரு' பகுதியில் பி.ஜே.பி.க்கு பின்னடைவு. இந்த பகுதிகளில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றுகிறது ம.ஜ.த.  சென்னபட்ணா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி பின்னடைவு.
  • லிங்காயத் சமூகத்தினர் வெற்றியை தீர்மானிப்பர்கள் எனச்சொல்லப்பட்ட தொகுதிகளில் பி.ஜே.பி. பெருமளவில் முன்னிலை. 70 தொகுதிகளின் வெற்றியை லிங்காயத் சமூகத்தினர் தீர்மானிப்பார்கள் எனச்சொல்லப்பட்டது. இதில் பி.ஜே.பி. அதிகளவில் முன்னிலை பெற்றுள்ளது. `லிங்காயத்' சமூகத்துக்கு தனி மத அங்கீகாரம் எனும் காங்கிரஸின் வியூகம் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பலனளிக்கவில்லை.

கர்நாடக தேர்தல்

Update Time: 10.00 AM

  • ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 95 தொகுதிகளில் பி.ஜே.பி., 79 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை.

கர்நாடக தேர்தல் 

Update Time: 9.50 AM

  • மதச்சார்பற்ற ஜனதா தளம் 41 தொகுதிகளில் முன்னிலை. இதேநிலை நீடித்தால் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவின்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது.
  • ம.ஜ.த தலைவர் தேவகவுடாவை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ம.ஜ.த கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் திட்டம்!
  • ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், தற்போது 93 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது பி.ஜே.பி.
  • காங்கிரஸ் - பி.ஜே.பி இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவிவந்த நிலையில், தற்போது பி.ஜே.பி அதிக இடங்களில் முன்னிலைபெற்றுள்ளது. முன்னிலை நிலவரம்: பி.ஜே.பி -95, காங்கிரஸ் - 79,  ம.ஜ.த -39
  • காங்கிரஸ் - பி.ஜே.பி. இடையே தொடர்கிறது கடும் போட்டி: 96 தொகுதிகளில் பி.ஜே.பி., 80 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை. ம.ஜ.த 33 தொகுதிகளில்  முன்னிலைபெற்றுள்ளது. 

30_09588.png

Update Time: 9.20 AM

  • ஷிகாரிபுரா தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை.
  • பதாமி தொகுதியில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் சித்தராமையா முன்னிலை. சாமுண்டீஸ்வரி தொகுதியில் தொடர்ந்து பின்னடைவு.
  • இன்று கர்நாடகத் தேர்தலில் பதிவான வாக்குகள்  எண்ணப்படும் நிலையில், பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கோயிலில் சிறப்பு பூஜை செய்தார்.  


bs_09374.jpg

  • தற்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில் யார் ஆட்சி என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் உருவெடுக்கிறது.
  • காங்கிரஸ் - பி.ஜே.பி இடையே தொடர்கிறது கடும் போட்டி : 78 தொகுதிகளில் பி.ஜே.பி., 74 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை.
  • பி.ஜே.பி. 77 தொகுதிகளிலும், காங்கிரஸ் 71 தொகுதிகளிலும் முன்னிலை. 25 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னிலை. பி.ஜே.பி - காங்கிரஸ் இடையே சம நிலை நீடித்த நிலையில் தற்போது பி.ஜே.பி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. 
  • சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார்.
  • பி.ஜே.பி. 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 75 தொகுதிகளிலும் முன்னிலை. 26 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னிலை. பி.ஜே.பி. - காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

20_08320.png

Update Time: 8.50 AM

  • பதாமி தொகுதியில் முன்னிலை பெற்றிருக்கும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் தொடர்ந்து பின்தங்கிவருகிறார்.
  • காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி முன்னிலைபெறுகிறது பி.ஜே.பி. : பி.ஜே.பி. 70, காங்கிரஸ் 62, ம.ஜ.த  23 தொகுதிகளில் முன்னிலை. 
  • டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் காங்கிரஸ் வெற்றிக்காகப் பிரார்த்தனை!

congress_del_08029.jpg

  • சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின் தங்கியிருக்கிறார், காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா!
  • முன்னிலை விவரம் தெரிந்த 124 தொகுதிகளில், காங்கிரஸ் 61; பி.ஜே.பி. 47, ம.ஜ.த 16 தொகுதிகளில் முன்னிலை.

kc_08334.jpg

  • முன்னிலை விவரம் தெரிந்த 115 தொகுதிகளில், காங்கிரஸ் 57; பி.ஜே.பி. 43, ம.ஜ.த 15 தொகுதிகளில் முன்னிலை.
  • தபால் வாக்குகளின் அடிப்படையில், சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின் தங்கியிருக்கிறார் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா!
  • முன்னிலை விவரம்: காங்கிரஸ் 26; பி.ஜே.பி. 29, ம.ஜ.த 8
  • கர்நாடகா தேர்தல்
  • முன்னிலை விவரம் தெரிந்த 46 தொகுதிகளில், காங்கிரஸ் 22; பி.ஜே.பி. 17, ம.ஜ.த 7 தொகுதிகளில் முன்னிலை.
  • தபால் வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலை; பா.ஜ.க 4 இடங்களில் முன்னிலை
  • கர்நாடகா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.   

 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 

கர்நாடகா தேர்தல்

கர்நாடக மாநிலத்தில், கடந்த மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த முறை கர்நாடக மாநிலத் தேர்தல், இந்திய அளவில் அதிக கவனம் பெற்றது. காங்கிரஸ் ஆட்சியைத்  தக்க வைத்துக்கொள்ளவும், பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப்  பிடிக்கவும் அதிதீவிரம் காட்டியது. இதனால், கடந்த ஒரு மாத காலமாக கர்நாடகாவில் கடுமையான சூறாவளிப் பிரசாரங்கள்  நடந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலத்தில் தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டார். 

பா.ஜ.க சார்பாக பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா மட்டுமல்லாது, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் எனப் பலர், தேர்தல் களத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தையாவது கைப்பற்றிவிட வேண்டும் எனக் கடுமையாக முயற்சி மேற்கொண்டது. 

 

கடந்த 12-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில், சுமார் 72 சதவிகித வாக்குகள் பதிவானது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், பெரும்பாலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும், ஆட்சி அமைக்க  முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி (ஜே.டி.எஸ்) ஆதரவு தேவை எனவும் கூறப்பட்டது. எனினும், தாங்கள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்போம் என பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தெரிவித்துவந்தன. பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஒரு படி மேலே சென்று, பதவியேற்புத் தேதி முதற்கொண்டு அறிவித்தார். இந்நிலையில் இன்று, (15-05-2019) காலை 8 மணி வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.  சுமார் 11 மணியளவில் முன்னிலை விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது. 

https://www.vikatan.com/news/india/125047-karnataka-state-elections-counting-updates.html

Link to comment
Share on other sites

பா.ஜ.க.வின் வெற்றிப்பயணம் தொடர்கிறது: 21-வது மாநிலமாக கர்நாடகாவிலும் தாமரை மலர்ந்தது

 

 
bjp

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி பாஜக 117 தொகுதிகளிலும், காங்கிரஸ் 63 தொகுதிகளிலும், மஜத 40 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 1 மணி நேரத்திற்கு முன் வரை 90 -100 தொகுதிகளில் மட்டுமே பாரதிய ஜனதா முன்னிலையில் இருந்தது. எனவே கர்நாடகத்தில் ஆட்சியமைக்க போகும் கட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மதச்சார்பற்ற ஜனதாதளம் மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தற்போதோ 110-க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை எட்டிப்பிடித்து வென்று விடும் என தெரிகிறது.

பாஜக 119 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே எடியூரப்பா கூறியது போல் அவர் முதல்வராகிறார். ஏற்கெனவே கோவா, உ.பி, திரிபுரா, குஜராத் என 21 மாநிலங்களில் பாஜகவின் காவி கொடி பறந்து வருகிறது. அந்த வகையில் காவிக் கொடி பறந்து வரும் மாநிலங்களில் 22-வது மாநிலம் கர்நாடகமாக விளங்குகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

http://www.dinamani.com/latest-news/2018/may/15/பாஜகவின்-தொடர்-வெற்றிப்-பயணம்--21-வது-மாநிலமாக-கர்நாடகாவிலும்-தாமரை-மலர்ந்தது-2920296.html

Link to comment
Share on other sites

‘ரைஸ் மில் கிளார்க்’ முதல் முதல்வர் பதவி வரை: எடியூரப்பா ஒரு பார்வை :தென் மாநிலத்தில் மீண்டும் பாஜக

 

 
-gettyimages-492430563111639730x419-m

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா   -  படம்: பிடிஐ

ரைஸ்மில் கிளார்க், ஆர்எஸ்எஸ் தொண்டர், பாஜக நிர்வாகி, எம்எல்ஏ, முதல்வர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர், தனிக்கட்சி தலைவர் எனப் பரிமாணங்களை எடுத்த எடியூரப்பா மீண்டும் கர்நாடகத்தில் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

     
 

தென் மாநிலத்தில் முதல்முறையாக தடம்பதித்தபின், பாஜக, சார்பில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வலுவான பின்புலம் கொண்ட முதல், முதல் அமைச்சர் சித்தராமையா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1943-ம் ஆண்டு மாண்டியா மாவட்டத்தில், கே.ஆர். பேட் தாலுகாவில், பூக்காநகேரே என்ற கிராமத்தில் பிறந்தவர் எடியூரப்பா. தும்கூர் மாவட்டம், எடியூரில் உள்ள சித்தலிங்கேஸ்வரா கோயிலின் சாமியின் பெயரான எடியூரப்பா என்ற பெயரை அவருக்கு அவர்களின் பெற்றோர் சூட்டினர்.

பட்டப்படிப்பை முடித்த எடியூரப்பா, முதன் முதலில் மாண்டியாவில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் கணக்கு எழுதும் பணியில் சேர்ந்தார். அதன்பின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொடர்பு கிடைத்து அதில் தன்னை இணைத்துக்கொண்டு சேவை செய்தார். 1972-ம் ஆண்டு தாலுகா அளவிலான தலைவராக எடியூரப்பா உயர்ந்தார்.

அதன்பின் 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா அதில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்ட எடியூரப்பா அனைத்து முறைகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

narendra%20Modi1jpg
 

இதற்கிடையே 1988-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவராக எடியூரப்பா நியமிக்கப்பட்டார். 1994-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்.

கடந்த 1999-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பா தோல்வியைச் சந்தித்த போதிலும், அங்குள்ள மேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார். 2004-ம் ஆண்டு மீண்டும் மேலவை உறுப்பினராகத் தேர்வாகி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார் எடியூரப்பா.

கடந்த1999-ம் ஆண்டு காங்கிரஸின் தரம்சிங் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமியுடன் இணைந்து கவிழ்த்த எடியூரப்பா, கூட்டணி ஆட்சி அமைத்தார்.

20 மாதங்கள் குமாரசாமி ஆட்சியும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா ஆட்சி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

BSYeddyurappaEPSJPG
 

2006 பிப்ரவரி 3 முதல் 2007 அக்டோபர் 8-ம் தேதி வரை முதல்வராக இருந்த குமாரசாமி 20 மாதங்கள் முடிந்தவுடன் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்ததால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதனால், பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டது.

அதன்பின் இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஆட்சி அமைத்தது. 2007 நவம்பர் 12ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமராசாமியால் கவிழ்க்கப்பட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பங்காரப்பாவை விட 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2008ம் ஆண்டு மே 30 முதல் 2011 ஜூலை 31-ம் தேதிவரை முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தார். அதன்பின், அவர் மீது சுரங்க ஊழல் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால், அவர் பதவியில் இருந்து விலகி, கைது சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏறக்குறைய 20 நாட்கள் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் எடியூரப்பா. அதன்பின் அந்த வழக்கில் சட்டப்போராட்டம் நடத்தி தன்னை குற்றமற்றவராக எடியூரப்பா நிரூபித்தார்.

bjpjpg
 

இதற்கிடையே பாஜக தலைமையுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த 2012-ம் ஆண்டு தனது எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்து, கர்நாடகா ஜனதா பக்சா எனும் கட்சியைத் தொடங்கினார் எடியூரப்பா. அதன்பின் 2013-ம் ஆண்டில் மீண்டும் பாஜகவுக்கு வருவதாகத் தெரிவித்த எடியூரப்பா, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

எடியூரப்பாவுக்கு திருமணமாகி மித்ரா தேவி என்ற மனைவி இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு மர்மமாக அவர் இறந்தார். எடியூரப்பாவுக்கு ராகவேந்திரா, விஜேயந்திரா என்ற மகன்களும், அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி ஆகிய மகள்களும் உள்ளனர்.

http://tamil.thehindu.com/india/article23890909.ece?homepage=true

Link to comment
Share on other sites

கர்நாடகாவில் 30 ஆண்டுகளாக ஒரே கட்சி தொடர்ச்சியாக இருமுறை ஆட்சியமைத்ததில்லை; காங்.தோல்விக்குக் காரணம் என்ன?

 

 
modi-congress

மோடி-ராகுல் காந்தி.   -  கோப்புப் படம். | பிடிஐ.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக ஆட்சியமைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது, பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எந்த இந்திய தேர்தலிலும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ், பாஜக போட்டிப் போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டன. 224 தொகுதிகளுக்கான தேர்தலில் 2 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால், 222 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது, இதில் பாஜக 112 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

 

தேர்தல் முடிவுகள் குறித்து சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்:

* ஆளும் கட்சி மீண்டும் ஜெயித்ததாக கர்நாடகாவில் கடந்த 30 ஆண்டுகளாக வரலாறு இல்லை. 30 ஆண்டுகளாக எந்தக் கட்சியும் அடுத்தடுத்த தேர்தல்களில் வென்று ஆட்சியமைத்ததில்லை.

* தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை என்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றெல்லாம் செய்திகள் எழுந்தன, பாஜக வெற்றி மூலம் மக்கள் இத்தகைய கருத்துக் கணிப்புகளை முறியடித்துள்ளனர்.

* பிரதமர் மோடி கர்நாடகாவில் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடுமையாகப் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரமும் மக்களின் அதிருப்தி அலையும் ஒன்றாக பாஜக சார்பாக வாக்குகள் விழுந்துள்ளன, முழுக்கவும் மோடி அலை என்று கூறுவதற்கில்லை.

* பாஜக முதல்வர் என்று கருதப்படும் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு வயது 75, மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டில் 2013-ம் ஆண்டு பதவியைத் துறக்க வேண்டியிருந்தது. கோபத்தில் பாஜகவை விட்டு வெளியேறினார், ஆனால் கோபம் ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை அடுத்த ஆண்டே கட்சியில் மீண்டும் இணைந்தார்.

* விவசாயிகளின் துயரம், வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றினால் மக்களுக்கு பாஜக அரசு மீதிருந்த அதிருப்தியை காங்கிரஸால் வாக்காக மாற்ற முடியவில்லை. 2014 முதல் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டும் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்விகளையே சந்தித்து வருகிறது. குறிப்பாக குஜராத் தேர்தலின் போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராவார் என்று உற்சாகச் செய்திகள் கட்சிக்காரர்களை ஊக்குவிக்க குஜராத் தேர்தலில் உத்வேகத்துடன் காங்கிரஸ் பணியாற்றியது, ஆனால் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றவுடன் வெளியான குஜராத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பெருமளவு ஊக்கமளித்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை, இப்போது முழுநேரத் தலைவரான பிறகு மீண்டும் ஒரு தோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளது.

* லிங்காயத்துகள் மீதான பாஜகவின் பிடியை தளர்த்த முதல்வர் சித்தராமையா அப்பிரிவினரை தனி மதமாக அங்கீகரிப்பதாக அறிவித்தது, ஆனால் பாஜக இதனை பிரித்தாளும் சூழ்ச்சி என்று விமர்சித்தது, கடைசியில் லிங்காயத்துக்கள் பாஜகவுக்கு விசுவாசமாக மாறிவிட்டனர், லிங்காயத்துக்கள் அதிகாரமிக்கவர்கள் மற்றும் செல்வந்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* அ-ஹிந்தா என்ற முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், தலித்துகள் ஆகிய சிறுபான்மையினரை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு சித்தராமையா பெயர் பெற்றவர். ஆனால் 224 தொகுதிகளில் எஸ்.சி/எஸ்.டி.க்கள் 62 தொகுதிகளை தீர்மானிப்பவர்கள் இவர்கள் காங்கிரஸுடன் உறவை முறித்துக் கொண்டனர். இவர்கள் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் சென்றது, மாயாவதி என்ற தலித் தலைவரால்தான் என்று கூறப்படுகிறது, ஆகவே காங்கிரஸ் இதிலும் தோல்வியடைந்துள்ளது.

* நகர்ப்புறம் நீங்கலாக கிராமப்புற பிரச்சினைகள் சிக்கல்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்தன, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் தெற்கு கர்நாடகத்தில் உள்ள விவசாயிகள் காங்கிரஸ் மீதான தங்கள் ஆதரவை கடுமையாக முறித்துக் கொண்டதும் காங்கிரஸ் தோல்விக்குக் காரணமாக அமைந்தன.

http://tamil.thehindu.com/india/article23890773.ece?homepage=true

Link to comment
Share on other sites

கர்நாடகத் தேர்தல்: தப்பிப் பிழைத்த சித்தராமையா: பிறந்த மண்ணில் வீழ்த்தப்பட்டார்

 

 
Siddaramaiah-875

கர்நாடக முதல்வர் சித்தராமையா : கோப்புப்படம்   -  படம்: ஏஎன்ஐ

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் சித்தராமையா பதாமி தொகுதியில் 1,996 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம், மற்றொரு தொகுதியான சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியடைந்தார்.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 12-ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பாஜக 88 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்றஜனதா தளம் 34 தொகுதிகளிலும் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

இதில் பதாமி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலுவைக் காட்டிலும் 1,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேசமயம், சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஜி.டி. தேவே கவுடாவை எதிர்த்து சித்தராமையா போட்டியிட்டார். இதில் தேவே கவுடாவிடம் 36,042 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா தனது ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால், பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க முடியும் என்று தேர்தல் வாக்குப்பதிவு வரை நம்பிக்கையுடன் தெரிவித்து வந்தார்.

ஆனால், என்ன நினைத்தாரோ, தான் பிறந்த மாவட்டமான மைசூரில் சாமூண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டால் ஒக்கலிகா சமூகத்தினரிடன் வாக்குகள் தனக்கு கிடைக்காது என்பதை அறிந்தது, மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள பதாமி தொகுதியில் 2-வதாக போட்டியிட்டார்.

சித்தராமையா கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றிபெற்றுள்ளார். இந்த தொகுதியில் உள்ள மைசூரு நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் தான் சித்தராமையா பிறந்த சித்தராமணஹன்டி அமைந்துள்ளது. ஆனால், அங்கு தற்போது அவர் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

அதேசமயம், பதாமி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலுவை வீழ்த்தியுள்ளார் முதல்வர் சித்தராமையா.

மும்பை-கர்நாடக பகுதியில் உள்ள பதாமி தொகுதி பாஹல்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் தனக்கு போதுமான ஆதரவு இருக்காது என்பதை அறிந்த சித்தராமையா, பதாமி தொகுதியில் போட்டியிட்டார். ஏனென்றால் பதாமி தொகுதியில் சித்தராமையாவின் குருபா சமூகத்தினர் அதிகம் இருப்பதால் அங்கு போட்டியிட்டார். அங்கு மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஒருவேளை பதாமி தொகுதியில் சித்தராமையா போட்டியிடாமல் இருந்திருந்தால், ஆளும் முதல்வர் தோற்றார் என்ற மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டிருக்கும்.

http://tamil.thehindu.com/india/article23893479.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஆளுநரைச் சந்திக்கும் எடியூரப்பா -கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு!#KarnatakaVerdict #LiveUpdates

 
 
  • கர்நாடகத் தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ஆளுநரை மாலை 5.30 மணிக்குச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவேன் என பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். குமாரசாமியும் ஆளுநரைச் சந்திக்க நேரம் கோரியுள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
  • பெங்களூருவில் உள்ள தனது தந்தை தேவகவுடா இல்லத்தில், குமாரசாமி ஆலோசனை மேற்கொண்டர். பின்னர் காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்பதாகக் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆளுநரிடம், இன்று மாலையே தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.  

 

lettr_16576.jpg

 
  • கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்ததால், முதல்வர் சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரைச் சந்தித்து அளித்தார். 
  • பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ”கர்நாடக மக்கள் எங்களுக்குத் தான் முழு ஆதரவு அளித்துள்ளனர். சித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வி அடைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயல்பாடு ஏற்க முடியாதது. பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அனைத்துத் தொகுதிகளுக்கும் முடிவு வந்த பிறகு தான் ஆளுநர் முடிவெடுப்பார்” என்றார்.
  • கர்நாடக மாநிலத்தில் ம.ஜ.த தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ம.ஜ.த-க்கு முதல்வர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு 2 துணை முதல்வர் பதவியும் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
  • கர்நாடக மாநிலத்தில் தற்போது திடீர் திருப்பமாக ம.ஜ.த தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமைகோரி இன்று மாலை ஆளுநரைக் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திக்க உள்ளதாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் தெரிவித்துள்ளார். 
  • கர்நாடகத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய முதல்வர் சித்தராமையா, ``கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதிக்கின்றோம். ம.ஜ.த தலைமையில் ஆட்சியமைக்க நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என்றார். இதே கருத்தை கர்நாடக மாநிலக் காங்கிரஸ் தலைவரும் தெரிவித்துள்ளார். 
  • jds_15279.jpg
  • கர்நாடகா தேர்தலில் தற்போது வரை பா.ஜ.க 106 இடங்களின் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 74 இடங்களிலும் ம.ஜ.த
    38 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூட்டணி அமைத்து, ம.ஜ.த கட்சியின் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுத்தர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  
  • கர்நாடகா தேர்தலில் தற்போது வரை பாஜக 70 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 36 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 41 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மஜத  15 தொகுதிகளில் வெற்றி பெற்று 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 
  • கர்நாடகா தேர்தல் வெற்றி நிலவரம்!
    கர்நாடகா தேர்தலில் தற்போது வரை பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 65 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மஜத  5 தொகுதிகளில் வெற்றி பெற்று 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 
  • கர்நாடகா தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட  பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வெற்றி பெற்றார். 

BS_Yeddyurappa_hand_06396_12032.jpg

  • கர்நாடக தேர்தலில் வெற்றி அடைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”காங்கிரஸ் கட்சி மஜத-வுடன் கூட்டணி வைத்திருந்தால் கர்நாடக தேர்தல் முடிவுகளே வேறுமாதிரி அமைந்திருக்கும்” என டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

mamtha_12506.jpg

  • கர்நாடகா தேர்தலில் பி.ஜே.பி அதிக இடங்களில் முன்னிலை வகித்தாலும், வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் தான் முன்னிலை வகிக்கிறது.  37.9% வாக்குகளைப் பெற்றுள்ளது காங்கிரஸ். பி.ஜே.பி. 37.2% வாக்குகளே பெற்றுள்ளது.
  • கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘காங்கிரஸ் கட்சியின் அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். பிரதமர் மோடியின் பரப்புரையே பாஜகவுக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. வளர்ச்சி தான் முக்கியம் என்ற பிரதமரின் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்’ என்றார். 
  • கர்நாடகா மாநிலத்தில் பாஜக பெற்ற வெற்றியைப் பிரதமர் மோடிக்குச் சமர்ப்பணம் செய்வதாகத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
  • கர்நாடக  தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி. பதாமி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

bjp_delli_11487.jpg

  • பி.ஜே.பி கர்நாடக தேர்தலில் அபார முன்னிலையில் உள்ள நிலையில் டெல்லி பி.ஜே.பி அலுவலகத்தின் முன்பு குவிந்த தொண்டர்கள் வண்ண பொடிகள் தூவி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

40_11286.png

Update Time: 11.25 AM

  • கடந்த 2013 சட்டமன்ற தேர்தலில், 40 தொகுதிகளில் மட்டுமே வென்ற பி.ஜே.பி. இந்த முறை 120 தொகுதிகள் வரை கைப்பற்றும் வாய்ப்புள்ளது.
  • bjp_kar_10551.jpg
  • தனிப்பெரும்பான்மைக்கான 112 தொகுதிகளை கடந்தது பி.ஜே.பி. யார் ஆதரவுமின்றி ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெறுகிறது. 
  • பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் பின் தங்குகிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா!
  • ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 109 தொகுதிகளில் பி.ஜே.பி., 68 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மஜத -43 தொகுதிகளில் முன்னிலை. 

40_10485.png

https://www.vikatan.com/news/india/125047-karnataka-state-elections-counting-updates.html

Link to comment
Share on other sites

தமிழ் எதிர்ப்பாளர் ‘வாட்டாள் நாகராஜ்’ டெபாசிட் இழந்து படுதோல்வி

 

12BGVATALjpg
nagaraj

வட்டாள் நாகராஜ் : கோப்புப்படம்

கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி பிரச்சினையையையும், கன்னட மக்கள், மொழி ஆகியவற்றை கையில் எடுத்து அரசியல் செய்து வந்த வாட்டாள் நாகராஜ் சாம்ராஜ்நகர் தொகுதியில் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார்.

கர்நாடகத்துக்காகவும், கன்னட மொழிக்காவும், கன்னடர்களாகவும் குரல் கொடுப்பதாக சொல்லிக்கொள்ளும் வட்டாள் நாகராஜ், கர்நாடகா சாலுவாலி வாட்டாள் பக்ஷா எனும் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

 

சாம்ராஜ்நகரின் முன்னாள் எம்எம்எல்ஏவான வாட்டாள் நாகராஜ் தமிழர்களுக்கு எதிராகவும், காவிரி நதிநீர் பிரச்சினையிலும் பல்வேறு போராட்டங்களை கர்நாடகத்தில் நடத்தியுள்ளார்.

கர்நாடகத்தில் காவிரிப்பிரச்சினை தலைதூக்கும் போது, தமிழ் திரைப்படங்களை திரையிடவிடாமல் செய்து, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதிலும், தமிழர்களின் வாகனங்கள், சரக்கு வாகனங்களை தாக்குதவதிலும் வாட்டாள் நாகராஜ் கட்சியின் ஆதரவாளர்கள் முக்கியபங்கு வகிப்பார்கள்.

கடந்த 1962-ம் ஆண்டு பெங்களூரில் அலங்கார் தியேட்டர் எரிப்பு சம்பவத்தில் வாட்டாள் நாகராஜ் தீவிரமாக இருந்து அவரும், அவரின் ஆதரவாளர்களும் சிறை சென்றனர். அதன்பின் வாட்டாள் நாகராஜ் கர்நாடக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதன்பின் கன்னட மொழிக்காகவும், மக்களுக்காகவும் போராட கடந்த 1996-ம் ஆண்டு கன்னட சாலிவாலிகரு எனும் அமைப்பை வாட்டாள் நாகராஜ் தொடங்கினார்.

அதன்பின் 1980ம் ஆண்டு கர்நாடகாவில், சமஸ்கிருதமொழி கல்விதிட்டத்தில் சேர்க்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து நடிகர் ராஜ்குமார் நடத்தியபோராட்டத்தில் வாட்டாள் நாகராஜும் கலந்து கொண்டு பெரிய களேபரத்தை ஏற்படுத்தினார். அதில் பரவலாக வாட்டாள் நாகராஜ் அறியப்பட்டார்.

 

கர்நாடாக, தமிழகத்துக்கு இடையிலான காவிரி நதிநீர் பிரச்சினை, கர்நாடகம், கோவா இடையிலான மகதாயி நதிநீர் பிரச்சினை, மஹாராஷ்டிரா மாநிலத்துடனான எல்லைப்பிரச்சினை அனைத்திலும் வாட்டாள் நாகராஜின் அமைப்பினர் போராட்டம் நடத்துவதிலும், கடையடைப்பு நடத்துவதும் முதல் ஆளாக இருப்பார்கள். மேலும் பெங்களூருவில் தமிழ்திரைப்படங்கள் திரையிடக்கூடாது என்று அவ்வப்போது போராட்டம் நடத்தி மக்களின் கவனத்தை திசை திருப்புவார் வாட்டாள் நாகராஜ்.

 

இந்நிலையில், 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாட்டாள் நாகராஜ், கர்நாடகா சாலுவாலி வட்டாள் பக்ச கட்சி போட்டியிட்டது. இவரின் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வேடிக்கையாக இருந்தது.

அதாவது, ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு இலவசமாக தலைமுடி வெட்டிவிடுதல், முகச்சவரம் செய்தல், கழுதைகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம், கழுதையை தேசிய விலங்காக அறிவித்தல், எருமைமாடுகளை வளர்க்கும் திட்டம், காதல் திருமணம் செய்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி, ரிக்்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட், சீருடைகள், வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம், கிராமக் கோயில்களை சீரமைத்தல், திருநங்கையினருக்கு சிறப்பு உதவித்திட்டங்கள், பெங்களூரில் 20 ஆயிரம் கழிவறைகள் கட்டுதல், கன்னடமொழியை நிர்வாக மொழியாக அறிவித்தல் போன்றவ தேர்தல் வாக்குறுதிகளாகும்.

இந்த தேர்தலில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ், 5 ஆயிரத்து 977 வாக்குகள் மட்டும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துள்ளார்.

http://tamil.thehindu.com/india/article23892343.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

கர்நாடகத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா?

 
 

கர்நாடகத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மூன்று தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்கள் சொற்ப வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளனர். 

அதிமுக

 

கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. 

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் காந்தி நகர் தொகுதியில் யுவராஜ், ஹனூர் தொகுதியில் விஷ்ணுகுமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அன்பு ஆகியோர் களமிறக்கப்பட்டனர். அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்படாமல் மின்கம்பம் ஓதுக்கீடு செய்யப்பட்டது. 

காந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தினேஷ் குண்டுராவ் 47,354 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் சப்தகிரி கவுடா 37,282 வாக்குகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 545 வாக்குகள் பெற்றுள்ளார். 

ஹனூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திரா 60,444 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், பா.ஜ.க வேட்பாளர் பிரித்தன் நாகப்பா 56,931 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட விஷ்ணுகுமார் 503 வாக்குகள் பெற்றார். 

 

கோலார் தங்கவயல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபகலா 71,151வாக்குகளும் பா.ஜ.க வேட்பாளர் அஸ்வனி சம்பங்கி 30,324 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். மேலும், இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் அன்பு 1,024 வாக்குகள் பெற்றார். கர்நாடகத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் மூன்று பேரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/125108-how-much-votes-gets-admk-candidates-in-karnataka-election.html

Link to comment
Share on other sites

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு: காங்கிரஸ்

 

 
congress


கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா, கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று கூறினார்.

மேலும், கர்நாடகாவில் காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடா ஒப்புக் கொண்டிருப்பதாகவும், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என்றும் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சித்தராமையா, கர்நாடக மாநில மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். மேலும், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கிறோம் என்றும் கூறினார்.

முன்னதாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்க காங்கிரஸ் புதிய வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும்,  ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது காங்கிரஸ். இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமியை கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

http://www.dinamani.com/india/2018/may/15/மதசார்பற்ற-ஜனதா-தளம்-கட்சி-ஆட்சியமைக்க-நிபந்தனையற்ற-ஆதரவு-காங்கிரஸ்-2920313.html

Link to comment
Share on other sites

கர்நாடக அரசியல் ‘ஆடுபுலி ஆட்டத்தில்’ அரியணையில் அமருகிறாரா குமாரசாமி..?

 

 
kumarasamy

கிரிக்கெட், பங்குச்சந்தை புள்ளிகளைப் போல் கர்நாடக தேர்தல் முடிவுகளில் ஏற்ற-இறக்கங்களை சந்தித்துவரும் கர்நாடகா தேர்தலின் ‘ஆடுபுலி ஆட்டத்தில்’ மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்த பாஜக, தற்போது ஆட்சி அதிகார அரியணையில் காங்கிரஸ் கூட்டணியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி அமரப்போவதாக வெளியான தகவல் பாஜகவினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

பாஜகவின் பிரசார பீரங்கியான நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட பல பாஜக பிரமுகர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கர்நாடக தேர்தல் களத்தை கலங்கடித்ததுடன், பிரசார களத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சரமாரியான தாக்குதலை நடத்தினாலும், ராகுல் காந்தி, தனது சரியான பிரசார திட்டமிடலுடன், தனது செயல்பாடுகளையும் மத்தியில் ஆளும் பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் நேர்த்தியாக கொண்டு சென்றதுடன், கட்சியின் மூத்த தலைவர்களின் தேவையற்ற அறிக்கை போர்களை தவிர்த்து சாந்தமாய், சளைக்காமல் ‘ஒன் மேன் ஆர்மி’யாக மாநிலத்தை வலம் வந்து காங்கிரஸ் வெற்றிக்கான போராடினார். அவருக்கு பலமாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் அவரது தாயும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சரமாரியான தாக்குதலை நடத்தினாலும், ராகுல் காந்தி பிரசாரத்தில் மக்களின் சேவையை, காத்திருப்பை மட்டுமே முன்னிறுத்தியே வாக்கு சேகரித்தார். 

இவர்களுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில், மாநிலத்தின் மூன்றாவது சக்தியாக கருதப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் தனது பிரசாரத்தை நடத்தியது.

கர்நாடகா தேர்தல் களத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற எதிர்க்கட்சியான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசார போராட்ட களத்தில், காங்கிரஸ் கட்சியும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் என்றும் மாநிலத்தின் மூன்றாவது சக்தியாக கருதப்படும் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வாக்கும், வாய்ப்பும் அளிப்பாரகள் என்று மாநில கட்சிகளின் தலைவர்கள் மத்தியிலும், அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளின்படி, கர்நாடகா தேர்தலின் ‘ஆடுபுலி ஆட்டத்தில்’ இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் கிரிக்கெட், பங்குச்சந்தை புள்ளிகளைப் போல் ஏற்ற-இறக்கங்களை சந்தித்துவருகின்றன. காங்கிரஸ்-பாஜக வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முந்துவதும், பின்தங்குவதுமாக இருந்து வருகின்றனர். 

முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் மிக மோசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சிகாரிபுரா தொகுதியில் பாஜக முதல்வர் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா 35 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போதைய ஆட்ட நேரப்படி, பாஜக 104 இடங்களிலும். காங்கிரஸ் 76 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. 

அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அரியணையில் அமருவதற்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையிலில், பாஜக பெரும்பான்மைக்கு இன்னமும் 6 இடங்கள் தேவை. அதேநேரத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கை கோர்த்தால் 114 இடங்களில் முன்னிலை என்கிற நிலை உள்ளது. 

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நோக்கி, காங்கிரஸ் தற்போதைய முன்னிலை நிலவரப்படி, பாஜகவை விட, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களின் ஒட்டுமொத்த முன்னிலை இடங்கள் 118 என்ற மனக்கணக்கில், தலித் இனத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வர் அமர்த்த காங்கிரஸ் முன்வந்தால் தேவேகவுடாவின் மனதை வென்று மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்களுடன் தனது ஆட்சியை கூட்டணி ஆட்சியாக தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

ஒருவேளை, தனக்கோ தனது மகன் குமாரசாமிக்கோ முதல்வர் பதவி தந்தால் கூட்டணி ஆட்சி அமைக்க ஒத்துழைப்பதாக தேவேகவுடா நிபந்தனை விதித்தால் அதற்கும் காங்கிரஸ் சம்மதிக்கலாம் என்று நோக்கில் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்பதுபோல் இந்த ‘ஆடுபுலி ஆட்டத்தில்’ “எந்த கை மறைத்தாலும் தாமரை மலர்வதை தடுக்க முடியாது” என பாஜக வேறொரு கணக்கை தொடங்கி உள்ளது. 

இன்று மாலைக்குள் முடிவுகள் தெரியவரும் என்றாலும் கோவா, மேகாலயா மாநிலங்களில் பாஜக குறைவான இடங்களில் வென்றபோதும் பிற கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைத்தது. அதுவும் மேகாலயாவில் காங்கிரஸ் 21, பாஜக 2 இடங்களில் வென்ற நிலையிலும் ஆட்சியை அமைத்தது. தற்போது அதே ஆடுபுலி ஆட்ட களத்தை எதிர்கொள்ளும் நிலையில் கர்நாடகா உள்ளது. அதாவது காங்கிரஸ் அல்லது மதச்சார்பற்ற எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போட்டு பாஜக ஆட்சி அமைக்குமா? அல்லது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பாஜகவை ஆட்சி அரியணை என்ற கனவுக்கு செக் வைக்கும் வகையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளுமா? என்ற "ஆடுபுலி ஆட்டம்" களை கட்டத் துவங்கி உள்ளது. 

தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இரு தொகுதிகள் மற்றும் ஒருவேளை குமாரசாமி போட்டியிடும் இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்று, பின்னர் ராஜிநாமா செய்யவுள்ள ஒரு தொகுதி என இந்த மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல்கள் ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு பலம் சேர்க்கும் என்பது உறுதியாகி உள்ள நிலையில், அரியணையில் அமரும் வாய்ப்பு குமாரசாமிக்கே அதிகம் என பரவலாக பேசப்படுகிறது. 

இவர்களின் ஆட்சி அதிகார ஆடுபுலி ஆட்டத்தில் யார் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்குமா? என்றாலும் எடியூரப்பா, குமாரசாமி யாராக இருந்தாலும் வராது என்றே பதில் வருகிறது. 
 
தற்போதைய நிலவரப்படி பாஜக மற்றும் காங்கிரஸ் நிலைமை சற்றே சிக்கலில் உள்ள நிலையில், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள குமாரசாமியை ராஜாவாக காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதால், வேறு வழியில்லாமல் குமாரசாமியும் இசைவு தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/india/2018/may/15/கர்நாடகா-ஆடுபுலி-ஆட்டத்தில்-அரியணையில்-அமருகிறாரா-குமாரசாமி-2920327.html

அறுதிப் பெரும்பாண்மையை எட்டியதா காங்.,-மஜத கூட்டணி? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது? 

 

 
cong_+_jds

 

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்த வரை, அறுதிப் பெரும்பாண்மை எண்ணிக்கையை காங்.,-மஜத கூட்டணி எட்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் இதுவரை அறிவித்துள்ள முடிவுகள் தெரிவிக்கின்றன.  

கடந்த 12- ஆம் தேதி  நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகி வருகின்றன. இதில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும்,  ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகிய மூவரும் கூட்டாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச்  சந்தித்தனர். முன்னதாக குமாராசாமி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். செய்தியாளர்கள் சந்திப்பில் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி பேசும் பொழுது ‘ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்துடன், காங்கிரசின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

அதேசமயம் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவும் ஆளுரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.அவருக்கு ஆளுநர் ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.     

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 222 இடங்களில் ஆட்சியமைக்க  113 இடங்கள் தேவை. அதில் இரவு எட்டு மணி வரை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளில், காங்.,-மஜத கூட்டணி 115 இடங்களைப் பிடித்துள்ளது.  

இந்த முடிவுகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத கூட்டணி38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார்  இன்னும் 7 இடங்களில் முடிவு அறிவிக்கப்படவில்லை. அவற்றில் 5 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் முன்னனணியில் உள்ளனர். இதுவே தற்போதைய நிலவரமாகும். 

http://www.dinamani.com/india/2018/may/15/அறுதிப்-பெரும்பாண்மையை-எட்டியதா-காங்-மஜத-கூட்டணி-தேர்தல்-ஆணையம்-என்ன-சொல்கிறது-2920343.html

Link to comment
Share on other sites

கர்நாடகாவிலும் 'கூவத்தூர் பார்முலா'?: கேரள சுற்றுலாத்துறையின் ட்வீட்டால் பரபரப்பு! 

 

 
karnataka

 

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் 'கூவத்தூர் பார்முலா' கர்நாடகாவிலும் அரங்கேற உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது      

கடந்த 12- ஆம் தேதி  நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகின. இதில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும்,  ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகிய மூவரும் கூட்டாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக குமாராசாமி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். செய்தியாளர்கள் சந்திப்பில் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி பேசும் பொழுது ‘ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்துடன், காங்கிரசின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

அதேசமயம் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவும் ஆளுரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.அவருக்கு ஆளுநர் ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.     

இந்நிலையில் தமிழ்நாட்டின் 'கூவத்தூர் பார்முலா' கர்நாடகாவிலும் அரங்கேற உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர், சசிகலா அணியினைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு 'பத்திரமாக' பாதுகாக்கப்பட்டனர்.

அதேபோல் தற்பொழுது கர்நாடகாவில் ஆட்சியமைப்பதை தீர்மானிக்கப்போகும் சக்தியாக மதச் சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் விளங்க உள்ளனர். எனவே அவர்களை ஆட்சி அமைக்கும் பணிகள் நிறைவடையும் வரை, பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது கர்நாடக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வந்து ரிஸார்ட்டுகளில் தங்கி இருக்க அழைக்கிறோம் என்று கேரளா மாநில சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடபட்டிருக்கும் தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக கேரளா மாநில சுற்றுலாத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல் பின்வருமாறு:

கர்நாடக தேர்தல் தொடர்பான தற்போதைய அனைத்து கடின சூழ்நிலைகள் மற்றும் பல்டிகளுக்குப் பிறகு,  'கடவுளின் சொந்த தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில் உள்ள பாதுகாப்பான மற்றும் அழகான ரிஸார்ட்டுகளுக்கு, எம்.எல்.ஏக்களை அழைக்கிறோம்

இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

http://www.dinamani.com/india/2018/may/15/கர்நாடகாவிலும்-கூவத்தூர்-பார்முலா-கேரள-சுற்றுலாத்துறையின்-ட்வீட்டால்-பரபரப்பு-2920342.html

 

 

கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி?: ஆளுநர் முடிவு என்ன?

 

 
karnataka-cm

பாஜக தலைவர் எடியூரப்பா, ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி : கோப்புப்படம்

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறதா அல்லது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவா யார் அட்சி அமைக்கப் போகிறதா என்ற முடிவு தெரியாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் உட்பட 2622 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசு கட்சி, அதிமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக 30 தமிழர்களும் களமிறங்கினர். காங்கிரஸ் கட்சி 221, பாஜக 222, மஜத 199 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டன.

 

கடந்த 12-ம் தேதி 222 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. கர்நாடகா முழுவதும் 58, 302 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 75 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து சீல்வைக்கப்பட்டு, மாநிலத்தின் 38 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த மையங்களுக்கு 24 மணி நேரமும், ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்கு எண்ணி்க்கை முடிவில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், கர்நாடக பிரக்யவந்த ஜனதா கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 38 சதவீத வாக்குகளையும், பாஜக 36.2 சதவீத வாக்குகளையும், ஜேடிஎஸ் 18.4 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

grappng
 

பதாமி, சாமுண்டீஸ்வர் தொகுதிகளில் போட்டியிட்ட சித்தாரமையா பதாமி தொகுதியில் 67,599 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் 86,983 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோனி மாலதேசா 51,586 வாக்குகள் பெற்றார்.

ராம்நகரம் தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் எச்டி குமாரசாமி 92,626 வாக்குகள் பெற்று பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 69,990 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

பெங்களூருவில் உள்ள 5 மையங்கள் உட்பட கர்நாடகா முழுவதும் உள்ள 38 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் கடும் போட்டி இருந்த நிலையில், சிறிதுநேரத்தில் பாஜக முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலையுடன் சென்றது இதனால், பாஜக மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், பிற்பகலுக்கு பின் அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது, இதை ஜனதா தளம் கட்சியும் ஏற்றுக்கொண்டதையடுத்து, இரு கட்சிகளும் ஆளுநர் வாஜுபாயிடம் கடிதத்தை அளித்தனர். இதற்கிடையே பாஜக கட்சியும் தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் ஆட்சி அமைக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளது.

இந்நிலையில், ஆளுநர் வாஜுபாய் வாலா யாரை ஆட்சி அமைக்க அழைக்கப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/india/article23894941.ece?homepage=true

Link to comment
Share on other sites

கர்நாடகாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆளுநரின் பின்னணி என்ன?

கர்நாடக தேர்தல் முடிவுகள் மற்றும் தொகுதி எண்ணிக்கைப்படி, அதிக இடங்களில் வெற்றிபெற்று பா.ஜ.க தனி பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் தனிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும், மத சார்பற்ற ஜனதா தள கட்சி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

வஜுபாயி வாலாபடத்தின் காப்புரிமைRAJ BHAVAN KARNATAKA

எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை முடிவு செய்யப்போவது கர்நாடக மாநில ஆளுநர் தான்.

முழுமையான முடிவுகள் கைக்கு வந்ததும், ஆளுநர் அரசு அமைக்க யாருக்கு அழைப்பு விடுப்பார் என்பதை பொறுத்தே இனி அரசியல் ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நடைபெறும்.

இந்நிலையில் கர்நாடக மாநில ஆளுநர் 80 வயது வஜுபாய் வாலாவை நோக்கி அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.

வஜூபாய் வாலாவின் பின்னணி என்ன?

பிரதமர் நரேந்திர மோதி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, வஜூபாய் நிதியமைச்சராக பதவி வகித்தார். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோதி 13 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தபோது, வஜுபாய் ஒன்பது ஆண்டுகாலம் நிதியமைச்சராக பதவி வகித்தார். பா.ஜ.கவின் குஜராத் மாநில தலைவராக 2005-2006 ஆண்டுகளில் பொறுப்பு வகித்தார்.

மாநில அரசின் பட்ஜெட்டை 18 முறை வழங்கிய ஒரே நிதியமைச்சர் என்ற சாதனையையும் வஜூபாய் வாலா செய்துள்ளார்.

குஜராத்தில் கேஷுபாய் படேலிடம் இருந்து நரேந்திர மோதிக்கு அதிகாரம் கைமாறுவதற்கு பின்னணியில் இருந்த சில தலைவர்களுள் வஜூபாய் வாலாவும் ஒருவர். அதிகாரம் மாறிய பிறகும் அவர் நிதியமைச்சராக தொடர்ந்து பணியாற்றினார்.

2001ஆம் ஆண்டில் நரேந்திர மோதி சட்டமன்றத் தேர்தல்களில் முதல்முறையாக போட்டியிட்டபோது, அவருக்காக ராஜ்கோட் தொகுதியில் இருந்து விலகி, அவருக்கு பாதையமைத்துக் கொடுத்தவர் வஜூபாய் வாலா.

ராஜ்கோட்டில் வணிகக் குடும்பத்தை சேர்ந்த வஜுபாய் வாலா, பள்ளி மாணவராக இருந்தபோதே, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தார். 26 வயதில் ஜன சங்கத்தில் இணைந்த அவர், விரைவிலேயே கேஷுபாயிக்கு நெருக்கமானவரானார். ராஜ்கோட் நகர மேயராகவும் பதவி வகித்தார் வஜுபாய் வாலா.

வஜுபாயி வாலாபடத்தின் காப்புரிமைRAJ BHAVAN KARNATAKA

1985 சட்டசபை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட அவர், அதே தொகுதியில் இருந்து ஏழு முறை வெற்றி பெற்றார்.

வஜூபாய் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டது. ராஜ்கோட்டில் ரியல் எஸ்டேட் வர்த்தகர்களுடான நெருக்கமே, அவரது சொத்துக்கள் அதிகரிப்புக்கு காரணம் என பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அவரது ஆளுமையின் மீது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

வேடிக்கையாகவும், அனைவரையும் கவரக்கூடிய வகையில் பேசும் திறமை கொண்ட அவர் பேச்சாற்றலுக்காக அறியப்படுபவர். ஒரு கூட்டத்தில் அவர் பேசுகிறார் என்றால் அதை ரசிக்கும் மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி. அனைவரிடமும் இயல்பாக பழகக்கூடிய வஜூபாயி, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் விருப்பம் கொண்டவர்.

வஜூபாயின் சில பேச்சுகளும் அவர் வெளியிட்ட சில அறிக்கைகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மைசூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வஜூபாயி வாலா, பெண்கள் 'பேஷன்' என்ற மாயையில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது மிகப்பெரிய சர்ச்சைகளையும், ஏற்படுத்தியது.

https://www.bbc.com/tamil/india-44128247

Link to comment
Share on other sites

கர்நாடக சிம்மாசன சிக்கல்: எந்தக் கூட்டணி ஆட்சியில் நீடிக்க முடியும்?

 

கர்நாடகத்தில் இது எதிர்பாராத திருப்பம். காலை 11 மணிவரை பா.ஜ.க. மந்திர எண்ணான 113ஐத் தாண்டிவிடும் என்ற சூழல்தான் இருந்தது. தற்போது பா.ஜ.கவால் 104 இடங்களையே பிடிக்க முடிந்துள்ளது. காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் (ம.ஜ.த) இணைந்தால் தற்போது ஆட்சி அமைத்துவிடலாம். காங்கிரஸ் ம.ஜ.தவை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்பாகக்கூட எதிர்பாராத திருப்பம்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES / TWITTER Image captionமதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு

இம்மாதிரி சூழலில் ஆளுநரின் பணிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். கர்நாடக மாநில ஆளுநர் என்ன செய்வார் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆனால், தற்போது காங்கிரஸ் செய்யும் காரியம் சரியானதாகத் தெரியவில்லை. அதிக இடங்களைப் பிடித்த கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதுதான் முறையானதாக இருக்கும். அப்படித்தான் பெரும்பாலும் நடந்திருக்கிறது, குறிப்பாக பொம்மை வழக்கில் தீர்ப்பிற்குப் பிறகு. ஆனால், வேறு மாதிரியும் நடந்திருக்கிறது.

இங்கிலாந்தில் ஒருமுறை இதேபோன்ற சூழல் ஏற்பட்டபோது, அதிக இடங்களைப் பிடித்த கட்சியும் அதற்கு அடுத்த இடத்தில் இருந்த கட்சியும் ராணியைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரினர். ஆனால்,  ராணி இரண்டாவதாக வந்த கட்சியைத்தான் அழைத்தார். காரணம், மூன்றாவது இடத்தில் இருந்த கட்சி இரண்டாவது இடத்தில் இருந்த கட்சியை ஆதரித்தது என்பதுதான் காரணம். இவர்கள் இருவரும் சேர்ந்தால் முதலாவது இடத்தில் இருந்த கட்சியைவிட கூடுதல் இடங்களைப் பிடித்திருந்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் கூடுதல் இடங்களைப் பிடித்த கட்சியையே அழைப்பது மரபாக இருந்திருக்கிறது. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது காங்கிரஸ் செய்வது தவறு என்று தோன்றுகிறது. இப்போது அதிக இடங்களைப் பிடித்திருக்கும் பா.ஜ.கவை ஆட்சியமைக்க அழைத்து, அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், ஆளுநர் காங்கிரஸை அழைக்கலாம். ஆனால், கர்நாடகத்தில் ஆளுநர் காங்கிரசை அழைக்கும்போது, அவர்கள் நாங்கள் ம.ஜ.த.வை வெளியிலிருந்து ஆதரிக்கப்போகிறோம், அல்லது அவர்கள் அரசில் இடம்பெறப் போகிறோம். அதனால், அவர்களை அழையுங்கள் என்று காங்கிரஸ் கூறினால் அதை ஆளுநர் ஏற்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

கர்நாடகத் தேர்தல்

தங்களை அழையுங்கள் என்று காங்கிரஸ் சொல்லலாம். ஆனால், மூன்றாவதாக வந்த ம.ஜ.தவை அழையுங்கள் என காங்கிரஸ் சொல்ல முடியுமா, ஆளுநர் என்ன முடிவெடுப்பார் என்பதைப் பார்க்க வேண்டும். 

மஜதவை பாஜக உடைக்க வாய்ப்பு உள்ளதா?

ஒரு வேளை பா.ஜ.கவை ஆட்சியமைக்க அழைத்தால், அந்தக் கட்சி ம.ஜ.தவை உடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரசும் அதைச் செய்யும். ஆனால், கட்சித் தாவல் தடைச்சட்டப்படி, மூன்றில் இரு பங்கினர் கட்சியை உடைக்க வேண்டும். சுமார் 26 பேராவது கட்சியை உடைக்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பங்கினரை உடைக்க முடியாவிட்டால்கூட, தேவையான அளவுக்கு ஆட்களை இழுத்துக்கூட பா.ஜ.க. அரசை அமைக்கலாம். அப்போது தகுதி நீக்க உத்தரவை சபாநாயகர்தான் பிறப்பிக்க வேண்டும். அவர் அந்த விவகாரத்தில் முடிவே எடுக்காமல் இருக்கலாம். அதில் நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது. இது தொடர்பான விவகாரங்களில் உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட முடியுமா என்ற விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆகவே, பா.ஜ.க. பிற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுக்கும் முயற்சியில் நிச்சயம் இறங்கும். 

காங்கிரஸ் கட்சி அலுவலகம் Image captionகாங்கிரஸ் கட்சி அலுவலகம்

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆகவே அக்கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம் என்று சிலர் கூறலாம்.  ஆனால், இந்தியத் தேர்தல் முறையில், யார் அதிக சதவீத வாக்குகளைப் பெற்றார்கள் என்பது பொருட்டு அல்ல. ஆனால், எத்தனை இடங்களைப் பெற்றார்கள் என்பதுதான் முக்கியம். கர்நாடகத்தைப் பொறுத்தவரை அறுதிப் பெரும்பான்மை பெற 113 இடங்களைப் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் முறையை மாற்ற வேண்டும். அதைச் செய்ய எந்த அரசியல் கட்சியும் விரும்பாது. 

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் குழப்பமான முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. காங்கிரசைப் பொறுத்தவரை, அந்த அரசு மீது பெரிய குற்றச்சாட்டு இல்லை. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது இந்த முடிவு ஆச்சரியமானது. சித்தராமய்யா லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்தது காங்கிரஸ் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை.

இந்த முடிவை சிறிய மடங்கள் ஏற்றாலும் பெரிய மடங்கள் ஏற்கவில்லை. தவிர, ஒரு பிரிவை தனி மதமாக அறிவிக்கும் அதிகாரம், மத்திய அரசுக்குத்தான் உண்டு. ஆக, அதை பெயருக்குத்தான் செய்தார். தேர்தல் பிரசாரத்தின் போது, சித்தராமய்யா இதுகுறித்து எங்கேயுமே பேசவில்லை. அதைச் செய்யாமல் இருந்திருந்திருந்தால், வெற்றிபெற்றிருப்பாரா என்ற கேள்வியை இப்போது விவாதிப்பது அர்த்தமற்றது.

தற்போதைய சூழலில் காங்கிரஸ் ஆதரவுடன் ம.ஜ.த. ஆட்சிக்கு வந்தால் அது வெகு நாட்கள் நீடிக்குமெனக் கருதவில்லை. காங்கிரசின் வரலாற்றைப் பார்த்தால், இது புரியும். ஆனால், அதே நேரம் ம.ஜ.தவை உடைத்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அது கூடுதல் நாட்கள் நீடிக்கும். ஏன், முழு ஆட்சிக்காலத்தையும் நிறைவுசெய்யலாம். ஆனால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது சுலபமான பதவிக்காலமாக இருக்காது.

(பிபிசி தமிழின் ஃபேஸ்புக்கிற்கு அளித்த நேர்காணலில் இருந்து)

https://www.bbc.com/tamil/india-44131559

Link to comment
Share on other sites

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் தலைமறைவு? - சித்தராமையா விளக்கம்

 
 

பெங்களூருவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 4 பேர் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சித்தராமையா

 

கர்நாடக தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பாரதிய ஜனதா கட்சி 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் வெற்றி பெற்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களைக் கைப்பற்றியது. முல்பாகல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும் மற்றொரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால். பெங்களூரு ஜெயநகர் தொகுதி தேர்தலும் முறைகேடு நடப்பதாக எழுந்த புகார் காரணமாக ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியமைக்க வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்  இன்று காலை தொடங்கியது.

கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் நிச்சயம் பங்கேற்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், 4 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை. அந்த எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொள்ளவும் முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

அதேவேளையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சித்தராமையா, ``அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் தொடர்பில் உள்ளனர்.  எந்த எம்.எல்.ஏவும் மாயம் ஆகவில்லை'' என்று  கூறியுள்ளார். 

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் ராஜ வெங்கடப்பா நாயகா, வெங்கட ராவ் நாதகவுடா கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

https://www.vikatan.com/news/tamilnadu/125149-all-the-congress-mlas-are-intact-says-siddaramaiah.html

Link to comment
Share on other sites

`எம்.எல்.ஏ-க்களுக்கு பா.ஜ.க 100 கோடி ரூபாய் பேரம் பேசியது..!’ - குமாரசாமி குற்றச்சாட்டு

 
 

ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதற்காக எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு 100 கோடி ரூபாய் அளிப்பதாகப் பா.ஜ.க பேரம் பேசியது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். 

குமாரசாமி

 

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவில் எந்தக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டமன்றம் நிலவுகிறது. மற்ற கட்சிகளைவிட அதிகமாக 104 தொகுதிகளை வென்ற பா.ஜ.க ஆட்சியமைக்க உரிமை கோருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரிவருகிறது. இந்தநிலையில், குமாரசாமி தலைமையில், அக்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் குமாரசாமி சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கோவா, மணிப்பூர் வழியில் போதிய ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது பா.ஜ.க. கோவா, மணிப்பூரில் தனிப் பெரும்பான்மை பெறாமலேயே ஆட்சி அமைத்தது பா.ஜ.க. மத்திய அரசு அவர்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவருகிறது. பா.ஜ.க, எங்கள் கட்சியை உடைக்கப் பார்க்கிறது. எங்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு 100 கோடி ரூபாய் பணம், அமைச்சர் பதவி தருகிறோம் என்று ஆசை காட்டுகிறது.

குதிரைப் பேரத்தில் பா.ஜ.க ஈடுபட்டுவரும் வேளையில் வருமான வரித்துறை என்ன செய்கிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸுடன்தான் கூட்டணி. நாட்டுக்காகப் பிரதமர் பதவியை உதறிவிட்டு வந்தது என் குடும்பம். குதிரை பேரம் நடைபெறும் குடியரசுத் தலைவர், ஆளுநர் தடுக்க வேண்டும். எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏ-க்களை தூக்கினால், அவர்களிடமிருந்து இரண்டு எம்.எல்.ஏ-க்களைத் தூக்குவோம்' என்று தெரிவித்தார். 

https://www.vikatan.com/news/tamilnadu/125169-bjp-tells-to-give-100-crores-to-our-mlas-says-kumaraswamy.html

Link to comment
Share on other sites

மாயமான காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் என்ன ஆனார்கள்? ரூ.100 கோடி பேரம் பேசப்பட்டதா?

 

 
kar_vote


கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மதசார்பற்ற எம்எல்ஏக்கள் இரண்டு பேர், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காததால் பரபரப்பு என்றும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 78 எம்எல்ஏக்களில் 66 பேர் மட்டுமே பங்கேற்றதாகவும், 12 பேர் பங்கேற்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சியமைக்க தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாகக் கூறி, ஆளுநரை இன்று காலை மீண்டும் சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரியுள்ளார்.

இரு தரப்பும் கர்நாடகாவில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டிவரும் நிலையில், மாயமான எம்எல்ஏக்களின் நிலை என்ன?

இது பற்றி கூறப்படும் 10 தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.

number_1.jpg104 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற பாஜகவுக்கு எப்படி பெரும்பான்மை கிடைத்தது என்ற கேள்விக்கு, பாஜக தலைவர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியதாவது, "இது இயற்கையாகவே நடந்தது. காங்கிரஸ் - மஜத இடையேயான தவறான உறவை சில எம்எல்ஏக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

number_2.jpgஎம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசும் என்ற முன்னெச்சரிக்கைக் காரணமாக, காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை தனியார் விடுதிகளில் தங்க வைக்க இரு கட்சித் தலைவர்களுமே முன்னதாக திட்டமிட்டனர். ஏன் என்றால், பாஜக தரப்பில் இருந்து மஜத எம்எல்ஏக்கள் 5 பேரை அழைத்து பேரம் பேசியதாக அக்கட்சியும், இதே விஷயத்தை காங்கிரஸும் கூறியுள்ளன.

number_3.jpgஇன்று காலை, காங்கிரஸ் எம்எல்ஏக்களான ராஜ்ஷேகர் பட்டீல், நரேந்திரா மற்றும் ஆனந்த் சிங் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. இதில் இரண்டு பேர் சுரங்க முறைகேட்டில் சிக்கிய ரெட்டி சகோதரர்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

number_4.jpgஆனால், அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஒன்றாக இருக்கிறார்கள். யாரும் மாயமாகவில்லை. கர்நாடகாவில் ஆட்சியமைப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று சித்தராமையா கூறினார். இன்று காங்கிரஸ் மற்றும் மஜத தரப்பில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டன.

number_5.jpg222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 104 இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில், ஒரு சுயேட்சை வேட்பாளர் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

number_6.jpgயாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சியமைக்க மஜதவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.

number_7.jpgதற்போது இரு தரப்பில் யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்ற முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநர் வஜுபாய் வாலாவின் கையில் உள்ளது. அவர் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

number_8.jpgஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பெரும்பான்மை கொண்ட கட்சியையே ஆளுநர் அழைக்க வேண்டும். அந்த வகையில், 117 தொகுதிகளை வைத்திருக்கும் எங்களையே ஆளுநர் அழைப்பார் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

number_9.jpgஇந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி கிடையாது, காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைத்து ஆட்சியமைப்போம் என்று குமாரசாமி கூறியுள்ளார். அதே போல, மஜத எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி பணம் வழங்குவதாக பாஜக பேரம் பேசியுள்ளதாகவும் குமாரசாமி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

number_10.jpgஇந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில், காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் சிலரின் ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று பாஜக தலைவர் ஈஸ்வரப்பா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamani.com/india/2018/may/16/காணாமல்-போன-காங்கிரஸ்-மஜத-எம்எல்ஏக்கள்-என்ன-ஆனார்கள்-10-முக்கியத்-தகவல்கள்-2920960.html

Link to comment
Share on other sites

கர்நாடகாவில் யார் ஆட்சி... என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? சட்டத்தின் பார்வையும்... அரசியல் பார்வையும்....!

 
 

`காங்கிரஸ் இல்லாத இந்தியா அமைப்போம்' எனச்சொல்லி வரும் பாரதிய ஜனதா கட்சி, தென்னிந்தியாவில் நுழைவதற்கான வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வாயிலாகப் பார்க்கப்பட்டது கர்நாடகா. அதேபோல் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு, தன் கைவசம் இருக்கும் 4 மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவை தக்க வைத்துக்கொள்ள பெரும் முயற்சி செய்தது காங்கிரஸ். இப்படி பெரும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, தற்போது முடிவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகா

 

தனிப்பெரும் கட்சியாக பி.ஜே.பி. ஆனால்...?

இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 104 தொகுதிகளில் வென்றிருக்கிறது பி.ஜே.பி. ஆனாலும் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க பி.ஜே.பி.க்கு இன்னும் 9 எம்.எல்.ஏ-க்கள் தேவை. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வென்றிருக்கிறது. எதிர்பாராத திருப்பமாக தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்திருக்கிறது.  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராக ஆதரவு கொடுத்திருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு, 115 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு குமாரசாமிக்கு இருக்கிறது.

தனிபெரும் கட்சியாக 104 தொகுதிகளை வென்ற பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 78 பேரின் ஆதரவோடு 115 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் குமாரசாமியும் ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தச்  சூழலில் ஆளுநர் யாரை அழைக்கப்போகிறார் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அடிப்படையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ- க்கள் ஆதரவு பெற்றுள்ள குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது தனிப்பெரும் கட்சியாக 104 எம்.எல்.ஏ. ஆதரவு கொண்ட பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

``குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், அந்தக் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் வாய்ப்பளிக்க வேண்டும்," என காங்கிரஸ் தரப்பும், தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் பி.ஜே.பி.யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென பி.ஜே.பி. தரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், எடியூரப்பாவை சட்டமன்ற கட்சித் தலைவராக பி.ஜே.பி. எம்.எல்.ஏ-க்கள் தேர்வு செய்துள்ளனர். அவர் மீண்டும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ள நிலையில், எடியூரப்பாவை ஆளுநர் வாஜுபாய் வாலா ஆட்சியமைக்க அழைப்பார் என்றும், பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவார கால அவகாசம் அளிக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. இது சட்டத்துக்குப் புறம்பானது, குதிரைப் பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சித்தராமையா, குமாரசாமி

சர்க்காரியா கமிஷன் என்ன சொல்கிறது?

முதலமைச்சரைத் தேர்வு செய்யும் போது ஆளுநர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து சர்க்காரியா கமிஷன் பரிந்துரை மற்றும் பொம்மை வழக்கு தீர்ப்பு ஆகியவற்றைச் சுட்டிக்கட்டும் அரசியல் நோக்கர்கள், அதை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள்.

``சட்டமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மையான பலம் இல்லாத சூழலில், தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைத்த கட்சிகளின் சார்பில் முதல்வரைத் தேர்வு செய்ய முன்னுரிமை தர வேண்டும். இரண்டாவதாக மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முன்வரும் அதிக இடங்களில் வென்ற கட்சியின் சார்பில் முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும். மூன்றாவதாகத் தேர்தலுக்குப் பின் கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் சார்பில் அனைவரும் ஆட்சியில் பங்கேற்கும் நிலையில் முதல்வரை நியமிக்க வேண்டும். இப்படி முன்னுரிமை வரிசையில் முதல்வரைத் தேர்வு செய்யும் போதே யாரால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும் சக்தியுடையவராக ஆளுநர் இருக்க வேண்டும்," எனப் பரிந்துரைக்கிறது சர்க்காரியா கமிஷன்.

அதன்படி தற்போதைய சூழலில் 104 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட பி.ஜே.பி.யை வேறு கட்சிகள் ஆதரிக்கவில்லை. இந்தச் சூழலில் அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் நிலையில், அந்த ஆட்சி நிலையாக இருக்குமா என்பதை ஆளுநர் தன்னளவில் திருப்தியடைய வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், யார் ஆதரவும் இல்லாமல் 104 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை ஆட்சியமைக்க அழைப்பது என்பது, மற்ற கட்சிகளை உடைக்கவும், நேரடியான குதிரை பேரத்துக்கும் வழிவகுக்கும். பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவில்லாத ஒருவரை ஆட்சியமைக்க அழைப்பது என்பது பெரும் சர்ச்சைகளுக்கே முன்வைக்கும்.

karnataka Election

என்ன செய்யப்போகிறார் ஆளுநர்?

இந்தச் சூழலில் ஆளுநர் எடுக்கும் முடிவு என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த விவகாரத்தை அரசியல் பார்வையோடு அணுகாமல், சட்டத்தின் பார்வையில் அணுக வேண்டியது மிக அவசியம். ஒருவேளை பி.ஜே.பி.யை ஆட்சியமைக்க அழைத்தால், தங்களுக்குத் தேவையான 9 எம்.எல்.ஏ-க்களை வேறு கட்சியிலிருந்து இழுக்க பி.ஜே.பி. முற்படும். இது கட்சித்தாவல் மற்றும் நேரடி குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். எந்தக் கட்சியும் பி.ஜே.பி.க்கு ஆதரவளிக்கவில்லை. கட்சியை உடைப்பதை தவிர வேறு எந்த வாய்ப்பும் பி.ஜே.பி.க்கு இல்லை. 

கர்நாடகாவில் தற்போது குதிரைப் பேரம் தொடங்கியிருப்பதை தற்போதைய சூழல் உறுதிப்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்கள் தங்களை ஆதரிப்பார்கள் என வெளிப்படையாகவே பேசத்தொடங்கியிருக்கிறார்கள் பி.ஜே.பி. நிர்வாகிகள். இதேபோல் இருதரப்பிலும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

karnataka election - BP

பி.ஜே.பி.க்கு ஆதரவாக ஆளுநரா?

`கர்நாடகாவில் பி.ஜே.பி. ஆட்சிதான் அமையும். எடியூரப்பாவையே ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார்' என்ற பேச்சும் பரவலாக எழுகிறது. சட்டத்தின் பார்வையை விட அரசியல் பார்வையோடுதான் ஆளுநர் அணுகுவார் என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது. சில மாதங்களில் நடக்கும் 3 மாநில சட்டமன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கு கர்நாடகா தேர்தல் வெற்றி என்பது பி.ஜே.பி.க்கு அவசியம் என்பதால், பி.ஜே.பி.க்கு ஆதரவான முடிவையே ஆளுநர் எடுப்பார் என்ற பேச்சு பரவலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

`பி.ஜே.பி. ஆட்சிக்கு வராமல் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்' என்ற முடிவுடன் குமாரசாமிக்கு ஆதரவளித்திருக்கிறது காங்கிரஸ். `எப்படியேனும் தென்னகத்தில் மீண்டும் கால்பதிக்க வேண்டும்' என்ற முடிவுடன் தீவிரம் காட்டுகிறது பி.ஜே.பி. கர்நாடகாவில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள். ஆளுநர் கையில் இருக்கிறது முடிவு.

https://www.vikatan.com/news/india/125177-hung-assembly-in-karnataka-what-will-governor-do-now.html

Link to comment
Share on other sites

கர்நாடகா : ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு

எடியூரப்பாபடத்தின் காப்புரிமைRAVEENDRAN

பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளுநர் கடிதம்

கடந்த 15-ம் தேதி எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கோரி கடிதம் தந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் கர்நாடக ஆளுநர். பதவியேற்கும் தேதி, நேரம், இடம் ஆகியவற்றை எடியூரப்பா தெரியப்படுத்த வேண்டும் என ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் கடிதம்படத்தின் காப்புரிமைGOVERNOR OF KARNATAKA

நாளை (வியாழக்கிழமை) காலை ஒன்பது மணியளவில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்பார் என பாஜக மாநில செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் தந்துள்ளார் என முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil

Link to comment
Share on other sites

பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

police

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவை அவசர வழக்காக கருதி இரவே விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கர்நாடக விவகாரம் தொடர்பாக விசாரணை கேட்டு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியை சந்திக்க உள்ளனர். இதனால் தலைமை நீதிபதி வீட்டிற்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  

http://www.dinamani.com/latest-news/2018/may/16/பாஜகவை-ஆட்சியமைக்க-ஆளுநர்-அழைத்ததற்கு-எதிர்ப்பு-தெரிவித்து-உச்சநீதிமன்றத்தில்-காங்கிரஸ்-மனு-2920995.html

Link to comment
Share on other sites

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் பி.எஸ் எடியூரப்பா

எடிபடத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR

கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பி.எஸ் எடியூரப்பா பதவி ஏற்றார். பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி நட்டா, பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எடியூரப்பாவுடன் மற்ற அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையின் முன் பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியதையடுத்து இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்நிலையில், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"பா.ஜ.க வெற்றியை கொண்டாடும் அதெவேளையில், ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்காக இந்தியா துயரப்படுகிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்படத்தின் காப்புரிமைTWITTER@RAHUL GANDHI

"நான் எடியூரப்பாவின் இடத்தில் இருந்திருந்தால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, முதல்வராக பதவியேற்று இருக்க மாட்டேன்" என முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் கூறியுள்ளார்.

பா.சிபடத்தின் காப்புரிமைTWITTER@P.CHIDAMBARAM

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் மே 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 104 தொகுதிகளில் பாஜக வென்றது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (மதச்சார்பற்றது) 37 இடங்களிலும் வென்றுள்ளன.

கடந்த 15-ம் தேதி எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கோரி கடிதம் தந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்தார் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா.

பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-44149991

Link to comment
Share on other sites

கர்நாடக தேர்தல்: தலை விழுந்தால் எனக்கு வெற்றி,  பூ விழுந்தால் உனக்குத் தோல்வி

 

(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இந்தக் கணத்தில், கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அண்மைக்காலமாக பாரதீய ஜனதாக் கட்சி எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்ப்பவர்கள் அநேகமாக - தலைக்கு நூறு கோடி விலை பேசியாவது, எதிரணியினரை பிளவுசெய்து ஆளை இழுத்து - பாஜக ஆட்சி அமைத்துவிடமுடியும் என்றுதான் நம்புகிறார்கள்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES / TWITTER Image captionமதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு

ஆனால், முடியாது என்கிறார் உலகின் மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரர். பாஜக செய்த அஸ்வமேதயாகம் பெங்களூரில் முடிந்துவிடும் என்கிறார் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச் டி குமாராசாமி.  அஸ்வமேதயாகம் முடியப்போகிறதா, அல்லது குதிரைப்பேரம் வெற்றிகரமாக முடியப்போகிறதா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

ஆனால், எந்த ஆட்சி அமைந்தாலும் மங்களகரமான நாட்கள் - அச்சே தின் - இனி கர்நாடகத்துக்கு இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. (தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவிரி பற்றியெல்லாம் கொஞ்சகாலத்துக்கு என்ன பேசினாலும் அங்கே அதெல்லாம் இப்போதைக்கு அஜெண்டாவிலேயே இல்லை. தேர்தலைக் காரணம்காட்டி இரண்டு மாதம் இழுத்தடித்தார்கள். அடுத்து ஆட்சி இழுபறியைக் காரணம்காட்டி இழுக்கப்போகிறார்கள்.  அரசியல் பருவ மழை பொய்த்துவிட்டது).

பெரும்பாலான தேர்தல் கணிப்புகளும் வாக்கெடுப்புநாள் கணிப்புகளும் திரிசங்கு சட்டமன்றம்தான் அமையும் என்று குறிப்பிட்டிருந்தன. அதுவேதான் நடந்துமிருக்கிறது. அப்படியென்றால், சம்பந்தப்பட்ட கட்சிகள் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு கூட்டணிக்கு வந்திருக்கலாம் இல்லையா என்று நம்மில் சிலர் அப்பாவித்தனமாக கேட்பதுண்டு.

மக்களின் நாடித்துடிப்பை நன்கறியும் திறனுள்ள எந்தக் கட்சியும் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஓரளவேனும் தேர்தல் முடிவுகள் பற்றி ஒரு புரிதலுக்கு வந்திருக்கமுடியும். ஆனால் மெய்யான நிலைமைகள் மீதான ஆராய்ச்சியைவிட வேறு பல்வேறு காரணிகள் இப்போது கோலோச்சுகின்றன. குறிப்பாக மூன்றாம் அணி என்று சொல்லக்கூடிய இடத்திலிருப்பவர்கள் அதிர்ஷ்டதேவதையின் கடைக்கண் பார்வையை அதிகம் நம்பித்தான் களத்தில் இறங்குகிறார்கள்.

அதிர்ஷ்ட்டக்காரர்கள்

எச் டி தேவகவுடாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கர்நாடகத்தைப் பொறுத்தவரை மூன்றாமிடத்திலிருக்கும் மஜக தன்னுடைய ஒக்கலிகர் வட்டாரத்தில் உறுதியாக வெற்றிபெறுவோம் என்று நம்பியது. அதற்கு பலனுமிருந்தது. அது தன்னுடைய கடந்தகால வாக்கு மற்றும் இடங்களின் எண்ணிக்கையை பெரிதும் மாற்றமில்லாமல் பார்த்துக்கொண்டது. கர்நாடகத்தின் அத்தனைத் தொகுதிகளிலும் தங்களுக்கு வலுவான நிலை இல்லை என்று அதற்குத் தெரியும். ஆனாலும் தங்கள் பேட்டையில் மட்டும் ஜெயித்தால் போதும் என்று நினைத்து அது செயல்படுகிறது என்றால் அதனுடைய வியூகம் என்னவாக இருக்கமுடியும்? நாளைக்கு காங்கிரசோ பாஜகவோ தங்களை நாடிவரும் என்கிற எதிர்ப்பார்ப்பைத் தவிர வேறு எந்த வியூகமும் குமாரசாமிக்கு இருக்கமுடியாது. குமாரசாமிகளின் கணக்குகளுக்கு அர்த்தமில்லாமலா போகும்!

ஆனால் இந்த உலகத்திலேயே எச் டி தேவகவுடாவையும் அவரது மகனையும்விட அதிர்ஷ்ட்டக்காரர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது. முன்னவரை பிரதமர் பதவி தேடி வந்தது. பின்னவரை இரண்டாம் முறையாக முதல்வர் பதவி நாடி வருகிறது. இருவருக்குமே மைசூர் மாண்டியா வட்டாரத்துக்கு வெளியே எந்தச் செல்வாக்கும் இல்லை!

மக்களின் தீர்ப்பு அவ்விதமாக இருக்கிறது என்று யாரும் குறைகூறாதீர்கள். மக்கள் தங்களுடைய தீர்ப்பை மூன்று பெரிய கட்சிகளுக்கு அளித்திருக்கிறார்கள். இரு கட்சிகளில் ஒன்றுக்குத்தான் தீர்ப்பளிக்கவேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. எனவே அவரவர் தேர்வு அவரவர் உரிமை. இந்திய அரசியல்சாசனமும் இதை உணர்ந்தே இருக்கிறது. அதன் தர்க்கம் எளிமையானது. நாடாளுமன்றமோ சட்டமன்றமோ அங்கே உறுப்பினர்களாகப் பொறுப்பேற்பவர்களில் பெரும்பான்மையினர் எந்த அணியில் இருக்கிறார்களோ அவர்களே ஆட்சிப்பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அது சொல்கிறது. அந்த அவைக்கு எப்படி நீங்கள் வந்தீர்கள் என்பது இரண்டாம் பட்சமானது.

கர்நாடக தேர்தல்: 'மரபுகள் இல்லாத இடத்தில் எல்லாமே சூதாட்டம்தான்'படத்தின் காப்புரிமைREUTERS

மக்களிடம் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது, யார் அதிக இடங்களை வென்றிருக்கிறார்கள் என்பது போன்ற கணக்குகள் இந்த மன்றங்களில் அர்த்தமில்லாதவை என்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சிகரமாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.

நீங்கள் வெளியே பார்க்கும் கட்சி வேறு கட்சி. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அங்கே ஒரு நாடாளுமன்றக் கட்சியை அல்லது சட்டமன்றக் கட்சியை உருவாக்கி, அந்த அவையில் உள்ள பெரும்பான்மையின் அடிப்படையில்தான் செயல்படமுடியும். இது நாடாளுமன்ற சனநாயகத்தின் நுட்பமானத் தன்மைகளில் ஒன்று. கேட்பதற்கு விசித்திரமாகவோ அராஜகமாகவோ தோன்றும். ஆனால் எண்ணற்ற சம்பவங்களினூடாக, அனுபவங்களின் காரணமாக உருவான ஒரு முடிவு இது. அது மட்டுமல்லை, சட்டம் இயற்றும் அவையில் யாருக்குப் பெரும்பான்மை என்பதன் அடிப்படையிலேயே சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பதையும் நாம் அறிவோம்.

கார்ப்பரேட் அரசியலும் காவி அரசியலும்

உலகின் இளைய ஜனநாயக நாடு என்று அறியப்படும் இந்தியாவைப் பொறுத்தவரை இவை எல்லாம் இன்னமும் புரியாத புதிர்கள். எனவேதான், பாரதிய ஜனதாக் கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருந்தும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை எப்படி ஆட்சிக்கு அழைக்கமுடியும் என்று மக்களிடமே ஒரு கேள்வி எழுகிறது. ஆனால் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைச் சதவீதத்தில் பாஜகவை விட காங்கிரஸ் பெரியது என்கிற கணக்கை எங்கே கொண்டுபோய் சொல்லி அழ?

கர்நாடகத் தேர்தல்

எனவே காங்கிரஸ் - மஜக கூட்டணி என்பது, அது தேர்தலுக்குப் பிந்தையதாக இருந்தாலும்சரி - சட்டபூர்வமாக ஏற்புடைய ஒன்றுதான். ஏனென்றால் தனிப்பெருங்கட்சியான பாஜகவைவிட (தனிப் பெரும்பான்மை கட்சி அல்ல!) வாக்குகளையும் இடங்களையும் விட இந்தக் கூட்டணி அதிகம் பெற்றிருக்கிறது. தேர்தல்களத்தில் இருவரும் எதிரும் புதிருமாக இருந்திருக்கலாம். ஆனால் சட்டமியற்றும் அவையில் இருவரும் இணைந்து நிற்பது என்று முடிவுசெய்தால், அரசியல்சாசனப்படி அதுதான் சரியானது. அதுதான் பெரும்பான்மை.

ஆனால் காங்கிரசும்சரி பாஜகவும்சரி வாய்ப்பிருக்கும் போதெல்லாம் இந்த அடிப்படையான நியாயத்தை மறுத்தே வந்திருக்கின்றன. தங்களுக்கு எதிரான அணி ஆட்சி அமைக்கப்போகிறது என்றால் பணத்தையோ ஊழல் குற்றச்சாட்டையோ காட்டி அதைத் தடுக்கின்றன. அல்லது பெரிய ஆசையைக் காட்டி வழிமறிக்கின்றன. அந்தச் சமயங்களிலெல்லாம் அந்த ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யக்கூடிய பெரிய கோடரியை ஏந்தி வரக்கூடிய அரசியல் கதாபாத்திரத்தை ஆளுநர்கள் மேற்கொள்கிறார்கள். ஆயா ராம் காயா ராம் அரசியல் தொடங்கி கூவத்தூர் வரை இதுதான் நடந்தது. கர்நாடகத்தில் இது நடந்திருக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வராக இருந்த எஸ் ஆர் பொம்மை தொடர்பான வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இதுபோன்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றது.

ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஒரு முக்கியமான தன்மை இருக்கிறது.  எல்லாவற்றையும் சட்டங்களாலும் விதிகளாலும் மட்டுமே சரி செய்துவிடமுடியாது. மரபுகள் (conventions)  மிக முக்கியமானவை. நீதித்துறையோ நாடாளுமன்றமோ சட்டமன்றமோ காவல்துறையோ எல்லாவற்றிலும் சட்டத்துக்குச் சம்மாக மரபுகள் முக்கியமானவை. அந்த மரபுகள் நீண்ட கால அனுபவத்திலிருந்தும் அரசியல் முதிர்ச்சியிலிருந்தும் வருபவை. இந்திய நாடாளுமன்ற ஜனநாயக மரபு கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சி அடைந்துவந்த தருணத்தில்தான் கார்ப்பரேட் அரசியலும் காவி அரசியலும் உள்ளே நுழைந்தன.

உவப்பில்லாத ஒன்று

குறிப்பாக பாஜக. இந்து ராஷ்ட்டிரவாதிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் உவப்பில்லாத ஒன்று.  அவர்கள் உருவாக்கவிரும்பும் ராமராஜ்யத்துக்கு மக்களிடமிருந்து தீர்ப்பைப் பெறுகிற வழிமுறை என்பது இசைவற்ற ஒன்று. வேறுவழியில்லாமல் தேர்தலில் பங்கேற்கும் பாஜகவினர், நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றுவதையெல்லாம் தேவையற்ற ஒன்றாக, எரிச்சலூட்டக்கூடிய ஒன்றாகவே கருதுகிறார்கள்.

மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

நடைமுறை காரணமாக மட்டுமின்றி, சிந்தாந்த அடிப்படையிலும் விதிகளையும் மரபுகளையும் ஒழிப்பதற்கு அவர்கள் தயங்கமாட்டார்கள். தேர்தல் முறையை முறியடிக்கும் அமித் ஷாவின் சாகசங்களே இன்றைய அரசியல் வியூகமாக முன்வைக்கப்படுகிறது. மற்றக்கட்சிகளும் அதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதில் நிபுணத்துவம் பெறாதவர்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் கண்கூடான உண்மைதான்.

கர்நாடகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது நமக்குத் தெரியாது. மரபுகள் இல்லாத இடத்தில் எல்லாமே சூதாட்டம்தான். தலை விழுந்தால் எனக்கு வெற்றி, பூ விழுந்தால் உனக்குத் தோல்வி.

https://www.bbc.com/tamil/india-44144293

Link to comment
Share on other sites

களத்தில் குதித்த ராம்ஜெத் மலானி: கர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

 

 
malani

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி : கோப்புப்படம்

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க, ஆளுநர் முடிவுக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்..

ஒட்டுமொத்த அரசியலமைப்பு அதிகாரத்தையே கர்நாடக ஆளுநர் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று ராம்ஜெத் மலானி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

 
 

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 104 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியது. அதேசமயம், 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தனர்.

இந்தப் பரபரப்பான சூழலில் ஆளுநர் வாஜுபாய் வியாழக்கிழமை முதல்வராகப் பதவி ஏற்க எடியூரப்பாவுக்கு நேற்று இரவு அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவை நிறுத்திவைக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆளுநர் மாளிகையில், இன்று காலை 9 மணிக்கு எடியூரப்பா இன்று மாநிலத்தின் 23-வது முதல்வராகப் பொறுப்பேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை ஆளுநர் வாஜுபாய் வாலா அளித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

supjpg

உச்ச நீதிமன்றம்

 

அந்த மனுவில் ராம்ஜெத் மலானி  கூறியிருப்பதாவது:

''கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா, பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பதன் மூலம் அரசியலமைப்புச்சட்டம் அவருக்கு வழங்கியுள்ள ஒட்டுமொத்த அதிகாரத்தையும், தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். அவரின் பதவிக்கும், அவர் சார்ந்திருக்கும் அலுவலகத்துக்கும் அவமரியாதையைத் தேடிக் கொடுத்துள்ளார்.''

இவ்வாறு ராம்ஜெத் மலானி தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோர் அவசர வழக்காக விசாரிக்க ராம்ஜெத் மலானி தரப்பில் கோரப்பட்டது. அப்போது இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிரான காங்கிரஸ், ஜேடிஎஸ் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று அதிகாலை விசாரித்துள்ளது. அந்த வழக்கு மீண்டும் 18-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அத்துடன் சேர்த்து இந்த வழக்கைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்கள்.

இந்த மனு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறுகையில், ''நான் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ இந்த மனுவைத் தாக்கல் செய்யவில்லை. மாநில ஆளுநர் எடுத்த முடிவு அரசியலமைப்புச்சட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால் இதைத் தாக்கல் செய்தேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/india/article23911977.ece?homepage=true

Link to comment
Share on other sites

எங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள்; ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்

 

 
download%201

பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பதிவு படம்: ட்விட்டர்

கர்நாடக தேர்தல் முடிவை அடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். எடியூரப்பா ஆட்சி அமைத்ததை, அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என கண்டித்துள்ள அவர் பொதுமக்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாஜக.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். துணிச்சலாக தனது கருத்துகளைக் கூறிவந்தார். பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆளுநர் காங்கிரஸ், மஜத கூட்டணியை அழைக்காமல் பாஜகவை அழைத்து ஆட்சியமைக்கக் கேட்டுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

 

இதை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக கண்டித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் நடக்கும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் எம்.எல்.ஏக்கள் எங்கு தாவினார்கள், எம்.எல்.ஏக்கள் எங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசியல் சாணக்கியத்தனங்களை கண்டுகளியுங்கள்.

அரசியல்வாதிகளின் விளையாட்டில் நமது இறுதித் தீர்ப்பு அரசியலுக்காக எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது, நமது நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றையெல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுப்போவோம்.

கர்நாடக மக்களுக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் ரிசார்ட் மேனேஜர்கள் ஆளுநரை சந்தித்து தங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதால், தங்களை ஆட்சியமைக்கக் கோரியுள்ளனர். அரசியல் விளையாட்டு ஆரம்பமாகி விட்டது. அரசியல் விளையாட்டில் அனைவரும் ரிசார்ட் அரசியலில் குதித்துவிட்டார்கள்'' என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/india/article23914931.ece?homepage=true

Link to comment
Share on other sites

கர்நாடகத்தில் பிஜேபி வென்றது எப்படி ?

 

 

assembly-election-celebration-in-bengalu

ஆளும் கட்சியை மீண்டும் அரியணைக்கு தேர்ந்தெடுப்பவர்கள் அல்ல என்ற “புகழை“ கர்நாடக வாக்காளர்கள் தக்க வைத்துள்ளனர். 1985-லிருந்து எந்த அரசாங்கமும் இந்த தென்னக மாநிலத்தில் மீண்டும் பதவிக்கு வந்திருக்கவில்லை. சித்தராமையா அரசாங்கத்திற்கு எதிராக “ஆட்சி-எதிர்ப்பு அலை“ இல்லை என்றாலும், 2018 சட்டமன்ற தேர்தலில் அதற்கு இரண்டாவது வாய்ப்பளிக்க வாக்காளர்கள் மறுத்துள்ளனர். அதே நேரத்தில், பாஜகவை ஒரு மாற்றாக வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. 104 இடங்களுடன், பெரும்பான்மையைப் பெறமுடியாமல் அது எட்டு இடங்களை குறைவாக பெற்றுள்ளது.

கர்நாடகாவில் பாஜகவின் இதற்கு முந்தைய சிறந்த செயல்பாடு 2008-ல் 108 இடங்களைப் பெற்றதாகும். அப்போது, முதன் முதலாக தென்னிந்தியாவில் தனது சொந்த பலத்தில் அரசமைத்தது. அவர்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டின்படி காவி கட்சியை ஆதரிக்க மறுத்து கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் துரோகம் செய்ததன் விளைவாக, அப்போது ஏற்பட்ட அனுதாப அலையில் பாஜக வெற்றி பெற்றது. இப்போது, அதன் மாநிலத் தலைமையிடமிருந்து பலம்  பெற முடியாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் பிம்பத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருந்தது.

2018ல் கடுமையான தேர்தல் களத்தில் பல்வேறு தந்திரங்களை மோடி-ஷா கூட்டணி பயன்படுத்தியபோதும், 112 என்ற அந்த மேஜிக் எண்ணை அந்த கட்சி எட்டவில்லை., ஒரு தசாப்தத்திற்கு முன்பு மோடியும் ஷாவும் அக்கட்சியில் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்னர் கடந்த தேர்தலில் அக்கட்சி என்ன சாதித்திருந்ததோ அதை தற்போது ஈடுசெய்ய முடியவில்லை. எனவே, இதுவரை ஒரே ஒரு தென்னக  மாநிலத்தில் ஒரு தளத்தை உருவாக்க முடிந்த அக்கட்சியின் வலிமை, அந்த வலிமையின் எல்லை ஆகியவற்றை இத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இத்தேர்தல் முடிவுகளிலிருந்து வெளிப்படும் பளிச்சிடும் செய்தி என்னவெனில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் நலத்திட்ட அரசியலின் வரம்புகள். எந்தவொரு பெரிய பிரச்சனையும் இல்லாத இத்தேர்தலில், பல்வேறு பிரிவினர் மற்றும் பகுதிகளை கவரும் வகையில் பாஜக  பல தந்திரங்களைக் கையாண்டது.  காங்கிரஸ், அதன் நலத் திட்டங்கள் பின்தங்கிய மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அதீத மதிப்பிட்டு விட்டது. அந்த அளவுக்கு இத்திட்டங்களின் தேர்தல் பலன்களில் முதலமைச்சருக்கு நம்பிக்கை இருந்தது,

அதனால், சிக்கலான சமூக வேறுபாடுகளைக் கொண்ட கர்நாடகாவில், தேர்தல் முடிவை நிர்ணயிக்கும ஒரு மிகவும்  முக்கியமானதான சமூக கூட்டணியை நிர்வகிப்பதில் அவர் போதுமான அக்கறை எடுக்கவில்லை. இறுதியில், வெற்றிபெற முடியும் என தோன்றிய தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கிறது. ஏனென்றால், முதலமைச்சர் சித்தராமையா, தெரிந்தோ தெரியாமலோ, தெற்கு பகுதியில் மக்கள் தொகையில் 11 சதவீதம் கொண்ட ஒக்கலிகாக்கள் மற்றும் வடக்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் மக்கள் தொகையில் 14 சதவீதம் கொண்ட லிங்காயத்துகள் ஆகியோரிடமிருந்து விலகி விட்டார்.

அதோடு சேர்த்து,   கடலோர மாவட்டங்களில் தொடர் வகுப்புவாத கொலைகளுக்குப் பின்னர், சித்தராமையாவை “இந்துக்களின் எதிரி“ என ஒரு பிரச்சாரத்தை அப்பகுதிகளில் பாஜக நடத்தியது. இக்குற்றச்சாட்டை  போதுமான அளவு எதிர்க்க காங்கிரஸ் எதுவும் செய்யாததால், இந்து வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் தங்களது சாதி வேறுபாடுகளைக் கடந்து காங்கிரஸுக்கு எதிராக திரும்பினர். கடலோரப் பகுதியில் 2013 தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்தமுறை முழுவதுமாக இழந்தது. “தனி மதம் “ என்ற லிங்காயத்துகளின் சர்ச்சைக்குரிய கோரிக்கைக்கு சித்தராமையாவின் ஆதரவு முழுவதுமாக தோல்வியடைந்ததோடு, எதிர்முகமாக திரும்பி விட்டதாக தோன்றியுள்ளது.  ஒருங்கிணைந்த ஜனதா தளம் 1999ல் சிதைந்து போனதிலிருந்து, லிங்காயத்துகள் பாஜகவைச் சுற்றி அணிவகுத்து வருகின்றனர். பாஜகவிலிருந்து லிங்காயத்துகளைப் பிரித்தெடுக்கும் நோக்கத்துடன், இந்து மதத்திலிருந்து விடுபடும் அவர்களது நீண்டகால கோரிக்கைக்கு முதலமைச்சர் தனது முழு ஆதரவையும் அளித்தார். இச் சூதாட்டம் பலனளிக்கவில்லை. கர்நாடகாவின் கிராமப்புறங்களில் உள்ள சாதாரண லிங்காயத்துகள், இந்துக்களிடமிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என ஒரு கோரிக்கை விடுத்த அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சிறிய, படித்த பிரிவினரின் தத்துவ மற்றும் வரலாற்று நியாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புற லிங்காயத்துகள் இதை ஒரு தேவையற்ற அரசியல் விளையாட்டாகப் பார்த்தனர்.

லிங்காயத்துகளின் வாக்குகளை தீர்மானிக்கும் ஹைதராபாத் கர்நாடகா மற்றும் பாம்பே கர்நாடகாவில் காங்கிரஸ் மிக அதிகமாக இழந்தது. சித்தராமையா அமைச்சரவையில் முக்கிய அமைச்சரான, இந்த இயக்கத்தை முன்னின்று நடத்திய வினய் குல்கர்னி, லிங்காயத்துகள் ஆதிக்கமுள்ள தார்வார்ட் தொகுதியில் தோற்றார். மேலும், இந்து ஒற்றுமையை முறிக்கும் ஒரு கட்சியாக காங்கிரஸை சித்தரித்துக் காட்ட இந்த விவகாரம் பிஜேபிக்கு பயன்பட்டது.  ஒக்கலிகாக்கள் விஷயத்தில், முன்னாள் பிரதமர் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.தேவெ கௌடாவோடு சித்தராமையாவுக்கு இருந்த பகை, காங்கிரஸிடமிருந்து அந்த சமூகத்தை பிரித்தது.  சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது, இரு தலைவர்களுக்கு மிடையேயான கருத்து வேறுபாடுகள் கூர்மையாயின. அது ஒட்டுமொத்த ஒக்கலிகா சமூகத்தினரை காங்கிரஸுக்கு எதிராக திருப்பியது. இவ் விஷயங்களை இன்னும் மோசமாக்கும் வகையில், முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்த தேவெ கௌடாவின் உருவப்படத்தை சித்தராமையா அகற்றச் செய்தார். இது மிகப்பெரிய, பழைய ஒக்fலிகா தலைவர் மீதான தாக்குதலாக சித்தரிக்கப்பட்டது. காங்கிரஸ் அரசாங்கத்தில் ஒக்கலிகா சமூக அதிகாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாதது, ஒக்கலிகா இளைஞர்களின் அடையாள சின்னமாக அறியப்பட்ட, நடிகராக இருந்து காங்கிரஸ் தலைவராக மாறிய அம்பரீஷை அமைச்சரவையிலிருந்து நீக்கியது மற்றும் மற்ற தவறான நிகழ்வுகள் சித்தராமையாவுக்கு எதிரான ஒக்கலிகா சமூகத்தினரின் மனவருத்தத்திற்கு காரணமாயின.

ஒரு அரசியல் வாய்ப்பை உணர்ந்து, ஒக்கலிகாக்களை மேலும் காங்கிரஸிருந்து பிரிக்கும் நோக்கத்துடன், தேவெ கௌடா சித்தராமையாவால்  அசிங்கப்படுத்தப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். ஒக்கலிகா சமூகத்தினரின் காங்கிரஸ் மீதான கோபம் வெளிப்படையாகவே தெரிந்த்து.  ஒக்கலிகாக்கள் அதிகமுள்ள பழைய மைசூர் பகுதியில், காங்கிரஸ் செல்வாக்கு எப்போதுமில்லாத அளவுக்கு மிகவும் குறைந்துவிட்டது. ஒக்கலிகா அரசியல் மையமான மாண்டியா மாவட்டத்தில், காங்கிரஸ் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை. சித்தராமையாவின் ஆட்சியில் AHINDA என அழைக்கப் படுபவர்களுமான சிறுபான்மையினர், ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி., எஸ்.டி.க்கள் ஆகியோரை காங்கிரஸ் பெரிதும் நம்பியிருந்தது. இந்த குழுக்கள் காங்கிரஸுக்குப் பின்னால் முழுமையாக ஒருங்கிணைக்கப்படவில்லை அல்லது கர்நாடக சமூகதளத்தில் AHINDA ஆதரவு ஒரு தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு போதுமானதாக இல்லை.

-நாராயணா

நன்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.