Jump to content

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்


Recommended Posts

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்

 

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். #Balakumaran

 
பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்
 
சென்னை:

இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரனின் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது. அவருக்கு வயது 71.

பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Balakumaran #RIPBalakumaran

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/15132047/1163197/writer-balakumaran-passed-away.vpf

 

 

 

 

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

 

 
b1

 

உடல் நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழின் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (71) இன்று (மே 15) சிகிச்சை பலனின்றிக் காலமானார்.

தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல பாட்ஷா, நாயகன், குணா, புதுப்பேட்டை உள்ளிட்ட பல சினிமாவிலும் பாலகுமாரனின் பங்களிப்பு முக்கியமானது. அவருடைய எழுத்துக்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் பலர். அவரால் எழுத்தாளரானவர்களும் உள்ளனர். சூப்பர் ஹிட் படங்களான பாட்ஷா, குணா, முகவரி, சிட்டிசன், உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். ரசிகர்களின் அன்பால் எழுத்துச் சித்தர் என்று அழைக்கப்படுபவர் பாலகுமாரன். இரும்பு குதிரை நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் அவர். இவர் எழுதியுள்ள மெர்க்குரி பூக்கள், உடையார் உள்ளிட்ட பல நாவல்கள் மிகவும் பிரபலமானது. பெரும் வாசகப் பரப்பின் கவனத்தை ஈர்த்த படைப்பாளி பாலகுமாரன்.

bala.jpg

சில ஆண்டுகளுக்கு முன் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இது அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல் ஹாசன், வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/15/tamil-writer-balakumaran-passes-away-2920304.html

 

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்

 

 
balakumaranjpg

பாலகுமாரன் | கோப்புப் படம்: கே.பிச்சுமணி

எழுத்துச் சித்தர் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72.

'மெர்க்குரிப்பூக்கள்' மூலம் ஏராளமான வாசகர்களைக் கட்டிப் போட்டவர் எழுத்தாளர் பாலகுமாரன். 'மெர்க்குரிப்பூக்கள்', 'தலையணைப்பூக்கள்', 'கரையோர முதலைகள்', 'பயணிகள் கவனிக்கவும்', 'இரும்பு குதிரைகள்' என 300க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன், எண்பதுகளில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து தன் எழுத்துக்களால் வாசகர்களைக் கட்டிப்போட்டார்.

 

இவரின் எழுத்துக்களும் சொல் ஆளுமையும் சொல்லில் இருக்கிற தாளமும் படிப்போரைக் கட்டிப்போடும். படிப்பதுடன் மட்டுமின்றி, அவர்களை சிந்திக்கத் தூண்டும். எழுத்தாளர் பாலகுமாரன் படித்தேன். திருந்தினேன் என்று சொல்லும் வாசகர்கள் ஏராளம்.

இவரின் வாசகர்கள் பலரும், இவரை ஓர் எழுத்தாளராகப் பார்க்கவில்லை. தகப்பனாகவே பார்த்தார்கள். ஞானத்தகப்பன், குரு என்றும் கொண்டாடினார்கள்.

ஒரு நல்ல கணவனாக இருக்கிறேன் என்றால், அதற்கு அகல்யா படித்ததுதான் காரணம். அதில் உள்ள சிவசு கதாபாத்திரம்தான் காரணம் என்று நெகிழ்ந்து சொன்ன வாசகர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பழமர்நேரிதான் பாலகுமாரனுக்குச் சொந்த ஊர். ஆனால் சென்னையில்தான் படித்து வளர்ந்தார். டாஃபே நிறுவனத்தில் 17 வருடங்கள் வேலை பார்த்தார். எழுத்தின் மீது கொண்ட காதலாலும் சினிமாவுக்குள்ளும் நுழைய நினைத்தார். இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றினார். 'சிந்து பைரவி', 'புன்னகைமன்னன்' முதலான படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்தை இயக்கினார்.

ஆரம்ப கட்டத்தில் 'சாவி' பத்திரிகையில் பணிபுரிந்தார். ஆடிப்பெருக்கு பற்றி இவர் எழுதிய கட்டுரையும் நடிகை ஷோபா மரணம் குறித்த கட்டுரையும் எல்லோராலும் பாராட்டப்பட்டது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார். அதையடுத்து 'குணா', 'செண்பகத்தோட்டம்', 'மாதங்கள் ஏழு', 'கிழக்கு மலை', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஜீன்ஸ்', 'பாட்ஷா', 'முகவரி', 'சிட்டிசன்' முதலான ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதினார் பாலகுமாரன்.

'அன்பு. இதுவே என் கதையின் பிரதானம். இதுவே எல்லோருக்க்கும் தேவையாயும் போதுமானதாகவும் இருக்கிறது. இது இருந்தாலே, கிடைத்துவிட்டாலே சமூகம் அழகாகிவிடும். மனிதர்கள் நிம்மதியாய் வாழ்வார்கள்' என்பதையே தொடர்ந்து தன் எழுத்துக்களிலும் நாவல்களிலும் பேட்டிகளிலும் வலியுறுத்தி வந்தார்.

ராஜராஜ சோழன் குறித்தும் தஞ்சை தேசம் குறித்தும் இவர் பல வருடங்களாக ஆய்வு செய்து எழுதிய 'உடையார்' எனும் மிகப்பிரமாண்டமான நாவல், வாசகர்களால் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. எல்லோரும் உடையார் படித்துவிட்டு கொண்டாடினார்கள்.

திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரை தன் குருநாதராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார். இரண்டு முறை பைபாஸ் செய்யப்பட்டும் கூட, சோழ தேசம் முழுவதும் பயணித்து நிறைய கதைகளை, படைப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.

நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆனால், எழுத்தையை தவமாகக் கொண்ட பாலகுமாரன், தவமிருந்து எழுத்துக்களைப் படைத்த பாலகுமாரன் தன் எழுத்துக்களால் சூரிய சந்திரர்கள் உள்ளவரை வாழ்ந்துகொண்டே இருப்பார்.

எழுத்துக்கு எப்போதும் மரணமில்லை. எழுத்தாளருக்கும்தான்!

http://tamil.thehindu.com/tamilnadu/article23891199.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான எழுத்தாளர், ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Link to comment
Share on other sites

பாலகுமாரன் எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகைநூல் ஒன்றுக்கு நான் முன்னுரைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். நான் சிறுவன், எளியவன். அவர் எழுதிய புத்தகங்களின் எடைகூட இருக்கமாட்டேன். ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய், பாலகுமாரா…!’ என்று சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆம், அவரேதான் ஆசைப்பட்டார்.

முகநூலில் என் எழுத்துகளின் அறிமுகம்பெற்று தாமாக முன்வந்து என்னை உளப்பூர்வமாக வாழ்த்தினார். கவிஞரே’ என்று வாயார அழைத்தார். என் கவிதைகளில் ‘தமிழ் புதிது’ என்று பின்னூட்டமிட்டார். அவர் பின்னூட்டமிட்ட அடுத்த கணங்களில் என் முகநூல் உள்பெட்டியில் வாழ்த்துகள் குவிந்தன. ‘பாலகுமாரனே பாராட்டிவிட்டார் போங்கள்…’ என்ற வியப்புகள் பெருகின. அவர் தமக்கெட்டும்  எழுத்துகளைக் கவனமாய் வாசித்து வந்தார் என்றே கருதுகிறேன். அவரால் எழுத்துகளின் நிறம் மணம் திடம் உணர்ந்து கூற முடியும். முன்னைப் பழைமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாகச் செயலாற்றிய மூத்தவர் அவரே.

எழுபதுகளின் மையத்தில் நான் பிறந்தேன். அன்று நான் சிசுவாய்ச் சுருண்டிருந்தபோது பாலகுமாரன் தமிழ்க் கதையுலகில் புயலாய்ச் சுழன்றடித்துக்கொண்டிருந்தார். எண்பதுகளின் மையத்திலிருந்து நான் கதைகள் வாசிக்கத் தொடங்கினேன். அநேகமாக என் பதின்மத்தின் அகவைகளில் சிறுகதைகளை  வாசித்துப் பழகிக்கொண்டிருந்தபோது பாலகுமாரன் முழுமையான ஆகிருதியாய்த் தமிழ்ச் சமூகத்தின்முன் பேருருப் பெற்றுவிட்டார். நாயகன் திரைப்படத்திற்கு எழுதிவிட்டார். ஆனந்தவிகடன் ‘பச்சை வயல் மனதினைத்’ தனி இணைப்பிதழாக வெளியிட்டுத் தன் வாசகப் பரப்பைப் பெருக்கிக்கொண்டது. வார இதழ்களிலெல்லாம் பாலகுமாரனின் தொடர்கதைகள். அவர் எழுதும் எழுத்தைப் படித்துத் தமிழ்நாட்டு இளையோர் பட்டாளம் உன்மத்தமடைந்து உள்ளம் நெகிழ்ந்து கிடந்தது. முக்கியமான காலகட்டமொன்றின் சமூக மாந்தருக்குக் காதல், இல்லறம், வாழ்க்கை, மனச்செயற் களங்கள், மனிதக் கீழ்மைகள் மேன்மைகள் என மாய்ந்து மாய்ந்து கற்பித்தார். பாலகுமாரன் எழுத்துகளின் சுவையுணர்ந்து கற்றவர்கள் அவரை மானசீகமாகக் கைதொழுதனர். ‘நான் வாழ்க்கையில் எதையுமே சாதிக்கலங்க… படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போனேன், நல்லபடியாக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், பிள்ளைகளைப் பெரிய படிப்பு படிக்க வெச்சு வேலை வாங்கிக்கொடுத்து கல்யாணம் செஞ்சுவெச்சேன். வேற எதையுமே நான் உருப்படியாச் செய்யலயே…’ என்று தவித்து நின்ற இல்லறத்தாரிடம் ‘நீரே சாதனையாளர். நீர் செய்தவை என்ன, எளிய செயல்கள் என்றா நினைத்தீர்…. அல்ல, அவை மகத்தான செயல்கள். அரும்பெருங் காரியங்கள். இந்தக் கடமையாற்றலே பெருந்தவம்’ என்று தம் எழுத்துகளின் வழியாகப் புரியவைத்தார்.      

நான் கணையாழி என்ற இலக்கியப் பத்திரிகை மூலம் நவீன கவிதையுலகில் அறிமுகமானேன். அதற்கும் முன்னே வார இதழ்களில் நான் எழுத விரும்பிய கவிதைகளுக்கு அந்நியமாய்ப் போராடிக்கொண்டிருந்தேன். எனக்குக் ‘கணையாழி’ என்ற பத்திரிகை இருப்பதைத் தெரிவித்தது பாலகுமாரனின் தன்னனுபவக் கட்டுரைகள்தாம். அவர் சுப்ரமணியராஜு என்பவரோடு கணையாழி கவிதைக் கூட்டங்களில் புடுபுடு என்று ஈருருளியில் ஒலியெழுப்பியபடி தெனாவட்டாக வந்து பங்கெடுத்ததையும் விவாதங்களில் அனல் தெறிக்கப் பேசியதையும் எழுதியிருந்தார். விவாதம் முடிந்து வெளியே புகைக்குழல் கருக கருக பேசித் தெளிந்தவற்றைக் கூறியிருக்கிறார்.

அங்கே அறிமுகமான ஞானக்கூத்தன் அவர் தோளில் கைபோட்டபடி சொல்லிக்கொடுத்தவை எண்ணற்றவையாம். எங்கே கணையாழி என்று தேடத்தொடங்கினேன். அப்பொழுதுதான் கணையாழியின் விநியோக உரிமை கல்கி குழுமத்திற்குக் கிடைத்து, அதன்மூலம் நான் வசித்த கடைமடை ஊரின் புத்தகக் கடைகளுக்குச் சில பிரதிகள் வந்து சேர்ந்திருந்தன. கண்பட்டவுடனே கணையாழியைக் கைப்பற்றினேன். என் இலக்கிய உலகத்திற்குக் கதவுகள் திறந்துகொண்டன. கணையாழிக்குக் கவிதைகள் அனுப்பினேன். அடுத்த இதழில் பிரசுரமாயிற்று. கணையாழி கவிதைகளால் அதே ஞானக்கூத்தனின் அன்பைப் பெற்றேன். ஒருமுறை ஞானக்கூத்தனுக்கு என் புதிய வீட்டில் விருந்தளித்தபோது, ஏனோ நான் பாலகுமாரனை நினைத்துக்கொண்டேன்.

பாலகுமாரனின் இளமையில் பெரிய நட்சத்திர எழுத்தாளராக சுஜாதா புகழ்பெற்றிருந்தார். பத்திரிகை நிறுவனமொன்று அளித்த மதுவிருந்தொன்றில் சுஜாதாவுடனான உரையாடல் ரசாபாசமாகி அவரிடமே ‘நீ என்ன பெரிய எழுத்தாளனா… உன்னையே முந்திக் காட்டறேன் பார்’ என்று சவால் விட்டதாக பாலகுமாரனே எழுதியிருக்கிறார். சுஜாதா இதையெல்லாம் பார்க்காதவரா… ‘விட்ருங்க… பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று கூறியதையும் பாலகுமாரன் நன்றியுடன் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அந்தச் சூளுரைக்கும் பாலகுமாரனுக்கும்தானே மல்யுத்தம். சபதத்தை நிறைவேற்றியும் காட்டினார். அது ஒரு காலம், கனாக் காலம் ! கமல்ஹாசனைக் கவிஞர் புவியரசுடன் நான் சந்திக்கும் வாய்ப்பமைந்தபோது எழுத்துலக நட்சத்திரங்கள் பற்றியும் பேச்சு வந்தது. கமல்ஹாசன் ‘பாலகுமாரன் எழுத்துலக சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னது நினைவிருக்கிறது. நான் இவற்றையெல்லாம் நினைவில் தொகுத்துச் சொல்கின்றேனே அன்றி, இவர்கள் எல்லாருமே ஒரு மரத்துப் பறவைகள்தாம். பிற்பாடு என் கவிதைகளால் சுஜாதாவின் அன்பைப் பெற்றேன். பிற்பாடு  பாலகுமாரனின் மனத்துக்கும் அணுக்கமானவனானேன். இவ்விருவரின் அன்பையும் ஒருசேரப் பெற்றுவிட்டேன் என்பதில் எனக்குப் பேருவகைதான்.

அய்யனிடமிருந்து எனக்கு அவருடைய கதைத் தொகுதிகள் வந்தன. அவற்றில் அவருடைய  கையெழுத்தைக் கண்ட என் மனைவின் தாயார், என் அத்தையார் கண்களில் நீர்தளும்ப நின்றார். அவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. தம் வாழ்க்கைத் துயர்களுக்கு மருந்தாக பாலகுமாரனின் கதைகளில் மூழ்கியவர். அவற்றிலிருந்து போராடும் உரம் பெற்றவர். அந்தக் கண்ணீரின் அடர்த்தி எனக்குத் தெரியும்.

இலக்கியத்தில் மேலும் மேற்செல்லலாமா என்ற குழப்பம் என்னைத் தீண்டியபோது பாலகுமாரன் தெளிவுபடுத்தியிருக்கிறார். எழுத்து என்பது வரம், அதை நலங்கெடப் புழுதியில் எறியத் தகாது என்று அவரைப் பார்த்துக் கற்றேன். சென்னையின் தெருக்களில் கால்கடுக்க நடந்து திரிந்துவிட்டு இருப்பூர்தியில் ஊர் திரும்பியபோது ‘இரவல் கவிதை’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்தக் கதையிலும் என்போல் பரிதவிக்கும் இளைஞன் வருவான். அவனுக்கும் காதல் வரும். அவற்றோடு அவன் படாதபாடுறுவான். அதே புத்தகத்தில் ‘ஒருநாள் போதுமா ?’ என்றொரு குறும்புதினமும் இருந்தது. மனைவியோடு அவனுக்கு நேரும் ஊடல்பாடல்களும் காதலும் கண்ணீரும் வாழ்க்கைப் பூசல்களுமே களம். எதிர்காலம் குறித்த நல்ல கனவை அந்தக் கதை எனக்குள் விதைத்தது என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

என் நகரை ஐந்தாம் மாடியிலிருந்து இரவில் காணும்போதெல்லாம் மெர்க்குரிப் பூக்கள் என்ற சொற்றொடர் தோன்றாமல் போகாது. மெர்க்குரிப் பூக்களும் இரும்புக் குதிரைகளும் கரையோர முதலைகளும் தொடர்கதைகளுக்கென்று மேன்மையான இலக்கியத் தகுதிகளை நிறுவியவை.

திருவல்லிக்கேணியின் ஆடை ஏற்றுமதி நிறுவனமொன்றில் ‘கோட்டா சான்றிதழ்களை’ வாங்குவதற்காக நாள்கணக்கில் வாரக்கணக்கில் காத்தமர்ந்திருக்கிறேன். என் எதிரில் முறையே இருபது, முப்பது, நாற்பது வயதுகளுடைய தட்டச்சு மகளிர் தலைநிமிராமல் பணியாற்றிக்கொண்டிருப்பர். அவர்கள் ஒவ்வொருவரும் அன்னாரின் பாத்திரங்களாகவே எனக்கு அடையாளப்பட்டனர். அந்த அலுவலகச் சூழலை அவர் கதைகளில் பலமுறை படித்துணர்ந்திருக்கிறேன். இந்தச் சரிபார்ப்பில் ஈடுபட்டதால் எனக்கு நாள்கணக்கில் நேரம் போனதே தெரியவில்லை. என் காத்திருப்பால் வியந்த அந்நிறுவன முதலாளி தம் ஏற்றுமதியைத் தள்ளிவைத்துவிட்டுத் தமக்குரிய அமெரிக்க ஏற்றுமதிக்கான ‘கோட்டா சான்றிதழை’ நான் பிரதிநிதியாய்ச் சென்ற திருப்பூர் நிறுவனமொன்றுக்கு விற்க முன்வந்தார். அந்த நல்வெற்றியில் அவருக்கும் நூதனப் பங்குண்டு.

பாலகுமாரனின் சிறுகதைகள் என்பவை தனித்த உலகம். பாலகுமாரன் ஏன் புதினங்களுக்குள் நுழைந்தார் என்பதற்கான விடை அவற்றுள் உள்ளது. ஒவ்வொரு கதையும் உணர்ச்சிகளின் அடர்த்தியான பொதிகள். இருந்திருந்தாற்போல் சந்நதம் பொங்கிவர சாமியாடுவார்களே, அப்படிப்பட்ட விவரிப்பும் முடிப்பும். அவற்றில் துலங்குவது எழுபது எண்பதுகளின் தூய்மையான உலகம். நாம் அனைவருமே எண்பதுகளின் காதலர்கள். அதுதான் நம் சமூகத்தில் பெண்கள் தலையெடுக்கத் தொடங்கிய பிள்ளைப் பருவம். அன்றைய மெட்ராஸ், மாநகரத்தின் உயர்குணங்களைத் தண்மையோடு வெளிப்படுத்திய நிதானமான ஊர். அங்குலவிய மனிதர்கள் மாற்றுக் குறையாத மனித மாண்புகளின் பிரதிநிதிகளாக நடமாடியவர்கள். அவர்களே பாலகுமாரனின் கதை மாந்தர்கள். நம் விருப்பத்திற்குரியவர்கள். எப்படிப்பார்த்தாலும் அவர்கள் நமக்கும் தாய் தந்தைகள்.

வெட்கத்தாலும் தனக்குள் அடங்கும் தன்மையாலும் சாதியிறுக்கக் கட்டுமானங்களாலும் காதல் என்பது சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்வரையில், இந்தச் சமூகத்தில் அடக்கி ஒடுக்கியே வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாவம் என்று நம்ப வைக்கப்பட்டிருந்தது. இலக்கியங்களும் கலைகளும் அதற்கு ஆதரவாக எத்தனையோ எடுத்தியம்பியிருப்பினும் காதலுக்கு எதிரான சமூக நடத்தை கடும் அடக்குமுறையைத்தான் கட்டவிழ்த்துவிட்டது. அன்றைய புதிய தலைமுறை அதற்கெதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போராடிக்கொண்டிருந்தது. திரைப்படங்களில் காதலுக்கு ஆதரவாகப் போதிக்கப்பட்டவை யதார்த்தத்தோடு பொருந்தியிருக்கவில்லை. முரண்கள் முற்றி முடிவொன்றுக்கு வரவேண்டிய முகூர்த்தம் நெருங்கியிருந்தது. கட்டுகளை விடுவிக்க ஏதோ ஒரு திசையிலிருந்து பலமான சொடுக்கி (Trigger) ஒன்று தோன்றாதா என்னும் நிலை. பாலகுமாரனின் கதைகள் அந்தச் சொடுக்கியாக, சாட்டையாகச் செயல்பட்டன என்பதே அவற்றின் வரலாற்றுப் பங்களிப்பு. ‘ஓ. நீ பாலகுமாரனெல்லாம் படிக்கிறாயா…?’ என்பது மூத்த தலைமுறையிடமிருந்து எழுந்த பயமான கேள்வி. இனி சொல்லுக்கு அடங்கமாட்டார்கள். தம் விதியைத் தாமே எழுதிக்கொள்ளும் வழியில் பயணப்பட்டுவிட்டார்கள். பாலகுமாரனைப் படித்த இளைய தமிழகம் தத்தம் மனங்கள் சொன்ன வழியில் நேர்கொண்டு நிமிர்ந்து நடந்தது. இந்த மாற்றத்தைக் காலம் ஏற்றுக்கொண்டுவிட்டது. 

இன்று காதல் திருமணங்கள் பெற்றோர் வாழ்த்துகளோடு சரிவிகிதத்தில் நிகழ்கின்றன. ஏற்பாட்டுத் திருமணங்கள் சாதி வேலி தாண்டியும் நடத்தப்படுகின்றன. பழைய கட்டுமானங்கள் முற்றாகத் தகர்ந்துவிட்டன என்று சொல்ல முடியாதுதான், என்றாலும் தொடரும் வழக்கங்கள் பொருந்தாப் போக்குகளை ஒழியச் செய்துவிடும் என்றே நம்புகிறேன். இந்த இடத்திற்கு நாம் வந்து சேர ஓர் எழுத்தாளர் தம் எழுத்துகளின் வழியாகக் கனவு கண்டார், தொடர்ந்து விமர்சனங்களுக்கு அஞ்சாமல் எழுதினார், தாம் கூறவந்ததை உலகேற்கச் செய்தார், அவற்றை இன்று நடைமுறையாகக் காண்கிறார். இந்தப் பார்வையில் நாம் பாலகுமாரனைப் பார்க்கவேண்டும் என்று சொல்வேன். ஓர் எழுத்தாளரால் விளைய வேண்டிய உச்சபட்ச நல்விளைவு, சமூக மாற்றம் இதுதான்.

ஆண்கள் உணரும்படி பெண்மன ஆழத்தை பாலகுமாரன் அளவுக்கு விவரித்தவர்கள் மிகக் குறைவே. ‘நெட்டி பொம்மைகள்’ நீலாவையும் ‘யாதுமாகி நின்றாய் காளீ’ சவீதாவையும் படித்த ஆண் தனக்குள் மனங்குமையாது அமைந்துவிட முடியுமா ? இப்பேருலகின் மனித ராசியின் மாபெரும் மற்றொரு பாதி அல்லவா அவர்கள். ஈன்று புறந்தந்து அமுதூட்டும் அமிர்தவர்ஷினிகள். அவர்கள் நிரந்தமாகத் தாய்மையின் கருணையோடு நோக்குகிறார்கள். தாயுள்ளத்தோடுதான் உயிர்களை நேசிக்கிறார்கள். எல்லா ஆண்மைய நிமித்தங்களையும் எதிர்கொள்கிறார்கள். அந்தப் பெருமையைப் புரிந்துகொள்ளும் ஆண், பெண்களை மதிப்பான். நிபந்தனையின்றி நேசிப்பான். காப்பான். ஆண்களை அந்தப் புள்ளிக்குத் தம் கதைகளால் நெம்பித் தள்ளியவர் பாலகுமாரன். தனக்குள் மார்பு பெருகிச் சுரந்து தாயாகினால் மட்டுமே அப்படி எழுத முடியும்.

சொற்களின் சொற்றொடர்களின் நுண்ணிய பொருள்களை உணர்வதில் எனக்குத் தீராத விருப்பமுண்டு. மொழித்தொடர்களில் நாம் அறிந்தேயிராத வேறு புதையல்கள் அப்படித்தான் புதைந்துள்ளன. அவற்றை உணர உணர மொழியும் மொழியால் கட்டப்பட்டுள்ள நம் சிந்தனைத் திறமும் ஒருபடி உயர்கிறது என்பது என் நம்பிக்கை. ஸ்திரீலோலன்’ என்னும் கதையை, கதைத் தலைப்பைப் பார்த்துப் புன்முறுவலோடு படிக்கத் தொடங்குகிறோம். பெண்களுக்காக அலைபவன் என்பதைத் தலைப்பின் பொருளாகப் புரிந்துகொள்கிறோம். கதைப்படி அந்நாயகன் பெண்களால் தர்க்கத்திற்குப் பொருந்தாத சூழ்நிலைகளால் அவதியுறுவதைக் காண்கிறோம். ஸ்திரீகளால் அவன் தகைமைகெட அல்லல்படுகிறான். ஸ்திரீ லோலன் என்பவன் பெண்களால் அவதியுறுகின்றவன். அந்த ஏளனத் தொடருக்குள் பொதிந்திருப்பது அழுத்தமான துக்கத்தின் பொருள். சொற்றொடரை நீட்டுவதில் பொருளின் மற்றொரு நிழல்பக்கம் நமக்குப் புலப்படுகிறது.

கருவைக் கலைப்பதற்காகத் தன் அண்ணன் வீட்டுக்கு வந்து குமைந்து நிற்கும் ராஜியைச் சுடுசொற்கள் பொசுக்குகின்றன. கலைத்துவிட்டு வா என்றனுப்பும் அவள் மாமியாரும் கணவனும் இரக்கமற்றவர்களாகத் தோன்றுகிறார்கள். ஏச்சும் பேச்சுமான மனத்தோடு கலைப்புக்கூடங்களுக்கு வேண்டா வெறுப்பாக அழைத்துச் செல்கிறான் தமையன். அங்குள்ள குடும்ப மருத்துவர் மறுத்து, அதற்கென்று உள்ள மனைக்கு அனுப்புகிறார். அங்கு பெண்மைக்கு எதிரான முள்கேள்விகளை அடுக்குகிறாள் மருத்துவச்சி. எதுவும் ஒவ்வாமல் கலைக்காமல் உள்ளம் வெதும்பிப் புகுந்தகம் திரும்பும் ராஜியிடமிருந்து எந்தச் செய்தியுமில்லை. அங்கே சென்று பார்த்தால் அந்த அலைக்கழிப்பில் கரு தானாகக் கலைந்துவிட்டிருக்கிறது. ஏவிய மாமியார் தன் கொடுமை பொறுக்காமல் அழுகின்றாள். ஆயிரம் பரிகள் பூட்டிய தேரொன்றில் பவனி வரும் சூரியனின் ஒளிரும் கதிர்களைக் காண்பதற்காகக் கருவான அந்தப் புத்துயிர் தன் வருகை பொறாத இவ்வுலகை எண்ணித் தானாகத் தன்னை அழித்துக்கொள்கிறது…! இந்தக் கதையைப் படித்த பிறகு என்னால் தாளமுடியவில்லை. மௌனமான கதாபாத்திரம் ஒன்றைச் சுற்றி கண் நிரம்பும் உணர்வெழுச்சிகளை உருவாக்க முடியும் என்பதற்குச் இந்தக் கதை – செங்கல் -  சான்று.        

பாலகுமாரனின் ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்றே பரபரக்கிறேன். எல்லாக் கதைகளும் எதிர்பாராத திசையிலிருந்து ஒரு திறப்பை ஏற்படுத்த வல்லவை. புதிதான களத்திலிருந்து பொதுவான மனமொழியின் வழியாக அரிதான தளத்திற்குள் நுழைந்துவிடுபவை. அதுவே வாசிப்பின் இன்பமும் பயனும். சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அவருடைய பல கதைகள் இன்றும் அவற்றுக்கே உரிய புதுமை மங்காமல் மின்னுகின்றன. இன்றும் இவற்றோடு உறவுகொள்ள வாசகர்களுக்கு அதேயளவு  தேவையிருக்கிறது.

பாலகுமாரன் என்னும் பெருங்கதைகளின் ஆசிரியர், பெருமக்கள் திரளால் ஆசானாக ஏற்கப்பட்டவர் – மீது இலக்கியப் புலத்தில் முன்னும் பின்னுமான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. அவருக்கு எதிரான விமர்சனங்களுக்குப் புகழ்க்காய்ச்சலே முதன்மைக் காரணமாக இருக்கவேண்டும். எழுத்துலகில் அன்னார் பெற்ற புகழை இனியொருவர் பெறுதல் குதிரைக்கொம்புதான். மக்களால் ஏற்றுக் கொண்டாப்பட்டதைத்தான் புகழ் என்கிறேன். வேண்டுமானால் அங்கங்கே குழுக்குழுவாகச் சிற்றரசுகளை உருவாக்கிக்கொள்ளலாம்.

எழுத்துக்குத் தரம்பிரிப்பவர்கள் எழுத்தாளர்களின் எழுத்தாளர்களோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். வாசக மனத்தில் தோற்றுவிக்கப்படும் விளைவுகளை அவர்கள் எப்போதும் கருத்தில் கொண்டதேயில்லை. அதனால்தான் இலக்கிய மதிப்பீடுகள் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குப் பிறகும் தகர்கின்றன. ஒரேயொரு எழுத்தாளர் முப்பது நாற்பதாண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கிறார். பாலகுமாரன் தம் எழுத்துகளின் வழியாக மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள் என்றே மழையாய்ப் பொழிந்தார். மழை பொழிந்ததுபோல் வெள்ளமாக எழுதும் எழுத்தாளர்கள் அடிக்கடி தோன்றமாட்டார்கள். அவர்கள் ஒரு சமூகத்திற்குக் கிடைத்த அபூர்வப் பரிசுகள்.

சுபமங்களாவுக்கு அளித்த பேட்டியொன்றில் பாலகுமாரன் ‘தாம் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வாசிக்கப்படுவேன்’ என்று கூறியதாக ஞாபகம். அவர் கூற்று  உண்மையாவதற்கான எல்லாத் தடயங்களையும் பார்க்க முடிகிறது. இன்று தமிழ் எழுத்துகள் அசுர வேகத்தில் எழுதப்படுகின்றன், அதைவிடவும் மின்னல் வேகத்தில் வாசிக்கப்படுகின்றன. உடனடியாக இணையத்தில் ஏற்றுவதால் உலகத் தமிழர்கள் அனைவரையும் அது நொடிப்பொழுதில் சென்று சேர்கிறது. அச்சு ஊடகக் காலத்தில் செங்கோல் தாங்கியவர்கள் தம் எழுத்துகளில் காட்டிய நிதானமும் பொறுப்பும் மேதைமையும் இன்று அருகிப் போய்விட்டன. பொரி கடலையைப் போன்ற உடனடி எழுத்துகள் பெருகிவிட்டன. இந்தப் போக்கு அப்படியே தொடரும் அல்லது இன்றைவிடவும் கீழிறங்கும் என்றே தெரிகிறது. ஏனென்றால் அது எப்போதும் அப்படித்தான் ஆகியிருக்கிறது. அவ்வாறான ஒரு நிலைமையில்தான் நம் முன்னோர்களின் எழுத்துகளுக்கு மற்றொரு மதிப்பான கவனிப்பு கிடைக்கவிருக்கிறது. எழுத்தை, அது எழுதப்பட்ட காலத்தில் வாசித்துப் பயன்பெற்றதைக் காட்டிலும், பிற்காலச் சுற்றில்தான் அதன் முழுமை உணரப்பட்டது என்பதை வரலாறு காட்டுகிறது.  

ஐயனே... நீங்கள் இயற்கை எய்திவிட்டீர்கள் என்பதை ஏற்க முடியவில்லை. தமிழ்கூறு நல்லுலகின் நினைவுள்ளவரை எங்கள் நெஞ்சத்தில் என்றென்றும் வாழ்வீர்கள் !

மகுடேஸ்வரன் கவிஞர் முகநூல் வழி

***********†*******####

எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்ததாக கேள்விப்படுகிறேன். அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஆனால் வருத்தம். தன் உடல் உபாதைகளைப் பற்றியும் அதிலிருந்து மீண்ட அனுபவங்களைப் பற்றியும் பல முறை அவர் எழுதியிருப்பதால் அதிர்ச்சியாக இல்லை. இளமைப் பருவத்தில் அவருடைய எழுத்தை விழுந்து விழுந்து வாசித்திருக்கிறேன். அவருடைய புகைப்படம் அட்டையில் இருந்தாலே அதை வாங்கி விடும்படியான நம்பிக்கையை தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்தி வைத்திருந்தார். 

இளமையில் என்னை தீவிரமாக பாதித்த எழுத்தாளர் பாலகுமாரன். மிக குறிப்பாக, தன்னிச்சையான ஆண்மையச் சிந்தனையோடு இருந்த விடலையான என்னை பெண்ணின் உடலைத் தாண்டி அந்த இனத்தின் அகம் சார்ந்த பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உணர வைத்தார். இந்த நோக்கில் சில பல புரிதல்களையும் முதிர்ச்சியையும் அடைந்தது அவருடைய எழுத்தின் மூலம்தான்.

பள்ளிக்கூடங்களைத் தாண்டி வெளியுலகில் நான் நூலக உறுப்பினராக முதன் முதலில் சேர்ந்தது ‘மறைமலையடிகள் நூலகம்’. (இது பிற்பாடு கன்னிமராவோடு இணைக்கப்பட்டது). அங்கு முதன் முதலில் வாசிக்க எடுத்து வந்த நூல் பாலகுமாரனின் ‘பச்சை வயல் மனது”. காலையில் வாங்கின நூலை மதியத்திற்குள் வாசித்து முடித்து விட்டு திருப்பியளித்து வேறொன்றை வாங்கச் சென்றேன். ‘ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்தான், போ’ என்று திருப்பியனுப்பி விட்டார் நூலகர். 

‘காதல் என்பது காதலுக்காக காதலையே விட்டுக்கொடுத்தல்’ என்று பல முறை அவர் நினைவூட்டிய உபதேசம், காதலிக்காத பெண்ணின் மீது வன்மத்துடன் ஆசிட் வீசும் ஆண்மகன்கள் இருக்கும் இன்றைய நிலையிலும் கூட செல்லுபடியாகக்கூடியது. 

ஒரு காலக்கட்டத்திற்குப் பின்னர் ஆன்மீகம் என்கிற தளத்தின் மீது அவரின் சாய்வு அதிகம் ஏற்பட, பரஸ்பரம் இருவரும் பிரிந்து சென்றோம். 

ஏறத்தாழ இரண்டு வருடங்கள் முன்னால் ஒரு தீவிரமான மனச்சிக்கலில் விழுந்து அது சார்ந்த கோபத்தில் ஒருவரிடம் மோசமாக நடந்து கொண்டேன். சற்றே சமநிலைக்கு வந்தபிறகுதான் நான் செய்ததின் மூடத்தனத்தின் குரூரம் எனக்கே புலப்பட்டது. நாயினும் கீழாக என்னை உணர்ந்தேன். தற்செயலாக பாலகுமாரனின் முகநூல் பதிவொன்று கண்ணில் பட்டது. அவருடைய நூல்களின் வழியாக அதுவரை கற்றதை, கோபத்தில் மீறிச் சென்ற முட்டாளதனத்தைப் பற்றி அவருக்கே ஒரு கடிதம் எழுதி மன்னிப்புக் கேட்டேன். இவ்வாறாக எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதுவது என் இயல்புக்கு முற்றிலும் முரணானது. அவர் அதைப் பார்த்தாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அப்படிச் செய்தது அந்த தீவிரமான மனநிலையில் எனக்கு சற்று ஆசுவாசத்தையளித்தது. 

தன்னுடைய இதுவரையான எழுத்தின் மூலம் அவர் பலருக்கு ஆசுவாசமாகவும் உபாத்தியாயனாகவும் இருந்ததை அறிவேன். ஓர் எல்லைக்குப் பிறகு அவர் நீர்த்துப் போனதை அவரே உணர்ந்தாரா என தெரியவில்லை. சிட்னி ஷெல்டன் போன்ற நூலாசிரியர்களின் வார்ப்பை தமிழில் வெற்றிகரமாக முயன்றவர்களில் பாலகுமாரன் முக்கியமானவர். 

கற்றுக் கொடுத்தவர் அத்தனை பேரும் ஆசான்கள் எனில் என்னளவில் பாலகுமாரன் முக்கியமானவர். ஆரம்பப் பள்ளியின் ஆசான் போல. 

அவருக்கு என் அஞ்சலி.

சுரேஸ்கண்ணன் விமர்சகர் 

 

***†*******

எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்தது எனக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவி காலந்தொட்டு நண்பர். அவரை சஃபாரி சூட்டில் இளைஞனாகப் பார்த்துப் பேசியது, பழகியதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

சமீபத்தில் ஆனந்த விகடனில் பழைய தமிழ் எழுத்தாளர்களை ஒன்று சேர்த்து ஒரு கலந்துரையாடல் செய்யத் திட்டமிட்டார்கள். 'அவசியம் பாலகுமாரனையும் கூப்பிடுங்கள்; அவர் முக்கியம்' என்று அறிவுறுத்தினேன். கூடவே, 'அவ்ர் உடல்நிலை ஒத்துழைக்காதெனில் அவரை சிரமப்படுத்த வேண்டாம்' என்றும் சொன்னேன்.

அவரைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னபோது, பெருமகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார். மற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தைப் பத்திரிகையில் பார்த்துப் படித்து முதலில் கூப்பிட்டுப் பாராட்டியவர் திரு.பாலகுமாரன்தான் என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. சக எழுத்தாளரைப் பாராட்டும் பெரிய மனம் பாலகுமாரனிடம் இருந்ததை நான் சாவி நாள்களிலேயே அறிவேன். 

எனவே, என் சிறுகதைத் தொகுதிக்காக அவரிடம் என் சிறுகதை ஒன்றைக் கொடுத்து, அதற்கு அவரின் விமர்சனத்தை கேட்டுப் பெறும் ஆவலில், என் சிறுகதையை அவரின் இமெயில் முகவரிக்கு அனுப்பியிருந்தேன். விரைவில் மதிப்புரை தருவதாகச் சொல்லியிருந்தார்.

நேற்றைய ஞாயிறன்று காலை அவர் இல்லத்துக்குச் சென்றேன், அவரைப் பார்த்துப் பேச. அன்றைக்கு விகடன் கலந்துரையாடலின்போது வேறு பணிகள் காரணமாக நான் வெளியூர் சென்றுவிட, அன்றைக்கு அவரைச் சந்திக்கவில்லையே என்கிற மனக்குறை எனக்கு இருந்தது. அதற்காகவே அவர் வீட்டுக்குச் சென்றேன். மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாக அவரின் துணைவியார் சொன்னார். அவர் பலமுறை இப்படிச் சென்று, ஓரிரு நாள் இருந்து, மீண்டும் புதுமனிதனாகத் திரும்பியிருக்கிறார். எமன் அவரை அவ்வளவு சீக்கிரம் நெருங்கமாட்டான், பயப்படுவான் என எண்ணியிருந்தேன். எனவே, நாளை அல்லது மறுநாள் போன் செய்துவிட்டு வருகிறேனம்மா என்று அவரின் துணைவியாரிடம் சொல்லிவிட்டு, வாங்கிக்கொண்டு போயிருந்த இனிப்பையும் ஹார்லிக்ஸ் பாட்டிலையும் அன்னாரிடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன்.

இன்று அவர் மறைந்துவிட்டார் என்று அதிர்ச்சித் தகவல்.

என்னால் தாள முடியவில்லை.

 

ரவிப்பிரகாஷ் பத்திரிகையாளர்

Link to comment
Share on other sites

கடவுளைத் தேடி….

ஷவரில் தலை அலசி குளித்த உடம்பு, கங்கையில் இறங்கி கும்மாளம் போட்டது. 

பத்து பாக்கெட்டுகள் பிஸ்கெட் வாங்கி அதை சாதுக்களுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு போனேன். சாதுக்கள் யாரும் பிஸ்கெட்டை லட்சியம் செய்யவில்லை. 

சிறுவர்கள்தான் வாங்கிக்கொண்டு போனார்கள். அதில் ஒரு சிறுவன் பிஸ்கெட்டுகளைப் பிரித்து நாய்களுக்கு வினியோகித்தான். தானம் யாருக்கு செய்தால் என்ன. எல்லாமும் சாதுக்களே என்பதுபோல உணர்வு வந்தது.

கங்கைக் கரையிலேயே வாழ்ந்து, அங்கேயே இறந்துபோக ஆசைப்பட்டு, அவ்விதம் இறந்தவர்களை தகனம் செய்யும் இடம் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.

அங்கு போகும் ஆசை வந்தது.....

கருப்பு வெள்ளைப் புகை. பிண நாற்றம். பல்வேறு சிதைகள். அங்கு இரண்டு தகதகத்துக் கொண்டிருந்தன. ஒன்று கனன்றுகொண்டிருந்தது. மற்ற மூன்றும் அமைதியாகி அடங்கிக் கிடந்தது. அதிலிருந்து அதிகம் புகை வந்தது. 

தெருவின் விளிம்பிலிருந்து பிணங்கள் எரிவதைப் பார்க்கமுடிந்தது. விறகுக் கட்டைகள் மாட்டு வண்டியில் வந்து இறங்கின. கைமாற்றிக் கொண்டுபோய் அடுக்கி வைத்தார்கள். 

ஏதோ ஒரு புதிய பிணம் வர, இறக்கச் சொல்லி தூக்கி வந்தவரிடம் காசு வாங்கினார்கள். பிறகு சிதை தயாரித்தார்கள். வயதான ஆணின் பிணம் சிதைமீது வைக்கப்பட்டது. அதன்மீதும் விறகுகள் வைக்கப்பட்டது. 

“ராம் நாம் சத்யஹ‘ என்பது இடையறாத வாக்கியமாக இருந்தது. எது விசாரிக்கப்பட முடியாத ஒரு விஷயமோ, எது விளங்காத ஒரு விஷயமோ, எது நம்மை ஆளுமை செய்கிறதோ, எந்த சக்தி நம்மீது படர்ந்து நம்மை இயங்க வைக்கிறதோ அதுவே சத்தியம்.

நானும் இறங்கி அந்த அடுக்கிய சிதைமீது வைத்திருந்த பிணத்தை உற்றுப் பார்த்து, அதன் காலைத் தடவி தலையில் வைத்துக் கொண்டு “போய் வாரும்’ என்று சொல்லி, “ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ‘ என்று அரற்றினேன்.

காலெல்லாம் சுடுகாட்டுப் புழுதி. எங்கோ உட்கார வேட்டியிலும் கருப்பு. பிணவாடை பழகிவிட்டது. முகத்திலும் புகை படிந்திருக்க வேண்டும். கங்கையில் குளித்த தலைமுடி சடையாகத்தான் இருந்தது. பரட்டையாகத்தான் கிடந்தது.

ஆண் நண்பரின் சிதைக்கு தீ வைக்கப்பட்டது. நான் கைகூப்பி வணங்கினேன்.

கண்கள் கலங்கின. எனக்கென்னவோ யாருக்காவது சமஸ்காரம் செய்யவேண் டும் என்ற எண்ணம் இருந்தது. 

அரைமணியில் இன்னொரு சடலம் வந்தது. அது பெண். எண்பது வயதிற்குமேல் இருக்கும். மழித்த தலை. பொக்கை வாய். சுருங்கி கோணலான கால்கள். சுருக்கமான தோல் உடம்பு. வற்றிய முலை. மார்பெலும்பு. நெற்றியில் சந்தனக் கீற்று. வட இந்திய விதவையாக இருக்கக்கூடும்.

அந்த சிதை உரிமையாளருக்கு கொஞ்சம் ஆங்கிலம் புரிந்தது. “சமஸ்காரம் நான் செய்கிறேன்’ என்று கேட்டதற்கு அவன் நான்கு விரல்களை நீட்டினான்.

எனக்குப் புரியவில்லை. விரலை சுண்டிக் காட்டினான். அந்த சமஸ்காரம் செய்வதற்கு நான் காசு கொடுக்கவேண்டும் என்று சொல்ல, இடுப்பு பெல்ட்டிலிருந்து நாநூறு ரூபாய் காசு எடுத்து அவனுக்குக் கொடுத்தேன். பையை ஓரம் வைத்தேன்.

ஒரு அந்தணர் வந்தார். அவருக்கு அவன் இருநூறு ரூபாய் கொடுத்தான். அவர் என் கையில் கண்டங்கத்திரி நூலைக் கட்டினார். பிரேதத்தின் நோய் என்னைத் தாக்காமல் இருப்பதற்காக அப்படி செய்வது வழக்கம் என்பது எனக்குத் தெரியும். 

நான் தர்ப்பை வளையத்தை கையில் தரித்துக்கொண்டேன். தர்ப்பைப் புல்லை இடுக்கிக்கொண்டேன். உட்கார்ந்து காலின்கீழ் தர்ப்பையை போட்டுக்கொண்டேன்.

அவர் சொன்ன மந்திரங்கள் எனக்குப் புரிந்தன. அந்த மந்திரங்கள் ஒரு நாவலுக்காக நான் திரும்பத் திரும்ப படித்து மனதில் ஏற்றிக்கொண்டவை. 

ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன அர்த்தம் என்று தெளிவாகத் தெரியும். இதுபற்றி பேசியும் நான் அறிந்திருக்கிறேன். என் தந்தை இறந்தபோது இந்த மந்திரங்களைச் சொல்லி, அர்த்தம் கேட்டு மனதில் பதியவைத்தேன். இதுபற்றி எழுதியும் இருக்கிறேன்.

எனவே இது அர்த்தமற்ற ஒரு விஷயமாக எனக்கில்லை. “ஏஷான்ன மாதா ந பிதா ந பந்துகு ந அன்னிய கோத்ரக'' என்ற மந்திரத்தின் அர்த்தம் எனக்குத் தெரியும்.....

“இந்த பிரேதமானது எனக்கு தாயாக, தந்தையாக, உறவினராக, என் வர்க்கத்தினராக இல்லாதுபோனாலும், இதன் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு திருப்தியத திருப்தியத திருப்தியத’' என்று கட்டை விரல் வழியே மறித்து நீர் வார்த்தேன். 

நான் சொல்வதைக் கேட்டு அந்த அந்தணர் 'அட!' என்று வியந்தார். தமிழர்கள் கெட்டிக்காரர்கள் என்று தன் நெற்றியை சுட்டிக்காட்டினார். நான் நீர்க்குடத்தோடு அந்த அம்மையாரை வலம் வந்தேன். பானையை உடைத்து தரையில் வீசினேன்.

வாயில் அரிசி போட்டேன். முன் நெற்றியை அவர் பாதத்தில் வைத்துக்கொண்டேன். 

“அம்மா, நீ எந்த ஜென்மத்தில் என் தாயோ, எந்த ஜென்மத்தில் என் சகோதரியோ எனக்குத் தெரியவில்லை. என் தாயே, உன் உள்ளம் குளிர மந்திர ஜெபம் சொல்லி, சிவ நாமம் சொல்லி, விஷ்ணு நாமம் சொல்லி உன்னை கரையேற்றுகின்றேன்’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

அந்த பிணம் வைக்கின்ற ஆள், “இறந்தவர்கள் இங்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்’ என்று சொன்னான்.

எல்லாரும் என் முகத்தையே பார்த்தார்கள்.

“இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன் கழல் தொழுதெழுவேன் கடலினில் அமுதொடு கலந்த நஞ்சை மிடரினுள் அடக்கிய வேதியனே’' என்று பாட, என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது. 

“தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்களென்றும் நோயே பட்டொழிந்தேன் உன்னை காண்பதோர் ஆசையினால் வேயே பூம்பொழில் சூழ் கனமாமலை வேங்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆளென்னை கொண்டருளே’' என்று அந்த அம்மையாரின் சார்பாக நான் பாட, அங்குள்ளவர்கள் தலையை அசைத்து ரசித்தார்கள். 

அவர்களுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனால் பாட்டின் இனிமை புரிந்தது. நெய்யில் தோய்த்து பற்றி எரியும் கொள்ளிக்கட்டையை அந்த சிதைக்கு அடியில் சொருகினேன்.  சுற்றிலும் நெய் வார்த்தேன். 

“பற்றே ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன் மற்றே ஒன்றறியேன் எங்கள் மாயனே மாதவனே’' என்று மனசு அலற பாடினேன்.

“ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ‘'. 

சிதை பற்றிக்கொண்டது. பச்சென்று மேலே எழுந்தது. உலர்ந்த கட்டைகள், நிறைய நெய், கோடை காற்று. சிதை திகுதிகுத்து எழுந்தது. 

''போ. போ போ.'' விரட்டினார்கள்.

நான் மேலேறி, வேறு பக்கம் படியிறங்கி முங்கி முங்கி கங்கை நீரில் குளித்தேன். இரண்டு கைகளிலும் நீர் எடுத்து அந்த அம்மாவின் வாயில் ஊற்றுவதுபோல நீர் வார்த்தேன்.

“சந்தோஷமா?" என்று மனதிற்குள் வினவினேன். “நிம்மதியாகப் போய் வா!" என்று கைகூப்பினேன். ஒரு பித்து நிலையில் கொஞ்சம் பேசினேன்.

“நான் இறக்கும்போது நீ வா. அடுத்த ஜென்மத்தில் ஒரே இடத்தில் பிறப்போம். ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டவராய், அறிந்து கொண்டவராய், ஏதோ ஒரு உறவாய் வாழ்வோம். பேசுவோம். சிரிப்போம். இந்த தகனத்தோடு உன் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. என் இறப்போடு என் வாழ்க்கை முடிந்துவிடாது. இது தொடர்கதை. முன்னம் வினைப்பயன். மாறிமாறி வந்துகொண்டிருக்கும்........ 

உன் தகனத்தினால் என் வினையின் ஒரு பகுதி அறுந்தது. நான் உன்னை தகனம் செய்ததால் உன் வினையின் ஒரு பகுதி அறுந்தது. எனவே இப்படி வினைகளை அறுத்து அறுத்து எறிந்து, எந்த எதிர்பார்ப்புமின்றி வாழ்ந்து நாம் உன்னதமான இடத்திற்குப் போகலாம்.’'

மனம் செயல்களை செய்யக்கூடாது. மனம் சாட்சியாக இருக்கவேண்டும். எந்த யோசனையும், எந்த திட்டமிடலும், எந்த உந்துதலும் இருக்கக்கூடாது.

உணவு கிடைத்ததா சாப்பிடு. மழை பெய்ததா குளி. செத்தாரைப்போல திரி என்று ஏதேனும் ஒரு ஜென்மத்தில் வாழ்க்கை நடக்கவேண்டும். உந்துதல் அற அற இப்படிப்பட்ட ஒரு ஜென்மம் கிடைக்கும்.

“அய்யா, உமக்கு என்ன பெயர்?.’'  “எனக்கா, என்ன பெயர் தெரியவில்லையே....'’ என்று விழிக்கவேண்டும். இந்த நிலை ஒரு கனவா, என் கற்பனையா, ஒரு வெற்று ஆசையா. இப்படி வாழமுடியுமா?. 

பெயர் அறுத்துப் போகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். கங்கைக்கரை சாதுக்களெல்லாம் பெயர் அறுத்தவர்கள் அல்ல. இது ஒரு ஸ்திதி. இதிலிருந்து இரண்டு மூன்று ஜென்மங்களுக்குப் பிறகு அவர்கள் பெயர் அறுத்த மனிதர்களாக வாழ்வார்கள். 
எவரும் இல்லாது கங்கைக் கரையில் கிடைத்ததை உண்டு வாழ்வதும் ஒரு அழகான இடம்தான். 

எங்கோ மயிலாப்பூரில் இரண்டு மனைவியரோடு வாழ்ந்து, இங்கே எவருக்கோ தகனம் செய்து கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டிருப்பதும் ஒரு அழகான இடம்தான். இது ஒரு ஜென்மம். இம்மாதிரி பல ஜென்மங்கள் தாண்டித்தான் நான் உன்னத நிலைக்குப் போக முடியும்.

அந்த தகனத்திற்குப் பிறகு நான் பல மணிநேரம் கங்கைக்கரை படியில் உட்கார்ந்திருந்தேன். வேறுவிதமாக நடிக்கிறேனோ என்ற எண்ணத்தை சோதித்துக் கொண்டேன். 

இல்லை என்று புரிந்துகொண்டேன். எங்கோ இருக்கின்ற வீட்டின்மீது பற்றும், இப்பொழுது இந்த இடத்தில் அமர்ந்திருக்கின்ற தனிமையும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றே. இது ஒரு வேலை. இது ஒரு பயிற்சி. இது ஒரு ஒர்க் ஷாப். இது ஒரு பள்ளிக்கூடம்!

எழுத்தாளர் திரு பாலகுமாரன்.

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: பாலகுமாரன் புகழஞ்சலி- எழுத்தாளர்களை மட்டும் பூஜித்த கடைசி தலைமுறையின் கடைசி எழுத்தாளர்!

 

 
jkljpg

 எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எழுத்தாளர் பாலகுமாரனின் மரணம் குறித்தும் அவரது அவரது படைப்புகள் குறித்து வாசகர்களும், நெட்டிசன்களும் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

sujatha ramesh

 

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு  தமிழ் எழுத்துலகத்திற்கும் வாசகர்களுக்கும் பேரிழப்பு. அவர் எழுத்து ஏற்படுத்திய தாக்கம்  மிகப் பெரியது. அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Hari

‏பெண் விடுதலை/சுதந்திரம் பற்றி லெக்ஷ்மி, அனுராதா ரமணன் போன்றோர் சொல்லியும் கேட்காத பல ஆண்களை... தாயுமானவராக ஆக்கியவர் பாலகுமாரன்....

Gurusamy Manikandan

‏உங்கள் இழப்பு எங்கள் குடும்பத்திற்கும் எங்கள் தமிழ் மொழி ஆளுமைக்கு பேர் இழப்பு #BalaKumaran ஐயா...

sujatha ramesh

‏#Balakumaran அவர் இறந்தாலும் ரசிகர்கள் மனதில் என்றும் வாழ்வார்!!!

அன்புடன் பாரதி

‏எழுத்தாளர்களை மட்டும் பூஜித்த

கடைசி தலைமுறையின்

கடைசி எழுத்தாளர்!!

Alex Pandian

‏இரும்பு குதிரைகள்

மெர்க்குரிப் பூக்கள்

உடையார்

தாயுமானவன்

பச்சை வயல் மனது

...

...

எண்ணற்ற புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் .. !!

falseDilemma

‏அப்பம் வடை தயிர்சாதம்.. பாலக்குமாரன்

Satheesh Kumar

‏எனக்கு ஜார்ஜினாவை அறிமுகப்படுத்தியவர் (பயணிகள் கவனிக்கவும்)

எனக்கு யோகி ராம் சூரத் குமார் பற்றி புரியவைத்தவர்

இலக்கியம், வரலாறு, நவீனம், வாழ்வியல் பற்றிய என் பார்வைகளை மாற்றியவர்

தமிழக எழுத்துலகில் மிக முக்கியமான மாணிக்கம்

CSK ராட்சசன்

‏பொன்னியின் செல்வன் படித்தாகிவிட்டது. இதில் என்ன இருக்கபோகிறது என்றுதான் உடையார் நாவலை படிக்க ஆரம்பித்தேன்.. இரண்டாம் பக்கத்தை கடந்தபோதே சோழதேசத்திற்கே சென்றுவிட்டேன்

Alex Pandian

‏நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல (நாயகன்)

நான் ஒரு தடவ சொன்னா... நூறு தடவ சொன்ன மாதிரி (பாட்ஷா)

சந்தோஷமோ கோபமோ ஒரு அஞ்சு நிமிஷம் தள்ளிப் போடலாமே (காதலன்)

ஜென்டில்மேன், ஜீன்ஸ் என சிந்துபைரவி, புன்னகை மன்னன்...

கார்த்தி         

எழுத்துலகில் ஒரு சகாப்தம்

நிலாவன்

‏இலக்கிய வாசிப்புக்கு முதல் சாளரம்.. அன்றைக்கு ‘போராடும் பெண்மணிகளி’ல் ஆரம்பித்தது தான் என்னை இலக்கிய உலகத்திற்கு தள்ளியது. அந்த நன்றி என்றும் பாலகுமாரனுக்கு உண்டு என்னிடம்.

கார்த்திக் கண்ணதாசன்

‏நீதிமன்றத்தில் சத்தியம் என்பது சம்பிரதாயம்...

#சிட்டிசன் #RIP #Balakumaran

நா. ப. மணிகண்டன்

‏பாலகுமாரன் என்ற எழுத்துலகம்,

விண்ணுலகம் சென்றது..

Shankar

‏உடையார் ஒன்றே போதும் !!

AR Bharaty

‏உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் #Balakumaran சார்!

ஒரு தடவ சொன்னால் நூறு தடவ சொன்னமாதிரி முதல்! பல வசனங்களின் கைத்தட்டலுக்கு சொந்தக்காரர்!

NELLAIseemai/நெல்லைச்சீமை

‏தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.

Kandeeban

‏ உடையாரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் என்னை உறைய வைத்தவன் இன்று உலகையே உறைய வைத்து விட்டு இறையடி சேர்ந்தார் ..

கார்த்திக் கண்ணதாசன்

‏மரபுகளை மாத்த முடியாது. முயற்சி பண்ணினால் மனிதர்களை மாத்த முடியும். தலைவர்களை மாத்த முடியாது, முயற்சி பண்ணினா மக்களோட தலையெழுத்தை மாற்ற முடியும்

பாரத்...பாரதி...

‏ஆசைப்பட்ட பொருள், ஆசைப்பட்ட நேரத்தில்,

ஆசைப்பட்ட விதத்தில்,

கிடைக்காமல் போவது தான் வாழ்க்கையின் சுவாரஸியம்!

- பாலகுமாரன்.

விடியலைதேடி

‏எண்ணங்களை எழுத்தாகவும்,

எழுத்தினை எண்ணமாகவும் மாற்றி எழுதி மக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

J.Vimal Adithyan

‏எனது சோழனை பற்றி ரத்தமும் சதையுமாய் எழுதிய எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார். ஆனாலும், என்றும் அவர் படைத்த படைப்பிலும், அவர் எழுதிய எழுத்துக்களிலும் அழியாமல் இருப்பார் . எழுத்துக்கள் எல்லாம் தலை வணங்கும் நாள் இது.

TKo

‏#பாலகுமாரன். எனது ரசனையை வடிவமைத்தவர்களில் இவரும் ஒருவர். இவர் கதைகளை எனக்கு அறிமுகம் செய்த நண்பன் அ.வேவுக்கு நன்றி.

கவிதா

‏செல்போன் வைத்திருப்பது வரமா, சாபமா?

"எல்லா வரமும் சாபம்தான். உபயோகப்படுத்துவதில் ஒழுக்கமில்லாத வரை"- பாலகுமாரன்

#குதிரைகள் பசுக்கள் போல

வாய் விட்டு கதறுவதில்லை

வலியில்லை என்பதல்ல

வலிமையே குதிரை ரூபம்

தொட்டதும் சிலிர்க்கும் குதிரை

சவுக்குக்காப் பணிந்து போகும்"- பாலகுமாரன்

காளையன்

‏பல வருடங்கள் க்ரைம் கதைகளில் லயித்திருந்த மனதை, அப்படியே ஆனந்த வயல்-இன் மூலம் திருப்பி,இனி அவரின் கதைகள் நூலகத்தில் இல்லை எனும் அளவுக்குத் தேடித்தேடி படிக்க வைக்கும் சித்து வேலை அறிந்த எழுத்துச் சித்தர் #பாலகுமாரன் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

Sangeetha

‏மறைந்த பாலகுமாரன் அவர்களை அடையாளப்படுத்தவும் நாலு திரைப்படங்கள் தான் தேவைப்படுகின்றது சில ஊடகங்களுக்கும், மனிதர்களுக்கும் # 

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்..

‏தெரு குழல்விளக்கில்

 முட்டிமுட்டிப்

 பால்குடிக்கும்

விட்டில் பூச்சிகள்!!!

இசை S D

‏எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது வாசக ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இலக்கியம், திரைத்துறை என இரண்டிலும் தனிமுத்திரை பதித்தவர்.

அன்புடன் பாலு

‏நானே எனக்கொரு போதிமரம்..!

வினோத்

‏ஏறி வந்த ஏணி. சென்று வாருங்கள் பாலகுமாரன்.

இனி வரும் புத்தகக்கண்காட்சிகளிலும் நீங்கள்தான் சூப்பர்ஸ்டார்!

silva stunt

‏தன் எழுத்தின் மூலம் என் வாழ்க்கை முறையை மாற்றியவர்#பாலகுமாரன் RIP

சால்ட்&பெப்பர் தளபதி

‏ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கண்ணீர்த் தருணங்களில் பாலகுமாரன் உடனிருந்திருப்பார்

NARAYANAN THIRUPATHY

‏என் அபிமான,மிக சிறந்த எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்.

Raji

‏உம் பிரிவு

இலக்கிய உலகில்

அஸ்தமனமே..

நோயால் வதங்குவதை விட

விடைபெறல் மேலென

சென்றீரோ..

உம் ஆத்மா

அமைதியுற

இறையடி பணிகிறேன்..

ஆன்மீக அன்சாரி மஸ்தான்  

‏என் எழுத்து ஆசான் , என்னை எழுத தூண்டிய வித்தகன் அருமையான உரைநடை எழுத்தாளர் பாலகுமாரனின் ஆத்மா நிம்மதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஆழ்வார்க்கடியான்

‏கரையோர முதலைகள்

ஆனந்த வயல்

இரும்புக் குதிரைகள்

அப்பம், வடை, தயிர்சாதம்

பாலகுமாரன் அவர்களது அருமையான படைப்புகள் !

Ravikumar

ஏழுத்தாளர் பாலகுமாரன் காலமானார் என்ற செய்தி  மனதை சங்கடப்படுத்துகிறது. மெர்க்குரிப்பூக்கள் தொடராக வந்தபோது வாரா வாரம் காத்திருந்து வாங்கிப்படித்த கல்லூரி காலம் நினைவில் நிழலாடுகிறது. அவரது ஆன்மீக ஈடுபாட்டையும் தாண்டி அவரது எழுத்தை ரசிக்க முடியும்.

Jarvis

‏வாழ்வில் ஒருமுறையேனும் தஞ்சை பெருவுடையாரை தரிசித்து விடுங்கள் ~ பாலகுமாரன்

Harisudhan

‏எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு... அவரின் நிறைய கதைகள் கட்டுரைகள் படித்து பொழுது ஓட்டியதும்.. அவரின் உடையார் மற்றும் கங்கை கொண்ட சோழன் புதினங்களும் அவரின் படைப்புகளில் சிறந்தது.. சில விஷயங்களில் அவரிடம் வேற்றுமை கொண்டாலும் - அவரின் எழுத்துகள் என்றுமே மறக்க இயலா.. :(

Balaji

‏குறுநாவல்களில் புத்துணர்வைப் பூட்டிய எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு

அப்பாவி

‏அன்பு. இதுவே என் கதையின் பிரதானம்..இதுவே எல்லோருடைய தேவையாயும் போதுமானதாயும் இருக்கிறது. இது கிடைத்துவிட்டாலே சமுதாயம் சீராகிவிடும். மக்கள் நிம்மதியாய் வாழ்வர் -  எழுத்தாளர் பாலகுமாரன் #RIP

CSK நாத்திகன்

‏சுஜாதாவுக்கு முன்னாடி பாலகுமாரன் தான் ஷங்கருக்கு முதுகெலும்பா இருந்தாரு.

http://tamil.thehindu.com/opinion/blogs/article23892227.ece?homepage=true

Link to comment
Share on other sites

என் வாசிப்பில் முக்கியமான காலகட்டத்தில் வளர்ச்சியை ஏற்படுத்திய எழுத்தாளர் பாலகுமாருக்கு என் அஞ்சலி

அம்புலிமாமா வில் இருந்து முன்னேறி ராணி காமிக்ஸ் அதன் பின் ராஜேஸ்குமார், பட்டுக் கோட்டை பிரபாகர், சுபா போன்றோரின் மர்ம நாவல்களை வாசித்து கொண்டு இருந்த என்னை வாசிப்பில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில் எழுத்தாளர் பாலகுமாரின் எழுத்துக்களுக்கு முக்கிய பங்கிருக்கு. பாலகுமாரின் எழுத்துகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது நண்பன் சேதுமாதவன் தான். பாலகுமாரின் 'இனி இரவு எழுந்திரு' நாவல் ஒரு தொடராக குமுதம் இதழில் வர அதை கண்டிப்பாக வாசிக்க சொல்லி வாசிக்க வைத்தான். அதன் பின் 'மெர்குரி பூக்கள்' ளும் பின் 'இரும்புக்குதிரையும்' பாலகுமாரின் நாவல்களை தேடி தேடி வாசிக்க வைத்தன. 

பாலகுமார் தன் எழுத்து பாணியை வெறும் கமர்சியலாக மாற்றியபின் அவரின் எழுத்தை வாசிக்கும் விருப்பு மெல்ல மெல்ல தேய்ந்து போனது. அத்துடன் நானும் மக்சிம் கார்க்கி, டால்ஸ்டாய் போன்ற ரஷ்ய எழுத்தாளர்களின் பக்கம் தாவி விட்டேன்.  ஆனால் இந்த தாவலுக்கு இடைப்பட்ட வளர்ச்சியை தந்தது பாலகுமார் தான். அவரது எழுத்துகள் இல்லாவிடின் இன்னும் ராஜேஷ்குமாரில் தொங்கி கொண்டு இருந்திருப்பேன்.

40+ ஆகிய பின் வாழ்வில் செல்வாக்கு செலுத்தியவர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்வுகள் அடிக்கடி வருகின்றன. அந்த வரிசையில் இன்று எழுத்தாளர் பாலகுமார்.

அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பில் ஈடுபாடுள்ள பலரையும் போல எனக்கும் அம்புலிமாமாதான் முதலாவது வாசிப்பு அனுபவம். அங்கிருந்து ராணி காமிக்ஸ் தாவி ஆனந்தவிகடன், குமுதம், கல்கண்டு என்று சஞ்சிகைகளையும் தாண்டி, வீரகேசரி பிரசுரங்களில் வந்த நாவல்கள் படித்து, சாண்டில்யனின் சரித்திரக் கதைகளையும் ரசித்த பின்னர்தான் ஜெயகாந்தனதும் பாலகுமாரனதும் எழுத்துக்கள் பதின்ம வயதுகளில் அறிமுகமாகின. பாலகுமாரனின் சொற்களால் கட்டியமைக்கப்பட்ட உலகை வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளனாக பல வருடங்கள் இருந்துள்ளேன்.

எனினும் பேரூந்துப் பயணங்களில் படிக்கும் பொக்கெற் நாவல்களாக அவர் எழுத வெளிக்கிட்ட பின்னர் நான் பாலகுமாரனுடைய எழுத்துக்களைப் படித்ததில்லை. 

ஆனாலும் அவருடைய புத்தகங்களில் இருந்து பொறுக்கிய சிந்திக்க வைக்கும் வசனங்களை பல பக்கங்களில் எழுதி பொக்கிஷமாக வைத்திருக்கின்றேன்.

உதாரணமாக:

“உலகம் எத்தனை விதம். இல்லாதவனையும் பழிக்கும். ஏதும் இருக்கின்றவர்களையும் பழிக்கும். படிக்காதவனைப் பாழ் என்றும், படித்தவனைத் திமிர் என்றும் இடித்துரைக்கும். அழகற்றவனைக் கேலி செய்யும். அழகுள்ளவனை அசிங்கம் பேசும். வலுவற்றவனை இயலாதவன் என்றும் வலுவுள்ளவனைப் பொறுக்கி என்றும் புறம் கூறும். இவ்வுலகத்து மக்கள் பேசிப்பேசிக் கெட்டுப் போனவர்கள். பிறர் வாழ்க்கையில் மூக்கு நுழைத்து முகர்ந்து தன் நாற்றம் மறக்கிறவர்கள்”

எனது வாசிப்பை விரிவாக்க ஒரு காலகட்டத்தில் உதவிய எழுத்துச் சித்தர் பாலகுமாரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்......இவருடைய  நூல்கள் சில    என்னிடமும்     உள்ளது
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

 

பாலகுமாரனின் உடலுக்கு சற்று முன் அஞ்சலிசெலுத்திவிட்டு வந்தேன். வாசலில் 50க்கும் மேற்பட்ட தொலைகாட்சி கேமிராகள் காத்திருந்தன. அது ஒரு உணர்ச்சிகரமான தருணம் .. சம்பிரதாயமான ஏதோ வார்த்தைகளை பேசினேன். ஒன்று மட்டும், நினைவிருக்கிறது ‘’ பாலகுமாரன் என் இளமைக் காலத்தை நிரப்பினார்’’ . அந்த சொல் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்தது. நன்றாக யோசித்துபார்த்தால் ஒரு பெண் உடலை நான் முதன்முதலாக என் பதின்ம வயதில் பாலகுமாரனின் கதைகளில்தான் உணர்ந்தேன். பெண் உடலை மட்டுமல்ல, பெண் மனதை, அவளது உக்கிரத்தை.மத்திய தர வர்க்கத்தின் அந்தரங்க நெருக்கடிகளை ஜெயகாந்தனுக்கு பிறகு ஒரு பெரும் உரையாடல் களத்திற்கு பாலகுமாரன் கொண்டு சென்றார். பாலகுமாரன் அளவுக்கு வாசகிகளை கொண்ட இன்னொரு எழுத்தாளர் இருந்ததில்லை. அவர் பெண்களின் உலகத்தை எழுதினார். நவீன மத்தியதர பெண்களின் ஆளுமைக்கு தன் கதாபாத்திரங்களின் வழியே ஒரு வடிவம் கொடுத்தார்

அவரது கதைகளின் நுட்பமான விவரணைகள் கண்டு அதிர்ந்திருக்கிறேன். ஒரு ஆளால் இவ்வளவு கவனிக்க முடியுமா? ஒரு மிகையான அழகுணர்ச்சி அவரை ஆட்கொண்டிருந்தது. தமிழில் சிற்றிதழ் சார்ந்து இயங்கிய இளம் எழுத்தாளர்கள் பலர் தங்கள் இலக்கிய அகங்காரத்தினாலும் வெகுசனப்பண்பாட்டில் கொண்ட வெறுப்பினாலும்  பாலகுமாரன் போன்ற பெரும் கதைசொல்லிகளின் நுட்பங்களை கற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தார்கள். 

 பாலகுமாரன் பெரும் வாசக பரப்பை ஆட்கொண்டார். பாலகுமாரனின் கதைகள் தி,ஜானகிராமன் கதைகளின் வெகுசன வடிவம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பாலகுமாரனின் களம் தி.ஜாவைவிட பெரியது. நவீன மத்தியதர வாழ்வின் நெருக்கடிகளை அவரது கதைகள் தீவிரமாக எதிர்கொண்டன. 

பாலகுமாரனின் கதைகள் வெளிச்சமானவை. ஒரு சாதாரணமான மனிதனுக்கு எதிர்த்துப் போராடி வெல்வதற்கான நம்பிக்கையை ஊட்டுபவை. வாழ்வின் மீறல்களுக்கும் பிறழ்வுகளுக்கும் ஒரு மானுட நியாயம் கற்பிப்பவை. 

பாலகுமாரனின் பிற்கால ஆன்மீக வாண வேடிக்கைகளுக்காக அவரை நிராகரிப்பவர்கள் அவரை படித்தவர்கள் அல்ல 

புத்தகக் கண்காட்சிகளில் பொது நிகழ்ச்சிகளில் நான் கவனமற்று அமர்ந்திருக்கும்போது பாலகுமாரனின் கை பிரியத்துடன் என் தோள்களை பற்றி அழுத்தியிருக்கிறது. எத்தனையோ கைகள் இல்லாமல் போனதுபோல பாலகுமாரனின் கைகளும் இனி இல்லை...

மனுஷ்யபுத்திரன்

 

Link to comment
Share on other sites

இயக்குனர் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா இசையில்  ஒரு படத்திற்குப் பாடல் எழுத என்னை அழைத்திருந்தார். "காதலாகி" என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்தப் படம்தான் பின்னாளில் "காதல் கொண்டேன்" என வெளிவந்தது.

நான் அவரது அலுவலகத்திற்குச் சென்ற பொழுது பாலகுமாரன் அங்கிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தார்.
என்னைக் கண்டதும்...." பழநி உன் பாட்டெல்லாம் நிறைய கேட்கிறேன்மா. நல்லா எழுதுற... ஆனா உன்னால ஏன் வைரமுத்துவைக் கடக்க முடியல?" என்றார். 

நான் பதிலுரைக்க முயற்சித்தபோது..."சாக்கு சொல்லாத. சாக்கு சொல்ல ஆரம்பிச்சா கவிஞனுக்கும் எழுத்தாளனுக்கும் சாக்கு சாக்கா சாக்குக் கிடைக்கும். உழை. நான் எவ்ளோ உழைக்கிறேன் தெரியுமா? நான் எழுதுறத காப்பி எடுத்தாலே முதுகு வளஞ்சிடும். செய்; அல்லது செத்து மடி" என்று சொல்லிவிட்டுப் போனார். 

உண்மைதான்... அந்தச் சொற்களுக்கு சாட்சியாக  அவரது நூல்கள் அவரை விட உயரமாக எழுந்து நிற்கின்றன.

அலுவலகங்களில் தொலைபேசியைத் துடைத்துச் சுத்தப்படுத்துவதெற்கென்று வரும் பெண்ணைப் பற்றி பாலகுமாரன் ஒரு கவிதை எழுதியிருப்பார்...

"இன்றைக்குச் செவ்வாய்க்கிழமை
நிலா பகலிலே வரும்
ஆகவே லேசாய்க் குளிரும்
மெளனமாய் நறுமணம் வீசும்
வீசவே இளமை விழிக்கும்
ஊமையாய் உடலும் மாறும்
திரும்பிய நிலவும் போகும்
போகவே இதயம் கேட்கும்
என்றைக்குச் செவ்வாய்க் கிழமை"

இந்தச் செவ்வாய்க்கிழமையை இப்படி ஊமையாக்கி அழ வைத்துவிட்டுப் போயிருக்க வேண்டாம் பாலகுமாரன்.

 

பழனி பாரதி கவிஞர்

Link to comment
Share on other sites

ஆனந்தவிகடனுக்கு பாலகுமாரனின் கடைசி பேட்டி! #RIPBalakumaran

 
 

 

தமிழின் மிக முக்கியமான தொடர்கதை எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி பேட்டி எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தது விகடன் டீம். சீனியர் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவரான பாலகுமாரன் வருவாரா, வரமாட்டாரா, அவர் வந்தால்தானே நிறைவாக இருக்கும் என டீமுக்குள் நிறைய உரையாடல்கள். "எத்தனை மணிக்கு வரணும், எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க. " என சர்ப்ரைஸ் கொடுத்தார் பாலகுமாரன்.  ஆனால் ஆனந்த விகடனுக்கு அவர் தரும் கடைசிப்பேட்டி அதுவாகத்தான் இருக்கும் என்று அப்போது தெரியாது... நெகிழ்ச்சியான அந்த கடைசி சந்திப்பில் நடந்தவை இங்கே!

 

 

`விகடனில் நீங்கள் எழுதி வெளிவந்த முதல் கதை எது’ எனக் கேட்டபோது, கண்களை மூடி நீண்ட தாடியைத் தடவிக்கொடுத்தபடியே யோசித்தவர்,  ``இப்போல்லாம் ஞாபகம் மறதி அதிமாய்ட்டு வருது" என்று அமைதியுடன் இருந்தார். அருகிலிருந்த மனைவியைப் பார்த்து ``சாந்தா... விகடன்ல..." என அவர் கேட்க ஆரம்பிக்கும்போதே ``தாயுமானவன் தொடர்தான் விகடன்ல மொதல்ல வந்தது" என மனைவி சாந்தா ஞாபகப்படுத்த `சபாஷ்’ என்று சிரித்தார் பாலகுமாரன்.

பாலகுமாரன்

`ஒரே நேரத்தில் நீங்கள் பல தொடர்கள் எழுதினீர்களே அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்’ எனக் கேட்டதும் குழந்தையின் உற்சாகத்துடன்.. ``அப்படிக் கேளுங்க" என்றவர், ``நான், ஒரே நேரத்தில் ஏழு தொடர்கள் எழுதினேன். தொடர்கதை படிச்சவங்க வாசகர்களெல்லாம் இப்ப சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க... வாசகர்கள் மேல அந்த வருத்தம் மட்டும் எனக்கு உண்டு. ஆனாலும், அவங்களைச் சொல்லி என்ன இருக்கு. இது விஷ்வல்ஸுக்கான காலம். நான் அந்த ஏழு தொடர்கள் எழுதின சமயம், எனக்கான வாசகப்பரப்பு உச்சத்தில இருந்த சமயம். நானும் என்னை ரொம்பவும் தயார்ப்படுத்திட்டு எழுதினேன். அந்தந்த தொடர்களுக்கான குறிப்பை, கதாபாத்திரத்தின் பெயர்களை வீட்ல இருந்த மர பீரோவுல, செல்ப்ல, ஏன் பாத்ரூம்ல கூட எழுதி ஒட்டி வெச்சுருப்பேன். பல்லு தேய்க்கிறபோது, தலையைத் துவட்டுறபோதுன்னு எல்லா நேரத்திலயும் என் கண்ணு அங்கயேதான் இருக்கும். எந்தத் தொடர் எழுத உட்கார்றனோ அதை எழுதும்போது ஒரு கிளான்ஸ் அவ்ளோதான்" என்றார்.

பாலகுமாரன்

`இப்பவும் எழுதுறீங்களா சார்’ எனக் கேட்டதுதான் தாமதம், ``என்ன இப்படிக் கேட்டுடீங்க? எழுதலன்னா, எழுத முடியலைன்னா செத்துப் போயிடுவேன். பழைய மாதிரி ஒரே சமயத்துல பல பத்திரிகைகளுக்குத் தொடர்கள் எழுத முடியலையே தவிர, எழுதாம ஒருபோதும் என்னால இருக்க முடியாது" என்று ஆவேசப்பட்டார்.

``ஜனங்களோட விருப்பம் என்னவோ அதுதான் சினிமா, அதுதான் பத்திரிகை, அதுதான் நாடகம். ஆனா, இலக்கியம் மட்டும்தான் நான் சொல்றத கேளுன்னு மக்கள்கிட்ட சொல்லும். அதுக்கு அந்தச் சக்தியும் இருக்கு. அந்தச் சக்தியில ஒருபகுதியாக நான் இருந்திருக்கிறேன், இருப்பேன்னு என்னாலே பெருமையா சொல்லிக்க முடியும்." என்றவரின் குரலில் இருந்த உறுதியைக் கேட்டு கூடியிருந்த மற்ற எழுத்தாளர்கள் அனைவரும் கைதட்டினர்.

பாலகுமாரன்

 

சந்திப்பு முடிந்ததும், இரண்டு கட்டைப் பை நிறைய கொண்டு வந்த புத்தகங்களை அங்கு வந்த எழுத்தாளர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ``நம்ம எல்லாம் அப்பப்போ சந்திச்சு உறவை வலுப்படுத்திக்கணும். அதுக்கு விகடன் ஒரு வாய்ப்பைக் கொடுத்து இருக்கு" என்றவர் அங்கு தேநீர் பரிமாறிய தம்பி உட்பட கூடியிருந்த அனைவரையும் அழைத்து ``வாங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்" என்றார். போட்டோ எடுத்து முடிந்ததும், அனைவரிடமும் சொல்லிக் கிளம்புகையில் ``இந்தச் சந்திப்பு விகடன்ல எப்போ வரும்னு சொல்லுங்க ஆவலா இருக்கேன்" என்றவர் பிரம்பைப் பிடித்து மனைவியின் கைத்தாங்கலாக நடந்தபடியே காரில் ஏறிச் சென்றார்.

https://www.vikatan.com/news/miscellaneous/125106-interview-with-tamil-writer-balakumaran.html

Link to comment
Share on other sites

90 களில் மாத நாவல்கள் மற்றும் தொடர்கதைகளின் முடிசூடா ராஜாவாகத் திகழ்ந்த பாலகுமாரன் நினைவுகள்!

 

 
z_balakumaran_22

 

பாலகுமாரன் அல்ல சிலருக்கு அவர் என்றென்றும் ப்ரியமாக பாலா...

150 நாவல்கள், 100 சிறுகதைகள், 14 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம். பிரபல தமிழ் வாரப் பத்திரிகைகளின் தொடர் எழுத்தாளர் என்று பன்முக அவதாரத்துக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் பாலகுமாரன் இன்று நம்மோடு இல்லை. அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல லட்சோபலட்சம் பாலகுமாரன் விசிறிகளுக்கும் தான்.

இணைய விவாதங்களிலும், நேரடி விவாதங்களிலும் பாலகுமாரனுக்காக உருகும் இவர்களுக்கு பாலாவைத் தவிர வேறு உன்னதமான எழுத்தாளர்கள் எப்போதும் கண்ணில் பட மாட்டார்கள். அந்த அளவுக்கு பாலகுமாரன் நாவல்களின் தாக்கம் அவர்களுக்குள் இருந்தது. காரணம் பாலகுமாரன் தனது நாவல்களில் பெரும்பாலும் விரித்து எழுதியது சாமானியர்களின் வாழ்நாள் அபிலாஷகள் குறித்தும் அவற்றின் நல்வினை, தீவினைகள் குறித்துமே என்பதால் வாசகர்களால் அவரது படைப்புகளுடன் இயல்பாக ஒன்றிப் பயணிக்க முடிந்தது. இது தான் பாலகுமாரன் நாவல்களின் மிகப்பெரும் வசதி. வாசிக்கும் எவரையும் தமது வாழ்வோடு ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளத் தக்க வகையிலான கதைகள் அவருடையவை. அதுவே பாலகுமாரன் நாவல்களின் வெற்றி.

முன்பெல்லாம் பணி நிமித்தம் ஆண்டுக்கணக்கில் வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் எதை எடுத்துச் செல்கிறார்களோ இல்லையோ மறக்காமல் பாலகுமாரன் நாவல்களை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு செல்வது வழக்கம். பாலா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நான் என் வாழ்வின் அனுபவங்களை முறையாக அணுகக் கற்றுக் கொண்டது பாலகுமாரனை வாசித்த பிறகு தான். பாலைவன சுடுமணலில், குடும்பத்தின் அருகாமையற்ற கொடுங்கனவு போன்ற நாட்களை நகர்த்திச் செல்ல எனக்கு உறுதுணையாக இருந்தவை பாலாவின் நாவல்களே! என்று கூறுவதை வழக்கமாகக் கொண்ட பல நண்பர்களை நானறிவேன்.

80 களில் பிறந்த எனக்கு பள்ளியிறுதி நாட்களில் தான் பாலகுமாரன் அறிமுகமானார். அவரது நாவல்களில் முதல்முறையாக தூர்தர்ஷனில் தொடராகக் காண நேர்ந்தது ‘இரும்புக் குதிரைகள்’. அப்போது அது பெரிதாக மனதில் பதியவில்லை. இரும்புக் குதிரைகள் ஈர்க்க மறந்த கவனத்தை அவரது தாயுமானவன் கதை ஈர்த்துக் கொண்டது. வாகை சந்திர சேகர் நாயகனாக நடித்த அந்தத் தொடர் பாலகுமாரனின் கதை என்பதை பிறகெப்போதோ தான் அறிய நேர்ந்தேன். 

தொடர் நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் மனதில் பதியத் தவறிய பாலா... பள்ளிக்கும், கல்லூரிக்குமான இடைவெளிகளில் நாவல் வடிவில் ஆகர்ஷித்துக் கொண்டார். அது ஒரு கனாக்காலம் என்று சொல்வதற்கேற்ப அப்போது விடுமுறை நாட்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டு புத்தககங்கள் வாயிலாக ஆக்ரமித்த எழுத்தாளர்களில் சுஜாதா, ராஜேஷ்குமார், பாலகுமாரனுக்கு மிக முக்கியமான இடமுண்டு. இவர்களில் முதல் இருவரைக் காட்டிலும் பாலா நாவலை விடாது வாசித்த நண்பர்கள் பலர் அப்போது எனக்கு இருந்ததால் நாங்கள் அனைவரும் புத்தகங்களைப் பகிர்ந்து கொண்டு வாசித்தோம். அப்போது தான் பாலகுமாரன் எங்களுக்கு பாலாவானார்.

அவரது பெரும்பாலான நாவல்களை வாசித்திருந்த போதும் இன்றும் நினைவில் நிற்பவை ஒரு சில மட்டுமே... அவற்றுள் என் கண்மணி தாமரை, அகல்யா, மெர்க்குரிப் பூக்கள், பொய் மான், வெற்றிலைக் கொடி, மஞ்சக் காணி, ரகசிய சினேகிதியே, செப்பு பட்டயம், சரிகை வேட்டி, திருமணமான என் தோழிக்கு, அப்பம் வடை தயிர்சாதம், உடையார் போன்ற நாவல்கள் குறிப்பிடத் தக்கவை.

அகல்யாவில் பள்ளித் தாளாளராக வரும் பெண்மணி புடவை உடுத்தும் ஸ்டைல் பற்றி வெகு அழகாக ஸ்லாகித்திருப்பார் பாலகுமாரன். எட்டு ஃப்ளீட்ஸ் வைத்து பாந்தமாக சேலை கட்டும் அகல்யாவைக் கண்டு அவளது பள்ளிக்கு ஆசிரியையாகப் பணிபுரிய வரும் இளம்பெண் அதே போல புடவை உடுத்த தானும் ஆசைப்படுவாள். நாவலின் இறுதியில் அகல்யாவுக்கு நல்ல முடிவு இல்லை. ஆனால் இந்த நாவல் மனதில் எப்படியோ தேங்கிப் போனதற்கான காரணம் கதை அப்போது பல்கிப் பெருகத் தொடங்கியிருந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பூர்வோத்ரமத்தைப் பற்றி அக்கு வேறு ஆணிவேராக அலசிக் காயப்போடுவதைப் போல படைக்கப் பட்டிருந்ததில் இன்றளவும் இந்தக் கதை மனதில் நிற்கிறது.

என் கண்மணி தாமரை அபிராமி பட்டரின் வாழ்க்கை கதை. வாசித்த அளவில் பாலகுமாரனின் படைப்பாற்றலின் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்திய நாவல்களில் இதற்கு முதலிடம் தரலாம்.

பொய்மான் நாவல் கொங்கு மண்டலத் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் பகிர்ந்த சொந்தக் கதையொன்றை தான் நாவலாக்கியதாக அதன் முன்னுரையில் பாலகுமரானே பகிர்ந்திருந்தார்.

அப்பம், வடை, தயிர் சாதம், உடையார் இரண்டும் வாசிக்கும் போது ஈர்த்தனவே தவிர அந்த நாவல்களில் பிற பாலகுமாரன் நாவல்களைப் போல தங்கு தடையின்றி ஆழ்ந்து போக முடியாத அளவுக்கு அதிலிருந்து ஏதோ ஒன்று தடுத்தது. 

மெர்க்குரிப் பூக்களைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை. பாலகுமாரன் வாசகர்கள் அனைவருக்கும் சட்டென நினைவில் வரும் நாவல்களில் இதுவொன்று.

இவை தவிர பாலகுமாரனின் திரைப்பங்களிப்பு பற்றியெல்லாம் கல்லூரிக் காலத்தில் எனக்குப் பெரிதாக ஏதும் தெரிந்ததில்லை.

நாயகன், குணா, பாட்ஷா, காதலன், ஜென்டில் மேன், உல்லாசம், ஜீன்ஸ், முகவரி, சிட்டிஸன், மன்மதன், வல்லவன், புதுபேட்டை உள்ளிட்ட சுமார் 14 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகப் பணிபுரியும் வாய்ப்பும் பெற்றிருந்தவர் பாலகுமாரன்.

அனைத்துக்கும் உச்சமாக 1988 ல் வெளிவந்த கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் இயக்குனராகப் பணிபுரிந்து அந்தத் திரைப்படத்தை தனது வசனங்கள் மூலமாக வெற்றிப்படமாக ஆக்கிய பெருமையும் பாலகுமாரனுக்கு உண்டு.

தமிழ் படைப்புலகில் சூப்பர் ஸ்டார்களாக ஜொலித்த எழுத்தாளர்களில் பாலகுமாரனுக்கு முக்கியமான இடமுண்டு. குக்கிராமத்தில் இருப்பவர்களுக்கு கூட பாலகுமாரன் நாவல்களென்றால் நிச்சயம் பரிச்சயமிருக்கும். கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த போதும்கூட இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்தியாவில் குறிப்பாக சென்னையில் நிகழ்ந்த பதற்றங்களை ‘வெள்ளைத்துறைமுகம்’ எனும் நாவலாக்கும் முயற்சியில் இருந்தார். சுமார் 500 பக்கங்கள் எழுதி முடித்த நிலையில் உடல்நிலை ஒத்துழைத்தவரையிலும் அதற்கான முனைப்புகளில் தொடர்ந்து ஈடுபட்டே வந்திருக்கிறார். அந்த முயற்சி முழுமை பெற்று நாவல் வெளிவந்த பிறகு காலன் அவரை அழைத்திருக்கலாம். அது ஒன்று மட்டுமே பாலகுமாரனைப் பொருத்தவரை நிறைவேறாத கடமையாக இருந்திருக்கக் கூடும். மற்றபடி ஒரு எழுத்தாளராகவும், குடும்பத்தலைவராகவும், அவர் தனது வாழ்வில் ஈட்டியது அனைவராலும் அத்தனை எளிதில் தொட்டு விட முடியாத உயரங்களையே!

தமிழில் நாவல் மற்றும் தொடர்கதை உலகில் பாலகுமாரன் சாதித்தது மிக அதிகம். வாரம் தோறும் அவரது கதைகள் பிரசுரமாகாத வார இதழ்கள் இல்லை எனுமளவுக்கு சிலகாலம் தமிழர்கள் பாலகுமாரன் பித்துப் பிடித்துப் போய்க் கிடந்தார்கள். அந்த அளவுக்கு சுஜாதாவைவை அடுத்து இளைஞர்களை அதிகம் ஆகர்ஷித்துக் கொண்ட எழுத்தாளர் என்றால் அது பாலகுமாரனே எனலாம்.

பெண் வாசகர்கள் அடுத்தடுத்து இலக்கியத் தரமாகவும் அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் எழுதக்கூடியவர்களான பெண் எழுத்தாளர்கள் சிவசங்கரி, இந்துமதி, அனுராதாரமணன், ரமணி சந்திரன் முதல் தீவிர இலக்கியப் படைப்பாளியான அம்பை வரை தங்களது ரசனையின் எல்லைகளை விரிவடையச் செய்துகொண்டு வாசிப்பின் எல்லையை மடைமாற்றம் செய்து கொள்ள ஆப்சன்கள் நிறைய இருந்த காலகட்டதில் ஆண் வாசகர்களுக்கு சுஜாதாவை அடுத்து தங்களது மனம் ஒப்பிக் கொள்ளும் அளவில் மரியாதைகுரிய படைப்பாளியாகக் கொண்டாடக் கிடைத்தது பாலகுமாரன் மட்டுமே.

 

அவரது சமகாலத்திலேயே அறிமுகமாகியிருந்தாலும் ஜெயமோகன் தமிழ் வாசகர்களுக்கு பரவலாக அறிமுகமானது  ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்குப் பிறகு தான்.  ஒருகாலத்தில் சாருநிவேதிதா, ஜெயமோகன் இலக்கியச் சண்டைகள் தெருக்குழாய்ச் சண்டையை விடக் கேவலமாக  இணையத்தில் நாறியது பலருக்கும் தெரிந்திருக்கக் கூடும். வழக்கம் போல அந்தச் சண்டைகளில் சாரு மட்டுமே கல்லெறிந்து கொண்டிருப்பார். ஜெமோ வாழைப்பழ ஊசியாக எதையேனும் சொல்லி விட்டு நல்ல பிள்ளையாக மெளனம் காப்பார். இந்தச் சண்டைகள் காரணமாக அவர்களது படைப்புகளைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் அவர்களது இலக்கியச் சண்டைகளை வேடிக்கைப் பார்க்கக் கூடும் கூட்டமே அதிகமிருந்தது ஒருகாலத்தில்.

இதனால் எல்லாமும் கூட பாலகுமாரனின் மவுசு முன்னைப் போலவே எந்தக் குறையும் இன்றி மேலும் சில காலம் மங்காமல் இருந்தது என்றும் சொல்லலாம்.

பாலகுமாரனை இன்றும் கூட வணிக எழுத்தாளர் மட்டுமே என்று கூறி இலக்கிய அங்கீகாரம் அளிக்காமல் புறம் தள்ளிப் பேசக்கூடியவர்கள் இருக்கலாம். அவர்களுக்குச் சொல்லிக் கொள்வது சுஜாதாவைப் போல மாத நாவல்கள் மற்றும் தொடர் கதைகளின் முடிசூடா ராஜாவாகத் திகழ்ந்தவரான பாலகுமாரனின் எழுத்துக்கு இப்போதும் புத்தகச் சந்தைகளில் பெரும் வரவேற்பு உண்டு. அவரது உடையார் விற்பனையில் சாதனை படைத்த நாவல் தொகுப்புகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.

ஒரு எழுத்தாளரை இலக்கியமல்லாது அவரது ஜனரஞ்சகப் படைப்புகளின் வெற்றிகளைக் கொண்டு  மட்டுமே அளக்க முடிந்தால் பாலகுமாரன் எப்போதும் சுஜாதாவைப் போலவே வணிக எழுத்தின் மகாராஜாவே! என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/may/15/90-களில்-மாத-நாவல்கள்-மற்றும்-தொடர்கதைகளின்-முடிசூடா-ராஜாவாகத்-திகழ்ந்த-பாலகுமாரன்-நினைவுகள்-2920326--2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாசிப்பு ரசனையை மெருகூட்டி, புதிய பரிணாமத்துக்கு கைபிடித்து அழைத்துவந்த என் மானசீக குருவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.. உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக. ???:100_pray::100_pray::100_pray:


நிழலி, கிருபன் மற்றும் பலரை போலவே வேதாளம், இரும்புக்கை மாயாவி, துப்பறியும் சாம்பு, பாலமித்திரா , ரத்தினபாலா வாசிப்பில் இருந்து திளைத்த காலம்..
அன்பு நண்பன், புத்தகப் பித்தன் பிரபா எனக்கு "இரும்புக்குதிரைகளை"  அடையாளம் காட்டினான்..
புத்தகத்தின் பெயரின் கம்பீரத்திலேயே சுண்டி இழுக்கப்பட்ட நான் விஸ்வநாதன், ராவுத்தர், தாமீரா, இவர்களோடு நாட்கணக்கில் சஞ்சாரிக்கத்தொடங்கினேன்...


"குதிரைகள் பசுக்களை போல வாய்விட்டு கதறுவதில்லை    
வழியில்லை என்பதல்ல ..வலிமையே குதிரை ரூபம் 
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை  சவுக்குகாக பணிந்து போகும் 
புணர்ந்த பின் குதிரைகள் ஒரு நாளும் தூங்கியதில்லை 
இது - குதிரைகள் சொன்ன வேதத்தின் முதலாம் பாடம்...


இப்படி புரிந்தும் புரியாத வரிகளை நண்பனிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு 
பாலகுமாரன் அய்யாவின் புத்தகங்களை தேடி தேடி வாசித்த காலங்கள்..
மெர்குரிப்பூக்கள், என்றேன்றும் அன்புடன், கைவீசம்மா கைவீசு, கரையோர முதலைகள் 
இப்படி மனதில் ஆழமாக படிந்த பல புத்தகங்கள்...

இவர் புத்தகங்களை வாங்கி அழகாக அடுக்கி அழகு பார்க்க வீட்டிலேயே ஒரு சிறிய வாசிகசாலை அமைப்பது; என் அன்றைய நாள் கனவு...

கனடாவில் அது சாத்தியமானது.
இன்று பாலகுமார் அய்யாவின் சுமார் 35க்கு மேற்பட்ட புத்தகங்கள் என் வாசிப்பு அறையை  கௌரவப் படுத்துகின்றன. 
பாரதியார் முதல் கொண்டு பாலகுமாரன், சுஜாதா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், காசியானந்தன், புதுவை ரத்தினதுரை இவர்களை புத்தக வடிவில் நண்பர்களாக, ஆசிரியர்களாக சேர்த்து வைத்திருப்பதில் கொஞ்சம் கர்வமும் சேர்ந்தே இருக்கிறது...

பின்னணி, முன்னணி, சின்னத் திரை, பெரியத் திரை நட்சத்திரங்களை கொண்டு வந்து அழகு பார்க்கும் இந்த கனேடிய சமூகத்துக்கு நல்ல தமிழ் எழுத்தாளர்களை கொண்டு வந்து கௌரவப்படுத்த முடிவதில்லையே என்ற 
ஆதங்கம் எப்போதும் உண்டு.
இது குறித்து பலருடன் பேசியாயிற்று என்ன பயன்...
5, 6 மாதங்களுக்கு முன்னர் கூட முருகன் புத்தக சாலை உரிமையாளருடன் இது குறித்து கதைத்தேன்.. அவரும் பாலகுமாரன் ஐயாவை இங்கு அழைத்து வருவது பற்றி மேலோட்டமாக கதைத்தார்.
கொடுத்து வைக்க வில்லை....
  
நவீனன் நீங்கள் இணைத்திருக்கும் பாலகுமாரன் குறித்த இனிய பதிவுகளுக்கு மனம் உவந்த நன்றிகள்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.