சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
நவீனன்

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு

Recommended Posts

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு

ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.

14 வயதுடைய குறித்த சிறுவன் சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்கு விளையாடுவதற்கான தகுதிகளைக்கொண்டிருந்ததாகவும் குறித்த விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.

அவருடைய திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரை மாத்திரமின்றி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், உயிரிழந்த குறித்த வீரருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் நாளைய தினம் Eintracht Braunschweig அணியின் தலைவர் ஹோல்ஸ்டெயின் கொயில் தலைமையில் கால்பந்து போட்டியை நடத்தவுள்ளதாக விளையாட்டுக்கழகத்தின் பணிப்பாளர் மார்க் ஆர்னோல்ட் அறிக்கை விடுத்துள்ளார்.

சிறந்த கால்பந்தாட்ட வீரர் மற்றும் நேர்மறையான ஈழவன் பிரபாகரனின் Eintracht Braunschweig விளையாட்டுக் கழக குடும்ப என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் என இளையோர் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் விளையாட்டு மற்றும் ஒருங்கிணைப்பு தலைவர்களான ஒலிவர் ஹியின் மற்றும் டெனிஸ் குரூப்கே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த வீரருக்கு 14 வயதெனினும் உலகத்திலுள்ள அனைத்து கால்பந்தாட்ட வீரர்களுக்கும் சவாலாய் அமையக்கூடிய ஆற்றல் கொண்டிருந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

அவரது திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளமை தமிழர் தாயகம் மாத்திரமின்றி உலகத்தின் பல முன்னணி விளையாட்டு கழகங்களைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறு, ஈழத்திற்கு உலகளவில் பெருமை சேர்க்க வேண்டிய ஒரு இளம் வீரர், உலகத்தினரால் அறியப்பட முன்னரே உயிரிழந்தமை ஈழத்திற்கு மாத்திரமின்றி சர்வதேச கால்பந்தாட்ட உலகிற்கே ஓர் பேரிழப்பாகும் என பொதுமக்களால் குறிப்பிடப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/182472?ref=featured-feed

 

 

 

உயிரிழந்த ஈழத் தமிழன் - ஈழவனின் யாரும் அறியாத நெகிழ்ச்சியான தருணங்கள்

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவனின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன.

புலம்பெயர் தமிழரான ஈழவனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தினையும் Braunschweig விளையாட்டுக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழவனின் இழப்பை அனைத்து தமிழர்கள் மாத்திரம் அல்லாமல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் பேரிழப்பாக கருதுகின்றனர், அத்துடன் ஜேர்மன் மிகச்சிறந்த எதிர்கால வீரனை இழந்துவிட்டது என ஜேர்மனி பத்திரிக்கைகள் பல ஈழவனின் இழப்பை பிரசுரித்துள்ளன.

ஈழவன் பாடசாலையிலும், விளையாட்டிலும் சிறப்பாக செயற்பட்டார் எனவும் ஈழவனின் பெற்றோர்கள் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து தங்களை அர்ப்பணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈழவனின் பிரத்தியேக தகைமைகள்,

14 வயதுக்கும் கூடிய பிரிவில் விளையாடியது மாத்திரம் அல்லாமல் கேப்டன் ஆகவும் இருந்துள்ளார், அத்துடன் ஜேர்மனி தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டு ஆயத்த நிலை வீரராக இருந்துள்ளார்.

ஜேர்மனியின் மிகப்பெரிய கழகங்களான Hannover 96, Schalke 04, Hamburger SV, Werder Bremen, Mönchengladbach, Wolfsburg ஆகிய கழகங்கள் ஈழவனை தமது கழகங்களுக்கு இணைப்பதற்கு முயற்சிசெய்துள்ளன.

7 வயதில் 4000 மீற்றர் தூரத்தினை சாதார வீரர்களின் வேகத்தில் ஓடி முடித்துள்ளார், அத்துடன் தடகள விளையாட்டில் முதன்மை வீரராக சிறந்து விளங்கியுள்ளார்.

மேலும், Niedersachsen மாநிலத்தில் தொடர்ந்து 3 வருடங்கள் தடகள சாம்பியனாக திகழ்ந்துள்ளார், அதன் பின்னர் கால்பந்தாட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதால் அந்த துறையினை விட்டு வெளியேறியுள்ளார்.

ஜேர்மன் கால்பந்தாட்ட வரலாற்றில் 14 வயதில் பெரும் தொகை பணத்தினை ஒப்பந்தம் செய்ய இருந்த ஒரே ஒரு வீரர் ஈழவன் மாத்திரமே என குறிப்பிடப்படுகின்றது.

இவரது முதல் பயிற்சிவிப்பாளர் இவரது தந்தையாகும், இடக்கால்பலம் மற்றும் அதிவேகம் இவருக்கு கால்பந்தாட்டத்துறையில் பலமாக இருந்துள்ளது.

சிறிய போட்டிகளில் ஈழவன் தொடர்பான விளம்பரங்களை அவரின் பெற்றோர் தவிர்த்து வந்துள்ளனர், சர்வதேச போட்டியிலேயே ஈழவனை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் கனவுகளுடன் பெற்றோர் இருந்துள்ளனர்.

மேலும், ஈழவனின் தந்தை இலங்கையில் பல்துறை விளையாட்டு வீரனாக இருந்துள்ளார், ஈழவன் தந்தை பிரபாகரன் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் திகழ்ந்துள்ளதுடன், அதேத்துறையில் தன் மகனை சாதனையாளனாக ஆக்கவேண்டும் எனும் உறுதியுடன் செயல்பட்டுள்ளார்.

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/182705?ref=home-feed

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

மிக கவலையான செய்தி. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

கவலையான செய்தி. அவர்களின் பெற்றோரின் இழப்பு வலி கொடியது. ஆழ்ந்த அனுதாபங்களும் ஆறுதல்களும்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்....!

Share this post


Link to post
Share on other sites

ஈழவனின் திறமையை உலகம் காணமுன்னரே மரணித்தது மிகவும் கவலையானது. அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

என்ன செய்வது வயதோ சிறியது... நோயோ பெரியது...குறுகிய நாட்களுக்குள் சகலதும் நடந்தேறி விட்டது.

கண்ணீர் அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

மிகவும்  கவலையான செய்தி. அவரது கு டும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.?

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்

Share this post


Link to post
Share on other sites

கடவுளுக்கே தமிழன் முன்னுக்கு வருவது பிடிக்கவில்லை போலும் 
ஆழ்ந்த அனுதாபங்கள் 

Share this post


Link to post
Share on other sites

ஆறுதல் சொல்லமுடியாத, மனதை வருத்தும் செய்தி. அவரது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!! 

Share this post


Link to post
Share on other sites

அச் சிறுவனின் ஆத்மா சாந்தியடையட்டும்.

என்ன நடந்தது பெடியனுக்கு கடுமையான பயிற்சியோ?
 

Share this post


Link to post
Share on other sites

ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஜேர்மனியில் அடக்கம் செய்யப்பட்ட ஈழத்துச் சிறுவனின் பூதவுடல்

 

 

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரனின் பூதவுடல் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று பிற்பகல் ஈழவனின் இறுதி அஞ்சலி நிகழ்வு Sudfriedhof, Marienburger, Strasse 90E, 31141 Hildersheim என்னும் இடத்தில் நடைபெற்றுள்ளது.

புலம்பெயர் தமிழரான ஈழவனின் பூத உடலுக்கு ஜேர்மனிய மக்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதில், பாடசாலை மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், கழக அங்கத்தவர்கள், பொறுப்பாளர்கள், தேசிய பயிற்சியாளர், முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் மற்றும் ஐரோப்பியா முழுவதிலும் உள்ள விளையாட்டுதுறை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் வெள்ளை இனத்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அத்துடன், ஈழவன் விளையாடிக் கொண்டிருந்த Braunschweig கழகம், இறுதிச் சடங்குக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரசித்தி பெற்ற தேசிய கால்பந்தாட்ட வீரர்கள் பலர் தங்களது இரங்கல் செய்தியினை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

அத்துடன், ஐரோப்பாவின் மிக புகழ் பெற்ற பாடகர் Majoe ஒழுங்கமைப்பிலேயே இறுதி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பாடகர் Majoe ஈழவனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்து தமிழர்களின் அடையாளமான ஈழவன் அனைவரின் கண்ணீர் துளிகளுடனும், கதறல்களுடனும் விடைபெற்றுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90
 


625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/182910?ref=home-imp-parsely

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்