யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
நவீனன்

தென்னிலங்கையில் புலிகளின் கொடிகளை எரித்து யுத்த வெற்றி கொண்டாட்டம்!

Recommended Posts

தென்னிலங்கையில் புலிகளின் கொடிகளை எரித்து யுத்த வெற்றி கொண்டாட்டம்!

I

IMG-20180518-WA0003-720x450.jpg

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்ற நிலையில், தெற்கில் சில இளைஞர்களின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

கிரிபத்கொட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் யுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக இன்று (வெள்ளிக்கிழமை) இனவாதத்தை தூண்டும் வகையிலும், இலங்கையில் மௌனித்துப்போன விடுதலைப் புலிகளை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் செயற்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தியவாறு அனைவருக்கும் பாற்சோறு வழங்கி யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை குறித்த இளைஞர்கள் வீதியில் போட்டு காலால் மிதித்து, தீயிட்டு எரித்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போராடிவருவோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20180518-WA0004.jpgIMG-20180518-WA0006.jpg

http://athavannews.com/?p=674306-தென்னிலங்கையில்-புலிகளின்-கொடிகளை-எரித்து-யுத்த-வெற்றி-கொண்டாட்டம்

Share this post

Link to post
Share on other sites

இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் யுத்தவெற்றியை கொண்டாடுகிறார்கள் என்றால், 

அவ்வளவு தூரம் நினைவில் வைத்திருப்பதற்கு அவர்களுக்கு நாம் தோல்வியை ஒரு காலம் கொடுத்திருக்கிறோம் என்றுதான் அர்த்தம்..

இதில் கவலைப்பட ஒன்றுமில்லை, பெருமை வேண்டுமென்றால் பட்டுக்கொள்ளலாம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
50 minutes ago, valavan said:

இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் யுத்தவெற்றியை கொண்டாடுகிறார்கள் என்றால், 

அவ்வளவு தூரம் நினைவில் வைத்திருப்பதற்கு அவர்களுக்கு நாம் தோல்வியை ஒரு காலம் கொடுத்திருக்கிறோம் என்றுதான் அர்த்தம்..

இதில் கவலைப்பட ஒன்றுமில்லை, பெருமை வேண்டுமென்றால் பட்டுக்கொள்ளலாம்.

சிங்களவன் கொண்டாடுவதில், ஆச்சரியப்  பட வேண்டிய நிலை, எமக்கு இல்லை என்றாலும்,
எம்மை... இந்த  நிலைக்குத் தள்ளிய..... ஒட்டுக் குழுக்கள், ஓணான் குழுக்கள்.... 
இந்த நாளை, எப்படி அணுகுகின்றார்கள் என்று.. ஒரு செய்தியும் வரவில்லை.
ஆட்கள்... இன்னும், இருக்கின்றார்களா? 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

சிங்களவன் கொண்டாடுவதில், ஆச்சரியப்  பட வேண்டிய நிலை, எமக்கு இல்லை என்றாலும்,
எம்மை... இந்த  நிலைக்குத் தள்ளிய..... ஒட்டுக் குழுக்கள், ஓணான் குழுக்கள்.... 
இந்த நாளை, எப்படி அணுகுகின்றார்கள் என்று.. ஒரு செய்தியும் வரவில்லை.
ஆட்கள்... இன்னும், இருக்கின்றார்களா? 

முள்ளிவாய்க்கால் முடிவோடு எல்லோரையும்விட அதிகம் பாதிக்கப்பட்டது அவர்களே,

சொந்தமாய் எந்த தொழிலும் தெரியாத அவர்கள், காலம் முழுவதும் புலிகள் இருப்பார்கள், புகை,போதை,பொண்ணு,பொருள் எல்லாம் காலம் முழுவதும் சிங்களவன் கால் கழுவி பெற்றுக்கொண்டு,

காலம் முழுவதும் இப்படியே ஓட்டிவிடலாம் என்று எத்தனையோ கனவு கண்டிருப்பார்கள்...

உடம்பு நோகாமல்  புலியெதிர்ப்பு பிரச்சாரம்,காட்டி கொடுப்பு ,கப்பம் கையில் ஆயுதம்,புதிய வாகனம் என்று சுகபோகியாக வலம் வந்தவர்களிடம், யுத்தம் முடிந்ததும் சில மாதங்களுக்குள்ளேயே அவர்கள் கையில் இருந்த ஆயுதத்தை சிங்களவன் பறித்ததும், அவர்களுக்கான கொடுப்பனவுகள் வசதிகள் அனைத்தையும் நிறுத்தியதும்...

அவர்களின் மேலிடத்தில் உள்ள பெரும் தலைகளை தவிர மற்றவர்கள் நிலை எல்லாம் அம்போதான்...

நானறிந்து கீழ்மட்டத்திலிருந்து வண்டியோட்டியவர்கள் பலர் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை வைத்து சவுதி,குவைத்,கட்டார் பக்கம் கிளம்பி சென்றுவிட்டார்கள். அங்கே இலங்கையிலிருந்து எட்டப்ப தொழில் செய்து ஒரு மாதம் சம்பாதித்ததை, ஒரு வருஷம் உடம்பு முறிந்து வேலை செய்து உழைக்கணும்,

இப்போது அவர்கள் இறுதி யுத்தத்தை எண்ணி கண்ணீர் வடிப்பார்கள்...நாங்களும் வடிப்போம்...

ஆனால் இரண்டு கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கும்...

அவர்கள் தாங்கள் இழந்ததை எண்ணி...நாம் நாங்கள் இழந்ததை எண்ணி!

  • Like 5

Share this post

Link to post
Share on other sites

வெற்றிக் கொண்டாட்டம் என்றால், வெற்றியைத் தேடித் தந்தவர்களையும், அந்த வெற்றிக்கு உதவியவர்களையும் போற்றிச் சிறப்பித்துக் கொண்டாடுவது உலக வழமை. இங்கு தங்கள் எதிரியான புலிகளின் கொடியை எரித்துக் கொண்டாடுவதானது புலிகள்மேல் இன்னமும் உள்ள பயத்தையே காட்டுகிறது.
 
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

தமிழர்களில் உள்ள சில ஈனத்தமிழர்கள்.. புலிக்கொடியை அடிப்பெட்டிக்குள் மடிச்சு வைக்கச் சொன்னார்கள்.. ஆனால்.. சிங்களவன் அதை மறக்காமல்.. தூக்கிப் பிடிக்கிறான்.. கொழுத்திறான்.

அவனுக்குத் தெரியுது... புலிக்கொடியின் யதார்த்தம்.. வலிமை. 

ஆனால்.. எம்மில் சிலதுகளுக்கு.. சராணகதின்னா.. கோடி சுகம். 

  • Like 4

Share this post

Link to post
Share on other sites

ஈழ போராட்டத்தையும் அதன் கொடியையும் பிரபாகரனையும் இணையத்தளங்களில் சக தமிழர்கள் கேவலப்படுத்தும் அளவிற்கு சிங்கள அரசியல் இனவாதிகள் கேவலப்படுத்தவில்லை என்பதை பலரும் சிந்திக்க வேண்டும்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

ஈழ போராட்டத்தையும் அதன் கொடியையும் பிரபாகரனையும் இணையத்தளங்களில் சக தமிழர்கள் கேவலப்படுத்தும் அளவிற்கு சிங்கள அரசியல் இனவாதிகள் கேவலப்படுத்தவில்லை என்பதை பலரும் சிந்திக்க வேண்டும்.

அப்படிக் கேவலப்படுத்துபவர்கள் நாங்கள் தமிழரல்ல, வேறு ஒரு இனம் அல்லது ஒட்டுண்ணிகள், கலப்பினம் என்று தங்களைத் தாங்களே வெளிப்படுத்தி நிற்கின்றனர் என்பதையும் சிந்திப்பது அவசியம். :rolleyes:  
 
Share this post

Link to post
Share on other sites

ஒரு நாட்டின் மீது கோபம் ஏற்படும் அதன் கொடியை எரிப்பதும் கிழிப்பதும் வழமைதானே லண்டனில நம்மவர்கள் சிங்க கொடியை கிழிச்சு தொங்கப்போடலயா 

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, nedukkalapoovan said:

தமிழர்களில் உள்ள சில ஈனத்தமிழர்கள்.. புலிக்கொடியை அடிப்பெட்டிக்குள் மடிச்சு வைக்கச் சொன்னார்கள்.. ஆனால்.. சிங்களவன் அதை மறக்காமல்.. தூக்கிப் பிடிக்கிறான்.. கொழுத்திறான்.

அவனுக்குத் தெரியுது... புலிக்கொடியின் யதார்த்தம்.. வலிமை. 

ஆனால்.. எம்மில் சிலதுகளுக்கு.. சராணகதின்னா.. கோடி சுகம். 

இதைத்தான்  நானும் நினைச்சேன்

அவனுக்கு இன்னும்  புலிகளின் பலம் மீது பயமும் 

அவர்கள்  மீண்டுவரக்கூடாது என்ற ஆத்திரமும் உண்டு என்பதையே  இவை  காட்டுகின்றன

வரலாற்றில்  தமிழரைவிட

எம்மை முன்னுக்க  தள்ளியவன்  சிங்களவன் தானே...

9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு நாட்டின் மீது கோபம் ஏற்படும் அதன் கொடியை எரிப்பதும் கிழிப்பதும் வழமைதானே லண்டனில நம்மவர்கள் சிங்க கொடியை கிழிச்சு தொங்கப்போடலயா 

அது தானே?

அப்போ  நாம  இன்னொரு நாடு  என்று  தானே..

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, விசுகு said:

அது தானே?

அப்போ  நாம  இன்னொரு நாடு  என்று  தானே..

அமையும் வரைக்கும் அப்படி நிகழுமானால் சந்தோசமே:34_rolling_eyes:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

புலிகளின் கொடிகளை எரித்த சிங்களவர்கள் எத்தனை பேர்? இதே சிங்களவர்களில் போர்குற்ற ஆவணங்கள் வெளிவர உதவி செய்த சிங்களவர்கள் பலர் என்பதையும் மறக்கலாகது.

இதேவேளை புலிகளின் சொத்துக்களை பினாமி பெயரில் பராமரித்தவர்கள் (தமிழர்கள், தாங்களை புலிகளின் பிரதிநிதிகள் என அழைத்துக்கொண்டவர்கள்) யுத்தமுடிவிக்கு பின் எத்தனை பேர் ஞாயமாக நடந்து கொண்டார்கள்? ஆட்டையை போட்டவர்கள் எத்தனை பேர்?  யுத்த முடிவின் பின் அதிக லாபம் அடந்தவர்கள் இத்தகையா வியாபரிகளே.

கயவர்கள் எல்லா இனத்திலும் உண்டு.

கரிகாலன் அவர்களின் குடும்பம் கூட மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் ஆனலும் ஒருவரும் உதவி செய்யமாட்டர்கள்.
 
  • Like 2
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 5/19/2018 at 9:49 AM, தனிக்காட்டு ராஜா said:

ஒரு நாட்டின் மீது கோபம் ஏற்படும் அதன் கொடியை எரிப்பதும் கிழிப்பதும் வழமைதானே லண்டனில நம்மவர்கள் சிங்க கொடியை கிழிச்சு தொங்கப்போடலயா 

 புலம்பெயர் தேசங்களிலிருந்தபடி,

 பல பக்கம் நீண்ட விவாதம் பண்ணியும் பலபேரால் புரியாமுடியாத/புரியப்பட முடியாத கருத்தை இரண்டு வரிகளில் சொல்லி முடித்தது..

காலம் முழுவதும் உங்கள்  தாயகத்தில் இருந்தே கண்ட பட்டறிவு...!

திரும்ப திரும்ப உங்கள் கருத்தை படித்து பார்ப்பவர்களுக்கு புரியும் எதையெல்லாம் நாம் இழந்துவிட்டோம் என்று.

Share this post

Link to post
Share on other sites
On 5/21/2018 at 1:55 AM, valavan said:

 புலம்பெயர் தேசங்களிலிருந்தபடி,

 பல பக்கம் நீண்ட விவாதம் பண்ணியும் பலபேரால் புரியாமுடியாத/புரியப்பட முடியாத கருத்தை இரண்டு வரிகளில் சொல்லி முடித்தது..

காலம் முழுவதும் உங்கள்  தாயகத்தில் இருந்தே கண்ட பட்டறிவு...!

திரும்ப திரும்ப உங்கள் கருத்தை படித்து பார்ப்பவர்களுக்கு புரியும் எதையெல்லாம் நாம் இழந்துவிட்டோம் என்று.

மிக்க நன்றி 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு