Jump to content

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்


Recommended Posts

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக முறையில் வன்முறைகள் இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை விலங்கு வேட்டைக்குச் சென்றவர்கள் போல காவல்துறையைச் சேர்ந்தவர்களே சுட்டுப் படுகொலை செய்தது மன்னிக்கமுடியாத குற்றம்.

இந்தப் படுகொலைக்கு உத்தரவு கொடுத்தவர்களையும், படுகொலை செய்த காவல்துறையினரையும் தண்டிக்குமளவிற்கு தமிழகத்திலோ, இந்தியாவிலோ ஜனநாயகமும் நீதியும் செழுமையாக இல்லை. எனவே உணர்வுகள் அடங்க இந்தக் கொடூரமான படுகொலையும் ஒரு சம்பவமாக மறக்கப்படக்கூடும் ஆபத்து உள்ளது.

தமிழக மக்களின் மீது உண்மையான அக்கறை உள்ள அரசியல்வாதிகள், பிரபலஸ்தர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து நீதியை நிலைநாட்டுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு இனப்படுகொலைக்கான ஒத்திகை

ஈழத்தில் முள்ளிவாய்க்கால்ப் படுகொலைநடந்து சரியாகப் பத்தாவது வருட ஆரம்பத்தின் நாலாவது நாளில். மிகவும் திட்டமிடப்பட்டு எதிர்காலத்தில் தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கான மிகப்பெருமெடுப்பில் இனப்படுகொலையை நடத்துவதற்கான ஒத்திகை நிகழ்சியாக,

புரட்சிகர இளைஞர் முண்ணணியைச் சேர்ந்த தமிழரசன், மக்கள் அதிகாரம் ஜெயராமன், நாம்தமிழர் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர், பதினேழு வயதுடைய பள்ளிமாணவி ஆகியோரையும் பொதுமக்களையும் திட்டமிட்டுக்குறிவைத்து நடாத்தப்பட்ட கொலைவெறியாட்டத்தின்மூலம், இந்திய நடுவன் அரசு தனக்கு வேண்டப்பட்ட பிஜேபி யைச்சேர்ந்த எஸ்வி சேகரது மைத்துணி யும் தமிழக அரசின் முதன்மைச்செயலாளருமான கிரியா வைத்தியநாதனின் துணையுடனும் தமிழ்நாடு காவற்துறையின் துணையுடனும் தமிழ்நாடு அரசின் தற்போதைய சோகோல்ட் முதலமைச்சரும் இந்திய நடுவன் அரசின் எடுபிடியுமான எடப்பட்டி பழனிச்சாமி அவர்களது துணையுடனும், தூத்துக்குடியில் ஸ்டெரலைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் இனப்படுகொலையை நடத்திமுடிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் இந்தியப் பெரியண்ணன் தமிழ்நாட்டுத்தமிழினத்தை மட்டுமல்ல உலகத்தமிழினதையும் சேர்ந்தே எச்சரிக்கை விடுவதுடன் நில்லாது அவர்கள்மீதான மிகப்பெரிய இனப்படுகொலைக்கான திட்டமிடலாகவும் அதற்கான ஒத்திகையாகவும் இதை அரங்கேற்றியுள்ளது.

முள்ளிவாய்க்கால் எமது வாழ்நாளில் மிகப்பெரிய இனப்படுகொலைக்களம் அதுபோல் பல இனப்படுகொலைக்களத்தினைத் திறப்பதற்கான ஆரம்பம் இதுவாகும்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

எனப்பாரதியார் பாடியதுபோல், 
இனப்படுகொலைக்களங்களில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ

இவ்வினப்படுகொலையில் மரணித்த அனைவருக்கும் என் வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

இழப்புகள் வீண்போகாது. அவர்களின் கனவுகள் விரைவில் மெய்ப்பிக்கப்படும். 

 

ஜல்லிக்கட்டுக்கு வரிந்து கட்டிக்கொண்டுவந்த விலங்குரிமை அமைப்புகள், மனிதர்கள் சுடப்படும்போது அமைதிகாக்கும் மனித உரிமை அமைப்புகள் எல்லாமே முதலாளிகளின் பணத்துக்காக கூவும் அமைப்புகள்.

இந்த அரசிடம் இருந்து மனித உரிமைகளை எதிர்பார்ப்பது எமது முட்டாள்தனம்.

 

இது ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. மக்கள் எழுச்சியை சகிக்க முடியாத அரசுகளும் முதலாளித்துவமும் இணைந்து நடாத்திய நரவேட்டை.  சில முன்ணனி மக்கள் அரசியல் தலைவர்களை பலிகொள்ளும்/ அல்லது பயமுறுத்தும் சதி.

இதை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தாது மக்கள் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும். 

 

போராடினாலும் வீழ்வோம்

போராடாவிட்டாலும் வீழ்வோம்

போராடினால் வாழ்வு இருக்கிறது என்ற புரிதலின் பேரில் எமது போராட்டத்தை எடுத்து செல்வோம்.

- தலைவர் பிரபாகரன்

 

Link to comment
Share on other sites

#ஸ்டெர்லைட்ஆலை
1.உரிமையாளர்-அனில் அகர்வால்
2.தலைமையிடம்-இலண்டன்
3.நிறுவனப் பெயர்- வேதாந்தா ரிசோர்ஸ்
4.அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி
5.முக்கிய உற்பத்தி- தாமிரம் (copper )
6.கழிவு உற்பத்தி- தங்கம், சல்ப்யூரிக் அமிலம் , பாஸ்ஃபோரிக் அமிலம்
7.முதலில் தேர்ந்தேடுத்த இடம்- குஜராத்
8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத், கோவா, கர்நாடகா, கேரளா
9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா , ரத்னகிரி, ஆண்டு 1993.
10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்
11. அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு. ஆண்டு 1994.
12.அப்போதைய முதல்வர்-ஜெ.ஜெயலலிதா
13. அனுமதிக்க காரணமாக சொல்லப்பட்டது, தூத்துக்குடி துறைமுகம், வேலைவாய்ப்பு.
14. கட்டுமானபணிகள் முடித்து ஆலை செயல்பாட்டிற்கு வந்தது 1996. அப்போதே முதல் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.
15.போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை
16.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி
17.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7
18.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)
19.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)
20.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)
21.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -12
22.ஐந்தாம் விபத்து-ஆயில் டேங்க் வெடிப்பு
23.ஆறாம் விபத்து -நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70,000டன்
24.உற்பத்தி செய்தது-2லட்சம் டன் (2005 கணக்கில்). அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
25.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28. அப்போதைய முதல்வர் கருணாநிதி.
26.தொடக்கம் முதல் எதிர்க்கும் கட்சி-மதிமுக
27.ஆலையை எதிர்த்து வாதாடியவர்-வை.கோ(1998முதல்)
28. 2013ல் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
29. ஒருமாத்திற்குள் 100 கோடி அபராத்துடன் மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து-உச்சநீதிமன்றம். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
30. ஆண்டுக்கு லட்சம் டன் காப்பர் உற்பத்தியை இரட்டிப்பாக, விரிவாக்க பணிகளுக்கு அனுமதி கோரியது ஆலை நிர்வாகம்.
31. தமிழ்நாடு பசுமை வாரியம் முதலில் தடை .
31.தேசிய பசுமை வாரியம்- அனுமதிக்கு பிறகு விரிவாக்க பணிகளுக்கு அதிமுக அரசு அனுமதி.

- நன்றி முகப்புத்தகம் 

 

Link to comment
Share on other sites

மீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி!!!

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீது பொலிஸார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

india_.jpg

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

துப்பாக்கி சூட்டு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிஸார் தடியடி நடத்தி கலைத்ததையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டததையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந் நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.  போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் முயன்ற போது  வாக்குவாதம் முற்றிய நிலையில் பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். பொலிஸாரும் தடியடி நடத்தினர். 

201805231509165170_1_police1._L_styvpf.j

ஒரு கட்டத்தில் பொலிஸார்  துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் 22 வயதான காளியப்பன் என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/33812

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட் போராட்டம்: கள நிலவரம்

 

 
edapadi%20stalin

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் | கோப்புப் படம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று (22.05.2018) நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்க டில் 9 பேர் உயி ரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தூத்துக்குடி நகரமே கலவர காடாக மாறியது. பதற்றம் நீடிப்பதால் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ் நேரப் பதிவு:

         
 

4.45 PM:  தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவில் போலீஸ் - பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல். காவல்துறையினரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் மீண்டும் பதற்றம்

4.30 PM: ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற உறுதியை முதல்வர் அளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், ''தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்துக் கொண்டிருக்கும்போதே இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மக்களைத் தாக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்

நடந்த சம்பங்களை வேதனையோடு மக்கள் என்னிடம் விளக்கிக் கூறினார்கள்தூத்துக்குடி நகரமே சோக சம்பவத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற உறுதியை முதல்வர் அளிக்க வேண்டும்'' என்றார்.

4.05 PM: போலீஸார் துப்பாக்கிச் சூட்டைப் பரிசாகக் கொடுத்தபோதும் போராட்டக்காரர்கள் காயம்பட்ட போலீஸாருக்கு மனிதநேயத்துடன் உதவிய நெகிழ்ச்சி நிகழ்வு வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. விரிவாக வாசிக்க: தூத்துக்குடி போராட்டக்காரர்களின் மனித நேயம்: காயம்பட்டு மயக்க நிலைக்குச் சென்ற போலீஸாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சி நிகழ்வு

3.45 PM: போராட்டத்தில் ஈடுபட்ட சொந்த மக்களையே கொன்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. முதுகெலும்பு இல்லாத அரசு. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் அழுகுரல் கேட்கவில்லையா? என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். விரிவான செய்திக்கு: “முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு” - பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு

3.30 PM: பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் கடிதம்

 

modi%20vijayakanthjpg
 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை தேவை. தமிழகத்தில் மக்கள் நலனுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருவதைக் கண்டிக்கிறோம் .

3.20 PM: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் பேரணி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வரும், காவல்துறை டிஜிபியும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விரிவாக வாசிக்க: துப்பாக்கிச் சூடு விவகாரம்; முதல்வரும் டிஜிபியும் ராஜினாமா செய்ய வேண்டும்: ஸ்டாலின்

3.10 PM: ‘அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடும் அராஜகங்களை செய்யக்கூடாது’ என தூத்துக்குடி சம்பவம் குறித்து கார்த்தி தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க: “அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடும் அராஜகங்களை செய்யக்கூடாது” - கார்த்தி

GAUBA%202jpg
 

3.00 PM : தூத்துக்குடியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர  தமிழகம் கேட்டால் மத்திய படைகளை அனுப்பத் தயார் - மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா.

2.45 PM : ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. விரிவாக வாசிக்க: ‘ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும்’: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

2.35 PM: தூத்துக்குடி பிரைன் நகரில் போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு. காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் (22) என்பவர் பலியானார்.

kaaliyappanjpg

காளியப்பன்.

 

2.30 PM:  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினி அரசின் அலட்சியம், காவல்துறையின் மிருகத்தனமான செயல் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலிக் காட்சி ஒன்றைப் பதிவிட்டு கண்டித்துள்ளார். விரிவாக வாசிக்க:  துப்பாக்கிச் சூடு; உளவுத்துறையின் தோல்வி, அரசின் அலட்சியம், காவல்துறையின் மிருகத்தனமான செயல்: ரஜினி கண்டனம்

2.00 PM: முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்கும் தூத்துக்குடியில் தமிழக அரசு நடத்தியுள்ள இந்தப் படுகொலைக்கும் என்ன வேறுபாடு? காலத்தாலும் மன்னிக்க முடியாத இக்கொடுஞ்செயலுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலகுவதுதான் தற்போதைக்கு ஆறுதலளிப்பதாக அமையும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க: இலங்கை அரசின் இனப்படுகொலைக்கும் தூத்துக்குடியில் தமிழக அரசு நடத்திய படுகொலைக்கும் என்ன வேறுபாடு? - திருமாவளவன்

1.40 PM: தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல் மீது வழக்குப் பதிவு. 

 

101025638c5fd825c-26c7-4dc8-9e3a-c6be73c

கமல்ஹாசன்   -  BBC

 

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் 5 அல்லது அதற்கு மேல் நபர்கள் கூடத் தடைவிதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி மருத்துவமனைக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1.30 PM: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்தது போதாது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், அதுதான் நியாயமானது. தூத்துக்குடியில் அமைதி ஏற்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கமல் தெரிவித்தார்.

1.00 PM: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக  2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு, டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ். விரிவாக வாசிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு

12.50 PM: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தினை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இதுகுறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் ரஜினி, எ.கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஆகிய நான்கு பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுரேஷ் குமார் அமர்வு முன் முறையிட்டனர்.இது தொடர்பாக மனுவாகத் தாக்கல் செய்யும் பட்சத்தில் வரும் 25 ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

12.35 PM:  துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.

12.30 PM: தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஆறுதல்

 

16TIJOYKAMAL

தூத்துக்குடி விமான நிலையத்தில் கமல். | படம்: என்.ராஜேஷ்

 

'இழந்த உயிர்களுக்கு ஒரே மாற்று ஆலையை மூடுவது தான் என உறவினர்கள் கூறினர். உடற்கூறு ஆய்வின்போது நடுநிலையான மருத்துவர்கள் உடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்' என்று கமல் கூறினார்.

12.15 PM: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மே 25-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.  இதில் திமுகவின் 8 ஆதரவுக் கட்சிகளும் பங்கேற்கின்றன. விரிவாக வாசிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து வரும் 25-ம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

arunajpg

அருணா ஜெகதீசன் | கோப்புப் படம்: வி.கணேசன்.

 

12.05 PM:  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  விரிவாக வாசிக்க: துப்பாக்கிச் சூடு விவகாரம்; ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்: தமிழக அரசு உத்தரவு

madurai%20highcourtJPGjpg
 

11.30 AM:  ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. விரிவான செய்திக்கு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்குத் தடை: ஓய்வு பெற்ற பேராசிரியை தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

11.15 AM: துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு.   தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழுவினர் போராட்டம் 

11.10 AM:  தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கோரியது மத்திய உள்துறை அமைச்சகம்

http://tamil.thehindu.com/tamilnadu/article23966065.ece?homepage=true

Link to comment
Share on other sites

1 minute ago, நவீனன் said:

12.15 PM: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மே 25-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

ஆலைக்கு அடிக்கல் நாட்டியது ஜெயலலிதா. திறந்து வைத்தவர் கருணாநிதி. இப்போது திமுக ஆர்ப்பாட்டம் பண்ண ரெடி!

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

http://globaltamilnews.net/2018/80450/
இறந்த காளியப்பன் உடலைப் பார்த்து `ஏய் ரொம்ப நடிக்காதே போ’ என்ற தமிழக காவல்துறையினர் அதிர்ச்சியூட்டும் காணொளி!!

 

 

 

Link to comment
Share on other sites

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா.

 

PHOTO-2018-05-22-18-12-29-1024x682.jpg?r

அந்தோணி செல்வராஜ், க்ளாஸ்டன், கந்தையா, மணிராஜ்,  ஜெயராம், சண்முகம், தமிழரசன், வினிதா, மற்றும் வினிஸ்டா ஆகிய ஒன்பது பேர், செவ்வாய் மாலை 5 மணி வரையில் காவல்த் துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர்.

இன்று நடந்த போராட்டம், திடீரென்று, நேற்று இரவு திட்டமிடப்பட்டு இன்று காலை அரங்கேறிய போராட்டம் அல்ல. 100 நாட்களாக நடைபெறும் போராட்டத்தின் தொடர்ச்சி.   இன்று காலை, நடைபெற்ற போராட்டம், தடையை மீறி நடைபெற்ற போராட்டம் என்பதை காவல்துறை நன்றாகவே அறியும்.  இருந்தும், உள்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சரும், டிஜிபி டிகே.ராஜேந்திரனும் காட்டிய மெத்தனமும், அலட்சியமுமே இன்று 11 உயிர்களை பலி கொண்டிருக்கிறது.

33108111_10155901819718303_2352759685766

ஸ்டர்லைட் போராட்டம் 100 நாட்களை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது சிறு தமிழ் தேசிய குழுக்களோ, சுற்றுச் சூழல் குழுக்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ நடத்தும் போராட்டம் அல்ல.  ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்கள் இணைந்து நடத்தும் போராட்டம்.   ஏனென்றால், ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 25 ஆண்டுகளாக, பூமியையும், காற்றையும் நஞ்சாக்கும் இந்த ஆலையால் ஏற்படும் துன்பங்களை அனுபவிப்பவர்கள் அவர்களே நாமல்ல.

இந்த ஸ்டெர்லைட் ஆலை, முதன் முதலில் மஹாராஷ்டிர மாநிலத்தின் கடலோர மாவட்டமான ரத்னகிரி மாவட்டத்தில்தான் தொடங்குவதாக இருந்தது.  இதற்காக அரசு 500 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஒதுக்கியது.   ஆனால், அப்பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையாக போராடினார்கள்.   ஆலை தொடங்கி ஆண்டுக்கு 60 ஆயிரம் டன்  தாமிரத்தை அந்த நிறுவனம் உற்பத்தி செய்து வந்தது.    மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக மகாராஷ்டிராவின் நகர்ப்புர வளர்ச்சி நிலையத்தை, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டது.   அந்த ஆய்வு அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்வது, சுற்றுச் சூழலை கடுமையாக பாதிக்கும் என்று பரிந்துரை செய்ததை அடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தை மகாரஷ்டிர அரசு ரத்து செய்தது. இணைப்பு

இதையடுத்து வேதாந்தா (ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனம்) தேர்ந்தெடுத்த மாநிலம்தான் தமிழ்நாடு.   தமிழக வளங்களை கொள்ளையடித்து,  சுற்றுச் சூழலை நாசம் செய்ய ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ரத்தின கம்பளம் போட்டு வரவேற்றவர்தான் ஜெயலலிதா.

1 ஆகஸ்ட் 1994ம் அன்று, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை அமைக்க தடையின்மை சான்று வழங்கியது.  உடனடியாகவே இந்த ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டதை தொடங்கினார்கள்.   ஆனால், காவல்துறையை வைத்து, மக்கள் போராட்டத்தை வன்முறையாக ஒடுக்கினார் ஜெயலலிதா.

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தடையில்லா சான்று வழங்கியபோது, சுற்றுச் சூழலுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்த்து.  ஆனால் ஸ்டெர்லைட் இதை செய்யாமலேயே உற்பத்தியை தொடங்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 14 அக்டோபர் 1996 அன்று அனுமதி அளித்தது.  அப்போதும் மக்கள் போராட்டம் நடத்தத்தான் செய்தார்கள்.   கருணாநிதியும் மக்கள் எதிர்ப்பை பற்றி கவலை கொள்ளாமல்தான் அனுமதி அளித்தார்.   அன்று வேதாந்தாவுக்கும், ஸ்டெர்லைட்டுக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தவர், திமுகவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரும், கருணாநிதியால் முரட்டு பக்தன் என்று வர்ணிக்கப்பட்டவருமான பெரியசாமி.   அப்போது அவர் விட்டுச் சென்ற பணியை, அவர் மகள் கீதா ஜீவன் இப்போதும் செவ்வனே செய்து வருகிறார்.

நவம்பர் 1998ல், சென்னை உயர்நீதிமன்றம், தடையில்லா சான்று வழங்குகையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஒன்றைக் கூட ஸ்டெர்லைட் நிறைவேற்றவில்லை என்று கூறி, ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்தது.   நாக்பூரை சேர்ந்த தேசிய சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் அது தடை செய்யப்பட்டது.  அதே உயர்நீதிமன்ற அமர்வு, பத்து நாட்களில், நாக்பூர் ஆய்வு மையம் மீண்டும் ஒரு முறை ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, அது வரை தொழிற்சாலையில் உற்பத்தி நடக்கலாம் என்றும் கூறியது.   அந்த நாக்பூர் ஆய்வு மையம். 45 நாட்களில், ஸ்டெர்லைட் ஆலை ஒரு அற்புதமான, நேர்த்தியான சுற்றுச் சூழலை பாதுகாக்கும் ஆலை என்று சான்றளித்தது.    தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் தாமிரத்தைத்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அனுமதி அளித்திருந்தது.   ஆனால் ஸ்டெர்லைட் உற்பத்தி செய்ததோ,  1,75,242 டன் தாமிரம். இதை மட்டுமே காரணமாக வைத்து தொழிற்சாலையை தடை செய்திருக்க முடியும். ஆனால் இது ஒரு நாளும் நடக்கவில்லை.

21 செப்டம்பர் 2004ல், உச்சநீதிமன்றத்தின் ஆய்வுக் குழு, ஒரு நாளைக்கு 391 டன் தாமிரத்திலிருந்து 900 டன்னாக, உற்பத்தியை அதிகரிக்க வேதாந்தா விடுத்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.  ஒரு புறம் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கோரி விட்டு, அனுமதி கிடைக்கும் முன்னரே, ஆலை விரிவாக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று உள்ளன என்பதையும் அது சுட்டிக்காட்டியது.  22 அக்டோபர் 2004 அன்று, உச்சநீதின்ற ஆய்வுக் குழு ஆய்வு செய்த மறு நாள், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், ஸ்டெர்லைட்டின் ஆலை விரிவாக்கத்துக்கு தடையில்லா சான்று வழங்கியது.

அப்போது மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் யார் தெரியுமா ?   ஊர் போற்றும் உத்தமராக இன்று வலம் வரும் ஆ.ராசாதான். மத்திய அரசு அனுமதி அளித்ததால், ஜெயலலிதா முறுக்கிக் கொண்டார்.   தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை வைத்து, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்தார்.  7 ஏப்ரல் 2005 அன்று, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதுகிறது.  அப்போதும் அமைச்சராக ஆ.ராசாதான் இருக்கிறார். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறது.   இதற்குள் ஜெயலலிதாவை சரிக்கட்டாமலா இருநதிருப்பார்கள் ? ஆலை விரிவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.  உற்பத்தி ஒரு நாளைக்கு 391 டன்னிலிருந்து, 900 டன்னாக அதிகரிக்கிறது.

2008ம் ஆண்டு, உற்பத்தியை 1200 டன்னாக அதிகரிக்க தமிழக அரசிடம் ஸ்டெர்லைட் அனுமதி கோருகிறது.  அதற்கான அனுமதியும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது.  அந்த அனுமதியை அளித்தது  கருணாநிதி.  2010ல், சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கிறது.   அந்த தடையை எதிர்த்து, ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றம் செல்கிறது. உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று உத்தரவிட்டு, இறுதி உத்தரவை பிறப்பிக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.  இந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்டெர்லைட் எந்த அனுமதியும் இல்லாமல் தன் உற்பத்தியை தொடர்ந்து நடத்துகிறது.

2 ஏப்ரல் 2013 அன்று, ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பை வழங்குகிறது.   மனுதாரர்கள் தரப்பில் ஸ்டெர்லைட் சுற்றுச் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.   இறுதியாக என்ன தீர்ப்பு அளித்த்து தெரியுமா ?   பாதிப்புகள் உண்மைதான்.  இது வரை ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசுக்கு 100 கோடி செலுத்த வேண்டும்.  ஆனால் ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்பதே.  இணைப்பு

ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக வழக்கு தொடுத்தால், வன்முறை செய்தவனை, அந்த பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு, அவளை தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கலாம் என்பதற்கும் இதற்கும் வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இதன் பிறகு, ஸ்டெர்லைட், காட்டில் மழைதான்.  கட்டுப்பாடே கிடையாது.  தற்போது இந்த போராட்டங்கள் தொடங்கியதற்கான காரணமே, ஸ்டெர்லைட் மேலும் தனது உற்பத்தியை அதிகரிப்பதற்காக, தொழிற்சாலையை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள்தான்.    ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விரிவுபடுத்தப் போகிறது என்ற தகவல் வந்ததுமே தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 14 பிப்ரவரி 2018 அன்று போராட்டம் தொடங்கியது.  போராட்டம் தொடங்கிய முதல் நாளே, தமிழக அரசு போராட்டம் நடத்திய 250 பேரை கைது செய்தது.  அன்று முதல் இந்த போராட்டம் நாள் தவறாமல் நடந்து வருகிறது.

sterlite-protests-tuticorin.jpg?resize=7

முதல் நாள் போராட்டம்

பல்வேறு வகையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்று போராட்டம் தடையில்லாமல் நடைபெற்றது.   ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கிடையாது என்று ஒப்புக்காக அதிமுக அடிமை அமைச்சர்கள் பேட்டியளித்தாலும், உண்மையில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்டெர்லைட்டின் தலைமை நிர்வாகி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

11 ஏப்ரல் 2018 அன்று அவர் அளித்த பேட்டியில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் நிச்சயம் நடைபெறும்.   எல்லா அனுமதிகளும் கிடைத்து விடும்.  2019 இறுதியில், புதிய ஆலை தொடங்கும் என்று பேட்டியளித்தார்   மேலும், தற்போது நடைபெறும் போராட்டங்கள் ஆலை விரிவாக்கத்தை எந்த விதத்திலும் தடுக்காது என்றும் அந்நிய சக்திகளின் தூண்டுதலால் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்றும் கூறினார். இணைப்பு   இதே கருத்தை, ஆர்எஸ்எஸ் பிரமுகரும், மைலாப்பூர் ப்ரோக்கருமான குருமூர்த்தி பிரதிபலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

c2db5f6e-36da-4d6e-aee5-5281bca2be96.jpg

மக்கள் பெருந்திரளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் எந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடக்கிறதோ, அந்த ஆலையின் தலைமை நிர்வாகி ஆலை விரிவாக்கம் நிச்சயம் நடக்கும் என்று பேட்டியளிக்கிறார் என்றால் பின்புலத்தில் எத்தனை பேரங்கள் நடந்திருக்கின்றன என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.  இன்று அமைச்சர்கள் பேசுவது எல்லாமே முழுமையான பொய்களே தவிர வேறில்லை.

இன்று (22 மே 2018) அன்று நடைபெற்ற போராட்டம் ஏற்கனவே நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சிதான் என்றாலும், இன்று ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு என்ற கோரிக்கையோடு மக்கள் திரண்டார்கள்.  அரசாங்கத்துக்கு இது குறித்து தகவல் தெரியுமா என்றால் நன்றாக தெரியும். அது தெரிந்ததனால்தான் 144 தடை உத்தரவே பிறப்பிக்கப்பட்டிருந்த்து.

இத்தனை நாட்களாக நடந்து வந்த போராட்டத்திற்கு மக்கள் எந்த அளவில் திரண்டார்கள் என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல.  அது கண் முன்னால் நடந்த விஷயம்.  98 நாட்களாக நடந்து வந்த போராட்டங்களின் தீவிரத் தன்மை குறித்து உளவுத் துறை அறிக்கையை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியே இருந்திருக்கிறது.

இன்று நடைபெற உள்ள போராட்டம் குறித்தும், மக்கள் பெருந்திரளாக வருவார்கள் என்பது குறித்தும், உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

இது தவிர, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள போராட்டத்தை ஒட்டி, 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம், மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தது.  அந்த வழக்கில் 18.05.2018 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இன்றைய போராட்டம் அமைதியாக நடக்க வாய்ப்பு இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தது.

நீதிமன்றம் தனது தீர்ப்பில் “22.05.2018 அன்று, நடைபெற உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்த துண்டறிக்கையில் உள்ள வாசகங்கள், போராட்டம் நடத்துபவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களாக தெரியவில்லை.

அந்த துண்டறிக்கையில் உள்ள விபரங்கள், மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி நடந்த பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் பொது மக்கள் நலன் கருதி 144 தடை உத்தரவு பிறப்பிப்பது சரியான நடவடிக்கையாகும்.” என்று தீர்ப்பளித்துள்ளது.

இத்தனை நாட்களாக நடந்த போராட்டங்களை கவனத்தில் கொண்டு, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை.  இன்று பெரும் கூட்டம் கூட உள்ளது என்பதை உளவுத் துறையும், எடப்பாடி பழனிச்சாமிக்கும், மாவட்ட காவல்துறைக்கும் அனுப்பியுள்ளது.

அற்பனுக்கு அர்த்த ராத்திரியில் வாழ்வு வந்தது போல முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு, இந்த அறிக்கையின் முக்கியத்துவம் என்ன என்பது புரிந்ததா என்றே தெரியவில்லை.  நிச்சயம் புரிந்திருக்க வாய்ப்பில்லை. எடப்பாடிக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.  முதலில் ஜெயலலிதா காலிலும், பின்னர் சசிகலா காலிலும் விழுந்து, அவர்கள் வீசியெறியும் எலும்புகளை பொறுக்கி உடல் வளர்த்த நபரை முதல்வராக்கினால் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?

hqdefault.jpg?resize=480%2C360&w=400&qua

ஏனென்றால், 100 நாட்களாக இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, போராட்டக் காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல், தன்னை கடவுளாக சித்தரிக்கும் திரைப்படத்தை மக்கள் வரிப்பணத்தில் தயாரித்து, அதை சினிமா திரையரங்குகளில் திரையிட உத்தரவிடும் நபர் என்ன ஜென்மமாக இருக்க முடியும் ?

9d9e58dc-6513-47ff-95d0-2b40bdeebfb6.jpg

அதிமுக சார்பில் நேற்று நாளிதழில் கொடுக்கப்பட்ட காவிரி வெற்றி விழா விளம்பரம்.

உளவுத் துறையின் ஒரு மூத்த அதிகாரி கூறியது என்னவென்றால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்காக செல்லும்போதெல்லாம், “எஸ்பி சார்.  இந்த இன்கம் டாக்ஸ் ரெய்டு வர்றதை முன்னாடியே கண்டுபிடிச்சி சொல்ல மாட்டீங்களா.  வாட்ஸப்புல பேசறதை எப்படி ஒட்டுக் கேக்கறது ?”  என்பதற்குத்தான் முக்கியத்துவம் தருவார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார் அந்த அதிகாரி.  அதற்கு சாத்தியமில்லை என்றதும், மிகுந்த சலிப்போடு “என்ன அதிகாரி நீங்க.  எது கேட்டாலும் முடியாதுன்னு சொல்றீங்க” என்பார் எடப்பாடி.  “இவன் கிட்டயெல்லாம் வேலை பாக்கணும்ன்றது என் தலையெழுத்துங்க.   இந்த வயசுல இனி வேற வேலைக்கு போக முடியாது.  இல்லன்னா தூக்கி போட்டுட்டு போயிடுவேன்” என்றார்.

2011ம் ஆண்டு, பரமக்குடி இமானுவேல் நினைவு தினத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் இறந்த சம்பவத்துக்கு அடுத்த ஆண்டு நிகழ்வின்போது, ஜெயலலிதா  காவல் துறை அதிகாரிகளை அழைத்து தெளிவாக இந்த முறை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறக் கூடாது என்று தெளிவாக உத்தரவிட்டார்.

2012ம் ஆண்டு இமானுவேல் நினைவு நாளின்போது, தற்போது டிஜிபியாக உள்ள டிகே.ராஜேந்திரன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்தார்.   நிகழ்ச்சி நடக்கும் முதல் நாளன்றே ராஜேந்திரன் ராமநாதபுரம் சென்றார். தென் மண்டல ஐஜி, மேற்கு மண்டல ஐஜி வரவழைக்கப்பட்டனர்.  நான்கு டிஐஜிக்கள், 9 எஸ்பிகள், 40 டிஎஸ்பிகள் என்று பெரும் அளவில் அதிகாரிகள் முகாமிட்டு, மக்கள் வரும் பாதைகள், வன்முறை நடக்க சாத்தியமுள்ள இடங்கள், வன்முறை செய்யக் கூடியவர்கள் என்று அத்தனையும் கணக்கில் கொள்ளப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.    2012ம் ஆண்டு முதல், இன்று வரை, இமானுவேல் நினைவு நாளிலும் பிரச்சினை இல்லை.  முத்துராமலிங்கம் நினைவு நாளிலும் பிரச்சினை இல்லை.

இது போல இன்றைய போராட்டத்துக்கும் உரிய திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்.  சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தூத்துக்குடி செல்லவில்லை.  தென் மண்டல ஐஜி கூட தூத்துக்குடியில் இல்லை.  நெல்லை சரக டிஐஜி கபில் குமார் சரத்கர் மட்டுமே களத்தில் இருந்த மூத்த அதிகாரி.

ஒரு படையின் தளபதிக்கு தன் படைகளை வழி நடத்தும் திறமை இருக்க வேண்டும்.  உரிய திட்டமிடல் வேண்டும்.  முன்னணியில் நின்று படைக்கு உத்வேகமாக இருக்க வேண்டும்.  இவை எதுவுமே டிகே.ராஜேந்திரனிடம் இல்லை.   டிகே.ராஜேந்திரன் காக்கி சீருடை அணிந்து கொண்டு, ஒரு ஏடிஎம்மின் காவலாளியாக இருக்க மட்டுமே லாயக்கானவர்.  ஒரு காவல்துறை மூத்த அதிகாரிக்கான எந்தத் தகுதியும் ராஜேந்திரனுக்கு கிடையாது.

1992ம் ஆண்டு, கும்பகோணத்தில் மகாமகம் நடந்தபோது தஞ்சை எஸ்பியாக இருந்தவர் டிகே.ராஜேந்திரன்தான். அப்போது சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத காரணத்தால் 50க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

அதே போல 1999ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, காவல்துறை சரிவர செயல்படாமல் தடியடி நடத்திய காரணத்தால், 17 பேர் உயிரிழந்தனர்.

rajendra-01-1498900296.jpg?resize=600%2C

இந்த இரண்டு புகழுக்கும் சொந்தக்காரர் டிகே.ராஜேந்திரன்தான்.  இப்படிப்பட்ட மங்குணியை எடப்பாடி பழனிச்சாமி நள்ளிரவில் பதவி நீட்டிப்பு அளித்து டிஜிபியாக்குகிறார் என்றால் எடப்பாடி எப்படிப்பட்ட மங்குணி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் “தொடக்கப் புள்ளி முதல் இந்த சம்பவம் மாவட்ட நிர்வாகத்தால் தவறாகக் கையாளப்பட்டது.   போராட்டக்காரர்களின் எண்ணவோட்டத்தையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள தவறியது மாவட்ட நிர்வாகம். துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, ஐஜி அல்லது டிஐஜி போன்ற மூத்த அதிகாரிகள் அந்த இடத்தில் இல்லை.   இந்த போராட்டம் மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.   நக்சல் அமைப்புகள், கிராம மக்களிடையே புகுந்து, நிலைமையை மேலும் தீவிரமாக்கினார்கள். இந்த மூன்று மாதங்களில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியோ, டிஜிபியோ ஒரே ஒரு முறை கூட, நேரில் சென்று நிலைமையை ஆராயவில்லை.   உள்துறை செயலாளர் கூட, இந்த போராட்டத்தின் தீவிரத் தன்மையை ஆய்வு நடத்த முனையவில்லை.  இந்த மெத்தனப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.  

மக்கள் போராட்டத்திற்குள்ளே, பல சமூக விரோத சக்திகள் புகுந்து, ஊடகத்தில் ஒரு பிரிவினரின் உதவியோடு போராட்டத்தின் திசையை மாற்றுவதில் வெற்றி கண்டார்கள்.   சாதாரண மக்களின் எதிர்ப்பார்ப்பு, 25 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் தங்களின் குறைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே.  

மூத்த அதிகாரிகள் இந்த போராட்டம் மற்றும் அதன் தொடர் விளைவுகள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருந்ததால்,  கீழ் நிலையில் இருக்கும் அதிகாரிகளுக்கு இப்பிரச்சினையின் தீவிரத்தன்மை தெரியாமல் போனது.  இதனால் சட்டம் ஒழுங்குக்கு எத்தகைய சிக்கல் வரும் என்பதையும் உணரத் தவறினர்.  

இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்து, உடனடியாக காவல்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளை எடுக்காவிடில், வருங்காலத்தில் இதை விட மோசமான சம்பவங்கள் நடப்பதை தடுக்க இயலாது.” என்றார்.

அந்த காவல்துறை அதிகாரி கூறியது போல, மாவட்ட நிர்வாகம் இந்த சிக்கலை எதிர்கொள்ள எத்தகைய தயார் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

காவல்துறை என்பது ஒரு வேட்டை நாய்.  அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரையில்தான் அது சாதுவான பிராணி.  அதை கட்டவிழ்த்து விட்டால், வேட்டை நாய்க்கான குணத்தோடுதான் பாயும்.   அப்படித்தான் அது பயிற்றுவிக்கப்படுகிறது.

100 நாட்களாக தொடர்ந்து போராடியும், நமது பிரச்சினைகளை மயிரளவு கூட மதிக்காத நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் எத்தகைய கோபத்தோடு இருப்பார்கள் என்பதை நிர்வாகம் உணர்ந்திருக்க வேண்டும்.   ஆனால் இதை யாருமே உணர்ந்ததாக  தெரியவில்லை.

20 ஆயிரம் மக்கள் திரண்டு வருகையில் சில நூறு காவல்துறையினர் என்னதான் செய்து விட முடியும் ?    இது போன்ற பெருந்திரள் போராட்டங்களில் யார் முதல் கல்லை வீசியத என்பதை கணிப்பது ஏறக்குறைய முடியாத காரியம்.  கல்லெறிந்த்து காவல்துறையாகக் கூட இருக்கலாம்.  அந்த முதல் கல்லுக்கு பிறகு, மக்கள் கூட்டமாக மாறுவார்கள்.  கூட்ட மனப்பான்மையில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் பல சம்பவங்களில் பார்த்துள்ளோம். இன்றும் அப்படித்தான் நடந்தது.

1ad26b13-05f3-4e94-88c5-6c7b4425b00f.jpg3c379c7e-858b-4edd-804f-5b3b226be4ca.jpge3d13bfe-fed5-4482-8a8f-22b54c395ed2.jpgPHOTO-2018-05-22-18-03-42-1024x682.jpg?rPHOTO-2018-05-22-18-03-46-1024x682.jpg?rPHOTO-2018-05-22-18-03-47-1024x682.jpg?rPHOTO-2018-05-22-18-12-37-1024x682.jpg?r

வன்முறை கல்வீச்சில் தொடங்கி, வாகனங்களுக்கு தீவைப்பதில் பரவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து சூறையாடும் வரை பரவியது. மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், காம்பவுன்ட் சுவர் ஏறிக் குதித்து, அருகில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.  ஆட்சியர் அலுவலக கோப்புகள் கொளுத்தப்பட்டன.

அது வரை  நடத்தப்பட்ட கண்ணீர் புகை குண்டு வீச்சுகள், தடியடிகள் பலன் தரவில்லை.  காவல்துறையை மக்கள் கூட்டத்தோடு ஒப்பிடுகையில் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.

சுடு என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஒரு காவலர் இப்படித்தான் சுட வேண்டும் என்று அந்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியாது.  மனிதத் தன்மை உள்ள காவலர், மனிதர்களை குறிவைத்துத் தாக்காமல், கூட்டத்தை கலைப்பதில் முனைவார்.   மனிதர்களை வாய்ப்பு கிடைத்தால் கொல்வதில் ஆனந்தம் கொள்ளும் ஒரு நபர் இது போல வாய்ப்பு கிடைத்தால், எத்தனை பேரை கொல்வது என்று போட்டி போட்டுக் கொண்டு கொலை செய்வார்.    இதை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் தடுத்திருக்க முடியும்.  வேட்டை நாய்களை கட்டுப்படுத்த, அதன் பயிற்சியாளர்கள் அருகே இல்லாதபோது, வேட்டை நாயை நாம் குறை சொல்லி என்ன பயன் ?

c5f0183e-d7ca-4a7d-a7e1-c77810f305a1.jpg

இது போன்ற சம்பவங்களை மூடி மறைக்க வழக்கம் போல பயன்படுத்தப்படும் அதே ஆயுதத்தை எடப்பாடி பழனிச்சாமியும் பயன்படுத்தியுள்ளார்.  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.  ஜல்லிக் கட்டு வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையம், மூன்று மாதத்துக்குள் 23 ஏப்ரல் 2017க்குள் அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும்.   தற்போது ஒரு வருடம் கடந்து விட்டது.   நீதிபதி ராஜேஸ்வரன், அரசு செலவில், மக்கள் வரிப்பணத்தில், ட்ரைவர் அலுவலகம், அரசு குடியிருப்பு, உதவியாளர்கள், ஸ்டெனோ, மாதம் ஒன்றரை லட்சத்துக்கு மேல் ஊதியம் என்று சொகுசாக வசதிகளை அனுபவிக்கையில் எதற்காக மூன்று மாதத்தில் அறிக்கை கொடுப்பார் ?

9025555Jallikattu-rajeswaran_10.jpg?resi

நீதிபதி ராஜேஸ்வரன்

திருச்செந்தூர் கோவிலின் உண்டியல் சரிபார்ப்பு அதிகாரியாக இருந்த சுப்ரமணியம் பிள்ளை 26.11.1980 அன்று மர்மமான முறையில் இறந்து போகிறார். கோவிலின் அறங்காவலர்காக இருந்த அதிமுகவினர் உண்டியல் காசை திருடுவதை அவர் தடுத்தார் என்பதே அவர் மரணத்துக்கு காரணமாக இருந்தது.  மற்ற நீதிபதிளைப் போலவே நினைத்து, நீதிபதி சிஜேஆர்.பால் என்பவரை விசாரணை நீதிபதியாக நியமித்தார் எம்ஜிஆர்.   நியமித்து விட்டு, சுப்ரமணியம் பிள்ளை தற்கொலை செய்து கொண்டார் என்று கூசாமல் கூறினார் எம்ஜிஆர்.  ஆனால் நீதிபதி பால், சுப்ரமணியம் பிள்ளை கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திட்டவட்டமாக அறிக்கை அளித்தார்.

நீதிபதி சிஜேஆர் பால் போன்ற நீதிபதிகளை இப்போது பார்க்க இயலாது.

தாமரபரணி ஆற்றோரம் நடந்த மாஞ்சோலை தொழிலாளர் படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட மோகன் கமிஷன், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை விசாரிக்க அமைக்கப்பட்ட சண்முகம் கமிஷன், தொலைபேசி ஒட்டுக் கேட்பு புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட சண்முகம் கமிஷன், பரமக்குடி வன்முறையை விசாரிக்க அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன் ஆகிய அனைத்து கமிஷன்களுமே, அரசுக்கு ஆதரவான அறிக்கைகளைத்தான் அளித்தன.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க அரசு முடிவு செய்யும் நோக்கமே, ஓய்வுக்கு பின், கையில் பிச்சைத் தட்டோடு, எப்போது மீண்டும் பதவி கிடைக்கும் என்று அலையும் ஓய்வு பெற்ற நீதிபதிகளை மனதில் வைத்துத்தான். (விதிவிலக்கான நேர்மையான நீதிபதிகள் உண்டு).

அப்படியிருக்கையில், எடப்பாடி பழனிச்சாமி விரும்பியதை அறிக்கையாகத் தரத் தயாராக இருக்கும் ஒரு அடிமை நீதிபதியை கண்டு பிடிப்பதில் பெரிய சிரமம் இருக்கப் போவதில்லை.  மேலே சொன்ன அனைத்து விசாரணை ஆணையங்களும் இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களை தடுப்பது எப்படி என்று நீண்ட பரிந்துரைகளை அளித்துள்ளன.  ஆனால் இந்தப் பரிந்துரைகள், தலைமைச் செயலகத்தின் பொதுத் துறையின் அழுக்கு படிந்த அலமாரிகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த விசாரணை ஆணையங்களால் ஒரு பயனும் விளையப் போவதில்லை.

நிற்க. வேதாந்தா நிறுவனத்தின் மீது சுற்றுச் சூழலை அழிக்கிறது, இயற்கையை சுரண்டுகிறது என்ற குற்றச்சாட்டு, தமிழகத்தில் மட்டுமல்ல, ஒதிஷா, சட்டீஸ்கர் மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட  உலகின் பல நாடுகளில் உள்ளன.  இயற்கையை சீரழித்து, தனது செல்வத்தை பெருக்கும் நபர்தான் வேதாந்தாவின் உரிமையாளர் அனில் அகர்வால்.  இவருக்காகத்தான் எடப்பாடி அரசு காவடி தூக்கிக் கொண்டு இருக்கிறது.

33117469_1840243859348856_12319744965633

தூத்துக்குடி மரணத்துக்கு பொறுப்பானவர்கள் என்று அடையாளம் காணப்பட வேண்டியவர்களில் முதன்மையானவர்கள் உள்துறையை தன் கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல் துறையின் தலைவராக இருக்கும் டிகே.ராஜேந்திரன்.

இன்று இறந்து போன அந்த 11 பேர், விலை மதிக்க முடியாத மனித உயிர்கள்.  அவர்களின் நோக்கம், பாழ்படும் எங்கள் மண்ணையும் காற்றையும் காப்பாற்றுங்கள் என்பதே. இது ஜீவாதார கோரிக்கை.  அடிப்படை உரிமை.   இதை கேட்டதற்காக 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இது போல இன்றும் பல மரணங்களை நிகழ்த்தி, அந்த பிணங்களின் மேல் சிரித்துக் கொண்டே ஆட்சி நடத்தும் அளவுக்கான கேவலமான பிறவிதான் எடப்பாடி பழனிச்சாமியும் அவர் அமைச்சர்களும்.

வழக்கமான ஆர்ப்பாட்டங்கள், கருப்புக் கொடி, மனிதச் சங்கிலி, உண்ணாவிரதம் போன்றவைகளுக்கான காலம் கடந்து விட்டது.  எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டிய அவசியமும் தேவையும் தற்போது வந்து விட்டது.

கட்சி வேறுபாடுகளை மறந்து, ஸ்டாலின், டிடிவி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி, வைகோ, திருமாவளவன், இடது சாரிகள், இதர இயக்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகை இட வேண்டும்.   ராஜினாமா செய்யும் வரை, இந்த போராட்டம் தொடர வேண்டும்.   இறந்த 11 உயிர்களுக்கு அதிமுக அடிமைகளை பதில் சொல்ல வைக்க வேண்டும். சட்டபேரவை ஒரு நிமிடம் கூட நடக்கக் கூடாது. எடப்பாடி பழனிச்சாமி இந்தப் பதவியை விட்டு ஓடும் வரை இந்தப் போராட்டங்கள் தொடர வேண்டும்.

எதிர்க்கட்சியாக உள்ள அத்தனை தலைவர்களின் கடமை இது.

பாரதிதாசனின் இந்தப் பாடலை  நாம் செயல்படுத்த வேண்டிய தருணம் இது.

கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!

அலைமா கடல் நிலம் வானிலுன்
அணி மாளிகை ரதமே
அவை ஏறிடும் விதமே யுன
ததிகாரம் நிறுவுவாய்!

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?

உலகாள உனது தாய் மிக
உயிர் வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

https://www.savukkuonline.com/14246/

Link to comment
Share on other sites

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் இண்டெர்நெட் முடக்கம்: வதந்தி பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை

download%204

இண்டெர்நெட் முடக்கம்- சித்தரிப்பு படம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஆலை விரிவாக்கம் என்ற முடிவை கண்டித்து ஆலையை அகற்ற கோரி கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற போது போலீஸார் தடுக்க கலவரம் மூண்டது.

 

இதில் முன்னெச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். இந்தியாவையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தேசிய அரசியல் தலைவர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இரண்டாம் நாளான இன்றும் வன்முறை வெடித்தது. இன்றும் போலீஸார், பொதுமக்கள் மோதல் கலவரமாக மாறியதில் போலீஸார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுதும் தன்னெழுச்சியாக பொதுமக்கள் அரசியல் இயக்கங்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லையிலும், கன்னியாகுமரியிலும் பல போராட்டங்கள் நடந்தன. மீனவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போரட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர தூத்துக்குடியின் அண்டை மாவட்டமான நெல்லை, கன்னியாகுமரியிலும் கலவரம் பரவாமல் இருக்க நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இணையதள (இன்டெர்நெட்) சேவையை தமிழக அரசு முடக்க உள்ளது.

உள்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது இணையதள சேவையை இம்மூன்று மாவட்டங்களில் முடக்க உள்ளன. இன்றிரவு 9 மணி முதல் இணையதளங்கள் முடக்கப்படும் என தெரிகிறது.

துப்பாக்கி சூடு குறித்தும், போராட்டம் குறித்தும் வதந்தி பரப்புவதை தடுக்கவும், வாட்ஸ் அப் மூலம் தகவல் பரிமாற்றத்தை முடக்கவும் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. எத்தனை நாட்களுக்கு இந்த சேவை முடக்கப்படும் என தெரியவில்லை.

இதற்கு முன்னர் காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, நாகலாந்து போன்ற மாநிலங்களில் இணையதள சேவையை அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் முடக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உண்டு. காஷ்மீரில் இது அடிக்கடி நடக்கும். தமிழகத்தில் இணையதள சேவை வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்

http://tamil.thehindu.com/tamilnadu/article23970032.ece?homepage=true

Link to comment
Share on other sites

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடல் கூராய்வில் தடயங்களை மறைக்க முடியுமா?

 
 

சந்தேகத்திற்குரிய ஒரு மரணமோ, கொலையோ நடந்திருந்தால் அதுகுறித்த விசாரணையில் உடல் கூராய்வு அறிக்கை முக்கிய பங்கு வகிக்கும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடல் கூராய்வில் தடயங்களை மறைக்க முடியுமா?

ஸ்டர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 11 பேர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை உயரும் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், போலீஸார் நிகழ்த்தியது திட்டமிட்ட படுகொலை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடல் கூராய்வில் தடயங்களை மறைக்க முடியுமா?

மக்கள் போராட்டத்தை எதிர்கொள்வதற்கு என்று சில வழிகாட்டுதல்கள் உள்ளன. முதலில் கண்ணீர் புகை குண்டு வீச வேண்டும், பின் தடியடி, இறுதியாகதான் துப்பாக்கியை பிரயோகிக்க வேண்டும். அதுவும் முட்டிக்குகீழ்தான் சுட வேண்டும். துப்பாக்கி சூடு நடக்க இருக்கிறது என்று ஒலிப்பெருக்கியில் அறிவிக்க வேண்டும் என்பன போன்ற நெறிமுறைகள் உள்ளன. ஆனால் அப்படியான எந்த வழிக்காட்டுதல்களையும் பின்பற்றாமல் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்று குற்றஞ்சாட்டும் அப்பகுதி மக்கள் இப்போது தங்களுக்கு எதிரான தடயங்களை மறைப்பதற்காகவும் போலீஸார் முயற்சிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

 

 

இப்படியான சூழ்நிலையில் உடல் கூராய்வு அறிக்கை இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

முதல் உடல் கூராய்வு

முதன் முறையாக உடல் கூராய்வு 1302 ஆம் ஆண்டு, வடக்கு இத்தாலி பகுதியான பொலாக்னாவில் தான் செய்யப்பட்டது. சந்தேகத்திற்குரிய முறையில் இறந்தவர்களின் உடலை மருத்துவர் பார்டோலிமியா உடல் கூராய்வு செய்து, இறப்பிற்கான காரணத்தை கண்டறிய முயன்றார்.

அதிக நாட்கள்

எஸ்.ஆர். எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஆய்வு மையம், தடவியல் மருத்துவ துறையின் தலைமை பேராசிரியர் மருத்துவர் கே. தங்கராஜிடம் பேசினோம்.

"உடல் கூராய்வு என்பது பொதுவான ஒன்று என்றாலும், துப்பாக்கிச் சூட்டினால் மரணித்தவர்களை உடல் கூராய்வை அனவராலும் மேற்கொண்டுவிட முடியாது" என்கிறார் மருத்துவர் தங்கராஜ் .

"துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்ட மரணத்தை ஆராய தடயவியல் அறிவியலில் பாலிஸ்டிக்ஸ் என்ற தனி துறையே (Firearms Examination and Ballistics Unit )இருக்கிறது . துப்பாக்கி ரவையால் மரணித்தவரின் உடலில் குறிப்பாக இரண்டு காயங்கள் இருக்கும். துப்பாக்கி குண்டு உட்புகுந்த உடலின் பாகம். பின் அந்த குண்டு வெளியே சென்ற உடலின் பாகம். இதனை entry/exit பாயிண்ட் என்பார்கள். இதனை முறையாக கூராய்வு செய்து, தடயங்களை பூனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். இதன் காரணமாக துப்பாக்கி குண்டு மரணங்களில் உடல் கூராய்வு அறிக்கை வர அதிக நாட்கள் பிடிக்கும்" என்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடல் கூராய்வில் தடயங்களை மறைக்க முடியுமா?

மேலும் அவர், "துப்பாக்கிதாரி அருகிலிருந்து சுட்டு இருந்தால், உடலில் துப்பாக்கி ரவை, துப்பாக்கி புகை மற்றும் துகள் இருக்கும். கொஞ்ச தூரத்திலிருந்து சுட்டு இருந்தால் துப்பாக்கி புகை மட்டும் இருக்கும். தொலைவிருந்து சுட்டு இருந்தால் துப்பாக்கி குண்டு மட்டும் இருக்கும்" என்கிறார்.

தடயங்களை மறைக்க முடியும்

துப்பாக்கி ரவையால் மரணித்தவர்களை உடல் கூராய்வு செய்யும் போது தடயங்களை மறைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற நம் கேள்விக்கு, "தடயங்களை மறைக்க முடியும்." என்ற அவர், சில சிக்கலான வழக்குகளில் அரசியல் அழுத்தங்கள் இருக்கின்றன என்றும் கூறுகிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடல் கூராய்வில் தடயங்களை மறைக்க முடியுமா?

"துப்பாக்கி காயங்களை, ஈட்டி காயங்கள் என்று மாற்றி அறிக்கை தர முடியும்" என்கிறார்.

துப்பாக்கி குண்டுகளில் entry/ exit பாயிண்ட் இருக்கிறது என்று சொன்னேன் தானே? அந்த காயங்களை ஈட்டி உள் நுழைந்ததால்/குத்தியதால் ஏற்பட்ட காயம் என்று அறிக்கையை மாற்றி தர முடியும் என்கிறார் மருத்துவர் தங்கராஜ் .

பாதிக்கப்பட்டவர்களின் உரிமை

பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பல உரிமைகள் உள்ளன என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜெ. அமலோற்பவநாதன்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடல் கூராய்வில் தடயங்களை மறைக்க முடியுமா?படத்தின் காப்புரிமைARIF ALI

அவர், "உடல் கூராய்வில் ஏதேனும் முறைகேடு செய்வார்கள் என்ற சந்தேகம் இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட தரப்பு உடல் கூராய்வை கண்காணிக்க தாங்கள் விருப்பப்பட்ட மருத்துவரை நியமித்துக் கொள்ள முடியும். அதுபோல, ஒட்டு மொத்த கூராய்வையும் வீடியோ எடுக்கலாம்." என்கிறார்.

மனித உரிமை மீறல்

"போலீஸ் துப்பாக்கி சூட்டில் மனித உரிமை மீறல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, துப்பக்கி குண்டுகள் எங்கே பாய்ந்துள்ளன என்பதை பார்க்க வேண்டும். தலை, நெஞ்சு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்திருந்தால், அது மனித உரிமை மீறல்தான்" என்கிறார் அமலோற்பவநாதன்.

பிற செய்திகள்:

https://www.bbc.com/tamil/india-44222289

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு

 
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். #SterliteProtest

 
 
 
 
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு
 
தூத்துக்குடி:
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர். 
 
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர். 
 
ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
 
இந்நிலையில், நேற்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தற்போது உயிரிழந்துள்ளர். இதன் மூலம், பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 
 

 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/23212314/1165185/death-toll-rises-to-13-in-sterlite-protest-police.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய காட்டுமிராண்டிகளின் மிலேச்சத்தனம். சட்டத்திற்கு விரோதமாக பணம் சேர்க்கும் பெருச்சளிகளை/பண முதலைகளை பிடித்து உள்ளே போட வக்கில்லை. சாதரண அப்பாவிகளை சுட்டுக் கொல்லுகின்றது.

தண்ணிரையோ அல்லது கண்ணீர்புகை குண்டுகளை பாவிப்பதற்கு பதிலாக துப்பாக்கி ரவைகளினால் அப்பாவி ஏழைகளை கொல்லுகின்றது.

இந்தியா எனப்படும் நாடு இன்னும் நாகரிகமடையாத ஒர் காட்டு மிராண்டிகள் வாழும் நாடு.மனித உரிமைகளை ஒரு போதும் மதிப்பதில்லை.   வல்லரசும் மண்ணாக்கட்டியும்.

Link to comment
Share on other sites

துப்பாக்கி சூடு எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்பி மாற்றம்

 

 
tutyphotoexpocollector

தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி மகேந்திரன் - கோப்புப் படம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலத்த எதிர்ப்பும் பொதுமக்கள் கோபாவேசத்தையும் அடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி மாற்றப்பட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஆலை விரிவாக்கம் என்ற முடிவை கண்டித்து ஆலையை அகற்ற கோரி கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற போது போலீஸார் தடுக்க கலவரம் மூண்டது.

 

இதில் முன்னெச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இரண்டாம் நாளான இன்றும் வன்முறை வெடித்தது. இன்றும் போலீஸார், பொதுமக்கள் மோதல் கலவரமாக மாறியதில் போலீஸார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த கலவரத்துக்கு காரணம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், தூத்துகுடி எஸ்.பி. மகேந்திரன் உள்ளிட்டோரின் நிர்வாக குறைபாடுகளே என்று அரசியல் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். காவல் அதிகாரிகள் பொதுமக்களை கையாண்ட விதம் பலத்த கண்டனத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் கையிலெடுத்துள்ளது. உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுக்க உள்ளது. பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் சர்வ சிக்‌ஷ அபியான் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

மாவட்ட எஸ்.பி. மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் கீரிஜா வைத்தியநாதனும், உள்துறைச்செயலர் நிரஞ்சன் மார்டியும் பிறப்பித்துள்ளனர். மாற்றப்பட்டவர்கள் விபரம்.

1.தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் சென்னை போக்குவரத்து துணை ஆணையர்(வடக்கு) மாற்றப்பட்டுள்ளார். 2. நீலகிரி மாவட்ட எஸ்பி முரளிரம்பா தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். 3. சென்னை போக்குவரத்து துணை ஆணையராக (வடக்கு) உள்ள சண்முகப்பிரியா நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

1. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருக்கும் வெங்கடேஷ் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் இயங்கும் சமர சிக்‌ஷா அபியான் திட்ட மாநில கூடுதல் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். 2. நெல்லை மாவட்ட ஆட்சியராக இருக்கும் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

3. தமிழ்நாடு தொழில் வழிகாட்டு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி துறையின் நிர்வாக துணைத்தலைவராக இருக்கும் சில்பா பிரபாகர் சதீஷ் நெல்லை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். 4. ஆசிய வளர்ச்சி வங்கியின் மேலாண் இயக்குநரின் முன்னாள் ஆலோசகராக இருந்த ஆஷிஸ் வச்சானி மீண்டும் தமிழகம் திரும்புவதை ஒட்டி திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலராக நியமிக்கப்படுகிறார்.

இது தவிர மேலும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23970833.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

தூத்துக்குடியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர  தமிழகம் கேட்டால் மத்திய படைகளை அனுப்பத் தயார் - மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா.

செயலாளர்:தேவை ஏற்பட்டால் சிறிலங்கா இராணுவத்தையும் அழைக்க தாயார்

சிறிலங்கா : நாங்கள் உதவி செய்ய காத்திருக்கிறோம் ...முன் அனுபவ்ம் எமக்கு உண்டுtw_sleepy:

Link to comment
Share on other sites

20 hours ago, கந்தப்பு said:

அழ்ந்த அனுதாபங்கள்  . இதில் கொல்லப்பட்ட கந்தையா என்பவர் சிலோன் காலனி - தூத்துக்குடியினைச் சேர்ந்தவர். சிலோன் காலனியில் இருப்பவர்கள் ஈழத்து அகதிகளா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

இந்திய காட்டுமிராண்டிகளின் மிலேச்சத்தனம். சட்டத்திற்கு விரோதமாக பணம் சேர்க்கும் பெருச்சளிகளை/பண முதலைகளை பிடித்து உள்ளே போட வக்கில்லை. சாதரண அப்பாவிகளை சுட்டுக் கொல்லுகின்றது.

தண்ணிரையோ அல்லது கண்ணீர்புகை குண்டுகளை பாவிப்பதற்கு பதிலாக துப்பாக்கி ரவைகளினால் அப்பாவி ஏழைகளை கொல்லுகின்றது.

இந்தியா எனப்படும் நாடு இன்னும் நாகரிகமடையாத ஒர் காட்டு மிராண்டிகள் வாழும் நாடு.மனித உரிமைகளை ஒரு போதும் மதிப்பதில்லை.   வல்லரசும் மண்ணாக்கட்டியும்.

எம் கண் முன்னாலேயே...இந்தியா உடைவதைக் காணும் வாய்ப்பு...எமக்குக் கிடைக்கும் போலத் தான் உள்ளது!

முள்ளி வாய்க்காலில்...அரங்கேறிய இந்தியாவின்  'யுத்த காண்டத்தின்' பிரதி பலன்களை ...இந்தியா நிச்சயம் அனுபவித்தே...ஆக வேண்டும்!

அது தான்....இயற்கையின் விதி!

காஷ்மீர்...அருணாச்சலப் பிரதேஷ், தமிழ் நாடு....எனத் தொடரட்டும்!

Link to comment
Share on other sites

தமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு வீரவணக்கம் 

முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவனத்தின் ச்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான போராட்டத்தில் தமிழக அரசின் காவல்துறையினரால் தோழர் தமிழரசன் கொல்லப்பட்டுள்ளார். 

தோழர் தமிழரசன் எப்பொழுதும் அமைதியான புன்சிரிப்புடன் தெளிவான சிந்தனையுடன் இருப்பவர். தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களுக்கான போராட்டங்கள் அனைத்திலும் தோழர் தமிழரசனின் பங்கும் இருக்கும். தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியெங்கும் தெருமுனைக்கூட்டங்கள் போட்டு தமிழ் மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியதில் தோழர் தமிழரசனுக்கு பெரும்பங்குள்ளது. 
தமிழீழத்தில் 2008 2009 கால கட்டத்தில் சிறீலங்கா அரசால் மக்களால் படுகொலைசெய்யப்பட்ட பொழுது தூத்துக்குடி முழுவதிலும் தெருமுனைக்கூட்டங்களை நடத்தி தமிழீழத்திற்கு ஆதரவாக மக்களிடத்தில் பரப்புரை செய்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழீழப்பொங்கல் தோழர் தமிழரசன் அவர்களாலேயே நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் நிழற்படங்கள் அனைத்து தமிழீழ ஆதரவு நாளிதழ்களிலும் இணையதளங்களிலும் வெளிவந்திருந்தது... 

உழைக்கும் மக்களின் உரிமைக்காக தன் இறுதி வரை குரல்கொடுத்த தோழர் தமிழரசன் தமிழக அரசின் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் தற்செயலாக கொல்லப்பட்டார் என்பதை மனது ஏற்க மறுக்கிறது. 

- தோழமையுடன் அகரன்

-முகநூல்

Link to comment
Share on other sites

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சுட்டுவது என்ன?

 

 
tuticorin

படம். | எல்.சீனிவாசன்

நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் ஒரு நாட்டில், ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படுவதற்கு அரசின் தூண்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வுகள் (separation of powers) மீறப்படாமல் இயங்குவது அடிப்படையான நிபந்தனையாகும். அதாவது, சட்டம் இயற்றும் நாடாளுமன்றம்/சட்டசபை, சட்டத்திற்கும் அதற்கு ஆதாரமான அரசியல் சட்டத்திற்கும் பொருள்கோடல் தந்து நீதியை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டிருக்கும் நீதிமன்றங்கள், இவற்றை சட்டத்தின் வழி நின்று செயல்படுத்தும் நிர்வாகத் துறை ஆகிய மூன்று தூண்களும் தமது அதிகார வரம்புகளை மீறாமல் ஒன்றுடன் ஒன்று இயைந்து செயல்பட வேண்டும். நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இம்மூன்று தூண்களின் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனங்கள் வாயிலாக அவற்றைச் செழுமைப்படுத்தும் பணியை மேற்கொள்ளும்.

சட்டம் இயற்றும் மன்றங்கள், காலத்தின் தேவைக்கேற்ப சட்டங்கள் இயற்றுவது, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை தீர்மானிப்பது ஆகியவற்றோடு, அவற்றைச் செயல்படுத்தும் பணியையும் மேற்கொள்கின்றன. செயல்படுத்தும் நிர்வாக அலகுகளை (அதிகார வர்க்கத்தை) மேற்பார்வையும் செய்கின்றன. அரசின் கொள்கைகளை அதிகார வர்க்கம் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதைக் கண்காணிக்க மதிப்பீட்டுக் குழு (Estimates Committee), பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee) எனப் பல குழுக்களை, எதிர்கட்சி எம் எல் ஏக்களை உள்ளடக்கி அமைத்துச் செயல்பட நமது நாடாளுமன்றம்/சட்டசபைகளுக்கு அதிகாரம் உண்டு. நமது நாடாளுமன்றம்/சட்டசபைகளின் செயல்பாடுகள் வரைமுறைகளை மீறிச் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவே கணக்குத் தணிக்கையாளர் அமைப்பும் (Comptroller and Auditor General of India) உருவாக்கப்பட்டுள்ளது.

 

நாடாளுமன்றம்/சட்டசபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டிற்குள், இச்சபையால் மேற்பார்வை செய்யப்படும் அதிகார வர்க்கம் வீழ்ந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்யப்படும் பொருட்டே, அதிகார வர்க்கத்தை – ஐ ஏ எஸ், ஐ பி எஸ், இன்னபிற - தேர்வு செய்வதற்கான தனித்த தேர்வு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளுக்கான நெறிமுறைகளும் பயிற்சிகளும் தொடர்புடைய, தனித்தியங்கும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

நாடளுமன்றமும் சட்டமன்றங்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நியதிகளை மீறும் சட்டங்களை இயற்றாமல் இருப்பதைக் கண்காணித்து, கட்டுக்குள் வைக்கும் பணியை நீதிமன்றங்கள் செய்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், சட்டங்களுக்குப் பொருள் கூறுகின்றன. அதோடு, அதிகார வர்க்கத்தின் அதிகாரங்களை சட்டத்திற்கு உட்பட்டு வரையறுத்து, கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன. தனது ஆணைகளைக்கூட செயல்படுத்தும் அதிகாரம் அற்றதாக வரையறுக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதிமன்றத்தின் அதிகாரமும் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

நடைமுறையில் இவற்றில் ஏற்ற இறக்கங்கள் நேரும்போதெல்லாம் இந்த வரையறையுடன் உரசிப் பார்த்து விமர்சனங்கள் எழுவது வாடிக்கை. ஆனால், இத்தூண்களில் ஒன்று பிறவற்றின் அதிகார வரம்புகளை அதீதமாக மீறுவது அசாதாரண சூழல்களைத் தோற்றுவிக்கும்.

குறிப்பாக, சட்டம் இயற்றும் மன்றங்களின் அதிகாரங்களை ஒரு கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ படிப்படியாகத் தம்மை நோக்கிக் குவிக்கும்போது, பிற தூண்களின் அதிகார வரம்புகளுக்குள் தலையிட்டு, மட்டுப்படுத்தி செயலற்றதாக்கிவிடுவது நிகழ்கிறது. ஒரு கட்சி அதைச் செய்யும்போது, அதை ஒரு கட்சி ஆட்சிமுறையாக – மொத்தத்துவ ஆட்சிமுறை (Totalitarianism) – ஹிட்லரின் நாசிசம், முசோலினியின் பாசிசம், ஸ்டாலினின் கம்யூனிசம் – உருவெடுக்கிறது. ஒரு தனி நபர் அதைச் செய்யும்போது, எதேச்சதிகாரம் எழுகிறது.

இந்திய ஜனநாயகமும் தமிழகமும் இவ்விரு பேராபத்துகளின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

மோடி அரசு பதவிப் பொறுப்பு ஏற்றவுடன் கொண்டுவர முயற்சி செய்த தேசிய நீதிமன்ற நியமன ஆணையச் சட்டம் (2014), இந்திய அளவில் இதற்கான முதல் அறிகுறியாக அமைந்தது. இச்சட்டத்தின் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகார வரம்புகளை நாடாளுமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு முயற்சி செய்தது. நல்ல காலமாக, உச்சநீதிமன்றம் அதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி நிராகரித்தது (தற்போதைய கொலீஜிய முறையின் குறைகள் தனித்துப் பேசவேண்டியவை).

தற்போது, ஆட்சிக்காலம் நிறைவுற இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், மீண்டும் மோடி அரசு, அதிகார வர்க்கம் தேர்வு செய்யப்படும் முறையில் மாற்றம் செய்ய முனைந்திருக்கிறது. இப்புதிய விதிகள் ஒப்புக்கொள்ளப்பட்டால், அதிகாரத்தில் உள்ள கட்சியின் கருத்தியல், அல்லது செல்வாக்கிற்கு உட்பட்டவர்களேஅதிகார வர்க்கத்தினராக தேர்வு செய்யப்படும் ஆபத்து இருப்பதைப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது, தற்போது அதிகார வர்க்கத்தினரின் தேர்வில் நிலவி வரும் அரசியல் சார்பற்ற தன்மைக்கு முடிவு கட்டி, ஒரு கட்சியின் மொத்தத்துவ ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும்.

இந்திய அளவிலான நகர்வுகள் இவ்வாறு மொத்தத்துவ ஆட்சியை நோக்கிய ஆபத்துகளாக இருக்கையில், தமிழகம் வேறுவகையான சரிவில் ஏற்கனவே வீழ்ந்துவிட்டிருக்கிறது எனலாம்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் முதல் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டவரான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இது சத்தமில்லாமல் நடந்தேறியது. சரியாகச் சொல்வதென்றால் இரண்டு விஷயங்கள் நடந்தேறின.

முதலாவது, சட்டமன்றத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மந்திரிசபை செயலற்றதாக ஆக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களையும் ஜெயலலிதா நேரடியாகத், தன்னிடமே குவித்துக்கொண்டார். அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் ஜெயலலிதாவின் ஆணைக்கு உட்பட்டு மட்டுமே இயங்குவதாக திருகப்பட்டன. மந்திரிசபை பெயரளவிற்கு மட்டுமே இருந்தது.

இதன் விளைவாக, அரசின் பல துறைகளின் கொள்கை முடிவுகளும், செயல் நடவடிக்கைகளும் பெருத்த தேக்கத்திற்கு உள்ளாயின. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கடந்த மூன்று அறிக்கைகளை மேலோட்டமாக நோட்டம் விட்டாலே, அவ்வறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏராளமான முறைகேடுகளுக்கும் கேள்விகளுக்கும் ஜெயலலிதா அரசால் முறையான பதில்கள் அளிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதைக் காணமுடியும்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் பொதுக் கணக்குக் குழு கூட்டப்படவும் இல்லை, அக்குழுவின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.

எவருக்கும் பதில் சொல்லும் கடமையோ பொறுப்போ அற்ற, சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வினோதமானதொரு தனி நபர் எதேச்சதிகார ஆட்சியாகவே ஜெயலலிதாவின் ஆட்சி இருந்தது.

அதாவது, சட்டம் இயற்றும் பொறுப்புடைய சட்டசபையும், அதிகார வர்க்கத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்புடைய மந்திரிசபையும் ஒரு தனி நபரின் வரம்பற்ற அதிகாரத்தால் செயலற்றவையாக மாற்றப்பட்டிருந்தன.

இரண்டாவதாக, 2010 – 16 காலகட்டத்தில், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு ஜெயலலிதாவால் நியமன ஐ ஏ எஸ் ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்கள் ஆட்சியர்களாக பொறுப்பளிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் ஜெயலலிதாவிற்கு முளைப்பாரி எடுக்காத குறையாக புகழ்ந்து பாராட்டியது சிலருக்காவது நினைவில் இருக்கக்கூடும்.

அதாவது, ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருப்பவர்கள் ஆட்சியர்களாக்கப்பட்டது அதிகார வர்க்கத்தின் தேர்வில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்ற ஜனநாயக ஆட்சிமுறைக்கான அடிப்படை நிபந்தனையையும் அழித்தது. அதிகார வர்க்கத்தையும் ஒரு தனிநபரின் விசுவாசத்திற்குரிய குழுவாக மாற்றியது.

ஜெயலலிதாவின் தலையீட்டில் இருந்து தப்பியவை, நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் தேர்தல் நடைமுறையும் வாக்களிக்கும் உரிமையும் மட்டுமே.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ரோமப் பேரரசின் அரியாசணத்தை அரசனின் பிரத்யேக மெய்பாதுகாப்பாளர்களிடமிருந்து (Praetorian Guards) ஏலத்தில் எடுத்து டிடியஸ் ஜூலியானஸ் (Didius Julianus) முடிசூட்டிக்கொண்டதைப் போன்றதொரு சூழல் தற்போது நிலவுகிறது.

சட்டசபை/மந்திரிசபையின் மேற்பார்வையின் கீழ் கட்டுப்பட்டு நிர்வாகம் செய்யவேண்டிய அதிகார வர்க்கம், கேட்பாரின்றி அதிகாரத் துஷ்பிரயோகத்தில் திளைத்திருக்கிறது. ஜூலை 2017 இல் வெளியிடப்பட்டுள்ள தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் (அறிக்கை 3, பொது மற்றும் சமூக நலத்துறை) இதுவரை நடைபெற்றிராத முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கலில் ஒரே மாணவரின் வங்கிக் கணக்கில் பல மாணவர்களுக்கான உதவித் தொகைகள் வைப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரே மாணவருக்கு பலமுறை உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாதிச் சான்றுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இம்முறைகேடுகள் ஆயிரக்கணக்கில் நடைபெற்றுள்ளதாக கணக்குத் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில்கூட இத்தகைய முறைகேடுகள் நடைபெறவில்லை என்பது குறித்துக்கொள்ள வேண்டியது.

ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு விசுவாசமானவர்களாகக் கருதப்பட்ட, நியமன ஐ ஏ எஸ் அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றவர்களில் எவரெவர் இப்போது எவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பது எவருக்கும் புரியாத புதிர். எது எப்படியாக இருந்தாலும், அதிகார வர்க்கத்தின் வரம்புகளும் சட்டமன்ற/மந்திரிசபை வரம்புகளும் மீறப்பட்ட சூழல் தொடரும் நிலையில், மந்திரிசபையின் மேற்பார்வைக்குக் கட்டுப்படாமல் ஒரு அதிகார வர்க்கம் தன்னிச்சையாக செயல்படுவது மிகுந்த ஆபத்தானது.

அத்தகையதொரு பேராபத்தைத்தான் தூத்துக்குடியில் நடந்தேறியுள்ள துப்பாக்கிச் சூடு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

99 நாட்கள் அமைதியான முறையில் போராடிய பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை அறிந்துகொள்ள, பேச்சுவார்த்தை நடத்த, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மந்திரிசபையுமே முன்வராத நிலையில், அதிகார வர்க்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது அதிகார வரம்பெல்லையை மீறி கொடூரமாக நடந்துகொண்டிருக்கிறது.

இக்கொடூரம் அரங்கேறிய பின்னரும், சாதாரண மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்ற அடிப்படை உண்மைகூட எவருக்கும் தெரியவில்லை என்ற சூழலே நிலவுகிறது. ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் சட்டசபைக்கும் மந்திரிசபைக்கும் பொறுப்புகூறும் கடமை (accountability) அதிகார வர்க்கத்திற்கு இருக்கிறது. அத்தகைய பொறுப்புகூறும் பொறுப்பற்ற ஒரு அதிகாரவர்க்கம் ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, எந்தவொரு ஆட்சிமுறைக்குமே பெருங்கேடு விளைவிக்கும் ஒரு அங்கமாக உருவெடுத்துவிடும் பேரபாயமே தற்சமயம் நம் முன் நிற்கும் பெரும் சவால்.

http://tamil.thehindu.com/opinion/blogs/article23970873.ece

Link to comment
Share on other sites

தூத்துக்குடிக்கு சென்ற ஸ்டாலின், கமல், வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு

பதிவு: மே 24, 2018 10:41

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட ஸ்டாலின், கமல், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்னன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SterliteProtest

 
 
 
 
தூத்துக்குடிக்கு சென்ற ஸ்டாலின், கமல், வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு
 
தூத்துக்குடி:
 
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13-பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்னன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
 
201805241041438824_1_kaka._L_styvpf.jpg
 
இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அங்கு சென்றதால் அவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/24104144/1165264/FIR-against-Stalin-kamalhaasanvaikothiruma-who-visit.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.