Jump to content

முன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கும் கருவியும் துப்பாக்கி ரவைகளும் மீட்பு.


Recommended Posts

முன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கும் கருவியும் துப்பாக்கி ரவைகளும் மீட்பு.

 

 

formar-ltte-6-1.jpg?resize=800%2C533
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டு முற்றத்தில் அகழ்வுப் பணிகளை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று 23-05-2018 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்வதற்கான அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்

 

தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் காவல்துறையினர் , நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் விமானப்படையினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த அகழ்வினட போது ஒரு வெடிபொருள் கண்டு பிடிக்கப்படும் கருவியும்(ஸ்கானர்) மற்றும் ஐந்து கைதுப்பாக்கி ரவைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

formar-ltte-3-1.jpg?resize=768%2C512formar-ltte-1.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/80399/

Link to comment
Share on other sites

ஆயுதங்கள் மீட்கப்பட்ட வீடு, புலமம்பெயர்ந்துவாழும் முன்னாள் போராளி தீபனுக்கு சொந்தானது?

 

 

புலிகளின் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட இவர் கோபி – அப்பனுடன் தொடர்புபட்டவரா? – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி முன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் அகழ்வு விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டு முற்றத்தில் அகழ்வுப் பணிகளை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

 

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்

இன்று 23-05-2018 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்வதற்கான அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர் தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்கு பொலிசார், , நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் விமானப்படையினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்கு சென்ற விமானப்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் தர்மபுரம் பொலிசார், , நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது சுமார் ஆறு அடி ஆழத்தில் பொலித்தீன் கொண்டு சுற்றப்பட்டு பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மற்றும் கைத்துப்பாக்கி தொட்டா ஐந்து என்பன மீட்க்கப்பட்டுள்ளது இவை பாவிக்கக்கூடிய நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தீபன் என்கின்ற முனியாண்டிராஜா ரஞ்சன் முன்னர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில்உயர் தரப்புக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் எனவும் மீள் குடியேற்றத்தின் பின்னர் பாரிய அளவில் பேசப்பட்ட கோபி அப்பன் அவர்களின் பிரச்சனையில் தொடர்புடையவர் என சந்தேகத்தில் பாததுகாப்பு தரப்பினரால் கைதுசெய்ய முறைப்பட்ட பொழுது நாட்டை விட்டு தப்பிச் சென்று புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. 

tharmapuram-news-1.jpg?resize=800%2C534tharmapuram-news-2.jpg?resize=800%2C534tharmapuram-news-3.jpg?resize=800%2C534tharmapuram-news-4.jpg?resize=800%2C534tharmapuram-news-5.jpg?resize=800%2C534tharmapuram-news-6.jpg?resize=800%2C534tharmapuram-news-7.jpg?resize=800%2C534tharmapuram-news-8.jpg?resize=800%2C534tharmapuram-news-9.jpg?resize=800%2C534tharmapuram-news-10.jpg?resize=800%2C480tharmapuram-news-11.jpg?resize=480%2C800

http://globaltamilnews.net/2018/80416/

Link to comment
Share on other sites

சரி காட்டிக்கொடுத்தவரிடம் கேளுங்கள் வெடிபொருள் கண்டறி கருவியையும், ஐந்து கைத்துப்பாக்கி ரவைகளையும் வைத்து எந்த ராணுவ முகாமை தாக்கி அழிக்க முடியும். 

வெடிபொருள் கண்டறிகருவியை பார்க்கும்போது ஹலோ ரஸ்ட் எனும் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்துக்கு சொந்தமானது போல இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவருக்கு புலம்பெயர் நாட்டில் வீசா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

 

குறித்த தீபன் என்கின்ற முனியாண்டிராஜா ரஞ்சன் முன்னர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில்உயர் தரப்புக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் எனவும் மீள் குடியேற்றத்தின் பின்னர் பாரிய அளவில் பேசப்பட்ட கோபி அப்பன் அவர்களின் பிரச்சனையில் தொடர்புடையவர் என சந்தேகத்தில் பாததுகாப்பு தரப்பினரால் கைதுசெய்ய முறைப்பட்ட பொழுது நாட்டை விட்டு தப்பிச் சென்று புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. 

 

http://globaltamilnews.net/2018/80416/

இத்தனை வருஷமா ஒழுங்கா கிறீஸ் பூசப்படாத நிலையில் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் சின்னதாகூட துருப்பிடிக்காமலா இருந்திருக்கும்?

நிலக்கணிகள் மீட்ப்புக்கே பாதுகாப்பு உபகரணங்கள்,விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்போது,

நிலத்துக்கடிக்கியில் எந்த வகையான,எவ்வளவு தொகையில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியாத நிலையில்,தோண்டுற இயந்திரத்தை இயக்குபவர் குடைபிடித்தபடியும், மற்றவர்கள் இப்படி கூட்டமா சந்தையில் நிற்பதுபோல் நின்றா தோண்டுவார்கள்?

அவர்கள் தோண்டும் ஸ்டைலை பார்த்தால் ஏற்கனவே அடியில் என்ன இருக்கிறது என்ற விபரமே அவர்களிடம் இருந்திருக்கிறதுபோல்தான் தெரிகிறது.

இந்த ஆயுதங்களை வைத்து ஒரு வலைப்பின்னல்போல் கொஞ்சப்பேரை கைது செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்,ரஞ்சன் எஸ்கேப் ஆனதால திட்டம் பிழைச்சுபோய் வைச்சத திரும்ப எடுக்கிறார்கள் என்பதுபோல்தான் பலருக்கும் தோன்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழவன் குறிப்பிட்டதுபோல் தாங்களே புதைத்து பின் தோண்டி எடுப்பதுபோல்தான் இருக்கிறது. செய்தி எழுதியவரின் தமிழ்வசன நடையிலும் சிங்கள அல்லது முஸ்லிம் சாயம் தெரிகிறது. மொத்தத்தில் எல்லாமுயற்சியும் வேஸ்ட்டு.

Link to comment
Share on other sites

3 hours ago, vanangaamudi said:

வழவன் குறிப்பிட்டதுபோல் தாங்களே புதைத்து பின் தோண்டி எடுப்பதுபோல்தான் இருக்கிறது. 

சிறீலங்காவின் இன்றைய அரசியல்வாதிகளும், பாதுகாப்புப் படைகளும், யானையைக் காட்டி இதுதான் பூனை என்றால்...! மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் எல்லோரும் நம்பித்தான் ஆகவேண்டும்.!! நம்பிக்கைதான் வாழ்க்கை. 
 

Link to comment
Share on other sites

இது திட்டமிட்ட நாடகம் என்று புலப்படுகிறது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.