• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

உன்னை அறிவேன்  

Recommended Posts

உன்னை அறிவேன்  

 


 மாதத்தின் முதல் வாரம் என்பதால், அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. வித்யா டிராலியை தள்ளியபடி வர, அவள் மாமியார் சாரதா, பருப்பு பாக்கெட்டுகளை எடுத்து டிராலியில் போட்டாள். 
''வித்யா... நீ போய் சோப்பு, பவுடர் எல்லாம் எடுத்து வை; நான், பூண்டு நல்லதா பார்த்து எடுத்துட்டு வரேன்,'' என்றதும், டிராலியை தள்ளிக் கொண்டு போனாள், வித்யா. 
வித்யாவுக்கு திருமணமாகி, மூன்று மாதம் தான் ஆகிறது. படித்து முடித்தவுடன் திருமணம் என்பதால், இன்னும் அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை.
அமைதியாக இருப்பாள், சாரதா. வேலைக்காரியிடம் அன்பாக நடந்து கொள்வாள். மனதுக்கு தப்பு என்று தெரிந்தால், 'படபட'வென்று பேசி, கோபப்படுவாள். இதுவரை அவளிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றாலும், உள்ளுக்குள் மாமியாரை நினைத்து, கொஞ்சம் பயம் இருக்கவே செய்தது. வீட்டு நிர்வாகம் எல்லாம் மாமியார் தான். 
'கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்; உன் மாமியார் நல்லவங்களா தான் தெரியறாங்க. அவங்க மனசு கோணாம நடந்துக்க வித்யா...' என்று அறிவுரை கூறியிருந்தாள், அம்மா.
தேவையான குளியல் சோப்புகளை எடுத்து டிராலியில் போட்டாள்.
''ஹேய் வித்யா... எப்படி இருக்கே... உன் கல்யாணத்துக்கு என்னை, 'இன்வைட்' பண்ணலயே...'' என்ற குரல் கேட்டு திரும்பியவள், அதிர்ச்சியின் உச்சத்துக்கு போனாள்.
'பிரபு... இவன் எங்கே, இங்கே...' மனம் படபடக்க, அவனையே பார்த்தாள்.
''என்ன வித்யா... காதலிக்கிறது ஒருத்தனை... கல்யாணம் பண்ணிக்கிறது இன்னொருத்தனையா... பணக்கார இடம் கிடைச்சதும், என்னை கழட்டி விட்டுட்டே அப்படித்தானே...'' என்றான், ஏளனமாக!
''இல்ல பிரபு... காதல் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராதுன்னு எங்கம்மாப்பா மறுத்துட்டாங்க... அவங்களுக்கு நான் ஒரே பெண்; எதிர்த்து எதுவும் செய்ய முடியல. தயவுசெய்து, என்னை மறந்துடுன்னு சொன்னேனே... நீ இன்னுமா பழைய விஷயங்கள ஞாபகம் வச்சுருக்கே...'' என்றாள், சங்கடத்துடன்!
''எப்படி வித்யா மறக்க முடியும்... காலேஜில் படிக்கும்போது, சிரிச்சு பேச வேண்டியது... படிப்பு முடிஞ்சதும், பெத்தவங்க பாத்த பையன கல்யாணம் பண்ணிகிட்டு, 'செட்டில்' ஆக வேண்டியது... நடந்தது எதையும் நான், மறக்கல; உனக்கு பாடம் புகட்டணும்ன்னு தான் அமைதியாக இருந்தேன். நீ எப்படி சந்தோஷமா வாழ்ந்திடறேன்னு பாக்கிறேன்,'' என்றான், குரூரமாக!
''அய்யோ... அப்படியெல்லாம் எதுவும் செய்திடாதே... உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்,'' என்று அவள் கெஞ்ச, அதற்குள் அங்கு வந்த சாரதா, யாரோ ஒரு இளைஞன், வித்யாவிடம் பேசுவதைப் பார்த்து,''யாருப்பா நீ?'' என்று கேட்டாள்.
''வணக்கம் ஆன்ட்டி... நான் வித்யாவோட காலேஜில் ஒன்னா படிச்சவன். வித்யா, என்னை, கல்யாணத்துக்கு, 'இன்வைட்' பண்ணல... அதான் விசாரிச்சுட்டு இருந்தேன்,'' ஓரக்கண்ணால் வித்யாவை பார்த்தபடி சொன்னான்.
''அதனாலென்னப்பா... கல்யாணத்துக்கு வரலைன்னா என்ன... நாளைக்கு வீட்டுக்கு வாயேன்... என் மகனும் வீட்டில் தான் இருப்பான்; 'லஞ்ச்' சாப்பிட்டு போகலாம்.''
''கட்டாயம் வரேன் ஆன்ட்டி; வித்யா கூப்பிடாட்டியும் நீங்க அன்பாக கூப்பிடறீங்களே...'' என்றான்.
அவனிடம் அட்ரஸ் கொடுத்த சாரதா.
''போகலாம் வித்யா,'' என்றாள்.
'கடவுளே... என்ன நடக்கப் போகிறதோ தெரியலயே...' என்று அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, அவனுக்காக, வடை, பாயசத்துடன் சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தாள், சாரதா.
அவள் கணவன், 'உனக்கு ரொம்ப, க்ளோஸ் பிரெண்டா... கல்யாணத்துக்கு கூப்பிடலன்னு சண்டைக்கு வந்தானா'ன்னு கேட்கறார்.
மனசு, 'படபட'வென்று அடித்தது.
என் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போடப் போகிறான்.
எதுவுமே செய்யத் தோன்றாமல், முகம் வெளிறி உட்கார்ந்திருந்தாள், வித்யா.
''வித்யா... நீ இன்னும் குளிக்கலயா... போய் குளிச்சுட்டு, நீட்டா டிரஸ் பண்ணிட்டு வா... உன் பிரெண்டு விருந்துக்கு வரப் போறான் இல்லயா... நல்லவிதமா கவனிச்சு அனுப்புவோம்,'' சாரதா சொல்ல, மவுனமாக எழுந்து போனாள்.
பெரிய பார்சலுடன் வந்தவன், அதை வித்யாவின் கணவனிடம் கொடுத்து, நீண்ட நாள் பழகியவன் போல் சிரித்து சிரித்து பேசினான்.
விருந்து உபசரிப்பு முடிந்து, ஹாலில் வந்து உட்கார்ந்தான், பிரபு.
நிலை கொள்ளாமல் தவித்தாள், வித்யா.
வித்யாவை பார்த்து சிரித்தவன், ''மாதவன்... உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். அதை, நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல... இருந்தாலும், அதை மறைப்பது தப்புன்னு என் மனசுக்கு படுது,'' என்றான் பிரபு.
தலையில் இடி விழப் போகிறது என்பது புரிய, வரும் கண்ணீரை அடக்கினாள், வித்யா.
''தம்பி... நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியல... அதுக்கு முன், நாங்க சொல்ல வந்ததை கேளுங்க...'' என்ற சாரதா, மகனை பார்த்து, ''நீ சொல்றியா இல்ல நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டாள்.
''நீங்களே சொல்லுங்கம்மா...''
''பிரபு... உங்கள பத்தி, வித்யா எங்ககிட்ட சொல்லியிருக்கா... காலேஜில் படிக்கும்போது, நீங்க இரண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் விரும்புனீங்களாம்... ஆனா, அதுக்கு வித்யாவின் அப்பா உடன்படலயாம்...
''யோசிச்சு பாத்தபோது, பெத்தவங்க சொல்றபடி நடப்பதுதான் நல்லதுன்னு அவளுக்கு தோணுச்சாம்... உங்கள நேரில் பாத்து மறந்துட சொல்லி, மன்னிப்பு கேட்டாளாம்... நீங்களும் மறப்பதாக சொன்னீங்களாம்... இது, ஏதோ இமாலய தப்பு போல கல்யாணம் ஆனதும் எங்ககிட்ட சொன்னா...
''இதெல்லாம் சகஜம் வித்யா... பருவ வயதில், ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. எல்லா காதலும் கல்யாணத்தில் முடியிறதில்ல. கல்யாணத்துக்கு முன் நடந்தத, கனவா மறந்துட்டு, இனி, உன் கணவனுக்கு மட்டும் மனசில் இடம் கொடுத்து, வாழ்ந்தால் போதும்ன்னு சொன்னேன்.
''என்னப்பா நான் சொல்றது சரிதானே... நீயும் ஒரு நல்ல பெண்ணாக பாத்து கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகப்பாரு. நீ என்னமோ சொல்லணும்ன்னு சொன்னியே... இந்த விஷயமா... இல்ல வேறு ஏதாவதா?''
சாரதா, அவனை தீர்க்கமாக பார்க்க, அவனோ, உட்காரவே சங்கடப்பட்டவனாக, ''இல்ல ஆன்ட்டி... இந்த விஷயம் உங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சு, மன்னிப்பு கேட்கலாம்ன்னு...'' அவன் குரல் உள்ளே போனது.
''பரவாயில்லப்பா... நீ கிளம்பு... நீ வந்ததுல ரொம்ப சந்தோஷம்.''
அவன் வெளியேற, கண்ணீரை அடக்க முடியாதவளாய், சாரதாவை கட்டிக் கொண்டு அழுதாள், வித்யா.
''இங்கே பாரு... எதுக்கு இந்த அழுகை... நீ எந்த தப்பும் செய்யல. அவன்கிட்ட சொன்னதை தான் உனக்கும் சொல்றேன். கல்யாணத்துக்கு முன் நடந்தத மறந்துட்டு, இனி, உன் கணவனுக்கு மட்டும் மனசில் இடம் கொடுத்து, வாழ்ந்தால் போதும்; புரியுதா...'' என்றவள், ''கடைசியா அவன் உன்கிட்டே பேசினத கேட்டேன்... அவன் மனநிலை புரிந்துதான் வரச்சொன்னேன்...
''சரி சரி... போய் முகத்தை அலம்பிட்டு, மாதவனுடன் எங்காவது வெளியே போயிட்டு வா... நான் கொஞ்சம், 'ரெஸ்ட்' எடுக்கறேன்... ஆனா, ஐந்து மணிக்கு வந்துடணும் சரியா... உன் கையாலதான் நான் காபி குடிக்கணும். புரியுதா...''
அத்தையின் குரலில் கண்டிப்பை தாண்டி தெரியும் அன்பு புரிய, அவளை பார்த்து, மனம் நிறைய சிரித்தாள், வித்யா.

 நன்றி தினமலர் .. பரிமளா ராஜேந்திரன் 
 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கொரோனா வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறைவரும் கிருமி நோய்- பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாகியுமான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே 100 மில்லியன் டாலர்களை கொரோனோ வைரஸ் நோய்க்கு எதிராக போராடுவதற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.பில்கேட்ஸ் இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் தலையங்கத்தில் எழுதி உள்ளதாவது:- ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை இது போன்ற நோய்க்கிருமி தாக்குதல் இருக்கும். கொரோனா வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறைவரும் கிருமி நோய் ஆகும். ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகள் இந்த கொரோனா வைரஸ் நோயை எதிர்க்க இப்போது தயாராக இருப்பதன் மூலம், நாம் உயிர்களைக் காப்பாற்ற முடியும், மேலும் இந்த வைரஸின் உலகளாவிய சுழற்சியை குறைக்கலாம். சீனாவில் முதன்முதலில் தோன்றி இப்போது 46 நாடுகளுக்கு பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) அல்லது கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) போன்ற நோய்களை விட மிகவும் கொடுமையானது ஆகும் கொரோனா வைரஸின் தாக்குதலை குறைக்க குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த உதவுமாறு பணக்கார நாடுகளை கேட்டு கொண்டார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-வைரஸ்-ஒரு-நூற்றாண/
  • முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக க.விமலநாதன் நியமனம் Feb 29, 20200   மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான க.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலதிக அரசாங்க அதிபராகவும் பல்வேறு அரச உயர் பதவிகள் வகித்து வந்த நிலையிலேயே முல்லைத்தீவுக்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.சமூக நலனோம்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய க.விமலநாதன் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)   http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவு-மாவட்டத்த-19/
  • இந்தியாவின் பிண்ணணியுடன் கூட்டணியா? யார் சொன்னது? - விக்கேஸ்வரன் February 29, 2020 யாழ்.ஊடக அமைய பத்திரிகையாளர் சந்திப்பிற்கான கேள்விகள் கேள்வி:- முன்னைய அரசுகளை சர்வதேச விசாரணைகளிலிருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு இப்போது சர்வதேச நீதிமன்ற விசாரணை பற்றிய போன்றவை பேசுகிறதே? பதில்:- தேர்தல் வருகின்றது அல்லவா? அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்! கூட்டமைப்பு என்னதான் நாடகம் ஆடினாலும் எமது மக்கள் ஏமாறமாட்டார்கள். சர்வதேச விசாரணைகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் காலத்தை இழுத்தடிப்பதற்கு கூட்டமைப்பு எவ்வாறெல்லாம் செயற்பட்டது என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள். எவ்வாறு கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் வகையில் கூட்டமைப்பு செயற்பட்டது என்பதை மனித உரிமைகள் சபையில் செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் எமது மக்களுக்கு வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். கேள்வி:- வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றீர்கள்? பதில்:- நாம் அமைத்திருக்கும் கூட்டணி பலமானது. எமது புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் வெளியிட்டுள்ளோம். எமது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்பது பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம். உலகம் பூராகவும் பரந்துவாழும் எமது மக்கள் மத்தியில் பல மேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள். அவர்களை எல்லாம் உள்வாங்கி நாம் செயற்படவேண்டும். நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையில் நாம் செயற்படவேண்டும். இவற்றை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் ஊடாகவே நாம் முன்னெடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். தாமதம் ஆனாலும் இவற்றை நாம் செய்வதற்கு திட சங்கற்பம் பூண்டிருக்கின்றோம். அரசாங்கத்தில் தங்கி இருக்காமல் எமது அபிவிருத்தியை எப்படி நாம் முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பிலும் அறிஞர்கள், புத்திஜீவிகளை ஒன்றிணைத்து எமது அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளை எப்படி முன்னெடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். 2 ஆகவே, எமது அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை போல அரசாங்கங்களிடம் சரணாகதி அடைந்து மண்டி இடாமலும் தனி ஒருவரின் மூளையில் தங்கியிராமலும் நிறுவனமயப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம். இந்த அடிப்படையிலேயே இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வை அடைவதற்கான எமது அணுகுமுறை வேறுபடுகிறது. எமது அபிலாiஷகளை வென்றெடுப்பதற்கான இந்த அணுகுமுறை அடிப்படையிலேயே நாம் ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபடுகின்றோம். அதாவது, வெறும் வார்த்தை ஜாலங்களால் தமிழ் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை. மற்றவர்கள் மீது சதா குற்றம் சொல்லி வருவதால் தமிழ்த் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை. அல்லது அரசிடம் மண்டி இடுவதால் தீர்வு வரும் என்றும் நாம் நம்பவில்லை. அத்துடன் தனி ஒருவரின் புத்தியும் உழைப்பும் மட்டும் பலாபலன்களைக் கொண்டுவரும் என்றும் நாம் நம்பவில்லை. இந்த அடிப்படையில் தான் நாம் எம்மை ஒரு மாற்று அணியாகக் காண்கின்றோம். எமது தாரக மந்திரம் வித்தியாசமானது. அரசியலில் தன்னாட்சி, சமூகரீதியாக தற்சார்பு, பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்பதே எமது குறிக்கோள். மக்கள் எமது தனித்துவத்தை தெளிவாகப் புரிந்துகொண்டு எம்மை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று நாம் நம்புகின்றோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் தயாரித்து வருகிறோம். விரைவில் வெளியிடுவோம். கேள்வி:- கூட்டமைப்பின் கொள்கை தவறு என்று சொல்லி வருகின்ற நீங்கள் பாராளுமன்றத்தில் சேர்ந்து செயற்பட தயாராக உள்ளதாக கூறியிருப்பது பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறதே? பதில்:- தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ எமது எதிரிகள் அல்லர். எமது அணுகுமுறை எப்படி இருக்கும் என்று மேலே சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன். எமது இந்த அணுகுமுறையையை எவர் ஏற்றுக்கொண்டாலும் நாம் அவர்களை அரவணைத்துக்கொள்வோம். எமது அணுகுமுறைகளில் கூட்டமைப்புடன் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் மக்கள் இடையிலான அரசியல் போட்டிகளுக்காக கண்களை மூடிக்கொண்டு வெறுமனே எதிர்ப்பு அரசியலை நாம் பொறுப்பு இன்றி செய்ய முடியாது. எமது மக்களுக்கு அவசியமான எந்த செயற்பாடுகளையும் முடிந்தளவுக்கு எல்லாக் கட்சிகளின் அனுசரணையுடனும் நாம் மேற்கொள்ள முயற்சிப்போம். உதாரணமாக எமது மக்களுக்கு எதிரான ஒரு சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 3 கொண்டுவரப்பட்டால், கூட்டமைப்புடனும் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடனும் இணைந்து நாம் அதை எதிர்ப்போம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையினை முஸ்லீம் அரசியல் கட்சிகள் கையாண்ட விதம் நல்ல ஒரு உதாரணமாகும். நாம் எமது வேற்றுமைகளின் மத்தியிலும் ஒற்றுமையைக் காணவே முயற்சிக்கின்றோம். நாம் மட்டுமே தூயவர்கள். எம்முடன் சேராவிட்டால் மற்றவர்கள் யாவரும் தவறானவர்கள் என்ற மனப்பாங்கு எமக்கில்லை. எமது கட்சியிலும் பார்க்க எமக்கு தமிழ் மக்களின் வருங்காலமே எமக்கு முக்கியமாகத் தெரிகின்றது. கேள்வி:- இந்தியாவின் பிண்ணணியுடன் தான் உங்களது புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டுக்களை வெளியிலிருக்கின்ற தரப்புக்கள் முன்வைக்கின்றனவே? பதில்:- இது பற்றி நாம் முன்னர் ஒரு தடவை வெளிப்படையாக பதில் சொல்லி இருக்கின்றோம். நான் கட்சி தொடங்கிய பின்னர் இந்தியாவிடம் இருந்து எனது அரசியல் தொடர்பில் எந்த அழுத்தமோ அல்லது தொடர்போ இருக்கவில்லை. எனது மக்களின் அபிலாiஷகள் தொடர்பில் எந்த சக்திக்கும் அடிபணிந்து செயற்படுபவன் நான் அல்ல. இந்தியா எனக்குப் பின்னால் இருந்தால், அதனை எனது மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்வதற்கு நான் தயங்கமாட்டேன். தயங்கவேண்டிய தேவையும் இல்லை. இந்தியா என்னுடன் உறவை ஏற்படுத்தி நெருக்கமாக செயற்பட விரும்புகின்றதோ என்னவோ எனக்கு தெரியாது. இவ்வாறான இந்திய முயற்சிகள் எதுவும் இன்று வரையில் நடைபெறவில்லை. ஆனால், எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்கு இந்தியாவின் உதவி எமக்கு அவசியம் என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளேன். இந்தியாவை எமக்கு சார்பாக செயற்பட வைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் என்னால் முடிந்தளவுக்கு நான் எடுப்பேன். அண்மையில், ஆய்வாளர் நிலாந்தன் கூறியதுபோல, அரசியல் வங்குரோத்து காரணமாக சில கட்சிகள் கூறிவரும் சூழ்ச்சிக் கோட்பாடுகளே இவை. சேர்ந்தால் எம்மவர் சேராவிட்டால் இந்தியாவின் அடிவருடிகள் என்ற சூழ்ச்சிக் கோட்பாடு நெடுங்காலம் நின்று பிடிக்கமாட்டாது. உண்மை வெளிவந்துவிடும். கேள்வி:- சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டதா? இல்லையா? 4 பதில்:- முடியவில்லை. நடந்தது என்ன என்ற உண்மைகளைக் கண்டறியும் செயற்பாடுகளே ஐ.நா. மட்டத்தில் நடைபெற்றுள்ளன. இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன என்பதை சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை செய்யும் எந்த ஒரு சர்வதேச விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. சிலவேளை, எவருக்காவது, அவர்களின் கனவில் இது நடைபெற்றிருக்கலாம். ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறு சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று கூறுபவர்கள், கல்வியிலும் புத்திக்கூர்மையிலும் சிறந்த எமது மக்களை அந்தளவுக்கு குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கிறார்களா என்பதுதான். கேள்வி:- சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியுமா? இல்லையா? பதில்:- முடியும். இதனை நாம் பலமுறை வலியுறுத்தி இருக்கின்றோம். பல வெளிநாட்டு சட்ட வல்லுநர்களும் இது சாத்தியம் என்று தான் கூறி இருக்கின்றார்கள். கேள்வி:- தெற்கு அரசியல் போக்கில் பலம் வாய்ந்த தமிழ் தரப்பொன்று நாடாளுமன்றில் தேவையாக உள்ளது.இத்தகைய சூழலை எப்படி எதிர்கொள்ள உங்களால் முடியும்? பதில்:- யுத்தம் முடிவடைந்த பின்னரான கடந்த 10 வருட கால நெருக்கடி நிலையில், பாராளுமன்றத்தில் பலமான ஒரு தமிழ் தரப்பு இருக்க வேண்டும் என்று கருதித்தான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்தார்கள். ஆனால், எமது மக்களுக்கு இதனால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது? இந்தப் பலத்தை வைத்து தமக்கு பதவிகளையும் சலுகைகளையும் பெற்றதைத் தவிர கூட்டமைப்பு எதனைச் சாதித்துள்ளது? ஆகவேதான் மக்களின் தெரிவில் இம்முறை மாற்றம் வேண்டும். நீங்கள் கூறிய இந்த பலத்தை வடக்கு கிழக்கு மக்கள் எமக்கு அளிப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். நீதியரசர் க.வி.விக்கேஸ்வரன் முன்னாள் முதலமைச்சர், வடமாகாணம் செயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி இணைத்தலைவர், தமிழ் மக்கள் பேரவை தலைவர், தமிழ் மக்கள் தேசீயக் கூட்டணி 28.02.2020   http://globaltamilnews.net/2020/137658/
  • திருக்கேதீஸ்வரத்திலிருந்து எழுவைதீவு வரை: நிலாந்தன்… February 29, 2020 மதமுரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுதல் அண்மையில் தமிழ் வாக்குகள் சாதி ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை தொடர்பாக ஒரு சமூக செயற்பாட்டாளர் என்னோடு கதைத்தார். அவர் காரைநகரில் உள்ள சமூக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்.கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது இந்த அமைப்பு என்னோடு தொடர்பில் இருந்தது. அவர்களை ஆதரித்து கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன். என்னோடு தொலைபேசியில் கதைத்த நண்பர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். சாதிரீதியாக சமூகத்தை பிரிப்பதற்கு நாங்கள் எதிராகவே இருப்போம். நீங்கள் கூறுவது போல தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையை உள்ளடக்கியதுதான். சமூக விடுதலை எனப்படுவது தேசிய விடுதலைக்கு எதிராகத் திரும்பக்கூடாது. ஆனால் காரைநகரில் நமது சமூகத்தின் மீதான அவமதிப்பும் புறக்கணிப்பும் அப்படியே இருக்கும் பொழுது நாங்கள் எப்படித் தமிழ் தேசிய நீரோட்டத்தில் கரைவது? என்று கேட்டார் இக்கேள்விக்கு பதில் கூற வேண்டியது அரங்கில்லுள்ள தமிழ் தேசிய கட்சிகள் தான். தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சமூகங்கள் மத்தியில் தமிழ் தேசியக் கட்சிகள் போதியளவு வேலை செய்திருக்கவில்லை. அந்த வெற்றிடம்தான் தேசிய வாதத்துக்கு எதிர் நிலைப்பாடு உள்ள கட்சிகள் மேற்படி சமூகங்களை தமது வாக்கு வங்கிகளாக மாற்ற முயற்சிப்பதற்கு காரணம் அதாவது தேசிய நோக்கு நிலையிலிருந்து தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகளை கையாளத் தேவையான பக்குவமும் தத்துவத் தரிசனமும் அரங்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளிடம் இல்லை. அந்த வெற்றிடத்தில்தான் இவ்வாறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனவா? இவ்வாறு சமூக ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படும் சமூகங்கள் தங்களுக்குள் திரளாகி தமக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது தவிர்க்க முடியாதது. சமூக விடுதலைக்காக குறிப்பிட்ட சமூகங்களை திரளாக்காமல் தேசிய விடுதலைக்கான பெருந்திரளாக்கம் பற்றி சிந்திக்க முடியாது. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் அந்த ஒடுக்குமுறையின் பெயரால் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரளாவது தவிர்க்க முடியாதது. தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான். ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது ஜனநாயகத் அடிச்சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் திரளாக்குவதுதான். எந்த ஓர் அடையாளம் காரணமாக ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகிறதோ அந்த அடையாளத்தின் பேரால் அவர்கள திரளாக்குவது தவிர்க்க முடியாதது. இவ்வாறு இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் அந்தப் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பெருந் திரளாகுவதே ஒரு தேசமாக வாழ்தல் என்று பொருள்படும். ஆனால் அந்தக் திரட்சிக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது. இந்த விளக்கம் மத முரண்பாடுகளுக்கும் பொருந்தும். ஒரு தேசிய திரட்சிக்குள் மதங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்க முடியாது. மாறாக மதப் பல்வகைமை அங்கே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு மதப் பல்வகைமையை ஏற்றுக்கொண்டு தேசிய நோக்கு நிலையிலிருந்து மத முரண்பாடுகளை அணுக வேண்டும். ஆனால் அண்மைக்காலங்களில் தமிழ்ச் சமூகத்துக்குள் மத முரண்பாடுகள் மதநோக்கு நிலையில் இருந்தே அணுகப்படுவதாகத் தெரிகிறது. குறிப்பாக திருக்கேதீச்சரம் வளைவு விவகாரம், ஊர்காவற்றுறையில் வீதிகளின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம், எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் விவகாரம் என்பன ஏற்படுத்திய எதிர்விளைவுகள் அதைத்தான் காட்டுகின்றன. திருக்கேதீச்சரம் வளைவு விவகாரத்தை நீதிமன்றத்துக்கு போக விட்டது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் ஒரு தோல்வி. அந்த விவகாரத்தை மத பீடங்கள் அணுகுவதற்கு பதிலாக அதை ஒரு சட்டப் பிரச்சினையாக அணுகுவதற்கு பதிலாக அதை ஒரு தேசிய பிரச்சினையாக தேசிய நிலையிலிருந்து ஒரு சிவில் அமைப்போ அல்லது கட்சியோ அல்லது பேரவை போன்ற ஒரு மக்கள் இயக்கமோ கையாண்டு இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் தரிசனமுடைய அமைப்புகளும் கட்சிகளும் இல்லாத வெற்றிடத்தில் அந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது. அந்த வெற்றிடம் காரணமாகத்தான் ஊர்காவற்றுறையில் வீதிகளைப் பெயர் மாற்றுவது ஒரு விவகாரமாகியது. எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் விவகாரம் மத முரண்பாடுகளைப் பெரிதாகும் விதத்தில் விளைவுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக எழுவைதீவு விவகாரத்தில் யாழ்பாணத்தை மையமாகக் கொண்ட வலம்புரி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பத்தியில் தகவற் பிழைகள் இருப்பதாக எழுவைதீவு மக்களில் ஒரு பகுதியினர் கூறுகிறார்கள். அப்பத்திரிகையின் அலுவலகத்துக்கு வந்த ஒரு குழுவில் இந்து மதத்தினரும் அடங்குவர் என்று அவர்கள் கூறுகிறார்கள். தமக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டே தாங்கள் அப்பத்திரிகை அலுவலகத்துக்கு வந்ததாக கூறுகிறார்கள். அவர்களை அவ்வாறு போகுமாறு தூண்டியது ஒரு கத்தோலிக்க மதகுருவே என்று பத்திரிகைத் தரப்பு குற்றம் சாட்டுகிறது. இது விடயத்தில் யார் பிழை என்பதை விடவும் இந்த விவகாரத்தை எந்த நோக்கு நிலையிலிருந்து அணுக வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த விவகாரத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்தே அணுக வேண்டும். வலம்புரி பத்திரிகை கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த ஒரு பத்திரிகை. கூட்டமைப்புக்கு எதிரான குரல்களை அது ஒலிக்கச் செய்தது. அந்த அடிப்படையில் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு மாற்று அரசியலுக்கு உரிய ஊடகத் தளமாக வலம்புரி பத்திரிகை குறிப்பிடத்தக்க அளவிற்கு மேலெழுந்தது. குறிப்பாக விக்னேஸ்வரனின் எழுச்சி, தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சி, அப்பத்திரிகையின் எழுச்சி என்பன ஏறக்குறைய சமாந்தரமானவை. வலம்புரியின் ஆசிரியர் தமிழ் மக்கள் பேரவையில் ஒரு பிரதானி. எல்லா எழுக தமிழ் ஆர்ப்பாட்டங்களின் போதும் அவரை முன்னணியில் காணலாம். தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரனின் முதன்மையை தொடர்ச்சியாக வலியுறுத்தும் ஒருவர் அவர் விக்னேஸ்வரன் தனது புதிய கூட்டை அண்மையில் அறிவித்த பொழுது அவரும் அங்கே இருந்தார். கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தேசிய அரசியலில் ஒரு மாற்று தளத்துக்கு உரிய ஊடகமாக வரமுயலும் அப்பத்திரிகை மத முரண்பாடுகளை தமிழ்தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகினால் அது தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயத்தை பலப்படுத்தும். வலம்புரி பத்திரிகை இந்துமதச் சாய்வுடன் செய்திகளை எழுதுவதாக ஒரு அவதானிப்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு வடமாகாணசபையின் முஸ்லிம் உறுப்பினர் தொடர்பிலும் அப்பத்திரிகை வெளியிட்ட செய்தி சர்சையாகியது. குறிப்பாக மத விவகாரங்களில் அப்பத்திரிகையின் நிலைப்பாடு இந்து மதத்துக்கு அதிகம் சாய்வோடிருப்பதாக ஏனைய மதப் பிரிவினரால் பார்க்கப்படுகிறது. இது மாற்று அரசியலுக்கும் கூடாது. விக்னேஸ்வரனுக்கும் கூடாது. மத முரண்பாடுகளை மத நோக்கு நிலையிலிருந்து அணுகாமல் ஆகக் கூடிய பட்சம் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகினால் சில சமயங்களில் அகத்தணிக்கையும் சில சமயங்களில் மதப் பொறையும் தேவைப்படலாம். தமிழ்தேசிய பரப்பில் இந்துக்களே அதிகம் உண்டு. எனவே இந்துக்கள் தாம் பெரும்பான்மை மதப் பிரிவினர் என்ற அடிப்படையில் ஏனைய சிறுபான்மை மதப் பிரிவினரை சமமாகப் பார்க்க வேண்டும். அதாவது தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து மதப் பிணக்குகளை அணுக வேண்டும் அதுதான் தமிழ் மக்களை ஒரு பெரும் திரளாக திரட்டும் இல்லையென்றால் மதத்தின் பெயரால் தமிழ் மக்களை அது பிரித்துவிடும். இது விடயத்தில் ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு செழிப்பான பாரம்பரியம் உண்டு. இலங்கை தீவில் முதலில் தோன்றிய இளையோர் இயக்கமாகிய ஜப்னா யூத் கொங்கிரஸ் யாழ்ப்பாணத்தில்தான் தோன்றியது. அந்த அமைப்பை ஒருங்கிணைத்தவர் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரான ஹண்டி பேரின்பநாயகம். அவருக்குப்பின் தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டங்கள் என்று அழைக்கப்பட்ட வன்முறையற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர் எஸ். ஜே. வி செல்வநாயகம். அவர் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர். அதிகம் இந்துக்களை கொண்ட ஒரு சமூகம் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரை தந்தை என்று அழைத்தது. ஈழத்து காந்தி என்றும் அழைத்தது. இது காரணமாகவே தனது இறுதிக் காலகட்டத்தில் தந்தை செல்வா தனது பூதவுடலை இந்து முறைப்படி வேட்டி அணிவித்து தகனம் செய்யுமாறு இறுதி விருப்பம் தெரிவித்திருந்தார். அதாவது ஈழத்தமிழர்கள் மதம் பார்த்துத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. அதுமட்டுமல்ல கடந்த வருடம் ஈஸ்டர் குண்டு வெடிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ்க் கிறீஸ்தவர்களே. ஆனால் அதற்காக குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ரத்தம் சிந்தும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடவேயில்லை. ஈஸ்ட்டர் குண்டு வெடிப்பிற்குப் பின் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பகுதிகள்தான் முஸ்லீம் மக்களுக்கு அதிகம் பாதுகாப்பானவைகளாகக் காணப்பட்டன என்றும் கூறலாம். இப்படிப்பட்டதோர் மிகச் செழிப்பான மதப் பல்வகைமைப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு மக்கள் கூட்டம் அண்மைக் காலங்களில் மத முரண்பாடுகளால் பிளவுபடும் ஒரு நிலைமை மேலும் வளரக் கூடாது. இப்படிப்பட்ட முரண்பாடுகளை தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகிக் கையாண்டு தீர்க்கத்தக்க முதிர்ச்சியை, பக்குவத்தை, ஏற்புடைமையை, ஜனவசியத்தை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் இயக்கங்கள் அப்படி ஒரு வளர்ச்சியை அடைய வேண்டும். இல்லையென்றால் சாதியின் பேரால் சமயத்தின் பேராலும் பிரதேசவாதத்தின் பெயராலும் தமிழ் மக்கள் பிரிக்கப்பட்டு விடுவார்கள்.   http://globaltamilnews.net/2020/137645/
  • மேலே நான் எழுதிய  விளக்கம் போதுமானதாக இல்லை என்று  நினைக்கின்றேன் இதை இங்கு எழுதும்  போது கொஞ்சம்  யோசித்துத்தான்  எழுதினேன் ஆனால் இங்குள்ளவர்களுக்கு  என்னைத்தெரியும் என்பதாலும் எனது நேரடி அனுபவங்களையே நான் இங்கே பதிபவன்  என்பதை  அறிவார்கள் என்பதாலுமே  பதிவிட்டேன். இந்த சாதியம்  என்பது எமது சமூகத்தின் ரத்தம் சதை உயிர்  என்று ஆள வேரூன்றியதொரு அரக்கன் அதிலிருந்து 100 வீதம் விடுபடுவதற்கு எத்தனை  தலைமுறை தாண்டணுமோ????? ஆனால் நான்  அல்லது எனது தலைமுறை காத்திரமான  தனது  பங்கை செய்திருக்கிறது செய்யும்.