நவீனன்

புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்

Recommended Posts

புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்

 

sri-lankan-parliament-300x199.jpgபுதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரித்து தருமாறு, நிபுணர் குழுவிடம் வழிநடத்தல் குழு கேட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு ஆறு மாதங்களுக்குப் பின்னர் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூடியது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், சுமார் 40 நிமிடங்கள் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், வழிநடத்தல் குழுவின். பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

2016ஆம் ஆண்டு வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்ட பின்னர், நடத்தப்பட்ட 76 ஆவது கூட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தில், 10 பேர் கொண்ட நிபுணர் குழு, புதிய அரசியலமைப்புக்கான வரைவைத் தயாரிப்பதற்கு, மேலும் நான்கு வார காலஅவகாசத்தை வழங்குவதற்கு, வழிநடத்தல் குழு முடிவு செய்துள்ளது.

புதிய வரைவில், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் முன்வைக்கப்பட்ட மாற்று யோசனைகளையும் உள்ளடக்குமாறும் நிபுணர் குழு கேட்கப்பட்டுள்ளது,

புதிய அரசியலமைப்பு வரைவு தயாரானதும், ஜூன் மாத பிற்பகுதியில், வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டத்தைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/05/25/news/31053

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, நவீனன் said:

அடுத்த கூட்டத்தைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/05/25/news/31053

1948ல் இருந்து இலங்கையைப் புதிய விளக்குமாறு ஒன்று இன்றுவரை கூட்டுகிறது ஆனாலும் கூட்டி முடியவில்லை. அவ்வளவுக்கு லண்டன் குப்பையை இலங்கையில் போட்டிருக்கிறது. ஒரளவுக்குக் கூட்டி முடிக்கலாம் என்ற நிலை வரும்போது சூறாவளிக்காற்று, அதுவும் இந்தியாவிலிருந்து வந்து மீண்டும் குப்பையைப் பரப்புகிறது. :shocked:
 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, நவீனன் said:

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு ஆறு மாதங்களுக்குப் பின்னர் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூடியது.

இவர்கள் சுதந்திர தமிழீழத்துக்காக பாதை அமைத்து வருகின்றனர்!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now