Jump to content

`கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து' - ரஷித் கானுக்கு பாராட்டு தெரிவித்த ஆப்கன் அதிபர்!


Recommended Posts

`கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து' - ரஷித் கானுக்கு பாராட்டு தெரிவித்த ஆப்கன் அதிபர்!

 
 

கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து ரஷீத் கான் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பாராட்டு தெரிவித்துள்ளார். 

ரஷீத் கான்

 

நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்தவர் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான். ஸ்பின்னர் என்ற பார்வையில் ஐபிஎல்லில் நுழைந்த ரஷீத் கான் தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதனை உலகுக்குக் காட்ட பல போட்டிகளில் முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து போரடிய அவருக்கு, நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டி கைகொடுத்தது. நேற்றைய போட்டியில் தவான், கேப்டன் வில்லியம்சன் விரைவில் அவுட் ஆனதால் ஒருகட்டத்தில் ஹைதராபாத் அணி தடுமாறியது. ஆனால், கடைசி கட்டத்தில் களமிறங்கிய ரஷீத் அணிக்கு தெம்பூட்டினார். 10 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் விளாசினார். இதனால் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணிக்கு 174 ரன்கள் என்ற கவுரமான இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து பந்துவீசிய 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 

 

போதாக்குறைக்கு இரண்டு கேட்ச், ஒரு ரன் அவுட் என கொல்கத்தா அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக ரஷீத் விளங்கினார். இவருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தற்போது பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஷ்ரப் கானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,  ``நமது ஹீரோவான ரஷீத்தால் ஆப்கன் பெருமைகொள்கிறது. ஆப்கன் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தச் சிறந்த தளத்தை வழங்கிய எனது இந்திய நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானின் பெருமை என்ன என்பதை ரஷீத் நமக்கு எடுத்துரைத்துள்ளார். அவர் கிரிக்கெட் உலகுக்குச் சொத்தாக இருக்கிறார். நாம் அவரை எப்போதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/126012-rashid-khan-an-asset-wont-give-him-away-says-afghanistan-president-ashraf-ghani.html

 

 

நாங்கள் ராஷித்கானை விட்டுக் கொடுக்கவில்லை: ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி

 

 
lkjpg

நாங்கள் ராஷித்கானை  விட்டுக் கொடுக்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் நுழையும் இரண்டாவது அணிக்கான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சன் ரைசர்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 
 

சன் ரைசர்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணி வீரர் ராஷித்கான் ( ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்) முக்கிய காரணமாக விளங்கினார். 10 பந்துகளில் ராஷித்கான் எடுத்த 34 ரன்கள்தான் சன் ரைசர்ஸ் அணியின் கவுரவமான இலக்கை எட்ட வழி செய்தது.

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் 3 விக்கெட்டுகள், இரண்டு கேட்சுகள், ஒரு ரன் என நேற்றைய போட்டியின் நாயகனாக ராஷித் வலம் வந்தார்.

ராஷித்கானின் நேற்றைய ஆட்டத்தைப் பாராட்டி சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது ட்விட்டர் பக்கத்தில்,  "நமது கதாநாயகன் ராஷித்கானை நினைத்து ஆப்கன் முழு பெருமை கொள்கிறது.  எங்கள் நாட்டு வீரர்கள் அவர்கள் திறமையைக் காட்ட தளம் அளித்துக் கொடுத்த இந்திய நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ராஷித் ஆப்கானிஸ்தானின் சிறந்தவற்றை நினைவுபடுத்துகிறார். அவர் கிரிக்கெட் உலகிற்கு சிறந்த சொத்தாக இருப்பார்.  நாங்கள் அவரை விட்டுக் கொடுக்கவில்லை" என்று பதிவிட்டு இருக்கிறார்.

http://tamil.thehindu.com/world/article23998915.ece

Link to comment
Share on other sites

20 ஓவர் போட்டியில் ரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர்- டெண்டுல்கர் பாராட்டு

 
அ-அ+

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.#SachinTendulkar #RashidKhan #Afghanistanspinner

 
 
 
 
20 ஓவர் போட்டியில் ரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர்- டெண்டுல்கர் பாராட்டு
 
மும்பை:

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீரர் ரஷீத்கான். ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். அவர் இதுவரை 21 விக்கெட் கைப்பற்றினார்.
 
இந்த நிலையில் ரஷீத்கான் 20 ஓவரில் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
 
201805261057276813_1_998cmoxk._L_styvpf.jpg

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:-

19 வயதான ரஷீத்கான் சிறந்த சுழற்பந்து வீரர் என்று எப்போதும் நினைப்பேன். ஆனால் 20 ஓவர் போட்டிகளில் அவர் தான் உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவரிடம் பேட்டிங் திறமையும் இருக்கிறது கவனித்து கொள்ளவும்.

இவ்வாறு டெண்டுல்கர் கூறியுள்ளார்.#SachinTendulkar #RashidKhan #Afghanistanspinner

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/26105523/1165762/Rashid-Khan-is-worlds-best-spinner-in-T20-cricket.vpf

Link to comment
Share on other sites

ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை- வலியுறுத்திய ரசிகர்களுக்கு அமைச்சர் பதில்

 
அ-அ+

ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ரசிகர்கள் வைத்த கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். #IPL2018

 
ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை- வலியுறுத்திய ரசிகர்களுக்கு அமைச்சர் பதில்
 
ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அசத்தினார்.

10 பந்தில் 34 ரன்கள் குவித்த ரஷித் கான், 3 விக்கெட், 3 கேட்ச் மற்றும் ஒரு ரன்அவுட் செய்ய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். ரஷித் கானின் ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை குறித்து பாராட்டி டுவிட் செய்திருந்ததார்.

201805271508409730_1_rashidkhan002-s._L_styvpf.jpg

ஏராளமான ரசிகர்கள் ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்கி, இந்தியாவிற்காக விளைாட அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று டுவிட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ‘‘நான் அனைத்து டுவிட்டர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். குடியுரிமை சம்பந்தான நடைமுறைகளை உள்துறை அமைச்சகம்தான் பார்த்து வருகிறது’’ என்று டுவிட் செய்திருந்தார். பின்னர் இந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/27150841/1165998/India-citizenship-for-Afghanistan-Rashid-Khan-here.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.