• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

அவர்கள் வாழட்டும் 

Recommended Posts

அவர்கள் வாழட்டும் 

கலா பாக்யராஜ் தம்பதிகளுக்கு இறைவன் கொடுத்த பிள்ளைச் செல்வங்கள்  மூன்று ஆண்  குழந்தைகள். புலப்பெயர்ந்து  ஜேர்மனி  சென்ற இவர்கள்  படட  கஷ்டங்கள் ஏராளம் 

 குழந்தைகள் இரண்டு வருட இடைவெளியில் பிறந்ததால் மனைவி அவ்ர்களைக் கவனிக்க கணவன்  இரண்டு வேலை செய்து  பிள்ளைகளை அன்போடும் பன்பொடும் கண்ணுங் கரு த்துமாய் வளர்த்தார்.  

உறவினர்கள்  லண்டனில்   வாழ்ந்ததால்  இவர்களும் அங்கு சென்று  குழந்தைகளை வளர்க்க எண்ணினார்கள்.  இடம் மாறி அங்கு சென்ற பின் இலகுவாக இருக்கவில்லை வாழ்க்கை முறை.  மொழிமாற்றம் என  குழந்தைகள் கஷ்ட படவே  ஒரு வாத்தியாரை  ஓழுங்கு  செய்து   ..அவர்களுக்கு ஆங்கிலத்தில் முழுத்தேர்ச்சி அடைய  ஆன  மட்டும் முயற்சி செ ய்தார் தந்தை .  பிள்ளை கள் வளர தேவைகள்  அதிகரிக்க வே  வீட்டு வேலையுடன் சிறார்களை பராமரிக்கும் பகுதி நேர   முயற்சியிலும் மனைவி ஈடு பட்டு வாழ்க்கைச் செலவைப்  பகிர்ந்து கொண்டாள்   குழந்தைகளும் 

கல் வியில்சிறந்து வளர்ந்து  மூத்தவன் இன்ஜினியராகவும்.  இரண்டாவது பையன் சத்திர சிகிச்சை உதவியாளராகவும்     மூன்றாவது கட்டிடநிர்மாணிப்பாளர்களாவும்  ஆயினர். காலப்போக்கில்  ..பருவத்துக்குரிய  ஆசை கள் வரவே மூத்தவன்  ஒரு இந்துப்பெண்ணை காதலித்தார் . இப்போது அவர்கள் வீட்டில் புயல் வீசத்தொடங்கியது ...தாயின் வளர்ப்பு  என  தந்தையும் தாயும் மோதிக் கொண்டு ஆளை  ஆள் குறை கூறிக் கொண்டு  இருந்தனர்.  பாக்கிய ராஜுக்கு கால ஓட்ட்த்தின் வேகம்  நடைமுறை  விளங்க வில்லை...மனைவி எவ்வளவோ  எடுத்துசொல்லிப் பார்த்தார்.  

 மக்கள் மூவரும் தாயின் மீது மிகவும்  நேசமும்  கரிசனையும்  உள்ளவர்கள். பிள்ளைகள்  நண்பர்களை அழை த்து வந்தால்  அவர்களுக்கு சலிக்காது உபசரிப்பார். கணவனின் போக்கு மாறத்தொடங்கியது. குடியில் ஆரம்பித்து ...இவர்களை ப்பிரியும் நிலை ஆகியது ...மனைவியோ  யாரைக் க ட்டினாலும் என் பிள்ளைகள் சந்தோஷமாய்  வாழட்டும் என்னும் நிலையில் இருந்தாள். தந்தை யோ ..குல ம் கோத்திரம் சாதி சம்பிரதாயம் என் இன்னும் மாறாத மனம் உள்ளவராயிருந்தார். ஒரு கோடை  விடுமுறையில்  கணவன் தாயகம்  சென்று ..தனது   பழைய காணிகளை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ..

மூத்தவனோ தாயுடனும் வருங்கால மனைவியின் பெற்றவர்களுடனும் கலந்து ஆலோசித்து ...திருமண நாள் குறித்து விட்டு அதற்கான ஆயத்தங்களை செய்து    தாயின் ஒன்றுவிட்ட் அண்ணரின் துணையுடன்  திருமணம்  நடக்க இருக்கிறது .. திருமண நாளுக்கு சற்று முன்பாக     தந்தைக்கு அறிவிக்க இருக்கிறார்கள்.  திருமணம்  சுபமே நடக்க நீங்களும் நாங்களும் வாழ்த்துவோம்.   தந்தை வருவாரா ...கலகம் நடக்குமா பொறுத்து இருந்து  பார்க்கலாம் . 

வருங்கால இளையோரின் வாழ்வு அவர்கள் முடிவுப்படியே நடக்கும்  நாம் வெறும் பார்வையாளர் ...எங்கள் காலத்தில் நடைபெற்றது போல   ஊர் கூட்டி ...உறவுகள் கூடி பெற்ற்வரின்  எண்ணப்படி நடக்கும் என எண்ண   முடியாது .கால  ஒடடத்துக்கேற்ப நாமும் மாறித்தான் ஆக  வேண்டும். இது உங்கள் வீட்டின் கதையாகவும் இருக்கலாம். .இது என் நண்பியின் வீட்டுக் கதை ...உங்கள் வீடுகளில் இப்படி இருந்தால் எப்படி சமாளிப்பீர்கள்...?

 • Like 8

Share this post


Link to post
Share on other sites

காலாவதியான சிந்தனைகளோடு தந்தை இருப்பது அவரை பிள்ளைகளிலிருந்து அந்நியப்படுத்தும். இப்படியான சிந்தனை உள்ளவர்களுக்கு சொல்லினாலும் புரியும் என்று நம்பவில்லை. எனவே அன்புச் சிறைக்குள் கட்டுப்படாது மாறிவரும் உலகுக்கு ஏற்ப சரியான முடிவை பிள்ளைகள் எடுக்கவேண்டும். 

உணர்வு ரீதியாக பிள்ளைகளை தந்தை மிரட்டமாட்டார் என்று நம்புகின்றேன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

குடும்பம் ஒரு கதம்பம பல வண்ணம்

தினமும் மதி மயங்கும் பல எண்ணம் 

தேவன் ஒரு பாதை

தேவி ஒரு பாதை

குழந்தை ஒரு பாதை

காலம் செய்யும் பெரு லீலை

Share this post


Link to post
Share on other sites
On 5/26/2018 at 8:14 PM, நிலாமதி said:

உங்கள் வீடுகளில் இப்படி இருந்தால் எப்படி சமாளிப்பீர்கள்...?

இது இன்றைய புலம்பெயர் சமுதாயங்களில் நடக்கும் பிரச்சனைகளில் முதலிடம் வகிக்கின்றது.

மாற்றங்கள் வரவேண்டும். அதை அணுக வேண்டிய முறையில் அணுகி சுமுகமாக தீர்க்கலாம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, கிருபன் said:

காலாவதியான சிந்தனைகளோடு தந்தை இருப்பது அவரை பிள்ளைகளிலிருந்து அந்நியப்படுத்தும். இப்படியான சிந்தனை உள்ளவர்களுக்கு சொல்லினாலும் புரியும் என்று நம்பவில்லை. எனவே அன்புச் சிறைக்குள் கட்டுப்படாது மாறிவரும் உலகுக்கு ஏற்ப சரியான முடிவை பிள்ளைகள் எடுக்கவேண்டும். 

உணர்வு ரீதியாக பிள்ளைகளை தந்தை மிரட்டமாட்டார் என்று நம்புகின்றேன்.

தற்போதைய இளம் சமுதாயத்தின்....
நேற்றைய காதலும்...
இன்றைய திருமணமும்...
நாளைய விவாகரத்தும்....

இவையும் பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைக்கின்றது. ஏனெனில் இவையும் கண்முன்னே நடந்தேறுகின்றது.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

கடவுள் மீது எனக்குக் கோபமில்லை!

ஆனால்...அவரைத் தலை மீது சுமப்பவர்கள் மீது தான் ...எனது கோபம் எல்லாம்!

ஸ்டீபன் ஹாககிங்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பெற்றவர்கள் நாம் கட்டாயம் மாறியே ஆக வேண்டும். பிள்ளைகள் மாறி வெகுநாட்களாகி விட்டது. நாம் மாறாமல் இருந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறோம். அவர்கள் வாழட்டும். நாம் வாழ்த்துவோம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 புலம்பெயர்ந்த நாடுகளில்  அடுத்துவரும் சந்ததிகள்  முற்று முழுதாக சாம்பாராக மாறும் அபாயம் இருக்கிறது.  4வது சந்ததிக்காரன் இப்படிச் சொல்வான்.  'என்னுடைய அப்பாவின் அப்பா இலங்கைத்தமிழ், அப்பாவின் அம்மா குஜராத்தி , அம்மாவின் அப்பா நையீரியா, அம்மாவின் அம்மா சீனர்.  நான் ஒரு இத்தாலி நாட்டவனைத் திருமணம் செய்யப்போகிறேன்'.   பெற்றோர்கள் விரும்பியோ விரும்பாமலோ மாறப்போகிறார்கள்.    ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆத்மா இப்படி  நினைக்கும். 'யூலைக்கலவரத்தில் நான் 3000 தமிழர்களை அழித்தேன். இப்பொழுது  நாட்டைவிட்டு ஓடியவர்கள் வரும் சந்ததிகளில் முற்றுமுழுதாக தமிழரல்லாதவர்களாக மாறப்போகிறர்கள்.  அழியப்போகிறார்கள்.  புத்தம் சரணம் கச்சாமி, தமிழரைக் கொல்லடா கச்சாமி'

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, குமாரசாமி said:

தற்போதைய இளம் சமுதாயத்தின்....
நேற்றைய காதலும்...
இன்றைய திருமணமும்...
நாளைய விவாகரத்தும்....

இவையும் பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைக்கின்றது. ஏனெனில் இவையும் கண்முன்னே நடந்தேறுகின்றது.

காதலிக்கும் முடிவை சடுதியாக எடுத்தாலும், திருமணத்தையும், விவாகரத்தையும் தீர ஆராய்ந்து எடுக்கும்போது அவற்றை ஆதரிப்பதுதான் சரி.

பிடித்த ஒருவருடனும் வாழும் வாழ்க்கை எப்போதும் இனிக்கும் அதேவேளை பிடிக்காத ஒருவருடனான வாழ்க்கை கசப்பையும் ஏமாற்றங்களையும் தரும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, கிருபன் said:

காதலிக்கும் முடிவை சடுதியாக எடுத்தாலும், திருமணத்தையும், விவாகரத்தையும் தீர ஆராய்ந்து எடுக்கும்போது அவற்றை ஆதரிப்பதுதான் சரி.

பிடித்த ஒருவருடனும் வாழும் வாழ்க்கை எப்போதும் இனிக்கும் அதேவேளை பிடிக்காத ஒருவருடனான வாழ்க்கை கசப்பையும் ஏமாற்றங்களையும் தரும்.

காதல்/காமம் எனும் போர்வையில் புரிந்துணர்ந்த பின் விவாகம் செய்து அதன் பின் வரும் விவகாரத்தால் விவாகரத்தை சம்பந்தப்பட்ட இருவரும் தனியாக இருக்கும் போது எடுத்தால் பரவாயில்லை.......

அங்கே சகிப்புத்தன்மை இருவருக்குமேயில்லை என்பது புலனாகி விடுகின்றது.

ஆனால் குழந்தைகள் பெற்ற பின் குழந்தைகளுக்காக வாழாமல் சுயநல மனநிலைகளுக்காக தேடும் விவாகரத்துக்களே தற்போது  கூடுதலாக இருக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

வந்த இடத்தில் அகதி ....
வேலை இடத்தில்  கூட்டி பெருக்கல் 

இருக்கிறது ஒன்றே ஒன்று யாருக்கும் புரியாத சாதி 
இவர்கள் என்ன வேலையும் செய்யலாம் சாதி மாறாது 
அடுத்தவன் இன்ன இன்ன வேலை செய்தால் இன்ன சாதி.

அதையும் விட சொன்னால் அவன் என்ன செய்வான்? 

இன்னும் ஒரு 20-30 வருஷத்தில்  சுகர் கொலஸ்டரோல் அதுகள் 
இந்த சாதி இருக்கிற உடம்புகளையும் தூக்கி கொண்டு போய்விடும் 
அதுக்கு அப்புறம் இந்த நாடகம் புலம்பெயர் தேசங்களில் மறைந்து விடும் 

ஊருக்கான தொடர்பும் கொஞ்சம் கொஞ்சம் அறுந்து கொண்டு போகும். 

Share this post


Link to post
Share on other sites

அவ‌ர்கள் வாழ நாங்கள் தான் மாறவேண்டும்

On 5/28/2018 at 4:23 PM, கந்தப்பு said:

 புலம்பெயர்ந்த நாடுகளில்  அடுத்துவரும் சந்ததிகள்  முற்று முழுதாக சாம்பாராக மாறும் அபாயம் இருக்கிறது.  4வது சந்ததிக்காரன் இப்படிச் சொல்வான்.  'என்னுடைய அப்பாவின் அப்பா இலங்கைத்தமிழ், அப்பாவின் அம்மா குஜராத்தி , அம்மாவின் அப்பா நையீரியா, அம்மாவின் அம்மா சீனர்.  நான் ஒரு இத்தாலி நாட்டவனைத் திருமணம் செய்யப்போகிறேன்'.   பெற்றோர்கள் விரும்பியோ விரும்பாமலோ மாறப்போகிறார்கள்.    ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆத்மா இப்படி  நினைக்கும். 'யூலைக்கலவரத்தில் நான் 3000 தமிழர்களை அழித்தேன். இப்பொழுது  நாட்டைவிட்டு ஓடியவர்கள் வரும் சந்ததிகளில் முற்றுமுழுதாக தமிழரல்லாதவர்களாக மாறப்போகிறர்கள்.  அழியப்போகிறார்கள்.  புத்தம் சரணம் கச்சாமி, தமிழரைக் கொல்லடா கச்சாமி'

எங்கன்ட ஆட்கள் ஜெய்வர்த்தனாவின் வாரிசுகளை  கட்டியிருக்கினம் ,கட்டுவினம் .....அதை எழுத மறந்திட்டியள்....

ஏன் நாலாவது சந்ததிக்கு போவான் இரண்டு மூன்றே அப்படித்தானே

Share this post


Link to post
Share on other sites

எந்த நாடு, எந்த வீடாக இருந்தால் என்ன, எவ்வளவுதான் அன்னியோன்னியமான கணவன் மனைவியானாலும் சரி, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைப்படும்போது பெண் என்பவள் இயல்பாகவே பிள்ளைகளின் பக்கம் சார்ந்து விடுகிறாள்.அதனால் பிள்ளைகள் விடும் தவறுகளையும் அவளின் தாய்ப்பாசம் மறைத்து விடுகின்றது. ஆண்களால் அவற்றை அனுசரித்து போக முடிவதில்லை. அதனால் அவன் ஒரங்கட்ட  படுகிறான் அல்லது தானாகவே ஒதுங்கி கொள்கிறான். இக் கதையிலும் அதுதான் நடக்கிறது. தொடருங்கள்......!  tw_blush:

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this