• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

இஞ்சி இடுப்பழகு.... என்றால் என்ன தெரியுமா?

Recommended Posts

ஆனால் அந்த பாடலை எழுதிய வாலி இஞ்சி இடுப்பழகா என்பதற்கு அர்த்தம் இப்படி சொன்னாராம்: 

'இஞ்சி என்பதற்கு சுவர், மதில் என்ற அர்த்தமும் இருக்கிறது. சுவரைப் போன்ற திடமான இடுப்புடையவன் என்கிற பொருள்கொள்ள வேண்டும்'

http://manathiluruthivendumm.blogspot.com/2013/10/4.html

Share this post


Link to post
Share on other sites

இஞ்சி திண்ட குரங்குமாதிரியான ஆக்களுக்குத்தான் இஞ்சி இடுப்பழகு இருக்கும் என்று நினைத்தேன்.

எவராவது பச்சை இஞ்சியை கிரைண்டரில் அரைச்சு ஜூஸாகக் குடித்து இருக்கின்றீர்களா? நான் ஒருதடவை குடித்திருக்கின்றேன். ?

 

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

 

இஞ்சி மாதிரி...ஒரு மடிப்பு விழுகிற படியால......இஞ்சி எண்டு....சொல்லினமோ தெரியாது!

Share this post


Link to post
Share on other sites

இஞ்சி நம் உடல் நலம் காக்கும் உன்னத உணவுப் பொருள். இஞ்சிச்சாற்றை, காலையில் தினந்தோறும் பருகிவந்தால் வயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சதையைக் குறைத்துவிடும். இடுப்பிலுள்ள தேவையற்ற சதைகள் குறையும்போது இடுப்பு அழகாக இருக்கும். தோள்பகுதி அகன்றும் இடுப்புப் பகுதி சுருங்கியும் இருப்பதுதான் உடல் நலத்தின் அடையாளம்; உடல் அழகின் அடையாளம். அதை இஞ்சி செய்வதால், இஞ்சி இடுப்பழகு என்றனர்.

http://www.periyarpinju.com/new/component/content/article/36-march-2011/100-2011-05-31-09-16-09.html

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றிய மாமனிதர் சத்தியமூர்த்தி .! Last updated Feb 26, 2020   வெண்புறா நிறுவனர் மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் நினைவு 7 ஆம் ஆண்டு நனைவு நாள் …! மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுடன்,பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றிய தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்தவர். இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மனிதர். 1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர். மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் பணியினை, மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு விடுதலை ஊக்கியாக அவர் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பார் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.   https://www.thaarakam.com/news/114973
  • மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தனிநபரின் உண்ணாவிரத போராட்டம் முடிவு February 26, 2020 தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டம் இன்று புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து   மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ்(வயது-39) என்ற இளைஞர் சனிக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வந்தார். இன்று புதன் கிழமை 5 ஆவது நாளாகவும் அவரது உண்ணாவிரதம் தொடர்ந்தநிலையில் குறித்த நபரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு,குறித்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு குறித்த நபரின் முயற்சியை  வேறு வடிவத்தில் முன்னெடுக்க ஆலோசனை வழங்கினர். இந்த நிலையில் குறித்த நபரின் உண்ணாவிரத போராட்டம் இன்று புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நபரின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார்,பிரஜைகள் குழு பிரதி நிதிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,மூர்வீதி ஜீம்மா பள்ளி மௌலவி எம்.அசீம்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,மன்னார் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ்,ஜோசப் தர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு   ஆகாரத்தை வழங்கி உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.  #தமிழ் தேசியக்கூட்டமைப்பை  #மன்னார்  #உண்ணாவிரதபோராட்டம்   http://globaltamilnews.net/2020/137494/
  • களவெடுக்கப் போகும் போது.... அடையாள அட்டையை ஏன்... கொண்டு போனவர்?  
  • நான் நித்திரையால எழும்பமுதலே எழும்பமுதலே சித்தி வாங்கிவச்சிடுவா. சாப்பிடும் வேலையை செய்தால் போதாதா ??? 😃 ஒரு விடயத்தை முழுசாப் போடவேணும். 😀
  • வரட்டாம். ஒரு றாத்தல் பாண் 80 ரூபா.