• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
putthan

"நாய்க்காப்பகம்"

Recommended Posts

ஒவ்வொரு வருடமும் நடக்கும் இராபோசண விருந்துக்கு நான் போவது வழமை இந்த இராபோசண விருந்தை ஒழுங்கு செய்வதில் எனது நண்பர் ஒருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.இந்த தடவையும் சென்றிருந்தேன்  இருபதைந்து டொலருக்கு ஒரு டிக்கட்டை எடுத்து போட்டு நானும் ஷரிட்டிற்க்கு காசு கொடுக்கிறனான் என்று சொல்லுவதில் எனக்கு  ஒரு பெருமை. என்னை மாதிரி கொஞ்ச சனம் புலத்தில இருக்கினம்.இன்னும் சிலர் இருக்கிறார்கள் அமைப்புக்களின் பணத்தை பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு கொடுத்து  அதை தாங்கள் வழங்குவது போன்று ஒரு புகைப்படுத்தை எடுத்து முகப்புத்தகத்திலும் வட்சப்பிலும் போட்டுவிடுவார்கள். அதை பார்ப்பவர்கள் நினைப்பார்கள் இவருடைய‌ பணத்தில் தான் உதவிகளை செய்கிறார்கள் என்று.

எது எப்படியோ  தேவையானோருக்கு பணம் போகின்றது. சந்தோசமடைவோம்

 

கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு  ஆரம்பமானது .ஒவ்வொரு வருடமும்   பேச்சாளர் தனது உரையில் தாயகத்தில் தனது அமைப்புக்கு என்ன தேவை என்பதனை சொல்லுவார். மக்களும் தங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவுவார்கள். ஒவ்வொரு தடவையும் தனது உரையில் ஒன்றைமட்டும் சொல்ல தவ‌றுவதில்லை,இந்திய இராணுவம் கைது செய்து துன்புறுத்தியபடியால் கடுமையாக நோய்வாய்பப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொழுது ,தான் சுகமாகி தப்பி வந்தால் ஏழைகள்,ஆதரவற்றோர்,ஆதரவற்ற முதியோர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேணும்  என நினைத்ததாகவும் அதை தான் தொடர்ந்து செய்வதாகவும் கூறினார்.

யோகர் சுவாமிகள் நாய்குட்டிகளுக்கு எம்மவர்களால் இளைக்கப்படும் துன்பங்களை எண்ணி கவலைப்பட்டவர் என்றார்.

அதே போன்று புத்தரும் ச‌கல உயிரினங்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற கொள்கையை உடையவர்.

இதை எங்கோ வாசித்த மகிந்தா கட்டாகாலி நாய்களை பிடிப்பதை தடை செய்து விட்டார்.இதனால் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது அவைகள் பல்கி பெருகி இப்பொழுது பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றது என குறைப்பட்டு கொண்டார் அந்த பெரியவர்.

Image result for à®à®à¯à®à®¾à®à®¾à®²à®¿ நாயà¯à®à®³à¯

இந்த நாய்களுக்கு ஓர் காப்பகம் அமைத்து அதை பாரமரிக்க வேண்டு என்று சொன்னவுடன் ,நான் திகைத்து விட் டேன்.இதை அறிந்த ஐயா நகைச்சுவையாக இப்படி கூறினார்" நீங்கள் இப்ப எனக்கு அடிக்க வந்தாலும் வருவியள் எல்லாம் முடிஞ்சு இப்ப உவர் நாய் பாராமரிக்க வந்திட்டார்.எல்லோரும் கை தட்டினோம்

நாங்கள் வளர்ந்த நாட்டில் நாய்களுக்கு எப்படியான மரியாதை கொடுக்கப்பட்டது என்பதை  அறிந்தவன்.

சின்ன வயதில் ஞாபகம் இருக்கின்றது சிறு பிள்ளைகளை பயப்படுத்துவதற்கு  நாய் பிடிக்கிறவன் வானில வந்து பிடிச்சு கொண்டு போய்விடுவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.அந்த கால கட்டத்தில் நகரசபைகள் நாய்களை பிடித்து கொண்டு சென்று அழித்துவிடுவார்கள்.

Image result for à®à®à¯à®à®¾à®à®¾à®²à®¿ நாயà¯à®à®³à¯

2006 ஆம் ஆண்டு மகிந்தா நாய்களுக்கும் வாழ உரிமை உண்டு  தெரு நாய்களை பிடித்து கொல்ல கூடாது என சட்டத்தை கொண்டுவந்த பின்பு நகரசபைகள் நாய் பிடிப்பதை நிறுத்தி விட்டனர் .இதனால் தெரு நாய்கள் பெருகி கொண்டு போகின்றது.

சில நாய்கள் மனிதர்களுக்கு கடித்தும் விடுகின்றனவாம்.

யாழ் நகரில் கட்டாகாலி நாய்களை ஜேர்மன் நாட்டு பெண்மணிஒருவர் பார்த்து கவலை அடைந்து  அவரை சந்தித்து இவை பாராமரிப்பற்று இருப்பதன் காராணத்தை கேட்டதாகவும் சொன்னார்.

அந்தபெண்மணியின் பின்னால் அங்கு நின்ற கட்டாகாலி நாய்கள் எல்லாம் வாலை ஆட்டிகொண்டு சென்றதை பார்த்து ஆச்சரியமடைந்த‌தையும் கூறினார்.

ஜேர்மன் பெண்மணி சொன்னாராம் இந்த நாய்கள் எனக்கு பின்னால் வருவதற்கு காரணம் தனது ரத்தத்தில் நாய்பாசம் கலந்துள்ளது அதுதான் இவைகள் எனக்கு பின்னால் வருகின்றன என்றாராம்.

கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதால் அங்கு அதிக நாய்கள் தஞ்சமடைந்துள்ளன இதனால் பக்தகோடிகளுக்கும் பிரச்சனைகள் உருவாகின்றன எனவே ஐயா இந்த நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்க முயற்சி செய்துள்ளார் . எமது முன்னாள் பாடசாலை அதிபரின் இரண்டு ஏக்கர் காணி இயக்கச்சி காட்டினுள் உள்ளதாம் அதை அவர் இவரது தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார் . இந்த காணியில் காப்பகத்தை அமைக்க ஐயா உத்தேசித்துள்ளார்.

அது வெற்றியடையும் என எதிர்பார்க்கலாம்.ஐயா நகைச்சுவையாக இந்த நாய்களுக்கு சாம்பாரும் சோறும்தான் உணவாக வழங்கப்படும் என்று சொன்னார்

. சுவாமிகளும் ,எனையோரும் ,நாங்களும் ஐயோ நாய்கள் பாவம் என்று சொல்லுகிறோம் ஆனால் ஒருத்தரும் அவற்றை பாதுகாக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை ஆனால் ஐயா செயலில் ஈடுபட்டமை பாராட்ட படவேண்டிய ஒர் விடயமாகும்.

Edited by putthan
 • Like 11
 • Thanks 2
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 5/29/2018 at 8:54 AM, putthan said:

------யாழ் நகரில் கட்டாகாலி நாய்களை ஜேர்மன் நாட்டு பெண்மணிஒருவர் பார்த்து கவலை அடைந்து  அவரை சந்தித்து இவை பாராமரிப்பற்று இருப்பதன் காராணத்தை கேட்டதாகவும் சொன்னார்.

அந்தபெண்மணியின் பின்னால் அங்கு நின்ற கட்டாகாலி நாய்கள் எல்லாம் வாலை ஆட்டிகொண்டு சென்றதை பார்த்து ஆச்சரியமடைந்த‌தையும் கூறினார்.

ஜேர்மன் பெண்மணி சொன்னாராம் இந்த நாய்கள் எனக்கு பின்னால் வருவதற்கு காரணம் தனது ரத்தத்தில் நாய்பாசம் கலந்துள்ளது அதுதான் இவைகள் எனக்கு பின்னால் வருகின்றன என்றாராம்.

கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதால் அங்கு அதிக நாய்கள் தஞ்சமடைந்துள்ளன இதனால் பக்தகோடிகளுக்கும் பிரச்சனைகள் உருவாகின்றன எனவே ஐயா இந்த நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்க முயற்சி செய்துள்ளார் . எமது முன்னாள் பாடசாலை அதிபரின் இரண்டு ஏக்கர் காணி இயக்கச்சி காட்டினுள் உள்ளதாம் அதை அவர் இவரது தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார் . இந்த காணியில் காப்பகத்தை அமைக்க ஐயா உத்தேசித்துள்ளார்.

அது வெற்றியடையும் என எதிர்பார்க்கலாம்.ஐயா நகைச்சுவையாக இந்த நாய்களுக்கு சாம்பாரும் சோறும்தான் உணவாக வழங்கப்படும் என்று சொன்னார்.

. சுவாமிகளும் ,எனையோரும் ,நாங்களும் ஐயோ நாய்கள் பாவம் என்று சொல்லுகிறோம் ஆனால் ஒருத்தரும் அவற்றை பாதுகாக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை ஆனால் ஐயா செயலில் ஈடுபட்டமை பாராட்ட படவேண்டிய ஒர் விடயமாகும்.

Bildergebnis für hundefutter in dosen

சிரிப்பான  நல்ல கதை புத்தன்.  ?  

ஜேர்மன்  பெண்களுக்கு, தாய்ப் பாசத்தை விட,  நாய்ப் பாசம்  ? அதிகம் என்பது 100% உண்மை.

எங்களது  ஜேர்மனியில்....  ?️‍?️ தமிழ் பெயரில்... நாயின் உணவு  ?️‍?️ உள்ளதை கவனிக்கவும்.  ⛑️   
ஜேர்மன் உதவியுடன்,  நாய்க் காப்பகம் ? அமைத்தால், நிச்சயம்  நல்ல வருமானம்,  ஐயாவுக்கு வரும். ?

ஏனென்றால்... எங்கள் ஊர் நாய்கள், "ரின் சாப்பாடுகளை" விரும்பி சாப்பிடாமல்,
மிஞ்சின ?  சோறும்,  சாம்பாறும்,  பருப்பு கறியும்   கொடுத்தாலே... நன்றியுடன் வாலை  ஆட்டிக் கொண்டு,  சப்பி  சாப்பிடுவார்கள். ?

 

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
40 minutes ago, குமாரசாமி said:

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

எனக்கு இயக்கச்சி பக்கம் போய் அனுபவமில்லை எண்டதால கதை விளங்கவில்லை!

என்ன சூக்குமம் இதுக்குள்ள இருக்கும்??

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நாய்க்காப்பகம் அசத்தல்......கதையாக இருந்தாலும் நிஜமாகவே தெரு நாய்களின் நிலமை பரிதாபம்தான்.....!  tw_blush:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
46 minutes ago, குமாரசாமி said:

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

இப்ப... முழிப்பது....  புத்தன், கிருபன், சுவி, தமிழ் சிறி  ? 
குமாரசாமி அண்ணை...   "இயக்கச்சி"  கதையை, நீங்கள் சொல்லியே..  ஆக  வேண்டும்.  ஆமா.....   ?

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

புத்தர் சிரிக்கிறார் :cool:

Share this post


Link to post
Share on other sites
On 5/29/2018 at 2:54 AM, putthan said:

இதை எங்கோ வாசித்த மகிந்தா கட்டாகாலி நாய்களை பிடிப்பதை தடை செய்து விட்டார்.இதனால் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது அவைகள் பல்கி பெருகி இப்பொழுது பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றது என குறைப்பட்டு கொண்டார் அந்த பெரியவர்.

ஊரில இன்னும் கொஞ்சகாலம் போனால் இந்த நாய்ப் பிரச்சனையே இருக்காது.

முன்னர் நாய்க்கு குறி சுடும் பழக்கம் இருந்தது.இப்போது நம்ம நாய் அடுத்தவன் நாயோடு கூடி பழகுவதை விரும்பாமல் நாய் கெளரவமாக இருக்க வேண்டுமென்பதற்காக 2000 ரூபா கொடுத்து ஊசி போட்டு வீட்டோடே வைத்துக் கொள்கிறார்கள்.

தமிழன் தாய் பெயரோ மம்மி

அவன் நாய் பெயரோ ஜிம்மி

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

யேர்மனியில் ஏறக்குறைய 6 மில்லியன் நாய்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நானும் .....நாய்களை வாங்கும் போதும்....அல்லது நாய்களை மாற்றும்போதும்.....yagoona வில் உள்ள...நாய்க்காப்பகத்தில் தான் வாங்குவது வழக்கம்!

வெளியில்....நாய் விற்பவர்களிடம் வாங்குவதில்லை! ஏனெனில் அவர்கள்....தாய் நாய்களைப் பிள்ளை பெறும் இயந்திரங்களாக மட்டும் உபயோகித்து விட்டுப்...பின்னர் அவற்றில் பிள்ளை பெறும் காலம் முடிந்ததும் தெருவில் விட்டு விடுவார்கள்!

அவ்வளவு தான் அவர்களது....நாயாபிமானம்!

அநேகமாகச் சிட்னியில் நடக்கும்.... Million paws walks..... நிகழ்வில்....புங்கையும்....ஒரு ஓரத்தில் தனது நாயுடன்...ஓரமாகக நடந்து போவதைக் காணலாம், புத்தன்!

ஒருக்கால்...ஊருக்குப் போன நேரம்.....வெறும் தீச்ச மீன் முள்ளுடனும், புழிஞ்ச தேங்காய்ப் பூவுடனும், கொஞ்சம் சோற்றுடனும் காலத்தை ஓட்டும்...ஊர் நாய் பாவம் எண்டு நினைச்சு...அதுக்கு..அவுஸ்திரேலியன் பேணிச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போய்க் குடுக்க...அதைப் பார்த்துக் கொண்டிருந்த கொஞ்சம் வயசு போன கிழவி ஒண்டு.....அட...தம்பி...வாசத்தைப் பார்த்தால்...நானே சாப்பிடலாம் போல கிடக்கு எண்டு சொல்ல.... கிழவியின்ர கண் பட்டதோ என்னவோ தெரியாது.....நாய் அவ்வளவு சாப்பாட்டையும்...சத்தி எடுத்து விட்டது!

பிறகு....வெறும் பேணியைக் காட்டினாலே....ஒழுங்கை முடிவுக்கு....ஓடிப்போய் விடும்!

தீச்ச மீனுக்கும்....புழிஞ்ச தேங்காய்ப் பூவுக்கும்..உள்ள மவுசு....நாய்க்குத் தெரியுது....நமக்குத் தான்....புரியுதில்லைப் போல!

 • Like 2
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 5/31/2018 at 4:20 AM, தமிழ் சிறி said:

மை.

 

ஏனென்றால்... எங்கள் ஊர் நாய்கள், "ரின் சாப்பாடுகளை" விரும்பி சாப்பிடாமல்,
மிஞ்சின ?  சோறும்,  சாம்பாறும்,  பருப்பு கறியும்   கொடுத்தாலே... நன்றியுடன் வாலை  ஆட்டிக் கொண்டு,  சப்பி  சாப்பிடுவார்கள். ?

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்  ....உண்மையிலயே ஊர் நாய்கள் என்னத்தையும் சாப்பிடும்...ஐயா வருமானத்தை எதிர்பார்த்து இதை செய்யவில்லை....நாய்கள்மீதும் மனிதர்கள் மீதும் உள்ள அக்கறையால் செய்கின்றார் என நான் நினைக்கிறேன்.

On 5/31/2018 at 6:05 AM, குமாரசாமி said:

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

அண்ணே அதென்ன இயக்கச்சி கதை நான் இப்ப உண்மையிலயே முழுசிறன்.....:oO:

On 5/31/2018 at 6:49 AM, கிருபன் said:

எனக்கு இயக்கச்சி பக்கம் போய் அனுபவமில்லை எண்டதால கதை விளங்கவில்லை!

என்ன சூக்குமம் இதுக்குள்ள இருக்கும்??

சும்மா ஒருகிறுக்கல் தான் இதில் ஒரு சூக்குமமும் இல்லை....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்:rolleyes:

Share this post


Link to post
Share on other sites
On 5/31/2018 at 6:50 AM, suvy said:

நாய்க்காப்பகம் அசத்தல்......கதையாக இருந்தாலும் நிஜமாகவே தெரு நாய்களின் நிலமை பரிதாபம்தான்.....!  tw_blush:

நாங்கள் இருந்த காலத்தை விட தற்பொழுது அதிகமாக உள்ளது....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

On 5/31/2018 at 7:00 AM, குமாரசாமி said:

புத்தர் சிரிக்கிறார் :cool:

:)

On 5/31/2018 at 7:19 AM, ஈழப்பிரியன் said:

ஊரில இன்னும் கொஞ்சகாலம் போனால் இந்த நாய்ப் பிரச்சனையே இருக்காது.

முன்னர் நாய்க்கு குறி சுடும் பழக்கம் இருந்தது.இப்போது நம்ம நாய் அடுத்தவன் நாயோடு கூடி பழகுவதை விரும்பாமல் நாய் கெளரவமாக இருக்க வேண்டுமென்பதற்காக 2000 ரூபா கொடுத்து ஊசி போட்டு வீட்டோடே வைத்துக் கொள்கிறார்கள்.

தமிழன் தாய் பெயரோ மம்மி

அவன் நாய் பெயரோ ஜிம்மி

ஆனால் தெரு நாய்களுக்கு 2000 ரூபா கொடுத்து ஒருத்தரும் குடும்பகட்டுப்பாடு செய்யமாட்டினம்tw_blush:.....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites
On 5/31/2018 at 2:13 PM, Kavi arunasalam said:

யேர்மனியில் ஏறக்குறைய 6 மில்லியன் நாய்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள்

நன்றிகள் கவி ....வருகைக்கும் தகவ‌லுக்கும்....அங்கு தெருவில் எத்தனை நிற்கின்றன ஒரு ஆயிரம்?எங்கள் நாட்டில் மில்லியன் நாய்கள் தெருவிலும் ஆயிரம் நாய்கள் வீட்டிலும்...

Share this post


Link to post
Share on other sites
On 5/31/2018 at 3:20 PM, புங்கையூரன் said:

 

அநேகமாகச் சிட்னியில் நடக்கும்.... Million paws walks..... நிகழ்வில்....புங்கையும்....ஒரு ஓரத்தில் தனது நாயுடன்...ஓரமாகக நடந்து போவதைக் காணலாம், புத்தன்!

 

என‌க்கும் நீண்ட நாட்களாக நாய் வளர்க்க வேணும் என்று ஆசை ஆனால் ம‌னிசி அனுமதி கொடுக்கின்றார் இல்லை.
ஒரு நாள் சண்டையில சொல்லி போட்டார், நாய் வீட்டுக்குள்ள வந்தால் தான் வெளியால போய்விடுவன் ,நாயா? நானா? நீங்களே முடிவெடுங்கள் என்று ...அதற்கு பிறகு நான் நாய் கதையே கதைக்கிறதில்லை எல்லாம் எழுத்துதான்....

அடுத்த‌ முறை Million paws walks பார்கத்தான் வேணும்

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, putthan said:

என‌க்கும் நீண்ட நாட்களாக நாய் வளர்க்க வேணும் என்று ஆசை ஆனால் ம‌னிசி அனுமதி கொடுக்கின்றார் இல்லை.
ஒரு நாள் சண்டையில சொல்லி போட்டார், நாய் வீட்டுக்குள்ள வந்தால் தான் வெளியால போய்விடுவன் ,நாயா? நானா? நீங்களே முடிவெடுங்கள் என்று ...அதற்கு பிறகு நான் நாய் கதையே கதைக்கிறதில்லை எல்லாம் எழுத்துதான்....

அடுத்த‌ முறை Million paws walks பார்கத்தான் வேணும்

எனக்குத் தெரிந்த வரையில்....வெளி நாடுகளில்...வாழ்பவர்கள்...உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு..ஒரு அருமையானதும்..மலிவானதுமான ஒரு வழி...நாய் வளர்ப்பது தான்!

உங்களுக்காக இல்லாவிட்டாலும்....நாய்க்காகவாவது கட்டாயம் நடக்க வேண்டிய தேவை உள்ளது!

அத்துடன்....நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்...புதிதாக வரும் அயலவர்கள் போன்ற அறிவையும் பெற...நாயுடன் நடப்பது..உதவும்!

அத்துடன்....ஒரு வேளை மனுசி விட்டிட்டுப் போனாலும்....நாய் ஒரு நாளும்...உங்களை விட்டுப் போகாது!?

 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, புங்கையூரன் said:

எனக்குத் தெரிந்த வரையில்....வெளி நாடுகளில்...வாழ்பவர்கள்...உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு..ஒரு அருமையானதும்..மலிவானதுமான ஒரு வழி...நாய் வளர்ப்பது தான்!

உங்களுக்காக இல்லாவிட்டாலும்....நாய்க்காகவாவது கட்டாயம் நடக்க வேண்டிய தேவை உள்ளது!

அத்துடன்....நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்...புதிதாக வரும் அயலவர்கள் போன்ற அறிவையும் பெற...நாயுடன் நடப்பது..உதவும்!

அத்துடன்....ஒரு வேளை மனுசி விட்டிட்டுப் போனாலும்....நாய் ஒரு நாளும்...உங்களை விட்டுப் போகாது!?

 

குந்திக்கொண்டு உதில தட்டிக்கொண்டிருக்காமல் நடந்திட்டு வாங்கோ என்று  சொல்லுறவ இதை சாட்டா வைத்து அனுமதி எடுக்கத்தான் வேணும்....tw_blush:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, putthan said:

என‌க்கும் நீண்ட நாட்களாக நாய் வளர்க்க வேணும் என்று ஆசை ஆனால் ம‌னிசி அனுமதி கொடுக்கின்றார் இல்லை.
ஒரு நாள் சண்டையில சொல்லி போட்டார், நாய் வீட்டுக்குள்ள வந்தால் தான் வெளியால போய்விடுவன் ,நாயா? நானா? நீங்களே முடிவெடுங்கள் என்று ...அதற்கு பிறகு நான் நாய் கதையே கதைக்கிறதில்லை எல்லாம் எழுத்துதான்....

அடுத்த‌ முறை Million paws walks பார்கத்தான் வேணும்

ஆண்டவன் மிகவும் கருணையுள்ளவர். எப்போதாவதுதான் அருமையாக ஒரு சந்தர்ப்பத்தை போட்டுட்டு போகிறார்......ஆனாலும் விதி வலியது.....! tw_blush:

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, புங்கையூரன் said:

எனக்குத் தெரிந்த வரையில்....வெளி நாடுகளில்...வாழ்பவர்கள்...உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு..ஒரு அருமையானதும்..மலிவானதுமான ஒரு வழி...நாய் வளர்ப்பது தான்!

உங்களுக்காக இல்லாவிட்டாலும்....நாய்க்காகவாவது கட்டாயம் நடக்க வேண்டிய தேவை உள்ளது!

அத்துடன்....நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்...புதிதாக வரும் அயலவர்கள் போன்ற அறிவையும் பெற...நாயுடன் நடப்பது..உதவும்!

அத்துடன்....ஒரு வேளை மனுசி விட்டிட்டுப் போனாலும்....நாய் ஒரு நாளும்...உங்களை விட்டுப் போகாது!?<span>

 

அதோட முஞ்சையை நீட்டாது எப்பவும் வாலை ஆட்டும்.

 • Like 2
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 6/1/2018 at 8:48 PM, suvy said:

ஆண்டவன் மிகவும் கருணையுள்ளவர். எப்போதாவதுதான் அருமையாக ஒரு சந்தர்ப்பத்தை போட்டுட்டு போகிறார்......ஆனாலும் விதி வலியது.....! tw_blush:

 just miss it :)

On 6/2/2018 at 1:41 AM, சுவைப்பிரியன் said:

அதோட முஞ்சையை நீட்டாது எப்பவும் வாலை ஆட்டும்.

அதென்றால் 100% உண்மை

Share this post


Link to post
Share on other sites
On 5/31/2018 at 3:20 PM, புங்கையூரன் said:

 

ஒருக்கால்...ஊருக்குப் போன நேரம்.....வெறும் தீச்ச மீன் முள்ளுடனும், புழிஞ்ச தேங்காய்ப் பூவுடனும், கொஞ்சம் சோற்றுடனும் காலத்தை ஓட்டும்...ஊர் நாய் பாவம் எண்டு நினைச்சு...அதுக்கு..அவுஸ்திரேலியன் பேணிச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போய்க் குடுக்க...அதைப் பார்த்துக் கொண்டிருந்த கொஞ்சம் வயசு போன கிழவி ஒண்டு.....அட...தம்பி...வாசத்தைப் பார்த்தால்...நானே சாப்பிடலாம் போல கிடக்கு எண்டு சொல்ல.... கிழவியின்ர கண் பட்டதோ என்னவோ தெரியாது.....நாய் அவ்வளவு சாப்பாட்டையும்...சத்தி எடுத்து விட்டது!

 

முல்லைக்கொடிக்கு தான் ஏறிவந்த  தேரினைக் கொடுத்தவன் பாரி. இதனால்  வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர்.  

 தாயகத்துக்கு செல்லும் போது நாய்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்ட முதலாவது தமிழர் புங்கையூரான் அவர்களை இன்று முதல் "  பாரியை விஞ்சிய பூங்கையர்'   என்று அழைக்கப்படுவார்.

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, கந்தப்பு said:

முல்லைக்கொடிக்கு தான் ஏறிவந்த  தேரினைக் கொடுத்தவன் பாரி. இதனால்  வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர்.  

 தாயகத்துக்கு செல்லும் போது நாய்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்ட முதலாவது தமிழர் புங்கையூரான் அவர்களை இன்று முதல் "  பாரியை விஞ்சிய பூங்கையர்'   என்று அழைக்கப்படுவார்.

ஆஹா ....அருமையான விருது, போற்றத் தக்கது.....!  விருதை சுருக்கி பாவி புங்கையர் என்றும் அழைக்கலாம்......!  ?

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

நேரப்பற்றாக்குறை, மற்றும் பொறுமை இல்லாதபடியால் உங்கள் கதைகளை வாசிக்கமுடியாமல் போய்விட்டது புத்தன். ஆனால் இன்று வாசித்தேன். நல்ல கருப்பொருள். எங்கள் கொக்குவில் வீட்டு நாயின் நினைவும் வந்துவிட்டது கதையை வாசித்தபின்னர். நாய் பிடிப்பதற்கு எதிராக இப்போது இலங்கையில் சட்டம் உள்ளது என்று இன்றுதான் அறிந்துகொண்டேன். நாய் காப்பகம் உண்மையில் நல்ல வரவேற்கத்தக்க முயற்சி. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தினாலே போதும். அவற்றை பிடித்து கொன்று கட்டாக்காலி நாய்களை அழிக்கவேண்டிய தேவை ஏற்படாது.

On 5/31/2018 at 1:20 AM, புங்கையூரன் said:

நானும் .....நாய்களை வாங்கும் போதும்....அல்லது நாய்களை மாற்றும்போதும்.....yagoona வில் உள்ள...நாய்க்காப்பகத்தில் தான் வாங்குவது வழக்கம்!

வெளியில்....நாய் விற்பவர்களிடம் வாங்குவதில்லை! ஏனெனில் அவர்கள்....தாய் நாய்களைப் பிள்ளை பெறும் இயந்திரங்களாக மட்டும் உபயோகித்து விட்டுப்...பின்னர் அவற்றில் பிள்ளை பெறும் காலம் முடிந்ததும் தெருவில் விட்டு விடுவார்கள்!

அவ்வளவு தான் அவர்களது....நாயாபிமானம்!

அநேகமாகச் சிட்னியில் நடக்கும்.... Million paws walks..... நிகழ்வில்....புங்கையும்....ஒரு ஓரத்தில் தனது நாயுடன்...ஓரமாகக நடந்து போவதைக் காணலாம், புத்தன்!

ஒருக்கால்...ஊருக்குப் போன நேரம்.....வெறும் தீச்ச மீன் முள்ளுடனும், புழிஞ்ச தேங்காய்ப் பூவுடனும், கொஞ்சம் சோற்றுடனும் காலத்தை ஓட்டும்...ஊர் நாய் பாவம் எண்டு நினைச்சு...அதுக்கு..அவுஸ்திரேலியன் பேணிச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போய்க் குடுக்க...அதைப் பார்த்துக் கொண்டிருந்த கொஞ்சம் வயசு போன கிழவி ஒண்டு.....அட...தம்பி...வாசத்தைப் பார்த்தால்...நானே சாப்பிடலாம் போல கிடக்கு எண்டு சொல்ல.... கிழவியின்ர கண் பட்டதோ என்னவோ தெரியாது.....நாய் அவ்வளவு சாப்பாட்டையும்...சத்தி எடுத்து விட்டது!

பிறகு....வெறும் பேணியைக் காட்டினாலே....ஒழுங்கை முடிவுக்கு....ஓடிப்போய் விடும்!

தீச்ச மீனுக்கும்....புழிஞ்ச தேங்காய்ப் பூவுக்கும்..உள்ள மவுசு....நாய்க்குத் தெரியுது....நமக்குத் தான்....புரியுதில்லைப் போல!

நல்ல விடயம் புங்கையூரன். நானும் கனடாவில் இருந்து சென்றபோது எனது மனைவியின் வீட்டில் உள்ள நாய்க்கு உண்பதற்கு நல்ல பாத்திரம் ஒன்றும், அது உண்பதற்கு நாய்களுக்கு கொடுக்கப்படும் உணவு பெட்டி ஒன்றும் கொண்டு சென்றேன். நான் மனைவியுடன் தொலைபேசியில் கதைக்கும்போது அதனுடனும் கதைத்து குரலை காட்டிக்கொள்வேன். நல்ல புத்திசாலித்தனமான நாய் அது. கனடாவில் நாய் வளர்ப்பதற்கு சூழ்நிலைகள் இடம்கொடுக்கவில்லை.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நாய்க்காப்பகம் பற்றி எனக்கு எந்த அனுபவமும் இல்லை. ஆனால் எனது மகள் பல வருடங்களாக கேட்டும் நான் நாய் வளர்ப்பதற்கு  அனுமதிக்கவில்லை. சென்ற வருடம் எனது மருமகள் தாயகம் புறப்பட்டபோது மகள் அவவின் நாய்க்குட்டியை பராமரிக்கும் பொறுப்பை சந்தோசமாக ஏற்றுக்கொண்டார். மறுநாளே மகள் திராட்சைப்பழம் உண்ண நாய்க்குட்டி வாய்பார்க்க மகளும் அதற்கும் ஒரு திராட்சைப்பழத்தை உண்ணக் கொடுத்து விட்டார். பின் என்ன நினைத்தாரோ கணனியை தட்டி வலைத்தளத்தை தேடிய பொழுது அந்த வகை நாய்க்கு திராட்சைப்பழம் விசம்என்று தெரிந்தது. உடனடியாக நாய்க்குட்டியுடன் நாய்வைத்தியரிடம் சென்று ஊசி போட்டு வாந்தி எடுக்க வைத்து திரும்பினார். கொடுத்தது ஒரு திராட்சைப்பழம் செலவழித்ததோ 100 டொலர். கதைக்கு பாராட்டுக்கள் புத்தன்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

குசும்புக் கிறுக்கல்

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

புத்து உங்கள் நாய்க் காப்பகத்திலிருந்து தான் தமிழநாட்டுக்கு நாய்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இதில என்னரை பெயர் அடிபடுற மாதிரி இருக்கு.ஆனால் விளங்கவில்லை.
  • உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி தெளிவாக சொன்னால் நான் துரோகி இதெல்லாம் பழகியதால் என்னவோ கோபம் என்பது வருவது குறைவாக இருக்கிறது சிறிய புன்னகையினால் கடந்து செல்கிறேன் நடக்கும் சம்பவங்களை நினைத்து 
  • நேர்காணல்-லறீனா, நேர்கண்டவர் - கோமகன்   “அடுத்தவர் நமக்கான களங்களை, வெளிகளை உருவாக்கித் தரும்வரை காத்துக்கொண்டு இருக்காமல், பெண்கள் தமது அறிவையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக் கொண்டு, அவற்றைச் சமூகமயப்படுத்துவதற்கான வெளியைத் தாமே கட்டமைத்துக்கொள்ள முன்வர வேண்டும்”. லறீனா 000000000000000000000000 வணக்கம் வாசகர்களே , இந்த வருட ஆரம்பத்தில் தாயகத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்களினால் தமிழ் முஸ்லிம் உறவுகள் முறுகல் நிலையையும் இரு சமூகங்களுக்கு இடையே பாரிய இடைவெளியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் கண்டு ஒரு இலக்கியனாக மிகவும் கவலையும் அயர்ச்சியும் கொண்டிருந்தேன். இருபக்கத்திற்கும் பொதுவான விடயங்கள் கலந்துரையாடல்கள் மூலம் பொதுவெளிக்கு கொண்டுவரப்படல் வேண்டும் என்று நான் எடுத்துக்கொண்ட முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த நேர்காணல் லறீனாவுடன்  செய்து கொள்ளப்பட்டது. ‘இலக்கியவாதிகள் எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடாது தங்களைச் சுற்றியுள்ள சமூகத்துக்கு அவர்கள் எவ்வாறு பயன்தருமாறு பன்முகத்தன்மையடன் இயங்கு நிலையில் இருக்கின்றார்கள் என்பதை வைத்தே அவர்களது எழுத்தின் வீரியம் கணிக்கப்படுகின்றது’ என்பதில் எனக்கு அசையா நம்பிக்கை உண்டு. அந்தவகையில் லறீனா சிறியவயதிலேயே எழுதுவதுடன் நின்றுவிடாது பன்முகத் தளத்தில் இயங்கி வருகின்ற ஒரு இலக்கிய ஆளுமை. இந்த நேர்காணலில் எனது பக்கத்து ஆதங்கங்களும் லறீனா பக்கத்து நியாயப்பாடுகளும் ஆதங்கங்களும் முட்டி மோதுகின்றன என்பதே உண்மையான நிலை. நடு வாசகர்களுக்காக லறீனா இந்த நேர்காணலின் ஊடாகக்  கனதியானதும் சர்சைகளுக்குரியதுமான நீண்ட கதையாடலைச் செய்திருக்கின்றார்…… கோமகன்      00000000000000000000000 லறீனாவை அறிமுகப்படுத்தலுடன் இந்த நேர்காணலை ஆர்முடுகல் செய்வது நல்லது என எண்ணுகின்றேன்…. எனது முழுப்பெயர் லறீனா அப்துல் ஹக். தாயார் மறைந்த எழுத்தாளரும் பாடகியுமான மாத்தளை ஃபர்வீன் (ஃபௌசுல் ஹினாயா). தந்தை பிரபல சிங்கள திரைப்பட இசையமைப்பாளரும் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியருமான கலகெதர எம். எம். அப்துல் ஹக். தாய்வழிப் பாட்டனார் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். என் சொந்த ஊர் மாத்தளை. பாலர் வகுப்பில் இருந்து உயர்தரம் (கலைப்பிரிவு) வரை மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். 2002 பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டதாரியானதோடு, அதே பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், மொழிபெயர்ப்புக் கற்கைநெறித் துறையிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். 2012 இல் தமிழில் முதுமாணிப்பட்டம் (MPhil) பெற்றபின் கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக வாசித்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது சப்ரகமுவ பல்கலைக்கழக மொழிகள் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றேன். ஒப்பீட்டு இலக்கியம், மொழிபெயர்ப்பு, பெண்ணியம், சமூக நல்லிணக்கம், இசை, ஓவியம், நாடகம் என்பன என்னுடைய விருப்பார்வத் துறைகள். இத்துறைகள் சார்ந்து ஆய்வுக் கட்டுரை, கவிதை, சிறுகதை, குறுநாவல், மொழியாக்கம் என சுமார் 16 நூல்கள் வெளிவந்துள்ளன. நானே வரிகள் எழுதி, மெட்டமைத்து, இசையமைத்துப் பாடிய 9 பாடல்கள் அடங்கிய ‘சுயமி’ என்றோர் இசைப்பேழையும் வெளியிட்டுள்ளேன். இன்னோர் இசைப்பேழை வெளியிடும் உத்தேசமும் உள்ளது. அதற்கான பாடல்களும் கைவசம் உள்ளன. தேவையான பொருளாதார வசதியை ஒழுங்குசெய்து கொண்டதும் இன்ஷா அல்லாஹ் அதனை வெளியிடும் எண்ணம் உண்டு. இது தவிர, சமூக மேம்பாடு, சமூக நல்லுறவு, பெண்கள் மேம்பாடு, கல்வி மேம்பாடு என்பவற்றின் பொருட்டு பல்வேறு தன்னார்வக் குழுக்களோடு இணைந்து சமூகத்தளத்தில் ஒரு செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகின்றேன். அவற்றுள் கல்கந்தே தம்மானந்த தேரரைப் பணிப்பாளராகக் கொண்ட வல்பொல ராகுல நிறுவகத்துடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பதை முக்கியமானதாகக் கருதுகின்றேன். லறீனா எழுத வேண்டியதன் அகஎழுச்சிதான் என்ன? குடும்பச் சூழல் என்றுதான் நினைக்கின்றேன். என் தாயார் பத்திரிகையில் வாராவாரம் பிரசுரமாகும் தனது தொடர்கதைகளைக் கவனமாக வெட்டியெடுத்து ஒட்டிவைப்பதைக் கண்டு சிறுவயது முதலே எனக்கும் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. மற்றும்படி, சிறுவயது முதல் இருந்த வாசிப்புப் பழக்கமும், உள்ளார்ந்த தனிமை உணர்வும் ஆன்மீக உணர்வையும் எழுத்தார்வத்தையும் வலுப்படுத்தின என நினைக்கின்றேன். நண்பர்களும் ஆசிரியர்களும் அதனை எப்போதும் ஊக்கப்படுத்தி என்னை நெறிப்படுத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ். அது ஒரு பெரும் கொடை தான். உங்கள் எழுத்தினால் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்த வெகுமதிகள் என்ன? சேச்சே! அப்படியெல்லாம் எதுவும் கிடைத்ததாக நான் கருதவில்லை. மறுதலையாக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். தமிழும் எழுத்தும் என்னை எனக்கே அடையாளப்படுத்திய, என்னை எனக்கே திருப்பித்தந்த வெகுமதிகள் என்பேன். கவிதையை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள்? சுயத்தின் விடுதலையை வசப்படுத்தும் சிறகாகவும் வானமாகவும் காண்கிறேன். ஈழத்தில் நவீன கவிதையின் வளர்ச்சியை காலம் பிந்தி உருவாக்குவதற்கு யார் தடையாக இருந்தார்கள் ? யாரும் தடையாகவோ காரணமாகவோ இருக்கவில்லை என்றுதான் நினைகின்றேன். தமிழகத்தோடு ஒப்புநோக்கிப் பார்த்தால் ஈழத்துக்கென்று தனியான ஓர் இலக்கியப் போக்கு வளர்ந்து வந்திருக்கிறது. நவீன கவிதையின் வடிவ மற்றும் உள்ளடக்கம் ரீதியான மாற்றங்கள் பாரதி, ந. பிச்சமூர்த்தி தொடங்கித் தமிழில் உள்வாங்கப்படலாயிற்று என்பதை நாம் அறிவோம். ஈழத்தைப் பொருத்தவரையில், கருத்தியல் தளத்தில் நவீன கவிதைக்கான சிந்தனையை உள்ளீடாகக் கொண்ட, ஆனால் சந்த நயம் பொருந்திய மரபுக் கவிதை வடிவத்தையே கைக்கொண்ட போக்கே காணப்பட்டது. ஈழத்தின் அரசியல் சூழலும் இதற்கொரு காரணம் எனலாம். இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு அரசியல் பிரக்ஞை என்ற ஒன்று இருக்க வேண்டுமா? ஆம் என்றால், எப்படியாக? இலக்கியச்செயற்பாடே அரசியல் சார்ந்த ஒரு செயற்பாடுதான் என்பதால், அதுபற்றிய பிரக்ஞை இருப்பது தவிர்க்க முடியாதது என்றே கருதுகின்றேன். இன்னொரு வகையில் எளிமையாகச் சொல்வதானால், எல்லாவகையான அதிகார மேலாண்மைக்கும் எதிரான மாற்றுக் குரலாகவும், அதிகாரத்தின் முன் உண்மையை உரத்துப் பேசும் குரலாகவும், சிறுபான்மையினரோ, பெண்களோ, சிங்களச் சமூகத்தில் சுரண்டலுக்குள்ளாகும் உழைப்பாளர்களோ, மலையகத் தொழிலாளர்களோ யாராக இருந்தாலும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட சனக்கூட்டத்தின்மீது அக்கறை கொள்ளும் குரலாகவும், இலக்கியப் பிரதிகளுக்குள் ஊடுபாவி இருக்கும் கருத்துநிலைகள் குறித்த –  அவை யாருக்கானவை, யாரின் நலன் சார்ந்தவை என்பவை உள்ளடங்கலாக – சமநிலை தளம்பாத உள்ளார்ந்த விமர்சனக் குரலாக என இந்தப் பிரக்ஞை உணர்வு பன்மைத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அத்துடன், இலக்கியம் என்பது அதிகாரத்துக்குத் தொண்டூழியம் செய்யும் ஒன்றாக மாறிவிடாமல், தன்னளவில் தற்சார்பு உடையதாக இருத்தல் வேண்டும் எனவும் நினைக்கிறேன் சமகாலத்தில் எழுத்துச்சூழல் உங்களுக்குத் திருப்திகரமாக உள்ளதா ? திருப்திகரமானது என்று சொல்வது அதன் தேக்கநிலைக்கு ஆதரவான நிலைப்பாடாக மாறிவிடும் அல்லவா?. முன்னரைவிட எழுத்துச் சூழலுக்கான ‘வெளி’ பரந்துபட்டதாக மாறி இருக்கிறது. குறிப்பாக, சமூக ஊடகங்களின் வருகையினால் பெண்களின் எழுத்து முயற்சிகள் அதிகரித்துள்ளன. அது ஒரு வரவேற்கத்தக்க நிலைதான். ஆனால், சமகால எழுத்து இதனிலும் மேம்பட்ட புதிய முயற்சிகள், அடைவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில், சிங்கள – தமிழ் புனைகதை மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த உங்கள்  கருத்துக்களை/ அனுபவங்களைக் கூறமுடியுமா? சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் இருவேறு மொழிக்குடும்பங்களைச் சேர்ந்த மொழிகளாக இருந்த போதிலும் அவற்றின் வாக்கியக் கட்டமைப்பு ஒரே வகையானதாக (SOV) இருக்கின்றது. இதனால், இந்த இரு மொழிகளிலும் பரிச்சயமுள்ள எவராலும் இலகுவில் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்துவிடலாம் என்பதான ஒரு கருத்து நிலவுகிறது. என்றாலும், இலக்கிய மொழிபெயர்ப்பைப் பொருத்தவரையில் இக்கருத்து உண்மையல்ல. காரணம், இரு மொழிகளுக்கும் உரிய தனித்துவமான மொழிக்கூறுகள், இலக்கண மரபுகள் குறித்த ஆழமான புரிதல் இருந்தால் மட்டுமே ஒரு நல்ல மொழிபெயர்ப்பினை உருவாக்க முடியும். உதாரணமாக, சிங்களமொழிப் பேச்சுவழக்கின் போது முன்னிலை, படர்க்கை இரண்டுக்கும் பொதுவான வினைச் சொற்கள் இடம்பெறுவது வழமை. ‘சரத் அத பன்சலட்ட கியாத?’ – என்பதைத் தமிழிலே (1) ‘சரத் இன்று விகாரைக்குப் போனானா?’ (2) ‘சரத் (நீ) இன்று விகாரைக்குப் போனாயா?’ என்று இரு விதமாகவும் மொழிபெயர்க்க முடியும். குறித்த மூலப்பிரதியில் யார் யாருக்கிடையிலான உரையாடல் இடம்பெற்றுள்ளது என்ற தெளிவான புரிதல் மொழிபெயர்ப்பாளருக்கு இல்லாதபட்சத்தில், அப்பிரதியின் கதையோட்டமே பாதிக்கப்பட்டுவிடலாம். பேராசிரியர் ம. மு. உவைஸ் அவர்கள் செய்த மார்ட்டின் விகரமசிங்ஹவின் ‘கம்பெரலிய’ சிங்கள நாவலின் தமிழ் (‘கிராமப்பிறழ்வு’) மொழிபெயர்ப்பில் இப்புரிதல் இன்மையால் நிகழ்ந்த இத்தகைய குளறுபடிகளை நாம் காணலாம். அவ்வாறே, சிங்கள உரையாடல் வழக்கில் தங்கை, மச்சாள், காதலி, அறிமுகமற்ற ஒரு பெண் ஆகிய அனைவரையும் ‘நங்கி’ – (தங்கச்சி) எனவும், அண்ணன், மச்சான், காதலன், அறிமுகமற்ற ஓர் ஆண் ஆகியோரை ‘அய்யா’ (அண்ணா) எனவும் விளிக்கும் வழக்கம் உள்ளது. இப்படியான ஒரு பிரயோகத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது, அது இலக்கு வாசகருக்குப் பிழையான புரிதலை ஏற்படுத்தி விடாதவாறு கவனமாகக் கையாள வேண்டிய ஒரு பொறுப்பு நமக்குள்ளது. அதைப்போலவே, மரபுப் பிரயோகங்கள், உவமைகள், பழமொழிகள் என்பவற்றை மொழிபெயர்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் அலாதியானவை. நல்ல உதாரணம், சிங்கள மொழியிலே பிக்குமார்களின் (உணவருந்துதல், உலாவுதல், உறங்குதல், பேசுதல், அமர்தல், நீராடுதல், முற்றம் பெருக்குதல் முதலான) சகல செயற்பாடுகளுக்குமான விசேடமான வினைச்சொற் தொகுதி ஒன்று வழக்கில் உள்ளது. இதனைத் தமிழில் அவ்விதமே கொண்டுவருதல் மிகக் கடினமானது. சிலபோது குறித்த தமிழ் வினைச்சொல்லுடன் பழந்தமிழ்ச் சொல்லான அருளினார் என்பதையும் இணைத்துப் பயன்படுத்தினால் ஓரளவு சரியாக இருக்கலாம். நான் எதிர்கொள்ள நேர்ந்த ஒரு சுவாரசியமான விடயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். சிங்களக் கிராமிய வழக்கில், ‘பலா பெதனவா (Palaa bedhanavaa) என்றொரு பிரயோகம் உள்ளது. வேண்டாத விருந்தாளியைக் கிளம்பிச் செல்லுமாறு உணர்த்துதல்/ சமிக்ஞை காட்டுதல் என்ற அர்த்தத்தில் வழங்கும் இப்பிரயோகத்தின் நேர்ப்பொருள் ‘கீரை பரிமாறுதல்’ என்பதாகும். தமிழிலும் ஏறத்தாழ இதையொத்த வேறொரு பிரயோகம் கிராமங்களில் வழங்கி வருவதை அண்மையில் தான் அறிந்துகொள்ள முடிந்தது. ‘ஆளெழுப்பி’ என்ற பிரயோகமே அது.  பந்தி பரிமாறி முடிந்ததை உணர்த்தும் வகையில் இறுதியாகப் பரிமாறும் சொதியை – ஆணத்தைக் குறிக்கும் பிரயோகமே அது. மொழிபெயர்ப்புச் செயற்பாட்டின் போது, இப்படியான சுவாரசியமான பல புதிய விடயங்களையும் நாம் கற்றுக்கொண்டபடியே இருக்கின்றோம். வள்ளுவரின் ‘அறிதோறும் அறியாமை கண்டற்றார்’ என்பது காமத்துக்கு மட்டுமல்ல, மொழிபெயர்ப்புச் செயற்பாட்டுக்கும் மிக நன்றாகப் பொருந்திப் போகின்றது என்பதே என் அனுபவம். பொதுவாக, இலங்கையில் இதுவரை காலம் செய்யப்பட்டுள்ள சிங்கள – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பு முயற்சிகள் போதுமானவையாக இல்லை என்றே கருதுகின்றேன். மிகக் குறிப்பாக, தனிப்பட்ட நபர்களின் முயற்சிகளால் தமிழ்ப் படைப்புகள் சிங்கள மொழிக்குப் போய்ச் சேர்ந்தாலும், ஈழத் தமிழின் காத்திரத்தன்மையையும் படைப்புத் திறனையும் வெளிக்காட்டும் வகையில் எழுந்த படைப்புகள் போதிய அளவு சிங்கள மொழிக்குச் சென்று சேரவில்லை என்பதே கசப்பான உண்மை. அவ்வாறே, ஒருசில அரிய சிங்களப் படைப்புகளின் தமிழ் மொழியாக்கம் செவ்வையானவையாக அமையவில்லை. ஒரு நல்ல உதாரணம், சிங்களத்தின் புகழ்பெற்ற நாவலான ‘செங்கோட்டன்’ தமிழ் மொழிபெயர்ப்பு சகிக்க முடியாத ஒன்றாக இருப்பது. இதற்கான காரணம், செய்யப்படும் ஒரு மொழிபெயர்ப்பின் தரம் குறித்த முறையான பரிசீலனைக்கான நெறிப்படுத்தப்பட்ட பொறிமுறை ஒன்று நம்மத்தியில் இல்லாதிருப்பதாகும். அதற்காக நம் மத்தியில் தரமான சிங்கள – தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்று அர்த்தமல்ல. திக்வல்லை கமால், முஹம்மது றாசூக், விமல் சாமிநாதன், நிலார் என் காசீம், எம். எம். மன்சூர், இரா. சடகோபன், ஹேமச்சந்திர பத்திரன, முகம்மது ரஸ்மின், ரிஷான் ஷெரீஃப் போன்ற பல நல்ல மொழிபெயர்ப்பாளர்களை நாம் பெற்றிருக்கிறோம் என்பது  மனநிறைவுதரும் செய்தியாகும். அண்மைக்காலமாக இலங்கையின் கல்வி அமைச்சும், கலாசார அமைச்சும், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையும் இரு மொழிகளுக்கும் இடையிலான மொழிபெயர்ப்பு முயற்சிகளில் சற்று ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்தாலும், ஒப்பீட்டளவில் அவைகூட குறைவான முன்னெடுப்புகள் என்றே கூறவேண்டும். நம் நாட்டில் தேசிய ரீதியில் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கென துறைசார் நிபுணத்துவம் கொண்ட சிறப்புக் குழுவொன்றின் கீழ் தனித்துறை/ அலகு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுவதன் மூலமே இக்குறையை நிவர்த்திக்கலாம் என்று நம்புகின்றேன். ஈழத்து இலக்கிய வெளியில் புதிய வீச்சை ஏற்படுத்தியது ‘போரியல் இலக்கியம்’. எமது போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட புனைவுகளை பார்த்த பொழுது தமிழர் விடுதலை போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட புனைவுகளே அதிகம் மொழிபெயர்க்கப் பட்டன. இதற்கு எதாவது காரணங்கள் உண்டா? ஏனெனில், சிங்களப் பதிப்பகங்கள் தமது பக்கத்தில்   வெற்றிகளுக்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்ட தமிழ் புனைவுகளுக்கே முன்னுரிமை கொடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஒரு மொழிபெயர்ப்பாளராக இதற்கு என்ன சொல்கின்றீர்கள்? இதற்குச் சற்று விரிவாகத்தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும். முதலாவதாக, நான் ஏலவே சுட்டி இருப்பது போல, தமிழில் இருந்து சிங்களத்துக்குச் செல்லும் புனைகதை மொழிபெயர்ப்புகள் எவையும் அமைப்பார்ந்த ரீதியில் திட்டமிட்ட அடிப்படையில் செய்யப்பட்டவை அல்ல. அவை பெரும்பாலும் தனிநபர்களின் சுயவிருப்பம், தனிமுயற்சி என்ற அடிப்படையில் மொழிபெயர்க்கப்படுபவை. தமிழினி ஜெயக்குமரனின் தமிழ்ச் சிறுகதைகளை நானும்  திரு. சரத் ஆனந்தவும் சேர்ந்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்ததும் அப்படித்தான். அவரின் கணவரான சகோதரர் ஜெயன் தேவாவின் வேண்டுகோளுக்கு அமைய அதனை நாம் மொழிபெயர்த்துக் கொடுத்தோம். அவர் அதற்கான கட்டணத்தை எமக்குச் செலுத்தினார். ஆகவே, போரின் நியாயப்பாடுகள், அவலங்கள் பற்றிய போரிலக்கியப் பிரதிகள் சிங்களத்தில் வெளியாக வேண்டும் என்ற விருப்பும் தேவையும் உடையோர் அதைக் காசு செலவழித்து, உரிய முறையில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான சுயாதீன ‘வெளி’ அப்படியே திறந்துதான் இருக்கிறது என்பதை வலியுறுத்த விழைகின்றேன். அப்படி ஒரு முயற்சி செய்யாமல் குற்றச்சாட்டொன்றை முன்வைப்பது நேர்மை ஆகாது. அடுத்தது, பொதுவாக வடகிழக்கில், போர்க்களத்திலும் அந்த மக்களின் வாழ்வியலிலும் நடந்தவை என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் குறுகுறுப்பும் அதைப் பற்றி நேரடியாக அறியாத சிங்கள வாசகர் மத்தியில் இருப்பது இயல்பானது. அந்தவகையில், தமிழினி போன்ற முன்னாள் போராளி ஒருவரின் தன்வரலாற்று அனுபவங்களையும் அவற்றை உள்ளடக்கி அவர் எழுதிய சிறுகதைகளையும் வாங்கி வாசிக்க அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதும் அதன் விளைவுகளில் ஒன்றுதான். எனவே, அந்நூல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்தன. அவரின் எழுத்துக்கள் குறித்து சிங்கள நண்பர்கள் பலரோடு கலந்துரையாடல்களை நிகழ்த்தி இருப்பவள் என்ற அடிப்படையில் சொல்கின்றேன். போர் பற்றிய சுயவிமர்சனங்களை உள்ளடக்கிய தமிழினியின் எழுத்துக்களைக்கூட,‘இப்படி எழுத எவ்வளவு நேர்மையும் மனத்துணிவும் இருக்க வேண்டும்? பெரும்பான்மையின எழுத்தாளர்களிடம் தம்மினத்தின் தவறுகளைத் தாமே விமர்சிக்க இந்தளவு நேர்மை இருக்கிறதா?’ என்ற ரீதியில் பல சிங்கள நண்பர்கள் கௌரவமாகவே கருத்துரைத்தனரே தவிர, தமிழினப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியதில்லை. இதனை அவரது எழுத்துக்களால் கிடைத்த ஒரு சாதகமான உளவியல் விளைவு எனலாம். ஆக, தமிழினி போன்றோரின் எழுத்துக்களை ஒரு துரோகமாகவோ காட்டிக்கொடுப்பாகவோ யாரும் மடைமாற்றம் செய்வார்களேயானால், அது பெரும் அபத்தம் என்றே சொல்வேன். மற்றது, சுதாராஜ், ரஞ்சகுமார் போன்றோர் எழுதிய, போரின் அவலங்களைக் கூறும் சிறுகதைகள் ஏலவே சிங்களத்தில் உதிரியான முயற்சிகள் என்ற அடிப்படையில் வெளிவந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட விழைகின்றேன். அவை தமிழ் மக்களின் துயரங்களைச் சிங்கள வாசகர் மத்தியில் திறம்படக் கொண்டு செல்வதில் ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றுள்ள என்றே கூறலாம். இங்கு, என்னுடைய அனுபவம் ஒன்றையே பகிர்ந்து கொள்கின்றேன். பேராதனைப் பல்கலைக்கழக சிங்களத்துறைப் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி அவர்கள், பல்கலைக்கழகச் சிங்களமொழி மாணவர்களுக்கு ‘சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகள்’ என்றொரு பாடநெறியை அறிமுகப்படுத்தினார். அதனை அவரோடு இணைந்து கற்பிக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதன்போது, மேலே சொன்னது போல, தமிழ் மக்களின் துயரங்களைச் சொல்லும் கதைகளும் கற்பித்தலின் போது கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மாணவப் பிக்குமார் உள்ளிட்டு சுமார் 70-80 சிங்கள மாணாக்கர், பாடமுடிவில் தமது கருத்துக்களைப் பகிரும் தறுவாயில், மிகுந்த மனவெழுச்சியோடு தமிழ்ச் சமூகம் சார்பான தமது உணர்வுத் தோழமையை வெளிக்காட்டும் வகையில் கருத்துரைத்தனர். ஒவ்வொரு வருடமும் இப்பாடநெறியைக் கற்கும் சிங்கள மாணவர் மத்தியில் பகுதி அளவிலேனும் இத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியனவாக இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் அமைந்துள்ளன என்பது இதன் மூலம் வெளிப்படுகின்றது அல்லவா? ஆகவே, இன்று நம்முன் இருக்கும் பொறுப்பு இப்படியான நன்முயற்சிகளை, பரஸ்பரப் பகிர்வுகளையும், பரந்துபட்ட கலந்துரையாடல்களையும் அதிகரிப்பதும் பரவலாக்குவதுமே அன்றி, நடக்கும் சின்னச் சின்ன அளவிலான முயற்சிகளிலும் குறைகண்டு முணுமுணுப்பதல்ல என்பதே என்னுடைய கருத்து. வடக்கு – கிழக்கிலும் பல்கலைக்கழகங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றிலும்கூட இப்படியான முன்னெடுப்புகளை சக்திவாய்ந்த ரீதியாக முன்னெடுக்கலாமே! அல்லது, சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை உடையோர் தன்னார்வலர்களாக இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கலாம் அல்லவா? எனவே, இது தொடர்பில் எதிர்மறை விமர்சனங்களை விட, இருக்கின்ற இடைவெளிகளை இட்டுநிரப்ப நம்மால் செய்யத்தக்க காத்திரமான முயற்சிகள் எவையெனச் சிந்தித்துச் செயலாற்றுவதே, களத்தில் தீவிரமாகப் பணியாற்றுவதே நம்முன் உள்ள மகத்தான பொறுப்பாகும். என்னளவில் நான் அதையே தொடர்ந்தும் செய்து வருகின்றேன். ஒரு விரிவுரையாளராகப் பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற நீங்கள் பகிடி வதையை எப்படியாகப் பார்க்கின்றீர்கள் ?  இதற்கு சற்று விரிவாகத்தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும். பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணாக்கர் இந்தச் சமூகத்தின், குடும்ப அமைப்பின் அங்கத்தவர்கள் தாமே அல்லாமல், வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்து குதித்த ஏலியன்கள் அல்லர். ஆகவே, நம்முடைய குடும்ப மற்றும் பள்ளிக்கூடச் சூழலும், சமூக வெளியும் வன்முறை நீக்கம் செய்யப்படாமல் இருக்கும்  நிலையில் திடீரென பல்கலைக்கழகத்தில் மட்டும் அஹிம்சைவாதிகளாக மாணாக்கரை எதிர்பார்ப்பது, மந்திரத்தால் மாங்காய் விழவேண்டும் என எதிர்பார்ப்பதைப் போலத்தான். இதன் அர்த்தம் நான் பகடிவதையை ஆதரிக்கின்றேன் என்பதல்ல. பல்கலைக்கழகக் காலத்தில் நான் பகடிவதைக்கு முகங்கொடுத்த ஒருத்தி என்பதோடு, பிற்காலத்தில் அதற்கு எதிராகச் செயற்பட்டவளும்தான். இப்பிரச்சினை தொடர்பில் நாம் அதன் வேர்வரை சற்றுத் தோண்டிப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். இன்று குடும்ப அமைப்புக்குள் இருக்கும் உறவுகளுக்கு இடையில் ‘சகமனித கௌரவம்’ என்பது பொருட்படுத்தத்தக்க ஒன்றாக இருக்கின்றதா?  நம்முடைய வீடுகளில் எவ்வளவு தூரம் கணவனும் மனைவியும், குழந்தைகளும் பிற உறவுகளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிப்பவர்களாக, மற்றவர் விருப்பத்துக்கு, உரிமைக்கு முன்னுரிமை அளிப்பவர்களாக இருக்கிறார்கள்? மூத்தவர்களைப் பார்த்துத் தானே குழந்தைகளின் மன அடித்தளம் கட்டமைகின்றது? நமது பள்ளிக்கூடக் கல்விமுறையும் ட்யூஷன் கலாசாரமும் கல்வியைப் பெரும்பாலும் வெறும் நுகர்பண்டமாக்கி வைத்திருக்கிறதே தவிர, அதை தொழில் வாய்ப்பிற்கான அல்லது கலியாணச் சந்தைக்கான தகைமையாக மட்டும் வடிவமைத்து வைத்திருக்கிறதே தவிர, உள்ளத்தையும் சிந்தனையையும் நடத்தையையும் பண்படுத்தும் வகையில் நமது கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என் சொந்த அனுபவத்தையே சொல்கின்றேன். என் நண்பர் ஒருவர் கல்வியமைச்சின் ஒரு செயற்திட்டத்தை/ ப்ராஜக்ட்டை உரிய வளவாளர்களை இணைத்துக் கொண்டு வடிவமைத்துப் பரிந்துரைகளைக் கொடுத்து உதவுமாறு ஆற்றுப்படுத்தினார். ஒரு குறித்த மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கான வன்முறையற்ற வகுப்பறை உருவாக்கம் தொடர்பான ஒரு செயற்திட்டம் அது. நியாயமான கட்டணமும் கிடைக்கக்கூடிய ப்ராஜெக்ட்தான். ஆனால், அதற்கெனத் தரப்பட்ட கால அவகாசம் வெறும் 3-4 வாரங்கள்தாம். நான் அதனைப் பொறுப்பேற்க முடியாதென வினயமாக மறுத்துவிட்டேன். இதென்ன, ஒரு மரத்தைக் குத்தகை எடுத்து அதன் கனிகளைக் கொய்வது போன்ற ஒன்றா? களநிலைவரம் குறித்த ஆய்வோ தரவு சேகரிப்போ இன்றி, ஒரு மாத காலத்தில் எங்கோ ஒரு ஹோட்டலில் அல்லது கொன்ஃபரன்ஸ் ஹோலில் வாரத்துக்கு ஓர் ஒன்றுகூடல் நடத்தி ஏலவே இருக்கும் திட்ட வரைபை வாசித்து, அதில் சிலபல மாற்றங்களைப் பரிந்துரைத்தால் ஆயிற்றா? ஒரு சமூக மாற்றத்துக்கான மிக முக்கியமான அடித்தளமொன்றை 5-6 பேர் கொண்ட ஒரு குழு ஓர் இடத்தில் கூடி முடிவெடுத்துத் திட்டம் வகுத்துச் செயற்படுத்தி விடுவது எந்தளவு காத்திரமானதாக/ உயிரோட்டமிக்கதாக/ நடைமுறைச் சாத்தியமானதாக அமைய முடியும்? நம்மிடம் உள்ள அனேகமான கல்வித்திட்டங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் இப்படி ஏனோதானோ என்று இருப்பதால் தான் அவற்றைக் காத்திரமாகச் செயற்படுத்த முடிவதில்லை. காரணம், அவை கள யதார்த்தத்தைக் கருத்திற்கொண்டு பெரும்பாலும் வகுக்கப் படுவதில்லை. எல்லாம் எழுத்து ஆவணங்களாக, ரசீதுகளாக, ஃபைல்களாக செட்டில் பண்ணப்பட்டு விட்டால் சரிதான் என்ற எஸ்கேப்பிஸ மனநிலையால் விளைபவை. இதுவே இங்குள்ள அடிப்படைக் குறைபாடு. ஆக, இப்படியான திட்டங்களின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் 12-13 வருட காலத்தில் பண்பட்ட உள-உடல்சார் நடத்தை குறித்துப் போதிய கவனமோ கரிசனையோ செலுத்தப்படாமல் பல்கலைக்கழகம் வரும் ஒரு மாணவர் சமூகத்திடம் திடீரென வன்முறைநீக்க நடத்தையை, சிந்திப்பு முறையை ஏற்படுத்திவிட முடியாது என்பதுதானே யதார்த்தம்? ஆக, முளையில் இருந்தே விஷம் கலந்துவிடாமல் செடிகளை ஆரோக்கியமாய் வளர்க்க எல்லா முயற்சிகளையும் செய்வதன் மூலமே வன்முறை நீக்கம் பெற்ற பல்கலைக்கழகத்தை, சமுதாயத்தை, குடும்பத்தை உருவாக்க முடியும். ஒரு சமூகச் செயற்பாட்டாளர் என்ற வகையில், மேலே நீங்கள் கூறியுள்ள விடயம் தொடர்பில் காத்திரமான செயல்திட்டம் ஒன்றை வரைவதற்கான உங்கள் பரிந்துரை எத்தகையதாக இருக்கும்? ஒரு குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் வன்முறையற்ற வகுப்பறை உருவாக்கம் எனும் எண்ணக்கருவையோ அதையொத்த பிற எண்ணக்கருக்களையோ செயற்படுத்துவதாக இருந்தால் அதற்குப் பல படிமுறைகள் உள்ளன எனக் கருதுகின்றேன். முதலில், குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை, அவற்றின் தன்மை, மாணாக்கர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் வாழ்க்கைச் சூழமைவு, பௌதிக வளப்பகிர்வுநிலை முதலான இன்னோரன்ன அம்சங்கள் குறித்த தரவுகள் நேரடிக் கள ஆய்வின் ஊடாகக் காலத்திற்குக் காலம் திரட்டப்படல் வேண்டும்.  இதற்காக ஆகக் குறைந்தது ஒரு வருட கால அவகாசமேனும் எடுத்துக் கொண்டு, அப்பிராந்திய பாடசாலைகளில் (குறைந்தபட்சம் எழுமாறாகவேனும் பாடசாலைகளைத் தேர்வு செய்து,) நேரடியாகப் போய் அங்குள்ள ஆசிரியர், அதிபர், மாணவர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர், ஊர் முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் முதலான பலதரப்பினரையும் சந்தித்துப் பல்வேறு கலந்துரையாடல்கள் நிகழ்த்தி அப்பிரதேசத்தில் உள்ள மாணாக்கரின் கல்வியைப் பாதிக்கும் அம்சங்கள் குறித்த பின்புலத்தைக் கண்டறிய வேண்டும். எல்லா வகுப்பு மாணாக்கரிடமும் எப்படியான வகுப்பறை இருந்தால் விரும்புவீர்கள்/விரும்ப மாட்டீர்கள் என (பேச்சு/எழுத்து மூல) வினாவெழுப்பித் தனியாகத் தரவு சேகரித்தல் வேண்டும். அவற்றை வகைமைப்படுத்தி, வயதெல்லை அல்லது வகுப்புப் பிரிவு என்ற அடிப்படையில் மூன்று அல்லது நான்கு வகைமைகளாகப் பிரித்துப் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டிவரும். அதன்போது ஒவ்வொரு பிரதேசப் பாடசாலையினதும் வளங்கள், சாத்தியப்பாடுகளையும் தனிப்படக் கவனம் கொள்ள வேண்டியும் இருக்கும். போதிய கால அவகாசத்தையும் கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கோரிநிற்கும் ஒரு பாரிய வேலைத்திட்டம் அது. மேம்போக்காகப் பார்க்கையில், இது நடைமுறைச் சாத்தியம் அற்ற, நிறையச் செலவை வேண்டி நிற்கும் ஒரு பரிந்துரை போலத் தோன்றலாம். உண்மையில், இது நடைமுறைச் சாத்தியமானதுதான். பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் கற்கையை நிறைவு செய்யக் காத்திருக்கும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என்போரைக் குழுக்களாகப் பிரித்து ஒருங்கிணைத்து, உரிய சலுகைக் கொடுப்பனவுகள் மற்றும் அடிப்படை வசதிகளோடு இத்தகைய பிரச்சினைகள் குறித்த பரந்துபட்ட ஆய்வுகளை வருடந்தோறுமோ 3 வருடங்களுக்கு ஒருமுறையோ மேற்கொள்ள ஊக்குவிக்கலாம். இப்படியான ஆய்வுகள் அறவே மேற்கொள்ளபடவில்லை என நான் சொல்ல வரவில்லை. உதிரி உதிரியாக ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அவை போதுமானவை அல்ல. எல்லாப் பிராந்தியங்களிலும் செய்யப்படும் இக்கள ஆய்வுகள் ஒருமுகப்படுத்தப்பட்டு, நெறிப்படுத்தப்படவும், அவ்வப்பிராந்திய நிலைவரத்திற்கு அமைவாகத் திட்டப் பரிந்துரைகளை முன்மொழியவுமாகத் தேசிய மட்டத்தில் கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஒரு குழுவைக் கல்வி அமைச்சு நியமிக்கலாம். அப்பரிந்துரைகள் செயற்படுத்தப்படுவதில் உள்ள சாத்தியப்பாடு, வெற்றிவாய்ந்த தன்மை, தோல்விக்கான காரணங்கள் என்பவற்றை அடுத்தடுத்த வருடங்களில் ஆய்வுக்காகக் களமிறங்கும் குழுக்கள் அடையாளம் கண்டு, புதிய தீர்வுகளை முன்மொழியலாம். ஆக, இது ஒரு தொடர் செயற்பாடாக, தொடர்ச்சியான மேற்பார்வைக்கும் ஆய்வுக்கும் உரிய செயற்பாடாக நடைமுறைப்படுத்தப்படுமாயின் அடுத்த 5-10 வருட காலத்தில் நமது கல்விமுறைமைக்குள் வன்முறையற்ற வகுப்பறை எனும் எண்ணக்கருவோ அது போன்ற பிற எண்ணக்கருக்களோ செயல்வடிவம் பெறுவது சாத்தியப்படலாம் என்பதே என் எதிர்பார்ப்பாகும். நமது நாட்டுக்குத் தேவை, நம்முடைய மண்ணின் இயல்பு, நமது மக்களின் அன்றாட வாழ்வியல் பின்புலம் குறித்த புரிதலோடு வகுக்கப்படும், நடைமுறைச் சாத்தியப்பாடுடைய திட்டப் பரிந்துரைகளே தவிர, பிற நாடுகளில் இருந்து எடுக்கும் இறக்குமதிப் பரிந்துரைகள் அல்ல. பிற நாட்டுத் திட்டங்களை இங்கு அறிமுகப்படுத்துவதைத் தவறென முற்றாக நான் மறுக்கவில்லை. ஆனால், அவற்றைக் கண்மூடித்தனமாகக் கைக்கொள்ள முனையாமல், நம் மண்ணுக்கும் மக்களுக்கும் பொருந்துவனவற்றை மட்டுமே நாம் உள்ளீர்க்க முனைதல் வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடாகும். உதாரணமாக, ‘ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்’ எனும் முறைமை அபிவிருத்தி அடைந்த, தொழினுட்பத்தில் மேம்பட்ட அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பொருந்தலாம். ஆனால், போதிய கழிப்பறை வசதியோ போதுமான வகுப்பறை மற்றும் ஆய்வுகூட வசதியோ அற்ற நூற்றுக்கணக்கான பாடசாலைகளைக் கொண்ட நம் நாட்டுக்கு அம்முறைமை எந்தளவு பொருத்தமானது என்பதை நாம் கட்டாயம் யோசிக்க வேண்டும். எதற்காக முஸ்லிம் மஜ்லிஸ்கள் தம்மை உலமா சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும்? இதில் முதலாவது விஷயம், இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்பது  நாட்டின் ஏனைய இஸ்லாமிய அமைப்புகளை எல்லாம் கட்டுப்படுத்தும் சகல அதிகாரங்களும் கொண்ட ஓர் அமைப்பு அல்ல. ‘அகில இலங்கை’ என்ற அடைமொழியை வைத்து நீங்கள் மிரண்டு விட்டீர்களோ தெரியாது. என்னைக் கேட்டால் அதனை ஒரு ‘வெத்துவேட்டு சபை’ என்றுதான் சொல்வேன். முஸ்லிம் சமூகத்துக்காக அது இதுவரை குறிப்பிட்டுக் கூறத்தக்க எந்த ஓர் உருப்படியான செயல்பாட்டினையும் முன்னெடுக்கவில்லை என்பதே என் அவதானம். இரண்டாவது விஷயம்,  பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் என்பது வருடாவருடம் முஸ்லிம் மாணவர்களில் இருந்து தெரிவாகும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டிணைவாக அமையும் ஒரு முஸ்லிம் மாணவர் அமைப்பு. அதற்குப் பெரும் அதிகாரங்களோ, சமூகத்தைக் கையாளும் அளவுக்குச் செல்வாக்கோ செல்வமோ இல்லை. மாறாக, தன்னளவில் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் நலன் சார்ந்தும் சமூக நலன் சார்ந்தும் வரையறுக்கப்பட்ட அளவில் தன்னால் இயன்ற ஒருசில நலன்புரிச் செயற்பாடுகளை அது மேற்கொண்டு வருகின்றது. ஆனால், கருத்துநிலை சார்ந்து வெளிச்சமூக மனோநிலையை உள்ளபடி பிரதிபலிக்கும் மனிதர்களை – இளையோரைக் கொண்ட ஓர் அமைப்புதான் அதுவும். அந்தவகையில், பல்கலைக்கழகத்துக்கு வெளியே நிலவும் சமய, கலாசார கருத்துநிலைகளைத் தாம் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் அந்த அமைப்பினர் பிரதிபலிப்பார்கள். சற்றுத் தெளிவாகக் கூறுவதானால், வெளிச்சமூகத்தில் பொதுவாக நிலவி வரும் பெண் பிள்ளைகளின் சுயாதீனமான செயற்பாடுகளையும் வெளிக்களப் பங்கேற்புகளையும் கட்டுப்படுத்தும், அவற்றை வரையறுக்கும், சிலபோது தடுக்கும் அதே ஆணாதிக்க மனோபாவக் கூறுகளை உள்வாங்கிய நிலையில் முஸ்லிம் மஜ்லிஸில் அங்கத்தவராக இருக்கும் ஆண் – பெண் மாணவர்களும் செயல்படுகின்றார்கள் (விதிவிலக்குகளும் இருக்கலாம்.). பானையில் இருப்பது அகப்பையில் வருகிறது, அவ்வளவே! ஆக, இதற்கு ஜம்மியத்துல உலமாவின் கட்டுப்பாடுதான் காரணம் என்றெல்லாம் இல்லை. கருத்தியல் தளத்தில் வேண்டுமானால் ஜம்மியத்துல் உலமாவின் பிற்போக்குப் பிரசாரங்களின் தாக்கம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில்  மறைமுகமாகச் செல்வாக்குச் செலுத்தக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. காரணம், நாட்டின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் அவர்களின் பிரசாரகர்கள் தாம் பிரசங்கங்கள் செய்துவருகின்றார்கள். சமூக வலைதளங்களில் நீங்கள்  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை மிகக் கடுமையாக விமர்சித்தும், அதனால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டும் வருகின்றீர்கள். இதன் காரணம் என்ன? இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கு எதிரான என்னுடைய நிலைப்பாட்டுக்குப் பல வலிமையான காரணங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்: 1) இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதிக்காமல் மார்க்கத்தின் பெயரால் அச்சபை செய்துவரும் கேலிக்கூத்துகள். பெருநாள் பிறை கண்ட நிலையிலும் அதை ஏற்க மறுத்து அது அரங்கேற்றிய நாடகங்களுக்கு கடந்த கால உதாரணங்கள் பல உள்ளன. முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது வாஜிப் – கட்டாயமானது என மார்க்கத்தைத் தன் இஷ்டத்துக்குத் திரிபுபடுத்திய அதன் நிலைப்பாடு மிக மலினமானது. முஸ்லிம் பெண்கள் தொடர்பில் கட்டுப்பெட்டித்தனமான கருத்துக்களைப் பரப்பும் அதே ஜம்மியத்துல் உலமா மத்திய கிழக்குக்குப் பணிப்பெண்களாகச் செல்லும் முஸ்லிம் பெண்களின் அவலங்கள் தொடர்பில் கள்ள மௌனம் காக்கும் கயமைத்தனம் மிக அருவருப்பானது. 2) முஸ்லிம் சமூகம் பல்வேறு அச்சுறுத்தல்களை, நெருக்கடிகளை எதிர்கொண்ட சமயத்தில் எல்லாம், ‘தொழுகையில் குனூத் ஓதுங்கள்’ என்று தொடர்ந்தும் எஸ்கேப்பிஸ அரசியல் செய்யும் ஜம்மியத்துல் உலமா, தமிழ் மக்களுக்கு எதிராக ஜெனீவா வரை சென்றது. என்னைப் பொருத்தவரையில் அச்செயற்பாடு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட மகத்தான வரலாற்றுத் துரோகமாகும். இதனை நான் இதற்கு முன்னரும் பலதடவை பதிவு செய்துள்ளேன். 3) பிறை விவகாரத்தின் போது திஹாரியவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சாட்சியமளித்த போது, ‘பெண்களின் சாட்சியத்தை ஏற்க முடியாது’ என மறுத்ததன் மூலம் இலங்கை முஸ்லிம் பெண்களை ‘மனிதநீக்கம்’ செய்த உலமா சபையின் கேடுகெட்ட முல்லாயிஸம் கடும் கண்டனத்துக்கு உரியது. ‘முகத்திரை அணிந்த பெண்களே ஒழுக்கமானவர்கள்’ என்பதாகக் கூறியதன் மூலம் முகம் மூடாத ஏனைய பெண்களை அவமதித்த அதன் ஈனச் செயலும் அவ்வாறானதுதான். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் தொடர்பில் கிட்டத்தட்ட ஒன்பது வருடகால இழுபறி நிலைக்கும், முன்னேற்றகரமானதும் முக்கியமானதுமான சில பரிந்துரைகள் ஏற்கப்படாமல் புறந்தள்ளப்படுவதற்கும் ஜம்மியத்துல் உலமாவின் தலையீடு மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும் என்பதைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, முஸ்லிம் பெண்கள் தொடர்பில் தன்னுடைய இப்பிற்போக்கு முல்லாயிஸ நிலைப்பாடுகளின் பொருட்டு, இலங்கை முஸ்லிம் பெண் சமூகத்திடம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும். இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள் முஸ்லிம் பெண்கள் விடயத்தில்  காத்திரமான பங்களிப்பினை ஆற்றி உள்ளன எனக் கருதுகின்றீர்களா? ஒருபோதும் இல்லை. இலங்கை இஸ்லாமிய இயக்கங்கள் சுமார் ஐம்பது வருடகால வரலாற்றைக் கொண்டவை. ஆனால், அவை இலங்கை முஸ்லிம் பெண்களின் வாழ்வியலில், கல்விச் சாதனைகளில், அரசியல் மற்றும் சமூகக் களப் பங்களிப்புக்களில் குறிப்பிட்டுக் கூறும்படியான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடவில்லை. உண்மையைச் சொல்வதானால், கருத்தியல் ரீதியாக முஸ்லிம் பெண்களைக் குடும்பப் பொறுப்புக்களுக்கு மட்டும் உரியவர்களாக, சிறந்த தாய்மாராக இருந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவோராக மட்டுமே வளர்த்தெடுத்த பெருமை இலங்கை இஸ்லாமிய இயக்கங்களையே சாரும். இலங்கையில் ஏராளம் முஸ்லிம் பெண்கள் மத்ரஸாக்கள் உள்ளன. ஆண்டுதோறும் நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கான மவ்லவியாக்கள் வெளியாகின்றனர். இவர்களில் இஸ்லாமிய ஷரீஆ துறைகளில் கலாநிதிகளாக எத்தனை பேர் உருவாகி உள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் பொதுச் சமூகத்தளத்தில் பணியாற்றிக் கொண்டுள்ளனர்? இலங்கையில் அதிகளவான முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். ஆனால், எத்தனை முஸ்லிம் பெண் பேராசிரியைகள், கலாநிதிகள் இதுவரை உருவாகி இருக்கிறார்கள்? தமது உயர்கல்விக் காலத்தில் பன்முகத் திறமைகளைக் காட்டிய அனேகமான முஸ்லிம் பெண்கள் திருமணமானதும் சமூகத் தளத்தில் இருந்தே காணாமல், முகவரி அற்றவர்களாகப் போய்விடுகின்றனர். ஏன் இந்த நிலை?  ஒரு சமூகம் என்ற வகையில், இக்கேள்விகளுக்கான விடைகளைக் கண்டடைவது முக்கியமாகின்றது. இன்று சமூகக் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம் பெண் ஆளுமைகள் இஸ்லாமிய இயக்கச் சூழலுக்கு வெளியில் இருந்து சுயாதீனமான குடும்பப் பின்புலங்களில் இருந்து உருவானவர்களாகவே உள்ளனர். விதிவிலக்குகள் மிகவும் அரிது.  ஜம்மியத்துல் உலமாவிலோ, இஸ்லாமிய இயக்கங்களின் உயர் பீடங்களிலோ பெண்களுக்கு அங்கத்துவமே இல்லை. அவ்வளவு ஏன், பள்ளிவாசல்களில் பெண்களுக்கு சம இடம் இல்லை. பொதுவான பள்ளிவாசலில் ஒருபுறமாகப் பெரியதொரு சுவரெழுப்பித் தனியான ஒரு கட்டிடம் பெண்களுக்கான தொழுமிடமாக ஒதுக்கப்பட்டு உள்ளது. காலி  கோட்டையில் உள்ள அழகான பிரமாண்டமான பள்ளிவாசலில் கக்கூசுக்குப் பக்கத்தில் ஓர் அறை பெண்களின் தொழுகைக்காக ஒதுக்கப்பட்டு உள்ள அவலத்தைக் கண்டு எங்கள் உள்ளம் கொதித்துப் போனது. உண்மையில், நபிகளாரின் காலத்தில் இப்படிப் பெண்கள் தனிக்கட்டிடங்களில் தொழவில்லை. ஒரே பள்ளிவாசலில் தொழுதார்கள். பிற்காலத்தில் வந்த ஆணாதிக்க மனநிலையாளர்கள் கொண்டு வந்த மாற்றமே இன்று பெண்களுக்குத் தொழக்கூட சம இடமற்றுப்போகக் காரணமாயிற்று. இந்த அவல நிலையை மாற்ற இஸ்லாமிய இயக்கங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக, கருத்தியல் தளத்திலும் நடைமுறை வாழ்விலும் முஸ்லிம் பெண்களை இரண்டாம் பட்சமானவர்களாக, சமூக வெளிக்கு அப்பாற்பட்டவர்களாகத் தொடர்ந்தும் வைத்திருப்பதிலேயே அவை கவனம் செலுத்தி வருகின்றன. நான் இப்படியான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வலுவான காரணங்கள் பல உள்ளன. அதாவது, இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை நிலைநிறுத்துவதில் நபிகளாரின் தோழியருக்குப் பெரும் பங்கு இருந்தது. முஹம்மது நபியின் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பெண்களின் சமூகப் புழங்குவெளி வெகு இயல்பான ஒன்றாக இருந்தது. அவர்களின் பன்முகமான சமூகப் பங்களிப்பு வெளிப்படையானதாகவும் இருந்தது. இந்த வரலாறுகள் நம்முடைய முஸ்லிம் இயக்கங்களில் ஆழமாகவும் விரிவாகவும் பரவலாகவும் கற்பிக்கப்படாமல்/ பிரசாரப்படுத்தப்படாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருவதன் சமூக விளைவையே நாம் இன்று சமகாலச் சமூகப் பரப்பில் காண்கின்றோம். இலங்கையின் எந்தவோர் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரும் பொதுச் சமூக மேடைகளில் தமது மனைவியை உடனழைத்துவந்து தமக்குச் சமமாக அமரவைத்த வரலாறு அறவே இல்லை எனலாம். ஆனால், அவ்வியக்கங்களின் தொண்டர் அடிப்பொடிகள் துருக்கிய அதிபர் அர்தூகான் தன் துணைவியாருடன் நின்று பொதுவெளியில் கையசைக்கும் படத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தமது முற்போக்கை விளம்பரப்படுத்துவார்கள். என்னவொரு வேடிக்கை! அண்மையில், இலங்கை இஸ்லாமிய இயக்கம் ஒன்று யெமன் நாட்டு அரசியல் போராளியும் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற சாதனையாளருமான தவக்குல் கர்மானைத் தனது பெண்கள் மத்ரஸா ஒன்றின் பட்டமளிப்பு விழாவுக்குப் பிரதம அதிதியாக அழைத்து இருந்தது. முரணகை என்னவெனில், அந்த இஸ்லாமிய இயக்கம் அப்பெண்கள் மத்ரஸாவுக்கான ‘மோட்டோ’வை – ‘சிறந்த தாய்மாரை உருவாக்குதல்’ என்று வடிவமைத்திருந்ததுதான். ஏன், ‘சிறந்த முன்னோடி முஸ்லிம் பெண் ஆளுமையை உருவாக்குதல்’ என அவர்களால் அதனை வடிவமைக்க முடியவில்லை? தாய்மை அடைந்து தன் குழந்தையைச் சிறப்பாக வளர்ப்பது மட்டும்தானா ஒரு பெண்ணின் வாழ்வின் இறுதி அடைவும் சாதனையுமாக அமையும்? அதற்கும் அப்பால் அவளால் சாதிக்க முடியாதா? இவர்களால் ஏன் உள்நாட்டில் ஒரு தவக்குல் கர்மானை, ஒரு யுஸ்ரா கன்னூஷியை இதுவரை உருவாக்க முடியாமல் போனது? இந்த இஸ்லாமிய இயக்கங்களில் பெண்கள் பிரிவுகளும் இருக்கவே செய்கின்றன. ஆனால், முக்கியமான முடிவுகளை எடுக்கும் நிலையில் அவர்கள் இல்லை. இவர்களின் பெண்கள் குறித்த பிற்போக்குக் கருத்தியலை வெளிக்காட்டும் இன்னோர் உதாரணம், சுமார் ஒன்பது வருடகால அல்லாட்டத்தின் பின்னர் அண்மையில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தப் பரிந்துரைகளில், பெண் காதி நியமனம் என்ற விடயத்தில், அதனை ஆதரித்து உஸ்தாத் மன்சூர் அவர்களைத் தவிர வேறு எந்த ஓர் இஸ்லாமிய இயக்கத் தலைவரும் பகிரங்கமாகவும் அழுத்தமாகவும் கருத்துரைக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டலாம். இத்தகைய பாரபட்சநிலை நிச்சயம் மாற்றப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், கடந்த ஐம்பது வருட காலத்தில் இலங்கை இஸ்லாமிய இயக்கங்கள் இலங்கை முஸ்லிம் பெண்களின் சமூக வகிபாகத்தை மேம்படுத்துவதில் படுதோல்வி அடைந்துள்ளன என்று மிக அழுத்தமாகக் கூறுவதில் எனக்கு எந்தவிதமான தயக்கங்களும் இல்லை. இது குறித்து அவை தம்மைத்தாமே மீள்பரிசீலனைக்கு உட்படுத்திக் கொள்வது காலத்தின் இன்றியமையாத் தேவையாகும். முஸ்லிம் பெண்கள் அதிகம் பேர் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள் என்கிறீர்கள். அப்படியாயின், சமூகத்தில் அவர்களின் வகிபாகம் மேம்பட்டு இருக்கிறதா? இக்கேள்விக்கான பதிலை மேலே உள்ள ஒரு கேள்வியில் ஓரளவு சொல்லி இருப்பதாகவே நம்புகின்றேன். இன்னும் சற்று விரிவாகச் சொல்வதானால், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் சமூக வகிபாகம் இன்னும் மேம்பட வேண்டிய தேவை உள்ளது என்பதே உண்மை. தமக்கான இடத்தை யாராவது தங்கத் தட்டில் வைத்துக் கொண்டு வந்து தருவார்கள் என்ற போலியான நம்பிக்கையில் காலம் தள்ளுவதால் நிலைமை ஒருபோதும் மாறாது என்ற புரிதலும் விழிப்புணர்வும் பெண்களுக்கே வராதவரை காத்திரமான சமூக மாற்றம் வருவது இன்னுமின்னும் காலதாமதமாகும். உண்மையில் தத்தமது சுயம் பற்றிய பிரக்ஞை உணர்வும் விழிப்புணர்வும் பெண்கள் மத்தியில் பரவலாக வேண்டிய தேவை உள்ளது. இன்னொரு வகையில் சொல்வதானால், இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் எதைச் சொன்னாலும் பயபக்தியோடு மறுகேள்வியோ ஆய்வோ இன்றி அப்படியே நம்பிப் பின்பற்றும் மடத்தனத்தில் இருந்து பெண்கள்  முதலில் மீளவேண்டும். ஆழ்ந்த/ பரந்த சமய மற்றும் பிறதுறை சார்ந்த வாசிப்பும் தேடலும் சிந்தனையுமே அகஞ்சார்ந்த ஆளுமையைச் செப்பனிட்டு வளர்க்கும். அப்படி இல்லாதபட்சத்தில் சுயசிந்தனையற்ற வெறும் கிளிப்பிள்ளைகளாகவும், பொம்மைகளாகவுமே தொடர்ந்தும் வாழ வேண்டி இருக்கும். உதாரணத்துக்கு சமூகவலைதளங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். முஸ்லிம் பெண்களில் அனேகருக்கு சொந்தப் பெயரில்லை. ஒன்றில் இன்னாருடைய மகள், அல்லது இன்னாரின் தாய் என்ற அடைமொழிக்குள் அவர்களில் அனேகர் மறைந்துதான் இருக்கிறார்கள். தமக்கென்று ஒரு முகம் இருந்தும் அதனைக் காட்டும் துணிவு அவர்களிடம் அறவே இல்லை. பொதுவெளியில் ஒரு கருத்தை வெளிப்படையாக எழுதவே பெரும் தயக்கமும் மனத்தடையும் அவர்களுக்கு இருக்கின்றன. இந்தளவு தன்னம்பிக்கையோ சமூகத்தை எதிர்கொள்ளும் துணிவோ அற்றவர்களாக முஸ்லிம் பெண்கள் இருப்பதற்கான சமூகக் காரணங்களை பெண்களும் இனங்கண்டு களைய முன்வர வேண்டும். எந்தவித சுயபிரக்ஞை உணர்வும் விழிப்புணர்வும் அற்ற நிலையில், ஆணாதிக்கக் கருத்துநிலைகளையே பெண்களும் காவித்திரிவதும் பரப்புவதும் நிச்சயம் அவமானகரமானது என்பதை அவர்கள் உணரவேண்டும். குடும்பக் கடமைகளுக்கு அப்பால் தமக்கென்றும் நியாயமான விருப்பு வெறுப்புகள், கருத்துவெளிப்பாடுகள், ஆரோக்கியமான பொழுதுபோக்குகள், வாசிப்பு – தேடல் – கலந்துரையாடல் இன்னபிற அம்சங்களுக்கான ‘வெளி’யினைப் பயன்படுத்துவதும் பெற்றுக்கொள்வதும் இயல்பான அடிப்படை மனித உரிமை என்ற விழிப்புணர்வு பெண்களுக்கு அவசியம். இவற்றை எல்லாம் பேசுவதாலோ, அடையப் பெறுவதாலோ குடும்பக் கட்டமைப்பு உடையப் போவதில்லை; அப்படி உடையவேண்டிய தேவையும் இல்லை என்ற அடிப்படை நம்பிக்கையும், அப்படியான போலிப் பயமுறுத்தல்கள், மூளைச்சலவைகளில் இருந்து மீள்வதற்கான புத்திக்கூர்மையும் பெண்களுக்கு இன்றியமையாதவை. இவ்விழிப்புணர்வினைச் சமூகமயப்படுத்துவது காலத்தின் இன்றியமையாத தேவையாக உள்ளது. ஆக, அடுத்தவர் நமக்கான களங்களை, வெளிகளை உருவாக்கித் தரும்வரை காத்துக்கொண்டு இருக்காமல், பெண்கள் தமது அறிவையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக் கொண்டு, அவற்றைச் சமூகமயப்படுத்துவதற்கான வெளியைத் தாமே கட்டமைத்துக்கொள்ள முன்வர வேண்டும். தம்மைச் சுற்றி இருப்போரையும், குறிப்பாக கணவர் உள்ளிட்ட குடும்ப உறவுகளை  அதற்கமைவான மனச்சாய்வுடையோராக மாற்றும் முயற்சியில் அயராது ஈடுபடுதல் வேண்டும்.  தொடர்ச்சியான சுமுகமான உரையாடல் இதனைச் சாத்தியப்படுத்தும் சக்திவாய்ந்த வழிமுறையாக அமையமுடியும் என்றே நம்புகின்றேன். அப்படியானால் மார்க்கம் எப்படியாகப் பெண்ணைப் பார்க்கின்றது ? பொதுவாக, எல்லாச் சமயங்களும் பெண்களை இரண்டாம் பட்சமாகவே கருதுகிறது/நடத்துகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டின் அடிப்படையில் இக்கேள்வியை எழுப்பி உள்ளீர்கள் எனக் எண்ணுகிறேன். இஸ்லாமிய மார்க்கம் குறித்துப் பிரத்தியேகமாகத்தான் இக்கேள்வியை முன்வைக்கின்றீர்கள் எனில், உங்கள் கேள்வியில் ஒரு சிறிய மாற்றத்தை நான் கோருவேன். அதாவது, ‘இஸ்லாம் எப்படி மனிதரைப் பார்க்கிறது?’ என்று கேட்பதே மிகப் பொருத்தமாக இருக்கும் என்பது என் நிலைப்பாடு. காரணம், அல்குர்ஆன், பெரும்பாலும் ‘ யா அய்யுஹன்னாஸ்!’ – மனிதர்களே! என்றும், ‘யா அய்யுஹல்லதீன ஆமனூ!’ – விசுவாசம் கொண்டவர்களே!’ என்றும் விளித்து, இருபாலாருக்கும் பொதுவாகவே உபதேசங்களை, வழிகாட்டல்களை முன்வைக்கிறது. இஸ்லாம், ‘ஆணோ பெண்ணோ, நீங்கள் ஒருவர் மற்றவரில் உள்ளவர்தாம்’ என்றும், கணவன் – மனைவி உறவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும், அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்’ என்ற பிரயோகத்தின் மூலமும் சமத்துவத்தையே வலியுறுத்துகிறது. முஹம்மது நபிகளாரின் காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் பள்ளிவாசலுக்குச் செல்வோராக, கலந்துரையாடல்களில்/ சமூக விவகாரங்களில் பங்கேற்பவர்களாக, ஏன் போர்க்களங்களில்கூட சரிக்குச் சரியாக நிற்கக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள். துயரம் என்னவெனில், பிற்காலத்தில் இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட திரிபுபடுத்தல்களும் ஆணாதிக்க மனோநிலைக் கூறுகளின் உள்வாங்கல்களும் முஸ்லிம் பெண்களைச் சமூகக் களத்தில் இருந்து புறமொதுக்குவதற்குக் காரணங்களாக அமைந்துவிட்டன. முஸ்லிம் சமூகத்தின் இந்த வங்குரோத்து நிலையால் இஸ்லாத்தின் மானம் விலைபோகிறது, அவ்வளவுதான். தலிபான்கள் பெண்களைக் கையாண்டது போல அல்லது ஐ. எஸ். அமைப்பு பெண்களைக் கையாண்டது போல அல்லது போகோஹராம் அமைப்பு கையாள்வது போல பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசும் பெண்களைக் கையாள முனைகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன ? பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்கள் முஸ்லிம் பெண்களை நடத்தும் விதம் குறித்த அண்மைக்கால சர்ச்சைகளின் அடியாய் இக்கேள்வியை எழுப்பி உள்ளீர்கள் என நினைக்கின்றேன். முதலில் இந்த ஒப்பீடு அடிப்படையில் தவறான ஒன்றாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விழைகின்றேன். ஏலவே சொன்னது போல பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் என்பது ஓர் அதிகார அமைப்பல்ல. அதனிடம் ஆயுதங்களோ பணபலமோ அதிகார பலமோ இல்லை. பொதுமக்களின் நன்கொடை நிதியில் இயங்கும் ஒரு சாதாரண மாணவர் அமைப்பு. பல்கலைக்கழகத்துக்கு வெளியில் உள்ள முஸ்லிம் சமூகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு சிறு குழுவினரின் அமைப்பு. பெண்கள் தொடர்பில் இஸ்லாத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்டுப் போஷிக்கப்பட்டு வரும் முஸ்லிம் பொதுச் சமூகத்தின் மனநிலையையும் நிலைப்பாட்டையுமே அந்த அமைப்பைச் சார்ந்தோரும் தம்மளவில் பிரதிபலிக்கின்றனர்.  சுரைக்காய் விதையைத் தூவினால் அவரையா முளைக்கும்? ஆகவே, சமூகத்தளத்தில், குறிப்பாக குடும்பங்களில் ஆண் – பெண் சமத்துவம், உரிமைகள் தொடர்பில் சாதகமான மனநிலையும் காத்திரமான நிலைப்பாடும் கட்டியெழுப்பப்படும் வரையில் இந்நிலை மாறாது. வீட்டில் இருந்தும் பள்ளிக்கூடங்களில் இருந்தும் இது முன்னெடுக்கப்படல் வேண்டும். ஆண்கள் பாடசாலை, மகளிர் பாடசாலை என்ற பிரிப்புமுறையைப் படிப்படியாக நீக்கிவிட்டு, கலவன் பாடசாலை முறைமை ஊக்குவிக்கப் படுவதோடு, நெறிப்படுத்தப்பட்ட முறையில்  பாலியல் கல்வி வழங்கப்படுமிடத்து சாதகமான மனநிலை மாற்றத்தை, நடத்தைக் கோலத்தை நிச்சயமாகக் கட்டியெழுப்பலாம் என நம்புகின்றேன். பெண்கள் தொடர்பாக இறுக்கமான கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்குள் நின்று கொண்டு பெண்ணியம் பேசுவது சாத்தியமானதொன்றா? ஆம் என்றால் எப்படியாக ? இதற்கான விடை ஓரளவுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டு விட்டதாகவே நினைக்கிறேன். என்னைக் கேட்டால், ஒரு வெறும் ஜடமாகக் கருதப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்ட பெண்ணுக்கு கல்வி கற்கும் உரிமை, சொத்துரிமை, கருத்துரிமை, கணவனைத் தேர்வு செய்யும் உரிமை, விவாகரத்து-மறுமண உரிமை என்பவற்றை எல்லாம்  1400 வருடங்களுக்கு முன்னரே வழங்கிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்தாம் வரலாற்றில் முதலாவது பெண்ணியவாதி என்று சொல்வேன். ஃபர்தாவுடைய ஆடையோடு பெண்ணியம் பேசுவதும் பெண்ணியச் செயற்பாட்டாளராக இருப்பதும் சாத்தியமானதா என்ற உங்கள் கேள்விக்கான என் சுருக்கமான பதில், ‘ஆம். நானே அதற்குச் சான்றாக இருக்கிறேன்’, என்பதுதான். பொதுவெளியில் நான் உங்கள் எழுத்துக்களை அல்லது கருத்துக்களை அவதானித்தவகையில் உங்களுடனான விவாதங்கள் உச்சநிலையை அடையும்பொழுது மார்க்க சிந்தனைகளுக்குள் உங்கள் கருத்துக்களை சுருக்குவது எதற்காக ?  ஹாஹாஹா… உங்கள் புரிதலின் கோணத்தில் நிகழ்ந்துவிட்ட சிறு தவறு என்றே இதைக் குறிப்பிட விழைகின்றேன். பொதுவெளியில் ஏற்படும் குறித்த சர்ச்சைகளின் அடிச்சரடு, இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் அமைந்த பிற்போக்குத்தனங்களும், பெண்ணொடுக்குமுறையும் என்ற அடிப்படையில், அதற்கு மார்க்கத்தின் அடிப்படைகளையே கருவியாகக் கொண்டு எதிர்கொள்வது எவ்விதம் ‘சுருக்கமாக’ அல்லது ‘ஒடுங்குதலாக’ அமைய முடியும்? நோய்க்கு உரிய மருந்தைத்தானே கொடுக்க முடியும்? எதன் பொருட்டு அல்லது எதன் பெயரால் சர்ச்சையும் விவாதங்களும் மேலெழுந்தனவோ, அதனை வலுவாகப் பற்றி முன்னிறுத்தி, என் தரப்பை வலிமைப்படுத்துவது தானே அறிவுடைமை? யார் என்ன சொன்னாலும், அடிப்படையில் நான் ஒரு முஸ்லிம் பெண். என் மார்க்கத்தை நான் மிக ஆழமாக நேசிக்கிறேன், அதன் நிலைப்பாடுகள் சரியானவை, நியாயமானவை என்று உறுதியாக நம்புகின்றேன். ஆக, நான் சரியென நம்புவதை முன்வைத்துத்தான் நான் பேசமுடியும், இல்லையா? வஹாபிஸத்தின் வழியாக வந்த அடிப்படை வாதத்தை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள்? இது இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் உச்சம் பெறுவதற்கான அகத்தூண்டல்கள்தான் என்ன ? இலங்கையைப் பொருத்தவரையில் வஹ்ஹாபிஸம் 1948 களிலேயே வந்துட்டது. என்றாலும், அக்காலத்தில் பெருமளவு செல்வாக்குப் பெறவில்லை. காலத்துக்குக் காலம் வெவ்வேறான சிந்தனைப் போக்குகள், சீர்திருத்த அமைப்புகள் தோற்றம் பெறுவது உலக வழமைதான்.  ஆசிய நாடுகளில் வஹ்ஹாபிஸம் பரவலடைவதில் சவூதியும் அமெரிக்காவும் வழங்கிய  நிதியுதவிகள் முக்கிய பங்கு வகித்தன எனலாம். எளிமையாகச் சொல்வதானால், உலகமயமாதலும் தொடர்பாடல் தொழினுட்ப வளர்ச்சியும் இதன் பரவலுக்கு முக்கிய கருவிகளாக அமைந்தன. என்றாலும், உலக முஸ்லிம் சனத்தொகையில் வஹ்ஹாபிய சிந்தனை சிறுபான்மையினரையே உள்ளீர்த்துள்ளது எனலாம். இலங்கை போன்ற நாடுகளில் வஹ்ஹாபிஸம் உச்சம் பெறவில்லை. சிலவேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை வைத்து நீங்கள்  அது இங்கே உச்சம் பெற்றிருப்பதாகக் கருதுவதாக இருந்தால், அது சரியான அவதானம் அல்ல என்றே நான் கூறுவேன். காரணம், இதுபோன்ற அடிப்படைவாதிகள் எல்லாச் சமூகங்களிலும் சமயங்களிலும் சொற்பமானவர்களாகவே இருந்து வருகின்றனர்.  அதற்காக, இலங்கை போன்ற நாடுகளில் வஹ்ஹாபிஸத்தின் தாக்கம் அறவே இல்லை என்று சொல்லிவிடவும் முடியாது. வஹ்ஹாபிஸத்தின் வருகையால் பரப்பப்பட்ட மதத்தூய்மைவாதம் முஸ்லிம் சமூகத்தின் எளிய இயல்பு வாழ்வினை சீர்குலைப்பதில் அல்லது புரட்டிப் போடுவதில் பெரும் பங்கு வகித்து இருப்பதை நாம் நிச்சயம் கவனம் கொள்ளவேண்டும். உதாரணமாகச் சொல்வதானால்,, சமயத் தூய்மையாக்கம் என்ற பெயரில் பாரம்பரியமான, வரலாற்றுப் பழமை வாய்ந்த ஸியாரங்களை – முன்னோர்களின்/சமயப் பெரியோர்களின் மண்ணறைகளை இடித்துத் தள்ளி அழிக்கும் அவர்களின் நாசகார வேலையால், முஸ்லிம் மக்களின் பூர்வீக வாழ்வுக்கான சாட்சியாக இருந்த வரலாற்றுத் தடங்கள், தொல்சான்றுகள் முட்டாள்தனமாக அழிக்கப்பட்டன. நாம் வரலாறு அற்ற குடிகளாக மாற இவர்களே வழியமைப்பவர்களாக இருந்தார்கள். மேலும், ஊர்மக்கள் பேதங்கள்/ ஏற்றத்தாழ்வுகள் அற்று வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் ஒன்றுகூடி உணவுசமைத்து, இனிய அரபுப் பாடல்களைப் பாடி, சமைத்த உணவை எல்லோருமாக/எல்லோருக்குமாகப் பகிர்ந்துண்ணும் பாரம்பரிய வழமைகள் முஸ்லிம் சமூகத்தில் நிலவின. மவ்லூது, கந்தூரி என்ற பெயர்களில் இந்த எளிய மக்கள் கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன. இவை வழிகேடு என்ற பெயரில் இவர்களால் இல்லாதொழிக்கப்பட்டன. இதனால், மக்கள் ஒரு சமூகமாகக் கூடிக் கலந்து மகிழும், தமது அன்றாட வாழ்வின் இறுக்கங்களைத் தளர்த்துமுகமாக வாய்விட்டு இறைதுதிகூறும், நபிகளாரை வாழ்த்தும் பாடல்களாகப் பாடும் மரபு வேரறுக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய வரிகள் அப்பாடல்களில் இருக்குமாயின், அவற்றை மட்டும் நீக்கி ஒரு மறுசீரமைப்பை மேற்கொள்ளாமல், முற்றாக அவற்றைப் புறமொதுக்கியதன் மூலம் மிக இறுக்கமான மனக்கட்டமைப்புடைய மக்கள் கூட்டமொன்று உருவாகவும், இயல்பான சமூக ஊடாட்டம் பாதிக்கப்படவும் இவர்கள் காரணமானார்கள். அதுமட்டுமல்ல. இசை ஹராம், கலைகள் ஹறாம் என்று எதற்கெடுத்தாலும் ஹறாம் – தடுக்கப்பட்டது, பித்அத் – வழிகேடு என்று பட்டியல்படுத்தி அதனைத் தீவிரமாகப் பரப்புரையும் செய்து வந்தமையால், மெல்லுணர்வுகளைப் பறிகொடுத்த, ரசனை உணர்வு மழுங்கிப் போன, கலைகளில் இருந்து தூரமாகிப்போன, மிக இறுக்கமான மன அமைப்புடைய ஒரு மக்கள் சமூகத்தின் உருவாக்கத்துக்கு இவர்கள் காரணமாகி விட்டார்கள். இன்றும்கூட இசை ஹராம் என்ற ஒற்றைத்தன்மையான – தட்டையான ஃபத்வாக்களால் மக்கள் வெளிப்படையாக ஒரு பாடலை ரசிப்பதையும் தவறாகக் கருதி, ஒருவகைக் குற்றவுணர்வுணர்வுடனே அதனை ரசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  எனவே, பிற சமூகங்களில் இருந்து முஸ்லிம் சமூகம் தனிமைப்பட்டுப் போவதற்கும், அவர்கள் இயல்பான வாழ்வொழுங்குக்கு அப்பாற்பட்ட ரசனை உணர்வற்ற ஏலியன்களாகச் சக சமூகத்தவர்களால் அடையாளப்படுத்தப்படவும் புரிந்துகொள்ளப்படவும் வஹ்ஹாபியக் கருத்துநிலையின் தாக்கம் பெரிதும் காரணமாயிற்று என்றால், அது மிகையில்லை. என்னைக் கேட்டால், மற்றமைகளை மதிக்கத் தெரியாத, பன்மைத்துவமான கருத்துப் போக்குகளை ஆதரிக்காத, மிகக் கட்டிறுக்கமான ஒற்றைத் தன்மை உடையது வஹ்ஹாபிஸம். எனவே, சாதாரண எளிய மக்களின் இயல்பான இனிய வாழ்வைச் சீர்குலைக்கும் வகையில், நம் சமூகத்தைப் பீடித்த ஒரு புற்றுநோயாகவே வஹாபிஸத்தை நான் கருதுகின்றேன். இது என் தனிப்பட்ட ஆணித்தரமான கருத்தாகும். மனித நாகரிகத்தின் விளைவாக மானங்காக்க உருவாக்கப்பட்ட ஆடையானது, மதம் கலாசாரம் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுவதும் அதனை முக்கியமாக பெண்களை அணியுமாறு வற்புறுத்தப்படுவதும் எதற்காக ? பொதுவாக, ஆடை அணிதலை மனித நாகரிகத்தின் ஒரு வளர்ச்சிப் படிநிலையாகவே நாம் நோக்குகின்றோம். மனிதர்கள் அனைவரும் ஒருபடித்தான மன அமைப்புக் கொண்டவர்கள் அல்லர். நாம் மற்றவரில் இருந்து தனித்துவமானவர்களாய் இருத்தல் வேண்டும் என்ற மனிதக் கூறுணர்வு இயல்பானது. அந்த வகையில், ஒவ்வொரு சமூகக் குழுமமும் தமக்கேற்ற ஆடை முறைமைகளைத் தேர்வு செய்துள்ளது. அவை கால மாற்றத்துக்கு அமைவாக மாறியும் வருகின்றன. குறிப்பாக, பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்படும் சிறுபான்மைச் சமூகங்கள், விளிம்புநிலைச் சமூகங்களுக்குத் தத்தமது தனித்துவ சமூக, கலாசார, பாரம்பரிய அடையாளக் கூறுகளைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற பதற்றமும் கரிசனையும் ஒப்பீட்டளவில் சற்று மிகைத்துக் காணப்படுவது உலக இயற்கை. இதனை அடக்குமுறைகளுக்கோ, பெரும்பான்மைவாதத்துக்கோ எதிரான ஓர் எதிருணர்வு அல்லது பதிலுணர்வு என்று சுட்டுவதும் சிலபோது சரியாக இருக்கலாம். முஸ்லிம் சமூகம் என்று மட்டுமில்லை. பொதுவாக நம்முடைய ஆசிய நாட்டுச் சமூகங்களில் பெண்களே கலாசாரக் காவிகளாக, இனத்துவ அடையாளக் காவிகளாக, ஒழுக்கத்தின் அளவுகோல்களாகக் கருதப்பட்டும் நடத்தப்பட்டும் வருகின்றனர். சரி, பிழைக்கு அப்பால் இதுவே நம் கண் முன் உள்ள யதார்த்தம். மனித நாகரிகம் மேம்பட்டுள்ளதாக நம்பும் ஒரு காலகட்டத்தில், ஒருவரின் இயல்பான விருப்பத்துக்கு மாறான வற்புறுத்தல் என்பது நிச்சயம் வன்முறையாகவும் அத்துமீறலாகவும் அநாகரிகமாகவுமே கருதப்படல் வேண்டும். அந்தவகையில், ஒரு பெண்ணிடம் இன்ன ஆடையைத்தான் அணிதல் வேண்டும் என வற்புறுத்துவது எப்படி வன்முறையோ, அதேபோல இன்ன ஆடையை அணியக் கூடாது என்று வற்புறுத்துவதும்கூட வன்முறைதான். இங்கு நான் ஒரு முரணகையான/ பாரபட்சமான நடைமுறையை மிகுந்த மன வருத்தத்தோடு சுட்டிக்காட்ட விழைகின்றேன். அதாவது, முஸ்லிம் பெண்ணின் ஃபர்தாவுடைய ஆடையை அவளுக்கு எதிரான அடக்குமுறையாகச் சுட்டும் மேற்குலக நாடுகளில் சில தம் நாட்டு முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணியக்கூடாது என்று சட்டரீதியாகத் தடை விதித்துள்ளன. இது ஃபர்தாவை சுயதேர்வாக அணிய விழையும் பெண்களின் விருப்பத்துக்கு எதிரான அடக்குமுறையாகவும் வன்முறையாகவும் கருதப்படுவதில்லையே, ஏன்? இதற்குப் பெயர் சுதந்திரமோ மனித உரிமைபேணலோ இல்லை. அது, ஒரு குறித்த சமூகத்துக்கு எதிரான காழ்ப்புணர்வும் பகையுணர்வும் அடக்குமுறையுமே அன்றி வேறில்லை. இவ்வளவு ஏன், அனேகமான பல்கலைக்கழகப் பெண் விரிவுரையாளர்கள் தமது விரிவுரைகளுக்கு சேலை அணிந்துதான் செல்லவேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகின்றமை உங்களுக்குத் தெரியுமா? ஆண்களுக்கு இத்தகைய நிர்ப்பந்தங்கள் பெரும்பாலும் இல்லை. ஆக, சுதந்திர சிந்தனையை வளர்க்கக்கூடிய, தனிமனித சுதந்திரத்தை அதிகமும் பேணத்தக்க ஒரு கேந்திர நிலையமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகச் சூழலில் உள்ள கல்வியாளராகவே இருந்தாலும், பெண்கள் என்று வரும்போது இதுதான் நிலைமை என்றால், ஏனைய இடங்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? மறுதலையாக, மனித உரிமைக் காப்பாளர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் மேலைத்தேய நாட்டு நிறுவனங்களில் குறித்த சில பணிகளுக்குப் பெண்கள் குட்டைப் பாவாடை அணிந்து வருவது கட்டாயமாக்கப் பட்டுள்ளமையையும் நாம் இதனோடு ஒப்புநோக்கலாம். ஆக, இவை வெவ்வேறு வகையில் பெண்களின் ஆடைசார் தெரிவுச் சுதந்திரத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறையும் அத்துமீறலுமே ஆகும். ஒரு பெண்ணின் ஆடையைத் தனிநபரோ சமூகமோ நிறுவனமோ அரசாங்கமோ தீர்மானிக்க வேண்டிய தேவை இல்லை; அப்படித் தீர்மானிக்கவும் கூடாது. ஆடையை அணிபவரே அதனைத் தீர்மானிக்க மிகுந்த உரிமையும் தகுதியும் உடையவராகின்றார் என்பதே என்னுடைய நிலைப்பாடு. அபாயா இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பேராயுதம் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இல்லையென்றால் எவ்வாறாக?  நிச்சயமாக இல்லை. காலத்துக்குக் காலம் ஏற்பட்டுவரும் சமூக மாற்றத்தின் அடியாக வந்த மாற்றங்களில் அபாயா அணியும் வழக்கமும் ஒன்றாயிற்று. இலங்கையை எடுத்துக் கொண்டால், எல்லாச் சமூகத்துப் பெண்களும் இன்று ஒரே வகையான பாரம்பரிய ஆடைகளை அணிவதில்லை. இலங்கை முஸ்லிம் சமூகத்தினதும் அனைத்துப் பெண்களும் அபாயாவை மட்டுமே அணிவதும் இல்லை. சேலை, ஷல்வார், டெனிம் டீஷர்ட், கஃப்ட்டான் , மெக்ஸி, பாவாடை சட்டை முதலான பல்வேறு ஆடைகளையும் அணியவே செய்கின்றனர். ஒப்பீட்டளவில் கறுப்பு அபாயாக்களின் சமூகப் புழக்கமே இத்தகைய ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி இருக்கக்கூடும். தனிப்பட்ட முறையில் கறுப்பு அபாயாவையும் ஒரு வண்ண ஆடையாக அணிவதை விடுத்து கறுப்பை மட்டுமே அணிவதை நான் விரும்பமாட்டேன். ஆனால், இதனை நாம் அடிப்படைவாதத்தின் அடியாக குறுக்கிப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. காரணம், அபாயா ஆடை ஒப்பீட்டளவில் இலகுவானதாக, வசதியானதாக அமைந்திருத்தல், தங்க நகைகள் அணியத் தேவை ஏற்படாதிருத்தல், அணிய அதிக நேரம் செலவிடத் தேவை ஏற்படாமை. குறைந்த செலவு முதலான  பல்வேறு காரணங்களும் அதிகளவில் முஸ்லிம் பெண்கள் இதைத் தேர்வு செய்யக் காரணமாக இருப்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். அது தவிர்த்து, அபாயா அணியாவிட்டால் தம்மை பக்தி குறைந்தவர்களாக, பேணுதல் குறைந்தவர்களாகக் கருதிவிடுவார்கள் என்ற உளவியல் சார்ந்த சமூக நிர்ப்பந்தமும் இவ்விடயத்தில் செல்வாக்குச் செலுத்தவே செய்கின்றது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. அபாயா ஆடையானது முஸ்லிம் பெண்களுக்கு எந்தவகையில் சுதந்திரத்தை அல்லது விடுதலையை வழங்குகின்றது ? சுதந்திரம் அல்லது விடுதலை உணர்வு என்பது ஓர் ஆடையால் தீர்மானிக்கப்படும் ஒன்று என நான் ஒருபோதுமே கருதவில்லை. சுதந்திரம் என்பது ஓர் உள்ளார்ந்த பிரக்ஞை உணர்வாகும். அது ஆடையின் அளவுகளாலோ வடிவங்களாலோ கட்டமைக்கப்படும் ஒன்றல்ல. முஸ்லிம் பெண்ணோ முஸ்லிம் அல்லாத பெண்ணோ, தனக்கு என்ன தேவை என்பதைத் தானே தீர்மானிக்கும் நிலையில் இருப்பதுதான் சுதந்திரமாகும். அபாயாவை அணிவதா, தேவை இல்லையா என்ற தீர்மானம் ஒரு பெண்ணின் கையில் இருப்பதே அவளின் சுதந்திரமாகும். என்னைக் கேட்டால், ஒரு பெண் சேலையோ ஷல்வாரோ அபாயாவோ, டீஷர்ட் பேன்ட்டோ எந்த ஆடையை அணிந்திருந்தாலும், பஸ்ஸில்  போகும் போதோ, பொதுமக்கள் மத்தியில் புழங்கும் போதோ தாவணி விலகி விட்டதா, இடுப்பு தெரிகிறதா என்றெல்லாம் எந்தவிதப் பதற்றமும்படாமல் இயல்பாகவும் சகஜமாகவும் உணர முடிந்த மனநிலையே அவளது விடுதலையைத் தீர்மானிக்கிறது. பிறர் பொருட்டு சுயத்தை இழந்துவிடாமல், தன்னையும் தன் உடலையும் பிரக்ஞை பூர்வமாக, இயல்பாக ஏற்கக்கூடிய  மனநிலை அது. உங்களுக்கும் கல்கந்தே தம்மானந்த தேரருக்கும் எப்படியாகத் தொடர்புகள் ஏற்பட்டன? பொதுவெளியில் அவரது பண்பட்ட மனிதநேயமிக்க கருத்துக்கள் அடங்கிய உரைகளை, எழுத்துக்களைக் கண்டுதான் அவர்பால் நான் ஈர்க்கப்பட்டேன். யாழ்பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை தொடர்பில் சிங்கள மக்களை விளித்து அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தைச் செய்து பொதுவெளியில் பகிர்ந்திருந்தேன். அதை அவர் கேள்வியுற்றிருந்தார். இதுபோல் அவரது கருத்துக்களைத் தொடர்ந்து அவ்வப்போது நான் தமிழில் பெயர்த்துக் கொண்டிருந்தேன். அமரர் தமிழினி ஜெயக்குமரனின் சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பினை நானும் திரு, ஜி. ஜி. சரத் ஆனந்தவும் இணைந்து மேற்கொண்டோம். அந்த நூல் (‘அலுயம் சிஹினய’) வெளியீட்டு விழாவில் தம்மானந்த தேரர் நூலாய்வு நிகழ்த்த வருகை தந்திருந்தபோது நேரடியாகச் சந்தித்து அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது. பின்னர் அன்னார் பணிப்பாளராகப் பணியாற்றும் வல்பொல ராஹுல நிறுவகத்துடன் இணைந்து பணியாற்றும் நல்வாய்ப்பும் அமைந்தது. சிங்கள மொழிப் புலமை உள்ள ஒரு சமூகச் செயற்பாட்டாளர் என்ற வகையில், அவர்களுடன் இணைந்து சிங்கள – தமிழ் – முஸ்லிம் சமூக நல்லிணக்கப் பணிகளில் என்னுடைய பங்களிப்பினை நல்குவதற்கு வாய்த்தமையை இறைகருணை என்றே கருதுகின்றேன். ஒரு முஸ்லிம் பெண்ணாக இருக்கும் நிலையில், ஒரு பௌத்தத் தேரரோடு இணைந்து சமூகத்தளத்தில் பணியாற்றுவது ஆரம்பத்தில் ஒருசில விமர்சனங்களைக் கொண்டு வந்துசேர்த்தாலும், அவற்றையிட்டு நான் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை.  கரையோரப் பற்றைகளின் சலசலப்புக்கு அஞ்சி நதி தன் பயணத்தை நிறுத்த முடியுமா, என்ன? போர் முடிவடைந்து இவ்வளவு காலங்கள் கடந்து சென்றும் வராத நல்லிணக்க சூழல் கல்கந்தே தம்மானந்த தேரர் போன்றோரால் ஏற்படும் என்று நம்புகின்றீர்களா ? நிச்சயமாக. கல்கந்தே தம்மானந்த தேரர் பணிப்பாளராக இருந்து நடத்திவரும் வல்பொல ராஹுல நிறுவகமானது அரசினதோ பிற நிறுவனங்களினதோ நிதியால் இயங்கி வரும் ஓர் என்ஜீஓ அல்ல. சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட தன்னார்வலர்களின் தனிப்பட்ட நன்கொடைகளால் இயங்கி வரும் ஓர் அமைப்பு. அதன் அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். இந்நிலையில், அதன் பணிகள் சற்று மெதுவாகவே முன்னகர்வது தவிர்க்க முடியாததாகும். தம்மானந்த தேரரின் ‘நலமுறச்செய்தல்’ எனும் சிந்தனை முறைமை நீண்ட காலத்தில் பலன் தரக்கூடிய ஓர் உறுதியான சமூக அத்திபாரத்தை எழுப்பத்தக்க ஒரு செயற்றிட்டமாகும். யுத்தமொன்றில் ஈடுபடும் இருதரப்புமே உளவியல் ரீதியாகக் காயப்படவே செய்கின்றது என்ற அடிப்படை உண்மையை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் ; தாக்கியவன் – தாக்கப்பட்டவன் ஆகிய இருவரது இதயங்களும் குறித்த வன்முறையால் பாதிக்கப்படுகிறது என்ற அடிப்படையில், இருவரது உள்ளங்களும் குணமாக்கப்பட வேண்டியது அவசியம் ; அவ்வுள்ளங்கள் மன்னிப்பினால், கருணையால், அன்பினால் நிரப்பப்பட வேண்டியது அவசியம் என்பதையே அவர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். எந்த ஒரு சமூகத்தினதும் அகவன்முறை நீக்கம் என்பது உள்ளிருந்தே முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதை ஆழமாக நம்பும், அதனை முன்னிறுத்தும் அவர், ஒவ்வொரு சமூகமும் தன்னளவில் ஆழமான சுயவிமர்சனம் ஒன்றை மேற்கொள்ள, தன் தவறுகளை ஏற்றுக்கொண்டு தன்னைத்தானே மறுசீரமைத்துக்கொள்ள திறந்த உள்ளத்தோடு முன்வர வேண்டும் என்று கோருகின்றார். சமூகத்தில் பெண்கள் இரண்டாம் நிலையினராக நடத்தப்படுவதற்கும், கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அவர்கள் சுயமற்றவர்களாக, தெரிவுச் சுதந்திரம் அற்றவர்களாக நடத்தப்படுவதற்கும் எதிராக அவர் தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றார். சிறுவர்களைப் பிக்குகளாக்கும் நடைமுறை பிழையானது ; அடிப்படை பௌத்த நெறிமுறைகளுக்கு எதிரானது என்று போதிக்கிறார். இலங்கையில் உள்ள எல்லாச் சமூகத்தவர்களும் சக மனிதர்கள் என்ற வகையில் சம உரிமை உடையோராக வாழத்தக்க உளப்பாங்கினைக் கட்டமைப்பதில், எதிர்காலத் தலைமுறையினரிடம் இருந்து மனிதநேய சமத்துவ உணர்வை வளர்ப்பதற்கு இடையறாது முயன்று வருகின்றார். மிகப்பெரிய பிரசாரப் பின்புலங்கள் அற்ற நிலையில், எளிமையாகவும் அமைதியாகவும் ஒப்பீட்டு ரீதியில் சிறிய அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இம்முன்னெடுப்புகள் எடுத்த எடுப்பில் பலமற்றவை அல்லது பலனற்றவை போல வெளித்தோற்றம் தந்தாலும், இன்ஷா அல்லாஹ் களநிலையில் குறிப்பிடத்தக்க வீதத்தில் ஆழமானதும் வலிமையானதுமான அதிர்வுகளை, காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்தவே செய்யும் என்று நான் மிக உறுதியாக நம்புகின்றேன். அந்த நம்பிக்கையின் விளைவாகவே நான் தொடர்ந்தும் அவர்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றேன். தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று முடிந்த போரானது உங்களை எந்த வகையில் பாதித்திருக்கின்றது அல்லது செதுக்கியிருக்கின்றது ? இலங்கையில் இடம்பெற்ற போர் இந்நாட்டின் சகல தரப்பினரையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிக மோசமாகப் பாதித்து இருக்கிறது என்பதே உண்மை.  அந்த வகையில், இனி இதுபோன்ற ஒரு யுத்தம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கூருணர்வையே என்னில் அது ஏற்படுத்தி இருக்கிறது என்பேன். அந்தக் கூருணர்வுதான், என்னிடம் உள்ள மொழியாற்றலைப் பயன்படுத்தி சமூகங்களுக்கு இடையில் பாலம் அமைக்கும், உணர்வு ரீதியாக அவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஒரு மொழிபெயர்ப்பாளராக, சமூகச் செயற்பாட்டாளராக, கல்வியாளராகத் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான உந்துசக்தியை, பெரும் பொறுப்புணர்வை எனக்குள் விதைத்துள்ளது என நம்புகின்றேன். லறீனா -இலங்கை கோமகன்-பிரான்ஸ்   https://naduweb.com/?p=10889
  • சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று !   இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மட்டக்களப்பு மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை மனித உரிமைகள் எனக் கருதலாம். இவற்றில் அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, உறைவிடம் போன்றவற்றுடன் கொலை செய்யப்படாமலும். சித்திரவதை செய்யப்படாமலும். அவமதிக்கப்படாமலும் வாழ்வதற்கான உரிமையும் இதில் உள்ளடக்கப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் வெற்றி பெற்ற நாடுகள் 1945 இல் உக்ரேனில் யால்டா மாநாட்டில் கலந்து கொண்ட போது, உலக சமாதானத்தைப் பாதுகாக்க தவறிவிட்ட சர்வதேச சங்கத்தின் இடத்தில் வேறொரு புதிய அமைப்பொன்றை அமைக்க முன்வந்தன. இந்த அமைப்புத்தான் ஐக்கிய நாடுகள் சபையாகும். இது தோன்றியதிலிருந்து சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் முக்கியமான பங்கை வகித்து வருகின்றது. இதனடிப்படையில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 1948 டிசம்பர் 10ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்டது. மனித உரிமைகள் உலகளாவியவை. அதாவது யாவருக்கும் கிடைப்பவை. இந்தக் கொள்கைதான் முதன் முதலில் வலியுறுத்தப்பட்டது. மனித உரிமைகள் என்ற கருத்தாக்கத்தினை சட்டபூர்வமாக்குமாறு உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கவேண்டிய உரிமைகளையும்ரூபவ் சலுகைகளையும் வரலாற்றி;ல் முதன் முறையாக இந்த ஆவணம் எழுத்து வடிவில் பதிவு செய்தது. மனித உரிமைகள் எல்லா மனிதர்களுக்கும் உரியவை என்ற சிந்தனை அரசியல் அந்தஸ்து வேறுபாடின்றி உலகமெல்லாம் பரவச் செய்ய வேண்டும் என கையெழுத்திட்ட உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடு;க்கப்பட்டது. மக்களின் உள்ளார்ந்த கௌரவமும் அவர்களின் சமமான உரிமைகளும் சுதந்திரம்ரூபவ் நீதி, சமாதானம், இவற்றின் அடித்தளமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை இந்தப் பிரகடனத்தை ஏற்ற போது 48 நாடுகள் உடன்பாடாக வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. மனித உரிமைகளில் நல்வாழ்க்கைக்கும், விடுதலைக்குமான உரிமைரூபவ் பேச்சுத் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் சட்டத்தின் முன் சமத்துவம் போன்ற குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளும் அடங்கியிருக்கின்றன. அத்துடன் கலாச்சார செயற்பாடுகளி;ல் பங்கெடுத்தல்ரூபவ் வேலைக்கான உரிமை கல்விக்கான உரிமை உட்பட சமூக பொருளாதார கலாச்சார உரிமைகளும் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொதுவான மனித உரிமைகள் பல சமயங்களில் உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், சர்வதேச சட்டங்கள். அல்லது பிற மூலங்கள் என எழுதப்பட்ட சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. தனிமனித அல்லது குழு உரிமைகளை மேம்படுத்தவும் அல்லது பாதுகாக்கவும் சடட்பூர்வமான வழிகளில் செயல்படவும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் அரசாங்;கங்களுக்கு பொறுப்புக்களை அளிக்கிறன. மனித உரிமைகள் யாவருக்கும் உரியது. வெவ்வேறு நாடுகளில் மனிதர்கள் நடத்தப்படும் முறை வெவ்வேறாக இருக்கின்ற போதும் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் எல்லா மக்களுக்கும் இது பொருந்தும். சில நாடுகள் மனித உரிமைகளை மதிக்கின்றன. இன்னும் சில நாடுகள் இவ்வாறு செய்யாமல் மனித உரிமைகள் மீது வெறுப்பும் அவற்றை மதிக்காமையும் காட்டுமிராண்டடித்தனமான செயல்களை உருவாக்கி மானிட இனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி பொதுமக்களின் மிக உயர்ந்த விருப்பமான பேச்சு மற்றும் நம்பிக்கைச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் இனஞ்சார், மதஞ்சார் மற்றும் மொழிசார் சிறுபான்மையினரைச் சேர்ந்த மக்களின் உரிமைகள் சம்பந்தமாக குடியியல், மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தில் 27 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகள் கூறுகிறது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் இன ரீதியான வேறுபாடுகள் காட்டப்படக்கூடாது என கூறுகிறது. இனம், பால், நிறம், போன்ற பலவற்றி;ன் அடிப்படையில் வேறுபடுத்தி நோக்குதலை இது தடைசெய்கிறது. அதாவது வேறுபடுத்தி நோக்காத கோட்பாட்டின் அடிப்படை சமத்துவக் கோட்பாடாகும். இதனைத்தான் மனித உரிமைகள் பிரகடனத்தில் முதலாவது உறுப்புரை “தகுதிகளிலும் உரிமைகளிலும் எல்லா மனிதர்களும் சமமாகவும்,சுதந்திரமாகவுமே பிறக்கிறார்கள்” என கூறுகின்றது. மனித உரிமைகள் யாவும் ஒன்றிற்கொன்று நெருக்கமானவை. ஒன்றையொன்று சார்ந்தவை. ஓர் உரிமையை மேம்படுத்துவது பிற உரிமைகளையும் மேம்படச் செய்யும். அதே போல் ஓர் உரிமையை மறுப்பது பிற உரிமைகளையும் பாதிக்கிறது. மனித உரிமைகள் என மேற்கோள் காட்டப்படுகின்றவை உரிமைகளை அளிப்பது போலவே பொறுப்புக்களையும் அளிக்கின்றன. அரசுகள் இந்தப் பொறுப்புக்களையும் கடமைகளையும் மதிக்க, பாதுகாக்க, நிறைவேற்ற வேண்டியது சர்வதேச பிரகடனங்களின் பணியாகும் என கருதப்படுகிறது. மனித உரிமை மீறல்களிலிருந்து தனிமனிதனையும் குழுக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுகளிடம்தான் இருக்கிறது. மனித உரிமைகளை எவரும் பறிக்கக்கூடாது. ஒருவன் நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் மாத்திரமே அவனது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம். ஆக்கிரமிப்புப் போர்கள், போர் குற்றங்கள், இனப்படுகொலை உள்ளிட்ட மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கு எதிரானவை. இவைதான் மனித உரிமை மீறல்களில் மிகக் கடுமையானவை. குறிப்பாக இனப்படுகொலை மிகவும் தீயது. உலகின் எல்லா மூலைகளிலும் மனிதர்கள் யாவருக்குமான உரிமைகளை மேம்படுத்தவும், மதிக்கவுமான சக்திகள் பல இருக்கின்றன. எண்ணற்ற மனித உரிமைப் பிரச்சினைகளையும் நிகழ்வுகளையும் திறம்படக் கையாள போதுமானதாக அவைகள் இல்லை என்பதுதான் பெரும் குறையாகவுள்ளது. இந்த பிரகடனத்தில் முன்வைக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் அனைத்தும் இசைந்து ஏற்றுள்ள நிலை நமது அன்றாட வாழ்க்கையில் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை வலிமையாக்கவும். வலியுறுத்தவும் செய்கிறது. அவற்றை நடைமுறைப்படுத்தவும் பராபட்சமற்ற முறையில் செயற்படுத்தவும் ஒன்றிணைவதே இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். ( அப்துல் அஸீஸ் - பிராந்திய இணைப்பாளர்)    https://www.virakesari.lk/article/70760