Jump to content

அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கரித்துண்டை தூக்கி  அங்காலை எறியுங்கோ

9_F8_DC7_A0-40_B6-4_DD9-83_DC-77_B11_D49

கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டுகவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார்.

“கத்தரிக்காயை  நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு  ‘கலகலஎண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டுஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் குறுணியா வெட்டி பொரிச்ச கத்தரிக்காய்க்குள்ளை போட்டு, அதுக்குள்ளை தேங்காய்ப்பால், மிளகு, சின்னச் சீரகத்தூள், உப்புதேசிக்காய் புளி விட்டு கையாலை நல்லா பினைஞ்சு சாப்பிட்டுப்பார் அந்த மாதிரி இருக்கும். அந்தக் கத்தரிக்காய்ச் சம்பல் ஒண்டு போதும் இரண்டு கோப்பை சோறு சாப்பிடலாம். கொஞ்சமா தண்ணி அடிச்சிட்டாய் எண்டால், கோழி நெஞ்சிறைச்சியை சின்னஞ் சின்னதா வெட்டிப் பொரிச்சு, பிசைஞ்சு வைச்சிருக்கிற கத்திரிக்காய்க்குள் போட்டு குழைச்சு சாப்பிட்டுப் பார் தண்ணி அடிச்ச வாய்க்கு அமிர்தமா இருக்கும்

குமாரசாமி அண்ணன் சொல்லித் தந்த ஒரு சமையல் குறிப்பு அது. அவர் சொன்ன அந்த  கத்தரிக்காய்ச் சம்பலின் ருசி வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. இன்று எனது வீட்டில் நடக்கும் விசேசங்களில் எல்லாம் கத்திரிக்காய்ச் சம்பல் கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு தடவையும் கத்திரிக்காய்ச் சம்பல் செய்யும் போது அவர் முகம் மனதில் வரும்.

இன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் அவரைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். கார்ல் ஒல்கா ஆஸ்பத்திரியில் இருந்து எனது வீடு  பெரிய தூரம் என்றில்லை எழுபது கிலோ மீற்றர்கள்தான், நெடுஞ்சாலையினூடாகப் பயணித்தால் ஒரு மணித்தியாலத்துக்குள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனாலும் ஆஸ்பத்திரியின் வாசலில் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் வர வெளியே யாருமே இல்லாமல் தனியாக இருந்த வாங்கிலில் போய் அமர்ந்து கொண்டேன். தனியாக இருக்கலாம் என்று நினத்தால் அந்த வாங்கிலை ஒரு இளம் சோடி வந்து பங்கு போட்டுக் கொண்டது

வேலை இடத்தில் விழுந்தானா இல்லை கால்பந்து விளையாடி காலை முறித்துக் கொண்டானா தெரியவில்லை அந்த சோடியின் இளைஞன் உள்ளங்காலில் இருந்து தொடைவரை பெரிய கட்டுப் போட்டிருந்தான்.

 “ஆஸ்பத்திரிக்கு வந்தும் உன்னாலை சிகரெட்டை விட முடியேல்லைபெண் அவனை செல்லமாக கேபித்துக் கொண்டது என் காதில் கேட்டது. அவள் சொன்னது அந்த இளைஞன் காதில் தெளிவாகக் கேட்டிருக்கும் ஆனாலும்  அவன் தன்பாட்டுக்கு புகையை உள் இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தான்.

இப்பொழுது எனது மனது பதினைந்து வருடங்களுக்கு பின்னால் போய் நின்றது.

உள்ளே புகை பிடிக்க அனுமதி இல்லாததால்  வேலை இடத்துக்கு வெளியே அடிக்கடி போக வேண்டி இருந்தது. அன்றும்  வேலை நேரத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.

“உன்னை அங்கை காணேலை எண்டவுடன் இஞ்சைதான் இருப்பாய் எண்டு நினைச்சன்சிகரெட்டை பற்ற வைச்சுக் கொண்டு  குமாரசாமி அண்ணன் எனக்குப் பக்கத்தில் வந்து இருந்தார்.

“என்ன புதினம் கவி?”

“இண்டைக்கு உங்கடை பிறந்தநாள்

“ஓமடா நேற்று படுக்கைக்கு போகக்கை நினைச்சனான். காலமை எழும்பக்கை அதை மறந்து போனன். பார் என்ரை  மனுசியும் எனக்கு நினைப்பூட்டேல்லை

“பின்னேரம் நீங்கள் வீட்டை போகக்கை  சில நேரம் உங்களுக்கு ஒரு சேர்ப்பிரைஸ் பார்டி  இருக்கலாம்

“இருக்கும் போலைத்தான் கிடக்குது. காலமை என்னைப் பார்த்து மனுசி கொடுப்புக்குள்ளை சிரிக்கக்கை, என்ரை முகத்தைப் பார்த்து சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு எண்ட நினைப்புத்தான் வந்தது  பிறந்தநாளைப் பற்றி யோசனையே வரயில்லை. அது போகட்டும் என்ரை பிறந்த நாளுக்கு நீ என்ன தரப்போறாய்?”

“ஒரு பக்கெற் சிகரெட்?”

“சிகரெட்டோ? இந்தக் கோதாரியை எப்ப விடலாம் எண்டிருக்கிறன்

“எனக்கும்தான் அந்த நினைப்பு இருக்கு

“இதை விட்டால் நல்லதுதாண்டா. உடுப்பு, உடம்பு எல்லாம் ஒரே சிகரெட் மணம்தான். வீட்டிலையும் அப்பப்ப அர்ச்சனையும் விழும். மனுசி மட்டுமில்லை பெட்டைகளும் பேசுவாளுகள்

“அப்ப விட்டிடுங்கோ

“பேய்க்கதை கதைக்கிறாய். நாற்பது வருசமா பத்துறன். உடனை விடேலுமே? வேணுமெண்டால் ஒவ்வொண்டாகக் குறைச்சுக் கொண்டு வந்து...”

“இது நடக்கிற காரியமா இருக்காது. விடுறதெண்டால் ஒரேயடியா விடோணும்

“உதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிவரும்

“மனசுதாணன்னை எல்லாம்

“இவ்வளவு கதைக்கிறாய் உன்னாலை விடேலுமோ?”

“ஓகே. நான் விடுறன். உங்கடை பேர்த் டே அண்டு, சிகரெட் பிடிக்கிறதில்லை எண்டு முடிவெடுப்போம்.” 

“நீ விடுறதெண்டால் நானும் ரெடி

குமாரசாமி அண்ணன் அப்படிச் சொன்னதும் பத்திக் கொண்டிருந்த எனது சிகரெட்டை பாதியிலேயே அணைத்தேன்.

“நீ நூத்தால் நானும் நூப்பன்”  என்னைப் பார்த்து தனது சிகரெட்டையும் குமாரசாமி அண்ணை அணைத்துப் போட்டார்.

என் பொக்கெற்றில் இருந்த சிகரெட் பக்கெற்றை எடுத்து அருகில் இருந்த குப்பை வாளிக்குள் போட்டேன்

“புதுப் பக்கெற் போலை இருக்கு?”

“ஓம். இப்பதான் வேண்டினனான். ஒண்டுதான் அதுவும் பாதிதான், இப்ப பத்தினதுசொல்லிவிட்டு எழுந்து கொண்டேன். குமாரசாமி அண்ணனும்  என்னுடன் கூட வந்தார்

இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வேலை இடத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து குமாரசாமி அண்ணன் சிகரெட் பத்திக் கொண்டிருந்தார்

“என்னண்ணை திரும்பத் தொடங்கிட்டீங்களே?”

“விட்டால்தானே திரும்பத் தொடங்கிறதுக்கு

நீ சிகரெட் பக்கெற்றைபின்னுக்குள்ளை போட்டுட்டுப் போட்டாய். அநியாயமா ஒரு சிகரெட் பக்க்கெற்றை எறிஞ்சது மனசுக்கு ஒரு மாதிரி இருந்துது. திரும்ப வந்து எடுத்து என்ரை சேர்ட் பொக்கெற்றுக்குள்ளை வைச்சிட்டன். சேர்ட்  பொக்கெற்றுக்கும்  வாய்க்கும் கனக்கத் தூரமில்லைப் பார்

“சரி அந்தப் பக்கெற் முடிஞ்சதுக்குப் பிறகு புதுசு வேண்டிப் போடாதையுங்கோ

“அடப் போடா. இது அதுக்குப் பிறகு இரண்டாவது பக்கெற்

இழுக்க இழுக்க இன்பம் தந்தத சிரெட்தான் குமாரச்சாமி அண்ணனை இப்பொழுது ஆஸ்பத்திரிக் கட்டிலிலுக்கு இழுத்து வந்திருக்கிறது.

“மனுசியிட்டை தேத்தண்ணி போடச் சொல்லிப் போட்டு கதிரையிலை இருந்தனான். திடீரென கண் இருட்டிக் கொண்டு வந்துது. மேசையிலை அப்பிடியே படுத்திட்டன். நல்லவேளை மூத்தமகள் கண்டிட்டு உடனை அம்புலன்ஸுக்கு அடிச்சிட்டாள். ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வந்திட்டாங்கள்அவங்கள் வந்துநித்திரை கொள்ளாதை நித்திரை கொள்ளாதைஎண்டு கன்னத்தில் அடிச்சடிச்சு அம்புலன்ஸிலை என்னை ஏத்தின ஞாபகம். சத்தி எடுத்தனான் எண்டும் சொல்லிச்சினம். பிள்ளைகளும் மனுசியும் நல்லா பயந்து போட்டினம் கவி

“இப்ப எப்பிடி இருக்கண்ணை?”

“பாக்கேல்லையே. உடம்பெல்லாம் வயறுகள். 24 மணித்தியாலமும் கொம்புயூற்றரிலை கவனிப்பாம்

“சாப்பிட ஏலுமா இருக்குதுதானே?”

“வட்டம், நீள் வட்டம் சிவப்பு, வெள்ளை எண்டு கொஞ்சக் குளிசைகள் காலமையிலை கொணந்து தருவாங்கள் அதை விழுங்கி தண்ணியும் குடிச்சால் வயிறுபுள்’. அதுக்கு மேலை காலமைச் சாப்பாடு எண்டு பெரிசா எல்லாம் தேவையில்லை. சும்மா சொல்லக் கூடாது மத்தியானம் உண்மையிலை  நல்ல சாப்பாடுதான். என்ன Input,Output எல்லாம் படுக்கையிலை எண்டபடியால் கொஞ்சம் கூச்சமா இருக்கு

“அதுக்காக சாப்பிடாமல் இருக்கேலுமே

“சாப்பிடாடு முக்கியமெல்லே. சாப்பிடுறன்தான். எண்டாலும் கவி, நீ மனதிலை திடமான ஆள்தான். உன்னைப் போலை நானும் அண்டைக்கே சிகரெட்டை விட்டிருக்கோணும்

“இப்ப இங்கை உங்களாலை சிகரெட் இல்லாமல் இருக்க முடியுதுதானே. ஆஸ்பத்திரியை விட்டு வெளியாலை வந்தாப் போலையும் நீங்கள் சிகரெட் இல்லாமல் இருக்கலாம்

“ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வருவேன் எண்டு நினைக்கிறீயே?”

“வருவீங்கள். வெளியிலை வந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன எண்டால் அந்த கரித்துண்டை தூக்கி எறியிறதுதான்” 

குமாரசாமி அண்ணனுக்குச் சொல்லிப் போட்டு வந்திருக்கிறேன்.

ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்.

கவி அருணாசலம்

31.05.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பழக்கங்களை மரணத்திற்குக் கிட்டவாகப் போய் வந்தாலும் மாத்தலேலாது. 

Link to comment
Share on other sites

புகை ஒரு போதையண்ணே. ஒருமுறை ஆட்கொண்டால் அடிச்சு கலைக்கிறது ரொம்ப கஷ்டம். சரி நீங்கள் இப்போ விட்டுவிட்டீங்கள் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

சமூக நலன் சார்ந்த,  அறிவு ஊட்டும்,  விழிப்பு உணர்வு  சார்ந்த அழகான கதை,  ✒️கவி அருணாசலம். ?
அதற்கு மேலும், கதைக்கு... நீங்கள் தயாரித்த முகப்பு படம். ?
மொத்தத்தில்.. மனதை  சிந்திக்க வைத்த  அருமையான கதை.   ?

உங்கள் கதையில்... எதனை  மேற்கோள் காட்டி கருத்து எழுதுவது என்று தெரியாமல்,
?️ முழுக் கதையையும் பதிந்தமைக்கான  காரணம்....
 ? வரி, வரியாக அத்தனை எழுத்துக்களையும்... மனதில் உள் வாங்கி   ரசித்தேன்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வை தரும் ஒரு புகைமூட்டமான கதை. உள்ளே ஒரு பொறி தெரியுது. கடவுளே, அது சிகரெட் பொறியாக இருக்கக் கூடாது....

.!  ☠️  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடு காட்டு ஞானம் என்று கேள்விப்பட்டிருப்பீங்க. அதுதான் இந்த கரித்துண்டுதூக்கி அங்கால எறியுறதும். வைத்தியசாலையில் வந்து பார்த்து விட்டு இனி இதைத் தொடமாட்டம் எண்டு சத்தியம்செய்திற்றுப்போன பல நண்பர்களைப் பார்த்து நான் சிறிது நிம்மதியானேன். ஆனால் ஒருவரும் இதுவரை தூக்கி எறிந்ததாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9_F8_DC7_A0-40_B6-4_DD9-83_DC-77_B11_D49

நானும் ஒரு காலத்திலை பெரிய தம் அடிகாரன் தான்.

ஒருக்கால் விடியப்பறம் ஒரு உலுப்பின உலுப்போடை அம்புலன்ஸ்சிலை ஏத்திக்கொண்டு போனவங்கள் தான்...

அந்த பெரிய கிளினிக்கிலை வைச்சு 68 குளிசையும் தந்து...மூளையையும் நல்லவடிவாய் கழிவி விட்டுத்தான் வெளியிலை விட்டவங்கள். அண்டைக்கு விட்ட கரிக்கோச்சியை இண்டுவரைக்கும் தொடவேயில்லை.

அந்தமாதிரி மூளையை கிளீன் பண்ணிப்போட்டுத்தான்  வெளியிலை விட்டவையள்.

ஆனால் ஒண்டு டெய்லி 20/30 சிகரெட் பத்துற சனமும் நோய்நொடியில்லாமல் இருக்கினம்....

அதே நேரம் ஒரு நாளைக்கு 5 சிகரெட் பத்தினவன் குறுக்காலை போனதும் இருக்கு....

எல்லாம் அவரவர் உடம்பு வாசி கண்டியளோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இன்னுமொரு குமாரசாமியார் ஏற்கனவே போய் வந்திட்டார். 

15 hours ago, குமாரசாமி said:

அந்தமாதிரி மூளையை கிளீன் பண்ணிப்போட்டுத்தான்  வெளியிலை விட்டவையள்.

கிளீன் என்று நீங்கள் குறிப்பிடுவதற்கு என்னால் இரண்டு அர்த்தம் கொள்ள முடிகிறது. நான் நீங்கள் நினைத்ததையே எடுத்துக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 முதலில் கரித்துண்டை ஆர்வ கோளினால் பற்றிக் கொள்வார்கள்  சில காலம் செல்ல அது உங்களை பற்றிக் கொள்ளும் விடாது ..பின் விளைவுகள் ஏராளம்.  அது ஓர் வகை போதை . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.