Sign in to follow this  
நிழலி

உதவி: 3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன்

Recommended Posts

3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக  இழந்த என் நண்பனின் 6 வயது மகன்
----

என் நண்பனின் ஒரு ஆறுவயது சின்னஞ் சிறு மகன் மூன்று கிழமைகளுக்குள் முதலில் தன் அம்மாவையும் பின் தன் அப்பாவையும் இழந்து விட்டான்.

மூன்று வாரங்களுக்கு முன், நான் கற்ற யாழ் பரியோவான் கல்லூரி வாட்ஸ் அப் குழுமத்தில் இருந்து எம்முடன் படித்த உற்ற நண்பன் தர்மா என்று அழைக்கபடும் தர்மேந்திராவின் மனைவி சுவாச பிரச்சனை காரணமாக இறந்து விட்டார் எனும் செய்தி எம்மை வந்தடைந்தது. அந்த செய்தியை அறிந்ததில் இருந்து என் நண்பனுக்காக நாம் கவலைப்படுவதை விட அதிகமாக அவனது மகனுக்காக கவலைப்பட்டோம். சிறு வயதில் தாயை இழப்பது என்பது கொடுமை. என் நண்பனும் தன் மகன் தாயில்லாமல் கஷ்டப்பட போகின்றான் என்பதை இட்டு மிகவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தான்.


செத்த வீடு எல்லாம் முடிய, அவனுடன் உரையாடும் போது  அவன் சொன்ன விடயம், தன் வாழ்வில் மிகவும் வலி தந்த 40 நிமிடங்கள் என்பது தன் மகனுக்கு தாயின் இறப்பை பற்றி விளங்கப்படுத்தியது தான் என்று சொல்லியிருந்தான்.

மூன்று வாரங்கள் கழிந்தன.

நேற்று நண்பன் சபேஷ் (யாழ் கள உறுப்பினர்) இடம் இருந்து வட்ஸ் அப்பில் அந்த கொடிய செய்தி அலறிக் கொண்டு வந்தது. தர்மா இறந்து விடான் எனும் செய்தி அது. என் நண்பன் தர்மா யாழ் கள  கனடிய உறவு சபேஷ் இனதும் நெருங்கிய நண்பன்.

ஆம், என் நண்பன் தர்மா நேற்று மாரடைப்பு காரணமாக திடீர் என்று இறந்து விட்டான். அம்புலன்சில் பரா மெடிக்ஸ் வரும் முன்னரே அவன் உயிர் அவனை விட்டு பிரிந்து விட்டது.

DM.jpg

அவனது 6 வயது மகன் மூன்றே மூன்று வாரங்களுக்குள் தன் தாயையும் தந்தையையும் இழந்து தவித்து நிற்கின்றான்.

சின்னஞ் சிறு வயதில் இருவரையும் மூன்று கிழமை இடவெளியில் இழப்பது என்பது ஒரு ஆறு வயது குழந்தைக்கு எத்தனை பெரிய இழப்பு.

கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்த அம்மாவும் இல்லை. அரவணைத்து தோள் தந்த அப்பாவும் இனி இல்லை.

காலம் அவன் மீது கவிழ்ந்து  கிடக்கின்றது.

நேற்றில் இருந்து இந்த கணம் வரை நெஞ்சை கூராக பிளந்த வேதனையுடன் நாம் நேரத்தை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். இந்த வேளையில் எம்மால் செய்ய கூடிய ஒரு பிரயோசனமான விடயம், அச் சிறுவனுக்காக ஒரு சிறு தொகையை திரட்டுவது மட்டுமே. அவ்வாறு திரட்டி அவனது உட்னடி எதிர்காலத்துக்கு உதவும் வண்ணம் அதை பயன்படுத்த கூடியவாறு செய்வதே.

அம்மா அப்பாவை அவனிடத்தில் இருந்து பிரித்து அவனை காலம் எம்மிடம் ஒப்படைத்து இருக்கு. வாரி அணைத்து ஆதரவு கொடுக்க நாம் தயராகின்றோம்.

 

உதவி செய்ய விரும்புகின்றவர்களுக்கு...:

https://www.gofundme.com/fundraisng-for-sheashan-dharmaendr

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

பதிவுக்கு நன்றி நிழலி. என் நண்பனின் முகம் கண் முன் வந்து வந்து போகிறது.  மனசை மாற்றி எதாவது செய்தலும் அவனது நினைவுகளும், அவனது சிறு பாலகனின் ஏக்கம், ஏமாற்றம், எப்பிடி தாங்குவானோ என்ற என் ஏக்கமும் மனசை பிளிகிறது.  தாயை இழந்த போதே அந்த பிள்ளை எ‌வ்வளவு அங்கலாய்ப்புடன் இருந்தான் என்பதை நேரில் பார்த்தேன். ???

 

Edited by Sabesh

Share this post


Link to post
Share on other sites

கொடுமையான செய்தி. 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

இந்த வயதில் அதுவும் இத்தனை சிறிய இடைவெளியில் இச் சிறுவனுக்கு இப்படியோர் இழப்பு நிகழ்ந்திருக்கக் கூடாது. மிகவும் துயரமான நிகழ்வு. இப் பாலகனுக்கு அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கக் கூடிய உறவுகள் யாரும் இங்கில்லையா?  அணைத்து ஆதரவு கொடுத்து அச் சிறுவனை இத் துயரிலிருந்து வெளியே கொண்டு வருவது அவசியம்..உங்கள் நண்பனின் ஆன்மசாந்திக்காகவும் இப் பாலகனின் மன அமைதிக்காகவும் இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

கேட்கவே மனதுக்கு மிகவும் கடினமாக உள்ளது!

சில நிகழ்வுகள் ஏன் தான் நிகழ்கின்றனவோ....என்ற கேள்வி தான் மனதில் மிச்சமாக மிஞ்சியிருக்கின்றது!

 

 

Share this post


Link to post
Share on other sites

உலகம் புரியாத  சிறு வயதிலேயே.... பெற்றோரை இழந்து இருப்பது மிகவும் பரிதாபகரமானது.
ஆழ்ந்த அனுதாபங்கள். 

Share this post


Link to post
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. பெற்றோரை குறுகிய இடைவெளியில் மிகவும் சிறிய வயதில் இழப்பது கொடுமையானது. இப் பிஞ்சுப் பாலகனை துயரத்தில் இருந்து மீட்க உறவினர்களும் நண்பர்களும்தான் தம்மால் இயன்றதைச் செய்யவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

1 மாதத்திற்குள் பெற்றோர் இருவரையும் இழப்பது என்னது ....நினைத்து பார்க்க முடியவில்லை :(
 உறவினர்கள் அந்த பிஞ்சு குழந்தைக்கு முடிந்தளவு அன்பையும் அரவணைப்பை கொடுத்து வளர்ப்பார்க்கள் என்று  நம்புகின்றோம்.

இவ்வுலகை விட்டு இளம் வயதிலேயே பிரிந்து போன இருவரது உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! :(

Share this post


Link to post
Share on other sites

எத்தனையோ சாவுகளை கண்டும், கடந்தும் வந்துள்ளேன். அப்பாவில் இருந்து, அப்பு, மாமா,மாமி, நண்பர்கள், தோழிகள் என்று. ஆனால் இவ் நண்பனின் மரணம் மட்டும் மிகவும் வலிக்கின்றது. இந்த வலி அவனது மகனை ஒட்டி வருகின்றது என நினைக்கின்றேன்.


24 மணித்தியாலங்களுக்குள் எமக்கு கிடைக்கும் பேராதரவை காண வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது. எம் சமூக மக்கள் மட்டுமல்ல பெயர் ஊர் இனம் மொழி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் உதவிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதுவரைக்கும் 48,000 டொலர்ஸ் வரை சேர்த்துள்ளோம். ஒரு இலட்சம் சேர்க்க வேண்டும் என்பது தான் எம் இலக்கு. சேர்த்த பின் ஒரு trusty அமைத்து அவன் மகனிற்கு படிப்படியாக உதவ திட்டமிட்டுள்ளோம்.

 • Like 4
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

கவலையான செய்தி.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.....!

என்ன சொல்வதென்று தெரியவில்லை....!

Share this post


Link to post
Share on other sites

கொடுமையான செய்தி. 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.யாருக்கும் இப்படி நிகழக்கூடாது என இறைவனை வேண்டுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

 ஆறுவயது சிறுவனை எண்ணிக் கவலையாக உள்ளது . உறவினர் அன்பும் ஆதரவும் கொடுத்து  வளர்ப்பார்களென எண்ணுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள். 

Share this post


Link to post
Share on other sites

நல்ல பாதுகாவலர்கள் அந்த சிறுவனுக்கு கிடைக்கட்டும்.

Share this post


Link to post
Share on other sites

இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையட்டும்...கணவர்,மனைவி மேல் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் ...அச் சிறுவன் இத் துயரில் இருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும்....ஒரு சின்ன ஆறுதல் இந்த சிறுவன் புலத்தில் இருக்கிறான்...எத்தனையோ குழந்தைகள் போரில் கண் முன்னே பெற்றோரை இழந்து அனாதரவாய் நிற்கிறார்கள் 


 

Share this post


Link to post
Share on other sites

மிகவும் வேதனையாகவுள்ளது. வாழ்க்கையில் ஏன் சில விடயங்கள் இப்படி ந‌டக்கின்றது?  நல்லதொரு வாழக்கையை சிறுவனுக்கு இறைவன் அமைத்துக்கொடுப்பார்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்
இவரைப்பற்றி  ஒரு செய்தி வாசித்தபோது மிகவும் கவலையாக இருந்தது
மிகவும் சிறந்த ஒரு பன்முக விளையாட்டுவீரன்.
கனடாவில் பல தமிழ் விளையாட்டுக்கழங்களின் வளர்ச்சியில் இவரது பங்கு மிகவும் அளப்பரியதாக இருந்திருக்கின்றது.
இவரது குழந்தைக்கான எதிர்காலம் கடவுளின் கிருபையால் சிறப்பாக அமைய வேண்டுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

கொடுமையான செய்தி. 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கூட்டமைப்பே இந்தியாவின் கைப்பொம்மையாக உள்ளது இதற்குள் இந்தியாவை புறந்தள்ளுதல் என்பது எப்படி நடக்கும்? 😀 நான் இன்னொரு திரியில் எழுதியிருந்தேன், கூட்டமைப்பு சீனாவுடன் பேச்சு வார்த்தைகளை வைத்துக்கொண்டால் இந்தியா தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச முன்வரலாம் என்று. சீனாவும் எம்மை அழித்த நாடு தான்.
  • அண்ணா , ஜ‌ரோப்பாவில் இருக்கும் குட்டி நாடுக‌ள் அபிவிருத்து அடைஞ்சு முன்னேறிட்டு போராங்க‌ள் ,  இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் / அணுகுண்டு வைச்சு இருப்ப‌து பெருமை இல்லை , பெருத்த‌ ஆவ‌த்து , சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் , இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் / உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் /  சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி /  இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு நான் ப‌தில் அளிக்கிறேன் அண்ணா 
  • உங்களுக்கெல்லாம் ரெம்ப வயதாகி விட்டது என்று நினைக்கிறன். விசில் சத்தமும் கூச்சலும் இல்லாமல் பார்க்கிற படம் உப்பில்லாத கஞ்சி மாதிரி. (திரையை கிழிப்பதெல்லாம் ஓவர்தான்). வரிசையில் நீந்தி நெளிஞ்சு போய் டிக்கட் எடுத்து கிழிஞ்ச சேர்ட்டுடன் கலரிக்குள் போய் நின்று கொண்டு பஸ்ட் கிளாஸையும், பால்கனியையும் ஒரு பூச்சியை பார்ப்பதுபோல் பார்த்து விட்டு திரும்பும் கம்பீரம்......எல்லாம் இங்கே கிடைப்பதில்லை என்பது எனக்கு மனவருத்தம்தான்......!   😥
  • எங்கள் கைகளில் எதுவுமிருந்தால்தான் இந்தியாவைக்கண்டு பயப்படுவினம்  பயப்படவேண்டும் அவர்களிடமிருந்து நாம் எதுவுமே பெற்றதுமில்லை இனிமேல் பெற்றுக்கொள்ளப்போவதுமில்லை . எம்மை இன்னமும் அழிவுக்குக்த்தான் கைகோர்த்து அழைத்துச்செல்வார்கள் அது இன்னுமொரு முள்ளிவாய்க்காலைவிட மிகவும் மோசமாக இருக்கும்.  சுமந்திரன் சம்பந்தன் தாங்கிப்பிடித்த மைத்திரி கூட்டம்தான் இப்போ சவேந்திரசில்வாவை தளபதியாக்கியிருக்கு. இங்கு கருத்தெழுதும் அனைவரும் ஏந்தான் இந்தியாவைக்கண்டு பயப்படுகிறியள் எனத் தெரியவில்லை. அட எங்கள் கைகளில் இழப்பதற்கு எதுவுமில்லை நாம் ஏன் பயப்பட வேண்டும், ஆரம்பத்திலிருந்து ஒரு புதிய சித்தாந்தத்துடன் எமது அரசியலை முன்னெடுத்துச்செல்லவேண்டும் அதில் இந்தியாவைப் புறந்தள்ளுதல் என்பதும் உள்ளடக்கப்படல்வேண்டும். அனைத்துத் தளங்களிலும் மேற்கூறிய விடையத்தை விவாதப்பொருளாக்கவேண்டும்.
  • நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் ஸ்தம்பிதம் – மக்கள் அவதி! பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் தரம் குறைந்த மருந்துகள் வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்தே இன்று (வியாழக்கிழமை) அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கமைய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மன்னாரில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுகளில் எவ்வித பணிகளும் இடம்பெறவில்லை. தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் திரும்பி செல்ல நேரிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். எனினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேபோல் வவுனியாவிலும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் மாத்திரம் இயங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தூர இடத்திலிருந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் வந்த நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அதேபோல அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மலையக மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குழந்தையுடன் வந்த தாய்மார்கள் மற்றும் முதியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு, ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கென வருகை தந்த நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், வைத்தியசாலையின் தாதிமார்களுக்கும் நோயாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனினும் சில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். http://athavannews.com/நாட்டின்-அனைத்து-வைத்திய/