Archived

This topic is now archived and is closed to further replies.

Nathamuni

எண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.

Recommended Posts

Image result for carrera parva mountain bike

ஆசையாசையை ஒரு சைக்கிள் வாங்கினேன். ஸ்டேஷன் கார் பார்க் கொள்ளை அடிக்கிறார்கள். பிரீ பார்க்கிங் எண்டால் வீட்டில் இருந்து அரைவாசித் தூரத்தில். மிச்ச அரைவாசிக்கு நடக்க வேண்டும். நடப்பதில் பிரச்னை இல்லை ஆனால் காலையில் நேரம் முக்கியம்.

ஆகவே சைக்கிள் வாங்கி ஓடி போய் ஸ்டேஷன் முன்னாள் விட்டு விட்டு போவதும் வருவது இலகுவாயிருந்தது.

இரண்டு மாதம் நல்லா தானே போய் கிட்டு இருந்தது.

நமக்கு முதல் சைக்கிள் எண்ட படியால், விபரம் புரியாமல் சும்மா கேபிள் லாக் வாங்கி போட்டிருந்தேன். 

Image result for cycle lock

களவாணிகள் அந்தப் பக்கம் வந்து இருப்பினம்... 'அட இங்க பாரடா லட்டு மாதிரி என்று'.. யாரோ புதுசா... வந்திருக்கிறான் போல கிடக்குதே...' நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது. 

கேபிள் வெட்டினைப் பார்த்தால் , ஒரு 4 செகண்ட் கூட மினக்கெட்டிருப்பார்கள் போல தெரியவில்லை. அப்படி ஒரு நேர்த்தி!!

ஆகவே சைக்கிளை ஆட்டையை போட்ட தெய்வங்களே... சந்தோசமா இருங்கோ... £280 தர்மக் கணக்கில் போட்டாச்சு.

இருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...

Image result for cycle lock

பாப்போம்... புண்ணிய வான்கள் என்ன விளையாட்டு காட்டுகினம் எண்டு.

Image result for police

என்ன போலீசோ...??

‘சோனமுத்தா போச்சா'... 'அதுதான் சைக்கிள் வாங்கினா.... சைக்கிள் விலைக்கு சமனா பூட்டும் வாங்கி இருக்க வேணும்... 'கிளம்புங்கோ... கிடைச்சா சொல்லி அனுப்புறம் எண்டு சொல்லி அனுப்பிடினம்'.

'அந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...

'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...

'எனக்கு நேரம் இருக்கு.... நான் பார்க்கிறேன்.... ஒழுங்கு செய்யுங்களன்....'

'இது.. சரி வராது.... பிறகு data protection act எண்டு பிரச்சனை வரும்'... 

'அப்ப.... நீங்கள் ஒண்டும் செய்ய மாட்டியல்... எண்டு தெரிந்து தான்... களவு நடக்குது'

'உண்மைதான்... உங்கட எம்பிக்கு எழுதி... போலீசுக்கு கூட காசை ஒதுக்க சொல்லுங்கள்'...

.... 'நான் முறைப்பாடு சொல்ல வர... நீர் எனக்கு முறைப்பாடு சொல்லுறீர் காணும்'...

'பின்ன... என்ன போட்டு வாறன்...'

எண்டு சொல்லி கிளிம்பி விட்டேன்.

ஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.

Share this post


Link to post
Share on other sites

ஆகா வடை போச்சா?

எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.

சரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா வடை போச்சா?

எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.

சரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.

இதில என்ன வெட்கம்...

யாரோ டெஸ்பேரேட் ஆனா ஒருத்தன் ரிஸ்க் எடுத்திருக்கிறான் என்று நினைத்தேன்... ஒகே ஆகி விட்டது...

முறையான பூட்டு வாங்கிப் போடாதது என் தவறு.... இரண்டு மாதம் ஒன்று நடக்காமல் இருந்தது ஆச்சரியம்.

Share this post


Link to post
Share on other sites

உங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை  எப்பிடியும்
  உங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ.. :cool:

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

அந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...

'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...

சைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை.... ?

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, தமிழ் சிறி said:

சைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை.... ?

 

குசும்பல்ல, எரிச்சல்..

CCTV  பதிவு இருக்கும். போலீசுக்குப் போனால் போதும்.... கள்ளரையும் உள்ள போட்டு, சைக்கிள்ள வீட்ட வரலாம் எண்டு கண பேருக்கு ஜடியா இருக்குது.

உங்க அப்படி ஒரு கோதாரியும் நடவாது எண்டு சொல்ல வந்தேன்.

 

Share this post


Link to post
Share on other sites

எதுக்கும் ‘மை’ போட்டுப் பாருங்கோ!

வெளிச்சாலும் வெளிக்கும்!?

Share this post


Link to post
Share on other sites

எப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும். நான் அந்த படிநிலையில் இருப்பதால் உங்களின் வேதனையில் கவலையுடன் பங்கு கொள்கிறேன்......!

உங்களின் ஆறுதலுக்காக சில:

--- ஒரு புது சைக்கிள் 6 கியாருடன் கிபீர் போல பறக்கும். ஒரு கடையில் முன் சக்கரத்தை செருகி நிறுத்த ஸ்ராண்ட் வைத்திருந்தார்கள். நானும் காண்டாமிருகத்துக்கு காலில போடுறமாதிரி ஒரு கனமான வயர் பூட்டை பூட்டிவிட்டு போய் சாமான்கள் வாங்கி வந்து பார்த்தால் பூட்டும் முன் சில்லும் சிறு சேதமும் இல்லாமல் இருக்குது.அது குபீர் என்று பறந்துட்டுது.....!

--- ஒரு நண்பனின் சைக்கிள் காணாமல் போய் விட்டது. (இடைக்கிடை நானும் பாவிக்கிறானான்). சில நாடாக்கள் சென்று விட்டன. ஒரு இடத்தில அந்த சயிக்கிள் பூட்டு கூட இல்லாமல் நிக்குது. நண்பரையும் கூப்பிட்டு அவரும் வந்து விட்டார்.யார் அந்த சாயிக்கிளை எடுக்க வருகினம் என்று பார்க்க சற்று எட்டத்தில் இருவரும் நிக்கிறம். அத்தான் வந்து அதை எடுக்க ஓடிப்போய் நிப்பாட்டிட்டம். 

இது எங்கட சயிக்கிள் ....! (எல்லாம் பிரெஞ்சில்)

இல்லை இது என்னுடையது.

வா போலீசுக்கு. நான் (போர்த்து பிளான்) களவு போனதை சொல்லி இருக்கிறன்.

அவர்: நான் என் நண்பனிடம் இரவலாய் வாங்கி வந்தனான்.கொண்டுபோய் குடுக்க வேணும்.

வா நாங்கள் முதல் போலீசுக்கு போவோம். உன் நண்பனை அங்கு ரிசிற்றுடன் வந்து கதைக்க சொல்லு. இப்ப நீயும் வா.

இப்படியே இழுபட சனமும் கூடுது.

அவரும் சரி உங்கட சயிக்கிள் எண்டால் கொண்டு போங்கோ, நான் அவனிட்ட சொல்லுறன் என்று சொல்லிட்டு நழுவிக் கொண்டு போயிட்டார். 

--- மகனை யூனிவசிட்டில கூட்டிக்கொண்டு போய் விடுகிறன்.வீட்டில் இருந்து 100 கி.மீ  தூரம். முதல் நாள். அவர் அங்கு தங்கி படிக்கவேணும். சாமான்கள் வாங்க கொள்ள ஒரு சயிக்கிள் இருந்தால் நல்லது என்று தோணுது. போய் கடை ஒன்றை தேடித் பிடிச்சி பார்த்தால் எல்லாம் 200 ஈரோ க்கு மேலதான் இருக்கு.சரி வாங்குவம் என்று முடிவெடுக்க கடைக்காரர் வந்து இங்க ஒரு சைக்கிள் இருக்கு பிடிச்சால் எடுங்கோ என்கிறார்.(முழுதாக திருத்திய சயிக்கிள்.அந்தாளுக்கு என்னுடைய டிசைன் எப்படி விளங்கிச்சோ தெரியவில்லை). மகனும் அதை எடுத்து ஓடிப்பார்த்து விட்டு இது நல்லா இருக்கு அப்பா, இது போதும் என்கிறார். 30 ஈரோக்கு  அதை வாங்கிக் குடுத்திட்டு வந்திட்டன். ஒரு மாதத்தில அது அங்கேயே களவு போயிட்டுது. மகன் போனில் அப்பா 170 ஈரோ உங்களுக்கு லாபம் என்கிறான்.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, குமாரசாமி said:

உங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை  எப்பிடியும்
  உங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ.. :cool:

உங்கட கண் முன்னாலேயயே அதை களவு எடுத்தவன் ஓடிக் கொண்டு போவான் 

 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, suvy said:

எப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும்

நாதமுனி நினைத்துப் சிரிப்பதற்கு, இன்னும் இரண்டு சைக்கிள்களை இழக்க வேண்டும். பார்ககலாம்?

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, Nathamuni said:

இருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...

புது சைக்கிள் வீட்டு வந்ததும் ஒரு படம் எடுத்து இங்கே இணைத்து விடவும். :cool:

Share this post


Link to post
Share on other sites

பேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.

Share this post


Link to post
Share on other sites

ஒருக்கா அப்பாவித்தனமா பிழைவிட்டாத்தான், அட எனக்கோடா விளையாட்டுக்காட்டிறியள் எணடு கொதி வரும். திருப்பியும் புது சைக்கிள் ஒன்றை, வைத்து கள்ளனைப் மடக்கிப்பிடிக்கலாம் தான்.

இருந்தாலும் Halfords சைக்கிள் கடையில நிண்ட வெள்ளப் பெடியக் கொஞ்சம் முன்னம் வெளியால வேலை முடிஞ்சு வரேக்க மடக்கிப் பிடித்துக் கேட்டேன்.

இதுக்கென்னப்பா வழி, இப்படியே வந்து வாங்கிக் கொண்டு இருக்க வேண்டியது தானோ என்றேன்.

சிரித்து விட்டு, பேசாமல் சோதில கலக்க வேண்டியது தானே எண்டான்.

அப்படி எண்டால்...?

காசை உங்க செலவழியாம, கள்ளர்களிடமே, eBay யில (buyers buying legally, in a public marketplace) வாங்கி ஓடவேண்டியது தானே.  உன்ற சைக்கிள் இப்ப £40 க்கு அங்க விப்பாங்கள்.

களவு போனாலும், டென்சன் ஆகத்தேவை இல்லை. ஓடிப்போய் வாங்கலாம். 

இன்னோரு விசயம்... தொழில் தர்மம் இருக்குது பாருங்க... தாங்கள் வித்தது எவை, எவை எண்டு அவையளக்கு தெரியும். அவை எடாகினம். 

என்ன செய்யிறது?

சுமே அக்கா ஸ்ரைலில பிரச்சணை சொல்லியாச்சு. மினக்கடாம தீர்வை சொல்லுங்க. 

36 minutes ago, பகலவன் said:

பேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.

உந்தக் களவுக்காகவோ??

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, Nathamuni said:

Image result for carrera parva mountain bike

 

 

 

ஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.

அதோட வியைய் படமும் பாருங்கோ.?

2 hours ago, Nathamuni said:

உந்தக் களவுக்காகவோ??

இது இலங்கையில் அதுவும் தமிழர் பகுதியில் நடந்திருந்தால் இந்த திரி மட்டும் இல்லை யாழே பத்தி எரிந்திருக்கும்.?

Share this post


Link to post
Share on other sites

நாமு,

உங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.

உங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.

இனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.

சும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம, 

இனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா?

Share this post


Link to post
Share on other sites

ஒருத்தரும், சரி தான் அப்படியே வாங்குங்கள் என்று சொல்லவில்லை.... 

யாழ் தளம் அல்லவா...

கொஞ்சம் காசுக்காக... களவு சைக்கிள் வாங்குவது தேவையில்லாத பிரச்சனை..... இன்று லண்டன் மேஜர் கானுக்கு கடதாசி போட்டிருக்கிறேன்.

சைக்கிள் ஓடு... என்று காது கிழிய கத்துறியள்.... என்ன பாதுகாப்பது இருக்கிறது... குறைந்த பட்சம் ebay , gumtree போன்ற second hand சைக்கிள் விற்கும் தளங்கள் ஏன்.. சைக்கிள் பிரேம் நம்பர் கட்டாயம் விளம்பரத்தில் போட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது?

சைக்கிள் தொலைத்தவர்கள் தமது பிரேம் இலக்கத்தினை அந்த தளங்களில் பதிந்து வைத்தால்... களவினை குறைக்க முடியுமே என்று சொல்லி உள்ளேன்.

கொப்பி, எம்பிக்கு அனுப்பி உள்ளேன். பார்க்கலாம்.

புது சைக்கிள், நாளை கிடைக்கிறது... இன்சூரன்ஸ் பணம் வருவதால் செலவு இல்லை...

உறவுகளுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

 

raeder1.jpg

10314677.jpg

4282366_web.jpg?1522298573

இஞ்சை ஜேர்மனியிலை ஒவ்வொரு ரயில் ஸ்ரேசனுக்கு பக்கத்திலை சையிக்கிளெல்லாம் குப்பை மாதிரி பார்க் பண்ணியிருப்பாங்கள். ஒரு காக்கா குருவி கூட திரும்பிப்பாக்காது....வருசக்கணக்காய் நிக்கும்....அடியிலை புல்லுக்கூட முளைச்சு நிக்கும்.  ஒருத்தரும் களவெடுக்கிற சிந்தனையோடை பாக்கிறதேயில்லை.
என்ன செய்ய.....சனம் நாட்டுக்கு நாடு வித்தியாசம்.:grin:

இரவு பகலாய் எந்தவொரு பாதுகாப்பில்லாமலும் சைக்கிள் விட்ட இடத்திலையே அப்பிடியே நிக்கும் எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.   :cool:

Share this post


Link to post
Share on other sites

நானும் luton னில இருக்கேக்க இதை அனுபவிச்சனான். ரெண்டு மாசமா luton ரெயில்வே ஸ்ரேசனில சைக்கில விட்டிட்டு சந்தோசமா வேலைக்கு போய் வந்தனான். ஒரு களவானி பயல்   கடும் முயற்சி செய்து கடைசில கைவிட்டான். நானும். அதோட சைக்கிள் ஓடுறத விட்டிட்டன்.

Share this post


Link to post
Share on other sites

 

நந்தன் சொன்னது போல... ஸ்டேஷனுக்கு போக சைக்கிள் வேண்டாம்.... கொஞ்சம் வெள்ளனவா வெளிக்கிட்டு  நடப்பம்...

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, goshan_che said:

நாமு,

உங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.

உங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.

இனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.

சும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம, 

இனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா?

உங்களுக்கு விருப்பமானால் ஒரு தனித்திரியை ஆரம்பித்து எதையும் எழுதுங்கள். வேறு விடயமாக தொடங்கிய திரியில்  வந்து அலப்பறை... அதுவும் அரைகுறை மொழி...

அட... அந்த திரியிலாவது பதிவு போட்டிருக்கலாம்... அதுவும் இல்லை. 

அது கொழும்பில் பேசப்படும் பேச்சு மொழி... சென்னைத் தமிழ் போன்ற அழகிய மொழி... நான்,
இங்கும் பலர் அழகாக பேசிக் கூடிய மொழி. உங்களுக்கு என்ன பிரச்னை....?

ஒரு நகைச்சுவைக்காக சொன்ன விசயத்தில்.... மத விசத்தினை தயவு செய்து நுழைக்கவேண்டாம்.....

இவ்வளவு பேர் ரசிக்க.... இவருக்கு மட்டும்.... புடுங்குது... போங்க...  போய்... புள்ளை குட்டியை படிக்க வையுங்க...

உங்கள் பதில் எதுவானாலும் இங்கே உடுக்கடிக்க வேண்டாம்... தனித்திரி தொடங்கி அடியுங்கோ..

Share this post


Link to post
Share on other sites

நாதமுனி, உங்கள் வலி புரிகின்றது. எனது சைக்கிள் 14 வருடங்களின் முன் திருட்டு போனது. பல்கலைக்கழகத்து நூல்நிலையம் முன்னால் விட்டு சென்றபோது உங்களுக்கு நடந்தது மாதிரியே கேபிளை வெட்டிவிட்டு கொண்டு சென்றுவிட்டார்கள். அப்போது அதன் பெறுமதி ஆயிரம் டொலர் சொச்சம். வயிறு பத்தி எரிஞ்சது. நான் கனடா வந்து கார் வாங்க முன் சைக்கிள்தான் வாங்கினேன். அந்த சைக்கிளில் தான் வேலைக்கு, கடைக்கு எல்லா இடமும் சென்று வருவது. பின்னர் கார் வாங்கிய பின் குறுந்தூர பிரயாணங்களுக்கு சைக்கிளை பாவித்தேன். கள்ளப்பயலுகள். எல்லாம் போதை அடிக்கும் திருட்டு கோஸ்டி.

நீங்கள் சைக்கிளுக்கு பூட்டு போடும்போது வெட்டப்படமுடியாது பெரிய இரும்பு பூட்டு போடவேண்டும். கேபிளை வெட்டி எடுத்துக்கொண்டு தப்பி ஓட சில செக்கன்களே போதும். 

எமது தனபாலன் மாஸ்டர் (சென். ஜோன்ஸ்) 1987ம் ஆண்டிலேயே யூகேயில் சைக்கிள் திருட்டு போவது பற்றி எங்களுக்கு வகுப்பில் சொல்லி இருக்கிறார். ஆட்கள் சைக்கிளை பூட்டிவிட்டு ஒரு சில்லையும் கழற்றிக்கொண்டு போவார்களாம் திருடப்படாமல் இருப்பதற்கு.

Share this post


Link to post
Share on other sites

களவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.

வீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.

 

 

Deutschlandkarte-Fahrraddiebstahl-2017-GDV

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

நாமு நானா அதி சும்மா ஜாய்க்கு எழுதினதுவா. 
ஒங்களுக்கு நடந்த ஷுட் டி எங்களுக்கும் சரீ ஆத்திரம் தான் நானா.
உங்க பைக் கிடைக்கணும் நாங்களும் துவா கேட்டேதானே?
கேந்தி ஆக வாணாம்.
 
நான் நினக்கேன், உங்கட ஸ்டோரியப் பார்துட்ட்டு நம்மடவன் எவனோ ஒங்களிக்கு குனூத் ஓதி ஈக்கான்.
அய் தான் பைக் இல்லாம ஆவின.

3 hours ago, நவீனன் said:

களவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.

வீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.

 

 

Deutschlandkarte-Fahrraddiebstahl-2017-GDV

கு.சா அண்ணை இருக்கிற ஜேர்மனிய இந்த மேப்பில காணேல்ல?

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.....முதல்ல உங்களுக்கு கொஞ்சம் ஞாபகமறதி இருக்கெண்டு அக்கம் பக்கத்தில சும்மா ஒரு வதந்தியை கிளப்பி விடுங்கோ, பிறகு நீங்கள் ஜாலியா ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டி கோப்பி, தேத்தண்ணி ஏன் டிபன் கூட சாப்பிடலாம். பின்பு அவர்களே உங்கள் வீட்டுக்கும் கூட்டி வந்து விட்டுட்டு போவார்கள்.....!   😎
  • அண்ணளவாக இப்படி இருக்கும்.........!   கரையான் புத்தெடுக்க கருநாகம் குடியிருக்கும் என்று பழமொழி உண்டு.....!   😁
  • செப்ரெம்பர் 1, 1939 அதிகாலை நான்கு நாற்பதுக்கு ஜேர்மனி தனது தாக்குதலை ஆரம்பித்தது. திடீரென்று போர்  தொடுக்க  முடியாதே! அதற்காக ஒரு காரணத்தையும் ஜோடனை செய்து வைத்திருந்தார்கள். சமீப காலமாக, போலந்து சரியில்லை. எப்போதும் போர் குரோதத்துடன்  இருக்கிறது. எல்லைப்புறத்தில் இருந்த அப்பாவி ஜேர்மனிய வீரர்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இனியும் பொறுக்க முடியாது என்னும் நிலையில் நாங்கள் அவர்களை எதிர்தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளோம். கவனிக்கவும் இது எதிர்த்தாக்குதல் மட்டுமே இது எதிர் தாக்குதல் மட்டுமே என்று காட்டுவதற்காக நாசிகளின் பிரச்சாரப்பிரிவு சிறப்பான முன்னேற்பாடுகளை ஓகஸ்ட் 31 திகதி இரவே செய்திருந்தது. ஓகஸ்ட்  31 மதியமே போலந்து மீதான தாக்குதலுக்கு ஹிட்லரால் கட்டளையிடப்பட்டுவிட்டது. அதற்கான காரணமாக  ஜேர்மனியின் வதைமுகாம்களில் (Concentration Camps) இருந்த கைதிகளுக்கு போலந்து ராணுவ சீருடை அணிவித்து ஒரு போலித்தாக்குதலை ஏற்பாடு செய்திருந்தனர். படையெடுப்புக்கு மேலதிக ஆதாரமாக காட்டுவதற்காக போலந்து சீருடையில் இறந்த சில செறிவு முகாம் கைதிகளையும் அவர்கள் விட்டுச்சென்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியன் ஜேர்மன் துருப்புக்கள் 2800 கி மீ நீளமான போலந்து எல்லையை கடந்து போலந்து மீது  தாக்குதலை நடத்த அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிட்லரை பொறுத்தவரை அவர் நம்பியபடி  உலகில் இனரீதியாக உயர்ந்த குடிமக்களாக வாழும் (racially superior Germans - rassisch Überlegenen Deutschen) ஜேர்மன் குடிமக்கள் வாழ்வதற்கு விசாலமான அகன்ற பாதுகாப்பான பிரதேசத்தை பெற்றுக்கொள்வார்கள்.   முதலாவது விமான தாக்குதல் திட்டமிட்டபடி அதிகாலை நான்கு நாற்பது மணிக்கு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. ஃபீல்ட் மார்ஷல் Walther von Brauchitsch கட்டளைத்தளபதியாக கடமையாற்றினார்.   Wielun என்னும் நகரத்தை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். பாதி உறக்கத்திலும் பாதி விழிப்பிலும் இருந்த போலந்து மக்கள் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டார்கள். ஆபத்து என்பதை உணர்வதற்கு முன் சிதறி வெடிக்க ஆரம்பித்தார்கள். போர் பற்றிய எந்த முன்னறிவிப்பும் தரப்படவில்லை. கட்டடங்கள் பொடிபொடியாக உதிர ஆரம்பித்தன. வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்து தப்ப முயன்றார்கள். சில நிமிடங்களில் அருகில் இருந்த கட்டங்கள் அவர்கள் மீது சாய்ந்தன. வீடுகள் தீப்பிடித்து எரிய, ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உள்ளேயே கருகிக் கரியாக உதிர்ந்தனர். சில மணி நேரங்களில் ஜேர்மன் வீரர்கள் விமானத்தில் இருந்தபடி ஒரு சுற்று சுற்றி வந்து நோட்டமிட்டனர். கரும்புகை ஒரு சுற்று சுற்றி வந்து நோட்டமிட்டனர். கரும்புகை மேலே கிழம்பி அவர்களை நோக்கி நகர ஆரம்பித்தது. புன்னகை செய்துகொண்டார்கள். இது முதல் வெற்றி. ஹிட்லருக்கு சொல்லவேண்டும். நகரத்தின் எழுபத்தைந்து சதவிகிதம் சேதம். இறப்பு எண்ணிக்கை தோராயமாக ஆயிரத்து இருநூறு. பெரும்பாலானவர்கள் சிவிலியன்கள். இரண்டாம் உலகப்போரின் தொடக்கச் சம்பவம் இது என்று இதனைச் சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. டான்ஷிக் மீதான தாக்குதல் வீலூன் நகர் தாக்கபட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம் டான்சிக் தாக்கப்பட்டது. இது ஒரு துறைமுக நகரம் இங்கு ஜேர்மனியர்களே பெரும்பான்மையினர். பதினெட்டாம் நூற்றாண்டில் ஜேர்மனியில் ஒரு பகுதியாக இருந்தது டான்ஸிக். வெர்ஸைல்ஸ் ஒப்பந்தம் ஜேர்மனியிடம் இருந்து டான்ஸிக்கை பிரித்திருந்தது. டான்ஸிக்கை விடுவித்தே தீருவேன் என்று 1938 ல் இருந்தே பிரசாரம் செய்ய ஆரம்பித்திருந்தார் ஹிட்லர். டான்ஸிக்கில் உள்ள வெஸ்ரர்பிலாற் (Westerplatte) என்னும் பகுதியை தாக்க ஆரம்பித்தது ஜேர்மனி. கடல் வழித் தாக்குதல். காலை எட்டு மணிக்கு மோக்ரா என்னும் பகுதியில் ஒரு நகரம் தாக்கப்ட்டது... படைபலம் என்று பார்த்தால், 37 டிவிஷன் , 12 பிரிகேட், 900 போர்விமானங்கள். ஜேர்மனியின் பிரமாண்டமான அணிவகுப்புக்கு முன்னால் இது குட்டி சுண்டைக்காய். படைபலத்தோடுகூட தெளிவான போர்த்தந்திரத்தையும் உபயோகித்தது ஜேர்மனி. மேற்கு, தெற்கு என்று சகல திசைகளிலும் சுற்றிவளைக்க ஆரம்பித்தார்கள். தெளிவாக்த திட்டமிட்டு தொடுக்கபட்ட தாக்குதல், மின்னல் வேகத்தில் புகுந்து, வேண்டியதை அழித்துவிட்டு, கைப்பற்றிக் கொண்டார்கள். வான் வழி, கடல் வழி, தரை வழி மூன்றும் அடுத்தடுத்து நடந்தன. ஒன்று முடிந்தால், மற்றொன்று. அது தீர்ந்தால் இன்னொன்று. சுதாகரிப்பதற்கு அவகாசம் சுத்தமாக இல்லை. விமானநிலையங்கள், ராணுவத்தளங்கள், தகவல் தொடர்பு மையங்கள், ரயில் பாதைகள், வணிக கட்டடங்கள், அரசாங்க அலுவலகங்கள், வீடுகள், கடைகள் எதையும் விட்டுவைக்கவில்லை. இறுதி இலக்கு, தலைநகரம் வார்சோ. ஜேர்மனியை எதிர்கொண்டு தாக்கி முடியறித்துவிட முடியும் என்னும் நம்பிக்கை போலந்துக்கு நிச்சயமாக இல்லை. அசுரவேகத்தில் வரும் ஜேர்மனிப்படைகளை எதிர்நோக்க தோதான ராணுவத்தலைமை அங்கே இல்லை. முனைப்பும் ஊக்குவிப்பும் இல்லை என்னும் நிலையில் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? நிஜத்தில், தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குள் முழி பிதுங்கிவிட்டது அவர்களுக்கு. செப்ரெம்பர் மாதம் 3 ம் திகதி ஜேர்மனிக்கு எதிரான போர் அறிவிப்பை வெளியிட்டன பிரிட்டனும் பிரான்ஸும். போலந்துக்கு இதில் பெரிய ஏமாற்றம். ஜேர்மனி தாக்க ஆரம்பித்தவுடன் வந்திருக்க வேண்டாமா? நேசம் என்றால் இதுவா பொருள்? அடிபட்டு கீழே விழுந்து உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறோம் இப்போது வந்து சாகவாசமாக கேட்கிறார்கள், என்ன ஆச்சு நண்பா என்று. என்னவென்று சொல்ல. சரி வந்தது தான் வந்தார்கள். உறுதியான முறையில் எதிர்க்கவாவது செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஜேர்மன், பிரான்ஸ் எல்லையில் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஒப்பந்தத்தை மீறி எப்படி போலந்தைத் தாக்கலாம் என்று பிரான்ஸ் திமிறிக்கொண்டு வரவில்லை. என் அணியில் கைவைத்த உன் கையை உடைக்காமல் விடமாட்டேன் என்று சூளுரைக்கவில்லை. ஒப்புக்கு சிலரை அனுப்பினார்கள். மோதல் அல்ல. கிட்டத்தட்ட தெருச்சண்டை போல் எதோவொன்று நடந்தது. அதுவும் பெயரளவுக்கு தான். நாளை யாராவது கேள்வி கேட்டால் கிடையாதே நானும் ஜேர்மனியை எதிர்த்து சண்டை போட்டேனே என்று சொல்லிக் காட்டுவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு அது. ஒரு வேளை பிரான்ஸ் முனைப்புடன் ஜேர்மனி மீது போர் தொடுத்திருந்தால் ஜேர்மனி நிச்சயம் தள்ளாடியிருக்கும். காரணம் எண்பத்துஐந்து சதவீத படைகளை ஜேர்மனி போலந்துக்குத் திருப்பிவிட்டிருந்தது. ஜேர்மனியை பாதுகாக்க பதினைந்து சதவீத படையே எஞ்சியிருந்தது. போலந்தில், ஜேர்மன் படைகளின் முன்னேறின.  "மின்னல் போர்" என்று அழைக்கப்படும் ஒரு ராணுவ மூலோபாயத்தைப் பயன்படுத்தி, கவசப் பிரிவுகள் எதிரிகளின் கோடுகள் மற்றும் எதிரிகளின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் வழியாக அடித்து நொறுக்கப்பட்டன, அவை மோட்டார் பொருத்தப்பட்ட ஜேர்மன் காலாட்படையால் சூழப்பட்டு கைப்பற்றப்பட்டன, அதே நேரத்தில் டாங்கிகள் மீண்டும் மீண்டும் முன்னேற விரைந்தன. இதற்கிடையில், அதி நவீன ஜேர்மன் விமானப்படை – Luftwaffe  - போலந்து விமானத் திறனை அழித்தது,  விமான ஆதரவை வழங்கியது, மேலும் எதிரிகளை மேலும் அச்சுறுத்தும் முயற்சியில் போலந்து நகரங்களில் கண்மூடித்தனமாக குண்டுவீச்சு நடத்தியது.  ஒரு வலுவான தற்காப்பு நிலைப்பாட்டை எடுப்பதற்கு பதிலாக, ஜேர்மனியர்களை எதிர்கொள்ள துருப்புக்கள் முன்னால் விரைந்து செல்லப்பட்டன, அவை முறையாக கைப்பற்றப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. செப்டம்பர் 8 க்குள், ஜேர்மன் படைகள் வார்சோவின் புறநகர்ப் பகுதியை அடைந்தன, படையெடுப்பின் முதல் வாரத்தில் 225 கிலோமீற்றர் முன்னேறியது இதற்கிடையில் செப்ரெம்பர் 6 ம் திகதியே போலந்தின் பிரதமர் Ignacy Moscicki, உயர் ராணுவ மார்ஷல் மற்றும் அவரது அமைச்சர்கள் வார்சோவில் இருந்து அவசரமாக வெளியேறிவிட்டனர். போலந்து பின்வாங்க ஆரம்பித்திருந்தது. வார்சோவுக்கு மேற்கே இருந்த Bzura கடல் பகுதியில் நடைபெற்ற மோதல் செப்ரெம்பர் 9 முதல் 19 வரை நீடித்தது. இருந்த கொஞ்சநஞ்ச எதிர்ப்பும் நசுக்கப்ட்டது. முதலில் பாலங்களை குண்டுகள் வீசி தாக்கினார்கள். எதிர்தாக்குதல் தொடுப்பதற்காக ராணுவத்தினர் ஒரிடத்தில் கூடியபோது அடுத்தடுத்து அலையலையாக, வான்வெளித்தாக்குதல்கள் தொடுக்கபட்டன. ஐம்பது கிலோ எடையுள்ள லைட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலான சேதத்தை ஏற்படுத்தின இந்த குண்டுகள். சோவியத்தின் எதிர்வினை இந்த பின்னணியில் செப்ரெம்பர் 17, 1939 அன்று சோவியத் அயலுறவுத்துறை அமைச்சர் லோலோடோவ் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி இது. ஜேர்மனிக்கும் போலந்துக்கும் இடையில் நடைபெறும் இந்த யுத்தம் ஒரு விஷயத்தை தெளிவாக்குகிறது. போலந்து  அரசு செயலிழந்துவிட்டது. ஆளும் வர்க்கத்தினர் திவாலாகிவிட்டனர். போலந்தின் தலைநகரம் என்று அழைக்கமுடியாத நிலையில் வார்சோ இருக்கிறது. அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மக்களின் எதிர்காலத்தை இனி விதி தான் தீர்மானிக்கவேண்டும் என்று விட்டுவிட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில், சோவியத்யூனியனுக்கும் போலந்துக்கும் இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. போலந்தை காக்கும் அதி முக்கிய பணி சோவியத்திடம் வந்து சேர்ந்துள்ளது. எந்த விதமான விபத்தும் எப்போதும் நேரலாம் என்னும் நிலையில் இருக்கிறது போலந்து. இப்படி போலந்து இருப்பதால் சோவியத்துக்கும் தொந்தரவு தான். தவிரவும், போலந்தில் உள்ள உக்கிரேனியர்களையும் பைலோரஷ்யர்களையும் சோவியத்தால் கைவிட முடியாது. அவர்கள் சோவியத்துடன் ரத்த உறவு கொண்டவர்கள். அவர்களுக்கு கை கொடுப்பது சோவியத்தின் கடமை. போலந்துக்குள் சோவியத் காலடி எடுத்து வைக்கப்போவதன் முன்ன்றிவிப்பாக இந்த உரை அமைந்திருந்தது. அக்டோபர் முதலாம் திகதி போர் முடிவுக்கு வந்தபோது போலந்து சின்னாபின்னமாகி இருந்தது. சாகாமல் எஞ்சியிருந்த ராணுவத்தினர் (காலாட்படை மற்றும் விமானப்படை பக்கத்து தேசங்களான ரூமேனியாவுக்கும் ஹங்கேரிக்கும் பிரித்தளிக்ப்பட்டனர். வார்சோ, கேலட்ஸ், சிலேஸியா, போரானியா, லோட்ஸ் ஆகிய மாகணங்கள் உடனடியாக ஜேர்மனின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. சோவியத் – ஜேர்மன் ஒப்பந்தத்தையும், சோவியத் போலந்தின் பகுதிகளை மீட்டெடுத்ததையும் அமெரிக்கா இன்றுவரை குறை சொல்லிக்கொண்டிருக்கிறது. போலந்தை பங்கிட்டுக் கொள்ளுவதற்காக ஹிட்லரும் ஸ்டாலினும் ரகசியமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகவும் அதன்படி இரு நாடுகளும் போலந்து மீது போரிட்டு உனக்கு அது, எனக்கு இது என்று பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டதாகவும் குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா. அக்ரோபர் 1 ம் திகதி வின்ஸ்டல் சேர்ச்சில் ரேடியோவில் உரையாடினார். கிழக்கு போலந்தில் நாசிகளை தடுத்து நிறுத்திவிட்டது சோவியத். நாம் முன்னரே சோவியத்துடன் கூட்டு சேர்ந்திருக்கவேண்டும். லண்டன் ரைம்ஸில் ஜார்ஜ் பேர்னாட் ஷா இப்படி எழுதினார். “ஸ்டாலினுக்கு மூன்று சியர்ஸ்! ஹிட்லரை முதல் முறையாக வெற்றிகரமாக முடக்கிக்காட்டினர் ஸ்டாலின்.” சாம்பர்லைனும் தயங்கி தயங்கி அக்டோபர் 26 ம் திகதி ஒப்புக்கொண்டார். ஜேர்மனியிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக செம்படை போலந்தின் சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டியிருந்தது. ரூமேனியா மீதான வழியாக தப்பிச்சென்ற போலந்து அரசாங்க குழு பின்னர் லண்டன் வந்தபோது, போலந்து பற்றி கருத்து தெரிவித்திருந்தது. அப்போதும் சோவியத்தை ஆக்கிரமிப்பு அரசாக அவர்கள் குறிப்பிடவில்லை. ஹிட்லர், ஸடாலினை விட தேவலை என்பது தான் அவர்களது முந்தைய எண்ணம் என்பதை இங்கே கவனிக்கவேண்டும். செம்படை வீரர்கள் உள்ளே நுழைந்தபோது, பைலோ ரஷ்யர்களும் உக்கிரேனியர்களும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். உக்கிரேனிய பெண்கள் சோவியத் டாங்கிகளுக்கு மாலை அணிவிப்பதை அமெரிக்க நிருபர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். லித்துவேனியாவின் முந்தைய தலைநகரமான வில்னாவை (Vilna) அதனிடமே திருப்பித்தந்தது சோவியத். போலந்து இதனை முன்னர் கைப்பற்றியிருந்தது. லித்துவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மூன்று நாடுகளின் பிரதிநிதிகளையும் மொஸ்கோவுக்கு வரவழைத்த சோவியத், ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. சோவியத் போலந்துக்குள் காலடி எடுத்து வைத்து ஒரு மாதம் ஆவதற்கு முன்னால், அக்டோபர் 10ம திகதி இந்த மூன்று நாடுகளுடனும் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தப் பிரதேசங்களில் (பால்டிக் நகரங்கள்) இருந்த ஐந்து லட்சம் ஜேர்மனியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஹிட்லருக்கு இதில் பெரும் அதிருப்தி. பால்டிக் ஜேர்மனியர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த பகுதிகள் இவை. நூற்றண்டுகணக்கில் அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்தவர்கள். தனது எல்லைகளையும் பக்கத்து நாடுகளின் எல்லைகளையும் பாதுகாப்பதற்காக சோவியத் யூனியனால் நடத்தப்பட்ட போராகவே சோவியத் அந்தப் போரை அறிவித்தது. அந்த வகையில், சோவியத்யூனியன் இப்போரில் பெற்ற வெற்றி முக்கியமானது. சரணடைந்தது போலந்து.  ஜேர்மனிக்கு எதிராக எதிர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அளவிற்கு போலந்து ஆயுதப்படைகள் அங்கு தரித்து வைத்திருக்க முடியும் என்று நம்பின, ஆனால் செப்டம்பர் 17 அன்று சோவியத் படைகள் கிழக்கிலிருந்து படையெடுத்ததன் பின்னர், போலந்து  எல்லா நம்பிக்கையும் இழந்தது. அடுத்த நாள், போலந்தின் அரசாங்கமும் இராணுவத் தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். செப்டம்பர் 28 அன்று, வார்சோ பாதுகாப்பு அரண் இடைவிடாத ஜெர்மன் முற்றுகைக்கு சரணடைந்தது. அந்த நாளில், ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் தங்கள் ஆக்கிரமிப்பு மண்டலங்களை கோடிட்டுக் காட்டும் ஒரு ஒப்பந்தத்தை முடித்தன. அதன் வரலாற்றில் நான்காவது முறையாக, போலந்து அதன் சக்திவாய்ந்த அண்டை நாடுகளால் பிரிக்கப்பட்டது. போலந்து தரப்பில் 60000 க்கு மேற்பட்ட ராணுவத்தினர் இப்போரில் கொல்லபட்ட. 600000 க்கும் அதிகமானோர் யுத்த கைதிகளாக ஜேர்மன் படைகளால் பிடிக்கப்பட்டனர்.   நூல்  இரண்டாம் உலகப்போர் எழுதியவர்  மருதன் வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே
  • வரவேற்புக்கு மகிழ்ச்சியும் அன்பும்!  பிரியமான தோழி
  • அப்படித்தான்...  ஒரு பழமொழியும், தமிழில் இருக்கு... ஈழப்பிரியன். உடையார்... நமக்கு, நாக பாம்பு கடிக்க வைக்க....   "பிளான்" பண்ணியிருக்கிறார் போலை கிடக்குது. 🤪 என்ன இருந்தாலும்... நாங்கள் தான், புத்திசாலித்தனமாய் நடக்க வேணும் கண்டியளோ...