Jump to content

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 01

April 5, 2018
ananthapuram-05.jpg

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பு யுத்தத்தில் தோல்வியடைந்ததை இன்னும் ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாதவர்கள் பலருள்ளனர். காரணம்- புலிகள் அவ்வளவு பலத்துடன் இருந்தார்கள். அவர்கள் யுத்தத்தில் தோல்வியடைவார்கள் என யாரும் கற்பனையே செய்திருக்கமாட்டார்கள்.

விடுதலைப்புலிகள் ஏன் யுத்தத்தில் தோல்வியடைந்தார்கள்?

இந்த கேள்விக்கு இன்றுவரை பலரிற்கு விடை தெரியாது. யுத்தத்தின் கடைசிக்கணங்கள் எப்படியிருந்தன? விடுதலைப்புலிகள் எங்கே சறுக்கினார்கள்? யுத்தத்தை புலிகளின் தலைமை எப்படி அணுகியது? ஏன் அவர்களால் வெல்ல முடியவில்லை? நெருக்கடியான சமயங்களில் புலிகளின் தலைமைக்குள் நடந்த சம்பவங்கள் என்ன?

பெரும்பாலானவர்களிற்கு மர்மமாக உள்ள இந்த விசயங்களை முதன்முதலாக பகிரங்கமாக பேசப் போகிறது இந்த தொடர். புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் என- வாராந்தம் இரண்டு பாகங்கள் பதிவேற்றுவோம். வாசகர்களின் ஒத்துழைப்பை பொறுத்து புதிதாக எப்படி செய்வதென்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

விடுதலைப்புலிகளை பற்றி இவர்கள் என்ன புதிதாக கூறப்போகிறார்கள்… பேஸ்புக்கை திறந்தால் இதுதானே நிறைந்து கிடக்கிறது என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால்- “கடைசிக்கணத்தில் மனைவியை அனுப்பிவிட்டு குப்பிகடித்த தளபதி“… “பிரபாகரனை ஏற்ற வந்த அமெரிக்க கப்பலின் பின் சீட்டில் இருந்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்“, “முள்ளிவாய்க்காலில் நடந்தது தலைவரின் தீர்க்கதரிசனம்“ போன்ற பேஸ்புக்கில் பரவும் விசயமல்ல இது. இந்த தொடரை பற்றி நாமே அதிகம் பேசவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் நீங்களே பேசுவீர்கள்.

இறுதியுத்தததில் நடந்த சம்பவங்களையே அதிகம் இதில் பேசுவோம். ஆனால், தனியே அதை மட்டுமே பேசவும் போவதில்லை. விடுதலைப்புலிகளின் உள்விவகாரங்கள் பலவற்றையும்- அது புலிகளின் ஆரம்ப நாளாகவும் இருக்கும்- பேசப்போகிறோம். இந்த தொடர் விடுதலைப்புலிகள் பற்றிய கணிசமான புதிரை வாசகர்களிற்கு அவிழ்க்கும். புலிகளை பற்றிய பிரமிப்பை சிலருக்கும்… புலிகளை பற்றிய விமர்சனத்தை சிலருக்கும்… புலிகள் பற்றிய மதிப்பை சிலருக்கும்… புலிகள் பற்றிய அதிருப்தியை சிலருக்கும் ஏற்படுத்தும். ஏனெனில், விடுதலைப்புலிகள் பற்றிய முழுமையான குறுக்குவெட்டு தொடராக இது இருக்கும். இதுவரை புலிகள் பற்றிய வெளியான எல்லா தொடர்களையும் விட, இது புதிய வெளிச்சங்களை உங்களிற்கு நிச்சயம் பாய்ச்சும்.

z_p08-President2-300x200.jpg

இராணுவத்தின் 53வது டிவிசன் கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண. அவரது நந்திக்கடலுக்கான பாதை நூலில் இறுதி யுத்தத்தில் புலிகள் எப்படி போரிட்டார்கள், புலிகளின் செயற்றிறன் எப்படியிருந்தது, புலிகளின் தளபதிகள் மற்றும் தலைமையின் முடிவு எப்படியமைந்தது என்பது பற்றி  எழுதியுள்ளார். அவர் எதிர்தரப்பில் நின்று போரிட்டதால் பல உள்விவகாரங்கள் தெரியாமல் போயிருக்கலாம்.

2006 இல் மன்னாரில் தொடங்கிய படைநடவடிக்கை வெள்ளாமுள்ளிவாய்க்காலில் 2009 இல் நிறைவடைந்தது. இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்நதது? அபாயத்தை புலிகள் உணராமல் இருந்தனரா? எதிரி தொடர்பாக பிழையான கணக்கு போட்டு விட்டார்களா?

அதனைவிட, விடுதலைப்போராட்டத்தின் வரலாற்று பாதையில் எந்த இடத்தில் சறுக்கியது? நீண்டநாள் நோவு உடலில் திடீரென ஆபத்தை ஏற்படுத்துவது போல எப்பொழுதோ விட்ட பழைய தவறுகள் எவையெல்லாம் பின்னாளில் பாதகமானது? எல்லாம் சரியாக இருந்து வெறு வெளிக்காரணிகள் பாதகமாக அமைந்ததா? என்ற நீண்ட கேள்விகள் உள்ளன.

இறுதி யுத்த மர்மங்கள் இன்னும் நீடிக்கிறது. பிரபாகரன் இருக்கிறாரா.. இல்லையா? இருந்தால் எங்கே? மரணமானால் எப்படி மரணித்தார்? இப்படி ஏராளம் கேள்விகள் தமிழ் சமூகத்தில் பூடகமாகவே உள்ளன. யதார்த்தத்தின் பாற்பட்டு சில விடயங்களை அனுமானிக்க முடிந்தாலும், நமது சமூகத்தில் அது பகிரங்கமாக பேசப்படாமலும் உள்ளது.

இந்த இரகசியங்கள் அவிழ்க்கப்பட வேண்டும். சரி, தவறு, வீரம், அர்ப்பணிப்பு, தியாகம் என ஏராளமானவற்றால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் கணங்கள் மனம் நடுங்க வைப்பவை. தானே உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியை தனிஆளாக கடைசி மட்டும் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரன் என்ன செய்தார்? ஒவ்வொரு தளபதிகளாக வீழ்ந்து கொண்டிருக்க, பிரபாகரனின் மனநிலை எப்படியிருந்தது?

17264442_164116904104842_381124174577518

இதுபற்றியெல்லாம் பகிரங்கமாக பேச இதுவரை தமிழர்களிற்கு வாய்ப்பிருக்கவில்லை. புலிகள் அமைப்பில் முடிவுகளை எடுக்கும் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள் யாரும் இதுவரை அதை பேசவில்லை. அப்படியானவர்களுடன் பேசி, அமைப்பின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்தவர்களுடனும் பேசி, சம்பவங்களை யாரும் தொகுப்பாக்கவில்லை. அந்தகுறையை போக்கி, புலிகள் அமைப்பின் உள்வீட்டு தகவல்கள், இறுதி யுத்தகால சம்பவங்களை தொகுப்பாக்கியுள்ளோம். மிக நம்பகமான மூலங்களை கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த தொடர், புலிகள் பற்றி வெளியாகியிருக்காத பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும். குறிப்பாக இறுதி யுத்த தகவல்கள். புலிகள் பற்றி வெளியான தொடர்கள், புத்தகங்களுடன் ஒப்பிடும்போது இது பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை நிச்சயமாக கூறலாம்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பலரும் பலவிதமான காரணங்களை சொல்கிறார்கள். சர்வதேச கூட்டிணைவு, எதிர்பார்த்த உதவிகள் வராமை, காட்டிக் கொடுப்பு என ஏராளம் காரணங்கள். இந்த சரிவு ஏதோ எதிர்பாராத விதமாக ஏற்பட்டதாதை போன்ற தோற்றத்தை அந்த காரணங்கள் உருவாக்குகின்றன. ஆனால் அது உண்மையல்ல.

சமாதான பேச்சுக்கள் முறியும் தறுவாயிலேயே, பேச்சுக்களை முறித்தால் என்ன நடக்கும் என்பதை பிரபாகரன் அறிந்திருந்தார். யுத்தம் ஆரம்பிக்கும் தறுவாயில், அதிசயங்களை நிகழ்த்தாவிட்டால் என்ன நடக்குமென்பதை பிரபாகரன் அறிந்தே வைத்திருந்தார். அதை அவர் போராளிகள் மத்தியில் தெளிவாக சொல்லியிருந்தார்.

2008 இன் இறுதிப்பகுதி. பரந்தன் சந்தியை 58வது டிவிசன் படையினர் பூநகரி தொடக்கம் கரடிப்போக்கின் பின்பகுதி வரையான பகுதிக்குள்ளால் குறிவைத்து நகர்ந்து கொண்டிருந்தனர்.  கிளிநொச்சியில் புலிகள் கடுமையாக போரிட்டபடியிருந்தனர். அங்கு பலமான மண்அணைகள் அமைக்கப்பட்டிருந்ததால், 57வது டிவிசன் படையினர் முன்னேற முடியாமல் தேங்கி நின்றனர். 58வது டிவிசன் படையினர் பரந்தன் சந்தியை அடைந்தால் மாத்திரமே, இராணுவத்தால் அடுத்து ஏதாவது செய்ய முடியுமென்ற நிலைமை.

அந்த நாட்களில், முரசுமோட்டையில் அமைந்துள்ள ஒரு முகாமில்- முன்னர் பயிற்சி முகாமாக இருந்தது- களமுனை போராளிகளுடன் ஒரு அவசர சந்திப்பு நடந்தது. பிரபாகரனும் வந்தார். பெரும்பாலான முக்கிய தாக்குதல் தளபதிகள் நின்றார்கள். பொட்டம்மானும் வந்திருந்தார்.

அன்றைய கூட்டத்தில் பிரபாகரன் அதிகம் பேசவில்லை. கொஞ்சம் இறுகிய முகத்துடனேயே வந்தார். சலனமற்ற குரலில் உரையாற்றினார். மிகச்சுருக்கமாக அவர் ஆற்றிய உரையின் சாரம்- தொடர்ந்து இப்படியே பின்வாங்கிக் கொண்டிருக்க முடியாது. இராணுவத்தை ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தி, ஏதாவது அதிசயம் நடத்தி காட்ட வேண்டும். அதை என்னால் செய்ய முடியாது. நீங்கள்தான் செய்ய வேண்டும். நாம் எல்லோருமே இனிவரும் நாட்களில் அர்ப்பணிப்புடன் போரிடுவோம்.

இதை சொல்லிவிட்டு, தளபதிகளுடன் கொஞ்சம் கடிந்து கொண்டார்.

தளபதிகள் அனைவரையும் முன்னரணிற்கு அருகில் சென்று, போராளிகளுடன் தங்கியிருக்குமாறு சொன்னார். போராளிகளுடன் தளபதிகளும் நின்றால்தான், அவர்கள் உற்சாகமாக போரிடுவார்கள் என்றார்.

அந்த சந்திப்பில் பிரபாகரன் சொன்ன ஒரு வசனம் மிக முக்கியமானது. வரவிருக்கும் அபாயத்தை அவர் தெரிந்தே போரிட்டார் என்பதை புலப்படுத்தும் வசனம் அது.

“இனியும் பின்னால் போய்க்கொண்டிருக்க முடியாது. இப்பிடியே போய்க்கொண்டிருந்தால் விரைவில் எறும்பைப்போல நசுக்கி எறிந்து விடுவார்கள்“ – இது அன்றைய கூட்டத்தில் பிரபாகரன் சொன்ன வசனம்!

போராளிகளுடன் கலந்துரையாடிவிட்டு பிரபாகரன் அடுத்து செய்ததுதான் இன்னும் ஆச்சரியமானது.

நடக்கப்போவதை மட்டுமல்ல, அது எப்படி நடக்கப் போகிறது என்பதையும் பிரபாகரன் தெரிந்தேயிருக்கிறார் என்றும் சொல்லலாம். இது பிரபாகரனை மகிமைப்படுத்த சொன்ன வசனமல்ல. சம்பவத்தை சொல்கிறோம், நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

தான் எடுத்து வந்திருந்த – The Spartans என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான 300 வீரர்கள் திரைப்படத்தின் சில நிமிட காட்சியை திரையில் காண்பிக்க சொன்னார். படத்தின் இறுதிக்காட்சியே காண்பிக்கப்பட்டது. வாழ்வா சாவா என்ற நிலையில் உறுதியுடன் போராடி ஸ்பாட்டன் மரணமான காட்சி.

இந்த திரைப்படம் பிரபாகரனிற்கு மிகப்பிடித்தமான திரைப்படமாக இருந்தது.

FP3248_300_spartan-300x200.jpg

ஸ்பார்ட்டாவின் 300 வீரர்கள் தமது தாய் நாட்டிற்காக இலட்சக்கணக்கான பாரசீக படையுடன் கடைசிவரை போரிட்டு இறந்த கதை. 300 வீரர்களை தலைமை தாங்கிய மன்னனின் வீரரம் திரைப்படத்தில் வெகுஅழகாக காட்சிப்படுத்தப்பட்டது. அவனது இறப்பின் மூலம் அந்த நாட்டிற்கு உடனடியாக விடுதலை சாத்திப்படாவிட்டாலும், விடுதலைக்கான சூழலை ஏற்படுத்தியதுதாக திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. படத்தின் இறுதிக்கட்டத்தில் குறைந்த வீரர்களுடன் நின்ற ஸ்பார்டனை பாரசீகபடை சுற்றிவளைத்தது.

வெட்டைவெளியில் நடந்தது அகோரபோர். ஒவ்வொரு வீரராக வீழ, ஸ்பார்ட்டன் சளைக்காமல் போரிட்டு, கடைசியில் மடிந்தான். வெள்ளாமுள்ளிவாய்க்காலிலும் இறுதியில் அப்படியொரு சூழலில்த்தான் இறுதிப்போர் நிகழ்ந்தது.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/274/

 

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தொடரின் தொடக்கத்தின் ‘பில்டப்’ உண்மைகளைப் புட்டு வைக்குமா அல்லது சாத்திரியார் எழுதிய “அன்று சிந்திய இரத்தம்” மாதிரி இருக்குமா தெரியவில்லை.

யாழ் களத்தில் வாசித்துவிட்டு ஒரு கருத்தும் வைக்காமல் அப்பால் நகர்ந்துபோகின்றவர்களாக பலரும் மாறியுள்ளதால் அலசி ஆராய வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலகுமாரனிற்கு பிரபாகரன் கொடுத்த அதிர்ச்சி! – இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 02

April 5, 2018
Ltte_Ledr1-696x380.jpg

பீஷ்மர்

300 வீரர்கள் படத்தில் பிரமாண்ட எதிரியுடன் சிறிய, உறுதியான, தாய்நிலத்தில் பற்றுக்கொண்ட படை மோதி அழியும். நிறைய சலுகைகள் கொடுத்து சரணடையுமாறு பாரசீக மன்னன் கேட்டுக்கொண்டபோதும், ஸ்பார்ட்டா மன்னன் லியானிடஸ் சரணடையவில்லை. அவரின் முடிவுடனேயே படைவீரர்களும் இருந்தனர். வெற்றி அல்லது வீரமரணம்தான் அவர்களின் நிலைப்பாடு.

ஸ்பார்ட்டன்களின் வீரம், படம் எடுக்கப்பட்ட விதம், திரைக்கதை, உணர்வுபூர்வ நடிப்பு என எல்லாம் சேர்ந்து படத்தை மெகாஹிட்டாக்கியது. உலகம் முழுவதும் உள்ள அநீதிக்கெதிரான, போராடும் மக்கள் அனைவரின் இதயத்தில் தங்கியபடம் இது.

அந்தப்படம் பிரபாகரனின் இதயத்திலும் தங்கிவிட்டது.

பிரபாகரன் அந்தப்படத்தை சுமார் 20 தடவைகளிற்கும் அதிகமாக பார்த்துவிட்டார். எல்லாப் போராளிகளும் அந்தப்படத்தை பார்க்க வேண்டுமென்பதிலும் கூடுதல் ஆர்வமும் காட்டினார். தமிழில் வெளியானால் கூடுதல் நன்மையென நினைத்து, தமிழ் மொழிபெயர்ப்பையும் செய்ய உத்தரவிட்டார்.

அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளிடம் திரைப்பட மொழிபெயர்ப்பு பிரிவு இருந்தது. தமக்கு தேவையான, நல்ல படங்களை அவர்கள் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் தமிழாக்கத்தில் 300 வீரர்கள் வெளியாகியது. அதுதவிர, 300 பருத்திவீரர்கள் என்ற பெயரில் இந்திய தமிழாக்கமும் வெளியானது.

maxresdefault-10-300x169.jpg பாலகுமாரன்

பல்வேறு சந்தர்ப்பங்களில் போராளிகள், முக்கியஸ்தர்களிடம் அந்த படம் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். 300 வீரர்கள் படம் வெறும் படமாக அல்லாமல், ஒரு கொள்கையாக… சித்தாந்தமாக பிரபாகரன் நினைத்தார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தராக இருந்தவர் பாலகுமாரன். ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவர். பின்னர் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போனவர்.

ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.

கிளிநொச்சியில் பாலகுமாரனின் வீடு இருந்தது. கிளிநொச்சி குள அணைக்கட்டிலிருந்து பிரிந்து செல்லும் முதலாவது பெரிய வீதியில்-பரவிப்பாஞ்சான்- அவரது வீடிருந்தது. அங்கு கிளிநொச்சியில் வாழ்ந்த படைப்பாளிகள், அரசியல் விமர்சகர்கள் என சிலர் கூடிக்கதைப்பது வழக்கம்.

அது சமாதானப்பேச்சுக்கள் குழப்பமான சமயம். யுத்த தயாரிப்புக்களில் இருதரப்பும் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தன. வன்னிக்கான தரைவழிப்பாதைகள் மூடப்பட்டுவிட்டன.

நீண்ட சமாதானத்தின் பின்னர் யுத்தம் ஆரம்பிக்கின்றதென்பதும் அவர்கள் மிரண்டுவிட்டார்கள். பாலகுமாரனும் மிரண்டுவிட்டார். அரசாங்கத்துடன் விட்டுக்கொடுப்பாக நடந்து கொள்ள வேண்டுமென்பதை போன்ற ஒரு கருத்தை அந்த வட்டம் ஏற்படுத்திக்கொண்டது. அந்தக்கருத்தை விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென விரும்பினார்கள். ஆனால் அது அவர்களால் முடியாமல் இருந்தது.

bala-300x229.jpg இராணுவத்தின் பிடியில் பாலகுமாரனும், மகனும்

புலிகளுடன் இருந்த அரசியல் விமர்சகர்கள், புத்திஜீவிகள் எனப்படுபவர்கள் கிளிநொச்சியிலிருந்த புலிகளின் அரசியல்த்துறை செயலகம், ஈழநாதம் பத்திரிகை, புலிகளின்குரல் வானொலி, தமிழீழ தேசிய தொலைக்காட்சி என்பனவற்றை உள்ளடக்கிய வட்டத்தில்த்தான் இருந்தார்கள். இந்த வட்டம் புலிகளின் கொள்கை முடிவை எடுப்பதல்ல. எடுக்கப்பட்ட முடிவுகளை அறிப்பவை. பிரபாகரனிற்கு பேசிக்கொண்டிருப்பவர்களில் நம்பிக்கை கிடையாது. அதனால் இப்படியானவர்களை சற்று தொலைவிலேயே வைத்திருந்தார். புலிகளின் கொள்ளை முடிவிற்கும் இந்த வட்டத்திற்கும் தொடர்பிருக்கவில்லை.

தமது முடிவை எப்படி பிரபாகரனிடம் சேர்ப்பிப்பதென அவர்கள் தலையை பிய்த்துக்கொண்டு, இறுதியில் பாலகுமாரனிடம் அந்த பொறுப்பை கொடுத்தனர். பாலகுமாரனும் அதே நிலைப்பாட்டில் இருந்ததால், விவகாரம் சுலபமாகிவிடும் என அவர்கள் நினைத்தனர். தமது யோசனைகளை ஒரு அறிக்கையாக தயாரித்தும் வைத்திருந்தார்கள்.

ஆனால், அந்த சமயத்தில் பாலகுமாரனாலும் பிரபாகரனை சந்திக்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பலனில்லை. இறுதியில், அதனை பிரபாகரனின் முகவரியிட்டு, அவரது பாதுகாப்புப்பிரிவிடம் சேர்ப்பித்து விட்டார்கள். இது நடந்தபோது யுத்தம் ஆரம்பிக்கவிருந்த சமயம்.

maxresdefault-2-1-300x169.jpg 300 வீரர்கள் நாயகனுடன் ஜொகோவிச்

இந்த கடிதத்திற்கு பிரபாகரனிடமிருந்து பதிலே வரவில்லை. அதை படித்ததைபோல, விடயத்தை தெரிந்ததைபோல காட்டிக்கொள்ளவுமில்லை. தான் அனுப்பிய கடிதம் கிடைத்திருக்குமோ, இல்லையோ என்ற குழப்பத்தில் பாலகுமாரன் இருந்தார்.

இதற்கு பின் பலமாதங்கள் கழித்து, சாள்ஸ்அன்ரனி படையணியின் சிறப்பு நிகழ்வொன்று நடந்தது. அப்பொழுது யுத்தம் மன்னாரில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. பிரபாகரன் கலந்து கொண்டார். முக்கிய தளபதிகள், பிரமுகர்களையும் சாள்ஸ் அன்ரனி படையணி அழைத்திருந்தது. பாலகுமாரனும் போயிருந்தார்.

பிரபாகரன் முன்வரிசையில் இருந்தார். தளபதிகளும் இருந்தனர். வரிசையின் முடிவில் பாலகுமாரனும் இருந்தார். நிகழ்வு முடிந்து புறப்படுவதற்காக கதிரையிலிருந்து பிரபாகரன் எழுந்து வந்தார். வரிசையின் முடிவிலிருந்த பாலகுமாரனை கண்டதும் ‘அண்ணை… எப்பிடியிருக்கிறியள்’ என கேட்டு, மிகச்சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் சுகநலன்களை விசாரித்து கொண்டார். புறப்படும் போது ‘நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது’ என கூறி, தனது உதவியாளரை கூப்பிட்டு, ‘அண்ணைக்கு ஒரு சி.டி குடுத்துவிடுங்கோ’ என்றுவிட்டு புறப்பட்டு விட்டார்.

வீட்டுக்கு வந்து படத்தை போட்டுப்பார்த்தார் பாலகுமாரன். அது 300 பருத்திவீரர்கள் படம்.

(தொடரும்)

————————————————————————————————-

maxresdefault-1-1-300x170.jpg

2015 இல் யு.எஸ் ஓபன் ரெனிஸ் பட்டத்தை செர்பியாவின் ஜொகோவிச் வென்றார். பட்டத்தை வெல்ல 300 வீரர்கள் படம் தந்த உத்வேகம்தான் காரணமென கூறி ‘இது ஸ்பார்ட்டன் வெற்றி’யென கோப்பையை அணைத்துக்கொண்டார். ரோஜர் பெடரருடன் நடந்த இறுதிப்போட்டியை காண 300 பருத்திவீரர்கள் படநாயகன் ஜெரார்ட் பட்லரையும் அழைத்திருந்தார்.

 

http://www.pagetamil.com/281/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தத் தொடரின் தொடக்கத்தின் ‘பில்டப்’ உண்மைகளைப் புட்டு வைக்குமா அல்லது சாத்திரியார் எழுதிய “அன்று சிந்திய இரத்தம்” மாதிரி இருக்குமா தெரியவில்லை.

யாழ் களத்தில் வாசித்துவிட்டு ஒரு கருத்தும் வைக்காமல் அப்பால் நகர்ந்துபோகின்றவர்களாக பலரும் மாறியுள்ளதால் அலசி ஆராய வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

"விடுதலைப்புலிகள் எங்கே சறுக்கினார்கள்? யுத்தத்தை புலிகளின் தலைமை எப்படி அணுகியது? ஏன் அவர்களால் வெல்ல முடியவில்லை? நெருக்கடியான சமயங்களில் புலிகளின் தலைமைக்குள் நடந்த சம்பவங்கள் என்ன?" 

இப்படி எதுவுமே தெரியாமல் இருக்கும் பேதை நான்...
யார் எதை என்ன நோக்கில் சொல்கிறார்கள் என்பதை கூட பிரித்தறிய கூடிய பக்குவம் இல்லா அப்பாவி நான்..
அப்படி இருக்க 
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் 
அம்மம்மா பூமியிலே ஆயிரம் வஞ்சம்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே மாதிரி எத்தனை பேர் எழுதி விட்டார்கள். இப்படி நேரம்செலவழித்து எழுதுவதை விட நான் பாதிக்கபட்ட மக்களுக்கு எதாவது செய்ய விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இதே மாதிரி எத்தனை பேர் எழுதி விட்டார்கள். இப்படி நேரம்செலவழித்து எழுதுவதை விட நான் பாதிக்கபட்ட மக்களுக்கு எதாவது செய்ய விரும்புகின்றேன்.

2009 மேயிலிருந்து ஒன்பது வருடங்கள் உருண்டுவிட்டன. இப்போதெல்லாம் உதவிகேட்பவர்கள் பல்வேறு தரப்பிலும் இருந்து உதவியைப் பெறுகின்றார்கள் என்று சொல்லியே உதவாமல் இருப்பதுதான் பலருடைய போக்காகிவிட்டது. நீங்கள் உதவும் விருப்பத்தில் இருப்பது நல்லவிடயம்.

வரலாறு பல தரப்பாலும் சொல்லப்படும்போதுதான் ஓரளவேனும் உண்மைகள் வெளிவரும். அதே நேரத்தில் பொய்களும் வரும்தான். தெரிந்தவர்கள் சொல்லாமல் இருக்கும்போது தெரியாதவர்கள் பொய் வரலாறுகள் எழுதும் நிலையும் உள்ளது உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் பாலகுமாரனும்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 03

April 5, 2018
pirappas-e1519072887250.jpg

பீஷ்மர்

பாலகுமாரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு கௌரவ உறுப்பினராக இருந்தார். பாலகுமாரனிற்கு புலிகள் கொடுத்த பணியென்றால் அது இறுதி யுத்த சமயத்தில்த்தான். ஆட்சேர்ப்பு. கட்டாய ஆட்சேர்ப்பிற்கு முதற்படியாக வன்னியை வலயங்களாக பிரித்து ஒவ்வொரு முக்கியஸ்தரை பொறுப்பாக நியமித்தார்கள். உடையார்கட்டு பகுதியில் பாலகுமாரன் செயற்பட்டார். வீதியில் செல்லும், வீடுகளில் உள்ள இளைஞர் யுவதிகளை ஒரு இடத்தில் ஒன்றாக சேர்த்து தீவிர பிரசாரம் செய்வார்கள். பாலகுமாரன் அதில் தீவிரமாக ஈடுபட்டார்.

பாலகுமாரன் வங்கி முகாமையாளராக இருந்தவர். புலோலி வங்கியில் பணிபுரிந்தார். புலோலி வங்கி கொள்ளையுடன் சிறைக்கு சென்று, விடுதலை அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட தொடங்கிவிட்டார்.

 

வடமராட்சியின் மந்திகை பகுதியை சேர்ந்தவர் பாலகுமாரன். இடதுசாரி கருத்துக்களில் ஈடுபாடாகி, சீனசார்பு இடதுசாரி கட்சியுடன் நெருக்கமாக செயற்பட்டும் வந்தார். சமூக அக்கறை கொண்டவராகவும் விளங்கினார். அந்த சமயத்தில் ஆயுதவழியில் நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் உருவாக தொடங்கிவிட்டனர். ஆயுதவழியில் ஈர்ப்புள்ள இளைஞர்கள் எல்லா கிராமங்களிலும் கணிசமாக உருவாகிவிட்டனர். அப்படியான எண்ணமுடைய இளைஞர்களை சந்திக்கும்போது பாலகுமாரன் கொடுக்கும் ஆலோசனை, முதலில் உயர்தரம் வரை படித்து முடித்துவிட்டு அரசியலில் இறங்குங்கள். அரசியலிற்கு இறங்கும்போது முதிர்ச்சி அவசியம் என்பது.

201001152701078041-300x165.jpg ஈழ விடுதலை இயக்க தலைவர்கள்- பிரபாகரன், பாலகுமாரன், சிறிசபாரத்தினம், பத்மநாபா

வங்கி முகாமையாளராக இருந்தாலும், சமூக அக்கறை காரணமாக பகுதி நேரமாக சமூகக்கல்வி, வரலாறு கற்பித்துக் கொண்டுமிருந்தார். மந்திகை பகுதியில் இயங்கிய யாழ்ரன் என்ற தனியார்கல்வி நிறையத்திலும், வேறு சில இடங்களிலும் பகுதிநேரமாக கற்பித்தார். இதை வருமானம் ஈட்டும் தொழிலாக செய்யவில்லை. இப்படியாக பாலகுமாரனின் வாழ்வு நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த இடத்தில் ஒரு பின்னோக்கிய பார்வைக்கு செல்ல வேண்டும். அகிம்சைவழியால் எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாதென தீர்மானித்த இளைஞர்கள் 1970 களின் தொடக்கத்தில் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் போக்கு விடுதலைக்கு உதவாதென பகிரங்கமாக பேச தொடங்கி, பின்னாளில் பிரபல்யமான விடுதலை அமைப்புக்களின் தலைவர்கள் அப்போது சிறிய குழுக்களாக இயங்க தொடங்கினார்கள். சத்தியசீலன், பிரபாகரன், சிறீசபாரத்தினம், குட்டிமணி, தங்கத்துரை, பத்மநாபா போன்றவர்கள் அவர்களில் சிலர்.

 

அப்போது இளைஞர்களிற்கு புகலிடமாக இருந்தது தமிழ் மாணவர் பேரவை. அவர்கள் தமிழர்விடுதலைக்கூட்டணியின் செயற்பாடுகளிற்கு இடையூறாக இருக்கிறார்கள் என, தமிழர் விடுதலைக்கூட்டணியின் மறைமுக ஆதரவுடன் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இளைஞர் பேரவை ஆரம்பித்த சில வருடங்களிலேயே குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் செல்லப்பிள்ளையாக செயற்படுகிறதென்ற அதிருப்தி உறுப்பினர்களிற்கிடையில் எழ ஆரம்பித்தது. விளைவு, 1975 இல் பேரவையிலிருந்து பலர் வெளியேறி ஈழவிடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தனர். புஸ்பராசா, முத்துக்குமாரசாமி, சுந்தர், வரதராஜபெருமாள் போன்றவர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். யாழ் நகரத்திலுள்ள ரிம்மர் மண்டபத்தில் மாநாடு நடத்தி, தமிழீழ விடுதலை இயக்கம் பற்றிய பகிரங்க அறிவித்தலை வெளியிட்டனர்.

alfred_duraiappah_large.jpg அல்பிரட் துரையப்பா

எரிமலை என்ற வாராந்த பத்திரிகையையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் 1975 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாண மேயர் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் பதினொருவர் கொல்லப்பட்டதற்கு துரையப்பாதான் காரணம், அவர் கொல்லப்பட வேண்டியவர்தான் என்ற கருத்தை தமிழர்விடுதலைக்கூட்டணி மேடை தோறும் பரப்பி வந்தது. இந்த சமயத்தில் துரையப்பா கொல்லப்பட்டார். துரையப்பாவை கொன்றது இளைஞர் பேரவை, தமிழீழ விடுத இயக்கங்களை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கலாமென கருதிய பொலிசார் இரண்டு அமைப்புக்களின் உறுப்பினர்களையும் தேடித்தேடி வேட்டையாடினார்கள்.

தமிழீழவிடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பெரும்பாலானவர்கள் கைதாகி சிறைக்கு சென்றனர். அதன் மத்தியகுழுவிலிருந்த இரண்டு பேரும், செயற்பாட்டாளர்கள் சிலரும்தான் தப்பித்து தலைமறைவாக இருந்தனர்.

 

ஏற்கனவே வாராந்தம் எரிமலையென்ற சஞ்சிகையையும் வெளியிடுகிறார்கள். தலைமறைவு வாழ்க்கைக்கும் பணம் தேவை. பெரும் பணத்தட்டுப்பாடு. என்ன செய்யலாமென யோசித்தபோதுதான் வங்கிக்கொள்ளைக்கு திட்டமிட்டமிட்டார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்தது புலோலி வங்கி. பாலகுமாரன் முகாமையாளர்.

ஈழவிடுதலை இயக்க உறுப்பினர்கள் பாலகுமாரனை சந்தித்து பேசினார்கள். தீவிர எண்ணமுடைய இளைஞர்களுடன் அவருக்கிருந்த அபிமானம் காரணமாக விடயம் சுலபமாக முடிந்தது. குறிப்பிட்ட தினமொன்றில் வங்கியை கொள்ளையிட அனுமதித்தார். அந்த வங்கியில் பாலகுமாரன் தவிர்ந்த இன்னும் இரண்டு பணியாளர்கள் இருந்தார்கள். அவர்களிற்கு விடயம் தெரியாது.

வங்கிக்கொள்ளையின் பின்னர் காவல்த்துறை தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது. பாலகுமாரனிற்கு விடயம் ஏற்கனவே தெரியும். அதனை பொலிசார் கண்டறிந்து சிறை சென்றார். பின்னர் ஈரோஸ் அமைப்புடன் செயற்பட்டார். ஈரோஸ் அமைப்பில் இருந்தபோது அவர் இயக்கங்களுடன் ஏட்டிக்குப்போட்டியான அணுகுமுறை கொண்டவரல்ல. அதனால் 1990இல் ஈரோஸை கலைத்துவிட்டு புலிகளுடன் இணைவது சுலபமானது.

அதன்பின்னர் அவரை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் என விளித்தார்கள். அரசியல்த்துறையுடன் இணைந்து இருந்தார். கூட்டங்களில் பேசுவது, நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதென அவரது நாட்கள் கழிந்தன.

 

அவர் போர்க்களத்திற்கு சென்றவரல்ல. இறுதி யுத்தம் தீவிரம் பெற்று, முதலாவது பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது. உடையார்கட்டு சந்தி தொடக்கம் கைவேலி வரையான பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தபகுதியில் உள்ள வள்ளிபுனம் பாடசாலை மருத்துவமனையாக்கப்பட்டது. 2009 ஜனவரி இறுதியில் பாதுகாப்பு வலயம் மீது இராணுவம் அகோர செல் தாக்குதல் நடத்தியது. இதில் 50 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக அப்போது ஊடகங்களில் செய்தி வெளியானது. மருத்துவமனையாக இருந்த வள்ளிபுனம் பாடசாலைக்குள் யாரையோ பார்த்துவிட்டு வந்த பாலகுமாரன் வாசலில் விழுந்த செல்லால் கையில் காயமடைந்தார். இறுதிவரை அந்த காயத்துடனேயே வாழ்ந்தார்.

குடும்பத்துடன் விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பி இராணுவத்திடம் செல்வதற்கு அவர் முயன்றபோதுதான் அவரது குடும்பத்தில் இரண்டாவது நபர் காயமடைந்தார்.

(தொடரும்)

—————————————————————————————————-

# புலோலி வங்கிக்கொள்ளை வழக்கில் தற்போதைய வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவும் கைதாகியிருந்தார். தமிழீழ விடுதலை இயக்கத்துடன் அவரும் இணைந்து செயற்பட்டிருந்தார்.

# 1977 இல் தமிழீழ விடுதலை இயக்கம் முழுமையாக செயலிழந்தது. அந்த சமயத்தில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் முத்துக்குமாரசாமியை சந்தித்து, தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரை பயன்படுத்த ஒப்புதல் பெற்றனர். அதன்பின்னரே தம்முடன் செயற்பட்டவர்களை ஒன்றிணைத்து தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர். அதன் இப்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.

 

http://www.pagetamil.com/476/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிற்கு தெரியாமல் தப்பியோடிய முக்கியஸ்தர் : இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 04

April 14, 2018
balakumaran-2-696x464.jpg

தமிழீழ விடுதலையை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முப்பது வரையான இயக்கங்களின் தலைவர்களில் மிக அறிவார்ந்தவர்களில் பாலகுமாரனும் ஒருவர். உலக அரசியல், இடதுசாரித்துவ கொள்கை, அரசியல் விஞ்ஞானம் என அறிவுபூர்வ உரையாடல்களிற்கு பாலகுமாரன் பொருத்தமானவர். ஆனால் ஒரு தலைவராக பாலகுமாரன் சோபிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

ஈரோஸ் அமைப்பு கொண்டிருந்த ஆளணி, ஆயுத தளபாட வசதிகளிற்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் குறைவானது. பாலகுமாரன் தீவிரமாக ஆயுதவழி முறையை தலைமைதாங்க பொருத்தமானவரும் இல்லை. ஆளணியில் சிறிய இயக்கங்கள் எல்லாம் பெயர் சொல்லும்விதமாக ஏதாவதொரு தாக்குதலை நடத்தியிருந்தபோதும், ஈரோஸின் வரலாற்றில் அது மிஸ்ஸிங். ஈரோஸ் இயக்கத்தினர் நல்ல கருத்தியல்வாதிகளாக இருந்தார்கள். ஆனால் செயற்பாட்டாளர்களாக இருக்கவில்லை.

 

ஈரோஸ் அவ்வளவாக இராணுவ சிந்தனையுடன் இயங்காதது, புலிகளுடன் நெருக்கத்தை பேணியது போன்ற காரணங்களால், 1985 இல் புலிகள் மற்ற இயக்கங்களை தடை செய்தபோது ஈரோஸ் தப்பிப்பிழைக்க வழிசமைத்தது.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் போன்ற என்பன இந்திய இராணுவத்தின் பின்னணியில் இயங்கின. புளொட் இலங்கை இராணுவத்தின் ஆதரவில் இயங்கியது. ஈரோஸ் யாருடைய ஆதரவில் இயங்கியது என்பதை அறுதியிட முடியாமல், “ஈரோஸ்தனத்துடன்“ இயங்கியது!

இது ஈரோஸ்காரர்களை கொச்சைப்படுத்தும் கருத்தல்ல. அப்பொழுது இருந்த சூழலில் ஒரு நுணுக்கமான இராஜதந்திர அணுகுமுறையை அவர்கள் கையாண்டார்கள் என்றும் சொல்லலாம். ஏனெனில், இன்று திரும்பி பார்க்க எல்லாமே அழிவில்தான் முடிந்துள்ளன. அந்த நெருக்கடிக்குள் ஈரோஸ் போராளிகளை அதன் தலைமை காப்பாற்றியிருக்கிறது.

இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய சமயத்தில்தான் இயக்கங்களிற்கு சிக்கல் உருவானது. இயக்கங்களின் முன்னால் மூன்று தேர்வு இருந்தது. ஒன்று அரசுடன் இணைவது அல்லது இந்தியாவிற்கு செல்வது. இரண்டு புலிகளுடன் இணைவது. மூன்றாவது தனித்து இயங்குவது.

 

தனித்து இயங்கும் வல்லமை புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்களிற்கு இருக்கவில்லை. அதற்கு சில வருடங்கள் முன்னரே புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கங்களின் ஆளணியை புலிகள் கணிசமாக அழித்துவிட்டார்கள். ஈழப்போராட்ட வரலாற்றில் நடந்த இந்த சகோதரப் படுகொலையை பின்னணியில் நின்று இந்தியாதான் நடத்தி முடித்தது. இயக்கங்கள் நிதானமாக, விழிப்பாக நடந்து இந்த சிக்கலை கடந்து ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் ஈழப்போராட்டம் வேறு முடிவுகளை எட்டியிருக்கலாம். ஆனால் அது நடக்காதது உண்மையில் துரதிஸ்டமே.

இந்திய இராணுவம் வெளியேறியபோது ஈரோசும் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நிலையேற்பட்டது. அப்பொழுது ஈரோஸிற்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்திய இராணுவம் வெளியேறியபோது, ஈரோஸ் பிரமுகர்கள் கொழும்பில் தங்கியிருந்தனர்.

பாலகுமாரன் யாழ்ப்பாணம் வருவதென்ற முடிவை எடுப்பதற்கு கொஞ்சம் தாமதம் காட்டினார். அப்போதைய அரசியல் சூழலில் பாலகுமாரனிற்கு வேறு வழிகள் இருக்கவில்லை. அப்பொழுது யாழ்ப்பாணத்தில் வெளியான புலிகளின் ஆதரவு பத்திரிகையான ஈழநாட்டில் ஒரு கருத்துப்படம் வெளியாகியிருந்தது. மதில் மேல் பூனை மாதிரி, மதில் மேல் பாலகுமாரன் இருக்கும்படம். புலிகளிடம் வரப்போகிறாரா, அரசுடன் இருக்கப் போகிறாரா என்பதே அதன் கேள்வி.

civilians15_1-300x207.jpg விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிய மக்கள்

ஈரோஸின் ஒரு பகுதினர் இலங்கை அரசுடன் இணைந்திருக்கும் முடிவை எடுத்தனர். இன்னொரு பகுதியினர் வீட்டுக்கு சென்றனர். தலைவர் பாலகுமாரன்- ஈரோஸ் என்ற அமைப்பையே கலைத்துவிட்டு, யாழ்ப்பாணத்திற்கு புலிகளிடம் வந்தார். அவருடன் சேர்ந்து ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் புலிகள் அமைப்பிற்கு வந்தார்கள். சிலர் போராளியாகவும் இருந்தார்கள். புலிகளின் நீதிநிர்வாகத்துறை பொறுப்பாளராக இருந்த பரா அவர்களில் ஒருவர். பலர் புலிகள் அமைப்பில் ஊதியம் பெறும் பணியாளர்களாக செயற்பட்டார்கள். வர்ணராமேஸ்வரன், சின்னபாலா போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வர்ணராமேஸ்வரன் பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்தார். சின்னபாலா பின்னர் புலிகள் கட்டுப்பாட்டு பகுதியை விட்டு சென்று, கொழும்பில் ஈ.பி.டி.பியின் ஊடகத்தில் பணியாளராக இருந்தார். பின்னர், இனம் தெரியாதவர்களால் அவர் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு புலிகளை குற்றம் சொல்பவர்களும் உள்ளனர். ஆனால், வலுவான குற்றச்சாட்டு ஈ.பி.டி.பி மேல்தான் உள்ளது.

பாலகுமாரனிற்கு புலிகள் எந்த பொறுப்பும் வழங்கவில்லை. தமது இயக்கத்தில் இணைந்த இன்னொரு இயக்க தலைவர் என்பதால் முக்கிய உறுப்பினர் என்று அழைத்து கௌரவம் வழங்கி, வீட்டில் உட்கார வைத்தனர். இது புலிகள் பாணி. கொள்கை முடிவு, தாக்குதல் விவகாரங்களில் பாலகுமாரனுடன் புலிகள் ஆலோசிப்பதில்லை. இது பாலகுமாரனிற்கு ஆரம்பத்தில் வருத்தத்தை கொடுத்தது. தனிப்பட்ட உரையாடல்களில் அதை பதிவு செய்தார். என்றாலும், புலிகள் முடிவை மாற்றத்தால் பாலகுமாரனிற்குள் இருந்த வருத்தமே வழக்கமாகிவிட்டது. எனினும், நெருக்கமானவர்களுடனான பேச்சில் அந்த வருத்தத்தை வெளிப்படுத்தவும் செய்வார்.

 

வன்னிக்கு புலிகள் சென்ற பின்னர் புதுக்குடியிருப்பில் பாலகுமாரனிற்கு வீடு வழங்கினார்கள். சமாதானத்தின் பின்னர், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் மாடி வீடொன்றை அமைத்து கொடுத்தார்கள். பாலகுமாரனின் மனைவி மருத்துவ மாது. இரண்டு பிள்ளைகள். ஒரு மகன். ஒரு மகள்.

இறுதியுத்தத்தின் ஆரம்ப சமயத்தில், புலிகள் கட்டாயமான ஆட்சேர்ப்பை ஆரம்பித்தார்கள். இதன் ஆரம்பகட்டத்தில் கட்டாயமான பிரச்சாரம் நடந்தது. வீதிகளில் செல்பவர்களை மறித்து, பிரச்சாரம் நடந்தது. கிட்டத்தட்ட கட்டாய ஆட்சேர்ப்பின் முதற்படி அது. உடையார்கட்டு பகுதியில் இந்த நடவடிக்கையின் முக்கியஸ்தராக பாலகுமாரன் இருந்தார்.

இந்த நடவடிக்கையில் பாலகுமாரன் விருப்பத்துடன் ஈடுபடவில்லையென பாலகுமாரனை தனிப்பட அறிந்தவர்கள் சிலர் இப்பொழுது சொல்கிறார்கள். ஆனால், அந்த சமாதானம் பாலகுமாரனை வரலாற்றின் பழியிலிருந்து விடுபட வைக்காது. இந்த அநீதியில் அவர் விரும்பாமல் ஈடுபட்டார் என்று சொல்ல முடியாது. காரணம், கட்டாய பிரசாரம், ஆட்சேர்ப்பில் ஈடுபட விரும்பாத சாதாரண போராளிகள் பலரே அதிலிருந்து விலகி யுத்தமுனைக்கு சென்றனர். புலிகளின் முக்கியஸ்தரான பாலகுமாரன் ஏன் சிறு அதிருப்தியையும் பகிரங்கமாக வைக்கவில்லை?

 

மாறான கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத இயல்புதான் பாலகுமாரனின் பலவீனமாக இருந்தது. ஒரு தலைவராக அவரால் உருவாக முடியாமல் போனதற்கு காரணமும் இதுதான்.

இறுதியுத்தத்தில் 2009 ஜனவரி அளவில் அவர் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் காயமடைந்தார். உடையார்கட்டு பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவம் மிலேச்சனமான தாக்குதல் நடத்தியபோது, அதில் காயமடைந்தார். உடையார்கட்டு பாடசாலை வைத்தியசாலையாக இயங்கி வந்தது. அந்த வைத்தியசாலைக்குள்ளிருந்து வெளியில் வந்தபோதே- வைத்தியசாலை வாசலில் காயமடைந்தார்.

காயமடைந்ததன் பின்னர் பாலகுமாரன் விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தொடர்புகள் அனைத்தையும் இழந்துவிட்டார். முன்னரும் அரசியல்துறை பொறுப்பாளர் மட்டத்திலான தொடர்பையும், நிகழ்ச்சிகளில் தளபதிகளை சந்திப்பவராகவும் மட்டுமே இருந்தார். பாலகுமாரன் மட்டுமல்ல, அரசியல்த்துறை உயர்மட்ட பொறுப்பாளர்கள் எல்லோருக்குமே இந்தகதிதான். அவர்களால் என்ன நடக்குமென்ற முடிவெடுக்க முடியவில்லை. புலிகளின் தலைமையின் முடிவை அறியவும் முடியவில்லை.

இப்பொழுது இலங்கை அரசியல் யாப்பு தொடர்பாக புத்தகம் எழுதி கூட்டத்தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட புலிகளின் அரசியல் ஆய்வாளர்கள் வலைஞர்மடத்தில் அருகருகாக குடியிருந்தனர். பாலகுமாரன், பரா உள்ளிட்டவர்களும் அந்த பகுதியில் அருகருகாக குடியிருந்தனர். இந்த அணிகள் தமக்குள் கூடி யுத்தம் அப்படி முடியுமா, இப்படி முடியுமா என மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பது அன்றாட நிகழ்ச்சி. தலைவரிடம் திட்டமுள்ளதா என்பதை அறிவதில் ஆர்வம் காட்டி, சாதாரண களத்திலிருந்து வரும் சாதாரண போராளிகளையும் பேட்டியெடுப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ்சூழலில் முறையான சிந்தனைக்குழாம் உருவாகததற்கு, முறையான அரசியல் ஆய்வாளர்கள், ஆய்வுமுறைமை உருவாகாததற்கு அந்த சமயங்கள் முழுமையான சாட்சி. புலிகளின் காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் சம்பவங்களிற்கு பொழிப்பு கூறுபவர்களே. இதே ஆய்வுமுறைதான் இன்றுவரை தொடர்வது தமிழர்களின் துரதிஸ்டமே.

யுத்தம் இறுகிக்கொண்டு வர, புலிகளின் தலைமை என்ன முடிவெடுக்கிறதென்பது தெரியாமல் பாலகுமாரன் திண்டாடிக் கொண்டிருந்தார்.

அது எப்ரல் மாதம். பாலகுமாரன் ஒரு ஆபத்தான முடிவெடுத்தார்.

அது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்வது!

bala-daughter-wed-030418-seithy-300x203. பாலகுமாரன் மகள் மகிழினியின் திருமணம்

அப்போது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு மக்கள் பெருந்தொகையில் தப்பிச்செல்ல தொடங்கிவிட்டார்கள். ஒன்று தலைமார்க்கமாக. இன்னொன்று, கடல்மார்க்கமாக. கடல்மார்க்கமாக தப்பி சுண்டிக்குளத்தில் நிலைகொண்டிருந்த 55வது டிவிசனிடம் சரணடைபவர்களிற்கு உயிருத்தரவாதம் உள்ளதாக ஒரு அபிப்பிராயம் செய்திகளின் வழியாக உருவாக்கப்பட்டிருந்தது. புலிகளின் முக்கியஸ்தர்களை குறிவைத்து அரசு உருவாக்கிய அபிப்பிராயமாகவும் இருக்கலாம். அந்த டிவிசன் கட்டளை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் இயல்பால் உருவானதாகவும் இருக்கலாம்.

வலைஞர்மடத்திலிருந்து படகில் தப்பித்து சுண்டிக்குளத்தில் தரித்து நின்ற 55வது டிவிசன் படையினரிடம் சரணடைவதென பாலகுமாரன் முடிவெடுத்தார். இதற்காக இரகசிய திட்டம் தீட்டினார். இது 2009 மார்ச் மாதத்தில் ஆரம்பித்த திட்டம். அதாவது தமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச்செல்லும் பொதுமக்களிற்கே மரணதண்டனை வழங்கவும் புலிகள் எத்தனித்த சமயம். தனது உதவியாளர்கள் மூலம் படகொன்றை தயார் செய்தார். படகோட்டிக்கு ஒரு தொகை பணம் வழங்கப்பட்டது. பாலகுமாரன், மனைவி, பிள்ளைகள், நம்பிக்கைக்குரிய ஒரு சிலரின் குடும்பங்கள்தான் படகில் செல்பவர்கள்.

 

ஏப்பரல் முதல்வாரத்தில் பாலகுமாரனின் தலைமையில் படகில் தப்பிச்சென்றார்கள். வலைஞர்மட கடற்கரையில் மறைந்திருந்து, மக்கள் தப்பிச்செல்லாமல் ஏற்படுத்தப்பட்டிருந்த புலிகளின் காவல்வேலிக்கு டிமிக்கி கொடுத்து படகில் ஏறினார் புலிகளின் முக்கியஸ்தர்.

படகு மெல்லமெல்ல வேகமெடுத்து கரையை கடக்க எத்தனிக்க, யாரோ தப்பிச்செல்வதை கடற்புலிகளின் படகொன்று அவதானித்துவிட்டது. துரிதகதியில் விரட்ட தொடங்கினார்கள். தப்பிச்செல்பவர்களை பிடிப்பதே அந்த அணியின் பணி. யாரோ பொதுமக்கள் தப்பிச்செல்கிறார்கள் என நினைத்த கடற்புலிகள் விரட்டிச் சென்று, அருகில் சென்று படகு மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். படகிலிருந்து அலறல் சத்தங்கள்.

கிட்ட சென்று வெளிச்சம் பாய்ச்சினால், பாலகுமாரன் தலையை கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தார். அவரது இளவயது மகள் மகிழினியின் கையில் காயம். எலும்பு முறிந்திருந்தது. (அண்மையில் தமிழகம் திருச்சியில் மகிழினியின் திருமணம் நடந்திருந்தது) தம்மை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும்படி பாலகுமாரனின் மனைவி போராளிகளை மன்றாட்டமாக கேட்டார். போராளிகளிற்கும் சங்கடமாகிவிட்டது.

அந்த படகை தடுத்து வைத்திருந்தபடி, கடற்புலிகளின் தளபதி சூசையை தொடர்பு கொண்டனர்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/1517/

 

Link to comment
Share on other sites

1 minute ago, நந்தன் said:

எத்தனை கதை கெட்டாச்சு , இதையும் .....

ஒரு சில உண்மைகள் பல ஊகங்கள் நிறைய கற்பனைகள் ஒருத்தருக்கும் தெரியாத பக்கமும் கட்டுரையாளர் புகுந்து விளையாடுறார் அங்கு மரணித்தவர்கள் திரும்ப வந்து சொல்லுமட்டும் இப்படியான கற்பனை கதைகளுக்கு பஞ்சம் இருக்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்த பகுதிகளை மட்டும்தான் ஒட்டுகின்றேன். இதுவரை படித்தவை எல்லாம் முன்னர் கேட்ட கதைகள்தான். ஏதாவது புதுக்கதை  வருமா என்று தெரியவில்லை.

300 படமும் Downfall (German: Der Untergang) படமும் 2000ம் ஆண்டுகளில் வந்திருக்காவிட்டால் கதை வேறுவிதமாகவும் முடிந்திருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள்,  மௌனிப்பதாக.... 2009´ம் ஆண்டு உத்தியோக பூர்வமாக  அறிவித்த,  பின்...  வந்த கட்டுரைகள்  ஏராளம்.   
காரணம்.. எவரும், பதில் சொல்ல மாட் டார்கள் என்ற துணிவில்,
பென்ஷன் எடுத்த,  இந்திய மேஜர்  ஹரிஹரனில்....  ஆரம்பித்து,  
இன்று... கிருபன் இணைத்த கட்டுரையில்.. வந்து நிற்கின்றது.

கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற, கடுப்பு வந்திருந்தால்... 
ஈழப் போர் நடக்கும்  போது....  
ஆக்க  பூர்வமாக,  எழுதியிருக்க வேண்டும்.
அப்ப எழுதாத நீங்கள்,   இப்ப... என்ன,  "இழவுக்கு"  எழுதுகின்றீர்கள்...?

இது... அரசியல் அலசல் அல்ல.
தமிழர்களின்,  ஒத்துழைப்புடன் மட்டும்...  உலகத்தை  எதிர்த்து,  போராடிய  இனம்.
அந்த.. மாவீரர்களை, நிம்மதியாக...  தூங்க விடுங்கள்.  அது,  எமக்கு போதும். 

இனி... ஒண்டும், புடுங்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதை கேட்டதை படித்ததை பற்றி எழுதும்போது எழுதுபவரின் தகமை அவர் யார், எழுதும் விடயத்தில் அவருக்கிருக்கும் பாண்டித்தியம் என்ன என்பன மிகவும் முக்கியமானவை. இல்லையேல் மக்கள் வீதியில் செல்லும் சொறி நாய் குரைப்பதைப்போல் பார்ப்பார்கள். காலால் எட்டி உதைந்துவிட்டு போய்கொண்டேயிருப்பார்கள். இதை ஞாபகம் வைத்து எழுதுங்கள். முதல் அத்தியாயங்களை பாலகுமாரனையும்  ஈரோசையும் பற்றி எழுதி கழித்துவிட்டதாக தெரிகிறது. சரி என்னதான் நடக்கும் பார்ப்போமே பத்துடன் பதினொன்றாக இருந்து கேட்டுவிட்டு போகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

வங்கிக்கொள்ளையின் பின்னர் காவல்த்துறை தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது. பாலகுமாரனிற்கு விடயம் ஏற்கனவே தெரியும். அதனை பொலிசார் கண்டறிந்து சிறை சென்றார்.

புலோலி யூனியன் கிராமிய வங்கி கொள்ளையின்போதுஆக்ஷன்எதுவும் இருக்கவில்லை. துவக்குடன் வந்தார்கள். இருப்பதை எடுத்துக் கொடுத்தார்கள். போய்விட்டார்கள்

போனவர்களின் பின்னால் சைக்கிளை எடுத்துக் கொண்டு பாலகுமாரனும் போனார். அவர் போனதற்கான காரணம், பணம் உருப்படியாக போய்ச் சேர்ந்ததா என அறியவே. விசாரணையில் கொள்ளையரை திறத்திச் சென்றதாக பாலகுமாரன் சொன்னார். அவரின் அந்த அறிவார்ந்த நடவடிக்கையாலேயே அவர் மாட்டிக் கொண்டார்.

 

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:
Quote

கிட்ட சென்று வெளிச்சம் பாய்ச்சினால், பாலகுமாரன் தலையை கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தார். 

அந்த படகை தடுத்து வைத்திருந்தபடி, கடற்புலிகளின் தளபதி சூசையை தொடர்பு கொண்டனர்.

 

 

 நிறைய கிரைம் நாவல் படித்திருப்பார்போல் உள்ளது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சண்டமாருதன் said:

 

 

 நிறைய கிரைம் நாவல் படித்திருப்பார்போல் உள்ளது

 

அந்த நேரமே இந்த செய்தி கசிந்திருந்தது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நந்தன் said:

எத்தனை கதை கெட்டாச்சு , இதையும் .....

இப்படி கேட்டிருக்க  மாட்டீங்க

சும்மா  அதிருதில்லை

அடுத்தது இதைவிட....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கணக்கில் பாலகுமாரன் இறந்தது 2009 ஏப்ரலில்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 05

April 18, 2018
bala-1.jpg

பீஷ்மர்

பாலகுமாரன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து செல்வதென எடுத்து முடிவு சாதாரணமானதல்ல. அது தனி பாலகுமாரன் என்ற நபர் தப்பித்து செல்லும் சம்பவமுமல்ல. இனி விடுதலைப்போராட்டத்தின் ஆயுதவழி சாத்தியமல்ல என அவர் உணர்ந்ததாலும் இருக்கலாம். 1990 ஆம் ஆண்டு தொடக்கம் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்து, புலிகளின் எல்லா சரிகள், தவறுகளிலும் தார்மீக ரீதியில் பொறுப்புகூற வேண்டியவராக இருந்துவிட்டு, 26 ஆண்டுகளின் பின்னர் புலிகளை விட்டு தப்பிச் செல்வதென்று ஒரு பெரு வீழ்ச்சி.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லலாம்.

1970களில் மத்தியிலிருந்து பல்வேறு இயக்கங்கள் தோற்றம் பெற்றன. எல்லாவற்றினது இலக்கும் தமிழீழம்தான். இப்படி தோன்றிய இயக்கங்களின் எண்ணிக்கை 33- 40 வரையானது. இதில் மிகச்சிறியனவற்றில் தொடங்கி விடுதலைப்புலிகள், புளொட், ரெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் வரையான பெரிய இயக்கங்கள் வரை அடக்கம்.

இந்த இயக்கங்களில் பல அழிந்தன. கொள்கையை கைவிட்டன. தலைவர்கள் இறந்தார்கள். அரசுடன் இணைந்தன. எனினும், இறுதிவரை தமிழீழம் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தது புலிகள். அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன்.

 

மற்ற எல்லா இயக்கங்களும் தமிழீழ கோரிக்கையை கைவிட, பிரபாகரன் மட்டும்தான் அதில் உறுதியாக இருந்தார். தான் முன்மொழிந்த இலட்சியத்தை ஏற்று, தன்னை நம்பி இறந்த போராளிகளிற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.

பாலகுமாரன் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தது தமிழீழ இலட்சியத்தை ஏற்றுத்தான். அவர் ஒரு நபரல்ல. ஈரோஸ் இயக்கத்தின் தலைவர். பாலகுமாரனும் தமிழீழ இலட்சியத்தை கைவிடாமல் இருந்தார் என்ற வரலாறு, 2009 ஏப்ரல் மாதத்துடன் முடிந்தது- பாலகுமாரன் விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு தப்பிச் செல்தென எடுத்த முடிவுடன். தமிழீழ கொள்கையில் எந்த சமரசமுமில்லாமல் இறுதிவரை போராடிய ஒரே தலைவர் பிரபாகரன்தான்.

leadersofenlf-300x214.jpg சிறிசபாரத்தினம், பிரபாகரன், பாலகுமாரன், பத்மநாபா

பாலகுமாரன், மனைவி இந்திரா, மகன் சூரியதீபன், மகள் மகிழினி ஆகியோர் மேலும் சிலருடன் தப்பிச் சென்ற படகை கடற்புலிகளின் காவல் அணியொன்று மடக்கிப்பிடித்ததை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். அந்த சமயத்தில் படகில் இருந்தது சாதாரண பொதுமக்கள் என்றால் நிலைமை வேறு. இரண்டாவது பேச்சிற்கு இடமில்லாமல் அவர்களை கரைக்கு கொண்டு வந்து தண்டனை வழங்கியிருப்பார்கள். ஆனால் படகிலிருந்தது பாலகுமாரனும் குடும்பமும். தம்மை தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்குமாறு படகிலிருந்தவர்கள் உருக்கமாக கேட்டுக் கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் என்ன முடிவெடுப்பதென தெரியாமல் விழித்த கடற்புலி போராளிகள், உடனடியாக கரையிலிருந்த கட்டளை மையத்தை தொடர்பு கொண்டனர். விபரத்தை கேட்டு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கட்டளை மையம் கடற்புலிகளின் தளபதி சூசையை தொடர்பு கொண்டது.

 

ஏப்ரல் மாதம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தை எட்டி, விடுதலைப்புலிகளின் தளபதிகளிற்கு அதிக நெருக்கடியை கொடுத்திருந்தது. இப்படியான சூழலில் கோபமான அதிரடி முடிவுகளைத்தான் தளபதிகள் எடுப்பார்கள். சூசையிடம் விடயத்தை சொன்னதும், சம்பவ இடத்திலுள்ள போராளிகளின் இணைப்பை ஏற்படுத்தி தரச் சொன்னார். கட்டளை மையமும் விரைவாக தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தது.

சூசையை அறிந்தவர்களிற்கு தெரியும் அவரது கோபம். இயக்க வேலைகளில், களமுனைகளில் யாராவது தவறுவிட்டால் அவரது கதி அதோகதிதான். அதுபற்றிய விசாரணை நடக்கும்போது, அவரது கையில் என்ன பொருள் இருக்கிறதோ அந்தப்பொருளால் தவறிழைத்தவரிற்கு சாத்துப்படி நடக்கும்.

தப்பிச்சென்றவர்களின் படகை வழிமறித்த அணியின் பொறுப்பாளரை சூசை நேரடியாக வோக்கி டோக்கியில் தொடர்பு கொண்டார். “தப்பிச் சென்ற படகொன்றை துரத்திப் பிடித்தோம். அதிலிருப்பது பாலகுமாரன். அவர்களை என்ன செய்யலாம்“  என கடலிலிருந்து கேட்டார்கள். இந்த உரையாடல்களை பாலகுமாரனும் தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தார்.

“இயக்கத்தில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். எமது பகுதியை விட்டு வெளியேற மக்கள், போராளிகளிற்கு கட்டுப்பாடு இருந்தால் அது நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். அவர்களை கரைக்கு கொண்டு வாருங்கள்“ என கடும் தொனியில் உத்தரவிட்டார்.

 

பாலகுமாரன் எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். மகள் மகிழினிதான் பெரிதாக சத்தமிட்டு அழுதபடியிருந்தார். அதன் பின்னர்தான் போராளிகளும் கவனித்தார்கள். படகை துரத்திச் சென்று சுட்டதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. கையொன்றில் தோள்மூட்டிற்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதி எலும்பை உடைத்துக் கொண்டு ரவையொன்று சென்றிருக்கிறது.

அவர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டு வீடுகளிற்கு அனுப்பப்பட்டார்கள். அதன் பின்னர், மே 17ம் திகதி புலிகள் அமைப்பு முழுமையாக சிதறும்வரை அமைப்பு சார்பில் யாருமே அவரை தொடர்பு கொள்ளவில்லை. புலிகளை பொறுத்தவரை ஏப்ரல் மாதத்திலேயே பாலகுமாரன் இறந்து விட்டார்.

மே 17ம் திகதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் வரையிலும் முறையான மருத்துவ வசதிகள் இல்லாமல் மகிழினி சிரமப்பட்டார். பாலகுமாரனின் மனைவி மருத்துவதாதியென்பதால் ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்தார். பின்னர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததன் பின்னர்தான் முறையான சிகிச்சையளிக்கப்பட்டது. கை எலும்புகள் பொருந்த “அன்ரனா“ பொருத்தப்பட்டது. அன்ரனாவுடன்தான் யாழில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதினார். அன்ரனாவுடன்தான் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறினார்.

 

389975_286240058080594_100000838051682_7விடுதலைப்புலிகளின் இயல்பு அது. தமது கொள்கையில் மிக உறுதியாக இருப்பார்கள். கொள்கை மாத்திரம்தான் முதன்மையானது. ஆசாபாசம், குடும்பம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்த இயல்புகளுடன் கூட வருபவர்கள் வரலாம். பின் தங்குபவர்கள் சென்றுவிடலாம் என்பதுதான் சொல்லாமல் சொல்லும் சங்கதி.

1987 யூலை 27 இல் இந்திய இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. சில மாதங்களிலேயே முறிந்து 1987-10.10 இல் புலிகள்- இந்தியா மோதல் ஏற்பட்டது.

ஒப்பந்தம் நெருக்கடி நிலையை எட்டிய சமயம். முல்லைத்தீவு தளபதியாக இருந்த மேஜர் பசீலனின் ஏற்பாட்டில் மணலாற்று காட்டுக்குள் முகாம் அமைத்து பிரபாகரன் அங்கு செல்ல தயாராகிறார். அதாவது இந்தியாவுடன் போர் என்ற முடிவை எடுக்கிறார்.

இந்தியா உலகின் நான்காவது வல்லரசு. இலங்கைக்கு வந்த இந்திய படையணியே கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம். விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை சில நூறு. இந்த சூழலில் போர் ஏற்பட்டால் என்ன நடக்கும்? எல்லோரும் நினைப்பதை போலத்தான் அப்போதைய இந்திய தூதர் டிக்சிற்கும் நினைத்தார். “சாரம் கட்டிய சில பொடியளை ஒரு சிகரெட் பற்றி முடிப்பதற்குள் நசித்துவிடுவோம்“ என்றார்.

விடுதலைப்புலிகளிற்குள்ளும் அந்த குழப்பம் இருந்தது. இந்தியாவுடன் போர் நடந்தால் அழிந்து விடுவோம் என்று பயந்தார்கள். அமைப்பிற்குள் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த பிரபாகரன், போராளிகளை அழைத்து, பேசினார். அதில் அவர் சுருக்கமாக சொன்னது இதுதான்- “இந்தியாவுடன் போரிடுவதென முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவில் உடன்பாடில்லாதவர்கள் தாராளமாக ஒதுங்கிக்கொள்ளலாம். உடன்படுபவர்கள் என்னுடன் இருங்கள்“. சில போராளிகள் வெளியேறினார்கள். அவர்களில் முக்கியமானவர் காக்கா.

காக்கா இயக்கத்தின் மூத்தபோராளி. புலிகளின் முதல் பெரும் தாக்குதலான திருநெல்வேலி கண்ணிவெடி தாக்குதலில் பங்குபற்றியவர்களில் இன்றும் உயிருடன் உள்ள ஒரேநபர்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/1816/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சண்டமாருதன் said:

 

 

 நிறைய கிரைம் நாவல் படித்திருப்பார்போல் உள்ளது

 

வாசிப்பவர்களை அந்தரத்தில் விட்டால்தானே ஆர்வத்துடன் வாசிக்க வருவார்கள். பரபரப்பு ரிஷி இப்பவும் இருக்கின்றார்தானே!

Link to comment
Share on other sites

On 6/7/2018 at 11:26 PM, கிருபன் said:

இந்தத் தொடரின் தொடக்கத்தின் ‘பில்டப்’ உண்மைகளைப் புட்டு வைக்குமா அல்லது சாத்திரியார் எழுதிய “அன்று சிந்திய இரத்தம்” மாதிரி இருக்குமா தெரியவில்லை.

யாழ் களத்தில் வாசித்துவிட்டு ஒரு கருத்தும் வைக்காமல் அப்பால் நகர்ந்துபோகின்றவர்களாக பலரும் மாறியுள்ளதால் அலசி ஆராய வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

சாத்திரி பிரான்ஸில் இருந்துகொண்டு தான் அங்கு இருந்ததை போல தமிழக தமிழரிற்காக அன்று சிந்திய ரத்தம் எழுதினார், இவர் வன்கூவரோ இலண்டனோ,ரொரன்ரோவொ ஆருக்கு தெரியும்

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

வாசிப்பவர்களை அந்தரத்தில் விட்டால்தானே ஆர்வத்துடன் வாசிக்க வருவார்கள். பரபரப்பு ரிஷி இப்பவும் இருக்கின்றார்தானே!

பரபரப்பு ரிசி தன்னுடைய புளுகு கடையை கொழும்பில் திறந்து இப்ப சேடம் இழுக்கிறார் .

29 minutes ago, அபராஜிதன் said:

சாத்திரி பிரான்ஸில் இருந்துகொண்டு தான் அங்கு இருந்ததை போல தமிழக தமிழரிற்காக அன்று சிந்திய ரத்தம் எழுதினார், இவர் வன்கூவரோ இலண்டனோ,ரொரன்ரோவொ ஆருக்கு தெரியும்

டொராண்டோ தான் .

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

வாசிப்பவர்களை அந்தரத்தில் விட்டால்தானே ஆர்வத்துடன் வாசிக்க வருவார்கள். பரபரப்பு ரிஷி இப்பவும் இருக்கின்றார்தானே!

 

உண்மைதான்..

பொதுவாக போரை தமிழ் ஊடகங்கள் அணுகிய விதம் ஒரு விழையாட்டுப்போட்டியை ரசிகன் அணுகியவிதம்போன்றது. இதற்கு ஒரு பிரதான காரணம் போரில் பங்குபெற்றவர்கள் ஒட்டுமொத்தமாக விடுதலையை விரும்பியவர்களில் மிக சிறிய வீதத்தினரே. பெருமளவு பார்வையாளர்களுக்கும் சிறிதளவு போராளிகளுககும் இடையில் ஊடகங்கள் பார்வையாளர்களை திருப்திப் படுத்துவதிலேயே அன்றிலிருந்து இன்ளறவும் குறியாய் இருக்கின்றது. இங்கே சாவுகள் அவலங்கள் அடிமைப்பட்ட சீரழிந்த வாழ்வும் பேசாப்பொருளாக அல்லது இரண்டாம் பட்சமாகவே தொடர்ந்து அணுகப்படுகின்றது. ஆனால் இந்தப்போர் மிக மோசமான அவலத்தோடு தோல்வியடைந்து முடிந்துபோகும் என்பதை புலிகளின் வியாபாரங்கள் சொத்துக்களுக்கான பினாமிகளும் பணச் சேர்ப்பில் ஈடுபட்ட பலரும் அறிந்தே இருந்தார்கள். அவலோடு எதிர்பார்த்தும் இருந்தார்கள்.  இன்றய புலமபெயர் தேசத்து கூட்டு முதலீடு கூட்டு வியாபாரங்களை தொடங்கியவர்கள் மற்றும் உரிமையாளர்கள் புலிகளே ஆனால் அவை இன்று என்னும் வளர்ந்து விரிந்துள்ளது ஆனால் புலிகள் அதில் முற்றாக இல்லை. 

இறுதிப்போர் என்பது வெறும் இராணுவ மோதல் என்றளவிலேயே என்னும் எமது சிந்தனை இருக்கின்றது. அது ஒரு மூன்று நாலு நாள் என்றளவிலேயே அணுகப்படுகின்றது.. மிக நீண்ட நாட்களாக பலவிதமான சமூக முரண்பாடுகள் வஞ்சகம் சூழ்ச்சி பிழைப்புவாதம் சுயநலம் என ஏகபபடட நோய்களுக்கு உட்பட்டு சேடமிழுத்த ஒரு உயிரை நாமே வாயைப் பொத்தி சாகடித்த நிகழ்வு. ஆனால் நாம் எழுதும் வரலாறோ  செத்தவீட்டில் நடந்தது என்ன ? 

 நடக்கட்டும்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவில் விட்டதை கட்டைக்காட்டில் எடுத்த புலிகள்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 06

April 22, 2018
45t.jpg

பீஷ்மர்

இறுதி யுத்தத்தில் புலிகள் ஏன் தோல்வியடைந்தார்கள் என்பது இன்றுவரை முக்கியமான பேசுபொருள். சர்வதேச நாடுகளின் கூட்டிணைவு, போர்விதிமுறைகளை மீறி ஆயுதங்களை பயன்படுத்தியது என பலரும் சொன்னாலும் சரியான தகவல்கள் இதுவரை வெளியாகியிருக்கவில்லை. தோல்விக்கான காரணங்களை துல்லியமாக யாரும் அடையாளம் காணவில்லை.

சர்வதேச கூட்டிணைவு தோல்விக்கு காரணமென்றபோதும் அந்த கூட்டிணைவால் எப்படியான பாதகங்கள் நிகழ்ந்ததென்பது பற்றிய விலாவாரியான தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. அவை வெளிவராத பட்சத்தில் இறுதியுத்த விவகாரம் சிதம்பர இரகசியத்தை போலாகிவிடும்.

 

புலிகளின் தோல்விக்கு பிரதானமான காரணங்கள் சில உள்ளன.

1.புலிகளின் கடல்பலம் முடக்கப்பட்டது.

2.கடல்பலம் முடக்கப்பட்டதுடன் இணைந்ததாக ஆயுத இறக்குமதி தடைசெய்யப்பட்டது.

3.புலிகளின் புலனாய்வு கட்டமைப்பை தென்னிலங்கையில் சீர்குலைத்தமை.

4.மரபுவழி யுத்தத்தை விரும்பிய புலிகள் நவீனபோரியல் முறைமைக்கு தங்களை தயாராக்கி கொள்ளாமை.

5.புலிகளின் பிரதேச இரகசியங்களை இலங்கை பாதுகாப்புதுறை விரல்நுனிக்கு கொண்டு வந்தமை.

6.இலங்கை பாதுகாப்புதுறை பற்றிய அலட்சியம்.

7.நீண்ட சமாதானம்

விடுதலைப்புலிகள் தோல்வியடைந்தமைக்கான நேரடி காரணங்கள் இவை. சர்வதேச கூட்டிணைவு போன்ற மறைமுக காரணங்கள் ஏற்படுத்திய நேரடி விளைவுகள் இவை.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் மரபுவழி யுத்தத்தையே விரும்பினார்கள். எல்லா அமைப்புக்களும் சிறிய குழுக்களாக இருக்க, முறையான இராணுவ கட்டமைப்பை உருவாக்குவதில் பிரபாகரன் ஆர்வமாக இருந்தார். தேவையான ஆயுதம், முறையான பயிற்சி, படையணி கட்டமைப்பு என அவர் முறையான சிந்தனையை கொண்டிருந்தார். அதுதான் புலிகளின் அசாதாரண வெற்றிகளிற்கு காரணமாக இருந்தது.

 

புலிகளை சிறிய அணியாக எதிராளிகள் கணக்குப்போட்டுக்கொண்டிருக்க, அவர்கள் தமக்குள் நிறைவான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்திய இராணுவம் புலிகளை கெரில்லாக்களாக கருதியது. ஆனால் அந்த சமயத்தில் புலிகள் கெரில்லாவும் அல்லாத மரபு இராணுவமும் அல்லாத இடைப்பட்ட வடிவமொன்றை எடுத்துவிட்டார்கள். இந்திய படைகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது புலிகள் மரபுஇராணுவத்தை போன்ற பாணியில் எதிர்தாக்குதல் நடத்தியபடி பின்வாங்கினர்.

இதற்கு முன்னரே யாழ்ப்பாண கோட்டையை முற்றுகைக்குள் வைத்திருந்து, வடக்கிலுள்ள படையினரை முகாம்களிற்குள் முடக்கி ஒரு அரை மரபு இராணுவ தகுதியை எட்டிவிட்டனர். 1986  இல் ஒப்ரேசன் லிபரேசன் மூலம் இராணுவம் கைப்பற்றிய நெல்லியடி மத்தியமகா வித்தியாலயம் மீதான தாக்குதல் கூட அரை மரபுவழி தாக்குதல்தான்.

பின்னாளில் 1991 இல் ஆனையிறவு பெருந்தளம் மீதான ஆகாய கடல்வெளி சமர்தான் புலிகளின் மரபுவழி இராணுவமாகியதாக ஆய்வாளர்கள் கூறினாலும், அதற்கு முன்னரே மரபுவழி இராணுவ தகுதியை புலிகள் எட்டத் தொடங்கிவிட்டனர்.

sornam-2-1024x680-300x199.jpg தளபதி சொர்ணம்

மரபுவழி இராணுவமாக புலிகளை மாற்றுவது பிரபாகரனின் இலட்சியமாக இருந்துள்ளது. அதனை திறம்பட செய்துவிட்டார். இந்த சமயத்தில் எழுச்சிபெற்ற தளபதிகளான பால்ராஜ், சொர்ணம், அன்பு, பானு, தீபன் போன்றவர்கள் இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போரில் ஜொலித்தார்கள். கெரில்லா அனுபவங்களுடன் உருவான மரபு போருக்தியை புலிகள் சிறப்பாக செயற்படுத்தினார்கள்.

உதாரணமாக சிலவற்றை குறிப்பிடலாம். நள்ளிரவின் பின் முகாமிற்குள் தாக்குதலை நடத்துவது, எதிராளிகளின் நிலையை இரகசியமாக ஊடறுத்து கடந்து பின் பக்கத்தால் தாக்குதலை ஆரம்பிப்பது, இரகசியமான நகர்ந்து ஆயுதக்கிடங்குகளை தகர்ப்பது என புலிகள் புதிதுபுதிதாக உத்திகளை கையாண்டு கொண்டிருந்தார்கள். இலங்கைப்படைகள் மரபுப்படையாக இருந்தாலும் புலிகளின் போருத்திகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்பட்டார்கள்.

 

ஒவ்வொரு நெருக்கடியான சமயத்திலும் மிகநுணுக்கமான திட்டமிடலுடன் புலிகள் ஒவ்வொரு களமுனையை திறந்தார்கள். ஒப்ரேசன் லிபரேசன் சமயத்தில கரும்புலி தாக்குதல் வடித்துடன் நெல்லியடியில் பேரதிர்ச்சி கொடுத்தனர். 1992 இலும் இப்படியொரு சம்பவம் நடந்தது.

1991 இல் புலிகளை மரபுப்படையணியாக உலகம் அங்கீகரித்த சமர் ஆகாய கடல் வெளி சமர் நடந்தது. 53 நாட்கள் நீடித்த பெருஞ்சமர். புலிகள் இப்படியொரு சமரை செய்வார்களென யாரும் எதிர்பார்க்கவில்லை. இலக்கை அடைய முடியாத அந்த சமரில் 573 போராளிகள் மரணமானார்கள். எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் அதிகளவான வெடிபொருட்களை புலிகள் செலவிட்டு விட்டனர். ஆனால் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. அமைப்பிற்குள் பெரும் வெடிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. கையிருப்பில் இருந்த வெடிபொருள் அடுத்த நடவடிக்கைக்கு போதுமானதாக இருக்கவில்லை. அப்பொழுது புலிகள் கடல்மார்க்கமாக ஆயுதம் கொண்டுவர ஆரம்பிக்கவில்லை. இராணுவத்தளங்களை தாக்கித்தான் ஆயுதங்களை எடுத்தார்கள். ஆனால், இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடக்கத்தில் கோட்டை, கொக்காவில், கொண்டச்சி முதலான படைமுகாம்களை தாக்கி அழைத்துவிட்டனர். அதன்பின் பாதுகாப்பற்ற படைமுகாம்களை வடக்கில் அகற்றிவிட்டனர். இந்த சமயத்தில் புலிகள் கட்டைக்காடு மினிமுகாம் மீது தாக்குதல் நடத்தினர். ஆனையிறவு பெருந்தளத்துடன் இணைந்ததாக இருந்த கட்டைக்காடு தளம் ஆயுதக்களஞ்சியமாகவும் இருந்தது.

 

சொர்ணம் தலைமையில் கட்டைக்காடு மினிமுகாமை தாக்கியழித்து சுமார் 150 வரையான எப்என்சி (FNC) துப்பாக்கிகளையும், பெருமளவான வெடிபொருட்களையும் கைப்பற்றினார்கள். அது புலிகளிற்கு பேருதவியாக இருந்தது.

1996 இல் முல்லைத்தீவு படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இன்னொரு பாய்ச்சலே.

charles-anthony-prabakaran-300x219.jpg பிரபாகரன்- சாள்ஸ் அன்ரனி

நான்காம் கட்ட ஈழப்போரில் இப்படியான பாய்ச்சல்களை புலிகளால் செய்ய முடியாமல் போய்விட்டது. காரணம், இராணுவத்தை குறைவாக எடைபோட்டதும், மரபுவழி போரில் தம்மை புதுப்பித்து கொள்ளாததுமே.

2002 இல் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை நீண்டுகொண்டு சென்ற சமயத்தில் இராணுவம் தன்னை போதுமானளவு புதுப்பித்து கொண்டது. இதுவரை புலிகளுடன் போரிட்ட அனுபவத்தில் தன்னை மாற்றியமைத்துக்கொண்டது. முக்கியமாக படையணியை பெருக்கினார்கள். மரபும், கெரில்லாவும் இணைந்த போருத்தியை கையாண்டார்கள். பெரும் ஆளணியை களமிறக்காமல் சிறுசிறு குழுக்களை களமிறக்கினார்கள். புலிகளின் முதுகுக்குப்பின்னால் தாக்கினார்கள். வானிலிருந்து இலக்குகளை அடையாளம் கண்டு, வானிலிருந்தும் தரையிலிருந்தும் துல்லியமாக தாக்கும் வல்லமையை பெற்றதுடன், அடையாளம் காணல், வான் மற்றும் தரை தாக்குதலை சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள். கடல் நடவடிக்கையில் வான்படையின் துல்லிய தாக்கும் வல்லமையை பயன்படுத்தினார்கள். புலிகள் பாணியில் சிறிய கலன்களை களமிறக்கினார்கள். புலனாய்வு தகவல்களை ஒரேகூரையின் கீழ் கொண்டு வந்து நடவடிக்கை பிரிவுகளை ஒருங்கிணைத்தார்கள். புலிகளின் உலகளாவிய வலையமைப்பை உடைக்க சர்வதேச ஒத்தாசைகளை பெற்றார்கள்.

2006இல் யுத்தம் ஆரம்பித்தபோது புலிகள் நினைத்ததை போல யுத்தம் இருக்கவில்லை. அவர்களால் இலகுவாக படைகளை எதிர்கொள்ள முடியவில்லை. முக்கியமாக புலிகளால் ஒன்றுதிரள முடியவில்லை. தமது வழக்கமான உத்திகளுடன் போருக்கு சென்ற புலிகள், போர்க்கள நிலவரம் தலைகீழாக மாறியிருந்தபோது சற்று தடுமாறிப் போனார்கள்.

இந்த தடுமாற்றத்திற்கு இன்னொரு காரணமுமிருந்தது. அதற்கு காரணம் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி!

(தொடரும்)

 

http://www.pagetamil.com/2152/

Link to comment
Share on other sites

பரந்தனை ராணுவத்தினர் பிடித்ததும் முரசுமோட்டையில் தலைவர் போராளிகளுடன் கூட்டம் நடத்தினார் ,நான் நினைக்கிறேன் இது எழுதுபவரிற்கு பரந்தனுக்கும் முரசுமோட்டைக்கும் உள்ள தூரம் எவ்வளவு என சரியாக தெரியவில்லை என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாள்ஸ் அன்ரனியை முகத்துக்கு நேரே திட்டிய சூசை: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?- 07

April 27, 2018
charles-anthony-5.jpg சாள்ஸ் அன்ரனி

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பின் இறுதி முடிவெடுக்கும் அதிகாரமையமாக பிரபாகரன் இருந்தார் என்றாலும், சமாதான உடன்படிக்கையின் பின்னர் பிரபாகரனின் அணுகுமுறையில் சிறிய வித்தியாசம் ஏற்பட்டது. அமைப்பின் உள்ளக நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களை தளபதிகளிடம் பகிர்ந்தளித்தார். சமாதான உடன்படிக்கை வரை அமைப்பின் ஒவ்வொரு சின்னசின்ன விசயத்தையும் பிரபாகரன்தான் கவனித்தார். ஆனால், தனக்கு பின்னரும் அமைப்பு செயற்பட வேண்டுமென கருதியதாலோ என்னவோ, உள்ளக முடிவுகளை எடுக்கும் பொறுப்பை தளபதிகளிடம் கையளித்தார்.

இந்த நிர்வாக பகிர்ந்தளிப்பில் இன்னொரு விசயமும் நடந்தது. அது – பிரபாகரனின் மூத்தமகன் சாள்ஸ் அன்ரனியின் எழுச்சி.

நிர்வாக முடிவுகளை தளபதிகளே எடுக்கலாமென அனுமதிக்கப்பட்டதன் பின்னர், 2005ம் ஆண்டில் அமைப்பிற்குள் முழுமையாக இறக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி, அடுத்த சில வருடங்களில் அமைப்பின் உள்ளக முடிவுகளை எடுப்பவராக மாறினார்.

டயப்பிற்றிஸ், கொலஸ்ரோல் போன்ற பிரச்சனைகளையும் பிரபாகரன் எதிர்கொள்ள தொடங்க, அவருக்கு ஓய்வு அவசியமாக இருந்தது. 1970களின் ஆரம்பத்தில் தலைமறைவாக செயற்பட காலம் தொடங்கி 2002 இல் ரணிலுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது வரையான 32 வருடங்கள் பிரபாகரன் ஓய்வொழிச்சல் இல்லாமல் போராடியவர். ஒரு மனிதனின் வாழ்நாளில் 32 வருடங்களை போராட்டத்தில் செலவிடுவதென்பது மிகப்பெரிய தியாகம். பதினாறு வயதில் ஆரம்பித்தது. 48 வயதில் ரணிலுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இடைப்பட்ட காலத்தில் பிரபாகரனை கொல்ல நடந்த உள்வீட்டு சதிகள், எதிரிகளின் முயற்சிகள், உயிர் நிச்சயமற்ற போர்க்களங்கள் என அவர் கடந்து வந்த பாதை நினைத்தும் பார்க்க முடியாதது. வெளியுலக தொடர்புகளை துண்டித்து, குடும்பத்துடனும் நேரத்தை செலவிட முடியாமல் அவர் போராளிகளுடன் இரகசிய வாழ்க்கை வாழ்ந்தார். ஓய்வொழிச்சல் இல்லாமல் சிந்தித்தார், செயற்பட்டார். இதனாலேயே விரைவாக களைத்தும் விட்டார்.

 

Untitled-2-copy-1-1-300x155.jpg

இதனால் அமைப்பிற்குள் புது வடிவத்தை கொடுக்க பிரபாகரன் விரும்பியிருக்கலாம். இன்னொன்று- கால மாற்றம், தலைமுறை மாற்றம், தொழில்நுட்ப மாற்றம் என்பன புது இரத்தங்களின் தேவையை அமைப்பிற்குள் உருவாக்கியிருக்கலாம். எப்படியோ, புதிய தளபதிகளின் எழுச்சி அமைப்பிற்குள் நடந்தது.

சமாதான காலப்பகுதியில் இன்னும் அதிகமாக நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை அந்தந்த பிரிவு பொறுப்பாளர்களே முழுமையாக கையாண்டார்கள். பிரபாகரன் பொறுப்புக்களிலிருந்து மெதுமெதுவாக விடுபட தொடங்கினார். 2003 காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளிலொன்று, விடுதலை புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துபவராக பொட்டு அம்மான் நியமிக்கப்பட்டது.

மாத்தையா சதியின் பின்னர் பிரபாகரன் எடுத்த உறுதியான முடிவு, இனி எந்த சந்தர்ப்பத்திலும் அமைப்பில் பிரதிதலைவர் ஒருவரை நியமிப்பதில்லை. (அந்த முடிவை அவர் 2009 மே ஆரம்பத்தில் கைவிட்ட சந்தர்ப்பத்தை பின்னர் பார்க்கலாம்) அதனை அவர் உறுதியாக கடைப்பிடித்தார். மாத்தையாவின் பின்னர் அமைப்பை வழிநடத்த தகுதியானவராக பொட்டம்மான் இருந்தார். முடிவுகள் எடுப்பதில், மற்றவர்களை கட்டுப்படுத்தும் ஆளுமையில் என மற்றைய தளபதிகளை விட முன்னிலையில் இருந்தார். மாத்தையா விவகாரத்தில் அவரை கைது செய்ய அனுமதி வாங்கி, விசாரணை செய்து, மரணதண்டனை வழங்கியதுவரையான நடவடிக்கையில் பொட்டம்மானின் பங்கு முக்கியமானது. இயக்கத்தின் பிரதி தலைவரையே இல்லாமலாக்கும் வல்லமை மிக்கவராக 1994இலேயே அவர் விளங்கினார் என்பது அவரது வல்லமையை புரிய வைக்கும்.

 

புலனாய்வு கட்டமைப்பை உருவாக்கி இந்திய பிரதமரை, இலங்கை ஜனாதிபதியை இன்னும் பல அமைச்சர்கள் உள்ளடங்களாக பல அரசியல் தலைவர்களை இல்லாமலாக்கிய திட்டங்கள் எல்லாம் பொட்டம்மானின் மூளைக்குள் உதித்தவைதான். விடுதலைப்புலிகளின் முக்கிய நகர்வுகள் அனைத்தையும் பிரபாகரனுடன் இணைந்து அவர்தான் எடுத்தார். பிரபாகரனின் இரகசிய இருப்பிடத்திற்கு சோதனைகள் இல்லாமல் நேரடியாக சென்ற- இம்ரான் பாண்டியன், ராதா படையணி தளபதிகளை தவிர்த்த- ஒரே தளபதி பொட்டம்மான்தான்.

lead14-1-300x223.jpg பிரபாகரன்- பொட்டம்மான்- தீபன்- ஜெயம்

2003 இல் கிட்டத்தட்ட அவர்தான் அமைப்பின் இரண்டாவது தலைவர் என்ற நிலையை பிரபாகரன் உருவாக்கினார். இயக்கத்தின் நிர்வாக, அன்றாட செயற்பாடுகள் தொடர்பாக தளபதிகள் கூடி ஆராய்வார்கள். ஆரம்பத்தில் பிரபாகரன் தலைமையில்த்தான் அந்த கூட்டங்கள் நடந்தன. 2003 இலிருந்து பொட்டம்மான் தலைமையில் அவை நடக்க தொடங்கின. இயக்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய முடிவை அந்த கூட்டத்தில் எடுத்தார்கள். பிரபாகரன் இல்லாமலேயே கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நிர்வாக, செயற்பாட்டு முடிவுகளை பொட்டம்மான் எடுக்க அனுமதித்தார். பொட்டம்மான் தளபதிகளிற்கு ஓரளவு சுதந்திரம் வழங்கினார்.

 

2005ஆம் ஆண்டு இதில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அப்பொழுதுதான் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி விடுதலைப்புலிகள் அமைப்பின் முழுநேர போராளியாகினார். அதற்கு முன்னர் சில வருடங்களின் முன்னரே விடுதலைப்புலிகளின் தொழில்நுட்ப பிரிவினால் நிர்வாகிக்கப்பட்ட போராளிகளிற்கான உயர்தொழில்நுட்ப கல்லூரியில் சாள்ஸ் அன்ரனி (அவருடன் பிரபாகரனின் மகள் துவாரகாவும்) சிலகாலம் படித்தார்தான். ஆனால் செயற்பாட்டு ரீதியான விடுதலைப்புலியானது 2005 இல்த்தான்.

charles-anthony-5-300x244.jpg சாள்ஸ் அன்ரனி

அமைப்பிற்குள் நுழைந்த சாள்ஸ் அன்ரனியை, பிரபாகரன் தடல்புடலாக வரவேற்றார் என்பதே உண்மை. எப்படியெனில், கணினி பிரிவென்ற பிரிவொன்றை ஆரம்பித்து அதற்கு சாள்ஸ் அன்ரனியை பொறுப்பாக நியமித்தார். சிறிய பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட கணினி பிரிவு வெகுவிரைவிலேயே பிரமாண்டமாக விஸ்தரிக்கப்பட்டு விட்டது. பெருமளவு நிதி, வளம் ஒதுக்கப்பட்டது. ஆளணி ஒதுக்கப்பட்டது. வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது.

2007 இல் கணினிப்பிரிவில் காணப்பட்ட ஆளணியும், விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏனைய பிரிவுகளில் காணப்பட்ட ஆளணியும் சமமானதென கூறுவார்கள். அந்தக்காலப்பகுதியில் போராளிகள் பகிடியாக இன்னொன்றையும் பேசிக்கொள்வார்கள். எல்லா பிரிவுகளில் இருந்தும் கணிணி பிரிவிற்கு சடுதியாக ஆளணி திருப்பப்பட்ட நேரமது. போராளிகள் “நீ எந்த இயக்கம் மச்சான்.. தலைவரின் இயக்கமா? சாள்ஸ் அன்ரனியின் இயக்கமா?“ என பகிடியாக பேசிக்கொண்ட சம்பவங்களும் உள்ளன!

சாள்ஸ் அன்ரனி நல்ல தொழில்நுட்ப மூளையுடையவர். சண்டியன், மொக்கன் முதலான புலிகளின் சொந்த தயாரிப்பு எறிகணை செலுத்திகளை உருவாக்க முன்னின்றவர். இரசாயன ஆயுத தயாரிப்பிலும் முயற்சிகளை செலுத்தினார். ஆனால், அவர் நல்ல வழிநடத்தும் திறனுள்ள தலைவரல்ல.

வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் வந்த சமயம். இந்த பெயரை கொண்டு சாள்ஸ் அன்ரனியை இரகசியமாக தமக்குள் பகிடி செய்தனர்- அவரது நிர்வாகத்துடன் தொடர்புடைய மூத்த போராளிகள். சாள்ஸ் அன்ரனி நல்ல சாப்பாட்டு பிரியர். ரோல்ஸ் என்றால் அலாதி பிரியம். அதனால் தன்னை சூழ ஒரு சாப்பாட்டு இராச்சியத்தையே நிறுவினார்.

babamortar_1-300x211.jpg புலிகளின் தயாரிப்பு சண்டியன்

 

சாள்ஸ் அன்ரனியை முதன்முதலில் எடைபோட்டவர் சூசை. இறுதிவரை அவர் சாள்ஸ் அனிரனியின் தலைமைத்துவத்தை ஏற்கவில்லை. அவரின் குறைகளை பகிரங்கமாக சுட்டியும் காட்டினார்.

 

யாரும் சாள்ஸ் அன்ரனியை குறைசொல்ல தொடங்க முன்னர் முல்லைத்தீவு கடற்கரையில் ‘கொப்பர் உருவாக்கினதெல்லாத்தையும் அழிக்கிறதுக்காகத்தான் வந்தனியா?’ என சூசை ஒருநாள் கோபத்தின் உச்சியில் திட்டினார்.

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/2763/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.