• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • கடஞ்சா, 1. வீடுகளில் வைத்து சட்ட விரோத செயற்பாடுகள் (கஞ்சா விற்றல்), வரி ஏய்க்கும் செயல் பாடுகள் (வியாபாரம்) என்பன செய்தல் இப்படி அனுமதியை வேண்டும் நிலைக்கு நீதிமன்றங்களைத் தள்ளுகின்றன. அந்த உதாரணங்களைத் தான் நீங்கள் உங்கள் பிரிட்டிஷ் நடைமுறையில் காட்டியிருக்கிறீர்கள். 2. மேலே சுட்டிக் காட்டியிருப்பது போல இலங்கையில் மத போதனைக்குத் தடை கிடையாது. இது ஒன்றும் கவனிக்காமல் விடப் பட்ட விடயமல்ல! 2004 இல் கடற்கோள் நிவாரணப் பணிக்கு உதவ வந்த  என்.ஜி.ஓக்களை கட்டுப் படுத்த உறுமயவும், சந்திரிக்காவின் அரசும் இரண்டு சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற முற்பட்டன! இரண்டும் உள்ளூர், சர்வதேச எதிர்ப்பினால் கைவிடப்பட்டன! எனவே இது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரீட்சிக்கப் பட்ட சட்ட முயற்சி. இனியும் இப்படியான ஒரு சட்டத்திற்கு இது தான் நிலையாக இருக்கும்! 3. இவ்விடயத்தில் நீதிமன்றிற்குப் போய் ஒரு precedence உருவாக்குவது நல்ல விடயம்! அப்படிப் போனால், தனியார் வீட்டில் கட்டாயமாக அடைத்து வைக்கப் படாமல் மத போதனையைச் செய்வதை இலங்கையின் நீதிமன்றங்கள் தடுக்காது என்பது தான் என் நம்பிக்கை. கீழ் நிலை நீதிமன்றங்கள் அப்படித் தடை போட்டாலும்  உயர் நீதிமன்றம் இப்படியான சட்டத்தை அரசியலமைப்பு மீறலாகப் பார்க்கும் என்பது என் நம்பிக்கை மட்டுமே!   4. இந்த மதமாற்றத் தடைச் சட்டங்கள் பற்றிய என் இன்னொரு பிரச்சினை, இதை எப்படி வரையறை செய்வது என்பது தான்: ஒருவன் என்ன காரணத்திற்காக மதம் மாறலாம் என்று தீர்மானிக்கும் உரிமை அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது என் நிலைப்பாடு! இதில் அரசு சொல்ல சட்டம் விதிக்க ஒன்றும் இல்லை! அப்படியொரு நிலையை மதமாற்ற விடயத்தில் ஏற்படுத்தினால் வேறு பல விடயங்களில் அரசுக்கு தனிமனிதன் மீது அதிகாரத்தை வழங்கும் போக்கை நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இது government overreach இன் ஒரு போக்கு!
    • இலங்கையில் மத போதனை செய்ய சட்ட ரீதியில் தடை உள்ளதா இல்லையா என்பதை பற்றி நான் கருத்து தெரிவித்திருக்கவில்லை. அனுமதி இல்லாமல் மதபோதனை செய்கிறார்கள், அனுமதி தேவை என்பது பற்றியே நான் எழுதியிருந்தேன். உங்களுக்கு தமிழ் சரியாக வாசித்து புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
    • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...
    • இது பற்றி நான் இரவு படுத்திருந்து யோசித்தேன்  இப்போது எழும்பி வந்து பார்க்க நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். பவுசு காட்டுபவர்கள் காட்டிக்கொண்டே இருப்பார்கள்  அந்த பவுசுகளை ஏழைகளுக்கு சாதகமாக மாற்றிவிடவேண்டும்  இதனால் தமிழகத்தில் ஏழ்மையில் இருப்பவர்கள் லாபம் பெற கூடிய மாதிரி  என்ன செய்யலாம் என்பதுதான் சரியான சிந்தனையாக இருக்கும். 
    • உலகிலேயே அதிகளவிலான புலம்பெயர் தமிழர்கள் இலங்கையிலிருந்தே வெளிநாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது, தமது உயிரை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் பல இலங்கையர்கள் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றமையை காண முடிகின்றது. தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. யுத்த சூழ்நிலை மாத்திரமன்றி, அரசியல் பிரச்சினைகள் காரணமாக ஊடகவியலாளர்கள், செல்வந்தர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் பிறந்து, வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 3 மில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது.   பல்வேறு காரணங்களின் நிமித்தம் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ளவர்கள், இலங்கையின் பொருளாதாரம், சமூக செயற்பாடுகள், அரசியல் நிலவரங்கள் என அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இலங்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ள புலம்பெயர் தமிழர்களின், இந்த முறை ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு அவதானிக்கின்றனர் என்பது தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது. கனடாவில் புலம்பெயர்ந்து வசித்து வரும் இலங்கையின் முன்னாள் பிரபல ஒலிபரப்பாளர் கே.ஆர்.கிரிஷ்ணாவிடம் நாம் வினவினோம். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்காது என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக கே.ஆர்.கிரிஷ்ணா தெரிவிக்கின்றார். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி அமைப்பதை தாம் விரும்பவில்லை என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கூட தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன், இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவர் சார்ந்த ஒருவருக்கு ஆதரவு வழங்க புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை என அவர் கூறுகிறார். ஒரு வேளை, ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகும் பட்சத்தில், அது இலங்கையில் யுத்த கால சூழ்நிலையை மீண்டும் தங்கள் உறவினர்களுக்கு ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ளதாகவும் இலங்கையின் முன்னாள் பிரபல ஒலிபரப்பாளர் கே.ஆர்.கிரிஷ்ணா குறிப்பிடுகின்றார். கனடாவில் தற்போது வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழரான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஆர்.ரமணனிடம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிபிசி தமிழ் வினவியது. ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கும் பட்சத்தில், இலங்கையில் இதுவரை காலமும் இருந்து வந்த மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம், ஊடக சுதந்திரம் போன்றவை முற்றாக முடக்கப்படும் அச்சம் எழுந்துள்ளதாக ஆர்.ரமணன் கூறுகின்றார். தமிழ் பிரதேசங்களில் கடந்த காலங்களில் இடம் பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள், நினைவெழுச்சி நிகழ்வுகள், அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களின் நிலைமைகள் குறித்து கரிசனை கொள்ளப்படும் நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மறுபுறம் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும் பட்சத்தில், ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் காணப்பட்ட அதிகார போட்டி, ரணில் விக்ரமசிங்கவிற்கும், சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார். தமது அதிகாரத்தை தக்க வைப்பதில் இரண்டு தலைவர்களும் காண்பிக்கும் அக்கறை என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையும் என அவர் குறி;ப்பிடுகின்றார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது போன சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவதை விடவும், கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதை விரும்பியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். கோட்டாபய ராஜபக்ஷவின் பலவீனங்களை நன்கறிந்துள்ள மேற்குலக நாடுகள், அவரை தமது தேவைக்கு ஏற்ப ஆட வைக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளதாகவும் ஆர்.ரமணன் சுட்டிக்காட்டுகிறார். இந்த சூழ்நிலையில், பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவு பெற்று, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடியவர், சிறுபான்மையான தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கு எதையும் பெரிதாக வழங்கி விடப் போவதில்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என புலம்பெயர் தமிழரான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஆர்.ரமணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/sri-lanka-50071067