• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • நீங்கள் சொல்வது உண்மைதான் குகன். மாற்றங்கள் எதுவுமேயில்லையென்றாலும்கூட, இத்தேர்தலில் எவரை ஆதரித்தாலும், சர்வதேசத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும். அதாவது தமிழர்கள் இன்னோரென்ன காரணங்களுக்காக கோத்தாவையோ அல்லது சஜித்தையோ ஆதரித்தார்கள் என்று பதியப்படும். நீண்ட கால அடிப்படையில் இவ்வாறு சர்வதேசத்தில் பதியப்படும் செய்தி எமக்குச் சாதகமாகவும், சிலவேளை பாதகமாகவும் அமையலாம். உதாரணத்திற்கு, 2010 ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கெதிராகப் போட்டியிட்ட சரத் பொன்சேக்கா எனும் மகிந்தவுக்கு நிகரான போர்க்குற்றவாளியை ஆதரிக்கவென்று தமிழர் எடுத்த முடிவு இன்றுவரை மேற்கோள்காட்டப்பட்டே வருகிறது.
    • தேர்தலை புறக்கணித்திருக்கா விட்டாலும் மகிந்த வென்றிருப்பார்.  அன்று இருந்த சூழலில்.. 2004 ம் ஆண்டு முரளிதரன் பிளவு..  சுனாமி.. ரணில் - பிரபா உடன்படிக்கை முழுமையாக அமுலாக்கப்படாமை.. சுனாமி நிதி முடக்கம்.. தாய்லாந்து..  ஜப்பான் பேச்சுத் தோல்வி என்பது மட்டுமன்றி.. விடுதலைப் புலிகள் மீது சர்வதேசப் பயணத் தடைகள் என்று  வெளிநாட்டு அழுத்தங்கள் பல வழிகளில் சூழப்பட்டு இருந்தன.  அதுமட்டுமன்றி.. விடுதலைப்புலிகளின் சர்வதேச விநியோகக் கப்பல்கள் பல சர்வதேசக் கடலில் வைத்து அழிக்கப்பட்டும் இருந்தன. இந்தச் சூழலில்.. விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில்.. ஹிந்தியாவின் தலையீடு மீண்டும் ஈழப் போராட்டத்துக்குள் வருவதை விரும்பி இருக்கவில்லை. இதனை 2002 தீச் சுவாலை முறியடிப்போடு.. யாழ் நகர் நோக்கிய விடுதலைப்புலிகளின் முன்னெடுப்புக்கள் முடக்கப்பட்ட நிலையில்.. ஹிந்தியப் படைகளின் உதவியை அம்மையார் சந்திரிக்கா.. சொறீலங்காப் படைகளை மீட்க கோரி இருந்த நிலையில்..  புலிகள் எடுத்தனர்.  அந்தச் சூழலில் அது தவறே அல்ல.  மேலும்.. விடுதலைப்புலிகள் விட்ட தவறு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தோல்வி குறித்து சிங்களத்துக்கு ஹிந்தியா உட்பட்ட சர்வதேசம்.. செய்து வந்த ஆலோசனைகளை கருத்தில் கொண்டு எதிர்கால இராணுவத் திட்டங்களை முறியடிக்க தம்மை தயார் செய்யாமையே. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பின்னடைவின் போதே.. வன்னியை கைப்பற்றும் மாற்றுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. அதில்.. வன்னியின் இரு பக்க கரையோரங்களையும் குறிவைத்து படை நகர்த்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று ஹிந்தியப் படை அதிகாரிகள் பகிரங்கமாகவே ஆலோசனை வழங்கினர். இறுதியில் நடந்ததும் அதே. விடுதலைப்புலிகள் தமது ஆளணி.. ஆயுத பலத்தைக் கூட்ட எடுத்த முயற்சிகள் வெற்றி அளிக்காததும்.. அவர்கள் போர்க்களத்தில் தோல்வி அடைய இன்னொரு காரணம். அதற்கு வன்னி மக்கள் நீண்ட போர் காலத்தை சந்தித்து போர் குறித்த சலிப்படைந்ததும் ஒரு காரணம். இப்படிப் பல பின்னணிகள்.. மத்தியில் அமைந்த ஒரு வெற்றியை வெறும் மகிந்த வெற்றியாகக் காட்ட முடியாது.  அதனால்... தான் மகிந்த கும்பல் செய்த இனப்படுகொலையை கூட உலகம் மூடி மறைத்துக் கொள்ளவே விரும்புகிறது. ஏனெனில்.. இந்தக் கும்பலை பின்னணியில் இருந்து இயக்கியோர் பலர். அவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் வரும் என்ற அச்சம் அவர்களுக்கு. அவர்களின் மனித உரிமை அக்கறையின் போலித்தன்மை வெளிப்பட்டு விடும் என்ற பயம்.. மட்டுமன்றி.. ஆளாளுக்கு இதனை சாக்கு வைச்சு ஆதாயம் தேடும் களமாக இலங்கையை சூதாட்டக் களமாக்குவதே அவர்களின் நோக்கம். அதை இன்று வெளிப்படையாகவே காண்கிறோம். 
    • அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழின அழிவிற்கு......இனக்கலவரம் ஊடாக சகல அழிவிற்கும் எம் அரசியல் தலைவர்களே முக்கிய காரணம். தமது அரசியல் லாபத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.
    • ஈழம் என்ன ஹிந்தியாவிலா அமைக்க நிதி திரட்டுகிறார்கள்.. பிரச்சாரம் செய்கிறார்கள். இதெல்லாம் ஹிந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் அப்பட்டமான பாசிசம். இதுதான் பாசிசத்துக்கான உண்மையான விளக்கமே.  ஹிந்திய நீதித்துறைக்கு ஈழ விவகாரத்தில் தலையிட.. கருத்துச் சொல்ல.. தடைவிதிக்க என்ன அதிகாரம் உள்ளது. ஈழம் என்ன ஹிந்தியாவின் நிலப்பரப்பா அல்லது ஹிந்திய சட்டத்துக்கு உட்பட்டதா. இதெல்லாம் அடாத்தான பாசிசச் செயற்பாடுகள். இவர்கள் எல்லாம் வல்லரசானால்.. அமெரிக்கா இன்று செய்வதை விட மோசமாக மனித குலத்திற்குச் செய்வார்கள் என்பதை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இன்னும் ஹிந்தியாவை விஞ்சி நாங்கள் ஒன்றுமே செய்ய ஏலாது என்று பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு.. ஹிந்தியாவின் உண்மையான பலவீனம் தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறார்கள். அவ்வளவே. 
    • பேசலாம்  சகோ... ஆனால் அதை  ஒரு பொது  நோக்கோடு தமிழரின் அடுத்த  கட்ட திட்டங்கள்  சார்ந்து  பேசுவதே  சரியாக  இருக்கும் இன்றும் இரண்டு  பேய்களில் ஒன்றை  தெரிவு  செய்தே ஆகவேண்டும்  என்ற  அதேநிலைமை  தானே?? அப்போ  தமிழர் வாக்குகளால்  என்ன  வந்துவிடப்போகிறது?????