• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • நீங்கள் பொறுமையாக வாசித்து எல்லாம் தெரிந்து வைத்து எழுதுகிறீர்கள். எனக்கு உங்கள் அளவு அறிவு இல்லை. கட்டாயம் நீங்கள் சரியானதை எழுதவேண்டும். பெண்கள் எழுதுவதற்கு நேரம் இன்மை இருக்கிறது. ஆனால் ஆண்களுக்கு நிறைய நேரம் இருக்கும் எழுத.😀 நீங்களும் எழுதாவிட்டால் பலர் எழுதுவது,  போடுவது உண்மை என்று எல்லாரும் நம்பிவிடுவார்கள்
    • உண்மைதான். நானும் கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறேன்.
    • மிக நேர்தியான, அதைவிட நேர்மையான பேச்சு. ராஜேந்திர சோழனின் மெய்கீர்தியை விட, தன் சுய கீர்த்தியை ஐயா பேசினாலும் கூட, அதையும் அறிவுச் செருக்கு என்று ரசிக்கவே முடிகிறது. ரோமில் தமிழர் குடியிருப்பு இருந்தது, சோழ நாணயங்கள் கிடைத்தன எனவே ரோமனியர்கள் தமிழர்கள், சீலன் என்ற பெயர்தான் மருவி சீசர் என்றாகியது என்று பைத்தியக்காரத்தனம் பண்ணாமல் விட்டார் பாருங்கள் - அதுதான் முத்தாய்ப்பு.  
    • இப்படியானவற்றில் எழுதி எப்பயனும் இல்லை என்பது தெரிந்துதான் நான் எழுதாமல் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது.
    • தெய்வநாயகம் ஐயா ஒரு இடத்தில்தானும் அங்கர்வாட்டை பற்றியோ, கெமர், கம்போடியா பற்றியோ பேசவில்லை. அவரின் இந்த காணொளியை, வன்னியன் பதிந்த அன்றே நான் பார்த்து விட்டேன். அதே போல நெடுக்கு பதிந்த இரெண்டாவது ஆங்கில விபரணமும் நான் கூறியவற்றையே கூறுகிறது. ஒரு இடத்திலேனும் இந்த கோயில் தமிழருடையது என சொல்லவில்லை. ஜி ஜி பொன்னம்பலம், தமிழ் விவாதத்தில் தோக்கிறமாரி நிலை வந்தா, டக்கென்று ஆங்கிலம் பேசி, சேக்ஸ்பியர் அப்படிச் சொன்னார், சாக்ரடீஸ் இப்படிச் சொன்னார் என பேச்சை மாத்துவாராம்😂. நெடுக்கும் அதுபோல சம்பந்தமே இல்ல்லாத, அல்லது எமது கருத்தை ஆதரிக்கும் 35, 55 நிமிட வீடியோக்களை போட்டால், பாக்கிற பஞ்சியில சனம் அவர் சொல்லுறதுதான் உண்மை என ஏற்கும் என நினகிறார் போல😂. அவர்ட கெட்டகாலம் உந்த வீடியோ எல்லாம் நான் கம்போடியா போக முதலே பாத்தாச்சு 😂. பிகு:1 எனது கருத்துக்கு ஆய்வு கட்டுரையில் இருந்து ஆதாரம் கேட்டுவிட்டு, தான் ரெண்டு யுடியூப் வீடியோவை இணைத்தார் பாருங்கள் - அங்கே நிற்கிறது நெடுக்கின் அறிவுசார் நேர்மை 😂 பிகு:2 தெய்வநாயகம் ஐயா ராஜேந்திரனின் மெய்கீர்தியை விட தன் மெய்கீர்தியையே அதிகம் பேசினாலும் - அவர் சொல்வது உண்மையே. ஆள் நிச்சயமாக விசயகாரன். அவரே சொல்வதுபோல intellectual arrogance - ஞானம் உள்ளவர்களிடம் இதை சகித்துகொள்ள நான் எப்போதும் தயார். ஆனா சில யுடியூப் மேதைகள் தாமும் intellectual arrogance காட்ட முனையும் போதுதான் செம கடுப்பாகும் 😂