Jump to content

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை கடத்த புலிகள் தயார் செய்த மயக்க மருந்து!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 29

July 29, 2018
pir-2.jpg

பீஷ்மர்

தரவையில் சுமார் ஐயாயிரம் போராளிகளால் சூழப்பட்ட பிரமாண்ட இராணுவ வலயத்திற்குள் பாதுகாப்பாக இருந்த கிழக்கு தளபதி கருணாவை கடத்துவதென புலிகள் திட்டமிட்டதையும், இதற்கான ஒப்ரேசனை பொட்டம்மான் ஆரம்பித்ததையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். கருணாவை பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து வெளியே இழுத்தெடுக்க, கொக்கட்டிசோலை சிவன் ஆலயத்தில் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யனின் திருமணம் திட்டமிடப்பட்டது. ஆலயத்திற்குள் வைத்து கருணாவை எப்படி கடத்துவது, எங்கே கொண்டு செல்லப்படுவதென்பதையெல்லாம் பக்காவாக திட்டமிட்டனர் என கடந்த பாத்தை முடித்திருந்தோம்.

2004 மார்ச் 03ம் திகதி திருமண வீட்டில் வைத்து கடத்தப்படும் கருணாவை இரகசியமான தடுத்து வைக்க, உன்னிச்சை தொடக்கம் மாங்கேணி வரையில் நான்கு இரகசிய மறைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. சூழ்நிலைக்கு தக்கதாக ஏதாவதொரு மறைவிடத்தில் தங்க வைக்கப்படுவார். இந்த மறைவிடங்களில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போராளிகளிற்கு, தமது முகாமில் தடுத்து வைக்கப்பட போகும் பிரமுகர் யார் என்பது தெரியாது. மிக உயர்ந்த இராணுவ அதிகாரியென்று மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

 

இந்த இரகசிய முகாம்களில் இருந்த போராளிகளிற்கு மற்றைய முகாம்களை பற்றி தெரியாது. அவ்வளவு இரகசியமாக திட்டமிடப்பட்டது. அந்த முகாம்களில் ஒன்றிற்கு கருணாவை கொண்டு வந்து தடுத்து வைப்பது, திட்டத்தின் முதல் கட்டம்.

இரண்டாம் கட்டமும் இருந்தது. அது கருணாவை கொண்டே கிழக்கு படையணிகளை அமைதிப்படுத்தி, அவரை வன்னிக்கு கொண்டு செல்வது.

கிழக்கின் முக்கிய தளபதிகளுடன் கருணாவை தொலைத்தொடர்பு கருவியின் மூலம் பேச வைத்து, கிழக்கு படையணிகளை அமைதிப்படுத்திவிட்டு அவரை வன்னிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். கிழக்கு படையணிகள் அமைதியடையாமல் விட்டால் கூட வன்னிக்கு கொண்டு செல்லவும் ஒரு திட்டமிருந்தது.

கருணா கடத்தப்பட்ட செய்தியை அறிந்ததும் கிழக்கு படையணிகளிற்குள் சிறிய குழப்பம் வரும், ஆனால் தளபதிகளை சமாளித்தால், குழப்பத்தை ஓரிரு நாளில் முடித்து விடலாமென புலிகள் நம்பினார்கள். உண்மையில் இது ஒரு விசப்பரீட்சை. கிழக்கு போராளிகள் குழப்பமடைந்து, தனித்து செயற்பட முடிவெடுத்தாலோ, அல்லது தாக்குதலில் ஈடுபட்டாலோ தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடும். அப்படியிருந்தும், புலிகள் ஏன் அப்படியொரு திட்டத்தை போட்டார்கள்?

 

Karuna-250_23092008.jpg

இந்த இடத்தில்தான் மிக முக்கியமான விசயமொன்றை குறிப்பிடுகிறோம். இந்த விசயத்தை பற்றி இதுவரை பகிரங்கமாக பேசப்படவில்லை. புலிகளின் உயர்மட்டத்தில் மட்டும் கையாளப்பட்ட மிக முக்கிய இராணுவ இரகசியமாக இருந்ததால், வெளியில் கசியவில்லை. தமிழ்பக்கம் வாசகர்களிற்காக இப்பொழுது அதை வெளிப்படுத்துகிறோம்.

 

கிழக்கு இராணுவ தளபதிகளில் கருணாவிற்கு அடுத்த நிலையில் இருந்தவர் கேணல் ரமேஷ். கருணா பிரிவின்போது, அவருடன் பிரிந்து சென்றவர். ஒருநாளில், மீண்டும் கருணாவை விட்டு புலிகளிடம் வந்து விட்டார் என அவரை பற்றி எழுதப்படுவதுண்டு. வெளிப்பார்வைக்கு அப்படித்தான் தெரிந்தது. ஆனால், உண்மை அதுவல்ல. கருணா ஒப்ரேசன் முன்னரே ரமேஷூக்கு தெரியும்!

இந்த தகவல் வாசகர்களிற்கு ஆச்சரியமாக இருக்கும். தொடர்ந்து படிக்க, கருணா விவகாரத்தில் நீங்கள் அறிந்திராத இன்னும் பல ஆச்சரியமாக தகவல்களை வெளியிடுவோம்.

கருணாவை மடக்கி வன்னிக்கு கொண்டு வருவதில் உள்ள ரிஸ்கை புலிகள் அறிவார்கள். கிழக்கு தளபதிகளின் ஒத்துழைப்பில்லாமல் அதை செய்யவே முடியாது என்பது அவர்களிற்கு தெரியும். அதற்கான ஏற்பாட்டை பல முனைகளினால் செய்திருந்தார்கள். அதில் ஒரு முனையே கேணல் ரமேஷ்!

கருணாவிற்கு எதிரான புலிகளின் ஒப்ரேசனில், வெளியில் தெரியாத வகையில் கேணல் ரமேஷின் பங்கு எப்படியிருந்தது?

கருணா புலிகள் அமைப்பிற்குள் முரண்டுபிடித்துக் கொண்டிருந்த சமயத்தில்-2004 இன் இறுதியில்- பொட்டம்மான் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார் என சில வாரங்களின் முன்னர் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா, அப்போது நடந்த சந்திப்பொன்றை குறிப்பிடாமல் விட்டிருந்தோம். அதைப்பற்றி விபரமாக குறிப்பிட வேண்டிய தருணம் இது.

 

பொட்டம்மானை இரகசியமான முறையில் கிழக்கு நிதிப்பிரிவை சேர்ந்த கம்சன் சந்தித்ததை சொல்லியிருந்தோம் அல்லவா, அந்த நாட்களில் மட்டக்களப்பு தளபதியாக இருந்த கேணல் ரமேஷூம், பொட்டம்மானை சந்தித்தார். அது உச்சக்கட்ட இரகசியமாக நடந்த சந்திப்பு.

கருணா சிக்கல் தோன்றியபோதே, கிழக்கு புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் ஒருவர் மூலம், ரமேஷை நாடிபிடித்து பார்த்தார் பொட்டம்மான். புலிகளிற்குள் குழப்பம் ஏற்படுவதை ரமேஷ் விரும்பவில்லை. கருணாவால் சிக்கல் ஏற்பட்டால், விடுதலைப்புலிகளுடன்தான் நிற்பேன் என்ற முடிவுடன் ரமேஷ் இருக்கிறார் என்பதை மட்டக்களப்பிற்கு புறப்படுவதற்கு முன்னரே பொட்டம்மான் தெரிந்து கொண்டார்!

இந்த இடத்தில், கருணாவின் கீழ் செயற்பட்ட தளபதிகளை பற்றியும் குறிப்பிட வேண்டும். கருணாவின் கீழ் இருந்த படையணிகள் அனைத்துமே போர்ப்படையணிகள். அதில் முன்னுக்கு வருவதென்றால், அவர் சண்டைக்களத்தில் ஜொலிக்க வேண்டும். அல்லது, கருணாவின் தனிப்பட்ட நம்பிக்கையை பெற வேண்டும். வன்னியிலிருந்த புலிகளின் கட்டமைப்பை போல, கிழக்கில் இருக்கவில்லை. அதனால் நிர்வாக ஆளுமை சில சமயங்களில் கிழக்கில் கவனிக்கப்படாமலும் போவதுண்டு. ராபர்ட், ஜிம்கெலி, ஜிகாத்தன் போன்ற கிழக்கின் நட்சத்திர இளநிலை தளபதிகள் எல்லோருமே சண்டைக்களத்தில் ஜொலித்து முன்னுக்கு வந்தவர்கள். அதே சமயத்தில் கருணாவின் அதிதீவிர விசவாசிகள்.

karadiyarau_5-300x225.jpg

 

ஆனால் ரமேஷின் கதை வேறு. அவர் கிட்டத்தட்ட கருணா அளவிற்கு சீனியர். சண்டைக்கள திறன், நிர்வாக திறனென்பவற்றுடன் சீனியோரிட்டியும் கொண்டவர். ஏற்கனவே சொன்ன ராபர்ட், ஜிம்கெலி, ஜிகாத்தன் போன்றவர்களை போலவோ, அல்லது கருணாவின் நம்பிக்கையின் நிமித்தம் முன்னுக்கு வந்த குகநேசன் போன்றவர்களைபோல, கருணா எடுக்கும் அனைத்து முடிவுகளையும் கேள்விக்கிடமின்றி விசுவாசமாக செயற்படுத்துபவராக இருக்கவில்லை. கருணாவை கணிசமான சந்தர்ப்பங்களில் அனுசரித்து செல்பவராக இருந்தாலும், கேள்விக்கிடமின்றி விசுவாசிப்பவராக இருக்கவில்லை. இது கருணாவிற்கும் தெரியும்.

 

கருணா தனக்கு விசுவாசமானவர்களை கொண்ட புலனாய்வு கட்டமைப்பை மட்டக்களப்பில் உருவாக்கியபோது, அதில் ரமேஷ் தலையிட முடியாதபடி செய்திருந்தார். ரமேஷிற்கும் கருணாவிற்குமிடையில் எப்படியான உறவிருந்தது, ரமேஷை கருணா எவ்வளவு நம்பினார் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும் சில சந்தர்ப்பங்கள் இந்த தொடரின் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும். கருணா பிரிவின்போது, நடந்த அந்த சம்பவங்களே அவை.

“கருணாவை அகற்றும் ஒப்ரேசன்“ நடந்தால், கிழக்கு போராளிகள் எப்படியான எதிர்வினையாற்றுவார்கள் என தன்னை சந்தித்த ரமேஷிடம், நேரடியாகவே கேட்டார் பொட்டம்மான்.

இரண்டாம் மட்ட தளபதிகள் ஒன்பது பேரை ரமேஷ் பட்டியல்படுத்தினார். அவர்களை கைக்குள் வைத்திருந்தால், கிழக்கு படையணிகளை கட்டுப்படுத்தலாம் என்றார். இதில் சுவாரஷ்யம் என்னவென்றால், கருணா பிரிந்து சென்றபோது ரமேஷ் பட்டியல்படுத்திய இளநிலை தளபதிகளில் ஏழு பேர் கருணாவுடன் சென்றனர். கருணாவை சுற்றியிருந்தவர்களை பற்றி ரமேஷ் எவ்வளவு துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார் பாருங்கள்!

4226058649_b27d092ab1-300x225.jpg ரமேஷ்- ஜெயம்- சூசை

அந்த ஒன்பது பேரை கையாளும் பொறுப்பும் புலனாய்வுத்துறையிடம்தான் இருந்தது. கருணா கடத்தப்பட்டால், அடுத்ததாக அந்த ஒன்பது பேரில் ஐவரை புலனாய்வுத்துறையின் வளையத்திற்குள் கொண்டுவரும் திட்டமும் தயாரிக்கப்பட்டிருந்தது. அவர்களின் மூலம் கிழக்கு படையணிகளை கட்டுப்படுத்தலாம். ரமேஷூம் புலிகளுடன் இருந்ததால், சிக்கலில்லாமல் விசயத்தை முடிக்க வாய்ப்பிருந்தது.

கருணா பிளவில் ஏற்பட்ட திடீர் காட்சி மாற்றங்களே, ரமேஷை பற்றி ஒரு தரப்பினர் குற்றம்சாட்டும் நிலையேற்பட காரணமானது. கருணாவை கைது செய்யும் திட்டம் துல்லியமாக நடக்கும், கிழக்கு பிரச்சனை சிக்கலில்லாமல் தீர்க்கப்படும் என்றுதான் புலிகள் எதிர்பார்த்தனர். ரமேஷூம் அப்படித்தான் நினைத்தார். ஆனால், திடீரென ஏற்பட்ட மாற்றங்கள், அனைத்தையும் தலைகீழாக்கி விட்டது.

இந்த திடீர் மாற்றங்கள் ஏன் நடந்தன?

இனிவரும் பகுதிகள், இந்த மாற்றம் ஏன் நடந்தது என்பதை விபரமாக குறிப்பிடுவோம். அதற்கு முன்னர், கருணா கடத்தலின் இரண்டாம் கட்டத்தை குறிப்பிட வேண்டும்.

கருணாவை இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைத்துக்கொண்டு, கிழக்கு படையணிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது முதலாவது கட்டம். இது சரியாக நடந்தால், 2004 மார்ச் 04ம் திகதி (அதாவது, கருணா பிரிந்து செல்வதாக அறிவித்ததற்கு அடுத்தநாள்) வாகரைக்கு அருகில் வைத்து படகேற்றி முல்லைத்தீவிற்கு கொண்டு வருவதுதான் திட்டம்.

 

கிழக்கு படையணிகள் குழப்பம் விளைவித்து, வாகரைக்கு அண்மித்த புலிகளின் கடற்போக்குவரத்து மையங்களில் சிக்கல் ஏற்பட்டால் புலிகள் தங்கள் புலனாய்வு நெற்வேர்க்கின் உச்சபட்ச திறனையும் காண்பிக்க தயாராக இருந்தார்கள். அதாவது கிழக்கு கரையில் இருந்து கருணாவை கரையேற்றாமல், தரைவழியாக மேற்கு கரைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து மன்னாருக்கு கொண்டு வருவதே அந்த திட்டம்!

இது உச்சகட்ட ரிஸ்க் எடுக்கும் வேலை. ஆனால் புலிகள் அப்படியான திட்டங்களையே அதிகம் போடுவதால், பிரபாகரனின் அப்ரூவல் கிடைப்பதில் சிக்கலிருக்கவில்லை. மட்டக்களப்பில் இருந்து, மேற்கு கரையில் இருந்த சிலாபத்திற்கோ, நீர்கொழும்பிற்கோ எப்படி கருணாவை கொண்டு செல்வது?

புலிகளின் புலனாய்வு நெற்வேர்க் விசயங்களை அறிந்தவர்களிற்கு, இதெல்லாம் பெரிய விசயங்கள் கிடையாதென்பது தெரிந்திருக்கலாம். கொழும்பிலிருந்தும் சில கடத்தல்களை புலிகள் இப்படி செய்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், சில ஆழ ஊடுருவும் படையணி இராணுவ வீரர்களை இப்படித்தான் தெற்கில் இருந்து கடத்தி வந்தார்கள். தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, கடற்கரைக்கு படகேற்ற கொண்டு செல்வதற்கிடையில் கைதி குழப்பம் விளைவித்து, பிரச்சனையை ஏற்படுத்தாமல் இருக்க, மயக்க ஊசிகளையும் புலிகள் பாவித்தார்கள். கருணாவிற்காக இந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இப்படியெல்லாம் பக்கா ஏற்பாடு செய்த கருணா கடத்தல் திட்டம் ஏன் நடக்கவில்லை?

தனிமனித உறவுகள் எப்படியெல்லாம் அமைப்புரீதியான நடவடிக்கையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு கருணா ஒப்ரேசனில் ஏற்பட்ட சறுக்கல் ஒரு சிறந்த உதாரணம். புலனாய்வுத்துறை போராளியொருவரின் காதலே கருணா ஒப்ரேசனின் தோல்விக்கு காரணம்!

யார் அந்த புலனாய்வு போராளி?

கருணாவை கொக்கட்டிசோலை சிவன் ஆலயத்திற்குள் வைத்து மடக்க தயார்செய்யப்பட்ட பதினைந்து போராளிகளில் ஒருவர். பின்னர் கருணா அணியினால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட லெப்.கேணல் நீலனின் தலைமையில் செயற்பட்டவர்.

கருணாவை ஆலயத்திற்குள் வைத்து மடக்கி, உன்னிச்சை தொடக்கம் மாங்கேணி வரையில் கொண்டு செல்லும் அணியில் இருந்தவர் இந்த புலனாய்வு போராளி. விடுதலைப்புலிகள் அமைப்பில் ஓரிரண்டு வருடங்கள்தான் ஆன, இளம் போராளி. இப்பொழுது அவரது வயதை துல்லியமான குறிப்பிட முடியவில்லை. தோற்றத்தின் அடிப்படையில் 23,24 வயதுதான் மதிப்பிடலாம்.

அவருக்கு ஒரு காதல் இருந்தது. யார் காதலி தெரியுமா? அவரும் போராளிதான்.

போராளியென்றால் கூட பரவாயில்லை. சிக்கல் ஏற்பட்டிருக்காது. அவர் யாருடைய மெய்ப்பாதுகாவலர் தெரியுமா?

நிலாவினியுடைய மெய்பாதுகாவலர்!

நிலாவினி (சாளி) யார் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். கருணாவின் கீழ் செயற்பட்ட பெண்கள் படையணி தளபதி. அவரையும் கருணாவையும் இணைத்து பின்னாளில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் நிறைய கதைகள் உலாவின. நிலாவினியை அமைப்பை விட்டு நீக்குமாறு பிரபாகரன் உத்தரவிட்டும், கருணா அதை செய்யாமல் நிலாவினியை பாதுகாத்து வந்ததை இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். ஒருவகையில் சொன்னால், கருணா பிளவிற்கு நிலாவினியும் ஒருவிதத்தில் காரணமாக இருந்தார். கருணா பிரிந்து சென்றபோது, நிலாவினியும் சென்றிருந்தார். ஆனால் பெண்களை வைத்து புலிகளிற்கு எதிராக பயன்படுத்துவது சாத்தியமில்லையென்றதால், அவரை மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்ணாக அனுப்ப முயற்சிக்கப்பட்டது. இதற்குள் நிலாவினியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரை புலிகள் கைது செய்து, அவர்கள் மூலம் நிலாவினியை வன்னிக்கு வரவழைத்து கைது செய்தனர். பத்திரிகையாளர்களை சந்தித்து, பிளவு விசயங்களை நிலாவினி பகிரங்கமாகவே பேசியிருந்தார். பின்னர், புலிகளால் நிலாவினிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

நீலனின் அணியிலிருந்த அந்த புலனாய்வு போராளி, நிலாவினியின் மெய்பாதுகாவலராக இருந்த பெண் போராளியொருவரை தீவிரமாக காதலித்து வந்தார்.

ltte_trcamp_03_04_03_01-300x225.jpg கருணா- ரமேஷ்- நிலாவினி

கருணா ஒப்ரேசனிற்காக தனிமுகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பதினைந்து போராளிகளும், வெளியில் யாருடனும் தொடர்பில்லாமல் வைக்கப்பட்டிருந்தனர். கருணாவை கொக்கட்டிச்சோலையில்  கடத்தும் திட்டம் தயாராவதற்கு முன்னர், வேறு இடங்களில் அதை செய்யலாமா என புலிகள் பார்த்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 2004 ஜனவரியிலேயே நீலன் தலைமையிலான இந்த அணி தயாராகி விட்டது. வேறு திட்டங்கள் சாத்தியப்படாத நிலையிலேயே கௌசல்யன் திருமணம் திட்டமிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடவெளி இதற்குள் ஏற்பட்டு விட்டது.

கருணா ஒப்ரேசனிற்கு அவசரஅவசரமாகத்தான் போராளிகள் தயார்செய்யப்பட்டனர். தேர்ந்தெடுத்த போராளிகளை வைத்து ஒப்ரேசனை செய்யாமல், இருக்கும் போராளிகளை வைத்து ஒப்ரேசனை செய்ய புலிகள் முடிவெடுத்திருந்தனர். ஏனெனில், வேறு போராளிகளை மட்டக்களப்பிற்கு கொண்டு வரும்போது, கருணாவின் புலனாய்வு பிரிவு அதை மோப்பம் பிடித்தால், சந்தேகம் ஏற்பட்டு எச்சரிக்கையாகி விடுவார்கள். இதனால் கிழக்கில் இருந்த புலனாய்வு போராளிகளை வைத்தே திட்டத்தை தயாரித்தனர்.

 

எல்லா போராளிகளுமே ஒரேவிதமான மனநிலை படைத்தவர்களாக இருக்க மாட்டார்கள். சிலர் நீண்டகாலம் உறவினர்களை சந்திக்காமல் இருப்பார்கள். சிலரால் முடியாது. இந்த புலனாய்வு போராளி இரண்டாவது வகை. அதுவும் காதலியை ஒன்றரை மாதங்கள் சந்திக்காமல் இருப்பது கொஞ்சம் சிரமம்தானே!

ஒருமுறை வெளியில் சென்று காதலியை சந்திக்க வேண்டும். இதுதான் அவரது பிரச்சனை. பலமுறை, பல காரணங்களை கூறி முகாமை விட்டு வெளியில் செல்ல அந்த போராளி முயன்று கொண்டிருந்தார். ஆனால் நீலன் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்த சமயத்தில்தான் அவருக்கு பல் வலி ஏற்பட்டது. அது சாதாரணமானதாக இருக்கலாமென பின்னாளில், இந்த ஒப்ரேசனில் பங்குகொண்ட அவரது நண்பரான ஒரு போராளி புலிகளிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

ஆனால், தாங்க முடியாத பல் வலியாக காண்பித்து, மருத்துவமனைக்கு சென்றார். இந்த இடத்தில்தான் புலிகள் ஒரு தவறு செய்தனர். அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து ஐந்து கிலோமீற்றர்களிற்கு அப்பாலிருந்த வைத்தியசாலைக்கு அவர் தனியாக சைக்கிளில் சென்று வர அனுமதித்தனர்.

போகும் வழியில்தான் நிலாவினியின் முகாமும் இருந்தது. எப்படியோ முகாமிலிருந்த காதலிக்கு தகவலை அனுப்பி அவரையும் வெளியில் அழைத்தார். நீண்டநாள் தன்னை சந்திக்க வராத காதலனை கோபித்துக் கொண்டார். காதலியை சமாளிக்க வேண்டுமே… வேறு எதையும் யோசிக்காமல், இயக்கத்தால் தமக்கு தரப்பட்டுள்ள முக்கிய வேலையை பற்றி சொன்னார்.

கருணா கடத்தலில் புலிகள் சறுக்கிய புள்ளி இதுதான்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/12344/

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அமைதியாய் இரு என தலைவர் சொன்னதையும் கேட்காமல் பொட்டர் அவசரப்பட்டதன் பலன் இப்ப தெரியுதா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அமைதியாய் இரு என தலைவர் சொன்னதையும் கேட்காமல் பொட்டர் அவசரப்பட்டதன் பலன் இப்ப தெரியுதா 

பொட்டர் நடவடிக்கை எடுக்க காரணம் என்ன என்று இப்ப தெரிகிறதா?

நடவடிக்கை எடுக்காமல் விட்டாலும் பலன் இதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

பொட்டர் நடவடிக்கை எடுக்க காரணம் என்ன என்று இப்ப தெரிகிறதா?

நடவடிக்கை எடுக்காமல் விட்டாலும் பலன் இதே.

 

நான் கொஞ்சம் மக்கு ...பொட்டு நடவடிக்கை எடுக்க என்ன காரணம் சுருக்கமாய் சொல்லுங்கோ பார்ப்பம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

நான் கொஞ்சம் மக்கு ...பொட்டு நடவடிக்கை எடுக்க என்ன காரணம் சுருக்கமாய் சொல்லுங்கோ பார்ப்பம் 

பக்கம் ஒன்றிலிருந்து ஆரம்பியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

பக்கம் ஒன்றிலிருந்து ஆரம்பியுங்கள்

வாசித்த படியால் தான் கேட்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரடினாறு பக்கம் போயிருந்த போது சில இடங்களை பார்த்த போதும் தான் நினைத்து இருந்தன் எவ்வளவு பெரிய பரப்பை கிழக்கில் கைவசம் வைத்து இழந்துள்ளார்கள் என்று மேல் உள்ள படத்தில் இருக்கும் மலைசார்ந்த பகுதிகள் போல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!

August 9, 2018
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30

பீஷ்மர்

கருணா கடத்தல் ஒப்ரேசனிற்காக இரகசியமாக பயிற்சி கொடுக்கப்பட்டு தயாராக்கப்பட்ட  போராளிகளில் ஒருவர், பல்வலியை காரணம் காட்டி முகாமிலிருந்து வெளியில் சென்றார், அதற்கு காரணம் காதல். அவரது காதலி, கருணாவின் மகளிர் அணி தலைவி நிலாவினியின் மெய்பாதுகாவலர்.

இத்தனை நாள் தன்னை பார்க்க வரவில்லையென காதலனுடன் அவர் செல்லமாக கோபிக்க, காதலியை சமாதானப்படுத்துவதற்காக உண்மையை உளறிவிட்டார். கிழக்கு தளபதி கருணாவை கடத்த இரகசியமாக தயாராகும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு, அதில் தானும் ஒருவராக இருப்பதால் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லையென கூறினார்.

கருணா கடத்தலில் புலிகள் சறுக்கிய புள்ளி இதுதான்.

இந்த தகவல்களை தமிழ்பக்கத்தில் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.

உண்மையை சொன்னால், அந்த இரண்டு போராளிகளிற்கும் அந்த விடயத்தின் முழுமையான தார்ப்பரியம் புரிந்திருக்கவில்லை. ஏதோ சின்ன பிரச்சனையென்பதை போல நினைத்தார்கள். இந்த இரகசியம் வெளியில் கசிவதால் ஏற்படும் விளைவுகளின் பாரதூரதன்மையையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அதனால்தான் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டன.

 

அந்த போராளி, தனது காதலியை சமரசம் செய்ய வேண்டுமென்பதை முக்கியமான விசயமாக கருதினார். அந்த சமயத்தில், கருணா கடத்தல் விசயம் ஒரு பெருட்படுத்தக்க விசயமாக அவர் கருதவில்லை. அதேபோல, காதலியும் தனது பொறுப்பாளரின் மீதான விசுவாசத்தையே முதன்மையானதாக கருதினார். அவர் ஒரு விடுப்பு மனநிலையிலோ அல்லது, தான் விசுவாசமாக நம்பிய தளபதிக்கு ஆபத்து என்றோ கருதினார்.

அந்த பெண் போராளி உடனடியாக நிலாவினியை சந்தித்து, தனது காதலன் சொன்ன தகவலை தெரிவித்தார். கௌசல்யனின் திருமண நிகழ்வு நடக்கும் கொக்கட்டிச்சோலை சிவன் ஆலயத்தில் வைத்து கருணாவை கடத்தும் திட்டம் தயாராகி விட்டது, மட்டக்களப்பு புலனாய்வுத்துறை பொறப்பாளர் நீலன் தலைமையிலான புலனாய்வுத்துறை அணிதான் இந்த கடத்தலை செய்யப்போகிறதென அவர் நிலாவினியிடம் தெரிவித்தார்.

அடுத்த ஒரு சில நிமிடங்களில், தகவல் கருணாவிடம் போய் சேர்ந்தது!

கருணா விவகாரத்தை தொடர்வதற்கு முன்னர், இன்னொரு தகவலையும் இடையில் சொல்ல வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் மனிதர்கள்தானே. அவர்களிற்கும் மனித உணர்வுகள் உண்டு. காதல், பாசம், நேசம், உறவுகள் இருந்தன. இயன்றவரை இந்த உணர்வுகளிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை ஒடுக்கி, அமைப்பின் குறிக்கோளில் கவனம் செலுத்தினர். ஆனால், சில சமயங்களில் காதல் உணர்வு மேலோங்கிய சம்பவங்களும் உண்டு.

 

36944734_249709249151854_485551444285246காதல் உணர்வால் புலிகளின் இராணுவ திட்டங்களிற்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. தனியொருவரை நம்பியதாக இராணுவ திட்டங்கள் இருக்க வாய்ப்பில்லை. அதனால், ஒருவர் சறுக்கினாலும், இன்னொருவர் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால் புலனாய்வு நடவடிக்கைகள் அப்படியல்ல. தனியொருவரின் நடவடிக்கைகளே பிரமாண்ட நடவடிக்கையொன்றை முற்றாக சறுக்கி விழ வைக்கும். அதிலும் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தமது அடையாளங்களை மறைத்து, செல்வந்தர்கள் போலத்தான் நடமாடுவார்கள். அதனால் அவர்களிற்கு காதல் உறவுகள் ஏற்படும் சந்தர்ப்பமும் அதிகம். நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் காதல் காரணமாக புலிகளின் இரகசிய நடவடிக்கை சறுக்கிய ஒரே சந்தர்ப்பம், கருணா ஒப்ரேசன் மட்டுமில்லை. இன்னும் சில ஒப்ரேசன்களுமுண்டு.

காதலால் சறுக்கிய புலிகளின் இரகசிய ஒப்ரேசன்கள் என்ற தனியான தொடர் ஒன்றே எழுதலாம். அவ்வளவு சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அதற்கான சமயம் வரும்போது பார்க்கலாம். ஆனால், காதலால் சறுக்கிய புலிகளின் மிக முக்கிய ஒப்ரேசன் ஒன்று பற்றிய தகவலை மட்டும் இப்பொழுது குறிப்பிடுகிறோம்.

1998 இறுதி, மற்றும் 1999 இன் நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் நடந்த சம்பவம் இது. இலங்கை பாதுகாப்புதுறையில் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர். பாதுகாப்புதுறையில் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தார் என்றால், யுத்த நடவடிக்கைகளை தீர்மானிக்கும் ஒருவராக!

black-tigers1-300x200.jpg புலிகளின் கரும்புலி அணி

அவர் இல்லையென்றால் நிச்சயம் அந்த சமயத்தில் இராணுவத்தின் நடவடிக்கைகள் ஆட்டம் கண்டிருக்கும்.

அவரை புலிகள் குறிவைத்தனர். ஏழு வருடமாக மெல்லமெல்ல கொழும்பில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உளவு நெற்வேர்க் ஆட்கள் மூலம் அந்த இரகசிய ஒப்ரேசன் முன்னகர்ந்தது. புலிகளின் இரகசிய நடவடிக்கையாளர் ஒருவர் படிப்படியாக, அந்த இலக்கை நெருங்கினார்.

 

ஒரு கட்டத்தில் மிக நெருங்கி விட்டார். எவ்வளவு அதிகமாக நெருங்கினார் என்றால்- வாரஇறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த இலக்கின் குடும்பத்துடன் ஒன்றாக இருந்து உணவருந்தும் அளவிற்கு!

இதை படிப்பவர்களிற்கு எவ்வளவு அதிர்ச்சி ஏற்படுமென்பது புரிகிறது. இவ்வளவு நெருங்கியும், ஏன் அந்த தற்கொலை போராளி தாக்குதல் நடத்தவில்லையென்பது. உங்களிற்கே இவ்வளவு அதிர்ச்சியென்றால், இந்த நடவடிக்கையை வன்னியிலிருந்து இயக்கிக்கொண்டிருந்த இந்த நடவடிக்கை பொறுப்பாளரிற்கு எவ்வளவு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டிருக்குமென யோசித்து பாருங்கள்.

ஒவ்வொரு வார இறுதியிலும் தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குடன் ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவு சாப்பிடுகிறார். தாக்குதல் நடத்துங்கள் என்ற உத்தரவை ஒவ்வொரு வாரமும் வன்னியிலிருந்து கொடுக்கிறார்கள். “இந்தவாரம் நிச்சயம்“ என்றுவிட்டு போனால், பத்திரமாக மாலையில் திரும்பி வந்து கொண்டிருக்கிறார். கேட்டால் ஏதோ சாக்குபோக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் புலிகள் இதை நம்பினார்கள். ஆனால் சில வாரங்கள் போக, இதில் ஏதோ விசயம் இருக்கிறதென்பதை புரிந்துவிட்டார்கள். அது என்ன விசயம் என தேடினால்… இப்பொழுது நாம் சொல்ல போகும் தகவல் புலிகளிற்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றால், உங்களிற்கு இன்னும் பல மடங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

கொழும்பில் தனது இலக்கை நெருங்கியும் அந்த தற்கொலை போராளி ஏன் தாக்குதல் நடத்தவில்லையென்றால்- அவரிற்கு ஒரு காதல் ஏற்பட்டிருந்தது.

இதுகூட பெரிய அதிர்ச்சியில்லை. காதலி யார் தெரியுமா? அந்த இலக்கின் மகள்!

இது ஏதோ ஆங்கில சினிமா பார்ப்பதை போலிருக்கிறதல்லவா. காதலால் சறுக்கிய புலிகளின் ஒப்ரேசன்கள் பற்றிய தகவல்கள் அவ்வளவு விறுவிறுப்பானவை.

சரி, இனி கருணா கடத்தல் விவகாரத்திற்கு வருவோம். கடத்தல் விசயத்தை அந்த பெண் போராளி, தனது பொறுப்பாளர் நிலாவினியிடம் தெரிவித்தார். இது நடந்தது 2004 பெப்ரவரி மாதம் இறுதிப்பகுதியில். கருணா பிரிவதாக அறிவித்த மார்ச் 03ம் திகதிக்கு சில நாட்கள் முன்னதாக.

விடுதலைப்புலிகளும், கருணாவும் தமக்குள்ளிருந்த முரண்பாட்டை வெளியில் காட்டாமல் அதுவரை மௌனமாக இருந்தனர். ஆனால் அந்த இரகசிய மோதல் படிப்படியான வளர்ச்சியை நோக்கி சென்றது. இரு தரப்பும் மோதலிற்கான முதல் அடியை எடுத்து வைக்காமல் இருந்தனர்.

 

பொட்டம்மான் இரகசிய திட்டம் தீட்டி, புலனாய்வுத்துறை மூலம் தன்னை இரகசியமாக கடத்தும் திட்டம் தீட்டுகிறார் என்பதை அறிந்ததும், கருணா ஒரு அதிரடி முடிவை எடுத்தார். பகிரங்க மோதல் என்ற எல்லைக்குள் நுழையாமல் இரண்டு தரப்பும் பொறுமை காத்து வந்த நிலையில், அந்த பொறுமையை கைவிட்டு, மோதலை ஆரம்பிப்பதென கருணா முடிவெடுத்தார். கருணா இந்த முடிவை எடுத்த பின்னர், சிலருடன் இரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களில் பலர் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். ஒருவர் மட்டும் இல்லை. கொல்லப்பட்டு விட்டார்.

அவர் தராகி சிவராம்!

பின்னாளில் இவருக்கு புலிகள் மாமனிதர் கௌரவம் கொடுத்ததும் இந்த அரசியல் போட்டியினால்தான். புலிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கருணா குழு வரிசையாக கொல்ல, புலிகள் அவர்களிற்கு அதிகபட்ச கௌரவம் வழங்கினார்கள். சிவராம் விவகாரத்தை பின்னர் குறிப்பிடுகிறேன்.

புலிகளை விட்டு பிரிந்து, அவர்களுடன் மோதலை ஆரம்பிப்பதென கருணா முடிவெடுத்தார். இதற்குள் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும்.

கருணா குழப்பம் ஆரம்பித்ததும் புலிகள் தற்காலிகமாக பேச்சுக்களை ஒத்திவைத்திருந்தனர். இந்த சமயத்தில் கருணா இன்னொரு அதிரடி காரியம் செய்தார். போர்நிறுத்த கண்காணிப்புகுழுவிற்கு இரகசியமாக ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில்- “கருணா அம்மானாகிய நான்தான் புலிகளின் கிழக்கு பிராந்திய தலைவர். கிழக்கு போராளிகள் அனைவரும் எனது கட்டளையைத்தான் ஏற்கிறார்கள். எனது கட்டளைக்கு கீழ்ப்படியும் ஐயாயிரத்திற்கும் அதிகமான போராளிகள் உள்ளனர். நாங்கள் அனைவரும் விடுதலைப்புலிகளை விட்டு பிரிந்து, தனித்து இயங்க முடிவெடுத்துள்ளோம். கிழக்கு தமிழர் வாழும் பிரதேசங்களை கிழக்கு படையணிகள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இனியும் அவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். வன்னிப்புலிகளின் நிர்வாகம் இங்கு செல்லாது. நாம் தனித்து செயற்பட முடிவெடுத்துள்ளதால், கிழக்கு விவகாரங்களை கையாள எம்முடன் தனியாக ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே போர்நிறுத்தத்தை முறையாக பேணி, அமைதி முயற்சிகளை முன்னெடுக்க முடியும்“ என குறிப்பிடப்பட்டிருந்தது.

427954_460004174051158_447697400_n-300x1

இந்த சந்தர்ப்பத்தில், கருணா பிளவின் பின்னர் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்துகிறோம். கருணா பிளவின் பின் சரமாரியாக கொலைகள் நடந்தன. கருணா குழு இதை செய்கிறதென புலிகள் குற்றம்சாட்டியதுடன், கருணாகுழு துணை இராணுவ குழுவாக செயற்படுகிறதென்பதற்கான ஆதாரங்களை போர்நிறுத்த கண்காணிப்புகுழுவிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் போர்நிறுத்த கண்காணிப்புகுழு எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. கருணா குழுவுடன் தனியாக ஒப்பந்தம் செய்யாத போர்நிறுத்த கண்காணிப்புகுழுவை சங்கடப்படுத்தி, அவர்களின் பணியை சிக்கலாக்கவும் இந்த கொலைகள் நடத்தப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

 

போர்நிறுத்த கண்காணிப்புகுழுவிற்கு கருணா அனுப்பிய கடிதம், விடுதலைப்புலிகளின் கைகளிற்கும் வந்தது. போர்நிறுத்த கண்காணிப்புகுழு அந்த கடிதத்தை கொடுத்து, “உங்கள் அமைப்பிற்குள் இப்படியெல்லாம் சிக்கலிருக்கிறதா? இப்பொழுது நாங்கள் என்ன செய்வது? அவர்களுடனும் பேசவா?“ என கேட்டனர்.

புலிகளிற்கு பயங்கர கோபம். “எங்கள் உள்வீட்டு பிரச்சனையை நாங்களே பார்த்து கொள்வோம். இதெல்லாம் ஒரு விசயமேயில்லை. எங்களிற்கும் இராணுவத்திற்குமிடையிலான முரண்பாடுகளை மட்டும் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள். மற்றதெல்லாவற்றையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம்“ என புலிகள் பதிலளித்தார்கள்.

இதன்பின்னர்தான் தமது ஸ்டைலில் பிரச்சனையை முடிக்க முடிவெடுத்து, கருணாவை கடத்த திட்டமிட்டனர். அந்த தகவல் கிடைத்ததும், புலிகளின் பாணியிலேயே பதிலடி கொடுக்க கருணா திட்டமிட்டார். எந்த அணியை கொண்டு ஒப்ரேசனை முடிக்க புலிகள் முடிவெடுத்தார்களோ, அந்த அணியை வைத்தே பிரச்சனையை ஆரம்பிக்கலாமென அவருக்கு நெருங்கியவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

புலிகளின் ஒப்ரேசனிற்காக திட்டமிடப்பட்ட நாள் 2004 மார்ச் 03ம் திகதி. அதுவரை பொறுமையாக இருக்க கருணா முடிவெடுத்தார். ஆனால் கொஞ்சம் விவகாரமாக திட்டத்துடன்.

புலிகளின் திட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும், கருணா தனது பாதுகாப்பை அதிகப்படுத்தினார். ஆனால், அது வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமையக்கூடாதென்பதில் கவனமாக இருந்தார். தனது பாதுகாப்பை அதிகப்படுத்தினால், அதை புலிகளின் புலனாய்வுத்துறை ஆட்கள் மோப்பம் பிடித்தால், அவர்களிற்கு சந்தேகம் வந்துவிடும் என்பது அவருக்கு தெரிந்திருந்தது.

வெளியில் செல்வதை தவிர்த்து கொண்டார். எந்த நேரமும் தனது முகாமில் பலத்த பாதுகாப்பின் மத்தியிலேயே இருந்தார்.

புலிகளின் புலனாய்வுத்துறையுடன் கருணாவிற்கு முரண்பாடு ஆரம்பித்த சமயத்தில், கருணா வைத்த சில நிபந்தனைகளை சில வாரங்களின் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். “கிழக்கில் இயங்கும் புலிகளின் அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களும் தனது கட்டளையின் கீழ்த்தான் இயங்க வேண்டும், அவர்கள் தனக்குத்தான் பொறுப்புகூறுபவர்களாக இருக்க வேண்டும்“ என அவர் நிபந்தனை விதித்ததை குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அப்போது புலிகள் இதற்கு ஓரளவு உடன்பட்டிருந்தனர். கிழக்கிலுள்ள புலிகளின் கட்டமைப்புக்களின் பொறுப்பாளர்களிற்கு பிரபாகரன் கண்டிப்பான உத்தரவொன்று பிறப்பித்திருந்தார். அது- கருணாவுடன் முரண்படாமல் கிழக்கு நிர்வாக நடவடிக்கைகளை தொடருங்கள் என்பதே.

இதன்பின் கிழக்கில் இயங்கிய புலிகளின் நிர்வாக அலகுகளில் இருப்பவர்களுடன் கருணா அடிக்கடி சந்திப்பை மேற்கொண்டார். நிதித்துறை, காவல்த்துறை, புலனாய்வுத்துறை போராளிகளை தனது முகாமிற்கு அழைத்து அடிக்கடி சந்தித்தார். தமது வேலைகள் தொடர்பாக அவர்கள் கருணாவிற்கு பொறுப்புகூற வேண்டியதில்லை, என்ன செய்கிறோம்… அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற தகவல்களையும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த தொடர் தமிழ்பக்கத்தின் பிரத்தியேக தொடர். ஆனால், கருணாவின் மனதை சமாதானப்படுத்த கருணா அழைக்கும் சமயங்களில் சென்று வந்தார்கள்.

2004 மார்ச் 01ம் திகதி விடிந்தது. அதாவது கௌசல்யனின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முதல். புலிகளின் ஒப்ரேசனிற்கு இரண்டு நாட்களின் முன்னர்!

அன்று கருணாவிடமிருந்து ஒரு உத்தரவு பறந்தது. “இன்று இரவு முக்கியமான சந்திப்பொன்று உள்ளது. அனைவரும் மீனகம் முகாமிற்கு வாருங்கள்“ என்ற உத்தரவு யாருக்கு சென்றது தெரியுமா? நீலனிற்கு!

Neelan.jpg நீலன்

மட்டக்களப்பு புலனாய்வுத்துறை துணை பொறுப்பாளராக இருந்தவர் நீலன். ஆரையம்பதியை சேர்ந்தவர். கருணாவை கடத்தும் ஒப்ரேசனை திட்டமிட்டவரும் அவர்தான். அதை செயற்படுத்தவிருந்தவரும் அவர்தான்.

அதை சாதாரண அழைப்பாக நினைத்தார் நீலன். “எத்தனை மணிக்கு சந்திப்பு?“ என நீலன் தரப்பிலிருந்து கேட்கப்பட, கருணாவின் தொலைத்தொடர்பாளர் அறிவித்தார்- “இன்று இரவு எழு மணிக்கு. மீனகத்தில்“ என.

 

கருணா வழக்கமாக அடிப்படி இப்படியாக சந்திப்புக்களை வைத்தார். கிழக்கில்அனைத்தும் தனது நிர்வாகத்தின் கீழ் செயற்படுகிறதென காண்பிப்பதற்காகவே இப்படி செயற்படுகிறார், இது ஒரு உளவியல் பிரச்சனையென அந்த போராளிகள் நினைத்திருந்தனர். அதனால், அன்றிரவு சந்திப்பிற்கு செல்ல முடிவெடுத்தனர்.

அதேவேளை, கருணாவின் முகாமில் இரகசிய திட்டம் ஒன்று தயராகியிருந்தது. அது-சந்திப்பிற்கு வரும் புலனாய்வுத்துறை போராளிகளை கைது செய்வது!

(தொடரும்)

 

http://www.pagetamil.com/13360/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வுத்துறை போராளிகளை மடக்கிப்பிடித்த கருணா: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 31

August 19, 2018
karuna-amman-1.jpg

பீஸ்மர்

29.02.2004. இரவு. கருணாவின் தொலைத்தொடர்பாளர், மட்டக்களப்பு புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த நீலனை தொடர்பு கொண்டு, “சந்திப்பொன்றிற்காக நாளை அம்மான் அழைக்கிறார்“ என்ற தகவலை வழங்கினார். புலிகளுடன் முரண்பட ஆரம்பித்த பின்னர், விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்புகளை சேர்ந்த போராளிகளை இப்படி அடிக்கடி அழைத்து சந்திப்பதை கருணா வழக்கமாக வைத்திருந்தார். கடந்த பாகத்தில் இவ்வளவு தகவல்களையும் குறிப்பிட்டிருந்தோம்.

மறுநாள்- மார்ச் மாதம் முதலாம் திகதி கருணாவின் மீனகம் முகாமில் சந்திப்பு என அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் தங்கியிருந்த புலனாய்வு பிரிவின் போராளிகளை கருணா அழைத்திருந்தார்.

 

கருணா ஏற்கனவேயும் சில தடவைகள் அழைத்து, புலனாய்வுப்பிரிவினர் சென்று சந்தித்திருக்கிறார்கள். ஆனால், அப்படி செல்வதற்கு முன்னர் பொட்டம்மானிடம் இரகசியமாக ஆலோசனை பெற்றுவிட்டுத்தான் செல்வார்கள். கருணா எதிர்பார்ப்பதைபோல நடந்து, வீணாண சிக்கல்களை தவிர்க்க வேண்டுமென பொட்டம்மானிடம் ஏற்கனவே பிரபாகரன் கூறியிருந்தார். கிழக்கில் தன்னைவிட வேறு யாரும் முடிவெடுப்பவர்களாக இருக்ககூடாதென கருணா நினைத்ததை, பிரபாகரன் புரிந்து கொண்டதும், பொட்டம்மானிடம் அப்படியான ஆலோசனை கூறியிருந்தார். இதனால், புலனாய்வு பிரிவு போராளிகளை சந்திப்பிற்காக கருணா அழைத்ததும், அந்த சந்திப்புக்களிற்கு பொட்டம்மான் சம்மதம் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதில் இன்னொரு விசயமும் உள்ளது. கருணா விவகாரம் எப்படி முடியுமென்பதை யாராலும் ஊகிக்க முடியாமல் இருந்தது. பேசித்தீர்க்கத்தான் புலிகள் முயற்சித்தனர். எப்பொழுதும் புலிகள் இரண்டாவது ஒப்சனையும் வைத்திருப்பது வழக்கம். பேசித்தீர்க்க முடியாவிட்டால், தமது பாணியில் விசயத்தை முடிக்கும் விதமான திட்டமாக இருக்கும். (கருணா விவகாரத்தில் புலிகள் வைத்திருந்த இரண்டாவது ஒப்சன்தான், ஆளை “தூக்குவது“).  இரண்டாவது ஒப்சன் பற்றிய எச்சரிக்கை கருணாவிற்கு ஏற்படக்கூடாது. மட்டக்களப்பிலிருந்து புலனாய்வுத்துறையினர், கருணாவுடன் ஏட்டிக்குபோட்டியாக நடந்து கொண்டால், அவர் எச்சரிக்கையாகிவிடுவார். அவரது கட்டளைக்கு கீழ்ப்படிபவர்களாக இருந்தால் கருணா எச்சரிக்கையடைய வாய்ப்பில்லை. இதுதான் பொட்டம்மான் போட்ட திட்டம்.

 

மார்ச் முதலாம் திகதி- கருணா அழைப்பு விடுத்த கூட்டத்திற்கு செல்லுங்கள் என்று பொட்டம்மானிடமிருந்து மட்டக்களப்பிற்கு தகவல் சென்றது!

934662_150178835187804_2025622260_n-224x

மட்டக்களப்பில் இருந்த புலனாய்வு போராளிகள் கருணாவின் மீனகம் முகாமிற்கு மார்ச் முதலாம் திகதி சென்றனர்.

 

சில மோட்டார் சைக்கிள்களிலேயே புலனாய்வுத்துறை போராளிகள் சென்றிருந்தனர். அவர்கள் செல்லும்போது, முகாம் வாயிலில் இருந்த காவலரனின் குறுக்கே வீதித்தடை போடப்பட்டிருந்தது. அந்த வீதித்தடை சில மாதங்களாகத்தான் அமைக்கப்பட்டிருந்தது. புலனாய்வுத்துறை போராளிகள் சென்றபோது, வீதித்தடை கீழே இறக்கப்பட்டு, யாரும் முகாமிற்கு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருந்தது. கருணாவின் நம்பிக்கைக்குரிய ஜிம்கெலி தாத்தாதான் அன்றையதினம் முகாம் வாயில் காவலில் நின்ற போராளிகளை வழிநடத்தினார். அவரது கட்டளைப்படிதான் வீதித்தடை போடப்பட்டு, புலனாய்வுத்துறை போராளிகள் மறிக்கப்பட்டிருந்தனர்.

உண்மையில், மீனகம் முகாமில் அன்று சந்திப்பு நடக்கவிருந்தது, காவலரணில் நின்ற சாதாரண போராளிகளிற்கு தெரியாது. “யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம். முகாமிற்கு ஏதாவது அலுவலாக யாரும் வந்தால், எனக்கு அறிவியுங்கள்“ என்று கட்டளையிட்டிருந்தார்.

புலனாய்வுத்துறை போராளிகள் மீனகம் முகாமின் வாயிலுக்கு சென்றதும், காவல் கடமையிலிருந்தவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவலர்களிடமிருந்தே ஜிம்கெலி தாத்தாவிற்கு தகவல் சென்றது. “அவர்களை பரிசோதித்து விட்டு உள்ளே அனுப்புங்கள்“ என்ற கட்டளை அவரிடமிருந்து சென்றது. வழக்கமாக இப்படியான நடைமுறைகள் இருக்கவில்லை. திடீரென ஏன் சோதனையென புலனாய்வுத்துறை போராளிகள் குழப்பமடைந்தாலும், தமது திட்டம் வெளியில் கசிந்து, தமக்கு வைக்கப்பட்ட பொறியே, இந்த சந்திப்பு என்பதை அவர்கள் ஊகிக்கவில்லை.

அந்த சந்திப்பிற்கு சென்றவர்களில் நீலனிடம் மட்டுமே ஆயுதம் இருந்தது. தனது பிஸ்டலை சேர்ட்டிற்குள் கட்டியிருந்தார். காவலரணில் பிஸ்டலை பத்திரமாக வைத்திருப்பதாக கூறி, வாங்கி வைத்து கொண்டனர்.

புலனாய்வுத்துறை போராளிகள் சந்தேகப்படகூடாதென்பதில் கருணா அணியினர் கவனமாக இருந்தனர். மீனகம் முகாமிற்குள் சிறிய மண்டபம் ஒன்று இருக்கிறது. அங்குதான் உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த மண்டபத்திற்குள் போராளிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு வைத்துதான் துப்பாக்கி முனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்யும் அணியை வழிநடத்தியது யார் தெரியுமா?

அவர் இன்றும் உயிருடன் இருக்கிறார். சாதாரண ஆளாக அல்ல- உயர்மட்ட அரசியல் செல்வாக்குடன்!

அவர்- பிள்ளையான்!

ltte-pottan-300x198.jpg

சுமார் பன்னிரண்டு வரையான போராளிகள் அந்த சந்திப்பிற்கு சென்றிருந்தனர். அனைவருக்கும் உடனடியாக கைவிலங்கிடப்பட்டு, விசாரணைகள் ஆரம்பித்தன. நீலனிற்குத்தான் அனைத்து இரகசியங்களும் தெரியும். அவரை தனியறையொன்றிற்குள் விலங்கிட்டு அடைத்து வைத்திருந்தனர். கிழக்கு அரசியலில் முக்கிய புள்ளியொன்றுதான், புலனாய்வுத்துறை போராளிகளை கைது செய்யும் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த பிள்ளையான்தான் விசாரணைக்கும் பொறுப்பாக இருந்தார்!

மீனகம் முகாமில் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் நீலன் போன்ற முக்கியமான சிலரை தவிர, மற்றவர்கள் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். முதற்கட்ட விசாரணையின் பின், அதில் நான்கைந்து பேர் கருணா அணியில் இணைந்து கொள்கிறோம் என கூறினார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 

எஞ்சியவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். நீலனின் உடல் தோல் மெதுமெதுவாக உரிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார். நீலன் விவகாரத்தை இந்த இடத்தில் விட்டுவிட்டு, அந்த சமயத்தில் கிழக்கில் என்ன நடந்ததென்பதை குறிப்பிடுகிறோம்.

மீனகம் முகாமிற்குள் புலனாய்வுத்துறை போராளிகள் கைதுசெய்யப்பட்ட விவகாரம் வெளியில் கசியாமல் கருணா பார்த்துக் கொண்டார். மீனகத்தில் இருந்த யாரும்- எந்த தளபதியாக இருந்தாலும்- தொலைத்தொடர்பு கருவிகள் பாவிக்க முடியாது என்ற உத்தரவு பறந்தது. அனைத்து தொலைத்தொடர்பு கருவிகளும் சேகரிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் வெளியில் கசியாமல் இருக்க வேண்டுமென கருணா நினைத்ததற்கு, கௌசல்யன் கல்யாணத்தில் இந்த ஒப்ரேசனிற்காக வன்னியிலிருந்து யாராவது வரலாம், அவர்களையும் கைது செய்வது நோக்கமாக இருந்திருக்கலாம். அல்லது கௌசல்யனை கைது செய்வது கூட நோக்கமாக இருந்திருக்கலாம். ஏனெனில், இரண்டுநாளில் திருமணம் என்பதால், வீட்டிலேயே தங்கியிருந்தார் கௌசல்யன்.

Karuna-Pillaiyan-300x200.jpg கருணா- பிள்ளையான்

மார்ச் 02ம் திகதி. மீனகம் கைதுகள் வெளியில் கசியக்கூடாதென்பதில் கருணா மிக கவனமாக இருந்தார். அதனால், அங்கு என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. 03ம் திகதி வரையும் தகவல் கசியக்கூடாதென கருணா நினைத்தது, மிகச்சரியாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், கருணாவின் திட்டம் நிறைவேறவில்லை.

ஏன் நிறைவேறவில்லை.

புலனாய்வுத்துறை போராளிகள் கைது செய்யப்பட்ட விசயம், மட்டக்களப்பில் யாருக்குமே தெரியக்கூடாதென கருணா நினைத்தார். அதற்காக நிறைய ஏற்பாடுகளும் செய்தார். ஆனால் அவரது ஏற்பாடுகளையும் மீறி, அந்த தகவல் வெளியில் கசிந்தது. அதுவும் மட்டக்களப்பில் அல்ல, வன்னியில் இருந்த ஒருவர், இந்த விசயங்களை தெரிந்து கொண்டார்.

அவர்- பொட்டம்மான்!

புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட விசயம், மீனகம் முகாமின் உள்பகுதியில் இருந்தவர்களிற்குத்தான் தெரியும். வெளியில் காவல் கடமையில் இருந்த சாதாரண போராளிகளிற்குகூட தெரியாது. கொஞ்சம் உயர்மட்டத்தில் இருந்தவர்களிற்கு அரசல்புரசலாக விசயம் தெரிந்திருந்தது. அவ்வளவுதான். நிலைமை இப்படியிருக்க, வன்னியிலிருந்த பொட்டம்மான் எப்படி விசயத்தை அறிந்து கொண்டார்?

கருணாவின் சந்திப்பு விசயங்களை பற்றி, பொட்டம்மானிடம் முன்னரே அறிவித்துவிட்டுத்தான் நீலன் செயற்பட்டார். கருணாவின் சந்திப்பிற்காக நீலன் தலைமையில் போராளிகள் சென்றது பொட்டம்மானிற்கு தெரியும். வழக்கமாக இப்படியான சந்திப்புக்களிற்கு சென்று வந்ததும், சந்திப்பு தொடர்பான விசயங்களை உடனே பொட்டம்மானிற்கு அறிவித்து விடுவார் நீலன். கருணா ஒப்ரேசன் மிகமிக முக்கிய ஒப்ரேசன் என்பதால், உடனடியாக விசயங்களை அறிவதில் பொட்டம்மானும் ஆர்வமாக இருந்தார்.

 

மார்ச் முதலாம் திகதி மதியத்திற்கு பின்னர் நீலனிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லையென்றதும், பொட்டம்மான் எச்சரிக்கையாகி விட்டார்.

மட்டக்களப்பில் நீலன் தலைமையில் புலனாய்வுத்துறை செயற்பாடுகள் இருந்தாலும், கொழும்பு நடவடிக்கைகளிற்காக இன்னொரு இரகசிய நெட்வேர்க்கும் இருந்தது. அது அதிகமாக மட்டக்களப்பு நகரத்தில்- இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இயங்கியது. நீலனும், போராளிகளும் ஏதோ சிக்கலில் மாட்டிவிட்டார்கள் போலுள்ளது, உடனடியாக செக் பண்ணவும் என்ற தகவல் அவர்களிற்கு பறந்தது.

அவர்கள் மட்டக்களப்பில் இருந்ததாலும், தாக்குதலணி போராளிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்காததாலும், உடனடியாக தகவலை பெற முடியாமல் போனது.

thenakam-300x225.jpg

இதற்கு பின்னர்தான், ரமேஷூடன் தொடர்புகொண்டார் பொட்டம்மான். ரமேஷ் கிழக்கின் இரண்டாவது தளபதியென்றபோதும், நீலன் கைது செய்யப்படப்போவதை அவர் முன்னரே அறிந்திருக்கவில்லை. கைதுசெய்யப்பட்ட பின்னரும், அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியும் நிலையிலும் இருக்கவில்லை. ரமேஷில் அவ்வளவாக நம்பிக்கையற்ற நிலையிலேயே கருணா இருந்தார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். நீலனும் போராளிகளும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்ற தகவலை மட்டும்தான் ரமேஷால் அனுப்ப முடிந்தது. வேறெந்த தகவலும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. கருணாவின் நம்பிக்கைக்குரிய அணியால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலைபற்றி, விசேசமாக விசாரிப்பது ஆபத்தை தருமென ரமேஷ் அஞ்சியதால் பேசாமல் இருந்து விட்டார்.

இதற்கு பின்னர்தான், தனது இரகசிய சோஸை பொட்டம்மான் களமிறக்கினார். கருணாவின் புலனாய்வு அணியில் இருந்த மிக முக்கியமான இருவர் பொட்டம்மானின் ஆட்கள். அவர்கள் தனது ஆட்கள்தானென கருணா நம்பியிருந்தார். அவரது நம்பிக்கையை சிதைக்காத விதமாக செயற்படுமாறு புலிகள் அவர்களிற்கு கூறியிருந்தனர். நீலனும் போராளிகளும் மீனகத்திற்குள் சிறை வைக்கப்பட்டுள்ள விசயத்தை இவர்கள்தான் பொட்டம்மானிற்கு அறிவித்தனர்.

இந்த தகவல் போனது மார்ச் 02ம் திகதி பிற்பகலில்.

மறுநாள்- மார்ச் 03ம் திகதி- கொக்கட்டிச்சோலை சிவன் ஆலயத்தில் கௌசல்யனின் திருமண நிகழ்வில் தன்னை கடத்த நடக்கவிருந்த ஒப்ரேசன் பற்றிய முழுமையான தகவலையும் கருணா அறிந்திருப்பார் என்பதை பொட்டம்மான் ஊகித்து கொண்டார். கருணா விவகாரத்தை சிக்கலில்லாமல் முடிக்க புலிகள் போட்ட திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டன. இனி பகிரங்க மோதலைவிட வேறு வழிகளே கிடையாது என்பது பொட்டம்மானிற்கு புரிந்தது. அவசரகதியில் செய்ய வேண்டிய சில விசயங்கள் இருந்தன.

மட்டக்களப்பில் புலனாய்வுத்துறையின் சில இரகசிய அணிகளும் செயற்பட்டு கொண்டிருந்தன. அவர்களை எச்சரித்து, பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வைக்க வேண்டும். கருணாவுடன் இருந்த உண்மையான அர்ப்பணிப்புள்ள தளபதிகளையும், போராளிகளையும் பிரித்தெடுக்க வேண்டும். முக்கியமான இன்னொரு விசயம், கௌசல்யனை காப்பாற்ற வேண்டும்!

 

கௌசல்யனின் திருமண நிகழ்வு ஒருவகையில் கருணாவிற்கு பொறி வைக்கவே கொக்கட்டிச்சோலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தகவலை அறிந்தால், கௌசல்யன் மீது கருணா கொலைவெறி கோபம் ஏற்படுமென்பது இயல்புதான். கௌசல்யனிற்கு ஆபத்து நேர முன்னர் காப்பாற்ற வேண்டும். இதையெல்லாம் கணக்குப்பார்த்த பொட்டம்மான், துரிதமாக காரியத்தில் இறங்கினார்.

மார்ச் 02ம் திகதி மாலையில் கௌசல்யனிற்கு விசயம் அறிவிக்கப்பட்டது. “உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள், மறுநாள் எப்படியாவது மட்டக்களப்பிலிருந்து வெளியேறி வன்னிக்கு வந்துவிடுங்கள்“ என்ற தகவல் போனது. விசயத்தை யாரிடமும் சொல்லாமல் கௌசல்யன் அன்றிரவே பாதுகாப்பான மறைவிடமொன்றிற்கு சென்றுவிட்டார்.

கௌசல்யனின் நெருங்கிய உறவினர்களே விசயத்தை அறியாமல் மறுநாள் திருமணத்திற்கு வந்தார்கள். ஆலயத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, சமையல் வேலைகளும் ஆரம்பித்திருந்தன. கிட்டத்தட்ட- மணமக்களை தவிர மிகுதி அனைவரும் வந்து விட்டனர். சுபநேரம் நெருங்கியும் மணமக்கள் வரவில்லை. என்னஏதென அவர்கள் விசாரிக்க, “மட்டக்களப்பில் புலிகளிற்குள் ஏதோ குழப்பமாம். கௌசல்யன் வன்னிக்கு போய்க்கொண்டிருக்கிறாராம். கூடவே, மட்டக்களப்பு புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் பிரபா போன்றவர்களும் செல்கிறார்களாம்“ என்ற தகவல் அரசல்புரலாக அடிபடத் தொடங்கியது.

கருணாவின் உடனடி குறியாக கௌசல்யன் இருப்பார் என்பதை ஊகித்தே, அவரை எச்சரித்தார் பொட்டம்மான். அவரது கணிப்பு சரியென்பதை பின்னர் காலம் உணர்த்தியது!

கௌசல்யனும், பிரபாவும் வன்னிக்கு தப்பிச்சென்றுவிட்டனர் என்ற தகவல் கருணாவை கடுமையாக கோபப்படுத்தியது. தமது பாதுகாப்பு ஏற்பாடுகளில் எதோ குறையிருக்கிறதென தனது தளபதிகளை கடுமையாக திட்டினார். தன்னுடன் இருக்கும் தளபதிகளிற்கு விசேட பாதுகாப்பு கொடுத்து, அவர்கள் தப்பிச்செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்.

ரமேஷ் கிழக்கின் இரண்டாவது தளபதியாக இருந்தாலும், அவரில் கருணாவிற்கு சந்தேகம் இருந்ததென்பதை ஏற்கனவே குறிப்பிட்டு, அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுவதாகவும் சொல்லியிருந்தோம்.

Col.-Ramesh-293x300.jpg தளபதி ரமேஷ்

தனது நம்பிக்கைக்குரிய அணியொன்றின் மூலம் ரமேஷை கண்காணிக்க தொடங்கினார். ரமேஷின் மெய்பாதுகாவலர்கள் என்ற பெயரில், அவரை சூழ்ந்து கொண்டனர். அன்று மாலையில் மட்டக்களப்பு முனைக்காடு மகாவித்தியாலத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, தமது நிலைப்பாட்டை மக்களிற்கு அறிவிக்குமாறு ரமேஷிற்கு உத்தரவிட்டார் கருணா. இது மார்ச் 03ம் திகதி நடந்தது.

தனக்கு பாதுகாப்பாக கருணா அனுப்பிய போராளிகளை அழைத்த ரமேஷ், “முனைக்காடு மகாவித்தியாலத்தில் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள். நான் கொஞ்சநேரம் கழித்து கூட்டத்திற்கு வருகிறேன்“ என அனுப்பிவைத்தார். ரமேஷ் சொன்னதை நம்பிய அவர்கள், பாடசாலைக்கு சென்று கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். இந்த இடைவெளிக்குள் ரமேஷ் மட்டக்களப்பை விட்டு வெளியேறினார். மாலையில் கூட்டத்திற்கு வந்தவர்கள், 4.30 மணி கடந்த பின்னர்தான், ஏதோ சிக்கலென்பது கருணா அணிக்கு புரிந்தது.

 

அவர்களிற்கு விசயம் புரிந்தபோது, ரமேஷ் மட்டக்களப்பு எல்லையை கடந்து வன்னியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/14023/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அத்தியாயத்தை கொண்டு வந்து இணையுங்கோ...நல்லாய் சலாப்பி இருக்கிறார்...இனி மேல் வரும் பகுதியும் அப்படித் தான் சலாப்புவார்?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவும் சளாப்பின மாதிரித் தெரியவில்லை. அம்மான் மேல் பாசம் இருப்பதால் பச்சைக் கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது பச்சையாகத்தானே தெரியும்?

நேரம் கிடைக்கும்போது இணைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அடுத்த அத்தியாயத்தை கொண்டு வந்து இணையுங்கோ...நல்லாய் சலாப்பி இருக்கிறார்...இனி மேல் வரும் பகுதியும் அப்படித் தான் சலாப்புவார்?


 

என்னைபொருத்தவரை பீஸ்மர் கருணாவை தங்க பல்லக்கில் இதுவரை கொண்டுவந்து உள்ளார் பல விடயங்களை தொடாமல் நேரே வந்துள்ளார் அதை நினைத்து சந்தோசப்படுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீஷ்மர் என்பது யார்? புலிகள் அமைப்பிலிருந்தவரா??? அவருக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அருகிலிருந்து பார்த்தவர்போலல்லவா எழுதுகிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

பீஷ்மர் என்பது யார்? புலிகள் அமைப்பிலிருந்தவரா??? அவருக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அருகிலிருந்து பார்த்தவர்போலல்லவா எழுதுகிறார்?

போர் நடந்தபோது இக்பால் அத்தாஸும் டி.பி.எஸ். ஜெயராஜும் அருகிலிருந்து பார்த்தமாதிரி எழுதினார்கள்தானே. அப்படித்தான் பலரிடம் கதை கேட்டு எழுதுகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா விஸ்வருபம் கமலை ஞாபகப்படுத்துகின்றார். பட்டையை கிழப்புகின்றார்.  நல்ல ஹன்சம் ஆன ஆளப்பா. மட்டக்களப்பு மங்கையரும் நல்ல வடிவானவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரமேஷ் அண்ணா என்ட அண்ணரோட இருந்திருந்தால் இண்டைக்கு உயிரோடு இருந்திருப்பார்


 

On ‎9‎/‎24‎/‎2018 at 7:46 AM, கிருபன் said:

எதுவும் சளாப்பின மாதிரித் தெரியவில்லை. அம்மான் மேல் பாசம் இருப்பதால் பச்சைக் கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது பச்சையாகத்தானே தெரியும்?

நேரம் கிடைக்கும்போது இணைக்கின்றேன்.

 

நான் ஒன்றும் அதீத பாசத்தில் எழுதவில்லை...சொந்த அன்னான் என்டாலும், தம்பி என்டாலும் பிழை என்டால் பிழை தான்...பீஷ்மார் இனி வரும் அத்தியாயங்களில் புலிகளை காப்பாற்றும் வேலையில் இறங்கி உள்ளார்...அவரை சொல்லி குற்றம் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎9‎/‎24‎/‎2018 at 11:31 AM, பெருமாள் said:

என்னைபொருத்தவரை பீஸ்மர் கருணாவை தங்க பல்லக்கில் இதுவரை கொண்டுவந்து உள்ளார் பல விடயங்களை தொடாமல் நேரே வந்துள்ளார் அதை நினைத்து சந்தோசப்படுங்கள் .

அப்படி என்னத்தை மறைச்சார் என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன் அல்ல  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அப்படி என்னத்தை மறைச்சார் என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன் அல்ல  

 

என்னால் நேரடியாக பதில் தரமுடியாது ஆனால் சிவாராமின் தொடரும் இதே பீஸ்மர் தான் எழுதுகிறார் அதை படித்தால் ஓரளவுக்கு தெளிவு வரும் என்று நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

என்னால் நேரடியாக பதில் தரமுடியாது ஆனால் சிவாராமின் தொடரும் இதே பீஸ்மர் தான் எழுதுகிறார் அதை படித்தால் ஓரளவுக்கு தெளிவு வரும் என்று நினைக்கிறன் .

 

பெருமாள்,உங்களால் மட்டும் இல்லை வேறு ஒருத்தராலும் பதில் தர முடியாது....உண்மையில் பிரதேசவாதம்  கதைத்தது,,தூண்டியது எல்லாமே ராஜன் சத்தியமுளர்த்தியும், சிவராமும் தான்...எவரொருவரால் இயக்கம் அழிந்ததோ அவருக்கே நாட்டுப் பற்றாளர் விருது கொடுத்து கௌரவித்த பெருமை புலிகளையே சாரும்.....கடைசியில் போட்டுத் தள்ளினதும் அவர்கள் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

 

பெருமாள்,உங்களால் மட்டும் இல்லை வேறு ஒருத்தராலும் பதில் தர முடியாது....உண்மையில் பிரதேசவாதம்  கதைத்தது,,தூண்டியது எல்லாமே ராஜன் சத்தியமுளர்த்தியும், சிவராமும் தான்...எவரொருவரால் இயக்கம் அழிந்ததோ அவருக்கே நாட்டுப் பற்றாளர் விருது கொடுத்து கௌரவித்த பெருமை புலிகளையே சாரும்.....கடைசியில் போட்டுத் தள்ளினதும் அவர்கள் தான் 

உங்களின் கருத்து குழப்பம் மிகுந்தது முதலில் உங்களுக்கு தகவல் வேணும் என்று கேட்டீர்கள் இப்ப உங்களுக்கு சகலதும் தெரிந்தது போல் எழுதுகிறிர்கள் சிவராமுக்கு நாட்டுபற்றாளர் விருது இறந்தபின்தான் கொடுத்தவர்கள் விருதை கொடுத்துவிட்டு ஆளை போட்டு தள்ளவில்லை இறந்த அற்புதனின் வரிகளில் எழுதுவது என்றால் "புலிகளுக்கு  ஒரு விடயத்தில் பிழை என்று தெரிந்தால் அதன்பின் எந்த சமரசத்துக்கும் அவர்கள் இடம் கொடுப்பதில்லை " இது அனுபவம் கற்றுகொடுத்த பாடம் அவர்களுக்கு . 1984க்கு முதல் நாட்டைவிட்டு ஓடியவர்கள் கதை எழுத தொடங்கினால் இப்படித்தான் வந்து முடியும் .இன்றும் தொப்பிகலவில் புலிகளின் படையணி ஒன்று உள்ளது என நம்பும் கதை ஆய்வாளர் லண்டனில் இருக்கிறார் பெயர் வேண்டாம்  வீரகேசரியில் அவரும் எழுதுபவர்தான் . இப்படியான ஆட்களுடன் உங்களை தர்க்கிக்க விட்டால் 10 பனடோல் தேவைப்படும். (சிலவேளை அவர்க்கும் தேவைப்படலாம் ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

உங்களின் கருத்து குழப்பம் மிகுந்தது முதலில் உங்களுக்கு தகவல் வேணும் என்று கேட்டீர்கள் இப்ப உங்களுக்கு சகலதும் தெரிந்தது போல் எழுதுகிறிர்கள் சிவராமுக்கு நாட்டுபற்றாளர் விருது இறந்தபின்தான் கொடுத்தவர்கள் விருதை கொடுத்துவிட்டு ஆளை போட்டு தள்ளவில்லை இறந்த அற்புதனின் வரிகளில் எழுதுவது என்றால் "புலிகளுக்கு  ஒரு விடயத்தில் பிழை என்று தெரிந்தால் அதன்பின் எந்த சமரசத்துக்கும் அவர்கள் இடம் கொடுப்பதில்லை " இது அனுபவம் கற்றுகொடுத்த பாடம் அவர்களுக்கு . 1984க்கு முதல் நாட்டைவிட்டு ஓடியவர்கள் கதை எழுத தொடங்கினால் இப்படித்தான் வந்து முடியும் .இன்றும் தொப்பிகலவில் புலிகளின் படையணி ஒன்று உள்ளது என நம்பும் கதை ஆய்வாளர் லண்டனில் இருக்கிறார் பெயர் வேண்டாம்  வீரகேசரியில் அவரும் எழுதுபவர்தான் . இப்படியான ஆட்களுடன் உங்களை தர்க்கிக்க விட்டால் 10 பனடோல் தேவைப்படும். (சிலவேளை அவர்க்கும் தேவைப்படலாம் ?)

நன்றி...உங்களுக்கு விஷயம் தெரியாது என்று ஒத்துக் கொண்டதிற்கு...பிஸ்மார் ஓரளவுக்கு என்னினும் உண்மையை எழுதுவார் என்று நினைக்கிறேன்...பொறுத்திருந்து பாருங்கள்..கண்ட,,கண்ட ஆய்வாளர்களது கதையை வாசித்து விட்டு எழுதுவது நீங்கள் தான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

நன்றி...உங்களுக்கு விஷயம் தெரியாது என்று ஒத்துக் கொண்டதிற்கு...பிஸ்மார் ஓரளவுக்கு என்னினும் உண்மையை எழுதுவார் என்று நினைக்கிறேன்...பொறுத்திருந்து பாருங்கள்..கண்ட,,கண்ட ஆய்வாளர்களது கதையை வாசித்து விட்டு எழுதுவது நீங்கள் தான்  

தெரியாத விடயத்தை தெரியாது என்று சொல்வதால் எனக்கு இதுவரை பனடோல் தேவைபடுவதில்லை நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா தன்னைப் பாதுகாக்க பிரதேசவாதத்தைத் தூக்கினார். தென்தமிழீழ மக்கள் முதலில் சற்றுக் குழம்பினாலும் உண்மையைப் புரிந்துகொண்டார்கள். அதனால்தான் கருணாவால் ஒரு வலுவான தலைவராக இந்தப் 14 வருடங்களில் வரமுடியவில்லை. ஆனால் இலங்கையில் முன்னணியில் இருக்கும் பணக்காரர்களில் ஒருவராகிவிட்டார். எல்லாமே மக்களின் விடுதலைக்கு என்று சேர்த்த சொத்துக்கள்தானே. பல்லாயிரம் போராளிகளின் சாவில் இருந்து கிடைத்த வாழ்வுதானே இது.

ஆனால் தலைவர் பிரபாகரனோ தன்னையும் தனது குடும்பத்தினரில் ஒருவரையும் பாதுகாக்கமுனையவில்லை. இறுதிக்காலத்தில் அவருடன் வந்து இருந்த பெற்றோர் கூட தள்ளாத வயதில் அவமானங்களையும் துன்பங்களையும் அனுபவித்துத்தான் இறுதிமூச்சை விட்டார்கள்.  அப்படி இருந்தும் இன்னும் பிரபாகரன் சுகபோக வாழ்வில் மிதந்தார் என்றுதான் புலிகளை  வெறுக்கும் சிலர் தூற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎9‎/‎27‎/‎2018 at 8:46 AM, பெருமாள் said:

தெரியாத விடயத்தை தெரியாது என்று சொல்வதால் எனக்கு இதுவரை பனடோல் தேவைபடுவதில்லை நன்றி .

இந்தக் கருத்தை

 

On ‎9‎/‎26‎/‎2018 at 11:33 AM, பெருமாள் said:

என்னால் நேரடியாக பதில் தரமுடியாது ஆனால் சிவாராமின் தொடரும் இதே பீஸ்மர் தான் எழுதுகிறார் அதை படித்தால் ஓரளவுக்கு தெளிவு வரும் என்று நினைக்கிறன் .

இந்தக் கருத்து எழுத முதல் சொல்லி இருக்கலாம்...நீங்கள் கண்ணை மூடிக்j கொண்டு  கருணா பிரதேசவாதத்தை தூண்டினார் என்று சொல்வதும் சிங்களவன்,தலைவர் ஒரு கொலைகாரன் என்று சொல்வதும் ஒன்று தான் .இரண்டுமே பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்த கதை தான்.

 

On ‎9‎/‎27‎/‎2018 at 7:56 PM, கிருபன் said:

கருணா தன்னைப் பாதுகாக்க பிரதேசவாதத்தைத் தூக்கினார். தென்தமிழீழ மக்கள் முதலில் சற்றுக் குழம்பினாலும் உண்மையைப் புரிந்துகொண்டார்கள். அதனால்தான் கருணாவால் ஒரு வலுவான தலைவராக இந்தப் 14 வருடங்களில் வரமுடியவில்லை. ஆனால் இலங்கையில் முன்னணியில் இருக்கும் பணக்காரர்களில் ஒருவராகிவிட்டார். எல்லாமே மக்களின் விடுதலைக்கு என்று சேர்த்த சொத்துக்கள்தானே. பல்லாயிரம் போராளிகளின் சாவில் இருந்து கிடைத்த வாழ்வுதானே இது.

ஆனால் தலைவர் பிரபாகரனோ தன்னையும் தனது குடும்பத்தினரில் ஒருவரையும் பாதுகாக்கமுனையவில்லை. இறுதிக்காலத்தில் அவருடன் வந்து இருந்த பெற்றோர் கூட தள்ளாத வயதில் அவமானங்களையும் துன்பங்களையும் அனுபவித்துத்தான் இறுதிமூச்சை விட்டார்கள்.  அப்படி இருந்தும் இன்னும் பிரபாகரன் சுகபோக வாழ்வில் மிதந்தார் என்றுதான் புலிகளை  வெறுக்கும் சிலர் தூற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆட்டுக்குள்,மாடடைக் கொண்டு வந்து செருகுவது என்பது இது தான் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொளுவனும் என்றே வருகிறீர்கள் போல் உள்ளது கருணாவின்  பிரதேசவாதம் பிழை என்று இதுவரையிலும் யாழில் எழுதவில்லை சம்பந்தபட்டவர்கள்  மேல் பாய்வது க்கு பதிலா என்னிடம் பாய்வது சரில்லை .

லெப் பரமதேவாவின் கையில் கிழக்கு தனித்து இயங்கணும் எனும் அடிப்படை சித்தாந்தம் அண்ணனிடம் இருந்தது துரதிஸ்டவசமாக முதல் சண்டையிலே ஆள் வீரமரணம் கருணாவின் விடயத்தில் அன்னையின் மென்போக்கு காணப்பட்ட்துக்கும் தொடக்க கால என்ன ஓட்டம் காரணமாக இருக்கலாம் .நந்திகடலில் கடைசியாக அழிவென்பது தெரிந்தும் கருணாவை பேசியதில்லை ஆனால் கருணா ? அண்ணையின் மவுனிப்பின் பின் ஈழத்தமிழர் வாழ்வு தினமும் சுனாமி மேல மிதக்கும் கப்பல் போல் ஆகியுள்ளது இந்த ஒன்பது வருடத்தில் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.