கிருபன்

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

Recommended Posts

புலிகளுடன் விளையாடிய ஜெகத் கஸ்பார்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 41

October 25, 2018
eng-tamil-tigers-01-BM-Vermischtes-MULLA

பீஷ்மர்

உக்ரேனிலிருந்து ஆயுதங்களை ஏற்றியபடி அவ்ரோ விமானமொன்று இரணைமடுவில் தரையிறங்கப் போகிறதென்ற தகவலை புலிகள் மிக இரகசியமாக வைத்திருந்தனர். மிக உயர்மட்ட தளபதிகள் சிலருக்கும், வான் புலிகளின் ஒரு தொகுதி போராளிகளிற்குமே விடயம் தெரிந்திருந்தது. விமானத்தில் கொண்டுவரப்படும் ஆயுதங்களை உடனடியாக இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவே வான் புலிகளின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இந்த சமயத்தில்தான் மன்னார் ராடர் நிலையத்தில் இருந்து அரசாங்கத்தின் விமான தாக்குதலிற்கான எச்சரிக்கை பகிரப்பட்டது. இரணைமடு விமான ஓடுபாதைக்கு அண்மையில் காத்திருந்த தளபதிகளிற்கு குழப்பம் ஏற்பட்டு விட்டது. உக்ரேனிலிருந்து வரும் அவ்ரோ விமானம் முல்லைத்தீவு கடலிற்கு மேலான வானில் பிரவேசித்து, வன்னிக்குள் நுழையுமென்பதே திட்டமாக இருந்தது. இந்த திட்டம் கடற்புலிகளின் ராடர் அணிக்கு தெரிந்திருக்கவில்லை. இரணைமடுவுக்கு அண்மையாக- பனிச்சங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த வான் புலிகளின் ராடர் அணிதான் விமானத்தின் வரவை கண்காணித்தது.

கடற்புலிகளின் எச்சரிக்கையால் தளபதிகள் தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில் வான் புலிகளின் ராடர் மையத்தில் இருந்து ஒரு எச்சரிக்கை வந்தது. ஆயுத விமானம் வரும் திசையிலிருந்து விமானம் வரவில்லை, கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வரும் தாக்குதல் விமானங்களின் பறப்பு பாதையிலிருந்து விமானமொன்று வந்து கொண்டிருக்கிறது, அனேகமாக அது விமானப்படையின் தாக்குதல் விமானமாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையையடுத்து இரணைமடு ஓடுபாதைக்கு அண்மையில் காத்திருந்த புலிகள் பாதுகாப்பான இடங்களிற்கு நகர்ந்துவிட்டனர்.

ARV_CHENNAISANGAMAM__20103f-300x185.jpg கஸ்பர்- கனிமொழி

அடுத்த ஓரிரண்டு நிமிடங்களில் இரணைமடு வான் பரப்பில் இலங்கை விமானப்படையின் இரண்டு தாக்குதல் விமானங்கள் வட்டமிட்டு, ஓடுபாதைக்கு அண்மையாக பரவலாக குண்டுகளை வீசின. வழக்கமாக வான்புலிகளின் விமான ஓடுதளத்தை சீர்குலைக்கும் தாக்குதலை நடத்தும் போது, பதுக்குகுழிகளை பெயர்க்கும் குண்டுகளைதான் விமானப்படையினர் வீசுவர். தமிழ்செல்வனின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் இந்தவகையான குண்டுகள்தான் வீசப்பட்டன. ஆனால், பரவலான மனித இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது air shot என அழைக்கப்படும் வானிலேயே வெடித்து சிதறும் குண்டுகளைதான் வீசுவார்கள். அன்று இரணைமடுவில் வீசப்பட்டது அந்த வகையான குண்டுகள்தான்.

இந்த தாக்குதல் முடிந்ததும் வழக்கம் போல இலங்கை அரசு அறிவித்தது- விடுதலைப்புலிகளின் விமான ஓடுதளம் மீது விமானப்படையினர் வெற்றிகரமான தாக்குதல் நடத்தி நிர்மூலமாக்கியுள்ளனர் என. புலிகள் அறிவித்தனர்- கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்புக்களிற்கு அண்மையாக இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என. உண்மையான விடயம் என்னவென இரண்டு தரப்பும் மூச்சும் விடவில்லை.

 

தாக்குதலின் பின்னர்தான் புலிகள் என்ன நடந்ததென ஊகிக்க முயன்றனர். ஆயுதங்களை தரையிறக்கும் திட்டத்தை வெளிநாட்டில் இருந்து செயற்படுத்தியவர்களை தொடர்புகொண்டு, அவ்ரோ தரையிறங்காத விடயத்தை அறிவித்தனர். உடனடியாக நிலவரத்தை அறிவிக்குமாறு வன்னியிலிருந்து கட்டளை பறந்தது.

ஆயுத வியாபாரியான உக்ரேனியனை அவர்கள் தொலைபேசியில் பிடித்து விடயத்தை கேட்க, அவன் இப்பொழுதுதான் நித்திரையால் எழும்பியவனை போல கதைத்தான். திட்டம் பக்காவானது, ஒரு குழப்பமும் நடந்திருக்காதென அடித்து சத்தியம் செய்தான். வெளிநாட்டிலிருந்து கதைத்த புலிகளின் தொடர்பாளர்களிற்குதான் குழப்பமாகிவிட்டது. நம்மவர்கள்தான் ஏதோ மாறி கதைத்து விட்டார்களோ என அவர்கள் குழம்பும் விதமான உக்ரேனியன் கதைத்தான். வன்னியுடன் தொடர்பேற்படுத்தி, விமானம் வரவில்லையென்பதை திரும்பவும் உறுதிசெய்த பின்னர், உக்ரேனியனுடன் தொடர்பை ஏற்படுத்தி விடயத்தை சொன்னார்கள். என்ன பிரச்சனையென பார்த்துவிட்டு திருப்பி அழைப்பதாக சொன்ன உக்ரேனியன் பின்னர் அழைப்பை ஏற்கவில்லை. நீண்டநேரமாக முயற்சிசெய்து, வேறுமார்க்கமொன்றில் மீண்டும் அவனை பிடித்தார்கள் தொடர்பாளர்கள்.

இரணைமடுவில் இறங்க வேண்டிய விமானத்தை விமானி தவறுதலாக இந்தியாவில் இறக்கிவிட்டார். அங்கு பிரச்சனையாகி விட்டது. விமான நிலைய அதிகாரிகளிற்கு கொஞ்சம் பணம் கொடுத்து வெளியில் எடுக்கும் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவசரப்படாமல் பொறுமையாக இருங்கள் என்று உக்ரேனியன் சொன்னான். புலிகள் பொறுமையாக இருந்தார்கள். இதன்பின் உக்ரேனியன் புலிகளின் தொடர்பு எல்லைக்குள் வரவேயில்லை.

 

உக்ரேனியன் அனுப்பியதாக சொன்ன அவ்ரோ வரவில்லை. அவ்ரோவிற்காக காத்திருந்த புலிகள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. அப்படியானால் என்ன நடந்தது?

விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோக மற்றும் சர்வதேச வலையமைப்பிற்குள் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எப்படி ஊடுருவி அதை சீர்குலைத்தன, இதன்மூலம் புலிகளின் முதுகெலும்பை எப்படி உடைத்தார்கள் என்பதை இந்த பகுதியில் தொடர்ந்து குறிப்பிடுவோம்.

இந்த பகுதியில் புலிகளின் ஆயுத விநியோக வலையமைப்பை பற்றி குறிப்பிட ஆரம்பித்த சமயத்தில் சற்று திசைமாறி, ஆயுத விநியோக உலகத்தில் உள்ள எமகாதகர்களை பற்றி இரண்டு சம்பவங்களை குறிப்பிடுகிறோம் என கூறி, சற்று திசைமாற்றினோம். அதில் ஒன்றுதான், ஏற்கனவே குறிப்பிட்ட உக்ரேனியனின் அவ்ரோ விமான சம்பவம்.

இன்னொரு சம்பவமும் உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவரை எல்லோருக்கும் நன்றாக தெரியும். இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்கள் தமது உரிமைப்போராட்டத்திற்கு நம்பிக்கையான தோழமையாக கருதிய ஒருவரை பற்றிய தகவல் இது.

2000 ஆம் ஆண்டுகளின் முன்னர் பெரும்பாலான ஈழத்தமிழர்களிற்கு நம்பிக்கையான செய்தி ஊடகங்களில் ஒன்றாக இருந்தது பிலிப்பைன்சில் இருந்து இயங்கிய கத்தோலிக்க வானொலியாக வெரித்தாஸ் தமிழ்பணி. அதன் இயக்குனராக இருந்தவர் பாதிரியார் ஜெகத் கஸ்பார். இவருக்கு தமிழர் போராட்டத்துடன் நெருக்கமான தொடர்புள்ளது, புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் ஊடாக தகவல்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்கிறார், இவர் ஒரு பாதிரியார் என்பதே பெரும்பாலானவர்கள் அறிந்து வைத்திருந்த தகவல்.

blogger-image-69580438.jpg

 

ஜெகத் கஸ்பார் இப்படியானவர் மட்டுமல்ல. அவர் இன்னும் பல மடங்கு ஆழமானவர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி என்பவர் மீது குற்றம்சாட்டி, அவரை விசாரணை செய்ய வேண்டுமென்பவர்கள் இன்றுமுள்ளனர். இந்த சந்திராசாமி யாரெனில்- வெறும் சாமியார் அல்ல. வெளிநாட்டு உளவு அமைப்புக்கள், ஆயுத விற்பனை நிறுவனங்கள், ஏஜெண்ட்களுடன் தொடர்பில் இருந்தவர். அவர்களுடன் வியாபார உறவை வைத்திருந்தவர். சந்திராசாமியின் தோற்றத்தை வைத்து, நமது உள்ளூர் சாமியார்கள் போல கோயிலும் குளமுமாக திரிவார் என நினைத்தீர்கள் எனில், நீங்கள் ஏமாந்து விடுவீர்கள். ஜெகத் கஸ்பாரும் இப்படியான ஒருவர்தான்.

கஸ்பார் தமிழகத்தை சேர்ந்தவர். அவருக்கு நிறைய ஆயுத விற்பனையார்கள், நிறுவனங்களுடன் தொடர்பிருந்தது. இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்களுடனும் தொடர்பை பேணினார். யுத்தத்தின் இறுதியில் புலிகளின் தலைவர்கள் சரணடையும் முயற்சி செய்தபோது அதில் கஸ்பாரும் இணைந்திருந்தார். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் நடத்திய பேச்சில் கஸ்பாரின் பங்களிப்பும் இருந்தது. கனிமொழியும் கஸ்பாரும் நெருக்கமான நண்பர்கள். 2 ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையில் கனிமொழி சிக்கியபோது, கஸ்பாரும் நெருக்கடியை சந்தித்தார். கஸ்பாரின் அலுவலகத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த கஸ்பார் ஒரு சமயத்தில் புலிகளின் ஆயுத விற்பனை வலையமைப்பில் இணைந்திருந்ததுடன், பண விவகாரத்தில் நம்பிக்கையற்றவர் என அதிலிருந்து விலக்கப்பட்டவர்.

அது என்ன டீல், அப்போது என்ன நடந்ததென்பதை அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/20538/

 

Share this post


Link to post
Share on other sites

தாய்லாந்து உளவு அமைப்புக்களின் மூலம் ஆயுதம் வாங்கிய புலிகள்!:இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 41

November 9, 2018
Praba-23-696x522.jpg

பீஷ்மர்

பாதிரியார் ஜெகத் கஸ்பார் பற்றி கடந்த பாகத்தில் மேலோட்டமாக சில தகவல்களை குறிப்பிட்டிருந்தோம். அடுத்த பாகத்தில் மிகுதியென நாம் முடித்த ராசியோ என்னவோ, இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம். நிமிடத்திற்கு நிமிடம் பிரேக்கிங் நியூஸ் வெளியாகி எல்லோரையும் பரபரப்பாக வைத்திருந்ததால், ஈழப்போர் பற்றிய இந்த தொடருக்கு ஒரு வார ஓய்வளித்தோம். வாசகர்கள் பொருத்தருள்க.

பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஈழவிடுதலை அனுதாபியாக விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு அறிமுகமானவர். இந்தியாவின் பல்வேறு அரசியல், வர்த்தக புள்ளிகளுடன் ஏற்பட்ட தொடர்பை ஆயுத வியாபாரிகள் வரை விஸ்தரித்திருந்தார். இந்த தொடர்பை புலிகளும் பயன்படுத்த விரும்பினர்.

தாய்லாந்தில் தங்கியிருந்த குமரன் பத்மநாதனை சந்தித்து, அவர்களின் அணியில் ஒரு ஆயுதகொள்வனவாளராக கஸ்பார் பணியை ஆரம்பித்தார். தனது தொடர்புகளின் ஊடாக ஒரு தொகை ஆயுதங்களை வாங்கலாமென கே.பிக்கு நம்பிக்கையூட்டினார். இது நடந்தது 1994ஆம் ஆண்டு.

ஒரு கிழக்கு ஐரோப்பிய ஆயுத தரகன் ஊடாக, சோவித்தில் இருந்து பிரிந்த நாடொன்றிடமிருந்து கொஞ்சம் ஆயுதங்கள் வாங்கலாமென்றார். கே.பிக்கும் ஆயுதம் தேவை. பின்னாளில் இருந்ததை போன்ற பெரிய நெட்வேர்க் இருக்கவில்லை. அதனால், கஸ்பார் மூலமாவது ஆயுதம் வரட்டுமென நினைத்தார். 5 மில்லியன் இலங்கை பணம் கஸ்பாருக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் அதற்கு ஆயுதம் கிடைக்கவில்லை. பணத்தை வாங்கியவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என கஸ்பார் காரணம் சொன்னார். ஆனால் கே.பி அதை நம்பவில்லை. கஸ்பார் பணத்தை விளையாடிவிட்டார் என நினைத்தார். நிழலாக திரிபவனையே நம்ப முடியாத வேலை அது. காசைக் கொண்டுபோய் விட்டு, ஒருவன் ஏமாற்றிவிட்டான் என்றபடி திரும்பி வருபவரை நம்புவார்களா? கே.பி அந்த பதிலை நம்பவில்லை. அத்துடன் கஸ்பாருடனான அனைத்து தொடர்புகளையும் புலிகளின் ஆயுதக்கொள்வனவு பிரிவு துண்டித்துவிட்டது.

 

அதன்பின்னர் கஸ்பார் புலிகளிற்கு ஆயுதம் வாங்கவில்லை. ஆனால் வெரித்தாஸ் தமிழ் பணியின் மூலம் அவர் புலிகளின் அரசியல்துறையுடன் தொடர்பையேற்படுத்தினார். புலிகளின் ஒரு அணி கஸ்பாரை நம்பிக்கையற்ற மனிதனாக கருதி தூரவிலக்கி வைத்திருக்க, இன்னொரு அணி நம்பிக்கையானவராக கருதி தொடர்பிலிருந்தது. இது வாசகர்கள் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம். புலிகள் என்றால், எல்லோரும் புலிகள்தானே, அதிலென்ன கே.பி அணி, அரசியல்துறை அணி? என நினைக்கலாம்.

அப்படியெல்லாம் அணிகள் இருந்தன என்பதுதான் உண்மை.

kp-tiger-300x201.jpg

 

கே.பி அணி தவிர்ந்து, அரசியல்துறையுடன் கஸ்பாருக்கு நல்ல உறவிருந்தது. இறுதியுத்த சமயத்தில் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த பா.நடேசன் சரணடைவு தொடர்பாக கஸ்பாருடனும் பேசியிருந்தார்.

இத்துடன் கஸ்பாரின் கதையையும் முடித்து கொள்ளலாம். ஆயுத விற்பனையுலகின் ஏமாற்றுத்தனங்களை குறிப்பிட உதாரணமாக சொன்ன இரண்டு சம்பவங்களையும் முடித்துகொள்கிறோம். இனி புலிகளின் ஆயுத கொள்வனவு, கடத்தல் உலகத்திற்குள் நுழைவோம்!

 

புலிகளின் ஆயுதக்கொள்வனவாளர் குமரன் பத்மநாதன் தென்கிழக்காசிய நாடுகளை மையமாக வைத்துதான் செயற்பட்டார். பல்வேறு பெயர்களில், பல்வேறு கடவுச்சீட்டுக்களில் உலாவினார். அவர் தென்கிழக்காசிய நாடுகளை தனது செயற்பாட்டு மையமாக தேர்ந்தெடுக்க காரணம்- அங்கு அரச, பாதுகாப்புதுறைகளில் நிலவிய ஊழல் மற்றும் இந்தப்பிராந்தியத்தில் கொடிகட்டி பறந்த ஆயுத விற்பனை. இந்த நாடுகளில் பணம்தான் எல்லாம். காசிருந்தால் அரசின் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை எதையும் செய்யலாம். ஆகவே எந்த சிரமமுமில்லாமல் இயங்கலாமென கே.பி நினைத்தார்.

இதற்குள் வெளியில் தெரியாத இன்னும் இரண்டு விடயங்களை சொல்ல வேண்டும். தாய்லாந்தில் கே.பி தங்கியிருந்ததற்கு பிரதான காரணம்- அங்குள்ள நான்கு முக்கிய புலனாய்வு அமைப்புக்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது. அந்த புலனாய்வு அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரை கே.பி கைக்குள் வைத்திருந்தார். தேவையான சமயத்தில் அவர்களிற்கு பணத்தை வீசியெறிந்து இதை சாதித்தார்.

தாய்லாந்தில் முக்கியமான நான்கு உளவு பிரிவுகள் உள்ளன. தேசிய புலனாய்வு நிறுவனம், விசேட புலனாய்வு திணைக்களம், உள்ளக பாதுகாப்பு நடவடிக்கை பணியகம், குற்ற தடுப்பு பிரிவு என்பவையே அவை. இவற்றில் மிக முக்கியமான பதவிகளில் இருந்தவர்களை கே.பி கைக்குள் வைத்திருந்தார்.

உங்களிற்கு ஒரு பழைய சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறோம். 2007 செப்ரெம்பரில் இலங்கை புலனாய்வுத்துறையினூடாக கசிந்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள் ஒரு செய்தி வெளியிட்டிருந்தன. கே.பி தாய்லாந்தில் கைதாகினார், அமெரிக்காவின் சிஐஏ உளவு ஏஜெண்ட் அதிகாரிகள் விசாரணை செய்தார்கள் என. ஆனால் பின்னர் அதை தாய்லாந்து பொலிசார் மறுத்திருந்தனர். அப்படியொரு சம்பவமே நடக்கவில்லையென்றனர்.

உண்மையில் அப்பொழுது கே.பி தாய்லாந்தில் கைதாகியிருந்தார். சிஐஏயின் இரகசிய திட்டமொன்றின்படி அவர் தாய்லாந்தில் உளவுஅமைப்பினரால் கைதாகினார். இந்த திட்டத்தின் தகவல் பரிமாற்றம் இலங்கை உளவுஅமைப்புக்களிற்கும் கிடைத்திருக்க வேண்டும். அப்பொழுது கே.பியின் நடமாட்டங்களை அறிய இலங்கை உளவுஅமைப்புக்கள் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். அமெரிக்க ஊடாக அந்த தகவல் இலங்கைக்கு கிடைத்திருக்க வேண்டும். கே.பி தொடர்பான மாறுபட்ட தகவல் ஒன்றை தாய்லாந்து விமானநிலைய அதிகாரிகளிற்கு சிஐஏ பரிமாறி கே.பியை கைதுசெய்ய வைத்திருக்க வேண்டும். ஆனால் வழக்கம்போல கே.பி உளவுஅமைப்புக்களின் முக்கிய புள்ளிகளை கவனித்து வெளியில் வந்துவிட்டார். இதன் பின்னர்தான் கே.பியை தாய்லாந்தில் வைத்து ஒன்றும்செய்ய முடியாதென இலங்கை உணர்ந்துகொண்டது.

கே.பியை தாய்லாந்தை விட்டு வெளியேற வைத்ததில் சிஐஏவின் பங்கு முக்கியமானது. அந்த நாட்டு உளவுஅமைப்புக்களிற்கும், அரசுக்கும் நெருக்கடி கொடுத்து கே.பியை அந்த நாட்டைவிட்டு வெளியேற வைத்த பின்னர்தான் அவரை கைது செய்ய முடிந்தது.

 

தாய்லாந்தில் கே.பி ஆயுதம் கொள்வனவு செய்த உத்தி எல்லோரையும் மலைக்கவைப்பது. ஏதாவதொரு நாட்டில் ஆயுதம் வாங்க வேண்டுமெனில், தாய்லாந்தின் உளவுஅமைப்பொன்றின் சார்பில் கேள்விமனு கோரப்படும். உண்மையில் தாய்லாந்தின் உளவுஅமைப்பிற்கு இந்த ஆயுதம் வராது. உளவுஅமைப்பின் புள்ளிகள் சிலரை வைத்து கே.பி ஆடிய விளையாட்டு அது.

கள்ளச்சந்தைகளிற்கு வெளியில் ஆயுதங்களை வாங்குவதென்றால் ஏகப்பட்ட நெருக்கடிகள் இருக்கும். அங்கீகரிக்கப்பட்ட நாடுகள்தான் வாங்கலாம். ஆயுதம் வாங்கும் நாடு விற்கும் நாட்டின் நட்புநாட்டுக்கு எதிரானதா என்பதையும் பார்ப்பார்கள். இயக்கங்கள் இப்படியான இடங்களில் ஆயுதம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாது. இதை சமாளிக்கவே கே.பி தாய்லாந்து உளவுஅமைப்புக்களை பாவித்தார். உளவுஅமைப்புக்கள் அங்கீரிக்கப்பட்ட அரசின் அங்கத்துவமுள்ளவை. ஆகவே அவற்றிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் நாடுகளிற்கு பிரச்சனையில்லை. இந்த வழியில் கொள்வனவு செய்யப்பட்ட அனேக ஆயுதங்களே புலிகளிற்கு வந்து சேர்ந்தது.

இதைவிட இன்னொரு சம்பவமும் புலிகளிற்கு வாய்ப்பாகியது. சோவியத் யூனியன் உடைந்தபோது பிரிந்து சென்ற நாடுகளில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அந்தந்த நாடுகளிடம் சென்றது. சோவியத்தின் அனேக ஆயுத தொழிற்சாலைகள் உக்ரேனிலேயே இருந்தன. இப்படி உக்ரேனில் ஆயுதங்கள் இருந்தன. ஆயுத தொழிற்சாலைகளும் இருந்தன. சோவியத்தின் பிரிவின் பின்னர் உக்ரேனியிலிருந்த ஆயுதத்தொழிற்சாலைகளை உக்ரேனிய இராணுவஅதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள்தான் அதன் உரிமையாளர்கள். பணத்திற்காக அவர்கள் ஆயுத உற்பத்தியில் ஈடுபட தொடங்கினார்கள். இப்படி உக்ரேனிலிருந்தும் பெருமளவு ஆயுதங்கள் புலிகளிற்கு வந்து சேர்ந்தது.

ஒருமுறை- 1996இல் முல்லைத்தீவு மீதான ஓயாத அலைகள் 1 நடவடிக்கை முடிந்ததும்- உக்ரேனிலிருந்து புலிகள் தமது அமைப்பிற்காக ஏகே துப்பாக்கிகள் தயாரித்து இறக்குமதி செய்தார்கள். black ak என்பது துப்பாக்கியின் பெயர். அந்த துப்பாக்கிகளிற்கு தொடர் இலக்கமும் இடப்படவில்லை. புலிகளிற்காகவே தயாரான ஏ.கேக்கள் அவை. அதைவிட சுவாரஸ்யம், உக்ரேனில் இராணுவ அதிகாரியொருவரிற்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையை ஒரு ஐரோப்பிய ஆயுத வியாபாரியின் பெயரில் புலிகள் எடுத்து இயக்கினார்கள்.

அந்த தொழிற்சாலையிலிருந்து அவ்வவ்போது புலிகளிற்கும் ஆயுதம் வந்தது, வேறு ஆட்களிற்கும் விற்றார்கள்.

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0% யுக்ரேனிய ஆயுத தொழிற்சாலை

உக்ரேனிலோ, வடகொரியாவிலோ ஆயுதங்கள் வாங்குவது அவ்வளவு பெரிய விசயமில்லை. அதைவிட பெரிய விசயம், ஆயுதம் ஏற்றிய கார்கோ கப்பல்களை பத்திரமாக கொண்டு வருவதும், முல்லைத்தீவில் ஆயுதங்களை இறக்குவதுமே. இதற்கு புலிகள் நிறைய உத்திகளை கையாண்டார்கள். அடுத்த பாகத்திலிருந்து அதை குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/22996/

 

Share this post


Link to post
Share on other sites

பஞ்சாப்பில் கடத்தல் ராஜாவாக இருந்த விடுதலைப்புலிகளின் போராளி!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 42

November 22, 2018
b8.png

பீஷ்மர்

புலிகளின் ஆயுதல் கடத்தல் உலகத்தின் இன்னொரு பக்கத்தை இப்பொழுது குறிப்பிட போகிறோம். அது சற்று அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். ஆனால் வரலாற்றில் காய்தல் உவத்தல் இருக்க முடியாதல்லவா?

1980களின் ஆரம்பத்தில் மும்பை தாதா வரதராஜன் முதலி (வர்தா பாய்) உடன் புலிகளிற்கு தொடர்பு ஏற்பட்டது. அவரது பிரதான தொழிலே ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தலில் ஈடுபடுவது. ஆப்கானிஸ்தான் போதைப்பொருள்களின் உற்பத்தி மையமாக இருந்தது. இந்தியாவில் மும்பையை மையமாக வைத்து செயற்பட்ட பிரதான தாதாக்கள் எல்லோருமே ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்துபவர்கள்தான். வர்தா பாயில் தொடங்கி தாவூத் இப்ராஹிம் வரை எல்லா தாதாக்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்தான்.

இந்தியாவில் தங்கியிருந்த சமயத்தில் ஈழவிடுதலை அமைப்புக்கள் பலவற்றிற்கும் போதைப்பொருள் கடத்தலில் ஆர்வம் ஏற்பட்டது. இயக்கத்தை நடத்த, ஆயுதங்கள் வாங்க பெருந்தொகை பணம் தேவை. உள்ளூரில் வரி அறிவிடுவது, மக்களிடம் நிதி சேகரிப்பதெல்லாம் கால்தூசி பணம். இந்த பணத்தை கொண்டு ஆயுதம் வாங்க செல்ல முடியாது. இதனால் போதைப்பொருள் கடத்தலில் இயக்கங்கங்கள் உத்தியோகபற்றற்ற முறையில் ஈடுபட்டன.

எல்லா அமைப்புக்களும் இதில் ஈடுபட்டபோதும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு உலகளவில் விரிவடைந்ததால், சர்வதேசஅளவில் மிகப்பிரமாண்டமாக அதை செய்ய முடிந்தது. புலிகள் தவிர்ந்த, இன்றும் நாட்டில் உள்ள அமைப்பொன்றின் மீது அண்மைக்காலம் வரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு உள்ளதையும் நினைவூட்டுகிறோம்.

 

எதையும் கெட்டியாக பிடித்து, கச்சிதமாக செய்வது புலிகளின் இயல்பு. போதைப்பொருள் வர்த்தகத்திலும் அப்படியே நடந்தது.

1983களில் முதன்முறையாக ஆப்கானிஸ்தானிற்கு ஈழவிடுதலை அமைப்புக்களின் உறுப்பினர்கள் போதைப்பொருள் வாங்க செல்ல ஆரம்பித்தனர். புலிகளின் சார்பிலும் இந்தக் காலத்தில் சிலர் அங்கு சென்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் மிகப்பெரிய வலையமைப்புக்கள் இயங்கின. இதன் ஒரு பகுதியாகவே ஆரம்பத்தில் புலிகளின் ஆட்கள் வர்த்தகம் செய்தனர். சிறிதுகாலத்தில் வர்த்தகம் பிடிபட தொடங்க, தனி வலையமைப்பாக இயங்க தொடங்கிவிட்டனர்.

இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் இயக்க அடையாளத்துடன் செயற்படவில்லை. சாதாரண கடத்தலில் ஈடுபடுபவர்களாகவே வெளியில் அறியப்பட்டனர். இப்படியான ஒருவரே, யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவனை சேர்ந்த சிறீ என்பவரும். இவர் பஞ்சாபில் தங்கியிருந்து தொழில் செய்தார். 1986 இலேயே அங்கு பிரமாண்ட மாளிகை ஒன்று கட்டி, பஞ்சாப் பெண்ணொருவரை திருமணம் செய்து, அங்கு வர்த்தக ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டார். அவரது வர்த்தக வருமானம் முழுவதும் புலிகளிற்கு வந்தது. ஆனால் சிறீயின் கீழ் செயற்பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள்.

 

1994/95 காலப்பகுதியில் சிறீ மரணமானார். ஆப்கானிஸ்தானில் வாங்கப்படும் போதைப்பொருள் பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்து, பல நாடுகளிற்கும் விநியோகிக்கப்பட்டது. பாகிஸ்தான் எல்லைகளை இந்தியா இறுக்கமாக்கிய போது, ஒரு சுற்று சுற்றி நோபாளத்தை அடைந்து, அங்கிருந்து இந்தியாவிற்குள் நுழையும் ரூட் ஒன்றை கடத்தல்காரர்கள் கண்டுபிடித்தார்கள்.

இந்த பாதையால் இந்தியாவிற்குள் நுழைய முற்பட்டபோது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டதில் சிறீ மரணமடைந்து விட்டார். பஞ்சாபி அடையாளத்தில்- தலைப்பாகை கட்டி அசல் பஞ்சாபியாகத்தான் சிறீ தெரிந்தார்- இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். உண்மையாகவே எல்லை கடந்து வரும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவே எல்லைப் பாதுகாப்பு படையினரும் நினைத்தனர், இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் படங்களும் இந்திய ஊடகங்களில் அப்பொழுது வெளியாகியிருந்தது. எல்லை கடந்து வந்த பயங்கரவாதிகளாக கொல்லப்பட்டவர்களில் ஒருவர், யாழ்ப்பாணம் புன்னாலை கட்டுவனை சேர்ந்த விடுதலைப்புலிகளின் போராளியான சிறீ.

இப்படி அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் பெரிய பட்டியல் ஒன்றே புலிகளிடம் இருந்தது. சில சமயங்களில் இப்படி உரிமைகோர முடியாத சம்பவங்களில் மரணமடைபவர்களை, உரிமை கோரக்கூடிய சம்பவங்களில் இணைத்து வெளியிடும் வழக்கமும் இருந்தது. முக்கிய இலக்குகள் மீதான தற்கொலை தாக்குதல்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் விபரங்களை வெளியிடாமல் பேணிக்காப்பார்கள். என்றாவது ஒருநாள் அவர்களின் விபரங்களை வெளியிடலாம் என புலிகள் நினைத்திருந்தனர்.

பின்னாளில் இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் புலிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். கே.பியினால் தாய்லாந்தில் பழங்கள் தகரத்தில் அடைக்கப்படும் தொழிற்சாலையொன்று இயக்கப்பட்டது. ஆயுத கொள்வனவாளர் பொறுப்பிலிருந்து கே.பி அகற்றப்பட்ட பின்னரும், அந்த தொழிற்சாலையை நிர்வகித்து வந்தார். பழங்களை தகரத்தில் அடைத்து விற்பதன் மூலம் ஓரளவு வருமானத்தை தொழிற்சாலை ஈட்டி வந்தது. தொழிற்சாலை நடத்தப்பட்டதற்கு இன்னொரு நோக்கமும் இருந்தது. போதைப்பொருள் கடத்தலில் தொழிற்சாலைக்கும் பங்கிருந்தது!

drous-300x172.jpeg

அங்கு பொதியிடப்பட்ட பழங்களுடன், குறிப்பிட்ட அளவில் போதைப்பொருளும் அனுப்பப்படும். இறுதிவரை வெற்றிகரமாக அந்த வர்த்தகத்தை புலிகள் செய்தனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உலகளாவிய ரீதியில் வேட்டையாடப்பட்ட போதும், போதைப்பொருள் வர்த்தகம் தென்னாசியா ஊடாக தொடர்ந்து நடந்ததற்கு புலிகளின் சர்வதேச வலையமைப்பும் ஒரு காரணம். 2002 இன் பின்னர் போதைப்பொருள் வர்த்தகத்தை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் புலிகளிற்கு இரகசிய நெருக்கடியை கொடுத்தது. இலங்கையில் வெளிப்படையான நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் என பலதை குறிப்பிட்டதை போல, இந்த விவகாரத்தை புலிகளின் தலைமையிடம் காதும்காதும் வைத்ததைபோல சொன்னார்கள்.

புலிகள் கரும்புலி படையணியை கலைக்க வேண்டுமென பகிரங்கமாக சொல்லலாம். ஆனால் போதைப்பொருள் கடத்தலை நிறுத்துமாறு சொல்ல முடியாது. ஏனெனில், அதை இயக்குவது புலிகளாக இருந்தாலும், உள்ளூர் ஆட்களை வைத்துதான் அதை செய்தார்கள். புலிகளின் பின்னணியை இதில் உறுதிப்படுத்துவதென்பது சிவனின் அடிமுடியை காண்பதற்கு சமன். அப்படி பக்காவாக இதை புலிகள் செயற்படுத்தினார்கள்.

2002 இல் உருவான சமாதான சூழலில் புலிகள் நிறைய விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்பட்டனர். சர்வதேசத்தை பகைக்க விரும்பாத புலிகள், அவர்களிற்கு சொன்ன பதில்- நாங்கள் இப்படியான வேலைகளில் ஈடுபடுவதில்லை. வெளிநாட்டு தொடர்பாளர்கள் யாராவது அப்படி தனிப்பட்டரீதியில் செய்தால், அதையும் கட்டுப்படுத்தி விடுவோம் என்பதே.

பின்னர் சில வருடங்கள் இந்த வர்த்தகத்தை குறைந்தளவிலேயே செய்தனர். போதைப்பொருள் சமூதாயத்தை சீரழித்து விடும் என்பதை புலிகள் தெரிந்து வைத்திருந்தனர். அதனால்தான் தமது பிரதேசத்தில் போதைப்பாவனையை முற்றாக தடுத்து வைத்திருந்தனர். புலிகளின் அகராதியில் போதைப்பொருள் கடத்தலிற்கு மன்னிப்பு கிடையாது. ஆனால் சர்வதேச அளவில் புலிகள் தவிர்க்க முடியாமல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்கு காரணம்- நிதித்தேவை. அமைப்பை நடத்த, ஆயுதங்கள் வாங்க பெருந்தொகை பணம் தேவை. வடக்கு கிழக்கில் இயற்கை வளங்களும் அதிகமாக இல்லை. பெருமளவில் பணமீட்ட வாய்ப்பற்ற நிலத்தில் இருந்ததால் புலிகள் போதைப்பொருள் கடத்தலை பணமீட்டும் வழியாக பாவித்தார்கள்.

போதைப்பொருள் தமிழர் பிரதேசத்தில் வந்தால் சீரழிவு ஏற்படும், வேறு நாடுகளிற்கு சென்றால் சீரழிவு ஏற்படாதா என நீங்கள் கேட்டால்…. பதில் யாரிடமும் இல்லைத்தான்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/23350/

Share this post


Link to post
Share on other sites

நல்லகாலம் டார்க் சற்றலைற் புலிகள் லோஞ் பண்ணியிருந்தினம் அதனால் நாடுகளை வெருட்டி பணம் சம்பாதித்தனர் என்ற கதையையும் பீஷ்மர் எழுதாமல் விட்டு விட்டார் .

(மேலே பீஸ்மரின்  புளுகுமூட்டைக்கு நாங்க போட்ட புளுகு பதிவு உண்மை எதுவுமில்லை )

சிவனின் அடியும் முடியும் தெரியாதவர்கள் என்று சொல்லி விட்டு பீஸ்மருக்கு மாத்திரம் அடியும் நுனியும் தெரிந்து இருக்கு .( கதை எழுதணும் எது எழுதினால் என்ன நந்திகடலில் இருந்து எழும்பியா வரபோகிரார்கள் என்ற அதி கூடிய நம்பிக்கை கொண்ட ஆளா இருக்கிறார் )

உறுதிபடுத்தபடாத தகவல்களை வைத்து புலிகள் மீது  சேறு பூசுவது ஒன்றே பீஸ்மரின்  இலக்கு. 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பீஷ்மரும் சாத்துவும் ஒரே ஆளோ? சாத்துவும் முதல் எழுதின தொடரோ/கதை ஒன்றில் போதைபொருட்கள் கடத்தலில் தவிபு ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தவர்.

Share this post


Link to post
Share on other sites

அசர வைக்கும் புலிகளின் ஆயுதக்கடத்தல் நெற்வேர்க்: இந்தியாவின் காலடியில் பதுங்கியிருந்த ஆயுதக் கப்பல்கள்!

November 25, 2018
ltte-g.jpg

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 43

பீஷ்மர்

ஆயுத கொள்வனவில் பெருந்தொகை பணம் தேவை, அதற்காக பல்வேறு வர்த்தகங்கள் மூலம் புலிகள் பணமீட்டினார்கள் என்பதை கடந்த வாரங்களில் குறிப்பிட்டிருந்தோம். இந்த வர்த்தகங்கள் அனைத்தும் கே.பியின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அனைத்து கணக்குகள், நிதி கையாள்கை அனைத்தையும் கே.பியே கையாண்டார். அவருக்கு கீழ் ஒரு கணக்கு பிரிவு இருந்தது. அந்த பிரிவு கே.பிக்கு மாத்திரமே பொறுப்பு சொல்லும்.

புலிகளிடம் ஒரு நிதிப்பிரிவு இருந்தது. தமிழேந்தி அப்பா அதற்கு பொறுப்பாக இருந்தார். பின்னர் பாலதாஸ் இருந்தார். இவர்கள் யாருக்கும் கே.பியின் வருமானம் பற்றி எதுவும் தெரியாது. வரவும் தெரியாது, செலவும் தெரியாது. மாதாந்தமோ அல்லது தேவையான சமயத்திலோ புலிகளின் நிதிப்பிரிவிற்கு ஒரு தொகை பணத்தை கே.பியின் நிதிப்பிரிவு கையளிக்கும். அவ்வளவுதான்.

இது அமைப்பிற்குள் ஒரு பிரச்சனையாக இருந்தது. கே.பி அணி அதிக பணத்தை தமது சொந்த தேவைக்கு எடுக்கிறது, சொந்த வங்கிக்கணக்கை நிரப்புகிறார்கள் என்ற அபிப்பிராயம் புலிகளின் நிதிப்பிரிவிற்கு இருந்தது. விடுதலைப்புலிகளின் அனைத்து வருமானம தரும் பிரிவுகளையும் ஒரே குடைக்குள் கொண்டு வர வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். இந்த நிதி சிக்கலும் வெளிநாட்டு பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து கே.பி விலகிச் செல்ல வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியது. அது பற்றி தொடர்ந்து வரும் பகுதிகளில் குறிப்பிடுவோம்.

thamilenthi-231x300.jpg புலிகளின் நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தி

கே.பியின் கீழ் வெளிநாட்டில் பல பிரிவுகளாக செயற்பாடுகள் இயங்கின. ஆயுதக்கொள்வனவு கடத்தல் விவகாரத்தை மட்டும் இதில் குறிப்பிடுகிறோம். கே.பியின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு கணக்காளர் இருந்தார். அதுதவிர, மேலும் ஆறு அல்லது ஏழு பேர் கொண்ட ஒரு அணியிருந்தது. அவர்கள் தனித்தனியாக பல்வேறு நாடுகளில் வசித்து வந்தார்கள். இவர்கள்தான் ஆயுத பேரத்தை முடிப்பார்கள். நாடுகள், முகவர்களிடம் பேசி பேரத்தை முடிப்பார்கள். இவர்களிற்கு பல நாடுகளுடன் தொடர்பிருந்தது. வர்த்தகர்களாகத்தான் தமது அடையாளத்தை வெளிக்காட்டுவார்கள். இவர்களில் எக்ஸ் என்ற ஒருவர் இப்பொழுது நைஜீரியாவில் வாழ்கிறார். உலகத்தில் பல வசதியான நாடுகள் இருக்கிறது, இவர்களிடமும் பணம் இருக்கும், பிறகேன் நைஜீரியாவில் வாழ்கிறார் என நீங்கள் நினைக்கலாம். அதற்கு காரணமிருக்கிறது.

குறித்த எக்ஸ் என்பவர் அனேகமாக ஆபிரிக்க ஆயுத முகவர்களுடன்தான் தொடர்பை வைத்திருந்தார். கடல்கொள்ளையர்கள், ஆயுத இயங்கள் என ஆபிரிக்காவின் ஆயுதங்களுடன் தொடர்புள்ள அத்தனை தரப்பும் அவருக்கு அத்துப்படி. அதுதவிர, வறுமையான அந்த நாடுகளின் அரசுகளும் கொஞ்சம் காசை கொடுத்தாலே சொல்வதை செய்வார்கள். இப்படி நைஜீரியாவில் செல்வாக்கனவராக எக்ஸ் மாறிவிட்டார்.

 

கே.பி புலிகள் அமைப்பை விட்டு 2002 இல் இருந்து படிப்படியாக ஒதுங்க ஆரம்பித்த பின், சர்வதேச நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் புலிகளின் ஆயுதக்கொள்வனவு அணியை துரத்தி துரத்தி வேட்டையாட தொடங்கினார்கள். பலர் கைது செய்யப்பட்டார்கள். சிலர் விசாரணை வளைத்திற்குள் இருந்தார்கள். அடுத்து என்ன செய்வதென தெரியாத நிலையில், சிலர் தமக்கு நெருக்கமான அரசுகளுடன் பேசி, அந்தந்த நாடுகளில் குடியிருக்க ஆரம்பித்தனர்.

மேலே குறிப்பிட்ட எக்ஸிற்கு நைஜீரிய அரச, பாதுகாப்புதுறையில் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. அவர் நைஜீரியாவிலேயே குடியிருந்து விட்டார். அங்கு தற்போது பெரிய வர்த்தக புள்ளியாக இருக்கிறார்.

கணக்கு, ஆயுத பேரம் என்ற இரண்டு பிரிவுகளிற்கு அடுத்ததாக இன்னொரு பிரிவு இருந்தது. அதுதான் மிக முக்கியமான பிரிவு. ஆயுதங்களை ஏற்றி, இலங்கைக்கு கொண்டு செல்வது. இவர்களின் வாழ்க்கை அனேகமாக கடலிலேயே கழியும். இந்த செயற்பாட்டை பற்றி விபரமாக குறிப்பிட வேண்டும்.

விடுதலைப்புலிகளிற்கு சொந்தமாக பெருமளவு கப்பல்கள் இருந்தன. இறுதி யுத்த சமயத்தில் கே.பியின் தொடர்பு வட்டத்திற்குள் இருந்தவர்களின் பொறுப்பில் இருந்த கப்பல்கள் அனேகமாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விட்டன. இன்னும் சில இரு தரப்பும் பேசி ஒரு டீலை முடித்து, பங்காளிகளாக மாறினார்கள்.

 

புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து கே.பி அகற்றப்பட்ட பின்னர், புதியவர்களின் பொறுப்பில்தான் பெருமளவான கப்பல்கள் இருந்தன. அவை புலிகளின் அழிவின் பின் தனிநபர் சொத்துக்களாகி விட்டன. அந்தந்த கப்பல்களை, சொத்துக்களை யார் கையாண்டார்களோ, அவர்களே அவற்றின் உரிமையாளர்கள் ஆகினர்.

கண்ணாடி யோகன் என்ற ஒருவர் தற்போது லண்டனில் இருக்கிறார். நாற்பதுகளின் தொடக்கம்தான் வயது. கோடிக்கணக்கான சொத்திற்கு அதிபதியாகி விட்டார். எப்படி நடந்தது தெரியுமா?

கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் இவர். தென்மராட்சியை சேர்ந்தவர், கொக்குவிலில் தாய்வழி உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்து படித்தார். யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர்  புலிகளில் இணைந்தார். இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடற்புலிக்கு சென்றார்.

அந்த சமயத்தில்தான், கே.பியிடமிருந்து பொறுப்புக்கள் படிப்படியாக குறைக்கலாமென்ற யோசனை புலிகளிற்கு வந்தது. புலிகளின் டாங்கர் கப்பல்களை இயக்குபவர்கள், கப்பல் பணியாளர்களை முதன்முதலில் 1990களின் இறுதியில் புலிகள் நியமித்தனர். அதுவரை கே.பியால் நியமிக்கப்பட்ட பொதுமக்களே அந்த பொறுப்பில் இருந்தனர். இந்த நியமனம்தான் கே.பியிடமிருந்து ஆயுத நெற்வேர்க் பொறுப்பை புலிகள் திருப்பியெடுக்கும் முயற்சியின் முதலாவது நடவடிக்கை.

kp-300x203.jpg பிரபாகரன்- கே.பி- சங்கர்- அன்ரன் பாலசிங்கம்

அடுத்த கட்டமாக, அந்த கப்பல்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் கடற்புலிகளே எடுத்தார்கள். 2000களின் தொடக்கத்தில் இந்த நடவடிக்கைக்காக கடற்புலிகள் ஒருவரை நியமித்தனர். அவரிடமே குறிப்பிட்ட சில கப்பல்களை பொறுப்பளிக்குமாறு கே.பி கேட்கப்பட்டிருந்தார். புலிகள் நியமித்த ஆள், தாய்லாந்திற்கு நேரில் சென்று கப்பல்களை பொறுப்பேற்றார்.

கப்பல்களை பொறுப்பேற்ற அந்த ஆள்- கண்ணாடி யோகன்.

கப்பல்களை பற்றிய அனுபவமில்லாத போதும், கண்ணாடி யோகனிற்கு ஓரளவு ஆங்கில பரிச்சயமிருந்ததால் சூசை இந்த முடிவை எடுத்தார்.

புலிகளின் அழிவின் பின் இவரின் பொறுப்பில் ஐந்து கப்பல்களும், பல கோடி ரூபா பணமும் தங்கிவிட்டது. இதை வைத்து என்ன செய்வதென தெரியாமல் திண்டாடினார். யாருக்கும் சொல்லாமல் அமெரிக்காவிற்கு தப்பியோடி விடலாமென திட்டம் போட்டார். எனினும், அமைப்பின் மற்றைய நண்பர்களிற்கு விடயம் தெரிந்து அவரை தடுத்து நிறுத்தி விட்டார்கள். இப்படி பல கதைகள்.

 

புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஏதாவதொரு நிறுவனத்தின் பெயரில்தான் பதிவுசெய்யப்பட்டிருக்கும். இந்த நிறுவனங்களும் புலிகளின் லேபிள் நிறுவனங்கள்தான். கப்பல் நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருப்பார்கள். அதாவது, மிக நேர்த்தியான சட்ட ஏற்பாடுகளுடன் அவை செயற்பட்டு கொண்டிருப்பார்கள்.

இப்பொழுது எக்ஸ் உக்ரேனியில் ஒரு ஆயுத பேரத்தை முடித்துவிட்டார் என வைத்துக் கொள்வோம். விடயம், கப்பல்களை கையாள்பவர்களிற்கு அறிவிக்கப்படும். அவர்கள் ஒரு கில்லாடி வேலை செய்வார்கள். அந்த கப்பல் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் எந்த நாட்டில் உள்ளதோ, அங்கு ஒரு முறைப்பாடு பதிவு செய்வார்கள். தமது நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பெயருடைய கப்பலை யாரோ கடத்தி விட்டார்கள் என முறைப்பாடு செய்வார்கள்.

பின்னர் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட கப்பலை உக்ரேனிற்கு அனுப்பி ஆயுதங்களை நிரப்புவார்கள். ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு கப்பல் நிக்கோபர் தீவுகளிற்கு வரும். அங்கு வைத்து கப்பலின் நிறம் மாற்றியமைக்கப்படும். வேறொரு நாட்டின் கொடி பறக்கவிடப்படும்.

ஏன் நிக்கோபர் தீவுகளிற்கு கப்பலை புலிகள் கொண்டு வருகிறார்கள்?

புலிகளின் பிரதான ஆயுத கடத்தல் செயற்பாடு நிக்கோபர் தீவுகளை அண்டித்தான் இயங்கியது. கிழக்காசிய நாடுகளை மையமாக வைத்து கே.பி முதலானவர்கள் இயங்கினாலும், ஆயுதங்களை ஏற்றிய கப்பல்களின் செயற்பாடு நிக்கோபர் தீவுகளை மையமாக வைத்தே நடந்தது. ஆயுதங்களை ஏற்றிய கப்பல்கள் அனைத்தும் நிக்கோபர் தீவுகளில்தான் கட்டி வைக்கப்படும். முல்லைத்தீவு அல்லது கிழக்கு கடற்கரையில் ஏதாவதொரு இடத்தில் ஆயுதம் இறக்கும் சூழல் உருவாகும் வரை நிக்கோபர் தீவுகளில் கப்பலை கட்டிவைப்பார்கள்.

நிக்கோபர் தீவு கூட்டம் என்பது ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளை கொண்டது. இங்குள்ள பெரும்பாலான தீவுகளில் மக்கள் குடியிருப்பதில்லை. ஆளரவமற்ற பிரதேசமாக இருக்கும். எப்பொழுதாவது மிகச்சில மீனவர்கள்தான் அந்தப்பகுதிக்கு செல்வார்கள். அதனால் மிக பாதுகாப்பான இடமாக இருந்தது.

nicover-300x165.jpg அடையாளமிடப்பட்ட பகுதி- நிக்கோபர் தீவுக் கூட்டம். புலிகளின் ஆயுதக்கப்பல்கள் பாதுகாப்பாக தரித்து நிற்கும் இடம்

இதைவிட இன்னொரு பெரிய பாதுகாப்பிருந்தது. இது இந்து சமுத்திர பகுதியில் உள்ள தீவுக்கூட்டம். இந்தியாவின் கடற்படை ஆதிக்கத்திற்குரிய இடம். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய கடற்படைகள் அங்கு கவனம் செலுத்துவதில்லை. நிக்கோபர் தீவுகளிற்கு அப்பால் ரெனியூன் தீவுகளில்தான் அமெரிக்காவின் ராடர் மையமொன்று உள்ளது. ரெனியூன் தீவுகளை அண்டிய கண்காணிப்பே போதுமென அமெரிக்க கடற்படை சிறியதொரு ராடர் கட்டமைப்பையே அங்கு நிறுவியுள்ளது. அமெரிக்கர்களால் நிக்கோபர் தீவுகளை அண்டிய நடமாட்டத்தை கண்காணிக்க முடியாது.

சரி. அமெரிக்காவால்தான் கண்காணிக்க முடியாது. இந்திய கடற்படையின் அதிகார எல்லைக்குட்பட்ட நிக்கோபர் தீவுகளில் புலிகள் ஆயுதக்கப்பலை கட்டிவைத்து விட்டு, மாதக்கணக்கில் படுத்துக் கிடக்கிறார்களே, இந்திய கடற்படை என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை?

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/25210/

Share this post


Link to post
Share on other sites

இலங்கைக்குள் ஆயுதம் கொண்டு வந்த புலிகளின் இரகசிய கடல்பாதை: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 44

December 1, 2018
seishin-sunk.jpg

பீஷ்மர்

நிக்கோபர் தீவுகள்தான் புலிகளின் ஆயுதக் கப்பல்களின் தற்காலிக தங்குமிடம். இந்த கப்பல்கள் உலகெங்குமுள்ள பல நிறுவனங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றாலும் தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளை அண்மித்ததாக நிற்க முயற்சிப்பார்கள். அதாவது இந்த நாடுகளை அச்சாக வைத்து சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஆயுதம் கிடைக்கும் நாடுகளிற்கு கப்பல் அனுப்பப்படும். அனேகமாக கிழக்காசிய நாடுகளில்தான் புலிகளிற்கு ஆயுதங்கள் கிடைத்தன. அங்கு ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு, மலேசிய, சிங்கப்பூர் கடற்பரப்பிற்கு அண்மையாக வந்து, இந்தோனேசியாவிற்கும் சிங்கப்பூரிற்குமிடையிலான கடற்பரப்பினால் பயணித்து, நிக்கோபர் தீவுகளின் உள் பக்கமாக ஏதாவதொரு ஆளற்ற தீவிற்கு அண்மையாக கப்பலை நிறுத்தி வைத்து விடுவார்கள்.

ரினியூன் தீவுகளில் இருக்கும் அமெரிக்க ரடரால் இவற்றை கண்காணிக்க முடியாது. தப்பித்தவறி அவர்களின் கண்ணில் பட்டாலும், ‘அது இந்தியர்களின் ஏரியா… நமக்கு என்ன’ என இருந்து விடுவார்கள். நிக்கோபர் தீவு இந்தியர்களின் கடலாதிக்கத்திற்கு உட்பட்ட இடம். ஆனால் இந்தியர்களின் கடற்படை, கடலோர காவல்படையின் இலட்சணம் முன்னர் எப்படியிருந்ததென தெரியும்தானே. அந்தமான் தீவுகளில் இந்திய கடற்படை தளம் இருந்தது. ஏதோ தண்டத்திற்கு இருப்பதை போல இருந்தார்கள். அவர்களிடம் நிக்கோபர் தீவுகளை கவனிக்கும் வசதியிருக்கவில்லை. நிக்கோபரின் புவியியல் அமைவிடமும் இதற்கு ஒரு காரணம்.

நிக்கோபர் தீவுகளில் நிறுத்தப்படும் கப்பல் சில நாட்களும் தரித்து நிற்கலாம், ஆறு ஏழு மாதங்களும் தரித்து நிற்கலாம். கடற்புலிகள் கிளியர் செய்து எடுப்பதை பொறுத்தது அது. ஆயுதக்கடத்தல் பல பிரிவுகளின் ஒருங்கிணைந்த வேலையென்பதை முன்னர் சொல்லியிருந்தேன். ஆயுத பேரத்தை முடிப்பது ஒரு பகுதி, பணம் செலுத்தி ஏற்றும் விபரங்களை உறுதிசெய்வது ஒரு அணி, ஆயுதங்களை ஏற்றி வருவது ஒரு அணி. இந்த அணிதான் இப்பொழுது நிக்கோபர் தீவுகளிற்கு அண்மையில் கப்பலுடன் வந்து நிற்கிறது.

 

அடுத்த அணி- வன்னியில் இருந்த கடற்புலிகள். அவர்கள் இனி ஆயுதங்களை வாங்க வேண்டும். ஒரு பெரிய கடற்சமரிற்கு தங்களை தயார்படுத்துவார்கள். அதன்பின்னரே ஆயுதங்களை இறக்க தயாராகுவார்கள்.

முல்லைத்தீவில் இருந்து செல்லும் கடற்புலி படகுகள் ஆழ்கடலில் ஆயுதக்கப்பலை சந்தித்து, ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு கரை திரும்புவதுதான் செயற்பாடு. அதை சாதாரணமாக சொல்லலாம். செய்வது கடினம்.

கடலில் டோரா படகுகளின் ரோந்து இருக்கும். முதலில் டோராக்களின் ரோந்து இல்லாத நாள், நேரம் பார்க்க வேண்டும். காங்கேசன்துறை கடற்படை தளத்தில் டோராக்கள் சில சமயம் குறைவாக இருக்கும். காங்கேசன்துறையில் இருந்து ரோந்து கிளம்பிய டோராக்கள் திருகோணமலையில் கட்டப்பட்டிருக்கும். ஓய்வின் பின் அடுத்த சுற்றில் திரும்பி வருவார்கள். இதுதான் கடற்புலிகளிற்கு பொருத்தமான சமயம். பருத்தித்துறை, காங்கேசன்துறையில் டோராக்கள் குறைவாக இருக்கும் சமயம், ஒரு கடற்சண்டைக்கு தயாராக உள்ள சமயம் எல்லாம் பொருந்தி வந்தால், கடற்புலிகள் ஆயுதம் இறக்க தயாராகுவார்கள். இந்த தகவல் நிக்கோபர் தீவுகளில் நிற்கும் கப்பலிற்கும் அறிவிக்கப்படும். அவர்கள் சர்வதேச எல்லையை கடந்தால் அடுத்தது இலங்கை கடற்பரப்புதான்.

sdf-300x272.png புலிகளின் ஆயுதக்கப்பல் பாதை

பருத்தித்துறைக்கு அப்பாலான சர்வதேச கடற்பரப்பில்தான் ஆயுத பரிமாற்றம் நடக்கும். அதற்கு காரணம்- பருத்தித்துறை கடற்படை முகாமில் டோராக்கள் தரித்து நிற்பதில்லை. முல்லைத்தீவில் இருந்து கிளம்பும்போது கடற்படையின் ரோந்தை கவனித்து, இரகசியமாக புறப்பட்டு விடுவார்கள். போகும்போது கடற்படையுடன் முட்டுப்பட்டு சண்டை நடந்தால் ஆயுதங்களை இறக்க முடியாது. காங்கேசன்துறை பக்கம் ஒரு அணி, திருகோணமலை பக்கம் ஒரு அணி அரண் அமைக்க, நடுப்பகுதியால் ஆயுதங்கள் கரைக்கு கொண்டு வரப்படும். முல்லைத்தீவில் இருந்து கிளம்பும்போதே கடற்படையுடன் முட்டுப்பட்டால், நீண்டநேரம் கடற்சமர் புரிய வேண்டும். அது சாத்தியம் குறைந்தது. கடற்படை தன்னிடமுள்ள முழு வல்லமையையும் திரட்டி வந்தால் எதிர்கொள்வது ஆரம்பத்தில் கடற்புலிகளிற்கு சிரமமாக இருந்தது. ஓரிரண்டு கரும்புலி தாக்குதல்களுடன் சில மணி நேரங்கள் கடற்படையை சமாளிக்கலாம். ஆனால் நீண்டநேரம் சமாளிக்க முடியாது. ஆனால் 1999, 2000களில் இதில் கடற்புலிகள் ஓரளவு வளர்ச்சியடைந்து விட்டனர். முழு நாளும் கடலை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சம்பவங்களும் உள்ளன. அப்பொழுது பகலிலும் ஆயுதங்களை இறக்கினார்கள். சில விமான எதிர்ப்பு ஏவுகணைகளுடன் கடலில் உலங்கு வானூர்திகளையும் சுட்டு வீழ்த்தியிருந்தனர். இதன்பின்தான் அரசு கிபிர், மிக் போன்றவற்றை கடலில் பயன்படுத்த ஆரம்பித்தது.

கடற்படையின் ரோந்து கப்பல்கள் இல்லாத சமயத்தில் கடற்புலிகளின் விநியோக அணிகள் பருத்தித்துறைக்கு அப்பால் ஆழ்கடலிற்கு செல்ல, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை கடற்பரப்பிலிருந்து வரும் கடற்படையை தடுக்க தாக்குதலணிகள் செல்லும். சில சமயம் திசைதிருப்ப காங்கேசன்துறை, திருகோணமலை, மன்னார் பகுதிகளில் கடற்படை தளங்கள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். இதனால் கடற்படை பதற்றமடைந்து, அங்கு தாக்குதல் படகுகளை வரவழைத்து கடலில் தேடுதல் நடத்தும். இந்த இடைவெளிக்குள் முல்லைத்தீவில் புலிகள் ஆயுதங்களை இறக்கிவிடுவார்கள்.

 

முல்லைத்தீவில் இருந்து அணிகள் வரும் என சொல்லப்படும், ஆனால் பல சமயங்களில் ஆயுதக்கப்பலும், கரையிலிருந்து செல்லும் விநியோக அணிகளும் சந்திக்காமலும் போகலாம். கடலில் ஏற்படும் திடீர் மோதல், ஆயுதக்கப்பலிற்கு ஏற்படும் திடீர் பிரச்சனைகள் காரணமாக திட்டம் குழம்பும்.

மீண்டும் அடுத்த வாய்ப்பு வரும்வரை நிக்கோபர் தீவுகளில் கப்பலை கட்ட வேண்டும். அதுவரை கப்பலில் உள்ள உணவைத்தான் சாப்பிட்டு சமாளிக்க வேண்டும். கப்பலில் உள்ள மருந்துகளை பாவித்து நோய்களை தீர்க்க வேண்டும். ஒருவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டால், அவருக்காக கப்பலை ஆயுதத்துடன் திருப்பி கொண்டு செல்ல முடியாது. ஆயுதத்துடன் கப்பலை எந்த கரைக்கு கொண்டு செல்வது?

இதற்குள் முல்லைத்தீவில் இருந்து வரும் விநியோக அணியை சந்தித்தால் நோயாளியையும் கொடுத்து விடுவார்கள். அப்படி நடந்தால், அவர் அதிஸ்டக்காரன். இல்லாவிட்டால் கப்பலிற்குள்ளேயே மரணமாக வேண்டியதுதான். இப்படி மரணமானவர்கள் அனேகர்.

ஆரம்பத்தில் ஆயுதக்கப்பலில் பொதுமக்களே வேலை செய்தனர்.இப்படி நோய்வாய்ப்பட்டு இறப்பவர்கள், மோதல்களில் இறப்பவர்கள் தொகை அதிகரித்ததையடுத்து ஆயுதக்கப்பல்களையும் போராளிகளிடம் ஒப்படைக்க புலிகள் தீர்மானித்தனர். 1990 இன் நடுப்பகுதியில் இருந்து போராளிகளே முழுமையாக ஆயுதக்கப்பல்களை பொறுப்பேற்று விட்டனர்.

அதற்கு முன்னர் சாதாரண பொதுமக்களிடம் ஆயுதக்கப்பல் இருந்த சமயத்தில் சுமார் 10 தொடக்கம் 12 வரையானவர்கள் நோய்வாய்ப்பட்டு கப்பலில் இறந்தனர். இது நிக்கோபர் தீவுகளிற்கு அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்ட சமயத்திலேயே நடந்தது. இறந்தவர்களின் உடல்களை நிக்கோபரின் ஆளற்ற தீவொன்றில் புதைத்தார்கள். அங்கு அவர்களிற்காக ஒரு நினைவுத்தூபியும் கட்டப்பட்டுள்ளது.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/26427/

 

Share this post


Link to post
Share on other sites

புலிகள் வைத்திருந்த ஏவுகணை இதுதான்… எங்கிருந்து வாங்கினார்கள் தெரியுமா?

December 5, 2018
main-qimg-dff25cfbc3f477f8029f703d053e57

பீஷ்மர்

முல்லைத்தீவு கரைக்கு புலிகள் எப்படி ஆயுதங்களை கொண்டு வருவார்கள் என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். கரையிலிருந்து சென்ற புலிகளின் விநியோக வண்டிகள்- கடற்புலிகளின் சரக்கு ஏற்றும் கலங்களை அப்படித்தான் குறிப்பிடுவார்கள்- ஆழ்கடலிற்கு சென்று, ஆயுதக்கப்பலில் இருந்து பொருட்களை மாற்றுவது அனேகமாக நடு இரவாகத்தான் இருக்கும். அல்லது சற்று விடியும் பொழுது. மாலையில் முல்லைத்தீவு கரையில் இருந்து புறப்பட்ட கடற்புலிகள் ஆழ்கடலை சென்றடைய குறைந்தது ஆறு மணித்தியாலங்களாவது தேவைப்பட்டது.

கடற்புலிகளின் தாக்குதல் கலங்கள் அதிவேகமானவை. சரக்கு ஏற்றும் கலங்கள் அப்படியல்ல. அவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்ட வேகமே உள்ளது. ஆயுதங்களை ஏற்றிய பின், மீண்டும் திரும்பும்போதுதான் சிக்கல். அனேமாக விடிகாலையில் இலங்கை கரைக்கு ஓரளவு அண்மித்து வந்திருப்பார்கள்.

முல்லைத்தீவுதான் கடற்புலிகளின் உயிர்நாடியென்பது கடற்படைக்கும் தெரியும். அதனால் இரவுபகலாக அந்த பகுதியில் கண் வைத்திருப்பார்கள். திருகோணமலை, வெற்றிலைக்கேணி, காங்கேசன்துறையில் கடற்படையின் ரடார் நிலையங்கள் இருந்தன. முல்லைத்தீவு, கொக்கிளாய், பருத்தித்துறை, காங்கேசன்துறை கடற்பகுதிகளில் புலிகளின் படகுகள் இறங்கினால் உடனே முழு கடற்படை முகாமிற்கும் எச்சரிக்கை பறக்கும்.

ஆனால் இரவில் கடலில் இறங்க கடற்படை தயாராக இருக்காது. இதுதான் புலிகளிற்கு சாதகமானது. இந்த சாதகமான இரவை ஆயுத விநியோகத்திற்காக பாவித்தார்கள். ஆனால் இரவுக்குள் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு கரைக்கு வர முடியாது. விடிந்த பின்னர்தான் கரைக்கு வரலாம்.

 

அதிகாலையில் பருத்தித்துறை கடற்பரப்பில் கடும் மோதல், டோறா படகு மூழ்கடிப்பு- இப்படியான செய்திகள் அடிக்கடி அப்பொழுது வெளிவரும். ஏன் அதிகாலையில் கடலில் சண்டை நடக்கிறதென நீங்கள் யோசித்திருப்பீர்களா?

விடயம் இதுதான்.

முல்லைத்தீவில் இருந்து கடற்புலிகள் ஆழ்கடலிற்கு பருத்தித்துறை மார்க்கமாக சென்றது கடற்படைக்கு தெரிந்ததும், விடிகாலையில் அங்கு தாக்குதல் படகுகள் அனுப்புவார்கள். அனேகமாக காங்கேசன்துறையில் தரித்து நிற்கும் டோறா படகுகளைத்தான் அனுப்புவார்கள். சில சமயங்களில் காங்கேசன்துறையில் டோறா படகுகள் நிற்பதில்லை. ரோந்திற்கு திருகோணமலை சென்றிருக்கும்.

காங்கேசன்துறையில் இருந்தும், திருகோணமலையில் இருந்தும் வரும் கடற்படையை மறிக்க கடற்புலிகளின் சண்டை வண்டிகள் தயாராக நிற்கும். தரைப்படையில் ஏழு பேர் கொண்ட அணி செக்சன், இருபத்தொரு பேர் கொண்ட அணி பிளாட்டூன் என்ற கட்டமைப்பில் இயங்குவதை போல, கடற்புலிகளின் கட்டமைப்பில் தொகுதி என ஒரு கட்டமைப்பிருந்தது. ஒரு தொகுதியின் நான்கைந்து சண்டைப் படகுகள் இருக்கும். அதை வழிநடத்த ஒரு கட்டளை கப்பல் இருக்கும். சில கரும்புலி படகுகளும் இருக்கும்.

 

கடற்புலிகளின் தளபதி சூசை அனைத்து நடவடிக்கையையும் ஒருங்கிணைப்பார். தளபதிகள் சிறீராம் (இசைப்பிரியாவின் கணவர். இவர் சிலகாலம் ஆயுதக்கப்பலிலும் பணியாற்றியவர்), செழியன், கடல் போன்றவர்கள்தான் தாக்குதல் அணிகளை வழிநடத்துபவர்கள். இவர்களின் கீழ் பல தொகுதி படகுகள் இருக்கும்.

விநியோக படகுகளின் பயணத்திற்காக பாதுகாப்பான இடத்தை ஒதுக்கி, அதற்குள் கடற்படையை நெருங்க விடாமல் தாக்குவது, முடியாமல் போகும் பட்சத்தில் கரும்புலி வண்டிகளை மோதுவதுதான் கடற்புலிகளின் உத்தி. டோறா உள்ளிட்ட கடற்படையின் படகுகள் பெரியவை. கடலில் பெரிய இலக்காக இருக்கும். கடற்புலிகளின் படகுகள் சிறியவை. கடற்படையால் சுலபமாக இலக்கு வைக்க முடியாது.

ஆரம்பத்தில் காங்கேசன்துறை அல்லது திருகோணமலை கடற்படை தளம் ஒன்றில் இருந்துதான் கடற்படை தாக்குதல் படகுகள் வந்தன. கடற்புலிகளின் பலம் பெருகி, கடலில் நீண்டநேரம் தாக்குதல் நடத்தும் வல்லமையை பெற்ற பின்னர், இருமுனைகளில் இருந்தும் கடற்படை தாக்க தொடங்கியது. இதன் பின்னர்தான் ஈழப்போரில் மூர்க்கமான கடற்போர் ஆரம்பித்தது.

அனேகமாக 1998 இல் இருந்துதான் இப்படியான பரிமாணம் ஒன்றை கடற்போர் அடைந்தது. அப்பொழுது வன்னியில் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. புலிகளிற்கு கடுமையான ஆயுத தேவையிருந்தது. இந்த தேவையை கடற்புலிகள் ஈடுசெய்ய வேண்டும். அடிக்கடி முல்லைத்தீவில் ஆயுதங்கள் இறங்கின. இதனால் அடிக்கடி கடற்சண்டைகள் நடந்தன.

இதையடுத்து கடற்படை தாக்குதல் திறன் மேம்படுத்தப்பட்டது. எம்.ஐ தாக்குதல் உலங்குவானூர்திகளை கடற்படையுடன் இணைத்து நடவடிக்கையில் ஈடுபடுத்த ஆரம்பித்தது அப்பொழுதுதான். 1996இலேயே அது ஆரம்பித்தாலும், 1998இல்தான் தேர்ச்சியான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பு ஆரம்பித்தது. எம்.ஐ உலங்குவானூர்திகள் கடற்புலிகளிற்கு பெரும் தலையிடி கொடுக்க ஆரம்பித்தன.

வானிலேயே வெடிக்கும் ஒருவகை எறிகணைகளை எம்.ஐ 24 ஹெலிகொப்டர்கள் வீசும். கடலில் மறைப்பு இல்லாத நிலையில் நிற்கும் கடற்புலிகளிற்கு இது பெரிய இழப்பை ஏற்படுத்தியது. கடற்படையின் இந்த உத்தியை முறியடிக்க வேண்டிய தேவை புலிகளிற்கு ஏற்பட்டது.

அப்பொழுது விடுதலைப்புலிகளின் ஏவுகணை பிரிவுக்கு கடாபிதான் பொறுப்பாக இருந்தார். புலிகளிடம் என்ன வகையான ஏவுகணை இருக்கிறதென்பது இராணுவத்திற்கு பெரிய குழப்பம் இருந்தது.  யாழ்ப்பாணத்தில் 1995இல் இரண்டு விமானங்களை புலிகள் சுட்டுவீழ்த்தினர். இதை கடாபிதான் சுட்டார்.  அடுத்தடுத்து விமானங்களை சுட்டதால் அரசாங்கம் ஆடிப்போய் விட்டது.

 

பின்னர், 1997, 98, 99 களில் எம்.ஐ உலங்கு வானூர்திகள், சிவில் விமானங்கள் தாக்கியழிக்கப்பட்டன. சோவியத் ரஷ்ய தயாரிப்பான sam 7 strela 2 வகை ஏவுகணைகளால் அந்த தாக்குதல்களை புலிகள் நடத்தினார்கள். சோவியத் ஒன்றியத்தின் தயாரிப்பு இது. சோவியத் உடைந்ததும், உக்ரேனில் தங்கிய பெருமளவு ஆயுதங்களில் இந்த ஏவுகணைகளும் ஒன்று. ஆனால் இயக்கங்களிற்கு இதை விற்க உக்ரேனியர்கள் தயாராக இல்லை. ஆனாலும் கே.பி எப்படியோ தலைகீழாக நின்று வாங்கி விட்டார்.

1992ஆம் ஆண்டு உக்ரேனில் இருந்து 20 ஏவுகணைகளை புலிகள் வாங்கினார்கள். இவை பற்றிய விபரங்களை அடுத்தடுத்த பாகங்களில் குறிப்பிடுகிறோம்.

அதுபோல 1997 அன் இறுதியில் கொக்கிளாய் கடற்பகுதியில் எம்.ஐ 24 ஹெலிகொப்டர் ஒன்றை கடாபி சுட்டுவீழ்த்தினார். sam 7 strela 2 தாக்குதலிற்கு பயன்பட்டது. புலிகளிற்கு இந்த ஏவுகணையை விற்றுவிட்டு, அரசாங்கத்திற்கு அதன் எதிர்ப்பு கருவிகளை விற்ற உக்ரேனின் வியாபார சாமர்த்தியத்தை பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்.

கடற்படையுடன், எம்.ஐ உலக்குவானூர்திகள் கூட்டாக தாக்குதல் நடத்துவதை தடுக்க புலிகள் விரும்பினார்கள். உலங்குவானூர்திகளை அடிக்கடி சுட்டுவீழ்த்தினால் அடங்கி விடுவார்கள் என்பதுதான் புலிகளின் திட்டம். இதற்காகத்தான் கொக்குளாய் கடலில் முதலில் சுட்டார்கள். இதற்காக ஒரு பக்கா திட்டம் போட்டார்கள்.

திருகோணமலை கடற்படை தளப்பக்கமாக கடலில் ஒரு இடத்தில் கடற்புலிகளின் சிறிய படகொன்று அசையாமல் நிலைகொண்டிருந்தது. அதில்தான் கடாபியும் இருந்தார். செம்மலை கடலில் இருந்து புறப்பட்ட கடற்புலி படகுகள் ஏதோ பெரிய தாக்குதலிற்கு தயாராகுவதை போல கடலில் அப்படியும் இப்படியும் திரிந்தன.

திருகோணமலை கடற்படையினர் இதை கவனித்துவிட்டு, தாக்குதல் படகுகளையும், எம்.ஐ உலக்கு வானூர்தியையும் அனுப்பி வைத்தனர். கடலில் அசையாமல் நின்ற படகு- கடாபி இருந்தது- கடற்படையின் கண்காணிப்பில் படவில்லை. அதை யாரும் கவனிக்கவுமில்லை. செம்மலையிலிருந்து புறப்பட்டு வந்த கடற்புலிகளை தாக்குவதற்கு கொக்குளாய் பகுதியில் உலங்கு வானூர்தி சுற்றிக்கொண்டிருந்தது. அதாவது கடாபியின் தலைக்கு மேலே. கடாபி குறிபார்த்து சுடுவதில் எவ்வளவு கில்லாடியென்பதை ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறோம்.  தலைக்கு மேல் சுற்றிய உலங்கு வானூர்தியை விடுவாரா?

குருவியை போல சுட்டு விழுத்தினார்.

இதற்கு பின்னர் முல்லைத்தீவு, கொக்கிளாய் கடற்பரப்புக்களில் தொடர்ந்து சில உலங்கு வானூர்திகளை சுட்டு விழுத்தினார்கள். எல்லாமே ஆயுத விநியோக சமயத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன.

சில சமயங்களில் சறுக்கல்களும் வரும். புலிகள் முதன்முறையாக, பல்குழல் ஆட்லறிகளை வன்னியில் இறங்கிய நடவடிக்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

 

அது பருவமழையா, திடீர் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மழையா என்பது சரியாக நினைவில்லை. காலநிலை சீரில்லாத சமயம். ஆயுதங்களை இறக்க இப்படியான சமயங்களையும் புலிகள் தேர்வுசெய்வதுண்டு. காலநிலை சீரின்மை புலிகளின் படகுகளிற்கும் ஆபத்துத்தான். ஆனால், கடற்படையின் தொந்தரவின்றி ஆயுதங்களை இறக்க, அப்படியான சமயங்களை தேர்வு செய்வார்கள்.

46996343_2067568183263360_49136913468348 புலிகளின் பல்குழல் பீரங்கி

மழை, கடற்கொந்தளிப்பின் மத்தியில் முல்லைத்தீவிற்கு அப்பால் சர்வதேச கடல் எல்லைக்கு சென்று ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு புலிகளின் விநியோக படகுகள் வந்தன. பயங்கர கடற்கொந்தளிப்பு. வழக்கமாக விடிகாலையில் முல்லைத்தீவு கரையை அடையும் புலிகளின் படகுகள், அன்று மதியத்திற்கு பின்னர்தான் முல்லைத்தீவை அடைந்தன. வழக்கத்தை விட அன்று எம்.ஐ உலங்கு வானூர்திகள் புலிகளின் விநியோக, கடற்புலிகளின் தாக்குதலணிகளை தாக்கின. எம்.ஐ உலங்கு வானூர்திகள் வந்தும், புலிகளால் அவற்றின் மீது தாக்குதல் நடத்த முடியவில்லை.

காரணம்- அன்று எப்படியோ புலிகளின் விமான எதிர்ப்பு அணி இருந்த படகை அடையாளம் கண்டு, அதன் மீது முதல் தாக்குதல் நடந்தது. புலிகளின் விமான எதிர்ப்பு அணியில் இருந்த அகிலேஸ், கோணேஸ் போன்றவர்கள் கடுமையான காயமடைந்தனர். அவர்களால் பதில் தாக்குதல் நடத்தவே முடியவில்லை.

(அகிலேஸ், ஆனந்தபுரம் BOX இல் மரணமானார். தளபதி கடாபி காயமடைந்த நிலையில், அகிலேஸின் மடியிலேயே படுத்திருந்தார். உட்கார்ந்திருந்த அகிலேஸ், எதிர்ப்பக்கமிருந்து வந்த துப்பாக்கி ரவை நெஞ்சை துளைத்து செல்ல, அப்படியே வீழ்ந்தார்)

இந்த சமயத்தில் கடற்படை முல்லைத்தீவில் ரோந்து, கண்காணிப்பை அதிகரித்து கடற்புலிகளிற்கு ஆயுதம் வருவதை தடுக்க முயற்சித்தது. கடற்புலிகளின் இலக்குகள் அடையாளம் காணப்பட்டால், தாக்குவதற்கு உலக்கு வானூர்திகள் உடனே கடலிற்கு வரும் விதமாக பலாலி, வவுனியாவில் அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடற்படையின் கூட்டு நடவடிக்கையை முறியடிக்க, புலிகளும் கூட்டு நடவடிக்கைக்கு தயாராகினர்.

ஜெயசிக்குறு சண்டை நடந்துகொண்டிருந்த காலம். ஆயுத வரத்து அவசியம். கடற்படையின் நெருக்கடியால் சில மாதங்கள் ஆயுத வரத்து இல்லை. புலிகளிடம் இரண்டு ஆயுதக்களஞ்சியங்கள் இருந்தன. இரண்டும் இம்ரான் பாண்டியன் படையணியின் கீழ்தான் இயங்கியது. இரண்டும் விசுவமடுவிற்கு அப்பால் இருந்த காட்டிற்குள் இயங்கின. பிரதான ஆயுத களஞ்சியம் சுயாகியின் கீழ் இயங்கியது. அடுத்தது, பரன் மாஸ்டரின் கீழ் இயங்கியது. ஆயுதக்களஞ்சியங்களின் இருப்பு தீர்ந்து கொண்டு போவதாக அவர்கள் பிரபாகரனிற்கு அறிக்கை  அனுப்ப தொடங்கினார்கள்.

அதேநேரம், ஆயுதம் ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று நிக்கோபர் தீவுகளில் மூன்றரை மாதமாக கட்டிவைக்கப்பட்டிருந்தது. எப்படியாவது ஆயுதங்களை இறக்குமாறு சூசைக்கு பிரபாகரன் கட்டளையிட்டார்.

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/27026/

 

Share this post


Link to post
Share on other sites

புலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?

December 16, 2018
factory.jpg

பீஷ்மர்

வன்னியில் ஆயுதத் தட்டுப்பாடு. நிக்கோபர் தீவுகளிற்கு அருகில் புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்று மூன்றரை மாதங்களிற்கு மேலாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. நிக்கோபரில் நிற்கும் கப்பலையும் கடற்புலிகளையும் முல்லைத்தீவிற்கு அப்பாலான கடற்பரப்பில் சந்திக்க வைக்க வேண்டும். ஆனால் கடற்படையின் புதிய வியூகமொன்று அதற்கு தடையாக இருந்ததாக கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம்.

எம்.ஐ 24 ஹெலிகொப்டர்களை கடல் நடவடிக்கையுடன் ஒருங்கிணைக்க ஆரம்பித்திருந்தார்கள். அரசின் இந்த புதிய உத்தியை ஆரம்பத்திலேயே உடைக்க வேண்டும் என புலிகள் நினைத்தனர். இல்லையென்றால், கடற்படையின் மனோதிடம் மேம்படும், இந்தவகையான தாக்குதல் உத்தியை அதிகப்படுத்தி விடுவார்கள்- அதன்பின் ஒன்றும் செய்ய முடியாதென நினைத்தார்கள்.

விடுதலைப்புலிகளிடம் இருந்தது எந்தவகையான ஏவுகணையென்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். சோவியத் ஒன்றியத்தின் தயாரிப்பான sam 7 strela 2 ஏவுகணைகளே புலிகளிடம் இருந்தன. 1992 ஆம் ஆண்டு உக்ரேனில் இருந்து இந்தவகை ஏவுகணைகளின் ஒரு தொகையை புலிகள் வாங்கினார்கள். தனது ஆதரவு நாடுகளிற்கு முன்னர் இந்த ஏவுகணைகளை இரகசிமாக சோவியத் ஒன்றியம் வழங்கியிருந்தது. அமெரிக்காவிற்கு எதிராக போராட வியட்நாம் போராளிகளிற்கு, சிரிய அரசிற்கு, ஈரானிற்கு, ஈக்குவடோர் புரட்சிப்படைக்கு சோவியத் இரகசியமாக வழங்கியிருந்தது. போராளிக்குழுக்களிற்கு ஏவுகணைகள் செல்வதை எந்த வல்லரசும் விரும்பவில்லை. ஆனால், தத்தமது நலன்களிற்கு ஏற்ப வழங்கி வந்தார்கள்.

பனிப்போரின் முடிவின் பின் அமெரிக்க, ரஸ்யாவிற்கிடையில் நீடித்த பகை ஓரளவிற்கு தணியத் தொடங்கியது. அணுஆயுதங்கள், ஏவுகணைகள், விமானங்கள் உள்ளிட்ட போர்த்தளபாடங்கள் ரஸ்யாவில் இருந்து வெளியில் செல்ல வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா கருதியதால், ரஸ்யாவுடன் அமெரிக்காவே நெருக்கத்தை ஏற்படுத்தி, அரசுகளிற்குள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இதன்படி இரண்டு நாட்டு போர்த்தளபாடங்களையும் போராளிகளிற்கும், குழப்படிக்கார நாடுகளிற்கும் விற்பதில்லை என்பதே அந்த எழுதப்படாத உடன்பாடு.

 

உக்ரேனில் இருந்த ஆயுதங்களை வெளியில் செல்லவிடாமல் தடுக்கும் பொறுப்பையும் அமெரிக்காவே கவனித்தது. படிப்படியாக அந்த நாடு நேட்டோவிற்குள் கொண்டு வரப்பட்டதற்கு சமாந்தரமாக, அந்த நாட்டு இராணுவத்தை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வர அமெரிக்கா உதவியது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆயுத தொழிற்சாலைகள் பல உக்ரேனிலேயே இருந்தன.

28055943_1834086606644203_62293449292992 பிரபாகரன்- சூசை

உக்ரேனில் இரும்பு உற்பத்தி அதிகமாக இருப்பதால், சோவியத் காலத்தில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் அனேகமானவை அங்கு நிறுவப்பட்டிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின் அங்கிருந்த ஆயுத தொழிற்சாலைகளை இராணுவ உயரதிகாரிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அந்த தொழிற்சாலைகள் இராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட சொத்தாகி, கறுப்பு சந்தைக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறின. இதன்மூலம் அவற்றை உரிமையாக்கிய இராணுவ அதிகாரிகள் கோடீஸ்வரர்களாக மாறினர்.

இந்த இடத்தில் இன்னொரு ஆச்சரியமான தகவலொன்றை சொல்கிறோம். அப்படியான தொழிற்சாலையான்று புலிகளின் கைக்கும் வந்தது!

 

இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். உக்ரேனில் புலிகளிற்கு ஆயுத தொழிற்சாலையா என.

ஆனால், புலிகள் நீண்டகாலமாக உக்ரேனில் ஒரு ஆயுத தொழிற்சாலையை நிர்வகித்தனர். ஆனால், அது அவர்களிற்கு சொந்தமானதல்ல. சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னர், உக்ரேனிய இராணுவ அதிகாரியொருவரின் சொத்தாகிய ஆயுத தொழிற்சாலை அது. அவரிமிருந்து ஒப்பந்த அடிப்படையில் புலிகள் தொழிற்சாலையை வாங்கி நிர்வகித்தனர். அந்த அதிகாரியிடமிருந்து புலிகளின் பெயரில் வாங்கவில்லை. ஒரு உக்ரேனிய நபரின் பெயரிலேயே தொழிற்சாலையை பெற்று, நிர்வகித்தனர்.

புலிகளிற்கு தேவையான அத்தியாவசிய உபகரங்கள்- ஏ.கே துப்பாக்கிகள், ரவைகள், கையெறி குண்டுகள் போன்றவை அங்குதான் தயாரிக்கப்பட்டன. அதேபோல, புலிகளை போல ஆயுதம் தேவைப்படும் பிற நாட்டு இயங்கங்களிற்கும் அங்கிருந்து சப்ளை செய்யப்பட்டது. அதற்கான பணத்தை அந்த இயங்கள் செலுத்தின. இதுவும் புலிகளிற்கு நல்ல வருமானம் தரும் மூலமாக இருந்தது.

பர்மா (மியான்மார்) மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தடைகள் விதித்திருந்தன. இதில் முக்கியமானது ஆயுதத்தடை. பர்மாவிற்கு உள்நாட்டிலும், அண்டை நாடுகளுடனும் இராணுவரீதியான சவால்கள் இருந்தன. அதை சமாளிக்க நவீன ஆயுதங்கள் தேவை. ஆனால் உத்தியோகபூர்வமாக வாங்க முடியாது.

இந்த சமயத்தில் புலிகளின் ஆயுதத்தொழிற்சாலை, புலிகளின் கடத்தல் வலையமைப்பு பர்மாவிற்கு ஓரளவு உதவியது. அதேபோல, பர்மாவினாலும் புலிகளிற்கு ஆயுதங்கள் கிடைத்தது. புலிகளிற்கும் பர்மா அரசுக்கும் இடையிலான உறவு ஆழமானது. நெருக்கமானது. இதை மேல்மட்ட இராஜதந்திரிகள் சிலர்தான் தெரிந்து வைத்திருந்தனர். மற்றும்படி வேறு யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி இரகசியமாக உறவை பேணினர். புலிகள், பர்மா உறவுபற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்.

இரண்டாம் முறையாக, 1999 இல் உக்ரேனிலிருந்து புலிகள் ஒரு தொகை ஏவுகணை வாங்கிய விவகாரம் எப்படியோ சி.ஐ.ஏ இற்கு தெரிந்து, பின்னர் உக்ரேனிலிருந்து ஏவுகணைகள் வெளியில் செல்வதை அமெரிக்கா தடுத்து விட்டது. இதனால் மீண்டும் புலிகளால் ஏவுகணை வாங்க முடியவில்லை. வாங்கிய ஏவுகணைகளை வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டிய நெருக்கடி புலிகளிற்கு. 1999 இன் பின்னர் புலிகளால் இறுதிவரை விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கவே முடியவில்லை. வெப்பத்தை நாடிச் செல்லும் sam 7 strela 2 ஏவுகணைகளிற்கான, விமான எதிர்ப்பு பொறிமுறையை மிக குறுகிய காலத்திலேயே உக்ரேனால் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டும் விட்டது. இதுதான், புலிகளின் விமான எதிர்ப்பு பொறிமுறையில் பலவீனத்தை ஏற்படுத்தியது.

unnamed-1-1-696x392-300x169.jpg கரும்புலிகளின் தாக்குதல் படகொன்று

யாழ்ப்பாணத்தில் இரண்டு ஏவுகணைகளை கடாபி விமானங்களின் மீது சுட்டார். 1995இல் நடந்த இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு விமானங்கள் வீழ்ந்தன. ஏற்கனவே பயிற்சியின் போது கடாபி ஒன்றை செலுத்தியிருந்தார். இரணைதீவு கடலில் பயணிகள் விமானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் (யாழ்ப்பாணத்தில் இருந்து காயமடைந்த இராணுவத்தினரை ஏற்றியபடி வந்த விமானம் என கருதியே புலிகள் அந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்), வில்பத்து சரணாலயப்பகுதி தாக்குதல் என்பனவும் இந்த உக்ரேனிய ஏவுகணைகள் மூலமே நடத்தப்பட்டது.

அப்போது புலிகளின் விமான எதிர்ப்பு அணியில் கடாபி, அகிலேஸ், கோணேஸ் ஆகியோரே முக்கியமானவர்களாக இருந்தனர். இதில் அகிலேஸ், கோணேஸ் போன்றவர்கள் காயமடைந்ததை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம்.

 

நிக்கோபர் தீவுகளிற்கு அருகில் நின்ற ஆயுதக்கப்பலை முல்லைத்தீவிற்கு அண்மையில் கொண்டுவர புலிகள் முடிவுசெய்தனர். அந்த சமயத்தில் இரவில் முல்லைத்தீவிற்கு அப்பால் கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் தரித்து நிற்கத் தொடங்கி விட்டன. அதனால் இரவில் ஆயுதக்கப்பலை அங்கு கொண்டு வருவது சிரமம். ஆகவே விடிகாலையில் புறப்பட்டனர்.

1998இன் நடுப்பகுதி. விடிகாலையில் புறப்பட்ட கடற்புலிகளின் படகுகள் ஆழ்கடலிற்கு சென்று ஆயுதங்களை ஏற்றியது. அன்று குறிப்பிட்ட நேரத்திற்கு ஆயுதக்கப்பல் குறித்த இடத்திற்கு வரவில்லை. இப்படியான தாமதங்களினால் ஆயுதங்களை ஏற்றியபடி திரும்பிய கடற்புலிகளின் விநியோக அணி தாமதமாக திரும்பியது.  முல்லைத்தீவு கரையை நெருங்க மாலை 3 மணியாகி விட்டது. புலிகளின் விநியோக அணி ஆழ்கடலிற்கு சென்றதை அவதானித்த கடற்படையினர், புலிகள் திரும்பி வரும்வரை காத்திருந்தனர்.

முல்லைத்தீவை புலிகளின் விநியோக அணிகள் நெருங்க, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலையில் இருந்து கடற்படையினர் திடீரென வந்து விட்டனர். கடற்படையின் வரவை பார்த்து நின்ற கடற்புலிகளின் அணிகள் கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். புலிகளின் தாக்குதல் உக்கிரம் பெற்ற பின்னர், எம்.ஐ 24 உலங்கு வானூர்தி அங்கு வரவழைக்கப்பட்டது.

27336405_1823121607740703_38393907477146 கடாபி- பிரபாகரன்

கடற்புலிகளின் நீளமான தாக்குதல் படகுகளை சூடை என்றுதான் அழைப்பார்கள். ஒரு சூடை படகில் புலிகளின் விமான எதிர்ப்பு குழுவினர் இருந்தனர்.

புலிகளின் வழக்கமான ஆயுத விநியோக நடவடிக்கைகள் எல்லாமே இப்படி ரிஸ்க் ஆனவைதான். ஆனால், இந்த சம்பவத்தை மட்டும் விசேடமாக சொல்ல காரணம்- அந்த படகில் இருந்தவர் கடாபி!

 

புலிகளின் விமான எதிர்ப்பு அணியில் அப்போது குறிப்பிட்டளவான ஆட்களே இருந்தார்கள். ஒரு தொகுதியினர் ஏற்கனவே காயமடைந்து விட்டனர். புதிதாக அணியில் இணைந்த சிலர் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். ஆயுதத் தட்டுப்பாடான நேரம்… கடலில் வான்படை ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சமயம்… இப்படியான சமயத்தில், உலங்கு வானூர்திகளை வீழ்த்தினால்தான் கடற்புலிகளின் மேலாதிக்கம் கடலில் இருக்கும். எல்லாவற்றையும் யோசித்து விட்டு, கடாபி தானே புறப்பட்டார்!

கடாபிதான் தாக்குதலிற்காக வருகிறார் என்பது கடற்புலிகளில் யாருக்கும் தெரியாது. விமான எதிர்ப்பு அணியின் யாரோ ஒரு போராளி வருகிறார் என நினைத்திருப்பார்கள். கடாபி வந்து விட்டார். படகில் ஏற்றி செல்லத்தான் வேண்டும். ஆனால், கடற்புலிகளின் தளபதி சூசையிடம் இதை சொல்லாமல் செய்யலாமா என்ற குழப்பம் போராளிகளிடம். சூசை பயங்கர கோபக்காரன்.

எவ்வளவு கோபக்காரன் என்றால்- விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை மீறி, தாக்குதல் படகிலிருந்து ஒரு லீற்றர் பெற்றோலை எடுத்து, மோட்டார்சைக்கிளிற்கு பாவித்ததற்காக ஒரு கரும்புலி போராளிக்கு மரணதண்டனை விதித்த அவரது கோபம் போராளிகள் எல்லோருக்கும் தெரியும். அதனால், தயங்கிக் கொண்டு நிற்க, அவர்களை சமாதானப்படுத்தி படகை கிளம்ப வைத்தார் கடாபி.

கடாபி அன்று ஒரு உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தினார். ஆயுதங்கள் வெற்றிகரமாக கரைக்கு வந்தன.

balraj-with-fellow-commanders-sasikumar- 1991 ஆ.க.வெ சமர்- சசிக்குமார், சூசை, பால்ராஜ்

கடாபிதான கடலிற்கு சென்றார் என்ற தகவல் பின்னர்தான் சூசைக்கு தெரிய வந்தது. அவர், கடற்கரைக்கே வந்துவிட்டார். முக்கிய தளபதியொருவருக்கு கடலில் ஏதாவது நடந்தால் சூசைக்கு சிக்கலாகி விடுமல்லவா. எனக்கு தெரியாமல், எங்கள் போராளிகள் கூட்டிச் சென்று விட்டார்கள் என விளக்கம் சொல்வதை தளபதிகள் விரும்ப மாட்டார்கள் தானே. அந்த சண்டையில் அப்படியொரு வில்லங்கமும் வரவுமில்லை.

உக்ரேனில் வாங்கிய sam 7 strela 2 ஏவுகணைகளை புலிகள் எப்படி பாவித்தார்கள்? அதற்கு பயிற்சியளித்தது யார்? இந்த கேள்விகளிற்கு சுவாரஸ்யமான பதில்கள் உள்ளன. இதை அறிவதென்றால் அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/28507/

 

Share this post


Link to post
Share on other sites
On 12/7/2018 at 12:17 PM, பெருமாள் said:

நல்லகாலம் டார்க் சற்றலைற் புலிகள் லோஞ் பண்ணியிருந்தினம் அதனால் நாடுகளை வெருட்டி பணம் சம்பாதித்தனர் என்ற கதையையும் பீஷ்மர் எழுதாமல் விட்டு விட்டார் .

(மேலே பீஸ்மரின்  புளுகுமூட்டைக்கு நாங்க போட்ட புளுகு பதிவு உண்மை எதுவுமில்லை )

சிவனின் அடியும் முடியும் தெரியாதவர்கள் என்று சொல்லி விட்டு பீஸ்மருக்கு மாத்திரம் அடியும் நுனியும் தெரிந்து இருக்கு .( கதை எழுதணும் எது எழுதினால் என்ன நந்திகடலில் இருந்து எழும்பியா வரபோகிரார்கள் என்ற அதி கூடிய நம்பிக்கை கொண்ட ஆளா இருக்கிறார் )

உறுதிபடுத்தபடாத தகவல்களை வைத்து புலிகள் மீது  சேறு பூசுவது ஒன்றே பீஸ்மரின்  இலக்கு. 

ஆயுத கடத்தல் கப்பல்களை வழி  நடத்தியவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் 
அவர்களில் யாரோ ஒருவருவருடன் புலி ஆதரவு ஆள்போல நாடகம் ஆடி 
கிடைத்தை சில தகவல்களை வைத்தே பீஷ்மார் வில் வளைக்கிறார் 

மற்றவர்கள் இந்த புலம்பல்களை வாசிக்க போவதில்லை 
வாசித்தால் விழுந்து விழுந்து  சிரிப்பார்கள் 

பீஷ்மார் ஐயா அவர்கள்  துரோகி கே பி யை அப்படியே பாதுகாத்து வருவதை 
வாசகர்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமாதான காலத்திலேயே புலிகளின் இராண்டாவது கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி 
அழிக்க்கப்பட்டு  இருந்தது . ..... என்னுடன் ஒன்றாக படித்தவரின் வழிநடத்தலில் இந்த கப்பல் 
சுற்றிக்கொண்டு இருந்தது.
கட்டுநாயக்கவில் இருந்து போர் விமானங்கள் ஏறும்போதே  ராடார் புலிகளுக்கு சந்தேகம் 
வந்துவிட்ட்து  எல்லாம் சரியாக முதலாவது கப்பலுக்கு நடந்த அதே பாணியில் நடந்துகொண்டு இருந்தததுதான் சந்தேகம் வர காரணம் என்று சொன்னார்கள்  
இவர்கள் உடனடியாக கப்பலை திரும்புமாறு கூறி இருந்தார்கள் 
நேர அவகாசம் போதாமையால் கப்பல் எங்கும் போக முடியாது தாக்குதலுக்கு உள்ளானது 
அதில் இருந்த ஆயுதமும் 9 புலிகளும் கொல்லப்பட்ட்னர். 
இவரின் சகோதரனும் கடற்புலியில் இருந்தார் ... ஆனால் சம்மபவம் ரகசியமாக மறைக்கப்பட்டு விட்டது 
1 வருடம் முடிந்த பின்புதான் புலிகள் அறிவித்தார்கள்.
இரண்டுமே கே பி யின் கட்டிக்கொடுப்பில் சிங்கள இந்திய அரசுகளால் காத்திருந்து 
தாக்கி அளிக்க பட்டவை 

இவை இரண்டினது தாக்குதலின் விடியோக்கள் கிபிரில் இருந்து எடுத்தவை சிங்கள இராணுவ இணைய தளத்தில் இருந்தது 
இப்போ இருக்கிறதா தெரியவில்லை 

Share this post


Link to post
Share on other sites

விடுதலைப்புலிகளிற்கு பயிற்சி வழங்கிய உக்ரேனிய கொமாண்டோக்கள்… புலிகளின் மெகா கடத்தல் இதுதான்!

December 20, 2018
rtr45irx-696x464.jpg

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 47

பீஷ்மர்

1992 ஆம் ஆண்டே புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணை கிடைத்து விட்டது. இந்த ஏவுகணையை வைத்து அதுவரை என்ன செய்தார்கள் என்று நீங்கள் ஆச்சரியமடையலாம். உண்மைதான். இந்த இடத்தில்தான் பிரபாகரனின் இயல்பொன்றை குறிப்பிட வேண்டும்.

பிரபாகரன் எதிலும் அவசரக் குடுக்கையானவர் கிடையாது. 1970களின் பிற்பகுதியில் ஆயுத இயக்கமொன்றை கட்டியெழுப்பினாலும் அதை விளம்பரப்படுத்த அவர் விரும்பவில்லை. மற்றைய இயக்கங்கள் தங்களின் பெயர்களை அறிக்கைகளால் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்க, பிரபாகரன் தனது இயக்கத்தை ஆயுத, ஆள் பலத்தால் பலப்படுத்திக் கொண்டிருந்தார்.

1972இல் புதிய தமிழ் புலிகளை ஆரம்பித்தாலும், (இடையில் -1975 விடுதலைப்புலிகளாக மாறியது) 1981இல்தான் முதலாவது தாக்குதலை நடத்தினார். கவிஞர் காசியானந்தன் ஒரு குறுங்கவிதை எழுதியிருந்தார். சிறகு விரி, பிறகு சிரி என. அதுதான் பிரபாகரனின் உத்தி.

1992இல் ஏவுகணை வாங்கப்பட்டாலும் 1995இல்தான் முதலாவது தாக்குதல் நடத்தினார்கள். அதை பாவிக்க வேண்டிய இராணுவச்சூழல் வரும்போது பாவிப்பதுதான் சிறந்தது என நினைத்தார்கள். இயக்கங்களிடம் ஏவுகணை செல்வதை தடுக்கும் முயற்சியை வல்லரசுகள் அப்பொழுது ஆரம்பித்திருந்தார்கள். எடுத்த எடுப்பிலேயே ஏவுகணையை பாவித்து, புலிகளிடம் ஏவுகணை இருக்கிறதென்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, புலிகளின் ஆயுத வலையமைப்பின் மீது சர்வதேச புலனாய்வு அமைப்புக்களின் கவனத்தை குவிக்க புலிகள் விரும்பவில்லை.

 

1992இன் இறுதிக்காலத்திலேயே உக்ரேனில் வாங்கிய ஏவுகணைகள் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்துவிட்டன. இந்த ஏவுகணைகளை வாங்கியபோது அதற்கான பயிற்சியை வழங்க, உக்ரேனிய கொமாண்டோக்கள் இருவரை அனுப்புவதாகத்தான் பேச்சு.

இந்த இடத்தில் வாசகர்களிற்கு ஒரு சந்தேகம் வரலாம். உக்ரேனில் பல ஆயுத தொழிற்சாலைகள் இருந்தன. புலிகள் மட்டுமல்ல, உலகின் பல இயக்கங்களும் அவர்களிடம் ஆயுதம் வாங்குவார்கள். எல்லா இயக்கங்களும்- “உங்களிடம் நாம் ஆயுதம் வாங்குவதென்றால், உங்கள் ஆட்களை அனுப்பி பயிற்சி தர வேண்டும்“ என நிபந்தனை வைத்தால், உக்ரேனிய ஆயுத தொழிற்சாலை முதலாளிகள் என்ன செய்வார்கள்? அவர்கள் ஆயுதம் விற்பார்களா, அல்லது பயிற்சி முகாம் நடத்துவார்களா? பயிற்சி பெற்ற இராணுவத்திற்கு அவர்கள் எங்கே போவார்கள்?

வாசகர்களின் இந்த சந்தேகம் நியாயமானதுதான்.

உலகெங்கும் இல்லாத ஒரு நடைமுறையும், வாய்ப்பும் உக்ரேனில் மட்டுமிருந்தது.

சோவியத் ஒன்றியம் உடைந்ததும், உக்ரேனிய ஆயுத தொழிற்சாலைகள் அந்த நாட்டு இராணுவ தளபதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை முன்னரே சொல்லியிருந்தோம். 90களின் முதல் சில ஆண்டுகள் உக்ரேனிய இராணுவமும் சின்னாபின்னமாகியிருந்தது. தளபதிகள் நினைத்தபடி இராணுவ வீரர்களை கையாண்டனர். பொருளாதார நெருக்கடி வேறு. இராணுவத்தில் ஆட்குறைப்பு நடந்தது. இராணுவ சேவையிலிருந்து ஏராளம் சிப்பாய்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

 

அவர்களிற்கும் பொருளாதார நெருக்கடி இருக்கும்தானே. வீட்டுக்கு அனுப்பப்பட்ட சிப்பாய்களின் முதலாவது தெரிவு- தளபதிகளால் நடத்தப்படும் ஆயுத தொழிற்சாலைகளில் பணியாற்றுவது. அல்லது, தளபதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கும் வேலையை செய்வது.

அப்படி தளபதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கும் வேலைகளில் ஒன்றுதான்- தாங்கள் ஆயுதம் விற்கும் அமைப்புக்களிற்கு பயிற்சியளிப்பது!

அவர்களிற்கான சம்பளத்தை, அந்தந்த அமைப்புக்களே வழங்கி விட வேண்டும்.

புலிகள் கோரியபடியே, இரண்டு உக்ரேனிய முன்னாள் இராணுவ வீரர்களை, புலிகளிற்கு ஆயுதம் வழங்கிய ஆயுத தொழிற்சாலை உரிமையாளரான இராணுவ அதிகாரி அனுப்பி வைத்தார்.

ஆனால் அவர்கள் ஏவுகணையுடன் வரவில்லை. ஏவுகணைகள் வந்ததன் பின்னரே- 1993 இன் இறுதியில்- வந்தனர். அவர்கள் வந்தது கடல்வழியாக.

அவர்கள்தான் புலிகளிற்கு ஏவுகணை பயிற்சியை வழங்கினார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உக்ரேனியர்கள் இருவர் விடுதலைப்புலிகளிற்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்தது, அப்போது புலிகளில் இருந்த பலருக்கே தெரியாது!

புலிகள் தங்கள் அமைப்பிற்குள்ளேயே இரகசியமாக பல விசயங்களை செய்வார்கள். அமைப்பிற்குள்ளேயே மற்றவர்களிற்கு தெரியாமல் இரகசியமாக இந்த விசயங்களை எப்படி செய்யலாம்? போராளிகள் மற்றவர்களுடன் பேசும்போது விசயத்தை லீக் செய்து விடுவார்கள் அல்லவா என யாரும் யோசிக்கலாம்.

1992 இல் தொடங்கி, யுத்தத்தின் 2007 வரை புலிகள் இப்படியான நடவடிக்கைகளை அமைப்பிற்குள்ளேயே கச்சிதமாக செய்து வந்தார்கள். பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணிகளாக இருந்த இம்ரான்- பாண்டியன் படையணி, பின்னர் ராதா வான்காப்பு படையணிகளை பாவித்து இப்படியான விசயங்களை செய்தனர்.

அதற்கு சில உதாரணங்களை சொல்லலாம்.

Col-Raju-36-300x216.jpg சிறுத்தை படையணியின் தளபதி ராயு- பிரபாகரன் (சிறுத்தை படையணியின் சீருடையுடன்)

புலிகள் வெளிநாட்டிலிருந்து புதிய ஆயுதங்களை இறக்குகிறார்கள் என வையுங்கள். அந்த ஆயுதத்தின் விபரம் மிகமிக இரகசியமாக இருக்க வேண்டும். அதனால் மேற்படி படையணிகளிற்குள்ளேயே அந்த ஆயுதத்திற்கான படையணியை உருவாக்குவார்கள். புலிகள் முதன்முதலில் ஈழ யுத்தத்தில் அறிமுகப்படுத்திய s.p.g 9> Auto dongan> பல்குழல் பீரங்கி எல்லாவற்றையும் இப்படித்தான் பாவித்தார்கள். புலிகள் 1997 இல் Auto dongan பயன்படுத்த தொடங்கினார்கள். 2000 இல் தனங்கிளப்பு முனையில் புலிகளிடமிருந்து ஒரு Auto dongan ஐ இராணுவம் கைப்பற்றும்வரை அப்படியொரு ஆயுதம் இராணுவத்திடம் இருக்கவேயில்லை. இராணுவத்திடம் சிக்கிய பின்னரே, அநத ஆயுதத்தை மற்றைய தாக்குதல் படையணிகளிடம் பாவனைக்கு வழங்கப்பட்டது.

இம்ரான்- பாண்டியன் படையணி, ராதா படையணிகளின் கறாரான கட்டுப்பாடுகளால் அமைப்பிற்குள்ளேயே தகவல் கசியாமல் இருந்தது.

 

1993ம் ஆண்டு, பளையில் leema 7 என்ற  பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்டிருந்த சிறுத்தைப்படையணி என்ற பிரிவிற்கு பயிற்சியளிக்க அந்த முகாம் அமைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளால் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட படைப்பிரிவு சிறுத்தை. இராணுவ, தற்காப்பு, மல்யுத்த, கடல் பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்பட்ட ஒரு கொமாண்டோ படையணியாக உருவாக்கப்பட்டது. அதாவது, அமெரிக்காவின் மரைன் படையணியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. ஆனால், புலிகளின் முயற்சியில் தோல்வியடைந்த ஒரேயொரு படையணி- சிறுத்தைப்படையணி என்ற எதிர்மறை வரலாறு பின்னாளில் உருவானது.

சிறுத்தை படையணி தொடர்பான விபரங்களை அடுத்தடுத்த பாகங்களில் விரிவாக தருகிறோம். இப்போது, விசயத்திற்கு வருகிறோம்.

leema 7 முகாம் இந்த கொமாண்டோ பயிற்சிகளிற்கு உரிய முகாமாக அமைக்கப்பட்டது. சர்வதேச அளவிலான தற்காப்பு, மல்யுத்த போட்டிகளை நடத்தும் விதமான அரங்குகளும் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க இராணுவத்தின் மரைன் பயிற்சி தளமொன்றிற்கு அண்மித்த வசதிகளுடன் 1993 இலேயே அமைக்கப்பட்டு விட்டது!

புலிகளிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை பயிற்சியளிக்க வந்த இண்டு உக்ரேனியர்களில் ஒருவர், கொமாண்டோ பயிற்சியளிப்பதிலும் தேர்ந்தவர். அதனால், அவரை அந்த முகாமில் சிறுத்தை படையணிக்கு பயிற்சியளிக்க நியமிக்கப்பட்டிருந்தார்.

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0% அமெரிக்க மரைன் பயிற்சி முகாம்

அவர் சில மாதங்கள்தான் பயிற்சியளித்திருப்பார். அவரும் சராசரி மனிதர்தானே. மனித உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வாழ்ந்தவர்கள் அல்ல. புலிகளுடன் பணியாற்ற வந்தபின் சில கட்டுப்பாடுகளுடன்தான் வாழலாம். அது உக்ரேனியரால் முடியவில்லை. திடீரென ஒருநாள் குண்டைத் தூக்கிப் போட்டார்.

தான் தனித்து வாழ்வதால் தொடர்ந்து இங்கு இருக்க முடியாது, தொடர்ந்து தங்கி பயிற்சி வழங்குவதெனில் தனக்கு ஒரு பெண்ணின் துணை தேவையென்றார். அதாவது அவருக்கு பாலியல் உறவு ஏற்பாட்டையும் புலிகள் செய்து கொடுக்க வேண்டுமாம். இதெல்லாம் புலிகளிற்கு சரிப்பட்டு வராதே. அவரை மூட்டை கட்டி உக்ரேனுக்கே அனுப்பி விட்டார்கள்.

அதன்பின்னர், அடுத்தடுத்த மாதமே நான்கு உக்ரேனிய கொமாண்டோ பயிற்சியாளர்களை புலிகள் அழைத்து வந்து சிறுத்தை படையணிக்கு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தனர். மூன்று ஆண்கள் பயிற்சியாளர்கள். அவர்களிற்கு ஆங்கிலம் வராது. அவர்கள் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, உக்ரேனிய இராணுவத்திலிருந்த இளம்பெண்ணொருவரும் வந்திருந்தார்.

 

இந்த சமயத்தில் உதிரியாக இன்னொரு தகவலையும் குறிப்பிட்டு விடுகிறோம்.

சிம்பாவேயில் இருந்து 1997 மே மாத இறுதியில் சிம்பாவேயில் இருந்து இலங்கையரசு கொள்வனவு செய்த 32,400 82 மி.மீ எறிகணைகளை ஏற்றியபடி புறப்பட்ட கப்பல் திடீரென காணாமல் போய்விட்டது. கப்பல் இலங்கைக்கும் வந்து சேரவில்லை. எந்த சர்வதேச துறைமுகங்களிலும் பின்னர் காணக்கிடைக்கவில்லை. கப்பலிற்கு என்ன நடந்தது? மூழ்கியதா… யாரும் கடத்தினார்களா என இலங்கையரசு தலையை பிய்த்துக் கொண்டிருக்க..

வன்னியில் ஒரு மாற்றம் தெரிந்தது. அப்பொழுதுதான் இலங்கை ராணுவம் வன்னியில் ஜெயசிக்குறு படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர். புலிகளை சுலபமாக வீழ்த்தலாமென நினைத்துக்கொண்டு படையினர், முன்னேற ஆரம்பிக்க, அவர்களின் மீது மழைபோல 81 மி.மீ எறிகணைகள் விழத் தொடங்கின.

அதன் பின்னர்தான் அரசுக்கு பொறி தட்டியது. அரசுக்கு பொறி தட்டிய சமயத்தில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு ஒரு தொலைநகல் வந்தது. ‘சிம்பாவேயில் இருந்து புறப்பட்ட ஆயுதக்கப்பலை நாங்கள்தான் கடத்தினோம்’ என்பதே செய்தியின் சாரம்.

எப்படி புலிகள் கடத்தினார்கள்? சோமாலியா கடற்கொள்ளையர்கள் பாணியில், கறுப்பு துணிகளால் முகத்தை மூடிக்கட்டிக்கொண்டு ஆயுதக்கப்பலை நடுக்கடலில் மறித்து எறிகணைகளை கடத்திக்கொண்டு சென்றார்களா?

இதெல்லாம் எம்.ஜி.ஆர் பட கால கடத்தல் முறை. புலிகள் கையாண்டது பக்கா கடத்தல். இது பற்றிய விபரங்களை குறிப்பிடுகிறோம்.

1997இல் இராணுவம் வன்னி நடவடிக்கையை மேற்கொண்டது. நீண்டதூர ஆட்லறிகளை விட, களத்தில் உடனடியாக நகர்த்தி செல்லும் சிறிய மோட்டார்கள்தான் காட்டு சண்டைக்கு உகந்தது என இராணுவம் நினைத்தது. வன்னி சண்டையை விரைவில் முடிக்க பெருமளவு பணத்தை ஒதுக்க அரசும் தயாராக இருந்தது. பாதுகாப்பு அமைச்சு 81 மி.மீ எறிகணைகளிற்கு கேள்விகோரல் செய்தது.

சிம்பாவேயில்  Zimbabwe Defence Industries (ZDI) என்nறாரு ஆயுத தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. சிம்பாவே அரசு இயக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் விலைப்பட்டியல் மற்றைய விலைப்பட்டியல்களை விட குறைவாக இருந்தது. இந்த நிறுவனத்திடமே எறிகணைகளை வாங்குவதென அரசு தீர்மானித்தது.

3 மில்லியன் அமெரிக்க டொலர் (அப்போதைய இலங்கை பெறுமதி 177 மில்லியன்) பெறுமதியான ஆயுத ஒப்பந்தம் அது. 1997 ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த பெறுமதி தனியே எறிகணைகளிற்குரியதல்ல. ஆயுதங்களை இலங்கையில் சேர்ப்பதும் இதில்தான் அடக்கம். இலங்கைக்கு வந்த நிறுவன தலைவர் கேணல் டுட்  ஒப்பந்தம் செய்துவிட்டு திரும்பினார். ஒரு மாதத்தில் இலங்கைக்கு ஆயுதம் அனுப்ப வேண்டுமென்பது ஒப்பந்த விதி.

சிம்பாவேயில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கொண்டு செல்ல, கப்பல் நிறுவனமொன்றை குத்தகைக்கு அமர்த்துவதற்காக சிம்பாவே நிறுவனம் கேள்வி கோரல் செய்தது.

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0% புலிகளின் பல்குழல் பீரங்கி- இராணுவம் கைப்பற்றிய பின்னர் (2009)

இந்த இடத்தில் பொதுவான ஆயுத விநியோக நடைமுறையொன்றை சொல்ல வேண்டும். கப்பலில் ஆயுதங்களை ஏற்றியிறக்க வேண்டுமெனில், அதற்காக பதிவுசெய்யப்பட்ட கப்பல்களைதான் பாவிக்க வேண்டும். ஆயுதம் ஏற்றும் கப்பல்கள் காப்புறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த காப்புறுதியின் ஒரு குறிப்பிட்ட வீத பணம், ஒவ்வொரு பயணத்தின்போதும் கட்டணத்துடன் மேலதிகமாக இணைக்கப்படும். சாதாரண சரக்கை ஒரு இடத்திலிருந்து கொண்டு வருவதற்கு ஆகும் செலவை விட, ஆயுதங்களை கொண்டு வருவதற்கு ஆகும் செலவு அதிகம். விபத்துக்களால் கப்பலிற்கோ, பணியாளர்களிற்கோ ஆபத்து நேரலாம் என்பதால்தான் இந்த காப்புறுதி திட்டம்.

கிரேகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றும் விலைமனு சமர்ப்பித்தது. அவர்கள் குறிப்பிட்டிருந்தது மிக குறைந்த பெறுமதி. சிம்பாவே நிறுவனம் அதிக இலாபம் வைப்பதற்காக அந்த நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் Stillus Limmasul என்ற கப்பல்தான் ஆயுதம் ஏற்ற வந்தது.

சிம்பாவேயில் இருந்து பாரிய லொறிகளில் மொசாம்பிக் எல்லையிலுள்ள Port of Beira துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. 12 கொள்களன்களில் 32,400 எறிகணைகள் Stillus Limmasul கப்பலில் ஏற்றப்பட்டன. மே 24ம் திகதி அந்த துறைமுகத்தை விட்டு கப்பல் புறப்பட்டது. புறப்படும்போது சிம்பாவேகாரர்களை பார்த்து கப்பலில் இருந்தவர்கள் நன்றாக கைகாட்டியிருக்க வேண்டும். நல்லவேளையாக காதில் ஏதாவது பூவை வைக்கவில்லை. அப்படி வைத்திருந்தாலும் சிம்பாவேகாரர்கள் கோபித்திருக்க தேவையில்லை. ஏனெனில் செய்தவேலையே அதுதானே.

ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரில் விண்ணப்பித்து அந்த எறிகணைகளை ஏற்றியது விடுதலைப்புலிகள்! புறப்பட்ட கப்பல் ஒன்றரை மாதத்தில் முல்லைத்தீவில் ஆயுதங்களை இறக்கிவிட்டு சென்றுவிட்டது.

ஒரு மாதமாகியும் பொருட்கள் வரவில்லையென்றதும், இலங்கையிலிருந்து சிம்பாவே ஆயுத நிறுவனத்தை தொடர்புகொள்ள, “புறப்பட்டு விட்டார்கள். வந்துவிடுவார்கள்“ என்ற பாணியில் பதிலளித்து கொண்டிருந்தார்கள். இரண்டு மாதமாகியும் காணவில்லையென்ற பின்னர்தான், இலங்கை அரசு எச்சரிக்கையாகி விழித்துக்கொண்டது. என்ன நடந்ததென விசாரிக்க… அதற்குள் அத்தனை எறிகணையும் புலிகளிடம் சென்று சேர்ந்து விட்டது.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/28992/

 

Share this post


Link to post
Share on other sites

பிரபாகரனிற்கு கே.பி எழுதிய உருக்கமான கடிதம்… நிக்கோபர் தீவிற்கு செல்ல புது ஐடியா போட்ட கடற்புலி தளபதி!

December 29, 2018
kp.jpg

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 48

பீஷ்மர்

விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஏன் தொடர்ச்சியாக மூழ்கடிக்கப்பட்டன? இலங்கை அரசாங்கம் அவற்றை எப்படி துல்லியமான குறிவைத்தன? அதுவரை இலங்கை கடற்படையால் குறிவைக்கவே முடியாமலிருந்த புலிகளின் கப்பல்களை, 2006 இல் இருந்து எப்படி தாக்கியழிக்க முடிந்தது? புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்றுகூட 2006 இன் பின்னர் முல்லைத்தீவுக்கு வரவில்லையென கூறப்படுகிறதே, அது உண்மையா?

இந்த கேள்விகளிற்கு பதில் தெரிய வேண்டுமெனில் முதலில் புலிகளின் ஆயுதக்கடத்தல் கட்டமைப்பின் ஆரம்பத்திலிருந்து சில விடயங்களை சொல்ல வேண்டும்.

கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் எப்படி புலிகளின் ஆயுதக்கடத்தல் வலையமைப்பை உருவாக்கினார் என்பதை ஏற்கனவே விபரமாக குறிப்பிட்டிருக்கிறோம். இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் வரதா பாய் என்கிற வரதராஜ முதலியார் ஊடான தொடர்புகளால் ஆப்கான் சென்றது, பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றது, தென்னாசியாவை மையமாக வைத்து கே.பி புலிகளின் மெகா ஆயுதக்கடத்தல் வலையமைப்பை உருவாக்கியது பற்றியெல்லாம் குறிப்பிட்டிருந்தோம்.

தாய்லாந்து, மியன்மார் (முன்னைய பர்மா), கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளைதான் கே.பி தளமாக வைத்திருந்தார். அதிலும் மியன்மாரும், தாய்லாந்தும் அவரது பிறந்த வீட்டைப்போல. இரண்டு நாடுகளின் அரசுமட்டத்தில் புலிளிற்கு நல்ல தொடர்பிருந்தது. குறிப்பாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் புலிகளுடன் நல்ல தொடர்பில் இருந்தனர். மியன்மாரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களும் புலிகளிற்கு கிடைத்துள்ளன என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

 

மியன்மாரும் புலிகளும் எவ்வளவு நெருக்கமாக  இருந்தார்கள் என்பதை புரிய வைக்க ஒரு சம்பவம் சொல்கிறோம்.

2005 காலப்பகுதியில் மியன்மாரில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசம்தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது. மியன்மாரில் நடக்கும் பிரச்சனைகளை வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைப்பதில் இராணுவ ஆட்சியாளர்கள் கில்லாடிகள். ஆனால், தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதால் இந்திய தமிழ் ஊடகங்களின் வழியாக தமிழர்கள் மத்தியில் இந்த செய்தி பரவலடைய தொடங்கியது. அது அப்படியே இலங்கைத்ததமிழ் ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டது.

அங்குள்ள தமிழர்களின் நிலைமை இந்த செய்திகள் வழியாக வெளியாகாமல் தடுக்க இராணுவ ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். உடனே புலிகளிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினார்கள். எப்படியாவது இந்த செய்தியை இனிமேல் வெளியாகாமல் செய்துவிடுங்கள் என அதில் கேட்கப்பட்டிருந்தது. உடனே தமிழ் ஊடகங்களிற்கு புலிகளின் மெசேஜ் போகவேண்டிய விதத்தில் போனது. அவ்வளவுதான். மொத்த தமிழ் ஊடகங்களும் மியன்மார் வெள்ளத்தை மறந்து விட்டன.

 

தாய்லாந்து ஆட்சியாளர்களுடன் புலிகளிற்கு இவ்வளவு தொடர்பு கிடையாது. அங்கு கே.பியின் தனிப்பட்ட தொடர்புகளே இருந்தன. அங்குள்ள முக்கியமான மூன்று புலனாய்வு அமைப்புக்களுடனும் கே.பி எப்படியான உறவை பேணி, ஆயுதங்களை வாங்கிக்கொண்டிருந்தார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். முக்கிய புலனாய்வு அமைப்புக்களுடன் உறவிலிருந்தால் பிறகெதற்கு பயப்பிட வேண்டும்? அரச உயர்மட்டத்தில் என்ன திட்டம் தீட்டப்பட்டாலும், மறுநொடி கே.பியின் காதிற்கு விலாவாரியாக அனைத்து விபரங்களும் வந்துவிடும்.

இதைவிட, தாய்லாந்து இன்னொரு விதத்தில் கே.பிக்கு ஸ்பெஷல். அதுதான் அவரது மாமியார் நாடு. கே.பி திருமணம் செய்தது ஒரு தாய்லாந்து பெண்ணை. அது காதல் கல்யாணம். அவர்களிற்கு ஒரு மகள் இருக்கிறார். அங்குள்ள பல்கலைகழகத்தில் படித்து, இப்பொழுது வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்.

ஆயுதக்கடத்தல், தாய்லாந்தில் பழங்கள் பொதியிடும் தொழிற்சாலை, உக்ரேனில் ஆயுத தொழிற்சாலை, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் என உலகத்தின் மிகப்பெரிய கடத்தல் வலையமைப்பை நிர்வகித்து கொண்டிருந்தவர் கே.பி. இந்தகாலப்பகுதியில் ஆபிரிக்காவின் மிகப்பெரிய கடத்தல்காரர்களையும் புலிகளின் ஆயுத தரகர்கள் சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஆபிரிக்காவில் சொந்தமாக துறைமுகம் வைத்துள்ள மெகா கடத்தல்காரரே இருக்கிறார். கடத்தல் உலகத்தில் நம்பர் 1 ஆட்கள் புலிகள்தான் என்று இவர்கள் எல்லோரும் ஒத்துகொண்டுள்ளனர்.

இந்த கடத்தல் உலகமென்பது வித்தியாசமான உலகம். எச்சரிக்கையுணர்வு, புத்திகூர்மை, எதிராளிகளின் நகர்வுகளை கணக்கிட்டு முன்னரே மாற்று உத்திகள் வைத்திருப்பது, சந்துபொந்துகளிற்குள்ளால் நுழைய தினம்தினம் புதிய மார்க்கங்களை உருவாக்கல், தட்டி பேசுவது தொடக்கம் “தட்டுவது“ வரை கையாள வேண்டிய உத்தியை பாவித்து எதிராளிகளை மடக்குவதென ஒரு சகலகலா வல்லவனால்தான் இந்த வலையமைப்பை இயக்க முடியும். கே.பியால் அது முடிந்தது.

1998 ஆம் ஆண்டு வரை சர்வதேச கடலில் சஞ்சரிக்கும் ஆயுதகப்பல்களில் பொதுமக்களே பணியாற்றினார்கள். 1998 இல் இந்த பணிக்காக போராளிகளை அனுப்ப தொடங்கி, 2000 ஆம் ஆண்டில் புலிகளின் அனைத்து ஆயுதக்கப்பல்களையும் போராளிகளே இயக்கினார்கள். இது புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பில் முதலாவது குழப்பத்தை ஏற்படுத்தியது. கப்பலும், திட்டங்களும் கே.பியுடையவை. போராளிகள் சூசையின் ஆட்கள்.

கப்பலிற்கு அனுப்பப்பட்டவர்கள் அனேகர் சூசையின் மிக நம்பிக்கைக்குரியவர். அவர்கள் கே.பிக்கு அவ்வளவாக விசுவாசம் காட்டவில்லை. சூசையின் கட்டளைக்குத்தான் கீழ்ப்படிவார்கள். இதனால் அடிக்கடி சில குழப்பங்கள் ஏற்படுவது, இரு தரப்பும் பேசி தீர்ப்பதென காலம் ஓடிக்கொண்டிருந்தது. 2000 ஆம் ஆண்டில் கே.பி கடல்வழியாக முல்லைத்தீவிற்கு வந்து பிரபாகரனை சந்தித்து விட்டு சென்றார். இந்த சந்திப்பிலும் இரண்டு கட்டளை மையங்களால் ஏற்படும் குழப்பங்கள் பற்றி கே.பி முறையிட்டிருந்தார். அப்பொழுது சூசையையும் அழைத்து பேசி, இணக்கமாக செயற்படும் ஆலோசனையை பிரபாகரன் வழங்கியிருந்தார்.

 

ஆனால், அதே பிரபாகரன் இரண்டு வருடங்களின் பின்னர்- 2002 இல் கே.பியை வெளிநாட்டு பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கினார்?

அப்பொழுது புலிகளின் நிதி விவகாரங்களிற்கு பொறுப்பாக தமிழேந்தி அப்பா இருந்தார். அவர் நிதி விடயத்தில் எவ்வளவு இறுக்கமானவர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். ஒரு ரூபாய் கணக்கென்றாலும் நூறு முறை கணக்கு பார்ப்பவர். அவ்வளவு இறுக்கமாக  இருந்ததால்தான் பொருளாதார தடைகளின் மத்தியிலும் புலிகளால் தாக்குபிடிக்க முடிந்தது.

கே.பியின் நிதி விவகாரங்கள் தனியானவை. கே.பியால் மட்டுமே அது கையாளப்பட்டு வந்தது. இந்த தொடரில் ஆயுத கடத்தல் பற்றிய விடயங்களை பேசத்தொடங்கிய சமயத்தில், ஆயுதக்கடத்தல் உலகத்தில் உள்ள ஏமாற்றுக்காரர்களை பற்றி குறிப்பிட்டிருந்தோம். ஏமாற்றுக்காரர்களை பற்றி முதலில் ஏன் குறிப்பிட்டோம் என்றால்- ஆயுதக்கடத்தல் உலகத்தில் இயங்குவதென்றால் எவ்வளவு பெருந்தொகை பணம் அவசியம் என்பதை புரியவைக்கவே. சிலருக்கு கொடுத்த பணம், கோயில் உண்டியலில் போட்டதாகவே முடியும். மொத்தத்தில் பெரும்தொகை பணம் கையாளப்படும் உலகம் அது.

கே.பி கையாள்வது அளவிற்கு அதிகமான பணம், இவ்வளவு பணம் அவரிற்கு தேவையில்லையென தமிழேந்தி நினைத்தார். கே.பி தனது தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு பெருமளவு பணத்தை மாற்றி, சொத்து சேர்க்கிறார் என்பது தமிழேந்தியின் குற்றச்சாட்டு. சூசை, கஸ்ரோ, பொட்டம்மான் போன்றவர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். ஆயுதக்கடத்தல் உலகத்தின் நிச்சயமற்ற தன்மையை பயன்படுத்தி கே.பி அளவிற்கதிகமான பணத்தை கையாண்டுமிருக்கலாம். ஆனால் கே.பியில் கைவைக்க முன்னர் அவருக்கு மாற்றான ஏற்பாடு இருக்கிறதா என்பதை புலிகள் சரியாக கவனிக்கவில்லை.

கே.பியின் தொடர்பு இல்லாமல் தமது ஆட்களாலேயே ஆயுதங்களை கொண்டு வரலாமென சூசையும் பிரபாகரனிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். தரகர்களிடம் பேசி ஆயுதபேரத்தை முடிப்பது மட்டும்தானே கே.பியின் வேலை, அதை யாராவது செய்தால் மிச்சத்தை தாமே பார்த்துக்கொள்வோம் என சூசை சொல்லியிருந்தார். அப்பொழுது கஸ்ரோ அனைத்துலக தொடர்பக பொறுப்பாளராக இருந்தார்.

1991 ஆனையிறவு சமரில் இடுப்பின் கீழ் உணர்விழந்த நிலையில் இருந்தவர். எப்பொழுதும் படுக்கையில் இருப்பதாலோ என்னவோ அதிகமான கோபம் அவருக்கு வரும். வடமராட்சியை சேர்ந்த கஸ்ரோ ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவன்.

கஸ்ரோவின் கீழ் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பு முழுதாக வந்தது. இப்பொழுது கே.பிக்கு பதிலாக கஸ்ரோ, சூசையின் கூட்டு செயற்பாட்டின் கீழ் புலிகளின் ஆயுத கடத்தல் விவகாரம் முழுமையாக கைமாறியது.

 

கே.பி பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கி, தாய்லாந்தில் இயங்கிய பழம் பொதியிடும் நிறுவனத்தை மட்டும் மேற்பார்வை செய்துகொண்டு இருக்குமாறு பிரபாகரன் அறிவித்தார். இந்த அறிவிப்புடன் புலிகளின் நீண்டகால ஆயுதக்கடத்தல் வலையமைப்பு செயலிழக்க ஆரம்பிக்கிறது.

இந்த அறிவித்தலை தொடர்ந்து கே.பி, பிரபாகரனிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். விடுதலைப்புலிகளின் ஆரம்பகாலத்தில் எப்படி அர்ப்பணிப்பாக செயற்பட்டேன் என்பதை மிக உணர்வுபூர்வமாக எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் கே.பி ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தார். 1970களின் இறுதியில் புலிகள் துப்பாக்கி வாங்க முயன்றபோது கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியது. என்ன செய்வதென எல்லோரும் திண்டாடிக்கொண்டிருந்தபோது, வீட்டிலிருந்து மோதிரமொன்றை விற்று கே.பிதான் பணத்தேவையை ஈடுசெய்திருந்தார்.

இந்த சம்பவங்களையெல்லாம் குறிப்பிட்டு, தன்னை ஏன் சந்தேகித்தீர்கள் என உருக்கமாக அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை படித்ததும் பிரபாகரன் நெகிழ்ந்து விட்டார்.

சமாதான உடன்படிக்கை காலத்தின் பிற்பகுதியில் புதுக்குடியிருப்பில் கணினி பிரிவினர் ஒரு முகாம் அமைத்திருந்தனர். புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் சாலையில் இருந்தது. அங்குதான் ஒரு நீச்சல்குளமும் இருந்தது. பிரபாகரன், பாலச்சந்திரன் குளிக்கும் படங்கள் அங்குதான் எடுக்கப்பட்டவை. அந்த சமயத்தில் மாதத்தில் ஒரு சனிக்கிழமை தளபதிகளை அழைத்து, அங்கேயே சமைத்து சாப்பிட்டு, பகல் பொழுதை கழிப்பார் பிரபாகரன். அன்று விசேடமாக ஆடு வெட்டப்பட்டு சமைக்கப்படும். கே.பியின் கடிதம் வந்ததற்கு அடுத்தடுத்த நாளில் வந்த சனிக்கிழமையில், கே.பி பற்றியே பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார். மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டும்தான் பிரபாகரன் நெகிழ்ந்திருக்கிறார். இதில் ஒன்று இந்த சந்தர்ப்பமும். பிரபாகரனின் திருமணத்தில் மாப்பிளை தோழனாக இருந்தவராயிற்றே கே.பி!

இதன்பின், மாதாமாதம் கே.பிக்கு ஒரு தொகை பணம் வழங்க பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார். அந்த சமயத்தில் கே.பி, கப்பலொன்றை கட்டிக்கொண்டிருந்தார். அதற்கான செலவையும் ஈடுகட்ட இந்த பணம் வழங்கப்பட்டது. யுத்தத்தின் முடிவில் கே.பியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறி அரசாங்கம் கொழும்பிற்கு கொண்டு வந்த கப்பல்தான் அது.

கே.பி ஒதுங்கிய பின்னர் அரங்கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் புதியவர்கள் அவர்களிற்கு இந்த உலகத்தின் சூட்சுமம் புரியவில்லை. இந்த உலகத்தில் ஆரம்பத்திலிருந்து வளர்ந்து, அனைத்தையும் தீர்மானிப்பவராக வளர்ந்தால்தான் சிறப்பாக செயற்பட முடியும். சூசை, கஸ்ரோவின் ஆட்கள் அப்படியானவர்கள் அல்ல.

கஸ்ரோ ஆயுதம் வாங்க உபயோகித்தவர்கள் பெரும்பாலும் அங்குள்ள பல்கலைகழகங்களில் படித்த மாணவர்கள், வைத்தியர்கள், நல்ல பொறுப்பில் இருந்தவர்கள்தான்.

18sld11-300x185.jpg திருமண கோலத்தில் பிரபாகரன்

இப்படியான சுவாரஸ்ய சம்பவமொன்றும் உள்ளது. லண்டனை சேர்ந்த மூர்த்தியென்பவர் வைத்தியர். வன்னிக்கு வந்து கஸ்ரோவை சந்தித்துவிட்டு, அமெரிக்காவிற்கு சென்று ஸ்கட் ஏவுகணை வாங்க முயன்றார். இன்றும் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இந்த அனுபவமின்மைகளுடன் இன்னொரு நெருக்கடியை புலிகள் எதிர்கொண்டனர். சூசை, கஸ்ரோவின் ஆட்கள் செயற்பட தொடங்கியதும், கே.பியின் ஆட்கள் பெரும்பாலும் ஒதுங்கிக்கொண்டு விட்டனர். புதியவர்களின் கீழ் செயற்பட அவர்கள் தயாராக இல்லை.

 

2001 இரட்டை கோபுர தாக்குதலின் பின், உலகளாவிய ஆயுத இயக்கங்களிற்கு ஆயுதங்கள் செல்வதை தடுக்கும் நடவடிக்கையை அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவுஅமைப்பு ஆரம்பித்தது. புலிகளின் ஆயுத கடத்தல் வலையமைப்புதான் உலகத்தில் பெரிய வலையமைப்பு என்பதும் சி.ஐ.ஏக்கு தெரியும். முதலில் அதை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. இதன் முதற்கட்டமாக கே.பியிடன் செயற்பட்டுவிட்டு, தற்போது ஒதுங்கியுள்ளவர்களை குறிவைத்தனர். அவர்களை கண்காணிப்பு வலயத்திற்குள் கொண்டு வந்துவிட்டு, தம்முடன் ஒத்துழைக்கா விட்டால் கைது செய்துவிடுவோம் என மிரட்டுவார்கள். ஏற்கனவே புதிய அணியிலுள்ள கோபம், புலனாய்வு அமைப்பின் மிரட்டல் எல்லாம் சேர, சி.ஐ.ஏ அமைப்புக்கு ஒத்துழைத்து செயற்பட ஆரம்பித்தனர்.

பிறகென்ன, ஆயுதக்கடத்தல் வலையமைப்பின் அத்தனை தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருக்க ஆரம்பித்தது சி.ஐ.ஏ!

கஸ்ரோவின் கீழ் ஆயுதக்கடத்தல் விவகாரங்களின் ஒரு பகுதியை கண்காணித்து வந்தவர் ஸ் ரீபன். கஸ்ரோ சம்பந்தமான பகுதிகளை ஸ் ரீபன் கவனித்து வந்தார்.

2006 இல் ஸ் ரீபன் இந்தோனேசியாவில் தங்கியிருந்தார். அவரிடம் இரண்டு பாஸ்போர்ட்டுகள் இருந்தன. ஒன்று இந்தோனேசியா. மற்றையது இங்கிலாந்து. புலிகளின் தளங்களில் இந்தோனேசியாவும் ஒன்று என்பதால், இந்தோனேசிய புலனாய்வாளர்களுடன் சி.ஐ.ஏ அப்பொழுது நெருக்கமான உறவை பேண ஆரம்பித்து விட்டது.

ஒருமுறை இந்தோனேசியாவிலிருந்து ஜேர்மனிக்கு செல்ல புறப்பட்டார் ஸ் ரீபன். விமானநிலையத்திற்கு வந்த ஸ் ரீபனை சாதாரண சந்தேகத்தில் இந்தோனேசிய பொலிசார் ஏதோ விசாரித்தனர். இதை எதிர்பாராத ஸ் ரீபன் தடுமாற்றத்துடன் பதிலளிக்க, சந்தேகம் வலுத்த பொலிசார் அவரை சோதனையிட்டனர். பயணப்பைக்குள் இரண்டு பாஸ்போர்ட்கள் இருந்தன. இரண்டு பாஸ்போர்ட் இருந்ததால் சந்தேகம் வலுத்து, ஸ் ரீபனின் உடமைகளை சோதிக்க, ஒரு லப்ரொப் கணினி இருந்தது. அதை திறக்க, இந்தோனேசிய பொலிசார் மயக்கம் போட்டு விழாத குறையாக அதிர்ந்து விட்டனர்.

அவர்கள் பலநாள் தேடிய விபரங்கள் அதில் இருந்தன. கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பார்களே… அப்படி. புலிகளின் ஆயுதக்கடத்தல் விபரங்கள் சில அதில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது!

இந்த தகவல் சி.ஐ.ஏக்கு செல்ல, அவர்கள்இந்தேனோசியாவிற்கு வந்து ஸ் ரீபனை அள்ளிக்கொண்டு அமெரிக்காவிற்கு சென்றனர். கிட்டத்தட்ட இரண்டு மாதகாலம் சி.ஐ.ஏ யின் கட்டுப்பாட்டில் ஸ் ரீபன் இருந்தார். இந்த விடயத்தை மிக இரகசியமாக இந்தோனேசிய, அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் வைத்திருந்தன. ஸ் ரீபன் கைதானது, அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவது எதுவுமே புலிகளிற்கு தெரிந்திருக்கவில்லை. திடீரென அவருடைய தொடர்பு இல்லாமல் போய்விட்டது, என்ன நடந்திருக்கும் என்றுதான் யோசித்தார்களே தவிர, சி.ஐ.ஏ கைது செய்திருக்கும் என்று சந்தேகிக்கவில்லை. ஸ் ரீபனை கைது செய்து விசாரித்ததில் கிடைத்த தகவல்களை கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் எதையாவது செய்து புலிகளை எச்சரிக்கையடைய வைக்ககும் நடவடிக்கையெதிலும் அமெரிக்க இறங்கவில்லை. இதனால் புலிகள் அந்த கோணத்தில் சிந்திக்கவுமில்லை.

ஸ் ரீபன் ஊடாக கிடைத்த தகவல்கள், கே.பியின் முன்னாள் செயற்பாட்டாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் மூலம் புலிகளின் ஆயுதக்கடத்தல் செயற்பாட்டை அமெரிக்க முழுமையாக அறிந்தது. இரண்டு தரப்பிலிருந்தும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கப்பல்களை அடையாளம் கண்டனர். கப்பல்களின் நடமாட்டத்தை அறிய, ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய கருவிகளை கப்பலில் இரகசிய ஏஜெண்டுகளை வைத்து சி.ஐ.ஏ பொருத்தியதாகவும் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பிலிருந்தவர்களிடம் இன்றும் ஒரு கருத்து உள்ளது. அதற்கான வாய்ப்பு உள்ளதென்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அதற்கு ஆதாரம் கிடையாது.

18555859_10155292098764054_3850349610381 கஸ்ரோ

அதேவேளை, கப்பல் நடமாட்டத்தை இரகசிய கருவிகள் பொருத்தித்தான் கண்காணிக்க வேண்டுமென்ற அவசியம் அமெரிக்காவிற்கு இருக்கவில்லை. ஒருமுறை கப்பலின் தரிப்பிடத்தை அடையாளம் கண்டுகொண்டால், பின்னர் செய்மதி வழியாக அதன் அத்தனை நகர்வையும் துல்லியமாக கண்காணித்து கொண்டிருக்கலாம்.

கே.பியின் ஆட்கள் மாறி, கஸ்ரோவின் ஆட்கள் வந்தாலும் ஆயுத பேரம், பணகொடுக்கல் வாங்கல், மற்றும் கப்பல்களின் பதிவு விடயங்கள் அனைத்தும் மாற்றப்படவில்லை. இவர்கள் மூலம் சர்வதேச செயற்பாடுகளில் என்ன நடக்கிறதென்ற அப்டேற்றை கே.பியின் ஆட்கள் பெற்றுக்கொண்டிருந்தார்கள். கே.பியின் ஆட்களில் சிலரை ஆரம்பத்தில் சி.ஐ.ஏ இரகசியமாக கடத்தியுமிருந்தது. அவர்களை கொல்வது அல்லது சிறைவைப்பது சி.ஐ.ஏயின் திட்டமல்ல.

கே.பியிடமிருந்த பொறுப்புக்கள் கஸ்ரோவிற்கு மாற்றப்பட்டது, கே.பியின் ஆட்கள் பலருக்கு பிடிக்கவில்லை, அதிருப்தியுடன் இருக்கிறார்கள் என்ற விபரத்தை சி.ஐ.ஏ மோப்பம் பிடித்துவிட்டது. இரகசியமாக கடத்திச் செல்லப்பட்டவர்களை விசாரித்து தகவல்களை பெற்று, அவர்களை தமது ஆட்களாக வெளியில் உலாவவிடுவதே சி.ஐ.ஏயின் திட்டம்.

இப்படி சி.ஐ.ஏயின் ஆட்களாக உலாவிய கே.பியின் பழைய ஆட்களின் மூலமும் கப்பல்களை அடையாளம் கண்டிருக்கலாம். எப்படியோ புலிகளின் கப்பல்கள் வரிசையாக தாக்கப்பட்டு கொண்டேயிருந்தன.

எப்படியாவது ஆயுதங்கள் வன்னிக்கு வந்தால்தான் யுத்தத்தை வெல்லலாம். கடற்புலிகளால் ஒன்றும் செய்ய முடியாமலிருக்கிறதென்ற அதிருப்தி இயக்கத்தில் உருவாக தொடங்க, கடற்புலி தளபதி சிறீராமிற்கு ஒரு ஐடியா வந்தது. சிறீராம் யார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்- கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் கணவன்.

நிக்கோபர் கடற்பரப்பிற்கு சிறிய படகுகளில் செல்ல திட்டமிட்டார்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/30142/

Share this post


Link to post
Share on other sites

முகமாலையிலிருந்து புலிகள் பின்வாங்குவதற்கு முதல்நாள் முல்லைத்தீவிற்கு வந்த ஆயுதக்கப்பல் யாருடையது?

January 5, 2019
atta.png

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 49

பீஷ்மர்

கடற்புலிகளினால் முல்லைத்தீவிற்கு ஒரு ஆயுதக்கப்பலையும் கொண்டு வர முடியாமலிருந்தது இயக்கத்திற்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தளபதிகளின் சந்திப்புக்களின் போது, சூசை மௌனமாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் நிக்கோபர் தீவுகளிற்கு செல்லும் யோசனையை சிறீராம் முன்வைத்தார் என்பதை கடந்த வாரம் தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

2002 இற்கு பின்னர் பிரபாகரனில் ஏற்பட்டிருந்த முக்கிய மாற்றமொன்றை பற்றி இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். இயக்கத்தின் முடிவெடுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளித்து, தளபதிகளிடமே அதை விட்டு விட்டார். அதுவரை இயக்கத்தின் அனைத்து முடிவுகளையும் அவர் ஒருவர்தான் எடுத்தார். அந்த முடிவுகளை செயற்படுத்தும் வரை பக்கா இரகசியமாக வைத்திருப்பார். எவ்வளவு பெரிய தளபதியாக இருந்தாலும், அந்த விசயத்துடன் சம்பந்தப்படாதவர் என்றால், சம்பவம் நடக்கும் வரை அவருக்கு ஒன்றுமே தெரியாது.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம். யாழ்ப்பாணத்தில் இருந்து பின்வாங்கி சென்றதன் பின்னர் முல்லைத்தீவு முகாமை தாக்க பிரபாகரன் முடிவெடுத்தார். அதற்காக சாள்ஸ் அன்ரனி, இம்ரான் பாண்டியன், ஜெயந்தன், விக்டர், மாலதி, புலனாய்வுத்துறை, சிறுத்தை படையணிகளில் இருந்து ஆட்களை திரட்டி விசுவமடு, முத்தையன்கட்டு, நெட்டாங்கண்டல் பகுதிகளில் ஒத்திகை பயிற்சி நடந்தது. இந்த தாக்குதலுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட பொட்டம்மான், தீபன், பால்ராஜ், கடாபி, பானு, சூசை, விதுஷா போன்ற முக்கிய தளபதிகளிற்கு மட்டும்தான் விசயம் தெரியும். மற்றவர்கள் இயக்கம் ஏதோ திட்டமிடுகிறது என்றளவில் அறிந்து வைத்திருந்தார்களே தவிர, எங்கே… என்ன நடக்கப் போகிறது என்பதை அறியவில்லை.

Ltte-Piranki-300x260.jpg புலிகளின் பல்குழல் பீரங்கி

தாக்குதலிற்கு மூன்று நாட்களின் முன்னர் அளம்பில், வற்றாப்பளை பகுதிகளில் அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டபோது, அவர்களிற்கான உணவை கொண்டு வந்து கொடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது குட்டியிடம். பின்னாளில் நிதித்துறையின் பாண்டியன் வாணிபத்திற்கு பொறுப்பாக இருந்து, புலிகளிற்கு அதிக வருவாயை ஈட்டிக்கொடுத்தவர் அவர். இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், தாக்குதலிற்காக முல்லைத்தீவு முகாமிற்குள் நுழைய தயாராக இருந்த அணிகளிற்கான இரவு உணவை எடுத்துக்கொண்டு, ரோஸா பஸ் ஒன்றை குட்டியே செலுத்திக் கொண்டு வந்தார். அவ்வளவு இரகசியம் பேணினார்கள்.

பின்னாளில் இந்த தன்மை குறைந்து விட்டது. 2004 இன் பின்னர் வாராந்தம் தளபதிகள் கூட்டம் நடக்க ஆரம்பித்தது. அதில்தான் இயக்கத்தின் நிர்வாக, நடைமுறைரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டன. தளபதிகளிடமே அந்த அதிகாரம் வழங்கப்பட்டு விட்டது. தளபதிகள் கூட்டத்தில் பிரபாகரன் பெரும்பாலும் கலந்துகொள்வார். சமாதான காலத்தின் முன்னரும் இடையிடையே தளபதிகள் கூட்டம் நடக்கும். அன்று பிரபாகரன் வர முடியாவிட்டால் கூட்டம் நடக்காது. ஆனால் 2004 இன் பின்னர் நிலைமை மாறியது. தளபதிகளிடம் பொறுப்பை பகிர்ந்து விட்டு, அதை கண்காணிப்பவராக பிரபாகரன் மாறினார். தளபதிகள் கூட்டத்திற்கு பிரபாகரன் வர முடியாவிட்டாலும், கூட்டம் நடக்கும். அப்போது பொட்டம்மானே கூட்டத்தை தலைமைதாங்கி நடத்துவார். 2003 இன் பின் இயக்கத்தின் அறிவிக்கப்படாத இரண்டாவது தலைவராக பொட்டம்மானே இயங்கினார். புலிகளின் தலைமையில் பின்னர் வந்த மாற்றத்தை இந்த தொடரில் பின்பகுதியில் சொல்கிறோம்.

 

தளபதிகளிடம் பொறுப்பை கொடுத்த பின் பிரபாகரன் ஒதுங்கியிருந்தார், முடிவுகள் கூட்டு முடிவுகளாக இருந்தன என்று சொன்னோம் அல்லவா, அதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. பொட்டம்மானையே உட்கார வைத்து பாடமெடுத்த சம்பவம் அது. அதற்கு முன்னர் கடந்த பாகத்தின் தொடர்ச்சியாக சிறீராம் பற்றி சொல்லிவிடுகிறோம்.

ltte_com01_000-300x257.jpg ஓயாத அலைகள் 01- தளபதி தீபன்

தளபதிகள் சந்திப்பில் ஆளாளுக்கு சூசைக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். இப்படித்தான் அந்த குடைச்சல் இருக்கும். புலிகள் எப்படித்தான் மண் அணை அமைத்தாலும், கடுமையாக சண்டை பிடித்தாலும் மன்னாரில் இராணுவம் முன்னேறுவதை தடுக்க முடியவில்லை. முதலில் தளபதி ஜெயம் மன்னார் களமுனையை கவனித்தார். அவரால் இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லையென, பின்னர் தளபதி பானுவிடம் மன்னார் களமுனை ஒப்படைக்கப்பட்டது. அவராலும் இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை.

இராணுவத்தின் நகர்வை புலிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்- போதுமான எறிகணைகள் கைவசம் இல்லை. இருப்பில் இருந்த கொஞ்ச எறிகணையை ஒவ்வொரு களமுனைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து கொடுத்திருந்தார்கள். அனேகமாக மாதம் 50 செல் என்ற அளவில்தான் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.

 

புலிகள் முன்னர் பிடித்த சண்டைகளில் எறிகணைகளை தாராளமாக பாவித்தார்கள். எந்த இராணுவமாக இருந்தாலும், மழைபோல எறிகணைகள் விழுந்தால் நிலைகுலைந்துவிடும். இராணுவம் முன்னேறி வரும்போது, களத்தில் இருந்து எறிகணை உதவி கேட்பார்கள். ஒவ்வொரு படிநிலையாக அந்த கோரிக்கை கடத்தப்பட்டு, கட்டளைதளபதியிடம் வரும். மோட்டார் அணியை பானுவோ, ஜெயமோ தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட இடத்திற்கு செல் அடிக்குமாறு உத்தரவிடுவார். உண்மையில் உத்தரவிடுவார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் அப்படித்தான் நடக்கும். ஆனால் எறிகணை தட்டுப்பாடு வர, கட்டளைதளபதிகள் உத்தரவிட்டாலும் எறிகணை வராது!

எறிகணை இருந்தால்தானே அடிப்பதற்கு.

தப்பித்தவறி ஒன்றிரண்டு இருந்தாலும், மோட்டார் அல்லது ஆட்லறி படையணியின் அனுமதியெடுத்து விட்டு ஒன்றோ, இரண்டோதான் அடிக்கலாம். இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க இது போதாது.

தளபதிகள் சந்திப்பில், இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியாத விடயம் பேசப்படும்போது, களமுனை தளபதிகள் எறிகணை கேட்பார்கள். ஆயுத இருப்பில் எறிகணை இருக்காது. புதிதாக வந்திறங்கினால்தான் உண்டு. எல்லோரது பார்வையும் சூசையிடம் திரும்பும்.

ஆயுதம் ஏற்றிக்கொண்டு புறப்பட்டாலே கப்பல்கள் அழிக்கப்பட்டு கொண்டிருந்த நெருக்கடியான சமயத்தில், என்ன செய்வதென தெரியாமல் சூசை திண்டாடினார். அந்த சமயத்தில்தான் சிறீராம் நிக்கோபர் தீவுகளிற்கு செல்லும் யோசனையை வைத்தார்.

ananthapuram-05.jpg

சிறீராம் ஏற்கனவே புலிகளின் ராங்கர்களில் (ஆயுத கப்பல்கள்) பொறுப்பாக கூட இருந்தவர். ராங்கர்களிற்கு பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் உயர்மட்ட ஆட்களில்  இப்போது ஒரேயொருவர்தான் உயிரோடு இருக்கிறார். அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கிடைத்து வாழ்கிறார். அவருக்கும் சிறிராமின் யோசனைதான் சாத்தியமென பட்டது. தனது யோசனையை அவரும் சூசையிடம் சொன்னார்.

நிக்கோபர் தீவுகளிற்கு கடற்புலிகளின் விநியோக கப்பல்களில் சென்று, அங்கு வைத்தே ராங்கர்களில் இருந்து ஆயுதங்களை மாற்றிக்கொண்டு வரலாம் என்பது சிறீராமின் திட்டம். அதை தானே பொறுப்பெடுத்து செய்கிறேன் என சூசையிடம் கேட்டார்.

ஆயுதம் ஏற்றிய ராங்கர்கள் முல்லைத்தீவிற்கு வர முடியாத நிலையில், சிறிய விநியோக படகுகளில் நிக்கோபர் கடற்பரப்பில் இருந்து ஆயுதங்களை கொண்டு வருவதுதான் புலிகளிற்கு இருந்த ஒரே வழி. ஆனால் ரிஸ்க் ஆன வேலை. முக்கியமாக பாதுகாப்பு பிரச்சனை. கடற்படை சுலபமாக தாக்கியழிக்கும். இரண்டு, விநியோக படகுகளின் எரிபொருள் தாங்கியின் கொள்ளளவு நிக்கோபர் கடற்பரப்பிற்கு போய்வர போதாது. எரிபொருள் விநியோகத்திற்காக இன்னொரு படகு பாவிக்க வேண்டும். சிலவேளை அந்த படகிற்கு ஏதும் ஆனால்?

எல்லா படகுகளின் நிலைமையும் ஆபத்தாகி விடும். இதைவிட இன்னொரு பெரிய சிக்கலிருந்தது.

11428500_1024842020860461_10965453541999

நிக்கோபர் கடற்பரப்பிற்கும் புலிகளின் ஆயுத ராங்கர்கள் வருமென்பதற்கும் உத்தரவாதமில்லை. ஆயுதங்களுடன் புறப்பட்டாலே ராங்கர்கள் அழிக்கப்பட்டு கொண்டிருந்தன. இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்த சூசை, நிக்கோபர் கடற்பரப்பிற்கு சென்று ஆயுதங்களை கொண்டு வரும் சிறீராமின் திட்டத்தை ஏற்கவில்லை.

2006 இன் பின் வெளிநாட்டிலிருந்து புலிகளிற்கு ஒரு செல் கூட வராமல் தடுத்து விட்டதாக கடற்படை கூறிக்கொண்டிருக்கிறது. அது உண்மையா? புலிகள் முகமாலையை கைவிடுவதற்கு முதல்நாள் முல்லைத்தீவிற்கு வந்த கப்பல் யாருடையது என்பதையும், பிரபாகரன் மிக இரகசியமாக திட்டமிட்ட நடவடிக்கை எதுவென்பதையும் அடுத்த பாத்தில்- நாளை- குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/31147/

 

Share this post


Link to post
Share on other sites

பொட்டம்மானை உட்கார வைத்துவிட்டு ரட்ணம் மாஸ்ரர் மூலம் பிரபாகரன் செய்த ஒப்ரேஷன்

January 6, 2019
%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0% நடேசன்- பிரபாகரன்- ரட்ணம் மாஸ்டர்

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 50

பீஷ்மர்

இந்தப் பாகத்தில் இரண்டு முக்கிய விடயங்களை் பற்றிய தகவல்களை எழுதுவதாக கடந்த பாகங்களில் குறிப்பிட்டிருந்தோம். நான்காம் ஈழ யுத்தம் ஆரம்பித்த பின்னர் கடற்புலிகள் ஒரு ஆயுதக்கப்பலையும் முல்லைத்தீவிற்கு கொண்டு வரவில்லையா என்பது பற்றியும், நான்காம் ஈழ யுத்தத்தில் பிரபாகரன் மிக இரகசியமாக திட்டமிட்ட நடவடிக்கை பற்றியும் இந்த பாகத்தில் தகவல் தருவதாக குறிப்பிட்டிருந்தோம்.

கே.பியிடம் இருந்து சர்வதேச பொறுப்பாளர் என்ற பொறுப்பு பறிக்கப்பட்ட பின்னர் வன்னிக்கு ஆயுதக்கப்பல்கள் வரவில்லையென இன்று ஒரு பிரசாரம் செய்யப்படுகிறது. சூசை, கஸ்ரோவின் ஆட்கள் அனைத்தையும் குழப்பி விட்டார்கள் என்ற அந்த கருத்தை இலங்கை புலனாய்வுத்துறை திட்டமிட்டு பரப்பியது. அதாவது பிரச்சனை சூசையிடமும் கஸ்ரோவிடமுமே தவிர, வேறு எங்கும் இல்லையென்று நம்ப வைக்க இந்த முயற்சி. சி.ஐ.ஏ உள்ளிட்ட வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் இலங்கை புலனாய்வுத்துறையின் நெட்வேர்க்கிற்குள் கே.பியின் ஆட்கள் போய், அவர்களின் மூலம் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அடையாளம் காணப்பட்டதை மறைக்கவே இந்த ஏற்பாடு.

கே.பியிடம் இருந்து பொறுப்புக்கள் மாற்றப்பட்ட பின்னர் புலிகளிற்கு ஆயுதக்கப்பல்கள் வரவில்லையென்பது பிழையான தகவல். 2003 இல் விடுதலைப்புலிகளிற்கு முல்லைத்தீவுக்கு ஆயுதக்கப்பல் வந்தது. கே.பியின் ஆட்களிடமிருந்து சி.ஐ.ஏ முழு தகவலையும் எடுத்தது 2003 இன் இறுதிக்காலத்தில். அதன்பின்னர்தான் ஆயுதக்கப்பல்கள் முல்லைத்தீவிற்கு வரவில்லை.

ஆனால் ஆச்சரியமான ஒரு தகவலை இப்பொழுது சொல்கிறோம், 2009 இல் ஒரு புலிகளிற்கு ஒரு ஆயுதக்கப்பல் வந்தது!

 

2008 டிசம்பர் 31ம் திகதி பரந்தன் சந்தி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. பூநகரியிலிருந்து முன்னேறி வந்த 58வது டிவிசன் படையினரால் பிரதான வீதியால் நகர்ந்து பரந்தன் சந்தியை கைப்பற்ற முடியவில்லை. இராணுவத்தினர் இறுதி யுத்தத்தில் எப்படியான நகர்வுமுறையை கையாண்டார்கள் என்பதை இந்த தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை படித்தவர்களிற்கு தெரிந்திருக்கும்.

புதிய வாசகர்களிற்காக மேலோட்டமாக குறிப்பிடுகிறோம். தண்ணீரின் நகர்வுமுறைதான் இராணுவத்தின் நகர்வுமுறை. கிளிநொச்சியை கைப்பற்ற வேண்டுமெனில் ஆனையிறவில் இருந்து பிரதான வீதியால் முன்னேறுவது இராணுவத்தின் பழைய பாணி. ஜெயசிக்குறு களமுனையில் அப்படியான உத்திகளையே கைக்கொண்டார்கள். ஆனையிறவில் இருந்து கிளிநொச்சியின் அனைத்து முனைகளாலும் முயன்று பார்த்து கிடைக்கின்ற வழியால் உள்நுழைவது புதிய பாணி. தண்ணீர் ஓடிச்செல்லும்போது ஒரே முனையில் செல்வதில்லை. சற்று உயரமான பகுதியெனில் வளைந்து நெளிந்து ஓடிச்சென்று கொண்டிருக்கும். தண்ணீரின் முனைப்பகுதி இப்படி ஓடிச்சென்று கொண்டிருந்தாலும் பின்னர், ஆரம்பத்தில் தண்ணீரின் முனைப்பகுதியால் தவிர்க்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் மூழ்கிவிடும்.

பிரதான வீதியால் பரந்தன் சந்தியை அடைய முடியாதென்பதை தெரிந்ததும், காட்டிற்குள் இறங்கி குடமுருட்டி ஆற்றிற்குள்ளால் நகர்ந்து, பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் ஏ9 வீதியில் இராணுவம் ஏறியது. பரந்தன் சந்தியில் புலிகள் நிலைகொண்டிருந்தனர். பூநகரி பக்கமாகவும், ஏ9 வீதியில் கரடிப்போக்கு பக்கமாகவும் இராணுவத்தினர் ஒரு வளைந்த வடிவத்தில் புலிகளை நெருங்கினர். இறுதியில், புலிகள் பரந்தன் சந்தியிலிருந்து பின்வாங்கினார்கள்.

 

army-map13-289x300.jpgபரந்தன் சந்தி இராணுவத்திடம் வீழ்ந்த பின்னர் முகமாலை புலிகளின் முன்னரணிற்கு தரைவழி தொடர்பு கிடையாது. வடமராட்சி கிழக்கு வழியாக செல்லலாம் என்றாலும் அப்பொழுது கடுமையான மழை பெய்திருந்ததால் சுண்டிக்குளம் தொடுவாய் தண்ணீர் நிரம்பியிருந்தது. சுண்டிக்குளம் தொடுவாயில் படகுகளின் பயணத்தை விமானப்படை தடுத்தால், முகமாலைக்கு சப்ளை இல்லாமல் போகும்.

ஆனால் முகமாலை முன்னரணை யாழ்ப்பாண முனையினால் இராணுவத்தால் உடைக்க முடியாது. பரந்தனில் இருந்து முன்னேறும் இராணுவத்திற்கு ஆனையிறவு வெட்டைவெளியை கடப்பது சிக்கல். இதனால் புலிகள் முகமாலையில் தங்கியிருந்திருக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் புலிகளின் சில தளபதிகளிடம் இருந்தது. ஆனால் முகமாலையில் புலிகள் தங்கியிருந்திருந்தால், பரந்தன் சந்தியிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் விசுவமடுவை அடைந்து சுண்டிக்குளம் வரை சென்று ஒரு பெரிய பெட்டி (box) அடித்திருப்பார்கள். அந்த பெட்டிக்குள் மக்களை கொண்டு செல்வது புலிகளிற்கு சாத்தியமேயில்லை. புதுக்குடியிருப்பு பக்கமே மக்கள் தப்பி செல்வார்கள். புலிகள் மட்டும் முகமாலைக்குள் நின்றிருந்தால் யுத்தம் பெப்ரவரி அல்லது மார்ச் தொடக்கத்திற்குள் முடிந்திருக்கும்.

 

முகமாலைக்குள் ஒரு அணியை விட்டுவிட்டு, இன்னொரு அணியை மக்களுடன் சேர்ந்து புதுக்குடியிருப்பு நோக்கி செல்ல வைக்க முடியாது. ஏனெனில் புலிகளிடம் அவ்வளவு ஆட்பலம் கிடையாது. இப்பொழுது நான் சொல்லப்போகும் விசயம் உங்களிற்கு தலைசுற்றும். ஆனால் உண்மை அதுதான்.

2009 இல் புலிகளின் ஆட்பலம் என்ன தெரியுமா?

முழுமையாக பயிற்சியெடுத்த, தாக்குதலணியில் இருந்தவர்கள் வெறும் 950 பேர்தான். மிகுதி அனைவரும் புதிய போராளிகள். முகமாலை முன்னரணில் நின்ற 475 பேரில் 200 பேர்தான் அனுபவம்மிக்க போராளிகள்.

இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்து, முகமாலையிலிருந்து பின்வாங்குவதென பிரபாகரன் முடிவெடுத்தார். ஆனால் 31ம் திகதியே பின்வாங்கவில்லை. 03ம் திகதிதான் பின்வாங்கினார்கள். ஏன்?

ஜனவரி 2ம் திகதி சுண்டிக்குள தொடுவாயில் மிக் விமானம் தாக்குதல் நடத்தியதில் சிறிய டாங்கரொன்று மூழ்கியது. பரந்தன் வீழ்ந்த பரபரப்பிற்குள் தமிழ் ஊடகங்கள் இதை கவனிக்கவில்லை. அது மலேசியாவிலிருந்து வந்த டாங்கர். பெரிய டாங்கர்கள் இலக்கு வைக்கப்பட்டதை தொடர்ந்து, கடற்புலிகள் புதியதொரு ஐடியா போட்டனர். ஆயுதங்கள் நிரப்பப்பட்ட டாங்கர்களை நிக்கோபர் தீவுகளிற்கு அண்மையாக கொண்டுபோவதை போல பாவ்லா காட்டிவிட்டு, மலேசியாவிற்கு அண்மையில் வைத்தே சிறிய டாங்கர்களிற்கு மாற்றி முல்லைத்தீவிற்கு கொண்டு செல்வது.

ஆயுதக்கடத்தல் நெட்வேர்க்கில் இருந்த பலர் கே.பியின் ஆட்களிற்கு நெருக்கமானவர்கள். அவர்கள் மூலம் தகவல் கசியலாமென கருதிதான் இந்த ஏற்பாட்டை புலிகள் செய்தனர். அது சக்சஸாக அமைந்தது!

ஆனால், எங்கே ஓட்டையிருந்ததென புலிகள் கண்டுபிடித்தபோது வெள்ளம் தலைக்குமேல் வந்து விட்டது. முல்லைத்தீவை இராணுவம் கைப்பற்றி விட்டது. சுண்டிக்குளத்தை நெருங்கி விட்டனர். பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியின் தெற்கு பக்கம் முழுவதும் இராணுவத்திடம் போய் விட்டது. அங்கிருந்து ஆட்லறி செல்லால் புலிகளிடமிருந்த கடற்கரையை நொருக்கலாம். அதனால் இனி கப்பல்களை கொண்டு வருவதென்றால், இராணுவத்தை இந்த பகுதிகளிலிருந்து விரட்டினால் மாத்திரமே சாத்தியமென்ற நிலை. ஆனால் இராணுவத்தை விரட்டுவதென்றால் ஆயுதங்கள் தேவையே!

சுண்டிக்குளத்தில் மூழ்கிய டாங்கரில் சிறிதளவு ஆட்லரி செல்கள் வந்தன. அது சிறிய டாங்கர், பரீட்சார்த்த முயற்சியென்பதால் சிறியளவு செல்களே புலிகளிற்கு கிடைத்தது. அந்த செல்கள் இறக்கப்பட்ட பின்னர், 2ம் திகதி மதியம் மிக் விமானங்கள் குண்டுவீசி அதை அழித்தன.

 

இந்தவாரம் சொல்ல வேண்டிய அடுத்த விடயம், பிரபாகரனின் இரகசிய நடவடிக்கை.

சமாதான உடன்படிக்கையின் பின்னர் பிரபாகரன் பொறுப்புக்களை தளபதிகளிடம் பகிர்ந்துவிட்டார் என்பதை கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம்.

புலிகளின் ஸ்பெஷலே இராணுவத்தின் பகுதிக்குள் நுழைந்து அவர்களிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதுதான். கட்டுநாயக்கா விமானப்படை தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதற்கு உதாரணம்.

வன்னியில் இராணுவம் குவிக்கப்பட்டு பெரும் படைநடிவடிக்கை நடந்து கொண்டிருந்தபோது, இராணுவத்தை திசைதிருப்புவதென்றால் தென்பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும். ஆனால் நான்காம் ஈழ யுத்தம் தொடங்கியபோது, தென்பகுதி புலனாய்வு வலையமைப்பை அரசாங்கம் இறுக்கமாக்கி விட்டது. முன்னர் ஆயிரம் கிலோ வெடிமருந்தை லொறியில் நிரப்பி தாக்குதல் நடத்திய புலிகளால், நூறு கிராம் வெடிமருந்தை கூட வெடிக்க வைக்க முடியவில்லை.

விடுதலைப்புலிகளின் புலனாய்வு துறைக்கு இது பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. வன்னிக்குள் ஏற்படும் தோல்விகள் ஒரு பக்கம், தெற்கில் தாக்குதல் நடத்த முடியாத நிலை மறுபக்கம் என புலிகளை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளியது. அந்தகாலப்பகுதியில் பொட்டம்மான்தான் தளபதிகள் கூட்டத்தை நடத்துவார். அவரால் வன்னி தோல்விகள் பற்றி தளபதிகளை கேள்விகேட்க முடியாத சங்கடமான நிலை.

balraj-soosai-poddu1-300x237.jpg

 

 

தெற்கில் ஏதாவது தாக்குதல் நடத்தினால்தான் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திக்கலாம். எப்படியாவது தாக்குதலொன்றை நடத்தும்படி பொட்டம்மானிடம் பலமுறை பிரபாகரன் கூறியும், பொட்டம்மானால் எதுவும் செய்ய முடியவில்லை.

இதற்கு பின்னர் பிரபாகரன் தனது பாணியில் வேலை செய்தார். அதுதான் ஒப்ரேஷன் எல்லாளன். அனுராதபுரம் விமானப்படை தளத்திற்குள் கரும்புலிகள் நடத்திய தாக்குதல். இந்த தாக்குதல் எப்படி நடந்தது தெரியுமா?

விடுதலைப்புலிகளின் தளபதிகள் சிலரின் பெயரை சொல்லுங்கள் என கேட்டால், பெரும்பாலானவர்கள் பொட்டம்மான், பால்ராஜ், சூசை, சொர்ணம், தீபன் என்றுதான் சொல்வார்கள். விடுதலைப்புலிகளை பற்றி ஓரளவிற்கு விசயம் தெரிந்தவர்கள்தான் ரட்ணம் மாஸ்ரரின் பெயரை சொல்வார்கள். ஆனால் விடுதலைப்புலிகளில் இருந்த பெரும்பாலானவர்களிற்கே ரட்ணம் மாஸ்ரரை தெரியாது. அவர் என்ன செய்கிறார் என்பது பிறகெப்படி தெரியும்?

 

1991 இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த ரட்ணம் மாஸ்ரர், இம்ரான் பாண்டியன் படையணியின் புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். பின்னர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணிக்கு பொறுப்பாக இருந்தவர். ரட்ணத்தின் விசுவாசம், காரியத்தை செய்யும் நேர்த்தியெல்லாம் பிரபாகரனிற்கு பிடித்துப்போனது. பின்னர் இராணுவப்புலனாய்வு அணிக்கு பொறுப்பாக இருந்து, இறுதியாக பிரபாகரனின் பாதுகாப்பு படையணியான ராதா படையணி தளபதியாக இருந்தார்.

கரும்புலிகளில் பல பிரிவுகள் உள்ளன. தரைக்கரும்புலிகள், கடல் கரும்புலிகள், வான்கரும்புலிகள் என்ற பிரிவுகளைவிட, முகம் தெரியாத கரும்புலிகள் பிரிவும் உள்ளது. இது புலனாய்வுத்துறையின் கீழ் செயற்படுவது. கட்டுநாயக்கா, வவுனியா விமானப்படை முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இவர்கள்தான். இவர்களின் பெயர் விபரத்தை புலிகள் வெளியிடவில்லை. தென்பகுதிக்குள் ஊடுருவி சென்று, வேறு அடையாளங்களில் தாக்குதல் நடத்துபவர்கள்தான் மறைமுக கரும்புலிகள். அவர்களின் விபரத்தை வெளியிட்டால், தாக்குதலின் பின் விசாரணையில் ஈடுபடும் அரச புலனாய்வுத்துறைக்கு வாய்ப்பாகிவிடும், தாக்குதலாளிகளிற்கு உதவியவர்கள் சிக்கி முழு நெட்வேர்க்கும் அகப்பட்டு விடும் என்பதாலும், புலிகள் தாக்குதலை செய்தார்கள் என்பதை வெளிப்படுத்த கூடாது என்பதற்கும் மறைமுக கரும்புலிகளை ஈடுபடுத்துவார்கள். தென்பகுதியில் நடந்த தாக்குதல்கள் மறைமுக கரும்புலிகளாலேயே நடத்தப்பட்டது. ஆனால் அனுராதபுரத்தில் தாக்குதல் நடத்தியவர்களின் விபரத்தை புலிகள் வெளியிட்டனர். ஏன் அனுராத தாக்குதலில் ஈடுபட்டவர்களின் விபரங்களை மட்டும் வெளியிட்டனர்?

அது தரை கரும்புலிகள் நடத்திய தாக்குதல். தரைக்கரும்புலிகள் அனேகமாக புலிகள் நடத்தும் பெரிய இராணுவ நடவடிக்கைகளின் போது தாக்குதலில் ஈடுபடுபவர்கள். அனுராதபுர நடவடிக்கையில் மறைமுக கரும்புலிகள் ஈடுபடுத்தப்படாமல், தரைக்கரும்புலிகள் ஏன் ஈடுபடுத்தப்பட்டார்கள் தெரியுமா?

இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது புலிகளின் உயர்மட்டத்தில் இரண்டுபேருக்கு மாத்திரமே தெரியும். ஒருவர் பிரபாகரன். மற்றவர் இரட்ணம் மாஸ்ரர். புலனாய்வுத்துறையால் தெற்கில் தாக்குதல் ஒன்றையும் செய்ய முடியாமல் இருக்க, பிரபாகரனுடன் நிழல் போலவே இருந்த ரட்ணம் மாஸ்ரர் அனுராதபுர திட்டத்தை கையிலெடுத்தார்.

அவர் ஏற்கனவே இராணுவ புலனாய்வுதுறையில் இருந்தபோது அனுராதபுர விமானப்படை தளம் பற்றி ஓரளவு வேவு தகவல் சேகரித்து வைத்திருந்தார். இப்பொழுது புது அப்டேற்களை சேகரிக்க தொடங்கினார். முழுக்க முழுக்க தனது படையணி போராளிகளை வைத்தே தகவல்களை சேகரித்தார். தகவல்களை சேகரித்த ஒருவர் இப்பொழுதும் சிறைச்சாலையொன்றில் அரசியல்கைதியாக இருக்கிறார்.

தெற்கில் தாக்குதல் நடத்த முடியாமல் இருந்த புலனாய்வுத்துறைக்கு சூடு வைப்பதற்காக மட்டும் அனுராதபுரத்தை இலக்கு வைக்கவில்லை. அதைவிட இன்னொரு காரணமும் இருந்தது. வவுனியாவில் பழைய, சிறிய UAV விமானங்கள்தான் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் பீச்கிராப்ற் போன்ற நவீன உளவுவிமானங்கள் அனுராதபுரத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டன. வான்படையின் பாவனையில் இருந்த பீச் கிராப்ற் 300 இற்கும் அதிக மணித்தியாலம் தொடர்ந்து பறப்பில் ஈடுபடும் வல்லமையுள்ளது. இதனால் கடல்நடவடிக்கைகள் எதையும் புலிகளால் செய்ய முடியாமலிருந்தது.

ஆக, பீச்கிறாப்றை அனுராதபுரத்தில் வைத்தே புலிகள் குறிவைத்தனர். தாக்குதலிற்கு புறப்பட்ட அணிகள், பீச்கிறாப்றை மிஸ் பண்ணவேகூடாதென தெளிவாக சொல்லித்தான் அனுப்பிவைக்கப்பட்டன. மற்ற விமானங்களிடம் இருந்து பீச்கிறாப்ற் எப்படி வித்தியாசப்படும் என்பதும் சொல்லப்பட்டிருந்தது. விமானப்பரிச்சயம் இல்லாதவர்களால் இருளில் விமானங்களை வகைபிரித்தறிவது கடினம். அதனால், “நல்ல புதிதாக, மினுமினுப்பாக இருக்கும் விமானம்“ என புரியும்படியே புலிகள் சொல்லியனுப்பியிருந்தனர்.

22ம் திகதி 3.20 இற்கு அனுராதபுரத்திற்குள் தாக்குதலை தொடங்கிய அணிகள் காலை 5.30 இற்கு பின்னர்தான் பீச்கிறாப்றை கண்டார்கள். அதன்மீது லோவால் ஒரு செல் அடித்துவிட்டு, தாக்குதலை தலைமைதாங்கி சென்ற இளங்கே, கட்டளைமையத்திற்கு “மெல்லிய இருட்டிலும் நல்லா மினுங்கிக் கொண்டிருந்தது பீச்கிறாப்ற்.லோ அடிச்சதில் எரிஞ்சு கொண்டிருக்கிறார்“ என அறிவித்தார்.

z_page09-runnerway-300x151.jpg அநுராதபுரம் தாக்குல் விளக்கப்படம்

கிளிநொச்சியின் திருவையாறு பகுதியில் புலனாய்வுதுறையின் முகாமொன்றில் தற்காலிக கட்டளை மையம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே தெற்கு நடவடிக்கைகளிற்கான கொமாண்டிங் ரூமாக அந்த முகாம் இயங்கியிருந்தமையால், அங்கு தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 21.10.2007 திகதி கொமாண்டிங் ரூமில் ரட்ணம் மாஸ்ரர் இருந்தார். வழக்கமாக இப்படியான இடங்களில் பிரபாகரன் முழு நாளையும் செலவழிப்பது வெகு அரிது. ஆனால், அன்று நள்ளிரவில் இருந்து காலை வரை பிரபாகரன் அங்கேயே இருந்தார். அதைவிட, பிரபாகரன் செய்த இன்னொரு காரியத்தைத்தான் குறிப்பிட வேண்டும்.

கொமாண்டிங் ரூமிற்கு வந்த பிரபாகரன், இயக்கத்தின் முக்கிய தளபதிகள் சிலருக்கு அவசரமாக ஒரு மெசேஜ் அனுப்பினார்.

கொண்ரோல் ரூம் இயங்கிய முகாமிற்கு உடனடியாக வாருங்கள் என்பதே அந்த மெசேஜ். பொட்டம்மான், புலனாய்வுத்துறையின் மூத்த நடவடிக்கை தளபதிகள் தொடங்கி அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழ்செல்வன் வரை அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முகாமிற்கு வந்த பின்னர்தான் தளபதிகளை உட்கார வைத்து பிரபாகரன் தாக்குதல் திட்டம் பற்றி விளங்கப்படுத்தினார். அப்பொழுது நேரம், இரவு 11.45 மணி. அதாவது அனுராதபுர தாக்குதலிற்கு வேறுவேறு வழிகளில் சென்ற கரும்புலிகள் ஒன்றுசேர்ந்து, தாக்குதலிற்கு புறப்பட்ட சமயத்தில். அதுவரை பொட்டம்மான் உள்ளிட்ட தளபதிகளிற்கு அனுராதபுர தாக்குதல் திட்டமே தெரியாது!

அனைத்து தளபதிகளும் இரவு முழுவதும் கட்டளை மையத்தில் உட்கார்ந்திருந்தனர். ரட்ணம் மாஸ்ரர் கட்டளைகள் வழங்கினார்.

ஒப்ரேஷன் எல்லாளன் மூலம் பிரபாகரன் இயக்கத்திற்குள்ளும் ஒரு செய்தியை சொன்னார். அது- உங்களால் முடியாவிட்டால் நான் செய்வேன் என்பதே!

(தொடரும்)

http://www.pagetamil.com/31321/

Share this post


Link to post
Share on other sites

டொக்ரர் அன்ரிக்காக கரிகாலனை மன்னித்த பிரபாகரன்… மனமுடைந்த விதுஷா

January 15, 2019
black-tigers1.jpg

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 51

பீஷ்மர்

கடந்த சில வாரங்களாக விடுதலைப்புலிகளின் கடல் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டிருந்தோம். கடந்த வாரத்தில் அனுராதபுர வான்படை தளம் மீதான ஒப்ரேஷன் எல்லாளன் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த பகுதியின் ஆரம்பத்தில் நான்காம் கட்ட யுத்தத்தின் ஆரம்பகால கட்டங்கள், மன்னாரில் இருந்து இராணுவம் எப்படி நகர்வை ஆரம்பித்தது, புலிகளின் எதிர்தாக்குதல்கள் பற்றியெல்லாம் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.

அடுத்த சில வாரங்கள் வன்னியில் நடந்த தரை யுத்தம் பற்றி குறிப்பிடவுள்ளோம். விடுதலைப்புலிகள் எப்படி இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கினார்கள், அப்போது என்ன நடந்தது என்பது பற்றி அடுத்த வாரங்களில் அறிந்து கொள்ளலாம்.

இந்த தொடரின் ஆரம்பத்தில் வந்த பகுதிகளை படிக்காத வாசகர்களிற்காக மிகச்சுருக்கமாக 2006 இல் மன்னார் முனையில் எப்படி யுத்தம் ஆரம்பித்தது, புலிகளின் பின்னடைவிற்கு காரணம் என்னவென்பதை குறிப்பிட்டு விடுகிறோம்.

மன்னாரில் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்த சமயத்தில் மன்னார் களமுனைக்கு பொறுப்பாக இருந்தவர் ஜெயம். தள்ளாடியில் இருந்து படை நடவடிக்கையை 58வது டிவிசன் ஆரம்பித்தது. வவுனியாவில் இருந்து 57வது டிவிசன் நகர்ந்தது. மண்கிண்டிமலையிலிருந்து 59வது டிவிசன் நகர்ந்தது.

இதில் தள்ளாடியிலிருந்து நகர்ந்த 58வது டிவிசனின் நகர்வை பற்றித்தான் குறிப்பிட வேண்டும். மன்னாரில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் சில கிலோமீற்றர் தூரத்தை கடக்க போரிட்டார்கள். விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதல் பலமாக இருந்தது என்பதைவிட, இடத்தை கைப்பற்றும் நோக்கம் இராணுவத்திற்கு இருக்கவில்லை. தொடர்ந்து சண்டைபிடித்து விடுதலைப்புலிகளின் ஆளணியை சேதமாக்குவதே இராணுவத்தின் நோக்கம். மன்னார் களமுனையில் 2006 இல் அதிகம் இழப்பை சந்தித்த படையணி மாலதி படையணி. 2006 இல் மட்டும் மன்னார் களமுனையில் 320 மாலதி படையணி போராளிகள் மரணமானார்கள்.

 

புலிகளின் சில திட்டமிடல் குறைபாடுகளால் பாரிய மண் அணைகள் அமைக்கப்பட்டும் இராணுவத்தின் நகர்வை தடுக்க முடியவில்லை. முழங்காவிலிருந்து அண்மையாக ஜெயபுரம், நாச்சிக்குடா பகுதிகளை அண்டி பாரிய மண்அணை அமைக்கப்பட்டது. அதை கடந்து இராணுவத்தால் முன்னேற முடியாமல் இருந்தது. அந்த அணை முழுமையாக அமைக்கப்பட்டு முடியவில்லை. நாச்சிக்குடாவிற்கு அண்மையாக மண் அணை அமைக்கப்படாத பகுதிக்குள்ளால் இராணுவம் நகர்ந்தது. ஆரம்பத்தின் மன்னார் களமுனை தளபதியாக ஜெயம் இருந்தார். இராணுவத்தின் நகர்வை அவரால் தடுக்க முடியவில்லையென்றதும், பானுவிடம் அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்த அத்தியாயங்களில் சொல்லப்பட்ட இந்த தகவல்களை மீள நினைவூட்டிக்கொண்டு, தொடரின் புதிய பகுதிக்கு அழைத்து செல்கிறோம்.

பானு வன்னி களமுனையை பொறுப்பேற்க முன்னர், நடந்த சில சம்பவங்களையும் குறிப்பிட வேண்டும்.

கருணாவின் பிரிவின் பின்னர், கேணல் ரமேஷ் கிழக்கு பிராந்திய தளபதியாக புலிகளால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த சமயத்தில் திருகோணமலையில் சொர்ணம், மட்டக்களப்பில் பானு ஆகியோர் இருந்தனர். இவர்களிற்கு எல்லாம் கட்டளையிடுபவராக ரமேஷ் ஏன் நியமிக்கப்பட்டார்?

 

இந்த இடத்தில்தான் பிரபாகரனின் ஸ்டைல் ஒன்றை சொல்ல வேண்டும்.

கருணாவின் பிரிவின் பின்னர் கிழக்கு தளபதியாக நியமிக்கப்பட்ட ரமேஷ் மீது கொண்ட நம்பிக்கையால் அந்த நியமனம் வழங்கப்படவில்லையென்பதே உண்மை.

கருணா பிரிந்து செல்ல முடிவெடுத்தபோது, அதை தெரிந்தவர்களில் ரமேசும் ஒருவர். பின்னர்தான் அதை புலிகளிற்கு தெரியப்படுத்தினார். கருணாவின் பிரிவு ஆரம்பத்தில் தனிப்பட்ட காரணங்களினால் நிகழ்வதாகவே இருந்தது. நிதி விவகாரங்களில் ஏற்பட்ட குழப்பங்களை தீர்க்குமாறு புலிகள் கேட்க, கரடியனாறில் பலத்த பாதுகாப்புடன் கருணா தனி நிர்வாகத்தை ஆரம்பித்தார். இந்த சமயத்தில் கருணாவின் பிரிவிற்கு கோட்பாட்டு விளக்கங்கள் கொடுக்க உதவியவர் பத்திரிகையாளர் தராகி சிவராம். கருணாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, கருணா அணியின் தத்துவாசிரியராக மாறும் ஆசை அவரிற்கு ஏற்பட்டுவிட்டது. பின்னர் புலிகள் “சொல்வது மாதிரி சொல்லி“த்தான் அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யன் தவிர்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவருமே கருணாவின் பிரிவை ஆதரித்தார்கள். இதில் இருவர் முக்கியமானவர்கள். கருணாவிற்கு அடுத்த நிலையில் இருந்த ரமேஷ், கிழக்கு அரசியல்துறை பொறுப்பாக இருந்த கரிகாலன் ஆகியோரே அவர்கள். ஜிகாத்தன், ஜிம்கெலி தாத்தா, ஜெயம், ரொபர்ட், விசு  போன்ற தாக்குதலணி தளபதிகள் எல்லோரும் கருணாவின் கிளர்ச்சியை ஆதரித்தனர். இந்த சமயத்தில் பிள்ளையான், கருணாவின் மெய்ப்பாதுகாவலர். அவர் முக்கியஸ்தர் பட்டியிலிலேயே இருக்கவில்லை. முக்கியஸ்தர்களையெல்லாம் புலிகள் சுட, கீழ் வரிசையில் இருந்த பிள்ளையான் முக்கியஸ்தரானார்.

கருணா பிரிவதாக அறிவித்த சமயத்தில், அந்த முடிவை கரிகாலன் ஆதரித்தார். பிரிவின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் அறிவுறுத்தலின்படி, கருணாவை ஆதரிப்பதை போல ரமேஷ் காட்டிக் கொண்டார். கருணா பிரிந்ததும், அங்கிருந்த முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவரையும் தொலைத்தொடர்பு கருவிகளில் தொடர்புகொண்டு புலிகள் பேசினார்கள். வன்னியிலிருந்து முக்கிய தளபதிகள், நாகர்கோவில் முன்னரணை பொறுப்பேற்றிருந்த ஜெனார்த்தனன், வன்னியிலிருந்த கிழக்கின் முக்கிய போராளிகள் இந்த பொறுப்பை ஏற்றிருந்தனர். கருணாவுடன் பிரிந்து சென்றவர்களை மீளவும் தம்முடன் இணையும்படியும், அவர்களிற்கு எந்த பிரச்சனையுமில்லையென்றும் புலிகள் வாக்களித்தனர். இதையடுத்து பெருமளவான போராளிகள், கருணாவை விட்டு விலகி வந்தனர். என்றாலும் ரமேஷ் பற்றி புலிகளிடம் முழுமையான நம்பிக்கையிருக்கவில்லை. அவர் இரண்டு தோனியிலும் கால் வைக்கிறாரோ என்ற சந்தேகமும் புலிகளிடம் இருந்தது.

2004 மார்ச் 03ம் திகதி புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக கருணா அறிவித்தார். அன்று இரவு மார்ஷல் (பின்னாளில் புலிகளின் இராணுவப் பேச்சாளராக இருந்தவர்- கிழக்கை சேர்ந்தவர்) ரமேஷை தொடர்பு கொண்டு பேசினார். கருணாவுடன் சென்றால், மன்னிக்கப்பட மாட்டார் என்றும், கருணாவுடன் நடக்கும் பேச்சுக்கள் வெற்றியளிக்கும் நிலையில் இருப்பதால் அவர் உங்களையெல்லாம் கைவிட்டு விடலாமென கூறினார். மார்ஷலின் தகவலால் ரமேஷ் ஆடிப்போய் விட்டார்.

புலிகள்- கருணா பிரிவில் இனி சமரசத்திற்கே இடமில்லையென்றுதான் ரமேஷ் நினைத்திருந்தார். இரண்டு தரப்பும் பேசுகிறார்கள் என்ற தகவல் அவருக்கு புதியது. திகைத்து விட்டார். கருணா பிரிவதென முடிவெடுத்த ஆரம்ப கட்டத்தில் அதற்கு ஆதரவானவராக ரமேஷ் காண்பித்து கொண்டிருக்கலாம். ஆனால், அதை கருணாவோ, ரமேஷோ சொன்னால்தான் உண்டு. கருணா விவகாரம் ஒரு அளவிற்கு மேல் சென்ற பின்னரே, இந்த விவகாரத்தை பொட்டம்மானுடன் பேசினார். ரமேஷை ஒரு எச்சரிக்கை உணர்வுடன் கையாண்டதால்தான், அவர் கிழக்கு மாகாண தளபதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது சம்பிரதாய பொறுப்பாக இருந்தது.

இதற்குள் கிழக்கு அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலனை யாரும் கணக்கெடுக்கவில்லை. கரிகாலனின் மனைவிதான் டொக்ரர் அன்ரி (எழில்மதி). பிரபாகரன் குடும்பத்தின் தனிப்பட்ட மருத்துவர். அதனால் எந்த நேரத்திலும், என்ன விடயத்தையும் பிரபாகரனுடன் நேரடியாக பேச அவரால் முடியும். கரிகாலனுடன் பேசி, அவரை வன்னிக்கு வர சம்மதிக்க வைத்த டொக்ரர் அன்ரி, அவருக்கு மன்னிப்பு வாங்க விரும்பினார். கரிகாலன் செய்த வேலை பிரபாகரனிற்கு துளியும் பிடிக்காது என்பது அன்ரிக்கு தெரியும். அதனால் இந்த விடயத்தை பிரபாகரனுடன் நேரடியாக பேசவில்லை.

 

images-1-1.jpg

 

கருணாவின் பிளவு சமயத்தில் பிரபாகரனின் மனைவி மதிவதனியும்  பிள்ளைகளும் முள்ளியவளையில் குடியிருந்தனர். பிரபாகரன் விசுவமடு முகாமில் தங்கியிருந்தார். விசுவமடு 12ம் கட்டையில் உள்ள பிரபாகரனின் முகாம், யுத்தத்தின் பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டிருந்தது. மிக விரைவில் அந்த காணியின் உரிமையாளரிடம் அதை இராணுவம் கையளிப்பதாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்தவர்கள் அந்த காணியின் உரிமைாளர்கள்.

அந்த முகாமில்தான் பிரபாகரன் தங்கியிருந்தார். மதிவதனி, டொக்ரர் அன்ரி, வான்புலி தளபதியாக இருந்த சங்கரின் மனைவி குகா மூவரும் நெருங்கிய நண்பிகள். யுத்தத்தின் இறுதிநாட்களில் மதிவதனியும், குகாவும் ஒன்றாகவே தங்கியிருந்தனர். அது பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்.

டொக்ரர் அன்ரி முள்ளியவளைக்கு மதிவதனி வீட்டுக்கு சென்று, நிலைமையை சொன்னார். கரிகாலனை வன்னிக்கு அழைப்பதாகவும், அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு பிரபாகரனிடம் கேட்குமாறும் அன்ரி கேட்டுக்கொண்டார். அன்ரியையும் அழைத்துக்கொண்டு பிரபாகரனின் விசுவமடு முகாமிற்கு மதிவதனி உடனே புறப்பட்டார். பிரபாகரனையும் அன்ரியையும் நேரில் பேச வைத்தார். அன்ரி கண்ணீருடன் பேச, பிரபாகரன் இறுகிய முகத்துடன் உட்கார்ந்திருந்தார். அன்ரியின் கோரிக்கையை பிரபாகரனால் தட்ட முடியாது. ஆனால் அன்று அவர் அதிகம் பேசவில்லை. இரண்டுநாளில் கரிகாலன் வந்துவிட வேண்டும் என்பதை மட்டும் சொன்னார்.

இப்படித்தான் ரமேஷ், கரிகாலன் வன்னிக்கு வந்து சேர்ந்தார்கள். இருவரையும் புலனாய்வுத்துறை உயர்மட்டத்தினர் மேலோட்டமான விசாரணை செய்து, வாக்குமூலம் பதிவுசெய்ததுடன் விடயம் முடிந்தது.

 

கரிகாலன் பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம்- மட்டக்களப்பிலிருந்து கரிகாலன் திரும்பி வந்ததன் பின்னர், யுத்தத்தின் இறுதிநாள் வரை அவரை தனிப்பட்ட முறையில் பிரபாகரன் சந்திக்கவேயில்லை!

ltte_trcamp_03_04_03_01-300x225.jpg கருணா-ரமேஷ்-சாளி

இதன்பின் ரமேஷ் கிழக்கு பிராந்திய தளபதியாக நியமிக்கப்பட்டார். உண்மையில் இந்த நியமனம் வெறும் சம்பிரதாய நியமனம். கிழக்கை உண்மையில் வழிநடத்தியது மூவர். திருகோணமலையை சொர்ணம். மட்டக்களப்பை பானு. அம்பாறையை ராம் வழிநடத்தினார்கள்.

கருணா பிரிவு வடக்கு கிழக்கு பிரதேசவாதத்தை தூண்டும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாணத்தவர்களிற்கு எதிரான கடுமையான பிரசாரத்தை கருணா அணி நடத்தியது. பிரதேசவாதத்தை வளரவிடக்கூடாதென புலிகள் நினைத்தனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பானு  அல்லது தீபன் போன்றவர்களை கிழக்கு தளபதியாக்கினால், கருணாவின் பிரசாரம் எடுபட்டு விடும். கருணாவின் பிரசாரத்திற்காக ரமேஷிற்கு பொறுப்பு வழங்கவும் முடியாது. இந்த சிக்கலை சமாளிக்க புலிகள் கையாண்ட ஐடியாவே- ரமேஷை கிழக்கு பிராந்திய தளபதியாக அறிவித்தனர். உண்மையில் ரமேஷிற்கு அப்படியொரு அதிகாரமே கிடையாது. திருகோணமலையை சொர்ணமும், மட்டக்களப்பை பானுவும், அம்பாறையை ராமும் வழிநடத்தினார்கள். இவர்களிற்கு உத்தரவிடும் எந்த அதிகாரமும் ரமேஷிற்கு வழங்கப்படவில்லை.

2004 ஏப்ரல் முதல் வாரத்தில் கிழக்கை கருணா குழுவிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையை புலிகள் ஆரம்பித்தபோது, ரமேசும் நடவடிக்கை குழுவில் இருந்தார். கருணா அணியிலிருந்த முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு பேசி, அவர்களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கும் வேலையை ரமேஷ் செய்தார்.

கருணா குழுவின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஜிம்கெலி தாத்தா, ரொபர்ட், விசு போன்றவர்கள். ஜிம்கெலி தாத்தா, ரொபர்ட் இருவரும் வன்னியில் ஜெயசிக்குறு தாக்குதல் முறியடிப்பில் பெரும் பங்காற்றிய தளபதிகள். இவர்கள் தாக்குதல் தளபதிகளே தவிர, அரசியல் அனுபவமற்றவர்கள். கருணாவில் விசுவாசமிக்கவர்கள். கருணா பிரிவதாக அறிவித்தபோது, அவருடன் சென்றுவிட்டார்கள். பின்னர், ரமேஷ் அவர்களுடன் பேசினார். இந்த பிளவினால் போராட்டத்திற்கு நேரும் ஆபத்தை புரியவைத்து, அவர்களை மீள தம்முடன் இணையுமாறு கேட்டார். புலிகளுடன் இணைய அவர்களிற்கு முழு விருப்பம் இருந்தாலும், புலிகள் என்ன செய்வார்கள் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது.

ஜிம்கெலி, ரொபர்ட், விசு உள்ளிட்ட பன்னிரண்டு கிழக்கின் தளபதிகளிற்கு ரமேஷ் பாதுகாப்பு உத்தரவாதம் கொடுத்தார். அவர்களிற்கு எந்த ஆபத்தும் நிகழாதென வாக்களித்தார். இந்த வாக்குறுதியை நம்பிய தளபதிகள் புலிகளிடம் சரணடைந்தனர். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், மட்டக்களப்பிலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். கருணாவின் மகளிர் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த சாளி/ நிலாவினி உள்ளிட்ட நான்கு பெண் போராளிகளும் சரணடைந்திருந்தனர். அவர்கள் முல்லைத்தீவின் வள்ளிபுனத்தில் இருந்த அல்பா  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

rgyu-300x245.jpg டொக்ரர் அன்ரி- கரிகாலன்

கருணா பிளவின் பின்னர் பானு மட்டக்களப்பின் தளபதியாக செயற்பட்டார். கிழக்கில் மாவிலாற்றில் தொடங்கிய யுத்தம், படிப்படியாக மட்டக்களப்பு அம்பாறைக்கும் பரவியது. கஞ்சிகுடிச்சாறு, வாகரை என புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை கைப்பற்றிய இராணுவம் இறுதியில் குடும்பிமலையை (தொப்பிகல) கைப்பற்றியது. 11.07.2007 தொப்பிகலவை முழுமையாக கைப்பற்றியதாக அரசு அறிவித்தது.

தொப்பிகலவில் கிழக்கு படையணிகளுடன் நிலைகொண்டிருந்த பானு, அடர்ந்த காட்டின் வழியாக பன்னிரண்டுநாள் நடைபயணத்தில் வன்னியை வந்து சேர்ந்தார். அந்த அணி காட்டிற்குள் இருக்கும் அருவி, குட்டைகளில்தான் தாகத்தை தீர்த்து கொண்டது. இது கொலரா தொற்றை அந்த அணிக்கு ஏற்படுத்தியது. காட்டுக்குள் இராணுவத்திற்கு தெரியாமல் நீண்ட நடைபயணத்தை செய்யும் அணிக்கு கொலரா தொற்று ஏற்பட்டால் எப்படியிருக்கும்?

கொலராவால் நடக்க முடியாமலிருந்தவர்களை காவிக்கொண்டு வந்தார்கள். முறையான சாப்பாடு இல்லாதநிலையில் இன்னொருவரை காவுவதும் பெரும் சிரமமான விடயம். மருந்துப்பொருட்கள் இல்லாதததால் உயிரிழப்புக்களும் ஏற்பட தொடங்கியது. ஏழு போராளிகள் அடர்ந்த காட்டுக்குள் கொலரா தொற்றில் உயிரிழந்தனர். அவர்களின் உடலை காட்டுக்குள் அடக்கம் செய்துவிட்டு, தொடர்ந்து நகர்ந்து, பெரும் சிரமத்தின் மத்தியிலேயே வன்னியை வந்தடைந்தார்கள்.

வன்னிக்கு வந்ததும், பானுவிற்கு மீண்டும் குட்டிசிறி மோட்டார் படையணி பொறுப்பு வழங்கப்பட்டது. சில மாதங்களில் அந்த பொறுப்புடன் மேலதிகமாக, மேற்கு களமுனை பொறுப்பு வழங்கப்பட்டது. அப்பொழுது இாணுவம் மன்னாரிற்குள் நகர்வை செய்துகொண்டிருந்தது. மூத்த தளபதிகள் விதுஷா, துர்க்கா போன்றவர்களும் அந்த களமுனையில்தான் இருந்தார்கள். ஏனெனில், மன்னார் களமுனையில் அதிகமாக பெண் போராளிகளே நின்றார்கள்.

pathuman_press_2-300x199.jpg

 

மன்னார் களமுனையில் மாலதி படையணிதான் அதிகமாக இழப்பை சந்தித்தது என்பதை குறிப்பிட்டிருந்தேன். கட்டாயமாக படைக்கு சேர்க்கப்படுபவர்கள் சில வார பயிற்சியுடன் களமுனைக்கு வருவதையும், அதனால் இழப்பை சந்திப்பதையும் விதுர்ஷா விரும்பவில்லை. மன்னார் களமுனையில் பெண்போராளிகளை உயிருடன் பிடித்து செல்லும் புதிய உத்தியை இராணுவம் கையாண்டது. பெண்களின் காவலரண்களை box அடித்து உயிருடன் பிடித்துசெல்ல ஆரம்பித்தார்கள். களத்தில் ஏற்படும் இந்த இழப்புக்கள் விதுர்ஷாவை அதிகம் பாதித்தது. அவர் உற்சாகமிழந்து, யுத்தத்தை வெல்ல முடியுமென்ற நம்பிக்கையுடன் இருக்கவில்லை.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/32437/

 

Share this post


Link to post
Share on other sites

சாள்ஸ் அன்ரனிக்கும், பானுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம்… பெண் போராளிகளின் தலைமுடி வெட்ட விதுஷா எதிர்ப்பு!

January 20, 2019
charles-anthony-prabakaran.jpg

பீஷ்மர்

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 52

நான்காம் ஈழப்போரின் தொடக்க காலத்திலேயே மாலதி படையணி சிறப்பு தளபதியாக இருந்த பிரிகேடியர் விதுஷா களைத்து விட்டார் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இலங்கை இராணுவத்தின் போர் உத்திதான் இதற்கு காரணம்.

மேடான பகுதியை நோக்கி தண்ணீர் ஓடும் பாணியில் அமைந்த இராணுவத்தின் போருத்தியை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால், மன்னார் களமுனையில் இன்னொரு போருத்தியை இராணுவம் பாவித்தது. அப்பொழுது நிலத்தை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமல்ல. நீண்ட போரை நடத்தி புலிகளின் ஆளணியை சேதமாக்குவதே திட்டம்.

புலிகளின் ஆளணி பற்றிய கணக்கு துல்லியமாக இலங்கை பாதுகாப்புத்துறையிடம் இருக்கவில்லை. உண்மையை சொன்னால், வன்னியிலிருந்த மக்கள் தொகை பற்றிய சரியான கணக்கே அரசாங்கத்திற்கு தெரியாது. இந்த குழப்பத்தை புலிகள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். வன்னி சனத்தொகை தெரிந்தால், அதற்கு அளவான உணவுப்பொருட்களைதான் அனுப்பி வைப்பார்கள். ஆளணியை அதிகரித்து காண்பித்து, உணவுப்பொருள்களை தமது பாவனைக்கு புலிகள் பாவித்தார்கள்.

புலிகளின் ஆளணி தொடர்பாக இறுதிவரை இராணுவத்திடம் மிகை மதிப்பீடே இருந்தது. அண்ணளவாக 25,000 போராளிகள் இருக்கலாமென கணக்கிட்டார்கள். இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் கோத்பாய ராஜபக்ச ஆகியோர் அப்பொழுது இந்த தொகையைதான் பகிரங்கமாக சொன்னார்கள்.

ஆனால் உண்மையில் புலிகளிடம் அவ்வளவு ஆள் பலம் இருக்கவில்லை. இவ்வளவு ஆட்பலம் இருந்தால், புலிகள் அந்த யுத்தத்தை சுலபமாக வென்றிருப்பார்கள்.

 

புலிகளிடம் மொத்தமாக எத்தனை போராளிகள் இருந்தார்கள் என்பது தெரியுமா?

யுத்தத்தின் இறுதியில் தகவல் கிடைத்து,  25,000 என சொன்னதற்காக கோத்தபாய ராஜபக்சவே இப்பொழுது வெட்கப்படுவார். யுத்தத்தின் இறுதி மாதங்களில், அரசியல்துறையினரிடம் பிரபாகரன் சொன்னது என்ன தெரியுமா?

“என்னிடம் 25,000 போராளிகளை திரட்டித் தாருங்கள். நான் யுத்தத்தை வென்று தருவேன்“.

கிழக்கை முழுமையாக இழந்து, வடக்கில் மட்டும் புலிகள் யுத்தத்தை எதிர்கொள்ள தொடங்கிய சமயத்தில், அவர்களிடம் 5,750- 6,250 வரையான போராளிகள்தான் இருந்தார்கள். நன்கு பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை இதுதான். கட்டாய ஆட்சேர்ப்பின் போது அதிகபட்சமாக 8,000 பேரை பிடித்து படையில் இணைத்திருந்தனர். இந்த 8,000 என்ற எண்ணிக்கை நிரந்தரமானதல்ல. ஒரு பக்கம் யுத்தத்தில் இவர்கள்தான் அதிகமாக இறந்தார்கள். மறுவளமாக, கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்டவர்கள் வீட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். மீண்டும் அவர்களை புலிகள் பிடித்துவர… ஓட என ஒரு சுற்றுவட்டத்தில் இவர்கள் இருந்தார்கள்.

 

அதிலும், கட்டாயமாக பிடிக்கப்பட்ட பெண்கள் ஓர்மமாக போரிடமாட்டார்கள். மன்னாரில் பெண்புலிகளின் நிலையை BOX அடித்து, இராணுவத்தினர் அவர்களை உயிரோடு தூக்கிச்செல்ல ஆரம்பித்தனர். மன்னாரின் தள்ளாடியில் இருந்து 2007 செப்ரெம்பரில் படை நடவடிக்கையை ஆரம்பித்தபோதும், தள்ளாடிக்கு அடுத்த அடம்பன் நகரத்தை கைப்பற்ற படையினர் எடுத்துக்கொண்ட காலம் எட்டு மாதங்கள். யுத்தத்தின் இறுதிக்காலத்தில் புலிகளின் இறுக்கமான கோட்டைக்குள் இராணுவம் முன்னேறிய வேகத்தையும், இதனையும் ஒப்பிட்டு பார்த்தால் விடயத்தை புரிந்து கொள்வீர்கள்.

2009 ஜனவரி 01ம் திகதி பரந்தன் சந்திக்கு 58வது டிவிசன் படையினர் வந்தனர். இதே படையணி ஜனவரி 15ம் திகதி தர்மபுரத்தை கைப்பற்றியது. ஜனவரி 28ம் திகதி விசுவமடுவை கைப்பற்றியது. புலிகளின் கோட்டைக்குள் எவ்வளவு விரைவாக முன்னேறியிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

ஆனால் 2007 இல் மன்னாரில் 58வது டிவிசன் படை நடவடிக்கையை ஆரம்பித்த போது, நிலத்தை கைப்பற்றுவது முதலாவது நோக்கமாக இருக்கவில்லை. தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு புலிகளின் ஆளணியை சேதம் செய்வதே நோக்கம். முன்னரணில் இருந்து சிறிதுதூரம் நகர்ந்து, புலிகளின் முன்னரணை BOX அடித்து தாக்குதல் நடத்துவார்கள். பின்னர், பழைய நிலைகளிற்கே திரும்பி விடுவார்கள். பல மாதங்கள் நீடித்த இந்த தாக்குதலில் சுமார் 700 போராளிகள் மரணமானார்கள். அதில் பெரும்பாலானவர்கள் மாலதி படையணி பெண் போராளிகள்.

2007 செப்ரெம்பரில் தள்ளாடியில் இருந்து நகர்வை தொடங்கிய 58வது டிவிசன் 2008 மே மாதம் அடம்பன் நகரத்தை கைப்பற்றியது. தள்ளாடியில் இருந்து வெறும் 9 கிலோமீற்றர் தொலைவிலேயே அடம்பன் உள்ளது. 9 கிலோமீற்றரிற்கு 9 மாதம்!

இராணுவம் நிலத்தை பிடிக்க முயலவில்லை, தமது ஆளணியை சேதமாக்கவே முனைகிறதென்பதை சிறிது காலத்தின் பின்னரே புலிகள் புரிந்து கொண்டார்கள். அதன் பின்னர்தான் பின்வாங்கும் முடிவை எடுத்தனர்.

தொடர்ந்து முன்னரணில் நிற்கும் பெண் போராளிகளும் களைத்திருந்தார்கள். முன்னரண் என்பது ஒரு காவலரண். அடுத்த காவலரணிற்கு செல்வதற்கு இடுப்பளவு ஆழத்தில் வெட்டப்பட்ட நீளமான பதுங்குகுழி பாதை. காவலரணிற்கு பின்னால் வெட்டப்பட்ட பதுங்குகுழிக்குள்தான் வாழ்க்கை. பெண்களிற்கு இயற்கை பிரச்சனைகள் எல்லாம் இருக்கும். சுகாதாரமாக இருக்க தண்ணீர் வசதிகள் எல்லாம் தேவை. ஆனால் முன்னரணில் நீண்டகாலம் நிற்கும் பெண் போராளிகளிற்கு இந்த வசதிகள் எல்லாம் கிடையாது. மூன்று நான்கு மாதங்களிற்கு ஒருமுறை அணிகள் மாற்றப்பட்டு ஒரு வாரமளவில் ஓய்வு வழங்கப்படும் வழக்கத்தை புலிகள் முன்னைய யுத்தங்களில் வைத்திருந்தார்கள். ஆனால் நான்காம் ஈழப்போரில் அது சாத்தியமில்லை. காரணம்- அதிக ஆளணி தேவையாக இருந்தது. மன்னாரிலிருந்து 58வது டிவிசன், வவுனியா பாலமோட்டையிலிருந்து 57வது டிவிசன், மண்கிண்டிமலையிலிருந்து 59வது டிவிசன் முன்னேற்றத்தை ஆரம்பித்திருந்தன. முகமாலை-நாகர்கோவில் முன்னரண் நிலையில் 55,53 டிவிசன்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தன.

 

இலங்கை இராணுவம் இப்படி பிரமாண்ட தயாரிப்பில் பல முனை நகர்வை அதற்கு முன்னர் செய்தேயிருக்கவில்லை. இந்த நகர்வுகளை எதிர்கொள்ள அதிகமான போராளிகள் தேவை. அதனால் களமுனை அணிகளையும் மாற்றிவிட போதிய போராளிகள் இருக்கவில்லை. 2006 இல் மன்னாரில் முன்னரணிற்கு சென்ற மாலதி படையணி போராளிகள் காயம் அல்லது மரணம் அடையும்வரை களத்திலேயே நிற்க வேண்டும்.

பள்ளமடு, ஆட்காட்டிவெளி களமுனைகள் கடுமையாக இருந்தன. வெட்டைவெளி. பகலில் எழுந்து நடமாடவே முடியாது. உடலில் தண்ணீர்பட வாரக்கணக்கில் செல்லும். இந்த முனையில் கணிசமானவர்கள் புதிய போராளிகள்.

நான்காம் ஈழப்போரில் இராணுவம் பயன்படுத்திய சூட்டுவலு எப்படியானதென்பதை சொல்லத் தேவையில்லை. புலிகளை வீழ்த்துவதென்றால் சூட்டுவலுவை அதிகரிக்க வேண்டுமென்ற சாதாரண உத்தியைத்தான் கையாண்டது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

அதென்ன சூட்டு வலு?

இதை புரிய வைக்கிறோம். ஏழு பேர் கொண்ட அணி இருக்கிறதென வைப்போம். ஆளுக்கு 120 ரவையுடன் ஒரு ஏகே துப்பாக்கி, ஒரு கையெறி குண்டு இருக்கிறதென வைப்போம். இதே போன்ற இன்னொரு அணியில் ஐந்து பேரிடம் 120 ரவையுடன் ஏகே துப்பாக்கி, இரண்டு பேரிடம் ஆளுக்கு 600 ரவைகளுடன் எல்.எம்.ஜி, கையெறி குண்டுகள் இருந்தால்- இரண்டாவது அணிதான் சூட்டுவலுவில் வலிமையான அணி. இந்த சிம்பிள் உத்தியை இராணுவம் கையிலெடுத்தது.

col-raju-artlery-300x211.jpg

 

மூன்று பேரை கொண்ட கொமாண்டோ செக்சன் (commando section)- செக்சன் என்பது இராணுவ அணி பிரிவை குறிப்பது. கொமாண்டோ செக்சன், செக்சன், பிளாட்டுன், கொம்பனி, ரெஜிமென்ற் என விரிந்து செல்லும்- ஒவ்வொரு கொமாண்டோ செக்சனிற்கும் ஒவ்வொரு எல்.எம்.ஜி வழங்கப்பட்டது. அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கட்டமைப்பிற்கும் தேவைக்கும் அதிகமான கனரக ஆயுதங்கள் வழங்கப்பட்டது. வான்புலிகளிற்கு எதிராக பயன்படுத்த இந்தியா வழங்கிய Anti Aricraft Artillery ரக கனரக துப்பாக்கிகளையெல்லாம் தரைச்சண்டைக்கும் ஒவ்வொரு பிரதேசத்திலும் தாராளமாக பாவித்தார்கள். இதனால் எதிர்முனையில் இருந்த புலிகள் தலையை தூக்கவே முடியவில்லை.

 

புலிகளின் ஓயாத அலைகள் 1,2,3 வெற்றிகளிற்கு காரணமும் சூட்டுவலுதான். அப்பொழுது 81,120mm மோட்டார்கள், 122,152 mm ஆட்றிகளாலும் புலிகளின் சூட்டுவலு அதிகரித்திருந்தது. அப்பொழுது புலிகள் 12.5,12.7,14.5 mm கனோன்களையெல்லாம் தாராளமாக பாவிக்க ரவை இருந்தது. கப்பல்கள் வர முடியாமல் போக, புலிகளின் சூட்டுவலு தாழ்ந்தது.

ஆயுதங்கள் இல்லை, போராளிகள் இல்லை, இருப்பவர்கள் அனுபவமற்ற புதியவர்கள், அவர்களின் இழப்புக்கள் என மாலதி படையணி தளபதி விதுசா மிகவும் மனமுடைந்து போனார். கட்டாயமாக பிடிக்கப்பட்டு களத்திற்கு கொண்டுவரப்படும் பெண்களால் யுத்தத்தை வெல்ல முடியாது, மாறாக இராணுவத்திடம் உயிருடன் பிடிபடுவதே நடக்குமென்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் புலிகளின் உயர்மட்டத்தில் யாரும் விதுசாவின் கருத்தை கணக்கில் எடுக்கவில்லை.

விதுசா கறாரான தளபதியாக இருந்தாலும், பெண்களை புரிந்து கொண்டவர். அதனால்தான் கட்டாயமாக பெண்களை களமுனைக்கு கொண்டு வருவதை எதிர்த்தார்.

விதுசாவின் மனநிலையையும், புலிகளின் நெருக்கடியையும் புரியவைக்கும் சம்பவமொன்று நடந்தது. 2009 தொடக்கத்தில் தளபதிகளிற்கிடையிலான கூட்டம் நடந்தது. அப்பொழுது பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி அதிகாரமுடையவராக மாறிவிட்டார். சாள்ஸ் எப்படி விடுதலைப்புலிகளிற்குள் நுழைந்து, அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டார் என்பதை இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது வாசகர்களிற்கு நினைவிருக்கலாம். அப்பொழுது குறிப்பிட்ட சம்பவம்தான். இப்பொழுது மீளவும் குறிப்பிடுகிறேன்.

இனி புலிகளால் யுத்தத்தை வெல்ல முடியாதென்பது தெரிந்தோ என்னவோ, களமுனையில் இருந்து தப்பியோடும் போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. குறிப்பாக புதிதாக சேர்க்கப்படும் பெண் போராளிகள் களத்தில் நிற்க முடியாமல் தப்பியோடுவது அதிகரித்திருந்தது. இதை குறிப்பிட்டு தளபதி பானு பேசினார். அவர்கள் தப்பியோடுவதாலேயே இராணுவம் விரைவாக முன்னேறுகிறது என்றார். அந்த கூட்டம் சாள்ஸ் தமையிலேயே நடந்தது. தளபதி பானுவும், சாள்ஸ் அன்ரனியும் மிக நெருக்கமானவர்கள். சாள்ஸ் அன்ரனி என்ன செய்தாலும், அது நன்றாக இருக்கிறதென பானு பாராட்டுவார்.

north-korea-Anti-aircraft-gunsPaddle-gun புலிகளின் கனோன் ஒன்று

சாள்ஸ் அன்ரனி பிறப்பதற்கு முன்னரே பானு புலிகளில் இருக்கிறார். இருவரும் நெருக்கமான பின்னர் “பானு ஐயா“ என சாள்ஸ் அழைக்க தொடங்கி, சுருக்கமாக “பானுயா“ என ஐ உச்சரிப்பு வராமல், ஒரு செல்லப்பெயரில் அழைப்பார்.

பெண் போராளிகள் பற்றிய பானுவின் குற்றச்சாட்டையடுத்து, மகளிர் தளபதிகளான விதுசா, துர்க்காவை குற்றம்சொல்லும் தோரணையில் சாள்ஸ் பேசிக்கொண்டிருந்தார். தப்பியோடுபவர்களை தடுக்க முடியாது என மகளிர் தளபதிகள் சொல்ல, அதை சாள்ஸ் கணக்கில் எடுக்கவில்லை. இந்த எதிரும் புதிருமான பேச்சு நீடிக்க, ஒரு கட்டத்தில் சாள்ஸ் ஒரு அதிரடியான உத்தரவை இட்டார்.

 

“புதிதாக இயக்கத்திற்கு பிடிக்கும் பெண்கள் அனைவருக்கும்  மொட்டை அடியுங்கள். அதன்பின்னர் யாரும் தப்பியோட முடியாது“

சாள்ஸ் அன்ரனியின் உத்தரவுகள் கொஞ்சம் ஏடாகூடமாகத்தான் இருக்கும். தளபதிகள் மட்டத்திலேயே கொஞ்சம் அப்படி இப்படி அவரை இரகசியமாக நக்கலடிப்பார்கள். மேல்மட்ட போராளிகள் புலிகேசி (இம்சை அரசன் 23ம் புலிகேசி வெளியான சமயத்தில்தான் சாள்ஸ் அன்ரனியும் பொறுப்பான பதவிகளிற்கு வந்தார்) என தமக்குள் சாள்சிற்கு பட்டப்பெயர் வைத்திருந்தனர். ஆகவே, சாள்ஸ் இப்படி உத்தரவிட்டது கூட்டத்தில் இருந்தவர்களிற்கு ஆச்சரியம் அளித்திருக்காது!

சாள்ஸின் உத்தரவை விதுசா ஏற்கவில்லை. அந்த கூட்டத்தில் இருந்த மூத்த தளபதியொருவருடன் பின்னர் பேசும்போது ஒரு விடயத்தை சொன்னார். “வழக்கமாக இப்படியான கூட்டங்களில் தளபதி விதுசா சென்ரிமென்ராக பேசுபவர் கிடையாது. சில சமயங்களில் சின்னச்சின்ன யோசனைகள் சொல்வாரே தவிர, ஒரேயடியாக இப்படி எதிர்க்கமாட்டார். அன்று கடுமையாக எதிர்த்தார். சில சமயங்களில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்தால், அந்தப் பெண்கள்தான் இராணுவத்திடம் சிக்குவார்கள் என நினைத்திருக்கலாம்“ என்றார்.

vithusa_4-300x207.jpg தளபதி விதுஷா

தலைமுடி பெண்களின் வாழ்வில் அத்தியாவசியமானது, மொட்டையடிப்பது பெண்களை உளரீதியிலும் பாதிக்கும் என விதுசா அந்த கூட்டத்தில் கடுமையாக எதிர்த்தார். சோதியா படையணி தளபதி துர்க்காவும் ஓரளவு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் சாள்ஸ் அன்ரனிக்கு ஆதரவாக பானு பேசினார். மொட்டையடித்தால்தான் பெண்கள் ஓடமாட்டார்கள் என்றார். “பானுயாவே சொன்னால் பிறகென்ன… பிடிக்கிற ஆட்களுக்கெல்லாம் ஒட்ட மொட்டையடியுங்கள்“ என சாள்ஸ் அன்ரனி உத்தரவிட்டார்.

அன்றைய கூட்டம் முடிய விதுசா அதிருப்தியுடன் எழுந்து சென்றார்.

அடுத்ததாக அவர் செய்த காரியம் என்ன தெரியுமா?

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/33375/

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, கிருபன் said:

சாள்ஸ் அன்ரனிக்கும், பானுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம்… பெண் போராளிகளின் தலைமுடி வெட்ட விதுஷா எதிர்ப்பு!

January 20, 2019
charles-anthony-prabakaran.jpg

பீஷ்மர்

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 52

நான்காம் ஈழப்போரின் தொடக்க காலத்திலேயே மாலதி படையணி சிறப்பு தளபதியாக இருந்த பிரிகேடியர் விதுஷா களைத்து விட்டார் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இலங்கை இராணுவத்தின் போர் உத்திதான் இதற்கு காரணம்.

மேடான பகுதியை நோக்கி தண்ணீர் ஓடும் பாணியில் அமைந்த இராணுவத்தின் போருத்தியை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால், மன்னார் களமுனையில் இன்னொரு போருத்தியை இராணுவம் பாவித்தது. அப்பொழுது நிலத்தை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமல்ல. நீண்ட போரை நடத்தி புலிகளின் ஆளணியை சேதமாக்குவதே திட்டம்.

புலிகளின் ஆளணி பற்றிய கணக்கு துல்லியமாக இலங்கை பாதுகாப்புத்துறையிடம் இருக்கவில்லை. உண்மையை சொன்னால், வன்னியிலிருந்த மக்கள் தொகை பற்றிய சரியான கணக்கே அரசாங்கத்திற்கு தெரியாது. இந்த குழப்பத்தை புலிகள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். வன்னி சனத்தொகை தெரிந்தால், அதற்கு அளவான உணவுப்பொருட்களைதான் அனுப்பி வைப்பார்கள். ஆளணியை அதிகரித்து காண்பித்து, உணவுப்பொருள்களை தமது பாவனைக்கு புலிகள் பாவித்தார்கள்.

புலிகளின் ஆளணி தொடர்பாக இறுதிவரை இராணுவத்திடம் மிகை மதிப்பீடே இருந்தது. அண்ணளவாக 25,000 போராளிகள் இருக்கலாமென கணக்கிட்டார்கள். இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் கோத்பாய ராஜபக்ச ஆகியோர் அப்பொழுது இந்த தொகையைதான் பகிரங்கமாக சொன்னார்கள்.

ஆனால் உண்மையில் புலிகளிடம் அவ்வளவு ஆள் பலம் இருக்கவில்லை. இவ்வளவு ஆட்பலம் இருந்தால், புலிகள் அந்த யுத்தத்தை சுலபமாக வென்றிருப்பார்கள்.

 

புலிகளிடம் மொத்தமாக எத்தனை போராளிகள் இருந்தார்கள் என்பது தெரியுமா?

யுத்தத்தின் இறுதியில் தகவல் கிடைத்து,  25,000 என சொன்னதற்காக கோத்தபாய ராஜபக்சவே இப்பொழுது வெட்கப்படுவார். யுத்தத்தின் இறுதி மாதங்களில், அரசியல்துறையினரிடம் பிரபாகரன் சொன்னது என்ன தெரியுமா?

“என்னிடம் 25,000 போராளிகளை திரட்டித் தாருங்கள். நான் யுத்தத்தை வென்று தருவேன்“.

கிழக்கை முழுமையாக இழந்து, வடக்கில் மட்டும் புலிகள் யுத்தத்தை எதிர்கொள்ள தொடங்கிய சமயத்தில், அவர்களிடம் 5,750- 6,250 வரையான போராளிகள்தான் இருந்தார்கள். நன்கு பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை இதுதான். கட்டாய ஆட்சேர்ப்பின் போது அதிகபட்சமாக 8,000 பேரை பிடித்து படையில் இணைத்திருந்தனர். இந்த 8,000 என்ற எண்ணிக்கை நிரந்தரமானதல்ல. ஒரு பக்கம் யுத்தத்தில் இவர்கள்தான் அதிகமாக இறந்தார்கள். மறுவளமாக, கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்டவர்கள் வீட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். மீண்டும் அவர்களை புலிகள் பிடித்துவர… ஓட என ஒரு சுற்றுவட்டத்தில் இவர்கள் இருந்தார்கள்.

 

அதிலும், கட்டாயமாக பிடிக்கப்பட்ட பெண்கள் ஓர்மமாக போரிடமாட்டார்கள். மன்னாரில் பெண்புலிகளின் நிலையை BOX அடித்து, இராணுவத்தினர் அவர்களை உயிரோடு தூக்கிச்செல்ல ஆரம்பித்தனர். மன்னாரின் தள்ளாடியில் இருந்து 2007 செப்ரெம்பரில் படை நடவடிக்கையை ஆரம்பித்தபோதும், தள்ளாடிக்கு அடுத்த அடம்பன் நகரத்தை கைப்பற்ற படையினர் எடுத்துக்கொண்ட காலம் எட்டு மாதங்கள். யுத்தத்தின் இறுதிக்காலத்தில் புலிகளின் இறுக்கமான கோட்டைக்குள் இராணுவம் முன்னேறிய வேகத்தையும், இதனையும் ஒப்பிட்டு பார்த்தால் விடயத்தை புரிந்து கொள்வீர்கள்.

2009 ஜனவரி 01ம் திகதி பரந்தன் சந்திக்கு 58வது டிவிசன் படையினர் வந்தனர். இதே படையணி ஜனவரி 15ம் திகதி தர்மபுரத்தை கைப்பற்றியது. ஜனவரி 28ம் திகதி விசுவமடுவை கைப்பற்றியது. புலிகளின் கோட்டைக்குள் எவ்வளவு விரைவாக முன்னேறியிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

ஆனால் 2007 இல் மன்னாரில் 58வது டிவிசன் படை நடவடிக்கையை ஆரம்பித்த போது, நிலத்தை கைப்பற்றுவது முதலாவது நோக்கமாக இருக்கவில்லை. தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு புலிகளின் ஆளணியை சேதம் செய்வதே நோக்கம். முன்னரணில் இருந்து சிறிதுதூரம் நகர்ந்து, புலிகளின் முன்னரணை BOX அடித்து தாக்குதல் நடத்துவார்கள். பின்னர், பழைய நிலைகளிற்கே திரும்பி விடுவார்கள். பல மாதங்கள் நீடித்த இந்த தாக்குதலில் சுமார் 700 போராளிகள் மரணமானார்கள். அதில் பெரும்பாலானவர்கள் மாலதி படையணி பெண் போராளிகள்.

2007 செப்ரெம்பரில் தள்ளாடியில் இருந்து நகர்வை தொடங்கிய 58வது டிவிசன் 2008 மே மாதம் அடம்பன் நகரத்தை கைப்பற்றியது. தள்ளாடியில் இருந்து வெறும் 9 கிலோமீற்றர் தொலைவிலேயே அடம்பன் உள்ளது. 9 கிலோமீற்றரிற்கு 9 மாதம்!

இராணுவம் நிலத்தை பிடிக்க முயலவில்லை, தமது ஆளணியை சேதமாக்கவே முனைகிறதென்பதை சிறிது காலத்தின் பின்னரே புலிகள் புரிந்து கொண்டார்கள். அதன் பின்னர்தான் பின்வாங்கும் முடிவை எடுத்தனர்.

தொடர்ந்து முன்னரணில் நிற்கும் பெண் போராளிகளும் களைத்திருந்தார்கள். முன்னரண் என்பது ஒரு காவலரண். அடுத்த காவலரணிற்கு செல்வதற்கு இடுப்பளவு ஆழத்தில் வெட்டப்பட்ட நீளமான பதுங்குகுழி பாதை. காவலரணிற்கு பின்னால் வெட்டப்பட்ட பதுங்குகுழிக்குள்தான் வாழ்க்கை. பெண்களிற்கு இயற்கை பிரச்சனைகள் எல்லாம் இருக்கும். சுகாதாரமாக இருக்க தண்ணீர் வசதிகள் எல்லாம் தேவை. ஆனால் முன்னரணில் நீண்டகாலம் நிற்கும் பெண் போராளிகளிற்கு இந்த வசதிகள் எல்லாம் கிடையாது. மூன்று நான்கு மாதங்களிற்கு ஒருமுறை அணிகள் மாற்றப்பட்டு ஒரு வாரமளவில் ஓய்வு வழங்கப்படும் வழக்கத்தை புலிகள் முன்னைய யுத்தங்களில் வைத்திருந்தார்கள். ஆனால் நான்காம் ஈழப்போரில் அது சாத்தியமில்லை. காரணம்- அதிக ஆளணி தேவையாக இருந்தது. மன்னாரிலிருந்து 58வது டிவிசன், வவுனியா பாலமோட்டையிலிருந்து 57வது டிவிசன், மண்கிண்டிமலையிலிருந்து 59வது டிவிசன் முன்னேற்றத்தை ஆரம்பித்திருந்தன. முகமாலை-நாகர்கோவில் முன்னரண் நிலையில் 55,53 டிவிசன்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தன.

 

இலங்கை இராணுவம் இப்படி பிரமாண்ட தயாரிப்பில் பல முனை நகர்வை அதற்கு முன்னர் செய்தேயிருக்கவில்லை. இந்த நகர்வுகளை எதிர்கொள்ள அதிகமான போராளிகள் தேவை. அதனால் களமுனை அணிகளையும் மாற்றிவிட போதிய போராளிகள் இருக்கவில்லை. 2006 இல் மன்னாரில் முன்னரணிற்கு சென்ற மாலதி படையணி போராளிகள் காயம் அல்லது மரணம் அடையும்வரை களத்திலேயே நிற்க வேண்டும்.

பள்ளமடு, ஆட்காட்டிவெளி களமுனைகள் கடுமையாக இருந்தன. வெட்டைவெளி. பகலில் எழுந்து நடமாடவே முடியாது. உடலில் தண்ணீர்பட வாரக்கணக்கில் செல்லும். இந்த முனையில் கணிசமானவர்கள் புதிய போராளிகள்.

நான்காம் ஈழப்போரில் இராணுவம் பயன்படுத்திய சூட்டுவலு எப்படியானதென்பதை சொல்லத் தேவையில்லை. புலிகளை வீழ்த்துவதென்றால் சூட்டுவலுவை அதிகரிக்க வேண்டுமென்ற சாதாரண உத்தியைத்தான் கையாண்டது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

அதென்ன சூட்டு வலு?

இதை புரிய வைக்கிறோம். ஏழு பேர் கொண்ட அணி இருக்கிறதென வைப்போம். ஆளுக்கு 120 ரவையுடன் ஒரு ஏகே துப்பாக்கி, ஒரு கையெறி குண்டு இருக்கிறதென வைப்போம். இதே போன்ற இன்னொரு அணியில் ஐந்து பேரிடம் 120 ரவையுடன் ஏகே துப்பாக்கி, இரண்டு பேரிடம் ஆளுக்கு 600 ரவைகளுடன் எல்.எம்.ஜி, கையெறி குண்டுகள் இருந்தால்- இரண்டாவது அணிதான் சூட்டுவலுவில் வலிமையான அணி. இந்த சிம்பிள் உத்தியை இராணுவம் கையிலெடுத்தது.

col-raju-artlery-300x211.jpg

 

மூன்று பேரை கொண்ட கொமாண்டோ செக்சன் (commando section)- செக்சன் என்பது இராணுவ அணி பிரிவை குறிப்பது. கொமாண்டோ செக்சன், செக்சன், பிளாட்டுன், கொம்பனி, ரெஜிமென்ற் என விரிந்து செல்லும்- ஒவ்வொரு கொமாண்டோ செக்சனிற்கும் ஒவ்வொரு எல்.எம்.ஜி வழங்கப்பட்டது. அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கட்டமைப்பிற்கும் தேவைக்கும் அதிகமான கனரக ஆயுதங்கள் வழங்கப்பட்டது. வான்புலிகளிற்கு எதிராக பயன்படுத்த இந்தியா வழங்கிய Anti Aricraft Artillery ரக கனரக துப்பாக்கிகளையெல்லாம் தரைச்சண்டைக்கும் ஒவ்வொரு பிரதேசத்திலும் தாராளமாக பாவித்தார்கள். இதனால் எதிர்முனையில் இருந்த புலிகள் தலையை தூக்கவே முடியவில்லை.

 

புலிகளின் ஓயாத அலைகள் 1,2,3 வெற்றிகளிற்கு காரணமும் சூட்டுவலுதான். அப்பொழுது 81,120mm மோட்டார்கள், 122,152 mm ஆட்றிகளாலும் புலிகளின் சூட்டுவலு அதிகரித்திருந்தது. அப்பொழுது புலிகள் 12.5,12.7,14.5 mm கனோன்களையெல்லாம் தாராளமாக பாவிக்க ரவை இருந்தது. கப்பல்கள் வர முடியாமல் போக, புலிகளின் சூட்டுவலு தாழ்ந்தது.

ஆயுதங்கள் இல்லை, போராளிகள் இல்லை, இருப்பவர்கள் அனுபவமற்ற புதியவர்கள், அவர்களின் இழப்புக்கள் என மாலதி படையணி தளபதி விதுசா மிகவும் மனமுடைந்து போனார். கட்டாயமாக பிடிக்கப்பட்டு களத்திற்கு கொண்டுவரப்படும் பெண்களால் யுத்தத்தை வெல்ல முடியாது, மாறாக இராணுவத்திடம் உயிருடன் பிடிபடுவதே நடக்குமென்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் புலிகளின் உயர்மட்டத்தில் யாரும் விதுசாவின் கருத்தை கணக்கில் எடுக்கவில்லை.

விதுசா கறாரான தளபதியாக இருந்தாலும், பெண்களை புரிந்து கொண்டவர். அதனால்தான் கட்டாயமாக பெண்களை களமுனைக்கு கொண்டு வருவதை எதிர்த்தார்.

விதுசாவின் மனநிலையையும், புலிகளின் நெருக்கடியையும் புரியவைக்கும் சம்பவமொன்று நடந்தது. 2009 தொடக்கத்தில் தளபதிகளிற்கிடையிலான கூட்டம் நடந்தது. அப்பொழுது பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி அதிகாரமுடையவராக மாறிவிட்டார். சாள்ஸ் எப்படி விடுதலைப்புலிகளிற்குள் நுழைந்து, அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டார் என்பதை இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது வாசகர்களிற்கு நினைவிருக்கலாம். அப்பொழுது குறிப்பிட்ட சம்பவம்தான். இப்பொழுது மீளவும் குறிப்பிடுகிறேன்.

இனி புலிகளால் யுத்தத்தை வெல்ல முடியாதென்பது தெரிந்தோ என்னவோ, களமுனையில் இருந்து தப்பியோடும் போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. குறிப்பாக புதிதாக சேர்க்கப்படும் பெண் போராளிகள் களத்தில் நிற்க முடியாமல் தப்பியோடுவது அதிகரித்திருந்தது. இதை குறிப்பிட்டு தளபதி பானு பேசினார். அவர்கள் தப்பியோடுவதாலேயே இராணுவம் விரைவாக முன்னேறுகிறது என்றார். அந்த கூட்டம் சாள்ஸ் தமையிலேயே நடந்தது. தளபதி பானுவும், சாள்ஸ் அன்ரனியும் மிக நெருக்கமானவர்கள். சாள்ஸ் அன்ரனி என்ன செய்தாலும், அது நன்றாக இருக்கிறதென பானு பாராட்டுவார்.

north-korea-Anti-aircraft-gunsPaddle-gun புலிகளின் கனோன் ஒன்று

சாள்ஸ் அன்ரனி பிறப்பதற்கு முன்னரே பானு புலிகளில் இருக்கிறார். இருவரும் நெருக்கமான பின்னர் “பானு ஐயா“ என சாள்ஸ் அழைக்க தொடங்கி, சுருக்கமாக “பானுயா“ என ஐ உச்சரிப்பு வராமல், ஒரு செல்லப்பெயரில் அழைப்பார்.

பெண் போராளிகள் பற்றிய பானுவின் குற்றச்சாட்டையடுத்து, மகளிர் தளபதிகளான விதுசா, துர்க்காவை குற்றம்சொல்லும் தோரணையில் சாள்ஸ் பேசிக்கொண்டிருந்தார். தப்பியோடுபவர்களை தடுக்க முடியாது என மகளிர் தளபதிகள் சொல்ல, அதை சாள்ஸ் கணக்கில் எடுக்கவில்லை. இந்த எதிரும் புதிருமான பேச்சு நீடிக்க, ஒரு கட்டத்தில் சாள்ஸ் ஒரு அதிரடியான உத்தரவை இட்டார்.

 

“புதிதாக இயக்கத்திற்கு பிடிக்கும் பெண்கள் அனைவருக்கும்  மொட்டை அடியுங்கள். அதன்பின்னர் யாரும் தப்பியோட முடியாது“

சாள்ஸ் அன்ரனியின் உத்தரவுகள் கொஞ்சம் ஏடாகூடமாகத்தான் இருக்கும். தளபதிகள் மட்டத்திலேயே கொஞ்சம் அப்படி இப்படி அவரை இரகசியமாக நக்கலடிப்பார்கள். மேல்மட்ட போராளிகள் புலிகேசி (இம்சை அரசன் 23ம் புலிகேசி வெளியான சமயத்தில்தான் சாள்ஸ் அன்ரனியும் பொறுப்பான பதவிகளிற்கு வந்தார்) என தமக்குள் சாள்சிற்கு பட்டப்பெயர் வைத்திருந்தனர். ஆகவே, சாள்ஸ் இப்படி உத்தரவிட்டது கூட்டத்தில் இருந்தவர்களிற்கு ஆச்சரியம் அளித்திருக்காது!

சாள்ஸின் உத்தரவை விதுசா ஏற்கவில்லை. அந்த கூட்டத்தில் இருந்த மூத்த தளபதியொருவருடன் பின்னர் பேசும்போது ஒரு விடயத்தை சொன்னார். “வழக்கமாக இப்படியான கூட்டங்களில் தளபதி விதுசா சென்ரிமென்ராக பேசுபவர் கிடையாது. சில சமயங்களில் சின்னச்சின்ன யோசனைகள் சொல்வாரே தவிர, ஒரேயடியாக இப்படி எதிர்க்கமாட்டார். அன்று கடுமையாக எதிர்த்தார். சில சமயங்களில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்தால், அந்தப் பெண்கள்தான் இராணுவத்திடம் சிக்குவார்கள் என நினைத்திருக்கலாம்“ என்றார்.

vithusa_4-300x207.jpg தளபதி விதுஷா

தலைமுடி பெண்களின் வாழ்வில் அத்தியாவசியமானது, மொட்டையடிப்பது பெண்களை உளரீதியிலும் பாதிக்கும் என விதுசா அந்த கூட்டத்தில் கடுமையாக எதிர்த்தார். சோதியா படையணி தளபதி துர்க்காவும் ஓரளவு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் சாள்ஸ் அன்ரனிக்கு ஆதரவாக பானு பேசினார். மொட்டையடித்தால்தான் பெண்கள் ஓடமாட்டார்கள் என்றார். “பானுயாவே சொன்னால் பிறகென்ன… பிடிக்கிற ஆட்களுக்கெல்லாம் ஒட்ட மொட்டையடியுங்கள்“ என சாள்ஸ் அன்ரனி உத்தரவிட்டார்.

அன்றைய கூட்டம் முடிய விதுசா அதிருப்தியுடன் எழுந்து சென்றார்.

அடுத்ததாக அவர் செய்த காரியம் என்ன தெரியுமா?

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/33375/

இந்த தலையங்கத்தைப் பார்த்தால் சாள்ஸ் அன்ரனி,யாரோ பெண்ணோட😂 தொடர்பு என்ட பிம்பத்தை தருகிறது 

Share this post


Link to post
Share on other sites
On 2/2/2019 at 8:56 PM, ரதி said:

இந்த தலையங்கத்தைப் பார்த்தால் சாள்ஸ் அன்ரனி,யாரோ பெண்ணோட😂 தொடர்பு என்ட பிம்பத்தை தருகிறது 

புலிகள் இயக்கத்தைப் பற்றி அடிப்படை வரலாறுகள் தெரிந்தவர்களுக்கு இப்படியான பிம்பம் வராது. மஞ்சள் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், பலான கதைகளையும் படிப்பதைக் கைவிட்டால் மனம் தெளிவாக இருக்கும்😬

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

சொர்ணத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 53

January 24, 2019
DcVvqllU0AIZy8F.jpg சொர்ணம்-சூசை- தமிழ்ச்செல்வன்- பிரபாகரன்- கிட்டுவின் இறுதி நிகழ்வு (தீருவில்)

பீஷ்மர்

கருணா பிரிவு சமயத்தில், திருகோணமலை தளபதியாக இருந்த பதுமனை புலிகள் எப்படி வன்னிக்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை இந்த தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். தளபதி சொர்ணம்தான் இந்த நடவடிக்கையை கச்சிதமாக செய்தார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்ட இரண்டு குழப்பத்திலும் பிரபாகரனிற்கு நம்பிக்கையானவராக, அவருக்கு ஆபத்தில் உதவும் முதல் மனிதராக சொர்ணம் இருந்தார். சொர்ணத்தின் வரலாற்றை அறிந்தாலே இந்த பிணைப்பை புரிந்து கொள்ளலாம்.

1994 இல் மாத்தையா விவகாரம் புலிகளிற்குள் சிக்கலை தோற்றுவித்தது. வன்னிப் படையணி மாத்தையாவிடம் இருந்தது. மாத்தையாவின் தீவிர விசுவாசிகளாக, அறியப்பட்ட சண்டைக்காரர்களான சுரேஸ் போன்றவர்கள் இருந்தார்கள். மாத்தையாவை கைது செய்யும்போது நிச்சயம் பெரிய சண்டை மூளுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொர்ணம் அதனை வித்தியாசமாக கையாண்டார். அதனை விபரமாக பின்னர் பார்க்கலாம்.

1964 இல் பிறந்த சொர்ணத்தின் இயற்பெயர் யோசப் அன்ரனிதாஸ். யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்தபோதும் திருகோணமலையின் அரசடி வாழைத்தோட்டம் என்ற சிறிய கிராமம்தான் சொர்ணம் வளர்ந்த இடம். 1983 இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து, இந்தியாவின் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றார். இதே பயிற்சி முகாமில்தான் கருணாவும் பயிற்சி பெற்றார்.

பயிற்சியின் பின்னர் இந்தியாவில் தங்கியிருந்த சொர்ணத்தின் நடவடிக்கைகள் பிரபாகரனிற்கு பிடித்து போய் விட்டது. அமைப்பிற்காக எந்த வேலையையும் செய்ய தயாராக இருந்ததுடன், தலைமை மீது அளவற்ற விசுவாசம் வைத்திருந்தார். அதனால், பிரபாகரனின் மெய்பாதுகாவலராகவும் செயற்பட்டார்.

 

விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆரம்பகால போராளிகள் குறைந்தளவானவர்கள். அனைவரும் பிரபாகரனுடன் பரிச்சயமானவர்கள். அவர்கள் எல்லோரையும் விட சொர்ணத்தில் வித்தியாசமான பிணைப்பொன்றை பிரபாகரன் பேணினார். பின்னாளில் சொர்ணத்தின் நடவடிக்கைகள் சிலவற்றில் அதிருப்தியடைந்து அவரை தள்ளிவைத்த போதும், நெருக்கடியான சமயம் ஏற்படும்போது முதலாவது ஆளாக சொர்ணத்தைதான் பிரபாகரன் அழைத்தார். இருவருக்குமிடையிலான பிணைப்பிற்கு இதுதான் சாட்சி.

url-300x225.jpg

 

1990இல்தான் தேர்ச்சிமிக்க படையணியொன்றின் மூலம் பிரபாகரனின் பாதுகாப்பை உறுதி செய்வதென விடுதலைப்புலிகள் அமைப்பு முடிவுசெய்தது. அந்தப் பொறுப்பு சொர்ணத்திடம் வழங்கப்பட்டது. இம்ரான்- பாண்டியன் படையணியென்ற பெயரில் ஒரு படையணியை உருவாக்கி பிரபாகரனின் பாதுகாப்பை சொர்ணம் கவனித்துக் கொண்டார். பின்னாளில் பிரபாகரனின் பாதுகாப்பை நேரடியாக கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கடாபியிடம் சென்றாலும், சொர்ணம் அந்த படையணியின் தளபதியாக 1995 வரை இருந்தார்.

 

இரண்டாம் ஈழப்போர் காலத்தில் யாழ்ப்பாண குடாநாடுதான் புலிகளின் பிரதான போர்த்தளம். வடக்கில் பலாலி தளமும், தென்கிழக்கு பகுதியில் ஆனையிறவுதளமும் இருந்தன. இந்தப்பகுதிகளை மையமாக வைத்தே பிரதான சண்டைகள் நடந்தன. இந்தக்களங்களில் சொர்ணம் ஈடு இணையற்ற தளபதியாக அப்போது விளங்கினார். அந்த சமயத்தில் புலிகளிடம் இரண்டு நட்சத்திர தளபதிகள் இருந்தனர். ஒருவர் பால்ராஜ். அவர் அதிகம் வன்னியை தளமாக கொண்டிருந்தார். மற்றையவர் சொர்ணம். இவர் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டிருந்தார். ஆனால் பெரும்பாலும் யாழில் நடந்த பெரும்பாலான களங்களை இருவருமே பங்குபோட்டனர்.

1990 களில் சொர்ணம் அச்சுறுத்தும் தளபதியாக இருந்தார். இராணுவம் சொர்ணத்தை பிரிகேடியர் என தொலைத்தொடர்பு கருவிகளில் அழைத்து கொள்வதாக அப்போது போராளிகளிடம் பேச்சிருந்தது. போராளிகளும் சொர்ணம் என்றால் சிறுநீர் கழிக்காத குறையாக பயப்பிடுவார்கள். அவ்வளவு சக்திமிக்கவராக, கோபக்காரராக வலம் வந்தார். அவரது கட்டளையில் நடந்த தாக்குதல்களும் வெற்றியடைய, பேராளுமையாக உருப்பெற்றார்.

சொர்ணம் என்பதும் குறிப்பிட வேண்டியது கட்டைக்காடு ஆயுதக்களஞ்சியம் மீதான தாக்குதல். ஆனையிறவு மீது புலிகள் நடத்திய ஆகாய கடல்வெளி சமரின் பின் புலிகளிற்கு ஆயுதப்பஞ்சம் ஏற்பட்டது. ஆயுத இருப்பை உறுதி செய்யாவிட்டால் அடுத்தடுத்து இராணுவம் மேற்கொள்ளும் பெரிய நடவடிக்கைகளை தாக்குப்பிடிக்க முடியாதென்ற இக்கட்டான நிலை புலிகளிற்கு உருவானது. இந்த சமயத்தில் சொர்ணம் தனது படையணியுடன் கட்டைக்காடு ஆயுதக்களஞ்சியத்தை கைப்பறினார். அந்த ஆயுதங்கள் புலிகளிற்கு பெரும் துணையாக இருந்தன.

1990களின் பின்னர் புலிகள் கூட்டுப்படை தலைமையகம் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள். இதன் முதலாவது தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். அப்போது வன்னியில் மாங்குளம், கொக்காவில் மற்றும் ஆனையிறவு தாக்குதல்களில் சிறப்பாக செயற்பட்டு, நட்சத்திரமாக உருவாகியிருந்தார் பால்ராஜ்.

பால்ராஜின் தாக்குதல் திட்டமுறை வேறு, சொர்ணத்தின் முறை வேறு. பால்ராஜ் எதையும் நுணுக்கமாக திட்டமிடுபவர். ஒரு திட்டம் சிக்கலானால் மாற்று, அதற்கு மாற்று என நிறைய உபாயங்களை தயார்படுத்திக் கொள்பவர். ஆளணி இழப்பை தவிர்த்து, தந்திரோபாய நகர்வுகளிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். ஆனால் சொர்ணம் வேறு மாதிரி. எல்லாமே அதிரடிதான் அவரது பாணி.

அவ்வளவு நுணுக்கமான திட்டமிடல் இருப்பதில்லை. ஆக்ரோசம்தான் மூலதனம். மண்டைதீவு தாக்குதல், கட்டைக்காடு முகாம் தாக்குதல் என்பவற்றில் புதிய போருத்திகளை சொர்ணம் கையாண்டார்தான். கட்டைக்காடு தாக்குதலில்தான் எதிரிகளின் நிலைக்கு பின்புறமாக வந்து, பிடறியில் அதிர்ச்சியடி அடிக்கும் உத்தியை கையாண்டார்கள். அது இறுதிவரை வெற்றிகரமான உத்தியாக இருந்தது.

 

எனினும், இப்படி ஓரிரண்டு தாக்குதல்கள்தான் சொர்ணத்தின் பெயர் சொல்பவையாக அமைந்தன. மற்றும்படி, “அதோ தெரிகிறது இலக்கு, தாக்கு“ உத்திதான். இது ஆரம்பத்தில் கைகொடுத்தாலும், பின்னர் கைகொடுக்கவில்லை.

கூட்டுப்படை தலைமைய தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்ட பின்னர் விமர்சனமொன்று கிளம்பியது. அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் சாள்ஸ் அன்ரனி படையணி தளபதியாக செயற்பட்டவர். அந்தப் பொறுப்பிலிருந்து கூட்டுப்படை தலைமையகத் தளபதியாக மாற்றப்பட்ட பின்னரும், அவர் படையணி தளபதியாகவே செயற்படுகிறார் என்ற விமர்சனம் கிளம்பியது. அனைத்து விடயங்களிலும் சாள்ஸ் அன்ரனி படையணியை முன்னிலைப்படுத்தியே அவர் செயற்பட்டதாக மற்றைய தளபதிகளிடம் அதிருப்தியேற்பட்டது.

இந்த விமர்சனங்களையடுத்து, கூட்டுப்படை தலைமை தளபதியாக சொர்ணம் நியமிக்கப்பட்டார். 1996 இல் யாழ்ப்பாண குடாநாட்டை இராணுவம் கைப்பற்றும்வரை அந்தப் பொறுப்பில் சொர்ணம் செயற்பட்டார். 1996 சூரியக்கதிர் நடவடிக்கைதான் சொர்ணத்திற்கு சரிவை ஏற்படுத்தியது. அதன்பின் அவர் தன்னை நிரூபிக்கவே முடியவில்லை. எல்லா களங்களிலும் சறுக்கினார்.

யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் 1995 இல் சூரியக்கதிர் நடவடிக்கை ஆரம்பமானது. அந்த பெருமெடுப்பிலான நடவடிக்கையை புலிகள் எதிர்கொள்ள முடியவில்லை. இயன்றவரை போரிட்டபடி பின்வாங்கினார்கள். இந்த சமரில் சொர்ணத்தின் திட்டங்கள் பயனளிக்கவில்லை. குறிப்பாக தென்மராட்சியை இராணுவம் கைப்பற்றிய விவகாரம்.

sornam_3-300x300.jpg சொர்ணம்-பால்ராஜ்- தமிழ்ச்செல்வன்

அந்த சமயத்தில் ரவி என்பவர் யாழ்மாட்ட தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். ரவி அறியப்பட்ட தளபதியல்ல. சூரியக்கதிர் நடவடிக்கையில் எங்கோ ஒரு மூலையில் சிறப்பாக செயற்பட்டார் என, தென்மராட்சியில் யுத்தம் மையம் கொண்ட சமயத்தில் ரவி தளபதியாக்கப்பட்டார்.

ரவிக்கு வழங்கப்பட்டிருந்த படையணியை சரியான இடங்களில் நிறுத்தவில்லை. இதனால் இரவோடு இரவாக இராணுவம் சிக்கலில்லாமல் சாவகச்சேரிக்குள் நுழைந்தது. அனைவரும் வன்னிக்கு தப்பிச்செல்ல வேண்டியேற்பட்டது.

யாழ்ப்பாண தோல்விக்கான முழு பொறுப்பும் இரண்டுபேரின் தலையில் விழுந்தது. ஒருவர் ரவி. அவர் சாதாரண போராளியாக படையணியில் விடப்பட்டார். சிறிதுகாலத்தில் அமைப்பிலிருந்து விலகி சென்றுவிட்டார். அடுத்தவர் சொர்ணம். அவர் திருகோணமலை மாவட்ட தளபதியாக அனுப்பப்பட்டார்.

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/34130/

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, கிருபன் said:

புலிகள் இயக்கத்தைப் பற்றி அடிப்படை வரலாறுகள் தெரிந்தவர்களுக்கு இப்படியான பிம்பம் வராது. மஞ்சள் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், பலான கதைகளையும் படிப்பதைக் கைவிட்டால் மனம் தெளிவாக இருக்கும்😬

இதோடா வந்திட்டாரு 🙃 உத்தம புத்திரன் 😧

Share this post


Link to post
Share on other sites

சொர்ணத்தின் திருமணம்!: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 54

January 27, 2019
FB_IMG_1526340135425.jpg

பீஷ்மர்

சொர்ணத்தின் முதலாவது வீழ்ச்சி சாவகச்சேரியில் நிகழ்ந்ததை கடந்த வாரம் பார்த்தோம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டாவது வீழ்ச்சியும் சாவகச்சேரியில்தான் சொர்ணத்திற்கு நிகழ்ந்தது. அதை தொடரும் பகுதிகளில் பார்க்கலாம். சொர்ணம் குறித்த கடந்த பகுதியில், ஏற்கனவே தமிழ்பக்கத்தில் வெளியான சில பகுதிகளில் வெளியான சம்பவங்கள் இருந்ததால், கூறியது கூறல் போன்ற உணர்வு ஏற்பட்டதாக பல வாசகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

சொர்ணம் குறித்து, தமிழ்பக்கம் ஏற்கனவே ஒரு தொடரை வெளியிட்டிருந்தது. மினி தொடரிலும் சில சம்பவங்கள் சொல்லப்பட்டிருக்கலாம். அதனால், “பழையதை போன்ற உணர்வு“ வாசகர்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இனி வரும் பகுதிகளில் அதை கவனத்தில் கொள்கிறோம். சுட்டிக்காட்டிய வாசகர்களிற்கு நன்றி.

சொர்ணத்திற்கும் பிரபாகரனிற்குமிடையில் இருந்த பிணைப்பை கடந்த இதழ்களில் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், சொர்ணத்தின் வாழ்வுடன் ஏதோவொரு விதத்தில் தொடர்புபட்டிருந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறிப்பிட வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தை ஏற்கனவே, சொர்ணம் குறித்த தொடரில் குறிப்பிட்டிருந்தோம். புதிய வாசகர்களிற்காகவும், சம்பவ தொடர்ச்சிக்காகவும் குறிப்பிடுகிறோம்.

சொர்ணம் இம்ரான்- பாண்டியன் படையணியின் தளபதியாக செயற்பட்டார். பின்னாளில் அந்த பொறுப்பை வகித்த கடாபி (ஆதவன்) பிரபாகரனின் பாதுகாப்பு விவகாரங்களை கவனித்தார். அவருக்கு அடுத்த நிலையில் செல்லக்கிளி என்பவர் இருந்தார். இவர் மட்டக்களப்பை சேர்ந்தவர். தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.

 

சொர்ணம் இம்ரான்- பாண்டியன் படையணியிலிருந்து மாற்றப்பட இருந்தார். அடுத்தநிலை தளபதிகளை வளர்க்க புதிய தளபதி அவசியம். அடுத்தது, மாத்தையா விவகாரம். மாத்தையா விவகாரத்தின் பின் புலிகள் முழுமையாக தங்களை மறுசீரமைத்தனர். சொர்ணத்தின் மாற்றம் சந்தேகத்தின் பாற்பட்டதல்ல. அந்த பொறுப்பிலிருப்பவரும் மாற்றப்பட வேண்டுமென்ற விதியை அப்போதுதான் உருவாக்கினார்கள்.

மாத்தையா விவகாரத்தின் போது பிரபாகரனின் பாதுகாப்பு பொறுப்பாளராக இருந்தவர் சொர்ணம். பிரபாகரனின் தொலைத்தொடர்பாளர் செங்கமலம் போன்றவர்கள் மாத்தையாவுடன் தொடர்பில் இருந்த தகவல் வந்ததும் சொர்ணம் ஆடிப்போய் விட்டார். பிரபாகரனின் பாதுகாப்பு உறுப்பினர்கள் வரை மாத்தையா ஊடுருவி விட்டார் என்றதை அறிந்ததும் சொர்ணம் ஆடிப்போய் விட்டார். பிரபாகரனை பாதுகாக்க முடியுமா என்ற சந்தேகமும், பயமும் அவரை ஆட்டுவித்தது. நேராக பொட்டம்மானின் முகாமிற்கு சென்றார். கதிரையில் உட்கார்ந்திருந்த பொட்டம்மானின் காலைப் பிடித்து அழத் தொடங்கிவிட்டார். பொட்டம்மான் ஆறுதல் சொல்லி அவரை தேற்றியது தனிக்கதை. இது சொர்ணத்தின் விசுவாசத்தின் சாட்சி.

 

49i40044.jpg

சொர்ணம் இடமாற்றம் செய்யப்பட்டால் அடுத்தது யார் என்ற கேள்வியிருந்தது. கடாபிதான் அடுத்த தெரிவு. கடாபிக்காகத்தான் சொர்ணத்தை மாற்றும் முடிவை பிரபாகரன் எடுத்தார். ஆனால் கடாபியுடன் போட்டியிட இன்னொருவர் விரும்பினார். அது செல்லக்கிளி. பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றால், இலகுவாக அந்தப்பொறுப்பை எடுக்கலாமென நம்பினார்.

 

செல்லக்கிளி 1986 இல் மட்டக்களப்பில் பயிற்சி பெற்றவர். இந்திய இராணுவ காலம் முதல் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தவர். பிரபாகரனின் தனிப்பட்ட மெய்பாதுகாவலராகவும் செயற்பட்டவர்.

போட்டியில் கடாபி தன்னைவிட முன்னிலையில் இருப்பது செல்லக்கிளிக்கும் தெரியும். அதனால் குறுக்குவழியில் அதனை அடைய முயன்றார்.

பிரபாகரனின் அன்றாட வழக்கங்களில் ஒன்று காலை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி. அப்போது கொக்குவிலில் பிரபாகரனின் முகாம் இருந்தது. இது 1994 இல் நிகழ்ந்தது.

காலை உடற்பயிற்சியின் பின்னர் நன்றாக நீரருந்துவார். அப்படித்தான் ஒருநாள் நடைப்பயிற்சியின் பின் நீரருந்த விரும்பினார். அவரது வீட்டில் நின்ற போராளியொருவரிடம் பிரபாகரன் நீர் கேட்டார்.

அப்போது, பிரபாகரனின் உணவுகள் கிரமமாக சோதனை செய்யப்படுவதில்லை. பாதுகாப்பு பொறுப்பாளர் இடையிடையே சோதனை செய்வார். அது பாதுகாப்பு பொறுப்பாளரின் முடிவு. பின்னாளில்தான் அது வழக்கமாக்கப்பட்டது. மருத்துவ போராளியொருவர் பாதுகாப்பு குழுவில் அங்கம் வகித்தார். பிரபாகரனிற்கு வழங்கப்படும் உணவுகளை அவர்தான் முதலில் உண்பார். அவர் உண்ட பன்னிரண்டு நிமிடங்களின் பின்னர்தான் பிரபாகரன் உணவருந்துவார். போராளிகள் சந்திப்பில், அனைவரும் உணவருந்துவார்கள். அந்த சமயத்தில் அனைவருக்கும் ஒரே உணவுதான். ஆனால், பிரபாகரனின் சமையல்கூடத்திலிருந்து தனியாக தயார் செய்யப்பட்டு அந்த மருத்துவ போராளியிடம் கையளிக்கப்படும். அவர் உணவுமேசைக்கு அனைவரும் செல்லும்வரை டிபன் கரியருடன் இருப்பார்.

உடற்பயிற்சியின் பின் பிரபாகரன் நீர் கேட்டதும், அங்கு காவல்கடமையிலிருந்த போராளி உள்ளே சென்று நீர் எடுத்து வந்தார். அப்போது செல்லக்கிளி திடீரென வந்து நீரை வாங்கி சோதனை செய்தார். அந்த நீரை அருந்திய செல்லக்கிளி, அது ஒரு மாதிரி இருப்பதாக எச்சரித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே வயிற்றைப்பொத்திக்கொண்டு உட்கார்ந்தார். வாந்தி எடுத்தார். வாயிலிருந்து நுரை தள்ளினார்.

ஏதோ விபரீதம் என முகாம் எச்சரிக்கப்பட்டது. உடனடியாக பிரபாகரன் அரியாலையிலிருந்து இன்னொரு முகாமிற்கு மாற்றப்பட்டார். அங்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கொக்குவில் முகாம் உயர்மட்ட விசாரணையாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. பிரபாகரன் அருந்தும் நீரில் யாரோ நஞ்சு கலந்திருக்க வேண்டுமென்பது முதல்கட்ட தகவல். அதை அருந்திய செல்லக்கிளி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

 

இந்த விவகாரம் பல்வேறு கோணங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது. பொட்டம்மானிற்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. அது செல்லக்கிளி மீதே!

பிரபாகரனிடமும் அது பற்றி சொல்லியுள்ளார். எனினும், பிரபாகரன் அதை ஏற்கவில்லை. தனது உயிரை காப்பாற்றியவராகவே பிரபாகரன் நினைத்தார்.

ஆனால் புலன் விசாரணையை துரிதப்படுத்திய பொட்டம்மான், பிரபாகரனின் அதிருப்தியின் மத்தியிலும் செலலக்கிளியை கைது செய்தார். கடுமையான விசாரணையின் பின் செல்லக்கிளி உண்மையை ஒத்துக்கொண்டார். பிரபாகரனிற்கு தன்னில் அபிமானமும், பிடிப்பும் ஏற்படுவதற்காக அவர் அருந்தும் தண்ணீரில் சிறிதளவு சயனைட் நஞ்சை தானே கலந்ததாக ஒத்துக்கொண்டார். அந்த தண்ணீரை பிரபாகரன் குடித்துவிடக் கூடாதென்பதிலும் மிக கவனமாக இருந்ததாகவும் கூறினார். அதன் பின்னர் செல்லக்கிளி சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஆறுமாதங்கள் தண்டனையின் பின் விடுவிக்கப்பட்டு, தென்மராட்சியின் அல்லாரையில் 1995 இல் ஆரம்பித்த பயிற்சி முகாமான கெனடி 1 இன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எனினும், அங்கும் நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டு அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அமைப்பிலிருந்து விலகிய பின்னர் வன்னியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வாகன சாரதியாக தொழில்புரிந்துவிட்டு, முகவர் ஊடாக பிரித்தானியாவிற்கு சென்று அகதி அந்தஸ்து பெற்றுக்கொண்டார்.

16_12_07_kilino_02-1-300x162.jpg

 

சொர்ணம், பிரபாகரன் உறவை புரிய வைக்க இன்னொரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்க வேண்டும். தவறிவிட்டது. சொர்ணத்தின் திருமணமே அது.

1990 இல் இந்திய இராணுவத்துடனான யுத்தத்தின் பின் புலிகள் அமைப்பிற்குள் திருமணங்கள் நடந்தன. அப்போது புலிகளின் திருமண வயது ஆண்களிற்கு 29.

பிரபாகரன் குடும்பத்தின் மீதே பிரபாகரன் அதி விசுவாசத்தை வெளிப்படுத்தியவர். பிரபாகரனை போலவே மதிவதனியும் சொர்ணத்தில் அன்பாக இருந்தவர். 1993 இல் சொர்ணம் திருமண வயதை எட்டியபோது, அவரை திருமணம் செய்யுமாறு பிரபாகரன் தம்பதியினர் வற்புறுத்தினர். திருமண பேச்சை எடுத்தாலே சொர்ணம் வெட்கப்பட்டு, அசூசைப்பட்டார். தனக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லையென்றும், இலட்சியத்தை அடைந்த பின்னரே எதுவென்றாலும் என சொன்னார். எனினும், பிரபாகரன் தம்பதி அதை ஏற்கவில்லை. குறிப்பாக மதிவதனி அதை ஏற்கவில்லை. சொர்ணத்திற்கு யாரிலும் விருப்பமிருந்தால் தானே நேரில் சென்று பேசுவதாகவும் கூறியிருந்தார். சொர்ணத்திற்கு அப்படியொன்றும் இருக்கவில்லையென்றார்.

அந்த காலப்பகுதியில் சொர்ணம் என்றால் போராளிகளே நடுநடுங்குவார்கள் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். பெண் போராளிகளும் அப்படித்தான். சொர்ணத்துடன் முரண்பட்ட அப்போதைய மகளிர் படையணி தளபதியாக இருந்த ஜெனா அமைப்பிலிருந்தே நீக்கப்பட்டார்.

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/34758/

Share this post


Link to post
Share on other sites

மரபுவழிப் போரில் சொர்ணம் சறுக்கிய இடம்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 55

January 30, 2019
prabakaran-family-30.jpg

பீஷ்மர்

காதல் கத்தரிக்காய் எல்லாம் சொர்ணத்திற்கு சரிப்பட்டு வராது. மிக இறுக்கமான இராணுவ ஒழுங்குள்ள மனிதராக அவர் தன்னை வெளிப்படுத்தி விட்டார். தனிப்பட்ட வாழ்க்கை விவகாரத்தில் கூட இந்த இமேஜை கடந்து அவரால் செயற்பட முடியாது.

அப்போது மகளிர் படையணி தளபதியாக இருந்தவர் ஜனனி. சில தாக்குதல் திட்டமிடல்கள், கூட்டங்களில் இருவரும் சந்தித்திருந்தனர். சொர்ணம் என்றாலே ஜனனிக்கு பெரும் பயம்.

ஜனனியை திருமணம் செய்யலாமென சொர்ணத்திற்கு விருப்பம் ஏற்பட்டது. இதை எப்படி கையாள்வதென்பதுதான் அவருக்கு தெரியவில்லை. பலதையும் யோசித்துவிட்டு தனது பாணியிலேயே காரியத்தை முடிக்க திட்டமிட்டார்.

ஒருநாள் ஜனனியின் முகாமிற்கு சென்றார். பெண்போராளிகளின் முகாம்களிற்குள் ஆண் போராளிகள் யாரும் நினைத்த மாதிரி செல்ல முடியாது. அது பிரபாகரனாக இருந்தாலும் கூட. பிரபாகரனை யாரும் தடுக்க முடியாது. ஆனால், அவர் அந்த சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதுடன், மற்ற போராளிகளிற்கும் வழிகாட்டினார்.

பெண்களின் முகாம்களின் முன்பகுதியில் ஒரு வட்டக்கொட்டில் இருக்கும். அங்குதான் விருந்தினர்களாக வரும் ஆண் போராளிகள் உட்காரலாம். உள்ளே நுழைய முடியாது.

ஜனனியின் முகாமிற்கு சென்ற சொர்ணம் வட்டக்கொட்டிலில் உட்காரவில்லை. அவசர அலுவலாக செல்பவர்கள் பதற்றமாக நின்று கொண்டிருப்பதை போல அந்தரமாக நின்று கொண்டிருந்தார். சொர்ணம் வந்துள்ள தகவலை அறிந்து ஜனனி அவசரமாக வந்தார். கூடவே ஒருசில பெண்போராளிகளும் வந்தனர்.

 

ஜனனி அருகில் வந்ததும், சொர்ணம் இப்படி சொன்னார். “இயக்கம் என்னை கலியாணம் கட்ட சொல்லியிருக்குது. உம்மைத்தான் கலியாணம் செய்யப் போறன். என்ன என்று யோசிச்சு சொல்லும்“ என்றுவிட்டு விறுவிறுவென வந்து வாகனத்தில் ஏறிவிட்டார்.

நேராக பிரபாகரனின் மனைவி மதிவதனியிடம் சென்று, நடந்ததை சொன்னார். மதிவதனி தனது கூடப்பிறந்த சகோதரனை போலத்தான் சொர்ணத்தை பாவித்தார். அதனால்தான் சொர்ணத்தின் திருமணத்தில் மதிவதனி தனிப்பட்ட ஆர்வம் காட்டினார்.

சொர்ணம் புறப்பட்ட பின்னர், நடந்ததை பிரபாகரனிடம் சொல்லியுள்ளார். சொர்ணத்தின் இயல்பை நினைத்து இருவரும் நகைச்சுவையாக சிரித்தனர். இறுதிவரை இந்த சம்பவத்தை மதிவதனி அடிக்கடி குறிப்பிட்டு சொர்ணத்தை கலாய்த்தே வந்தார்.

அப்போது அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல், யாழ்ப்பாணத்தில் பெண் போராளிகளுடன் தங்கியிருந்தார். ஜனனி உடனடியாக அடேலை சந்தித்து விசயத்தை சொல்லியிருக்கிறார். பின்னர் மதிவதனியை சந்தித்து சொன்னார்.

 

சிலநாட்களின் பின், மதிவதனி ஆறுதலாக உட்கார்ந்திருக்கும் சமயத்தில் ஜனனியை அழைத்தார். சொர்ணத்தை திருமணம் செய்ய தாங்கள் வற்புறுத்தியதிலிருந்து இறுதிவரை நடந்தது அனைத்தையும் சொன்னார். சொர்ணத்திற்கு பிரபாகரனும் தானும் பெண் பார்ப்பதையும் சொன்னார். சொர்ணத்தை திருமணம் செய்ய ஜனனிக்கு விருப்பமா என கேட்டார்.

அடுத்த சில வாரங்களில் சொர்ணம்-ஜனனி திருமணம் நடந்தது. திருமணத்தின் பின் பிரபாகரனின் பாதுகாப்பு அணி பிரதானி என்ற பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அதன்பின்னர்தான் கூட்டுப்படை பிரதானியானார். 1995 இல் ஆரம்பிக்கப்பட்ட சூரியக்கதிர் படை நடிவடிக்கை, 1996 இல் சாவகச்சேரியை கைப்பற்றியது. அப்போது கூட்டுப்படை தளபதியாக களத்தை வழிநடத்திய சொர்ணம், யாழ்ப்பாண களத்தை வழிநடத்திய ரவி இருவருக்கும் “காற்று போனது“.

book1_080114114410-300x149.jpg

 

மீண்டும் 2000 ஆண்டில் சாவகச்சேரியில் ஒரு களமுனை. இதற்குள் ஈழப்போரில் நிறைய மாற்றங்கள். புலிகள் ஒரு மரபுவழி இராணுவமாக மேலெழுந்து விட்டனர். சொர்ணம், பால்ராஜ் என்ற மைய அச்சில் சுற்றிக்கொண்டிருந்த புலிகளின் இராணுவ கட்டமைப்பு பால்ராஜ், கருணா, தீபன் இன்னும் ஏராளம் இரண்டாம் நிலை தளபதிகளுடன் புதிய அத்தியாயத்திற்குள் புக தொடங்கிவிட்டது. ஆனால் இந்த காலத்திற்குள் சொர்ணம் களத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கவில்லை. அவர் திருகோணமலை தளபதியாக செயற்பட்டார். திருகோணமலை அணியில் சுமார் 400- 500 பேர் வரையில் இருந்தனர். வன்னியில் சிறிய தொகையினர் நிலை கொண்டிருக்க, ஏனையவர்கள் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடைப்பட்ட காடுகளில் நிலைகொண்டிருந்தனர். சிறிய கெரில்லா தாக்குதல்கள்தான் செய்துகொண்டிருந்தனர். எப்பொழுதாவது மினிமுகாம்கள் மீது சிறிய தாக்குதல்களை செய்தனர்.

 

1997 இல் வன்னியில் ஜெயசிக்குறு என்ற பிரமாண்ட நடவடிக்கையை படையினர் ஆரம்பித்தனர். அப்போது படையிலிருந்த ஆளெண்ணிக்கையை வைத்து வடக்கு கிழக்கு முழுவதும் மேலாதிக்கம் செலுத்த படையினரால் முடியாது. வன்னி படைநடவடிக்கைக்காக கிழக்கின் பல பகுதிகளில் இருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன. பெரும் நிலப்பரப்பின் கட்டுப்பாட்டை இராணுவம் இழந்தது.

வன்னியில் படையினரின் கவனத்தை சிதறச்செய்து, படை நடவடிக்கையின் வீரியத்தை குறைக்க புலிகள் கையாண்ட உத்தி, வன்னிக்கு வெளியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, தென்னிலங்கையில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட தளபதிகளிற்கு தலைமை அப்பொழுது ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு தாக்குதலாவது நடத்தியிருக்க வேண்டும்.

இப்படி கெரில்லா தாக்குதல் முயற்சிகளில் சொர்ணம் ஈடுபட்டு கொண்டிருக்க, வன்னியில் கருணா, பால்ராஜ், தீபன், ஜெயம், பானு உள்ளிட்டவர்கள் பெருமெடுப்பிலான மரபுச்சமரில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தனர்.

இப்படித்தான் 1999 இன் இறுதியில் ஓயாத அலைகள் 3 ஆரம்பிக்கப்பட்டது. அது வன்னி முழுதும் வீச்சம்பெற்று பல பகுதிகளை கைப்பற்றியது. பின்னர் குடாநாட்டு பக்கம் திரும்பி ஆனையிறவை வீழ்த்தியது. ஆனையிறவு சமரில் பால்ராஜ், தீபன், பானு ஆகியோர் முக்கிய பங்காற்றினர். பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் நகர்ந்து, யாழ்நகர வாசல் வரை சென்றது. அப்பொழுதுதான் இந்தியாவின் உதவி இலங்கைக்கு கிடைத்தது.

thileepan_med_08-300x225.jpg

 

லண்டனில் இருந்த அன்ரன் பாலசிங்கத்திற்கு இந்திய வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிக்கும் சௌத் புளக்கின் செய்தியொன்று சென்றது. நம்பிக்கையான இடைத்தரகர்கள் மூலம்தான் அந்த செய்தி அனுப்பப்பட்டது. “புலிகள் குடாநாட்டு சண்டையை தொடர்ந்தால், இன்னும் ஒரு அடி முன்னகர்ந்தால் இலங்கை இராணுவத்தை காப்பாற்ற இந்திய இராணுவம் தலையிடும்“. இதுதான் அந்த செய்தி.

அப்போது பிரபாகரனின் இருப்பிடம் புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியில் இருந்தது. பின்னர் இந்த முகாமை பொதுமக்களின் பார்வைக்காக இராணுவம் திறந்து விட்டிருந்தது.

லண்டனில் இருந்து செய்மதி தொலைபேசியில் பிரபாகரனை அழைத்தார் பாலசிங்கம். விடயம் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இந்திய தலையீட்டை தவிர்க்க, யாழ்ப்பாணம் நோக்கிய படைநகர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாமென பாலசிங்கம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். அப்படியான முடிவையே பிரபாகரனும் எடுத்தார்.

செம்மணி வளைவை கடந்து யாழ் நகருக்கு நெருக்கமாக நின்ற புலிகளின் அணிகளிற்கு தாக்குதலை நிறுத்தும் கட்டளை சென்றது. இம்ரான்- பாண்டியன், சாள்ஸ் அன்ரனி, மாலதி, ஜெயந்தன், புலனாய்வுத்துறை படையணிகள் அந்த களத்தில் இருந்தன.

இதற்குள் யாழ்ப்பாண இராணுவ கட்டளைபீடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜனக பெரேராவும், சரத் பொன்சேகாவும் அவசரமாக யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர். இலங்கை இராணுவத்தில் அப்போதிருந்த போர்க்கள நட்சத்திரங்கள் அவர்கள் இருவருமே.

மறுவளமாக புலிகள் யாழ்ப்பாண களத்திற்கு தளபதியாக நியமித்தது, நீண்டகாலம் மரபுவழி இராணுவ நடவடிக்கைகளில் பரிச்சயமில்லாமலிருந்த சொர்ணத்தை!

(தொடரும்)

Share this post


Link to post
Share on other sites

புலிகளில் காற்றுப்போன தளபதிகளிற்கு வழங்கப்பட்ட தண்டனைகள்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 56

February 3, 2019
blogger-image-119166337.jpg

பீஷ்மர்

யாழ்ப்பாணத்திற்குள் இனி புலிகள் ஒரு அடியும் முன்னகர கூடாதென இந்தியா கறாரான நிலைப்பாட்டையெடுத்தது. மேலதிகமாக இன்னொரு செய்தியையும் சொன்னது. இலங்கைக்கும் அழுத்தம் கொடுக்கிறோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனையை தீர்த்து கொள்ள வேண்டும் என்பதே அந்த தகவல்.

1991 இல் ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து இந்தியா- புலிகள் உறவு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. புலிகளை கவிழ்ப்பதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தது இந்தியா. இது புலிகளிற்கும் தெரியும். ஆனால் இந்தியாவின் விருப்பங்கள், முயற்சிகளை கடந்து புலிகள் உலகத்திலேயே பலமான இயக்கமாக உருவெடுத்திருந்தனர். புலிகளின் வளர்ச்சி இந்தியாவிற்கு விருப்பமானதாக இல்லை. ஆனால் தவிர்க்க முடியாமல் மூன்றாம் நபர்களினூடாக உறவை வைத்திருந்தது.

இப்படியான சமயத்தில்தான் புலிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்வதை இந்தியா தடுத்தது. இந்தியாவிற்கு தெரியும், புலிகளின் நகர்வை தடுத்தால் இரண்டு தரப்பும் இன்னும் எதிர்நிலைக்கே செல்வோம் என்பது. அடுத்தது, பிரபாகரனை மிரட்டி பணிய வைக்க முடியாதென்பதை இந்தியாவிற்கு காலம் நன்றாகவே புரிய வைத்திருந்தது.

1987 இல் இந்திய- இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் புலிகளின் சம்மதத்தையும் இந்தியா பெற விரும்பியது. இந்த சமயத்தில் இந்தியாவின் நடத்தை எஜமானைப் போலிருந்தது. இலங்கை அரசு இதை சகித்து கொண்டது. ஆனால் புலிகள் அதை சகிக்கவில்லை. பிரபாகரனை விருந்தினர் போல அசோகா ஹோட்டலிற்கு அழைத்து சென்று, தடுத்து வைத்து மிரட்டல் பாணியில் அழுத்தம் கொடுத்தபோதும் பிரபாகரன் அதை ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து திரும்பி யாழ்ப்பாணம் சுதுமலையில் பிரபாகரன் பேசியபோது இதை தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அதை நாங்கள் ஏற்கவில்லையென்பதை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார்.

 

புலிகளின் இந்த மனப்போக்கு தெரிந்துதான் இந்தியா தீர்வு பற்றி பேசியது. இந்தியாவின் விருப்பத்தையும் சொல்லியதாயிற்று, புலிகளையும் சமாளித்தாயிற்று என இந்தியா நினைத்தது.

இந்த சமயத்தில் புலிகள் வலிந்த தாக்குதல்களை நிறுத்தி, கைப்பற்றிய பிரதேசங்களை தக்க வைப்பதென முடிவு செய்தனர். புலிகளின் தொடர் தாக்குதல்களால் இராணுவம் நிலைகுலைந்து போயிருந்தது. இராணுவத்தை சுதாகரிக்க அவகாசமே கொடுக்காத அதிரடித் தாக்குதலைத்தான் புலிகள் செய்தார்கள். நிலைகுலைந்து போயிருந்த கட்டுமானத்தை சரி செய்ய ஒருசில நாள் அவகாசம் கிடைத்தாலாவது பரவாயில்லையென இராணுவம் இரத்த கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த சமயம் அது. புலிகளின் தாக்குதல் நிறுத்தப்பட்டது இராணுவத்திற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.

ஜனக பெரேரா, சரத் பொன்சேகா இருவரும் பலாலியில் இருந்து இராணுவத்தை மீள ஒருங்கிணைத்தார்கள். களத்தில் அடி வாங்கிய இராணுவத்திற்கு ஓய்வுகொடுத்து, யாழ்ப்பாணத்தின் மற்ற பகுதிகளில் இருந்த இராணுவத்தை முன்னணிக்கு நகர்த்தினார்கள். அவர்களின் மூலம் புலிகள் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

 

செம்மணி வளைவு, அரியாலை பகுதிகளை இரண்டு, மூன்று நாட்களிலேயே புலிகள் கைவிட வேண்டியதாகிவிட்டது. அங்கு சிறியளவிலான புலிகளின் அணியே நிலைகொண்டிருந்தது. இவையெல்லாவற்றையும் விட, 1999 இறுதியில் ஆரம்பித்த புலிகளின் வலிந்த தாக்குதல் இது. பல மாதங்களாக நடந்தது. புலிகளும் கடுமையான ஆளணி பற்றாக்குறையை சந்தித்தனர். புலிகளின் மருத்துவமனைகள் காயமடைந்த போராளிகளால் நிரம்பி வழிந்தன. களத்தைவிட்டு அகற்றப்பட்டவர்களின் இடத்தை நிரப்ப ஆட்கள் கிடைக்கவில்லை.

தொடர் சண்டையால் புலிகளின் படையணிகளும் களைப்படைந்து விட்டன. வெற்றி உற்சாகம் என்பது வேறு, இழப்புக்கள், களைப்பால் ஏற்படும் வெற்றிடம் என்பது வேறு. முன்னேறி செல்லும் அணிகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றி, அணிகளிற்கு ஓய்வு கொடுப்பதை ஆரம்பத்தில் புலிகள் செய்தனர். பின்னர் மரணம், காயம் அதிகரித்து செல்ல மாற்று அணிகள் இல்லாமல் போய்விட்டன.

ஆகவே அரியாலை, செம்மணி உள்ளிட்ட பகுதிகளை கைவிட புலிகள் முடிவு செய்தனர். ஆனால் சாவகச்சேரி, தனங்கிளப்பு, மட்டுவில், கனகம்புளியடி சந்தி பகுதிகளை கைவிடும் எண்ணம் புலிகளிடம் இருக்கவில்லை. அந்த பகுதிகளை உள்ளடக்கியதாக நிலைகொள்வோம், பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில்- அந்த இடத்தில் இருந்தபடி, யாழ்ப்பாணத்தின் எஞ்சிய பகுதிகளை கவனிப்போம் என புலிகள் நினைத்தனர். யாழ் களமுனை, தளபதி சொர்ணத்திடம் கையளிக்கப்பட்டது.

ஆனால் அந்த களம் புலிகளிற்கு பெரும் சோதனைக்களமானது. பெட்டியடித்தல் (BOX) முறையை பயன்படுத்திதான் யாழ்ப்பாண களமுனையின் வாசலை புலிகள் திறந்தார்கள். ஆனையிறவிற்கு பின்னால் குடாரப்பில் 2000.03.26 அன்று பால்ராஜ் தலைமையிலான அணியினர் தரையிறங்கி இத்தாவிலில் பெட்டியடித்ததே ஆனையிறவின் வீழ்ச்சிக்கு காரணம். அந்த உத்தியை தென்மராட்சி களமுனையில் இராணுவம் பயன்படுத்த ஆரம்பித்தது.

புலிகளின் அணிகளை கூறாக்கி, அடிக்கடி சிறிய சிறிய பெட்டிகள் அடித்தார்கள். அதற்குள் சிக்கும் புலிகளின் அணிகள் அழிவை சந்தித்தன. அடிக்கடி நடந்த பெட்டியடிப்பில் நூற்றுக்கணக்கில் புலிகள் மரணிக்க தொடங்கினார்கள். அத்துடன் கைப்பற்றப்பட்ட இடங்களும் பறிபோக ஆரம்பித்தன.

vp1987-colombotelegraph-300x206.jpg 80களின் தொடக்கத்தில் பிரபாகரனின் நம்பிக்கையான மெய்ப்பாதுகாவலராக சொர்ணம்

இராணுவத்தின் பெட்டியடிப்பு தந்திரோபாயத்தை எதிர்கொள்ள சொர்ணத்தால் முடியவில்லையென்பதே உண்மை. இராணுவத்தின் தந்திரோபாயத்திற்கு சவாலளிக்கத்தக்க எந்தவொரு உத்தியையும் புலிகள் அப்போது வெளிப்படுத்தவில்லை. இது சொர்ணத்தின் பலவீனம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தியது. அதாவது, முன்னர் புலிகள் செய்ததைபோல. புலிகளிற்கு அவகாசம் வழங்காமல் தொடர்ச்சியாக தாக்குவதென்ற இராணுவத்தின் உத்தி பலித்தது. சொர்ணத்தின் திட்டமிடல் குறைப்பாடும் இராணுவத்திற்கு சாதகமாகியது.

 

சொர்ணம் சற்று சுதாகரித்து தனது பாணியில் சில நகர்வுகளை செய்ய எத்தனித்த சமயத்தில் காலம் கடந்துவிட்டது. ஏற்கனவே ஆளணி பிரச்சனையால் திண்டாடிய புலிகள், அண்மைய இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்ட கணிசமான இழப்புக்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர்.

சாவகச்சேரியை எப்படியாவது காப்பாற்றிவிட புலிகள் முயற்சித்தனர். அப்போது கனகம்புளியடி சந்திக்கு அப்பால் களமுனையிருந்தது. கனகம்புளியடி சந்தி ஒரு கேந்திர நிலையமாக இருந்தது. கனகம்புளியடி சந்தியை இராணுவம் கைப்பற்ற வாய்ப்பாக அமைந்தது- புலிகளின் ஆளணி பிரச்சனை. அந்த பகுதியில் அணிகளை நிறுத்த அவர்களிடம் ஆளணி இருக்கவில்லை. இதனை பயன்படுத்தி இராணுவம் சாவகச்சேரிக்குள் நுழைந்தது.

சாவகச்சேரி, தனங்கிளப்பு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் தொடர்ச்சியாக பெட்டியடித்து புலிகளிற்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. தென்மராட்சியில் நிலைகொண்டிருப்பது பெரும் உயிர்விலை கொடுப்பதிலேயே முடியும் என்பதை உணர்ந்த பிரபாகரன் தென்மராட்சியை விட்டு பின்வாங்க முடிவெடுத்தார்.

தொடர் தாக்குதல்களால் புலிகளின் அணிகள் தென்மராட்சியை விட்டு பின்னகர்ந்து முகமாலையில் நிலை கொண்டன. சொர்ணம் உடனடியாக திருப்பி அழைக்கப்பட்டார். தீபன் அந்த களமுனைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

சொர்ணத்தின் செயற்பாட்டில் பிரபாகரன் பயங்கர அதிருப்தியில் இருந்தார். தரைத்தாக்குதல்களில் அவர் லாயக்கற்றவர் என்ற உணர்வை ஏற்படுத்தவோ என்னவோ அவரை கடற்புலிகள் அணிக்கு அனுப்பினார். அப்போது கடற்புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்தவர் கங்கைஅமரன். அவரது பொறுப்பிற்கே சொர்ணம் அனுப்பப்பட்டார்.

தரைத்தாக்குதலில் பெரும் தளபதியாக விளங்கியவரை கடற்புலிகளின் மாவட்ட தளபதியாக அனுப்பி தண்டனை வழங்கினார் பிரபாகரன். இந்தபாணி தண்டனை வழங்கலை பிரபாகரன் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். தாக்குதலில் சிறப்பாக செயற்படாத தளபதியை பதவி இறக்கி சாதாரண போர்வீரராக களத்திற்கு செல்ல பணிப்பார். மீண்டும் சண்டைமுறையை பயின்று கொள்ளுங்கள் என்பதே இதன் அர்த்தம்.

vellai_ltte_001-197x300.jpg

 

மணலாறு மாவட்ட சிறப்பு தளபதியாக இருந்தவர் வெள்ளை. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்து வளர்ந்தவர். நல்ல நிர்வாக ஆற்றல் மிகுந்தவர். 1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதலிலும் முக்கிய பங்கு வகித்தவர்.

 

மண்கிண்டிமலை முகாம் மீது 1995 இல் புலிகள் நடத்திய தாக்குதல் தோல்வியடைய, அதற்கு தண்டனையாக வெள்ளை பதவி இறக்கப்பட்டார். இறுதியில் சூரியகதிர் நடவடிக்கையில் புத்தூரில் 150 பேர் கொண்ட கொம்பனி லீடராக செயற்பட்டு மரணமானார். அவர் லெப்.கேணல் தரமுடையவர். ஆனால் இறப்பின்போது மேஜர் தரநிலையே வழங்கப்பட்டது.

அதுபோல மணலாறு சிறப்பு தளபதியாக இருந்த இன்னொருவர் அன்ரன். 1996 இல் ஓயாதஅலைகள் 1 நடவடிக்கையில் அளம்பிலில், திரிவிடபஹர என்ற படைநடவடிக்கையை மேற்கொண்டு தரையிறங்கிய இராணுவத்தை புலிகள் சுற்றிவளைத்தனர். அந்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தவர் அன்ரன்.

தரையிறங்கி இராணுவம், கடற்கரையோர பற்றைகளில் நல்ல மறைப்பில் பதுங்கியிருந்தனர். பழைய அரசர் கால யுத்தங்களை போல, “ம்… அவர்களை தாக்குங்கள்“ என அரசர் உத்தரவிட்டு, எதிரிப்படைகளை நோக்கி பாய்ந்து செல்வதை போல, அன்ரன் தாக்குதல் செய்தார். இளநிலை தளபதிகள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், வெட்டவெளிக்குள்ளால், காலை 9 மணிக்கு இராணுவத்தை நோக்கி முன்னேறும்படி கட்டளையிட்டார்.

பதுங்கியிருந்த இராணுவம், வெட்டவெளியால் வந்த போராளிகளை குருவி சுடுவதை போல சுட்டு விழுத்தியது. பெரும் இழப்பு. அன்ரனிற்கு அடுத்த பொறுப்பில் இருந்தவர், இம்ரான் பாண்டியன் படையணி தளபதி ராஜேஷ். அன்ரனின் நகர்வுகளை அவரும் எதிர்த்தார். உடனே பொட்டம்மான் அங்கு சென்று களத்தில் நடந்தவற்றை விசாரித்தார். மாலையில் அன்ரனிற்கு காற்று போனது. அன்ரன் பின்னாளில, ஏழுபேர் கொண்ட சாதாரண அணியில், சாதாரண ஒருவராக நியமிக்கப்பட்டார்.

bricadiar_balraj_003-300x167.jpg சூசையின் பின்னால் நிற்பவர் ராஜேஷ். (உடனடியாக தெளிவான புகைப்படங்கள் கிடைக்கவில்லை. ராஜேஷின் தெளிவான புகைப்படம் உள்ளவர்கள் அனுப்பி வைக்கலாம்)

அன்ரனின் இடத்திற்கு ராஜேஷ் உயர்ந்தார். ஓயாத அலைகள் 1 முடிய, மணலாறு மாவட்ட தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1997இல் ஆனையிறவு மீதான தாக்குதலில் அணிகள் உள்நுழைந்து ஆட்லறிகளை கைப்பற்றி விட்டன. கைப்பற்றிய ஆட்லறிகளை வெளியில் கொண்டு வர முடியவில்லை. இதனால், ஆனையிறவிற்குள்ளேயே அவற்றை தகர்த்து விட்டு, புலிகள் பின்வாங்கினார்கள்.

தளபதி ராஜேஷின் அணி திட்டமிட்டதை போல, செயற்படாமையே, ஆட்லறிகளை வெளியில் கொண்டு வர முடியாமைக்கு காரணம். அவரது அணியின் பொறுப்பு, கொம்படியிலிருந்த இராணுவ முகாமை அழிப்பது. ஆனால் நள்ளிரவில் நகர தொடங்கிய அவரது அணி, குறிப்பிட்ட நேரத்தில் இடத்தை அடையவில்லை. வழிகாட்டிகளும் குழப்பி விட்டனர். விடிகாலையில் அங்கு போய், முகாமை கைப்பற்ற முடியவில்லை. ஆட்லறிகளை வெளியில் கொண்டு வர முடியவில்லை.

இதனால் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அதற்கு தண்டனையாக ராஜேஷ், ஏழு பேர் கொண்ட அணியில் ஒருவராக பதவியிறக்கப்பட்டார். பின்னாளில் ஆனந்தபுரம் சமரில் அவர் மரணமானார். கேணல் தர நிலை வழங்கப்பட்டது.

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/35958/

Share this post


Link to post
Share on other sites