கிருபன்

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

Recommended Posts

இயக்கமும், பொட்டரும் பைத்தியகங்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Quote

.(பொட்டாரே போகேல்ல)..

ஆரம்பத்தில் கிழக்கில் வேலை  செய்தவர் பொட்டம்மான்.  எங்கு விழுப்புண் அடைந்தார் என தெரியவில்லை. ஆனால் கதிரையில் இருக்க கூட  சிரமப்பட்டவர் என அறிந்துள்ளேன். இயக்கத்தில் இருந்தவர்கள்   இக்கூற்றை சரிபார்க்கவும்.

Share this post


Link to post
Share on other sites
On 7/13/2018 at 8:25 PM, ரதி said:

நிற்க,கருணா பதவி ஆசை பிடித்தவர் எண்டால் பொட்டு என்ன மாதிரி?...இயக்கம் பிரியக் கூடாது.கொண்ட கொள்கை தான் முக்கியம் என்று அவர் நினைத்திருந்தால் கருணாவுக்கு பதவியைக் கொடுத்து பக்கத்தில் வைத்திருப்பார்...இவருக்கும் பதவி தான் முக்கியம் 

அது என்ன பதவி ....? தலைவர் பதவியோ...? ..எப்புடி தலைவரை போட்டுவிட்டு பொட்டு  கும்மானுக்கு அந்த பதவியை எடுத்து கொடுத்திருக்க வேண்டும் என்று சொல்லுறியளோ ...? கும்மான் ஏற்க்கனவே உச்சத்தில் தான் இருந்தார் ,கும்மானுக்கு தேவைப்பட்டதெல்லாம் வேற அது இயக்கத்திலிருந்தால் கிடைக்காது. பொட்டு ,தலைவரென்ன வேறு எவராலும் அதனை கொடுக்க முடியாது , தலைவரால் ஒருவேளை முடிந்திருக்கும் இயக்கத்தின் கட்டுப்பாடையும் கட்டுக்கோப்பையும் தகர்த்திருந்தால் அதுதான் வெளியே வந்தார். நொண்டிக்குதிரைக்கு சறு க்கினதற்க்கு சாட்டு வேணுமல்லவா 
கோர்ட் வேர்ட்: magarita  ,Galadhari , ம(மா)து  தியானம்  
இதற்க்கு மேல் விசுகண்ணை சொன்னதை கவனத்தில் கொண்டு அமைதி காக்கலாம் என்று நினைக்கிறேன்   

Edited by அக்னியஷ்த்ரா

Share this post


Link to post
Share on other sites

துசி அம்மான், ஜோய் சுடப்பட்ட விசாரணை அறிக்கை படிச்சவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites
On 7/13/2018 at 8:58 AM, ragunathan said:

அண்மையில் ஒரு இணையத்தில், முன்னாள் புலிகளின் புலநாய்வுத்துறையிலிருந்த ஒருவரின் செவ்வி என்று ஒன்று வெளிவந்திருந்தது. இறுதிப்போரில் நடந்தது பற்றி அவர் பேசுகிறார் என்று சொன்னார்கள்

அந்த காணொலியை யூரியுப் தளத்தில் இருந்து தூக்கும் அளவுக்கு போய்விட்டது IBC தமிழ். இப்போ யார் வேணும் என்றாலும் என்ன வேணும் என்றாலும் சொல்லலாம் என்ற அளவுக்கு வந்துவிட்டது கட்டுக்கோப்பாக, தியாகத்துடன், இரகசியத்தின் உச்சகட்டத்தில் வளர்ந்த போராட்டம். 

அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு இரட்டைப்புலனாய்வை பற்றி கதையளந்தும், அதை பகிரங்கமாக இணையத்தில் பிரசுரம் செய்தும், பயத்தில் தூக்கும் அளவுக்கு பொய்களும் புலனாய்வு ஊகங்களும் நிறைந்தது தான் அந்த காணொலி. அதில் விஜயகலாவை பற்றிய புலனாய்வு அறிக்கை புல்லரிக்கவைத்தது.

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 22

June 14, 2018
blogger-image-69580438.jpg

பீஷ்மர்

ஆனையிறவில் கருணாவை கொடியேற்ற விடாமல் புலிகள் தடுத்து விட்டனர், அது பிரதேசவாதம் என தீவிர புலியெதிர்ப்பாளர்கள் ஒரு கதையை அவிழ்த்து விட்டுள்ளனர். அதை நம்புவதற்கும் ஒரு கூட்டம் உள்ளது.

ஆனால் உண்மை அதுவல்ல.

அதற்கும் அப்பால், ஆழமான விசயங்கள் உள்ளன. விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தில் கையாளப்படும் விவகாரங்கள் வெளியில் வருவதில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, விடுதலைப்புலி எதிர்ப்பாளர்கள் ஆளாளுக்கு கதைகட்டி விட்டு விடுகிறார்கள். அப்படி உருவான கதைகளில் ஒன்றுதான்- கருணாவை ஆனையிறவில் கொடியேற்ற அனுமதிக்கவில்லையென்பதும்.

கடந்த அத்தியாயத்தில்- கருணாவின் படையணிகள் குழப்பம் விளைவிக்க தொடங்க, அதை கருணாவும் கட்டுப்படுத்தாமல் விட்டார். இதை பிரபாகரன் ரசிக்கவில்லை. பால்ராஜின் கட்டளையை ஏற்க மறுத்த கிழக்கு பொறுப்பாளரையும் புலிகள் விட்டுப்பிடித்தார்கள் என்பதையும், தனது பொறுப்பாளர்கள் புலிகளின் தளபதிகளுடன் முரண்படுவதை ரசித்த கருணா, அது விவகாரமாகும் போது, “கிழக்கு படையணிகள் இல்லாவிட்டால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது“ என்ற எண்ணத்தில் நடப்பதையும் புலிகள் புரிந்து கொண்டிருந்தார்கள் என கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

Image result for பிரபாà®à®°à®©à¯- à®à®°à¯à®£à®¾

கிழக்கு படையணிகளை யாழ்ப்பாணத்திற்கான சமரில் இறக்காமல் விட பிரபாகரன் முடிவெடுத்ததற்கு இரண்டு காரணமிருந்தது. முதலாவது- கிழக்கு போராளிகள் இல்லையென்றால் புலிகளால் எதுவும் செய்ய முடியாதென்ற அபிப்பிராயம் வரக்கூடாது. அப்படியான அபிப்பிராயம் கிழக்கு போராளிகளிடம் ஏற்படுத்தப்பட்டால், பின்னாளில் அமைப்பையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் போய்விடும்.

இரண்டு- உண்மையிலேயே கிழக்கு போராளிகள் வடக்கில் அதிகமாக உயரிழப்பை சந்தித்துவிட்டனர். வடக்கை சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தை மீட்கும் சமரில் ஈடுபடுவதே சரி என்பதாலேயே புலிகள் அந்த முடிவை எடுத்தனர்.

ஆனையிறவில் கொடியேற்றுவதற்கு யார் பொருத்தமானவர்?

கருணாவை ஆனையிறவில் கொடியேற்ற விடாதது புலிகளின் வடக்கு, கிழக்கு பாகுபாட்டின் காரணமாகவே என இன்று கருணாவின் ஆதரவாளர்கள் சிலர் குறிப்பிடுகிறார்கள். உண்மை அதுவல்ல. கிழக்கு இளநிலை தளபதிகள் வடக்கில் முரண்டு பிடிக்க ஆரம்பிக்க, புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட இராணுவ கட்டமைப்பின்படியே இந்த கொடியேற்றல் நடந்தது. இதன்மூலம், கருணாவிற்கு பிரபாகரன் தெளிவாக செய்தியொன்றையும் சொல்லியிருந்தார்.

யார் இல்லையென்றாலும் என்னால் எதையும் செய்ய முடியும்!

 

இதுதான் அந்த செய்தி. ஏனெனில் கருணா படித்த பாடசாலையில் ஹெட் மாஸ்ரரே அவர்தானே!

இதன் பின்னர் 2000 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் கருணா தலைமையிலான கிழக்கு படையணிகளை மீண்டும் கிழக்கிற்கே அனுப்பினார் பிரபாகரன். முள்ளியவளையில் இருந்த ஜெயந்தன் படையணி முகாமில் கிழக்கு போராளிகளின் பிரிவுபசார நிகழ்வில் பிரபாகரன் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றிய போது, கடந்த மூன்றரை ஆண்டுகளில் வன்னியில் கிழக்கு போராளிகள் செய்த அர்ப்பணிப்புக்களை நினைவுகூர்ந்து மெச்சினார். புலிகள் அமைப்பு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் சிக்கியபோது, கிழக்கு போராளிகளே அந்த நெருக்கடியை தகர்த்தார்கள் என புகழாரம் சூட்டினார்.

கிழக்கு போராளிகளில் பிரபாகரனிற்கு எந்த அதிருப்தியும் இருக்கவில்லை. ஆனால் இளநிலை தளபதிகளை தூண்டி விட்டது யார் என்பதில் அவருக்கு சந்தேகம் இருக்கவில்லை.

Image result for பிரபாà®à®°à®©à¯- à®à®°à¯à®£à®¾

 

கிழக்கிற்கு கருணாவை அனுப்பும்போது, அவரது நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்தவராகத்தான் அனுப்பி வைத்தார். இயக்கத்தின் ஒருங்கிணைந்த தன்மையை கருணாவின் நடவடிக்கைகள் பாதிக்கிறது என்பதை தெரிந்தும், கருணாவை தனது முகாமிற்கு அழைத்து பேசினார். கருணாவின் நடவடிக்கைகளில் பிரபாகரன் எவ்வளவு அதிருப்தியாக இருந்தார் என்பதை , அந்த சந்திப்பில் பிரபாகரன் எப்படி நடந்து கொண்டார் என்பதை வைத்தே புரிந்து கொள்ளலாம். “மட்டக்களப்பிற்கே போ… அங்கே எதையாவது செய்து கொள்“ என திட்டித்தான் அனுப்பினார். இதன் பின்னரே முள்ளியவளையில் ஜெயந்தன் படையணி போராளிகளின் பிரிவுபசாரம் நடந்தது.

கிழக்கிற்கு கருணா வந்த சிறிதுகாலத்தில் 2002 பெப்ரவரியில் அரசு-புலிகள் சமாதான உடன்படிக்கை எட்டப்பட்டு விட்டது. இதன் பின்னர் புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்கள் கிழக்கிற்கு நகர்த்தப்பட்டன. காவல்துறை, நீதிமன்றம், நிதி கட்டமைப்புக்கள் கிழக்கிற்கு சென்றது கருணாவிற்கு பிடிக்கவில்லை. காரணம், அதுவரை இவை அனைத்தையும் கருணாவே கவனித்து வந்தார். நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டால், தனது பிடி நழுவிவிடும் என அவர் பயந்தார். இதனால் நிர்வாக கட்டமைப்புக்களிற்கு தொடர்ந்து இடையூறுகள் விளைவிக்க ஆரம்பித்தார். இதை கருணா நேரடியாக செய்ததை போல தெரியாது. அவரின் கீழிருந்த தளபதிகள்தான் நிர்வாக இடையூறுகளை நேரடியாக ஏற்படுத்துவார்கள். பின்னர் விசயம் கருணாவிடம் போகும். தனது தளபதிகளிற்கு சார்பாக கருணா முடிவெடுப்பார். இது மிக திட்டமிட்ட முறையில் நடந்து வந்தது.

 

வன்னியில் காவல்துறை விஸ்தரிக்கப்பட்டபோது, போராளிகளுடன் சிறிய முரண்பாடு ஓரிரண்டு வந்ததுதான். சிவில் குற்றங்களில் சம்பந்தப்பட்ட போராளிகளை காவல்துறையே விசாரிக்கும் என்ற நடைமுறை போராளிகளிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால், அது பொதுவான நடைமுறையென்றபோது அவர்கள் இதற்கு இணங்கி சென்றார்கள். பெரிய முரண்பாடுகள் இல்லாமல் வன்னியில் காவல்துறை செயற்பாடு விஸ்தரிக்கப்பட்டது.

ஆனால் கிழக்கில் அதற்கு கருணா முழுமையான தடையாக இருந்தார். இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் காவல்துறை உறுப்பினர்களை கருணாவின் போராளிகள் அடைத்து வைத்த சம்பவம் எல்லாம் நடந்துள்ளது.

இதன் உச்சக்கட்டமாக ஒருமுறை துப்பாக்கிச்சூடும் நடந்தது. காவல்துறையினர் தங்கியிருந்த வீட்டின் மீது கருணாவின் அணியினர் கைக்குண்டும் வீசி, துப்பாக்கியாலும் சுட்டனர். காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பிரபாகரனிற்கு தெரியவந்ததும் கருணாவை கண்டித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டார். ஆனால் அப்படியெதுவும் நடக்கவேயில்லை.

கருணா கிழக்கில் வரி அறவிடும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தார். கிழக்கில் வகைதொகையில்லாமல் கருணா வரி அறவிட்டார். அதில் பெரும்பகுதி முறையான கணக்கு வழக்கிற்கு உள்ளாகவில்லை.

புலிகளின் நிதித்துறை இதில் தலையிட்டபோது, அவர்களிற்கும் இடையூறு விளைவிக்கப்பட்டது. புலிகளின் ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்தவர்களும் வரி அறவிட்டு இயக்கத்தின் அன்றாட நடவடிக்கையை கவனித்தனர். 1980களின் மத்தியில் யாழ்ப்பாணத்தில் கிட்டு பொறுப்பாக இருந்தபோது, அவர் வர்த்தகர்களிடம் வரி அறவிட்டார். அதே சமயத்தில் வன்னி பொறுப்பாளராக இருந்த மாத்தையா, கிளிநொச்சியில் வரி அறவிட்டார். ஏ9 பிரதான வீதியால் செல்லும் லொறிகளும் வரி செலுத்தின. யாழ்ப்பாணத்தில் கிட்டுவிடமும், கிளிநொச்சியில் மாத்தையாவிடமும் வரி செலுத்த வேண்டிய நிலைமையும் வந்தது. பின்னாளில் வடக்கில் வரி அறவிடுவது ஒரே அலகான பின்னர், இந்த சிக்கல் எழவில்லை. வடக்கில் வரி ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரப்பட்டபோதும், கிழக்கில் கருணா வரி அறவிட அனுமதிக்கப்பட்டிருந்தார்.

2002 சமாதான உடன்படிக்கையின் பின் புலிகளின் வரி விவகாரம் முக்கிய விசயமாக அரசாங்கத்தால் பேசப்பட தொடங்க, வரி அறவிடுவதை நிறுத்தும்படி கருணாவிற்கு உத்தரவிடப்பட்டது. கிழக்கு போராளிகளிற்கு தேவையான பணம் வன்னியிலிருந்து அனுப்பபட்டது. ஆனால் கருணா வரி அறவிடுவதை நிறுத்தவில்லை.

 

புலிகளின் புலனாய்வுத்துறையையும் கருணாவிற்கு பிடிக்கவில்லை. மட்டக்களப்பு நிலவரத்தை உடனுக்குடன் பிரபாகரனிற்கு அறிவித்து கொண்டிருந்தது கருணாவிற்கு பிடிக்கவில்லை.

Image result for பிரபாà®à®°à®©à¯- à®à®°à¯à®£à®¾

புலிகளை விட்டு கருணா பிரிந்த சமயத்தில், கருணா ஒரு பேட்டி வழங்கியிருந்தார். புலிகள் இயக்கத்தில் மீண்டும் இணைவதென்றால், காவல்துறை பொறுப்பாளர் நடேசன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான், நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தி ஆகிய மூவரையும் இயக்கத்தை விட்டு நீக்க வேண்டுமென கூறியிருந்ததையும் கவனியுங்கள். இப்பொழுது கருணா பிளவின் அடிப்படை உண்மையை புரிந்துகொள்ளலாம்.

இதுகூட பரவாயில்லை. வன்னியிலிருந்து மட்டக்களப்பிற்கு கருணா தலைமையில் கிழக்கு படையணிகள் வந்த பின்னர் நடந்த கொலையொன்றுதான் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக அமைந்தது. இந்த கொலை 2001 நடந்தது. சமாதான உடன்படிக்கை ஏற்படக்கூட இல்லை. கருணா புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியாக இருந்த சமயம். அப்போது, புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் ஒருவர் மீது கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டது.  

அது இராணுவம் நடத்தியதாக கருணா தரப்பில் கூறப்பட்டது. உண்மையில் அதை இராணுவம்தான் நடத்தியதா? அல்லது, இராணுவம் தனியாக அதை நடத்தியதா? கருணா ஆட்கள் அதில் சம்பந்தப்பட்டிருந்தனரா?

யார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது?

இதையெல்லாம் அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/8357/

Share this post


Link to post
Share on other sites

இது எல்லாவற்றையும் கவனத்தில் எடுக்காமல் விடுவோம்.

பந்துல ஜயசேகர, சிங்கள புலனாய்வு துறையின் வெளிமுகம், எவ்வாறு கருணாவின் பிரிவை 2002 இல் எதிர்வு கூறியது, கருணா அப்படியே கேட்டது போலவே?

 பந்துல ஜயசேகர, 2002 frontline இல் எழுதியிருந்தது, அநேகமாக கவனிக்கப்படாமல் போயிருக்கலாம்.

இது சூழ்நிலை சாட்சியம் என்பதும் மறுக்கப்பட முடியாது.

அதாவது, கருணாவின் உண்மையான மனம் மற்றும் மதி நிலையை (state of mind and heart)) அடையாளப்படுத்தும் எதுவிதமான பகிரங்கமான சாட்சியங்களும் இல்லை, கருணா தானாகவே சிங்கள புலனாய்வுடன் புலிகளை பிரிந்து இணைந்ததும் மற்றும் ரணிலின் கூற்றையும் தவிர.

ஆனால், ஓர் வாழ் நாள் எதிரியின் புலனாய்வு துறையுடன், முன் உறவுகளை படிப்பபடியாக கட்டியெழுப்பாமல்,   இணைந்த வேகத்தில் அணைந்து இணைவது சாத்தியமற்றது, கருணா புலிகளில் வகித்த பதவி நிலைக்கு.    

https://www.outlookindia.com/website/story/karuna-vs-prabhakaran/223292

"In July 2002, I wrote (in Frontline) that the Liberation Tigers of Tamil Eelam's (LTTE's) eastern commander, 'Colonel' Karuna @ Vinayagamoorthi Muralitharan, would some day tell his leader Prabhakaran "I will look after the east and you look after the north." In less than two years, this is exactly what has happened. Not only that, Karuna wants the east of Sri Lanka recognized as 'Southern Tamil Eelam'."

 

 

Edited by Kadancha
add info.

Share this post


Link to post
Share on other sites

கொழும்பில் கடத்தப்பட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் நியூட்டன்: கருணா வைத்த திடீர் நிபந்தனை!

June 17, 2018
UNSET.png

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 23

பீஷ்மர்

2001 இல் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது, அதன் பின்னணி என்ன, யார் அந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பதை இந்த பாகத்தில் குறிப்பிடுவதாக கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

வன்னியிலிருந்து கிழக்கிற்கு வந்த கருணா தமையிலான படையணிகள் வழக்கமான தமது நிர்வாகத்தையே ஏற்படுத்தினார்கள். ஆனால் புலிகளின் சிவில் நிர்வாக நடைமுறைகள் கிழக்கிற்கு வந்தபோது, கருணா அதை விரும்பவில்லை, குழப்புவதில் குறியாக இருந்தார் என்பதையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

 

காவல்துறை, நிதிதுறை, புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எப்படியான குழப்பங்கள் நடந்தன. இதில் புலனாய்வுத்துறை விவகாரங்களில்தான் அதிக சிக்கல் நீடித்தது. மற்றைய துறைகளை விட புலனாய்வுத்துறைதான் முக்கியமானது என்பது புலிகளிற்கும் தெரியும், கருணாவிற்கும் தெரியும். ஏதாவது இரகசிய நடவடிக்கைகள் செய்வதென்றாலும் புலனாய்வுத்துறையினர்தான் செய்வார்கள். ஏனைய பிரிவினர் செய்வதில்லை. இரண்டு தரப்பும் வெளிப்படையாக மோதிக்கொள்ளாத வரையிலும் புலனாய்வுத்துறைதான் இரகசியமாக மோதிக்கொள்வார்கள். பலமான புலனாய்வு கட்டமைப்பை வைத்திருப்பவர்கள்தான் இந்த மறைமுக போரில் வெற்றியடையலாம்.

2001 இல் இருந்து மட்டக்களப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பொட்டம்மானும், கருணாவும் இரகசிய போரில் ஈடுபட்டனர். இது வெளியுலகத்திற்கு தெரியாது. தனக்கு நம்பிக்கையான ஒரு புலனாய்வு கட்டமைப்பை மட்டக்களப்பில் உருவாக்க பொட்டம்மான் முயற்சித்தார். அதை உடைத்து, தனக்கான கட்டமைப்பை உருவாக்க கருணா விரும்பினார்.

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் பல புலனாய்வு கட்டமைப்புக்கள் இயங்கின. பொட்டம்மானின் கீழ் இயங்கிய புலனாய்வு கட்டமைப்பில் பல அங்கங்கள் இருந்தன. உள்ளக பாதுகாப்பு, வெளியக புலனாய்வு என பிரதான அங்கங்கள் இருந்தாலும், வெளியக புலனாய்வின் கீழ் பல அணிகள் இயங்கின. ஒவ்வொரு பொறுப்பாளரின் கீழும் ஒரு புலனாய்வு வலையமைப்பு இருந்தது. உதாரணமாக, கொழும்பில் கூட நான்கைந்து பொறுப்பாளர்களின் கீழ் வலையமைப்புக்கள் இருக்கும். ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டிருக்காது. அந்த காலத்தில் மட்டக்களப்பில் நியூட்டன் தங்கியிருந்து கொழும்பு நடவடிக்கைகளை கவனித்தார். ஆனால் நியூட்டனிற்கு கீழ் அல்லாமல், சாள்ஸ், விநாயகம் போன்றவர்களின் அணிகளும் அங்கு இயங்கின. இதைவிட இன்னும் பல அணிகளும் இருந்தன.

 

இந்த வலையமைப்புக்கள் மட்டக்களப்பிலிருந்தும் இயங்கின. கேட்டால்- எல்லோரும் புலனாய்வுத்துறைதான். ஆனால், தனித்தனி நெட்வேர்க்காக இயங்கினார்கள்.

கொழும்பு நெட்வேர்க் எல்லாமே ஏதாவதொரு தளத்தை நிச்சயமாக மட்டக்களப்பில் வைத்திருந்தார்கள். தென்னிலங்கைக்கும் மட்டக்களப்பிற்கும் தரைவழி தொடர்பு தடங்கலின்றி இருந்ததே இதற்கு காரணம். தென்னிலங்கைக்கு வெடிமருந்துகள், ஆயுதங்கள், தற்கொலை அங்கிகள், தற்கொலை தாக்குதலிற்கான வாகனங்கள் எல்லாம் மட்டக்களப்பில் இருந்துதான் கொண்டு செல்லப்பட்டன. தற்கொலை தாக்குதலின் பின்னால் ஓரளவு துப்பு துலக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் படித்தவர்களிற்கு இதை பொருத்திப்பார்க்க முடியும். அனேகமான எல்லா பெரிய தாக்குதலிற்குமான வாகனங்கள் ஆரம்பத்தில் மட்டக்களப்பிலிருந்துதான் சென்றன.

புலிகளின் கொழும்பு நடவடிக்கை மையமாக மட்டக்களப்பு இயங்கியதென்று சொல்லலாம். விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தராக இருந்தவர் நியூட்டன். கொழும்பு நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக இருந்தவர். நீண்டகாலமாக இவர் மட்டக்களப்பில்தான் தங்கியிருந்தார். பின்னர் கொழும்பில் நடந்த “இரகசிய ஒப்ரேசன்“ ஒன்றில் பாதுகாப்பு பிரிவினரால் தூக்கப்பட்டிருந்தார். கடைசிவரை நியூட்டன் பற்றிய எந்த துப்பும் புலிகளிற்கு கிடைக்கவில்லை. நியூட்டனை இராணுவ புலனாய்வுத்துறை கடத்தியதும், பதிலுக்கு கொழும்பில் இருந்து பயங்கரவாத விசாரணைத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை புலிகள் கடத்தினார்கள். ஜெயரட்ணத்தை வைத்துக்கொண்டு, நியூட்டனிற்கான இரகசிய பேரம் பேசப்பட்டது.

 

ஆனால் தராசு சமனிலையில் இல்லையென்பது புலிகளிற்கும் நன்றாக தெரியும். நியூட்டனின் பெறுமதி ஆயிரம் கிலோகிராம் என்றால், ஜெயரட்ணத்தின் பெறுமதி வெறும் ஐம்பது கிலோகிராம்தான். அப்படியான சமன்பாடு அது.  நியூட்டனை விடுவிக்கும் அந்த இரகசிய முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனால், பிரபாகரனிடம் வேறு ஏதேனும் இரகசிய திட்டமிருந்திருக்ககூடும். அதனால்தான்- 2007 இல் இறுதியில் நியூட்டனில் மனைவி, பிள்ளைகளை புதுக்குடியிருப்பில் சந்தித்து ஆறுதல் கூறியபோது, எப்படியாவது அவரை வெளியில் எடுத்து தருவேன் என்று வாக்களித்திருந்தார். ஒரு கொமாண்டோ அற்றாக் நடத்தியாவது நியூட்டனை வெளியில் எடுக்கலாமென புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

நியூட்டனை மீட்க புலிகள் ஏதாவது கொமாண்டோ அற்றாக் நடத்துவார்கள் என்பது இராணுவ புலனாய்வுத்துறைக்கும் தெரியும். எப்படியாவது நியூட்டனை மீட்க வேண்டுமென புலிகளும் முயன்றார்கள். அந்த நாட்களில் இரண்டு தரப்பும் தமது உச்சபட்ச புலனாய்வு பலத்தை பாவித்து ஒரு பெரிய ஆடுபுலியாட்டத்தையே நடத்தினார்கள். அதைப்பற்றி பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் விபரமாக குறிப்பிடுகிறோம்.

jeyaratnam

 

புலிகளின் கொழும்பு புலனாய்வு கட்டமைப்பும் மட்டக்களப்பில் இயங்கியதை விட, மட்டக்களப்பிற்கான கட்டமைப்பு தனியாக மட்டக்களப்பில் இயங்கியது. கிழக்கு படையணிகள் வன்னியில் நின்ற சமயத்திலும் புலிகளின் புலனாய்வு கட்டமைப்பு கிழக்கில் இருந்தது. நீலன் மட்டக்களப்பு புலனாய்வு பொறுப்பாளராக இருந்தார். பிரபா, கீர்த்தி போன்றவர்கள் அவரின் கீழ் செயற்பட்ட ஏனைய பிரபலங்கள். அவர்களின் கீழ் செயற்பட்ட போராளிகளில் வடக்கை சேர்ந்தவர்களும் இருந்தார்கள். கிழக்கை சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.

 

வன்னியிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்றதும் கருணா செய்த முக்கியமான காரியம்- தனது புலனாய்வு அணியை புதிதாக கட்டியெழுப்ப முயன்றது. ரமணன், பிரபா (கண்ணாடி) போன்றவர்கள் கருணாவின் புலனாய்வு அமைப்பிலிருந்து, பின்னாளில் பிரபலமான தளபதிகள்.

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வு அமைப்பை செயலிழக்க செய்து, தனது கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியை கருணாவே நேரடியாக செயற்படுத்தினார். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த போராளிகள் விடுதலைப்புலிகளின் புலனாய்வு அமைப்பில் செயற்பட்டால், அவர்களை அணுகுவது கருணாவிற்கு இலகுவானது. அவர்களிற்கு தெரிந்தவர்கள் கருணாவுடன் இருப்பார்கள், ஏதாவது உணர்வுபூர்வ காரணங்கள், பிரச்சனைகள் வரும். இதையெல்லாம் பாவித்து, அவர்களை தன்னுடன் வரும்படி தூண்டிக்கொண்டேயிருந்தார். தனது நம்பிக்கையான முக்கியஸ்தர்களையும் இதற்காக களமிறக்கியிருந்தார்.

அப்போது மட்டக்களப்பில் செயற்பட்ட புலிகளின் புலனாய்வு அணியில் ரெஜினோல்ட் அறியப்பட்ட திறமைசாலியாக இருந்தார். அவருடன் சேர்த்து சில போராளிகளை கருணா அணியினர் வளைத்துப் போட்டனர்.

இதேசமயத்தில் கருணா இன்னொரு நச்சரிப்பை தலைமைக்கு கொடுக்க ஆரம்பித்தார். மட்டக்களப்பில் நடக்கும் புலிகளின் நிர்வாகம், நிர்வாகம் அல்லாத செயற்பாடுகளும் தனக்கு தெரிந்து, தனக்கு கீழ் நடக்க வேண்டுமென்பதே அது. அது ஓரளவு வெளிப்படையாகவும் கேட்டார். வெளிப்படையாக கேட்க முடியாத இடத்தில் சூசகமாக கேட்டார். உதாரணமாக, புலிகளின் நடவடிக்கைகள் சிலவற்றிற்கு கிழக்கில் சிக்கல் வருகிறதென வையுங்கள். எப்படியெனில்- புலிகளின் காவல்த்துறை உறுப்பினர்கள் மீது, ஜெயந்தன் படையணி போராளிகள் ஒருமுறை துப்பாக்கியால் சுட்டார்கள் என ஏற்கனவே கூறியிருந்தோம். சிவில் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட ஜெயந்தன் படையணி போராளியை தடுத்து வைத்து விசாரித்ததற்கே இந்த துப்பாக்கிச்சூடு.

Image result for à®à®°à¯à®£à®¾ பிரிவà¯

அது போராளிகளாக செய்ததல்ல. அந்த முரண்பாட்டை தூபமிட்டு, தூண்டி, அப்படியொரு விளைவை நோக்கி கிழக்கு தளபதிகளே பின்னணியிலிருந்து செயற்படுத்தினார்கள். துப்பாக்கியால் சுட்டது அந்த அப்பாவி போராளிகளாக இருந்தாலும், “மாஸ்டர் மைன்ட்“ பின்னாலிருந்தது!

 

இது பின்னர் விவகாரமாக- “அதற்குத்தான் நான் அப்பவே சொன்னேன், நீங்களாக எதையும் செய்யாதீர்கள். எனக்கு சொல்லிவிட்டு செய்திருக்காலாமே. நமது போராளிகள் அப்படித்தான். கொஞ்சம் உணர்ச்சி வேகத்தில் அப்படி இப்படி நடந்து விடுவார்கள். இனிமேலாவது, மட்டக்களப்பில் நீங்கள் என்ன செய்வதென்றாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுஙகள். நான் அவர்களை கட்டுப்படுத்துவேன்“ என்பதை போல கருணா தரப்பிலிருந்து பதில் வரும்!

கருணாவின் நச்சரிப்பு தாங்க முடியாமலோ, அல்லது வேறு ஏதும் காரணங்களோ, என்னவோ- ஓரளவிற்கு கருணாவிற்கு விட்டுக்கொடுத்துத்தான் புலிகள் நடந்தார்கள். அந்தளவில் நின்றால் கூட பரவாயில்லை. கருணா அடுத்ததாக வைத்த நிபந்தனையை பாருங்கள்.

மட்டக்களப்பில் செயற்படும் புலனாய்வுத்துறை செயற்பாடுகள் அனைத்தும் தனது கண்காணிப்பின் கீழ் செயற்பட வேண்டுமென கருணா ஒரு கட்டுப்பாடு விதித்தார்!

புலிகளிற்குள் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மட்டக்களப்பில் செயற்படும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தர்களை அழைத்து, இந்த கட்டளையை வழங்கினார். அதற்கு முன்னர்வரை, கருணாவுடன் நட்பு, மரியாதை, சம்பிராதாயம் கலந்ததாக ஒரு உறவை புலனாய்வு கட்டமைப்பு வைத்து செயற்பட்டது. சில விசயங்களை முன்னரே ஆலோசித்தது. சில விசயங்களை அனுசரித்து செயற்பட்டது.

ஆனால் 2000களில் கருணாவில் ஏற்பட்ட திடீர் மாற்றம், அந்த வழக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

எனினும், கருணாவின் கட்டளைக்கு பணிய வேண்டியதில்லையென பொட்டம்மான் தெளிவாகவே மட்டக்களப்பு பொறுப்பாளர்களிற்கு அறிவித்தார். புலிகளின் தலைமையிடமிருந்தும்  கருணாவிற்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்த விடயத்தில் தலையிடக்கூடாது என்று அந்த அறிவுறுத்தல் கூறியது.

ஆனாலும் அடிக்கடி மட்டக்களப்பிலுள்ள புலனாய்வு போராளிகளை சந்திப்பிற்கு அழைத்து, தனது கட்டளையின் கீழ் செயற்பட வேண்டுமென கருணா அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார்.

DSC26914-300x157.jpg பிரபா. கருணா பிரிந்து செல்ல முயன்றதும், அவரை விட்டு வன்னிக்கு வந்து விட்டார்.

இதேவேளை, புலனாய்வுத்துறையின் கீழ் செயற்பட்ட போராளிகளில் கிழக்கு போராளிகளை அடையாளம் கண்டு, அவர்களுடன் தொடர்பேற்படுத்தி, வடக்கிலுள்ளவர்களின் சொற்படி நடக்க தேவையில்லையென்ற கருத்தையும் ஏற்படுத்த தொடங்கினார்கள். இதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. முன்னர் குறிப்பிட்ட ரெஜினோல்ட் உள்ளிட்ட சில பொறுப்பாளர்கள் தம்மால் புலனாய்வுத்துறை கட்டமைப்பிற்குள் செயற்பட முடியாதென விடுதலைப்புலிகளின் தலைமைசெயலகத்திற்கு தனித்தனியாக கடிதங்கள் அனுப்பினார்கள்.

 

 

http://www.pagetamil.com/8666/

Share this post


Link to post
Share on other sites

தமிழ் பக்கத்தில் தொடர் அசையாமல் நிற்கின்றது. பீஷ்மரைத் தூக்கிவிட்டாங்களோ தெரியவில்லை?

Share this post


Link to post
Share on other sites
On ‎7‎/‎13‎/‎2018 at 5:29 AM, நந்தன் said:

உங்களின் விடுப்பு கேட்கும் ஆர்வம் புரிகின்றது. 

 

இங்கே இருந்து புசத்தினது காணும் போய் பிள்ளை,குட்டிகளையாவது ஒழுங்காய் படிப்பியுங்கோ....உங்களுக்கு இயக்கத்தில் நடந்தது பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்பது எனக்கு எப்பவோ தெரியும் 

 

Share this post


Link to post
Share on other sites
On 7/22/2018 at 5:31 PM, ரதி said:

உங்களுக்கு இயக்கத்தில் நடந்தது பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்பது எனக்கு எப்பவோ தெரியும் 

 

கூல்யார்! எவருக்கும் எல்லாமே தெரியாது என்பதுதான் நிஜம்!

Share this post


Link to post
Share on other sites

புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!

June 22, 2018
prabakaran-with-black-tigers-696x440.jpg

பீஷ்மர்

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24

மட்டக்களப்பில் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை போராளிகளிற்குள் குழப்பம் ஏற்படுத்தி, அவர்களை தன்னுடன் இழுத்தெடுக்க கருணா முயற்சித்தார் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

புலனாய்வுத்துறை அணியிலிருந்து விலகி, மட்டக்களப்பு மாவட்ட அணியுடன் செயற்படவிருப்பதாக அவர்கள் புலிகளின் தலைமைச்செயலகத்திற்கு கடிதம் எழுதினார்கள்.

 

இது புலிகளிற்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்போது தலைமைசெயலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் தேவன். பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். அவரை பற்றிய சிறு குறிப்பொன்றை தந்துவிட்டு, கிழக்கு பிரச்சனையை தொடர்கிறோம்.

இம்ரான் பாண்டியன் படையணி தளபதியாக இருந்தவர் கடாபி (ஆதவன்). இம்ரான் பாண்டியன் படையணிதான் அப்போது பிரபாகரனது பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தது. (பின்னர்தான் ராதா படையணியாக மாறியது) அதனால் அந்த படையணியில் இரகசியம் பேணுவது முக்கியமானது. விடுதலைப்புலிகளிடம் புலனாய்வு அமைப்பொன்று இருந்தாலும், இம்ரான் பாண்டியன் படையணியும் தனியாக ஒரு புலனாய்வு அமைப்பை உருவாக்கினார்கள். அதன் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்து மரணமடைந்த மேஜர் கௌதமனின் (முல்லைத்தீவு ஓயாத அலைகள் 1 தாக்குதலில் மரணமானார்) பெயரை அந்த அணிக்கு சூட்டியிருந்தனர்.

rrat-300x200.jpg பிரபாகரன்- இரட்ணம் மாஸ்ரர்

இரட்ணம் மாஸ்ரர்தான் இதன் பொறுப்பாளர். பிரபாகரனின் பாதுகாப்பில் அக்கறையாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன், இம்ரான் பாண்டியன் படையணியில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. பாதுகாப்பு பிரிவில் இருப்பவர்கள் தவறு செய்தால், வீடு செல்லப்போகிறோம் என்றால், இந்த புலனாய்வுத்துறையின் கீழிருந்த சிறைச்சாலையில் அடைத்து விடுவார்கள். அங்கு கடுமையான நடைமுறைகள் இருந்தன. இதனால் போராளிகள் உடல்ரீதியாக கடுமையான பாதிப்புக்களை சந்திக்க ஆரம்பித்தனர்.

இதனால் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடுமையான பாதிப்பிற்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ பிரிவின் மருத்துவமனைகளிற்கு சென்று கொண்டிருந்தார்கள். தாக்குதலில் கடுமையான காயமடைந்து, உடல்பாதிப்பிற்குள்ளாகுவதுதான் வழக்கம். ஆனால், அப்படி இல்லாமல், ஒரு படையணியில் இருந்து கடுமையான பாதிப்புப்புடன் போராளிகள் வருகிறார்களே, என்ன விசயமாக இருக்கும் என டொக்ரர் அன்ரி (எழுமதி கரிகாலன்) தான் முதன்முதலில் இதில் கவனம் செலுத்தினார்.

 

(டொக்ரர் அன்ரி- புலிகளின் கிழக்கு அரசியல்துறை பொறுப்பாளராகவும், பின்னர் பொருண்மிய மேம்பாட்டு பிரிவின் பொறுப்பாளராகவும் இருந்த கரிகாலனின் மனைவி. யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்தின் முதலாவது அணியில் கற்கையை பூர்த்தி செய்தவர். ஆரம்பகாலத்திலிருந்தே புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர். தலைவர் பிரபாகரனின் குடும்ப வைத்தியரும் இவர்தான். பிரபாகரன் குடும்பத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தையும் பேணினார். அதனால், எந்த விவகாரத்தையும் பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவரால் முடிந்தது).

rgyu-300x245.jpg கரிகாலன்- எழுமதி (டொக்ரர் அன்ரி)

இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடுமையான பாதிப்புடன் வைத்தியசாலைக்கு வரும் போராளிகளின் விபரங்களை ஆராய்ந்த டொக்ரர் அன்ரி, அது அவர்களின் புலனாய்வு பிரிவின் நடைமுறைகளின் விளைவு என்பதை புரிந்து கொண்டார். எந்த தயக்கமுமின்றி உடனடியாக, இது பற்றி பிரபாகரனிற்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அறிக்கையை படித்த பிரபாகரன், அந்த சிறைச்சாலையை உடனடியாக இடிக்க சொன்னார். அப்போது தலைமைசெயலக பொறுப்பாளராக இருந்த தேவனிடம் அதை கண்காணிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

தேவன், இம்ரான்பாண்டியன் படையணியிலிருந்து வளர்ந்தவர். பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராகவும் இருந்தவர். பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராக வளர்ந்தவர்களை, அடுத்த கட்டமாக ஒரு மாவட்ட தளபதியாகவோ, அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ அனுப்பும் வழக்கமிருந்தது. பிரபாகரனின் கண் முன்னால் வளர்ந்தவர்களை, அவர்களின் திறமையை கண்டு பிரபாகரனே வளர்ந்துவர சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தவர்களை- முக்கியமான பொறுப்பில் வெற்றிடம் ஏற்படும்போது, அங்கு அனுப்புவார்.

 

1995 இல் மணலாறு மாவட்ட தளபதியாக குமரன் நியமிக்கப்பட்டபோது, அவரின் வயது இருபத்துகளின் ஆரம்பமாக இருந்தது. பிரபாகரனின் பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக இருந்தவர். மணலாறு தளபதியாக இருந்த வெள்ளை, மணலாறு தாக்குதலில் சறுக்க- அந்த இடத்திற்கு குமரன் நியமிக்கப்பட்டார். பிரபாகரனின் தெரிவு மிகச்சரி என்பதை குமரன் நிரூபித்தார். 1993 இல் லெப்.கேணல் அன்பு இருந்த சமயத்தில் மணலாறு காடு எப்படி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததோ, அப்படியான நிலைமையை குமரன் ஏற்படுத்தினார்.

தேவனும் பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராக இருந்தபோது, தலைமை செயலக பொறுப்பாளராக இருந்த பதுமன் திருகோணமலைக்கு தளபதியாக அனுப்பப்பட்டார். அந்த வெற்றிடத்திற்கு தேவன் நியமிக்கப்பட்டார்.

aathavan-1-300x224.jpg கடாபி

கடாபியை மீறி சிறையை உடைக்க தேவன் விரும்பவில்லை. கடாபியும் உடைக்க விரும்பவில்லை. அதனால் சிறை உடைக்கப்படாமலேயே இருந்தது. சிறையை உடைக்க சொன்ன பிரபாகரன், அதை மறந்திருப்பார் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், பிரபாகரன் அதை மறக்கவில்லை. சிறிய இடைவெளியின் பின், இருவரையும் அழைத்து, சிறை உடைக்கப்பட்டு விட்டதா என வினவினார். அது உடைக்கப்படவில்லை!

கடாபி, தேவன் இருவரையுமே அவர்களின் பொறுப்பிலிருந்து நீக்கினார். 2001 வரை விடுதலைப்புலிகள் அமைப்பின் மிக சக்தி வாய்ந்த நபராக இருந்தவர் கடாபி. பிரபாகரனது பாதுகாப்பு, விமான எதிர்ப்பு அணி, தரை கரும்புலிகள், விக்டர் கவச எதிர்ப்பு படையணி, ராங்கி அணி, விடுதலைப்புலிகள் வாங்கும் எந்த புதியரக கனரக ஆயுதமானாலும் அது கடாபியின் கீழ்தான் வரும், ஏனைய படையணிகளிற்கான கனரக ஆயுத பயிற்சி என பலபிரிவுகளிற்கு கடாபி பொறுப்பாக இருந்தார். இந்த சிறை சம்பவத்துடன் (வேறு சில சம்பவங்களும் இருந்தன) அவரை வேறு பொறுப்பிற்கு மாற்றினார் பிரபாகரன். புலிகளிற்குள் இந்தவகையான நடவடிக்கைக்கு ‘காற்று இறக்கல்’ என்ற சொல் பாவிக்கப்படும். புதிய போராளிகளிற்கு பயிற்சியளிப்பதற்கு பொறுப்பாக கடாபி நியமிக்கப்பட்டார். தேவன் திருகோணமலைக்கு மாற்றப்பட்டார்.

 

இந்த தேவன் தலைமைசெயலகத்திற்கு பொறுப்பாக இருந்த சமயத்தில்தான் மட்டக்களப்பில் இருந்து ரெஜினோல்ட் உள்ளிட்ட சிலரது கடிதம் வந்தது. இது புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விசயம். இந்த இடத்தில் புலிகளின் தலைமைசெயலகம் பற்றிய சிறு விளக்கம் தர வேண்டும். அனைத்து போராளிகளின் பதிவும், ஆயுதங்களின் பதிவும் தலைமைசெயலகத்தில் இருக்கும். சில இரகசிய செயற்பாட்டில் இருக்கும் போராளிகள் பற்றிய விபரம் தலைமை செயலகத்தில் இருக்காது. அதேபோல, புலிகள் புதிதாக ஏதாவது இரகசிய ஆயுதங்கள் இறக்குமதி செய்து பாவனையில் வைத்திருந்தால், அதுவும் பதிவிற்கு வராது. புலிகள் 1996 இல் SPG 9 என்ற ராங்கி எதிர்ப்பு ஆயுதத்தை இறக்குமதி செய்ததாக முன்னர் குறிப்பிட்டிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் தலைமைசெயலக பதிவிற்கு அது செல்லவில்லை. அதுபோல, ஆயுத களஞ்சியங்களில் உள்ள ஆயுதங்களின் விபரமும் இருக்காது. படையணி மாற்றப்படும் போராளிகள் தலைமைச்செயலகம் சென்று, அங்கிருந்தான் செல்வார்கள். ஆனால் தலைமைசெயலகமாக யாரையும் இடமாற்றம் செய்யவோ, படையணி மாற்றம் செய்யவோ முடியாது. அமைப்பிற்குள் நடக்கும் மாற்றங்களை பதிவு செய்வார்கள் அவ்வளவுதான். ஆனால் போராளிகளின் பிரச்சனைகளை, கருத்துக்களை தலைமைசெயலகத்திற்கு எழுதினால், சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து முடிவெடுப்பார்கள்.

மட்டக்களப்பு புலனாய்வுத்துறை முக்கியஸ்தர்கள் ரெஜினோல்ட் தலைமையில் தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதியதும், அது பெரிய குழப்பமாகியது. தலைமைசெயலகம் இதில் நடவடிக்கை எடுக்க முடியாது. மட்டக்களப்பிலுள்ள தலைமைசெயலக பொறுப்பாளரை தொடர்பு கொண்டு, ரெஜினோல்ட் ஆட்களுடன் பேசி காரணத்தை அறிய சொன்னார்கள். மட்டக்களப்பு தலைமை செயலக பொறுப்பாளர் உடனே ரெஜினோல்ட் ஆட்களை அழைத்து என்ன பிரச்சனையென விசாரித்தார். ரெஜினோல்ட் ஆட்கள் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்கள்- ‘நாங்கள் அம்மானின் கட்டளையின் கீழ் செயற்படவே விரும்புகிறோம்’ என.

தலைமை செயலகத்தில் இருப்பவர்கள் அடிக்கடி இப்படியான பிரச்சனைகளை சந்திப்பது வழக்கம்தான். ‘இந்த தளபதியின் கீழ் செயற்படமாட்டேன். அந்த தளபதியின் கீழ்தான் செயற்படுவேன்’ என போராளிகள் சொல்வது சகஜம்தான். ஆனால் மட்டக்களப்பில் நடந்தது வேறு வகை. ஒரு பின்னணி சக்தியின் துணையுடன் போராளிகள் ஆட்டுவிக்கப்பட்டனர்.

rrt-1-271x300.jpg சிவப்பு அடையாளமிட்டவர் தேவன். பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராக இருந்தபோது. அருகில் சிலம்பரசன் (சாதாண உடை- பின்னர் பாதுகாப்பு அணி பொறுப்பாளராக இருந்தவர். இறுதி யுத்தத்தில் மரணமானவர்) மற்றும் வீரமணி (தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்)

இந்த விடயம் பிரபாகரன், பொட்டம்மானிடமும் சென்றது. அவர்களிடம் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று- பிரச்சனையை கிளப்புகிறார்கள் என ஒரேயடியாக வீட்டுக்கே அனுப்பிவிடலாம். அப்படி நடந்தால் அது கருணாவையும் சீண்டும். கருணா நீண்ட நாளுக்கு ஒழித்து பிடித்து விளையாட முடியாது.

இரண்டாவது தெரிவு- விட்டு பிடிப்பது. ரெஜினோல்ட் ஆட்களின் விருப்பபடி, புலனாய்வுதுறை நிர்வாகத்திலிருந்து விலகி, கருணாவின் கீழ் செயற்பட அனுமதிப்பது. இப்படி செய்தால், கிழக்கு சிக்கல் உடனடியாக வளராது.

புலிகள் இரண்டாவதையே தெரிவு செய்தனர்.

ரெஜினோல்ட் ஆட்கள் விரும்பியபடி கருணாவின் கீழ் செயற்படலாமென புலிகள் அனுமதித்தனர். கிட்டத்தட்ட பதினேழு வரையான புலனாய்வுதுறை போராளிகள் இந்த சமயத்தில் கருணாவின் கீழ் சென்றனர். பதினேழு பேர் என்பது புலனாய்வு செயற்பாட்டில் பெரிய தொகை. ஆனால், புலிகளிற்கு அது பெரிதாக இடிக்கவில்லை. காரணம், அதில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள். நீண்டகாலம் இயக்கத்தில் இருந்தவர்களும் புலனாய்வு செயற்பாட்டில் கில்லாடிகள் கிடையாது. புலனாய்வு செயற்பாட்டில் இரண்டு வகையானவர்கள் இருப்பார்கள். ஒன்று, நுணுக்கமாக திட்டமிட்டு பின்னணியில் இருந்து அதை செயற்படுத்தபவர்கள். மற்றையது, இப்படி நுணுக்கமான திட்டமிடும் திறமைகள் இல்லாவிட்டாலும், துணிந்து அதை செய்யும் ஆற்றல். புலனாய்வுத்துறையிலிருந்து வெளியேறியவர்கள் பெரும்பாலானவர்கள் இந்த வகையானவர்கள்தான்.

ரெஜினோல்ட் தலைமையில் புலனாய்வுத்துறையிலிருந்து ஒரு அணி வெளியேறியதும், பொட்டம்மான் நீலன் தலைமையில் புதிய நிர்வாக கட்டமைப்பொன்றை உருவாக்கினார். நீலன் எற்கனவே மட்டக்களப்பில் புலனாய்வுதுறையின் வேறொரு வேலையாக நின்றவர்.

 

ரெஜினோல்ட் தலைமையில் சென்றவர்களை வைத்து கருணா தனக்கு கீழ் இன்னொரு புலனாய்வு அணியை உருவாக்கினார். ஏற்கனவே ரமணனின் கீழ் ஒரு புலனாய்வு அணி இருக்க, ரெஜினோல்ட்டின் கீழ் இன்னொரு அணி உருவாக்கப்பட்டது. இரகசிய நடவடிக்கைகள் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அணி அது!

2001ம் ஆண்டு. புல்லுமலையில் ஒரு கிளைமோர் தாக்குதல் நடந்தது. புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த அற்புதன் மாஸ்ரரின் மீது அந்த தாக்குதல் நடந்தது. அற்புதன் மாஸ்ரர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ரெஜினோல்ட் அணி வெளியேறிய பின்னர், அற்புதன் மாஸ்ரர்தான் மட்டக்களப்பு விவகாரங்களை கவனிக்க (நீலனின் கீழ்தான் செயற்பட்டவர்) பொட்டம்மானால் நியமிக்கப்பட்டவர். அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதல் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியால் நடத்தப்பட்டதென, புலிகளின் தலைமைக்கு கருணாவின் தகவல் மையத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.

புல்லுமலை புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டு பிரதேசம். அங்கு அதற்கு முன்னரும் இராணுவத்தின் கிளைமோர் தாக்குதல் நடக்கவில்லை. பின்னரும் நடக்கவில்லை.

அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதலின் பின்னணி என்னவென்பது புலிகளில் இரண்டு தளபதிகளிற்கு தெரியும். ஒன்று- கருணா. மற்றையது- பொட்டம்மான்!

(தொடரும்)

 

http://www.pagetamil.com/9260/

Share this post


Link to post
Share on other sites
On 7/24/2018 at 10:49 PM, கிருபன் said:

கூல்யார்! எவருக்கும் எல்லாமே தெரியாது என்பதுதான் நிஜம்!

இயக்கம் என்றால் கருணா மட்டுமே  தெரியும் பைத்தியங்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.பொது வெளியில் எப்படி உரையாட வேண்டும் என்பதை கருணாவின் அடிமை முதலில் பழக வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
On 7/20/2018 at 8:14 PM, கிருபன் said:

ஆனால் தராசு சமனிலையில் இல்லையென்பது புலிகளிற்கும் நன்றாக தெரியும். நியூட்டனின் பெறுமதி ஆயிரம் கிலோகிராம் என்றால், ஜெயரட்ணத்தின் பெறுமதி வெறும் ஐம்பது கிலோகிராம்தான். அப்படியான சமன்பாடு அது.  நியூட்டனை விடுவிக்கும் அந்த இரகசிய முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனால், பிரபாகரனிடம் வேறு ஏதேனும் இரகசிய திட்டமிருந்திருக்ககூடும். அதனால்தான்- 2007 இல் இறுதியில் நியூட்டனில் மனைவி, பிள்ளைகளை புதுக்குடியிருப்பில் சந்தித்து ஆறுதல் கூறியபோது, எப்படியாவது அவரை வெளியில் எடுத்து தருவேன் என்று வாக்களித்திருந்தார். ஒரு கொமாண்டோ அற்றாக் நடத்தியாவது நியூட்டனை வெளியில் எடுக்கலாமென புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

 நியூட்டனை மீட்க புலிகள் ஏதாவது கொமாண்டோ அற்றாக் நடத்துவார்கள் என்பது இராணுவ புலனாய்வுத்துறைக்கும் தெரியும். எப்படியாவது நியூட்டனை மீட்க வேண்டுமென புலிகளும் முயன்றார்கள். அந்த நாட்களில் இரண்டு தரப்பும் தமது உச்சபட்ச புலனாய்வு பலத்தை பாவித்து ஒரு பெரிய ஆடுபுலியாட்டத்தையே நடத்தினார்கள். அதைப்பற்றி பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் விபரமாக குறிப்பிடுகிறோம்.

நவம்பர் விஸ்கி இப்போ உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று மட்டுமாவது சொல்லி இந்த பந்தியை முடிதிருக்கலாமே 

Share this post


Link to post
Share on other sites
On 7/14/2018 at 10:34 PM, nunavilan said:

ஆரம்பத்தில் கிழக்கில் வேலை  செய்தவர் பொட்டம்மான்.  எங்கு விழுப்புண் அடைந்தார் என தெரியவில்லை. ஆனால் கதிரையில் இருக்க கூட  சிரமப்பட்டவர் என அறிந்துள்ளேன். இயக்கத்தில் இருந்தவர்கள்   இக்கூற்றை சரிபார்க்கவும்.

இந்தியாவுக்கும் அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது  பொட்டு அம்மானுக்கு  ( சுதந்திர வேட்கையில் அடேல் பால சிங்கம் அம்மையார் குறிப்பிட்டுள்ளார்) நவிண்டில் என்ற ஊரை குறிப்பிட்டுள்ளார் ஆனால் காயம் அடைந்தது வேறு இடத்தில் தாங்குதல் நடந்த இடம் வேறு 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவுக்கும் அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது  பொட்டு அம்மானுக்கு  ( சுதந்திர வேட்கையில் அடேல் பால சிங்கம் அம்மையார் குறிப்பிட்டுள்ளார்) நவிண்டில் என்ற ஊரை குறிப்பிட்டுள்ளார் ஆனால் காயம் அடைந்தது வேறு இடத்தில் தாங்குதல் நடந்த இடம் வேறு 

அங்கு குறிப்பிட்டது யாழ்ப்பாணத்தில் காயமடைந்ததையும் தான் அவரை பராமரித்ததையும் 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, அபராஜிதன் said:

அங்கு குறிப்பிட்டது யாழ்ப்பாணத்தில் காயமடைந்ததையும் தான் அவரை பராமரித்ததையும் 

நானும் அதைத்தானே குறிப்பிட்டுள்ளேன் 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவுக்கும் அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது  பொட்டு அம்மானுக்கு  ( சுதந்திர வேட்கையில் அடேல் பால சிங்கம் அம்மையார் குறிப்பிட்டுள்ளார்) நவிண்டில் என்ற ஊரை குறிப்பிட்டுள்ளார் ஆனால் காயம் அடைந்தது வேறு இடத்தில் தாங்குதல் நடந்த இடம் வேறு 

  வலிகாமத்தில் இந்திய இராணுவத்துடனான மோதலில் காயப்பட்ட பின்னர்  நவிண்டிலில் தங்கியிருந்தார் என்று நினைக்கின்றேன். அந்த  வீடு இருந்த பகுதியில் அந்த நேரம் நானும் போய்வந்திருப்பேன். ஆனால் யார் இருந்தார்கள் என்று தெரிந்திருக்கவில்லை

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 7/27/2018 at 8:44 PM, கிருபன் said:

  வலிகாமத்தில் இந்திய இராணுவத்துடனான மோதலில் காயப்பட்ட பின்னர்  நவிண்டிலில் தங்கியிருந்தார் என்று நினைக்கின்றேன். அந்த  வீடு இருந்த பகுதியில் அந்த நேரம் நானும் போய்வந்திருப்பேன். ஆனால் யார் இருந்தார்கள் என்று தெரிந்திருக்கவில்லை

பொட்டு அம்மான் யாழ் மருத்துவபீட மைதானத்தில் இந்திய பாரா/கூர்க்கா துருப்புகளின் தரையிறக்கம் மீதான தாக்குதலில் தான் விழுப்புண் அடைந்தார்.

வல்வெட்டித்துறை ஊடாக இருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது தான் அவருக்கு மூத்த மகன் பார்த்தீபன் பிறந்தார்.

மதி, இம்ரான், பாண்டியனைத்தொடர்ந்து யாழ் மாவட்டத்தளபதியாக பொறுப்பெடுத்தார்.

யாழ் மாவட்டத்தளபதியாக இருந்த காலத்தில் பெரும்பகுதி வல்வெட்டித்துறையிலிருந்தே இயங்கினார்.

Edited by பகலவன்
  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On ‎7‎/‎24‎/‎2018 at 10:49 AM, கிருபன் said:

கூல்யார்! எவருக்கும் எல்லாமே தெரியாது என்பதுதான் நிஜம்!

இறுதி யுத்தத்தில் முழுமையாக  என்ன நடந்தது என்று  ஒருத்தருக்கும் தெரியாது தான்...நான் கேட்டது அதற்கு முதல் நடந்தது பற்றி அது கூட அவருக்கு தெரியவில்லை.?


 

On ‎7‎/‎26‎/‎2018 at 4:39 PM, நந்தன் said:

இயக்கம் என்றால் கருணா மட்டுமே  தெரியும் பைத்தியங்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.பொது வெளியில் எப்படி உரையாட வேண்டும் என்பதை கருணாவின் அடிமை முதலில் பழக வேண்டும்.

கிருபன்,உப்ப உங்களுக்கு விளங்கி இருக்கும் கருணாவின் அடிமையைப் பற்றி ?

 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ரதி said:

கிருபன்,உப்ப உங்களுக்கு விளங்கி இருக்கும் கருணாவின் அடிமையைப் பற்றி ?<span><span>

கருணாவுக்கு பிள்ளையானே அடிமையாக இருக்கவில்லை! அலுவல் முடிந்த பின்னர் அவர் யாரோ! நான் யாரோ! 

Share this post


Link to post
Share on other sites

புலிகளின் பெண் போராளி கொழும்பில் சுட்டுக்கொன்ற இராணுவ புலனாய்வாளர்!

June 24, 2018
17264442_164116904104842_381124174577518

பீஷ்மர்

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 25

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அற்புதன் மாஸ்ரர் மீது 2001ஆம் ஆண்டு  கிளைமோர் தாக்குதல் ஒன்று நடந்ததாக கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். அந்த தாக்குதல் முடிந்த கையுடனேயே, இராணுவத்தால் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கருணா தரப்பினால் வன்னிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அது உண்மையா? அந்த தாக்குதலை நடத்தியது யார்?

இந்த தாக்குதல் பற்றி இப்போது விசாரித்தால், கருணா அணியிலுள்ளவர்கள் மறுப்பார்கள். தமக்கு அதில் சம்பந்தமேயில்லையென கூறுவார்கள். ஆனால் இலங்கை புலனாய்வு வட்டாரங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள். அவர்களின் தகவல்படி, அந்த தாக்குதலில் கருணா தரப்பை சேர்ந்தவர்களின் பங்கும் இருந்ததென்கிறார்கள்!

 

சரி, இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பதற்கு அப்பால், புலிகளின் பிளவு வெளிப்பட்ட முதலாவது சம்பவமாக இதை கொள்ளலாம்.

இந்த தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணிதான் நடத்தியதாக கருணா வன்னிக்கு தகவல் அனுப்பினார். ஆனால், மட்டக்களப்பிலிருந்த புலனாய்வுத்துறையினர், பொட்டம்மானிற்கு அனுப்பிய ரிப்போர்ட் வேறுவிதமாக இருந்தது.

அது- இந்த தாக்குதலை கருணா அணியே நடத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருணாவின் கீழ் இரகசியமாக புலனாய்வு அணியொன்று உருவாக்கப்பட்டதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அந்த அணிதான் தாக்குதலை நடத்தியதாக புலிலனாய்வுத்துறை அனுப்பிய ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

சம்பவம் நடைபெற்ற உடனே தயாரிக்கப்பட்ட ரிப்போர்ட் அது. இப்படியான ரிப்போர்ட்டுகளை பற்றி அறிந்தவர்களிற்கு ஒரு விசயம் தெரியும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தின் ஆணிவேரில் தவறிருக்காது. ஆனால், சில சம்பவங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கும். ஏனெனில், எதிர்தரப்பு புலனாய்வு அணியால் நடத்தப்பட்ட தாக்குதல் முறையை அவ்வளவு துல்லியமாக உடனே அறிக்கையிட முடியாது. புலிகளின் அறிக்கையிலும் அப்படியான சில சம்பவ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம்.

 

எது எப்படியோ, இப்போது புலனாய்வு வட்டாரங்களில் அடிபடும் தகவலை குறிப்பிட்டு விடுகிறோம்.

இலங்கை புலனாய்வு அமைப்புக்களுடன் இரண்டாயிரங்களில் ஓரளவு தொடர்பிருந்தவர்கள்- மண்டைப்பீஸ் சுரேஸ் என்ற பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பார்கள்.

2000ஆம் ஆண்டு வரை ஜெயந்தன் படையணியில் செயற்பட்டவர். பின்னர், விடுதலைப்புலிகளில் இருந்து தப்பியோடி கொழும்பிற்கு சென்றார். அங்கு இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பேற்பட்டு, அவர்களுடன் நெருங்கி செயற்பட்டார்.

அப்போது இராணுவ புலனாய்வுத்துறையுடன் தமிழ் இளைஞர்கள் அணியொன்றும் இயங்கிக் கொண்டிருந்தது. புளொட்டில் இருந்து விலகி சென்ற புளொட் மோகன்தான் அந்த அணியின் தலைவர்.  அவரது அணியில் மண்டைப்பீஸ் சுரேசும் இணைக்கப்பட்டார்.

மட்டக்களப்பிற்குள் விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி முதன்முதலில் தாக்குதல் நடத்தியது இந்த அணிதான்! புளொட் மோகன் இந்த அணியை வழிநடத்தினாலும், மண்டைப்பீஸ் சுரேஷ்தான் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர்!

 

தனது பழைய தொடர்புகளின் மூலம் கருணாவிற்கு நெருக்கமான சிலருடன் மண்டைப்பீஸ் சுரேஸ் தொடர்பில் இருந்தார், இந்த தாக்குதலில் கருணா தரப்பின் பங்கு என்பது- மண்டைப்பீஸ் சுரேஷ் அணி ஊடுருவி சென்றதை “கண்டும் காணாமலும்“ விட்டதுதான் என்கிறார்கள் அந்த புலனாய்வுத்துறை வட்டாரங்கள்.

 

மண்டைப்பீஸ் சுரேஷ் மிகக்குறுகிய காலத்திற்குள்ளேயே இராணுவ புலனாய்வு அணிக்குள் மிகப்பிரபல்யமாகி விட்டார். அதாவது, புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதில் புளொட் மோகனை விட மண்டைப்பீஸ் சுரேஷ்தான் கில்லாடியென புலனாய்வுத்துறையினர் கணக்கிட்டு வைத்திருந்தனர்.

 

மண்டைப்பீஸ் சுரேஸினால் தமக்கு தலைவலியென்பதை புலிகள் தெரிந்து கொள்ளாமல் இருப்பார்களா?

தெரிந்தார்கள். சுரேஸை மேலே அனுப்பிவைக்கும் வேலையையும் செய்தார்கள்.

மண்டைப்பீஸ் சுரேஸ் அப்பொழுது நுகேகொடை பகுதியில் தங்கியிருந்தார். அவரது முக்கியம் கருதி அவருக்கு பலத்த பாதுகாப்பிருந்தது. அவரை சுட்டுக்கொல்ல பலமுறை புலிகள் முயன்றார்கள். நெருங்கவே முடியவில்லை.

இதன்பின்னர்தான் வேறொரு ஐடியா செய்தார்கள்.

மண்டைப்பீஸ் சுரேஸிற்கு ஊரில் (மட்டக்களப்பில்) ஒரு காதலி இருந்தார். அவர் மீது புலிகள் ஒரு கண் வைத்திருந்தார்கள். திடீரென ஒருநாள் அவர் புலிகளில் இணைந்து விட்டார்.

ஆரம்பத்தில் புலிகளிற்கு சந்தேகமாக இருந்தது. ஏதாவது உள்நோக்கத்துடன் வந்திருப்பாரோ என்று சந்தேகித்தனர். பின்னர் போகப்போக விடயம் தெரியவந்தது. புலிகளில் இருந்து தப்பிச்சென்ற பின்னர் சுரேஷிற்கும் அவருக்கும் தொடர்பேதும் இருக்கவில்லை.

அவரையே பாவித்து சுரேஸை கொன்றால் என்ன என்று யோசித்தனர்.

இதிலிருந்த ஒரே சிக்கல்- அந்த பெண், தனது முன்னால் காதலனை கொல்ல தயாராக இருக்கிறாரா என்பதே.

புலிகள் அவருடன் மெல்லமெல்ல பேச- சுரேஸ் செய்தது துரோகம், அவரால் அமைப்பிற்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது, அவரை கொல்வதை தவிர வேறுவழியில்லையென்பதை அந்த பெண் ஏற்றுக்கொண்டார். அது மட்டுமல்ல, சுரேஸை கொல்லும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்!

துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் புலனாய்வுத்துறை பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர் தயார்படுத்தப்பட்டார். பின்னர் அவர் கொழும்பிற்கு தொழில் தடி செல்பவராக சென்றார்.

அங்கு சுரேசுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தினார்.

காதலி தன்னை தேடி வந்ததில் சுரேஷிற்கு பெரிய சந்தோசம். இராணுவத்துடன் சேர்ந்தியங்குவதை விட்டுவிட்டு, மத்திய கிழக்கிற்காவது சென்றுவிடுமாறு காதலி வற்புறுத்தினார். அந்த விசயத்தில் மாத்திரம் தலையிட கூடாதென சுரேஸ் கண்டிப்பாக கூறிவிட்டார்.

கொழும்பில் தனியாக இருக்கிறார் சுரேஸ். காதலியும் கொழும்பிற்கு வந்து விட்டார். தனியாக சந்திக்காமல் இருப்பது எப்படி?

Image result for பà¯à®³à¯à®à¯ à®®à¯à®à®©à¯ கொல்லப்பட்ட நிலையில் புளொட் மோகன்

நண்பர்கள் மூலம் அறையொன்றை பெற்று, காதலியையும் அங்கு ஒருநாள் அழைத்தார். விசயம் புலிகளின் புலனாய்வுப்பிரிவு போராளிகளிற்கு அறிவிக்கப்பட, அவர்கள் வாகனத்தில் காதலியை அழைத்து சென்று, சுரேஸின் இருப்பிடத்திற்கு அருகில் இறக்கிவிட்டு, காத்திருந்தார்கள்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த காதலி, அவர்களின் வாகனத்திலேயே ஏறி, மட்டக்களப்பிற்கு போய் சேர்ந்து விட்டார். சுரேஸை சடலமாகத்தான் இராணுவ புலனாய்வுத்துறையினர் கண்டெடுத்தனர்.

 

இதில் கவனிக்க வேண்டிய விசயம்- இந்த தாக்குதலை உயர்மட்ட உத்தரவின்றி கருணாவின் புலனாய்வு போராளிகள் செய்திருக்கவோ, தாக்குதலை செய்தவர்களிற்கு உதவியோ செய்ய முடியாது.

கிழக்கு பிளவை வாசகர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கால ஒழுங்கில் சம்பவங்களை குறிப்பிட்டு வருகிறோம். கிழக்கு பிளவிற்கு உண்மையில் தத்துவார்த்த அர்த்தங்களோ, கொள்கைரீதியான காரணங்களோ கிடையாது. அது வெறும் மனிதர்களிற்கிடையிலான முரண்பாடு என்பதை இதை படிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். பிளவின் பின்னரே அதற்கு தத்துவார்த்த அர்த்தங்களை உருவாக்க முயன்றார்கள். இதை உருவாக்கியதில் சிவராம் முக்கியமானவர். (சிவராமிற்கு புலிகள் மாமனிதர் கௌரவம் வழங்கியதும் இந்த மோதலின் தொடர்ச்சிதான்) மற்றதெல்லாம், அரசினால் இரகசியமாக இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டவர்கள். அவர்களை பற்றிய விபரங்களையெல்லாம் இந்த பகுதியில் சொல்வோம்.  சிவராம் கொலையில் மண்டைப்பீஸ் சுரேஷ் தொடர்புபட்டுள்ளார். சிவராம் கொலையை பற்றி பின்னர் விரிவாக குறிப்பிடுவோம். அப்போது, சுரேஸின் பங்கு என்னவென்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.

தன்முனைப்பு (Eco) தான் இந்த பிளவின் பின்னணி காரணி. அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதலிற்கு முன்னர் இன்னொரு சம்பவமும் நடந்தது. கிழக்கு அணிகள் வன்னியிலிருந்து மீண்டும் கிழக்கிற்கு திரும்பியிருந்த சமயத்தில், கிழக்கு பல்கலைகழகத்திற்குள் ஒரு உள்வீட்டு மோதல் ஏற்பட்டது. அடுத்த துணைவேந்தர் யார் என்ற போட்டி ஏற்பட்டது. அதிகார போட்டி ஏற்படுமிடங்களில் மனித மனங்கள் விதவிதமான சூழ்ச்சிபொறிகளை ஏற்படுத்தும். அதிலும் படித்தவர்கள் என நமது சமூகத்தில் கௌரவமாக பார்க்கப்படுபவர்கள் தமது நலன்களிற்காக எந்தவகையான சூழ்ச்சிக்கும் தயாராக இருப்பார்கள் என்பதற்கு கிழக்கு பல்கலைகழக சம்பவம் உதாரணம்.

2000களில் கிழக்கு பல்கலைகழகத்தில் துணைவேந்தருக்கான போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியில் சம்பந்தப்பட்டவர்களை நாம் பெயர் குறிப்பிடாமல் தவிர்த்து விடுகிறோம். அப்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலர் கிழக்கு பல்கலைகழகத்தில் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருந்தனர். கிழக்கை சேர்ந்த சில விரிவுரையாளர்களும் துணைவேந்தர் பதவியை குறிவைத்தனர். இந்த சமயத்திலேயே முதன்முதலாக வடக்கு, கிழக்கு பிளவுக்கான அத்திவாரம் இடப்பட்டது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் துணைவேந்தர் பதவிக்கு வராமல் தடுப்பதற்காக, கிழக்கை சேர்ந்தவர்கள்தான் கிழக்கு பல்கலைகழகத்திற்கு  துணைவேந்தராக வர வேண்டுமென்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். இது வடிவ மாற்றம் பெற்று, வடக்கிலுள்ளவர்கள் கிழக்கு மக்களை சமமாக மதிப்பதில்லை, கிழக்கின் அதிகாரபீடங்களையும் வடக்கிலுள்ளவர்களே ஆக்கிரமித்துள்ளனர் என்ற ரீதியில் பிரசாரப்படுத்தப்பட்டது.

 

427954_460004174051158_447697400_n-300x1

 

கிழக்கு துணைவேந்தர் சிக்கலை இரண்டு அணிகளும் விடுதலைப்புலிகளிடம் எடுத்து வந்தன. கிழக்கை சேர்த்தவர்கள் கருணாவை சந்தித்து, கிழக்கு துணைவேந்தர் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் புலனாய்வுத்துறையின் மட்டக்களப்பு தலைவர்களை சந்தித்து பேசினர். அற்புதன் மாஸ்ரர், மனோ மாஸ்ரர் போன்றவர்களுடனேயே இந்த பேச்சுக்கள் நடந்தன. கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் மோதல் பற்றிய செய்திகள் அப்பொழுது ஊடகங்களிலும் வெளியாகியிருந்ததால், அதை விலாவாரியாக குறிப்பிடாமல் விட்டு, அந்த சமயத்தில் வெளியில் வராமல் இருந்த உள்ளக தகவல்களை மட்டும் சொல்கிறேன்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள், மட்டக்களப்பில் உள்ள புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களை சந்தித்து பேசும் விடயத்தை அறிந்ததும், கருணா ஒருமுறை அவர்களை நேரில் அழைத்து எச்சரிக்கையும் விட்டிருந்தார்.

 

http://www.pagetamil.com/9471/

Share this post


Link to post
Share on other sites

பொட்டம்மானை இரகசியமாக கண்காணித்த கருணா!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 26

July 1, 2018
prabakaran.jpg

பீஷ்மர்

கிழக்கு பிளவிற்கு உண்மையில் தத்துவார்த்த அர்த்தங்களோ, கொள்கைரீதியான காரணங்களோ கிடையாது. அது கருணா என்ற தனி மனிதனின் முரண்பாடு என்பதை கடந்த பாகங்களில் குறிப்பிட்டிருந்தோம். பிளவின் பின்னரே அதற்கு தத்துவார்த்த அர்த்தங்களை உருவாக்க முயன்றார்கள். இதை உருவாக்கியதில் சிவராம் முக்கியமானவர். (சிவராமிற்கு புலிகள் மாமனிதர் கௌரவம் வழங்கியதும் இந்த மோதலின் தொடர்ச்சிதான்) மற்றதெல்லாம், அரசினால் இரகசியமாக இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டவர்கள். அவர்களை பற்றிய விபரங்களையெல்லாம் இந்த பகுதியில் சொல்வோம்.

தன்முனைப்பு (Eco) தான் இந்த பிளவின் பின்னணி காரணி. அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதலிற்கு முன்னர் இன்னொரு சம்பவமும் நடந்தது. கிழக்கு அணிகள் வன்னியிலிருந்து மீண்டும் கிழக்கிற்கு திரும்பியிருந்த சமயத்தில், கிழக்கு பல்கலைகழகத்திற்குள் ஒரு உள்வீட்டு மோதல் ஏற்பட்டது. அடுத்த துணைவேந்தர் யார் என்ற போட்டி ஏற்பட்டது. அதிகார போட்டி ஏற்படுமிடங்களில் மனித மனங்கள் விதவிதமான சூழ்ச்சிபொறிகளை ஏற்படுத்தும். அதிலும் படித்தவர்கள் என நமது சமூகத்தில் கௌரவமாக பார்க்கப்படுபவர்கள் தமது நலன்களிற்காக எந்தவகையான சூழ்ச்சிக்கும் தயாராக இருப்பார்கள் என்பதற்கு கிழக்கு பல்கலைகழக சம்பவம் உதாரணம்.

 

2000களில் கிழக்கு பல்கலைகழகத்தில் துணைவேந்தருக்கான போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியில் சம்பந்தப்பட்டவர்களை நாம் பெயர் குறிப்பிடாமல் தவிர்த்து விடுகிறோம். அப்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலர் கிழக்கு பல்கலைகழகத்தில் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருந்தனர். கிழக்கை சேர்ந்த சில விரிவுரையாளர்களும் துணைவேந்தர் பதவியை குறிவைத்தனர். இந்த சமயத்திலேயே முதன்முதலாக வடக்கு, கிழக்கு பிளவுக்கான அத்திவாரம் இடப்பட்டது.

commentary1.jpg

 

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் துணைவேந்தர் பதவிக்கு வராமல் தடுப்பதற்காக, கிழக்கை சேர்ந்தவர்கள்தான் கிழக்கு பல்கலைகழகத்திற்கு  துணைவேந்தராக வர வேண்டுமென்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். இது வடிவ மாற்றம் பெற்று, வடக்கிலுள்ளவர்கள் கிழக்கு மக்களை சமமாக மதிப்பதில்லை, கிழக்கின் அதிகாரபீடங்களையும் வடக்கிலுள்ளவர்களே ஆக்கிரமித்துள்ளனர் என்ற ரீதியில் பிரசாரப்படுத்தப்பட்டது.

 

கிழக்கு துணைவேந்தர் சிக்கலை இரண்டு அணிகளும் விடுதலைப்புலிகளிடம் எடுத்து வந்தன. கிழக்கை சேர்த்தவர்கள் கருணாவை சந்தித்து, கிழக்கு துணைவேந்தர் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் புலனாய்வுத்துறையின் மட்டக்களப்பு தலைவர்களை சந்தித்து பேசினர். அற்புதன் மாஸ்ரர், மனோ மாஸ்ரர் போன்றவர்களுடனேயே இந்த பேச்சுக்கள் நடந்தன. கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் மோதல் பற்றிய செய்திகள் அப்பொழுது ஊடகங்களிலும் வெளியாகியிருந்ததால், அதை விலாவாரியாக குறிப்பிடாமல் விட்டு, அந்த சமயத்தில் வெளியில் வராமல் இருந்த உள்ளக தகவல்களை மட்டும் சொல்கிறோம்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள், மட்டக்களப்பில் உள்ள புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களை சந்தித்து பேசும் விடயத்தை அறிந்ததும், கருணா ஒருமுறை அவர்களை நேரில் அழைத்து எச்சரிக்கையும் விட்டிருந்தார்.

கருணாவிடம் இருந்த போராளிகளின் எண்ணிக்கைதான் அவரை தன்னிச்சையாக நடக்க வைக்கிறது என்பதும் புலிகளிற்கு தெரியும். என்றாலும், கருணா விசயத்தில் அவசரப்படாமல், நிதானமாக செயற்பட முடிவெடுத்தார்கள்.

 

இந்த சமயத்தில் கிழக்கில் கருணா அணியினர் நடத்திய கட்டாய ஆட்சேர்ப்பையும் நினைவூட்டுகிறோம். 2001 இல் மட்டக்களப்பில் கருணா கட்டாய ஆட்சேர்ப்பை ஆரம்பித்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு கட்டாயமாக இளவயதினரை படையில் இணைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுதான். இது ஏன் நடந்ததென்பது தெரியுமா?

பலரும் நினைக்கிறார்கள், இது புலிகளின் தலைமையின் சம்மதத்துடன் நடந்ததென. அதற்கு வசதியாக ஒரு கதையையும் உருவாக்கி உலாவவிட்டுள்ளனர். அந்த கதையை முதலில் குறிப்பிடுகிறேன். கட்டாய ஆட்சேர்ப்பு விசயம் சர்வதேச அளவில் விமர்சனத்திற்குள்ளாக தொடங்க, கருணாவை புலிகள் வன்னிக்கு அழைத்தார்களாம். கட்டாய ஆட்சேர்ப்பை நிறுத்துமாறு மற்ற தளபதிகள் சொல்ல, “தலைவருக்கு ஏதேனும் பிரச்சனையென்றால் ஐயாயிரம் போராளிகளுடன் வருவேன். அதற்கு தயாராக இருக்கிறேன். நீங்கள் என்ன செய்தீர்கள்?“ என கேட்டாராம். இதை கருணா பிரிந்த பின்னர் அவருக்கு ஆதரவான யாரோ கிளப்பிவிட, ஒரு சுற்றுசுற்றி வந்துள்ளது. உண்மையில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை.

கருணா கட்டாய ஆட்சேர்ப்பை ஆரம்பித்ததே விடுதலைப்புலிகளிற்கு நெருக்கடி கொடுக்கத்தான்!

இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். அதை விளக்கமாக சொல்கிறேன். அப்போது அதன் பின்னணி விளக்கமாக புரியும்.

Karuna-1-e1441074326586-300x194.jpg

விடுதலைப்புலிகளின் கட்டமைப்பிற்குள் இனி கருணா செயற்படுவது சிரமம், அவர் தனித்து செயற்பட விரும்புகிறார் என்பதை 1999, 2000களிலேயே பிரபாகரன் துல்லியமாக கணித்து விட்டார். வன்னிக்குள் படைத்துறை, நிர்வாக கட்டமைப்புக்களை கருணா கடைப்பிடிக்காமல் விட்டது எப்படியென்பதை ஏற்கனவே விலாவாரியாக குறிப்பிட்டுள்ளோம். அவரை கிழக்கிலேயே செயற்பட அனுப்பிவிடுவோம் என பிரபாகரன் 2000 இல் முடிவெடுத்து அனுப்பினார்.

கிழக்கிற்கு கருணா வந்ததும், அவர் தனித்து இயங்குவதற்கான அத்திவாரங்களை இட தொடங்கிவிட்டார். விடுதலைப்புலிகளிற்கு எப்பொழுதாவது சவால் அளிக்கலாமெனில், அது தன்னிடமுள்ள ஆளணி எண்ணிக்கையை வைத்துதான் என்பது கருணாவிற்கு நன்றாக தெரியும். போரிடும் ஆற்றலுள்ள பெரிய படையணிகளை கட்டியமைத்தால், புலிகளை தவிர்த்து தன்னால் தனித்து இயங்க முடியுமென அவர் நம்பினார். கணிசமான படையணிகளை உருவாக்கினால், புலிகளுடன் மோதல் ஏற்பட்டாலும் அரச பின்னணியில் கிழக்கை கட்டுப்படுத்திக் கொண்டு நிலைகொண்டிருக்கலாமென நினைத்தார்.

படையணியை பெருக்கினால் புலிகளை நெருக்கடிக்குள்ளாக்கலாம், கிழக்கு விசயத்தில் மூக்கை நுழைக்கமாட்டார்கள் என நினைத்து, உடனடியாக ஆட்சேர்ப்பிற்கு உத்தரவிட்டார்.

 

கட்டாய ஆட்சேர்ப்பில் இளவயதானவர்களையும் இணைத்தார்கள். இது சர்வதேச அளவில் விமர்சனத்தை உண்டாக்கியது. சர்வதேச பிரதிநிதிகள் இதுபற்றி கருணாவிடம் கேட்கமாட்டார்கள். வன்னியிலுள்ள அரசியல்துறையினரைதான் தொடர்புகொண்டு விசனத்தை தெரிவித்தார்கள். விடுதலைப்புலிகள் தை பற்றி கருணாவிடம் பலமுறை சொல்லியும் அவர் ஆட்சேர்ப்பை நிறுத்தவில்லை. இறுதியில் ஒருமுறை, சர்வதேச பிரதிநிதிகளுடனான சந்திப்பிற்கு கருணாவையும் புலிகள் அழைத்தனர். இனி சிறுவர்களை படைக்கு இணைக்கமாட்டோம் என, கருணாவை வைத்துக்கொண்டு விடுதலைப்புலிகள் வாக்களித்த பின்னரே, கருணா கட்டாய ஆட்சேர்ப்பை நிறுத்தினார்.

கிழக்கு பிரதிநிதித்துவத்தை கருணா அதிகபட்சமாக எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்ட பின்னரே, கருணாவிற்கும் தனி ஹெலிகொப்டர் ஏற்பாடு செய்து அவரையும் பேச்சில் இணைத்து கொண்டார்கள். இந்தவகையில் பார்த்தால், கிழக்கு பிரதிநிதித்துவத்தை புலிகள் சமமாக பேணினார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.

கிழக்கில் கருணா தனித்து செயற்பட முடிவெடுத்தபோது, அவரின் கீழ் 5,858 போராளிகள் இருந்ததாக புலிகளின் தலைமைசெயலக பதிவுகள் குறிப்பிட்டன. இதில் கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 அளவில் வரும்.

விடுதலைப்புலிகள் தன்மீது திடீர் தாக்குதல் நடத்தி, தன்னை கைது செய்யலாமென்ற அச்சம் 2001 ஆம் ஆண்டிலேயே கருணாவிற்கு வந்துவிட்டது. இதனால் அவர் பாதுகாப்பு ஏற்பாடொன்று செய்திருந்தார். தனது படையணிகளை பிரித்து பல முகாம்களில் வைத்திருந்தால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாகிவிடும் என்பதால், தரவையில் பிரமாண்ட முகாம் அமைத்து அங்கேயே அனைத்து போராளிகளையும் நிலைகொள்ள வைத்தார். பிரமாண்டமான இராணுவ வலயமாக அது விளங்கியது. அந்த பிரமாண்ட இராணுவ வலயத்திற்குள் கருணா இருக்கும் வரை புலிகளால் அவரை எதுவும் செய்ய முடியாது. இது கருணாவிற்கும் தெரியும், புலிகளிற்கும் தெரியும்.

Related imageபுலிகள் அமைப்பை விட்டு பிரிந்து செல்வதாக கருணா அறிவிக்கவிருந்த சமயத்தில், கருணாவை கைது செய்ய புலிகள் ஒரு இரகசிய ஒப்ரேஷன் ஒன்றை செய்ய திட்டமிட்டனர். அந்த ஒப்ரேஷனின் முக்கிய அங்கமே, கருணாவை தரவை இராணுவ வலயத்திற்கு வெளியில் சந்தேகமில்லாமல் அழைத்து வருவதுதான்!

கருணாவிற்கும் புலிகளிற்குமிடையில் 2001 இல் இந்த இரகசிய மோதல் தீவிரம் பெற்றாலும், பிரபாகரன் இந்த மோதலை விரும்பவில்லை. வடக்கு, கிழக்கு என்ற பிரிவினையில்லாமல் அனைவரையும் ஒற்றுமையாக்க வைத்திருக்கவே விரும்பினார். 2002 இன் நடுப்பகுதியில் பொட்டம்மானை அழைத்த பிரபாகரன், கருணா விசயத்தில் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார். கிழக்கில் விடுதலைப்புலிகளின் புலனாய்வு அணி பலமாக நிலைகொள்வதா, கருணாவின் அணி பலமாக நிலைகொள்வதா என்பதில் இரண்டு தரப்பிற்குமிடையில் மறைமுக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இதன் விளைவுதான் அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதலும். கிழக்கில் புலிகளின் புலனாய்வு அணிகளை தற்காலிகமாக செயலிழக்க செய்யலாம், தென்பகுதி நடவடிக்கை அணிகளை மட்டும் கிழக்கிலிருந்து செயற்பட வைக்கலாமென பிரபாகரன் ஆலோசனையும் சொன்னார்.

 

இது பொட்டம்மானிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இருந்தாலும், பிரபாகரன் சொன்னால் அவர் தட்டமாட்டார். அதனால்தான் பிரபாகரனிற்கு அவரில் அவ்வளவு நம்பிக்கை. அரை மனதுடன் ஏற்றுக்கொண்டார்.

பிரபாகரன் இத்துடன் நிறுத்தவில்லை. பொட்டம்மானை உடனே கிழக்கிற்கு சென்று, கருணாவுடன் பேசி பிரச்சனைகளை களைய சொன்னார். கிழக்கிலிருந்து புலிகளின் புலனாய்வு அமைப்புக்களை கொஞ்சம் ஒதுங்கியிருக்க செய்து, கருணாவுடன் பிரச்சனைகளை மனம்விட்டு பேசுமாறு அறிவுறுத்தி அனுப்பியிருந்தார்.

பொட்டம்மானை கிழக்கிற்கு அனுப்புவதற்கு முன்னர், தொலைதொடர்ர் கருவியில் பிரபாகரனே நேரடியாக கருணாவை தொடர்பு கொண்டு பேசினார். வடக்கு, கிழக்கென இப்படி மல்லுக்கட்டிக் கொண்டிருந்தால் நடக்கும் விபரீதங்களையெல்லாம் புரிய வைத்து, பொட்டம்மானை கிழக்கிற்கு அனுப்பிவைக்கும் விசயத்தையும் சொன்னார். பொட்டம்மானை அனுப்பி வைக்கிறேன், அவருக்கு ஆபத்து நேராமல் பார்த்து கொள்ளலாமா என பிரபாகரன் கேட்டார். ஏற்கனவே  அற்புதன் மாஸ்ரரிற்கு நடத்தப்பட்ட தாக்குதலை குறிப்பிட்டு, இராணுவம் ஏதாவது தாக்குதல் நடத்தாமல் பார்த்து கொள்ளலாமா என்றுதான் பிரபாகரன் கேட்டார். பிரபாகரன் எதையும் அறியாதவர் போல இப்படி கேட்டதன் அர்த்தம், கருணா அணியினரால் ஆபத்தில்லாமல் பொட்டம்மானை திருப்பி அனுப்பி வைக்க முடியுமா என்பதுதான். அது கருணாவிற்கும் தெரியும்.

பொட்டம்மானை பத்திரமாக திருப்பி அனுப்பிவைக்கும் பொறுப்பு தன்னுடையதென கருணா வாக்களித்தார்.

Image result for பà¯à®à¯à®à®®à¯à®®à®¾à®©à¯

பொட்டம்மான் என்றால் கருணாவிற்கு எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். தனது ஓட்டுமாட்டுக்களை பொட்டம்மான் எப்படியோ கண்டுபிடித்து விடுகிறார் என்பதில் கருணாவிற்கு பயங்கர கடுப்பு. போர்நிறுத்த கண்காணிப்பு குழு ஊடாக முறைப்படி அறிவித்துத்தான் பொட்டம்மான் கிழக்கிற்கு சென்றார். புளியங்குளம் சோதனைச்சாவடியினால் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியினால் வாகனத்தில் அவர் சென்ற விசயம் அப்பொழுது வெளியில் வரவில்லை. புலிகள், அரசாங்கம் ஆகியவற்றின் உயர்மட்டமும், போர்நிறுத்த கண்காணிப்புகுழுவும் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயம் இது. அதனால் தகவல் வெளியில் கசியவில்லை.

பொட்டம்மான் விட்டுக்கொடுப்புக்களிற்காக மட்டக்களப்பிற்கு சென்றாரே தவிர, அதற்கான சாத்தியங்கள் அங்கு இருக்கவில்லை. பொட்டம்மானை கண்காணிப்பதிலேயே கருணாவின் அணிகள் குறியாக இருந்தன. பொட்டம்மான் மட்டக்களப்பிற்கு வந்ததும், மட்டக்களப்பில் இருந்த புலனாய்வுத்துறை போராளிகளின் பாதுகாப்பில், அவர்களது முகாமில் தங்க முடிவெடுத்தார். ஆனால் கருணா வேறு விதமாக சொன்னார்.

பொட்டம்மானை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டியது தனது பொறுப்பு, அதனால் புலனாய்வுத்துறைக்கு மேலதிகமாக தனது அணிகளும் அவருக்கு பாதுகாப்பு வழங்கும், கஞ்சிகுடிச்சாறில் இருந்த தனது முகாமொன்றிலேயே பொட்டம்மான் தங்கியிருக்கலாமென்றார். பொட்டம்மானிற்கு அதில் பிரச்சனையிருக்கவில்லை. கருணாவை எப்படி கையாள்வதென பொட்டம்மானிற்கா சொல்லிக் கொடுக்க வேண்டும்?

 

பொட்டம்மானுடன் புலனாய்வுத்துறை போராளிகள்தான் தங்கியிருந்தனர். அந்த பகுதியில் கருணாவின் நம்பிக்கைக்குரிய போராளிகள் நிறைந்திருந்தனர். கஞ்சிகுடிச்சாறில் இருந்த புலனாய்வுத்துறை முகாமைப்பற்றி தெரிந்தவர்களிற்கு நாம் சொல்லும் லொக்கேஷன் புரியும். பொட்டம்மான் தங்கியிருந்த சமயத்தில், அந்த முகாமிற்கு வெளியில் கருணாவின் கட்டளையின் கீழ், கிழக்கு போராளிகள் வீதிச்சோதனை சாவடியொன்றை அமைத்திருந்தார்கள். காரணம்- பொட்டம்மானின் பாதுகாப்பிற்காம்!

இதன்மூலம் அங்கு வருபவர்கள், போகிறவர்கள், பொட்டம்மான் எங்கு போகிறார் என்பதையெல்லாம் கருணா உடனுக்குடன் அறிந்தபடியிருந்தார்.

மொத்தத்தில் பொட்டம்மான் அங்கு வீட்டு காவலில் வைக்கப்பட்டதை போன்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறேன், தனக்கு தெரியாமல் அவரால் ஒருவரைகூட சந்திக்க முடியாது, அப்படி சந்திக்காவிட்டால், கிழக்கில் தனது படையணிக்குள் உள்ள சிக்கல்களை அவரால் அறிந்துகொள்ள முடியாது என கருணா நினைத்தார்!

(தொடரும்)

 

http://www.pagetamil.com/10144/

Share this post


Link to post
Share on other sites

இரகசிய ஆவணங்களுடன் கடல்வழியாக வன்னிக்கு வந்த போராளி!- கருணா பற்றிய ஆதாரங்கள் புலிகளிடம் போனது இப்படித்தான்

July 8, 2018
karuna_pillaiyan.jpg

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 27

பீஷ்மர்

மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த பொட்டம்மானை கஞ்சிகுடிச்சாறு முகாமில் தங்க வைத்து, தமது நம்பிக்கையான ஆட்கள் மூலம் முகாமை கருணா கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தேன்.

பொட்டம்மான் கிழக்கிற்கு அனுப்பப்பட்டதன் காரணம்- கருணாவிற்கும், பொட்டம்மானிற்குமிடையிலான சிக்கல்களை பேசித்தீர்ப்பதே. பொட்டம்மானின் புலனாய்வுத்துறை நிர்வாகமும், கருணாவின் நிர்வாகமும் ஒன்றுடன் ஒன்று முட்டிமோதாமல், இணைந்து செயற்படும் விதமான கட்டமைப்பை உருவாக்குவதற்காகத்தான் பொட்டம்மான் அனுப்பப்பட்டார். ஆனால், அவருக்கு வரவேற்பு நன்றாக அமையவில்லை.

 

பொதுவாக ஒரு பிரதேசத்திற்கு தளபதியொருவர் சென்றால், அங்குள்ள தளபதியைத்தான் முதலில் சந்தித்து பேசுவார். அதுதான் வழக்கம். ஆனால், மட்டக்களப்பிற்கு சென்ற பொட்டம்மானால் உடனடியாக கருணாவை சந்திக்க முடியவில்லை. கூட்டங்கள், சந்திப்புக்கள் என காரணம் கூறி இரண்டுநாளை இழுத்தடித்து விட்டார்கள். மூன்றாம்நாள்தான் பொட்டம்மான், கருணா சந்திப்பு நடந்தது. அது எங்கே தெரியுமா? எப்படி தெரியுமா?

தரவையில் அந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் கருணா விடுதலைப்புலிகளிற்கு ஒரு செய்தி சொன்னார். அமைப்பின் நிர்வாகங்களிற்கிடையிலான சிக்கல்களை இரண்டு தரப்பும் பேசி தீர்க்கும் நடவடிக்கை சரிவராது, கிழக்கை எம்மிடமே விட்டு விடுங்கள், வீணாக தலைபோடாதீர்கள் என்பதே அந்த செய்தி. அதை எப்படி சொன்னார் தெரியுமா?

தரவையில் கிழக்கு படையணிகள் மொத்தமாக நிலைகொள்ள வைக்கப்பட்டிருந்தன என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். கிட்டத்தட்ட ஐயாயிரம் போராளிகள் அந்த இராணுவ வலயத்தில் நிலைகொண்டிருந்தனர். அவர்களின் மத்தியிலேயே கருணா தங்கியிருந்தார்.

தரவையில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பொன்றை கருணா ஏற்பாடு செய்தார். அந்த அணிவகுப்பிற்கு பொட்டம்மானும் அழைக்கப்பட்டிருந்தார். கிழக்கிற்கு சென்ற பொட்டம்மான், அங்கு வைத்துதான் கருணாவை சந்திக்க முடிந்தது!

 

அந்த அணிவகுப்பிற்கு சென்ற பொட்டம்மானை வரவேற்றது கருணாவிற்கு அடுத்தநிலையில் இருந்த ரமேஷ். நிகழ்விற்கு தாமதமாகவே கருணா வந்தார். பொட்டம்மானுடன் அவ்வளவாக மனம் விட்டும் பேசவில்லை. அந்த நிகழ்வில் எடுத்த புகைப்படத்தையும் பிரசுரித்துள்ளோம். இருவரது உடல்மொழியையும் கவனிப்பவர்களிற்கு, அவர்களிற்கிடையிலான முரண்பாடு நன்றாக புரியும்.

Image result for karuna amman and pottu amman

 

தரவையில் சுமார் மூவாயிரம் போராளிகளின் பிரமாண்ட இராணுவ அணி வகுப்பு நடந்தது. அன்றிரவு மீனகத்தில் பொட்டம்மானும், கருணாவும் தனிமையில் பேசினார்கள். கிழக்கு புலனாய்வு அமைப்புக்கள் அனைத்தும் தனக்கு பொறுப்புகூறுபவர்களாக இருக்க வேண்டுமென கருணா வலியுறுத்தினார். ரெஜினோல்ட் ஆட்களின் பிரிவின் பின்னர், மட்டக்களப்பு உள்ளக புலனாய்வு விவகாரங்களை கவனித்த நீதன், பிரபா ஆகியோர் தனக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்றும் முறையிட்டார்.

கிழக்கில் உள்ள புலனாய்வுத்துறை அணிகள் அனைத்தும் கருணாவின் கீழ் செயற்படுவது சாத்தியமில்லை. தெற்கில் நடவடிக்கையில் ஈடுபடும் புலனாய்வு அணிகள் எவ்வளவு இரகசியமாக உருவாக்கப்படுகின்றன என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இரகசிய நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவருக்கு, தன்னுடன் இணைந்து யார் பணியாற்றுகிறார்கள் என்பது தெரியாது. பெரும்பாலான நடவடிக்கைகளை வழிநடத்துபவர்களிற்கு, தம்மால் வழிநடத்தப்படுபவர்களின் முகங்களே தெரியாது. அப்படியாகத்தான் இரகசிய அணிகள் உருவாக்கப்படுகின்றன.

 

இரகசிய அணிகளை கையாளுபவர்களும் கிழக்கில்தான் தங்கியிருந்தனர். அவர்களையெல்லாம் கருணாவின் கீழ் செயற்பட அனுமதிப்பது உண்மையிலேயே புத்திசாலித்தனமல்ல. எந்த புலனாய்வு அமைப்பும் இப்படியொரு முடிவெடுக்காது.

பொட்டம்மான் கிழக்கில் நின்ற சமயத்தில் ஒரு இரகசிய சந்திப்பொன்றையும் நடத்தினார். கருணா விவகாரத்தில் புலிகளின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய சந்திப்பு அது.

கிழக்கில் வரி வசூலிப்பதும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. நிதித்துறை கிழக்கில் செயற்பட ஆரம்பித்து, வரி வசூலை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றபோதுதான் கருணா அதிகமாக சிக்கலை கொடுக்க ஆரம்பித்தார். கிழக்கு படையணிகள் இயங்க வரி வசூலிக்க வேண்டியது அவசியம் என்றார்.

புலிகளின் நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தியை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஒருவருக்கு காலையில் எத்தனை கிராம் சீனி தேவை, மதியம், மாலையில் எத்தனை கிராம் சீனி தேவை, கத்தரிக்காய் எத்தனை கிராம் தேவை என ஒவ்வொரு விடயத்திலும் நுணுக்கமாக கணக்கு பார்த்து, பராமரிப்பு செலவை தீர்மானிப்பார். நிர்ணயிக்கப்படும் பட்ஜெட் படியே அனைத்து போராளிகளிற்குமான பொருட்கள் அனுப்பிவைக்கப்படும். கடும் பயிற்சியெடுக்கும் அணிகளிற்கு விசேட பட்ஜெட் என வேறொரு வழங்கல் இருக்கிறது.

 

Image result for karuna amman and pottu ammanசாதாரண பட்ஜெட்டின் அடிப்படையில் ஐயாயிரம் போராளிகளிற்கு ஆகும் பராமரிப்பு செலவை கருணாவிற்கு அனுப்பிவைக்கலாமென புலிகள் சொன்னபோது, கருணா அதை ஏற்கவில்லை. இறுதியில் மாதாந்தம் ஒரு கோடி ரூபா அனுப்பிவைக்கலாமென புலிகள் சொன்னார்கள். ஒரு கோடியென்பது அதிக பட்சம். இதற்கும் மறுப்பு சொல்ல முடியாது. ஆனால் கிழக்கிலேயே வரி வசூல் பண்ணினால் இந்த ஒரு கோடி ரூபாவை விட அதிகமாக வரி வசூல் பண்ணுவார்கள். வன்னியிலிருந்து பணம் அனுப்பப்படுவதை கருணா உண்மையில் விரும்பவில்லை. என்றாலும், ஒரு கோடி ரூபாவையும் காணாதென சொல்ல முடியாத நெருக்கடியால் சம்மதித்தார்கள்.

கருணாவின் நிதி பொறுப்பாளராக இருந்தவர் குகநேசன் (பின்னாளில் இவரை புலிகள் கொழும்பில் சுட்டுக்கொன்றார்கள்). கருணாவிற்கு மிகமிக விசுவாசமானவர். அதனால்தான் கருணா அவரை நிதிப்பொறுப்பாளராக்கினார். ஏனென்றால், மாதாந்தம் சிலபல கோடி ரூபா புரண்டு கொண்டிருந்த சமயம் அது. நம்பிக்கையான ஆளை வைத்திருந்தால்தான், “அனைத்தையும் கச்சிதமாக“ முடிக்கலாம்!

கிழக்கு படையணிகளின் நிதி விசயங்களில் நிறைய சிக்கல் இருக்கிறதென்பதை நிதித்துறை அறிந்து விட்டது. கிழக்கு, கொழும்பில் உள்ள வர்த்தகர்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில் கணிசமான பங்கு “குறிப்பிட்ட ஒருவருடைய“ கணக்கில் செல்கிறது, கிழக்கு வரி வசூலிப்பில் மோசடிகள் நடக்கின்றன என்ற முதற்கட்ட தகவல் புலிகளிற்கு கிடைத்தது. ஆனால் அதை உறுதிசெய்ய முடியவில்லை. காரணம், கருணாவின் நிதிப்பிரிவு மிக இறுக்கமாக கண்காணிக்கப்பட்டது. குகநேசன் உள்ளிட்ட ஓரிரண்டு போராளிகளிற்குத்தான் முழு கணக்கு வழக்கும் தெரியும். எப்படியும் ஒரு போராளியை பிடித்து, கணக்கு விசயங்களை வெளியில் எடுக்க புலனாய்வுத்துறை போராளிகள் கடுமையாக முயற்சித்து கொண்டிருந்தனர்.

இந்த சமயத்தில்தான் எதிர்பாராத திருப்பமாக, கிழக்கு நிதிப்பிரிவிற்குள் ஊடுருவக்கூடிய சந்தர்ப்பமொன்று புலிகளிற்கு கிடைத்தது!

இப்பொழுது மட்டக்களப்பு நகரத்தில் இருக்கும் ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவர், அப்பொழுது கிழக்கு நிதிப்பிரிவு போராளிகளிற்கு கணக்காய்வு தொடர்பாக சில வகுப்புக்களை எடுத்து வந்தார். அந்த சமயங்களில் கிழக்கு கணக்குகுழுவின் கணக்கறிக்கைகளையும் ஒழுங்குபடுத்தி கொடுத்திருக்கிறார். அதிக வருவாய், குறைந்த செலவு, மிகுதிப்பணம் வைப்பிலிடப்படும் விசயத்தை கவனித்து வைத்தார். அங்கிருந்த பொறுப்பான போராளியொருவருடன் கொஞ்சம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்த போராளிதான் நிதி விசயங்களில் உள்ள ஓட்டைகளை குறிப்பிட்டு, அதை யாராவது தெரிந்தவர்கள் மூலம் புலிகளிற்கு அறிவிக்குமாறு கூறியிருக்கிறார். வயதான நேரத்தில் கணக்காளர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பேசாமல் இருந்துவிட்டார்.

 

Image result for karuna amman and pottu ammanசில மாதங்கள் கழித்து வேறொரு அலுவலாக மட்டக்களப்பு எம்.பியொருவரை சந்திக்க போயிருக்கிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பேச்சோடு பேச்சாக, கிழக்கு நிதி விசயங்களை சொல்லியிருக்கிறார். அவர் சாதாரணமாகத்தான் சொன்னார். ஆனால் அந்த எம்.பி விசயத்தின் முக்கியத்துவத்தை புரிந்து, மட்டக்களப்பில் தங்கியிருந்த புலிகளின் நிதித்துறை போராளிகளிடம் சொன்னார். அவ்வளவுதான். கணக்காளரை புலிகள் தோண்டிம்தோண்டி விசயத்தை கறந்தனர். ஆனால் எதற்கும் எழுத்துபூர்வமான ஆதாரங்கள் கிடையாது!

அப்படியான ஆதாரம் இல்லாமல், அதை நிரூபிக்க முடியாது. எப்படி ஆதாரத்தை பெறுவது?

கணக்காளரையே பாவித்து அதற்கு முயற்சிப்பதென முடிவெடுத்தார்கள். கணக்காளரும் சம்மதித்தார்.

தன்னுடன் மனம் விட்டு பேசிய கிழக்கு நிதிப்பிரிவை போராளியை பின்னர் சந்திக்கும்போது, மெல்லமெல்ல விசயங்களை சொல்லி, அவரை தயார்படுத்தினார். அந்த போராளிக்கு இரட்டை மனம். ஆதாரங்களை எடுத்து கொடுத்து, அல்லது ஆதாரங்களுடன் வன்னிக்கு சென்றால் அடுத்ததாக என்ன நடக்குமென தெரியாமல் திண்டாடினார். ஏனென்றால், புலிகள் அமைப்பில் பிளவு வருமென அப்பொழுது யாரும் கற்பனையும் செய்திருக்க மாட்டார்கள். விசயம் வெளியில் கசிந்தால் தனது குடும்பத்திற்கு ஏதும் சிக்கல் வரலாமென நினைத்தார். அதனால் உறுதியான முடிவை சொல்ல முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார்.

கிழக்கு நிதிப்பிரிவிற்குள் ஒரு சாதாரண பிரச்சனையொன்று வந்தது. அங்கிருந்த போராளியொருவருக்கு- அவரது பெயர் கம்சன்- காதலிருந்தது. அன்பரசி படையணியில் இருந்தார் காதலி. பின்னர் அன்பரசி படையணி தளபதியாக இருந்த நிலாவினியின் மெய்பாதுகாவலராகவும் இருந்தவர்.

இந்த காதல் விசயம் நிலாவினிக்கு தெரியவர, அவர் அந்த பெண் போராளியை கடுமையாக திட்டியிருக்கிறார். முகாமைவிட்டு வெளியில் செல்லவே அனுமதிக்க மறுத்துவிட்டார். பின்னாளில் விடுதலைப்புலிகளால் கிழக்கு தலைமைமீது சுமத்தப்பட்ட ஒழுக்கமீறல் குற்றச்சாட்டுக்களிற்கான முதல் ஆதாரத்தை புலிகளிற்கு வழங்கியவர் இந்த பெண் போராளிதான். இந்த விசயத்தில், இப்போதைக்கு அதிகமாக எதையும் எழுத முடியாது. அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறோம்.

காதல் விசயத்தை நிதிப்பொறுப்பாளர் குகநேசனிடமும் தெரியப்படுத்தினார் நிலாவினி. கிழக்கு நிதி விவகாரங்களில் சிக்கலிருந்ததால், அங்கு பணிபுரியும் போராளிகளை கடுமையான கண்காணிப்பில் வைத்திருந்தார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். காதல் உறவு, வெளித்தொடர்புகள் வைத்திருக்க அந்த போராளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. கம்சனின் காதல் விவகாரத்தை பெரிய விசயமாக குகநேசன் எடுத்துக்கொண்டார். அதன்பின் கம்சனை வெளியிடங்களிற்கு அனுப்பாமல் திட்டமிட்டு தவிர்த்தார். இது காதலர்களிற்கு பெரிய விரக்தியை ஏற்படுத்தியது.

 

கணக்காளருடன் பேசிய, மட்டு நிதிப்பிரிவு முக்கிய போராளியுடன் கம்சன் மனம்விட்டு பேசிய சமயத்தில்தான், கருணா விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பம் நடந்தது. கிழக்கு நிதிப்பிரிவின் ஆவணங்களை, விடுதலைப்புலிகள் எடுப்பதற்கு முயற்சிக்கிறார்கள், கிழக்கு நிதி விவகாரங்கள் விடுதலைப்புலிகளிற்கு உவப்பில்லாமல் நடக்கிறதென்ற விடயம் முதன்முதலாக கம்சனிற்கு தெரிய வருகிறது. ஏற்கனவே அதிருப்தியில் இருந்தவர், இந்த சமயத்தை பயன்படுத்த நினைக்கிறார். அவரை பயன்படுத்தி விடயத்தை தலைமைக்கு தெரியப்படுத்தலாம் என, கணக்காளரிடம் பேசிய போராளியும் நினைக்கிறார்.

2004 ஜனவரி மாதம்.

கம்சனின் காதலி விடுதலைப்புலிகளை விட்டு தப்பியோடி, செங்கலடியிலுள்ள தனது வீட்டிற்கு சென்றார். அவரை ஆரையம்பதியில் உள்ள தெரிந்த வீடொன்றில் சில வாரங்கள் குடும்பத்தினர் தங்கவைத்தனர்.

இந்த சமயத்தில் மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினருக்கு பொட்டம்மானிடமிருந்து ஒரு உத்தரவு வந்தது. அந்த உத்தரவு இதுதான்- “ஆரையம்பதியில் — என்ற முகவரியில் தங்கிருக்கும் பெண்ணுடன் பேசுங்கள். அவர் மூலமாக கம்சனை தொடர்பு கொண்டு, அவரிடமுள்ள ஆவணங்களுடன் அவரை, பாதுகாப்பாக வன்னிக்கு கொண்டு வாருங்கள்“.

மட்டக்களப்பில், அன்பரசி படையணியில் இருந்து தப்பியோடிய ஒரு பெண் போராளி, ஆரையம்பதியில் எந்த முகவரியில் தங்கியிருக்கிறார் என்பதும், மட்டு நிதிப்பிரிவிற்குள் ஒரு போராளி அதிருப்தியுடன் இருக்கிறார் என்பதும், வன்னியிலிருந்த பொட்டம்மானிற்கு எப்படி தெரிந்தது?

அதுதான் புலிகளின் புலனாய்வு நெற்வேர்க்!

பொட்டம்மான் மட்டக்களப்பிற்கு வந்தபோது, அவரை ஒருவர் இரகசியமாக சந்தித்தார் என்று சென்னேன் அல்லவா, அவர் யார் தெரியுமா?

கருணாவின் நிதிப்பிரிவிற்கு வகுப்புக்கள் எடுத்த அந்த கணக்காளர்தான். மட்டக்களப்பு எம்.பியுடன் அவர் பேச, அது நிதித்துறைக்கு போய், அங்கிருந்து புலனாய்வுத்துறைக்கு போய், பொட்டம்மான் வரை போனது. கிழக்கில் தங்கியிருக்கும் சமயத்தில், கருணாவின் ஆட்களிற்கு தெரியாமல் அவரை சந்திப்பதென்ற திட்டமும் பொட்டம்மானிடம் இருந்தது. இரகசியமாக அந்த சந்திப்பு நடந்தது.

ஆரையம்பதியில் தங்கியிருந்த கம்சனின் காதலியுடம் புலிகளின் புலனாய்வு பிரிவினர் தொடர்புகொண்டு, கம்சனுடன் தொடர்பை ஏற்படுத்தினர். நிதிபிரிவிலுள்ள அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் வெளியேற தயாராக இருப்பதாக கம்சன் சொன்னார். ஆவணங்களுடன் வெளியேறும்போது சின்ன சிக்கலும் ஏற்படக்கூடாது, அப்படி நடந்தால் கிழக்கு படையணிகள் உசாராகிவிடுவார்கள். அதன்பின்னர் நிதிப்பிரிவு ஆவணங்களை வெளியில் எடுப்பது குதிரைக்கொம்பாகிவிடும்.

கஞ்சிகுடிச்சாறில் இருந்த முகாமில் இருந்த வெளியேறும் கம்சனை, யாருக்கும் சந்தேகம் இல்லாமல் வன்னிக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த பொறுப்பை மட்டக்களப்பு புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நீலன் ஏற்றுக்கொண்டார்.

கிழக்கு நிதிப்பிரிவின் அனைத்து ஆவணங்களையும் வசதி கிடைக்கும் தருணங்களில் பென்ட்ரைவ்களில் சேமிக்க தொடங்கினார் கம்சன். உயிரையே பறிக்கும் ரிஸ்க்கான காரியம் இது என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் துணிந்து செய்தார். ஒரு வாரத்தில் கிழக்கு நிதி பிரிவில் இருந்த அத்தனை ஆவணங்களையும் தனது பென்ட்ரைவில் ஏற்றினார்.

ஒருநாள், ஏதோ அலுவலாக முகாமைவிட்டு வெளியில் வருவதை போல வந்து, புலனாய்வுத்துறை போராளிகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார். அவரை வன்னிக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகள் கச்சிதமாக செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வாகரைக்கு அண்மையாக படகில் ஏற்றப்பட்டு, செம்மலையில் இறக்கப்பட்டார்.

 

வன்னிக்கு வந்து சேர்ந்ததும், பொட்டம்மானிடம் அழைத்து செல்லப்பட்டார் கம்சன். பொட்டம்மான் இத்தனை நாளாக எதிர்பார்த்திருந்த தகவல்கள் அனைத்தையும், ஒரு பென்ட்ரைவிற்குள் அடக்கி, அவரது மேசையில் வைத்தார் கம்சன்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/10849/

Share this post


Link to post
Share on other sites

கருணாவை கடத்த புலிகள் நடத்திய இரகசிய ஒப்ரேசன்!

July 22, 2018
hgj.jpg

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 28

பீஷ்மர்

கருணா அணியின் நிதி விவகார தகவல்களை புலிகள் எப்படி துல்லியமாக பெற்றார்கள் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். கம்சன் என்ற போராளி ஒரு பென்ட்ரைவில் எல்லா தகவல்களையும் சேகரித்துக்கொண்டு, மட்டக்களப்பில் இருந்து தப்பி, வன்னிக்கு சென்றார் என கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.

கிழக்கில் வாங்கப்படும் வரி, அதில் எத்தனை வீதம் கணக்கு காட்டப்படுகிறது. மிகுதி பணம் எப்படி, யாருடைய வங்கிக்கணக்கிற்கு செல்கிறது என்பதை பற்றிய துல்லியமான தகவல்கள் புலிகளின் விரல் நுனிக்கு சென்ற கதை இதுதான்.

 

இந்த விபரங்கள் அனைத்தும் பிரபாகரனின் கவனத்திற்கும் சென்றது. அமைப்பின் கட்டுப்பாடுகளை மீறியதற்காக கருணா மீது நடவடிக்கை எடுப்பதற்கான அத்தனை வாய்ப்பும், இந்த பென்ட்ரைவ் பொட்டம்மானிடம் சென்று சேருவதற்கு முன்னரே விடுதலைப்புலிகளிற்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் பிரபாகரன் அவசரப்படவில்லை. கருணாவுடன் பேசி, அவரை சமாதானப்படுத்தி, அமைப்பிற்குள் சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்கவே விரும்பினார்.

விடுதலைப்புலிகளின் தலைமையுடன் கருணா தொடர்பை துண்டித்தது, 2004 மார்ச்சில் அல்ல. கருணா பிரிந்து செல்வதாக மார்ச்சில் அறிவித்தாலும், அதற்கு ஆறு மாதங்களின் முன்னரே இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது. கருணாவை வன்னிக்கு வருமாறு பிரபாகரன் அழைக்க, அவர் மறுத்தபடியிருந்தார். ஒரு கட்டத்தில், பிரபாகரனிற்கும் கருணாவிற்குமிடையிலான நேரடி தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

2003 ஒப்ரோபரில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார். அப்பொழுது ஊடகங்களின் முன் பேசிய தமிழ்செல்வன், தனது வழக்கமான சிரிப்புடன்- “பேச்சின் அடுத்த கட்டங்கள் பற்றி நாங்கள் (கருணாவுடன்) நீண்ட ஆலோசனை நடத்தினோம். கிழக்கு நிலவரங்களை நேரில் பார்க்கவே இங்கு வந்தேன்“ என சொன்னார்.

 

ஆனால் அவர் சொன்னது உண்மையல்ல. அவர் மட்டக்களப்பிற்கு சென்றது, கருணாவுடன் சமரசம் பேச. பொட்டம்மான் கிழக்கிற்கு வந்துபோன பின்னர், கருணா மேலும் தொடர்பெல்லைக்கு வெளியில் சென்றுவிட்டார். புலிகளின் சமரச முயற்சிகளை அவர் விரும்பவில்லை.

புலிகளுடன் தொடர்பிலும் இல்லை, முக்கிய தளபதிகளுடன் முறுகல் என சமரச வாய்ப்புக்களை அவர் குறைத்துக்கொண்டு சென்றபோதுதான், தமிழ் செல்வன் பேசினார். கருணாவிற்கும் தமிழ்செல்வனிற்குமிடையில் நல்ல நட்பிருந்தது. (இதனடிப்படையில்தான் தமிழ்செல்வனின் மனைவியை இராணுவத்தின் பிடியில் இருந்து வெளியில் எடுப்பதில் கருணா முழுமையான உதவிகள் செய்திருந்தார். ஆனால் வெளிநாட்டுக்கு சென்றபின்னர், கருணா உதவவில்லையென தமிழ்செல்வனின் மனைவி சொன்னது வெறுகதை!)

kowsalyan-300x188.jpg கௌசல்யன்

தமிழ்செல்வன் தொடர்புகொண்டு சமரசம் பேசிய பின்னர்தான், அவரை நேரில் வருமாறு கருணா சொன்னார். இதுதான் தமிழ்செல்வன் மட்டக்களப்பிற்கு சென்றதன் இரகசியம். ஆனால் இந்த பேச்சுக்களும் பலனளிக்கவில்லை. கருணாவிற்கு எந்த நிபந்தனையுமில்லாத மன்னிப்பு வழங்கவும் புலிகள் தயாராக இருந்தார்கள். ஆனால், கருணா அதற்கு உடன்படவில்லை.

இதற்கெல்லாம் பிறகுதான் பென்ட்ரைவ் வன்னிக்கு வந்தது.

 

எந்த சமரசத்திற்கும் கருணா உடன்படாத நிலையில், விடுதலைப்புலிகள் ஒரு சேர்ஜிக்கல் ஒப்ரேசன் செய்ய முடிவெடுத்தனர். ஆம், கருணாவை உயிருடன் பிடித்து வன்னிக்கு கொண்டு வர புலிகள் முடிவெடுத்தனர்!

தரவை முகாமில் கிட்டத்தட்ட ஐயாயிரம் போராளிகளின் மத்தியில் கருணா இருக்கிறார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அங்கிருந்து கருணாவை எப்படி வன்னிக்கு கொண்டு வருவது?

அது சாத்தியமேயில்லை. ஐயாயிரம் போராளிகளை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி கருணாவை கைது செய்வதென்பது சாத்தியமேயில்லாத காரியம். அதற்கு புலிகளிடம் பத்தாயிரம் போராளிகளாவது தேவை. வன்னியிலிருந்து அவர்களை கிழக்கிற்கு நகர்த்தி செல்வதெல்லாம் சாத்தியமேயில்லை. அதற்குள் கருணா, அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று விடுவார்.

வேறு என்னதான் செய்யலாம்?

புலிகள் இதைப்பற்றித்தான் தீவிராக ஆலோசனை செய்தார்கள். பொட்டம்மான்தான் ஒரு மாஸ்ரர் பிளான் போட்டார்.

கருணாவை அந்த தரவைக்கு வெளியில் அழைத்து, அங்கு வைத்து மடக்கி வன்னிக்கு கொண்டு வருவதே திட்டத்தின் ஒன்லைன்.

 

இனி இதற்கு திட்ட வடிவங்கள் கொடுக்க வேண்டும். பொட்டம்மான் கச்சிதமாக அதை செய்தார்.

ghjk-300x225.jpg தமிழ்ச்செல்வன்- கருணா

கருணாவை வன்னிக்கு கொண்டுவரும் அந்த முக்கிய ஒப்ரேசன், புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வு பொறுப்பாளராக இருந்த நீலனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்ரேசன் மட்டும் வெற்றிகரமாக நடந்திருந்தால், விடுதலைப்புலிகளின் தலைவிதி வேறுவிதமாக மாற்றமடைந்திருக்கும். கருணாவை மட்டும் சிக்கலில்லாமல் வன்னிக்கு கொண்டு சென்றிருந்தால், கிழக்கிலிருந்த ஐயாயிரம் போராளிகளும் சிதைந்திருக்க மாட்டார்கள். புலிகளின் போரிடும் ஆற்றல் குறைந்திருக்காது.  புலிகளை பற்றிய இரகசிய தகவல்கள் இலங்கை, இந்தியாவிற்கு போயிருக்காது. கருணாவின் கீழ் செயற்பட்டவர்கள் புலிகளிற்கு எதிராக செயற்பட்டிருக்கமாட்டார்கள். இத்தனை அனுகூலமும் புலிகளிற்கு இருந்திருந்தால், யுத்தத்தின் முடிவு வேறுவிதமாகவும் மாறியிருக்கலாமல்லவா?

இந்த ஒப்ரேசன், ஒரு காதலால்தான் தோல்வியடைந்தது என்பது உங்களிற்கு நம்ப சிரமமாக இருக்கும். கருணா கடத்தல் ஒப்ரேசனை விபரமாக தருகிறோம். படித்து பாருங்கள் உண்மை புரியும்.

கருணாவை வன்னிக்கு கொண்டு வர வேண்டுமென பொட்டம்மான் திட்டமிட்டதும், மட்டக்களப்பிலிருந்த புலனாய்வு பொறுப்பாளர்களை வன்னிக்கு அழைத்தார். நீலன் மற்றும் இருவர் என மொத்தமாக மூவர் வன்னிக்கு இரகசியமாக வந்தனர். (இதில் ஒருவர் தற்போது ஐரோப்பாவில் இருக்கிறார். மற்றவர் மரணமாகிவிட்டார்) அவர்கள் வன்னிக்கு செல்வது, கிழக்கில் கருணாவின் ஆட்களிற்கு தெரியக்கூடாது. தெரிந்தால்- என்ன விசயமென துருவிப்பார்க்க முயலுவார்கள். ஆகவே புலனாய்வு பிரிவில் இருந்த போராளிகளிற்கே தெரியாமல், மிக இரகசியமாக வன்னிக்கு வந்தனர்.

 

2004 ஜனவரி இறுதியில் இந்த சம்பவம் நடந்தது. ஒரு மாலைப்பொழுதியில் வாகரைக்கு பக்கத்தில் உள்ள பால்சேனையிலிருந்து படகில் புறப்பட்டு, செம்மலையை அடைந்தனர். மறுநாள் காலையில் புதுக்குடியிருப்பில் இருந்த பொட்டம்மானின் முகாமில் சந்திப்பு நடந்தது.

மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யனிற்கு அப்பொழுது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த திருமணத்தை கருணாவிற்கான பொறியாக மாற்ற புலிகள் முடிவெடுத்தார்கள்.

கிழக்கு போராளிகளில் யார் யார் கருணாவுடன் நிற்கிறார்கள் என்பதை உறுதியாக தெரியாமல், இப்படியான ரிஸ்க்கான ஒப்ரேசன்களை செய்ய முடியாது. அது சிக்கல்களை கொடுக்கும்.  ஒரு சிறிய தகவல் லீக் ஆனால் கூட, கருணாவின் ஆட்கள் அலேர்ட் ஆகி விடுவார்கள்.

ஆனால், கௌசல்யன் நம்பிக்கையான ஆள் என நீலன் சொன்னார். புலிகளுடன் கருணா முரண்பட தொடங்கி, வன்னியுடனான தொடர்புகளை துண்டித்த பிறகு, கருணாவுடன் நெருங்கிய வட்டத்தில் இருந்த சில முக்கிய சோஸ்களின் மூலமே, அங்கு நடப்பவற்றை புலிகள் அறிந்து கொண்டார்கள். அதில் கௌசல்யன் முக்கியமானவர். புலிகளிற்குள் பிளவு வருவதை அவர் விரும்பவில்லை. அது தமிழர்களிற்குத்தான் பாதகமாக முடியுமென தனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், பிளவு வெளிப்படையாக ஏற்படாதவரையும், அவர் கருணாவின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் செயற்பட்டு வந்தார்.

அப்பொழுது பத்திரிகையாளர் சிவராம்தான் கருணாவின் ஆலோசகர்களில் முதன்மையானவர். கிழக்கில் தனியான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென அவர் கருணாவிற்கு ஆலோசனை கொடுத்து வந்தார். அப்பொழுதுதான் புலிகளில் இருந்து பிரிந்தாலும், பலமான தனி அமைப்பாக செயற்படலாமென்றார்.

சிவராமின் ஆலோசனையையடுத்து கிழக்கு புலிகளின் முக்கியஸ்தர்களை அழைத்த கருணா, தனியான அரசியல்துறை கட்டமைப்பை உருவாக்கி செயற்பட தயாராகுமாறு ஆலோசனை கூறியிருந்தார். இந்த தகவல்கள் எல்லாம் கௌசல்யன் ஊடாக உடனுக்குடன் பொட்டம்மானிடம் வந்து கொண்டிருந்தது.

புதுக்குடியிருப்பு கூட்டத்தில் கருணாவை எப்படி வெளியில் கொண்டு வருவதென தீவிரமாக ஆலோசனை நடத்தினார்கள். மட்டக்களப்பில் இருந்து சென்ற புலனாய்வு பொறுப்பாளர்கள் இரண்டு ஐடியா வைத்திருந்தார்கள். அதை பொட்டம்மானிடம் சொன்னார்கள்.

முதலாவது, கொமாண்டோ அற்றாக் செய்வது. சிறிய புலனாய்வு அணியொன்று கருணாவின் இருப்பிடத்தை இரகசியமாக சுற்றிவளைத்து, கருணாவை பணயக்கைதியாக பிடித்து, தரவை முகாமிற்கு வெளியில் கொண்டு வருவது. கருணாவின் தங்குமிடம் வரை கொமாண்டோ அணி செல்வதற்கு திட்டமுள்ளது என்றார்கள்.

 

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், எப்படியும் அந்த இடத்தில் மோதல் நடக்கும். எதிர்பாராத விதமாக கருணாவின் தரப்பு பலமாகி விட்டால், திட்டம் குழம்பிவிடும். இந்த தாக்குதல் நடக்குமிடத்தை சூழ ஐயாயிரம் போராளிகள் நிற்கப் போகிறார்கள். அவர்களை சமாளிப்பது சிரமமாக இருக்கலாம். மற்றது, அவர்களிற்கு மத்தியில் இருந்து கருணாவை கைது செய்துகொண்டு செல்வது, அவர்களிடம் எதிர்மறையான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி விடலாம்.

இரண்டாவது திட்டம், வெளியில் இருந்து தாக்குதலணி செல்லாமல், கருணாவுடன் நிற்கும் போராளிகளில் நம்பிக்கையான சிலர்  மூலம் கருணாவை இரகசியமாக வெளியில் கொண்டு வருவது.

இதுவும் உத்தரவாதமில்லாத திட்டம்தான். தங்குமிடத்திற்குள் கருணாவை துப்பாக்கி முனையில் பணிய வைக்கலாமா இல்லையா என்பதில்தான் இந்த திட்டத்தின் வெற்றி தங்கியிருக்கிறது. பணிய வைக்க முடியவில்லையென்றால், திட்டம் சிக்கலாகிவிடும். அங்கு ஏதும் அசம்பாவிதம் நடந்து கருணாவிற்கு ஏதும் ஆகி, நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் சிக்கவும் சாத்தியம் உள்ளது. அவர்களை விசாரிக்க, வன்னிக்கு கொண்டு செல்ல இந்த ஒப்ரேசனை செய்தோம் என சொன்னால், பெரிய சிக்கலாகி விடும். கிழக்கு படையணிகள் மொத்தமாக விடுதலைப்புலிகளில் அதிருப்தியடையும்.

ஆகவே, இரண்டு ஐடியாக்களையும் பொட்டம்மான் தவிர்த்து விட்டார். அவரிடம் வேறொரு ஐடியா இருந்தது. அது கௌசல்யனின் திருமணத்தில் வைத்து கருணாவை கடத்துவது!

கௌசல்யனின் திருமணத்தை தரவை முகாமிற்கு வெளியில் எங்காவது நடத்தி, அங்கு கருணாவை வரவைத்து, அந்த இடத்தில் வைத்து கருணாவை கடத்தி செல்வதே பொட்டம்மானின் திட்டம்!

திட்டம் பற்றிய விளக்கத்தை பொட்டம்மானிடம் இருந்து பெற்றதும், அன்றிரவே நீலனும் மற்றைய இருவரும் மட்டக்களப்பிற்கு திரும்பினார்கள். மறுநாள் மதிய உணவை தமது முகாமில் உட்கொண்டார்கள். அவர்கள் வன்னிக்கு போய் வந்த விசயம் யாருக்கும் தெரியாது. அவ்வளவு இரகசியமாக எல்லாம் முடிந்தது. புலனாய்வுத்துறை ஆட்களின் மீது கருணாவின் புலனாய்வு ஆட்கள் எப்பொழுதும் ஒரு கண் வைத்திருந்தார்கள். அவர்களிற்கும் டிமிக்கி கொடுத்து, வன்னிக்கு போய் வந்தனர்.

மட்டக்களப்பிற்கு வந்ததும் நீலன் ஒப்ரேசனிற்கான ஆயத்தங்களை தொடங்கினார்.

மட்டக்களப்பில் புலனாய்வுத்துறை போராளிகளின் இரண்டு முகாம்கள் இருந்தன. திடீரென கஞ்சிகுடிச்சாறில் மூன்றாவது முகாம் அமைக்கப்பட்டது. இரண்டு முகாம்களிலுமிருந்து, நம்பிக்கையான பதினைந்து போராளிகளை தெரிவுசெய்து அந்த முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள்தான் கருணாவை கடத்தும் ஒப்ரேசனில் பங்குபற்றவிருப்பவர்கள்.

இந்த ஒப்ரேசனில் புலனாய்வுத்துறையினரின் கையில் இல்லாத மிக முக்கியமான விசயமொன்று இருந்தன. விடுதலைப்புலிகளுடன் முரண்பட தொடங்கிய பின்னர், தரவை முகாமைவிட்டு கருணா வெளியில் செல்வதில்லை. ஐயாயிரம் போராளிகளால் சூழப்பட்ட கோட்டைக்குள்ளேயே தங்கியிருந்தார். வெளியில் செல்ல வேண்டியிருந்தால், மிக நம்பிக்கையான நிறைய போராளிகளுடன் சென்று வந்தார். கௌசல்யனின் திருமண வீட்டிற்கு எப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வருவார்? பாதுகாப்பு குறைந்த திருமண வீட்டிற்கு வர சம்மதிப்பாரா?

கௌசல்யனின் திருமண வீட்டிற்கு வர கருணா சம்மதிப்பதிலேயே, இந்த ஒப்ரேசன் தங்கியிருந்தது. 2004 மார்ச் 03ம் திகதி திருமணத்திற்கு திட்டமிடப்பட்டது.

வாய்ப்பான இடமொன்றில் திருமணம் நடந்தாலே, ஒப்ரேசனை வெற்றிகரமாக செய்யலாம். கொக்கட்சிசோலை ஆலயத்தில் திருமணத்தை நடத்தினால், தமக்கு வாய்ப்பாக இருக்குமென புலனாய்வுத்துறையினர் கருதினர். அந்த இடத்தையே திருமணத்திற்காக கௌசல்யன் தேர்ந்தெடுத்தார்!

2004 பெப்ரவரி மாதம்.

ஒருநாள் கருணாவை சந்தித்த கௌசல்யன், தனது திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்ற சம்பிரதாய அழைப்பை விடுக்க, உடனடியாக கருணா அதை ஏற்றுக்கொண்டார். கௌசல்யன் மட்டக்களப்பின் மூத்த போராளிகளில் ஒருவர். மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர். ஆகவே சம்பிரதாய அடிப்படையிலாவது கருணா கலந்துகொள்வார் என எதிர்பார்க்க கூடியதுதான். ஆனால், புலிகளுடன் சிக்கல் ஆரம்பித்த பின்னர், தனது பாதுகாப்பில் கவனமெடுத்து, வெளிநிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து விடுவாரோ என்றுதான் புலிகள் பயந்தார்கள். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை.

ஆகவே, திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக கடக்கப்பட்டது.

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0% தேனகம்

அடுத்ததாக, பதினைந்து போராளிகளிற்கும் குறுகிய பயிற்சி வழங்கப்பட்டது. கொக்கட்டிசோலை ஆலயத்தில் எந்த இடத்தில் மணமக்கள் உட்கார்ந்திருப்பார்கள், விருந்தினர்கள் எங்கு நிற்பார்கள், ஒப்ரேசன் ஆட்கள் எங்கு நிலையெடுத்திருக்க வேண்டும், கருணாவின் பாதுகாப்பு ஆட்களை எப்படி முடிப்பது, யார் கருணாவிற்கு பக்கத்தில் நிற்பது, யார் கைவிலங்கிடுவது, பாதுகாப்பு ஆட்களை முடித்ததும் யார் கருணாவை அலாக்காக தூக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றுவது, வாகனத்தை பாதுகாப்பாக எங்கு கொண்டு செல்வது பற்றி பயிற்சியளிக்கப்பட்டது.

கொக்கட்ச்சோலை ஆலயத்தில் இருந்து கருணாவை வாகனத்தில் ஏற்றினால், அடுத்து என்ன செய்வது?

 

அதற்காகவும் பக்கா பிளான் ஒன்றை புலிகள் போட்டிருந்தார்கள். கருணாவை கடத்தும் ஒப்ரேசனில் நேரடியாக கலந்துகொள்பவர்கள் பதினைந்து பேர். இதைவிட, இன்றும் பத்துப் பேர் அதில் இருந்தார்கள். அவர்களை பற்றி, ஒப்ரேசனில் கலந்துகொள்பவர்களிற்கும் தெரியாது. அவர்கள் கோயிலுக்கு வெளிப்புறத்தை கவனித்து கொள்வார்கள். கருணாவின் ஆட்கள் யாராவது சிவில் உடையில் கண்காணிப்பில் நின்று, பிரச்சனையென்றதும் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை உருவினால், அவர்களை முடிக்க இந்த பத்து பேர்.

கொக்கட்டிசோலை ஆலயத்தில் கருணாவை கைது செய்து, வாகனத்தில் ஏற்றி, கொக்கட்சிசோலை சந்தியின் ஊடாக உன்னிச்சைக்கு கொண்டு வருவதுதான் திட்டம். கொக்கட்டிசோலையில் இருந்து உன்னிச்சை பக்கம் திரும்பியதும், இன்னொரு வாகனத்தில் ஆட்கள் மாறி ஏறிக்கொள்ள வேண்டும். பின்னர், ஆட்கள் இல்லாத வெறும் வாகனம் வெல்லாவெளி நோக்கி போக வேண்டும். அந்த வாகனத்தின் மீதே எல்லோரது கவனமும் இருக்கும்.

உன்னிச்சை தொடக்கம் மாங்கேணி வரை வெவ்வேறு இடங்களில் நான்கு இரகசிய மறைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஏதாவதொன்றிற்கு கருணா கொண்டு செல்லப்பட்டால் சரி. ஒப்ரேசனின் முதல் பாகம் முடியும்.

இதன்பின், இன்னொரு அணியால் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்படும்.

இரண்டாம் பாகத்தில் என்னென்ன விசயங்கள் இருந்தன என்பதையும், இந்த ஒப்ரேசன் ஏன் சறுப்பியது என்பதையும் அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/11781/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.