யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது! அரசு வெளியிட்ட ஆதாரம்

Recommended Posts

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது! அரசு வெளியிட்ட ஆதாரம்

 

 

போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில் இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.

மேரி அமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார் அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன் வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் எலோசியஸ் எல்போன்ஸ், எட்வர்ட் செல்வராசா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாகும்.

சட்டவிரோதமாக இத்தாலியில் நுழைவதற்காக 28 ஆயிரம் யூரோ வரை செலுத்தும் நபர்களும் உள்ளதாகவும், போலி கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையில் இருந்து இத்தாலிக்கு நபர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நடமாடும் குழுவினால் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக பலேர்மோ நீதிமன்றத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஆலோசனைக்கமைய கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர்களின் புகைப்படங்களை இத்தாலி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/europe/01/184989?ref=ls_d_tamilwin

Share this post


Link to post
Share on other sites

இது காலம் காலமாக நடக்கும் விடையம்தானே

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, colomban said:

இது காலம் காலமாக நடக்கும் விடையம்தானே

போலி ஆவணங்களைக் காட்டித்தானே புலம்பெயர்ந்தவர்கள் ஏராளம் பேர். இப்போது இது ஒரு புதினமான செய்தியாக வருகின்றது!

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது ! வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று இறுதிவரையில் உறுதியாக இருந்தார். எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அதுகுறித்த முழமையான விடயங்களை கண்டறியாத வரையில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தொடரும் நிலைமையே உள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். விடுதலைப்புலிகள் கூட தமது தாக்குதல்களை வெசாக், ஈஸ்டர் போன்ற பண்டிகை நாட்களில் நடத்துவதில்லை. தற்போதைய தாக்குதல் கல்வி கற்ற, செல்வந்தர்களால் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கின்றது. இதனை திட்டமிடுவதற்கு இரண்டு ஆண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வி வருமாறு, கேள்வி:- ஈஸ்டர் தாக்குதல்கள் நிறைவடைந்து ஒருமாதமாகின்ற நிலையில் கிழக்கு மாகாண அன்றாட நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன? பதில்:- தாக்குதல்கள் நடைபெற்று சரியாக ஒருமாதம் நிறைவடையும் தருணத்தில் கிழக்கு மாகாணம் மட்டுமன்றி முழு இலங்கையுமே அச்சமான சூழலுக்குள்ளே இருக்கின்றது. தேசிய அளவில் ஊடுருவப்பட்டு இத்தகைய தாக்குதலொன்று நடத்தப்பட்டிருப்பதை அரசாங்கம், புலனாய்வு, படைத்தரப்பினர் அறிந்திருக்கவில்லை என்பது வேடிக்கையானதும், வேதனையானதுமான விடமாகும். அரசாங்கத்தின் ஒட்டுமொத்த தவறே இந்த தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாகவும் இருக்கின்றது. எந்தவிமான இலக்குமற்ற சர்வதேச முஸ்லிம் தீவிரவாதத்தின் பிடிக்குள் இலங்கையும் உள்ளாகியுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் அன்றாட செயற்பாடுகளில் ரூடவ்டுபடுவதற்கு கூட மிகுந்த அச்சமாகியுள்ள நிலைமை தான் உள்ளது. கேள்வி:- ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை திட்டமிடுவதற்கு குறிப்பிட்ட காலம் அவசியப்பட்டிருக்குமல்லவா? பதில்:- விடுதலைப்புலிகள் கூட தங்களது தாக்குதல்களை வெசாக்ரூபவ் ஈஸ்டர் அல்லது பொதுமக்கள் ஒன்றுகூடும் தருணங்களில் மேற்கொள்வது கிடையாது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் அவ்வாறு இல்லை. பொதுமக்களை இலக்குவைத்து திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கின்றது. தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் கல்விகற்ற, செல்வந்தர்களே பங்கேற்றுள்ளார்கள். அவர்களின் மத்தியில் ஏற்பட்ட சிந்தனையில் இருந்து தான் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆகக்குறைந்தது இந்த தாக்குதல்களுக்கான திட்டமிடல்களுக்கு இரண்டு ஆண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும். கேள்வி:- இலங்கைக்கு தொடர்ந்தும் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றதா? பதில்:- அரசாங்கமும், படைத்தரப்பும் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டதாகவும் கைதுகளைச் செய்து விசாரணைகளைச் செய்கின்றோம் என்று கூறினாலும் சர்வதேச ஒத்துழைப்புடன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் அதுகுறித்த விடயங்களை முழுமையாக கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரையில் தொடர்ந்தும் அச்சுறுதல் காணப்படுகின்றது என்று தான் கூறவேண்டியுள்ளது. கேள்வி:- தாக்குதல்கள் குறித்த தகவல்கள் பாதுகாப்புத்தரப்பினால் முன்கூட்டியே அறியப்பட்டதாக கூறப்படுகின்றதே? பதில்:- போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகளாக இலங்கைத்தீவிலே எந்தவிதமான வெடிச்சத்தங்களுக்கே இடமிருந்திருக்கவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் 2015இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் தேசிய பாதுகாப்பு நலிவுற ஆரம்பித்தது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்ட பின்னர் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் முழுமையாக உடைத்தெறியப்பட்டன. வாராவாரம் நடைபெறும் பாதுகாப்புச்சபை கூட்டத்தில் பிரதமர் ஆறுமாதமாக அழைக்கப்படவில்லை என்று தற்போது கூறுகின்றார். தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூறுவதலிருந்து விலகுவதற்காக தற்போது எனக்குதெரியாது என்று கூறி பந்துபரிமாற்றமே செய்கின்றார்கள். ஏப்ரல் 11ஆம் திகதி பொலிஸ்தலைமையகத்திலிருந்து தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அதில் கிழக்கினைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களே தாக்குதல்களை நடத்தப்போகின்றார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்தக்கடிதம் பிரபுக்களின் பாதுகாப்பு கட்டமைப்புள்ள அனைவருக்கும் அனுப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் தற்போது யாருக்கும் தெரியாது என்று கூறுவதும் ஜனாதிபதிரூபவ் பிரதமர் தமக்குத்தெரியாது என்று கையை விரிப்பதும் தான் வேடிக்கையாக இருக்கின்றது. கேள்வி:- பாதுகாப்புக்கான எச்சரிக்கை கடிதம் உங்களுக்கு கிடைத்தவுடன் அதுகுறித்த எவ்விதமான நடவடிக்கைகையையும் எடுக்கவில்லையா? பதில்:- பொலிஸ் தலைமையத்திலிருந்து பிரபுக்கள் பாதுகாப்பான பிரிவினால் தான் அந்த்கடிதம் எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கே அனுப்பட்டிருந்தது. அவர்கள் அக்கடிதத்தினை என்னிடம் காட்டினார்கள். அவர்கள் குறித்த தினத்தில் என்னை வெளியில் செல்வதை தவிர்த்திருக்குமாறு கோரினார்கள். எனது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பட்டினையே அவர்கள் மேற்கொண்டார்கள். கேள்வி:- கிழக்கைச் சேர்ந்த இருவர் தாக்குதலில் ரூடவ்டுபடவுள்ளதாக கூறப்பட்டிருந்ததாக கூறினீர்களே? பதில்:- ஆம், குறித்த கடிதத்தில் புதிய காத்தான் குடியைச் சேர்ந்த இரு முஸ்லிம் நபர்களான சஹ்ரான்ரூபவ் ரில்வான் ஆகியோர் தாக்குதலில் ரூடவ்டுபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எங்கு தாக்குதல்களை செய்யப்போகின்றார்கள் என்ற தகவல்கள் எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. எமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டிருந்தது. கேள்வி:- கிழக்கினைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபடப்போகின்றார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த நிலையில் நீங்கள் அம்மாகாணத்தினைச் சேர்ந்தவர், ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதுகுறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியுமல்லாவா? பதில்:- பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பின் தலைமை அதிகாரியால் அப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கட்டளையே அதுவாகும். அதுகுறித்து நாம் கேள்விகளை எழுப்ப முடியாது. ஆனால் எட்டு மாதங்களுக்கு முன்னதாக நான் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில்ரூபவ் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தியிருந்தேன். கேள்வி:- தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்ற விடயத்தினை எந்த அடிப்படையில் முன்வைத்திருந்தீர்கள்? பதில்:- அரசாங்கம் நாட்டின் தேசிய புலனாய்வுக்கட்டமைப்பினை உடைக்கின்றார்கள். இதனால் தேசிய பாதுகாப்பு பாரிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதுமட்டுமன்றி இலங்கையினுள் ஐ.எஸ் தீவிர ஊடுருவல்கள் இருந்துள்ளதாகவும் காத்தான்குடியை மையப்படுத்திய சில அமைப்புக்களின் போக்குகளில் மாற்றங்கள் காணப்படுகின்றதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. ஆனால் அவை குறித்து அரசாங்கம் கவலையீனமாகவே இருந்துள்ளது. கேள்வி:- இத்தாக்குதலுக்கு எத்தகைய வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன? அவற்றை உள்நாட்டில் இலகுவாக உற்பத்தி செய்திருக்க முடியுமா? பதில்:- தீவிரவாதத்தின் முதலாவது தாக்குதலுக்கே விடுதலைப்புலிகள்ரூபவ் மற்றும் படையினர் பயன்படுத்திய அதியுச்ச சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. படையினர் பயன்படுத்தும் ஆர்.டி.எக்ஸ் மற்றும் விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் சி -4 ஆகிய வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பாரியளவில் உபயோகிக்கப்பட்டுள்ளன. இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். நிச்சயமாக இந்த வெடிபொருட்கள் வெளிநாட்டிலிருந்து தான் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அதுகுறித்த முழுமையான தகவல்களை பெறவேண்டியது அவசியமாகின்றது. கேள்வி:- கிழக்கில் வஹாப் சிந்தனை தலைதூக்கப்பட்டு தற்போது மதத்தின் பெயரால் தீவிரவாதமாக உக்கிரமடைந்துள்ளது என்ற கருதுகோளை ஏற்கின்றீர்களா? பதில்:- இதனை விரிவாக பார்த்தால், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு முஸ்லிம்கள் மறறும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தவறாக பிரதிபலிக்கப்படுகின்றது. குறித்த முடிவு எடுக்கப்பட்டபோது நானும் விடுதலைப்புலிகள் அமைப்பின் அங்கதவராக பணியாற்றிய ஒருவன் என்ற அதற்கான காரணத்தினை நன்கு அறிந்திருந்தேன். வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் அன்று பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். விசேடமாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனமுறுகலொன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறந்த முறையில் திட்டமிட்டே அத்தகைய முடிவொன்றை எடுத்திருந்தார். தற்போதை அர்த்தப்படுத்தல்களின் பிரகாரம் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றால் பலம்பொருந்திய கட்டமைப்பினைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு வடக்கில் வாழ்ந்த அத்தனை முஸ்லிம்களையும் அழிப்பதற்கு இருபது விநாடிகள் போதுமாக இருந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் வடக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பில் கரிசனை கொண்டிருந்தமையால் தான் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். தமிழ் முஸ்லிம் இன ஐக்கியத்தினை பேணுவதற்காகவே அந்த செயற்பாடு இடம்பெற்றிருந்தது. அதேநேரம் காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களில் பல மர்மங்கள் உள்ளன. அதேபோன்று முஸ்லிம்களால் பல தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே பழைய விடயங்களை மீண்டும் கிளறிப்பார்க்க வேண்டியதில்லை. இருந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்களும் சிறந்த வெளிப்பாடுகளையே காட்டிவந்துள்ளார்கள். தற்போது வரையில் அதனை பேணிக்கொண்டே வருகின்றார்கள். மேலும் இலங்கையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சமயத்தவர்களை மையப்படுத்தியே தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதனை விடுதலைப்புலிகள் மற்றும் முஸ்லிம் தரப்புக்கிடையிலான விடயத்தினை மையப்படுத்தி ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  ஆரசியல் குளிர்காய நினைப்பவர்களே விடுதலைப்புகளை இத்தாக்குதலுடன் தொடர்பு படுத்த முனைகின்றார்கள். ஆகவே விடுதலைப்புலிகள் விடயத்தினை தவிர்த்து, சர்வதச தீவிரவாதம் என்ற அடிப்படையில் நோக்கினால் தான் இதனை முற்றாக களையலாம். விடுதலைப்புலிகள் அமைப்புடன் கருத்து முரண்பாட்டின் அடிப்படையில் நான் வெளியேறியிருந்தாலும் தலைவர் பிரபாகரன் மீது பொய்யாக ஒருபோதும் குற்றம்சாட்ட முடியாது. நான் இராணுவத்தளபதியாக செயற்பட்டிருந்த காலப்பகுதியில் ஒரு முஸ்லிம் நபரைக் கூட தண்டிப்பதற்கு எமக்கு உத்தரவிட்டதுமில்லை. அனுமதித்ததும் இல்லை. இறுதிவரையில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டுடன் தான் இருந்தார். அரசியல் குளிர்காய்வதற்காக உண்மைகளை மறைக்க முடியாது. கேள்வி:- காத்தான்குடி, ஏறாவூர் சம்பவங்களின் பின்னர் ஹிஸ்புல்லா முஸ்லிம்களின் பாதுகாப்பதற்காக இலங்கை அரசிடமிருந்து ஆயுதங்களை பெற்றிருந்தார் என்பதை நீங்கள் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு அறிந்திருந்ததா? பதில்:- ஆம், அது வெளிப்படையான தகவல். ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தான் முஸ்லிம் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமே ஆயுதங்களை வழங்கியிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் பெண்கள் பதிப்புக்குள்ளானார்கள். கேள்வி:-ஹிஸ்புல்லா தனது தலைமையில் மீராவோடை, மாஞ்சோலை கிராமங்களில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுத்தபோது விடுதலைப்புலிகள் அவரை இலக்கு வைத்ததாக கூறுகின்றரே? பதில்:- முஸ்லிம் தலைவரை இலக்கு வைப்பதையோ முஸ்லிம் மக்களின் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்துவதையோ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. அதனை கொள்கையாகவும் வகுத்து பற்றுறுதியாக செயற்பட்டு வந்திருந்தார். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அவர் என்றுமே விரும்பியது கிடையாது அதுவே அவருடைய முடிவாகவும் இருந்தது. இதனைவிடவும் தமிழ் முஸ்லிம் இன உறவைப் பேணுவதற்கான பலபேச்சுக்கள் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக மு.கா தலைவர் ஹக்கீமை வன்னிக்கு அழைத்து தலைவர் பிரபாகரன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அப்பேச்சுக்களின்போது நானும் கலந்துகொண்டிருந்தேன். அதன்போது தலைவர் பிரபாகரன் நாங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றோம். நீங்களும் தமிழ் பேசுகின்ற சமுகம் ஆகவே உங்களுக்கு தேவையான ஒத்தாசைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என்று தான் ஹக்கீமிடம் கூறினார். மாறாக முஸ்லிம்களுக்கும் தானே தான் தலைவர் என்று கூறவில்லை. கேள்வி:- கிழக்கு ஆளுநராக இருக்கும் ஹிஸ்புல்லாவின் அரசியல் நகர்வுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லா, அலிசாஹிர் மௌலானா, அமீர் அலி என அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நீண்ட காலமான நட்பு உறவுகள் எனக்கு உள்ளன. ஆனால் அரசியல் ரீதியாக முஸ்லிம் ஏகாதிபத்தியத்தினை நான் எதிர்த்தே வந்திருக்கின்றேன். ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டவுடன் அதற்கு எதிராக கையெழுத்து வேட்டையை நடத்தினேன். இரண்டாயிரம் கையொப்பத்துடன் அவரை நீக்கும் கோரிக்கையை ஜனாதிபதி,பிரதமருக்கு அனுப்பி வைத்தபோதும் அதற்கு இதுவரையில் எவ்விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. முன்னதாக பல்கலைக்கழகத்தினை நிர்மானிப்பதற்கான ஆரம்பச் செயற்பாடுகளை முன்னெடுத்தபோதே நான் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தேன். ஹிஸ்புல்லா அதிகாரத்தினை பயன்படுத்தி காணி சுவீகரிப்புக்கள், அரச நியமனங்களை பெருமளவில் செய்து வருகின்றார். குண்டுவெடிப்பின் சூத்திரதாரியான சஹ்ரானுடன் கைலாகு கொடுத்திருக்கின்றார். ஓட்டமாவடியில் இந்துக்கோவிலுக்கான காணி சுவீகரிப்பு, அமைச்சு அதிகாரத்தினைப் பயன்படுத்தி நீதிபதியை இடமாற்றியமை ஆகியவற்றை பகிரங்கமாகவே மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அதிகாரத்தினை கோலோச்சுவதற்காக பயன்படுத்தும் ஒருவர் ஆளுநராக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இத்தனை விடயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்திருந்தோம் அவர் மீது எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமலிருக்கின்றார். அதற்கான பின்னணியை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. கேள்வி:- ஒக்டோபர் 26 அரசியல் புரட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்தமையின் எதிரொலியாகவே கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றதே? பதில்:- அதுவொரு புறமிருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைபிடமும் தவறுகள் உள்ளன. கிழக்கில் தீவிரவாதம் தோன்றுவதற்கு கூட்டமைப்பே அத்திவாரமிட்டது. கிழக்கு மாகாணத்தில் ஏழு ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸிடம், 11ஆசனங்களைப் பெற்றிருந்த கூட்டமைப்பு ஆட்சியைக் கையளித்தது. ஹாபீஸ் நஸீர் முதலமைச்சராகி பாரிய ஆதிக்கத்தினைச் செலுத்தினார். அப்போது கூட்டமைப்பு தட்டிக்கேட்கவில்லை. குண்டுத்தாக்குதலின் பின்னரே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குரலெழுப்புகின்றார்கள். அன்று நாங்கள் வீதியிலிறங்கிப்போரடிய போது இவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். கருத்துக்களை முன்வைப்பதற்கு திராணி இருந்திருக்கவில்லை. கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சரி அதிலிருந்து வெளியேறியவர்களும் சரி தவறுகளைச் செய்துவிட்டு இப்போது கோசமிடுவதால் பயனில்லை. (நேர்காணல்:- ஆர்.ராம்)   http://www.virakesari.lk/article/56761
  • உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019   எல்லாமேவிதிப்படிதான் நடக்கும் எதையுமே நம்மால் மாற்ற இயலாது, என்று சொல்பவர்கள் ரோட்டைக் கடக்கும்போது இருபுறமும் பார்த்துவிட்டுக் கடப்பதைநான் பார்த்திருக்கிறேன் – ஸ்டீஃபன் ஹொக்கிங். கோயில்களின் காலம் முடிந்துவிட்டதுஎன்றுமு.தளையசிங்கம் கூறியிருக்கின்றார்.ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றியமிகமுக்கியஆன்மீக இலக்கியச் சிந்தனையாளர் செயற்பாட்டாளர் அவர். ஒருபுதுமதத்தை முழு மதத்தைஅவர் கனவுகண்டார். ஈழப்போர்க்களத்தில் எல்லாமதக் கோயில்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. போரில் ஈடுபட்டஎல்லாத் தரப்புக்களும் மற்றையதரப்பின் ஆலயங்களைஅல்லதுவழிபாட்டிடங்களைத் தாக்கியிருக்கின்றன. இதில் கடைசியாகநடந்ததாக்குதல்களேஈஸ்டர் குண்டுவெடிப்புக்களாகும். ஈழப்போரில் ஆயுதமோதல்கள் முடிவுக்குவந்துபத்துஆண்டுகளின் பின் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஈழப்போர்க்காலத்தில் பெரும்பாலானஎல்லாக் கோயில்களும் பாதுகாப்பை இழந்துகாணப்பட்டன. கோயில்களில்தஞ்சமடைந்தமக்களின் மீதுவிமானங்கள்குண்டுகளைப் போட்டன. இதனால் கோயில்கள் சேதமடைந்தன. கோயில்களில் தஞ்சமடைந்தமக்களைப் படையினர்சுற்றிவளைத்துப் பிடித்துச் சென்றனர். அல்லதுகோயில்களுக்குள் வைத்தேசுட்டுக்கொன்றனர். மசூதியில் வழிபட்டுக்கொண்டிருந்தமக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கொல்லப்பட்டார்கள். அனுராதபுரத்தில் போதிமரத்தைவணங்கிக்கொண்டிருந்தபக்தர்களும் கொல்லப்பட்டார்கள். தலதாமாளிகைதாக்கப்பட்டது. அதாவதுபோரில் சம்பந்தப்பட்டஎல்லாத் தரப்புக்களும் ஏதோஒருசந்தர்ப்பத்தில் ஆலயங்களைத்தாக்கியிருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரைஅவர்களுக்குத்தஞ்சம் புகுந்தபெரும்பாலானகோயில்களில் பாதுகாப்புகிடைக்கவில்லை. அது மட்டுமல்ல தொடர்ச்சியான பேரிடப் பெயர்வுகளின் போதுதமிழ் மக்கள் தமது இஷ்டதேவதைகளையும் வழிபாட்டிடங்களையும் கைவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.அதிசயங்கள் அற்புதங்கள் நடக்குமென்று நம்பிக் காத்திருந்தமக்கள் மிகமிகக் குறைவு. அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது என்று எக்ஸோடஸ் நாவலில் வருவது ஈழத்துதமிழர்களுக்கும் பொருந்துமா? தமது இஷ்டதேவைதையை முழுக்க முழுக்க நம்பித் தமது வழிபாட்டிடங்களில் இறுதிவரை தங்கியிருந் தமக்கள் மிகமிகக் குறைவு. அது ஓர் மிகஅரிதானதோற்றப்பாடு. குறிப்பாக1995இல் யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்தபோதுபெரும்பாலானபெருங்கோயில்கள் வழிபாடின்றியும் பூசைகளின்றியும் இருண்டுகிடந்தன. இடம்பெயர்வுநிகழ்ந்து நான்குநாட்களின் பின் சிலநண்பர்களோடுநான் யாழ்ப்பாணத்திற்குதிரும்பிவந்தேன். நல்லூரில் யாரும் இருக்கவில்லை. கோயிற்பிரகாரம் இருண்டுகாணப்பட்டது. என்னோடுவந்தஒருநண்பர் கூறினார். ‘இப்படிக் கோயில்களில் விளக்குகள் எரியாதஒருகாலம் வருமென்றுயோகர் சுவாமிகள் முன்னொருமுறை கூறியிருப்பதாக’ தமிழ் மக்கள் பேரிடப்பெயர்வுகளின் போதுபெரும்பாலும் கோயில்களைக் கைவிட்டு இடம்பெயர்ந்தார்கள் அல்லதுகோயிற் சுருவங்களையும் தங்களோடுசேர்ந்து இடம்பெயர்த்தார்கள். நாலாம் கட்டஈழப்போரின்போதுமடுமாதா இப்படிதேவன்பிட்டிவரையிலும் இடம்பெயர்ந்தார்.அவர் தொடக்கத்திலிருந்தேஅகதி மூர்த்தம்தான். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மடுமாதா மாந்தையிலிருந்து அகதியாக மடுவுக்கு வந்தார். மூன்றாங்கட்ட ஈழப்போரின் போது மடுமாதாவின் கோயிற் பிரகாரத்திலேயேபீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. தஞ்சம் புகுந்திருந்த பக்தர்கள் கொல்லப்பட்டார்கள். நாலாங்கட்டஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பெருங்கடலுக்கும் சிறுகடலேரிக்கும் இடையே இருந்தஒருசிறுதுண்டிற்குள் தமிழ் மக்கள் சிக்குண்டிருந்தபோதுசிறுகடலுக்குஅப்பால் முள்ளிவாய்க்காலைப் பார்த்துக்கொண்டுவற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் கோபுரம் காணப்பட்டது. எனதுநண்பர் ஒருவர் கூறுவர் அக்கோபுரமும் ஒருயுத்தசாட்சிஎன்று. ஆனால் ஜெனிவாவில் யுத்தசாட்சியம் சொல்லவற்றாப்பளைக் கோபரம் வரவில்லை. அதுமட்டுமல்ல எந்த ஒருபடைத்தரப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வற்றாப்பளைக் கோவிலுக்குட் புகுந்துதஞ்சம் புகுந்திருந்தமக்களைவேட்டையாடியதோஅதேபடைத்தரப்பின் பாதுகாப்போடு கடந்த திங்கட்கிழமை வற்றாப்பளை பெருவிழா நடந்திருக்கின்றது. இப்படியாகஈழப்போர்க்களத்தில் ஆலயத்தில் தஞ்சம்புகுந்தமக்கள் பாதுகாக்கப்படவில்லை. ஆலயங்களும் பாதுகாக்கப்படவில்லை. ஆனாலும் ஆயுதமோதல்கள் முடிவடைந்தபின் மீளக் குடியமர்ந்தமக்களோடுகோயில்களும் பூசைகளும் வழிபாடுகளும் மீளக் குடியமர்ந்தன. உடைந்தஅல்லதுசிதைந்தகோயில்கள் மீள்க்கட்டியெழுப்பப்பட்டன. புதிதாகவும் கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவைபுலம்பெயர்ந்ததமிழர்களின் நிதியுதவியுடன் நடந்தன. தீவுப்பகுதிகளில் ஒருகோயில் முதலில் கிட்டத்தட்ட இரண்டுமில்லியன்ரூபாய்கள் செலவில் திருத்தப்பட்டது. ஆனால் அடுத்தடுத்தஆண்டுகோடிக்கணக்கானரூபாய் நிதிகிடைத்ததையடுத்துமுதலில் கட்டப்பட்டமண்டபம் உடைக்கப்பட்டுபுதிதாகவேறொன்றுமுன்னதைவிடபெரியதாகக் கட்டப்பட்டிருக்கின்றது. இத்தனைக்கும் தீவுப்பகுதிகளில் சிலபாடசாலைகளில் மாணவர்கள் காலைஉணவுஅருந்தாமல் படிக்கவருவதாகஅங்குவேலைசெய்யும் ஒருமருத்துவர் கூறுகிறார். இவ்வாறு2009ற்குப் பின் கோயில்கள் பெருமெடுப்பில் புனரமைக்கப்பட்டுபலவண்ணங்களிலும் ஜொலித்துக்கொண்டிருந்தஒருபின்னணிக்குள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அத்தாக்குதல்கள் குறிப்பாககோயில்களைக்குறிவைத்துநடத்தப்பட்டுள்ளன. இதையடுத்துகோயில்களைப் பாதுகாப்பதற்காகஅவற்றைச் சுற்றிப் படையினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கொச்சிக்கடை அந்தோனியர் கோயிற்பகுதிகிட்டத்தட்டஒருகடற்படைவளாகம்போலகாணப்படுகின்றது. கடந்தவாரம் நல்லூர் கோயிலுக்குஆபத்துஎன்றுவெளிவந்ததகவலையடுத்துகோயில் வெளிவீதி மூடப்பட்டது. மிகச் செறிவாகபடையினர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டார்கள். ஒருமொட்டைக்கடிதத்தைவைத்துசோதனைநடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுகின்றன. ‘கடவுளுக்கு இதுவரைநான் எழுதியகடிதங்களுக்குஅவர் பதில் போட்டத்தில்லைஆனால் ஒருமொட்டைக்கடிதத்துக்குகடவுள் பயப்படுவதாகஅரசாங்கம் நம்புகிறது’என்றுஎனதுநண்பர் ஒருவர் பகிடியாகச் சொன்னார். நல்லூரில் கொச்சிக்கடையில் மட்டுமல்லபெரும்பாலானபெருங்;கோயில்களின் அருகேபடைப்பிரசன்னத்தைக் காணமுடிகிறது. தேவாலயங்களில் ஞாயிறுபூசைக்குவரும் பக்தர்களை வாசலில் வைத்துபொலிசாரும் படையினரும் சோதனைசெய்கிறார்கள். வற்றாப்பளை பெருவிழா கடந்த திங்கட்கிழமை நடந்தது. அதற்குவரும் பக்தர்கள் என்னென்னகொண்டுவரலாம் என்னென்ன கொண்டு வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டார்கள். கடைகள் அனுமதிக்கப்படவில்லை. எல்லாப் பக்தர்களும் சோதிக்கப்பட்டார்கள். வழமையாகவரும் பக்தர்களில்  மூன்றில் ஒருபங்கினரேதிருவிழாவிற்குவந்திருந்;தார்கள். இவ்வாறுதமதுஇஷ்டதேவையைஅல்லதுபுனிதரைவணங்கச் செல்லும்போதுசோதிக்கப்படுவதையிட்டுபக்தர்கள் என்னகருதுகிறார்கள்? தமதுகடவுளுக்கும் புனிதர்களுக்கும் படைத்தரப்பும் பொலிசும் பாதுகாப்புவழங்குவதையிட்டுமதகுருக்களும்,பூசகர்களும் ஆன்மீகவாதிகளும் என்னகருதுகின்றார்கள்?கடவுளுக்கே பாதுகாப்பில்லை எனவே படையினரை நிறுத்திகடவுளையும் கும்பிடவரும் பக்தர்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்களா? தன்னையும் தன்னை நம்பிவரும் பக்தர்களையும் ஏன் கடவுளாலும் புனிதர்களாலும் பாதுகாக்க முடியவில்லை? உயிர்த்தஞாயிறு அன்று தன்னை நம்பிவந்த பக்தர்களைஏன் அந்தோனியார் எதிரிகளிடம் கையளித்தார்? இதுவிடயத்தில் ஸ்hபிக்கப்பட்டபெருமதங்கள் மட்டுமல்லஆவிக்குரியசபைகளும் பதில் கூற வேண்டும். செபம்,தியானம்,உபவாசம்,தவம் என்றுஆண்டவரோடுஉயிர்த்தொடர்பைபேணுவதாகநம்பப்படும்ஊழியர்க்காரர்களால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களைஏன் முன்னுணரமுடியவில்லை? ஏன் தடுக்க முடியவில்லை? ஊழியக்காரர்களையும் ஆலயத்தையும் பக்தர்களையும்பாதுகாக்கும் பொறுப்பைபடைத்தரப்பிடம் ஏன் ஒப்படைத்தார்கள் ? கடவுளைவிடவும் படைத்தரப்புசக்திமிக்கதா? அப்படியானால் முப்படைகளின் தளபதியானஅரசுத்தலைவர் கடவுளைவிடசர்வவல்லமைபொருந்தியவரா? எந்தஒருபடைத்தரப்புசென் ஜேம்ஸ் தேவாலயத்துக்குகுண்டுவீசியதோநவாலிசென்பீற்றர் தேவாலயத்திற்குகுண்டுவீசியதோமடுமாதாவின் பிரகாரத்தையுத்தகளமாக்கியதோவற்றாப்பளைஅம்மன் கோயிலில் தஞ்சம் புகுந்தமக்களைவேட்டையாடியதோஅதேபடைத்தரப்பிடம் பாதுகாப்புகேட்பதுஏன்? இக்கேள்விகளுக்கு எல்லாமதத் தலைவர்களும் பதில் கூற வேண்டும். கடவுளுக்குப் பாதுகாப்பில்லாத உடைந்த ஆலயங்களை அவசர அவசரமாகத் திருத்தி பூசிமினுக்குவதை விட இக்கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் கண்டுபிடிக்க வேண்டும். தளையசிங்கம் கூறியதுபோலஆலயங்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது எக்ஸ்ஸோடஸ் நாவலில் வருவதுபோலஅதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோமுடிந்துவிட்டதா?அல்லது தமதுபக்தி, விசுவாசம், வழிபாடு போன்றவற்றில் குறையுள்ளதா? என்று எல்லாமதப்பிரிவுகளும் சிந்திக்கவேண்டும். இடித்தகோயிலைமீளக் கட்டிபூசிமினுக்கிவழிபடும் பக்தர்கள் அக்கோயில் ஏன் இடிக்கப்பட்டது? யார் இடித்தது? அப்படி இடிக்கப்பட்டபோதுகடவுள் எங்கே?அல்லதுஅங்கேகடவுள் இல்லையா? ஏன்ற கேள்விகளைஏன் எழுப்புவதில்லை? யாந்திரிகமாக,சடங்காகமதங்களையும் மதகுருக்களையும்,ஊழியக்காரர்களையும்,பின்பற்றும் மந்தைகளாபக்தர்கள்? இவ்வாறுசிங்களபௌத்தசிந்தனைகளைக்குருட்டுத் தனமாகப் பின்பற்றியதால் ரத்தம் சிந்தியஒருநாடுஅந்தஆயுதமோதல்கள் முடிவடைந்துபத்துஆண்டுகளின் பின் மற்றொரு மதத்தைத் தவறாக விளங்கி வைத்திருக்கும் சிறிய குருட்டு விசுவாசிக் கூட்டம் ஒன்றின் தற்கொலைஅரசியலுக்கு இரையாகியுள்ளது. இலங்கைத்தீவில் நான்குபெருமதங்களும் உண்டு. ஒவ்வொருநாளும் காலையில் தனதுஒலிபரப்புக்களையும் ஒளிபரப்புக்களையும் மதப்பிரசங்கங்கள் அல்லது மத அனுஷ்டானங்களுடன் தொடங்கும் ஒருநாடு தனது மதத்தலங்களை படைத்தரப்பின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டதா? இவ்வாறு தனது மதநம்பிக்கைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பாத ஒருமக்கள் அரசியலில் மட்டும் எப்படிக் கேள்வி எழுப்புவார்கள்? யாழ்ப்பாணத்தில் உள்ள அரங்கச் செயற்பாட்டாளரான கலாநிதி சிதம்பரநாதன் அடிக்கடி கூறுவார் ‘கிரிட்டிக்கலாக – விமர்சனபூர்வமாகச் சிந்திக்கும் மக்களின் தொகையை அதிகரிக்க அதிகரிக்க அரசியலில் மாற்றம் உண்டாகும்’ என்று ஆனால் தனது மதநம்பிக்கைகள் வழிபாடு என்பவற்றைக் குறித்து ‘கிரிட்டிக்கலாக’சிந்திக்காதஒருசமூகம் சமூகப் பொருளாதாரஅரசியல் விவகாரங்களில்மட்டும் கிரிட்டிக்கலாகஎப்படிச் சிந்திக்கும்? #உயிர்த்தஞாயிறு #நிலாந்தன் #eastersundayattacklk   http://globaltamilnews.net/2019/122709/
  • சீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019   உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து சீனப்பிரஜைகள் சுற்றுலாவுக்கென இலங்கைக்கு பயணம் செய்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் இலங்கைக்கான சீன தூவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறு சீனா முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது இவ்வாறு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் சீனப் பிரஜைகளை அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது #சீனா   #தடை #உயிர்த்த ஞாயிறு #eastersundaylk #srilanka  #china   http://globaltamilnews.net/2019/122719/
  • 24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019 கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நேற்றைய தினம் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போது 24 பேர் கைது செய்யப்பட்டதாக ளதாக பதில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஆத்துடன் நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் முப்படையினருடன் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #கைது   #தேடுதல் #கொழும்பு #புத்தளம்  #roundup   http://globaltamilnews.net/2019/122714/
  • கோஷானின் கருத்தோடு ஒத்துப்போகின்றேன். ஏற்கனவே, பொலிஸ்வரை போயும் பெண்பிள்ளை காதலில் தீவிரமாக இருப்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எதைச் செய்யமுடியுமோ அதைத்தான் இருபகுதி பெற்றோரும் செய்வது நல்லது. சில விடயங்களில் தெளிவு இல்லை. பெண்ணுக்கு 18 ஆகவில்லை என்றால் புரியாத வயதுப்பெண்ணை கடத்திக்கொண்டு போனதாக செயற்பட சட்டம் இல்லையா? பொலிஸ் ஒன்றும் செய்யாமல் விட்டது அப்படி எதுவும் இல்லை என்றுதான் சொல்கின்றது. பையனின் பெற்றோர், உறவினர்கள் இந்த காதல் பிரச்சினையை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்றும் தெரியவில்லை.   மேலும், இளவயதுத் திருமணம்  ஒரு பொறுப்பை இருவருக்கும் கொடுக்குமானால் வாழ்வில் நன்றாக வருவார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வில்லாமல் போகும்போது, குடும்பம் என்பதன் சுமை பாரமாக உணரும்போது, அதற்கேற்ப பொருளாதாரம் இல்லாதபோது வாழ்வு கசக்கும். இதை என் கண்ணால் ஊரிலும் புலம்பெயர்ந்த நாட்டிலும் பார்த்திருக்கின்றேன்.