Jump to content

`சஞ்சய் தத் நியாயங்கள், பேரறிவாளனுக்குப் பொருந்தாதா?’ - குடியரசுத் தலைவர் நிராகரிப்பின் பின்னணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலையை நிராகரித்துவிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். `உச்ச நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியது மத்திய அரசுதான். குடியரசுத் தலைவர் மூலமாக அறிக்கை வெளியிடுவதன் பின்னணி என்ன. இதற்குப் பதிலாக என் மகனைக் கருணைக்கொலை செய்துவிடலாம்' எனக் கொதிக்கிறார் அற்புதம்மாள். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட ஏழு பேர், கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். `இவர்களின் சிறை நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, விடுதலை செய்ய வேண்டும்' என மத்திய அரசுக்குத் தமிழக அரசு 2014-ல் கடிதம் எழுதியிருந்தது. இந்தக் கடிதத்தை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் போனது. தீர்ப்பின் அடிப்படையில் 2016-ல் மீண்டும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது. இந்தக் கோரிக்கையைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நிராகரித்துவிட்டதாக இன்று தகவல் வெளியானது. `ஏழு பேர் விடுதலையில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை. உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரிலே இந்த மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்' எனவும் தகவல்கள் வெளியாகின.

``குடியரசுத் தலைவர் மூலமாக அறிவிப்பை வெளியிட்டதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு பதில் சொல்லப்போகிறதா, குடியரசுத் தலைவர் பதில் சொல்லப்போகிறாரா. குடியரசுத் தலைவர் பதில் அளிக்க முடியாது. உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டிய நேரத்தில், ராம்நாத் கோவிந்த் மூலமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படியொரு முடிவை, பா.ஜ.க அரசு எடுத்தால், அரசியல்ரீதியாக விளைவுகளை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் குடியரசுத் தலைவரைக் கைகாட்டிவிட்டார்கள்" என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.  

அற்புதம்மாள்குடியரசுத் தலைவரின் உத்தரவு குறித்து, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் பேசினோம். ``எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. இதில் குடியரசுத் தலைவர் எங்கே வருகிறார் எனத் தெரியவில்லை. ஆயுள் சிறைவாசிகள் வழக்கில் ஜனாதிபதி தலையிடுவார் என இதுநாள் வரையில் நான் கேள்விப்பட்டதே இல்லை. விடுதலை தொடர்பாகத் தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் கொடுத்திருக்கிறது. குடியரசுத் தலைவரிடம் மனுவைக் கொடுக்கவில்லை. தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, `மத்திய அரசு பதில் சொன்னால் விடுதலை உடனே நடக்கும். ஏழு பேர் விடுதலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா என்ன முடிவை எடுத்தாரோ, அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மனுவிலும் இதைத்தான் குறிப்பிட்டிருக்கிறோம்' எனக் கடந்த வாரம் சொன்னார்.

இப்போது திடீரென இப்படியோர் உத்தரவு வருவதற்கான காரணம் புரியவில்லை. `பா.ஜ.க அரசு நல்ல பதில் சொல்லும்' என இதுநாள் வரையில் நம்பியிருந்தேன். காரணம், மாநில அரசு அவர்களோடு இணக்கமான உறவில் இருக்கிறது என்ற நம்பிக்கைதான். `இவர்கள் இருவரும் பேசி முடிவெடுப்பார்கள்' என உறுதியாக நம்பினேன். துணை முதல்வர் பன்னீர்செல்வத்தைப் பார்த்தபோது, `நாங்கள் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறோம்' என்றுகூட சொன்னார். எனவே, விடுதலை பற்றிய அறிவிப்பு வரும் எனக் காத்திருந்தேன். அவனது உடல்நலமும் மோசமாகிவிட்டதால் மருத்துவ உதவிக்காக அலைந்துகொண்டிருக்கிறோம்" என வேதனைப்பட்டவர், 

"இப்படி அறிவிப்பதற்குப் பதிலாக மரண தண்டனை எவ்வளவோ மேல். இதைத்தான் அவனும் நினைப்பான். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் துடிப்பதற்குப் பதிலாக ஒரேயடியாகச் செத்துப்போய்விட்டால் போதும். அவனும் வாழ்க்கையை இழந்து 27 வருஷமா போராடிட்டு இருக்கான். சட்டப்படிதான் போராடிக்கிட்டிருக்கான். 27 வருஷமா சட்டத்துக்குப் புறம்பா அவன் எதுவும் செய்யலை. ஏழு பேர் விடுதலைக்கு ராகுல்காந்தியே ஒப்புதல் கொடுத்துவிட்டார். ராஜீவ்காந்தி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பமே விடுதலைக்கு ஆதரவாக இருக்கும்போது, பா.ஜ.க அரசு எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. `சிறைவாசிகளின் உரிமை என்பது மாநிலத்தின் உரிமை' என்கிறார்கள். இந்த உரிமையில் மத்திய அரசு தலையிடலாமா, மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லையா. சிறைவாசிகளின் பராமரிப்பு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. ஆனால், விடுதலை செய்வது மட்டும் எப்படி மத்திய அரசின் கைகளுக்குப் போகும்? சி.பி.ஐ வழக்கு என மத்திய அரசு காரணம் சொல்கிறது. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன. எல்லா மாநிலத்திலும் உள்ள சி.பி.ஐ வழக்குகளில், மத்திய அரசுதான் முடிவு செய்கிறதா. சி.பி.ஐ விசாரித்த வழக்கான மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆயுதச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் 8 மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலையானபோது பா.ஜ.க அரசு தலையிட்டதா, ராஜீவ்காந்தி வழக்குக்கு மட்டும் ஏன் இப்படியொரு நிபந்தனையை வைத்திருக்கிறார்கள்? 

காந்தியைக் கொன்றவர்களை 14 வருஷத்தில் மத்திய அரசு விடுதலை செய்துவிட்டது. என் மகன் 27 வருஷமா ஜெயில்ல இருக்கிறான்.
27 வருஷம் தண்டனை அனுபவிக்கும் அளவுக்கு, அவன் எந்தத் தவறும் செய்யவில்லை. இப்போது அவனுடைய விடுதலையை ஏன் எதிர்க்க வேண்டும். இந்த வழக்கில் விளங்காத கேள்விகள் நிறைய இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களே என் மகனுக்குச் சாதகமாக இருக்கும்போது, இவர்கள் எதிர்ப்பதற்கு ஓட்டு அரசியல்தான் காரணமா. யார் பெத்த புள்ளையை வச்சிட்டு இவர்கள் ஓட்டு அரசியல் செய்கிறார்கள். 27 வருஷம் நல்லவன் எனப் பெயர் எடுத்து என்ன பயன்? எப்படிப்பட்ட குற்றவாளியையும் சீர்படுத்தி இந்தச் சமூகத்தில் வாழ வைப்பதற்காகத்தான் சிறை உருவானது. சிறையிலேயே வைத்து சாகடிக்கும் நிலையைப் பா.ஜ.க அரசு செய்வதுதான் சீர்திருத்தமா? அதற்குப் பதிலாக உடனே சாகடித்துவிடலாம். இன்று ஜனாதிபதி சொல்லிவிட்டார் அல்லவா... நாளையே என் மகனைக் கொன்றுவிடுங்கள். அவனுக்கும் நிம்மதியாகப் போய்விடும்" என அழ ஆரம்பித்தவர், சிறிது நிமிடங்களுக்குப் பிறகு, "27 வருஷமா நேர்மையாக வழக்கை எதிர்கொண்டு வருகிறோம். எந்தக் குறுக்கு வழியையும் தேடவில்லை. எங்களை ஆளும் அதிகாரம், இவர்களுக்கு எதற்காக இருக்கிறது? இந்தச் சமுதாயத்தில் வாழ முடியாத அளவுக்கு நாங்கள் குற்றவாளிகளா. என் மகன் கோடீஸ்வரனாக வாழ வேண்டாம். நேர்மையாக வாழ வேண்டும் எனச் சொல்லித்தான் வளர்த்தேன். இப்படி சிறையில் வைத்து ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்? சிறை விதிகளின்படி, சிறைவாசி எப்படி வாழ்கிறார் என்பதை முன்வைத்து விடுதலை செய்ய வேண்டும். ராஜீவ்காந்தி கொலை எனச் சொல்லி சொல்லியே, உலகநாடுகள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெயரை ஏன் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்? 

ராஜீவ்காந்தி கொலைக்குத் தொடர்புடைய வெடிகுண்டு பற்றி, சி.பி.ஐ இதுவரையில் விசாரிக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். `சதி... சதி’ எனச் சொல்கிறீர்களே... இந்தச் சதியை உருவாக்கியவர்கள் பக்கம் உங்கள் விசாரணை சென்றதா. இதுவரையில் சி.பி.ஐ விசாரிக்கவே இல்லை. 'வெடித்துச் சாவதற்குக் காரணமாக இருந்த வெடிகுண்டுக்கு 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்தான்' என என் மகனுக்குத் தூக்குத்தண்டனை வாங்கித் தந்தார்கள். 'இது என் வாழ்க்கை தொடர்புடையது. அந்த வெடிகுண்டு எங்கிருந்து வந்தது என எனக்குத் தெரிய வேண்டும்' என ஆரம்பத்திலிருந்தே என் மகன் கேட்டுக்கொண்டு வருகிறான். பா.ஜ.க அரசுக்கு இதெல்லாம் தெரியாதா? என் மகனை ஏன் காலம் முழுக்க சிறையில் வைத்து சாகடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். பா.ஜ.க அரசைப் பற்றி மற்றவர்கள் குறைகூறும்போதெல்லாம், `இது ஒரு பெரிய வழக்கு. மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும்' என வாதம் பண்ணிட்டு இருந்தேன். அதிலும், என்னை ஏமாளியாக்கிவிட்டார்கள். 27 வருஷமாக நம்பி நம்பி ஏமாந்துட்டு வர்றேன். என் புள்ளை வாழ்க்கை போயிருச்சேப்பா... அப்படி என்னப்பா என் புள்ள தப்பு பண்ணினான். இன்னைக்கு வரைக்கும் அவன் நல்லவனா இருக்கறது தப்பா..?" என அழத் தொடங்கியவரை நம்மால் தேற்ற முடியவில்லை.

https://www.vikatan.com/news/tamilnadu/127779-reason-behind-presidents-denial-for-seven-persons-release.html?artfrm=read_please

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??  
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.