பிழம்பு

ஒருபாலுறவு மனைவியை பழிதீர்க்க நண்பர்களுக்கு இரையாக்கிய கணவன்

Recommended Posts

''என் மனைவி வேறொருபெண்ணை விரும்புகிறாள். அவளுடனேயே உறவு வைத்துக் கொண்டுள்ளாள்'' என்று லியோனாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவன் புலம்புகிறான்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த அவனது ஐந்து நண்பர்கள், ''உனக்கு மனைவியை எவ்வாறு கையாள்வது (உறவுகொள்வது) என்பது தெரியவில்லை. அதுதான் அவள் ஒரு பெண்ணை நாடியுள்ளாள். எங்களிடம் விட்டுவிடு, எப்படி கையாள்வது என்பதை நாம் காண்பிக்கிறோம்'' என்று கூற, வெறுப்பில் இருந்த கணவனும் அதற்கு சம்மதிக்கிறான். ஒரு இரவில் ஐந்து நண்பர்கள், கணவன் முன்னிலையில் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.

இந்தக் கொடுர சம்பவம் நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் லியோனா திருமணம் நடந்தது. அப்போது அந்த இளம் பெண் திருமணத்தில் விருப்பமின்றி இருக்கிறாள். அம்மா, வலுக்கட்டாயமாக அவளுக்கு திருமணம் செய்துவைக்கிறார்.

ஆனால், லியோனாவால் திருமண வாழ்க்கையில் நாட்டம் கொள்ள முடியவில்லை. காரணம் அவளுக்கு இன்னுமொரு பெண் மீதே விருப்பம் இருந்தது. அவளுடனே உறவுகொள்வதில் நாட்டமாக இருக்கிறாள்.

ஒரு வருடம் கணவருடன் விருப்பமின்றி வாழ முயற்சித்த அவள், அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறாள். கணவன் அவளை சமாதானப்படுத்த முயற்சிக்கிறான். சமாதானப்படுத்த முயற்சித்த கணவனுக்கு தனது மனதிலுள்ள விருப்பத்தைத் தெரிவிக்கிறாள் லியோனா. கணவன் மனமுடைந்து போகிறான். இந்த இரகசியங்களை தனது நண்பர்களுடன் குடிபோதையில் பகிர்ந்துகொள்கிறான்.

இதன்பின்னரே நண்பர்களினால் கணவன் முன்னிலையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இந்த பாலியல் பலாத்காரத்தால் அவள் கர்ப்பமடைகிறாள். அந்த குழந்தையின் தந்தை அந்த ஐந்து பேரில் யார் என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை. அதனால் அந்தக் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு வெறுப்பாகவே இருக்கிறது. அவள் தற்போது நுவரெலியாவில் ஒரு தேவாலயத்தின் மடத்தில் தனது வாழ்க்கையைக் கழித்து வருகிறாள்.

ஒரு பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படாததால் அவளது மனித உரிமையும், உணர்வுகளும் மிதிக்கப்படுகின்றன. இது ஒரு சம்பவம் மட்டுமே. இப்படி ஏராளமான சம்பவங்களும், உண்மைக் கதைகளும் இருக்கின்றன.

தான் விரும்பிய வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம். வலுக்கட்டாயமாக திருமண செய்து வைத்த வாழ்க்கையில் வெறுப்பு. ஐந்து காமுகர்களினால் பாலியல் பலாத்காரம் என்று லியோனாவின் வாழ்க்கை இருண்டு போயுள்ளது. இதற்கான ஒரே காரணம் அவள் ஓரினச் சேர்க்கையாளர் என்பதே! அவளது உணர்வுகளை யாரும் மதிக்கவில்லை என இந்தச் சமூகத்தின் மீது வெறுப்புகொள்கிறாள்.

ஒருபால் உறவுக்காரார்கள்

LGBT என்று சுருக்காகமாக அழைக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்களும், திருநங்கைகளும் இலங்கையில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சட்டங்களும் அவர்களுக்கு எதிராகவே உள்ளன. இந்த சமூகத்திற்காக EQUAL GROUND என்ற அரசசார்பற்ற நிறுவனம் குரல்கொடுத்து வருகிறது. (LGBTI என்பதன் விரிவாக்கம் - L: lesbian, G: Gay, B: Bisexual, T: Transgender)

ஓரினச் சேர்க்கையாளர், திருநங்கைகள் குறித்து ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்துவதற்கான விசேட செயலமர்வொன்றையும் இந்த அரசசார்பற்ற அமைப்பு அண்மையில் நடத்தியிருந்தது.

மேற்கத்தேய கலாசாரத்தை இலங்கையில் பரப்ப முயற்சிப்பதாக LGBT சமூகத்திற்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த சமூகத்திற்கு ஆரவாக குரல்கொடுப்பவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்திருப்பதாக அந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் ரொசானா பெல்மர் தெரிவித்தார். சட்டமும் அவர்களுக்கு எதிராக இருப்பதால் அவர்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொள்வதை அவர் தெளிவுபடுத்தினார்.

இதுகுறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரி மேனகா ஹேரத் பேசினார். அனைத்து மனிதர்களும் சமம் என்ற அடிப்படையில் ஓரினச் சேர்க்கையாளர், திருநங்கை ஆகியோரது அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானது என அவர் விளக்கமளித்தார்.

மேனகா ஹேரத் Image caption மேனகா ஹேரத்

இதுகுறித்து மேலும் விபரித்த மேனகா ஹேரத், ''இந்தச் LGBT சமூகத்தைச் சார்ந்தோரின் அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாக முறையிடும் சந்தர்ப்பங்களிலும் அதுகுறித்து மனித உரிமை ஆணைக்குழு பணியாற்றுகிறது. இலங்கையிலுள்ள 365-A என்ற சட்டத்தின் கீழ் இவர்கள் எவ்வாறு கைதுசெய்யப்படுகின்றனர் என்பது குறித்து நாம் விழிப்பாக இருக்கிறோம். இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சட்டவிரோதமாகவே கைதுசெய்யப்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டம் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது குறித்து மனித உரிமை ஆணைக்குழு அக்கறை கொண்டுள்ளது.''

''நபர் யார் என்பது குறித்து மனித உரிமை ஆணைக்குழு கவனத்தில் கொள்ளாது. மனிதன் என்ற வகையிலேயே ஒருவரை ஆணைக்குழு பார்க்கிறது. அனைவருக்கும் உரிமைகள் இருக்கின்றன. அவர்களின் உரிமைகள் எவ்வாறு காக்கப்படுகிறது என்பதிலேயே மனித உரிமை ஆணைக்குழு கரிசனை கொள்கிறது. LGBT சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முறையிட வந்தாலும் அவரையும் ஒரு மனிதராகவே ஆணைக்குழு பார்க்கிறது. அவரது உரிமையை உறுதிப்படுத்துவது மனித உரிமை ஆணைக்குழுவின் கடமையாக இருக்கிறது.''

''காரணம் அவர்களும் மனிதர்கள். சாதாரண மனிதர்களை விடவும் அவர்கள் பல சமயங்களை நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு யாருடையதாவது உதவி தேவைப்படுகிறது. சமூகத்தில் அவர்களுக்குள்ள பிரச்சினைகளினால் அவர்கள் முன்வர விரும்புவதில்லை. அத்துடன் முன்வர அஞ்சுகின்றனர். இதனால் அவர்கள், உரிமைகள் அற்ற நிலையில் வாழ்கின்றனர்.''

''தன்னைத்தானே வருத்திக் கொள்கின்றனர். வாழ முடியாத காரணத்தினால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்களை குடும்பங்கள் ஒதுக்கிவைத்துள்ளன. தமக்கான அடையாளத்தைத் தொலைத்து வாழ்கின்றனர். தாம் யார் என்ற கேள்வியுடன் அவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் யார் என்பதைத் தேடிச் செல்லும் தைரியம் அவர்களிடம் இருக்கிறது.''

lesbianபடத்தின் காப்புரிமை Getty Images

''இந்த முயற்சிக்கு மனித உரிமை ஆணைக்குழுவினால் உதவ முடியும். ஊடகம் என்ற ரீதியில் உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பிருக்கிறது. ஊடகங்கள் அறிக்கையிடும் விதத்தைப் பொறுத்தே சரி, பிழை எது என்பதை மக்கள் தீர்மானிக்கின்றனர். எனவே இந்த சமூகத்தினர் குறித்த செய்திகளைப் பதிவிடும்போது மிகவும் அவதானமாக கையாளுமாறு கோருகிறோம்.'' என்று முடித்தார்.

இதுகுறித்து சட்டத்தரணியும், ஊடகவியலாளருமான ரதிகா குணரத்னவிடம் பேசினோம்.

''உண்மையில் இவர்களுக்கு அனைத்து வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. ஒருவரின் உணர்வுக்கு மதிப்பளிக்க மறுப்பது என்பது கொடுமையானது. உணர்வுகளால் ஈர்க்கப்பட்ட இவர்கள் பழகும்போது சட்டம் இதனைத் தடுக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் 365-A என்ற சட்டம் இவர்களுக்கு எதிரான நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது கைதுசெய்யப்படும்போது, பொலிசார் இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில்லை.''

ரதிகா குணரத்ன Image caption ரதிகா குணரத்ன

''இவர்களை கையாளும் வழிமுறைகள் முற்றிலும் பிழையாகவே இருக்கின்றன. இதுகுறித்து எமக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதிலும் இன்னுமொரு கொடுமையான விடயம் என்னவெனில், உள்ளூர் ஊடகங்களும் இவர்கள் விடயத்தில் பாரபட்சமாக செயல்படுகின்றன. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அவர்களும் மனிதர் என்பதை மதிக்க முயற்சிக்க வேண்டும். குறைந்த பட்சம் LGBT சமூகத்திற்கு ஆலோசனை பெற்றுக்கொள்ள உதவும் தொலைபேசி இலக்கத்தை விளம்பரமாக பிரசுரிக்கக்கூட பத்திரிகைகள் மறுக்கின்றன.''

''இதனைப் பிரசுரித்தால் அந்த ஊடகங்கள் மீது எதிர்ப்புக்கள் ஏற்படும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த சமூகம் குறித்தும், அவர்களின் உணர்வுகள் குறித்தும் பேசுவது மிக முக்கியமானது. இந்த சமூகத்தினர் பாதிக்கப்படும்போது அதனை ஊடகங்கள் கையாளும் விதமும், செய்திகள் வெளியாகும் விதமும் மிகவும் கவலையளிக்கிறது. செய்தியாளர்கள் இதில் அதிக அக்கறைகொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் கோணத்திலும் அந்த சம்பவங்களைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.

துஷார மனோஜ் Image caption துஷார மனோஜ்

ஊடகங்கள் LGBT சமூகத்தின் மீது அக்கறைக் கொள்வது இன்னுமொருவர் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தடுக்க உதவ வேண்டும் என இந்த சமூகத்திற்காக நீண்ட நாட்களாக குரல்கொடுத்து வருபவரும், சமூக ஆர்வலருமான துஷார மனோஜ் தெரிவித்தார்.

''ஓரினச் சேர்க்கையாளர் குறித்து கிடைக்கும் செய்திகளும், அவர்களின் அனுபவங்களும் கசப்பானதாகவே இருக்கின்றன. திருநங்கை சமூகத்தில் பாலியல் பொருளாக பார்க்கப்படுகின்றனர். பாலியல் இச்சைக்காக இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தரப்பினர்கூம இவர்களை இழிவாக பேசுவதும் நடத்துவதும் வேதனைகொள்ள வைக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் ஆசைப்படும் அடையாளத்தை நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதற்காக அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் குறித்து பேச வேண்டும். இந்த முயற்சி, இன்னுமொரு தற்கொலை முயற்சியையும், இன்னுமொரு உயிர்ப் பலியையும் நிச்சயம் தடுக்கும்'' என அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-44489022

Share this post


Link to post
Share on other sites

LGBT சமூகத்தினரும் நம்மைப் போல் இயல்பான மனநிலை உடையோரே எனும் புரிதலை சமூகத்தில் ஏற்படுத்தும் வகையில் இவர்களுக்கு எதிரான சட்டப்பிரிவு 365 - A  நீக்கப்பட வேண்டும். அதற்கான மக்கள் இயக்கம் வலுப்பெறுதல் வேண்டும். எந்த வகையில் பார்த்தாலும் அச்சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிடம் வன்புணர்வு என்பது கிரிமினல் குற்றம். LGBT சமூகத்திற்கு  எதிரான எந்த நடவடிக்கையும் மனித உரிமை மீறல். 365 - A என்பதே ஒரு கருத்தியல் வன்முறை. பிற்போக்கு சிந்தனைகளின் எச்சம்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now