Jump to content

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்! (01)… முருகபூபதி.

June 17, 2018
  கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்! (01)… முருகபூபதி.

ரயில் பயணங்களில் படைப்பு இலக்கியம் எழுதிய

“அமிர்தகழியான்” செ. குணரத்தினம்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை இயற்றியவர்

முருகபூபதி.

எழுத்தாளர்கள் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் தேடுபவர்கள். விமானம், ரயில், பஸ் பயணங்களில் வாசிக்க முடியும். எழுதவும் முடியுமா? தற்காலத்தில் கணினி யுகத்தில் பயணித்துக்கொண்டே தம்வசமிருக்கும் மடிக்கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் எழுதமுடியும்.

இத்தகைய வசதிகள் இல்லாத அக்காலத்தில் நம்மத்தியில் ஒரு எழுத்தாளர் மட்டக்களப்பு – கொழும்பு இரயில் மார்க்கத்தில் பயணிக்கும் வேளைகளிலும் ரயிலிலிருந்தவாறே படைப்பிலக்கியம் படைத்திருக்கிறார் எனச்சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

அவர்தான் அமிர்தகழியான் என்ற புனைபெயருடன் வாழும் மட்டக்களப்பு எழுத்தாளர் செ. குணரத்தினம். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்காக கிழக்கிலங்கையிலிருந்து செழுமை சேர்த்தவர்தான் இந்த அமிர்தகழியான்.

thumbnail_%E0%AE%9A%E0%AF%86.%E0%AE%95%E

தமது கலை, இலக்கிய மற்றும் சமூகப்பணிகளின் ஊடாக தாம் பிறந்த ஊருக்கு பெருமைசேர்த்தவர்கள் பற்றி அறிந்திருக்கின்றோம். குணரத்தினம் பிறந்திருக்கும் அமிர்தகழி, மட்டக்களப்பில் மண்முனை வடக்கு பிரதேசத்திற்குள் வரும் இயற்கை வளம்பொருந்திய கிராமம்.

மட்டக்களப்பிற்கு செல்லும் தருணங்களில் அமிர்தகழியில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்தையும் தரிசிப்பது எனது வழக்கம். அதன் சுற்றாடல் ரம்மியமானது. தென்னை, ஆலம், அரசு, வேம்பு முதலான மரங்களும் தாமரை மலரும் குளமும் மனதைக்கவரும்.

இந்த ஆலயம் பற்றி பல கர்ணபரம்பரைக்கதைகள் இருக்கின்றன. அந்தக்கதைகளையும் கவிதையாக்கியும் மெல்லிசைப்பாடலாக்கியும்

காவடிச்சிந்துகளாக்கியுமிருப்பவர்தான் அமிர்தகழியான் செ. குணரத்தினம்.

அயராமல் எழுதிக்குவித்திருக்கும் இந்தப் படைப்பாளி இலக்கிய உலகிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் முந்நூறுக்கும் மேற்பட்ட மெல்லிசைப்பாடல்களையும், இருநூறுக்கும் மேற்பட்ட நகைச்சுவை நடைச்சித்திரங்களையும், பல்வகையான இலக்கிய கட்டுரைகள், விமர்சனங்களையும் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களையும் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருப்பவர்.

1942 ஆம் ஆண்டில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் வரலாற்றுச்சிறப்பும் ஐதீக மகிமையும் கொண்டிருக்கும் அமிர்தகழியில் பிறந்திருக்கும் குணரத்தினம், தனது பவளவிழாவையும் கடந்த நிலையில் இன்றும் எழுதுகிறார். இலக்கியம் பேசுகிறார்.

தான் பிறந்த ஊரின் பெருமையையும் கவிதைகளில் பாடியிருப்பவர். ஒரு காலத்தில் வனவிலங்குகளுடன் வாழ்ந்த வேடர்களின் குலதெய்வமாகவே அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் திருத்தலம் துலங்கியிருக்கும் செய்தியை அவற்றில் பதிவுசெய்தவர்.

மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கத்தை ரீ. பாக்கியநாயகம், ஜெயசிங்கம், அன்புமணி நாகலிங்கம் ஆகியோர் 1961 ஆம் ஆண்டளவில் தொடங்கியவேளையில் இந்த இலக்கிய அமைப்பிலும் இணைந்துகொண்டு இயங்கியிருக்கும் செ. குணரத்தினம், ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெறுபவர்.

இலங்கை வானொலி கலையகம் முன்னர் பல ஈழத்துப்பாடல்களை தொகுத்து மெல்லிசைப்பாடல் வரிசையில் ஒலிபரப்பியது.

குணரத்தினத்தின் ” ஓயாமல் நான் பாடும் ஓராயிரம் பாடல்” என்ற பாடலும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஆர்.முத்துசாமியின் இசையில் ரி. கிருஷ்ணன் என்ற பாடகர் அதனைப்பாடியுள்ளார்.

அமிர்தகழி ஆரம்பப்பாடசாலையிலும் அரசடி மகா வித்தியாலயத்திலும் கற்றிருக்கும் குணரத்தினம், கிழக்கிலங்கை காகித ஆலை கூட்டுத்தாபனத்தில்

எழுதுவினைஞராக பணியாற்றியவர். அங்கு காகிதமலர் என்ற இதழ் வெளியானபோது அதன் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றவர்.

தனது படைப்பிலக்கியங்களுக்காக பரிசுகள், விருதுகள் பல பெற்றவர். இலக்கியப்போட்டிகளில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தமையால், தேசிய , சர்வதேசிய மட்டத்திலும் கவனத்திற்குள்ளானவர்.

தேசிய கலை இலக்கியப்பேரவை தமிழ்நாடு சுபமங்களா இதழ் என்பன இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது ” துன்ப அலைகள்” முதல் பரிசுபெற்றது.

வீரகேசரி, கொழும்பு பல்கலைக்கழகம், பிரதேச அபிவிருத்தி அமைச்சு, நோர்வே தமிழ்ச்சங்கம், அவுஸ்திரேலியா ஈழத்தமிழ்ச்சங்கம் என்பன நடத்திய போட்டிகளிலும் பரிசுபெற்றவர். ஆளுனர் விருதும் பெற்றிருக்கும் குணரத்தினம், கவிமணி, இலக்கியமணி, தமிழ்மணி முதலான “மணி”ப்பட்டங்களையும் வரவாக்கியிருப்பவர்.

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மண்வாசனை, பிரதேசமொழி வழக்கு என்பன முக்கிய அம்சங்கள். கிழக்கிலங்கையின் அமிர்தகழி பிரதேசத்தில் கடற்றொழிலை நம்பி வாழும் மாந்தர்களின் ஆத்மாவை பிரதிபலிக்கும் கதைகளை எழுதியதன் மூலம் அவர்களின் பேச்சுவழக்கை ஈழத்து இலக்கியத்திற்கு வரவாக்கியவர்தான் குணரத்தினம்.

பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாவின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கிழக்கு மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ” நதியைப்பாடும் நந்தவனங்கள்” என்ற 50 கிழக்கிலங்கை கவிஞர்களின் கவிதைத்தொகுதியிலும் குணரத்தினத்தின் கவிதை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் இலக்கிய வட்டம் வெளியிட்ட இரசிகமணி கனகசெந்திநாதன் கதா விருதுபெற்ற கதைகளின் தொகுப்பிலும் குணரத்தினத்தின் பரிசுபெற்ற ‘யாதும் ஊரே’ என்ற சிறுகதை இடம்பெற்றுள்ளது.

thumbnail_%E0%AE%9A%E0%AF%86.%E0%AE%95%E

மட்டக்களப்பு பிரதேச திருத்தலங்கள் குறித்து இவர் எழுதியிருக்கும் காவடிச்சிந்து பாடல்களும் இலங்கை வானொலியில் அருமையான இசையில் ஒலிபரப்பாகியுள்ளன.

இவ்வாறு பல்துறை ஆற்றல் மிக்கவராக விளங்கியிருக்கும் செ. குணரத்தினம், விரைந்து எழுதும் இயல்புகொண்டவர். இலங்கையில் வீரகேசரியில் நான் பணியாற்றிய காலப்பகுதியில் கொழும்பு பக்கம் வரும் இவர் எங்கள் அலுவலகத்திற்கும் தவறாமல் வருவார். அவ்வாறு வரும்போது அவர்வசம் ஒரு கவிதையோ, கட்டுரையோ, சிறுகதையோ இருக்கும். வாரவெளியீட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் (அமரர்) பொன். ராஜகோபாலிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டு நேரம் இருப்பின் என்னுடனும் உரையாடிவிட்டுத்திரும்புவார்.

அழகான கையெழுத்துக்கு சொந்தக்காரர். இவரது எழுத்துக்களை வீரகேசரிக்காக ஒப்புநோக்கியுமிருக்கின்றேன்.

மல்லிகை இதழும் இவரைப்பாராட்டி அட்டைப்பட அதிதியாக கெளரவித்துள்ளது.

மட்டக்களப்பிலிருந்து முன்னர் வெளியான தினக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்தவர் குணரத்தினம்.

இவரது வாழ்வையும் பணிகளையும் அவதானிக்கும்போது, அயராமல் இயங்கியிருக்கும் ஆளுமையாகவே தென்படுகிறார்.

(தொடரும்)

 

http://akkinikkunchu.com/?p=58731

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்! (02) … முருகபூபதி

அகரன்June 19, 2018
கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்! (02) … முருகபூபதி

அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியப் பேராசிரியர் செல்லையா யோகராசா

முருகபூபதி.

thumbnail_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0

வாகனவிபத்தொன்றில் அவரது அன்புத்துணைவியும் அருமைக்குழந்தையும் காயமடைகின்றனர். துணைவி கொழும்பு பெரியாஸ்பத்திரியிலும் குழந்தை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்புகின்றனர். எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக மேற்கிலும் கிழக்கிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

குடும்பத்தலைவனோ, ஊண் உறக்கமின்றி பஸ்ஸிலும் ரயிலிலும் பயணித்து இருவரையும் பராமரிக்கிறார். தனது பல்கலைக்கழக விரிவுரைப்பணிகளையும் கவனிக்கிறார். எழுதுகிறார். வாசிக்கிறார். விரிவுரைக்குத்தேவையான குறிப்புகளை பதிவுசெய்கிறார்.

அவருக்கு அவரது குடும்பம் மாத்திரமல்ல, அவரது மாணவர்களும் முக்கியமானவர்கள். இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் நிதானமாகப்பேசுகிறார். பதட்டமின்றி இயங்குகிறார்.

அந்த நிதானம் இயல்பிலேயே அவருக்குரிய குணாம்சம்! அதிர்ந்து பேசத்தெரியாத பண்புகளே அவரது பலம். எளிமையாக பழகும் நெகிழ்ச்சியே அவரது வலிமை! அவர்தான் பேராசிரியர் செ. யோகராசா.

ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமன்றி புகலிட இலக்கிய உலகிலும் மிகுந்த கவனிப்புக்குள்ளான திறனாய்வாளர். அவரால் எழுதாமலும் வாசிக்காமலும் இருக்கவே முடியாது. அவருக்காக அல்ல, மற்றவர்களுக்காக எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருப்பவர். மாணவர்களுக்காகவும் இலக்கிய உலகிற்காகவும் தன்னை அவ்விதம் வடிவமைத்துக்கொண்டவர்.

கருணை யோகன் என்ற பெயரிலேயே இவர் எனக்கு 1972 ஆம் ஆண்டளவில் அறிமுகமானார். அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், இவரது எழுத்துக்களை மல்லிகையில் படித்துவிட்டு கொழும்பு சென்று அறிமுகமாகி நண்பனானேன்.

அக்காலப்பகுதியில் இவர் கொழும்பு -07 இல் நகரமண்டபத்திற்கு அருகிலிருந்த தபால் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அன்றுமுதல் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான இலக்கிய நண்பராக விளங்குகிறார். இலங்கையில் வடமராட்சி பிரதேசம் பல இலக்கிய ஆளுமைகளையும் கல்விமான்களையும் பெற்றெடுத்த மண். 1949 ஆம் ஆண்டு, கரணவாய் கிராமத்தில் செல்லையா – இலட்சுமி தம்பதியரின் செல்வப்புதல்வனாக பிறந்திருக்கும் இவர், தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்தவர்.

பாடசாலைப்பருவத்திலேயே கவிதைகள் எழுதத்தொடங்கியிருக்கும் கருணையோகன், தமிழில் கலைமாணி பட்டத்தினையும் அதனையடுத்து இளந்தத்துவமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டு தபால் நிலையத்தில் தனது தொழில் வாழ்வைத்தொடங்கினார்.

இவரைப்போன்று எனக்குத்தெரிந்த சில இலக்கியவாதிகள் அக்காலப்பகுதியில் தபால் நிலையங்களில் பணியாற்றிவந்தனர். (அமரர்) நாகேசு தருமலிங்கம், அ.யேசுராசா, ரத்னசபாபதி அய்யர் முதலானோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். அவர்கள் இறுதிவரையில் தபால் நிலையங்களில்தான் பணியாற்றிவந்தனர்.

ஆனால், கருணை யோகன் மாத்திரம் தனது திசையை மாற்றிக்கொண்டார். கொழும்பிலும் அதன்பின்னர் மாஹோவிலும் தபால் நிலையங்களில் பணியாற்றிவிட்டு, பட்டதாரி ஆசிரியராக மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் புதிய பணியேற்றார். எந்தத்தொழிலில் இருந்தாலும் தேடலுக்கும் ஆய்வுக்கும் என்றே காலத்தை தீவிர இலக்கியம் நோக்கித்திருப்பியிருந்ததுடன், கல்வி

தொடர்பாகவும் மேலதிக தகைமைகளை வளர்த்துக்கொள்வதில் பேரார்வம் காண்பித்தார். மலையகத்திலேயே இவருக்கு வாழ்க்கைத்துணை கிடைத்தது.thumbnail_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0

தலவாக்கலையைச்சேர்ந்த விஜயதிலகிக்கும் இவருக்கும் ஏகபுதல்வி சுவஸ்திகா. தாயும் மகளும் ஒரு கோரவிபத்தில் சிக்குண்ட காலப்பகுதியில் நான் இலங்கையில் இருக்கவில்லை. அங்கிருக்கும் காலப்பகுதியில் எங்காவது ஒரு இலக்கியக்கூட்டத்தில் இவரைப்பார்ப்பேன். அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் நான் வந்துவிட்ட பின்னரும், இவருடன் கடிதத்தொடர்புகளை பேணி வந்திருக்கின்றேன். கருணை யோகன் எனக்கு எழுதிய கடிதம் ஒன்று எனது கடிதங்கள் நூலிலும் இடம்பெற்றுள்ளது.

26-12-1994 ஆம் திகதி இவர் எனக்கு எழுதிய கடிதம் இன்றும் எனதுவசம் பத்திரமாக இருக்கிறது. ” வேலைப்பளு, இலக்கியப்பளு, குடும்பப்பளு என இங்கு எமக்கே நேரமில்லாதபோது ‘ புலம்பெயர்ந்து’ வாழ்வோருக்கு அந்த கம்பியூட்டர் உலக வாழ்வில் எங்கே நேரம்வரும்..? என்ற கேள்வியுடன் இலங்கை இலக்கியப்புதினங்களையும் எழுதியிருந்தார். முக்கியமாக மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர் பித்தன் கே. ஷா அவர்களின் மரணச்செய்தியையும், அவரது நூலொன்றை இரண்டு தமிழ்ப்பேசும் அரசியல்வாதிகள் ( அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்) வெளியிட்டுத்தருவதாக பொய்வாக்குறுதி வழங்கி ஏமாற்றிய தகவலையும், இறுதியில், மல்லிகைப் பந்தல் வெளியீடாகவே அந்தநூல் வெளியான செய்தியையும், அதனைக்கூடப்பார்க்காமல் அந்த எழுத்தாளர் மறைந்துவிட்ட துயரத்தையும் பகிர்ந்திருந்தார்.

மட்டக்களப்பு வாசகர்வட்டம், அன்னாருக்காக நினைவஞ்சலிக்கூட்டம் நடத்திய செய்தியும் அந்தக்கடிதத்தில் இடம்பெற்றிருந்தது. எனக்கு அவர் எழுதும் கடிதங்களில் மட்டக்களப்பு புதினங்கள் இருக்கும்.

வடமராட்சியில் பிறந்து வளர்ந்து, கிழக்கிலங்கையில் காலூன்றியிருக்கும் இந்த இனிய இலக்கிய நண்பர், ஈழத்தின் அனைத்துப்பிரதேச தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களிடம் மட்டுமன்றி சிங்கள எழுத்தாளர்களிடமும் நன்மதிப்பு பெற்றவர். ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்தபின்னர் தோன்றிய புலம்பெயர் இலக்கியம் – புகலிட இலக்கியம் தொடர்பாகவும் திறனாய்வு செய்திருப்பவர்.

நான் இலங்கையிலில்லாத காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரில் நடந்த இலக்கியக்கருத்தரங்கில் தனது உரையின் தொடக்கத்தில் என்னை நினைவுபடுத்தியே பேசியிருக்கிறார். இவ்வாறு என்னுடன் அந்நியோன்னியமாக உறவாடியிருக்கும் இவருடைய குடும்பத்தில் 2005 ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்த கோரமான விபத்துச் சம்பவம் பற்றி அறிந்ததும் ஆறுதல் தெரிவித்து கடிதங்கள் எழுதியிருக்கின்றேன்.

இலங்கை சென்றவேளையில் கொழும்பு மருத்துவமனையில் இவரது அன்புத்துணைவியாரையும் பார்த்தேன். மினுவாங்கொடைக்கு அருகாமையில் உடுகம்பொலை கிராமத்தில் கொரஸ என்னும் இடத்தில் ஶ்ரீசுதர்மானந்த விஹாரையின் பிரதம குரு தமிழ் அபிமானி வண. பண்டிதர் ரத்னவன்ஸ தேரோ அவர்கள் நோயுற்றிருப்பதாக அறிந்து அவரையும் பார்க்கச்சென்றபோது யோகராசாவும் உடன்வந்தார்.

மட்டக்களப்பிலிருந்து தன்னைப்பார்க்க ஒரு விரிவுரையாளர் வந்திருப்பதை அறிந்து அந்த பௌத்த துறவி நெகிழ்ந்துவிட்டார். அவரால் யோகராசாவையோ என்னையோ பார்க்கமுடியவில்லை. அவரது கண்பார்வை முற்றாக செயல் இழந்திருந்தது.

அந்த நிலையிலும் அந்தத்துறவி எம்மை கிராமவாசிகள் மூலம் உபசரித்தார். இவ்வாறு எனது பயணங்களிலும் இணைந்திருந்தவர்தான் நண்பர் யோகராசா.

நாம் அவுஸ்திரேலியாவில் 1988 இல் ஆரம்பித்து இன்றுவரையில் தொடர்ந்து இயங்கவைத்துக்கொண்டிருக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தொண்டு நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய மாணவர் கண்காணிப்பாளராகவும் யோகராசா சமூகத்தொண்டுணர்வோடு இணைந்திருந்தார்.

கிழக்கிலங்கையை 2004 இறுதியில் சுநாமி கடற்கோள் அநர்த்தம் கோரமாக பாதித்திருந்த வேளையில் மட்டக்களப்பு, செங்கலடி, கல்முனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு முதலான பிரதேசங்களுக்கெல்லாம் சென்றிருந்தேன். கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரவீந்திரநாத் துணைவேந்தராக அச்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அவர் முன்னிலையில் சுநாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 25 மாணவ மாணவியரை எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் பொறுப்பெற்று தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கியது. இச்சந்தர்ப்பங்களிலும் நண்பர் யோகராசா எமக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார்.

இறுதியாக 2017 ஆம் ஆண்டும் கிழக்கிலங்கை பயணித்தவேளையிலும் யோகராசா எம்முடன் மட்டக்களப்பு, கன்னன் குடா, கல்முனை, பெரியநீலாவணை முதலான பிரதேசங்களுக்கும் வந்தார். எம்மை தனது காரில் இங்கெல்லாம் அழைத்துச்சென்றவர்தான் எனது இலக்கிய நண்பர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன்.

2005 – 2009 காலப்பகுதியில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெற்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் பேராசிரியர் யோகராசாவை பெரிதும் மதித்துப்போற்றியதையும் அவதானித்திருக்கின்றேன்.

நாம் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நான்கு நாட்கள் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டு கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்திருக்கும் பேராசிரியர் யோகராசா, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலரையும் தன்னுடன் அழைத்துவந்திருந்தார்.

மாணவர்களும் இலக்கியத்தின் பால் திரும்பவேண்டும் என்பதிலும் அக்கறைகொண்டிருப்பவர். இலக்கியமும் கல்வியும்தான் இவரது கண்கள். அதனால் இலக்கியவாதிகளும் மாணவரும் பெற்ற நன்மைகள் ஏராளம்.

உடுப்பிட்டி கல்வி வலயத்தின் சிறந்த ஆசிரியருக்கான விருது, கலாநிதி பட்ட ஆய்விற்காக பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஞாபகார்த்த விருது, இலங்கை இலக்கியப்பேரவையின் விருது, தேசிய சாகித்திய விருது, வடமாகாண சபை விருது, கலைவாருதி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கும் எமது இனிய நண்பர் யோகராசா, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் முதலான நாடுகளிலும் பல இலக்கியக்கருத்தரங்குகளில் பங்குபற்றியிருப்பவர்.

எழுத்துலகில் தொடக்கத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் படைத்திருக்கும் இவர், பின்னர் விமர்சகராகவும் திறனாய்வாளராகவுமே பரவலாக அறியப்பட்டவர். இவரது அகதிகள் என்னும் சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இவருடைய வாழ்வையும் பணிகளையும் பாராட்டி மட்டக்களப்பில் பெருவிழா எடுத்தனர். அத்தருணம் வெளியிடப்பட்ட, கருணையோகம் சிறப்புமலரில் பல இலக்கிய ஆளுமைகளும் பேராசிரியர்களும் இவரது சிறப்பியல்புகளையும், இலக்கிய மற்றும் கல்விக்கான பங்களிப்புகள் குறித்தும் விரிவாக பதிவுசெய்துள்ளனர்.

அந்த மலர் ஆவணமாகவே திகழுகின்றது. பேராசிரியர் யோகராசா இன்றும் ஆசிரிய கலாசாலைகளில் விரிவுரையாற்றிக்கொண்டும் இலக்கியத்திறனாய்வு செய்துகொண்டுமிருக்கிறார்.

இவருடை நீண்ட பயணத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இணைந்திருப்பதில் மன நிறைவடைகின்றேன்.

( தொடரும்)

 

http://akkinikkunchu.com/?p=58843

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் — (03) … முருகபூபதி.

June 23, 2018
கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் — (03) … முருகபூபதி.

பத்திரிகை உலகிலிருந்து அரசியலுக்கு வந்து ஆன்மீகவாதியான மட்டுநகர் மைந்தன்.

thumbnail_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0

“அத்திக்காய், காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ, நீ என்னைப்போல் பெண்ணல்லவோ” என்ற பாடலை எமது மூத்த தலைமுறையினர் மறந்திருக்கமாட்டார்கள்.

1962 ஆம் ஆண்டில் பி.ஆர். பந்துலு இயக்கிய பலே பாண்டியா படத்திற்காக கவியரசு கண்ணதாசன் இயற்றி, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்த பாடல். “இந்தப்பாடலில் நிறைய காய்கள் வருவதனால், சென்னை கொத்தவால் சாவடியிலிருக்கும் மரக்கறி சந்தையையே கவியரசர் கொண்டுவந்துவிட்டார். இந்தப்பாடல் மக்கள் மத்தியில் எடுபடாது” என்றார் விஸ்வநாதன்.

எனினும் அந்தப்பாடலைத்தான் அந்தப்படத்திற்குத்தருவேன் என்று விடாப்பிடியாக நின்றவர் கண்ணதாசன். பாடலும் சிறப்பாக அமைந்தது. இதில் சிவாஜிக்கு மூன்று வேடங்கள். நடிகவேள் எம். ஆர். ராதாவுக்கு இரட்டை வேடங்கள். படமும் வசூலில் வெற்றிபெற்றது.

தத்துவப்பாடல்களும் இயற்றியிருக்கும் கண்ணதாசன், பட்டினத்தார், காளமேகப்புலவர், பாரதியார் மற்றும் சித்தர்களின் பாடல்களையும் தனது திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தியிருப்பவர். மேற்குறித்த பாடலில் வரும் காய்களில் ஒரு சிலவற்றை குறிப்பிட்டு முன்னரே கவிதை எழுதியவர்தான் காளமேகப்புலவர்.Kannadasan-600_13297.jpg?resize=300%2C15

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஒருவர் கண்ணதாசனின் நெருங்கிய நண்பர். அத்துடன், மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மற்றும் தி.மு.க.தலைவர்களுடனும் நட்புறவிலிருந்தவர். குறிப்பிட்ட அத்திக்காய் பாடலின் ரிஷிமூலமும் தெரிந்துவைத்திருந்தவர்.

அவர்தான் மட்டக்களப்பின் முடிசூடா மன்னர் என்ற பெயரைப்பெற்று நீண்ட காலம் அந்தப்பிரதேசத்தின் நாடாளுமன்ற பிரதிநிதியாகவும் பின்னர் பிரதேச அபிவிருத்தி தமிழ் மொழி அமுலாக்கல் இந்து கலாசார அமைச்சராகவும் அதன்பின்னர் மலேசியாவில் இலங்கைக்கான தூதுவராகவும் விளங்கிய செல்லையா இராஜதுரை.

முதல் முதலில் 1966 ஆம் ஆண்டில் இவரைக்காணும்போது எனக்கு 15 வயது. எங்கள் நீர்கொழும்பூரில் எனது மாமா உறவுமுறையான அப்பையா மயில்வாகனன் அவர்கள் சாந்தி அச்சகம் நடத்தி அங்கிருந்து அண்ணி என்ற மாத இதழையும் வெளியிட்டார். அதன் முதல் இதழ் வெளியீட்டு விழா எமது இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடந்தவேளையில் அதற்கு தலைமைதாங்குவதற்கு இராஜதுரை வந்திருந்தார். அச்சமயமும் அவர் மட்டக்களப்பின் எம்.பி. நிகழ்ச்சி முடிந்ததும், வியாங்கொடையில் தரித்துப்புறப்படும் மட்டக்களப்பு – திருகோணமலை இரவு தபால் ரயிலில் ஏற்றி வழியனுப்பிவைத்தோம்.

அன்று முதல் 1987 வரையில் அவரை அவ்வப்போது சந்தித்திருக்கின்றேன். எங்கள் குடும்ப நிகழ்விலும் அவர் தலைமை தாங்கியிருக்கிறார். கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரவு தபால் ரயிலில் அவர் செல்வதையும், அதற்கு முன்னர் ரயில் நிலைய அதிபரின் அலுவலகத்திலிருந்து அதிபருடன் அவர் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கின்றேன்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள ராஜேஸ்வரிபவனிற்கு விற்பனைக்கு வரும் தமிழக இதழ்கள் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் உட்பட இலங்கை இதழ்களையும் அவர் வாங்கிக்கொண்டுதான் புறப்படுவார். அவரும் சிறந்த பேச்சாளர். அத்துடன் வாசகர். எழுத்தாளர் முதலான முகங்களையும் கொண்டவர்.

மயில்வாகனன் மாமாவின் ஒன்றுவிட்ட சகோதரனுக்கும் எனது அண்ணிக்கும் வவுனியா வாரிக்குட்டியூரில் 1967 இல் திருமணம் நடந்தது. மணமகன் சீர்திருத்த திருமணம் செய்யவிரும்பினார். இந்த அண்ணன் தம்பி மார் திராவிடக்கழகத்தினரின் கொள்கைகளில் ஈர்ப்புக்கொண்டிருந்தனர். அந்தத் திருமணத்திற்கும் இராஜதுரை வந்து திருக்குறளில் இல்லறவியலிருந்து சில குறல்கள் வாசித்து விளக்கமும் தந்து மாலை எடுத்துக்கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். மதியம் விருந்துண்டு புறப்பட்டார்.

மீன்பாடும் தேன் நாடு மட்டக்களப்பில் 1927 ஆம் ஆண்டு பிறந்து, ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையிலும் மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கல்வி கற்று, எழுத்தாளராகவும் ஊடகவியலாளராகவும் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர். தந்தை செல்வா தொடங்கிய தமிழரசுக்கட்சியில் இணைந்து மட்டக்களப்பு மாநகர முதல்வராகவும் தெரிவாகி, 1956 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகள் தோல்வியையே சந்திக்காமல் தொடர்ச்சியாக அந்தப்பிரதேசத்தின் நாடாளுமன்ற பிரதிநிதியாக விளங்கியவர்.

இவரை அரசிலுக்கு அறிமுகப்படுத்திய தந்தை செல்வா, மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம் முதலானோர் இவர் எம்.பி.யாக இருந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் தோல்வி கண்டுள்ளனர்.

ஆனால், இவரையும் தோல்வியடையச்செய்வதற்காகவே இவர் ஆரம்பம் முதல் இணைந்திருந்த தமிழரசுக்கட்சியினரே இவருக்கு எதிராக, இவருக்கே நன்கு தெரிந்த – நெருக்கமாகவிருந்த கவிஞர் காசி ஆனந்தனை நிறுத்தினர்.

“தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்கவேண்டும்” என்று தப்புக்கணக்குப்போட்டார் தளபதி அமிர்தலிங்கம். இறுதியில், 1989 ஜூலை மாதம் 13 ஆம் திகதியில், அவர் ஏற்கனவே உணர்ச்சியூட்டி வளர்த்து ஆளாக்கிய தனயர்களின் கைகளினாலேயே சுடுபட்டு இறந்தார்.

இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் ஒரு தமிழரும் ஒரு முஸ்லிம் உறுப்பினருமானே தெரிவாகிவந்தனர். அவ்வாறிருக்கையில் தேசிய சிறுபான்மை இனங்களில் ஒன்றான முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையும் பொருட்படுத்தாமல், மட்டக்களப்பு தொகுதியில் இரண்டு தமிழர்களை அன்றைய தமிழரசுக்கட்சி தீர்க்கதரிசனம் அற்று முன்மொழிந்தது.

எனினும் நீண்ட காலமாக அங்கு தெரிவாகியிருந்த இராஜதுரையைத்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையும் ஆதரித்து மேடைகளில் பிரசாரம் செய்தார்.

இராஜதுரை அரசியல்வாதியாக இருந்தபோதிலும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களுடன் நெருக்கமாக இருந்தவர். சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலிருந்தவர். சுதந்திரன் பத்திரிகையில், எஸ். டி. சிவநாயகம், பிரேம்ஜி ஞானசுந்தரன், அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன் ஆகியோரும் அதன் இறுதிக்காலத்தில் கோவை மகேசனும் இடம்பெற்றவர்கள்.

கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையிலிருந்துதான் சுதந்திரன் பத்திரிகை வெளியானது. மட்டக்களப்பிலிருந்து அந்தப்பத்திரிகையில் பணியாற்ற வந்திருக்கும் இராஜதுரை தமிழக திராவிடக்கழக பாரம்பரியத்தில் வந்த தலைவர்களுடனும் நெருக்கமான நட்புறவுகொண்டிருந்தவர்.

கவிஞர் கண்ணதாசனின் குடும்ப நண்பருமாவார். இராஜதுரையின் புதல்வி பூங்கோதை தமிழ்நாட்டில் படிக்கின்ற காலத்தில் அவருக்கு பாதுகாவலராக (Guardian) இருந்தவர் கண்ணதாசன்.

மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர். எப்பொழுதும் வெள்ளை நேஷனல் அணிபவர். அவரது இடதுகையை அவதானித்தால் அவர் கைக்கடிகாரம் அணிந்திருக்கும் தோரணை ஆச்சரியம் தரும். அவர் அந்த நேஷனலின் மணிக்கட்டின் பகுதியில் அந்த உடையின் மீதே கடிகாரம் அணிந்திருப்பார். அந்தப்பாணியைப் பின்பற்றியே இராஜதுரையும் தனது கைக்கடிகாரத்தை அணியும் பழக்கமுள்ளவர்.

இலக்கியவாதியாக, சிறந்த பேச்சாளராக, பத்திரிகையாளராக, அரசியல் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, இறுதியில் வெளிநாட்டின் நல்லெண்ணத்தூதுவராக தனது வாழ்வையும் பணிகளையும் தொடர்ந்திருக்கும் அவர் இறுதியில் ஆன்மீகத்தின் பக்கம் தீவிரமாகத் திரும்பி தற்போது அரசியல் பேசுவதையே முற்றாக தவிர்த்திருப்பவர்.

இலங்கையில் ஒரு இலக்கிய மேடையில் கவிஞர் கண்ணதாசனின் அத்திக்காய் பாடலின் உண்மையான அர்த்தத்தை நயமுடன் சொல்லி சபையோரை வியக்கவைத்தவர்.

அந்தப்பாடலில்தான் எத்தனை காய்கள்:

அத்திக்காய்-ஆலங்காய்-இத்திக்காய்-கன்னிக்காய்-ஆசைக்காய்-பாவைக்காய்-அங்கேகாய்-அவரைக்காய்-கோவைக்காய்-மாதுளங்காய்-என்னுளங்காய்-இரவுக்காய்-உறவுக்காய்-ஏழைக்காய்-நீயும்காய்-நிதமுங்காய்-இவளைக்காய்- உருவங்காய்-பருவங்காய்-ஏலக்காய்-வாழைக்காய்-ஜாதிக்காய்-கனியக்காய்-விளங்காய்-தூதுவழங்காய்-மிளகாய்-சுரைக்காய்-வெள்ளரிக்காய்-சிரிக்காய்-கொற்றவரைக்காய்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடனும் இராஜதுரைக்கு நட்பிருந்தது. இராஜதுரையும் முன்னர் ஒரு இலக்கிய இதழ் நடத்தியிருப்பவர். அதற்காக ஒரு சிறிய அச்சுக்கூடமும் வைத்திருந்தார். அவர் வெளியிட்ட இதழ் நின்றதும், அந்த அச்சுக்கூட சாதனங்கள், வெள்ளீய தமிழ் அச்சு எழுத்துக்களையும் மல்லிகை ஜீவாவுக்கு வழங்கும் எண்ணத்திலும் இராஜதுரை இருந்தார்.

ஒருநாள் மாலை கொழும்பு ஜிந்துப்பிட்டியிலிருந்த தினபதி – சிந்தாமணி ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் அவர்களின் இல்லத்திலும் இராஜதுரையை நானும் மல்லிகை ஜீவாவும் சந்தித்துபேசியிருக்கின்றோம். அக்காலப்பகுதியில்தான் எம். ஜீ. ஆரை. தி.மு.க. வெளியேற்றியிருந்தது. அக்கட்சி பிளவு பட்டதனால் இராஜதுரை பெரிதும் வருந்தி எம்முடன் அதுபற்றி உரையாடினார்.

அதன்பின்னர், 1977 இற்குப்பிறகு இவரும் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறினார்.

தமிழரசுக்கட்சியிலும் தமிழர் விடுதலைக்கூட்டணியிலும் நீண்டகாலம் அங்கம் வகித்த அரசியல்வாதியாக இவர் இருந்தமையாலோ என்னவோ இவரது அரசியலுடன் எனக்கு இணக்கம் இருக்கவில்லை. எனினும் இவரும் ஒரு கலை, இலக்கியவாதி, இதழ் நடத்தியிருப்பவர், அத்துடன் சில சிறுகதைகள், இலக்கியப்புதினங்களும் எழுதியிருப்பதனால் அந்த அடிப்படையில் விருப்பத்திற்குரியவரானார்.

லங்கா முரசு என்ற இதழை நடத்தியிருக்கிறார். அத்துடன் தமிழகம், முழக்கம், சாந்தி என மேலும் சில இதழ்களை வெளியிட்டவர். இலங்கை, தமிழக பத்திரிகைளில் எழுதியவர். அரசியலில் தீவிரமாக இறங்கியதும் அவரது எழுத்துப்பணி குறைந்தது.

அதனால், இலக்கிய விமர்சகர் இரசிகமணி கனகசெந்திநாதன் இவரைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: ” இராசதுரை அரசியலுக்கு ஆதாயமானார், இலக்கியத்திற்கு நட்டமானார்.”

அவர் அமைச்சரானதன் பின்னர் எமது எழுத்தாளர்கள் தமது நூல் வெளியீடுகளுக்கு அவரையே அழைக்கும் மரபும் கொழும்பில் உருவானது.

ஒரு கவிஞரின் கவிதை நூல் வெளியீட்டு அரங்கு கொழும்பு கோட்டை தப்ரபேன் ஹோட்டலில் நடந்தபோது அமைச்சரின் தலைமையில் நானும் உரையாற்றநேர்ந்தது.

அந்த நிகழ்வில் பேசிய கவிஞர் கலைவாதி கலீல், “அமைச்சருக்கு இரண்டு மனைவியர்” என்று சொன்னதும் சபையிலிருந்தவர்களின் முகம் துணுக்குற்றது. இறுக்கமானது. அடுத்த நொடிப்பொழுதில், ” ஒன்று தமிழ்” என்றார் அந்தக்கவிஞர்! கரகோஷம் எழுந்தது. அமைச்சரின் முகத்திலும் பிரகாசம் தோன்றியது.

அவர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் போக்குப்பிடிக்காமல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்தனாவின் பதவிக்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்ததும், உடனடியாகவே அவருக்காகவே புதிதாக உருவாக்கப்பட்டதுதான் இந்து கலாசார அமைச்சு. அதனுடன் தமிழ் மொழி அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சும் அவரிடம் தரப்பட்டது.

தொடக்கத்தில் அவருக்கென தனியான அமைச்சு அலுவலகமும் அமைந்திருக்கவில்லை. காலிமுகத்தில் அன்றைய நாடாளுமன்றத்திற்கு சமீபமாக இருக்கும் செலிங்கோ ஹவுஸ் கட்டிடத்தின் 13 ஆவது மாடியில்தான் அவரது அமைச்சு அலுவலகம் முதலில் தற்காலிகமாக இயங்கியது.

அங்கிருந்த வசதிக்குறைபாடுகள் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒரு அறையிலிருந்தும் தன்னை சந்திக்கவருபவர்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருவார்.

எங்கள் ஊரில் இந்துவாலிபர் சங்கத்தின் பெயர் இந்து இளைஞர் மன்றமாகியதன் பின்னர், 1978 இல் இம்மன்றத்தின் பொதுச்செயலாளராக இருந்தேன். மன்றத்தை நவீன முறையில் திருத்தியமைப்பதற்காக ஒரு ஆலோசனைக்கூட்டமும் உறுப்பினர் ஒன்றுகூடல் இராப்போசன விருந்தும் நடத்துவதற்கு தீர்மானித்தோம். அதற்கு பிரதம விருந்தினர்களாக அமைச்சர்கள் தொண்டமானையும் இராஜதுரையையும் அழைப்பதற்காக அவர்களின் அமைச்சு அலுவலகங்களுக்கு மன்றத்தின் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு சென்ற காலத்தில் நான் வீரகேசரியில் பணியாற்றினேன். அதனால் அவர்களிடம் எளிதாக Appointment பெறக்கூடியதாகவுமிருந்தது.

இருவரும் எளிமையாகப் பழகியவர்கள். எமது ஒன்றுகூடல் விழாவுக்கு வருவதற்கு முன்னர், ” தான் தற்போது மச்சம் மாமிசம் சாப்பிடுவதில்லை. எனவே இரவு விருந்தில் தனக்கு மரக்கறி உணவுதான் வேண்டும்” என்ற ஒரு நிபந்தனையை மாத்திரமே அமைச்சர் இராஜதுரை அன்று விதித்தார்.

” அய்யா, எங்கள் மன்றம் தமிழர் இந்துக்களுக்கானது. எனவே அங்கு மச்சம் மாமிசம் இருக்காது ” என்றேன். இரண்டு அமைச்சர்களுக்கும் எங்கள் ஊரில் கோலாகலமான வரவேற்பு வழங்கினோம்.

ஊரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் மன்ற மண்டபத்தை சுற்றி காவலிருந்தனர். உள்ளே மேடையின் படிக்கட்டிலும் அமைச்சர் இராஜதுரையின் மெய்க்காப்பாளர் ஒருவர் அமர்ந்தார்.

அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவரது அமைச்சின் கீழ்தான் சாகித்திய மண்டலம் இயங்கியது. சாகித்திய விழாக்கள், விருதுவழங்கும் நிகழ்ச்சிகள் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளினால் தாமதமானது. இதுபற்றி வீரகேசரியில் இடித்துரைக்கும் சில பத்தி எழுத்துக்களை எழுதியிருக்கின்றேன்.

பின்னர் அவரது அமைச்சு அலுவலகத்திலேயே குறிப்பிட்ட ஆண்டுகளுக்குரிய நூல்களுக்கான விருதும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டேன்.thumbnail_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0

எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிவிழா கொள்ளுப்பிட்டி கூட்டுறவுசங்கங்களின் சம்மேளனத்தின் தலைமைக்காரியாலய மண்டபத்தில் நடந்தபோது அமைச்சரையே பிரதம விருந்தினராக அழைத்திருந்தோம்.

அதற்கு இரண்டு செல்லையாக்கள் வந்தனர் என்பதும் குறிபிடத்தகுந்தது. செல்லையா குமாரசூரியர். செல்லையா இராஜதுரை. ஒருவர் முன்னாள் அமைச்சர். மற்றவர் இந்நாள் அமைச்சர் என்றும் அச்சமயம் எழுதியிருக்கின்றேன்.

அமைச்சர் இராஜதுரை உலக இந்து மாநாடும், சமாதானத்திற்காக அஸ்வமேத யாகமும் நடத்தினார்.

மாநாட்டிற்கு இலங்கை – இந்திய இந்துமதத் தலைவர்கள் பிரமுகர்கள் வந்தனர். அஸ்வமேத யாகத்திற்கு ஒரு வெண்ணிற குதிரை வந்தது! தமிழக ஆஸ்தான நடன நர்த்தகி சுவர்ணமுகியை இந்து மாநாட்டு கலையரங்கிற்கு அழைத்தார். அவரது அனைத்துப்பணிகளையும் கொழும்பிலிருந்தே இயக்கினார்.

பாதுகாப்புக் காரணங்களினால் அவரால் தனது தொகுதிக்கும் செல்லமுடியாத சூழ்நிலை நீடித்தது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கும் ஆயுதப்படையினருக்கும் அடிக்கடி மோதல் நடந்தது. அப்பாவி மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மட்டக்களப்பு நிருபர்கள் நித்தியானந்தனும் கதிர்காமத்தம்பியும் தினமும் செய்திகளை தந்துகொண்டிருந்தனர். இவர்களுடனும் வவுணதீவு – அக்கறைப்பற்று நிருபர்களுடனும் தினமும் தொலைபேசித்தொடர்பிலிருந்தேன்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனிமுத்துவும் தினமும் எமக்கு செய்தி தருவார். ஆனால், அமைச்சர் இராஜதுரைக்கு மட்டக்களப்பு செல்ல முடியாத சூழ்நிலை. ஒருநாள் அமைச்சருடன் தொடர்புகொண்டு, அந்தோனி முத்துவினதும் நிருபர்களினதும் செய்திகளை சொல்ல நேர்ந்தது. அங்கிருக்கும் நிருபர்கள், அரச அதிகாரிகள் தன்னுடன் தொடர்புகொள்வதை தவிர்க்கிறார்கள் என்றும் மனக்குறைப்பட்டார். அமைச்சு – அதிகாரிகள் – ஆயுதம் ஏந்திய இயக்கங்கள், படைகள், ஊடகங்களுக்கு மத்தியில் தொகுதி நாடாளுமன்ற பிரதிநிதி என்ற அடிப்படையில் தன்னால் தனது மக்களுக்காக செய்யமுடிந்ததைதான் அவர் செய்தார்.

விடாக்கண்டர்களுக்கும் கொடாக்கண்டர்களுக்கும் இடையில் அவரது நிலை தர்மசங்கடமாகியிருந்ததையும் அவதானித்திருக்கின்றேன்.

1984 இல் தமிழகம் எட்டயபுரத்திற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த பாரதியார் மணிமண்டபத்தின் நூலகத்தில் பாரதி தொடர்பாக ஈழத்தவர்கள் எழுதிய நூல்கள் இருக்கவில்லை. சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் எனப்பாடிய அந்த மகாகவியின் கவிதைகளை இலங்கையில் கே.ஜி. அமரதாச, ரத்ன நாணயக்கார ஆகியோர் மொழிபெயர்த்து ” பாரதி பத்ய ” என்ற நூலும் வெளிவந்து, பாரதியின் வாழ்க்கை சரிதம் சிங்களத்தில் சுருக்கமாக வெளியாகியிருக்கும்

செய்தியையும் அமைச்சரிடம் எடுத்துக்கூறி, இதுபற்றி தமிழக முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்குமாறும் சொன்னேன்.

அவர் செய்வதாக உறுதியளித்தார். ஈழத்து தமிழ்எழுத்தாளர்களின் நூல்களை தமிழ்ப்பாடசாலைகளின் நூலகங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதியளித்தார். இராஜதுரை பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சராக இருந்த காலத்திலேயே மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது, கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

கிழக்கு பல்கலைக்கழகம் அவருக்கு கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதுவரையில் ராசாத்தி ( குறும்புதினம்) பெற்றதாயும் பிறந்த பொன்னாடும், அன்பும் அகிம்சையும், மிஸ் கனகம், இலங்கையில் அஸ்வமேதயாகம் முதலான நூல்களையும் எழுதியிருக்கும் இந்த முன்னாள் பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், வெளிநாட்டுத்தூதுவர், சொல்லின் செல்வர் என்ற சிறப்பு பட்டத்திற்குரியவர். இன்று ஆன்மீகவாதியாகியிருக்கிறார்.

வாழ்வனுபவங்களின் சுரங்கமான இன்றைய இந்த ஆன்மீகவாதிக்கு 91 வயது நெருங்குகிறது. அவரைப்பற்றி பலரும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அவர் பற்றிய விதந்துரைப்புகளாகவே அக்கட்டுரைகள் அமைந்துள்ளன. சோதனைகளையும் சாதனைகளையும் கடந்துவந்திருக்கும் அவர் தன்னைப்பற்றிய சுயவிமர்சனங்களுடன் ஒரு சுயசரிதை நூலை எழுதுவராயின் மேலும் பல அரிய சுவாரஸ்யமான தகவல்களையும் நாம் அறிந்துகொள்ளமுடியும்.

இதுவிடயத்தில் அவருக்கு யார் மணி கட்டுவது..?

(தொடரும்)

 

http://akkinikkunchu.com/?p=59117

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்!…. முருகபூபதி.

August 19, 2018
  கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்!…. முருகபூபதி.

 

புறக்கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதிவந்திருக்கும் மண்டூர் அசோக்கா

முருகபூபதி

மண்டு மரங்கள் பார்த்திருக்கிறீர்களா? அத்தகைய மரங்கள் செழித்த பிரதேசத்திற்கு காலப்போக்கில் மண்டூர் என்ற காரணப்பெயர் தோன்றியிருப்பதாக கிழக்கிலங்கை முன்னோர்கள் சொல்கிறார்கள்.

கிழக்கிலங்கையில் மட்டுநகரிலிருந்து தென்திசையில் சுமார் ஐம்பது கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இந்தக்கிராமத்தின் பெயரையும் இணைத்துக்கொண்டு ஈழத்து இலக்கிய உலகில் பிரபல்யம் பெற்றிருப்பவர்தான் அசோகாம்பிகை.

நால்வகைத்திணைகளையும் கொண்ட இந்த அழகிய கிராமத்தில் இளையதம்பி – கனகம்மா தம்பதியரின் புதல்வியாகப்பிறந்திருக்கும் அசோகாம்பிகை தனது ஆரம்பக்கல்வியை மண்டூர் அரசினர் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து, அதன்பின்னர் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியையாக கிழக்கிலங்கையில் பல பாடசாலைகளில் பணியாற்றினார்.

இறுதியாக சுவாமி விபுலானந்தர் தோற்றுவித்த கல்லடி சிவானந்தா கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இவரும் ஈழத்தில் பல எழுத்தாளர்கள் இலக்கியப்பிரவேசம் செய்த 1970 காலப்பகுதியிலேயே இலக்கியப்பிரதிகளை எழுதத்தொடங்கினார்.

அதற்கு தூண்டுகோலாகவிருந்தது இளைமைக்காலத்தில் இவரிடமிருந்து வாசிப்பு ஆர்வம். பொதுவாக தமிழ்ச்சமூகத்தில் மாணவப்பராயத்திலிருக்கும் பிள்ளைகள் கதைப்புத்தகம் படித்தால் கெட்டுப்போவார்கள் என்ற மூடநம்பிக்கை ஆழமாக வேரூண்றியிருந்தது. ஆனால், தமது பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் வளரவேண்டும் என விரும்பும் பெற்றோர்கள், தமது மாணவர்கள் சுயவிருத்தி ஆற்றலுடன்

முன்னேறவேண்டும் என விரும்பும் ஆசிரியர்களைப்பெற்றவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான்.

thumbnail_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0

மண்டூர் அசோக்கா அத்தகைய பாக்கியம் செய்தவர். அவருடைய முதல் கதைத்தொகுதி கொன்றைப்பூக்கள் கொழும்பில் அச்சிடப்பட்டவேளையில் அதன் முதல் பிரதியை எனக்கும் இலக்கிய நண்பர் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுக்கும் காண்பித்தவர் கலை, இலக்கிய ஆர்வலர் வேலணை வீரசிங்கம். இவர் பிரவுண்சன் கோப்பி என்ற வர்த்தக ஸ்தாபனத்தை நடத்திக்கொண்டிருந்த காலம். பல கலை இலக்கிய நிகழ்வுகளுக்கும் இலக்கிய நூல்களின் வெளியீடுகளுக்கும் அனுசரணையாக திகழ்ந்த பிரமுகர்.

இவர்தான் வரணியூரான் எஸ்.எஸ். கணேசபிள்ளையின் புளுகர் பொன்னையா என்ற புகழ்பெற்ற நாடகத்தை இலங்கை எங்கும் அரங்காற்றுகை செய்வதற்கும் ஊக்கியாக இயங்கியவர்.

ஒருநாள் அவரை அவரது கொழும்பு அலுவலகத்தில் நாம் சந்தித்தவேளையில் அவர் மண்டூர் அசோக்காவின் கொன்றைப்பூக்கள் தொகுதியை காண்பித்தார். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவரும் சக எழுத்தாளர்களை தனது உற்சாகமூட்டும் வார்த்தைகளினால் வாழ்த்துபவருமான டொமினிக்ஜீவா அந்த நூலை கையில் எடுத்து, ” பாரும் நண்பரே, கிழக்கிலங்கையில் வாழும் ஒரு பெண் எழுத்தாளரின் நூலை வட இலங்கையைச்சேர்ந்த இலக்கிய ஆர்வலர் கொழும்பில் வெளியிட்டு வைக்கிறார். இலக்கியம் பிரதேசங்களை இவ்வாறும் இணைக்கும் பண்பினைக்கொண்டது” என்று நூலாசிரியருக்கும் வெளியீட்டாளருக்கும் புகழாரம் சூட்டினார். 1976 ஆம் ஆண்டில் இச்சம்பவம் நடந்தது.

எனினும் மண்டூர் அசோக்காவின் கதைகளை பத்திரிகை , இதழ்களில் படித்திருந்தாலும் அவர் எழுதிய மெல்லிசைப்பாடல்களை வானொலியில் கேட்டிருந்தாலும், சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் அதற்கான சந்திப்பு கிட்டவேயில்லை.

காலம் கடந்து 2010 ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்தவேளையில் மட்டக்களப்பில் நடைபெற்ற ஒரு இலக்கியச் சந்திப்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்கள், மண்டூர் அசோக்காவை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நான் பார்த்த கொன்றைப்பூக்கள் நூலை எழுதியிருந்த படைப்பாளியை அன்று முதல் முதலில் சந்தித்தவுடன், ” கொன்றைப்பூக்கள் மண்டூர் அசோக்காதானே!” எனச்சொல்லியவாறு பரவசத்துடன் அவரைப்பார்த்தேன்.

பெண்கள், கலை – இலக்கியத்துறையில் ஈடுபடும்போது பல்வேறு சவால்களையும் சந்திக்கநேர்வது எமது தமிழ்சமூகத்தின் விதியாகியிருக்கிறது.

ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று முன்னோர் சமுதாயம் அவர்களை சமையலறையில் தள்ளிவைத்திருந்தது. ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் சில நாடுகளில் பறிக்கப்பட்டிருந்தது.

காலம் மாறியிருந்தாலும், கலை, இலக்கியம், அரசியல், சமூகப்பணிகளில் பெண்கள் ஈடுபடும்போது ஆணாதிக்க சக்திகள் அவர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்துவருவதையும் அவதானிக்கின்றோம்.

thumbnail_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0

மண்டூர் அசோக்கா எழுதிக்கொண்டிருந்த காலத்தில், அதனால் அவர் புகழ்பெற்றுவிடுவார் என்பதனால் ” எழுதி என்னத்தை கிழிக்கப்போகிறாய்?” என்றும் எள்ளிநகையாடியிருப்பதாக அறியக்கிடைக்கிறது.

எழுத்து ஒரு தவம். அது புகழுக்கானது அல்ல! சமூகத்திற்காக எழுதுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே எழுத்துத்துறையில் ஈடுபடும் படைப்பாளிகளின் பணி. அதனையே எமது இலங்கையில் பல பெண் படைப்பாளிகள் மேற்கொண்டு வந்தனர்.

அந்த வரிசையில் மண்டூர் அசோக்காவும் இலங்கையில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய பத்திரிகைகள் மற்றும் இலக்கிய இதழ்களில் எழுதியவர். இலங்கை வானொலிக்கும் தனது படைப்புகளை அனுப்பியவர். அதனால், இவரது எழுத்துக்களை படிப்பதற்கும் கேட்பதற்கும் வாசகர்களும் நேயர்களும் இருந்தனர்.

இதுவரையில், கொன்றைப்பூக்கள் , சிறகொடிந்த பறவைகள், உறவைத்தேடி, ஆகிய சிறுகதைத்தொகுதிகளையும் பாதை மாறிய பயணங்கள் என்ற நாவலையும் வெளியிட்டிருக்கும் மண்டூர் அசோக்கா, தான் பிறந்து வாழ்ந்த மண்டூர் பிரதேசத்தின் வெகுஜன அமைப்புகளின் பாராட்டுதல்களைப் பெற்றவர். அந்த அமைப்புகள் அவரை அழைத்து கௌரவம் வழங்கி பெருமை பெற்றுள்ளதாகவும் அறிகின்றோம்.

2001 ஆம் ஆண்டு தமிழகத்தில் தஞ்சாவூரில் நடந்த உதயகீதம் இலக்கிய விழாவில் ‘தமிழருவி’ பட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்டவர்.

இலங்கை மத்திய மாகாணத்தில் கண்டியிலிருந்து இலக்கியப்பணியாற்றிக்கொண்டிருந்து மறைந்துவிட்ட மற்றும் ஒரு பெண் எழுத்தாளரான ரூபராணி ஜோசப் அவர்களின் நினைவாக கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் சார்பாகவும் மண்டூர் அசோக்கா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்தி எனக்கு கிடைத்தவேளையில், 1976 ஆம் ஆண்டில் அவருடைய முதல் வெளியீடு கொன்றைப்பூக்கள் நூல் நினைவுக்கு வந்தது.

கிழக்கில் மண்டூர் கிராமத்திலிருந்து ஊருக்கும் பெருமை சேர்த்துக்கொண்டு எழுதிவந்த இவருக்கு அன்று தலைநகரில் பெருமை கிடைத்தது. பல வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இவருடைய நீண்டகால கலை, இலக்கியப்பணியை பாராட்டி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் இவரது எழுத்துப்பணிகள் குறித்து, ” எழுதி என்னத்தை கிழிக்கப்போகிறாய்” எனச்சொன்னவர்களை இவர் கவனத்தில் எடுத்திருந்தால், ஈழத்து இலக்கிய உலகில் மண்டூர் அசோக்கா காணாமல்தான் போயிருப்பார்.

இவருடைய பெற்றோர், ஆசான்கள், வாழ்க்கைத்துணைவர் யோகராஜா மற்றும் அருமைச்செல்வங்களின் ஆதரவும் பக்கத்துணையும் இருந்தமையால், இன்று இவரைப்பற்றி நாமும் எழுதுகின்றோம்.

அசோகாம்பிகை யோகராஜா என்ற மண்டூர் அசோக்கா அவர்கள் தொடர்ந்தும் கலை, இலக்கியத்தில் செழுமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

 

http://akkinikkunchu.com/?p=61966

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

“நகைச்சுவை நாயகம்” பாக்கியநாயகம் (1931-1994) நினைவுகள்!… முருகபூபதி.

August 29, 2018
  “நகைச்சுவை நாயகம்” பாக்கியநாயகம் (1931-1994) நினைவுகள்!… முருகபூபதி.

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை!

“நகைச்சுவை நாயகம்” பாக்கியநாயகம் (1931-1994) நினைவுகள்.

ஆசனங்களை சூடாக்கும் பதவியை வகிக்காமல் சமூகத்தின் பயன்பாட்டுக்காக பதவியிலிருந்த எழுத்தாளர்

முருகபூபதி

கிழக்கிலங்கையை 1978 இல் சூறாவளி தாக்கிய சமயத்தில் எனது உறவினர்கள் சிலர் அங்கு பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். கொழும்பு – மட்டக்களப்பு மார்க்கத்தில் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

ஒருநாள் வீரகேசரியில் மாலை வேலை முடிந்து எனது ஊருக்குச்செல்வதற்காக புறக்கோட்டை பஸ் நிலையம் வந்து, மட்டக்களப்பிற்கு பஸ் செல்லுமா? என விசாரித்தேன். அன்று நள்ளிரவு ஒரு பஸ் பதுளை மார்க்கமாக அம்பாறை சென்று, அங்கிருந்து மட்டக்களப்பு பாதை சீராக இருந்தால் செல்லும் என்றார்கள்.

தாமதிக்கமால் ஊர் திரும்பி அவசர அவசரமாக சில உலர் உணவுப்பொருட்களும் அரிசி, சீனி, மாவு, தேயிலை, கோப்பி ஆகியனவற்றையும் வாங்கிச்சேகரித்து எனது தம்பியையும் அழைத்துக்கொண்டு அன்றிரவே பதுளை மார்க்கமாக மட்டக்களப்பு பயணமானேன்.

மட்டக்களப்பில் ரயில் நிலையத்திற்கு சமீபமாக அமைந்த வீடமைப்புத்திட்டத்தில் வசித்த கலை, இலக்கியவாதி எதிர்மன்ன சிங்கம் அவர்களின் மனைவியின் தங்கையை எனது சித்தப்பா முறையான ராஜா என்பவர் திருமணம் செய்திருந்தார்.

அவர்களின் திருமணத்திற்கும் நான் சென்றிருக்கின்றேன். சித்தப்பாவின் தாயார் மட்டக்களப்புக்கு சென்றிருந்த வேளையில் சூறாவளி அங்கு கோரமாக நர்த்தனமாடியிருந்தது.

மேலும் சில உறவினர்கள் கல்முனை – பாண்டிருப்பிலும் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களைப் பார்த்து தேவையான உதவிகளை செய்வதற்காகத்தான் அந்தப்பயணத்தை மேற்கொண்டேன்.

எதிர்மன்னசிங்கம் அப்பொழுது மட்டக்களப்பு கச்சேரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரைச்சந்தித்ததும் ” இங்கு எழுத்தாளர்கள் யாரையாவது பார்க்கவேண்டும்” என்றேன்.

உடனே எங்கள் அத்தை, ” நீ… எழுத்தாளர்களைப்பார்க்க வந்தாயா…? அல்லது எங்களைப்பார்க்க வந்தாயா..?” என்று உரிமையுடன் கேட்டார்.

“நான் எங்கு சென்றாலும் எனது வர்க்கத்தினரையும் தேடிச்செல்வேன்.” என்றேன்.

அத்தைக்கு வர்க்கம் என்ற சொல் புரியவில்லை. பின்னர் அதுபற்றியும் அவர்களுக்கு விளக்கவேண்டியிருந்தது. “மட்டக்களப்பு கச்சேரியில் ரீ. பாக்கியநாயகம் பணியாற்றுகிறார்” எனச்சொன்னார் எதிர்மன்னசிங்கம்.

பாக்கியநாயகத்தின் பல நடைச்சித்திரங்கள் எங்கள் வீரகேசரியில் வெளிவந்துள்ளன. அவற்றை தொழில் ரீதியில் ஒப்புநோக்கியிருக்கின்றேன். நகைச்சுவையாக எழுதுவார். சமகால பிரச்சினைகளை அவற்றில் நயமாகத்தொட்டிருப்பார்.thumbnail_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0

அவரது வாசகனாக மாத்திரமே அவரது எழுத்துக்களை விரும்பிப்படித்திருக்கின்றேன்.

அவர் கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டுநகரில் பல கலை – இலக்கிய – சமூகப்பணிகளுக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்திருப்பவர்.

தாமதிக்காமல் அவரைப்பார்ப்பதற்காக மட்டக்களப்பு கச்சேரிக்குச்சென்றேன். அது கோட்டையினுள் அமைந்திருந்தமையால் அந்தப்பிரதேசம் எனது மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது.

ரீ. பாக்கியநாயகம் அவர்கள் அந்தக்கோட்டைக்குள்ளிருந்து கலை, இலக்கிய கொடி கட்டிப்பறந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். கல்வி, தொழில், அந்தஸ்து இருப்பவர்கள் –

புகழ், செல்வம் மிகுந்தவர்கள் அவற்றை தமது சமூகத்தின் மேன்மைக்காக பயன்படுத்தல் வேண்டும்.

அவ்வாறு செய்தால்தான் அவர்கள் அனுபவிக்கும் வளங்களுக்கு அர்த்தம் இருக்கும்.

இந்தப்பதிவை நான்எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு இலக்கிய சகோதரி, கனடாவிலிருந்து எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தான் தமிழில் எம். ஏ. படிப்பதாகவும் அதற்கான பரீட்சைக்கு தயாராகியிருப்பதாகவும் எழுதியிருந்தார்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதில் அனுப்பியபோது, ” உங்கள் தமிழ் எம்.ஏ. பட்டம் சமூகத்திற்கும் பயன்படல் வேண்டும்” என்று குறிப்பிட்டேன்.

இந்தப்பதிவில் நான் எழுதும் இலக்கிய நண்பர் 1931 ஆம் ஆண்டு பிறந்து 1994 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார்.

அவர் மட்டக்களப்பில் தான் வகித்த பதவியை குடும்பத்தின் வருமானத்திற்காக சம்பளம் பெறும் ஊழியமாக மாத்திரம் கருதவில்லை. தனது பதவியின் ஊடாக பல கலை, இலக்கிய செயற்பாடுகளுக்கு ஊக்கியாகவே வாழ்ந்திருக்கிறார்.

மட்டக்களப்பு கச்சேரியில் சமூகசேவைத்திணைக்களத்தில் எழுதுவினைஞராக பணியாற்றியவாறு, எழுத்துத்துறையில் ஈடுபட்டு எழுதிக்கொண்டே இருந்தவர். மற்றவர்களையும் எழுதுவதற்கு தூண்டியவர். அக்காலகட்டத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர்களாக பதவி வகித்தவர்களுடன் நல்லுறவைப்பேணி பல பொதுப்பணிகளில் கலை, இலக்கியவாதிகளையும் தமிழ் அறிஞர்களையும் இணைத்துக்கொண்டார்.

தொடர்பாடல் சமூகத்திற்கு இன்றியமையாதது. பல எழுத்தாளர்களிடம் எழுதும் ஆற்றல் இருந்தாலும் தொடர்பாடலில் மிகுந்த பலவீனமானவர்களாகவும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவும் இருப்பர். ஆனால், பாக்கியநாயகம் போன்றவர்கள் இதுவிடயத்தில் விதிவிலக்கு.

மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக, மட். பிரதேச கலா மன்றத்தின் செயலாளராக, 1976 இல் அங்கு நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் அமைப்புச்செயலாளராக இயங்கியவாறு ” சுமைதாங்கி” என்ற மாத இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டவர்.

தமிழ், ஆங்கில இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவந்தவர். அத்துடன் சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். மட்டக்களப்பு பிரதேசத்தில் நடக்கும் முத்தமிழ் விழாக்கள், கலை -இலக்கிய சந்திப்புக்கள், மாணவர்கள் மத்தியில் நடத்தப்படும் கலை, இலக்கியப்போட்டிகள், தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் எவரேனும் வருகை தந்தால் அவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள், அண்ணாவிமார் மாநாடு, இன்னிசை மாலைகள், நூல், இதழ் வெளியிட்டு அரங்குகள் யாவற்றிலும் பாக்கியநாயகம் அவர்களின் பங்களிப்பும் கடும் உழைப்பும் நிச்சயம் இருக்கும்.

சுருக்கமாகச்சொன்னால் அவர் மேற்குறித்த சமூகப்பணிகள் யாவற்றிலும் அச்சாணியாகவே திகழ்வார். வீரகேசரி வாரவெளியீட்டில் ” சொல்லத்தான் நினைக்கிறேன்” என்ற தலைப்பில் தொடர்ச்சியாக நகைச்சுவை நடைச்சித்திரங்களை எழுதிவந்தார். அத்துடன் தமிழக இதழ்களான ஆனந்தவிகடன், கலைமகள் முதலனாவற்றிலும் மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள் பற்றிய ஆய்வுகளையும் வரவாக்கினார். அதன் ஊடாக தமிழக வாசகர்களுக்கு ஈழத்தின் தொன்மையான நாட்டார் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார்.

அதிர்ந்து பேசத்தெரியாக இயல்புகொண்டவர். அவரை 1978 இல்தான் முதல் முதலில் சந்தித்துப்பேசினேன். எளிமையானவர் என்பதனால் உள்ளம் கவர்ந்தார். அவருக்கு ஆன்மீக நம்பிக்கைகளும் இருந்தன.

கச்சேரியில் தான் வகித்த பதவியை சமூகத்திற்காக நன்கு பயன்படுத்திய பெருந்தகைதான் அமரர் ரீ. பாக்கியநாயகம். சமூகத்தின் அன்றாட நடப்புகளை அவதானித்து, அங்கதச்சுவை குன்றாமல் பதிவுசெய்து வந்திருக்கும் பாக்கியநாயகம் அவர்களை நகைச்சுவை நாயகம் எனவும் அழைப்பர்.

அவரது மறைவு மட்டக்களப்பு தமிழகத்திற்கு ஈடு செய்யவேண்டிய இழப்பு என்றுதான் கருதுகின்றேன். அத்தகைய மனிதர்கள் மறைந்தால், அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தங்கு தடையின்றி தொடருவதுதான் அன்னார்களுக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.

அவர் வாழ்ந்த வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறைப்படைப்பாளிகளும் கலைஞர்கள், சமூகப்பணியாளர்களும் தெரிந்துகொள்ளத்தக்க நினைவு அரங்குகளை மட்டக்களப்பு தமிழ் சமூகம் நடத்தவேண்டும்.

—0—

 

http://akkinikkunchu.com/?p=62267

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் சுற்றிவந்து ஏழையாய் மறைந்த பித்தன் கே.எம். ஷா.

September 03, 2018
உலகம் சுற்றிவந்து ஏழையாய் மறைந்த பித்தன் கே.எம். ஷா.

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை:

உலகம் சுற்றிவந்து ஏழையாய் மறைந்த பித்தன் கே.எம். ஷா

முருகபூபதி

தமிழகத்தில் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத்திற்கு பெரும் தொண்டாற்றியவர். தனது விருத்தாசலம் என்ற இயற்பெயரை புதுமைப்பித்தன் என மாற்றிக்கொண்டு சாகா வரம்பெற்ற பல கதைகளைப் படைத்தவர்.

அவரது எழுத்துக்கள் ஈழத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது கதைகளைப் படித்த ஈழத்த வாசகர் ஒருவர், புதுமைப்பித்தனின் பாதிப்பில் தனது இயற்பெயரை இலக்கிய உலகிற்காக பித்தன் என மாற்றிக்கொண்டு எழுத்துலகில் பிரவேசித்தார்.

அவரது இயற்பெயர்: முகம்மது மீரா சாய்பு. இவர்தான் ஈழத்து இலக்கிய உலகம் நன்கறிந்த பித்தன். கே. எம்.ஷா. மீன்பாடும் தேனாட்டின் கோட்டைமுனையில் 1921 ஆம் ஆண்டு பிறந்து 1994 ஆம் ஆண்டு மறைந்தார்.

பித்தன் ஷா குறிப்பிடத்தகுந்த பல கதைகளை எழுதியிருந்தாலும் எண்ணிக்கையில் குறைவாக எழுதியவர் என அறிந்திருந்தேன். இவரது மறைவுச்செய்தியை எனக்கு கடிதம் மூலம் தெரிவித்தவர் பேராசிரியர் செ. யோகராசா. அதில் அவர் குறிப்பிட்டிருந்த தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பித்தனை நன்கு தெரிந்திருந்த இரண்டு புகழ்பெற்ற அரசியல்வாதிகள் ( அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்) பித்தனின் கதைகளை தொகுத்து வெளியிட்டுத்தருவதாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதி வழங்கியிருந்தார்களாம். ஆனால், அரசியல்வாதிகளுக்கே உரியகுணம்: கொடுத்த உறுதிமொழிகளை மறப்பது அல்லது கைவிடுவது.

பித்தன் கே.ஷா வின் கதைகள் தொகுக்கப்பட்டு மல்லிகை பந்தல் வெளியீடாக வந்தவேளையில் பித்தன் உயிரோடு இல்லை. மல்லிகை ஜீவா இல்லையென்றால் அந்தத்தொகுப்பும் வெளிவந்திருக்காது.

அந்த இரண்டு அரசியல்வாதிகளையும் மல்லிகை ஜீவாவுக்கும் நன்கு தெரியும். அரசியல் வாதிகளின் வாக்குறுதி நிறைவேறும் என்று ஜீவாவும் பித்தனும் காத்திருந்திருக்கவேண்டும். காத்திருந்து காத்திருந்து காலமெல்லாம் காத்திருந்து, இறுதியில் மல்லிகைப்பந்தல் அந்தத்தொகுப்பினை வெளியிட்டது.

எனினும் தனது இலக்கியக்குழந்தையான அந்தப்பிரசவத்தை காணாமலேயே பித்தன் ஷா கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார்.

தினகரன் வாரமஞ்சரியில் 1948 இல் தனது முதல் சிறுகதையான கலைஞனின் தாகம் எழுதி இலக்கிய உலகில் பிரவேசித்தவர், மறைந்த 1994 வரையில் குறைந்த எண்ணிக்கை கொண்ட கதைகளையே எழுதியிருப்பவர். எனினும் அவை நிறைவான கதைகள் என்பதுதான் இலக்கியத்திறனாய்வாளர்களின் கருத்து.

மட்டக்களப்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் எழுதுவினைஞராக பணியாற்றியவர். இந்தியாவுக்குச்சென்று இராணுவத்திலும் இணைந்திருக்கிறார். அதனால், எகிப்து, பாலஸ்தீனம், ஈராக், ஈரான், பாகிஸ்தான் முதலான நாடுகளுக்கும் சென்று உலக அனுபவம் பெற்றவர்.

இவரைப்போன்று தமிழகத்திலும் ஒரு எழுத்தாளர் முன்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்திருந்தார். அவர்தான் தமிழ்நாடு தமிழ்ப்புத்தகாலயத்தின் அதிபர் ( அமரர்) கண. முத்தையா. அவர்தான் புகழ்பெற்ற இராகுல சங்கிருத்தியனின் வால்கா முதல் கங்கை வரையில் என்ற பிரசித்தி பெற்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர்.

ஆயுதம் ஏந்தியவர்கள் எழுத்தாயுதமும் ஏந்தியிருக்கின்றனர் என்பதற்கு தமிழகத்தில் கண. முத்தையாவும் இலங்கையில் பித்தன். கே. ஷாவும் சான்று!

வறுமையும் இயற்கை அனர்த்தமும், இனக்கலவரமும் அவரை அகதியாகவும் விரட்டியிருப்பதாக அறியமுடிகிறது. பித்தன் மறைந்த பின்னர் மட்டக்களப்பு வாசகர் வட்டம் பித்தன் நினைவு மலரை வெளியிட்டுள்ளது. இதில் பித்தன் என்றொரு சத்தியம் என்ற தலைப்பில் எஸ்.எல்.எம் ஹனிபா கட்டுரை எழுதியிருக்கிறார்.

தினகரனில் எம்.எச்.எம். ஷம்ஸ் மறைந்த காவியம் பித்தனின் அஸ்தமன நாட்கள் என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்.

முஸ்லிம் கதை மலர் என்ற தொகுப்பிலும் பித்தனின் சிறுகதை இடம்பெற்றுள்ளது.

அவர் வாழ்ந்த காலத்தில் இந்துசமய கலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடந்த பிரதேச சாகித்தியவிழாவில் கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளி என்ற ரீதியில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

பொன்னாடை, பூமாலை புகழாரங்களை விட, அவரது நூலை அவர் வாழ்ந்த காலத்திலேயே வெளியிட்டு கௌரவித்திருந்தால் அந்த ஆன்மா அந்த மனநிறைவுடன் கண்களை மூடியிருக்கும்!

இது இவ்விதமிருக்க எமக்கு அண்மையில் கிடைத்துள்ள அமரர் பித்தன் பற்றிய செய்தியையும் இங்கு பதிவுசெய்கின்றோம்.

பித்தன் கே.எம். ஷா அவர்கள் ஈழத்தின் மறுமலர்ச்சி இலக்கிய காலகட்டத்தில் தோன்றிய ஒரு காத்திரமான படைப்பாளியாவார். மனித நேயத்தை அடிப்படை உணர்வாக கொண்ட அவரது சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுதியொன்று சிங்கள மொழியில் வெளிவரவுள்ளது.

இத் தொகுதியில் பாதிக் குழந்தை, தாம்பத்தியம், அமைதி மற்றும் இருட்டறை போன்ற அவரது முக்கியமான கதைகள் உள்ளடக்கப்படவுள்ளது.

இத்தொகுதியை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 4 ஆம் வருடத்தில் மும்மொழி கற்கை நெறியினை தொடரும் மாணவன் மபாஸ் சனூன் மொழிபெயர்க்கிறார்.

மபாஸ் சனூன் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் ‘தேஷப்பிறேமயே கெடபத’ எனும் சிங்கள நூலை ‘ஒரு தேசபற்றாளனின் முழக்கம்’ எனும் தலைப்பில் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

கே.எம். ஷா அவர்களின் சிறுகதைத் தொகுதி குறித்த இந்த வெளியீடு நாட்டின் நல்லிணக்கம், இன ஒற்றுமை என்பவற்றை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செய்திகளைப் பார்க்காமலேயே பித்தன் மறைந்துவிட்டார். அவரது மரணத்தின் பின்னர்தான் அவரது மகிமை வெளியே தெரியவருகிறது.

(தொடரும்)

 

http://akkinikkunchu.com/?p=62602

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

வரதுரணத்தின் பின்னர்தான் அவரது மகிமை வெளியே தெரியவருகிறது

இருக்கும் போது ஒருவரது மகிமையை பேசுவதற்கு நாங்கள் எப்போதும் விரும்புவது இல்லை. அது எங்களது சுபாவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகலிடத்திலும் அயராது இயங்கும் ‘பாடும்மீன்’ சு. ஶ்ரீகந்தராசா.

September 04, 2018
புகலிடத்திலும் அயராது இயங்கும் ‘பாடும்மீன்’ சு. ஶ்ரீகந்தராசா.

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை

புகலிடத்திலும் அயராது இயங்கும் ‘பாடும்மீன்’ சு. ஶ்ரீகந்தராசா

முருகபூபதி

உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள் எங்கிருந்தாலும் இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தாயகத்தை விட்டு ஆபிரிக்காவுக்கு சென்றாலும் அவுஸ்திரேலியாவுக்குச்சென்றாலும், தாம் ஆழ்ந்து நேசித்த பணிகளை தொடருவார்கள்.

அவ்வாறு ஏறக்குறைய மூன்று தசாப்த காலமாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவாறு கலை, இலக்கியம் உட்பட , வானொலி ஊடகம், இதழியல், சமூக அமைப்புகள் தொடர்பான பணிகளில் இயங்கிவருபவர் கிழக்கிலங்கையின் மீன்பாடும் தேனாட்டின் பிரதிநிதியான சட்டத்தரணி ‘ பாடும்மீன்’ சு. ஶ்ரீகந்தராசா.

thumbnail_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0

பாடும்மீன் என்ற சொற்பதம் எமது தமிழ்சமூகத்தின் அழிக்கமுடியாத ஓர் அடையாளம். தண்ணீரில் மீன் அழுதால், அதன் கண்ணீரை யார் அறிவார்? என்று ஒரு பாடல் வரி இருக்கிறது. அதுபோன்று மீன்பாடுமா..? எனக்கேட்பார்கள். ஆம், பாடும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து முழுமதி நாட்களில் செவிமடுத்தால் பாலத்தின் கீழே ஒடும் வாவியிலிருந்து எழும் ஓசையை கேட்கமுடியும் என்று அதனை ஒலிப்பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

ஏறக்குறைய ஆறு தசாப்தங்களுக்கு முன்னரே, கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை லாங் அடிகளார் அந்த ஒலியை பதிவுசெய்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார் என்ற செய்தியிருக்கிறது.

இந்த ஒலி, இலக்கியங்களில் ” நீரர மகளீர் இசை” என்றும் வர்ணிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த பாடும் மீன் பெயரில் இலக்கிய இதழ்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புகள் இருக்கும்

அதேசமயம் அந்தப்பெயரையே தனது பொது வாழ்வின் முதல் எழுத்துக்களாக்கி இயங்கிவருபவர்தான் எம்மத்தியிலிருக்கும் ‘ பாடும் மீன்’ சு. ஶ்ரீகந்தராசா.

thumbnail_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0

இலங்கையில் தமது பாடசாலைப்பருவத்தின் இளம்பராயத்திலேயே இலக்கிய எழுத்துப்பணியை ஆரம்பித்திருக்கும் இவர், கடந்த அரைநூற்றாண்டு காலமாக (1968 -2018) தொடர்ச்சியாக தங்கு தடையின்றி எழுத்தூழியத்தில் ஈடுபட்டுவருபவர்.

களுவாஞ்சிக்குடியில் சுப்பையாபிள்ளை – சின்னம்மா தம்பதியரின் ஏகபுத்திரனான ஶ்ரீகந்தராசா, தனது கல்வியை பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் தொடர்ந்த பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் அதன்பிறகு இலங்கை சட்டக்கல்லூரியிலும் இணைந்து சட்டத்தரணியானவர்.

இவர் கல்வி கற்ற கல்லூரியில் வெளியான உயிர்ப்பு என்ற கையெழுத்து இதழின் ஆசிரியராக இவர் இயங்கியபோது இவரது வயது 14 என்பது வியப்பானது!

சிறுவயதுமுதலே பேச்சாற்றல், நடிப்பாற்றல், எழுத்தாற்றல், முதலான ஆளுமைப்பண்புகளுடன் வளர்ந்திருக்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசாவுக்கு முதலில் களம் வழங்கி எழுத்தாளன் என்ற அடையாளத்தை உருவாக்கியது சிந்தாமணி வார இதழ். கொழும்பு எம்.டீ. குணசேனா நிறுவனம் அக்காலப்பகுதியில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் பல பத்திரிகைகளை வெளியிட்டது. அங்கிருந்துதான் தினபதி நாளேடு, சிந்தாமணி வார இதழ், மற்றும் மாலைத்தினசரி தந்தி, ராதா, சுந்தரி முதலான இதழ்கள் வெளிவந்தன.

இலங்கை பத்திரிகை உலக ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் எஸ்.டி. சிவநாயகம் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகைகள்தான் தினபதியும் சிந்தாமணியும்.

thumbnail_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0

கிழக்கிலங்கையிலிருந்து எழுதத்தொடங்கிய பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசாவுக்கு தென்னிலங்கையிலும் எழுத்துப்பணியை தொடருவதற்கு களம் அமைத்துக்கொடுத்தது சிந்தாமணி. அத்துடன், தந்தை செல்வநாயகம் அவர்கள் நடத்திய

சுதந்திரன் பத்திரிகையிலும் ஊடகவியலாளராக பணியாற்றியிருக்கிறார்.

தொழில் ரீதியாக தொடக்கத்தில் அரசாங்க எழுதுவினைஞர் சேவையில் இணைந்திருந்தாலும், பின்னர் சட்டத்தரணியானதும் கிழக்கிலங்கை நீதிமன்றங்களில் தனது பணியை தொடர்ந்தார். கலை, இலக்கிய, ஊடகத்துறையில் கவிதை, சிறுகதை, விமர்சனம், பத்தி எழுத்துக்கள், ஆய்வு, நாடகம், வில்லிசை முதலான அனைத்து துறைகளிலும் அகலக்கால் பதித்து பல்துறை விற்பன்னராக விளங்கியிருக்கும் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா, மேடை நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றிருப்பவர். கவிதை இயற்றுவதில் மட்டுமல்ல மெல்லிசைப்பாடல்கள் புனைவதிலும் ஆற்றல் மிக்கவராகத்திகழ்ந்திருப்பவர்.

thumbnail_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0thumbnail_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%

தனது 15 வயது பாடசாலைப் பருவத்திலேயே நாடகம் எழுதி இயக்கி மேடையேற்றி அனுபவம் பெற்றவர். தான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த களுவாஞ்சிக்குடியில் ஒரு நூலகம் இல்லாத குறையைபோக்குவதற்காக தனது நண்பர்களுடன் இணைந்து பொதுமக்களின் ஆதரவுடன் நூலகம் அமைத்தமை, இளஞர்களை இணைத்து இளம் நாடக மன்றம் அமைத்து கிராமங்கள்தோறும் நாடகங்களை அரங்காற்றுகை செய்தமை, வில்லுப்பாட்டுக்களை இயற்றி அவற்றையும் பொதுமேடைகளில் அரங்கேற்றியமை, மட்டக்களப்பின் நாட்டார் பாடல்களுக்கு நாடகவடிவம் வழங்கி அவற்றையும் மக்களிடம் அரங்கங்கள் வாயிலாக எடுத்துச்சென்றமை, உட்பட பல்வேறு கலை, இலக்கிய பணிகளில் தீவிரமாக செயற்பட்டிருக்கும் இவர், கடல் சூழந்த கண்டம் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்னரும் அயராமல் இயங்கிவருகிறார்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தவாறு தனது உள்ளார்ந்த ஆற்றல்களை புலம் பெயர்ந்தபின்னரும் வற்றிப்போகச்செய்யாமல் இவர் வெளிப்படுத்தி வந்திருப்பதை அருகிருந்து பார்த்துவந்திருப்பதனாலும், இவருடன் இணைந்து சில பொதுப்பணிகளில் ஈடுபட்டதனாலும் இவர் பற்றி மேலும் அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் முன்னர் இயங்கிய தமிழ் அகதிகள் கழகம், நீண்ட காலமாக இயங்கிவரும் ஈழத்தமிழ்ச்சங்கம், கடந்த 2001 ஆம் ஆண்டுமுதல் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை முன்னெடுத்துவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆகியனவற்றிலும் தலைவராக பணியாற்றியிருக்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா, விக்ரோரியா மாநிலத்தில் தமிழ் ஆர்வலர் மருத்துவர் பொன். சத்தியநாதன் நடத்திய தமிழ் உலகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.

அத்துடன் அவுஸ்திரேலியாவில் ஒலிக்கும் பல வானொலிகளிலும் இவரது உரைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக பழந்தமிழ் இலக்கியம், தமிழ்த் திரையிசையையும் அதற்கு உயிர்ப்பளித்த கவிஞர்களின் பாடல் வரிகளையும் இணைத்து பல ஒலிச்சித்திரங்களையும் வழங்கியிருக்கிறார்.

இவ்வாறு பல ஆற்றல்களை தனது வசம் வைத்திருக்கும் இவரிடம் நாடகம் எழுதும் இயக்கும் வல்லமையும் இருப்பதனால், இவரை எங்கள் அவுஸ்திரேலியாவின் பல்கலை வேந்தன் என்றும் அடையாளப்படுத்தியிருக்கிறது.

மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் பிரபல நாடகமான ‘வலை’ இவரது இயக்கத்தில் மெல்பனில் மேடையேற்றப்பட்டதை பார்த்து வியந்திருக்கின்றேன். அதனை இவர் நெறிப்படுத்தியிருந்த பாங்கும் ஒலி, ஒளி அரங்க நிர்மாணம் என்பனவும் மறக்கமுடியாத நிகழ்வாக மனதில் நிலைத்திருக்கிறது.

தனது பணிகளுக்காக இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா அவர்களின் மணிவிழாக்காலத்தில், இலங்கையில் வெளிவரும் ஞானம் மாத இதழ் அட்டைப்பட அதிதியாக பாராட்டி இவரது சேவைகளை பதிவுசெய்து கௌரவித்திருக்கிறது.

எம்மத்தியில் ஶ்ரீகந்தராசா என்ற பெயரில் நாமறிந்த பலர் இருக்கலாம். ஆனால்,” பாடும்மீன் ” என்றும்

குறிப்பிட்டால்தான் அது இவரைத்தான் அடையாளப்படுத்துகிறது என்று புரிந்துகொள்ளும் நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.

இவர் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த காலப்பகுதியில்தான் அதன் பெயர் ஈழத்தமிழ்ச்சங்கமாக மாறியது. இச்சங்கத்தினால் நிருவகிக்கப்பட்டு வந்த தமிழ்ப்பாடசாலைகள் இரண்டாயிரமாம் ஆண்டுவரையில் இச்சங்கத்தின் உபகுழு ஒன்றின் மேற்பார்வையிலேயே இயங்கிவந்தன. இவர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதும், தமிழ்ப்பாடசாலைகள் கூட்டமைப்பு என்னும் ஓர் அமைப்பைச் சட்டரீதியாக அமைப்பதற்கான சரத்து ஒன்றினை அமைப்புவிதிகளில் முறைப்படி இணைத்து, சகல தமிழ்ப் பாடசாலைகளும் பாடசாலைகள் கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்படும் செயற்பாட்டினை ஏற்படுத்தினார். அதன்மூலம் பாடசாலைகளின் நிர்வாகம் சிறப்புற நடைபெறுவதற்கு வழிவகுத்தார்.

விக்ரோறிய மாநிலத்தில் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான 12 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழி ஒரு பாடமாகச் சேர்க்கப்படுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுள் இவரும் ஒருவர்.

நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், சிட்னியில் இருந்து இயங்கும் அவுஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் சங்கத்தினால் தேசியப் பரீட்சகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட இவர், இச்சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் தமிழ் மாணவர்களுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கு மெல்பன் மாநிலத்தில் மேற்பார்வையாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.

கடந்த பல வருடங்களாக தமிழ் மாணவர்களுக்குப் தமிழ்ப்பேச்சுக்கலையில் பயிற்சிகொடுத்து, பேச்சுப்போட்டிகளுக்குத் தயார்செய்து வரும்பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.

இவர் எழுதியிருக்கும் நூல்கள்: சந்ததிச் சுவடுகள், மனதைக்கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள், தமிழினமே தாயகமே, தமிழின் பெருமையும் தமிழரின்

உரிமையும் , ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப்பயணம், Sankam Period and Sankam Literature ( சங்ககாலமும், சங்க இலக்கியங்களும் – ஆங்கில மொழிபெயர்ப்பு)

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் உரைச்சித்திர இறுவட்டையும் வெளியிட்டுள்ளார்.

பாடும் மீன் ஶ்ரீகந்தராசா மேலும் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தவேண்டும் என வாழ்த்துகின்றோம். கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்களின் வரிசையில் இவரது பெயர் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

http://akkinikkunchu.com/?p=62668

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை உலக ஜாம்பவான் அமரர் எஸ். டி. சிவநாயகம்!… முருகபூபதி

September 08, 2018
ஆறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை உலக ஜாம்பவான் அமரர் எஸ். டி. சிவநாயகம்!…  முருகபூபதி

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை:

ஆறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை உலக ஜாம்பவான் அமரர் எஸ். டி. சிவநாயகம்

முருகபூபதி.

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்பட்டவரும், பல புதிய தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவரும், பல தமிழ் ஊடகவியலாளர்களின் ஞானத்தந்தையாக (God Father) கருதப்பட்டவருமான (அமரர்) எஸ். டி. சிவநாயகம் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியினால் விதந்து பாராட்டப்பட்டவராவார்.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பைச்சேர்ந்த இவரது ஊடகப்பணியும் சமயம் சார்ந்த சமூகப்பணிகளும் தலைநகரில்தான் விரிவடைந்தன. இவரது துணைவியார் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர்.

சிவநாயகம் அவர்களை அவரது ஜிந்துப்பிட்டி இல்லத்திலும் தினபதி – சிந்தாமணி பணிமனையிலும் சந்தித்துப்பேசியிருக்கின்றேன்.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%

1948 இல் தினகரன் பத்திரிகையில் பணியாற்றத்தொடங்கிய ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான சிவநாயகம், கொழும்பில் தந்தை செல்வநாயகம் ஆரம்பித்த சுதந்திரன், மற்றும் தமிழகத்தைச்சேர்ந்த பெரி. சுப்பிரமணியம் செட்டியார் தொடக்கிய வீரகேசரி ஆகியவற்றிலும் ஆசிரியராக பணியாற்றியவர். 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி முதல் வெளியாகத்தொடங்கிய தினபதி தினசரியிலும் பிரதம ஆசிரியரானார்.

தமிழ்ப்பத்திரிகைத்துறையில் பழுத்த அனுபவம் மிக்க இவர், வெளியுலகிற்கு தன்னை பிரபல்யப்படுத்தாமல் அமைதிபேணியவர்.

எனினும், அந்த ஆழ்ந்த அமைதிக்குள் எரிமலைக்குரிய குணாம்சம் ஒளிர்ந்தது. முற்காலத்தில் வெளியாகும் தமிழ்த்திரைப்படங்களின் இயக்குநர்களின் பெயர்களும் தற்காலம்போன்று வெள்ளித்திரைகளில் தோன்றும். ஆனால், அவர்கள் இக்காலத்து இயக்குநர்கள் போன்று ரசிகர்கள் மத்தியில் திரையில் வலம்வந்து அறிமுகமாகமாட்டார்கள். முன்பிருந்தவர்கள் பின்னாலிருந்து இயக்கிய உந்துசக்திகளாகத்தான் வாழ்ந்து மறைந்துபோனார்கள்.

இன்றைய தமிழ்த்திரையுலகின் இயக்குநர்கள் திரைகளில் தோன்றுவதுபோன்று தற்கால பத்திரிகை ஆசிரியர்களும் பொதுமேடைகளில் தோன்றும் கலாசாரம் வந்துவிட்டது.

ஆனால், தினபதி அதன் ஞாயிறு பதிப்பு சிந்தாமணி ஆகியனவற்றின் பிரதம ஆசிரியர் சிவநாயகம் அவர்களை – இவை வெளியான காலகட்டத்தில் பொதுமேடைகளில் காண்பது அபூர்வம்.

கிழக்கிலங்கையில் பெரியார் ஈ.வே.ரா.வின் பகுத்தறிவுக்கொள்கைகளை பரப்பிய முன்னோடியாகவும் இவர் அறியப்படுகிறார். தமிழகத்தின் முதல்வர் அறிஞர் அண்ணாவுடன் பழகியதன் அனுபவங்களை தொடர்கட்டுரையாக எழுதியவர். எனினும் இறுதிக்காலத்தில் சத்திய சாயி பக்தராகவும் வாழ்ந்து, 22 ஏப்ரில் 2000 ஆம் திகதி மறைந்தார்.

புட்டபர்த்தியில் 1975 ஆம் ஆண்டு நடந்த உலக சாயி நிறுவனங்களின் மகா நாட்டிலும் கலந்துகொண்டிருக்கும் இவர், கொழும்பில் சத்திய சாயி பாபா மத்திய நிலையத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் தலைவராகவும் இருந்து, சாயிபாபா அறக்கட்டளையையும் உருவாக்கியவர்.

தினபதி தினசரியில் தினமும் புதிய சிறுகதைகள் என்ற களத்தில் பல புதிய இளம்தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, எதிர்காலத்தில் அவர்களை ஆக்க இலக்கியவாதிகளாக்கிய பெருமையும் அவரைச்சாரும். அக்காலப்பகுதியில் இளம் மாணவர்கள் எழுத்தாளர்களாக தினபதியில் வளர்க்கப்பட்டார்கள்.thumbnail_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0

தினபதி, சிந்தாமணி, ராதா, சுந்தரி, தந்தி முதலான தமிழ் இதழ்களையும் தவஸ உட்பட சில சிங்கள இதழ்களையும் SUN என்ற ஆங்கிலத்தினசரியையும் அதன் ஞாயிறு பதிப்பையும் வெளியிட்ட சுயாதீன பத்திரிகை சமாஜம் என்ற பெரிய நிறுவனம் 1970 இல் நடந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீமா – என். எம், – பீட்டர் ஆகியோரின் கூட்டணி வெற்றியடைந்து பதவிக்கு வந்த காலத்தில், அந்த அரசின் சில நடவடிக்கைகளை விமர்சித்த காரணத்தால் வெறுப்புக்கும் ஆளாகி 1974 ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி சீல்வைத்து பூட்டப்பட்டது. எனினும் தடை நீங்கி 1977 இற்குப்பின்னர் திறக்கப்பட்டது.

சிந்தாமணியில் இலக்கியபீடம் என்ற பத்தியை சிவநாயகம் தொடர்ந்து எழுதியதுடன், பாரதி நூற்றாண்டு காலத்தில் ” நான் கண்ட பாரதி” என்ற நீண்ட தொடரையும் வாராந்தம் எழுதியிருக்கிறார்.

சுயாதீன பத்திரிகை சமாஜம் எதிர்பாராதவிதமாக அதன் நிருவாகத்தினால் 1990 இல் நிரந்தரமாக மூடப்பட்டதும் சோகமான முடிவு. கொழும்பு பாமன் கடையிலிருந்து வெளியான மாணிக்கம் என்னும் கலை இலக்கிய மாத இதழுக்கும் சிவநாயகம் சிறிது காலம் ஆசிரியராக இருந்துள்ளார்.

தினபதி – சிந்தாமணி ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர்களுக்கு சிவநாயகம் வழிகாட்டியாகவும் நல்லாசானாகவும் விளங்கியவர். அரசியல் சார்ந்த செய்திகளில் – முக்கியமாக அவற்றின் தலைப்புகளில் விவரணங்களும் காணப்படும்.

உதாரணத்திற்கு ஒரே ஒரு தகவலை மாத்திரம் சொல்கின்றேன்.

தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், 1977 இல் நடந்த பொதுத்தேர்தலையடுத்து எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சித்தலைவரானார். அவ்வேளையில் தினபதியில் ஒரு செய்தியின் தலைப்பு இவ்வாறு இடம்பெற்றது.

“தமிழ் ஈழம் கேட்ட ‘அமிர்’ இலங்கை அரசின் காரும் வீடும் ஏற்பாரா..? ”

அத்துடன் நில்லாமல் இந்தத்தலைப்புக்கு இருமருங்கும் ஒரு காரின் படத்தையும் ஒரு வீட்டின் படத்தையும் சிவநாயகமோ அல்லது அவரது தூண்டுதலினால் வேறு யாரோ அதில் பதிவுசெய்தனர்.

ஏற்கனவே 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் அமிர்தலிங்கம், வட்டுக்கோட்டை தொகுதியில் ஆ. தியாகராசா என்ற முன்னாள் கல்லூரி அதிபர் ஒருவரிடம் தோற்றிருந்தவர். அதன் பின்னர் அவரும் அவர் மனைவி மங்கையற்கரசியும் தமிழ் உணர்ச்சியை தூண்டும் விதமாக மேடைகளில் முழங்கி இளம்தலைமுறையினரை எழுச்சிகொள்ளவைத்தனர்.

அதன் விளைவே வட்டுக்கோட்டை மாநாட்டில் தனித்தமிழ் ஈழத்தீர்மானம். ஆயினும் அமிர், எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சித்தலைவராகி, அன்றைய ஜே.ஆர். அரசு வழங்கிய சௌகரியங்களை ஏற்கநேர்ந்தது.

முன்னர் தனித்தமிழ் ஈழம் கேட்டவர், இன்று எவ்வாறு காரும் வீடும் ஏற்கிறார்…? என்ற தொனிப்பொருளில் கேலிச்சித்திரமாக அல்ல செய்தியாகவே தினபதியில் அந்த அரசியல் மாற்றம் வெளியானது.

எஸ்.டி. சிவநாயம் சிந்தாமணியில் தொடர்ந்து எழுதிய ” நான் கண்ட பாரதி” இதுவரையில் நூல் வடிவம் பெறவில்லை. அவ்வாறு அதனை அவர் வெளியிட விரும்பி குறிப்பிட்ட பத்திரிகை நறுக்குகளை பாதுகாத்து வைத்திருந்த தகவலும் அண்மையில் தெரியவந்துள்ளது. யாராவது அதனை வெளியிட ஆவனசெய்யவேண்டும் என்று இந்த அங்கத்தின் ஊடாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

—0—

 

http://akkinikkunchu.com/?p=62936

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேச இலக்கியப்படைப்புலகில் மக்களையும் இயற்கையையும் ஆழ்ந்து நேசிக்கும் எஸ்.எல்.எம் ஹனீபா!… முருகபூபதி

September 14, 2018
பிரதேச இலக்கியப்படைப்புலகில் மக்களையும் இயற்கையையும் ஆழ்ந்து நேசிக்கும் எஸ்.எல்.எம் ஹனீபா!…  முருகபூபதி

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை:

பிரதேச இலக்கியப்படைப்புலகில் மக்களையும் இயற்கையையும் ஆழ்ந்து நேசிக்கும் எஸ்.எல்.எம் ஹனீபா!

முருகபூபதி.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை 2011 ஜனவரி மாதம் கொழும்பில் நடத்துவதற்கு முன்பதாக 2010 டிசம்பரில் கிழக்கிலங்கையில் மாநாடு தொடர்பாக தகவல் அமர்வு நடத்துவதற்காக எமது குழுவிலிருந்த இலக்கிய நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் மற்றும் அஷ்ரப் சிகாப்தீன் ஆகியோருடன் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தேன்.

ஓட்டமாவடியில் அஷ்ரப் சிகாப்தீனின் சகோதரி வீட்டில் தங்கியிருந்தோம். அந்தக்குடும்பத்தின் தலைவர் பாடசாலை அதிபர். அத்துடன் கலை, இலக்கிய ஆர்வலர். அவரும் அவரது குடும்பத்தினரும் எம்மை நன்கு உபசரித்தனர்.

நாம் வந்திருக்கும் செய்தியறிந்த ஒருவர் திடீரென்று வந்தார். அவரை நான் அதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. அவரே அருகில் வந்து தன்னை ” எஸ்.எல்.எம். ஹனீபா” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

thumbnail_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0

” யார்… மக்கத்துச்சால்வை ஹனீபாவா…?” எனக்கேட்டேன். ” ஓம்” எனச்சொல்லி என்னை அணைத்துக்கொண்டார்.

1946 ஆம் ஆண்டு மீராவோடையில் கடலை நம்பிய தந்தைக்கும் மண்ணை நம்பிய தாயாருக்கும் பிறந்திருக்கும் ஹனீபாவின் எழுத்துக்களும் அவரது நேரடி உரையாடல் போன்று சுவாரஸ்யமானது.

கிட்டத்தட்ட கரிசல் இலக்கிய வேந்தர் கி. ராஜநாராயணனின் வாழ்க்கையைப்போன்றது. பந்தாக்கள், போலியான வார்த்தைப்பிரயோகங்கள் அற்ற வெகு இயல்பான மனிதர். அந்த முதல் சந்திப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்தார்.

அவரது உரையாடலிலிருந்து அவர் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை புரிந்துகொள்ளமுடியும். 1992 இல் இவருடை மக்கத்துச்சால்வை கதைத்தொகுப்பு வெளியானது. குறிப்பிட்ட தலைப்பும் .இவரது பெயரை இலக்கிய உலகில் தக்கவைத்து, ” மக்கத்துச்சால்வை ஹனீபா” என்று வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

அந்தத்தொகுப்பில் அவருடைய என்னுரை, கொடியேற்றம் என்ற தலைப்பில் இவ்வாறு ஆரம்பிக்கிறது:

“அந்த நாள்கள் பற்றிய நினைவுகளும், இந்தச் சிறுகதைத் தொகுப்பு வேலைகளிலே ஈடுபட்டிருக்கும்பொழுது, ஏன் வளைய வலம் வரவேண்டும்? இரவின் ஏதோ ஒரு வேளையில் – அதை வைகறை என்றும் சொல்ல ஒண்ணா-உம்மா எழும்பிடுவா. குப்பிலாம்பின் துணையோடு உம்மாவின் தொழில் துவங்கும். நித்திரையில் ஊருறங்கும். அதனை ஒட்டில் களிமண்ணை ‘தொம்’ மென்று போட்டு உம்மா கலைப்பா. கொஞ்ச நேரத்தில் ஒட்டில் குந்திய களிமண் ‘தொம்’ அழகான சட்டியாக, பானையாக, குடமாக உருவெடுக்கும். அந்த அதிசயத்தை நாடியில் கை கொடுத்துப் பார்த்திருப்பென். அதிகாலை நான்கு மணிக்கே எழும்பிவிடும் அந்தப் பழக்கம் இன்றுவரை களிமண்ணைப்போலவே என்னில் ஒட்டிக்கொண்டது. வாப்பாவும் உழைப்பாளிதான். அவரும் வெள்ளாப்பில் எழும்பிவிடுவார். ஊரிலிருந்து ஐந்து மைல்களுக்கப்பால் கடற்கரை. அங்கேதான் வாப்பா மீன் வாங்கிவரப் போவார். அவர் தோளில் கமுகு வைரத்தின் காத்தாடி. அதன் இரு முனைகளிலும் கயித்து உறியில் பிரம்புக் கூடைகள் தொங்கும். “கிறீச் கிறீச்’ என்ற ஓசையுடன் வாப்பாவின் தோளில் கிடக்கும் காத்தாடியின் கூடைகளிரண்டும் கூத்துப் போடும். கூடைக்குள் பொன்னிவாகை இலையை நீக்குப்பார்த்தால்….வெள்ளித் துண்டுகளாக மீன்கள் ‘மினுமினு’க்கும். எங்கள் ஊரில், அந்தக் காலத்தில், ‘அஞ்சாப்பு’ வரை படித்த நான்கைந்து பேரில் வாப்பாவும் ஒருவர். அவர் எழுத்து குண்டு குண்டாக அழகாக இருக்கும். நாள் தவறாமல் பத்திரிகை வாசிப்பார். வாசலில் தெங்குகள். காற்றில் கலையும் ஓலைக் கீற்றுகளுக்கிடையில் நிலவு துண்டு துண்டாகத் தோட்டுப் பாயில் கோலம் போடும். காசீம் படைப்போர், சீறாப்புராணம், பெண்புத்திமாலை, ராஜநாயகம் என்றெல்லாம் வாப்பா ராகமெடுத்துப் படிப்பார். வாப்பாவைச் சுற்றிப் ‘பொண்டுகள்’ வட்டமிட்டிருப்பர். வாப்பாவிலும் பார்க்க அதிகமாக வாசிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு. ”

இவ்வாறு தொடங்கும் ஹனிபாவின் என்னுரை, மேலும் பின்வருமாறு தொடருகின்றது:

என்னைச் சூழவும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்கள், அறியாமையோடும் வறுமையோடும் வானம்பார்த்த பூமியை வைத்துக்கொண்டு மாரடிக்கிறார்கள். இந்த மக்களை மூலதனமாகக் கொண்டு ராஜதர்மார் நடாத்துகின்ற அரசியல் புரோக்கர்கள் ஏழைகளைச் சுரண்டி வாழும் தனவந்தர்கள். இந்த முரண்பாடுகளின் கோட்டமோ நான் வாழும் கிராமம். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலே அவலப்படும் மக்களுடைய மானுஷகத்தினைத் தரிசிப்பது தான் என் எழுத்துப் பணி. ‘சன்மார்க்கம்’ கதை பிரசுரமான காலத்திலேயே சிலர் ‘ஹனிபாடெ கையெ முறிச்சிப் போடணும்’ என்றும் சொம்பினார்களாம். ‘மருத்துவம்’ கதையிலே வரும் டாக்டர் தன் வசமுள்ள ‘குறடு’ கொண்டு என் இரண்டு பற்களையாவது பிடுங்கிவிடவேண்டும் என்று கர்விக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ‘சமூகப் பிரக்ஞையுள்ள சத்தியக் கலைஞனுக்கு எழுத்து ஊழியமும் ஒரு புனித யுத்தமாக அமைந்துவிடுவது சாத்தியமே. எழுத்தாளனுடைய வாழ்க்கை முழுத்துவம் பற்றிய தேடலே. இந்தத் தேடலிலே வெற்றி இலேசில் வாய்த்து விடுவதில்லை. வாழ்வின் நாணயம், ரஷனையைப் பெருக்கும் வாசிப்பு, தொடர்ந்த பயிற்சி எனப் பல வந்து பொருந்தவேண்டும். குறுக்கு வழிகளும் உண்டு. ஒரு அணியாகத் திரண்டு கொண்டு களத்தில் இறங்க வேண்டும். அப்பொழுது நாம் ஒருவரை ஒருவர் மேதாவியாக்கி, ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து. ஆ! என்னெ சுகம். அந்த சுகம் இந்தச் சுகமும் ஒருவகை போதைதான். போதையில் எனக்கு நம்பிக்கையில்லை. வாழ்கையை கலாபோதையுடன் பார்ப்பதெல்லாம் பாவலா. நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் கூட கதைகளாக வடிக்கத் தயங்கினேன். நான் அனுபவித்தவற்றையே எழுதுகிறேன். என் அனுபவம் சத்தியம் என்றால், என் எழுத்தும் சத்தியக் கோலம் புனையும்.”

thumbnail_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E

இந்த வரிகளிலிருந்து கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் பேச்சுவழக்கை நாம் அறிய முடிகிறது. அம்மக்களின் ஆத்மாவும் மண்ணின் வாசமும் ஹனீபாவின் கதைகளில் பேசும்.

கிழக்கிலங்கை வாழ் தமிழ் – முஸ்லிம் மக்களின் பேச்சுவழக்கை இலக்கியத்திற்கு வரவாக்கியவர்களில் எஸ்.எல். எம். ஹனீபா முன்னோடியாவார். யதார்த்த இலக்கியம் படைத்திருக்கும் இவர் தனிப்பட்ட மற்றும் இலக்கிய – அரசியல் பொதுவாழ்விலும் யதார்த்தவாதியே!.

யதார்த்தவாதிகளினால் – யதார்த்தவாதிகளுக்கும் பிரச்சினை – மற்றவர்களுக்கும் பிரச்சினைவரும். ஹனீபாவும் இலக்கிய உலகிலும் அரசியல் பொது வாழ்விலும் பிரச்சினைகளை சந்தித்தவர்.

பிரச்சினைகளைக்கண்டு ஓடவோ ஒதுங்கவோ மாட்டார். அவர் தொடர்பாக வெளிவந்துள்ள எதிர்வினைகளையும் வாசித்திருக்கின்றேன். எனினும் அவருடைய தொடர்பாடல் பிரதேசம், தேசம், சர்வதேசம் கடந்தது.

இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஏராளமான இலக்கிய நண்பர்களை சம்பாதித்தவர். எழுத்தாளர்கள் எஸ்.பொன்னுத்துரை, பேராசிரியர் கா. சிவத்தம்பி, ஜெயமோகன், நடேசன், எம்.கே. முருகானந்தன் உட்பட பலர் ஹனீபா பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார்கள்.

தனக்கு கல்வி புகட்டிய ஆசான்களை மதிக்கத்தெரிந்தமையால் அவர்கள் பற்றியும் தனது மக்கத்துச்சால்வை தொகுப்பில் மறக்காமல் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்: “எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியப் பெருந்தகைகள் சாம்பல்தீவு செல்லத்துரை, பங்குடாவெளி விநாயமூர்த்தி மருதமுனை ஹபீப் முஹம்மது, கல்முனைக்குடி ஆதம்பாவா, ஓட்டமாவடி அப்துல்காதர், இவர்களோடு சேர்ந்து என் தாழ்விலும் வாழ்விலும் இருவர் பங்கேற்றார்கள். ஒருவர் ஆங்கில ஆசிரியர் கொழும்பு பரீத் அவர்கள்-மற்றவர் பறகஹதெனிய ஆங்கில கல்வி அதிகாரி எம்.பாளிஹு அவர்களாகும். இந்தத் தொகுதியை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் நான் இறங்கியபோது எனக்கருகிலிருந்து கதைகளைப் படித்து ஆலோசனைகள் வழங்கிய தமிழாசிரியர் கவிஞர் வீ.ஏ.ஜுனைத்.thumbnail_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E

கடந்த காலத்தை நனவிடைதோய்ந்திருக்கும் ஹனிபா, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து அமைந்த வடக்கு – கிழக்கு மகாண சபையிலும் அங்கம் வகித்தவர். அதன் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தனது சகாக்களுடன் இந்தியாவுக்கு கப்பலேறியபோது ஹனீபா, ஊரைவிட்டுச்செல்லவில்லை என்பது அதிசயம்தான்!

இயற்கையை நேசிக்கும் இயல்பும் கொண்டிருக்கும் ஹனீபா, தான் வாழ்ந்த பிரதேசத்து மக்களையும் ஆழமாக நேசிப்பவர். அதனால் அவருடைய படைப்புகளில’ இயற்கையும் மக்களும் இணைந்திருக்கிறார்கள்.

( தொடரும்)

 

http://akkinikkunchu.com/?p=63309

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்மனயாத்திரையில் இலக்கியம் படைக்கும் உமா வரதராஜன்!…. முருகபூபதி.

September 22, 2018
உள்மனயாத்திரையில் இலக்கியம் படைக்கும் உமா வரதராஜன்!…. முருகபூபதி.

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை

உள்மனயாத்திரையில் இலக்கியம் படைக்கும் உமா வரதராஜன்

முருகபூபதி

பெயர்களுக்கு முதல் எழுத்து அவசியப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் எனது மகன், தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்குப்பெயர் வைத்து, அதன் முதல் பெயராக எனது பெயரைச்சூட்டி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறான்! யாருக்கு கிடைக்கும் இந்தப்பாக்கியம்! நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதனால் எனக்கும் பெருமைதான்!

ஆறறிவு படைத்த மனிதர்கள் தந்தையின் பெயரில் வரும் முதல் எழுத்தையும் பயன்படுத்துவோம். பெண்கள் திருமணமானதும் கணவரின் பெயரையும் இணைத்துக்கொள்வார்கள். எங்கள் ஈழத்து இலக்கிய உலகில் ஒருவர் தனது தாத்தாவினதும் தந்தையினதும் முதல் எழுத்துக்களை இணைத்துக்கொண்டு வலம்வருகிறார். முன்பின் தெரியாத வாசகர்கள் அந்தப்பெயருக்குரியவர் பெண் என்றுதான் நினைப்பார்கள். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியையும் பல வாசகர்கள் முன்னர் அப்படித்தான் நினைத்தனர்!

இந்தப்பதிவில் நான் குறிப்பிடும் கிழக்கிலங்கையில் கல்முனையிலிருந்து நீண்டகாலமாக எழுதிவரும் உமா வரதராஜனின் தாத்தாவின் பெயர் உடையப்பா. தந்தையின் பெயர் மாணிக்கம். இவர்களின் முதல் எழுத்துக்களை இணைத்து தனது பெயருடன் உமா வரதராஜனாக எம்மத்தியில் அறிமுகமானவர்.

சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், பத்தி எழுத்து, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, இதழியல் முதலான துறைகளில் ஈடுபடுபவர். காலரதம், களம் ஆகிய இதழ்களையும் நடத்தியிருப்பவர். இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம். ஜெர்மன் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன.

நான் எழுதத்தொடங்கிய கால கட்டத்தில் இவரும் இலக்கியப்பிரவேசம் செய்தமையாலும் அக்காலப்பகுதியில் கொழும்பில் சிங்கர் தையல் இயந்திர விற்பனை நிறுவனத்தில் இவர் பணியாற்றிக்கொண்டிருந்தமையாலும் அவ்வப்போது எங்கள் ஊருக்கும் வந்து என்னை சந்தித்திருப்பவர்.

மூத்த எழுத்தாளர் இளங்கீரன் அவர்களின் புதல்வர் மீலாத் கீரனுடன் இணைந்து இவர் நடத்திய காலரதம் வெளிவந்த காலத்தில் இவரது வயது 17 எனச்சொன்னால் எவருக்கும் வியப்பாகத்தானிருக்கும். காலரதம் சில இதழ்கள்தான் வெளிவந்தன. அதில் இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் இளங்கீரன், கே. டானியல் ஆகியோருக்கும் மற்றும் பல எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு – புதுச்சேரி எழுத்தாளர்களுக்கும் களம் வழங்கியவர்.

அதன்பின்னர் வியூகம் என்ற பெயரிலும் ஒரு இதழ் வெளியிட்டதாக அறியக்கிடைக்கிறது. அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்த பின்னர் இவருடனான தொடர்புகள் அற்றுப்போயிருந்தாலும், அவ்வப்போது இவரது கதைகளைப்படித்து வந்திருக்கின்றேன்.

தனது வாழ்வின் தரிசனங்களையும் அனுபவங்களையும் தனது கதைகளில் பிரதிபலிக்கும் உமா வரதராஜனின் உள்மனத்தில் அவை தொடர்ந்து யாத்திரை செய்கின்றமையையும் இவரது கதைகளிலும் அவை எதிரொலிப்பதிலிருந்து அவதானிக்கமுடியும். இவர் எழுதிய உள்மனயாத்திரை என்ற கதைத்தொகுப்பிற்கு வடக்கு கிழக்கு மாகாண சபையின் விருதும் கிடைத்துள்ளது.

இலங்கை இதழ்களிலும் தமிழ்நாட்டில் கணையாழி, இந்தியா டுடே மற்றும் இணைய இதழ்களிலும் எழுதியிருப்பவர். இந்தியா டுடேயில் வெளியான இவரது சிறுகதை அரசனின் வருகை இலக்கிய உலகில் புகழ்பெற்றது.

மிகச்சிறந்த நூறு தமிழ்ச்சிறுகதைகளில் இதனையும் தெரிவுசெய்துள்ளார் தமிழகத்தின் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். ஜெயமோகனும் இதே சிறுகதையை சிறப்பித்து பதிவுசெய்துள்ளார்.

 

thumbnail_%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE-%E

படிம உத்தியில் எழுதப்பட்டிருக்கும் அரசனின் வருகை, ஈழத்தின் நீடித்த இனரீதியான ஆக்கிரமிப்பு அதிகார அரசியலை சித்திரிக்கிறது. அதனை ஈழ அரசியலுடன் மாத்திரமில்லாது உலக அரசியலுடனும் ஒப்பிடலாம். அதனால் அதற்கு சர்வதேச தரமும் கிட்டியதுடன், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பிரபலமானது.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் 2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இவரை கல்முனையில் சந்தித்தேன். நண்பர் ( அமரர்) கவிஞர் சண்முகம் சிவலிங்கம் இவருடைய இல்லத்திற்கு என்னை அழைத்துச்சென்றார்.

இலங்கையில் 1970 காலப்பகுதியில் இவரை இளைஞனாக சந்தித்த பின்னர் 2005 இல் குடும்பஸ்தனாகப்பார்த்தேன். பெரும்பாலான எழுத்தாளர்களின் இளமைப்பராயத்து தொடக்க கால வாசிப்பு அனுபவம் அம்புலிமாமா கதைகளிலிருந்துதான் உருவாகியிருக்கும். அல்லது வீட்டிலிருக்கும் பெரியவர்களிடமிருந்து மகாபாரத – இராமாயணக்கதைகளை கேட்டு வளர்ந்திருப்பார்கள்.

உமா வரதராஜன் தனது பாடசாலைப்பருவத்திலேயே ஜெயகாந்தனின் கதைகளை விரும்பிப்படித்து தனது வாசிப்பு அனுபவத்தை தேர்ச்சியடையச்செய்தவர் என்பதை அறியமுடிந்திருக்கிறது. ஜெயகாந்தனின் முக்கிய மான படைப்பு சிலநேரங்களில் சில மனிதர்கள். அதற்கு முன்னர் ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் அக்கினிப்பிரவேசம் என்ற தலைப்பில் எழுதிய சிறுகதையின் நாவல் வடிவ நீட்சியாகும்.

அக்கினிப்பிரவேசம் இலக்கியஉலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு இந்திய சாகித்திய அகடாமி விருதும் கிடைத்து பின்னர் திரைப்படமாகியது. அதில் கங்கா பாத்திரம் ஏற்று நடித்த நடிகை லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசியவிருதும் கிடைத்தது. அந்த நாவலின் அடுத்த பாகமாக கங்கை எங்கே போகிறாள் என்ற பெயரில் விரிந்தது.

thumbnail_%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE-%E

இவ்வாறு அக்கினிப்பிரவேசம் இரண்டு நாவல்களாக தொடர்ந்திருப்பது இலக்கிய வரவில் அதிசயமல்ல. ஆனால், தனது 17 வயதில் சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலை படித்துவிட்டு தனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருப்பவர் உமா வரதராஜன்தான் என்பதே இங்கு வியப்புத்தரும் செய்தி.

அதனை அக்காலப்பகுதியில் தமிழகத்தில் வெளியான தீபம் இலக்கிய இதழ் பிரசுரித்து உமா வரதராஜனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி.

உமா வரதராஜனின் “அரசனின் வருகை” புதுடில்லியிலிருந்து வெளிவரும் Little magazine என்ற இதழில் The advent of the king என்ற பெயரிலும், “எலியம்” என்ற கதை A Lankan Mosaic என்ற தொகுப்பில் Rattology என்ற பெயரிலும் “முன் பின் தெரியா நகரில்” என்ற கவிதை கனடாவிலிருந்து வெளிவந்த “In our translated world ” என்ற தொகுப்பில் ஆங்கிலத்தில் “Alien city ” என்ற பெயரிலும் வெளிவந்துள்ளன. இவருடைய ‘எலியம் ‘ சிறுகதை பாடசாலைகளில் தரம் 10-11 இற்கான ‘தமிழ் இலக்கிய நயம் ‘ பாடத் திட்டத்திலும் சேர்த்துக் கொள்ளப் பட்டிருப்பதாக அறியக்கிடைக்கிறது. .இவரது படைப்புமொழியும் கதை சொல்லும் பாங்கும் மிகுந்த

கவனத்தைப்பெற்றவை. அதனால் உமா வரதராஜன் இலங்கையிலும் தமிழகத்திலும் புகலிட நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட பெயர். கிழக்கிலங்கையில் சில கலை இலக்கிய அமைப்புகளிலும் இணைந்திருப்பவர்.

 

http://akkinikkunchu.com/?p=63774

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.