யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்   பள்ளிவாசல்களின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே அங்கு வாள் உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார். அத்தோடு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டுமென்றும் சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  நேற்று புதன்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அளுத்கம முஸ்லிம்கள் மீது வன்முறை நடத்தப்பட்டபோது அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம் ஆட்சியை மாற்றப் போகிறோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறியதோடு அடுத்த தேர்தலில் வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இப்போது அந்த முஸ்லிம் தலைவர்கள் பூனையை விடவும் மோசமாக உள்ளார்கள். இருந்த உரிமைகளை விடவும் மேலதிகமான உரிமைகளை முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போது முஸ்லிம்களுக்கு இருந்த மத உரிமைகளையும் இல்லாமலாக்கி விட்டார்கள். பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்காக இருக்கிறது என்றால் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுகிறார்கள். புல்வெட்டுவதற்கு என்கிறார்கள். அவர்களால் தைரியமாக அதற்கு பதிலளிக்க முடியாது. என்னால் மட்டுமே இவர்களுக்கு தைரியமாக பதிலளிக்க முடியும். பிரதமர் ரணிலுடன் இணைந்து அழுத்கம முதல் திகன, அம்பாறை வரை பள்ளிவாசல்களை உடைத்து, அங்கு தொழுத மக்களை கஷ்ட்டப்படுத்தினீர்களே அப்போது எங்களை தற்பாதுகாத்துக்கொள்ள வாளை தவிர என்ன எங்களிடம் இருக்கிறது என கேட்கிறேன்? இப்படி தைரியமாக கேட்க எந்த தலைவனுக்கும் தைரியமில்லை. அவர்களின் அட்டூழியங்களை நாங்கள் எதிர்கொள்ள வாளுமில்லாமல் எப்படி இருக்கமுடியும்? எங்களிடம் வெடிபொருள் இருந்தால் சொல்லுங்கள். மக்கள் நாங்கள் இஸ்லாத்திலா இருக்கிறோம் என சந்தேகிக்கும் அளவுக்கு அஞ்சி ஒடுங்கிப்போயுள்ளனர். மேலும் மற்றுமொருவர் இருக்கிறார் அவருடைய சொத்துகுவிப்பு, கடத்தல், மற்றும் வேறு பல விடயங்கள் இருக்கிறது அதை சர்வதேசமே நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அவருடைய அமைச்சு முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான அமைச்சா? அது அரசியல் அனாதைகளுக்கு தவிசாளர் பதவி கொடுப்பதற்கும் வியாபாரம் செய்வதற்குமான அமைச்சு. எனவே அவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு பயன்படாத அமைச்சு பதவியை ரிஷாட் பதியுதீன் துறக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.   http://www.virakesari.lk/article/56572  
  • 10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது இந்து தமிழ் திசை கமல்ஹாசன்: கோப்புப்படம்  மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட ஓராண்டில் இந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. வேட்பாளர் தேர்வில் கல்வித் தகுதியை தகுதியாகக் கொண்டது என மக்கள் நீதி மய்யம் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், தொழிலதிபர்கள், நெருங்கிய நண்பர்களுக்கே வேட்பாளராக வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை எனவும் சர்ச்சை எழுந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான பிரச்சாரங்களை வீடியோ வடிவில் வெளியிட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நீட் தேர்வு உள்ளிட்டவற்றை விமர்சித்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் திமுக - அதிமுக பிரதான கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும், கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் நண்பகல் 12 மணி வரையிலான நிலவரப்படி, மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 3-வது இடத்தைப் பிடித்துள்ள தொகுதிகள்: மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், புதுச்சேரி முதல்முறையாக தேர்தல் களம் கண்ட அமமுகவையும், நாம் தமிழர் கட்சியையும் இத்தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் பின்னுக்குத் தள்ளியது. அதேநேரத்தில், அரக்கோணம், ஆரணி, தருமபுரி, தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளில் முதல் ஐந்து இடங்களில் கூட மக்கள் நீதி மய்யம் வரவில்லை.    https://tamil.thehindu.com/tamilnadu/article27215764.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers  
  • ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு: அரியணை ஏறுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி ஐ.ஏ.என்.எஸ்ஹைதராபாத், ஜெகன்மோகன் ரெட்டி  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. அதேசமயம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி இழக்கிறது. ராஜகசேகர் ரெட்டியிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறார். மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 21 இடங்களிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும்  முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் கூட்டணியில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்துவிட்டு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்து வெளியேறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் மத்தியில் பாஜகவுக்கு மாற்றாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்சித் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். ஆனால் அனைத்தும் தற்போது வீணாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 67 இடங்களில் வென்றது. மக்களவைத் தேர்தலில் 9 இடங்களில் வென்றது. அதன்பின் கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் சென்ற ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி மக்களிடம் ஆதரவு திரட்டி கட்சியை வலுப்படுத்தினார். சந்திரபாபு நாயுடு    தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், பிரச்சாரத்தை தீவிரப்படுத்திய ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை பெற்றுத்தருவேன் என்று மக்களிடம் வாக்களித்தார். அதிரடி அரசியலுக்குப் பெயர்பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் களத்தில் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்தார். பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிய அவர் எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள், ஆந்திராவின் தலையெழுத்தை மாற்றிக் காட்டுகிறேன் என முழக்கமிட்டார். அனைத்துக்கும் மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். ராஜகசேகர ரெட்டி முதல்வராக இருந்த காலத்தில் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு 10 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்காமல் இருந்து வந்தார். இப்போது அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தனது ஆட்சியை இழந்துள்ளார்.   https://tamil.thehindu.com/india/article27215683.ece?utm_source=HP&utm_medium=hp-tslead
  • நிச்சயமாக...! வருங்கால போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவும்! மகா வம்சம் மாதிரிப் பொய் எழுதக் கூடாது! நடந்ததை நடந்த படியே எழுதவும்!
  • வந்தவன் போனவன் எல்லாம் வைச்சிருக்கிறான் சொறி வைச்சு பராமரிக்கிறான்.....😄😎