Jump to content

நூறாய் பெருகும் நினைவு


Recommended Posts

Sunday, June 17, 2018

நூறாய் பெருகும் நினைவு

 
5.jpg
 
நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., 
ஓமோம்... சொல்லியும்
 
நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., 
ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை
 
அப்ப ஊரில எந்த இடம்?
 
சிலருக்கு பூராயம் ஆராயாமல்  பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன்.
 
அதையும் மீறி வரும் கேள்வி இது :...., 
அப்ப வெளிநாடு வந்து கனகாலமோ?  
இங்கை இப்ப எங்க  இருக்கிறியள்?  
 
சிலர் மேலும் விபரம் அறியும் ஆர்வத்தை இப்படியும் கேட்டு வழிமறிப்பார்கள்
 
நீண்ட காலம் வாழ்ந்த இடத்தை விட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள்  தொலைவாக ஒதுங்கியது...., 
 
 பழைய நினைவுகளைத் தொலைத்து புதிய நினைவுகளைச் சேமித்து மீள வேண்டும் என்பதும் பிரதான காரணம்
 
அத்தோடு அதிகமாக தமிழர்கள் அல்லாத இடத்தை தேர்வு செய்தது யாருக்கும் என் தற்கால இருப்புப் பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே
 
புதிய இடத்தில் வேலை. பெரும் நிறுவனம். 350பேருக்கு மேற்பட்டோரோடு வேலை செய்யும் சூழல். பணியில் சந்திக்கும் தருணங்களில் பொதுவான வணக்கம் நலவிசாரிப்பு அதோடு போகிறது முகங்கள். எந்த முகத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அவசியம் இல்லை. எனக்கான பணியை செய்து கொள்வதே பணி.
 
அதிகம் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. எல்லோரையும் போல அருகில் யாரும் வந்தால் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தால் சரி. அவர்களாகவே ஒதுங்கி விடுகிறார்கள். தற்காலம் அதிகம் பேரை ஆதரிக்கும் ஒரே இலத்திரனியல் சாதனம் மொபைல் பேசி. ஆதுவே என்னையும் இப்போது தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளது.
 
இடைவேளை ஓய்வில் தனியே ஓரிடத்தை தேர்வு செய்து எனக்கான உணவை யாரோடும் கூட்டுச்சேராமல் தனித்து சாப்பிடுவதை வளமையாக்கிக் கொண்டேன். இதை கவனித்த சிலர் எனது மேசையில் வந்து சேர்ந்தார்கள்.
நீங்கள் வரேக்க எங்களையும் கூப்பிடுங்கோ சேர்ந்து சாப்பிடலாம்.
 
நெருங்கி வரும் உறவுகளை தட்டிவிட முடியாது சிலரது அன்பு இருக்கிறது. ஆனால் யாரையும் கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் மனநிலமை இல்லை. அதனால் எனக்கான இடைவேளை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். ஏனக்கு சௌகரியமாக இருக்கிறது தனித்திருத்தல்.
 
தொடர்புகளில் இருந்த பெருமளவு நண்பர்களின் தொடர்புகளைப் பேணிக் கொள்ளாமல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளேன்
 
பலரை விட்டு ஏன் ஒதுங்கிப் போக எத்தனிக்கிறது மனம்
அவ்வப்போது எனக்குள்ளும் எழும் கேள்விக்கான பதிலை என்னாலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை
 
தவிர்க்க முடியாத சந்திப்புக்களை இயன்றவரை தற்கால இருப்பிடம் அடையாளம் சொல்லாமல் தவிர்த்துக் கொள்கிறேன்
 
சிலர் எனது அன்னியமாதல் புரிந்து எனக்கேற்ப பேசப்பழகியுள்ளார்கள்.  அதிகம் கேள்விகள் கேட்டு சங்கடம் தராமல் நாகரீகம் காக்கும் சிலரோடான தொடர்பாடலை மட்டும் பேணிக்கொள்கிறேன்
 
யாரையும் பார்க்க பேசும் மனநிலையை ஏனோ இந்த நாட்கள் தருவதில்லை
 
அதிக நேசிப்பு நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு துரோகம் ஏமாற்று. இவற்றைத் தந்து பொய்யாகிப் போனவர்களை அடிக்கடி ஞாபகவோடை இழுத்து வருகிறது
 
உறவுச் சேர்ப்பில் கண்ணீரை விதைத்து மனவழுத்தத்தைக் கூட்டிக் கொண்டது தவிர வேறு பயனில்லை
 
மறந்துவிட நினைக்கும் முகங்களும் அவர் தம் துரோகங்களும் மனவோடையை ரணமாக்கிய காயம் அவ்வளவு இலகுவாய் ஆறிவிடக்கூடியதல்ல
 
இதுவும் கடந்து போகட்டும் இப்படித்தான் என்னை ஆற்றுகிறேன்
 
தனிமையின் முழுமையான அழுத்தத்தை அணுவணுவாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளேன்
 
இந்தக்காலம் என்னை முழுதாக மாற்றிப் புதிதாக்குமென்ற நம்பிக்கையில் ஒதுங்கிப் போகிறேன்
 
ஆறாய் ஓடிவரும் கண்ணீருக்கு 
அணைகட்டி ஓயத்தெரியாது. நூறாய் பெருகும் நினைவுகளைத் தூர எறியவும் முடியாது கடக்கிறது காலம்
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

 

அதிகம் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. எல்லோரையும் போல அருகில் யாரும் வந்தால் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தால் சரி. அவர்களாகவே ஒதுங்கி விடுகிறார்கள். தற்காலம் அதிகம் பேரை ஆதரிக்கும் ஒரே இலத்திரனியல் சாதனம் மொபைல் பேசி. ஆதுவே என்னையும் இப்போது தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளது.
 
இடைவேளை ஓய்வில் தனியே ஓரிடத்தை தேர்வு செய்து எனக்கான உணவை யாரோடும் கூட்டுச்சேராமல் தனித்து சாப்பிடுவதை வளமையாக்கிக் கொண்டேன். இதை கவனித்த சிலர் எனது மேசையில் வந்து சேர்ந்தார்கள்.
நீங்கள் வரேக்க எங்களையும் கூப்பிடுங்கோ சேர்ந்து சாப்பிடலாம்.
 
நெருங்கி வரும் உறவுகளை தட்டிவிட முடியாது சிலரது அன்பு இருக்கிறது. ஆனால் யாரையும் கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் மனநிலமை இல்லை. அதனால் எனக்கான இடைவேளை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். ஏனக்கு சௌகரியமாக இருக்கிறது தனித்திருத்தல்.
 
தொடர்புகளில் இருந்த பெருமளவு நண்பர்களின் தொடர்புகளைப் பேணிக் கொள்ளாமல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளேன்
 
பலரை விட்டு ஏன் ஒதுங்கிப் போக எத்தனிக்கிறது மனம்
அவ்வப்போது எனக்குள்ளும் எழும் கேள்விக்கான பதிலை என்னாலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை
 

சாந்தி அக்கா... தனிமை சில நேரத்தில், மனதுக்கு இதமாக இருந்தாலும்,
உங்களைப் போல் முற்றான தனிமை என்பது, எதிர்காலத்தில்  மன உழைச்சலையும்  தரக் கூடும்.

குடும்பத்திலும், வேலை இடத்திலும், அயலவர்களுடனும்... 
மனிதன் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை தவிர்க்க முடியாதது.

அதற்காக... கண்ட எல்லோருடனும் பழக வேண்டியது இல்லை.
உங்களுக்கென ஒரு சிலரை தேர்ந்தெடுத்துக்கொண்டு... 
அவர்களுடன் உங்கள் மனப் பாரங்களை இறக்கி வைப்பது  மனதுக்கு ஒரு வடிகாலாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் ஏற்படுத்திய காயங்கள்...உங்களுக்கு அதிக மன உளைச்சல்களை ஏற்படுத்தியுள்ளன போலத் தெரிகின்றது சாந்தி!

முற்றாக ஒதுங்குதல் என்பது ....முனிவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது!

சாதாரண மனிதர்கள் நாங்கள்.....கொஞ்சம் பட்டும்...கொஞ்சம் படாமலும் வாழ்க்கையை நகர்த்த வேண்டியது தான் வழி!

காலம் ஏற்படுத்திய காயங்களைக்....காலமே குணப்படுத்தும் வலிமையுள்ளது!

எனினும் வடுக்கள்...என்றும் அழியாமல் இருக்கத் தான் போகின்றது!

ஒரு காலத்தில்....நீங்களே.....நான் தான் இப்படி எழுதினேனா என்று ஆச்சரியப்படக் கூடிய விதத்தில்....காலம்..உங்களுக்கும் கை கொடுக்கும் எனும் நம்பிக்கை என்னிடம் உள்ளது!

நீங்கள் மட்டுமல்ல....பலரும்...இப்படியான பிரச்சனைகளை...வென்று தான் வாழ்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி அழுதால் தீர்ந்துவிடும் - அதை

சொல்லத்தானே வார்த்தையில்லை..” என்று கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லியிருப்பார். உங்களின் நிலையைப் பார்ததால் வார்த்தைகள் இருக்கிறன. சொல்லுவதற்கு ஆட்கள்தான் இல்லை.

உங்களின் வேதனை புரிகிறது. அதற்காக விழுந்துவிட முடியாது. ஒரு இடத்தில் தேங்கி விடவும் முடியாது. ஓடிக்கொண்டே இருப்பதுதான் உகந்தது.

எழுந்து, நிமிர்ந்து, வாழ்ந்து காட்டுவதுதான் துரோகங்களுக்கு நாங்கள் அளிக்கும் பரிசு.

கண்ணதாசனின் இன்னுமொரு பாடல் வரி,

உனக்கு கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பக்கங்களுக்குள் நிறைய அறிந்து கொள்ள வேண்டிய வாசிக்க வாசிக்க திரும்ப படிக்க தோன்றும் பக்கம் ...இவ்வாறன விடையங்களில் கவனத்தை செலவிடுங்களேன்.

http://geethamanjari.blogspot.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை பொல்லாதது....
அதுவும் புலம்பெயர் நாடுகளில்?????
நாமாக ஒதுங்கினால் ஒதுக்கப்பட்டு விடுவோம்.
வாய்விட்டு அழ வேண்டும்.
பிறருடன் மனம் விட்டு பேச வேண்டும்.
இதுதான் நிவாரணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை மிகப் பெரிய புத்தகம். போராடி  வாழத்தான் வாழ்க்கை. புறமுதுகிட்டு ஓடுவதற்கல்ல. பலருக்கு வாழ்க்கை இனிமையான பக்கங்கள். சிலருக்கு கிழித்தெறியப்பட வேண்டிய பக்கங்கள். தனிமை மிகவும் கொடியது. தனிமைச் சிறையை உடைத்து வெளியே வர முயற்சி செய்யுங்கள். உங்கள் சாதனைகளுக்காக எத்தனையோ விடயங்கள் காத்திருக்கின்றன.வலிகளைக் கடந்து வழிகளைத் தேடுங்கள்.உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு சந்தர்ப்பம் என நினைத்து அடி எடுத்து வையுங்கள். எதற்காகவும் காலங்கள் காத்திருப்பதில்லை. அட்வைஸ் பண்ணுவது இலகுதான்.ஆனாலும் ஆறுதல் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பிள்ளைகளின் உயர்வுகளைக் கண்டு பெருமையுற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில இடர்களில் இருந்து மீள குறுகிய தனிமை தேவைப்படலாம். ஆனால் நீண்டகாலமாக தனித்தோ, ஒதுங்கியோ வாழ்வது இலகுவானதல்ல. ஒவ்வொரு நாளும் நேரத்தை எப்படிக் கடத்தவேண்டும் என்று திட்டமிட்டால் தனிமை ஓர் வரமாகவும் அமையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/20/2018 at 7:36 AM, குமாரசாமி said:

தனிமை பொல்லாதது....
அதுவும் புலம்பெயர் நாடுகளில்?????
நாமாக ஒதுங்கினால் ஒதுக்கப்பட்டு விடுவோம்.
வாய்விட்டு அழ வேண்டும்.
பிறருடன் மனம் விட்டு பேச வேண்டும்.
இதுதான் நிவாரணி.

எனது கருத்தும் இதுதான் 

Link to comment
Share on other sites

  • 1 month later...

நீண்டநாட்கள் கணணிப்பாவனை மறந்து போய்விட்டது. கருத்திட்டவர்களுக்கான பதிலையும் இடவில்லை முதலில் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

கருத்திட்ட தமிழ்சிறி, புங்கையூரான்,கவி அருணாசலம் , மருதங்கேணி, யாயினி,குமாரசாமி, காவலூர் கண்மணியக்கா, கிருபன்,கந்தப்பு அனைவருக்கும் நன்றி.

சுமைக்குமேல் சுமை. ஒரு வழி மீண்டு வர மறுவழி தொலையும் நிலை இதுவே இப்போதைய நிலையாக இருக்கிறது.

காலமே எல்லாக்காயங்களையும் ஆற்றும் ஆயுதம். அந்தக்காலத்தையே நம்புகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/13/2018 at 8:16 PM, shanthy said:

 

காலமே எல்லாக்காயங்களையும் ஆற்றும் ஆயுதம். அந்தக்காலத்தையே நம்புகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி.

காலம் தான் பதில் சொல்ல வேணும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.