Jump to content

புலம் பெயர் தமிழ் ஊடகவியளாளர்களின் எதிர்காலம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழ் ஊடகவியளாளர்களின் எதிர்காலம்?

புலம்பெயர் தமிழ் ஊடக்த்துறையின் எதிர்காலம் தொடர்பான சமூகப்பற்றுள்ள பலர் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். சரி, தவறு என்ற முரண்பாடுகளுக்கு அப்பால் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அப்பாலான வாதப்பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் இடம்பெற்றிருந்ததைக் நிலை இன்று முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. முழு நேர ஊடகவியலாளர்களில் பலர் இன்று வேலையற்றவர்களாகவோ அன்றி வேறு வேலைகளை தெரிந்தெடுத்துக்கொண்டவர்களாகவோ காணப்படுகின்றனர். ஊடகத்துறை முழுவதுமாக அழிக்கப்பட்டு செய்திகளும் நிகழ்வுகளும் வெறுமனே நுகர்வுப் பண்டமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

முழு நேர ஊடகவியலாளர்களின் அழிவும், ஊடகங்களின் இன்றைய நிலையும் ஆபத்தான எதிர்காலத்தின் முன்னறிவிப்பா என்ற அச்சம் பலர் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளன.

இணைய ஊடகங்கள் மரண அறிவித்தலுக்காகவும், இந்திய சினிமாவின் நுகர்விற்காகவும், பரபரப்புச் செதிகளுக்காகவும் மட்டுமே செயற்பட, காட்சி ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் காணாமல் போக ஆரம்பித்துள்ளனர்.

தமது அவல நிலை தொடர்பாக ஊடகவியாளர்கள் துணிச்சலுடன் பேச ஆரம்பித்தால் மட்டுமே புலம்பெயர் ஊடகத்துறையின் எதிர்காலம் தொடர்பான உரையாடலை காத்திரமான திசைய நோக்கி நகர்த்த முடியும்.

 

http://inioru.com/diaspora-tamil-medias-future/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாம்பூச்சி பூச்சி போலத்தான் புலம்பெயர் வாழ்வில் ஊடகவியலாளர்கள் வாழ்க்கையும். கொஞ்ச நாட்களில் காணாமல் போய்விடுவார்கள்.

 ஐரோப்பாவில் உள்ள தமிழ் ஊடகத்துறையாளர்களுக்கு பெரிதாக எதையும் சாதிக்கவோ, சம்பாதிக்கவோ அதற்கான தளங்களில்லை. சரி இருக்கும் தளங்களில் ஒன்றைப் பிடித்துக் கொள்ளலாம் என்றால், தமிழ்  முதலாளியின் கீழ் வேலை பார்ப்பது  மிக மிகச் சிரமம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் முழுநேர தமிழ் ஊடகவியலாளராக, அதுவும் ஐரோப்பாவில் நீண்ட காலங்கள் செயலாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

 உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். வானொலி, தொலைக்காட்சி இரண்டிலும் தமிழில்  அள்ளி வீசிய வாத்தியார் ஒருவர், இன்று முகநூலில் தனதுநெஞ்சில் நிறைந்தவைஎல்லாவற்றையும் கொட்டி, “அரசனை நம்பி புருசனை இழந்ததுபோல் இவர்களை நம்பி இருந்த வேலையையும் விட்டிட்டனேஎன்றுபுலம்பிக் கொண்டிருக்கிறார்.

 வியாபாரிகள் எல்லாவற்றையம் தங்கள் வசப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள். பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் எல்லாம் ஒரு குடையின் கீழ் தங்களிடமே இருக்க வேண்டும் என்பது அவர்களதுலைக்கா  இருக்கிறது. சின்னச்சின்ன ஊடகங்கள் அவர்களுடன்  முட்டி மோதி வளர முடியாமல் சோர்ந்து போய் விடுகின்றனஇத்தனைக்கும் பலம் பொருந்திய புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் ஆரோக்கியமான விசயங்களைச் சொன்னாலாவது ஆறுதல் படலாம். சரி அவர்களும் ஒருநாள் எல்லாவற்றையும் கைவிட்டால், மிச்சமாக இருக்கும் சின்னச் சின்ன ஊடகங்கள் அப்பொழுது நலிந்து போய்த்தான் இருக்கும்.

 அப்பொழுது  புலம்பெயர் தமிழ் ஊடகவியளாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேட வேண்டி இருக்கும். அல்லது புலம்பெயர் சமூகம் அவர்களை மறந்து போயிருக்கும்.

 ஏதாவது வழி இருக்கிறதா?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களில் பகுதி நேரமாக வேலை செய்யலாமே தவிர முழு நேரமாக வேலைசெய்து புலம்பெயர் நாடுகளில் வாழ்க்கையைக் கொண்டு நடாத்தமுடியாது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் உள்ளே போய் பின்னர் கையைச் சுட்டுக்கொண்டு வெளியே வருவதுதான் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய புலம்பெயர் ஊடகங்கள் எல்லாம் கொப்பி அன்ட் பேஸ்ட் தான்.

உலக/பொது அறிவுகள் இல்லாமல் தங்களுக்கு தெரியாதையும் தெரிந்த மாதிரி எழுதுகின்றார்கள்.

உண்மைத்தன்மையற்ற ஆய்வுகள் கட்டுரைகளை எழுதி மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்குகின்றார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசர்களை பொறுத்தே வாசகம் அமையும் 
"புலம்பெயர் ஊடகவியலார்கள்" இதை வாசிக்கவே எனக்கு 
இங்கு கருத்து எழுதி காணாமல் போன சில ஜோக்கர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள் 
ஊடகம் என்றால் அதன் பொருள் தெரியாமல் பரோட்டா போடுபவர்கள்தான் 
புலம்பெயர்ந்து இருக்கிறார்கள் .... இப்போது தாயகத்தில் இருந்துவரும் செய்திகளும் 
அதைத்தான் சொல்லி கொள்கின்றன.

முதலில் யாரும் ஊடக துறை சார்ந்து கல்வி தகமை கொண்டவர்கள் இல்லை 
சாதாரணமாக ஒரு கட்டுரை என்றால் அதை இவாறு எழுத வேண்டும் எனும் அடிப்படை 
அறிவே இல்லாதவர்கள்தான் கட்டுரை எழுதுகிறார்கள்.
எந்த அடிப்படை அறிவும் கிடையாது.
திறமையானவர்கள் முதலாம் படியிலேயே தள்ளிவிட படுகிறார்கள் விழுந்தவர்கள் 
இந்த விசர்ருகளுடன் வேலையா? என்றுவிட்டு வேறுவேலை தேடி போய்விடுகிறார்கள். 

நேரம் காலம் பணம் முதலீடு செய்து திறமையான வகையில் ஊடகம் நடத்த போனால் 
ரசிக்க கூடிய நிலையில் தமிழ் மக்கள் இல்லை. அவர்களுக்கும் ப்ரோட்டா தான் பிடிக்கும். 
அனுமானுக்கு கோவில் கட்டி கும்பாவிஷேகம் செய்ய கூடிய 
அறிவு நிலையில்தான் யாழ்ப்பாண தமிழர்கள் இருக்கிறார்கள். 
அனுமான்   யார்? ஏன் ? எதற்கு ? என்ற சாதாரண அறிவுக்கு வர கூடிய கேள்விகளே 
வருவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

 

வாசர்களை பொறுத்தே வாசகம் அமையும் 

 

மருதங்கேணி,

அறுபதுகளில் வெளிவந்தமித்திரன்பத்திரிகை நீண்டகாலம்  கிளுகிளுப்பு செய்திகளை வெளியிட்டு பணம் பார்த்தது..

 

தம்பியைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட அக்கா

நள்ளிரவில் ஆடையைக் களைந்து சூடு வைத்த நாத்தனார்கள்

வவுனியாவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர்

திருமணத்திற்கு முன்னர் இவருடன் டேட்டிங் செல்ல வேண்டும் அம்பானி மகளின் ஆசை

பறக்கும் விமானத்தில் இளம் ஜோடியின் இழிவான செயல் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக் ஹாசனின் பாட்டி யார் தெரியுமா? கேட்டால் அசந்து விடுவீர்கள்.

இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகரின் மனைவி! அதிர்சித் தகவல்

இது ஒரு இணையத்தளத்தில் இருக்கும் ஒருநாள் செய்தியில் ஐந்து சதவீதமானவை.

“அந்த நடிகைக்கு இவ்வளவு அழகான மகனா?”என்று ஆச்சரியமான விடயங்கள்  நிறைய அந்த இணையத்தளத்தில் இருக்கின்றன . போதாததற்கு அதைச் சாப்பிடாதே இதைச்சாப்பிடாதே என்ற பயமுறுத்தல்களையும்ஒருநாளில் எப்படி வெள்ளையாகலாம். ஒரு வாரத்தில் தொப்பையை எப்படிக் குறைக்கலாம் என்ற ஆலோசனைகளையும் காணலாம்

சிறீ லங்காவையே தைரியமக வலம் இடமாக மாற்றிப் போட்ட இணையத்தளம். புலம்பெயர் தமிழர்களை  உண்டு இல்லை என்று பண்ணிவிடாதா என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் இப்படியான நாலாம், ஐந்தாம் தரச் செய்திகளை உள்ளேவிடுவதில்லை. ஆனால் கிளுகிளு செய்திகளையும் கிசுகிசு செய்திகளையும் யாழில் காணக்கிடைக்கவில்லையே என்று மூக்கால் அழுபவர்களும் உண்டு!

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழர்களுக்கு என்று பொதுவான எதிர்காலம் அல்லது  பொது நோக்கு என்று எதுவும் இல்லை அவ்வாறான ஒன்றை நோக்கிய ஆசைகள் அங்காங்கே உண்டு. அவ்வாறானவற்றை அடிப்படையாக வைத்தே ஊடகவியலாளர் இயங்க முடியும். தாயகத்தில் உள்ள அரசியல் வாழ்வியல் நிலவரங்களுக்கும் அதுசார்ந்த புலம்பெயர் தமிழர்களின் அக்கறை ஈடுபாடுகளை இணைப்பதே ஊடகவியலாளர்களின் எதிர்கால அடிப்படையாக இருக்கும். ஆனால் இவ்வாறான அடிப்படை இயக்கத்துக்கு புலம்பெயர் தமிழர் ஐக்கியப்ட்ட மக்கள் சமூகமாக மாறவேணும். போராட்ட காலத்தில் போராட்டம் என்ற ஒரு புள்ளியை வைத்து ஐக்கியப்பட்டார்கள் இன்று ஊர்சங்கங்கள் என்றளவில் சிதைந்துபோகின்றார்கள். அடுத்தடுத்த தலமுறையில் இந்த ஊர்ச்சங்கங்களும் காணாமல் போய்விடும். ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாக வேறு வேறு சமூகங்களுக்குள் மறைந்து காணாமல் போகும் எதிர்காலம் தான் உள்ளது. இதில் ஊடகவியலாளர்கள் இயங்க என்ன தளம் உள்ளது என்ற கேள்வி எழுகின்றது. இன்று நாம் உலவிப் படிக்கும் தமிழ் இணையங்கள் செய்திகள் என்பவற்றில் எமது அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு ஈடுபாடு உள்ளது என அவதானித்தால் இது புரியும். இனிவரும் காலங்களில் தமிழர்கள் என்பது இலங்கை தமிழகம் மலேசியா சிங்கபூர் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்களைக் குறிப்பதாகவே அமைய முடியும். எமது சிதைவு அல்லது புலம்பெயர்வு என்பது நாம் அடயாளங்களை தொலைப்பதா அல்லது எமது அடயாங்களை பெருவட்டமாக மீள வேறு ஒரு வடிவத்தில் உருவாக்குவதா என்பதை தீர்மானிக்க வேண்டிய காலம் இது. ஊடகவியலாளர்களின் எதிர்காலமும் இவ்வாறான கோணத்திலேயே அமைய முடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.